Pages

Tuesday, August 31, 2010

ராமர் - சினிமா விமர்சனம்


31-08-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இப்போதெல்லாம் பெரிய பட்ஜெட் படங்களைவிட சிறிய பட்ஜெட் படங்களில்தான் கொஞ்சமாவது கதை என்ற வஸ்து இருக்கிறது.. பெரிய பட்ஜெட் என்றால் அந்த ஹீரோவுக்கு ஏற்றாற்போல் மலைக்கள்ளன் டைப் கதையாக எடுத்து தியேட்டரில் நம்மைத் தாளிக்கிறார்கள். இல்லையெனில் டிவிடியில் இருந்து உருவியெடுத்து நம்மையும் தியேட்டரில் உருவியெடுக்கிறார்கள்.

சின்னத் தயாரிப்பு படங்கள் 5 வந்தால், அதில் 3 படங்களாவது கதையும், எடுத்த விதமும் கொஞ்சம் நல்லபடியாக, இயக்கம் என்று ஒத்துக் கொள்ளக்கூடிய வகையிலே அமைந்து விடுகின்றன. அந்த வரிசையில் இந்தப் படமும் ஒன்று..

அரதப் பழசான அடியாள் கதைதான்.. ஆனால் சினிமா பாணியில் ட்ரீட்மெண்ட் குட் ஷேப்பிங்.

கடலூர் பகுதியை பார்ட் பார்ட்டாக பிரித்துவைத்துக் கொண்டு தனது அடியாட்களை வைத்து ராஜ்யம் நடத்தி வரும் சேலையப்பன் என்பவரிடம் கைத்தடிகளாகவும், அதே சமயம் வளர்ப்புத் தம்பிகளாகவும் இருந்து வருகிறார்கள் மதனும், நித்யாவும்..!

பகலில் அடிதடி, வெட்டுக் குத்து, ரகளை, ரத்தம் என்று பார்த்துவிட்டு இரவில் குஜிலிகளுடன் ஆட்டம் போடும் பக்கா அடியாளான ஹீரோ நித்யா, ஹீரோயின் மகாலட்சுமியிடம் ஒரு தடவை அடி வாங்கி விடுகிறான்.

இதனை தனக்கு நேர்ந்த அவமானமாகக் கருதினாலும், அவனுக்குள் ஏதோ ஒன்று லாலாலாலா பாடி விடுகிறது. அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி மாதிரி.. அடைந்தால் மகாலட்சுமி இல்லையேல் மரணம்தான் என்ற நிலைமைக்கு வந்து அவளை விரட்டி விரட்டி பின் தொடர்ந்து சென்று அழுக வைக்கிறான்.

ஹீரோவின் உற்ற நண்பனான மதனின் முறைப் பெண்தான் இந்த மகா என்ற மகாலட்சுமி. இது ஹீரோவுக்குத் தெரியாது.. தான் கல்யாணம் செய்யப் போகும் பெண்ணைத்தான் தனது உயிர் நண்பன் விரும்புகிறான் என்பதை அறியாமல் அவர்களைச் சேர்த்து வைக்க முயற்சி செய்கிறான் மதன்.

மகாவுக்கும், மதனுக்கும் இடையில் நிச்சயத்தார்த்தமும் நடந்த நிலையில் மீண்டும் ஹீரோ மகாலட்சுமியைத் தூக்கிச் செல்ல.. விஷயம் தெரிந்து மதன், இன்னிக்கு ரெண்டுல ஒண்ணு முடிச்சர்றேன் என்று சொல்லி ஹீரோவுக்கே போன் போட்டு “என் லவ்வருக்கு ஒரு பிரச்சினை.. மேட்டரை முடிக்கணும் வா” என்று சொல்லி போன் அடித்து வரவழைக்க.. இப்போதுதான் மகா சொன்ன ஆள் யாரென்று மதனுக்குத் தெரிகிறது.

அடுத்த நொடியே நட்புக்கு குட்பை சொல்லிவிட்டு காதலுக்கும், கல்யாணத்திற்கும் முன்னுரிமை கொடுக்கிறான் மதன். இதைத் தாங்கிக் கொள்ள முடியாத ஹீரோ, மதனை போட்டுத் தள்ளிவிட்டு ஜெயிலுக்குப் போகிறான்.

ஹீரோ வெளியில் வரவும் அவனால் 6 ரீலுக்கு முன்னால் பாதிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் அதே ஊருக்கு ஏ.எஸ்.பி.யாக வரவும் பொருத்தம் அமர்க்களமாக இருக்கிறது. தான் ரவுடியாக இருப்பதால்தானே மகா தன்னை விரும்ப மறுக்கிறாள் என்பதை உணர்ந்து தான் ரவுடித் தொழிலை கை விடுவதாக சேலையப்பனிடம் சொல்கிறான் ஹீரோ.

சீலையப்பனோ இப்போது தனது கிரவுண்ட்டிற்குள் நுழைந்து நொங்கெடுத்துக் கொண்டிருக்கும் ஏ.எஸ்.பி.யை போட்டுத் தள்ள ஹீரோவிடம் வேண்டுகிறான். ஹீரோ மறுக்க.. ஏ.எஸ்.பி. சேலையப்பனையும், ஹீரோவையும் நெருக்க.. இன்னொரு பக்கம் மகா, ஹீரோவை பார்க்கவே மறுப்புத் தெரிவிக்க.. முக்கோண வட்டத்தில் யார் கடைசியாக உயிருடன் இருப்பது என்பதுதான் கதை.

முதல் பாராட்டு வசனகர்த்தாவுக்கு.. மிக, மிக நல்ல உயிரோட்டமுள்ள வசனங்கள். திரைக்கதைக்கு பொருத்தமான இடங்களில் நச் என்று அமைந்திருக்கிறது.

ஹீரோவாக நடித்திருப்பவர் வினய் தத்தா. காதல் ஓவியம் கண்ணனை ஞாபகப்படுத்தியது போன்ற முகம். ஏதாவது தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டோ என்று சந்தேகமாக இருக்கிறது.. நிஜமாகவே அவரளவுக்கு நன்கு நடித்திருக்கிறார். தன்னை மகாலட்சுமி அடித்ததை நண்பர்களிடம் சொல்லி தன்னை அடிக்கும்படி சொல்லிக் கெஞ்சுகின்ற காட்சியில் அடியாள் வேடம் சுத்தமாக அவுட்.. நல்லதொரு இயக்கம் இந்தக் காட்சியில்.

இடைவேளைக்குப் பின்பு அடிதடியை விடுவதாக அறிவித்துவிட்டு மகாவைத் தேடியலைந்து ஹாஸ்டலில் வந்து பார்க்கும்போது, “பார்த்திட்டு போயிருவேன்” என்று வார்டனிடம் சொல்லிவிட்டு அதேபோல் காதலியைப் பார்த்தவுடன் ஒருவார்த்தைகூட பேசாமல் செல்கின்ற காட்சியில் இன்னொரு சபாஷ்.. இயக்குநருக்கும் சேர்த்துத்தான்.

கிளைமாக்ஸில் “நான் என்ன செஞ்சா.. நீ சந்தோஷமா இருப்ப..?” என்று கேள்வி கேட்கும் நேரத்தில் காதலனாகவே உருக வைத்திருக்கிறார். 

அனுமோல் என்னும் கேரள நங்கை புதுமுகமாக பரிமாணித்துள்ளார். ஆனாலும் இவரை வேறு ஏதோ ஒரு திரைப்படத்தில் பார்த்த ஞாபகம். எந்தப் படமென்று என் மூளையைக் கசக்கியும் ஞாபகத்திற்கு வரவில்லை. அனுமோலுக்கு மேக்கப்பே தேவையில்லை என்று இயக்குநர் சொல்லிவிட்டார் போலும். குளோஸப் காட்சிகளில் வியர்வைகூட பளிச்சென்று தெரிந்தது..

படம் முழுவதும் சோகத்தையே பிழிந்து கொண்டிருந்ததால் நடிப்பு பரவாயில்லைதான்.. நான் அதிகம் எதிர்பார்த்த இரண்டு நண்பர்களையும் ஒன்றாக பார்க்கின்ற காட்சியில் இயல்பாகவே நடித்திருக்கிறார். “இத்தனை நாளா நீ என்ன செஞ்சுக்கிட்டிருந்தன்னு, இவனைப் பார்த்தாலே தெரியுது” என்று கேட்கின்ற வசனமும், மகாவுக்கு மகா பொருத்தம்.
 
மதனாக நடித்திருக்கும் அந்த இரண்டாவது ஹீரோ கடலூர் காட்டான் என்று சொல்லலாம். அந்த வட்டார முகமும், பேச்சும் அவருக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறது..!
 
இறுதிக் காட்சியில் ஹீரோவிடம், “செத்துப் போ” என்று மகா சொல்லும்போது மட்டும், ஏதோ என்னைக் கை காட்டி சொன்னது போல இருந்தது. “லவ் பண்ணத் தெரியலை.. இதுக்கு மேல என்ன செய்யறது, என்ன சொல்றதுன்னும் தெரியலை..” என்ற பட்டிக்காட்டான் வேடத்தில் சொல்லும் அந்த ஹீரோவை பார்த்து பரிதாபப்பட வேண்டிய மகாவின் வெறுப்பான அந்தப் பதிலால், ஹீரோ எடுக்கும் அந்த கிளைமாக்ஸ் முடிவு முற்றிலும் எதிர்பாராததுதான்..

இப்போதெல்லாம் தமிழ்ச் சினிமாவில் கிளைமாக்ஸில் திடுக் திருப்பத்தை வைத்துத்தான் படத்தை முடிக்கிறார்கள்.. ஏன் என்றுதான் தெரியவில்லை.. 'பாணா காத்தாடி', 'காதல் சொல்ல வந்தேன்' வரிசையில் இந்தப் படமும் உட்கார்ந்துவிட்டது.

ஒளிப்பதிவு காசி வி.நாதன் என்ற புதுமுகமாம். கடலூரின் சுற்றுவட்டாரம் முழுவதையும் ஒன்றுவிடாமல் பதிவு செய்திருக்கிறார். இயக்குநர் ஆதிராஜா கடலூரோ என்னவோ..? காட்சிக்கு காட்சி லொகேஷனை மாற்றிக் காண்பித்து அசத்தியிருக்கிறார்கள். நல்ல முறையில் கை கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

அடுத்த ஆச்சரியம்.. பாடல்கள்.. தெளிவாக வந்து காதில் விழுந்தன வார்த்தைகள்.. மெர்வின் சில்வா என்பவர் இசையமைத்திருக்கிறார். அடி முதல் முறை என்ற பாடலும், வெண்ணிலா நில்லடி என்ற பாடலும் எடுக்கப்பட்ட விதமும், இசையும் மீண்டும் கேட்க வேண்டும்போல இருந்தது.

குத்துப் பாட்டு.. இறுகக் கட்டியணைக்கும் குஜிலிகள்.. ஹீரோயினின் மனதைப் பற்றி பிட்டு பிட்டு வைக்கும் ஒரு பாலியல் பெண்.. பாசத்தால் பிராக்கெட் போடப் பார்க்கும் அண்ணாத்தைகள்.. ஹீரோயினின் குடும்ப பேக்கிரவுண்ட்டில் ஒரு மெல்லிய சோகம்.. ஹீரோவின் முன் வாழ்க்கையில் இருக்கும் ஒரு ஸ்மால் ஸ்டோரி என்று அடியாள் கதைகளில் என்னென்ன இருக்குமோ அத்தனையும் இதில் இருக்கிறது.

இதனைவிட பெரிய, பெரிய லாஜிக் ஓட்டைகளும் இருக்கின்றன. இருந்தாலும் மன்னித்து ரசிக்கலாம்.. அதிலும் 'மாஸ்கோவின் காவிரி'க்கு இது பல மடங்கு பரவாயில்லை ரகம்.

ஆனாலும் புதுமுகங்கள்.. புதிய இயக்குநர்.. புது கம்பெனி என்று பல புதியதுகள் இப்படத்தை மூலைக்குத் தள்ளிவிட்டன. குறைந்தபட்ச தயாரிப்பில், போட்ட காசு வந்தால்போதும் என்கிற நிலைமைக்குள் இதனை எடுத்திருக்கிறார்கள்.

இந்தக் கதையை அட்லீஸ்ட் ஜீவா, பரத்தை வைத்தாவது எடுத்திருந்தால் ஓரளவுக்காவது நிச்சயம் பேசப்பட்டிருக்கும், பெரிய ஹீரோக்கள் இல்லாததாலேயே காலை காட்சியாக மட்டுமே பெரிய நகரங்களிலும், ஸ்மால் சிட்டிகளில் தியேட்டர் வாடகையை கலெக்ஷன் செய்யவுமே இதனை ஓட்டுவார்கள்.

தற்போதைய தமிழ்ச் சினிமாவுக்கு கதைக்கு அடுத்தபடியாக மிகத் தேவையான விளம்பரப்படுத்துதல் இப்படத்திற்கு சுத்தமாக இல்லையாததால் இயக்குநரின் திறமை முட்டுச்சந்துக்குள் நிற்கிறது.. அடுத்து யாராவது ஒருவர் வாழ்க்கை கொடுத்தால் மெழுகுவர்த்தி, சோடியம் லைட்டாக பிரகாசிக்கலாம்..

நேரமும், வாய்ப்பும் கிடைத்தால் அவசியம் பாருங்கள்.

படத்தின் டிரெயிலர் இது


டிஸ்கி : எவ்வளவோ முயற்சித்தும் புகைப்படங்களை போட முடியவில்லை.. சொதப்புகிறது பிளாக்கர்..!

60 comments:

  1. அருமை, பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
    எக்ஸ்பிரஸ் வேகத்தில் உடனடி விமர்சனம்.

    ReplyDelete
  2. எக்ஸ்பிரஸ் வேகத்தில் உடனடி விமர்சனம்.

    இதுல உங்கள யாருமே அடிச்சுக்க முடியாது

    ReplyDelete
  3. [[[ராம்ஜி_யாஹூ said...
    அருமை, பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
    எக்ஸ்பிரஸ் வேகத்தில் உடனடி விமர்சனம்.]]]

    ராம்ஜி ஸார்.. இது டூ லேட்டான விமர்சனம்..!

    ஏனெனில் இந்தப் படம் கடந்த வெள்ளியன்றே ரிலீஸாகிவிட்டது.. அன்றைக்கே பார்த்துவிட்டேன் என்றாலும் கொஞ்சம் சோம்பேறித்தனம்.. மன்னிக்கணும்..!

    ReplyDelete
  4. [[[R Gopi said...
    எக்ஸ்பிரஸ் வேகத்தில் உடனடி விமர்சனம். இதுல உங்கள யாருமே அடிச்சுக்க முடியாது.]]]

    நன்றி கோபிஜி..!

    ReplyDelete
  5. அண்ணே, மீடியம் பட்ஜெட்,மெகா பட்ஜெட்,லோ பட்ஜெட்,பட்ஜெட் இல்லாத படங்கள் ஒன்னு கூட விடாம பார்த்து விமர்சனம் எழுதும் உங்கள் கடமை உணர்ச்சி அருமை. அப்பன் முருகன் இனிமேல் உங்களக்கு நல்ல படங்கள் மட்டும் காட்டட்டும்.
    அப்புறம் இந்த விமர்சனத்தில் ஒரு பிழை. மதன தான் கொலை பண்றாங்கன்னு எழுதுறீங்க. அப்புறம் அடுத்த பத்தியிலேயே மதன் வெளில வந்த உடனே என்று எழுதி இருக்கிறீர்கள்.

    மற்றபடி விமர்சனம் மிக அருமை

    ReplyDelete
  6. நீங்க இப்படி வேற எதாவது பதிவை போட்டு, பிரச்சனையை திசை திருப்புவீங்கன்னு நினைச்சேன். :) :)

    சரி... எனக்கும் மனிதாபிமானம் இருக்குங்கறனால உங்களை விட்டுடுறேன்... இப்போதைக்கு!! :)

    வினவு அண்ணன் கிட்ட சொல்லி வைக்கனும்! ;)

    ReplyDelete
  7. //இதைத் தாங்கிக் கொள்ள முடியாத ஹீரோ, மதனை போட்டுத் தள்ளிவிட்டு ஜெயிலுக்குப் போகிறான்.

    மதன் வெளியில் வரவும் //

    டைருடக்டரும் மனிதாபிமானி போலத் தெரியுதே??

    ஏன்ணே.. ஹீரோவும் சந்தர்ப்ப வசத்தில், கொன்னாரோ?

    ReplyDelete
  8. //“செத்துப் போ” என்று மகா சொல்லும்போது மட்டும், ஏதோ என்னைக் கை காட்டி சொன்னது போல இருந்தது//

    இதை நான் வன்மையா கண்டிக்கிறேன், ஏன் அவ ஐ லவ் யு சொல்லும் போது உங்களை காட்டி சொன்னது மாதிரி இல்லை

    ReplyDelete
  9. /ஆனாலும் இவரை வேறு ஏதோ ஒரு திரைப்படத்தில் பார்த்த ஞாபகம். எந்தப் படமென்று என் மூளையைக் கசக்கியும் ஞாபகத்திற்கு வரவில்லை./

    பார்த்த பிட்டு படம் அத்தனை.

    ReplyDelete
  10. ஏன்னே விமர்சனமெல்லாம் நல்லாதான் இருக்கு,போஸ்டர,ஹீரோயினி போட்டோவ எங்கண்ணே?அது தானே முக்கியம்:))

    ReplyDelete
  11. அண்ணே நானும் படிச்சிட்டேன்னே..

    ReplyDelete
  12. //|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

    ஏன்னே விமர்சனமெல்லாம் நல்லாதான் இருக்கு,போஸ்டர,ஹீரோயினி போட்டோவ எங்கண்ணே?அது தானே முக்கியம்:))

    //
    அதுவும் முக்கியமா ஹீரோயின் கை வைக்காத ஜாக்கெட் போட்டுகிட்டு ஒரு பாட்டுல ஆடுமே.. அந்த போட்டோல்லாம் ஏன்ணே போடல.. திட்டமிட்டே சதி பன்றீங்க..

    ReplyDelete
  13. //அண்ணே நானும் படிச்சிட்டேன்னே..//

    நான் படிக்காம கமெண்ட் போட்டேங்கறதை குத்திக் காட்டும் ராமசாமியின் காட்டுமிராண்டித்தனம் ஒழிக.

    ReplyDelete
  14. // ஹாலிவுட் பாலா said...

    //அண்ணே நானும் படிச்சிட்டேன்னே..//

    நான் படிக்காம கமெண்ட் போட்டேங்கறதை குத்திக் காட்டும் ராமசாமியின் காட்டுமிராண்டித்தனம் ஒழிக.//
    இப்படி பட்ட பாஸிஸ வெறிதனமிக்க கமெண்டுக்கல்லாம் நாங்க ப்யந்துருவோமா :)

    ReplyDelete
  15. பொழச்சிப் போங்க ராமசாமி..!! உங்களுக்காக இல்லைன்னாலும்... நாளைக்கு பாவம்.. அண்ணன் ஒவ்வொரு கமெண்ட்டுக்கா பதில் சொல்லுவாரு.

    அந்த அப்பிராணியை நினைச்சித்தான் உங்களை சும்மா விட்டுட்டு போறேன்.

    இருங்க இருங்க... வினவு அண்ணன் கிட்ட சொல்லி வைக்கிறேன்.

    ReplyDelete
  16. பரவாலங்குறீங்க.. பாக்குறேன் அண்ணா..

    ஆனா இந்த டிக்கெட் விலை தான் ஒவரா இருந்து உயிர வாங்குது :( :(

    /*பொழச்சிப் போங்க ராமசாமி..!! உங்களுக்காக இல்லைன்னாலும்... நாளைக்கு பாவம்.. அண்ணன் ஒவ்வொரு கமெண்ட்டுக்கா பதில் சொல்லுவாரு.

    அந்த அப்பிராணியை நினைச்சித்தான் உங்களை சும்மா விட்டுட்டு போறேன்.*/

    /*நான் படிக்காம கமெண்ட் போட்டேங்கறதை குத்திக் காட்டும் ராமசாமியின் காட்டுமிராண்டித்தனம் ஒழிக*/

    ஹா ஹா ஹா :) :)

    ReplyDelete
  17. /*|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

    ஏன்னே விமர்சனமெல்லாம் நல்லாதான் இருக்கு,போஸ்டர,ஹீரோயினி போட்டோவ எங்கண்ணே?அது தானே முக்கியம்:))*/

    ப்ளாக்கர் சதி பண்ணிடுச்சாமே :( :(

    ReplyDelete
  18. ஏது.... கனகு கமெண்ட்டை ‘கமெண்ட்’ பண்ணுறதை பார்த்தா... C/C++ ல வேலை போலத் தெரியுதே? :) :)

    ReplyDelete
  19. //
    மன்னித்து ரசிக்கலாம்.. அதிலும் 'மாஸ்கோவின் காவிரி'க்கு இது பல மடங்கு பரவாயில்லை ரகம்.
    //
    நீங்க இன்னும் மாஸ்கோவிலேருந்து மாஸ்க்க கிழட்டலயா???

    ReplyDelete
  20. + ஒளிப்பதிவு
    - ஒலிப்பதிவு

    ReplyDelete
  21. //மாஸ்க்க கிழட்டலயா???//

    அண்ணே.. இதுக்குத்தான் ‘டை’ அடிங்கன்னு சொன்னேன். இப்ப பாருங்க யோகேஷ் உங்களை கிழவன்னு சொல்லுறார்.

    ReplyDelete
  22. நான் படிக்காம கமெண்ட் போட்டேங்கறதை குத்திக் காட்டும் ராமசாமியின் காட்டுமிராண்டித்தனம் ஒழிக
    //

    அண்ணன் பனங்கா நரி சலசலப்புக்கெல்லாம் அஞ்சமாட்டார்.

    --

    அண்ணே உஜிலாதேவின்னு ஒருத்தர் உங்களவிட பெரிசா எழுதறார்ண்ணே. போட்டி அதிகமாகிட்டே போகுது பார்த்து செய்ங்க,, :)

    ReplyDelete
  23. அப்ப பாக்கலாம வேண்டாமா ? தல ..

    ReplyDelete
  24. [[[Guru said...

    அண்ணே, இந்த விமர்சனத்தில் ஒரு பிழை. மதனதான் கொலை பண்றாங்கன்னு எழுதுறீங்க. அப்புறம் அடுத்த பத்தியிலேயே மதன் வெளில வந்த உடனே என்று எழுதி இருக்கிறீர்கள்.

    மற்றபடி விமர்சனம் மிக அருமை]]]

    திருத்திவிட்டேன் குரு.. நன்றி..!

    ReplyDelete
  25. [[[butterfly Surya said...
    Peeli Live ..???]]]

    நாளைக்குண்ணே..!

    ReplyDelete
  26. [[ஹாலிவுட் பாலா said...

    நீங்க இப்படி வேற எதாவது பதிவை போட்டு, பிரச்சனையை திசை திருப்புவீங்கன்னு நினைச்சேன். :) :)]]

    வேற வழியில்லை.. அதுலேயே மூழ்க முடியுமா..? தப்பிக்கத்தான் வேணும் தம்பி..

    ReplyDelete
  27. [[[ஹாலிவுட் பாலா said...

    //இதைத் தாங்கிக் கொள்ள முடியாத ஹீரோ, மதனை போட்டுத் தள்ளிவிட்டு ஜெயிலுக்குப் போகிறான்.

    மதன் வெளியில் வரவும் //

    டைருடக்டரும் மனிதாபிமானி போலத் தெரியுதே?? ஏன்ணே.. ஹீரோவும் சந்தர்ப்பவசத்தில், கொன்னாரோ?]]]

    ஆமாம்.. ரொம்ப மனிதாபிமானி.. அதான் ரத்தம் சிந்துறதை கொஞ்சமா வைச்சிருக்காரு படத்துல..!

    ReplyDelete
  28. [[[butterfly Surya said...
    Bala, You're cute always.. LOL]]]

    அவர் எப்பவுமே க்யூட்தான் சூர்யா..!

    ReplyDelete
  29. [[[நசரேயன் said...

    //“செத்துப் போ” என்று மகா சொல்லும்போது மட்டும், ஏதோ என்னைக் கை காட்டி சொன்னது போல இருந்தது//

    இதை நான் வன்மையா கண்டிக்கிறேன், ஏன் அவ ஐ லவ் யு சொல்லும் போது உங்களை காட்டி சொன்னது மாதிரி இல்லை]]]

    இல்லையே.. ஐ லவ் யூ சீனே படத்துல இல்லப்பா..!

    ReplyDelete
  30. [[[குறும்பன் said...

    /ஆனாலும் இவரை வேறு ஏதோ ஒரு திரைப்படத்தில் பார்த்த ஞாபகம். எந்தப் படமென்று என் மூளையைக் கசக்கியும் ஞாபகத்திற்கு வரவில்லை./

    பார்த்த பிட்டு படம் அத்தனை.]]]

    ஹி.. ஹி.. ஹி..!

    ReplyDelete
  31. [[[|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...
    ஏன்னே விமர்சனமெல்லாம் நல்லாதான் இருக்கு, போஸ்டர, ஹீரோயினி போட்டோவ எங்கண்ணே?அது தானே முக்கியம்:))]]]

    பிளாக்கர் சொதப்பிருச்சு கீதப்பிரியன்.. மன்னிச்சுக்குங்க..!

    ReplyDelete
  32. [[[இராமசாமி கண்ணண் said...

    அண்ணே நானும் படிச்சிட்டேன்னே..]]]

    வாண்ணே.. ஆனா கொஞ்சம் லேட்டா வந்திருக்கண்ணே..!

    ReplyDelete
  33. [[[இராமசாமி கண்ணண் said...

    //|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

    ஏன்னே விமர்சனமெல்லாம் நல்லாதான் இருக்கு, போஸ்டர, ஹீரோயினி போட்டோவ எங்கண்ணே? அதுதானே முக்கியம்:))//

    அதுவும் முக்கியமா ஹீரோயின் கை வைக்காத ஜாக்கெட் போட்டுகிட்டு ஒரு பாட்டுல ஆடுமே.. அந்த போட்டோல்லாம் ஏன்ணே போடல.. திட்டமிட்டே சதி பன்றீங்க..]]]

    அது ஹீரோயின் இல்லண்ணே.. அயிட்டம் சாங் ஒண்ணு.. பிளாக்கர் சொதப்பினதால போட்டோக்களை போட முடியலண்ணே..!

    ReplyDelete
  34. [[[ஹாலிவுட் பாலா said...

    //அண்ணே நானும் படிச்சிட்டேன்னே..//

    நான் படிக்காம கமெண்ட் போட்டேங்கறதை குத்திக் காட்டும் ராமசாமியின் காட்டுமிராண்டித்தனம் ஒழிக.]]]

    ஓ.. இப்படியொரு அர்த்தம் இருக்கா இதுக்கு..? அரசியல்வியாதியெல்லாம் பிச்சையெடுக்கணும் போலிருக்கே..!

    ReplyDelete
  35. [[[ஹாலிவுட் பாலா said...

    பொழச்சிப் போங்க ராமசாமி..!! உங்களுக்காக இல்லைன்னாலும்... நாளைக்கு பாவம்.. அண்ணன் ஒவ்வொரு கமெண்ட்டுக்கா பதில் சொல்லுவாரு. அந்த அப்பிராணியை நினைச்சித்தான் உங்களை சும்மா விட்டுட்டு போறேன்.]]]

    ஏதோ உங்க மனசு வருத்தப்படக் கூடாதேன்ற நல்ல எண்ணத்துலதான் தம்பி பதில் சொல்லிக்கிட்டிருக்கேன்..!

    ReplyDelete
  36. [[[kanagu said...
    பரவாலங்குறீங்க.. பாக்குறேன் அண்ணா.. ஆனா இந்த டிக்கெட் விலைதான் ஒவரா இருந்து உயிர வாங்குது :( :(]]]

    உண்மைதான்.. மீடியம் கிளாஸ் தியேட்டர்லதான் இதைப் போட்டிருக்காங்க.. தேடிப் பிடிச்சுப் பாரு கனகு..!

    ReplyDelete
  37. [[[kanagu said...

    /*|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

    ஏன்னே விமர்சனமெல்லாம் நல்லாதான் இருக்கு,போஸ்டர,ஹீரோயினி போட்டோவ எங்கண்ணே?அது தானே முக்கியம்:))*/

    ப்ளாக்கர் சதி பண்ணிடுச்சாமே :( :(]]]

    அதே.. அதே.. அதே.. தம்பி கனகு.. இப்படித்தான் நான் இல்லாதப்ப எடுத்துக் கொடுக்கணும்..!

    ReplyDelete
  38. [[[ஹாலிவுட் பாலா said...
    ஏது.... கனகு கமெண்ட்டை ‘கமெண்ட்’ பண்ணுறதை பார்த்தா... C/C++ ல வேலை போலத் தெரியுதே? :) :)]]]

    இல்லையே.. எனக்குத் தெரிஞ்சு தம்பி ஜாவாவுல பறக்கிறேன்ல சொன்னாரு..!

    ReplyDelete
  39. [[[வழிப்போக்கன் - யோகேஷ் said...

    //மன்னித்து ரசிக்கலாம்.. அதிலும் 'மாஸ்கோவின் காவிரி'க்கு இது பல மடங்கு பரவாயில்லை ரகம்.//

    நீங்க இன்னும் மாஸ்கோவிலேருந்து மாஸ்க்க கிழட்டலயா???]]]

    எப்படி முடியும் யோகேஷ்.. வயித்தெரிச்சலா இருக்கு.. அடங்க மாட்டேங்குது..!

    ReplyDelete
  40. [[[ஆகாயமனிதன்.. said...

    + ஒளிப்பதிவு
    - ஒலிப்பதிவு]]]

    நான் பார்த்த தியேட்டர்ல சவுண்ட் நல்லாயிருந்துச்சுண்ணே..!

    ReplyDelete
  41. [[[ஹாலிவுட் பாலா said...

    //மாஸ்க்க கிழட்டலயா???//

    அண்ணே.. இதுக்குத்தான் ‘டை’ அடிங்கன்னு சொன்னேன். இப்ப பாருங்க யோகேஷ் உங்களை கிழவன்னு சொல்லுறார்.]]]

    சொல்லிட்டுப் போறாரு தம்பிதான..!?

    ReplyDelete
  42. [[[♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

    நான் படிக்காம கமெண்ட் போட்டேங்கறதை குத்திக் காட்டும் ராமசாமியின் காட்டுமிராண்டித்தனம் ஒழிக//

    அண்ணன் பனங்கா நரி சலசலப்புக்கெல்லாம் அஞ்சமாட்டார்.]]]

    எந்த அண்ணனை சொல்ற..? இராமசாமி அண்ணனையா..? அல்லது என்னையவா..?

    [[[அண்ணே உஜிலாதேவின்னு ஒருத்தர் உங்களவிட பெரிசா எழுதறார்ண்ணே. போட்டி அதிகமாகிட்டே போகுது பார்த்து செய்ங்க,, :)]]]

    எழுதட்டும்பா.. நான் இப்போ ரிவர்ஸ்ல கொஞ்சம், கொஞ்சமா நீளத்தைக் குறைச்சுக்கிட்டு வர்றேன்..!

    ReplyDelete
  43. [[[புதிய மனிதா said...

    அப்ப பாக்கலாம வேண்டாமா? தல?]]]

    அதான் கடைசியா சொல்லியிருக்கேனே தல.. நேரமும், வாய்ப்பும் கிடைச்சா அவசியம் பாருங்கன்னு..!

    ReplyDelete
  44. [[[இராமசாமி கண்ணண் said...

    // ஹாலிவுட் பாலா said...

    //அண்ணே நானும் படிச்சிட்டேன்னே..//

    நான் படிக்காம கமெண்ட் போட்டேங்கறதை குத்திக் காட்டும் ராமசாமியின் காட்டுமிராண்டித்தனம் ஒழிக.//

    இப்படிபட்ட பாஸிஸ வெறிதனமிக்க கமெண்டுக்கல்லாம் நாங்க ப்யந்துருவோமா :)]]]

    தம்பிகளா.. இதுக்கெதுக்கு உங்களுக்குள்ள சண்டை..? அடுத்த போஸ்ட்ல இருந்து அவுங்க பேர்ல நீங்களும், உங்க பேர்ல அவுங்களுமா மாத்தி, மாத்தி பின்னூட்டம் போட்டிருங்க.. சரியாப் போயிரும்..!

    ReplyDelete
  45. வில், அம்பு எனும் போன பதிவின் தாக்கம்தானே ராமர் விமர்சனம் எழுத தூண்டியது... அப்ப அந்த விவாதத்த கண்டினியூ பண்ணலாமா???? மக்களே ஸ்டார்ட் மியூசிக்.... தமிழன கும்மலாம்..


    மாஸ்கோ உங்கள அவ்ளோ பாதிச்சிருச்சா தமிழா???? படம் பிடிக்கலைன்னா பணம் வாபஸ் ஸ்கீம் ஏதாவது கொண்டு வரணும்.....

    ReplyDelete
  46. அண்ணே வர வர நீங்களும் தேர்ந்த அரசியல்வாதிகள் மாதிரி நடந்துகிறிங்க..
    அரசியல்வாதிகள் தான் ஒரு பிரச்னைக்கு தீர்வு மற்றோரு பிரச்சினை என்கிற மாதிரி உங்களுக்கு மற்றோரு பதிவு...

    ReplyDelete
  47. enna aniyaayam neelaththa kuraikkurathaavathu unga muththirai ennaavathu. irunthaalum ungal porumaikku oru ottu nichchayam undu.

    ReplyDelete
  48. antha konjsam kathaiyaiyum ivvalavu viriva ezhutha Umma orutharalathan mudiumnen!

    ReplyDelete
  49. annae,i also c this film at friday.but i hesitate to critisize this film due to low budjet film.you had done a good job.(soory for english,tamilfont is not working)

    ReplyDelete
  50. [[[sivakasi maappillai said...

    வில், அம்பு எனும் போன பதிவின் தாக்கம்தானே ராமர் விமர்சனம் எழுத தூண்டியது... அப்ப அந்த விவாதத்த கண்டினியூ பண்ணலாமா? மக்களே ஸ்டார்ட் மியூசிக். தமிழன கும்மலாம்.]]]

    சிவகாசியாரே.. தூள் கமெண்ட்...!

    [[[மாஸ்கோ உங்கள அவ்ளோ பாதிச்சிருச்சா தமிழா???? படம் பிடிக்கலைன்னா பணம் வாபஸ் ஸ்கீம் ஏதாவது கொண்டு வரணும்.]]]

    பி்ன்ன.. எவ்ளோ வயித்தெரிச்சலைக் கொட்டிருக்கு அந்தப் படம்..!

    ReplyDelete
  51. [[[Thomas Ruban said...

    அண்ணே வர வர நீங்களும் தேர்ந்த அரசியல்வாதிகள் மாதிரி நடந்துகிறிங்க..

    அரசியல்வாதிகள்தான் ஒரு பிரச்னைக்கு தீர்வு மற்றோரு பிரச்சினை என்கிற மாதிரி உங்களுக்கு மற்றோரு பதிவு.]]]

    இல்லையே.. தினம்தோறும் ஒரு பதிவுன்றதால இன்னிக்கு இந்த சினிமா விமர்சனம்..! தப்பிக்கல்லாம் இல்லை..!

    ReplyDelete
  52. [[[பித்தன் said...
    enna aniyaayam neelaththa kuraikkurathaavathu unga muththirai ennaavathu. irunthaalum ungal porumaikku oru ottu nichchayam undu.]]]

    நீளமா எழுதுற அளவுக்கெல்லாம் எதுவும் இல்லை.. இந்தப் படத்துக்கு இது போதும் என்பதால்தான் இத்தோடு நிறுத்திக் கொண்டேன்..!

    ReplyDelete
  53. [[[என்.ஆர்.சிபி said...
    antha konjsam kathaiyaiyum ivvalavu viriva ezhutha Umma orutharalathan mudiumnen!]]]

    ஹி.. ஹி.. அண்ணே.. சிபியண்ணே.. வந்துட்டீங்களா..? இப்படி அடிக்கடி வந்து முகத்தைக் காட்டினீங்கன்னா தம்பிக்கு கொஞ்சம் சந்தோஷமா இருக்கும்..!

    ReplyDelete
  54. [[[சி.பி.செந்தில்குமார் said...
    annae,i also c this film at friday. but i hesitate to critisize this film due to low budjet film. you had done a good job.(soory for english, tamilfont is not working)]]]

    அதேதான்.. லோ பட்ஜெட் என்பதால்தான் அதிகமாக வெளியில் தெரியாமல் போய்விட்டது.. இது மாதிரியான படங்கள் இந்த வாரம் 4 வெளியாகியுள்ளன.. அத்தனையும் ஒரு வார ஓட்டம்தான்..!

    ReplyDelete
  55. ஒரு வன்முறையாளன் தான் தமிழ் சினிமாவின் காதாநாயகனாக முடியும் என்ற குருட்டு சித்தாந்தத்திலே அறிமுக இயக்குனர்கள் இருப்பது வேதனை.
    படம் பார்த்தேன். அந்த தாதாவின் பெயர் சேலையப்பன் என்பதும் அந்த ஹீரோவின் பெயர் நித்தியானந்தா(நித்யா) என்பதும் நான் உள்வாங்கி கொண்ட அளவில் ஞாபகம் இருப்பவை...

    குறைந்த பட்ஜெட் படம் என்பதை தாண்டி வேறு ஒன்றும் இல்லை இந்த படத்தில்......

    ReplyDelete
  56. [[[காலப் பறவை said...

    ஒரு வன்முறையாளன்தான் தமிழ் சினிமாவின் காதாநாயகனாக முடியும் என்ற குருட்டு சித்தாந்தத்திலே அறிமுக இயக்குனர்கள் இருப்பது வேதனை.

    படம் பார்த்தேன். அந்த தாதாவின் பெயர் சேலையப்பன் என்பதும் அந்த ஹீரோவின் பெயர் நித்தியானந்தா(நித்யா) என்பதும் நான் உள்வாங்கி கொண்ட அளவில் ஞாபகம் இருப்பவை.]]]

    திருத்தியமைக்கு மிக்க நன்றிகள் காலப்பறவை ஸார்..!

    [[[குறைந்த பட்ஜெட் படம் என்பதை தாண்டி வேறு ஒன்றும் இல்லை இந்த படத்தில்.]]]

    ஆனால் இதே சமயம் வந்திருக்கும் படங்களில் இது பரவாயில்லை என்பதுதான் உண்மை..!

    ReplyDelete