Pages

Tuesday, November 02, 2010

இஸ்ரேலிய மொஸாத் கூலிப் படையினர் துபாயில் நடத்திய படுகொலை..!

02-11-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!!!

எதிராளியைவிட ஒரு மணி நேரமாவது கூடுதலாகச் சிந்தித்தால்தான் அவனை வெல்ல முடியும் என்பது போர்த் தந்திரங்களில் ஒன்று. உலகம் முழுவதும் இதனை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளோ, போராளி இயக்கங்களோ பின்பற்றுகின்றனவோ.. இல்லையோ.. யூத தேசமான இஸ்ரேல் மட்டுமே தாரக மந்திரமாகப் பின்பற்றி வருகின்றது.

தான் தூங்கினால் பாலஸ்தீனம் முழித்துக் கொள்ளும் என்பதில் இன்றைக்கும் தெளிவான சிந்தினையுடன் ஆட்சி நடத்தி வருகிறார்கள் இஸ்ரேலியர்கள். மத்திய கிழக்காசியாவில் தனிப்பெரும்பான்மையுடன் அமெரிக்காவைப் போல் சர்வாதிகாரத்துடனும், சகல செல்வாக்குடனும் இருந்து வந்தாலும், ஒவ்வொரு நொடியையும் தனது பாலஸ்தீன எதிர்ப்பிலும், தனது நாட்டின் பாதுகாப்பு பற்றிய கண்காணிப்பிலும் உறுதியுடனேயே இருக்கிறது இஸ்ரேல்.

தனது எதிரிகளை அழித்தொழிக்க தான் உருவாக்கிய மொஸாத் என்னும் கூலிப் படையினர் மாதந்தோறும் இத்தனை பாலஸ்தீன விடுதலை விரும்பிகளை அழித்தொழிக்க வேண்டும் என்பதை கட்டளையாகவே மேற்கொண்டு வருகின்றனர்.

பாலஸ்தீனப் பிரச்சினைகள் உச்சக்கட்டத்தில் இருந்தபோதெல்லாம் அப்பாவிகள் இருக்கின்றார்களே என்ற ஒரு சின்ன தயக்கம்கூட இல்லாமல் ஒரு தீவிரவாதிக்காகவே கட்டிடம் முழுவதையுமே ராக்கெட் தாக்குதலில் சிதைக்கும் அளவுக்கு கொடூர மனம் கொண்டது இஸ்ரேல். அதனால்தான் இன்றுவரையிலும் இத்தனை எதிர்ப்புகளைச் சந்தித்தும் தாக்குப் பிடித்து வருகிறது.

பாலஸ்தீன விடுதலை இயக்கங்கள் ஒவ்வொன்றின் வரலாறும், அந்த இயக்கத்தினருக்கே தெரிகிறதோ இல்லையோ.. மொஸாத்தில் இருப்பவர்களுக்கு மட்டும் நன்கு தெரிந்துவிடுகிறது.

விடுதலை இயக்கங்களின் தொண்டர்களையெல்லாம் விட்டுவிட்டு கமாண்டர்கள் என்றழைக்கப்படும் தளபதிகளை குறி வைத்துத் தாக்கியழிப்பதும் மொஸாத்தின் அன்றாடப் பணிகளில் ஒன்று. இதனால்தான் தங்களது இயக்கங்களின் தளபதிகளுக்கு நான்கைந்து பெயர்களைச் சூட்டி அவர்களை மறைமுகமாகக் காத்து வருகிறார்கள். அந்த இயக்கத்தினர் ஆனாலும் மொஸாத்தின் ஆழ ஊடுறுவும் வேவு தந்திரத்தின் முன்னால் இது அத்தனையையும் அவ்வப்போது தோற்றுப் போகிறது.

ஆனானப்பட்ட சி.ஐ.ஏ.வுக்கே தண்ணி காட்டக்கூடிய அளவுக்கு செல்வாக்கும், அறிவுத் திமிரும் படைத்த இந்த யூதக் கொலையாளிகள் இந்த ஆண்டின் துவக்கத்தில் துபாய் நாட்டில் நடத்திய ஒரு அட்டகாசமான, திரில்லிங்கான படுகொலையைத்தான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

இஸ்ரேலின் உளவு நிறுவனமான மொஸாத் பற்றி கூகிளாண்டவரிடம் விசாரித்துக் கொண்டே வந்தபோது, திடீரென்று இந்த வீடியோ காட்சியும், இது பற்றிய செய்திகளும் கண்ணுக்குப் பட்டது. நான் ஏற்கெனவே பார்த்ததுதான் என்றாலும், மறுபடியும் பார்த்தபோது நேரம் போவதே தெரியாமல் தலையுச்சியில் இருந்து உள்ளங்கால்வரையிலும் மயிர்கூச்செறியும்வகையில் ஒரு திகில் அனுபவம் மீண்டும் எனக்குக் கிட்டியது. என்னைப் போலவே உங்களில் பலருக்கு இது பற்றி முன்பே தெரிந்திருக்கலாம். சிலருக்குத் தெரிந்திருக்காது. அப்படித் தெரியாதவர்களுக்காக இந்தச் செய்தி.

 

முகமது அல் மாப்ஹா என்பவர் ஹமாஸ் இயக்கத்தின் தளபதிகளில் ஒருவர். இவருடைய வயது 49. Izz ad-Din al-Qassam Brigades என்ற ஹமாஸ் இயக்கத்தின் ராணுவப் பிரிவைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர். பாலஸ்தீன அரசுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே ஏற்பட்ட ஓஸ்லோ ஒப்பந்தம்வரையிலான காலக்கட்டத்தில் இஸ்ரேலுக்கு எதிராக நடந்த பல்வேறு வன்முறை எதிர்ப்புச் சம்பவங்களில் சம்பந்தப்பட்டது முகமதுவின் இந்த இயக்கம்தான். இந்த இயக்கத்தின் சார்பாகத்தான் ஜோர்டானில் இருந்து ஆயுதங்களைத் தருவித்து அதன் மூலம் இஸ்ரேலிய ராணுவத்துடன் போர் நடத்தினார் முகமது என்பது இஸ்ரேல் அரசின் குற்றச்சாட்டு.

டெல் அவிவில் நடைபெற்ற பல்வேறு மனித வெடிகுண்டுத் தாக்குதல்களின் சூத்ரதாரியும் இவர்தான் என்பதால் இஸ்ரேல் அரசுக்கு சிம்ம சொப்பனமாக இருந்திருக்கிறார். இந்த காரணங்களுக்காகவே மிக நீண்ட நாட்களாக மொஸாத் படையினராலும், இஸ்ரேலிய அரசாலும் கொல்லப்படுவதற்காகவே தேடப்பட்டு வந்தவர்.
 
பாலஸ்தீனத்தில் இருந்தால் தான் எப்படியும் கொல்லப்படுவோம் என்பதால் ஹமாஸ் இயக்கத்தினர் இவரை சிரியா தலைநகரமான டமாஸ்கஸில் இவரைப் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருந்திருக்கிறார்கள்.

டமாஸ்கஸிலும் இவரைக் கொல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்காமல் வருத்தத்தில் இருந்த மொஸாத் படையினருக்கு முகமது, துபாய்க்கு வரவிருக்கிறார் என்ற செய்தி ஒரு வாய்ப்பாகிவிட்டது.

தனது நீண்ட நாள் கனவு பலிக்கப் போகிறதே என்ற சந்தோஷத்தோடு முகமதுவை கொலை செய்ய பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் இருந்து தனது ஏஜெண்டுகளை துபாய்க்கு அனுப்பி வைத்தது மொஸாத்.

இத்தனை ஆண்டு கால போராட்ட வரலாற்றில் ஒரு சின்ன சறுக்கலை முகமது செய்ததுதான் அவரது கொலைக்கு அவரே ரத்தினக் கம்பளம் விரித்தது போலாகிவிட்டது என்கிறார் ஹமாஸ் இயக்கத்தின் டமாஸ்கஸ் பிரிவின் வழக்கறிஞர்.

விமான டிக்கெட்டை டமாஸ்கஸில் இருந்து ஆன்லைனில் பதிவு செய்தது. அதிலேயும் தனது சொந்தப் பெயரில் இருந்த பாஸ்போர்ட்டை பயன்படுத்தியது. அதன் பின்பு இப்போதும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இருக்கும் தனது குடும்பத்தினருக்கு போன் செய்து தான் துபாய்க்கு செல்லும் தகவலையும், தங்கப் போகும் ஹோட்டலின் பெயரையும் சேர்த்து சொன்னது என்று பலவும் சேர்ந்து முகமதுவை வீழ்த்திவிட்டது என்கிறார்கள் ஹமாஸ் இயக்கத் தோழர்கள்.

இந்த ஆண்டு ஜனவரி 19-ம் தேதியன்று டமாஸ்கஸில் இருந்து பாங்காங் வழியாகத் துபாய் வந்து சேர்ந்தார் முகமது. துபாய் ஏர்போர்ட் அருகேயிருக்கும் பஸ்டன் ரொட்டனா என்ற ஹோட்டலில் 230-வது எண் அறையில் தங்கினார் முகமது.

அவரைப் பின் தொடர்ந்து வந்த சில மொஸாத்துக்களும் அதே ஹோட்டலில்தான் முகமது தங்கியிருந்த அறையின் எதிர் அறையில்தான் தங்கியுள்ளனர். மற்ற ஏஜெண்டுகள் நகரின் பல்வேறு ஹோட்டல்களில் தனித்தனிப் பிரிவாகத் தங்கியவர்கள், ஓரிடத்தில் ஒன்று சேர்ந்து பேசியுள்ளனர்.

முகமது மட்டுமே தனியே வந்திருக்கும் தகவலை உறுதி செய்து கொண்டு இரவு 8.20 மணியளவில் ஹோட்டலுக்குள் 4 மொஸாத் ஏஜெண்ட்டுகள் மட்டுமே நுழைந்து முகமதுவை சப்தமில்லாமல் படுகொலை செய்துவிட்டுத் தப்பியோடிவிட்டார்கள்.

அந்தக் கொலைக்காரக் மொஸாத் கூலிப் படையினர் சென்று வந்த இடங்களில் இருந்த CCTV-யில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து முகமதுவை அவர்கள் படுகொலை செய்ய போட்டிருந்த திட்டத்தை துபாய் போலீஸார் பட்டவர்த்தனமாக்கியுள்ளனர்.

அதன் வீடியோ காட்சிகள்தான் இரண்டு பாகங்களாக இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தயவு செய்து நேரத்தைக் கணக்கில் எடுக்காமல் முழுவதையும் பாருங்கள். யூதர்களின் மூளைத் திறன் எப்பேர்ப்பட்டது என்பதை இந்த வீடியோவைப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.





எப்போதும் பாதுகாவலர்கள் படை சூழ இருந்து வரும் முகமது இந்த முறை தனியே பயணப்பட வேண்டியதாகிவிட்டது. அன்றைக்கு பார்த்து அவர் புக் செய்த விமானத்தில், பாதுகாவலர்களுக்கு டிக்கெட் கிடைக்காததால் அவர்களை அடுத்த நாள் விமானத்தில் வரும்படி சொல்லியிருக்கிறார். இதுவும் மொஸாத்துக்குத் தெரிந்துவிட அதற்கு முன்பாகவே முந்திக் கொள்ள நினைத்து, முகமது வந்து சேர்ந்த அன்றைக்கே ஆறரை மணி நேர இடைவெளியில் அவரைக் கொலை செய்திருக்கிறார்கள்.

இந்த டிவி காட்சிகளின் தொகுப்பை வெளியிட்ட துபாய் போலீஸின் தலைமை அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் டாகி கஃப்லன் தமீம் இந்தப் படுகொலையில் சம்பந்தப்பட்ட மொஸாத் ஏஜெண்டுகள் என்று 11 பேரை அடையாளம் கண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் குடியுரிமை பெற்ற Michael Lawrence Barney, James Leonard Clarke, Jonathan Louis Graham, Paul John Keeley and Stephen Daniel Hodes; அயர்லாந்தில் குடியுரிமை பெற்ற  Gail Folliard, Evan Dennings and Kevin Daveron பிரான்சு நாட்டைச் சேர்ந்த Peter Elvinger, மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த   Michael Bodenheimer. இவர்கள்தான் அந்த தேடப்படும் மொஸாத் ஏஜெண்டுகள்.

பல்வேறு நாடுகளில் இருந்து கிளம்பி சுவிட்சர்லாந்தில் ஒன்று சேர்ந்து தனி விமானம் மூலம் துபாய்க்குள் கால் வைத்த இந்த மொஸாத் ஏஜெண்டுகளில் சிலர் டூரிஸ்ட்டுகள் போலவும், சிலர் விளையாட்டுப் போட்டியைக் காண வந்தது போலவும் காட்சியளித்துள்ளனர். துபாயில் அவர்கள் தங்களது தலைக்கு விக்கை பயன்படுத்தியிருப்பதும் தெரிய வந்துள்ளது.

முகமதுவின் அறைக்கதவின் லாக், எலெக்ட்ரானிக் புரோகிராமிங் செய்யப்பட்ட ஒன்றாம். அந்த புரோகிராமையே உடைத்தெறிந்துவிட்டு அறைக்குள் நுழைந்த 4 மொஸாத்துகள் முகமதுவைச் சித்ரவதைப்படுத்தியும், இறுதியில் விஷம் கொடுத்தும் கொலை செய்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. பின்பு, கதவை உட்பக்கமாக முகமதுவே தாளிட்டிருப்பதுபோல் அதில் ரீபுரோகிராம் செய்துவிட்டுத்தான் தப்பியோடியிருக்கிறார்கள். என்ன கில்லாடித்தனம்..?

துபாய் அரசு இந்த படுகொலைக்குப் பிறகு ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் தனது கெடுபிடியை இறுக்கமாக்கியிருக்கிறது. முன்பெல்லாம் அரபு குடியரசு நாடுகள் பாலஸ்தீனர்கள் என்றால் கொஞ்சம் கருணையுடன் நடந்து கொள்ளும் என்பதால்தான் இந்த நாடுகளுக்கு மட்டும் தைரியமாக வந்து செல்வார்கள் பாலஸ்தீன விடுதலை இயக்கத் தளபதிகள். இதனை உடைத்தெறிந்திருக்கிறது சர்வ வல்லமை பொருந்திய மொஸாத்..

ஏற்கெனவே உலகம் முழுவதும் இருக்கும் மொஸாத் ஏஜெண்டுகளின் போலி பாஸ்போர்ட்டுகளை பல்வேறு நாடுகளும் அடையாளம் கண்டு அவற்றை தடை செய்துள்ளன. இந்த முறை இந்த ஏஜெண்ட்டுகள் வந்த அனைத்து ஐரோப்பிய நாடுகளுமே போலியான புகைப்படம் ஒட்டிய பாஸ்போர்ட்டுகளுக்கு அனுமதியளித்துள்ளார்கள். இது பற்றி அனைத்து நாடுகளுக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சம்பந்தப்பட்ட நாடுகள் முகமதுவின் படுகொலை பற்றி விசாரணை செய்து போலியாக பாஸ்போர்ட் வழங்கியமைக்காக சில அதிகாரிகள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. இந்தப் படுகொலை வழக்கில் போலி பாஸ்போர்ட் வழங்க உதவியதற்காக ஆஸ்திரேலிய அரசு, தனது நாட்டுக்கான இஸ்ரேலிய தூதரை வெளியேற்றியது.

இந்தப் படுகொலையில் சம்பந்தப்பட்ட ஒருவரை மட்டுமே போலந்து தலைநகர் வார்சாவில் அந்நாட்டு போலீஸ் கைது செய்துள்ளது. அவர் ஜெர்மனியைச் சேர்ந்தவர் என்று தெரிகிறது. இதில் இன்னொரு திருப்பமாக ஹமாஸ் அமைப்பின் விரோதியாகச் செயல்படும் எகிப்து நாட்டைச் சேர்ந்த பாத் அமைப்பின் இரண்டு உறுப்பினர்கள்தான் துபாய் வந்திருந்த மொஸாத் ஏஜெண்டுகளுக்கு மறைமுகமாக உதவிகள் செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளனராம்.

மேலும் இந்தப் படுகொலையின் பின்னால் நிச்சயமாக மொஸாத் இருக்கிறது என்று துபாய் அரசு சொன்னாலும் இன்றுவரை இஸ்ரேல் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. தனக்கும், இதற்கும் யாதொரு ஸ்நானப் பிராப்தமும் இல்லை என்றே சொல்லி வருகிறது. ஆனாலும் துபாய் அரசு மொஸாத்தின் தலைமை இயக்குநரை கைது செய்து தரும்படி சர்வதேச போலீஸாரிடம் ரெட் அலர்ட்டை கொடுத்துவிட்டது கூடுதல் சுவாரஸ்யமான விஷயம்.

இந்தப் படுகொலைகள் பற்றிய முழு விவரமும் அறிய இங்கே சென்று படிக்கவும்


92 comments:

  1. இதைப்பற்றி டோண்டு சார் என்ன சொல்றாருன்னு கேட்கணும்

    ReplyDelete
  2. இஸ்ரேல் அதனுடைய மொஸாத் என்பது புலி ஆதரவாளர்களின் கடவுள் மாதிரி. தீவிர புலி ஆதரவாளராகிய நீங்கள் இப்படி எல்லாம் எழுதுவது மிகவும் குழப்பமாக இருக்கிறது.

    ReplyDelete
  3. உ.த அண்ணே..
    இது இவ்வளவு ஈஸியா சொல்லிட்டு போற விசயமில்ல.
    ஹமாஸுக்கும் மொசாட்டுக்கும் இடையிலான பகை ரொம்ப பெரிசு, எழுதினா நாவல் சைஸுக்கு வரும்.

    நான் இஸ்ரேல் சரியா, பாலஸ்தீன் சரியா என்கிற விவாதத்துக்கு வரவில்லை, ஆனா ஹமாஸ், மொசாட் ரெண்டுமே வன்முறையை தீவிரமா நம்பும் இயக்கங்கள். ஹமாஸ் அப்பாவி இஸ்ரேலிகளைக் கொல்லவில்லயா? (இஸ்ரேலிகளில் யாரும் அப்பாவிகள் இல்லைன்னு சொல்வீங்களா).

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  4. பதிவுக்கு மிக்க நன்றி உண்மை தமிழன்.
    பார்க்க: http://dondu.blogspot.com/2010/11/blog-post_02.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  5. என்று தனியும் இந்த கொலை வெறி...

    ReplyDelete
  6. அமுதா கிருஷ்ணா said... என்று தனியும் இந்த கொலை வெறி?
    எப்படியுங்க தணியும் முடியும்? உண்மை தமிழன் போன்றோர் தமிழீழ விடுதலைப்புலிகளை என்ற பயங்கரவாத இயக்கத்தை ஆதரிக்கும் போது தணியாது கொலை வெறி.

    ReplyDelete
  7. மொஸாட் என்பது இஸ்ரேலுடைய உளவுப்படை. இதே போல மற்ற நாட்டு உளவுப்படைகளும் இதே வழியை தான் கையாளும். என்னவோ, இவர்கள் 'மட்டும்' தான் கொடியவர்கள் போன்ற எள்ளலுடன் எழுதியிருக்கிறீர்கள்.

    உங்கள் பிரச்சினை மனித நேயமா? இல்லை இஸ்ரேலா?

    ReplyDelete
  8. இஸ்ரேல் 1976ல் நடத்திய Operation Entebbe பற்றி கேள்விப்படிருகின்றீர்களா? James Bond கதைகளுக்கே சவால் விடும், மயிர் கூச்செறியும் திருப்பங்களை கொண்ட, மிகவும் துணிவான ஒரு செயல் அது. சமீபத்தில் தான் அதைப்பற்றி அறிந்துகொண்டேன். இஸ்ரேல் மீது எனக்கு ஆயிரம் விமர்சனம் இருக்கலாம் அனால் சற்றும் வளைந்து கொடுக்காத, தங்கள் நாட்டு பிரஜைகளை காப்பாற்ற அவர்கள் எடுத்த துணிச்சலான முடிவு மற்றும் செயல்படுத்திய விதத்தினை பார்க்கும்பொழுது சபாஷ் சொல்லவே தோன்றுகிறது.

    http://en.wikipedia.org/wiki/Operation_Entebbe

    Youtubeஇலும் காணொளிகள் காணக்கிடைக்கின்றன

    ReplyDelete
  9. [[[LK said...
    இதைப் பற்றி டோண்டு சார் என்ன சொல்றாருன்னு கேட்கணும்.]]]

    முதல் பின்னூட்டமே இப்படியா அமையணும்..?

    ReplyDelete
  10. [[[Chandran said...
    இஸ்ரேல் அதனுடைய மொஸாத் என்பது புலி ஆதரவாளர்களின் கடவுள் மாதிரி. தீவிர புலி ஆதரவாளராகிய நீங்கள் இப்படி எல்லாம் எழுதுவது மிகவும் குழப்பமாக இருக்கிறது.]]]

    நான் தீவிர புலி ஆதரவாளன் கிடையாது. தீவிர ஈழத்து ஆதரவாளன். அதுவும் முதலில் இருந்தே கிடையாது. சமீபத்தில் இருந்துதான். சில சமயங்களில் அனுபவங்கள் கொஞ்சம் தாமதமாகக் கிடைத்து அதன் மூலம் அறிவுக்கண்ணும் லேட்டாவே தொறக்குது..!

    ReplyDelete
  11. [[[sriram said...

    உ.த அண்ணே.. இது இவ்வளவு ஈஸியா சொல்லிட்டு போற விசயமில்ல.

    ஹமாஸுக்கும் மொசாட்டுக்கும் இடையிலான பகை ரொம்ப பெரிசு, எழுதினா நாவல் சைஸுக்கு வரும்.

    நான் இஸ்ரேல் சரியா, பாலஸ்தீன் சரியா என்கிற விவாதத்துக்கு வரவில்லை, ஆனா ஹமாஸ், மொசாட் ரெண்டுமே வன்முறையை தீவிரமா நம்பும் இயக்கங்கள். ஹமாஸ் அப்பாவி இஸ்ரேலிகளைக் கொல்லவில்லயா? (இஸ்ரேலிகளில் யாரும் அப்பாவிகள் இல்லைன்னு சொல்வீங்களா).

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்]]]

    எனக்கும் தெரியும். இரு தரப்பிலுமே பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள். யார் அதிகம் பாதிக்கப்பட்டவர்களோ அவர்களுக்குத்தான் அதிக இழப்பீடும் தரப்பட வேண்டும். அந்த வகையில் தற்போதைக்கு பெரும் இழப்பீடு பெற வேண்டியவர்கள் பாலஸ்தீன மக்கள்தான்..!

    ReplyDelete
  12. [[[dondu(#11168674346665545885) said...

    பதிவுக்கு மிக்க நன்றி உண்மை தமிழன்.

    பார்க்க: http://dondu.blogspot.com/2010/11/blog-post_02.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்]]]

    நன்றி..!

    ReplyDelete
  13. [[[அமுதா கிருஷ்ணா said...
    என்று தனியும் இந்த கொலை வெறி...]]]

    கடைசி மனிதன் இருக்கின்றவரையிலும் இந்த வெறி இருந்தே தீரும்..!

    ReplyDelete
  14. [[[Chandran said...

    அமுதா கிருஷ்ணா said... என்று தனியும் இந்த கொலை வெறி?

    எப்படியுங்க தணியும் முடியும்?

    உண்மை தமிழன் போன்றோர் தமிழீழ விடுதலைப்புலிகளை என்ற பயங்கரவாத இயக்கத்தை ஆதரிக்கும்போது தணியாது கொலை வெறி.]]]

    சந்திரன்.. புலிகளை நான் முன்பு மிகக் கடுமையாகவே விமர்சித்திருக்கிறேன்..! பழைய ஈழத் தமிழ் பதிவர்களை விசாரித்துப் பாருங்கள்..!

    ReplyDelete
  15. [[[சீனு said...

    மொஸாட் என்பது இஸ்ரேலுடைய உளவுப் படை. இதே போல மற்ற நாட்டு உளவுப் படைகளும் இதே வழியைதான் கையாளும். என்னவோ, இவர்கள் 'மட்டும்'தான் கொடியவர்கள் போன்ற எள்ளலுடன் எழுதியிருக்கிறீர்கள்.]]]

    எனக்கென்னவோ இப்போது செய்திருப்பதுபோல் அந்நிய நாட்டுக்குள் புகுந்து படுகொலைகளை சர்வசாதாரணமாக செய்து வரும் உளவு நிறுவனம் மொஸாத் மட்டுமே என்று தோன்றுகிறது.

    தொடர்ந்து வரிசையில் சி.ஐ.ஏ., கே.ஜி.பி.யும் உள்ளன.

    உங்கள் பிரச்சினை மனித நேயமா? இல்லை இஸ்ரேலா?]]]

    ReplyDelete
  16. [[[தியாகு said...

    இஸ்ரேல் 1976ல் நடத்திய Operation Entebbe பற்றி கேள்விப்படிருகின்றீர்களா? James Bond கதைகளுக்கே சவால் விடும், மயிர் கூச்செறியும் திருப்பங்களை கொண்ட, மிகவும் துணிவான ஒரு செயல் அது. சமீபத்தில்தான் அதைப் பற்றி அறிந்துகொண்டேன். இஸ்ரேல் மீது எனக்கு ஆயிரம் விமர்சனம் இருக்கலாம் அனால் சற்றும் வளைந்து கொடுக்காத, தங்கள் நாட்டு பிரஜைகளை காப்பாற்ற அவர்கள் எடுத்த துணிச்சலான முடிவு மற்றும் செயல்படுத்திய விதத்தினை பார்க்கும் பொழுது சபாஷ் சொல்லவே தோன்றுகிறது.

    http://en.wikipedia.org/wiki/Operation_Entebbe

    Youtube-லும் காணொளிகள் காணக் கிடைக்கின்றன]]]

    தியாகு ஸார்..

    நமது கொள்கை நாட்டுக்கு நாடு, இனத்துக்கு இனம் மாறுபடும் போலிருக்கிறது..!

    உங்களிடமிருந்து இது மாதிரியான பின்னூட்டத்தை நான் எதிர்பார்க்கவில்லை..!

    ReplyDelete
  17. ஸ்ரீராம் என்ன உ.த. வுக்கே நாவல் என்று பயமுறுத்தறிங்க?. நாவல்லாம் அவருக்கு தூசு. 1 நாள்ளில் 2 நாவல் எழுதி தள்ளிடுவாறு தெரிஞ்சுக்கோங்க.

    ReplyDelete
  18. [[தியாகு ஸார்..

    நமது கொள்கை நாட்டுக்கு நாடு, இனத்துக்கு இனம் மாறுபடும் போலிருக்கிறது..!

    உங்களிடமிருந்து இது மாதிரியான பின்னூட்டத்தை நான் எதிர்பார்க்கவில்லை..!]]


    தமிழன் அய்யா,
    நான் சபாஷ் Operation Entebbe'க்கு தானே ஒழிய இஸ்ரேலுக்கு அல்ல. முதன்முறையாக Operation Entebbe பற்றி படிக்கும் பொழுது, கந்தகாருக்கு கடத்தப்பட்ட இந்திய விமானமும், அதனை நாம் மீட்டெடுத்த விதமும், அப்பொழுது நாம் விடுவித்த தீவிரவாதிகளால் பின்பு நமக்கு நிகழ்ந்த மனித உயிர் இழப்புகளுமே நினைவிற்கு வந்தது. ஒப்பீடு செய்யாமல் என்னால் இருக்க முடியவில்லை, இன்னும் நான் அந்த அளவிற்கு பக்குவப்படவில்லை. எதிரியே ஆனாலும் நம்மைவிட திறமையானவங்க இருந்தால் பாராட்டுவது தவறில்லையே?. பொருளாசை கூடாது என்று நூறு முறை படிக்கின்றேன் அனால் பத்து ரூபாயினை தொலைத்தாலோ அல்லது பத்து ரூபாய்க்காக ஏமாற்றப்பட்டலோ பல மணி நேரம் வருந்துகிறேன். Miles to go....

    ReplyDelete
  19. [[[குறும்பன் said...
    ஸ்ரீராம் என்ன உ.த. வுக்கே நாவல் என்று பயமுறுத்தறிங்க?. நாவல்லாம் அவருக்கு தூசு. 1 நாள்ளில் 2 நாவல் எழுதி தள்ளிடுவாறு தெரிஞ்சுக்கோங்க.]]]

    அதான.. வாய்ப்புக் கிடைச்சா எழுதித் தள்ளிர மாட்டேன்..!

    குறும்பன் ஸார்.. உங்களை மாதிரி என் நலம் விரும்பிகள் நாலு பேராவது இங்க இருக்கிறதாலதான் நான் இங்க குப்பை கொட்டிக்கிட்டிருக்கேன். ரொம்ப நன்றிங்கோ..!

    ReplyDelete
  20. உங்கள் கட்டுரையில் எனக்கு உடன்பாடில்லை.

    தெரியாமல் தான் கேட்க்கிறேன்....மொஸாத் அமைப்பினர் கொன்றதாகச் சொல்லும் அந்த முகமது அல் மாப்ஹா என்ற ஹமாஸ் தீவிரவாதக் கூட்டத்துக்காரன் என்ன மஹாத்மா காந்தியா ? இல்லை அமைதியைப் போதித்த புத்தனா ?

    அவன் செய்ததுக்கு என்ன மாதிரி சாவு கிடைக்குமோ அது கிடைத்திருக்கிறது. infact அவன் செய்த காரியத்துக்கு அவனுக்கு இதைவிட நல்ல சாவு கிடைத்திருக்காது. அவன் பிறரை சாவடிச்ச மாதிரி குண்டு வெடித்து உடல் சிதறி சின்னாபின்னமாகி துர்மரணம் ஏற்படாமல் ஷாக் டிரீட்மென்ட், மற்றும் விஷ மருந்தால் அவனது மரணம் நேர்ந்தது அவன் ஓரளவுக்கேனும் கொடுத்துவைத்தவன் என்று சொல்லவைக்கிறது.

    இஸ்ரேல் மேல் கம்மூனிஸ்டுகள் அனியாயத்துக்கு காண்டாக இருப்பது அல்லது அப்படி இருப்பது போல் காட்டிக்கொள்வது அவர்கள் கடைபிடிக்கும் அரசியல் கொள்கையினால் என்பது புரிந்துகொள்ளக்கூடியது. திடீர் என்று நீங்கள் ஏன் இப்படி காண்டாக வேண்டும் ? அதுவும் இவ்விசயம் நடந்த பிறகு காவேரியில் ஒரு கங்கையே ஓடிவிட்ட நிலையில் ?

    ReplyDelete
  21. [[[தியாகு said...

    [[தியாகு ஸார்..

    நமது கொள்கை நாட்டுக்கு நாடு, இனத்துக்கு இனம் மாறுபடும் போலிருக்கிறது..! உங்களிடமிருந்து இது மாதிரியான பின்னூட்டத்தை நான் எதிர்பார்க்கவில்லை..!]]

    தமிழன் அய்யா, நான் சபாஷ் Operation Entebbe'க்குதானே ஒழிய இஸ்ரேலுக்கு அல்ல. முதன்முறையாக Operation Entebbe பற்றி படிக்கும்பொழுது, கந்தகாருக்கு கடத்தப்பட்ட இந்திய விமானமும், அதனை நாம் மீட்டெடுத்த விதமும், அப்பொழுது நாம் விடுவித்த தீவிரவாதிகளால் பின்பு நமக்கு நிகழ்ந்த மனித உயிர் இழப்புகளுமே நினைவிற்கு வந்தது. ஒப்பீடு செய்யாமல் என்னால் இருக்க முடியவில்லை, இன்னும் நான் அந்த அளவிற்கு பக்குவப்படவில்லை. எதிரியே ஆனாலும் நம்மைவிட திறமையானவங்க இருந்தால் பாராட்டுவது தவறில்லையே..? பொருளாசை கூடாது என்று நூறு முறை படிக்கின்றேன். அனால் பத்து ரூபாயினை தொலைத்தாலோ அல்லது பத்து ரூபாய்க்காக ஏமாற்றப்பட்டலோ பல மணி நேரம் வருந்துகிறேன். Miles to go.]]]

    ஐயா முதலிலேயே ஒரு சின்ன விளக்கம்..

    நான் ரொம்ப சின்னப் பையன்.. அய்யா என்ற பெரிய, பெரிய வார்த்தையெல்லாம் வேண்டாம்..!

    இஸ்ரேலின் அடக்குமுறையை உலகத்துக்கு அறிவுறுத்த வேண்டும் என்றுதானே எத்தியோப்பாவில் விமானத்தைக் கடத்தினார்கள்.

    நமது மாவோயிஸ்ட்டுகளும், விடுதலைப்புலிகளும் இதைத்தானே வேறு வழிகளில் செய்தார்கள்.

    நாம் எதிர்த்தால் எல்லாவற்றையும்தான் எதிர்க்க வேண்டும். ஆதரித்தால் அனைத்தையும்தான் ஆதரிக்க வேண்டும்..!

    நாட்டுக்கு நாடு நமது கொள்கை மாறுபடும் சூழலைப் பார்த்து முருகன் நம்மைப் பார்த்து சிரிக்கிறானே..? தெரிகிறதா..?

    ReplyDelete
  22. [[ஐயா முதலிலேயே ஒரு சின்ன விளக்கம்..

    நான் ரொம்ப சின்னப் பையன்.. அய்யா என்ற பெரிய, பெரிய வார்த்தையெல்லாம் வேண்டாம்..!

    .....

    நாம் எதிர்த்தால் எல்லாவற்றையும்தான் எதிர்க்க வேண்டும். ஆதரித்தால் அனைத்தையும்தான் ஆதரிக்க வேண்டும்..!

    நாட்டுக்கு நாடு நமது கொள்கை மாறுபடும் சூழலைப் பார்த்து முருகன் நம்மைப் பார்த்து சிரிக்கிறானே..? தெரிகிறதா..?]]

    உடன்பட்டேன், இனிமேல் No அய்யா.

    தமிழன் சார்,
    சூரபத்மனின் அண்ணனோ/தம்பியோ, அவருடைய கிரௌஞ்ச மலையின் பின்புறம் இருந்த அழகிய மாளிகையினை பார்த்து நம் முருகனே பாராட்டவில்லையா?

    ReplyDelete
  23. இஸ்ரேல் ரவுடித்தனமாக நடக்காவிடில் அங்கே இஸ்ரேல் இருக்காது என்பதுதான் உண்மை.ஆனாலும் இருதரப்பும் இரு தரப்பின் இருப்பையும் ஒத்துக்கொள்ளும் மனநிலைக்கு வந்த பின்னர் சமாதானம் வரலாம், அது வரை வாய்ப்பில்லை இருதரப்பும் முற்றிலும் அழியும் நிலை வந்தாலும் சண்டையை நிறுத்தமாட்டார்கள்.

    ReplyDelete
  24. ரொம்பவும் லேட்டா பதிவு போட்டாலும் சரியான தகவலை தந்திருக்கீங்க ..!! இஸ்ரேலின் அடாவடி உலகம் அறிந்தது..!!அதை அடக்க ஈரானால் மட்டுமே முடியும்..(( அதனால்தான் ஈரானுக்குஅமெரிக்கா நெருக்கடி கொடுக்கிறது ))

    :-))

    ReplyDelete
  25. //இரு தரப்பிலுமே பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள். யார் அதிகம் பாதிக்கப்பட்டவர்களோ அவர்களுக்குத்தான் அதிக இழப்பீடும் தரப்பட வேண்டும். அந்த வகையில் தற்போதைக்கு பெரும் இழப்பீடு பெற வேண்டியவர்கள் பாலஸ்தீன மக்கள்தான்..!//

    இதை படிக்கும் போது உங்களுக்கே சிரிப்பா வரல? நீங்க என்னோட விட்டுக்கு வந்து ஒரு சன்னல் கண்ணாடியை கல்லெறிஞ்சு உடச்சிட்டீங்க, நான் கோவப்பட்டு உங்க வீட்டுக்கு வந்து ரெண்டு சன்னல் கண்ணாடிகளை உடச்சிடறேன், உடனே நீங்கதான் அதிகம் பாதிக்கப்பட்டவர், உங்களுக்குத்தான் நிவாரணம் தேவைன்னு சொல்வீங்களா??

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  26. அண்ணே.. இன்னமும் சென்னையில் சில யூதர்கள் இருக்காங்க, யாராவது சிக்கினா பேசிப்பாருங்க - உங்க எண்ணம் மாறும்.

    ஈழத்தமிழர்கள் மேல நம்ம எல்லாருக்கும் அனுதாபம் இருக்கு. ஏனோ தெரியல, உலகம் முழுக்க அகதிகளா அலஞ்ச யூதர்கள் மேல இல்ல.

    நெறய யூதர்களின் கதையை அமெரிக்காவில் கேட்டிருக்கிறேன்..

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  27. ///ஜெய்லானி said...
    அதை அடக்க ஈரானால் மட்டுமே முடியும்..(( அதனால்தான் ஈரானுக்குஅமெரிக்கா நெருக்கடி கொடுக்கிறது ))///

    :)))))
    சிரித்து மாளவில்லை.

    ReplyDelete
  28. பழைய செய்தியாக‌ இருந்தாலும், அதை அழகாக தமிழாக்கப்படுத்தி எழுதியமைக்கும், கூடவே மற்ற லின்க் தந்ததற்கும் மிக்க நன்றி.

    //ஈழத்தமிழர்கள் மேல நம்ம எல்லாருக்கும் அனுதாபம் இருக்கு. ஏனோ தெரியல, உலகம் முழுக்க அகதிகளா அலஞ்ச யூதர்கள் மேல இல்ல.

    நெறய யூதர்களின் கதையை அமெரிக்காவில் கேட்டிருக்கிறேன்..//

    இன்னும் நிறைய நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். உலகம் பார்க்கத்தானே போகிறது அவர்களின் சுய ரூபத்தை..!!

    ReplyDelete
  29. வஜ்ரா அண்ணே..

    நீண்ட நாட்கள் கழித்து எனது தளத்திற்குள் வந்தமைக்கு எனது நன்றிகள்..!

    இரு தரப்பிலுமே போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் இருக்கிறார்கள் என்றாலும் இந்த விஷயத்தில் இஸ்ரேல், பாலஸ்தீனத்திடம் கரிசனத்துடன் நடந்து கொள்ள வேண்டு்ம் என்றே நான் எதிர்பார்க்கிறேன்..!

    கொல்லப்பட்டவர் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்தான் என்றாலும் நாட்டை மீட்டெடுக்கும் ஒரு குழு என்றும் பார்க்க வேண்டிய கட்டாயம் உண்டு..

    யூதர்களுக்கு ஒரு தனி நாடு என்பதுபோல், பாலஸ்தீனர்களுக்கும் வேண்டாமா..?

    ReplyDelete
  30. தியாகு ஸார்..!

    இதேபோல் இரு மாநில அதிரடிப் படைகள் வீரப்பன் கதையை முடித்ததையும், மாவோயிஸ்ட்டுகளை வேட்டையாடி அழிப்பதையும் நம்மால் ரசிக்க முடிந்ததா..?

    ReplyDelete
  31. [[[குடுகுடுப்பை said...
    இஸ்ரேல் ரவுடித்தனமாக நடக்காவிடில் அங்கே இஸ்ரேல் இருக்காது என்பதுதான் உண்மை. ஆனாலும் இரு தரப்பும் இரு தரப்பின் இருப்பையும் ஒத்துக் கொள்ளும் மனநிலைக்கு வந்த பின்னர் சமாதானம் வரலாம், அதுவரை வாய்ப்பில்லை இரு தரப்பும் முற்றிலும் அழியும் நிலை வந்தாலும் சண்டையை நிறுத்தமாட்டார்கள்.]]]

    எப்போதுதான் நிறுத்தித் தொலைவார்கள் என்ற எண்ணம்தான் வருகிறது..!

    இதனால் பாலஸ்தீனத்தில் மூன்று தலைமுறைகளே வீணாகிப் போய்விட்டார்களே..? உண்மையில் போரில் பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள்தானே..?

    ReplyDelete
  32. [[[ஜெய்லானி said...
    ரொம்பவும் லேட்டா பதிவு போட்டாலும் சரியான தகவலை தந்திருக்கீங்க ..!! இஸ்ரேலின் அடாவடி உலகம் அறிந்தது..!!அதை அடக்க ஈரானால் மட்டுமே முடியும்..(( அதனால்தான் ஈரானுக்கு அமெரிக்கா நெருக்கடி கொடுக்கிறது ))
    :-))]]]

    ஈரான் அணு உலையை இயக்கத் துவங்கினாலும், துவங்கா விட்டாலும் அதன் மீது தாக்குதல் உண்டு. இப்போதாவது அரபு நாடுகள் அமெரிக்காவையும், இஸ்ரேயும் இந்த விஷயத்தில் இனம் கண்டு ஈரானுக்கு உதவுவது அவர்களுக்கு நல்லது..!

    ReplyDelete
  33. [[[sriram said...

    அண்ணே.. இன்னமும் சென்னையில் சில யூதர்கள் இருக்காங்க, யாராவது சிக்கினா பேசிப்பாருங்க - உங்க எண்ணம் மாறும்.

    ஈழத் தமிழர்கள் மேல நம்ம எல்லாருக்கும் அனுதாபம் இருக்கு. ஏனோ தெரியல, உலகம் முழுக்க அகதிகளா அலஞ்ச யூதர்கள் மேல இல்ல.

    நெறய யூதர்களின் கதையை அமெரிக்காவில் கேட்டிருக்கிறேன்..

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்]]]

    இதேபோல் பாலஸ்தீனியர்களும் அரபு நாடுகள் முழுவதும் பிச்சையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.. அவர்கள் கதையை என்னவென்று சொல்வது..?

    இரு தரப்பிலுமே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது உண்மை. முன்பு யூதர்கள்.. கடந்த 50 ஆண்டுகளாகத்தான் வாழ்ந்து வருகிறார்கள். அதற்காக இன்னும் 200 ஆண்டுகள் பாலஸ்தீனியர்களை பிச்சையெடுக்க வைப்பது நியாயமா?

    ReplyDelete
  34. [[[K.MURALI said...

    ///ஜெய்லானி said...
    அதை அடக்க ஈரானால் மட்டுமே முடியும்..(( அதனால்தான் ஈரானுக்குஅமெரிக்கா நெருக்கடி கொடுக்கிறது ))///

    :)))))
    சிரித்து மாளவில்லை.]]]

    ஏன் சிரிக்கிறீர்கள் முரளி..? அவர் உண்மையைத்தான் சொல்கிறார்.. ஆசியாவில் இந்தியாவிடம் அணுகுண்டு தயாரிக்கும் சக்தி உண்டு. அதைப் பற்றி இஸ்ரேலுக்கு பயம் இல்லை. ஆனால் ஈரானைப் பற்றி பயம் வருகிறது என்றால் என்ன காரணம்..?

    ReplyDelete
  35. [[[K.MURALI said...
    check
    http://operationentebbe.com]]]

    படித்தேன்.. படித்தேன்..

    ReplyDelete
  36. //யூதர்களுக்கு ஒரு தனி நாடு என்பதுபோல், பாலஸ்தீனர்களுக்கும் வேண்டாமா..?//
    அதையும்தான் கொடுத்தாங்களே.

    1948-ல் முறையான ஐ.நா. வாக்கெடுப்பில் பாலஸ்தீனப் பிரிவினை ஏற்பட்டது. அன்றிலிருந்து யுத்தம்தான். அப்போதுதான் பிறந்தக் குழந்தையை கழுத்தை நெறித்துக் கொல்ல சுற்றியிருந்த அரபு நாடுகள் தாக்கின. அதையும் எதிர்க்கொண்டது இஸ்ரேல். அந்த யுத்தத்தில் யூதர்களை ஒட்டு மொத்தமாகக் கொல்ல ஏதுவாக பாலஸ்தீனர்களை தங்கள் வீடுகளைக் காலி செய்து விலகிப் போகுமாறுக் கூறினர் அரபு நாட்டவர்கள். அவ்வாறு சென்றவர்கள்தான் பாலஸ்தீன அகதிகள்.

    தங்கள் போராட்டத்தைத் தாங்களே நடத்திக் கொள்ளாமல் மற்றவர்கள் தோளில் சவாரி செய்த பாலஸ்தீனியர்கள் அந்த வழக்கத்தை விடவே இல்லை. அதுதான் அவர்கள் பிரச்சினை.

    மேலும், பாலஸ்தீனியர்களுக்காக கொடுக்கப்பட்ட இடங்கலை எகிப்தும் ஜோர்டானுமாக கபளீகரம் செய்தன.

    1967-ல் மறுபடியும் யூதர்களை எல்லாம் “கடலுக்குள் தள்ளும் முயற்சியில்” ஜோர்டானும் எகிப்தும் அவ்வாறு கபளீகரம் பெற்ற இடங்களை இஸ்ரேலிடம் போரில் பறிகொடுத்தன.

    இப்போது பாலஸ்தீன ஆட்சி ஒரு மாதிரியாக நடக்கும் இடம் இஸ்ரேல் தந்தது, சக இசுலாமியரிடம் ஏமாந்த பாலஸ்தீனியர் இஸ்ரேலையே குறை சொன்னால் என்ன செய்வது?

    ஆக, யூதர்களுக்கும் அவர்களை இவ்வளவு ஆண்டுகளாகத் துன்புறுத்தி வந்திருப்பவர்களுக்கும் எதில் கருத்து வேறுபாடு? மற்றவர்கள் யூதர்கள் இறக்க வேண்டுமென்று விரும்புகின்றனர். அவர்கள் அவ்வாறு இறக்க விரும்பவில்லை.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  37. உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    தியாகு ஸார்..!

    //இதேபோல் இரு மாநில அதிரடிப் படைகள் வீரப்பன் கதையை முடித்ததையும், மாவோயிஸ்ட்டுகளை வேட்டையாடி அழிப்பதையும் நம்மால் ரசிக்க முடிந்ததா..?//

    என்ன கொடுமை சரவணன்!!!

    இதில என்ன பிரச்சனை உங்களுக்கு ! வீரப்பன் என்ன தியாகியா ? அவன் அழித்த யானைகளுக்கும் இயற்கை வளத்துக்கும் இது தணடனையே அல்ல.

    இந்திய தேசத்தின் சாபக் கேடு என்னவென்றால் நடுநிலையாக இருப்பவர்கள் கூட அயோக்கிய பயல்களுக்கும் ஆயுதமேந்தி அட்டுழியம் பண்ணுவர்களுக்கும் அவர்கள் பக்கம் எதோ ஞாயம் இருப்பது போல் பரிதாபப்படுவது தான் !!

    தீவரவாதத்துக்கு அனுசரனையாய் கருத்து சொல்வதும் கூட மறைமுகமாய் அவர்களுக்கு செய்யும் உதவியே

    ReplyDelete
  38. மனித சமுதாயத்தில் அதிகம் பேரைக் கொன்றவர்களும் யூதர்கள்தாம், அதிகமாகக் கொல்லப்பட்டதும் அவர்கள்தாம். இவர்கள்தாம் இவ்வுலகப் படத்தின் மெயின் 'வில்லன்'. கிளைமாக்ஸில் ஈஸா(இயேசு) நபியின் வருகையின் போது அனைவரும் கொல்லப் படுவார்கள் (அடிவருடிகளும்தான்).

    அதுவரை இவர்களின் ஆட்டம் நன்றாகவே செல்லும். இன்னும் நிறைய குழப்பங்கள் ஏற்படும். இது இறைவனின் கற்பனை. அவன் சொன்னது படியே நடந்து கொண்டிருக்கிறது. நம்பினால் நம்புங்கள் :).

    ReplyDelete
  39. உ.த அண்ணே,

    நீங்கள் கேட்ட கேள்விக்கு டோண்டு ஒரு பதிலைச் சொல்லியுள்ளார்.

    ஆனாலும், இந்த தனி நாடு விசயத்தைப்பற்றி என் பழைய பதிவைப் கொஞ்சம் படித்துப்பாருங்கள்.

    http://sankarmanicka.blogspot.com/2006/05/5.html

    ReplyDelete
  40. [[[அன்னு said...

    பழைய செய்தியாக‌ இருந்தாலும், அதை அழகாக தமிழாக்கப்படுத்தி எழுதியமைக்கும், கூடவே மற்ற லின்க் தந்ததற்கும் மிக்க நன்றி.

    இன்னும் நிறைய நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். உலகம் பார்க்கத்தானே போகிறது அவர்களின் சுயரூபத்தை..!!]]]

    ஈழத் தமிழர்களோடு யூதர்களை ஒப்பிட முடியாது..! பாலஸ்தீன மக்களை மட்டும்தான் ஒப்பிட முடியும்..!

    ReplyDelete
  41. மேலே சுட்டப்பட்டுள்ள வஜ்ராவின் பதிவில் நான் இட்ட பின்னூட்டம் இதோ:


    பாலஸ்தீனிய மற்றும் அரபுத் தலைவர்கள் ஹிட்லருக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். 60 லட்சம் பேர் இறந்ததும் அவர்களைப் பாதிக்கவில்லை. அத்தனை பேரும் இறக்கவில்லையே என்றுதான் வருந்தினர்.

    1948 மற்றும் 1967-ல் ஹிட்லர் செய்யாமல் விட்டதைத் தாங்கள் செய்யப் போவதாக மார் தட்டினர்.

    1967 யுத்தத்துக்கு முன்னால் பல யூதர்கள் உலகெங்கிலும் இருந்த இஸ்ரேலியத் தூதரகங்களுக்கு வந்து, "60 லட்சம் பேரை இழந்த எங்களால் இப்போது இஸ்ரேலையும் இழக்க முடியாது, நாங்களும் உங்களுடன் வந்து சண்டையிட்டு இறக்கிறோம்" என்று கூற, இஸ்ரவேலர்களோ, "சாவதற்கு வேறு ஆளைப் பாருங்கள், நாங்கள் வாழப் பிறந்தவர்கள்" என்று பதிலளித்தனர். சுற்றிலும் வந்து தாக்கிய அரேபியரை ஓட ஓட விரட்டினர். இது யூத சரித்திரத்தில் அவர்தம் பழைய ஏற்பாடுகளில் வரும் யுத்தக் காட்சிகளுக்கு எவ்வகையிலும் குறைந்தது அல்ல.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  42. டோண்டு ஸார்..!

    பிரச்சினை ஜெருசலமையே சுற்றிச் சுற்றி வருகிறது.. மூன்று மதங்களுக்கும் உரித்தான அந்த இடத்தை வாடிகனைப் போல பொதுவாக்கிவிட்டு இரு புறத்தையும் முறையே யூதர்களுக்கும், பாலஸ்தீன மக்களுக்குமாக பிரித்துக் கொடுத்திருக்கலாம்..!

    நாடில்லையே என்பதற்காக தங்குவதற்காக வந்தவர்கள் அங்கே இருந்தவர்களின் ஏழ்மையை பயன்படுத்தி தங்களுக்கான நிலமாக அதனை ஆக்கிக் கொண்ட வரலாறுதானே யூதர்களின் படையெடுப்பு..!

    ReplyDelete
  43. [[[ரிஷபன்Meena said...

    இதில என்ன பிரச்சனை உங்களுக்கு ! வீரப்பன் என்ன தியாகியா? அவன் அழித்த யானைகளுக்கும் இயற்கை வளத்துக்கும் இது தணடனையே அல்ல.]]]

    அவனை அறியாமையை பயன்படுத்தி வளர்த்தது அதிகாரிகளும், ஆளும் அரசியல் வர்க்கமும்தான். அவர்களை உங்களால் தண்டிக்க முடிந்ததா?

    வீரப்பனை வேட்டையாடுகிறோம் என்ற பெயரில் கணவன், பிள்ளைகள் முன்பாகவே கொடூரமாக மலைவாழ் பெண்களைக் கற்பழித்து சூறையாடினார்களே நமது காவலர் திலகங்கள்.. இவர்களுக்கு என்ன தண்டனை கிடைத்தது? இங்கே நானாக இருந்திருந்தாலும் துப்பாக்கியைத்தான் தூக்கியிருப்பேன்..!

    ReplyDelete
  44. [[[அரபுத்தமிழன் said...

    மனித சமுதாயத்தில் அதிகம் பேரைக் கொன்றவர்களும் யூதர்கள்தாம், அதிகமாகக் கொல்லப்பட்டதும் அவர்கள்தாம். இவர்கள்தாம் இவ்வுலகப் படத்தின் மெயின் 'வில்லன்'. கிளைமாக்ஸில் ஈஸா(இயேசு) நபியின் வருகையின் போது அனைவரும் கொல்லப்படுவார்கள் (அடிவருடிகளும்தான்).

    அதுவரை இவர்களின் ஆட்டம் நன்றாகவே செல்லும். இன்னும் நிறைய குழப்பங்கள் ஏற்படும். இது இறைவனின் கற்பனை. அவன் சொன்னதுபடியே நடந்து கொண்டிருக்கிறது. நம்பினால் நம்புங்கள்:)]]]

    நான் நம்புகிறேன். வேறு வழியில்லை. நன்மைக்கும், உண்மைக்கும், நீதிக்கும், நேர்மைக்கும், நியாயத்திற்கும் இங்கே மதிப்பில்லையே என்னும்போது இதைத்தான் நம்ப வேண்டியிருக்கிறது. வேறு வழியில்லை..!

    ReplyDelete
  45. [[[வஜ்ரா said...

    உ.த அண்ணே,]]]

    உங்களுக்கும் நான் அண்ணனா..? நிசமாவா?

    [[[நீங்கள் கேட்ட கேள்விக்கு டோண்டு ஒரு பதிலைச் சொல்லியுள்ளார். ஆனாலும், இந்த தனி நாடு விசயத்தைப் பற்றி என் பழைய பதிவைப் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.
    http://sankarmanicka.blogspot.com/2006/05/5.html]]]

    படித்தேன்.. தாங்கள் ஐரோப்பியர்களால் கொன்றொழிக்கப்பட்டதற்கு பழிக்குப் பழியாக இஸ்ரேல் உருவான பிறகு அவர்கள் அழித்த பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும் என்று கருதுகிறீர்கள்..?

    பழிக்குப் பழி என்றால் தொடரத்தான் செய்யும்..! இப்போது விட்டுக் கொடுப்பது இஸ்ரேலின் கைகளில்தான் உள்ளது.

    ReplyDelete
  46. டோண்டு ஸார்..

    ஹிட்லர் தங்களுக்குச் செய்த கொடுமைகளைத்தான் இப்போது பதிலுக்கு பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரவேலர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்..!

    ReplyDelete
  47. //சிரியா, எகிப்து, ஜோர்டன் அரசாங்கத்தால் அகதிகளாகக் வதைபட்டு கொல்லப்பட்டுவரும் பாலஸ்தீனர்களைவிட இஸ்ரேல் கம்மியாகத் தான் பாலஸ்தீனர்களைக் கொன்றிருக்கும்.//

    ஜூல 31, 1971. ஜோர்டான் நதியின் இக்கரையில் காவல் காத்துக் கொண்டிருந்த இஸ்ரவேலர்களுக்குத் தங்கள் கண்களை நம்பவே இயலவில்லை. என்ன நடந்தது? ஜோர்டான் பக்கக் கரையிலிருந்து சிலரை ஜோர்டான் படையினரைத் துரத்தி வந்தனர். யார் அந்தச் சிலர்? அவர்கள் பாலஸ்தீனியத் தீவிரவாதிகள். துரத்தப்பட்டவர்கள் நேராக ஜோர்டான் நதிக் கரையில் குதித்து இஸ்ரேல் தரப்பை நோக்கி நீந்த ஆரம்பித்தனர். இக்கரைக்கு வந்து இஸ்ரவேலர்களிடம் தஞ்சம் புகுந்தனர். பிறகு பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளிக்கும் போது அவர்கள் கூறினார்கள்: "இஸ்ரவேலர்கள் எங்களைக் கைதுதான் செய்வார்கள். ஆனால் ஜோர்தானியர்கள் கொன்று விடுவார்கள்" இந்த விஷ்யத்தில் பாலஸ்தீனியத் தலைமை மிகவும் அவமானப்பட்டது. இந்தச் செய்தி இங்கும் சகவலைப்பதிவாளர்கள் பலருக்குப் புதிதாக இருக்கும்.

    1976-ல் என்டெப்பெயில் நடந்ததையும் எழுதியுள்ளேன். நம் அரசாங்கம் உட்படப் பலர் நடந்துக் கொண்டது ஒன்றும் சொல்லிக் கொள்கிற மாதிரியில்லை. அதே மாதிரி நம் விமானம் ஆப்கானிஸ்தானுக்குக் கடத்தப்பட்டப்போது நாம் என்ன செய்தோம்? மேற்கொண்டு ஒப்பிட எனக்கு மனதில்லை.

    1982-ல் பாலஸ்தீனியர் லெபனானைத் தங்கள் முட்டியின் கீழ் வைத்திருந்தனர். அங்கு அரசாங்கம் இருக்கிறதா என்றச் சந்தேகம் பலருக்கு. புதிதாகப் பதவியேற்ற ஜனாதிபதி பாலஸ்தீனியர்களால் கொல்லப்பட்டார். அப்போது இஸ்ரவேலர்கள் பாலஸ்தீனியரின் முகாம்களைத் தாக்கினர். அவர்களுக்கு லெபனான் ரகசிய உதவி செய்தது. கொல்லப்பட்டவரின் தம்பி புதிய ஜனாதிபதி. அவ்வளவு அலுத்துப் போயிருந்தனர் அவர்கள் பாலஸ்தீனியரின் அட்டூழியங்களால். லெபனானின் பெரும் பகுதியில் இஸ்ரவேலர்கள். பாலஸ்தீனியரை என்ன செய்வது? அவர்களை ஏற்றுக் கொள்ள எந்த அரபு தேசமும் தயாராக இல்லை. அப்போது இன்னொரு அதிசயம் நடந்தது. அவர்களை ஏற்றுக் கொள்ளத் தயார் என்று கூறினார் இஸ்ரேலியப் பிரதமர் மெனாசெம் பெகின். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை. அவர்கள் இஸ்ரேலை எதிர்த்துப் போராடுவதை விட வேண்டும். இப்போது கூட இரு பாலரும் ஒத்துழைக்கலாம். வேறு வழியில்லாது அரபு தேசங்கள் பாலஸ்தீனியரை ஏற்றுக் கொள்ள முன் வந்தன.

    சடில்லா முகாமைப் பற்றி. இஸ்ரவேலர்களுக்கு அதில் மறைமுகப் பங்கு இருந்தது என்று வெளிப்படுத்தியதே இஸ்ரேலியப் பத்திரிகைகள்தான். அதற்கானப் பொறுப்பை அவர்கள் சுமந்தே ஆக வேண்டும். ஆனால் ஒருவரும் அந்தப் படுகொலைகளுக்கு நேரடிப் பொறுப்புள்ளவரான லெபனானியரைக் கண்டிக்கவேயில்லை. அதுதான் உலகம். 1982-ல் இதையெல்லாம் குறித்து நான் ஹிந்துஸ்தான் டைம்ஸில் ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அது அப்படியே ஒரு திருத்தமுமில்லாது வெளியாயிற்று என் முழு முகவரியுடன். அது சம்பந்தமாக எனக்கு வந்தக் கடிதங்கள் எல்லாமே ஆதரவுக் கடிதங்கள்தான். இப்போதும் எனக்கு மின்னஞ்சலில் ஆதரவுக்கடிதங்கள்தான் வருகின்றன. வெளிப்படையாக எழுதத் தயங்குகின்றனர். அவர்கள் தயக்கம் எனக்குப் புரிகிறது. எனக்கு எவ்விதத் தயக்கமும் இல்லை.

    அராஃபாத்துக்கு சமாதானப் பரிசு கொடுக்கப்பட்டதைப் பறைசாற்றுபவர்கள் கூடவே இஸ்ரேலியப் பிரதமருக்கும் வெளி உறவு மந்திரிக்கும் அதே பரிசு கொடுக்கப்பட்டதை சௌகரியமாக மறைத்து விடுகின்றனர்.

    இன்னொன்றையும் கூறுவேன், உண்மைத் தமிழன். பாலஸ்தீனர்களௌக்கு விட்டுக் கொடுக்கும் நிலையில் இஸ்ரேல் இல்லை. விட்டுக் கொடுத்தால் அந்த நாதாரிகள் அதை பலவீனமாகத்தான் பார்ப்பார்கள். மேலும் பாலஸ்தீனிய கொலையாளிகள் இஸ்ரேலை அழிப்பதுதான் தங்கள் நோக்கம் என்பதிலிருந்து பின்வாங்கவே இல்லை. அப்புறம் ஏன் இஸ்ரேல் விட்டுக் கொடுக்கணும்?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  48. [[[ரெண்டு வருசம் இஸ்ரேலில் வாழ்ந்த அனுபவத்தில் சொல்கிறேன். பாலஸ்தீனர்கள் பாலஸ்தீன் அத்தாரிட்டி பகுதியில் இருப்பதைவிட சுதந்திரமாகவும் சந்தோசமாகவும் இஸ்ரேல் பகுதியில் வாழ முடிகிறது.
    இஸ்ரேல் பாலஸ்தீனப் பொதுமக்கள் மீதெல்லாம் போய் துப்பக்கிச் சூடு நடத்துவதில்லை.]]]

    வஜ்ரா ஸார்.. காமெடி செய்யாதீர்கள்.. உங்களுக்கெல்லாம் மனித உயிர்கள் எள்ளூக்கிரை போல் தென்படுகின்றன. அதனால்தான் இப்படியெல்லாம் பேச முடிகிறது.

    பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினர் மனித வெடிகுண்டாக மாறி பேருந்தில் ஏறி அப்பாவி இஸ்ரேலியர்களைக் கொன்றார்கள். இஸ்ரேல் ராணுவம் பதிலுக்குப் பதிலாக காசா மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தி அவர்களைக் கொன்றது..

    இதையெல்லாம் பார்க்காமல், படிக்காமலா நாங்கள் இங்கே வந்திருக்கிறோம்..!? விடுங்க ஸார்.. உங்களுடைய இஸ்ரேலிய ஆதரவை வெளிப்படையாகத் தெரிவித்தமைக்கு நன்றிகள்..

    ReplyDelete
  49. டோண்டு ஸார்.. பாலஸ்தீன மக்களுக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து அவர்களுடன் இணக்கமாகப் போயிருந்தால் அவர்கள் இப்படி பக்கத்து நாடுகளுடன் அல்லாட வேண்டிய தேவையிருந்திருக்காது..

    நாங்கள் மட்டுமா கொலை செய்தோம்.. அவர்களது சமூகத்தினரும்தான் கொலை செய்தார்கள் என்கிற உங்கள் வாதத்திறமையை எதிர்பார்த்ததுதான்..

    விடுங்க.. நல்லாயிருங்க..! எத்தனை நாள் இந்தக் கொடூரம்னு பார்த்திருவோம்..!?

    ReplyDelete
  50. [[[குடுகுடுப்பை said...
    நானும் ஒரு பதிவு போட்டிருக்கேன் உண்மையாரே பாருங்க.]]]

    நன்றிங்கண்ணா.. அப்படியே லின்க்கை கொடுத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்..!

    ReplyDelete
  51. அண்ணே : வீடியோ பாத்து அசந்து விட்டேன்.......... ப்ப்பிளான் பண்ணி
    பண்ணுறதுனா இதுதான் போல..........

    ReplyDelete
  52. என் இஸ்ரேல் ஆதரவு என்பது நான் மறைக்கவேண்டிய அவசியன் எதுவும் இல்லை.

    நீங்கள் கொஞ்சம் ஓவராகவே டென்சன் ஆகிறீர்கள். இஸ்ரேல் பாலஸ்தீன் பிரச்சனை இப்படி ஒரு பதிவு போட்டு புரிந்துகொள்ளும் அளவுக்கு சிம்பிள் விசயம் அல்ல.

    1940 களிலிருந்து பார்க்கவேண்டிய விஷயம்.

    டோண்டு சொல்லியது போல் தனிநாடு அமைக்க அனைத்து ஏற்பாடுகளும் இருந்த வேளையில் சுற்றியிருக்கும் அரபு தேசத்து பொய்யுரைகளை நம்பி ஏமாந்தவர்கள் பாலஸ்தீனர்கள். பின்னர் லெபனானில், ஜோர்டனில், எகிப்தில் என்று சென்ற இடத்தில் எல்லாம் செருப்படி வாங்கிக்கொண்டு இருபப்வர்களும் அவர்களே.

    அவர்களுடைய நிலைக்கு அவர்கள் கொஞ்சமும் பொறுப்பு ஏற்றுக்கொள்ளாமல் இஸ்ரேலை மட்டுமே குறை கூறுவது ஒரு பொலிடிக்கல் ஸ்டண்ட்.

    அதை அவர்களே சீரியசா நம்புறாங்களோ இல்லையோ, நம்மாட்கள் ஏகத்துக்கு நம்பி ஏமாறுகிறார்கள்.

    ReplyDelete
  53. //டோண்டு ஸார்.. பாலஸ்தீன மக்களுக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து அவர்களுடன் இணக்கமாகப் போயிருந்தால் அவர்கள் இப்படி பக்கத்து நாடுகளுடன் அல்லாட வேண்டிய தேவையிருந்திருக்காது.//
    பாலஸ்தீன மக்களுக்கு கொடுக்க வேண்டியதை 1948-ல் ஐ.நா. பொதுச்சபை மூன்றில் இரண்டு பெரும்பான்மையில் கொடுத்ததைத்தான் கூறினேனே.

    அதை கப்ளீகரம் செய்த ஜோர்டானும் எகிப்தும் பாலஸ்தீனியரிடம் அதை ஒப்படைக்க 1948-லிருந்து, 1967 வரை கிட்டத்தட்ட 19 வருஷங்கள் அவகாசம் இருந்தது.

    அதை பாலஸ்தீனியர்களே கூட கேட்கவில்லை. 1967, 1973 மற்றும் 1982 போர் நடவடிக்கைகள் இப்போது யதார்த்த நிலையையே மாற்றி விட்டன.

    இன்னும் பாலஸ்தீனியர் இஸ்ரேல் அழிய வேண்டும் என்றே பேசி வருகின்றனர்.

    இந்த நிலையில் அந்த நிலப்பகுதிகளை திரும்பத் தருவது இஸ்ரேல் தற்கொலை செய்து கொள்வதற்கு சமம். டோண்டு ராகவன் அதை கடுமையாக எதிர்ப்பான்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  54. [[[வழிப்போக்கன் - யோகேஷ் said...
    அண்ணே : வீடியோ பாத்து அசந்துவிட்டேன். ப்ப்பிளான் பண்ணி
    பண்ணுறதுனா இதுதான் போல.]]]

    பக்கா பிளானிங்ன்றது இதுதான்..!

    ReplyDelete
  55. வஜ்ரா ஸார்..

    நீங்கள் சொல்வது எப்படியிருக்கிறது என்றால், தண்டகாரண்ய பகுதி மக்களுக்கு அரசு அத்தனை வசதி வாய்ப்புகளையும் கொடுத்து வாழச் சொல்லியும் அவர்கள்தான் முட்டாள்தனமாக மாவோயிஸ்ட்டுகளுக்கு ஆதரவு அளித்து தங்களது வாழ்க்கையைத் தொலைத்துக் கொள்கிறார்கள் என்பது போலத்தான் இருக்கிறது..

    உங்களைப் போன்ற அனைத்து ஆதரவாளர்களும் இதைத்தான் சொல்கிறார்கள். உங்களுக்கு நிச்சயமாக இந்த மக்களின் வலியெல்லாம் புரியாது..!

    ReplyDelete
  56. இஸ்ரேல்.. தனது அதீத சக்திகளைப் பயன்படுத்தி பாலஸ்தீன மக்களைக் கொன்றொழித்ததற்கு அந்த நாடு அழிந்தால்கூட நிச்சயம் நான் சந்தோஷப்படுவேன் சிங்கள அரசைப் போலவே..!

    ReplyDelete
  57. //இஸ்ரேல்.. தனது அதீத சக்திகளைப் பயன்படுத்தி பாலஸ்தீன மக்களைக் கொன்றொழித்ததற்கு அந்த நாடு அழிந்தால்கூட நிச்சயம் நான் சந்தோஷப்படுவேன் சிங்கள அரசைப் போலவே..!//
    ஹி..ஹி ரொம்ப கிச்சு கிச்சு மூட்றீங்களே. அங்கே இருப்பது இந்திய ஆளும் வர்க்கமல்ல. அப்படி அழிந்து போவதற்கு. அங்கே ஓட்டு பொறுக்கும் வேலையில்லை. யூதர்கள் ஆரேபியர்கள் ஓட்டை வாங்குவதற்கு அங்கே மதசார்பின்மை பேசி நாட்டை அழிக்க அங்கே யாருமில்லை. வேண்டுமானால் இந்தியா அழியலாம் இந்த ஓட்டு பொறுக்கிகளால்.

    ReplyDelete
  58. உண்மை தமிழன்,

    //
    நீங்கள் சொல்வது எப்படியிருக்கிறது என்றால், தண்டகாரண்ய பகுதி மக்களுக்கு அரசு அத்தனை வசதி வாய்ப்புகளையும் கொடுத்து வாழச் சொல்லியும் அவர்கள்தான் முட்டாள்தனமாக மாவோயிஸ்ட்டுகளுக்கு ஆதரவு அளித்து தங்களது வாழ்க்கையைத் தொலைத்துக் கொள்கிறார்கள் என்பது போலத்தான் இருக்கிறது..
    //

    மாவோயிஸ்டுகளுக்கு மக்கள் ஆதரவு இல்லவே இல்லை. முட்டாள்தனமாக "உனக்காக நான் போராடுகிறேன்" என்று சொல்லும் ஃபுல்டைம் போராளிகளுக்கு பணம் கொடுக்கும் இனம் அழிந்து தான் போகும்.

    நான் சொல்லவந்த விசயம் அதுவல்ல.

    பாலஸ்தீனர்கள் இஸ்ரேலை அழித்தே பாலஸ்தீனத்தை நிறுவ எண்ணுவது முட்டாள் தனம். அந்த முட்டாள் தனத்தைத் தான் அவர்கள் 1940 களிலிருந்து செய்துகொண்டிருக்கிறார்கள்.

    அதை பெரும்பான்மைப் பாலஸ்தீனர்கள் நம்பிச் செய்கிறார்களா என்றால் இல்லை என்றே சொல்லுவேன். தலைவர்கள் அப்படிச் சொன்னால் தான் அவன் உண்மையான "பாலஸ்தீன் காரன்" என்பது போன்ற மாய உலகில் அவர்கள் வாழ்கிறார்கள்.

    நம்மூரில் குல்லா போட்டு நோம்புக் கஞ்சி குடித்துவிட்டு இந்து என்றால் திருடன் என்று சொன்னால் தானே "செக்குலர் செம்மல்" பட்டம் கிடைக்கும். அது மாதிரி.

    ஆகவே, உண்மை தமிழன் அவர்களே, இஸ்ரேலை அழித்துப் பாலஸ்தீன் அமையும் போன்ற அதீத கற்பனைகள் பாலஸ்தீன் பொதுஜனமே நம்புறதில்லை. இந்தக் கற்பனையை கட்டிக்காக்க எழுப்பப்படும் யூத வெறுப்பை, இஸ்ரேல் எதிர்ப்பை இந்தியர்கள் நாம் நம்பத்தேவையில்லை.

    நம் தேசிய நலன் எதில் உள்ளது, இஸ்ரேலை ஆதரிப்பதில் தான். ஆகவே என் ஆதரவு இஸ்ரேலுக்குத் தான்.

    பாலஸ்தீனத்தில் திடீர் என்று எண்ணைக்கிணறு முளைத்து அவர்கள் இந்தியர்களுக்கு பீப்பாய்க்கு 50$ தள்ளுபடி விலையில் விற்றால் நாம் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவு வழங்க இப்படியெல்லாம் பொலிடிக்கல் ஸ்டண்ட் அடிக்கலாம். அதுவரை இந்த பாலஸ்தீன் ஆதரவு எல்லாம் நமக்குத் தேவையில்லை.

    ReplyDelete
  59. நான் ரொம்ப சின்னப் பையன்.. அய்யா என்ற பெரிய, பெரிய வார்த்தையெல்லாம் வேண்டாம்..!

    இணையத் தொடர்பு இன்று காப்பாற்றி முழுமையாக பார்க்க வைத்தது. எம்மாம் பெரிய விசயத்தை எத்துனை எளிமையாக கொடுத்து விட்டு ச்சின்னப் பையனாம் சின்ன பையன்.

    நம்ப மாட்டேன்.

    ReplyDelete
  60. "6 day war" பற்றி சிலர் சொல்லிறுக்காங்க...அதை பற்றி ஒரு டாக்குமெண்டரி வீடியோ பார்த்து பயங்கர ஆச்சரியம் பட்டதுண்டு ...ஆர்வம் உள்ளவர்கள் பார்க்கவும் ..பொறுமையா பாருங்க ..
    http://video.google.com/videoplay?docid=-576989110596011470#

    "targetted assasination" பெயர் பெற்றவர்கள் மொஸ்ஸாத் ....அருந்ததி ராய் சமீபத்தில் எலுதிய ஒரு கட்டுரையில்...இந்தியா இவர்களிடம் சிலரை அனுப்பி பயிற்சி பெறுகிறார்களாம்...அப்ப்டினு எலுதினார் ..யாரை கொல்ல என்பதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை


    "operation wrath of god" பற்றி நிராய படிததுண்டு ...நீங்கள் சொல்லுவது போல்.சி‌ஐ‌ஏ கூட இவர்களை நெருங்க முடியாது..சில விஷயங்களில்.

    ReplyDelete
  61. [[[ராஜரத்தினம் said...

    //இஸ்ரேல்.. தனது அதீத சக்திகளைப் பயன்படுத்தி பாலஸ்தீன மக்களைக் கொன்றொழித்ததற்கு அந்த நாடு அழிந்தால்கூட நிச்சயம் நான் சந்தோஷப்படுவேன் சிங்கள அரசைப் போலவே..!//

    ஹி.. ஹி ரொம்ப கிச்சு கிச்சு மூட்றீங்களே. அங்கே இருப்பது இந்திய ஆளும் வர்க்கமல்ல. அப்படி அழிந்து போவதற்கு. அங்கே ஓட்டு பொறுக்கும் வேலையில்லை. யூதர்கள் ஆரேபியர்கள் ஓட்டை வாங்குவதற்கு அங்கே மதசார்பின்மை பேசி நாட்டை அழிக்க அங்கே யாருமில்லை. வேண்டுமானால் இந்தியா அழியலாம் இந்த ஓட்டு பொறுக்கிகளால்.]]]

    சந்தோஷம்.. நாடு முழுவதும் அவர்களுடையதல்ல..! இதில் மதச்சார்பின்னை எங்கிருந்து வந்தது..? விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இஸ்ரவேலர்களுக்கு இல்லை என்பதால்தான் பிரச்சினை நீடிக்கிறது..!

    ReplyDelete
  62. [[[வஜ்ரா said...

    உண்மை தமிழன்,

    மாவோயிஸ்டுகளுக்கு மக்கள் ஆதரவு இல்லவே இல்லை. முட்டாள்தனமாக "உனக்காக நான் போராடுகிறேன்" என்று சொல்லும் ஃபுல்டைம் போராளிகளுக்கு பணம் கொடுக்கும் இனம் அழிந்துதான் போகும்.]]]

    மக்கள் ஆதரவு இல்லாமல் அவர்களால் இந்த அளவுக்கு வீரியமாக செயல்படவே முடியாது வஜ்ரா ஸார்..! அவர்களையும் பல பழங்குடி இனத்து மக்கள் ஆதரிக்கத்தான் செய்கிறார்கள்.

    நீங்கள் பாழாய்ப் போன இந்தியாவை விரும்புவதால் இஸ்ரேலை விரும்புகிறீர்கள் என்பதை நான் புரிந்து கொள்கிறேன்.

    கொலைகாரர்களுக்கு, கொலைகாரர்கள்தான் சப்போர்ட்டு செய்வார்கள்..!

    இதற்கு மேல் பேச ஒன்றுமில்லை..!

    ReplyDelete
  63. [[[ஜோதிஜி said...

    நான் ரொம்ப சின்னப் பையன்.. அய்யா என்ற பெரிய, பெரிய வார்த்தையெல்லாம் வேண்டாம்..!

    இணையத் தொடர்பு இன்று காப்பாற்றி முழுமையாக பார்க்க வைத்தது. எம்மாம் பெரிய விசயத்தை எத்துனை எளிமையாக கொடுத்து விட்டு ச்சின்னப் பையனாம் சின்ன பையன். நம்ப மாட்டேன்.]]]

    நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் நான் ரொம்பச் சின்னப் பையன்தான் ஸார்..!

    ReplyDelete
  64. [[[சாமுவேல் | Samuel said...

    "6 day war" பற்றி சிலர் சொல்லிறுக்காங்க. அதை பற்றி ஒரு டாக்குமெண்டரி வீடியோ பார்த்து பயங்கர ஆச்சரியம்பட்டதுண்டு. ஆர்வம் உள்ளவர்கள் பார்க்கவும்
    பொறுமையா பாருங்க.]]]

    தகவலுக்கு மிக்க நன்றிகள் ஸார்..!

    http://video.google.com/videoplay?docid=-576989110596011470#

    "targetted assasination" பெயர் பெற்றவர்கள் மொஸ்ஸாத். அருந்ததிராய் சமீபத்தில் எலுதிய ஒரு கட்டுரையில் இந்தியா இவர்களிடம் சிலரை அனுப்பி பயிற்சி பெறுகிறார்களாம் அப்ப்டினு எலுதினார். யாரை கொல்ல என்பதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

    "operation wrath of god" பற்றி நிராய படிததுண்டு. நீங்கள் சொல்லுவது போல். சி‌ஐ‌ஏ கூட இவர்களை நெருங்க முடியாது. சில விஷயங்களில்.]]]

    இதை சி.ஐ.ஏ. அதிகாரிகளே ஒத்துக் கொள்கிறார்களே.. பிறகென்ன..?

    ReplyDelete
  65. //சந்தோஷம்.. நாடு முழுவதும் அவர்களுடையதல்ல..! இதில் மதச்சார்பின்னை எங்கிருந்து வந்தது..?//

    ஹீ...ஹீ மறுபடியும் கிச்சு கிச்சா? இஸ்ரேல் வரலாறு தெரியுமா? அங்கே 26% மேல் அரேபியர்களும் கிறுத்துவர்களும்தான். அங்கே எப்போதும் கூட்டணி ஆட்சிதான். அங்கே ஆட்சியை பிடிக்க பாலஸ்தீன மக்களை ஆதரிக்கிறேன் என்று யாரும் கிளம்பவில்லை. இப்படி எழுத நிறைய இருக்கு. என்னால் அதெல்லாம் எழுத முடியாது. அதற்கெல்லாம் தனியாக jean வேணும்.

    ReplyDelete
  66. [[[ராஜரத்தினம் said...

    //சந்தோஷம்.. நாடு முழுவதும் அவர்களுடையதல்ல..! இதில் மதச்சார்பின்னை எங்கிருந்து வந்தது..?//

    ஹீ. ஹீ மறுபடியும் கிச்சு கிச்சா? இஸ்ரேல் வரலாறு தெரியுமா? அங்கே 26% மேல் அரேபியர்களும் கிறுத்துவர்களும்தான். அங்கே எப்போதும் கூட்டணி ஆட்சிதான். அங்கே ஆட்சியை பிடிக்க பாலஸ்தீன மக்களை ஆதரிக்கிறேன் என்று யாரும் கிளம்பவில்லை. இப்படி எழுத நிறைய இருக்கு. என்னால் அதெல்லாம் எழுத முடியாது. அதற்கெல்லாம் தனியாக jean வேணும்.]]]

    சரி.. அந்த ஜீன் உள்ளவர்களிடம் இனிமேற்கொண்டு பேசுங்கள் ராஜரத்தினம் ஸார்..!

    ReplyDelete
  67. அண்ணே..,
    இவனுங்க (மொசாத் ) கில்லாடி தான் ...,இவனுக்கு மேல ஒரு கில்லாடிக்கு கில்லாடி ஒருத்தன் இருக்கான் ...,அவன் பேரு KGB ரஷ்ய உளவு துறை ...,மொசாத் இப்படி CCTV ல மாட்டிகின்னு முழி பிதுங்குது ..,ஆனா KGB இப்படி எல்லாம் மாட்டிகாது ...,அவனுங்க ரேஞ்சு வேற வேற வேற ..,

    ReplyDelete
  68. பணங்காட்டு நரி,


    கே.ஜி.பி யே இப்ப இல்லை. ரசியாவின் தற்போதைய உளவுத்துறையின் பெயர் FSB. ஃபெடரல் செக்யூரிட்டி சர்வீஸ் ஆஃப் ரஷ்யன் ஃபெடரேஷன்.

    யாரிடம் காசு வாங்கிகிட்டு வேலை பாக்குறீங்களோ அவிங்க பெயர் கூடத் தெரியாமல் இருக்கீங்களே. இவ்வளவு நல்லவங்களா நீங்க ?

    ReplyDelete
  69. //// யாரிடம் காசு வாங்கிகிட்டு வேலை பாக்குறீங்களோ அவிங்க பெயர் கூடத் தெரியாமல் இருக்கீங்களே. இவ்வளவு நல்லவங்களா நீங்க ? ////

    என்ன ஒய் இப்படி பேசிட்டேள் ...,

    ஆமா கமெண்ட் போடுறதுக்கு காசு வாங்கிட்டு பேரு தெரியாம இருக்கிறதுக்கு ....,நான் சொன்னது KGB மட்டும் தான் ...,உங்களுக்கு FSB பத்தி என்ன தெரியும் சொல்லுங்க ஒய் தெரிஞ்சிக்கலாம் ..,

    ReplyDelete
  70. KGB வரலாறு தெரியமா வஜ்ரா ..,உங்களுக்கு ..,நான் என்ன சொல்ல வரேன் புரிஞ்சிக்காம ..,சும்மா எதுனா வந்து சொல்லிக்கிட்டு ....,ஆமா நீங்க ஏன் DONDO ப்ளோக்ல மட்டும் கமெண்ட் போடுறீங்க ..,சும்மா வெளில வந்து எங்க மாதிரி ஆளுகளுக்கு வந்து உங்க மாற்று கருத்தை வைங்க ..,

    ReplyDelete
  71. //// கே.ஜி.பி யே இப்ப இல்லை. ///

    அறிவு சார் உங்களுக்கு ...,keyboard வழியா ரொம்பி வழியுது பாருங்க ...,துடைச்சிட்டு கமெண்ட் போடுங்க ...,

    ReplyDelete
  72. //// யாரிடம் காசு வாங்கிகிட்டு வேலை பாக்குறீங்களோ அவிங்க பெயர் கூடத் தெரியாமல் இருக்கீங்களே ////

    உங்களுக்கு தெரியாதா சார் ...ச்சோ...,நீங்க யாரு கிட்ட காசு வாங்குறீங்க ...,அதை சொல்லுங்க ....,

    ReplyDelete
  73. @ வஜ்ரா ..,
    உங்களுக்கு CHEKA ,GPU,OGPU,NKGB,GKGB ,MGB ,KI ,அப்புறம் KGB இப்போ FSB ...,உங்களுக்கு CHEKA வை பத்தி தெரியுமா ,இல்ல GKGB பத்தியாச்சு எதுனா தெரியுமா ? இல்ல உங்களுக்கு பிரிட்டிஷ் உளவு அமைப்பான MI5 பத்தி எதுனா தெரியுமா ? நாங்கெல்லாம் வரலாற படிச்சிட்டு வந்து எழுதுறோம் ...,உங்களை மாதிரி விக்கிபீடியால இருந்து எடுத்து சொல்றவங்க இல்ல ...,

    ReplyDelete
  74. [[[வஜ்ரா said...

    பணங்காட்டு நரி,

    கே.ஜி.பி.யே இப்ப இல்லை. ரசியாவின் தற்போதைய உளவுத் துறையின் பெயர் FSB. ஃபெடரல் செக்யூரிட்டி சர்வீஸ் ஆஃப் ரஷ்யன் ஃபெடரேஷன்.]]]

    நன்றி.. இத்தோடு நிறுத்தியிருக்கலாம்..!

    [[[யாரிடம் காசு வாங்கிகிட்டு வேலை பாக்குறீங்களோ அவிங்க பெயர் கூடத் தெரியாமல் இருக்கீங்களே. இவ்வளவு நல்லவங்களா நீங்க?]]]

    இது அபாண்டமான, அவதூறான குற்றச்சாட்டு வஜ்ரா..! நாங்கள் உங்களையும், டோண்டுவையும் இப்படி ஒருபோதும் நினைக்கவில்லை. மாற்றுக் கருத்து வைத்திருக்கிறீர்கள் என்றுதான் நினைக்கிறேன். நீங்கள் ஏன் இப்படி..?

    ReplyDelete
  75. நரியண்ணே..!

    உணர்ச்சிவசப்படாதீங்க.. வஜ்ரா ஏதோ கோபத்துல எழுதியிருப்பாருன்னு நினைக்கிறேன். விட்ருங்க..!

    ReplyDelete
  76. வஐ்ரா ஒரு மொஸாத் இன்பார்மர். தமிழகத்தில் வசிக்கிறார். இஸ்ரேலுக்குப் போய் மூளைச்சலவை செய்யப்பட்டு தமிழகத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறார். இன்னொருவர் உள்ளார், அவர் பெயர் சிவா. அவர் முன்னம் கனடாவில் இருந்தார். இப்போது எங்குள்ளாரோ? ஆகையால் வஜ்ரா என்ற சின்னப் பையன் சொல்வதை பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அதே சமயம் அந்தப் பையனோடு ஜாக்கிரதையாகவே பழகுங்கள்.

    ReplyDelete
  77. //
    இது அபாண்டமான, அவதூறான குற்றச்சாட்டு வஜ்ரா..! நாங்கள் உங்களையும், டோண்டுவையும் இப்படி ஒருபோதும் நினைக்கவில்லை. மாற்றுக் கருத்து வைத்திருக்கிறீர்கள் என்றுதான் நினைக்கிறேன். நீங்கள் ஏன் இப்படி..?
    //

    நான் உங்களை ஒருபோதும் காசு வாங்கிட்டு நாட்டை விற்கும் கம்யூனிஸ்டாக எண்ணவில்லை.

    அது அந்த பதிவுலக மாமேதை என்று தன்னைத் தானே பரைசாற்றிக்கொண்டு கம்யூனிச ரேபிஸ் வந்து திரியும் நரிக்குச் சொன்னது.


    நான் பொதுவாகத் தான் சொன்னேன். ஆனா பாத்தீங்களா...5-6 பின்னூட்டம் போட்டு கோபம் வரும்போதே தெரியல்லையா...எது உண்மை என்று.

    போட்டு வாங்குறதுக்கு நான் என்ன பார்த்திபனா ? இல்லை நரி தான் வடிவேலுவா ? :D


    //
    உங்களை மாதிரி விக்கிபீடியால இருந்து எடுத்து சொல்றவங்க இல்ல
    //

    நீங்கள்ளாம் எதுக்குமா விக்கிபீடியாவைப் பாக்கப்போறீங்க. உங்களுக்கு தான் டைரக்டாக அவிங்களே பிரீஃபிங்க் பண்ணி அனுப்புறாங்களே...

    விக்கிபீடியா எல்லாம் எங்கள மாதிரி இந்தியாவையே நம்பிகிட்டு இருக்கும் வேற நாதியற்றவர்களுக்குத் தான். கே.ஜி.பி, எஃப்.எஸ்.பி, சேக்கா, சொக்க, பாண்டு, பனியன் ஜட்டி போன்றவர்களை நம்புபவர்களுக்கு அதெல்லாம் தேவையில்லை.

    --

    இதுல நரியின் சைடு கிக்குகள் வேறு வந்து சைடு கேப்பில் படகோட்டிவிட்டுப் போகிறார்கள்.

    அதில் என்னிடம் ஜாக்கிரதையாக வேறு இருக்கவேண்டுமாம். ஏன் ? ரசியா, சீனா விடம் காசு வாங்கிக்கிட்டு தமிழில் பலப் பலப் பத்திரிக்கைகளில், பதிவுலகில் எழுதிக் கொண்டிருக்கும் குட்டு வெளிப்பட்டுவிடும் எனபதற்கா ?

    உண்மைத் தமிழன், இப்படிப்பட்ட useful idiot களுடன் சேர்ந்து useless ஆகிவிடாதீர்கள். அவ்வளவு தான் சொல்லுவேன்.

    ReplyDelete
  78. ///// அது அந்த பதிவுலக மாமேதை என்று தன்னைத் தானே பரைசாற்றிக்கொண்டு கம்யூனிச ரேபிஸ் வந்து திரியும் நரிக்குச் சொன்னது. /////

    அட அறிவு ஜீவி சொம்பு தூக்கி வஜ்ரா ...,உன்னை எல்லாம் நினைச்சா தான் ரேபிஸ் வந்து சாக வேண்டியிருக்கும் ( குறிப்பு : ரேபிஸ் எது கடிச்சா வரும் தெரியும் நினைகிறேன் )...,நான் கம்யூனிஸ்ட்அ போய்யா போய் ...,புள்ள குட்டிங்கள படிக்கச் வைக்க வழிய பாரு ...,

    ReplyDelete
  79. உண்மை தமிழண்ணே ....,
    என்ன பேசினாலும் ஜாதி மத முலாம் பூசுறாரு வஜ்ரா ...,ஹா ஹா ஹா ஹா என்னோமோ போங்க ...,

    ReplyDelete
  80. வஜ்ரா, நரியண்ணனை நான் இதுவரை பார்த்ததே இல்லை. நான் அவனில்லை.
    குய்யோ முறையோன்னு கத்துரதை முதல்ல நிறுத்துங்க.

    கண்ணை மூடிக்கிட்டு ஒரு விஷயத்தை ஆதரிக்கிறதுன்னு நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படி ஆதரிக்கிற ஒரு ஆளா உங்கள மட்டும் தான் பார்க்க முடியுது. இடமாவோ வலமாவோ போ... ஆனா கடிக்காம போயிக்கிட்டே இரு.

    ReplyDelete
  81. [[[படகோட்டி said...
    வஐ்ரா ஒரு மொஸாத் இன்பார்மர். தமிழகத்தில் வசிக்கிறார். இஸ்ரேலுக்குப் போய் மூளைச்சலவை செய்யப்பட்டு தமிழகத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறார். இன்னொருவர் உள்ளார், அவர் பெயர் சிவா. அவர் முன்னம் கனடாவில் இருந்தார். இப்போது எங்குள்ளாரோ? ஆகையால் வஜ்ரா என்ற சின்னப் பையன் சொல்வதை பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அதே சமயம் அந்தப் பையனோடு ஜாக்கிரதையாகவே பழகுங்கள்.]]]

    அண்ணே..

    உங்களுக்கும் முன்னாடி வஜ்ராவும், கால்காரி சிவாவும்(அவரைத்தானே சொல்றீங்க) எனக்குப் பழக்கமானவர்கள்..

    வலையுலகத்திற்குள் சக பதிவர்களாக இருக்கும்போது இப்படி தேசத் துரோகி மாதிரியெல்லாம் சீன் போடக் கூடாது.. அது ரொம்பத் தப்பான விஷயம்..

    ஆதாரங்களைத் தேடவே முடியாத.. நடக்காத ஒரு விஷயத்தை இது போன்ற சீரியஸான மேட்டர்ல தயவு செய்து இனிமே எங்கேயுமே எழுதாதீங்க..!

    புண்ணியமாப் போகும்.. இங்கே நடப்பது கருத்துப் பரிமாற்றம்தான்.. எல்லா மனிதர்களுக்கும் அவரவர் கருத்தை முன் வைக்க உரிமை உண்டு..!

    ReplyDelete
  82. வஜ்ரா விடுங்க..

    கருத்துக்கு மாற்றுக் கருத்து சொல்லியாச்சு.. ஆனால் வார்த்தைகளை மட்டும் கவனமாகக் கையாளுங்கள்.. அதில்தான் சிறிது பிசகு செய்கிறீர்கள்..!

    ReplyDelete
  83. நரியண்ணே..

    நமக்குள்ள எதுக்கு இது..? கருத்தோட நிறுத்திக்காம ஏன் தனிப்பட்ட தாக்குதலுக்குள் இறங்குறீங்க..?

    திட்டுறதா இருந்தா நீங்க ரெண்டு பேரும் என்னைத்தான் திட்டணும். பதிவு போட்டதே நான்தான். ஆனா இப்படி நீங்க ரெண்டு பேருமே தாக்கிக் கொள்வது அபத்தமானது..!

    ReplyDelete
  84. படகோட்டி ஸார்..

    வந்ததுக்கும் நன்றி.. கருத்துக்கும் நன்றி..!

    நாய், பேய்ன்னு சொல்ற அளவுக்கு இங்க ஒண்ணுமே நடக்கலை. எழுதலை..!

    பிறகு ஏன் அந்த உச்சரிப்பு..!?

    ReplyDelete
  85. அண்ணே ...,
    நான் இதுவரைக்கும் யாரையும் தர குறைவா பேசுனதில்லை ...,எல்லாரையும் மதிப்பவன் ..,அவர் தான் முதலில் தனிப்பட்ட முறையில் தாக்கினார் ..,அதனால் தான் வேற வழி இல்லாமல் அந்த பின்னூட்டம் இட்டேன் ...எந்த கருத்தை சொன்னாலும் அதற்க்கு ஜாதி முலாம் பூசுவது எந்த வகை நியாயம் ,மேலும் நான் இட்ட பின்னூட்டம் பிடிக்கவில்லை என்றல் தயவு செய்து நீக்கி விடுங்கள் ..,எல்லாவற்றையும் முன்முடிவோடு இந்த மாதிரி கருத்தை சொன்னால் அவன் கம்யூனிஸ்ட் ...,என்னமோ போங்க தமிழண்ணே

    ReplyDelete
  86. [[[பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...
    அண்ணே, நான் இதுவரைக்கும் யாரையும் தர குறைவா பேசுனதில்லை. எல்லாரையும் மதிப்பவன். அவர்தான் முதலில் தனிப்பட்ட முறையில் தாக்கினார். அதனால்தான் வேற வழி இல்லாமல் அந்த பின்னூட்டம் இட்டேன். எந்த கருத்தை சொன்னாலும் அதற்க்கு ஜாதி முலாம் பூசுவது எந்த வகை நியாயம்? மேலும் நான் இட்ட பின்னூட்டம் பிடிக்கவில்லை என்றல் தயவு செய்து நீக்கி விடுங்கள். எல்லாவற்றையும் முன்முடிவோடு இந்த மாதிரி கருத்தை சொன்னால் அவன் கம்யூனிஸ்ட். என்னமோ போங்க தமிழண்ணே...]]]

    நரியண்ணே.. நான் எதையும் நீக்கப் போவதில்லை. இருந்துவிட்டுப் போகட்டும்..! கம்யூனிஸ்ட்டாக இருப்பது என்ன மாபெரும் குற்றமா..? நாம் நமது கருத்தைச் சொல்லிக் கொண்டேயிருப்போம். எதிர் கருத்து நாகரிகமாக, நயமாக, நேர்மையாக இருந்தால் பதில் சொல்வோம். இல்லையெனில் குப்பையென வீசிவிட்டுச் செல்வோம்.. அவ்ளோதான்..!

    ReplyDelete
  87. HI DEAR UT,

    THIS IS A GOOD ARTICLE AND WE EXPECT THE SAME KIND OF ARTICLES FROM YOU. HOPE THAT THIS EXCELLENT ATTEMPT WILL EXTEND FURTHER IN FUTURE.

    AMARNATH SANTH.

    ABU DHABI

    ReplyDelete
  88. [[[amarmuamar said...

    HI DEAR UT,

    THIS IS A GOOD ARTICLE AND WE EXPECT THE SAME KIND OF ARTICLES FROM YOU. HOPE THAT THIS EXCELLENT ATTEMPT WILL EXTEND FURTHER IN FUTURE.

    AMARNATH SANTH.

    மிக்க நன்றி நண்பரே.. உங்களை மாதிரியான நண்பர்கள் இருக்கின்றவரையில் எனக்கென்ன கவலை..?

    ABU DHABI]]]

    ReplyDelete
  89. பாலஸ்தீனியர்களைப் பகடைக் காயாகப் பயன்படுத்துவது அரபு நாடுகள். காஷ்மீரை மீட்கிறேன் என்று சொல்லிவிட்டு சோறு கூட இல்லாமல் பாகிஸ்தானிய குடிமக்களை அந்த நாட்டுத்தலைவர்கள் வைத்திருக்கவில்லையா? அது போல.
    ஒரு பாலஸ்தீனியப் பெண் மகாராணியாக பவனிவரும் ஜோர்டன் பாலஸ்தீனியர்களுக்காக lip service கூட அதிகம் செய்வதில்லை.

    இரான் அணு சக்தியை "எத்தைச் செய்தாவது" ஒழித்துவிடுமாறு அமெரிக்காவிடம் கெஞ்சுவது இஸ்ரேல் அல்ல. சவூதி அரேபியாவும், பஹ்ரைனும் இன்ன பிற அரபு நாடுகளுமே. அஞ்சுவது இஸ்ரேல் அல்ல என்பது wikileaks மூலம் இப்போது தெளிவாகிறது.

    மேலும் இரானியர்கள் அராபியர்களாக என்றும் ஏற்றுக் கொள்ளப்பட்டதில்லை. அவர்களை ஆரியர்கள் என்று தள்ளி நிறுத்தியுள்ளது அரபு உலகம். மொழி உள்ளிட்ட பல வேறுபாடுகள். சக அராபியனைப் பிறர் திட்டினால் கோபப்படும் அரபுத் தலைவர்கள் இரானியர்களை யார் திட்டினாலும் ரசிப்பர்.

    இஸ்ரேலியச் சிங்கங்களுக்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே அடைக்கலம் கொடுத்துச் சிறப்பித்த பாரத மண்ணின் மைந்தன் என்பதில் நான் இறும்பூது எய்துகிறேன்.

    ReplyDelete
  90. [[[Arun Ambie said...

    பாலஸ்தீனியர்களைப் பகடைக்காயாகப் பயன்படுத்துவது அரபு நாடுகள். காஷ்மீரை மீட்கிறேன் என்று சொல்லிவிட்டு சோறு கூட இல்லாமல் பாகிஸ்தானிய குடிமக்களை அந்த நாட்டுத் தலைவர்கள் வைத்திருக்கவில்லையா? அது போல.

    ஒரு பாலஸ்தீனியப் பெண் மகாராணியாக பவனி வரும் ஜோர்டன் பாலஸ்தீனியர்களுக்காக lip serviceகூட அதிகம் செய்வதில்லை.

    இரான் அணு சக்தியை "எதைச் செய்தாவது" ஒழித்து விடுமாறு அமெரிக்காவிடம் கெஞ்சுவது இஸ்ரேல் அல்ல. சவூதி அரேபியாவும், பஹ்ரைனும் இன்ன பிற அரபு நாடுகளுமே.

    அஞ்சுவது இஸ்ரேல் அல்ல என்பது wikileaks மூலம் இப்போது தெளிவாகிறது.

    மேலும் இரானியர்கள் அராபியர்களாக என்றும் ஏற்றுக் கொள்ளப்பட்டதில்லை. அவர்களை ஆரியர்கள் என்று தள்ளி நிறுத்தியுள்ளது அரபு உலகம். மொழி உள்ளிட்ட பல வேறுபாடுகள்.

    சக அராபியனைப் பிறர் திட்டினால் கோபப்படும் அரபுத் தலைவர்கள் இரானியர்களை யார் திட்டினாலும் ரசிப்பர்.

    இஸ்ரேலியச் சிங்கங்களுக்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே அடைக்கலம் கொடுத்துச் சிறப்பித்த பாரத மண்ணின் மைந்தன் என்பதில் நான் இறும்பூது எய்துகிறேன்.]]]

    நல்லது அருண்.. இப்படியே இருங்கள்.. எனக்கும் சந்தோஷம்தான்..! உங்களது வெளிப்படையான கருத்துக்களுக்கு எனது நன்றிகள்..!

    ReplyDelete