Pages

Wednesday, August 01, 2012

தாண்டவம் படத்தின் கதை என்ன..?

01-08-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கடைசியாக 'தாண்டவம்' படத்தின் கதையும் கொஞ்சம் லேசுபாசாக வெளியில் தெரிந்துவிட்டது..! முழுக்க, முழுக்க கண் பார்வையற்ற டேனியல் கிரீஷ் என்னும் அமெரிக்கரிடம் இருக்கும் தனித் திறமையை வைத்துதான் இந்தப் படத்தை எடுத்துள்ளேன் என்று ஓப்பன் டாக் கொடுத்துள்ளார் படத்தின் இயக்குநர் விஜய்.


இன்று மாலை ஐநாக்ஸ் தியேட்டரில் தாண்டவம் படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா அமோகமாக நடந்தது.. செல்வராகவனின் இரண்டாம் உலகம் ஷூட்டிங்கில் சிக்கிக் கொண்டதால் அனுஷ்கா வரவில்லை. எப்போதும்போல சந்தானம் எஸ்கேப்.. கூப்பிட்டவுடன் ஓடி வரும் எமி ஜாக்சன் விக்ரமுக்கு முன்பாகவே வந்திருந்து 35 டிவி சேனல்களுக்கும் கொஞ்சமும் அலுத்துக் கொள்ளாமல், முகம் சுழி்ககாமல் பேட்டியளித்தார்..

2 வரிகளில் பேட்டியளித்துவிட்டு "மைக்ல நிறைய பேசுவனே.. அதுல இருந்து எடுத்துக்குங்களேன்.. நிறைய வேலை இருக்கு. கோச்சுக்காதீங்க" என்று கெஞ்சி டிவிக்களுக்கு அல்வா கொடுத்துவிட்டு பறந்தார் இயக்குநர் விஜய். ஆனாலும் நிகழ்ச்சி முடிந்த பின்பு டிவி ரிப்போர்ட்டர்களை தேடிப் பிடித்து "கோச்சுக்காதீங்க பிரதர்.. படம் வெளிய வரும்போது டீம் பிரஸ் மீட்ல உங்க சேனலுக்கே வந்து நல்லா பேசுறேன்.. ஸாரி.. ஸாரி.." என்று சொல்லி அசர வைத்துவிட்டுப் போனார்.. மிக்க நன்றிகள் விஜய் ஸார்..!

டதெய்வத்திருமகள்ட போலவே இந்தப் படமும் எந்த ஹாலிவுட்டின் காப்பி என்று யாரும் மண்டையை போட்டு பிய்த்துக் கொள்ள வேண்டாம் என்று நினைத்து படம் எங்கேயிருந்து எடுக்கப்பட்டது என்பதை முதலிலேயே சொல்லிவிட்டார் இயக்குநர் விஜய். 

அமெரிக்காவில் இருக்கும் டேனியல் கிரீஷ் என்பவருக்கு சுத்தமாகக் கண் பார்வை இல்லையாம்.. ஆனால் அவரால் எதிரில் இருப்பவைகள் என்னென்ன.. எதிரில் வருபவைகள் என்னென்ன என்பதை உணர முடிகிறதாம். இதனால் கண் பார்வையுள்ளவர்களை போலவே அவர் மிக, மிக இயல்பாக இருக்கிறாராம்..  அவருக்கு கண்களாக காதுகளே செயல்படுவதாகச் சொன்னார் விஜய். 

இவரைப் பற்றிய செய்திக் கட்டுரையைப் படித்துவிட்டு அமெரிக்கா பறந்தார்களாம் விஜய்யும், விக்ரமும். 2 நாட்கள் டேனியலுடனேயே தங்கியிருந்து அவர் எப்படி செயல்படுகிறார்.. என்னென்ன செய்கிறார்.. என்பதையெல்லாம் அவதானித்து வந்தார்களாம்.. அந்த குறையென்று வெளியே தெரியாத குறைபாடுடைய கேரக்டர்தான் இந்தப் படத்தில் வரும் விக்ரம் என்று விஜய் சொல்லி முடிப்பதற்குள் விக்ரம் குறுக்கிட்டு “கதையைச் சொல்லாதீங்க..” என்று தடுத்துவிட்டார்.

இவரை மட்டுமல்ல யூ டிவி தனஞ்செயன் பேச்சுவாக்கில் விக்ரமின் கேரக்டரை பத்தி சொல்லப் போக அவரையும் பார்த்து முறைத்துவிட்டார் விக்ரம்.. கதையைச் சொல்ல 2 பேருமே ஆர்வமாக இருந்தும் ஹீரோவான விக்ரமுக்கு மட்டும் கொஞ்சமும் பிடிக்கவில்லை போலும்.. எல்லாம் தெய்வத்திருமகள் தந்த படிப்பினை என்று நினைக்கிறேன்..! 

படத்தில் விக்ரமனுக்கு டபுள் ஆக்ட்டா என்று பலரும் கேள்வி கேட்க.. "இல்லை.. இல்லை.." என்று துண்டு போட்டு, தாண்டாத குறையாகச் சொன்னார்.. எப்படியாவது கதையை அவர் வாயால் சொல்ல வைத்துவிட வேண்டும் என்று துடித்த பத்திரிகையாளர்களை உரிமையுடன் கண்டித்து உட்காரச் சொல்லி சமாளித்துவிட்டார் விக்ரம்..! படத்தில் நாசர் இலங்கை தமிழ் பேசி நடித்திருப்பதையும் சொல்லி கதை "அங்க" போகுதா..? இல்ல "அங்கே"யிருந்து "இங்க" வருதா என்றெல்லாம் கேட்டார்கள்.. "தஞ்சாவூரில் ஆரம்பித்து சென்னைக்கு வந்து அப்படியே லண்டனுக்கு பறக்கிறது.. லண்டனிலேயே முடிகிறது.." என்றார் தனஞ்செயன்.!

உண்மையில் மேற்கொண்டும் விசாரித்தபோது கிடைத்தத் தகவல்கள்.. ஒரு முக்கியமான விஷயத்தை பார்த்துவிட்டார் என்ற காரணத்திற்காக அவரை சிலர் தாக்குகின்றனர். அந்தத் தாக்குதலில் அவருடைய கண் பார்வை பறி போய்விடுகிறது.. ஆனாலும் தனது கேட்டல் உணர்வை வைத்தே தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களை பழி வாங்குவதுதான் கதை போல தெரிகிறது..!

ஜி.வி.பிரகாஷ் தீம் மீயூஸிக்கை மட்டும் நல்லபடியாக போட்டுக் கொடுத்திருக்கிறார்.. டிரெயிலருக்காக ஸ்பெஷலாக போடப்பட்ட அந்த டியூன் டிரெயலருக்கு ஒரு வேகத்தைக் கொடுத்திருக்கிறது..! கூடவே மேக்கிங் வீடியோஸாக 5 நிமிட படக் காட்சிகளையும் வெளியிட்டார்கள்..! எமியையே சுத்தி சுத்தி வந்த கேமிரா தங்கத் தலைவி அனுஷ்காவை லேசுபாசாக சுட்டிருப்பது வருத்தத்திற்குரியது..!


குண்டக்க, மண்டக்க என்ற கேள்வி பதில் சீசனில் படத்தின் கதையை மட்டும் சொல்லவே மாட்டேன் என்று அடம்பிடித்துவிட்டு மீதிக்கெல்லாம் பதில் சொன்னார். எமி ஜாக்சனுக்கு என்ன சொல்லிக் கொடுத்தீங்க என்ற கேள்விக்கு தனியா வந்து கேளுங்க. சொல்றேன் என்றார் விக்ரம். 


எமி ஜாக்சன் இயக்குநர் ஷங்கரின் 'ஐ' படத்தில் அடுத்து நடிக்கவிருப்பதால் கொஞ்சம், கொஞ்சம் தமிழ் கத்துக் கொண்டிருக்கிறார். 'ஐ' படத்துக்காக மும்பை சென்று எமிக்கு 2 நாள் தமிழ் மொழியை விளக்கமாகச் சொல்லிக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார் நம்ம தாத்தா பாரதிமணி. இதனாலோ என்னவோ தமிழை கொஞ்சம், கொஞ்சம் புரிந்து கொண்டு பதில் சொன்னார் எமி..! விக்ரம் தனக்கு எதுவுமே சொல்லித் தரவில்லை என்று தலையை 90 டிகிரிக்கு ஆட்டி வைத்து மறுத்தார்.

இவ்வளவு பெரிய அல்ட்ரா டீலக்ஸ் தியேட்டரில் ஜெனரேட்டர் வசதிகூடவா இல்லை..? விக்ரம் பேசிக் கொண்டிருக்கும் மின்சாரம் 2 முறை கட் ஆனது.. மீண்டும் மைக் பிடித்த விக்ரம்.. “இன்னொரு தடவையும் கரண்ட் கட் ஆனா நல்லதுதானே..? 3 தடவை தடங்கல் வந்தா படம் கண்டிப்பா சக்ஸஸ் ஆயிரும்னு சினிமாவுலகத்துல சொல்வாங்க.. யாராச்சும் கட் பண்ணுங்கப்பா..” என்றார் குஜாலாக.. 

“மூன்றரை மணிக்குத்தான் பங்ஷனை ஆரம்பிக்கலாம்னு நினைச்சிருந்தோம். பட், நிகழ்ச்சியை ராகு காலத்தில் நடத்தாதீங்கன்னு பிரெண்ட்ஸ் சொன்னதால, ராகு காலம் முடிந்து 4.30 மணிக்கு மேல் நிகழ்ச்சியைத் துவக்கினோம். தாமதத்துக்கு மன்னிக்கணும்..” என்றார் தனஞ்செயன்..! 

எப்படியோ ராகுவும், கேதுவும் சேர்ந்து படத்தை குரு பார்வைக்கு கொண்டு போனால் சரிதான்..!

23 comments:

  1. // மிக்க நன்றிகள் விஜய் ஸார்..! //

    அண்ணே... இதுல என்ன மிக்க நன்றி தேவையிருக்கு... அவருக்கு நீங்க தேவை... உங்களுக்கு அவர் தேவை... உங்க ரெண்டு பேருக்கும் நாங்க தேவை... அவ்வளவுதானே... Just business... nothing personal...

    ReplyDelete
  2. எனக்கென்னமோ இது Daredevil படத்தோட காப்பி ஓ சாரி இன்ஸ்பிரேசன் போல தோணுது .. விஜய் என்னைக்கு சொந்த கதைல படம் எடுத்திருக்காரு ...

    ReplyDelete
  3. அண்ணாச்சி ,

    நீங்க ஏன் இன்னும் ஒரு படமும் செய்யாம இருக்கீங்கன்னு இப்போ தான் புரியுது, ஹாலிவுட் டிவிடி வாங்கி தமிழுக்கு ஏத்தாப்போல கதை செய்ய கத்துக்கிட்டா அழகப்பன் மகன் விஜய் போல பெரிய டையரடக்கர் ஆகிடலாம் :-))

    பிளைண்ட் டேட் என்ற பழைய பி கிரேட் ஹாலிவுட் படத்தையும் டேர்டெவில் படத்தையும் குலுக்கிப்போட்டு செய்திருப்பார் போல.

    டேர் டெவில் மார்வல் காமிக்ஸ் கதை அவங்க கேஸ் போடாமல் இருக்கணும் :-))

    படத்தை முழுசாப்பார்த்துட்டு அப்போவே சொன்னான் இந்த வவ்வால்னு என்னை பாராட்ட வேண்டாம் :-))

    ReplyDelete
  4. போர்க்களம்னு கிஷோர் நடிச்ச தமிழ்ப்படமும் படமும் கண்ணூ தெரியாமல் ஹீரோ கலக்கிற கதை தான், பண்டினு ஒருத்தர் டைரக்ஷன் "அஸ்த்தமனம்" ஆனவர் தான் :-))

    ReplyDelete
  5. [[[Philosophy Prabhakaran said...

    // மிக்க நன்றிகள் விஜய் ஸார்..! //

    அண்ணே... இதுல என்ன மிக்க நன்றி தேவையிருக்கு... அவருக்கு நீங்க தேவை... உங்களுக்கு அவர் தேவை... உங்க ரெண்டு பேருக்கும் நாங்க தேவை... அவ்வளவுதானே... Just business... nothing personal...]]]

    இருந்தாலும் அந்த மரியாதையை தருபவருக்கு நன்றி சொல்ல வேண்டாமா..? திரும்பிக் கூட பார்க்காமல் செல்லும் இயக்குநர்கள்தான் இங்கே அதிகம்..!

    ReplyDelete
  6. [[[ILA(@)இளா said...

    அடடே!]]]

    என்ன அடடே..! இது எமிக்காகவா..? இல்லாட்டி கதைக்காகவா..?

    ReplyDelete
  7. [[[Sampath said...

    எனக்கென்னமோ இது Daredevil படத்தோட காப்பி ஓ சாரி இன்ஸ்பிரேசன் போல தோணுது. விஜய் என்னைக்கு சொந்த கதைல படம் எடுத்திருக்காரு.]]]

    போச்சுடா.. இதுவும் இன்ஸ்பிரேஷனா..?

    ReplyDelete
  8. [[[வவ்வால் said...

    அண்ணாச்சி, நீங்க ஏன் இன்னும் ஒரு படமும் செய்யாம இருக்கீங்கன்னு இப்போதான் புரியுது, ஹாலிவுட் டிவிடி வாங்கி தமிழுக்கு ஏத்தாப்போல கதை செய்ய கத்துக்கிட்டா அழகப்பன் மகன் விஜய் போல பெரிய டையரடக்கர் ஆகிடலாம் :-)) பிளைண்ட் டேட் என்ற பழைய பி கிரேட் ஹாலிவுட் படத்தையும், டேர்டெவில் படத்தையும் குலுக்கிப் போட்டு செய்திருப்பார் போல.]]]

    பிளையண்ட் டேட் பார்த்துவிட்டேன். அப்போது சக்கைப் போடு போட்ட படமாச்சே..! டேர்டெவில் பார்க்கவில்லை..!

    [[[டேர் டெவில் மார்வல் காமிக்ஸ் கதை. அவங்க கேஸ் போடாமல் இருக்கணும் :-)) படத்தை முழுசாப் பார்த்துட்டு அப்போவே சொன்னான் இந்த வவ்வால்னு என்னை பாராட்ட வேண்டாம் :-))]]]

    இதுக்குத்தான் ஒரு உண்மை கேரக்டர் இப்பவும் உசிரோட இருக்காரு. அவரை மையமா வைச்சுத்தான் எடுத்திருக்கேன்னு சொல்லிட்டாரு விஜய்..!

    ReplyDelete
  9. [[[வவ்வால் said...

    போர்க்களம்னு கிஷோர் நடிச்ச தமிழ்ப் படமும் படமும் கண்ணூ தெரியாமல் ஹீரோ கலக்கிற கதைதான். பண்டினு ஒருத்தர் டைரக்ஷன் "அஸ்த்தமனம்" ஆனவர்தான் :-))]]]

    ம்.. தெரியும்.. படம் வரட்டும் அண்ணாச்சி.. பார்த்திட்டு திரும்பவும் பேசுவோம்..!

    ReplyDelete
  10. விக்ரமனுக்கு//

    விக்ரமன் படத்துல நடிக்கிறாரா?

    ReplyDelete
  11. சொல்றதைப் பார்த்தா படம் நல்லாயிருக்கும் போல தெரிகிறது... வாழ்த்துகள் தாண்டவம் டீம்...

    ReplyDelete
  12. அண்ணே, டகாஷி கிடனோவோட த பிளைண்ட் ஸ்வார்ஸ்மென் படம் கூட இதே ப்ளாட்டில் தான் இயங்கியிருக்கும். இப்ப விஜய், ஹாலிவுட்டிலிருந்து, மிஷ்கின் போல ஜப்பானுக்கு காப்பியடிக்க தாவியிருப்பார்.

    ReplyDelete
  13. அண்ணே, டகாஷி கிடனோவோட த பிளைண்ட் ஸ்வார்ஸ்மென் படம் கூட இதே ப்ளாட்டில் தான் இயங்கியிருக்கும். இப்ப விஜய், ஹாலிவுட்டிலிருந்து, மிஷ்கின் போல ஜப்பானுக்கு காப்பியடிக்க தாவியிருப்பார்.

    ReplyDelete
  14. சிறப்பான பகிர்வு! நன்றி!

    இன்று என் தளத்தில் வெற்றி உன் பக்கம்! தன்னம்பிக்கை கவிதை! http:// thalirssb.blogspot.in

    ReplyDelete
  15. படம் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்...

    நன்றி…
    (த.ம. 3)

    ReplyDelete
  16. [[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    விக்ரமனுக்கு//

    விக்ரமன் படத்துல நடிக்கிறாரா?]]]

    தப்புன்னா உடனே களத்துல குதிச்சிருங்க.. மத்ததை பத்தியெல்லாம் பேசீராதீங்க..!??

    ReplyDelete
  17. [[[HOTLINKSIN தமிழ் திரட்டி said...

    சொல்றதைப் பார்த்தா படம் நல்லாயிருக்கும் போல தெரிகிறது... வாழ்த்துகள் தாண்டவம் டீம்...]]]

    நிச்சயமாக இயக்கம் அற்புதமாக இருக்கும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை..!

    ReplyDelete
  18. [[[ஜானகிராமன் said...

    அண்ணே, டகாஷி கிடனோவோட த பிளைண்ட் ஸ்வார்ஸ்மென் படம்கூட இதே ப்ளாட்டில் தான் இயங்கியிருக்கும். இப்ப விஜய், ஹாலிவுட்டிலிருந்து, மிஷ்கின் போல ஜப்பானுக்கு காப்பியடிக்க தாவியிருப்பார்.]]]

    ஒருவேளை அண்ணன் விஜய் இந்தப் படத்தையெல்லாம் பார்த்திட்டு அதுக்கப்புறமா அந்த டேனியல் கிரூஷை பார்த்து பேசிட்டு மொத்தப் பழியையும் அவர் மேல வீசியிருப்பாரோ..?

    ReplyDelete
  19. [[[s suresh said...

    சிறப்பான பகிர்வு! நன்றி!]]]

    நன்றிகள் சுரேஷ் ஸார்..!

    ReplyDelete
  20. neengal koduththa thagavaluku nanri.. irunthalum cinema mela ivlo paasam konda neengal, asst.director mela paasam illamal ponathu patri enakku satru varuthama irukirathu.. Thaandavam film oru handycap eludhiya script, antha kathaiyai vikramku sonnar aanal vikram ivanala epdi edukka mudiyumnu sollitu atha apdiye utv thanancheyan and vijayta solli ipo film-ah varapogudhu,,, unmaiya script ready pannuna handycap nilai...?

    ReplyDelete
  21. [[[மாயாவி said...

    neengal koduththa thagavaluku nanri.. irunthalum cinema mela ivlo paasam konda neengal, asst.director mela paasam illamal ponathu patri enakku satru varuthama irukirathu.. Thaandavam film oru handycap eludhiya script, antha kathaiyai vikramku sonnar aanal vikram ivanala epdi edukka mudiyumnu sollitu atha apdiye utv thanancheyan and vijayta solli ipo film-ah varapogudhu, unmaiya script ready pannuna handycap nilai...?]]]

    இது பற்றி முழுமையான தகவல்களை சொன்னால் அதைப் பற்றி வெளியிடத் தயாராக இருக்கிறேன் நண்பரே..! இத்தகவலை பத்திரிகைகளில்தான் படித்தேன்.. யுடிவியின் மறுப்புச் செய்தியையும் படித்தேன். யார் சொல்வது உண்மை என்பதை நாம் எப்படி தீர்மானிப்பது..?

    ReplyDelete