Pages

Tuesday, March 23, 2010

RIVALES - SPANISH FILM - திரைப்பட விமர்சனம்

23-03-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மொழி தெரியாதவர்களைக்கூட படத்தில் ஆழ்த்திவிடும் அளவுக்கு சர்வ உலகத்தினரைக் கவரும் திரைக்கதை அமைப்போடு திரைப்படங்கள் வெளியாவது சற்று அபூர்வம்தான்.

சற்று புகழ் பெற்ற திரைப்படங்கள் அனைத்துமே சிறந்த திரைக்கதையாலும், இயக்கத்தாலும்தான் புகழ் பெற்றிருக்கின்றன. சீரியஸ்வகைப் படங்கள் அந்தத் திரைப்படத்தின் தன்மைக்கேற்ப புகழ் பெற்றிருந்தாலும், அத்திரைப்படம் ஏதோ ஒருவகையில் மக்களை ஈர்த்திருக்கும்.

அப்படியொரு வகையான திரைப்படங்களில் இதுவும் ஒன்று. ஸ்பானிய திரைப்படமான இதன் மற்றுமொரு சிறப்பு யதார்த்த வாழ்க்கையை நகைச்சுவை கலந்து அள்ளித் தெளித்திருப்பதுதான்.


பதின்ம வயதுக்குட்பட்டவர்களைக் கொண்ட Deportivo Madriclno என்கிற கால்பந்து அணிக்கும் Atletica Barcelones என்கிற கால்பந்து அணிக்கும் இடையே காலம்காலமாக போட்டி நடைபெற்று வருகிறது. இந்த இரண்டு அணிகளின் மைதானத்தில் மோதினால், பாகிஸ்தான், இந்தியா போல அந்தப் பகுதியில் பரபரப்பை ஊட்டக் கூடிய விஷயம்.

அப்படியொரு பைனல் மேட்ச் மாட்ரிட்டில் நடைபெறப் போகிறது. இரண்டு அணி வீரர்களான பிள்ளைகளும் அங்கே செல்ல பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்க.. உடன் அவர்களது பெற்றோர்களும் கிளம்புகிறார்கள்.

கில்லிரெமோ ஒரு வெற்றியடையாத சேல்ஸ்மேன். அவனது தொழிலைப் போலவே குடும்ப வாழ்க்கையிலும் தோல்வியடைந்தவன். டைவர்ஸ் கேஸ். அவனது மகன் வில்லி பைனல் மேட்ச்சில் விளையாடப் போகிறான். அதனால் அவனை அழைத்துக் கொண்டு மாட்ரிட் கிளம்புகிறான் கில்லி.

இதேபோல் மரியா மற்றும் கார்லோஸ் தம்பதிகள் தங்களது பையனை அழைத்துக் கொண்டுபோக பிளான் செய்து கொண்டிருக்கும்போது ஜார்ஜ், மரிபோல் தம்பதிகளைச் சந்திக்கிறார்கள். அவர்களோ மரியாவையும், கார்லோஸையும் தங்களுடன் காரில் வரும்படி அழைக்கிறார்கள். கார்லோஸ் இதனை ஏற்றுக் கொள்ள மரியா வேண்டாம் என்கிறார்கள். கார்லோஸ் காரணம் கேட்க அவர்கள் swapping couples என்கிறாள். கார்லோஸ் இதனை நம்பாமல் போகலாம் என்று தலையை ஆட்டிவிடுகிறான்.

ரோஸ் என்னும் மூதாட்டி தனது பேரனும் மாட்ரிட் வருவதால் அவனை வரவேற்க வேண்டி விமான நிலையத்தில் காத்திருக்கிறாள். ஆனால் பேரன் வரவில்லை. நேரமாகிவிட்டதால் மாட்ரிட்டுக்கு டிரெயினில் செல்ல விரும்புகிறாள். அதுவும் முடியாமல் போக கடைசியாக அவளுடைய பேரனின் எதிர்க்கட்சி மாணவர்கள் செல்கின்ற அதே பேருந்தில் இடம் கிடைக்கிறது. அதே பேருந்தில் பயணம் செய்யும் ஒரு மாணவனின் தந்தை ரோஸை ஈவ்டீஸிங் செய்தபடியே வர.. தனது பேரனுக்காக அதையும் சகித்துக் கொண்டு மாட்ரிக்குச் செல்கிறாள் ரோஸ்.

பெரும் தொழிலதிபரான குமாட்ஸும் தனது மகனை அழைத்துக் கொண்டு மாட்ரிட் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான். இவனுக்கு தனது டென்ஷனான அழகான காதலியான சாராவையும் உடன் அழைத்துப் போக வேண்டிய கட்டாயம். எப்போதும் ஹேண்டிகேம் கேமிராவில் எதையாவது படம் எடுத்துக் கொண்டிருக்கும் மகனுக்கு சாராவைப் பிடிக்கவே இல்லை. அவளை வெறுப்பேற்றியபடியே வருகிறான்.

போதாக்குறைக்கு பெட்ரோல் பங்கில் போலி போலீஸாரிடம் சிக்கிக் கொள்ள.. அவர்கள் சாராவைச் சோதனையிடுவதாகச் சொல்லி அத்துமீறுகிறார்கள். சாரா கோபமாகி தனக்குத் தெரிந்த கராத்தேவில் அவர்களை நாலு சாத்து சாத்திவிட.. குமாட்ஸுக்கு டென்ஷன் கூடிப் போகிறது. பையன் மீதிருக்கும் பாசத்தில் காதலியையும் கைவிட முடியாமல் தவித்தபடியே மாட்ரிட் வந்து சேர்கிறான்.

இரண்டு எதிரெதிர் பகையாளி அணிகளின் வீரர்களும் ஒருவரையொருவர் முறைத்தபடியே இருந்தாலும் இரண்டு அணிகளின் கோச்சுகள் நெருக்கமோ நெருக்கத்தில் இருக்கிறார்கள். இருவருமே காதலர்கள். அதுவும் ஆண் காதலர்கள். ஹோமோக்கள்.

இப்படி மாட்ரிட் வந்து சேர்ந்த இந்தக் குடும்பத்தினர் என்ன ஆனார்கள் என்பதையும், மேட்ச் நடந்ததா என்பதையும்தான் நம்மை எதிர்பார்க்க வைத்து போகிற போக்கில் கலாச்சார புரட்சியையும் சர்வசாதாரணமாகப் புரட்டிப்போடும் நகைச்சுவையில் கலாய்த்திருக்கிறார் இயக்குநர்.

சிறுநீரகப் பையில் இருக்கும் கற்களை வெளியேற்ற முடியாமல் அவதிப்படும் உடல் உபாதையுடன் மகனது விளையாட்டை நேரில் பார்க்க வேண்டும் என்கிற ஆசையில் மகனை அழைத்துக் கொண்டு செல்லும் கில்லி மகனுக்கு வாழ்க்கையைக் கற்றுக் கொடுக்கிறேன் என்கிற ரீதியில் கேள்வி மேல் கேள்விகளாகக் கேட்டுக் கொண்டேயிருக்கும் காட்சியில் பரிதவிப்பான அப்பாவி அப்பா போல் நிஜமாகவே நடித்திருக்கிறார் கில்லி.

சாப்பிட்ட கடையில் கொடுக்க காசில்லாமல் குட்பால் மேட்ச்சிற்கு பிறகு கொண்டாட்டத்திற்காக வைத்திருந்த பீர் பாட்டில்களை கடைக்காரனிடம் கொடுத்து தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடுவதும், பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் பெண்ணிடம் தன்னிடம் பணம் இல்லை என்பதை நாசூக்காக சொல்லிவிட்டு தப்பிப்பதுமாக இவரது கதை பாவப்பட்டதாக இருக்கிறது.

மகன் வில்லி அப்பா மீதிருக்கும் கோபத்தில் பெட்ரோலுக்கு பதில் டீசலை நிரப்பிவிட வழியிலேயே வண்டி மக்கராகி நின்றுவிடுகிறது. பின்னால் துரத்தி வரும் பெட்ரோல் பங்க் ஆட்களிடமிருந்து தப்பிக்க வேண்டி காரை நிறுத்திவிட்டு ஓடுகிறார்கள். இப்போதுதான் தனது பர்ஸை திருடி வைத்துக் கொண்டது வில்லிதான் என்று தெரிய வர.. அப்போதும் பையனை விட்டுக் கொடுக்க முடியாமல் அவன் புட்பால் மேட்ச் விளையாடியே தீர வேண்டும் என்று தனது சோகத்தையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு அழைத்துச் செல்கின்ற காட்சியில் உலகத்தின் தந்தைமார்களின் மனதை அப்படியே வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

காரில் செல்லும்போது தனது கணவன் கார்லோஸ், மரிபாலை ஜொள்ளுவிடுவதைப் பார்த்து கண்டிக்கவும் முடியாமல் தண்டிக்கவும் முடியாமல் தவிக்கின்ற மரியாவின் நடிப்பு நம்ம சீரியல்களையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிட்டது. ஜார்ஜ் தன்னை நெருக்குவதைப் புரிந்து கொண்டு புரியாததுபோல் நடித்து கடைசியில் நாலு சாத்து சாத்துகின்ற காட்சியில் செம காமெடி.

ஆண்கள் அத்தனை பேரும் எல்லா நாட்டிலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்கள்..

நமது தொலைக்காட்சி சீரியல்களில் வரும் திடுக் திருப்பம்போல மரியா கதையைத் திருப்பி கார்லோஸின் தாய் மரணப்படுக்கையில் இருப்பதாக ஒரு பொய்யைச் சொல்லிவிட்டு திரும்பிப் போக முடிவெடுக்க.. ஜார்ஜும், மரிபாலும் தாங்களும் உடன் வருவதாகச் சொல்லிக் கிளம்பிவிட.. நிமிடத்தில் மரியா அடிக்கும் பல்டி ஸ்டண்ட் சூப்பர்.. தொடர்ச்சியான கைதட்டல்கள் தியேட்டரில்..

நகைச்சுவைக்கு ஏது மொழி..? என்னதான் சப்டைட்டில் ஓடினாலும் அதையும் மீறின அந்த உடல் மொழியின் நடிப்புக்கு இணை ஏதுமில்லையே..?

இந்தத் தம்பதியினர் ஒருவருக்கொருவர் மீதிருக்கும் கோபத்தில் அந்த கூட்டுக் கலவிக்குள் தாங்களே விரும்பி ஒத்துக் கொண்டு நீச்சல் குளத்திற்குள் ஜோடி மாற்றம் நடைபெறும் காட்சி பக்.. பக்குதான்.. சிறுவர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் என்பதால் காட்சிகள் மட்டுப்படுத்தப்பட்டாலும், தம்பதிகள் அந்தக் குற்றவுணர்வோடு கடைசியில் விடைபெறும்போது விரசம் இல்லாமல் சோகம் மட்டுமே நிரம்பி வழிந்தது. இதிலும் ஒரு ஸ்பாஸ்டிக் காமெடியாக மேட்டரை முடித்துவிட்டு லிப்ட்டில் கீழே இறங்கி வரும்போது ஒருவரையொருவர் காதலுடனும், ஏக்கத்துடனும் பார்க்கின்ற பார்வை இருக்கிறதே.. அட்டகாசமான இயக்கம்.

ரோஸ் பேரனை மட்டுமே எதிர்பார்த்து காத்திருக்க.. பேரனோ ஒரு கேர்ள் பிரெண்ட்டை தள்ளிக் கொண்டு வந்திருக்க ரோஸுக்கு பெரும் ஏமாற்றம். அந்த கேர்ள் பிரெண்ட்டை தன்னை ஜொள்ளுவிடும் சேவியரின் மூலம் மூளைச் சலவை செய்து அனுப்பி வைக்க முயற்சி செய்ய.. அந்தப் பெண் தில்லாலங்கடி பெண்ணாக சேவியரின் ஜட்டியை மட்டும்விட்டு மீதியையெல்லாம் லவட்டிக் கொண்டு செல்வது பக்கா நம்மூர் காமெடி. சிரித்து, சிரித்து மாய்ந்து போனேன்.

விளையாட்டு வீரர்கள் சாப்பிடும் இடத்தில் ஏற்படும் சிறு கலவரம் பெரும் பொறியாகக் கிளம்பி யார், யாரை அடித்தார்கள் என்பதே தெரியாத அளவுக்கு வன்முறை வெடித்துக் கிளம்ப.. மேட்ச் கேன்சலாகிறது. ஆனாலும் என்ன.. நீண்ட நாள் காதலர்களான இரு அணிகளின் கோச்சுகளும் கொட்டுகிற மழையிலும் மைதானத்தில் கட்டிப் புரண்டு தங்களது காதலைத் தெரிவித்துக் கொள்ள.. ஒரு ஹைக்கூ ஹோமோ கவிதை அங்கே அரங்கேறுகிறது..

சாராவாக நடித்திருக்கும் கீராவைப் பற்றியும் சொல்ல வேண்டும். எப்போதும் ஏதோவொரு டென்ஷனோடு இருக்கின்ற ஒரு மாதிரியான குணம்.. படபடவென்று பொரிந்து தள்ளிவிட்டு டென்ஷனை குறைக்க முடியாமல் தவிக்கின்ற தவிப்பும், காதலனுக்காக அவன் மகனின் சேட்டைகளைத் தாங்கிக் கொள்ளும் பரிதவிப்புமாக பெஸ்ட்டாக செய்திருக்கிறார்.


இத்திரைப்படம் திரையிடப்பட்டபோது கீராவும் ஸ்பெயினில் இருந்து சென்னை வந்திருந்தார். படம் முடிந்ததும் அவரைப் பார்த்தபோது ஆள் அடையாளமே தெரியவில்லை.. படத்தில் கொஞ்சம் ஊதியிருந்தாலும், அடுத்த இரண்டு படங்களில் நடிப்பதற்காக டயட்டில் இருந்து உடலைக் குறைத்துவிட்டதாக தெரிவித்தார்.

இப்படித்தான் வருஷா வருஷம் இந்தப் பிள்ளைகளை கூட்டிக்கிட்டு வரும்போது ஏதாவது ஒரு பிரச்சினை வந்துக்கிட்டே இருக்கும்.. யாராவது ஒருத்தரால ரகளை கண்டிப்பா நடக்கும்.. ஆனாலும் நாங்கள் எதை வேண்டுமானாலும் இழப்போம்.. விடுவோம்.. கால்பந்தின் மீதான வெறியை மட்டும் விடமாட்டோம் என்று படத்தின் கிளைமாக்ஸில் ரோஸின் மூலமாகச் சொல்லியிருக்கும் இந்தக் கதையை கண்டிப்பாக தமிழுக்காக மாற்றம் செய்யலாம்.

தமிழின் மிகச் சிறந்த நகைச்சுவை நடிகர்களை ஒன்றிணைத்து கதையை கொஞ்சம் நம்மூருக்கு ஏற்றாற்போல் மாற்றியமைத்து சிறந்த நகைச்சுவை இயக்குநரின் இயக்கத்தில் வெளியிட்டால் படத்தின் வெற்றி உறுதி.!!!

36 comments:

  1. படிக்க சுவராசியமாய் இருக்கிறது.

    ReplyDelete
  2. உண்மைத்தமிழன் டைப் விமர்சனம்.. ரொம்ப நீள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ளமா இருக்குது :)

    ReplyDelete
  3. மொழி தெரியாதவர்களைக்கூட படத்தில் ஆழ்த்திவிடும் அளவுக்கு சர்வ உலகத்தினரைக் கவரும் திரைக்கதை அமைப்போடு திரைப்படங்கள் வெளியாவது சற்று அபூர்வம்தான்.//



    ஆரம்பமே அதிருங்க...
    இருங்க மீதியைப் படிச்சிட்டு வாறன்.

    ReplyDelete
  4. வணக்கம் நண்பா! தங்களின் வேற்று மொழித் திரைப்படம் பற்றிய விமர்சனம் அருமை. படத்தினைப் பார்க்க விருப்பமில்லாதவர்களுக்கும் இவ் விமர்சனம் ஒரு தூண்டு கோலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. வார்த்தை ஜாலத்தால் மிக மிருதுவாக படத்தினை விமர்சனத்தினூடாக நகர்த்திச் செல்லும் தங்களின் திறமைக்கு பேஷ்.. பேஷ்...



    வாழ்த்துக்கள்! தொடருங்கள்.

    ReplyDelete
  5. // தமிழின் மிகச் சிறந்த நகைச்சுவை நடிகர்களை ஒன்றிணைத்து கதையை கொஞ்சம் நம்மூருக்கு ஏற்றாற்போல் மாற்றியமைத்து சிறந்த நகைச்சுவை இயக்குநரின் இயக்கத்தில் வெளியிட்டால் படத்தின் வெற்றி உறுதி.!!! //

    அப்ப விரைவில் தமிழில் இந்த படத்தை எதிர்பார்க்கலாம் என்றுச் சொல்லுங்க..

    ஆனால் ஒழுங்காக எடுப்பார்கள் என்பதற்கு எந்த கியாரண்டி கொடுக்க முடியாது.

    ReplyDelete
  6. அண்ணே போன பதிவுல வந்த நூறு கமெண்டுக்கு பதில் சொல்லவே இல்லை...

    :)

    ReplyDelete
  7. நட்சத்திர வாழ்த்துக்கள். அளவா ஏழு பதிவோடி நிறுத்திடாதீங்க.

    ReplyDelete
  8. பதிவு ரொம்ப சிறுசா இருக்கே..

    ReplyDelete
  9. சுவராசியமாய் இருக்கிறது.

    ReplyDelete
  10. டைரக்டர் வெங்கட்பிரபு நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் அண்ணாச்சி.. :)

    ReplyDelete
  12. நல்ல படத்தை அறிமுகம் செய்தமைக்கு நன்றி தமிழா.

    பி.கு
    தமிழ்மணத்தில் உங்கள் இந்த பதிவு இன்னும் அப்டேட் ஆகவில்லை
    நேற்று இரவு முதல் தமிழ்மணத்தில் இந்த பிரச்சனை உள்ளது.

    எனவே தமிழா இது சீனா அல்லது பாகிஸ்தான் சதியாக இருக்கலாம் எச்சரிக்கை.

    :-))

    ReplyDelete
  13. [[[சைவகொத்துப்பரோட்டா said...
    படிக்க சுவராசியமாய் இருக்கிறது.]]]

    நன்றிகள் சைவம்..!

    ReplyDelete
  14. [[[சென்ஷி said...
    உண்மைத்தமிழன் டைப் விமர்சனம்.. ரொம்ப நீள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ளமா இருக்குது :)]]]

    அடப்பாவி.. நான்தாண்டா உண்மைத்தமிழன்..!

    ReplyDelete
  15. [[[கமல் said...

    மொழி தெரியாதவர்களைக்கூட படத்தில் ஆழ்த்திவிடும் அளவுக்கு சர்வ உலகத்தினரைக் கவரும் திரைக்கதை அமைப்போடு திரைப்படங்கள் வெளியாவது சற்று அபூர்வம்தான்.//

    ஆரம்பமே அதிருங்க... இருங்க மீதியைப் படிச்சிட்டு வாறன்.]]]

    அட முருகா..

    இதுக்கே ஒரு முன்னுரையா..?

    ReplyDelete
  16. [[[கமல் said...
    வணக்கம் நண்பா! தங்களின் வேற்று மொழித் திரைப்படம் பற்றிய விமர்சனம் அருமை. படத்தினைப் பார்க்க விருப்பமில்லாதவர்களுக்கும் இவ்விமர்சனம் ஒரு தூண்டுகோலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. வார்த்தை ஜாலத்தால் மிக மிருதுவாக படத்தினை விமர்சனத்தினூடாக நகர்த்திச் செல்லும் தங்களின் திறமைக்கு பேஷ்.. பேஷ்...
    வாழ்த்துக்கள்! தொடருங்கள்.]]]

    தங்களுடைய உற்சாகமான பின்னூட்டத்திற்கு நன்றிகள் கமல்..!

    ReplyDelete
  17. [[[இராகவன் நைஜிரியா said...

    //தமிழின் மிகச் சிறந்த நகைச்சுவை நடிகர்களை ஒன்றிணைத்து கதையை கொஞ்சம் நம்மூருக்கு ஏற்றாற்போல் மாற்றியமைத்து சிறந்த நகைச்சுவை இயக்குநரின் இயக்கத்தில் வெளியிட்டால் படத்தின் வெற்றி உறுதி.!!! //

    அப்ப விரைவில் தமிழில் இந்த படத்தை எதிர்பார்க்கலாம் என்றுச் சொல்லுங்க.. ஆனால் ஒழுங்காக எடுப்பார்கள் என்பதற்கு எந்த கியாரண்டி கொடுக்க முடியாது.]]]

    அதான் சிக்கலே..!

    இருந்தாலும் என்னிடம் கொடுத்தால் நிச்சயமாக செய்து முடிப்பேன்..!

    தயாரிக்க முன் வருகிறீர்களா..?

    ReplyDelete
  18. [[[எறும்பு said...
    அண்ணே போன பதிவுல வந்த நூறு கமெண்டுக்கு பதில் சொல்லவே இல்லை...
    :)]]]

    ஐயோடா முருகா..

    அத்தனைக்கும் பதில் சொன்னா என் கை என்னாகுறது..?

    எறும்பு அண்ணே.. இந்த ஒரு தபா மட்டும் மன்னிச்சுக்குங்கண்ணே..! முடியலண்ணே.. முடியல..!

    ReplyDelete
  19. [[[சின்ன அம்மிணி said...
    நட்சத்திர வாழ்த்துக்கள். அளவா ஏழு பதிவோடி நிறுத்திடாதீங்க.]]]

    நன்றி அம்மிணி..!

    ReplyDelete
  20. [[[தீப்பெட்டி said...
    பதிவு ரொம்ப சிறுசா இருக்கே..]]]

    தீக்குச்சி சின்னதுதான். ஆனா பத்த வைச்சா..!!???

    ReplyDelete
  21. [[[பித்தன் said...
    சுவராசியமாய் இருக்கிறது.]]]

    நன்றி பித்தன்ஜி..!

    ReplyDelete
  22. [[[ramalingam said...
    டைரக்டர் வெங்கட்பிரபு நன்றாக இருக்கும்.]]]

    கஷ்டம் ராமலிங்கம்..! அவங்க யூத்துக்காகன்னு நினைச்சுத்தான் எடுப்பாங்க..

    கதைக்காக நினைக்க மாட்டாங்க.. செட்டாகுது..!

    ReplyDelete
  23. [[[காயத்ரி சித்தார்த் said...
    வாழ்த்துக்கள் அண்ணாச்சி.. :)]]]

    நன்றிம்மா..!

    ReplyDelete
  24. [[[♠புதுவை சிவா♠ said...

    நல்ல படத்தை அறிமுகம் செய்தமைக்கு நன்றி தமிழா.

    பி.கு
    தமிழ்மணத்தில் உங்கள் இந்த பதிவு இன்னும் அப்டேட் ஆகவில்லை
    நேற்று இரவு முதல் தமிழ்மணத்தில் இந்த பிரச்சனை உள்ளது. எனவே தமிழா இது சீனா அல்லது பாகிஸ்தான் சதியாக இருக்கலாம் எச்சரிக்கை.
    :-))]]]

    ஹி.. ஹி.. இதுதான் உண்மைத்தமிழனின் ராசி..

    இப்படித்தான் இருக்கும் சிவா..!

    ReplyDelete
  25. pudhiya oru padathai arimuga paduthiyatharku nandri anna :) :) enaku vilayattu sambandhamana padangal migavum pidikkum... kandipa paapen..

    apram pona padhiva padichen... natchathira pathivar aanathuku vazthukkal anna :) :) murugan eppothum ungaludan iruppan :) :)

    ReplyDelete
  26. [[[kanagu said...
    pudhiya oru padathai arimuga paduthiyatharku nandri anna :) :) enaku vilayattu sambandhamana padangal migavum pidikkum... kandipa paapen.. apram pona padhiva padichen... natchathira pathivar aanathuku vazthukkal anna :) :) murugan eppothum ungaludan iruppan :) :)]]]

    மிக்க நன்றிகள் கனகு..!

    ReplyDelete
  27. [[[மயில்ராவணன் said...
    good start brother......rock]]]

    நன்றி மயிலு..!

    ReplyDelete
  28. [[[butterfly Surya said...
    வடை போச்சே..]]]

    போண்ணே.. இதையும் பார்த்துட்டியா..? கொஞ்சம் எங்களுக்கும் இடம் கொடுங்கண்ணே..!

    ReplyDelete
  29. நல்ல படவிமர்சனம்.

    ReplyDelete
  30. [[[மாதேவி said...
    நல்ல பட விமர்சனம்.]]]

    நன்றி..!

    ReplyDelete
  31. நல்ல பதிவு.. நிறைய படங்கள் குறித்து எழுதுங்கள்..

    ReplyDelete
  32. [[[பாலாஜி said...
    நல்ல பதிவு.. நிறைய படங்கள் குறித்து எழுதுங்கள்..]]]

    எனது சினிமா, சினிமா விமர்சனம் லேபிளில் பாருங்கள்.. நிறையவே எழுதியிருக்கிறேன்..

    தங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி பாலாஜி..!

    ReplyDelete