Pages

Tuesday, November 09, 2010

உணர்ச்சி வேகத்தில் என்கவுண்ட்டருக்கு சபாஷ் போடும் பரிதாப மக்கள்..!

09-11-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்திய அரசியல் சட்டத்தை நீதித்துறையின் மூலமாக காவல்துறையின் உதவியோடு காப்பாற்றி வருகிறோம் என்று வாய்க்கூசாமல் சொல்லி வரும் நமது ஜனநாயகத்தில் என்கவுண்ட்டர் என்னும் கொலைக்கு மட்டும் விதிவிலக்கு கொடுத்திருக்கிறார்கள் போலிருக்கிறது.

இன்று நடந்த மோகன்ராஜ் கொலை மட்டுமல்ல.. மெரீனா கடற்கரையில் ஒரு விடியற்காலையில் படகருகே நின்று கொண்டு வலையைக் கட்டிக் கொண்டிருந்த வீரமணி என்னும் மனிதனை கொல்லத் துவங்கி இன்றுவரையில் இன்றைய தலைமுறை மனிதர்கள் நினைவில் கொள்ளும் வகையில் காவல்துறை பல்வேறு என்கவுண்ட்டர்களை செய்து கொண்டுதான் வருகிறது.

இதற்கு முன்பாக நக்ஸலைட் வேட்டை என்கிற பெயரில் தர்மபுரி மாவட்டத்தில் தமிழக காவல்துறை ஒரு அழித்தொழிப்பு போராட்டத்தையே நடத்தி முடித்தது. மாற்றுக் கொள்கையுடைய அத்தனை பேரையும் படுகொலை செய்துவிட்டு ஏதோ சாதனை செய்ததுபோல் இன்றுவரையிலும் வெட்கப்படாமல் பெருமைப்பட்டு வருகிறது தமிழகக் காவல்துறை..

ஆனால் எந்த ஒரு என்கவுண்ட்டரிலும் பதிலுக்குப் படுகொலையான போலீஸாரை நீங்கள் பார்த்திருக்கவே முடியாது. அவர்களெல்லாம் கை, கால்கள், முகங்களில் கட்டுப் போட்டு ஒரு போஸ் கொடுத்துவிட்டு இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருந்ததாக சர்டிபிகேட் வாங்கிக் கொண்டு வீட்டுக்குச் சென்றுவிடுவார்கள்.

ஆர்டிஓ விசாரணைக்கு அரசு உத்தரவிட்டு, அத்தோடு ஒதுங்கிக் கொள்ளும். சக்தி வாய்ந்தவர்கள் நீதிமன்றங்களுக்குச் சென்று பரிகாரம் தேடி அலையத் துவங்குவார்கள். இது அவர்களது விதி.. தலையெழுத்து..!

இன்று காலையில் நடந்ததையே எடுத்துக் கொள்ளுங்கள். மிக அருகில் நெற்றிப் பொட்டில் வைத்து சுடப்பட்டால்தான் இப்படி பெரும் ரத்தப் போக்கோடு, மூக்கிலும் ரத்தம் வந்த நிலையில் மரணம் வரும் சாத்தியக்கூறுகள் உண்டு.

மிக அருகில் நெற்றியில் வைத்து சுடுமளவுக்கு அப்படியென்ன அக்கப்போரை அத்தனை போலீஸாருக்கு மத்தியில் அந்த மோகன்ராஜ் செய்திருக்கப் போகிறான் என்பதே சந்தேகம்தான். செய்த தவறுக்காக என்னைத் தூக்கில் போடுங்கள்.. என்று கதறியவனா தப்பியோடப் பார்ப்பான்..?

அதிலும் சைலேந்திரபாபு அட்டகாசமாக, அனாயசமாக பொய் சொல்கிறார். அவன் கேரளாவுக்கு தப்பியோடப் பார்த்தான் என்று. அவர்கள் இருந்த சாலை கேரளாவுக்குச் செல்லும் சாலை என்பதால் இவர்களையெல்லாம் தள்ளிவிட்டுவிட்டு கேரளாவுக்கு ஓடியே தப்பித்துவிடுவான் என்பது அவரது கணிப்பாம். இதற்கு ஐ.பி.எஸ். படிக்க வேண்டுமா? பெட்டிக் கடைக்காரனைக் கேட்டாலே சொல்லிவிடுவானே..?

அரசு மருத்துவமனையில் மரணம், அறுவை சிகிச்சை என்றால் குறைந்தபட்சம் நான்கு மருத்துவர்களிடமாவது சான்றிதழ் வாங்க வேண்டும். சிலர் தருவார்கள். பலர் தர மாட்டார்கள் என்பதால் ஒரே ஆளிடம் சான்றிதழ் பெற்றுவிடலாம் என்று தனியார் மருத்துவமனையில் போலீஸ் அதிகாரிகளை அட்மிட் செய்திருக்கிறார்கள். இதனை எந்த போலீஸ் அதிகாரியிடம் வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள். எந்தப் பத்திரிகையாளர்களிடத்தில் வேண்டுமானாலும் வினவிப் பாருங்கள்.. இது திட்டமிட்டப் படுகொலை என்றுதான் சொல்வார்கள்.

மோகன்ராஜ் வாக்குமூலம் கொடுத்திருக்கிறான் நான்தான் கொலை செய்தேன் என்று.. போலீஸில் பிடிபடும் அத்தனை பேரும் சொல்வது இதைத்தான். அடிக்கிற அடியில் இப்போதைக்குத் தப்பித்தால் போதும் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கத்தான் சொல்வார்கள். மோகன்ராஜ் சொன்னது உண்மையாகவே இருக்கட்டும். ஆனால் அவனுக்கான தண்டனையை கொடுக்கத்தான் கோர்ட்டும், நீதித்துறையும் இருக்கின்றனவே..? இந்த கொலையைச் செய்ய காவல்துறைக்கு அனுமதியையும், அதிகாரத்தையும் கொடுத்தது யார்..?

சிறு குழந்தைகள் சம்பந்தப்பட்ட விஷயம் என்றாலே நமது உணர்ச்சிமிகு மனிதர்கள் கொந்தளித்துத்தான் போவார்கள். இது நியாயமானதுதான். பார்த்த இடத்திலேயே கொன்றுவிடு என்றால் அனைத்துக் கொலை வழக்குகளிலும் இதையே பின்பற்றிவிடலாமே.. பின்பு எதற்கு கோர்ட்டும் நீதித்துறையும்..!?

பொதுமக்களின் கொந்தளிப்பைப் பயன்படுத்தி ஒரு கொலையைச் செய்து நல்ல பெயர் எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்து போலீஸ் செய்திருக்கும் ஒரு தி்ட்டமிட்ட நாடகம் இது..

நமது மக்களும் நல்லது.. இவனுகளை இப்படித்தான் செய்யணும் என்றெல்லாம் ஸ்வீட் கொடுத்து கொண்டாடுவதாக ஆளும்கட்சியின் டிவியில் திருப்பித் திருப்பிக் காட்டி ஒரு கொலையை நியாயப்படுத்துகிறார்கள்.

இந்த டிவியின் தலைவர் மறக்காமல் அக்டோபர்-2-ம் தேதியன்று காந்தி தாத்தாவின் போட்டோவுக்கும் மாலையைப் போட்டுவிட்டு அஹிம்சையைப் பத்தி தவறாமல் பேசி நம்மை ஹிம்சை செய்வார் என்பது வேறு கதை.. ஆனாலும் இது என்னவொரு பொருத்தம்..

ஜெயலலிதா ஆட்சியில்தான் வீரப்பன் வேட்டை என்கிற பெயரில் மலைவாழ் கிராமங்களே இல்லாமல் அழித்தொழிக்கப்பட்டது. பச்சை சட்டை அணிவித்து மனைவிகள் முன்பாகவே கணவர்களை நிற்க வைத்து புகைப்படம் எடுத்து, “கடைசியாக ஒரு முறை உன் கணவனை பார்த்துக் கொள்..” என்று சொல்லி அழைத்துச் சென்று சுட்டுக் கொன்றது தமிழக அதிரடிப் படை போலீஸ்.

இன்றைக்கு எத்தனையோ குடும்பங்களைச் சிதைத்து, அப்பாவி மக்களை நரகத்திற்குக் கொண்டு போய் குடி வைத்திருந்ததும் இதே தமிழகத்து போலீஸ்தான். அப்போதும் அவர்கள் சொன்ன வார்த்தை இதே என்கவுண்ட்டர்.

அடுத்து வந்திருக்கும் தற்போதைய ஆட்சியிலும் வரிசையாக ரவுடிகள் பட்டியலில் இடம் பெற்றிருந்த மனிதர்களை ஒவ்வொருத்தரையாகச் சுட்டுக் கொன்று சாதனை படைத்திருக்கிறது தமிழக போலீஸ்.

இத்தனைக்கும் இந்த அரசு ஏதோ அஹிம்சையைத் தவறாமல் கடைப்பிடிக்கும் அரசாம். இதற்கு முந்தைய ஜெயலலிதா அரசு ஹிம்சை அரசாம். இப்படியும் சில கிறுக்குகள் சொல்லிக் கொள்கிறார்கள்..

எந்த மனிதனும் குற்றவாளியாகவே பிறந்து வருவதில்லை. அத்தனை பேரும் சமூகச் சூழலின் காரணமாகத்தான் குற்றவாளியாக ஆகிறார்கள். மோகன்ராஜ் வேன் டிரைவர். இதற்காக எல்லா வேன் டிரைவர்களும் இப்படியில்லை. சமூகத்தில் இப்படியும் நடக்கத்தான் செய்யும்.. எந்த நாட்டில்தான் இது நடக்காமல் இல்லை..!?

என் வீட்டிலேயே இந்தக் கொடுமை நடந்திருந்தாலும் நான் இதைத்தான் சொல்வேன். நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுத்திருக்க வேண்டிய விஷயம் இது..

இதேபோல் இனிமேற்கொண்டு வருகின்ற அத்தனை என்கவுண்ட்டர்களுக்கும் காவல்துறை இதேபோலத்தான் கற்பனைக் கதைகளை அள்ளி விடுவார்கள். அத்தனைக்கும் பொதுமக்கள் ஆட்டு மந்தைகளைப் போல தலையை ஆட்டத்தான் செய்வார்களா..?

இது இரண்டு கொலைதான். ஆனால் சேலத்தில் நான்கு கொலைகளைச் செய்ததாக பாரப்பட்டி சுரேஷ்குமார் என்ற தி.மு.க. உடன்பிறப்பை கைது செய்து உள்ளே வைத்திருக்கிறார்களே...? எதுக்கு நேரத்தை வீணாக்க வேண்டும். தைரியமிருந்தால் அவரையும் இதேபோல் என்கவுண்ட்டர் செய்யும் தைரியம் இந்த காவல்துறையினருக்கு உண்டா..? வராதல்லவா..?

அப்படியானால் என்ன காரணம்..? கேட்பதற்கு ஆளில்லாதவன்.. அட்ரஸ் இல்லாதவன்.. சுட்டுக் கொன்றால் எவனும் கேட்க மாட்டான். போட்டுத் தள்ளு என்றார்கள். முடித்துவிட்டார்கள். இது என்னாங்கடா இது உடன்பிறப்புக்கு ஒரு நீதி..? அடுத்தவனுக்கு ஒரு நீதியா..?

இது போலவே எத்தனை வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பவர்களை கைது செய்திருக்கிறார்களோ, அத்தனை பேரையும் என்கவுண்ட்டரில் போட்டுத் தள்ளிவிட்டால் போலீஸுக்கும் நேரம் மிச்சமாகுமே..! கோர்ட், கேஸ் என்று அவர்களும் அலைய வேண்டாம்..!! கோர்ட்டில் நீதிபதிகளுக்கும் வேலை கொடுக்க வேண்டாம். அவர்களும் ஷட்டில்காக் விளையாடப் போய்விடலாமே.. எதற்காக இப்படி ஜனநாயகம் என்ற பெயரில் ஊரை ஏமாற்றும் செயல்..!?

ஒரு பக்கம் அப்பாவிகள் பலரும் சிறையில் இருக்கிறார்கள் என்று பல தாய்மார்கள் சிறை வாசலில் கண்ணீரும், கம்பலையுமாக இருக்கிறார்கள். இன்னொரு புறம் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட அப்பாவிகளின் குடும்பங்கள் இன்றைக்கும் அனாதைகளாக்கப்பட்டு பரிதவிப்பில் உள்ளன.

எப்போதுமே தமிழனுக்கு தனக்கென்று வந்தால்தான் அது நோய் என்றும், பிரச்சனை என்றும் தெரிய வரும். தன் வீட்டு கக்கூஸ் நிரம்பி வழிந்தால்தான் ஆளைக் கூப்பிடத் தோன்றும். பக்கத்து வீட்டில் வாடை அடித்தால்கூட அவனுக்கு ஒரு ஆலோசனை சொல்ல மனசு வராது. அது அவன் விஷயம். இது நம்ம விஷயம் என்ற குறுகிய மனப்பான்மையும், தான், தன் சுகம் என்ற சுகபோகமும் நம்மை ஆட் கொண்டுள்ளது.

இல்லாவிட்டால் ஒருவேளை செத்த மோகன்ராஜ் நமது குடும்பத்தில் ஒருத்தனாக இருந்து தொலைந்து, இப்போது இப்படி செத்திருந்தால் நாம் என்ன செய்வோம் என்று யோசிக்காமல் இருந்திருப்பார்களா..?

குற்றஞ்சாட்டப்பட்டவன் என்பதாலேயே ஒருவன் குற்றவாளியாகிவிட முடியாது.. குற்றவாளி என்பதை உச்சநீதிமன்றம் வரையிலும் சென்று நிரூபித்தால் மட்டுமே அவன் குற்றவாளி..! அவனே ஒத்துக் கொண்டாலும் நீதிமன்றம் ஒத்துக் கொண்டால்தான் அவனை சிறையில் வைக்க முடியும்..! இதுதான் சட்டம்..!

சட்டமாவது, கிட்டமாவது.. அவனே ஒத்துக்கிட்டானே.. தூக்குல போடு என்று சொல்லும் இதே பொதுஜனம்தான் சின்ன அடிதடி கேஸில் சிக்கினால்கூட “சின்னப் பையன். விட்ருங்க.. தெரியாம செஞ்சுட்டான்..” என்று போலீஸில் சென்று கெஞ்சுவார்கள். “தண்ணியடிச்சதால ஏதோ மப்புல மண்டையை உடைச்சுப்புட்டான். மன்னிச்சு விட்ருங்கய்யா” என்று காலைப் பிடித்துக் கதறுவார்கள்..!

ஒரு நாள் இவர்களையெல்லாம் இதே என்கவுண்ட்டர் துப்பாக்கி குறி வைக்கும்போதுதான் இதன் வலி அவர்களுக்குப் புரியும்..!

173 comments:

  1. "இல்லாவிட்டால் ஒருவேளை செத்த மோகன்ராஜ் நமது குடும்பத்தில் ஒருத்தனாக இருந்து தொலைந்து"

    ஒரு வேளை அவனால் கொல்லப்பட்டவர்கள் , நம் குடும்பத்தில் ஒருவராக இருந்து இருந்தால் , நம் ரியாக்‌ஷன் எப்படி இருந்து இருக்கும் ?

    ReplyDelete
  2. i am agree with your article. why the police not shooting corrupt politician and officials who are robbing crores of money of poor people!

    ReplyDelete
  3. தர்க்கம் சரியாக செய்கிறீர்கள்.ஆனால் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் தர்க்கம் துணைக்கு வருவதில்லை.பெரும்பாலோனோரின் ஏனைய பதிவர்களின் பின்னூட்டங்கள் அதனையே வெளிப்படுத்துகின்றன.

    ReplyDelete
  4. நீங்க சொல்றது சரிதான்..
    என்கவுண்டரை எதிர்க்கத்தான் வேண்டும்..
    சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிடுவானென்று தோன்றினால் சட்டத்தை சீர்படுத்த முனைய வேண்டுமேயன்றி, தனிப்பட்ட மனிதர்கள் (காவல் துறையே ஆனாலும் - சொல்லப் போனால் தனி மனிதர்களை கூட மன்னித்துவிடலாம், ஒரு அதிகாரமிக்க துறையினர் இவ்வாறு செய்வது ஜனநாயகத்தையும் அரசியல் சாசனத்தையும் கேலிக்குள்ளாக்கும்..) கையில் எடுப்பது நல்லதல்ல..

    ஒருவேளை இப்படியும் யூகிக்க இடமிருக்கிறது, மோகன்ராஜ் கூலிக்கு இதை செய்திருந்து (தந்தையின் தொழில்முறை எதிரிகளால்) கூலி கொடுத்து கொலை செய்த அதிகாரமிக்க மனிதர், தன்னை மோகன்ராஜ் காட்டி கொடுத்துவிடக் கூடாதென்ற நோக்கில் காவல்துறையினரை கரைக்கும் விதத்தில் கரைத்து மோகன்ராஜை சுட்டுக் கொல்ல செய்து, தான் (உண்மையான கொலையாளி) தப்பித்துக் கொண்டிருக்கலாம்..

    யாருக்குத் தெரியும்?..

    ஒருவேளை மோகன்ராஜ் விசயத்தில் இப்படி நடக்காமலிருந்திருக்கலாமென்றாலும் நாளை நடக்காதென்பதற்கு என்ன உத்திரவாதம்? (மக்கள்தான் ஏகோபித்த வரவேற்பு கொடுக்குறார்களே- தனிப்பட்ட எதிரிகளைக் கூட சுட்டு விட்டு இப்படி எதாவது கதையில் கோர்த்து விடுவது மிகவும் எளிது)

    இதனால் இந்த என்கவுண்டரை எதிர்க்க வேண்டியது நமது கடமை..

    ReplyDelete
  5. 5 W செய்தி சேகரிக்கமட்டுமல்ல, செய்தி வெளியிடவும் தான் என உங்களுக்கே தெரிந்திருக்கும்.

    அப்பாவி பொதுஜனம், அப்பாவியாகவே இருக்கட்டுமே.

    பாவப்பட்ட ஜீவன்களுக்கு அஞ்சலியுடன்....

    ReplyDelete
  6. //ஒரு நாள் இவர்களையெல்லாம் இதே என்கவுண்ட்டர் துப்பாக்கி குறி வைக்கும்போதுதான் இதன் வலி அவர்களுக்குப் புரியும்..!//

    இந்த என்கவுன்டரினால் உமக்கு எங்கு வலித்தது!

    அந்தக் குழந்தைகள் கொலை செய்யப்பட்ட போது ஏன், கண்டித்து பதிவு போட மறந்தீர்!?

    பொதுஜன கருத்துக்கு விரோதமாக கருத்து சொல்வதே, இப்போது வாடிக்கையாகி விட்டது!

    ReplyDelete
  7. -ஆனால் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் தர்க்கம் துணைக்கு வருவதில்லை.-
    இலங்கை தமிழர் விடயங்களிலும் இதையே தான் நீங்கள் (உண்மைத்தமிழன்+ ராஜ நடராஜன்) மிக அதிகமாக செய்கிறீர்கள் என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
  8. கரெட்க்ட்ண்ணா.. இதுவும் நீதிமன்றம் போயி, 27 வருஷம் கழிச்சு இவன்னுக்கு ஆயுள் தண்டனைன்னு தீர்ப்பு ஆயிருக்க வேண்டும். அதற்குள் என்ன அவசரம்?

    மோகன் ராஜ் நல்லவன். அவனுக்கு மனநல மருத்துவர் மருந்து தந்திருக்க வேண்டும்.

    ReplyDelete
  9. அந்த மிருகம் தூக்கில் போடப்படவேண்டியவன் மாற்றுக்கருத்து க்கு இடமில்லை, ஆனால் தீர விசாரித்திருக்க வேண்டும் ,தூக்கில் போடப்படவேண்டிய காக்கியொன்று தூக்கில் போடப்படவேண்டிய ஆட்சியாளரின் கட்டளையை நிறைவேற்றியிருககிறது

    ReplyDelete
  10. Dear UT,

    I am not sure why even when rarely police are seen to be meting out justice there is a hue & cry about human rights. are human rights there only for the criminals & not for the people who have suffered in their hands. Just because the politicians & people with connections are escaping do we want all the people who have committed a crime to escape. what logic is this.if after a trial of 8to 10 years he is handed out a death sentence by the supreme court will it actually be executed at all. if he suffers that 10 years in jail for nothing is it meaningful for him or the public. Instead it is better of if justice is handed out in this manner - if it is true that he actually committed the crime.

    ReplyDelete
  11. ||ஒருவேளை செத்த மோகன்ராஜ் நமது குடும்பத்தில் ஒருத்தனாக இருந்து தொலைந்து, இப்போது இப்படி செத்திருந்தால் ||

    அண்ணே தொட்டுட்டீங்கண்ணே!

    ReplyDelete
  12. ஆட்டோ சங்கர், ஆறு கொலை ஆறுமுகம் நாய் சேகர் பக்கம் இருக்கிற மனித நேயங்களை பத்தி அடுத்த பதிவிடலாம்.

    எதையாவது பக்கம் பக்கமா நீங்க அடிச்சு விடுங்க சார்.

    ReplyDelete
  13. //செய்த தவறுக்காக என்னைத் தூக்கில் போடுங்கள்.. என்று கதறியவனா தப்பியோடப் பார்ப்பான்..?//

    இதே போல் தான் பாஸ் பூவரசியும் கதறினாள். ஆனால், இப்போது (வக்கீல் பேச்சை கேட்டு) தான் அந்த கொலையை செய்யவில்லை என்கிறாள் நம்புவீற்களா?

    இது திட்டமிட்ட எக்னவுன்ட்டர் தான். இல்லையென்று சொல்ல முடியாது. ஆனால், இது தேவையான ஒன்று.

    //ஆனால் அவனுக்கான தண்டனையை கொடுக்கத்தான் கோர்ட்டும், நீதித்துறையும் இருக்கின்றனவே..? இந்த கொலையைச் செய்ய காவல்துறைக்கு அனுமதியையும், அதிகாரத்தையும் கொடுத்தது யார்..?//

    கண்ணெதிரே கசாப் துப்பாக்கியை தூக்கிக்கொண்டு போஸ் கொடுத்திருந்தாலும், கசாப்பும் கருணை மனு அனுப்பி காலம் தாழ்த்தலாம் என்பது தான் இந்த இ.பி.கோ.வின் இளிச்சவாயத்தனம்.

    //என் வீட்டிலேயே இந்தக் கொடுமை நடந்திருந்தாலும் நான் இதைத்தான் சொல்வேன்.//
    முடியாது பாஸு.

    //நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுத்திருக்க வேண்டிய விஷயம் இது..//

    :)

    //இது இரண்டு கொலைதான். ஆனால் சேலத்தில் நான்கு கொலைகளைச் செய்ததாக பாரப்பட்டி சுரேஷ்குமார் என்ற தி.மு.க. உடன்பிறப்பை கைது செய்து உள்ளே வைத்திருக்கிறார்களே...? எதுக்கு நேரத்தை வீணாக்க வேண்டும். தைரியமிருந்தால் அவரையும் இதேபோல் என்கவுண்ட்டர் செய்யும் தைரியம் இந்த காவல்துறையினருக்கு உண்டா..? வராதல்லவா..?//

    நல்ல கேள்வி.

    ReplyDelete
  14. //அவனுக்கான தண்டனையை கொடுக்கத்தான் கோர்ட்டும், நீதித்துறையும் இருக்கின்றனவே..?//

    அதான ... :(

    ReplyDelete
  15. இதற்கு முன் நொய்டாவில் நடந்த கொலை வழக்குகளிலும் கொலைகாரன் நிதாரி இன்னும் உள்ளே தான்.இந்த மோகன்ராஜ் மட்டும்? மோகன்ராஜ் மூலமாக போலீஸ் மீண்டும் தன் கையாலாகதனத்தை வெளிபடுத்தியுள்ளது.மோகன்ராஜ் மூலம் நீதியை கொன்றவர்களை யார் என்கவுண்டர் செய்வது?யாருக்காக இந்த என்கவுண்டர்????

    ReplyDelete
  16. 3 அடுக்கு பாதுகாப்பு கொடுத்து சிக்கென் பிர்யாணி கொடுக்கசொல்ரிங்களா?

    ReplyDelete
  17. \\இது இரண்டு கொலைதான். ஆனால் சேலத்தில் நான்கு கொலைகளைச் செய்ததாக பாரப்பட்டி சுரேஷ்குமார் என்ற தி.மு.க. உடன்பிறப்பை கைது செய்து உள்ளே வைத்திருக்கிறார்களே...? எதுக்கு நேரத்தை வீணாக்க வேண்டும். தைரியமிருந்தால் அவரையும் இதேபோல் என்கவுண்ட்டர் செய்யும் தைரியம் இந்த காவல்துறையினருக்கு உண்டா..? வராதல்லவா..\\

    இந்த ஒரு பாராவுக்காக மட்டுமே நீங்கள் இந்த பதிவை எழுதியமைக்காக நானும் முதன் முறையாக ஒரு மைனஸ் ஓட்டு போடுகின்றேன். இது தான் என் முதல் மைனஸ் ஓட்டு. மிகவும் வருத்தமாக இருக்கு. இதை என் தம்பியிடமே பிரயோகித்தமைக்காக!

    தவிர சைலேந்திரபாபு பற்றி எனக்கு தனிப்பட்ட முறையில் கூட தெரியும். அவர் நியாயம் இல்லாமல் எதும் செய்ய மாட்டாரு.

    அந்த பசங்க ஒரு கிரிக்கெட் புக்கியின் பசங்களாகவே இருந்து தொலையட்டும். இது கிரிக்கெட் புக்கி பிரசனையாகவே இருந்து தொலையட்டும். கேரளா போனா அங்க சசிதரூர், ஸ்ரீசாந்த் காப்பாத்திகூட தொலையட்டும் என எல்லாம் விட்டு விட முடியாது அந்த கொடூரனை அல்லவா. போட்ட வரை சரி தான்!

    ReplyDelete
  18. \\இது இரண்டு கொலைதான். ஆனால் சேலத்தில் நான்கு கொலைகளைச் செய்ததாக பாரப்பட்டி சுரேஷ்குமார் என்ற தி.மு.க. உடன்பிறப்பை கைது செய்து உள்ளே வைத்திருக்கிறார்களே...? எதுக்கு நேரத்தை வீணாக்க வேண்டும். தைரியமிருந்தால் அவரையும் இதேபோல் என்கவுண்ட்டர் செய்யும் தைரியம் இந்த காவல்துறையினருக்கு உண்டா..? வராதல்லவா..\\

    இந்த ஒரு பாராவுக்காக மட்டுமே நீங்கள் இந்த பதிவை எழுதியமைக்காக நானும் முதன் முறையாக ஒரு மைனஸ் ஓட்டு போடுகின்றேன். இது தான் என் முதல் மைனஸ் ஓட்டு. மிகவும் வருத்தமாக இருக்கு. இதை என் தம்பியிடமே பிரயோகித்தமைக்காக!

    தவிர சைலேந்திரபாபு பற்றி எனக்கு தனிப்பட்ட முறையில் கூட தெரியும். அவர் நியாயம் இல்லாமல் எதும் செய்ய மாட்டாரு.

    அந்த பசங்க ஒரு கிரிக்கெட் புக்கியின் பசங்களாகவே இருந்து தொலையட்டும். இது கிரிக்கெட் புக்கி பிரசனையாகவே இருந்து தொலையட்டும். கேரளா போனா அங்க சசிதரூர், ஸ்ரீசாந்த் காப்பாத்திகூட தொலையட்டும் என எல்லாம் விட்டு விட முடியாது அந்த கொடூரனை அல்லவா. போட்ட வரை சரி தான்!

    ReplyDelete
  19. Good article. no difference between SUN TV's technique to raise TRP and your article to get focus.. I used to read your blog. But, I dont agree with you on this article. We human being need some control (or it can be called as afraid) with somebody. What police have done on this is 200% correct. For blogging you can write, it would be the same treatment, even if your family members got affected like this.

    But I DONT BELIEVE IT.

    ReplyDelete
  20. But how you "know" that this is a fake encounter?

    ReplyDelete
  21. வேழமுகன்,

    Why கண்ணாடி for கைப்புன்?

    ReplyDelete
  22. 100% AGREED.

    Apart from putting post, should register the agitation. I expect some thing from Gnani regarding this for ways to raise voice in these matters.

    ReplyDelete
  23. மதுரை தினகரன் சம்பவம் நடத்திய குற்றவாளிகளையும் இது மாதிரி போட்டுத்தள்ள முன் வருமா தமிழ்நாடு காவற்துரை ... சட்டசபை நடக்கும் நேரத்தில் எதை திசைதிருப்ப இந்த என்கவுண்டர்

    ReplyDelete
  24. பொதுப்புத்தியோடு யோசிக்காமல், மாத்தி யோசித்து எழுதியிருக்கிறீர்கள்
    வாழ்த்துக்கள்.

    //மெரீனா கடற்கரையில் ஒரு விடியற்காலையில் படகருகே நின்று கொண்டு வலையைக் கட்டிக் கொண்டிருந்த வீரமணி என்னும் மனிதனை கொல்லத் துவங்கிகடற்கரையில் ஒரு விடியற்காலையில் படகருகே நின்று கொண்டு வலையைக் கட்டிக் கொண்டிருந்த வீரமணி என்னும் மனிதனை கொல்லத் துவங்கி//

    மன்னிக்கவும் இந்தக் கருத்தோடு நான் முரண்படுகிறேன்


    //அவனுக்கான தண்டனையை கொடுக்கத்தான் கோர்ட்டும், நீதித்துறையும் இருக்கின்றனவே..? இந்த கொலையைச் செய்ய காவல்துறைக்கு அனுமதியையும், அதிகாரத்தையும் கொடுத்தது யார்..?//

    நியாயமான கேள்வி


    //சேலத்தில் நான்கு கொலைகளைச் செய்ததாக பாரப்பட்டி சுரேஷ்குமார் என்ற தி.மு.க. உடன்பிறப்பை கைது செய்து உள்ளே வைத்திருக்கிறார்களே...? எதுக்கு நேரத்தை வீணாக்க வேண்டும். தைரியமிருந்தால் அவரையும் இதேபோல் என்கவுண்ட்டர் செய்யும் தைரியம் இந்த காவல்துறையினருக்கு உண்டா..? வராதல்லவா..? //


    Don’t touch this point ;-)


    //ஒரு நாள் இவர்களையெல்லாம் இதே என்கவுண்ட்டர் துப்பாக்கி குறி வைக்கும்போதுதான் இதன் வலி அவர்களுக்குப் புரியும்..!//

    :-(

    ReplyDelete
  25. //படகருகே நின்று கொண்டு வலையைக் கட்டிக் கொண்டிருந்த வீரமணி என்னும் மனிதனை .//
    அண்ணாச்சி, அது அரசியல் கொலைன்னு ஊருக்கேத் தெரியும். அதுக்கும் இதுக்கும் முடிச்சு போடாதீங்க. மொட்டுக்களை அழிச்சவங்க சாவறது நியாயம்னாலும் காவல்துறையே தீர்ப்பு அளிச்சது தப்புதான்.

    ReplyDelete
  26. //ஆனால் அவனுக்கான தண்டனையை கொடுக்கத்தான் கோர்ட்டும், நீதித்துறையும் இருக்கின்றனவே..? //

    :::நகைச்சுவையாய் இருக்கிறது::::

    //என் வீட்டிலேயே இந்தக் கொடுமை நடந்திருந்தாலும் நான் இதைத்தான் சொல்வேன். நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுத்திருக்க வேண்டிய விஷயம் இது.. //

    :::: முட்டையிடற கோழிக்குதான் பொச்சு வலி தெரியும் ஆம்லெட் போட்டு திங்கறவனுக்கு என்ன ? :::::

    பின்னுட்டம் வருமா ??????????

    ReplyDelete
  27. தண்டனைகள் கடுமையான தான் தவறுகள் குறையும், இந்த என்கவுண்டர் இனி இது போல் தவறு செய்ய நினைப்பவர்களுக்கு பாடமாக இருக்கட்டும்.

    இந்த சம்பவத்தில் அவனுக்கு சிறிதளவு பங்கு இருந்தாலும் அடித்தே கொல்ல வேண்டிய நாய் தான் அது. இந்த என்கவுண்டர் இனி மத்தவன் தப்பு செய்ய தோனும் போது வந்து நியாபக படுத்தும். அதுனால ஒரு குற்றம் தவிர்க்கபட்டாலும் அது மகிழ்ச்சியே

    நம்ம நாட்டுல நீதித்துறை ஸ்பீடு நல்லா தெரியும் உங்களுக்கு எப்படியும் ஒரு இருவது வருஷம் கழிச்சு ஆயில் தண்டனைன்னு சொல்லி அஞ்சு வருசத்துல விடுதலையும் பண்ணிடுவாங்க. இப்படி பன்ணினா தான் உங்களுக்கு சந்தோசமா? ஆணால பட்ட நாவரசுவை கொலை பண்ணினவனே ஜாலியா வெளியே வந்துட்டான், அவனை அன்னைக்கே என்கவுண்டர்ல போட்டிருக்கனும். இந்த விஷயம் சூடு ஆறுவதற்க்குள் தண்டனை கொடுத்தா தான் அந்த பயம் எல்லார் கிட்டையும் பதியும்.

    ReplyDelete
  28. //நம்ம நாட்டுல நீதித்துறை ஸ்பீடு நல்லா தெரியும் உங்களுக்கு எப்படியும் ஒரு இருவது வருஷம் கழிச்சு ஆயில் தண்டனைன்னு சொல்லி அஞ்சு வருசத்துல விடுதலையும் பண்ணிடுவாங்க. இப்படி பன்ணினா தான் உங்களுக்கு சந்தோசமா? ஆணால பட்ட நாவரசுவை கொலை பண்ணினவனே ஜாலியா வெளியே வந்துட்டான், அவனை அன்னைக்கே என்கவுண்டர்ல போட்டிருக்கனும். இந்த விஷயம் சூடு ஆறுவதற்க்குள் தண்டனை கொடுத்தா தான் அந்த பயம் எல்லார் கிட்டையும் பதியும்.//
    அடி மனதில் எல்லோரும் நம்புவது, நீதி மன்ற தீர்ப்பு மிக தாமதமாகவும், பல சமயம் தவறாகவும் அமைந்துவிடுகிறது. அதனால் encounter தப்பில்லை என்பது. இதையே காவல் துறை யில் உள்ளவர்கள் தங்கள் தனி விரோதத்திற்கும் உபயோகிக்கலாம் என்ற possibility மிக அபாயமானது.
    நோய் என்னவென்று தெரியும். - நம் சட்டங்களும், அவை எடுத்துக்கொள்ளும் மிக அதிக காலமும் - அதை தீர்க்கவேண்டுமே ஒழிய இது போன்ற இன்ஸ்டன்ட் ஜஸ்டிஸ் மிக ஆபத்தானவை. இது போன்ற ஓபன் அண்ட் ஷட் கேஸ்களின் மூலம் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடையாளம் கண்டு அதை அடைக்க முயல வேண்டும்

    ReplyDelete
  29. 1. நான் நினைக்கிறேன், உங்கள் தர்க்கமே சரியில்லை. விதண்டாவாதம் ஆக இருக்கிறது.

    2. //பெரும்பாலோனோரின் ஏனைய பதிவர்களின் பின்னூட்டங்கள் அதனையே வெளிப்படுத்துகின்றன.// சட்டத்தை விஜய்காந்த் முதலிய யாருமே கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது. திரைப்படம் பார்த்து, உணர்ச்சி வசப்பட்டுக் கிடக்கிறோம் நம்மில் பலர். இந்த‌ என்கவுன்டர் தவிர்க்கப் பட்டிருக்க முடியுமானால், அந்த ஈனப் பிறவிக்கு, நான் ட்விட்டரில் சொன்ன முடிவு இது தான்:
    என்கவுண்டரில் போடாமல், ஜெயிலில் காய்ந்து கிடப்பவர்களிடம் விட்டு மெல்ல கொன்றிருக்க‌ வேண்டும் #பெற்றவளின்_பித்து_மனம்

    3. அரசியல் காரணங்களுக்காக இந்த என்கவுன்டர் நடத்தப்பட்டிருக்கிறதா என்று கேட்க முடியுமா நம்மால்?

    ReplyDelete
  30. :-(
    மன்னிக்கவும் நண்பா -
    எல்லாப் பத்திரிக்கையாளர்களுமே ஒரே மாதிரிதானிருக்கீங்க -
    மனசாட்சி உள்ள எல்லா மனுஷங்களும் ஒரே மாதிரிதான் சிந்திக்கிறாங்க -

    கருத்து சொல்றதால மட்டும் சில விஷயங்கள் தீர்ந்துடாது -
    போலீசார் பண்ணுனது நியாயமான்னு யாருமே சிந்திக்கலை - காரணம் பாதிக்கப்பட்டது ரெண்டு பிஞ்சுங்க..

    மோகன்ராஜ் மாதிரி ஆயிரமாயிரம் குற்றவாளிங்க ஊருக்குள்ள இருந்தாலும் - பாலியல் பலாத்காரம் மக்களை மன்னிக்க விடுறதில்லை...

    அவன் பணத்துக்காக கடத்தியிருந்தாலும் - மக்களால ஜீரணிக்க முடியாத விஷயம் பாலியல் பலாத்காரம்தான் -

    ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை -

    என் கருத்து -
    சத்தியமேவ ஜெயதே

    DOT

    ReplyDelete
  31. தல,

    சரியான பார்வையில எழுதியிருக்கீங்க

    ஆனா வீரமணி கொலையோட இதை ஒப்பிடுவது தவறு என்பதே என் கருத்து.

    நீதிமன்றம் சரியான நீதி வழங்கவில்லை என்றால் அதை சரி செய்யவேண்டும். அதைவிட்டு மாட்டினவன் எல்லாம் போட்டுத்தள்ளுவது சரியா?

    ReplyDelete
  32. - ம்ம்ம்ம்ம்ம்ம்ம் இவனுக்கே நம்ம கராத்தே தியாகராஜன் போலவோ நம்ம தினகரன் ஆபிசை கொளுத்திய அட்டாக் பாண்டி போலவோ ஒரு அரசியல் பேக்கிரவுண்டு இருந்திருந்தா இதே போலிஸ்காரனுங்க சலாம் போட்டிருப்பாங்க....

    கொலைசெஞ்சாலும் ஒரு பேக்கிரவுண்டோட செய்யனும் இல்லின்னா இப்புடித்தான் என்கவுண்டர்

    ReplyDelete
  33. யாருக்கும் தெரியாது யார் எதை செய்தது என்று .
    அப்படி மோகன்ராஜ் இந்த
    படுபாதக செயல்லை செய்தது உண்மை எனில் இந்த என்கண்டர் சரியே. அது போலியாக இருந்தாலும் ..
    பதினோரு வயசு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற இவனை நந்தா படத்தில் வருவது போல கொல்ல வேண்டும்

    வீரமணி எதோ அப்பாவி மாதிரி பேசுறிங்க ..

    தமிழுடன்
    முத்துக்குமார்

    ReplyDelete
  34. எந்த மனிதனும் குற்றவாளியாகவே பிறந்து வருவதில்லை. அத்தனை பேரும் சமூகச் சூழலின் காரணமாகத்தான் குற்றவாளியாக ஆகிறார்கள். மோகன்ராஜ் வேன் டிரைவர். இதற்காக எல்லா வேன் டிரைவர்களும் இப்படியில்லை. சமூகத்தில் இப்படியும் நடக்கத்தான் செய்யும்.. எந்த நாட்டில்தான் இது நடக்காமல் இல்லை..!?

    என் வீட்டிலேயே இந்தக் கொடுமை நடந்திருந்தாலும் நான் இதைத்தான் சொல்வேன். நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுத்திருக்க வேண்டிய விஷயம் இது..

    -----------


    மிக தவறு. கொலைகாரன் என் பிள்ளையாய் இருந்தால் நானே சுட்டிருப்பேன்.

    ReplyDelete
  35. கராத்தே தியாகராஜன் என்ன கொலை செய்தார்? அவரை ஏன் என்கவுண்டர் லிஸ்டில் சேக்குறீங்க?

    -- வேல் --

    ReplyDelete
  36. UT,

    நீங்க ரெம்ப உணர்சிவசபடுறீங்க. ஏற்கனவே, நீதி மெதுவாகத்தான் கிடைக்குது. இந்த லெட்சனத்துல உங்களைபோல நாலு பேரு மீடியா-ல எழுதுனா வெளங்கிடும்.

    ReplyDelete
  37. அழகான திசை திருப்பல்... இந்த மாதிரியான FUD (Fear/Uncertainity/Distrust) பதிவுகளை போட்டு கொலை/கொள்ளை/கற்பழிப்பு ஆசாமிகளை, அவர்களது உரிமைகளை காத்து அருளவும். நாங்கள் சாதாரண குடிமக்கள் கிடைத்த நியாயத்தை ஏற்று கொள்கிறோம்...

    Srini

    ReplyDelete
  38. கற்பு அழிக்க பட்டு கொலை செய்யப்பட்ட குழந்தை உன் மகளாக இருந்தால் , நீங்கள் என்ன செய்து இருப்பீர்கள் ...மன்னிச்சு விட்டு இருப்பிங்களா ?

    ReplyDelete
  39. என்ன அண்ணா!உங்க கிட்டே இருந்து எப்படி ஒரு பதிவா? பிஞ்சுகளை கொன்றவனுக்கு இது தான் சரி.......
    என்னை பொறுத்த வரை சட்டம் தன் கடமையை (கொஞ்சம் லேட்டா) செய்து உள்ளது.
    அண்ணே! வீரமணி புத்தர் இல்ல!
    வீரப்பன் புனிதன் அல்ல!

    ReplyDelete
  40. என்ன அண்ணா!உங்க கிட்டே இருந்து எப்படி ஒரு பதிவா? பிஞ்சுகளை கொன்றவனுக்கு இது தான் சரி.......
    என்னை பொறுத்த வரை சட்டம் தன் கடமையை (கொஞ்சம் லேட்டா) செய்து உள்ளது.
    அண்ணே! வீரமணி புத்தர் இல்ல!
    வீரப்பன் புனிதன் அல்ல!

    ReplyDelete
  41. //
    எந்த மனிதனும் குற்றவாளியாகவே பிறந்து வருவதில்லை. அத்தனை பேரும் சமூகச் சூழலின் காரணமாகத்தான் குற்றவாளியாக ஆகிறார்கள். மோகன்ராஜ் வேன் டிரைவர். இதற்காக எல்லா வேன் டிரைவர்களும் இப்படியில்லை. சமூகத்தில் இப்படியும் நடக்கத்தான் செய்யும்.. எந்த நாட்டில்தான் இது நடக்காமல் இல்லை..!?//

    மத்த நாடுகளில் நடக்குது தானே என்பதற்காக தப்பை சரி என்று சொல்கிறீர்களா உ.த.சார்.

    நீங்க புலிகளைப் பற்றி எதிராக நிறைய சொன்ன போது கூட, அங்க இருக்கறவங்களுக்கு இங்க இருக்கறவங்களத் தெரியாது என்று நினைத்து மைனஸ் ஓட்டு போடல. இதுக்கு ஒரு 10 மைனஸ் ஓட்டாவது போட வேண்டும் போல இருக்கு. கோவம் வரவில்லை. ஆதங்கம். ரொம்பவே மனசுக்கு கஷ்டமாக இருக்கு சார்.

    புலிகள் மேல் இருந்த கடுப்பில் பொது சனம் கொல்லப்படுவதை சஞ்சேய், கிருபானந்தினி, டோண்டு போன்றவர்கள் நியாயப்படுத்தியது போல நீங்கள் நியாயப்படுத்தவில்லை என்ற போது உங்கள் நேர்மை பிடித்திருந்தது. அதற்காகவே உங்கள் எழுத்தின் மீது பெரிய மரியாதையே இருந்தது. நீங்களா இதை எழுதினீர்கள் சார். இந்த போஸ்ட் மட்டும் பெரிதாக இல்லாவிட்டால் யாரோ உங்க எக்கவுண்டை ஹக் பண்ணி இருக்கிறார்கள் என்று நினைத்து இருப்பேன்.

    உங்கள் எழுத்தில் அதிகமாகவே குழப்பம் தெரிகிறது.

    என்கவுண்டரை நியாயப்படுத்தவில்லை. அதை எதிர்க்கவும் முடியாது. ஒவ்வொரு விடயமும் ஒரு வகையான கேஸ் ஸ்டடி. இது தான் சரி, இது தான் பிழை என்று வரைவிலக்கணம் சொல்லமுடியாது. "தாஜ் ஹோட்டலில் அராஜகம் பண்ணினவங்களை என்கவுண்டர் பண்ணி இருக்கவேண்டும். போபால் பிரச்சினையின் காரணகர்த்தாவை என்கவுண்டர் பண்ணி இருக்கவேண்டும். அதை எல்லாம் விட்டுவிட்டு இவர்களைப் போன்றவர்களை என்கவுண்டரில் போட்டதில் பிரயோசனம் என்ன?" என்று மனதில் தோன்றுவதை மறுக்கமுடியாது. தோன்றும். ஒவ்வொரு கேசையும் ரிலட்டிவ்லி முக்கியம் என்று மனம் எடை போடும். ரிலட்டிவ்லி முக்கியமானதே மனதில் இருக்கும். அதற்காக ரிலட்டிவ்லி முக்கியமல்லாத கேஸ் என்று பின்னதை சுடாமல் இருக்கமுடியாது தானே?

    பலரும் படிக்கும் உங்கள் புளொக்கில் இப்படி எல்லாம் எழுதறீங்களா சார்? ரொம்ப கஷ்டமாக இருக்கு. அதே நேரம், காக்க காக்கவில் வந்த மனித உரிமைகள் கெமிட்டி லேடி சொல்ற டயலொக் மனதில் தோன்றி சிரிப்பும் வருகிறது.

    டிலீட் பண்ணிடுங்க சார். என் கொமன்டை இல்ல. இந்த பதிவை.

    ReplyDelete
  42. இது தற்காலத்திய சினிமாக்களின் தாக்கத்தை ஊர்ஜிதப்படுத்துகிறது. படத்தில் வில்லனாக வருபவரை ஊர்கூடி அடித்துக் கொன்றுவிட்டு, எங்கள் எல்லோரையும் கைது செய்யுங்கள் என்று சொல்வது, ஹீரோ எதுக்கு கோர்ட்டுக்கு அலைந்து பெட்ரோல் செலவு, சிறையில் சாப்பாட்டுச் செலவு அரசுப் பணம் வீண் ஒரு புல்லட் செலவில் இந்தப் பிரச்னையை முடிப்பதை விட்டு விட்டு என்று சொல்லுவது, இதெல்லாம் மக்கள் மனதில் இந்த எண்கவுண்டருக்கு ஒரு பெரிய மரியாதையை ஏற்படுத்தியிருக்கிறது. நீதித்துறை எதற்கு, காவலர்கள் எதற்கு, நாம் என்ன கற்காலத்திற்கா போய்க் கொண்டிருக்கிறோம். இது போலீஸால் உணர்ச்சி வசப்பட்டுஎடுத்து செய்த காரியமாகும். அந்தக் கடத்தலைச் செய்ய யாராவது அவனுக்குச் சொன்னார்களா, பிற்பாடு பின்வாங்கி என்ன செய்வது என்று தெரியாமல் இந்த முடிவு ஏற்பட்டதா என்பதற்கு விசாரணை மூலம் தெரிய வந்திருக்கலாம். தண்டனை சரிதான், ஆனால் நாயைக் கொன்றாலும் சட்டபடிதான் கொல்ல வேண்டும் என்பது எனது வாதம்.

    ReplyDelete
  43. போய்யா...

    என் வூட்ல எவனாவது இப்பிடி பண்ணீர்ந்தான்னா நானே அவன அடிச்சி கொன்னுருப்பேன்.....

    இந்த நாய்கள நெத்தில இல்ல அந்த இடத்துல சுட்டுருக்கனும்....

    ஹாட்ஸ் ஆஃப் போலிஸ்.....

    எதயாவது பரபரப்பா எழுதனும்னு எழுதாதீங்க தமிழா.... உண்மையா எழுதுங்க....

    ReplyDelete
  44. வாழ்த்துகள் நண்பரே!

    பலமான எதிர்ப்பு வரும் என்று தெரிந்தும் நேர்மையாக, நியாயமாக உங்கள் கருத்துகளை பதிவு செய்திருக்கிறீர்கள்.

    ஆட்சியிலிருப்போர், ஊடகங்களின் உதவியுடன் மக்களை மூளைச்சலவை செய்துள்ள நேரத்தில் உங்களைப் போன்றவர்களின் முயற்சிகள்தான் மக்களுக்கு மாற்றுச் சிந்தனைகளை அறிமுகப்படுத்த முடியும். துவக்கத்தில் எதிர்த்தாலும் மெல்ல உங்கள் கருத்துகளை மக்கள் பரிசீலிப்பார்கள். இது குறித்து விவாதித்தாலே அது வெற்றிதான்.

    நீதித்துறை நீதியைத் தராது அல்லது உடனடியாக தராது என்பதே பெருவாரியான மக்களின் கருத்தாக உள்ளது. அது உண்மையென்றாலும்கூட அதற்கு காரணமும் அரசியல்வாதிகளும், அரசு அமைப்பும்தானே! அதற்காக யாரை தண்டிப்பது?

    தர்மபுரியில் வேளாண் கல்லூரி மாணவிகளை உயிரோடு எரித்த சம்பவம், மதுரை தினகரன் நாளிதழ் சம்பவம், அண்மையில் சேலத்தில் நடந்த ஒரே குடும்பத்தில் 6 பேர் கொல்லப்பட்ட சம்பவம் போன்றவற்றில் காவல்துறையின் துப்பாக்கிகள் மவுனம் சாதிப்பது ஏன்?

    கோவை என்கவுண்டரை ஆதரிப்போர் மேற்கண்ட கேள்விகளுக்கு என்ன பதில் அளிப்பார்கள்?

    ReplyDelete
  45. idhu thittamitta padukolai!! enakum andha sandhegam vandhu indha news ketta vudane!!! idhan pinnal sila periya thalaigal irukanum..!!!

    ReplyDelete
  46. - //பிரதான குற்றவாளியை சுட்டுக்கொன்றதன் மூலம் இவர்கள் வழக்கை மொத்தமாக மூடிவிட்டார்கள். முன்விரோதமோ அல்லது கொடுக்கல் வாங்கல் தகராறோ இந்த கொலைகளுக்கு காரணமாக இருந்திருப்பின் அதில் தொடர்புடைய குற்றவாளிகள் இனி சுதந்திரமாக நடமாடலாம். இந்த அழகில் இந்த என்கவுண்டர் குற்றவாளிகளை அச்சுறுத்தும் என்று எப்படிக் கருதமுடியும்?//
    http://villavan.wordpress.com/2010/11/10/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF/#comment-269
    ---------------------------------



    யோசிக்க வேண்டிய விஷயம் இதுதான்..

    ReplyDelete
  47. இவ்வளவு மறுப்புக்குப்பின்னும் உண்மைதமிழன் react பண்ணலயே

    ReplyDelete
  48. kadathal, sithravathai , vanpunarchi ,kolai ithai vida nalla thandanai avanukku thara mudiyathunnu nenakkaren 100% Right

    ReplyDelete
  49. இது ஒரு நியாயமான,தேவையான என்கௌன்ட்டர். இது தேவை.
    பொதுவில் நிறுத்தி கல்லால் அடித்துக்கொன்றிக்கவேண்டும். தர்மம்
    இருக்கிறது என்பதற்கு இது ஒரு சாட்சி.

    ReplyDelete
  50. எய்தவன், பின்புலத்தில் இருந்து இயக்கியவன் என்று பார்த்தால் எல்லா குற்றவாளிகளுக்கும் ஏதாவது ஒன்று இருக்கும்...

    உங்கள் கூற்று படியே... இவனை இயக்கியது வேறு ஒருவனாக இருந்து இவன் செயல் பட்டால்... தவறு தவறு தானே..

    இவனை இயக்கியவன் இவனை எப்படி மூளை சலவை செய்து இருப்பான்... "நீ செய்யி நான் கேசு நடத்துறேன்.. உன் வீட்டுக்கும் காசு கொடுக்குறேன்...பார்த்துக்கலாம்... எப்படியும்... வாய்தா, பெயில் என்று நீயும் உன் குடும்பத்தோட இருக்கலாம் கேசும் முடிஞ்சிரும்... செய் பார்த்துக்கலாம்"-னு தானே சொல்லி இருப்பான்..

    இப்படி செய்துட்டா... ஆளு கெடைக்காமே போகாது... ஆனா கொஞ்சமாவது குறையும் அல்லவா?

    அப்புறம் நம்ம சமுதாயதுலே எத்தனையோ நடக்குது... அத்தனைக்கும் என்ன செய்வாங்கன்னு, என்ன செய்ய போறோம்னு தெரியலே... ஆனா குழந்தைகளுக்கு எதிரா நடக்குற குற்றங்களுக்கு தண்டனை மிக அதிகமாக இருக்க வேண்டும்...

    எதிர் வரும் காலங்களில்... இப்படி இயக்குர ஆளுங்க கிட்டே இந்த அடியாளுங்க சொல்லணும்...
    "மந்திரி, அதிகாரிங்கள கூட கடத்த சொல்லுங்க செய்றோம்... ஆனா குழந்தைகளை செய்ய மாட்டோம்னு சொல்லணும்..."
    என்ன கனவு காண்றேனா?
    கனவுன்னே கூட வச்சிகோங்க...

    ReplyDelete
  51. மிக மோசமான முன்னூதரணத்தை ஏற்படுத்திவிட்ட ார்கள் கோவைமாவட்ட மக்கள்..< எந்த கீழான உணர்ச்சிக்கு மோகன் ராஜ் உட்ப்பட்டனோ அதே உணர்ச்சியை காவல்துறையினர் வேறுவழியாக வெளிப்படுத்தியி ருக்கிறார்கள். இந்த அரசியல் அமைப்பில் திருத்தப்படவேண் டிய விஷயங்கள் நிறைய உள்ளது என்பதில் எனக்கும் உடன்பாடு உள்ளது.. ஆனால் அது அனைவருக்கும் சமமாக இருக்கவேண்டும்.. அப்படி இருந்ததா என்று யோசித்து என்கவுண்டர் பற்றி ஆதரித்து பேசுங்கள். நிச்சியம் நிறைய மோசமான படுகொலைகளை போலிஸார்கள் வரும் நாட்களில் அரங்கேற்றுவார்க ள்.

    ReplyDelete
  52. /உணர்ச்சி வேகத்தில் என்கவுண்ட்டருக்கு சபாஷ் போடும் பரிதாப மக்கள்..! //
    உணர்ச்சி இருப்பதால் தான் ..

    உங்களுடைய மாற்று சிந்தானை ஏற்றுக்கொள்ளூம் அளவிற்க்கு அவன் பணத்திற்க்காக மட்டும் செய்த கொலை அல்ல. குழந்தையை வன்புணர்வு பின் கொலை.

    நாட்டில் தண்டிக்க வேண்டிய என்கவுண்டரில் போட வேண்டிய எண்ணை சட்டியில் வருக்க வேண்டிய ஆட்கள் உள்ளனார் நான் மறுக்கவில்லை அனைவருக்கும் தண்டணை கொடுத்து விட்டுத்தான் இவனை தண்டிக்க வேண்டும் என்றால் இவனது தண்டனை ?????.(குற்றவாளி )இவன் இறப்பதால் இனிமேல் இது போன்ற செயலில் ஈடுபடுபவன் பயபடுவான்.இது போன்ற கொடூரத்தில் இருந்து ஒரு குழந்தயை தப்பிக்குமானால் இவனை கொள்வதில் தப்பில்லை.‌

    // சக்தி வாய்ந்தவர்கள் நீதிமன்றங்களுக்குச் சென்று பரிகாரம் தேடி அலையத் துவங்குவார்கள். இது அவர்களது விதி.. தலையெழுத்து..!//

    இவன் கொலையும் அதேவகை நீங்கள் ஏன் பரிதாப படுகிறீர்கள். நம்மை சமாதனம் செய்ய நாமே சொல்லும் ஒரு வார்த்தை விதி,தலையெழுத்து.,

    ReplyDelete
  53. போலீஸ் மற்றும் மோகன் செயல்களில் எந்த வித்யாசமும் இல்லை .நோக்கம் மட்டும் மாறுகிறது .வன்முறை அது எந்த வடிவில் வந்தாலும் அது நிராகரிக்க பட வேண்டும் .தண்டனை என்பது குற்றம் எனும் செயலுக்கு எதிராக செய்ய வேண்டியது .குற்றவாளிகளை அழிப்பதால் குற்றங்கள் நிற்பது இல்லை ,குற்றத்திற்கான மன போக்கை அழிப்பதே முக்கியம் .
    இது திட்டமிட்ட செயல் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை .
    ஆகினும் கூட உள்ளுர இந்த செய்தியை பார்த்த உடன் எனக்கு ஒரு நிம்மதி பிறந்தது உண்மை .இது தவறா சரியா என்று யோசிக்க வேண்டும்

    ReplyDelete
  54. ஒரு மிகவும் நல்ல பதிவு உண்மைத்தமிழனிடமிருந்து வந்திருக்கிறது. பாராட்டுக்கள்.

    அவர்கள் செய்தது தவறுதான் அதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.

    அதேபோல இந்த என்கவுண்டரும் கண்டிக்கத்தக்கதே.

    ஆனால் இதன் மூலம் உண்மைக் குற்றவாளிகள் தப்பிவிடக்கூடாது.

    அபி அப்பா: அது என்ன கிரிக்கெட் புக்கி??

    ReplyDelete
  55. [[[பார்வையாளன் said...

    "இல்லாவிட்டால் ஒருவேளை செத்த மோகன்ராஜ் நமது குடும்பத்தில் ஒருத்தனாக இருந்து தொலைந்து"

    ஒரு வேளை அவனால் கொல்லப்பட்டவர்கள், நம் குடும்பத்தில் ஒருவராக இருந்து இருந்தால், நம் ரியாக்‌ஷன் எப்படி இருந்து இருக்கும் ]]]

    என் ரியாக்ஷன் இப்படித்தான் இருக்கும் பார்வையாளன் ஸார்..!

    ReplyDelete
  56. [[[கனவுகளின் மொழிபெயர்ப்பாளன் said...
    i am agree with your article. why the police not shooting corrupt politician and officials who are robbing crores of money of poor people!]]]

    அவங்கள்லாம் ஆள்பவர்களுக்காகவே பிறந்தவர்கள். அவர்கள் செய்வதெல்லாம் தவறே இல்லை. சாமான்யன் செய்தால்தான் அது தவறு..! இதுதான் காவல்துறையின் கணிப்பு..!

    ReplyDelete
  57. [[[ராஜ நடராஜன் said...
    தர்க்கம் சரியாக செய்கிறீர்கள். ஆனால் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் தர்க்கம் துணைக்கு வருவதில்லை. பெரும்பாலோனோரின் ஏனைய பதிவர்களின் பின்னூட்டங்கள் அதனையே வெளிப்படுத்துகின்றன.]]]

    தங்களது கருத்துக்கு மிக்க நன்றி..

    ReplyDelete
  58. [[[தீப்பெட்டி said...

    நீங்க சொல்றது சரிதான். என்கவுண்டரை எதிர்க்கத்தான் வேண்டும். சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விடுவானென்று தோன்றினால் சட்டத்தை சீர்படுத்த முனைய வேண்டுமேயன்றி, தனிப்பட்ட மனிதர்கள் (காவல் துறையே ஆனாலும் - சொல்லப் போனால் தனி மனிதர்களை கூட மன்னித்து விடலாம், ஒரு அதிகாரமிக்க துறையினர் இவ்வாறு செய்வது ஜனநாயகத்தையும் அரசியல் சாசனத்தையும் கேலிக்குள்ளாக்கும்..) கையில் எடுப்பது நல்லதல்ல..

    ஒருவேளை இப்படியும் யூகிக்க இடமிருக்கிறது, மோகன்ராஜ் கூலிக்கு இதை செய்திருந்து (தந்தையின் தொழில்முறை எதிரிகளால்) கூலி கொடுத்து கொலை செய்த அதிகாரமிக்க மனிதர், தன்னை மோகன்ராஜ் காட்டி கொடுத்துவிடக் கூடாதென்ற நோக்கில் காவல்துறையினரை கரைக்கும் விதத்தில் கரைத்து மோகன்ராஜை சுட்டுக் கொல்ல செய்து, தான் (உண்மையான கொலையாளி) தப்பித்துக் கொண்டிருக்கலாம்..

    யாருக்குத் தெரியும்?..

    ஒருவேளை மோகன்ராஜ் விசயத்தில் இப்படி நடக்காமலிருந்திருக்கலாமென்றாலும் நாளை நடக்காதென்பதற்கு என்ன உத்திரவாதம்? (மக்கள்தான் ஏகோபித்த வரவேற்பு கொடுக்குறார்களே- தனிப்பட்ட எதிரிகளைக்கூட சுட்டு விட்டு இப்படி எதாவது கதையில் கோர்த்து விடுவது மிகவும் எளிது)

    இதனால் இந்த என்கவுண்டரை எதிர்க்க வேண்டியது நமது கடமை.]]]

    நன்றி தீப்பெட்டி ஸார்.. உங்களுடைய பார்வையில் பட்டிருக்கும் அனைத்து விஷயங்களும் உண்மைதான். இவைகள் முன்பே பல என்கவுண்ட்டர்களில் நடந்திருக்கிறது. அதனால்தான் இதனை எதிர்க்க வேண்டியது நமது கடமை என்று சொல்கிறோம்..!

    ReplyDelete
  59. உங்கள் பெயருக்கு ஏற்றதுபோல் உங்கள் கருத்துகளை நேர்மையாக, நியாயமாக பதிவு செய்திருக்கிறீர்கள்.

    உங்கள் கருத்துகளை நிறையபேர் சரியாக புரிந்துகொள்ளவில்லையே என வருத்தப் படுகிறேன்.

    நீங்கள் எந்த இடத்திலும் குற்றம் சாட்டப்பட்டவரை நியப்படுத்தியோ (அ)அவர்க்கு விடுதலை தரவேண்டும் என்றோ கூறவில்லை, ஆட்சியிலிருப்போர்,அதிகாரவர்க்கம் செய்யும் தவறுகளுக்கு மக்களும் ஆதரவு தெரிவிப்பது நியாயமா என்று உங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளீர்கள்.

    ஆட்சியிலிருப்போர், மீடியாக்கள் உதவியுடன் மக்களை நன்றாக ஏமாற்ற தெரிந்து வைத்துள்ளார்கள்.

    பகிர்வுக்கு நன்றி அண்ணே.

    ReplyDelete
  60. [[[வார்த்தை said...

    5 W செய்தி சேகரிக்க மட்டுமல்ல, செய்தி வெளியிடவும்தான் என உங்களுக்கே தெரிந்திருக்கும்.

    அப்பாவி பொதுஜனம், அப்பாவியாகவே இருக்கட்டுமே.

    பாவப்பட்ட ஜீவன்களுக்கு அஞ்சலியுடன்.]]]

    என்னால் முடிந்த எதிர்ப்பு இதுதான் ஸார்..!

    ReplyDelete
  61. [[[ரம்மி said...

    //ஒரு நாள் இவர்களையெல்லாம் இதே என்கவுண்ட்டர் துப்பாக்கி குறி வைக்கும்போதுதான் இதன் வலி அவர்களுக்குப் புரியும்..!//

    இந்த என்கவுன்டரினால் உமக்கு எங்கு வலித்தது!]]]

    இது பின்னாளில் எப்படியும் அப்பாவிகளையும் குறி வைக்கும் என்பதால்தான் சொல்கிறேன்..!

    ReplyDelete
  62. [[[Chandran said...

    -ஆனால் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் தர்க்கம் துணைக்கு வருவதில்லை.-

    இலங்கை தமிழர் விடயங்களிலும் இதையேதான் நீங்கள் (உண்மைத்தமிழன்+ ராஜ நடராஜன்) மிக அதிகமாக செய்கிறீர்கள் என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.]]]

    ஐயோடா சாமி.. நாங்க சொல்றதே அமைதி என்பதைத்தான். அதையும் தாங்கிக்க முடியலைன்னா எப்படி..?

    ReplyDelete
  63. [[[கார்க்கி said...

    கரெட்க்ட்ண்ணா.. இதுவும் நீதிமன்றம் போயி, 27 வருஷம் கழிச்சு இவன்னுக்கு ஆயுள் தண்டனைன்னு தீர்ப்பு ஆயிருக்க வேண்டும். அதற்குள் என்ன அவசரம்?]]]

    27 வருஷம் கழிச்சு தீர்ப்பு வர்ற மாதிரி இருக்குற நீதிமன்ற செட்டப்புக்கு உண்மையிலேயே நீங்க வெட்கப்படணும். அதைவிட்டுட்டு அதையேன் துணைக்குக் கூப்பிடுறீங்க..?

    [[[மோகன்ராஜ் நல்லவன். அவனுக்கு மனநல மருத்துவர் மருந்து தந்திருக்க வேண்டும்.]]]

    நான் நல்லவன்னு சொல்லலையே.. குற்றவாளியா இல்லையான்னு சொல்ல வேண்டியது நீதிமன்றம்ன்னுதான் சொல்றேன்..!

    ReplyDelete
  64. [[[Indian Share Market said...
    அந்த மிருகம் தூக்கில் போடப்பட வேண்டியவன் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால் தீர விசாரித்திருக்க வேண்டும். தூக்கில் போடப்பட வேண்டிய காக்கியொன்று தூக்கில் போடப்பட வேண்டிய ஆட்சியாளரின் கட்டளையை நிறைவேற்றியிருககிறது.]]]

    இதுதான் இந்த கேடு கெட்ட ஆட்சியின் முறைகேடு..!

    ReplyDelete
  65. அண்ணே,

    நீங்க சொல்லும் நியாயம் எல்லாம் சரி.

    இந்த என்கவுண்டர் கொலைக்கு அச்சாரம் போட்டது ஜெ. அப்புறம் கொலையான குழந்தைகளின் குடும்பத்தினரை பார்த்து நாடகம் போட கிளம்பிய ராகுல் (ஜுவி செய்தியை பார்த்து கொள்ளவும்)

    ராகுல் வந்து கோவையில் போட இருந்த அசிங்கமான நாடகத்தை விட சைலேந்திர பாபு போட்ட நாடகம் பரவாயில்லை என ஆகி விட்டது.

    கொல்லப்பட்ட மோகன்ராஜை விட ஆபத்தானவர்கள் ராகுல் போன்ற ரத்த வெறி பிடித்த ஓநாய்கள்.

    இதே போல் ஒரு என்கவுண்டரை 2004இல் போட்டிருந்தால் சங்கராச்சாரிகள் உச்சி குடுமி மன்றம் வரை போய் வழக்கை புதுச்சேரிக்கு மாற்றி, விசாரிக்கும் நிதிபதிக்கு சாம்பல் கொடுத்து ஆசிர்வாதம் செய்து, சாட்சிகளை பல்டி அடிக்க வைத்து, வழக்கு சொதப்பல் ஆகாமல் போய் இருக்குமே?

    ReplyDelete
  66. [[[subramanian said...

    Dear UT, I am not sure why even when rarely police are seen to be meting out justice there is a hue & cry about human rights. are human rights there only for the criminals & not for the people who have suffered in their hands. Just because the politicians & people with connections are escaping do we want all the people who have committed a crime to escape. what logic is this.if after a trial of 8to 10 years he is handed out a death sentence by the supreme court will it actually be executed at all. if he suffers that 10 years in jail for nothing is it meaningful for him or the public. Instead it is better of if justice is handed out in this manner - if it is true that he actually committed the crime.]]]

    குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டிய பொறுப்பு நீதிமன்றத்திற்கு மட்டுமே உண்டு என்பது தங்களுக்குத் தெரியாததல்ல..!

    பத்து வருட சிறை வாசத்தில் அவன் திருந்த மாட்டானா? அல்லது அந்த பத்தாண்டு சிறை வாசம் அவனுக்குத் தண்டனையாக இருக்காதா..?

    ReplyDelete
  67. [[[அத்திவெட்டி ஜோதிபாரதி said...
    சரியான பதிவு / கட்டுரை]]]

    நன்றி ஜோதி ஸார்..!

    ReplyDelete
  68. [[[ஈரோடு கதிர் said...

    ||ஒருவேளை செத்த மோகன்ராஜ் நமது குடும்பத்தில் ஒருத்தனாக இருந்து தொலைந்து, இப்போது இப்படி செத்திருந்தால் ||

    அண்ணே தொட்டுட்டீங்கண்ணே!]]]

    இது உண்மையாகவே இருந்தால், எல்லாரும் இதேபோல் ஒரு நிமிடமாவது நினைக்க மாட்டீங்களா..?

    ReplyDelete
  69. [[[ரிஷபன்Meena said...
    ஆட்டோ சங்கர், ஆறு கொலை ஆறுமுகம் நாய் சேகர் பக்கம் இருக்கிற மனித நேயங்களை பத்தி அடுத்த பதிவிடலாம். எதையாவது பக்கம் பக்கமா நீங்க அடிச்சு விடுங்க சார்.]]]

    ஓகே.. செஞ்சிருவோம்..!

    ReplyDelete
  70. [[[சீனு said...

    இது திட்டமிட்ட எக்னவுன்ட்டர்தான். இல்லையென்று சொல்ல முடியாது. ஆனால், இது தேவையான ஒன்று.]]]

    ம்ஹும்.. மக்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை..!

    ReplyDelete
  71. [[[தருமி said...

    //அவனுக்கான தண்டனையை கொடுக்கத்தான் கோர்ட்டும், நீதித்துறையும் இருக்கின்றனவே..?//

    அதான.:(]]]

    பாருங்க பேராசிரியர் ஸார்.. ஒருத்தரும் இதை மட்டும் நினைச்சுக்கூட பார்க்க மாட்டேன்றாங்க..!

    ReplyDelete
  72. [[[நந்தா ஆண்டாள்மகன் said...

    இதற்கு முன் நொய்டாவில் நடந்த கொலை வழக்குகளிலும் கொலைகாரன் நிதாரி இன்னும் உள்ளேதான். இந்த மோகன்ராஜ் மட்டும்? மோகன்ராஜ் மூலமாக போலீஸ் மீண்டும் தன் கையாலாகதனத்தை வெளிபடுத்தியுள்ளது. மோகன்ராஜ் மூலம் நீதியை கொன்றவர்களை யார் என்கவுண்டர் செய்வது? யாருக்காக இந்த என்கவுண்டர்????]]]

    ஆட்சியாளர்களுக்காக.. மக்களிடம் சபாஷ் பெறுவதற்காக உயிரைப் பலியாக்கிவிட்டார்கள்..!

    ReplyDelete
  73. [[[Ela said...
    3 அடுக்கு பாதுகாப்பு கொடுத்து சிக்கென் பிர்யாணி கொடுக்க சொல்ரிங்களா?]]]

    ஏன் சிறை தண்டனை ஒரு தண்டனையாக இருக்காதா அவருக்கு..?

    ReplyDelete
  74. [[[அபி அப்பா said...

    \\இது இரண்டு கொலைதான். ஆனால் சேலத்தில் நான்கு கொலைகளைச் செய்ததாக பாரப்பட்டி சுரேஷ்குமார் என்ற தி.மு.க. உடன்பிறப்பை கைது செய்து உள்ளே வைத்திருக்கிறார்களே...? எதுக்கு நேரத்தை வீணாக்க வேண்டும். தைரியமிருந்தால் அவரையும் இதேபோல் என்கவுண்ட்டர் செய்யும் தைரியம் இந்த காவல்துறையினருக்கு உண்டா..? வராதல்லவா..\\

    இந்த ஒரு பாராவுக்காக மட்டுமே நீங்கள் இந்த பதிவை எழுதியமைக்காக நானும் முதன் முறையாக ஒரு மைனஸ் ஓட்டு போடுகின்றேன். இதுதான் என் முதல் மைனஸ் ஓட்டு. மிகவும் வருத்தமாக இருக்கு. இதை என் தம்பியிடமே பிரயோகித்தமைக்காக!]]]

    இதிலென்ன வருத்தம்..? தான் ஆடாவிட்டாலும் தன் சதையாடும் என்பார்களே.. அது போலத்தான். எவ்ளோ பெரிய கொலையாளியாக இருந்தாலும் அது உடன்பிறப்பாக இருந்தால் அவன் நல்லவனாகி விடுவானே..!?

    வாழ்க வளமுடன் அபியப்பா..!

    ReplyDelete
  75. [[[அபி அப்பா said...
    தவிர சைலேந்திரபாபு பற்றி எனக்கு தனிப்பட்ட முறையில்கூட தெரியும். அவர் நியாயம் இல்லாமல் எதும் செய்ய மாட்டாரு.]]]

    ஆமாமாம்.. ரொம்ப நல்லவரு.. எங்களுக்கெல்லாம் தெரியாமப் போச்சே.. அவர் ஜாதகமே எனக்கும் தெரியும்..!

    ReplyDelete
  76. [[[ராமுடு said...
    Good article. no difference between SUN TV's technique to raise TRP and your article to get focus.. I used to read your blog. But, I dont agree with you on this article. We human being need some control (or it can be called as afraid) with somebody. What police have done on this is 200% correct. For blogging you can write, it would be the same treatment, even if your family members got affected like this. But I DONT BELIEVE IT.]]]

    நான் ஏற்கெனவே சொல்லிவிட்டேன். என் குடும்பத்திற்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் நான் இதைத்தான் சொல்வேன். செய்வேன்..!

    ReplyDelete
  77. [[[வேழமுகன் said...
    But how you "know" that this is a fake encounter?]]]

    நான் 40 வருஷமா தமிழ்நாட்டுலதான் இருக்கேன்..!

    ReplyDelete
  78. [[[சீனு said...

    வேழமுகன்,

    Why கண்ணாடி for கைப்புன்?]]]

    சினிமால வர்ற மாதிரி பின்னாடியிருந்து கேமிரால படம் புடிச்சுக் காமிச்சாத்தான் ஒத்துக்குவாங்க போலிருக்கு..!

    ReplyDelete
  79. [[ஸ்ரீநாராயணன் said...
    100% AGREED. Apart from putting post, should register the agitation. I expect some thing from Gnani regarding this for ways to raise voice in these matters.]]]

    நன்றி ஸார்..!

    ReplyDelete
  80. [[[Ragu said...
    மதுரை தினகரன் சம்பவம் நடத்திய குற்றவாளிகளையும் இது மாதிரி போட்டுத் தள்ள முன் வருமா தமிழ்நாடு காவற்துரை?]]]

    அதெப்படி..? தன் குடும்பம்தான் மனுநீதிச்சோழன் பரம்பரையாச்சே. கொலை செய்வோம்.. ஆனால் குற்றவாளிகளாக மாட்டோம்.. இதுதான் அவரது ஆட்சியின் ஸ்டைல்..!

    ReplyDelete
  81. [[[Karikal@ன் - கரிகாலன் said...

    பொதுப்புத்தியோடு யோசிக்காமல், மாத்தி யோசித்து எழுதியிருக்கிறீர்கள்
    வாழ்த்துக்கள்.

    //மெரீனா கடற்கரையில் ஒரு விடியற்காலையில் படகருகே நின்று கொண்டு வலையைக் கட்டிக் கொண்டிருந்த வீரமணி என்னும் மனிதனை கொல்லத் துவங்கிகடற்கரையில் ஒரு விடியற்காலையில் படகருகே நின்று கொண்டு வலையைக் கட்டிக் கொண்டிருந்த வீரமணி என்னும் மனிதனை கொல்லத் துவங்கி//

    மன்னிக்கவும் இந்தக் கருத்தோடு நான் முரண்படுகிறேன்.]]]

    நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. இன்ஸ்பெக்டரை துப்பாக்கியால் சுட வந்தான். அதனால் சுட்டோம் என்றுதான் அன்றைக்கு போலீஸ் சொன்னது. அதற்காககத்தான் உதாரணம் காட்டினேன். வீரமணி நல்லவன் என்றோ, யோக்கியவான் என்றோ, குற்றமே செய்யாதவன் என்றோ நான் சொல்லவில்லை..

    ReplyDelete
  82. [[[ILA(@)இளா said...

    //படகருகே நின்று கொண்டு வலையைக் கட்டிக் கொண்டிருந்த வீரமணி என்னும் மனிதனை .//

    அண்ணாச்சி, அது அரசியல் கொலைன்னு ஊருக்கேத் தெரியும். அதுக்கும் இதுக்கும் முடிச்சு போடாதீங்க. மொட்டுக்களை அழிச்சவங்க சாவறது நியாயம்னாலும் காவல்துறையே தீர்ப்பு அளிச்சது தப்புதான்.]]]

    அப்போ போலீஸ் செஞ்சா அதுக்கு விசாரணையே கிடையாதா..? இது எந்த ஊர் சட்டம்..?

    ReplyDelete
  83. [[[நந்தாவின் பக்கங்கள் said...

    //ஆனால் அவனுக்கான தண்டனையை கொடுக்கத்தான் கோர்ட்டும், நீதித்துறையும் இருக்கின்றனவே..? //

    :::நகைச்சுவையாய் இருக்கிறது::::]]]

    எந்தக் கோர்ட்டிலாவது போய் இதைச் சொல்லுங்கள்.. சிரிப்பார்களா என்று பார்ப்போம்..!

    [//என் வீட்டிலேயே இந்தக் கொடுமை நடந்திருந்தாலும் நான் இதைத்தான் சொல்வேன். நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுத்திருக்க வேண்டிய விஷயம் இது.. //

    :::: முட்டையிடற கோழிக்குதான் பொச்சு வலி தெரியும் ஆம்லெட் போட்டு திங்கறவனுக்கு என்ன?::

    பின்னுட்டம் வருமா ??????????]]]

    அதான் வந்திருச்சே..!

    ReplyDelete
  84. [[[damildumil said...

    தண்டனைகள் கடுமையானதான் தவறுகள் குறையும், இந்த என்கவுண்டர் இனி இது போல் தவறு செய்ய நினைப்பவர்களுக்கு பாடமாக இருக்கட்டும்.

    இந்த சம்பவத்தில் அவனுக்கு சிறிதளவு பங்கு இருந்தாலும் அடித்தே கொல்ல வேண்டிய நாய்தான் அது. இந்த என்கவுண்டர் இனி மத்தவன் தப்பு செய்ய தோனும் போது வந்து நியாபக படுத்தும். அதுனால ஒரு குற்றம் தவிர்க்கபட்டாலும் அது மகிழ்ச்சியே

    நம்ம நாட்டுல நீதித்துறை ஸ்பீடு நல்லா தெரியும் உங்களுக்கு எப்படியும் ஒரு இருவது வருஷம் கழிச்சு ஆயில் தண்டனைன்னு சொல்லி அஞ்சு வருசத்துல விடுதலையும் பண்ணிடுவாங்க. இப்படி பன்ணினாதான் உங்களுக்கு சந்தோசமா? ஆணால பட்ட நாவரசுவை கொலை பண்ணினவனே ஜாலியா வெளியே வந்துட்டான், அவனை அன்னைக்கே என்கவுண்டர்ல போட்டிருக்கனும். இந்த விஷயம் சூடு ஆறுவதற்க்குள் தண்டனை கொடுத்தாதான் அந்த பயம் எல்லார் கிட்டையும் பதியும்.]]]

    சுத்தம்.. எல்லாரும் ரொம்ப நல்லவங்களா இருக்காங்கப்பா..!

    ReplyDelete
  85. [[[bandhu said...

    //நம்ம நாட்டுல நீதித்துறை ஸ்பீடு நல்லா தெரியும் உங்களுக்கு எப்படியும் ஒரு இருவது வருஷம் கழிச்சு ஆயில் தண்டனைன்னு சொல்லி அஞ்சு வருசத்துல விடுதலையும் பண்ணிடுவாங்க. இப்படி பன்ணினா தான் உங்களுக்கு சந்தோசமா? ஆணால பட்ட நாவரசுவை கொலை பண்ணினவனே ஜாலியா வெளியே வந்துட்டான், அவனை அன்னைக்கே என்கவுண்டர்ல போட்டிருக்கனும். இந்த விஷயம் சூடு ஆறுவதற்க்குள் தண்டனை கொடுத்தா தான் அந்த பயம் எல்லார் கிட்டையும் பதியும்.//

    அடி மனதில் எல்லோரும் நம்புவது, நீதிமன்ற தீர்ப்பு மிக தாமதமாகவும், பல சமயம் தவறாகவும் அமைந்து விடுகிறது. அதனால் encounter தப்பில்லை என்பது. இதையே காவல் துறையில் உள்ளவர்கள் தங்கள் தனி விரோதத்திற்கும் உபயோகிக்கலாம் என்ற possibility மிக அபாயமானது.

    நோய் என்னவென்று தெரியும். - நம் சட்டங்களும், அவை எடுத்துக் கொள்ளும் மிக அதிக காலமும் - அதை தீர்க்க வேண்டுமே ஒழிய இது போன்ற இன்ஸ்டன்ட் ஜஸ்டிஸ் மிக ஆபத்தானவை. இது போன்ற ஓபன் அண்ட் ஷட் கேஸ்களின் மூலம் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடையாளம் கண்டு அதை அடைக்க முயல வேண்டும்.]]]

    நல்லது.. மிக்க நன்றி நண்பரே..!

    ReplyDelete
  86. [[[கெக்கே பிக்குணி said...

    1. நான் நினைக்கிறேன், உங்கள் தர்க்கமே சரியில்லை. விதண்டாவாதம் ஆக இருக்கிறது.]]]

    சரி.. இனிமேற்கொண்டு சொல்வதற்கு ஏதுமில்லை..

    2. //பெரும்பாலோனோரின் ஏனைய பதிவர்களின் பின்னூட்டங்கள் அதனையே வெளிப்படுத்துகின்றன.//

    சட்டத்தை விஜய்காந்த் முதலிய யாருமே கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது. திரைப்படம் பார்த்து, உணர்ச்சி வசப்பட்டுக் கிடக்கிறோம் நம்மில் பலர். இந்த‌ என்கவுன்டர் தவிர்க்கப்பட்டிருக்க முடியுமானால், அந்த ஈனப் பிறவிக்கு, நான் ட்விட்டரில் சொன்ன முடிவு இதுதான்:

    என்கவுண்டரில் போடாமல், ஜெயிலில் காய்ந்து கிடப்பவர்களிடம் விட்டு மெல்ல கொன்றிருக்க‌ வேண்டும் #பெற்றவளின்_பித்து_மனம்]]]

    ஓகே.. இது உங்களது நிலைப்பாடு..!

    [[[3. அரசியல் காரணங்களுக்காக இந்த என்கவுன்டர் நடத்தப்பட்டிருக்கிறதா என்று கேட்க முடியுமா நம்மால்?]]]

    இதைக் கூட நம்மால் கேட்க முடியாவிட்டால் பின்பு நாம் ஏன் மனிதர்களாக இருக்க வேண்டும்..?

    ReplyDelete
  87. [[[மோனி said...

    :-(
    மன்னிக்கவும் நண்பா -
    எல்லாப் பத்திரிக்கையாளர்களுமே ஒரே மாதிரிதானிருக்கீங்க -
    மனசாட்சி உள்ள எல்லா மனுஷங்களும் ஒரே மாதிரிதான் சிந்திக்கிறாங்க -

    கருத்து சொல்றதால மட்டும் சில விஷயங்கள் தீர்ந்துடாது -
    போலீசார் பண்ணுனது நியாயமான்னு யாருமே சிந்திக்கலை - காரணம் பாதிக்கப்பட்டது ரெண்டு பிஞ்சுங்க..

    மோகன்ராஜ் மாதிரி ஆயிரமாயிரம் குற்றவாளிங்க ஊருக்குள்ள இருந்தாலும் - பாலியல் பலாத்காரம் மக்களை மன்னிக்க விடுறதில்லை...

    அவன் பணத்துக்காக கடத்தியிருந்தாலும் - மக்களால ஜீரணிக்க முடியாத விஷயம் பாலியல் பலாத்காரம்தான் -

    ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை -

    என் கருத்து -
    சத்தியமேவ ஜெயதே

    DOT]]]

    பாலியல் பலாத்காரம் கொடூரம்தான். ஆனால் அதற்கான காரணத்தை, பின்புலத்தைத் தேடித்தான் சொல்ல முடியுமே தவிர.. எடுத்த எடுப்பிலேயே விசாரிப்பவர்களே தண்டனையை அளிக்க வேண்டும் என்றால்.. இது சரியான ஜனநாயகம் இல்லையே..?

    ReplyDelete
  88. [[[யாசவி said...

    தல, சரியான பார்வையில எழுதியிருக்கீங்க
    ஆனா வீரமணி கொலையோட இதை ஒப்பிடுவது தவறு என்பதே என் கருத்து.]]]

    என்கவுண்ட்டருக்காக ஒப்பிட்டுள்ளேன். இரண்டுமே ஒன்று போலத்தான் நடத்தப்பட்டுள்ளது. ஊர் மட்டுமே மாறியுள்ளது..

    [[[நீதிமன்றம் சரியான நீதி வழங்கவில்லை என்றால் அதை சரி செய்யவேண்டும். அதைவிட்டு மாட்டினவன் எல்லாம் போட்டுத் தள்ளுவது சரியா?]]]

    இதைத்தான் நானும் கேக்குறேன்..!

    ReplyDelete
  89. [[[குழலி / Kuzhali said...

    - ம்ம்ம்ம்ம்ம்ம்ம் இவனுக்கே நம்ம கராத்தே தியாகராஜன் போலவோ நம்ம தினகரன் ஆபிசை கொளுத்திய அட்டாக் பாண்டி போலவோ ஒரு அரசியல் பேக்கிரவுண்டு இருந்திருந்தா இதே போலிஸ்காரனுங்க சலாம் போட்டிருப்பாங்க....

    கொலை செஞ்சாலும் ஒரு பேக்கிரவுண்டோட செய்யனும் இல்லின்னா இப்புடித்தான் என்கவுண்டர்]]]

    குட்.. மதுரை லீலாவதி கொலை வழக்குல தண்டனையடைஞ்சு 5 வருஷத்துல வெளில வந்திரலையா..? அது மாதிரிதாண்ணே..!

    ReplyDelete
  90. [[[muthukumar said...

    யாருக்கும் தெரியாது யார் எதை செய்தது என்று .
    அப்படி மோகன்ராஜ் இந்த
    படுபாதக செயல்லை செய்தது உண்மை எனில் இந்த என்கண்டர் சரியே. அது போலியாக இருந்தாலும்.

    பதினோரு வயசு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற இவனை நந்தா படத்தில் வருவது போல கொல்ல வேண்டும்.]]]

    ஒன்றும் சொல்வதற்கில்லை..

    [[[வீரமணி எதோ அப்பாவி மாதிரி பேசுறிங்க.]]]

    நான் அப்படிச் சொல்லவில்லையே..? என்கவுண்ட்டருக்காக மட்டும் உதாரணம் காட்டியிருக்கிறேன்..!

    ReplyDelete
  91. //நோய் என்னவென்று தெரியும். - நம் சட்டங்களும், அவை எடுத்துக் கொள்ளும் மிக அதிக காலமும் - அதை தீர்க்க வேண்டுமே ஒழிய இது போன்ற இன்ஸ்டன்ட் ஜஸ்டிஸ் மிக ஆபத்தானவை//

    நீங்க சொல்றபடி பாத்தா, எல்லாரும் சட்டப்படியே தண்டிக்கப்படவேண்டியவங்கங்கறீங்க. தப்பில்ல. ஆனா, இப்ப இருக்கிற நெலமைய எடுத்துக்குங்க. இவன் கொலை பன்னுவான். அப்புறம் வாய்தானுட்டு இழுத்துக்கிட்டே போகனும். அப்புறம் சட்டத்துல இருக்குற எல்லா சலுகைகளையும் அனுபவிக்கனும். அப்புறம் தூக்குல போடுவீங்கன்னு உத்திரவாதம் கூட கிடையாது.

    என்கவுன்ட்டர் தப்புதான். இது நாளைக்கு நமக்கே ஆபத்தாகூட போய் முடியும். இல்லைன்னு சொல்லல. ஆனா அதுக்காக 100% சரியாத்தான் நடக்கனும்னு நெனச்சா (இப்போ இருக்குற) காலகட்டத்துல முடியாது.

    தலைவலின்னா, டாக்டருக்கு போறதுக்கு முன்னாடி நாமளே கொஞ்சம் தெரிஞ்ச வைத்தியம் பாக்குறது இல்லையா? அப்படித்தான் இதுவும்.

    அவனுக்கு ஒரு குழந்தை இருக்குதான். ஆனா, அவன் அந்த பிஞ்சுகளை கொலை செஞ்சப்போவும் அவனுக்கு அதே குழந்தை இருந்தது. இதே போல் அவன் குழந்தையிடம் யாராவது இப்படி நடந்திருந்தால் என்ன செய்திருப்பான்?

    இவனுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை அடுத்தவன் இதேபோல செய்ய நினைக்கிறவங்கள கண்டிப்பா யோசிக்க வைக்கும். எய்ட்ஸுக்கு மருந்தில்லைன்னதும் அவனவன் யோசிக்கிறது இல்லையா, காண்டம் போட்டுக்கலாமான்னு. அப்படித்தான்.

    தண்டனை கொடுக்க போலீஸுக்கு யோக்கியதை இல்லைதான். ஆனா, தண்டனை கொடுக்க யாராவது இருக்காங்களே. அது போதும்.

    ReplyDelete
  92. [[[பயணமும் எண்ணங்களும் said...

    மிக தவறு. கொலைகாரன் என் பிள்ளையாய் இருந்தால் நானே சுட்டிருப்பேன்.]]]

    இதுதான் மிகையுணர்ச்சி.. வருந்துகிறேன்..!

    ReplyDelete
  93. [[[வேல்பாண்டி said...
    கராத்தே தியாகராஜன் என்ன கொலை செய்தார்? அவரை ஏன் என்கவுண்டர் லிஸ்டில் சேக்குறீங்க?

    -- வேல் --]]]

    குற்றம், குற்றம்தான் ஸார்.. சின்னதா செஞ்சா என்ன? பெரிசா செஞ்ச என்ன..? அவரைப் பத்தி உங்களுக்குத் தெரியலைன்னு நினைக்கிறேன். அவ்ளோதான் சொல்ல முடியும்..!

    ReplyDelete
  94. [[[S said...
    UT, நீங்க ரெம்ப உணர்சிவசபடுறீங்க. ஏற்கனவே, நீதி மெதுவாகத்தான் கிடைக்குது. இந்த லெட்சனத்துல உங்களைபோல நாலு பேரு மீடியா-ல எழுதுனா வெளங்கிடும்.]]]

    நல்லது.. சந்தோஷம்.. நாடு வெளங்கணும்னு நினைச்சுத்தான் இது மாதிரி எழுதுறோம்..!

    ReplyDelete
  95. [[[Sri said...

    அழகான திசை திருப்பல்... இந்த மாதிரியான FUD (Fear/Uncertainity/Distrust) பதிவுகளை போட்டு கொலை/கொள்ளை/கற்பழிப்பு ஆசாமிகளை, அவர்களது உரிமைகளை காத்து அருளவும். நாங்கள் சாதாரண குடிமக்கள் கிடைத்த நியாயத்தை ஏற்று கொள்கிறோம்...

    Srini]]]

    நீங்கள் புரிந்து கொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன். இதைத்தான் என்னால் சொல்ல முடியும்..!

    ReplyDelete
  96. [[[sivakumar said...
    கற்பு அழிக்க பட்டு கொலை செய்யப்பட்ட குழந்தை உன் மகளாக இருந்தால், நீங்கள் என்ன செய்து இருப்பீர்கள். மன்னிச்சு விட்டு இருப்பிங்களா?]]]

    மன்னிக்க மாட்டேன். கோர்ட்டில் நிறுத்தித் தண்டனை வாங்கித் தரத்தான் முனைந்திருப்பேன்..!

    ReplyDelete
  97. [[[S Maharajan said...
    என்ன அண்ணா! உங்ககிட்டே இருந்து எப்படி ஒரு பதிவா? பிஞ்சுகளை கொன்றவனுக்கு இதுதான் சரி. என்னை பொறுத்தவரை சட்டம் தன் கடமையை (கொஞ்சம் லேட்டா) செய்து உள்ளது.]]]

    ம்ஹூம்.. மனிதர்கள்தான் எத்தனை விதம்..?

    [[[அண்ணே! வீரமணி புத்தர் இல்ல!
    வீரப்பன் புனிதன் அல்ல!]]]

    நானும் அப்படி சொல்லலியேப்பா..!

    ReplyDelete
  98. [[[அனாமிகா துவாரகன் said...

    //எந்த மனிதனும் குற்றவாளியாகவே பிறந்து வருவதில்லை. அத்தனை பேரும் சமூகச் சூழலின் காரணமாகத்தான் குற்றவாளியாக ஆகிறார்கள். மோகன்ராஜ் வேன் டிரைவர். இதற்காக எல்லா வேன் டிரைவர்களும் இப்படியில்லை. சமூகத்தில் இப்படியும் நடக்கத்தான் செய்யும்.. எந்த நாட்டில்தான் இது நடக்காமல் இல்லை..!?//

    மத்த நாடுகளில் நடக்குதுதானே என்பதற்காக தப்பை சரி என்று சொல்கிறீர்களா உ.த.சார்.]]]

    நான் தப்பை சரின்னு சொல்றதுக்காக இந்த ஒப்பீட்டைச் செய்யவில்லை. எங்குமே நடக்காத ஒரு விஷயமாக இதனைப் பார்க்க வேண்டாம் என்பதற்காகதத்தான் சொன்னேன்..!

    [[[நீங்க புலிகளைப் பற்றி எதிராக நிறைய சொன்ன போதுகூட, அங்க இருக்கறவங்களுக்கு இங்க இருக்கறவங்களத் தெரியாது என்று நினைத்து மைனஸ் ஓட்டு போடல.]]]

    நன்றி.. நல்ல முடிவுதான். தப்பித்தேன்..!

    [[[இதுக்கு ஒரு 10 மைனஸ் ஓட்டாவது போட வேண்டும் போல இருக்கு. கோவம் வரவில்லை. ஆதங்கம். ரொம்பவே மனசுக்கு கஷ்டமாக இருக்கு சார்.]]]

    எனக்கும் மனசு கஷ்டமாத்தான் இருக்கு. நாடு போற போக்கைப் பார்த்தா ஆட்சியாளர்களுக்கு யாரையாவது புடிக்கலைன்னா இதே மாதிரி போட்டுத் தள்ளிட்டுத்தான் மறுவேலை பார்ப்பாங்க போலிருக்கு..!

    [[[புலிகள் மேல் இருந்த கடுப்பில் பொதுசனம் கொல்லப்படுவதை சஞ்சேய், கிருபானந்தினி, டோண்டு போன்றவர்கள் நியாயப்படுத்தியது போல நீங்கள் நியாயப்படுத்தவில்லை என்றபோது உங்கள் நேர்மை பிடித்திருந்தது. அதற்காகவே உங்கள் எழுத்தின் மீது பெரிய மரியாதையே இருந்தது. நீங்களா இதை எழுதினீர்கள் சார். இந்த போஸ்ட் மட்டும் பெரிதாக இல்லாவிட்டால் யாரோ உங்க எக்கவுண்டை ஹக் பண்ணி இருக்கிறார்கள் என்று நினைத்து இருப்பேன்.]]]

    நன்றி..!

    ReplyDelete
  99. [[[படகோட்டி said...

    இது தற்காலத்திய சினிமாக்களின் தாக்கத்தை ஊர்ஜிதப்படுத்துகிறது. படத்தில் வில்லனாக வருபவரை ஊர் கூடி அடித்துக் கொன்றுவிட்டு, எங்கள் எல்லோரையும் கைது செய்யுங்கள் என்று சொல்வது, ஹீரோ எதுக்கு கோர்ட்டுக்கு அலைந்து பெட்ரோல் செலவு, சிறையில் சாப்பாட்டுச் செலவு அரசுப் பணம் வீண் ஒரு புல்லட் செலவில் இந்தப் பிரச்னையை முடிப்பதை விட்டு விட்டு என்று சொல்லுவது, இதெல்லாம் மக்கள் மனதில் இந்த எண்கவுண்டருக்கு ஒரு பெரிய மரியாதையை ஏற்படுத்தியிருக்கிறது. நீதித்துறை எதற்கு, காவலர்கள் எதற்கு, நாம் என்ன கற்காலத்திற்கா போய்க் கொண்டிருக்கிறோம். இது போலீஸால் உணர்ச்சி வசப்பட்டு எடுத்து செய்த காரியமாகும். அந்தக் கடத்தலைச் செய்ய யாராவது அவனுக்குச் சொன்னார்களா, பிற்பாடு பின்வாங்கி என்ன செய்வது என்று தெரியாமல் இந்த முடிவு ஏற்பட்டதா என்பதற்கு விசாரணை மூலம் தெரிய வந்திருக்கலாம். தண்டனை சரிதான், ஆனால் நாயைக் கொன்றாலும் சட்டபடிதான் கொல்ல வேண்டும் என்பது எனது வாதம்.]]]

    பரிந்துணர்வுக்கு மிக்க நன்றிகள் ஸார்..!

    ReplyDelete
  100. [[[sivakasi maappillai said...

    போய்யா. என் வூட்ல எவனாவது இப்பிடி பண்ணீர்ந்தான்னா நானே அவன அடிச்சி கொன்னுருப்பேன்.....
    இந்த நாய்கள நெத்தில இல்ல அந்த இடத்துல சுட்டுருக்கனும்.... ஹாட்ஸ் ஆஃப் போலிஸ்.....

    எதயாவது பரபரப்பா எழுதனும்னு எழுதாதீங்க தமிழா. உண்மையா எழுதுங்க.]]]

    சரி.. சந்தோஷம் மாப்ளை..! வருகைக்கு நன்றி..!

    ReplyDelete
  101. [[[வழக்கறிஞர் சுந்தரராஜன் said...

    வாழ்த்துகள் நண்பரே!

    பலமான எதிர்ப்பு வரும் என்று தெரிந்தும் நேர்மையாக, நியாயமாக உங்கள் கருத்துகளை பதிவு செய்திருக்கிறீர்கள்.

    ஆட்சியிலிருப்போர், ஊடகங்களின் உதவியுடன் மக்களை மூளைச்சலவை செய்துள்ள நேரத்தில் உங்களைப் போன்றவர்களின் முயற்சிகள்தான் மக்களுக்கு மாற்றுச் சிந்தனைகளை அறிமுகப்படுத்த முடியும். துவக்கத்தில் எதிர்த்தாலும் மெல்ல உங்கள் கருத்துகளை மக்கள் பரிசீலிப்பார்கள். இது குறித்து விவாதித்தாலே அது வெற்றிதான்.

    நீதித்துறை நீதியைத் தராது அல்லது உடனடியாக தராது என்பதே பெருவாரியான மக்களின் கருத்தாக உள்ளது. அது உண்மையென்றாலும்கூட அதற்கு காரணமும் அரசியல்வாதிகளும், அரசு அமைப்பும்தானே! அதற்காக யாரை தண்டிப்பது?

    தர்மபுரியில் வேளாண் கல்லூரி மாணவிகளை உயிரோடு எரித்த சம்பவம், மதுரை தினகரன் நாளிதழ் சம்பவம், அண்மையில் சேலத்தில் நடந்த ஒரே குடும்பத்தில் 6 பேர் கொல்லப்பட்ட சம்பவம் போன்றவற்றில் காவல்துறையின் துப்பாக்கிகள் மவுனம் சாதிப்பது ஏன்?

    கோவை என்கவுண்டரை ஆதரிப்போர் மேற்கண்ட கேள்விகளுக்கு என்ன பதில் அளிப்பார்கள்?]]]

    இதெல்லாம் இந்த எடுப்பார் கைப்பிள்ளை மக்களுக்குத் தெரியாது.. புரியாது ஸார்..

    தான் வீட்ல நடந்தால் மட்டும்தான் தெருவுக்கு வந்து கத்துவாங்க.. அதுவரைக்கும் இதெல்லாம் அவங்களுக்கு ஹீரோயிஸம்தான்..!

    ReplyDelete
  102. [[[மதுரை பாண்டி said...
    idhu thittamitta padukolai!! enakum andha sandhegam vandhu indha news ketta vudane!!! idhan pinnal sila periya thalaigal irukanum..!!!]]]

    நிச்சயமாக உள்ளது. அரசுக்குத் தெரிந்தே இந்தப் படுகொலை நிகழ்ந்திருக்கிறது என்பதுதான் கொடுமை..!

    ReplyDelete
  103. [[[பயணமும் எண்ணங்களும் said...

    - //பிரதான குற்றவாளியை சுட்டுக் கொன்றதன் மூலம் இவர்கள் வழக்கை மொத்தமாக மூடிவிட்டார்கள். முன் விரோதமோ அல்லது கொடுக்கல் வாங்கல் தகராறோ இந்த கொலைகளுக்கு காரணமாக இருந்திருப்பின் அதில் தொடர்புடைய குற்றவாளிகள் இனி சுதந்திரமாக நடமாடலாம். இந்த அழகில் இந்த என்கவுண்டர் குற்றவாளிகளை அச்சுறுத்தும் என்று எப்படிக் கருத முடியும்?//

    http://villavan.wordpress.com/2010/11/10/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF/#comment-269
    ---------------------------------

    யோசிக்க வேண்டிய விஷயம் இதுதான்..]]]

    இன்னொரு குற்றம்சாட்டப்பட்டவரே தண்டனையில் இருந்து தப்பிக்கும் சூழல் இதனால் வந்துள்ளது..

    ReplyDelete
  104. [[[முசமில் இத்ரூஸ் said...
    இவ்வளவு மறுப்புக்குப் பின்னும் உண்மைதமிழன் react பண்ணலயே]]]

    ஸாரி.. மன்னிக்கணும். ஆபீஸ்ல ஆணி புடுங்குற வேலை ஜாஸ்தி. அதனாலதான்..!

    ReplyDelete
  105. கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் ) said...
    kadathal, sithravathai, vanpunarchi, kolai ithai vida nalla thandanai avanukku thara mudiyathunnu nenakkaren 100% Right]]]

    அதிரி புதிரி தமிழன்னு பேர் வைச்சுக்கிட்டு இப்படிகூட சொல்லலைன்னா எப்படி..? நன்றி ஸார்..!

    ReplyDelete
  106. [[[SGVaradan said...
    இது ஒரு நியாயமான, தேவையான என்கௌன்ட்டர். இது தேவை.
    பொதுவில் நிறுத்தி கல்லால் அடித்துக் கொன்றிக்க வேண்டும். தர்மம்
    இருக்கிறது என்பதற்கு இது ஒரு சாட்சி.]]]

    உங்க குடும்பத்துல ஒருத்தன் தப்பு செஞ்சாலும் இதையேதான் சொல்வீங்களா..?

    ReplyDelete
  107. [[[நையாண்டி நைனா said...

    எய்தவன், பின்புலத்தில் இருந்து இயக்கியவன் என்று பார்த்தால் எல்லா குற்றவாளிகளுக்கும் ஏதாவது ஒன்று இருக்கும்...

    உங்கள் கூற்றுபடியே... இவனை இயக்கியது வேறு ஒருவனாக இருந்து இவன் செயல்பட்டால்... தவறு தவறுதானே..

    இவனை இயக்கியவன் இவனை எப்படி மூளை சலவை செய்து இருப்பான்... "நீ செய்யி நான் கேசு நடத்துறேன்.. உன் வீட்டுக்கும் காசு கொடுக்குறேன்...பார்த்துக்கலாம்... எப்படியும்... வாய்தா, பெயில் என்று நீயும் உன் குடும்பத்தோட இருக்கலாம் கேசும் முடிஞ்சிரும்... செய் பார்த்துக்கலாம்"-னு தானே சொல்லி இருப்பான்..

    இப்படி செய்துட்டா... ஆளு கெடைக்காமே போகாது... ஆனா கொஞ்சமாவது குறையும் அல்லவா?

    அப்புறம் நம்ம சமுதாயதுலே எத்தனையோ நடக்குது... அத்தனைக்கும் என்ன செய்வாங்கன்னு, என்ன செய்ய போறோம்னு தெரியலே... ஆனா குழந்தைகளுக்கு எதிரா நடக்குற குற்றங்களுக்கு தண்டனை மிக அதிகமாக இருக்க வேண்டும்...

    எதிர் வரும் காலங்களில்... இப்படி இயக்குர ஆளுங்ககிட்டே இந்த அடியாளுங்க சொல்லணும்...

    "மந்திரி, அதிகாரிங்களகூட கடத்த சொல்லுங்க செய்றோம்... ஆனா குழந்தைகளை செய்ய மாட்டோம்னு சொல்லணும்..."

    என்ன கனவு காண்றேனா?
    கனவுன்னேகூட வச்சிகோங்க.]]]

    ம்.. என்னத்த சொல்றது..? தம்பிமார்களெல்லாம் ஒரே மாதிரி யோசிக்கிறாங்க..

    ReplyDelete
  108. [[[kama said...

    மிக மோசமான முன்னூதரணத்தை ஏற்படுத்திவிட்டர்கள் கோவைமாவட்ட மக்கள்..<

    எந்த கீழான உணர்ச்சிக்கு மோகன் ராஜ் உட்ப்பட்டனோ அதே உணர்ச்சியை காவல்துறையினர் வேறுவழியாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இந்த அரசியல் அமைப்பில் திருத்தப்பட வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளது என்பதில் எனக்கும் உடன்பாடு உள்ளது.. ஆனால் அது அனைவருக்கும் சமமாக இருக்கவேண்டும்.. அப்படி இருந்ததா என்று யோசித்து என்கவுண்டர் பற்றி ஆதரித்து பேசுங்கள். நிச்சியம் நிறைய மோசமான படுகொலைகளை போலிஸார்கள் வரும் நாட்களில் அரங்கேற்றுவார்கள்.]]]

    அப்போதும் இந்த மக்களுக்குப் புரியாது. அவர்களுக்கென்று வந்தால் மட்டுமே அது பற்றி யோசிப்பார்கள். இதுதான் தமிழ் நாட்டு ஜனங்கள்..!

    ReplyDelete
  109. [[[க.மு.சுரேஷ் said...

    /உணர்ச்சி வேகத்தில் என்கவுண்ட்டருக்கு சபாஷ் போடும் பரிதாப மக்கள்..! //

    உணர்ச்சி இருப்பதால்தான் ..

    உங்களுடைய மாற்று சிந்தானை ஏற்றுக் கொள்ளூம் அளவிற்க்கு அவன் பணத்திற்க்காக மட்டும் செய்த கொலை அல்ல. குழந்தையை வன்புணர்வு பின் கொலை.

    நாட்டில் தண்டிக்க வேண்டிய என்கவுண்டரில் போட வேண்டிய எண்ணை சட்டியில் வருக்க வேண்டிய ஆட்கள் உள்ளனார் நான் மறுக்கவில்லை அனைவருக்கும் தண்டணை கொடுத்து விட்டுத்தான் இவனை தண்டிக்க வேண்டும் என்றால் இவனது தண்டனை ?????.
    (குற்றவாளி )இவன் இறப்பதால் இனிமேல் இது போன்ற செயலில் ஈடுபடுபவன் பயபடுவான்.இது போன்ற கொடூரத்தில் இருந்து ஒரு குழந்தயை தப்பிக்குமானால் இவனை கொள்வதில் தப்பில்லை.‌

    // சக்தி வாய்ந்தவர்கள் நீதிமன்றங்களுக்குச் சென்று பரிகாரம் தேடி அலையத் துவங்குவார்கள். இது அவர்களது விதி.. தலையெழுத்து..!//

    இவன் கொலையும் அதே வகை நீங்கள் ஏன் பரிதாபபடுகிறீர்கள். நம்மை சமாதனம் செய்ய நாமே சொல்லும் ஒரு வார்த்தை விதி,தலையெழுத்து.]]]

    சந்தோஷம்.. நன்றி..!

    ReplyDelete
  110. [[[dr suneel krishnan said...

    போலீஸ் மற்றும் மோகன் செயல்களில் எந்த வித்யாசமும் இல்லை. நோக்கம் மட்டும் மாறுகிறது. வன்முறை அது எந்த வடிவில் வந்தாலும் அது நிராகரிக்க பட வேண்டும். தண்டனை என்பது குற்றம் எனும் செயலுக்கு எதிராக செய்ய வேண்டியது. குற்றவாளிகளை அழிப்பதால் குற்றங்கள் நிற்பது இல்லை. குற்றத்திற்கான மன போக்கை அழிப்பதே முக்கியம்.

    இது திட்டமிட்ட செயல் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை .

    ஆகினும்கூட உள்ளுர இந்த செய்தியை பார்த்த உடன் எனக்கு ஒரு நிம்மதி பிறந்தது உண்மை .இது தவறா சரியா என்று யோசிக்க வேண்டும்.]]]

    யோசித்துப் பாருங்கள்.. புரியும்..!

    ReplyDelete
  111. [[[சதீஷ் said...

    ஒரு மிகவும் நல்ல பதிவு உண்மைத்தமிழனிடமிருந்து வந்திருக்கிறது. பாராட்டுக்கள்.

    அவர்கள் செய்தது தவறுதான் அதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. அதேபோல இந்த என்கவுண்டரும் கண்டிக்கத்தக்கதே. ஆனால் இதன் மூலம் உண்மைக் குற்றவாளிகள் தப்பிவிடக்கூடாது.

    அபி அப்பா: அது என்ன கிரிக்கெட் புக்கி??]]]

    கொலை செய்யப்பட்ட குழநதைகளின் தந்தை கிரிக்கெட் புக்கி என்பது கோவை வட்டாரச் செய்தி..!

    ReplyDelete
  112. [[[Thomas Ruban said...

    உங்கள் பெயருக்கு ஏற்றதுபோல் உங்கள் கருத்துகளை நேர்மையாக, நியாயமாக பதிவு செய்திருக்கிறீர்கள்.

    உங்கள் கருத்துகளை நிறைய பேர் சரியாக புரிந்து கொள்ளவில்லையே என வருத்தப்படுகிறேன்.

    நீங்கள் எந்த இடத்திலும் குற்றம் சாட்டப்பட்டவரை நியப்படுத்தியோ (அ)அவர்க்கு விடுதலை தர வேண்டும் என்றோ கூறவில்லை, ஆட்சியிலிருப்போர், அதிகார வர்க்கம் செய்யும் தவறுகளுக்கு மக்களும் ஆதரவு தெரிவிப்பது நியாயமா என்று உங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளீர்கள்.

    ஆட்சியிலிருப்போர், மீடியாக்கள் உதவியுடன் மக்களை நன்றாக ஏமாற்ற தெரிந்து வைத்துள்ளார்கள்.

    பகிர்வுக்கு நன்றி அண்ணே.]]]

    தோழமையுடன் தோள் கொடுத்தமைக்கு மிக்க நன்றிகள் நண்பரே..!

    ReplyDelete
  113. [[[தமிழ் குரல் said...

    அண்ணே, நீங்க சொல்லும் நியாயம் எல்லாம் சரி.

    இந்த என்கவுண்டர் கொலைக்கு அச்சாரம் போட்டது ஜெ. அப்புறம் கொலையான குழந்தைகளின் குடும்பத்தினரை பார்த்து நாடகம் போட கிளம்பிய ராகுல் (ஜுவி செய்தியை பார்த்து கொள்ளவும்)

    ராகுல் வந்து கோவையில் போட இருந்த அசிங்கமான நாடகத்தை விட சைலேந்திர பாபு போட்ட நாடகம் பரவாயில்லை என ஆகி விட்டது.

    கொல்லப்பட்ட மோகன்ராஜை விட ஆபத்தானவர்கள் ராகுல் போன்ற ரத்த வெறி பிடித்த ஓநாய்கள்.

    இதே போல் ஒரு என்கவுண்டரை 2004-ல் போட்டிருந்தால் சங்கராச்சாரிகள் உச்சி குடுமி மன்றம்வரை போய் வழக்கை புதுச்சேரிக்கு மாற்றி, விசாரிக்கும் நிதிபதிக்கு சாம்பல் கொடுத்து ஆசிர்வாதம் செய்து, சாட்சிகளை பல்டி அடிக்க வைத்து, வழக்கு சொதப்பல் ஆகாமல் போய் இருக்குமே?]]]

    இதையும் செஞ்சிருக்கலாம் காவல்துறை.. ஆனால் அவர்களுக்குத்தான் தைரியமில்லையே.. அப்பாவிகளைத்தானே அவர்களால் கொல்ல முடியும்..!

    ReplyDelete
  114. [[[சீனு said...

    //நோய் என்னவென்று தெரியும். - நம் சட்டங்களும், அவை எடுத்துக் கொள்ளும் மிக அதிக காலமும் - அதை தீர்க்க வேண்டுமே ஒழிய இது போன்ற இன்ஸ்டன்ட் ஜஸ்டிஸ் மிக ஆபத்தானவை//

    நீங்க சொல்றபடி பாத்தா, எல்லாரும் சட்டப்படியே தண்டிக்கப்பட வேண்டியவங்கங்கறீங்க. தப்பில்ல. ஆனா, இப்ப இருக்கிற நெலமைய எடுத்துக்குங்க. இவன் கொலை பன்னுவான். அப்புறம் வாய்தானுட்டு இழுத்துக்கிட்டே போகனும். அப்புறம் சட்டத்துல இருக்குற எல்லா சலுகைகளையும் அனுபவிக்கனும். அப்புறம் தூக்குல போடுவீங்கன்னு உத்திரவாதம் கூட கிடையாது.

    என்கவுன்ட்டர் தப்புதான். இது நாளைக்கு நமக்கே ஆபத்தாகூட போய் முடியும். இல்லைன்னு சொல்லல. ஆனா அதுக்காக 100% சரியாத்தான் நடக்கனும்னு நெனச்சா (இப்போ இருக்குற) காலகட்டத்துல முடியாது.

    தலைவலின்னா, டாக்டருக்கு போறதுக்கு முன்னாடி நாமளே கொஞ்சம் தெரிஞ்ச வைத்தியம் பாக்குறது இல்லையா? அப்படித்தான் இதுவும்.

    அவனுக்கு ஒரு குழந்தை இருக்குதான். ஆனா, அவன் அந்த பிஞ்சுகளை கொலை செஞ்சப்போவும் அவனுக்கு அதே குழந்தை இருந்தது. இதே போல் அவன் குழந்தையிடம் யாராவது இப்படி நடந்திருந்தால் என்ன செய்திருப்பான்?

    இவனுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை அடுத்தவன் இதேபோல செய்ய நினைக்கிறவங்கள கண்டிப்பா யோசிக்க வைக்கும். எய்ட்ஸுக்கு மருந்தில்லைன்னதும் அவனவன் யோசிக்கிறது இல்லையா, காண்டம் போட்டுக்கலாமான்னு. அப்படித்தான்.

    தண்டனை கொடுக்க போலீஸுக்கு யோக்கியதை இல்லைதான். ஆனா, தண்டனை கொடுக்க யாராவது இருக்காங்களே. அது போதும்.]]]

    எல்லா வழக்கிலும் இது போலவே அவர்கள் யோசிக்க மாட்டார்கள். நீங்களும் யோசிக்க மாட்டீர்கள்.. அது ஏன் ஒரு சிலரை மட்டும் போட்டுத் தள்ளுகிறீர்கள்..?

    ReplyDelete
  115. //எல்லா வழக்கிலும் இது போலவே அவர்கள் யோசிக்க மாட்டார்கள். நீங்களும் யோசிக்க மாட்டீர்கள்.. அது ஏன் ஒரு சிலரை மட்டும் போட்டுத் தள்ளுகிறீர்கள்..?//

    இது கேள்வி. மத்தவனையும் போட்டுத்தள்ளினாகூட சந்தோஷம் தான்...தினகரன் அலுவலகத்தை எரித்தவர்கள், 3 பேரை பஸ்ஸோடு கொளுத்தியவர்கள். இவை யாவும் உணர்ச்சிவசப்பட்டு செய்தவை அல்ல? திட்டமிட்டு செய்யப்பட்டவை. அதனால் கட்டாயம் போட்டுத்தள்ளலாம்.

    ஆனால், இன்றைக்கு 'முடிந்தது' இவன் தான். காரணம் அரசியல் செல்வாக்கு இல்லை (இல்லையென்றால் அரசியல் காரணங்களுக்காக கூட இருக்கலாம்). ஆனால், இவனை எப்படி போட்டாலும் தகும். போன வழி நல்லதா/கெட்டதா என்று பார்க்கத்தேவையில்லை என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  116. ஒரு பெரும் புள்ளியின் பேரை காப்பாற்றவே இந்த என்கவுண்டர் என பேசப் படுகிறது தெரியுமா?

    ReplyDelete
  117. உண்மையான பதிவு.75 வயது IG சில நாட்களுக்கு முன் பொய் encounter செய்ததற்காக ஆயுள் தண்டனை பெற்றார்.சுட்ட constable 30 வருடம் கழித்து மனசாட்சி கேட்காமல் உண்மையை கூறி விட்டார்.பல குஜராத்அதிகாரிகள் வருடகணக்காக சிறையில் உள்ளார்கள் பொய் என்குண்டேற்காக.
    இதை பார்த்து போலீஸ் பயந்து விட்டதா .இல்லையே ,பென்ஷன்,கௌரவம்,பணம் இவ்ளோ உள்ள இவர்களே பயபடாத போது கிரிமினல் ஒரு என்சௌண்டேர் பார்த்து பயந்து விடுவானா.
    கோழைகளின் பிதற்றலே இந்த பாராட்டுக்கள்.போலீஸ் அடக்குமுறை/அராஜகம் என்பதை கனவில் கூட காணாதவர்கள் அவர்கள்.
    போலீஸ் ராஜ் என்பது jungle ராஜ்.
    எனக்கு எதாவது ஆனால் என் உடலில் உள்ள பாகங்களை எடுத்துக் கொள்ளலாம் என்று ORGAN DONOR கார்டு பர்சில் வெயதிருப்பேன்.இனி மேல் எனக்கோ என் குடும்பதினர்க்கோ யாராவது கெடுதல் செய்தால் அவர்களை encounter செய்யாதிர்கள் என்று கார்டு வைத்து கொள்கிறேன்.சரவணன் தன குடும்பத்தில் இப்படி ஏற்பட்டாலும் என்குண்டேரை சப்போர்ட் செய்ய மாட்டேன் என்பது உண்மையான ஆண்மை.அதை புரிந்து கொள்ள மனசாட்சி,பயமின்மை வேண்டும்.முட்டாள்கள்,கோழைகள் அதிகமாக இருப்பதால் அனைவரும் அப்படி இருக்க வேண்டும் என்று எதிரபார்காதீர்கள்

    ReplyDelete
  118. கோவை குழந்தைகள் கடத்தல் குற்றவாளி என்கவுன்டரில்பல கேள்விகள் எழுகின்றது.
    கடத்தல்காரன் பணத்திற்காக கடத்தினான் என்றால் பணபேரம் சம்பந்தமான எந்த நிகழ்வும் நடந்ததாக தகவல் எதுவும் இல்லை
    தொழில் போட்டியால் தான் கடத்தல் நடந்தது என்பதற்கு பணபேரம் சம்பந்தமான எந்த நிகழ்வும் நடக்கவில்லை என்பதே சாட்சி.
    பணத்திற்காக கடத்தினான் என்றால் குழந்தைகளுக்கு டிரைவரை நன்கு அடையாளம் தெரியும்.அப்படியிருக்க போலிஸில் மாட்டிகொள்வோம் என்பது முதலிலேயே அவனுக்கு தெரியாமல் இருக்குமா?.
    விடியல்காலை 5.30 க்கு சிறையில் இருந்து குற்றவாளியை போலிஸார் வசம் போலிஸ் கஸ்ட்டிக்கு கொடுத்ததும்
    போலிஸ் கஸ்ட்டியில் அவன் உண்மை எதுவும் சொல்லமுடியாதவாறு போலிஸ் கஸ்ட்டிக்கு வந்ததும் என்கவுண்டர் ஆனதும்,
    கோவை கடத்தல் சம்பவத்தால் தமிழகம் முழுவதும் மக்களிடம் ஏற்பட்ட கோபமும், கொந்தளிப்பான மனோபாவமும், தமிழக அரசு மீதும்,தமது தி.மு.க.அரசின் மீதும் திரும்பி அதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைய நேரும் என்ற காரணத்தாலும் அதை திசை திருப்பும் நாடகமாக இந்த என்கவுன்டர் நடந்ததா?.
    மேற்கண்ட காரணங்களையும், அந்த சந்தேகங்களுக்கான பதிலும் வரும்வரை இந்த என்கவுண்டரில் உள்ள சந்தேகம் விலகாது.
    எப்படியிருந்தாலும் அவன் செய்த குற்றத்திற்கு உண்டான தண்டனை கிடைத்தாலும், தண்டனை வழங்கிய வழிமுறை தான் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

    ReplyDelete
  119. உங்கள் கேள்வியும் வாதமும் ஞாயமானதே ,, போலிசை[ இன்னுமா
    இந்த நாடு எங்கல நம்புது ] நம் மககள்
    நம்புது ஆச்சரியம்தான் ,, நடந்தது பாலின பலாத்காரம் என்பதாலேயே அவர்கள் சொல்வது உண்மையாகிவிடாது,,ஒருவேலை குற்றவாளி அவன் இல்லாத பட்சத்தில்
    நடந்த்து பெரிய கொடுமையாகிவிடும்,,

    அனால் குற்றவாளி அவந்தான் எனில்
    நடந்தது சரிதான் ,காரணம் நிதிமன்றங்களின் ஆமை தன்மை
    உலகறிந்தது

    ReplyDelete
  120. போலீஸ் செய்தது தவறு என்றால் உங்கள் மாட்சிமை மிகுந்த சட்டம் அவர்களை தண்டிக்கட்டுமே...
    நீங்கள் ஏன் அவர்களை வார்த்தைகளால் என்கவுண்டர் செய்கிறீர்கள்..?

    ReplyDelete
  121. கோவை என்கவுண்டர்: உண்மைதமிழனுக்கு ஓர் எதிர்வினை -

    http://kanaguonline.blogspot.com/2010/11/blog-post_10.html

    அண்ணா இதற்கு உங்கள் பதில்?

    ReplyDelete
  122. [[[நாஞ்சில் மனோ said...
    ஒரு பெரும் புள்ளியின் பேரை காப்பாற்றவே இந்த என்கவுண்டர் என பேசப்படுகிறது தெரியுமா?]]]

    அரசின் உயர்மட்ட லெவலில் தெரிவிக்கப்பட்டு அங்கிருந்து வந்த ஆலோசனைப்படிதான் இந்தப் படுகொலை திட்டமிட்டே நடந்திருக்கிறது என்கிறார்கள்..!

    ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்று போலீஸார் சொன்னாலும், மாங்காய்களின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும் என்கிறது கோவை பத்திரிகை வட்டாரம்..!

    முருகனாலோ இயற்கையாலோ.. தக்க பாடம் இந்தக் கொலையைச் செய்தவர்களுக்கும் கிடைக்கும்..!

    ReplyDelete
  123. [[[poovannan said...

    பென்ஷன், கௌரவம், பணம் இவ்ளோ உள்ள இவர்களே பயபடாதபோது கிரிமினல் ஒரு என்சௌண்டேர் பார்த்து பயந்து விடுவானா.]]]

    நியாயம்தான்.. எத்தனையோ என்கவுண்ட்டர்களுக்குப் பிறகுதானே இந்தக் கடத்தலும் கொலையும் நடந்திருக்கிறது.. மோகன்ராஜ் அதையெல்லாம் அறியாதவரா என்ன..?

    [[[கோழைகளின் பிதற்றலே இந்த பாராட்டுக்கள். போலீஸ் அடக்குமுறை/அராஜகம் என்பதை கனவில்கூட காணாதவர்கள் அவர்கள்.]]]

    இதுதான் நூற்றுக்கு நூறு உண்மை.. இதனால்தான் இவர்கள் இப்படிப் பேசுகிறார்கள் என்று நானும் நினைக்கிறேன்..!

    ReplyDelete
  124. [[[NAGA said...

    கோவை குழந்தைகள் கடத்தல் குற்றவாளி என்கவுன்டரில்பல கேள்விகள் எழுகின்றது.

    கடத்தல்காரன் பணத்திற்காக கடத்தினான் என்றால் பண பேரம் சம்பந்தமான எந்த நிகழ்வும் நடந்ததாக தகவல் எதுவும் இல்லை

    தொழில் போட்டியால்தான் கடத்தல் நடந்தது என்பதற்கு பண பேரம் சம்பந்தமான எந்த நிகழ்வும் நடக்கவில்லை என்பதே சாட்சி.

    பணத்திற்காக கடத்தினான் என்றால் குழந்தைகளுக்கு டிரைவரை நன்கு அடையாளம் தெரியும். அப்படியிருக்க போலிஸில் மாட்டி கொள்வோம் என்பது முதலிலேயே அவனுக்கு தெரியாமல் இருக்குமா?.

    விடியல்காலை 5.30க்கு சிறையில் இருந்து குற்றவாளியை போலிஸார் வசம் போலிஸ் கஸ்ட்டிக்கு கொடுத்ததும் போலிஸ் கஸ்ட்டியில் அவன் உண்மை எதுவும் சொல்ல முடியாதவாறு போலிஸ் கஸ்ட்டிக்கு வந்ததும் என்கவுண்டர் ஆனதும்,
    கோவை கடத்தல் சம்பவத்தால் தமிழகம் முழுவதும் மக்களிடம் ஏற்பட்ட கோபமும், கொந்தளிப்பான மனோபாவமும், தமிழக அரசு மீதும், தமது தி.மு.க.அரசின் மீதும் திரும்பி அதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைய நேரும் என்ற காரணத்தாலும் அதை திசை திருப்பும் நாடகமாக இந்த என்கவுன்டர் நடந்ததா?

    மேற்கண்ட காரணங்களையும், அந்த சந்தேகங்களுக்கான பதிலும் வரும்வரை இந்த என்கவுண்டரில் உள்ள சந்தேகம் விலகாது.

    எப்படியிருந்தாலும் அவன் செய்த குற்றத்திற்கு உண்டான தண்டனை கிடைத்தாலும், தண்டனை வழங்கிய வழிமுறைதான் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.]]]

    நண்பரே உங்களுடைய இருநிலைப்பாடு எனக்கு வருத்தமளிக்கிறது..

    முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். இது போலீஸாரால் நடத்தப்பட்ட திட்டமிட்ட படுகொலை.

    இது அவனுக்குக் கிடைத்த தண்டனையல்ல.. தி.மு.க. அரசு செயல்படுகிறது என்பதைக் காட்டுவதற்காக அரசாலேயே செய்யப்பட்ட ஒரு செட்டப் நாடகம்..! அவ்வளவுதான்..!

    ReplyDelete
  125. [[[moulefrite said...

    உங்கள் கேள்வியும் வாதமும் ஞாயமானதே, போலிசை[ இன்னுமா
    இந்த நாடு எங்கல நம்புது ] நம் மககள் நம்புது ஆச்சரியம்தான், நடந்தது பாலின பலாத்காரம் என்பதாலேயே அவர்கள் சொல்வது உண்மையாகிவிடாது, ஒருவேலை குற்றவாளி அவன் இல்லாத பட்சத்தில்
    நடந்த்து பெரிய கொடுமையாகி விடும். அனால் குற்றவாளி அவந்தான் எனில் நடந்தது சரிதான், காரணம் நிதிமன்றங்களின் ஆமை தன்மை உலகறிந்தது]]]

    குற்றவாளி அவன்தான் என்பதை யார் சொல்வது.. யார் நிரூபிப்பது.. அதற்குத்தான் வாய்ப்பே தரவில்லையே..?

    நீதிமன்றங்கள் ஆமைத்தன்மையுடன் இருக்கிறது என்றால் அதனைச் சீர்படுத்த வேண்டிய பொறுப்பு யாருக்கு இருக்கிறது..? அரசுக்கா? மக்களுக்கா..? இது யாருடைய தவறு.. இதற்காக ஒரு என்கவுண்ட்டர் வைத்துக் கொள்ளலாமா? சரியாகப் பணியாற்றவில்லை என்று..? யாரைப் பலி கொடு்ககலாம்.. பிரதமர், கவர்னர், முதல்வர், தலைமை நீதிபதிகள், நீதிபதிகள்..?!!

    ReplyDelete
  126. [[[பார்வையாளன் said...
    போலீஸ் செய்தது தவறு என்றால் உங்கள் மாட்சிமை மிகுந்த சட்டம் அவர்களை தண்டிக்கட்டுமே. நீங்கள் ஏன் அவர்களை வார்த்தைகளால் என்கவுண்டர் செய்கிறீர்கள்..?]]]

    அடப் போங்க ஸார்.. நாங்க பார்க்காத என்கவுண்டடரா..? யார் வந்து புகார் கொடுத்து யார் மேல ஆக்ஷன் எடுக்கப் போறாங்க..?

    புருஷன் முன்னாடியே என்னைக் கற்பழிச்சாங்கன்னு ஒரு மலைவாழ் பொண்ணு நீதிபதிகள் முன்னாடி கதறியழுதும் இதுவரை ஒரு எஃப்.ஐ.ஆர்.கூட பதிவு செய்யப்படாத ஜனநாயகம்தான் இங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறது..!

    ReplyDelete
  127. [[[Kanagu said...

    கோவை என்கவுண்டர்: உண்மைதமிழனுக்கு ஓர் எதிர்வினை -

    http://kanaguonline.blogspot.com/2010/11/blog-post_10.html

    அண்ணா இதற்கு உங்கள் பதில்?]]]

    மிக்க நன்றி.. சொல்கிறேன்..!

    ReplyDelete
  128. வாழ்த்துக்கள் தோழர். நிதானமான பார்வை. ஆழமான அலசல். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  129. // உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    [[[பயணமும் எண்ணங்களும் said...

    மிக தவறு. கொலைகாரன் என் பிள்ளையாய் இருந்தால் நானே சுட்டிருப்பேன்.]]]

    இதுதான் மிகையுணர்ச்சி.. வருந்துகிறேன்..!

    Wednesday, November 10, 2010 4:46:00//


    நல்ல சிந்தனை உள்ளவர்கள் இது போன்ற குற்றவாளிகளை உறவைக் காரனம் காட்டி அவர்களுக்கு பரிந்து பேச மாட்டார்கள்.

    நல்லவேளை இந்தக் கயவாளியின் மனைவி இவனை காதலித்ததுக்கு வெட்கப்படுகிறேன் என்று சொல்லியிருக்கிறார். கிராம மக்கள் அவன் பினம் கூட ஊருக்குள் வரக் கூடாது என்று தடுத்திருக்கிறார்கள்.

    //என் வீட்டிலேயே இந்தக் கொடுமை நடந்திருந்தாலும் நான் இதைத்தான் சொல்வேன். நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுத்திருக்க வேண்டிய விஷயம் இது.. //

    அந்த மோகன் ராஜ்-ஐ கூட போய்ட்டுப் போறான் விடுங்க சார் உங்களுக்கு கோயில் கட்டி கும்பிடலாம்.

    கம்ப்யூட்டர் முன்னாடி கண்டதையும் (உங்களை மாதிரி)டைப் செஞ்சா தூக்கம் வர்ற மாதிரி யாரவது வைரஸ் கண்டு பிடிச்சா நல்லதுன்னு தோனுது சார்.

    ReplyDelete
  130. //// உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

    [[[பயணமும் எண்ணங்களும் said...

    மிக தவறு. கொலைகாரன் என் பிள்ளையாய் இருந்தால் நானே சுட்டிருப்பேன்.]]]

    இதுதான் மிகையுணர்ச்சி.. வருந்துகிறேன்..!//

    நாட்டுக்கோ சமூகத்திற்கோ கேடு விளைவிக்கும் பிள்ளையாக என் பிள்ளைகள் உருவாகினால், அவர்களை நானே கொன்றுவிட்டு, அவர்களை அப்படி வளர்த்த குற்றத்திற்குமாக என்னையும் அழித்துக்கொள்வேனே தவிர கண்மூடித்தனமாக பிள்ளைப் பாசம் என்று அவர்களை விட்டு வைக்கவோ, சட்டம் தண்டிக்கட்டும் என்று நாட்களை கடத்தவோ மாட்டேன் சரவணன்.

    ‍- அனாமிகா அம்மா.

    ReplyDelete
  131. தமிழன் சார், இது பின்னாடி அப்பாவி மக்களை என்கௌன்ட்டர் பண்ணும்போது தெரியும்னு சொல்றீங்களே???நீங்க நான்லாம் அப்பாவி மக்கள் தான்...நம்மள பின்னாடி போலீஸ் என்கௌன்ட்டர் பண்ணிடுமா??இதெல்லாம் சும்மா ஒரு மடத்தனமான கற்பனை...இந்த மாதிரி என்கௌன்ட்டர் கண்டிப்பா வேணும்..அந்த கசாபையும் இது மாதிரி சுட்டு தள்ளிருக்கணும்???இப்போ பாருங்க ராஜா மாதிரி இருக்கான்..நம்ம காசு கொடிகனகுல வீனாபோகுது ஒவ்வொருநாளும் அவன பாதுகாக்க...இது தேவையா??யோசிச்சு பாருங்க!!!

    ReplyDelete
  132. தலைவரே, யாரும் யாருக்கும் தண்டனை கொடுத்து விடவில்லை. காவல் துறையினர் செய்ததெல்லாம் ஒன்றே ஒன்றுதான். கடவுளுக்கும் மோகன் ராஜுக்கும் ஒரு சந்திப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். அவ்வளவே. இனி கடவுள் பாடு, மோகன் ராஜ் பாடு.

    இறந்து போன இரண்டு பிஞ்சுகளைப்பற்றி ஒரு வார்த்தை அனுதாபப்பட முடியவில்லை உங்களால்.

    இதில் உச்சக் கட்டமாக உங்கள் வீட்டில் இவ்வாறு நடந்தால் கூட சட்டப்படிதான் நடப்பேன் என்று சொல்கிறீர்கள். அவ்வளவு பெரிய காந்தியவாதியா நீங்கள்?

    எந்திரனைப் பற்றிய ஒரு பதிவர் எழுதியது பிடிக்காமல் பக்கம் பக்கமாக எதிர்வினைப் பதிவு.யார் எந்திரனைப் பற்றி எப்படி எழுதினால் உமக்கென்ன? நீர்தான் காந்தியாயிற்றே? சும்மா இருக்க வேண்டியதுதானே? முடியவில்லை அல்லவா? அடுத்த முறை ஏதேனும் எதிர்வினைப் பதிவு போடுங்கள். அப்புறம் பார்த்துக் கொள்கிறேன். பெற்றோர் குழந்தையை இழந்துள்ளனர். ஒட்டுமொத்தக் கோவையும் ஆடிப் போயிருக்கிறது. என்கௌன்ட்டர் சரியா தவறா என்று பதிவு போட இதுவா நேரம்? இடம் பொருள் ஏவல் தெரிய வேண்டாமா?


    இந்த விஷயத்தில் பிற பதிவர்களுக்கு நான் பின்னூட்டம் போடவில்லை. அதனால் மொத்தக் கோபமும் இங்கேயே காட்டுகிறேன். உங்களுக்கு மட்டும் போடவேண்டும் என்று தோன்றியது. ஒரு அதீத உரிமை எடுத்துக் கொண்டு விட்டேன். மற்றபடி உங்களைக் காயப்படுத்தும் எண்ணம் இல்லை.

    ReplyDelete
  133. தலைவரே, யாரும் யாருக்கும் தண்டனை கொடுத்து விடவில்லை. காவல் துறையினர் செய்ததெல்லாம் ஒன்றே ஒன்றுதான். கடவுளுக்கும் மோகன் ராஜுக்கும் ஒரு சந்திப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். அவ்வளவே. இனி கடவுள் பாடு, மோகன் ராஜ் பாடு.

    இறந்து போன இரண்டு பிஞ்சுகளைப்பற்றி ஒரு வார்த்தை அனுதாபப்பட முடியவில்லை உங்களால்.

    இதில் உச்சக் கட்டமாக உங்கள் வீட்டில் இவ்வாறு நடந்தால் கூட சட்டப்படிதான் நடப்பேன் என்று சொல்கிறீர்கள். அவ்வளவு பெரிய காந்தியவாதியா நீங்கள்?

    எந்திரனைப் பற்றிய ஒரு பதிவர் எழுதியது பிடிக்காமல் பக்கம் பக்கமாக எதிர்வினைப் பதிவு.யார் எந்திரனைப் பற்றி எப்படி எழுதினால் உமக்கென்ன? நீர்தான் காந்தியாயிற்றே? சும்மா இருக்க வேண்டியதுதானே? முடியவில்லை அல்லவா? அடுத்த முறை ஏதேனும் எதிர்வினைப் பதிவு போடுங்கள். அப்புறம் பார்த்துக் கொள்கிறேன். பெற்றோர் குழந்தையை இழந்துள்ளனர். ஒட்டுமொத்தக் கோவையும் ஆடிப் போயிருக்கிறது. என்கௌன்ட்டர் சரியா தவறா என்று பதிவு போட இதுவா நேரம்? இடம் பொருள் ஏவல் தெரிய வேண்டாமா?


    இந்த விஷயத்தில் பிற பதிவர்களுக்கு நான் பின்னூட்டம் போடவில்லை. அதனால் மொத்தக் கோபமும் இங்கேயே காட்டுகிறேன். உங்களுக்கு மட்டும் போடவேண்டும் என்று தோன்றியது. ஒரு அதீத உரிமை எடுத்துக் கொண்டு விட்டேன். மற்றபடி உங்களைக் காயப்படுத்தும் எண்ணம் இல்லை.

    ReplyDelete
  134. அப்புறம் என்னுடைய பின்னூட்டத்தின் முதல் பத்தி உங்கள் பதிவைப் படித்ததனால் நான் அடையும் மனவருத்தத்தின் வெளிப்பாடு. இதே போல் இன்னும் நிறைய பேர் மனவருத்தம் அடைந்திருக்கக் கூடும்.

    அப்படியெல்லாம் உணர்ச்சி வசப்படக் கூடாது. அறிவோடு நடந்து கொள்ள வேண்டும் என்பீர்களானால், எனக்கு அந்த அறிவு தேவையில்லை. முட்டாளாகவே இருப்பதில் நிறைய மகிழ்வு கொள்கிறேன்.

    ReplyDelete
  135. நாட்டுக்கோ சமூகத்திற்கோ கேடு விளைவிக்கும் பிள்ளையாக என் பிள்ளைகள் உருவாகினால், அவர்களை நானே கொன்றுவிட்டு, அவர்களை அப்படி வளர்த்த குற்றத்திற்குமாக என்னையும் அழித்துக்கொள்வேனே தவிர கண்மூடித்தனமாக பிள்ளைப் பாசம் என்று அவர்களை விட்டு வைக்கவோ, சட்டம் தண்டிக்கட்டும் என்று நாட்களை கடத்தவோ மாட்டேன் சரவணன்.

    ‍- அனாமிகா அம்மா.//



    சபாஷ் அனாமிகா..

    ReplyDelete
  136. //நீதிமன்றங்கள் ஆமைத்தன்மையுடன் இருக்கிறது என்றால் அதனைச் சீர்படுத்த வேண்டிய பொறுப்பு யாருக்கு இருக்கிறது..? அரசுக்கா? மக்களுக்கா..? இது யாருடைய தவறு.. இதற்காக ஒரு என்கவுண்ட்டர் வைத்துக் கொள்ளலாமா? சரியாகப் பணியாற்றவில்லை என்று..? யாரைப் பலி கொடு்ககலாம்.. பிரதமர், கவர்னர், முதல்வர், தலைமை நீதிபதிகள், நீதிபதிகள்..?!!
    //

    People seeking instant justice through police encounter may check about Sohrabuddin Sheikh fake encounter.

    What next?

    a. Would this encounter prevent any more kidnapping, child molestations? Would the public (it includes you..., me... everyone) care to see if this encounter stopped child molestation. Never! And we all will return to our busy routine life and in another case would fervently urge for instance justice again.

    b. If courts are slow, what is the remedy? Fake encounter or improving the court procedures?

    c. If punishment and correctional measures are insufficient, what is the long term remedy?

    d. How to ensure perpetrators, alleged perpetrators, potential perpetrators realize the severity of the punishment for child abuse cases.

    e. What about identifying child predators and making them social outcast?

    f. Would there be strong propaganda against child abuse in mass media?

    g. Would there be education to kids on raising alarm on dangerous advances of adults?

    last but not least...

    h. Why not encourage masturbation as an outlet for strong sexual urge rather than letting it over innocent child? Even UN recommends masturbation as safe,trouble-free, guilt-free, harmless outlet for sex.

    i. Would anyone control quacks who terrorize youth about masturbation?

    ReplyDelete
  137. மிகவும் அதி மேதாவித்தனமாக பேசுவதாக நினைத்துக்கொண்டும், இப்படி ஒரு பதிவு போட்டால் நிறைய கமெண்ட்ஸ் கிடைக்கும் என்பதற்காகவும் நீங்கள் இந்த பதிவை போட்டு உள்ளீர்கள். இன்று நாட்டில் அதிகமாக குற்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கு காரணம் மும்பை தாஜ் ஹோட்டல் தீவிரவாதி கசாப் பையும் மற்ற அணைத்து கொலை குற்ற வழக்குகளின் நிலையையும் ஒரு எடுத்துக்காட்டாக வைத்துக்கொண்டு தான் இன்று நாட்டில் குற்றங்கள் பெருகி வருகின்றன. அதாவது கொலையே செய்தாலும், நீதிமன்றத்தில் வருடகணக்கில் வழக்கு நடக்கும் அதற்குள் நாம் வெளியே வந்து விடலாம், என்ற நிலைமை தான் இன்று நாட்டில் குற்றங்கள் பெருக காரணம். அப்பாவி குழந்தைகளை ரசித்து ரசித்து கொன்று விட்டு, மக்களிடம் நான் செய்த தவறுக்கு என்னை தூக்கில் இடுங்கள் என்று சொல்வது அனைவரையும் ஏமாற்றும் திட்டம். வழக்கு நடந்தால் நாம் எப்படியும் வெளியில் வந்துவிடலாம் என்ற எண்ணம். அப்படியே வைத்துக்கொண்டாலும் அவன் கேட்டதை தானே போலீஸ் செய்துள்ளது? அவன் தூக்கிலிட சொன்னான். போலீஸ் அவனை சுட்டு கொன்று விட்டது. அவனுடைய கோரிக்கை நிறைவேற்ற பட்டு விட்டது. தண்டனையின் விதம் தான் மாறுபடுகிறது, ஆனால் முடிவு ஒன்றுதான். நான் தெரியாமல் கேட்கிறேன் விசாரணை என்பது எதற்கு? குற்றம் செய்தது யார் என்பது தெரியவில்லை என்றால் தான் விசாரணை. மனித உரிமை என்பது மனிதர்களுக்கு மட்டுமே, கொலைகாரர்களுக்கு அல்ல. இந்த என்கவுண்டர் நடவடிக்கையினால், நேற்று சென்னையில் குழந்தையை கடத்திய கும்பல் ஒன்று, போலீஸ் தேடுவதை அறிந்து என்கவுண்டர் பயத்தில் குழந்தையை நடுரோட்டில் விட்டு விட்டு சென்றது..... இது தான் மக்களுக்கு தேவை. உங்களுக்கு என்ன தேவை என்று எங்களுக்கு தெரியவில்லை.... மனித உரிமை மற்றும் சட்டங்களை பின்பற்றுவது ஆகியவற்றை பற்றி கவலை பட நிறைய பொதுமக்கள் வழக்குகள் உள்ளன. அதை விட்டு விட்டு வித்தியாசமாக சிந்திக்கிறேன் பேர்வழி என்ற பெயரில் கடுப்பை கிளப்பாதீர்கள்.......

    ReplyDelete
  138. [[[சவுக்கு said...
    வாழ்த்துக்கள் தோழர். நிதானமான பார்வை. ஆழமான அலசல். வாழ்த்துக்கள்.]]]

    தோழர் சவுக்கின் முதல் வருகைக்கு நன்றி..!

    எவ்வளவோ சொல்லிப் பார்க்கிறோம். மக்கள் இன்னமும் புரிந்தபாடில்லையே..!

    ReplyDelete
  139. [[[ரிஷபன்Meena said...

    நல்ல சிந்தனை உள்ளவர்கள் இது போன்ற குற்றவாளிகளை உறவைக் காரனம் காட்டி அவர்களுக்கு பரிந்து பேச மாட்டார்கள்.

    நல்லவேளை இந்தக் கயவாளியின் மனைவி இவனை காதலித்ததுக்கு வெட்கப்படுகிறேன் என்று சொல்லியிருக்கிறார். கிராம மக்கள் அவன் பினம் கூட ஊருக்குள் வரக் கூடாது என்று தடுத்திருக்கிறார்கள்.

    அந்த மோகன் ராஜ்-ஐ கூட போய்ட்டுப் போறான் விடுங்க சார் உங்களுக்கு கோயில் கட்டி கும்பிடலாம்.

    கம்ப்யூட்டர் முன்னாடி கண்டதையும்(உங்களை மாதிரி)டைப் செஞ்சா தூக்கம் வர்ற மாதிரி யாரவது வைரஸ் கண்டு பிடிச்சா நல்லதுன்னு தோனுது சார்.]]]

    நன்றி ரிஷபன் ஸார்..! மனித உயிர்களைத் தரம் பார்த்துப் பிரிக்க வேண்டியதில்லை..!

    குற்றவாளியே ஆனாலும் அவன் தரப்பு வாதத்தைச் சொல்வதற்கு அவனுக்கு இங்கே உரிமையுண்டு என்பதுதான் நமது ஜனநாயகம் நமக்குக் கொடுத்திருக்கும் சிறப்புரிமை..!

    உணர்ச்சியின் விளிம்பில் நின்று கொண்டு அத்தனை பேரும் கூக்குரலிடுகிறீர்கள்..!

    ReplyDelete
  140. [[[அனாமிகா துவாரகன் said...
    நாட்டுக்கோ சமூகத்திற்கோ கேடு விளைவிக்கும் பிள்ளையாக என் பிள்ளைகள் உருவாகினால், அவர்களை நானே கொன்றுவிட்டு, அவர்களை அப்படி வளர்த்த குற்றத்திற்குமாக என்னையும் அழித்துக் கொள்வேனே தவிர கண்மூடித்தனமாக பிள்ளைப் பாசம் என்று அவர்களை விட்டு வைக்கவோ, சட்டம் தண்டிக்கட்டும் என்று நாட்களை கடத்தவோ மாட்டேன் சரவணன்.

    ‍- அனாமிகா அம்மா.]]]

    மிக்க நன்றியம்மா.. நீங்கள் சொல்வது தங்கப்பதக்கம் சிவாஜி சொல்வதைப் போல் உள்ளது..

    மீண்டும் உணர்ச்சிக் குவியலுக்குள் ஆட்பட்டுக் கொண்டீர்கள்..!

    இரண்டு மாதங்கள் போகட்டும். மெதுவாகச் சிந்தித்துப் பாருங்கள். புரியும்..!

    ReplyDelete
  141. [[[Kamal said...

    தமிழன் சார், இது பின்னாடி அப்பாவி மக்களை என்கௌன்ட்டர் பண்ணும்போது தெரியும்னு சொல்றீங்களே? நீங்க நான்லாம் அப்பாவி மக்கள்தான். நம்மள பின்னாடி போலீஸ் என்கௌன்ட்டர் பண்ணிடுமா? இதெல்லாம் சும்மா ஒரு மடத்தனமான கற்பனை. இந்த மாதிரி என்கௌன்ட்டர் கண்டிப்பா வேணும். அந்த கசாபையும் இது மாதிரி சுட்டு தள்ளிருக்கணும்? இப்போ பாருங்க ராஜா மாதிரி இருக்கான். நம்ம காசு கொடிகனகுல வீனா போகுது. ஒவ்வொருநாளும் அவன பாதுகாக்க. இது தேவையா? யோசிச்சு பாருங்க!!!]]]

    அவரவர்க்கு வரும்போதுதான் மனித உரிமை பற்றிப் பேச முடியும்.. உங்களுக்கு அந்த அனுபவம் இன்னமும் கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன்..

    கிடைக்காமல் இருக்க என் அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன்..!

    ReplyDelete
  142. [[[Gopi Ramamoorthy said...

    தலைவரே, யாரும் யாருக்கும் தண்டனை கொடுத்து விடவில்லை. காவல் துறையினர் செய்ததெல்லாம் ஒன்றே ஒன்றுதான். கடவுளுக்கும் மோகன்ராஜுக்கும் ஒரு சந்திப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். அவ்வளவே. இனி கடவுள் பாடு, மோகன்ராஜ் பாடு.]]]

    வீரப்பன் வேட்டையில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கும் இதே பதில்தானா..?

    [[[இறந்து போன இரண்டு பிஞ்சுகளைப் பற்றி ஒரு வார்த்தை அனுதாபப்பட முடியவில்லை உங்களால்.]]]

    வருத்தம்தான்.. இல்லாமல் இருக்குமா..? அதற்காக இன்னொருத்தனையும் உடனே கொலை செய் என்றால் இதென்ன சினிமாவா..?

    [[[இதில் உச்சக்கட்டமாக உங்கள் வீட்டில் இவ்வாறு நடந்தால் கூட சட்டப்படிதான் நடப்பேன் என்று சொல்கிறீர்கள். அவ்வளவு பெரிய காந்தியவாதியா நீங்கள்?]]]

    இல்லை.. வாழ்க்கையைப் புரிந்தவன். அனுபவ ரீதியாக வாழ்க்கையை முற்றிலும் தெரிந்து கொண்டவன். இப்படித்தான் நடக்கும் என்றால் அது நடந்தே தீரும். இதற்கு யாரும் தப்ப முடியாது..!

    [[[எந்திரனைப் பற்றிய ஒரு பதிவர் எழுதியது பிடிக்காமல் பக்கம் பக்கமாக எதிர்வினைப் பதிவு. யார் எந்திரனைப் பற்றி எப்படி எழுதினால் உமக்கென்ன? நீர்தான் காந்தியாயிற்றே? சும்மா இருக்க வேண்டியதுதானே? முடியவில்லை அல்லவா? அடுத்த முறை ஏதேனும் எதிர்வினைப் பதிவு போடுங்கள். அப்புறம் பார்த்துக் கொள்கிறேன்.]]]

    அதற்கும், இதற்கும் என்ன சம்பந்தம்..? பத்திரிகைகாரனிடம் டெய்லி நியூஸ் போடாதே என்று சொல்வது போல் உள்ளது.

    [[[பெற்றோர் குழந்தையை இழந்துள்ளனர். ஒட்டுமொத்தக் கோவையும் ஆடிப் போயிருக்கிறது. என்கௌன்ட்டர் சரியா தவறா என்று பதிவு போட இதுவா நேரம்? இடம் பொருள் ஏவல் தெரிய வேண்டாமா?]]]

    வேறு எப்போது போடுவது..? மக்கள் கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா..? கண்ணை மூடிக் கொண்டு இதற்கு ஒத்துக் கொண்டால், நாளை அப்பாவிகளையும் இந்த போலீஸ் வேட்டையாடிவிட்டு குற்றவாளிகள் என்று சொல்வார்கள்..!

    [[[இந்த விஷயத்தில் பிற பதிவர்களுக்கு நான் பின்னூட்டம் போடவில்லை. அதனால் மொத்தக் கோபமும் இங்கேயே காட்டுகிறேன். உங்களுக்கு மட்டும் போடவேண்டும் என்று தோன்றியது. ஒரு அதீத உரிமை எடுத்துக் கொண்டு விட்டேன். மற்றபடி உங்களைக் காயப்படுத்தும் எண்ணம் இல்லை.]]]

    மிக்க நன்றி. நானும் எதையும் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. உங்களைப் பற்றி நான் அறியாததா?

    ReplyDelete
  143. [[[Gopi Ramamoorthy said...

    அப்புறம் என்னுடைய பின்னூட்டத்தின் முதல் பத்தி உங்கள் பதிவைப் படித்ததனால் நான் அடையும் மனவருத்தத்தின் வெளிப்பாடு. இதே போல் இன்னும் நிறைய பேர் மனவருத்தம் அடைந்திருக்கக் கூடும்.

    அப்படியெல்லாம் உணர்ச்சிவசப்படக் கூடாது. அறிவோடு நடந்து கொள்ள வேண்டும் என்பீர்களானால், எனக்கு அந்த அறிவு தேவையில்லை. முட்டாளாகவே இருப்பதில் நிறைய மகிழ்வு கொள்கிறேன்.]]]

    இந்த அளவுக்கெல்லாம் இறங்கிப் பேச வேண்டாம் கோபி.. நமக்குள்ள என்ன..?

    லஞ்சம் வாங்கிக் கொண்டு முடிச்சுத் தரேன்.. தைரியமா போப்பா என்று சொல்லியனுப்பும் தரகு வேலையைத்தான் இப்போது போலீஸ் செய்திருக்கிறது. மக்களும் சந்தோஷமாக வீடு திரும்பியிருக்கிறார்கள். அவர்களுக்கு எப்படியோ வேலை முடிந்தால் சரி.. இந்த லஞ்சத் தொகை ஆண்டுக்காண்டு அதிகரித்து அவர்களுடைய வாரிசுகளின் காலக்கட்டத்தில் பெரிதாக நிற்கும்போதுதான் இது புரியும்..!

    ReplyDelete
  144. [[[பயணமும் எண்ணங்களும் said...

    நாட்டுக்கோ சமூகத்திற்கோ கேடு விளைவிக்கும் பிள்ளையாக என் பிள்ளைகள் உருவாகினால், அவர்களை நானே கொன்றுவிட்டு, அவர்களை அப்படி வளர்த்த குற்றத்திற்குமாக என்னையும் அழித்துக்கொள்வேனே தவிர கண்மூடித்தனமாக பிள்ளைப் பாசம் என்று அவர்களை விட்டு வைக்கவோ, சட்டம் தண்டிக்கட்டும் என்று நாட்களை கடத்தவோ மாட்டேன் சரவணன்.

    ‍- அனாமிகா அம்மா.//

    சபாஷ் அனாமிகா..]]]

    உங்கள் இருவரின் சந்தோஷத்தையும் பார்த்து நானும் சந்தோஷப்படுகிறேன். நன்றி.. வாழ்க வளமுடன்..!

    ReplyDelete
  145. [[[Indian said...

    //நீதிமன்றங்கள் ஆமைத்தன்மையுடன் இருக்கிறது என்றால் அதனைச் சீர்படுத்த வேண்டிய பொறுப்பு யாருக்கு இருக்கிறது..? அரசுக்கா? மக்களுக்கா..? இது யாருடைய தவறு.. இதற்காக ஒரு என்கவுண்ட்டர் வைத்துக் கொள்ளலாமா? சரியாகப் பணியாற்றவில்லை என்று..? யாரைப் பலி கொடு்ககலாம்.. பிரதமர், கவர்னர், முதல்வர், தலைமை நீதிபதிகள், நீதிபதிகள்?//

    People seeking instant justice through police encounter may check about Sohrabuddin Sheikh fake encounter.

    What next?

    a. Would this encounter prevent any more kidnapping, child molestations? Would the public (it includes you..., me... everyone) care to see if this encounter stopped child molestation. Never! And we all will return to our busy routine life and in another case would fervently urge for instance justice again.

    b. If courts are slow, what is the remedy? Fake encounter or improving the court procedures?

    c. If punishment and correctional measures are insufficient, what is the long term remedy?

    d. How to ensure perpetrators, alleged perpetrators, potential perpetrators realize the severity of the punishment for child abuse cases.

    e. What about identifying child predators and making them social outcast?

    f. Would there be strong propaganda against child abuse in mass media?

    g. Would there be education to kids on raising alarm on dangerous advances of adults?

    last but not least...

    h. Why not encourage masturbation as an outlet for strong sexual urge rather than letting it over innocent child? Even UN recommends masturbation as safe,trouble-free, guilt-free, harmless outlet for sex.

    i. Would anyone control quacks who terrorize youth about masturbation?]]]

    இந்தியன் அண்ணே.. சொராபுதீன் கேஸ் பத்தியெல்லாம் இங்கே உணர்ச்சிவசப்படும் மக்கள்ஸ்ல பாதிப் பேருக்குத் தெரிஞ்சிருக்க வாய்ப்பே இல்லை..

    அதான் சொன்னனே.. தனக்குன்னு வநதால்தான் இவர்களுக்கு ரத்தம், ரத்தமாகத் தெரியும்.. மற்றவர்களுக்கென்றால் அது ஒரு செய்தி அவ்வளவுதான்..!

    உங்களுடைய மற்றக் கேள்விகள் நியாயமானதுதான்..! குற்றவாளிகளும், குற்றங்களும் பெருகி வர சமூகம்தான் மிக முக்கியக் காரணமாக இருக்கிறது..!

    இந்த அளவுக்கெல்லாம் பின்புலத்தைத் தோண்டிப் பார்க்கவோ, மனரீதியாக என்ன பிரச்சினை என்பதைச் சிந்தித்துப் பார்க்கவோ நம்ம மக்களுக்கு இப்போது நேரமில்லை. செய்யவும் மாட்டார்கள். நாம் கற்றறிந்தது அவ்வளவுதான்..!

    ReplyDelete
  146. [[[kailashmurugan said...

    இன்று நாட்டில் அதிகமாக குற்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கு காரணம் மும்பை தாஜ் ஹோட்டல் தீவிரவாதி கசாப்பையும் மற்ற அணைத்து கொலை குற்ற வழக்குகளின் நிலையையும் ஒரு எடுத்துக்காட்டாக வைத்துக் கொண்டுதான் இன்று நாட்டில் குற்றங்கள் பெருகி வருகின்றன. அதாவது கொலையே செய்தாலும், நீதிமன்றத்தில் வருடகணக்கில் வழக்கு நடக்கும். அதற்குள் நாம் வெளியே வந்து விடலாம், என்ற நிலைமைதான் இன்று நாட்டில் குற்றங்கள் பெருக காரணம். அப்பாவி குழந்தைகளை ரசித்து ரசித்து கொன்று விட்டு, மக்களிடம் நான் செய்த தவறுக்கு என்னை தூக்கில் இடுங்கள் என்று சொல்வது அனைவரையும் ஏமாற்றும் திட்டம். வழக்கு நடந்தால் நாம் எப்படியும் வெளியில் வந்துவிடலாம் என்ற எண்ணம். அப்படியே வைத்துக்கொண்டாலும் அவன் கேட்டதைதானே போலீஸ் செய்துள்ளது? அவன் தூக்கிலிட சொன்னான். போலீஸ் அவனை சுட்டு கொன்றுவிட்டது. அவனுடைய கோரிக்கை நிறைவேற்றபட்டு விட்டது. தண்டனையின் விதம்தான் மாறுபடுகிறது, ஆனால் முடிவு ஒன்றுதான். நான் தெரியாமல் கேட்கிறேன் விசாரணை என்பது எதற்கு? குற்றம் செய்தது யார் என்பது தெரியவில்லை என்றால்தான் விசாரணை. மனித உரிமை என்பது மனிதர்களுக்கு மட்டுமே, கொலைகாரர்களுக்கு அல்ல. இந்த என்கவுண்டர் நடவடிக்கையினால், நேற்று சென்னையில் குழந்தையை கடத்திய கும்பல் ஒன்று, போலீஸ் தேடுவதை அறிந்து என்கவுண்டர் பயத்தில் குழந்தையை நடுரோட்டில் விட்டு விட்டு சென்றது. இதுதான் மக்களுக்கு தேவை. உங்களுக்கு என்ன தேவை என்று எங்களுக்கு தெரியவில்லை. மனித உரிமை மற்றும் சட்டங்களை பின்பற்றுவது ஆகியவற்றை பற்றி கவலை பட நிறைய பொதுமக்கள் வழக்குகள் உள்ளன. அதை விட்டுவிட்டு வித்தியாசமாக சிந்திக்கிறேன் பேர்வழி என்ற பெயரில் கடுப்பை கிளப்பாதீர்கள்.]]]

    நன்றி நண்பரே..! இவ்வளவு எழுதிய பின்பும், பேசிய பின்பும் நான் இனிமேற்கொண்டு எது சொல்லியும் உங்களுக்குப் புரியப் போவதில்லை..

    வாழ்க நீங்களும், உங்களது கொலைகார காவல்துறையும்..!

    ReplyDelete
  147. //இப்படித்தான் நடக்கும் என்றால் அது நடந்தே தீரும். இதற்கு யாரும் தப்ப முடியாது..!//

    அப்பாடா! சரியா சொல்லிட்டீங்க. எல்லாம் முருகன் மனசு வச்சதுதான் நடந்திருக்கு அப்டின்றீங்க.

    நல்லது. மோகன்ராஜைக் கொன்னது எல்லாமே 'அவன்' செயல்தானோ? சரி.

    ReplyDelete
  148. அண்ணே சூப்பர் அண்ணே.... நீங்க உங்க பதிவுல ஒரு 'கருத்த' சொல்லிடீங்க. அதுலேர்ந்து எதற்கும் பின் வாங்கதீங்க.. நம்ம ஜனங்க எல்லாம் முட்டா ஜனங்க அண்ணே... என்னைக்கு தான் 'நம்மள மாதிரி சிந்திச்சு' திருந்த போறாங்களோ...நீங்க உண்மையிலேயே ட்ரூ தமிலஅண்ணே..

    ReplyDelete
  149. அண்ணே சூப்பர் அண்ணே.... நீங்க உங்க பதிவுல ஒரு 'கருத்த' சொல்லிடீங்க. அதுலேர்ந்து எதற்கும் பின் வாங்கதீங்க.. நம்ம ஜனங்க எல்லாம் முட்டா ஜனங்க அண்ணே... என்னைக்கு தான் 'நம்மள மாதிரி சிந்திச்சு' திருந்த போறாங்களோ...நீங்க உண்மையிலேயே ட்ரூ தமிலஅண்ணே..

    ReplyDelete
  150. அண்ணே.. என்ன அண்ணே இம்புட்டு நெகட்டீவ் ஓட்டு.. அதுவும் உங்க பதிவுக்கு போய்?! ரொம்ப கவலையா இருக்குண்ணே.

    ReplyDelete
  151. அண்ணே கருத்துகள் உண்மை நிலையை உணர்த்தி இருக்கு நன்றி.

    ReplyDelete
  152. உண்மை. சட்டத்தை கையில் எடுக்க போலீசுக்கு அதிகாரம் இல்லைதான்.ஆனால் நீங்கள் சொல்வது போல் மக்கள் உணர்ச்சி வசப்பட்டார்கள் என்பதை விட அவர்களுக்கு நீதித்துறையின் மேல் உள்ள நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து வருகிறது என்பதையே இது காட்டுகிறது என நான் நம்புகிறேன்.ஏனெனில் கொலைக்குற்றவாளி ஜாமீன் வாங்கி வெளியில் திரிந்த காலம் போய்,தண்டனை கைதிக்கும் 'ஜாமீன்' கொடுத்து வெளியில் அனுப்பிய காலம் போய்,இப்பொழுது பலவருடங்கள் கழித்து அளிக்கப்படும் தண்டனையையும் நீதி 'பரிதாபம்' பார்த்து குறைத்துவிடுகிறது.ஆக பொதுமக்கள் இவனுக்கு தண்டனை கிடைக்குமோ ,கிடைக்காதோ அப்படியே கிடைத்தாலும் ஜாமீன் கிடைக்கும் அல்லது தண்டனை குறைக்கப்படும் என்ற கருத்தை நம்புவதால் கைதி கொல்லப்பட்டவுடன் கொண்டாடி இருக்கிறார்கள். நீதி விரைவில் கிடைக்குமானால் இது தானாக சரியாகிவிடும். மனு நீதி சோழன் வாழ்ந்த நாட்டில் பிறந்தவன் "கொலைகாரன் உங்கள் வீட்டை சார்ந்தவனாக இருந்தால் இப்படி செய்வீர்களா?" என்ற கேள்வியையே எழுப்பக்கூடாது.

    ReplyDelete
  153. R VENKATESH,

    நீங்கள் சொல்வது சரி!

    மக்களுக்கு தேவை இன்ஸ்டன்ட் ஜஸ்டிஸ் அல்ல. அதற்காகவும் கொண்டாடவில்லை. ஆனால், அவர்களுக்கு தேவை 'ஏதேனும்' ஒரு தண்டனை. இன்றைய காலகட்டத்தில், நீதி மன்றங்கள் இருக்கும் நிலைமையில் அதெல்லாம் எட்டாக்கனி. திருத்தபடவேண்டியது நீதித்துறை. மீண்டும் சொல்கிறேன். அவனுக்கு தண்டனை கொடுக்க போலீஸுக்கு 'அருகதை' இல்லை. ஆனால், அவனுக்கு கிடைத்தது 'சரியான' தண்டனை.

    'என் வீட்டில் நடந்திருந்தாலும் நான் இப்படித்தான் செய்திருப்பேன்' என்று பேச நன்றாக இருக்கும். ஆனால், அடிப்படையில் நாமெல்லாம் மனிதர்கள். உணர்ச்சிக்கு ஆட்பட்டவர்கள்.

    ReplyDelete
  154. "புருஷன் முன்னாடியே என்னைக் கற்பழிச்சாங்கன்னு ஒரு மலைவாழ் பொண்ணு நீதிபதிகள் முன்னாடி கதறியழுதும் இதுவரை ஒரு எஃப்.ஐ.ஆர்.கூட பதிவு செய்யப்படாத ஜனநாயகம்தான் இங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறது..!"

    இப்பத்தான் அண்ணே, உணர்ச்சி வசப்படாம யதார்த்தத்தை பேசுறீங்க...
    பாதிக்கப்பட்டவக்களுக்கு சட்டப்படி நியாயம் கிடைக்காத நிலைல , வேறு ரூபத்துல குற்றவாளி தண்டிக்கப்படும்போது மகிழ்ச்சி அடையுறாங்க... இதற்கு அந்த மக்களை குற்றம்சொல்லி பயனில்லை.. கையாலாகாத நீதி துறையை வேணும்னா திட்டிகொங்க..

    நாம கொலையை ஆதரிப்பதில்லை.. ஆனா நீங்க சொன்ன உதாரணத்துல, அந்த மலைவாழ் பொண்ணுங்களுக்கு வேண்டிய ஒருவன் , சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை போட்டு தள்ளுனா, அந்த பொண்ணுங்களுக்கு கொஞ்சமாவது ஆறுதல் கிடைக்குமா இல்லையா?

    ReplyDelete
  155. aam thandanaigal kadumaiyaanal than kudrangal kuraium,,,
    aanal avanai thandika police ku athigaram ellai thane?

    ReplyDelete
  156. சத்தியமா இது காமெடி பீஸ் தான்.

    ReplyDelete
  157. 75-th நெகடிவ் வோட்டு சத்தியமா நான்தான் போட்டது.

    ReplyDelete
  158. [[[தருமி said...

    //இப்படித்தான் நடக்கும் என்றால் அது நடந்தே தீரும். இதற்கு யாரும் தப்ப முடியாது..!//

    அப்பாடா! சரியா சொல்லிட்டீங்க. எல்லாம் முருகன் மனசு வச்சதுதான் நடந்திருக்கு அப்டின்றீங்க]]]

    இப்படி நினைத்து வன்முறைக்குப் பதில் வன்முறையைக் கையில் எடுக்காமல் சட்டத்தின் துணையை நாடுவதுதான் சிறப்பு. நாட்டில் அனைவருமே பல்லுக்குப் பல் என்று இறங்கினால் எப்படியிருக்கும்..?

    ReplyDelete
  159. musictoday said...
    அண்ணே சூப்பர் அண்ணே.... நீங்க உங்க பதிவுல ஒரு 'கருத்த' சொல்லிடீங்க. அதுலேர்ந்து எதற்கும் பின் வாங்கதீங்க.. நம்ம ஜனங்க எல்லாம் முட்டா ஜனங்க அண்ணே. என்னைக்குதான் 'நம்மள மாதிரி சிந்திச்சு' திருந்த போறாங்களோ. நீங்க உண்மையிலேயே ட்ரூ தமிலஅண்ணே.]]]

    உங்களுடைய வஞ்சப்புகழ்ச்சிக்கு எனது நன்றிகள் நண்பரே..!

    ReplyDelete
  160. [[[மாயவரத்தான்.... said...
    அண்ணே.. என்ன அண்ணே இம்புட்டு நெகட்டீவ் ஓட்டு.. அதுவும் உங்க பதிவுக்கு போய்?! ரொம்ப கவலையா இருக்குண்ணே.]]]

    இருக்கும்ல இருக்கும்.. செய்யறதையெல்லாம் செஞ்சுப்போட்டு அப்பிராணியாய் வந்து கேள்வி கேக்குறீர் பாரு.. நீர்தான் உண்மைத்தமிழன்..!

    ReplyDelete
  161. [[[SHAHUL said...
    அண்ணே கருத்துகள் உண்மை நிலையை உணர்த்தி இருக்கு நன்றி.]]]

    புரிந்து கொண்டமைக்கு மிக்க நன்றி ஷாகுல்..!

    ReplyDelete
  162. [[[R VENKATESH said...
    நீதி விரைவில் கிடைக்குமானால் இது தானாக சரியாகிவிடும். மனுநீதிசோழன் வாழ்ந்த நாட்டில் பிறந்தவன் "கொலைகாரன் உங்கள் வீட்டை சார்ந்தவனாக இருந்தால் இப்படி செய்வீர்களா?" என்ற கேள்வியையே எழுப்பக் கூடாது.]]]

    இன்றைய நமது கொள்ளையடிக்கும் அரசியல்வியாதிகளை வைத்துக் கொண்டு நீதித்துறை மின்னல் வேகத்தில் செயல்பட வேண்டும் என்ற நமது ஆசை நிச்சயம் நடைபெறாது வெங்கடேஷ்..

    நீதித்துறை விரைந்து செயல்பட்டால் அடிபடப் போவது முதலில் இந்தக் கேடு கெட்ட அரசியல்வியாதிகள். உதாரணம், ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு..!

    ReplyDelete
  163. [[[சீனு said...

    R VENKATESH, நீங்கள் சொல்வது சரி!
    மக்களுக்கு தேவை இன்ஸ்டன்ட் ஜஸ்டிஸ் அல்ல. அதற்காகவும் கொண்டாடவில்லை. ஆனால், அவர்களுக்கு தேவை 'ஏதேனும்' ஒரு தண்டனை. இன்றைய காலகட்டத்தில், நீதிமன்றங்கள் இருக்கும் நிலைமையில் அதெல்லாம் எட்டாக்கனி. திருத்தப்பட வேண்டியது நீதித் துறை. மீண்டும் சொல்கிறேன். அவனுக்கு தண்டனை கொடுக்க போலீஸுக்கு 'அருகதை' இல்லை. ஆனால், அவனுக்கு கிடைத்தது 'சரியான' தண்டனை.]]]

    யார் தண்டனையை நிறைவேற்றுவது என்பதும் ஒரு கேள்விதான்..! ஒரு பக்கத்துக்கு இன்னொரு பக்கம் நிச்சயம் இருக்கும் சீனு ஸார்..!

    ReplyDelete
  164. [[[பார்வையாளன் said...

    "புருஷன் முன்னாடியே என்னைக் கற்பழிச்சாங்கன்னு ஒரு மலைவாழ் பொண்ணு நீதிபதிகள் முன்னாடி கதறியழுதும் இதுவரை ஒரு எஃப்.ஐ.ஆர்.கூட பதிவு செய்யப்படாத ஜனநாயகம்தான் இங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறது..!"

    இப்பத்தான் அண்ணே, உணர்ச்சி வசப்படாம யதார்த்தத்தை பேசுறீங்க.
    பாதிக்கப்பட்டவக்களுக்கு சட்டப்படி நியாயம் கிடைக்காத நிலைல, வேறு ரூபத்துல குற்றவாளி தண்டிக்கப்படும்போது மகிழ்ச்சி அடையுறாங்க. இதற்கு அந்த மக்களை குற்றம் சொல்லி பயனில்லை. கையாலாகாத நீதி துறையை வேணும்னா திட்டிகொங்க..
    நாம கொலையை ஆதரிப்பதில்லை. ஆனா நீங்க சொன்ன உதாரணத்துல, அந்த மலைவாழ் பொண்ணுங்களுக்கு வேண்டிய ஒருவன், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை போட்டு தள்ளுனா, அந்த பொண்ணுங்களுக்கு கொஞ்சமாவது ஆறுதல் கிடைக்குமா இல்லையா?]]]

    அந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ஒருவர் இல்லை.. ஒரு கூட்டமே ஈடுபட்டிருந்தது..! அத்தனை பேரையும் போட்டுத் தள்ளுவது முக்கியமில்லை. அத்தனை பேரையும் நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுத்தால்தான் அடுத்து வரும் வாரிசுகளுக்கும், காவல்துறைக்கும் ஒரு பயம் இருந்திருக்கும். செய்யலையே இந்த அரசியல்வியாதிகள்..!

    ReplyDelete
  165. [[[jamal said...
    aam thandanaigal kadumaiyaanal than kudrangal kuraium. aanal avanai thandika policeku athigaram ellai thane?]]]

    தண்டனை வழங்கக் கூடாது என்று நான் சொல்லவில்லை. காலம் தாழ்த்தினாலும் பரவாயில்லை. நீதிமன்றம் மூலமாகத்தான் தண்டித்திருக்க வேண்டும் என்கிறேன்.

    ReplyDelete
  166. [[[ஜெரி ஈசானந்தன். said...
    comedy piece.]]]

    யாருங்கண்ணே..?

    ReplyDelete
  167. [[[ஜெரி ஈசானந்தன். said...
    சத்தியமா இது காமெடி பீஸ்தான்.]]]

    சத்தியமா நீங்க என்னைத்தான் சொல்றீங்களா..?

    ReplyDelete
  168. http://www.maalaimalar.com/2010/11/12163140/teacher-husband-arrest.html

    ReplyDelete
  169. [[[சீனு said...
    http://www.maalaimalar.com/2010/11/12163140/teacher-husband-arrest.html]]]

    நாளைக்கு பாருங்க.. வேறொரு இடத்துல இதே மாதிரி ஒரு கொடுமை நிச்சயமா நடக்கும்..!

    ஏன் தொடர்ந்து நடக்கிறது என்பதெல்லாம் வேறு விஷயம்..!

    ReplyDelete