Pages

Thursday, October 01, 2009

அடுத்தப் பிறவில ஜூலு வம்சத்துலதான் பொறக்கணும் முருகா..!

01-10-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


டென்ஷன் வேண்டாம்.. கோபம் வேண்டாம்.. ஆத்திரம் வேண்டாம்னு செவனேன்னு ஒதுங்கியிருந்தாலும் முடியல..
நேத்து பாருங்க..

வழக்கம்போல இணையத்தை மேய்ஞ்சுக்கிட்டிருந்த நேரத்துல பார்த்த இந்த நியூஸை படிச்சவுடனேயே மறுபடியும் டென்ஷன் அதிகமாயி பி.பி. தாறுமாறா எகிறிருச்சு.. என்ன செஞ்சும் பி.பி.யை இப்ப வரைக்கும் குறைக்க முடியலீங்க..


மேட்டர் என்னன்னு கேளுங்க..


தென்ஆப்ரிக்கால 44 வயசான மில்டன் மொபேலி அப்படீன்ற ஒரு லோக்கல் முனிசபல் ஆபீஸ் மேனேஜர் ஒருத்தர், போன வார சனிக்கிழமை ஒரே நேரத்துல 4 பொண்ணுகளை கல்யாணம் பண்ணிருக்காராம்.. அப்புறம் எனக்கு பி.பி. எகிறாம எப்படி இருக்கும்?



Thobile Vilakazi, Smangele Cele, Zanele Langa and Happiness Mdlolo அப்படீன்ற பேரோட இருக்குற அவரோட நாலு மனைவிகளும் ஒருவர் பின் ஒருவராக அவருக்குப் பழக்கமானாங்களாம். ஒண்ணு, இரண்டுன்னு முடிஞ்சவுடனேயே வரிசையா கல்யாணம் பண்ணிக்கலாம்னுதான் நினைச்சாராம்.

ஆனா "லிஸ்ட் தொடர்ந்து மூணு, நாலுன்னு போனதால எல்லாரையும் தனித்தனியா கல்யாணம் பண்ணினா 'பட்ஜெட்' தாங்காதே, அப்படீன்ற நல்ல எண்ணத்துலதான் ஒரே நேரத்துல எல்லார் கழுத்துலேயும் தாலி கட்டினேன்"னு 'ஓப்பன் டாக்' விட்டிருக்கார் நம்ம சிங்கம் மில்டன்.


ஆனாலும் அண்ணனுக்கு இந்தக் கல்யாணத்துலேயே உள்ளூர் ரூபாய்ல ஒரு லட்சம் காலியாம்.. பாவம் இனிமே காசுக்கு என்ன செய்யப் போறார்ன்னு தெரியலை.. ஒருவேளை அந்த முனிசிபாலிட்டில கொடுக்குற சம்பளம், நம்ம அம்பானி சம்பளத்தைவிட ஜாஸ்தியோ என்னவோ?


ஒரு பொண்ணு வந்தாலே வீடு லேசா ஆட்டம் காண்பிக்கும்னு நம்ம டிவி சீரியல் எல்லாத்துலேயும் சொல்லிக் கொடுத்திட்டிருக்காங்க. "இங்க நாலு பேர் ஒண்ணா போறாங்களே என்ன ஆகும்?"னு கேட்டா, "இப்போதைக்கு நாங்க நாலு பேருமே தனித்தனியாத்தான் இருக்கப் போறோம்.. மில்டன் முறை வைச்சு எங்க நாலு பேர் வீட்டுக்கும் வந்து, வந்து போகட்டும்னு எங்களுக்குள்ள பேசி வைச்சிருக்கோம்னு" ஒரு மனைவி பேட்டி கொடுத்திருக்காங்க.. எவ்ளோ நல்ல மனசு பார்த்தீங்களா?



புருஷன் மத்த பொண்டாட்டிகளினால் கஷ்டப்படக்கூடாதேன்னு அவங்களே வட்டமேசை மாநாடு போட்டு பேசி முடிச்சிருக்காங்க.. நல்ல விஷயந்தான்..



நம்ம அண்ணன் மில்டனும் அதையேதான் சொல்றாரு.. "எல்லாரும் ஒரே வீட்ல இருந்தா எனக்குத் தலைவலிதான். அதான் தனித்தனியா அவங்க அவங்க வீட்லயே இருக்கட்டும். நான் ரவுண்ட் அடிச்சுக்குறேன். இத்தனை வருஷமா அதைத்தான செஞ்சுக்கிட்டிருந்தேன்.." அப்படீன்னு நம்ம 'ஆம்பளை புத்தி'யை விட்டுக் கொடுக்காம பேசியிருக்காரு.. நம்ம மானத்தைக் காப்பாத்திட்டாருப்பா..



இதுல இன்னொரு சுவாரசியம் என்னன்னா அண்ணனுக்கு 12 வருஷத்துக்கு முன்னாடியே மேலே சொன்ன நாலு பேர்ல ஒருத்தரான Thobile Vilakazi அப்படீன்ற பெண்ணோட கல்யாணம் நடந்துச்சாம். இப்ப திரும்பி ஒரு தடவை ஜாலிக்கு பண்றாராம்..

அது மட்டுமில்ல.. அண்ணன் பேரைச் சொல்றதுக்கு மொத்தம் 11 பிள்ளைகள் இப்பவே இருக்குதுங்களாம்.. ஆத்தாடி.. தலை சுத்துதா.. விழுந்திராதீங்க.. பக்கத்துல எதையாவது புடிச்சுக்குங்க..

ஆனா இந்த நாலு பேர்ல யாருக்கு, எத்தனை குழந்தைகள்ன்னு அண்ணன் சொல்ல மாட்டேன்னுட்டாராம்.. ஆனா "எனக்கு மொத்தம் 11 புள்ளைகள்"ன்னு நெஞ்சை நிமிர்த்தி சொல்றாரு நம்மண்ணன் மில்டன்.. ஆஹா.. என்ன ஒரு பெருமை.. ஆண் குலத்தின் பெருமையைக் கட்டிக் காப்பாற்றும் அண்ணன் மில்டன் வாழ்க..!

அதுலேயும் இது கிறிஸ்டியன் மேரேஜாம்.. கிறிஸ்டியன்ல்ல இப்படியெல்லாம் செய்யலாமான்னு கேக்காதீங்க. அதுக்குத்தான் ஒரு சுருக்கு வழியிருக்குல்ல?

அதுதான் "எங்க இனத்துல இதெல்லாம் சகஜம்"னு சொல்றாங்க.. இனம்னா சாதாரண இனமல்ல.. தென்ஆப்ரிக்காவில் புகழ் பெற்ற ஜூலு வம்சத்து சிங்கக்குட்டிதான் இந்த மில்டன்..


இந்த வம்சத்துல எத்தனை பெண்களை வேணும்னாலும் கல்யாணம் பண்ணிக்கலாமாம்.. தப்பே இல்லையாம்.. கோர்ட், கேஸுன்னுல்லாம் போகவே முடியாதாம்.. அங்கேயெல்லாம் பெண்ணுரிமை கழகங்கள் இருக்கா? இல்லையா? இது தப்பா? தப்பில்லையா என்றெல்லாம் கேட்கக்கூடாது.. மூச்.. அங்கே இனம் வைத்ததுதான் சட்டமாம்..!



ஏன்னா, அந்த இனத்தில் பிறந்த தற்போதைய தென்ஆப்பிரிக்க நாட்டின் ஜனாதிபதியான ஜேக்கப் ஜூமாவுக்கே அதிகாரப்பூர்வமா மூன்று மனைவிகள். இன்னும் ஒரு மனைவி வெயிட்டிங் லிஸ்ட்ல இருக்காங்க..

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனைவி வீட்டுல ஷிப்ட் டைம் போட்டு டேரா போட்டு நம்ம ஆண் வர்க்கத்தின் இயற்கைக் குணத்தைக் காண்பித்து நமது மானத்தைக் காப்பாற்றி வருகிறார் ஜனாதிபதி ஜேக்கப் ஜூமா. அவரையும் நமது ஆண் வர்க்கத்தின் சார்பாக வாழ்த்துவோம்.

நாட்டின் தலைவரே அப்படி இருக்கும்போது சாதாரணக் குடிமகன் இப்படி இருக்குறதுல என்னங்க தப்பு..?


இவ்வளவு 'வசதி'யும், 'வாய்ப்பு'ம் மிகுந்த அப்படியொரு இனத்தில் ஒரு 'சிங்கமாக' பிறக்க வைக்காமல், இப்படி 'டிவி சீரியல் பார்த்தே சீரழியற தமிழ்நாட்டுல' பொறக்க வைச்சுட்டானே பாவிப்பய முருகன்..

அதாங்க கோபம்.. இதுனாலதான் ஆத்திரம்.. பி.பி.தாறுமாறா ஏறி நிக்குது.. இறங்க மாட்டேங்குது..


இந்நேரம் நானும் அங்கனயே பிறந்து தொலைஞ்சிருந்தா.. ம்.. ம்.. ம்..!!!


"ஒண்ணுக்கே வழியில்லைன்னாலும் ஜொள்ளுக்கு மட்டும் குறைச்சல் இல்லடா.." அப்படீங்குறீங்களா..?

அதுனாலதாங்க கேக்குறேன்.. முருகா.. என் அப்பனே.. சண்முகா.. வடிவேலா.. கார்த்திகேயா.. வேலவா.. கந்தா.. கடம்பா.. கதிர்வேலா..
அடுத்தப் பிறவிலயாச்சும் என்னை அந்த ஜூலு வம்சத்துல ஒரு நல்ல ஆணழகனா, கட்டழகனா பொறக்க வைச்சிரு..

அப்படி செஞ்சீன்னா அங்கேயே ஏகப்பட்ட குன்றுகளும், மலைகளும் இருக்கு. அங்க இருக்குற ஏதாவது ஒரு மலைல உனக்கு ஒரு பிரான்ச் கோவில் வைச்சு நல்லா கல்லா கட்டிர்றேன்.. டீல் ஓகேவா..?


ஏம்ப்பா அங்க தூரத்துல யாரோ கைல வெளக்கமாறு, செருப்பெல்லாம் எடுத்துக்கிட்டு ஓடி வர்றாப்புல இருக்கு.. யாருப்பா இது..?

ஐயோ 'முப்பெரும்தேவிகளா..'? மீ தி எஸ்கேப்பு..!

91 comments:

  1. நல்ல செய்தி, உங்களுக்கு மிகவும் தேவையான செய்தி.

    ReplyDelete
  2. நியாயமான கோபம்தான்!

    பிபி வந்தா தப்பே இல்லை!

    ReplyDelete
  3. :)

    நல்ல பேரு வச்சிருக்கான்யா 'மில்டன்' :)

    ReplyDelete
  4. ஜூரவேகத்துலே...... முருகன்கிட்டே வரமெல்லாம் கேக்கறீங்க!!!!!

    ReplyDelete
  5. உங்களுக்கு இது தேவையா பாஸ்..

    இப்படி வெட்டி நியூஸ் படிச்சு டென்சனாகுறத விட பேசாம பழநிக்கு பாதயாத்திரை போய்ட்டுவாங்க..

    ReplyDelete
  6. ஜோ/Joe said...
    :)

    நல்ல பேரு வச்சிருக்கான்யா 'மில்டன்' :)



    ஓ! ஓ!

    உங்க பேரா!?

    ReplyDelete
  7. அப்ப, நானும் என் முடிவை மாத்திக்கவா?

    ReplyDelete
  8. தமிழா
    பல் இருக்கீரவன் பகடா சாப்பிடரான்
    பாழும் தமிழ்நாட்ல பெறந்தவன் ஏக்கத்துலே அழுவுறான்.

    பிபி குறைய எளிய வழி

    சிறுவர்களுக்காக விற்க்கும் பீப்பியை (விசில்) உதிக்கொண்டு நீங்கள் வசிக்கும் தெருவில் குறுக்கு நெடுக்காக 15 நிமிடம் தலை தெரிக்க ஓடவும். இதனால் பிபி படிப்படியாக குறைந்துவிடும்.

    ReplyDelete
  9. //ஓ! ஓ!

    உங்க பேரா!?//

    :) ஹி ஹி.

    ReplyDelete
  10. முருகன் தமிழ்க்கடவுள். அவரிடம் கேட்டால் தமிழ் நாட்டில்தான் பிறக்க வைப்பார். Zulu இனக் கடவுளிடம் வேண்டிப் பாருங்கள். பலன் கிடைக்கலாம்.

    பாவம் அவர்கள் இனத்தில் ஆண்களுக்கு பஞ்சமோ என்னவோ. ஆண் சிங்கம் அண்ணன் உ.த. இருப்பது அந்த இனப் பெண்களுக்குத் தெரியாது. இல்லாவிட்டால் 4 என்ன 10 பேர் கூட தேடி வருவார்கள். ஹி ஹி ஹி.

    ReplyDelete
  11. என்னது தாறுமாறா ஏறிநிக்குது.. இறங்க மாட்டேன்குதா ...போட்டோவைப் பாருங்க பாஸ்...'சட்'டுனு இறங்கிடுது...

    ReplyDelete
  12. சென்னையிலிருந்து பழனிக்கு அங்க பிரதட்சனம் செய்தபடியே சென்றால் இது நிறைவேறுகிறதாம்.

    முயன்று பாருங்கள்!

    வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  13. அந்த ஜூலு வம்சத்துல ஒரு நல்ல ஆணழகனா, கட்டழகனா பொறக்க வைச்சிரு..

    :))))))))))))))))

    ReplyDelete
  14. //சென்னையிலிருந்து பழனிக்கு அங்க பிரதட்சனம் செய்தபடியே சென்றால் இது நிறைவேறுகிறதாம்.
    //

    அதுவும் அலகு குத்திக் கொண்டு அங்கபிரதட்சனம் செய்தால் கைமேல் பலன் இருக்கிறதாம்!

    ஆல் தி பெஸ்ட்!

    ReplyDelete
  15. இதை இதை தான் உங்க கிட்டே இருந்து எதிர் பார்க்குறேன்....

    ReplyDelete
  16. தல கலைஞர் அத விடவும் கலக்கலியா. ஏன் மாற்றான் தோட்டத்து மல்லிகையை பெரிசு படுத்துறீங்க

    ReplyDelete
  17. //அடுத்தப் பிறவில ஜூலு வம்சத்துலதான் பொறக்கணும் முருகா..! //

    அண்ணே இந்த பிறவியிலேயே அங்க பிறந்த மாதிரிதான் இருக்கோம்(நாம), வேண்டும் என்றால் ஒரு விசா எடுத்துக்கிட்டு அங்க போய் பார்க்கலாமா? :))))

    ReplyDelete
  18. //இவ்வளவு 'வசதி'யும், 'வாய்ப்பு'ம் மிகுந்த அப்படியொரு இனத்தில் ஒரு 'சிங்கமாக' பிறக்க வைக்காமல், இப்படி 'டிவி சீரியல் பார்த்தே சீரழியற தமிழ்நாட்டுல' பொறக்க வைச்சுட்டானே பாவிப்பய முருகன்..
    //

    சும்மா டிவி பாத்திட்டிருந்தா எப்படி. போய் முயர்ச்சி பண்ணுங்க . முயர்சியுடையார் இகழ்ச்சியடையார்.

    ReplyDelete
  19. குசும்பன் said...
    //அடுத்தப் பிறவில ஜூலு வம்சத்துலதான் பொறக்கணும் முருகா..! //

    அண்ணே இந்த பிறவியிலேயே அங்க பிறந்த மாதிரிதான் இருக்கோம்(நாம), வேண்டும் என்றால் ஒரு விசா எடுத்துக்கிட்டு அங்க போய் பார்க்கலாமா? :))))
    //
    நாம் தமிழர், கொஞ்சம் செந்நிறமாக இருப்பதால்(தெரிவதால்) 4 கிடைக்க வாய்ப்பு இல்லை. ஒருவேளை கொஞ்சம் குறைவாகக் கிடைக்கலாம்.
    (தருமி கேட்டது மாதிரி)

    விசா எடுத்து, டிக்கெட் எல்லாம் எடுத்து...!

    ஏன் இப்படி!?

    ReplyDelete
  20. //ஒரு பொண்ணு வந்தாலே வீடு லேசா ஆட்டம் காண்பிக்கும்னு நம்ம டிவி சீரியல் எல்லாத்துலேயும் சொல்லிக் கொடுத்திட்டிருக்காங்க//

    டிவி சீரியல் பார்டியா நீங்க, ஹலோ, "கல்யாணம் பண்ணி பார் பின் புரியும் அந்த சொர்கத்தின் அருமை" என்ற வார்த்தையை உங்களுக்கு இங்கு நியாபகபடுத்த விரும்புகிறேன்.

    நல்ல குஜாலான பதிவுக்கு, நன்றி :-)

    ReplyDelete
  21. ரொம்ப பொறாமைப்படாதிங்க!

    புகைச்சல் வாடை இங்க அடிக்குது!

    ReplyDelete
  22. பல்லு உள்ளவன் பட்டாணி சாப்புடுறான், நாம தான் பன்னக் கூட டீயில நனைச்சு சாப்புட வேண்டியிருக்கே, எதுக்கு வயித்தெரிச்சல் பட்டுக்கிட்டு?

    அப்பாலிக்கா அல்சரும் சேர்ந்து வந்துரப் போவுதுண்ணே. போங்க போயி தண்ணிய குடிங்க.

    என்னாது எந்த தண்ணியா, எதை வேணும்ணாலும் குடிங்கப்பூ.

    ReplyDelete
  23. /அடுத்தப் பிறவில ஜூலு வம்சத்துலதான் பொறக்கணும் முருகா..!/

    இந்தப் பிறவியில் லோலோன்னு அலைஞ்சாலும் பரவாயில்லைன்னுட்டு ஒரு முடிவுக்கு வந்துட்டீங்களா?

    முருகா! முருகா! உ.த.வைக் காப்பாத்து!

    ReplyDelete
  24. இப்பவே முருகன்(சனி பெயற்சி) எஸ்ஸாகிட்டு இருக்குற நேரம்

    நீங்க கேட்குற யெல்லாம் கொடுக்க ஆரம்பிச்சிட்டா முருகன் அம்போதான்

    பிளக்குல டிக்கெட் விக்கிறவனிலிருந்து மில்டன் வரைக்கும் சாபம் கொடுத்தா முருகன் எப்படி வருவாரு???

    ReplyDelete
  25. முருகா.. என் அப்பனே.. சண்முகா.. வடிவேலா.. கார்த்திகேயா.. வேலவா.. கந்தா.. கடம்பா.. கதிர்வேலா.. அடுத்தப் பிறவிலயாச்சும் என்னை அந்த ஜூலு வம்சத்துல ஒரு நல்ல ஆணழகனா, கட்டழகனா பொறக்க வைச்சிரு..
    //\


    இதையேதான் போன ஜென்மத்தில் விட்டுடு முருகா இந்த பெண்கள் கிட்ட இருந்து என்னை அடுத்த ஜென்மத்திலாவது காப்பாத்துனு சொல்லி புலம்பினனு நீ கேட்ட மாதிரியே செஞ்சேன் இப்ப திரும்பவுமா???

    முருகன்: சிவனே என்னையை இந்த உனா தானா கிட்ட இருந்து காப்பாத்து பிளிஸ்

    :)

    ReplyDelete
  26. நமக்கு கொடுத்து வச்சது அம்புட்டு தாங்க! கேட்டா கண்ணகி, கேவலன்னு கொல்லுவாங்க!

    ReplyDelete
  27. [[[Arun Kumar said...
    me the first]]]

    இன்னும் இந்த மேனியா விடலையா..?

    ReplyDelete
  28. [[[Arun Kumar said...
    நல்ல செய்தி, உங்களுக்கு மிகவும் தேவையான செய்தி.]]]

    அதனாலதான் என் வயித்தெரிச்சலை கொட்டினேன்..!

    ReplyDelete
  29. [[[நாமக்கல் சிபி said...

    நியாயமான கோபம்தான்!

    பிபி வந்தா தப்பே இல்லை!]]]

    அப்படியே செத்திருந்தாலும் தப்பே இல்லியா..?

    ReplyDelete
  30. [[[ஜோ/Joe said...

    :)

    நல்ல பேரு வச்சிருக்கான்யா 'மில்டன்' :)]]]

    கூல் டவுன் மிஸ்டர் மில்டன்ஜோ..!

    ReplyDelete
  31. [[[துளசி கோபால் said...
    ஜூர வேகத்துலே...... முருகன்கிட்டே வரமெல்லாம் கேக்கறீங்க!!!!!]]]

    கேட்டு என்ன புண்ணியம் டீச்சர்.. அவன் ஏதாவது கருணை காட்டணுமே?

    ReplyDelete
  32. [[[தீப்பெட்டி said...

    உங்களுக்கு இது தேவையா பாஸ்..

    இப்படி வெட்டி நியூஸ் படிச்சு டென்சனாகுறதவிட பேசாம பழநிக்கு பாதயாத்திரை போய்ட்டுவாங்க..]]]

    அவன் கூப்பிடணுமே..?

    ReplyDelete
  33. [[[அத்திவெட்டி ஜோதிபாரதி said...

    ஜோ/Joe said...
    :)

    நல்ல பேரு வச்சிருக்கான்யா 'மில்டன்' :)



    ஓ! ஓ!

    உங்க பேரா!?]]]

    அப்புறம்.. பூனைக்குட்டி எப்படி வெளில வந்திருச்சு பாருங்க..!

    ReplyDelete
  34. [[[ஜெரி ஈசானந்தா. said...
    அப்ப, நானும் என் முடிவை மாத்திக்கவா?]]]

    ஜெரி ஸார்.. இதுலகூடவா போட்டி போடுவீங்க..?

    ReplyDelete
  35. [[[♠புதுவை சிவா♠ said...

    தமிழா
    பல் இருக்கீரவன் பகடா சாப்பிடரான்
    பாழும் தமிழ்நாட்ல பெறந்தவன் ஏக்கத்துலே அழுவுறான்.

    பிபி குறைய எளிய வழி

    சிறுவர்களுக்காக விற்க்கும் பீப்பியை (விசில்) உதிக்கொண்டு நீங்கள் வசிக்கும் தெருவில் குறுக்கு நெடுக்காக 15 நிமிடம் தலை தெரிக்க ஓடவும். இதனால் பிபி படிப்படியாக குறைந்துவிடும்.]]]

    நாய் துரத்துமே..?

    ReplyDelete
  36. [[[ஜோ/Joe said...

    //ஓ! ஓ!

    உங்க பேரா!?//

    :) ஹி ஹி.]]]

    ஓவர் ஆக்ட்டிங் ஜோ..!

    ReplyDelete
  37. [[[ananth said...
    முருகன் தமிழ்க் கடவுள். அவரிடம் கேட்டால் தமிழ் நாட்டில்தான் பிறக்க வைப்பார். Zulu இனக் கடவுளிடம் வேண்டிப் பாருங்கள். பலன் கிடைக்கலாம்.]]]

    அப்படீங்கிறீங்க..? சரி அவங்க கடவுள் யாரோ..?

    [[[பாவம் அவர்கள் இனத்தில் ஆண்களுக்கு பஞ்சமோ என்னவோ. ஆண் சிங்கம் அண்ணன் உ.த. இருப்பது அந்த இனப் பெண்களுக்குத் தெரியாது. இல்லாவிட்டால் 4 என்ன 10 பேர் கூட தேடி வருவார்கள். ஹி ஹி ஹி.]]]

    10 பேரா..? முருகா.. முருகா.. முருகா..!

    ReplyDelete
  38. [[[ஸ்ரீராம். said...
    என்னது தாறுமாறா ஏறி நிக்குது.. இறங்க மாட்டேன்குதா. போட்டோவைப் பாருங்க பாஸ்...'சட்'டுனு இறங்கிடுது...]]]

    அப்படியா..? எனக்கு அப்படியொண்ணும் ஆகலியே..!

    ReplyDelete
  39. [[[ஷாகுல் said...
    சென்னையிலிருந்து பழனிக்கு அங்கபிரதட்சனம் செய்தபடியே சென்றால் இது நிறைவேறுகிறதாம்.

    முயன்று பாருங்கள்!

    வாழ்த்துக்கள்!!]]]

    உசிரோட போய்ச் சேர்ந்தாதான கோரிக்கையை பத்தி கடைசியா நினைக்க முடியும்..!

    ஏன் இந்தக் கொலை வெறி..?

    ReplyDelete
  40. [[[gulf-tamilan said...
    அந்த ஜூலு வம்சத்துல ஒரு நல்ல ஆணழகனா, கட்டழகனா பொறக்க வைச்சிரு..
    :))))))))))))))))]]]

    உண்மையைச் சொன்னா உங்களுக்கு சிரிப்பாத்தாம்பூ இருக்கும்..!

    ReplyDelete
  41. [[[நாமக்கல் சிபி said...

    //சென்னையிலிருந்து பழனிக்கு அங்க பிரதட்சனம் செய்தபடியே சென்றால் இது நிறைவேறுகிறதாம்.//

    அதுவும் அலகு குத்திக் கொண்டு அங்கபிரதட்சனம் செய்தால் கைமேல் பலன் இருக்கிறதாம்!

    ஆல் தி பெஸ்ட்!]]]

    சாகுறதுக்கு ஆல் தி பெஸ்ட் சொல்ற ஒரே நாள் நீதான் முருகா..!

    ReplyDelete
  42. [[[நையாண்டி நைனா said...
    இதை இதை தான் உங்க கிட்டே இருந்து எதிர் பார்க்குறேன்....]]]

    என்ன எழுதினாலும் உன்னை மாதிரி நையாண்டி பண்ண முடியுமா நைனா..?

    ReplyDelete
  43. [[["உழவன்" " Uzhavan " said...
    ரசனையான தகவல் :-)]]]

    நன்றி உழவன் ஸார்..!

    ReplyDelete
  44. [[[T.V.Radhakrishnan said...
    :-)))]]]

    வருகைக்கு நன்றிங்கோ ஐயா..!

    ReplyDelete
  45. [[[jaisankar jaganathan said...
    தல கலைஞர் அத விடவும் கலக்கலியா. ஏன் மாற்றான் தோட்டத்து மல்லிகையை பெரிசுபடுத்துறீங்க]]]

    ச்சூ.. மெதுவா.. கொஞ்சமா..? காதுல விழுந்திரப் போகுது..!

    ReplyDelete
  46. உண்மையிலேயே முருகனை நேசிப்பவர் என்றால் இரண்டு பொண்டாட்டி கட்டவும்.


    இங்கே கடவுளே கலக்கிக்கிட்டு இருக்கார். அதையும் நீரு என் கடவுள் என் கடவுள் என்று கொண்டாடுதீர். அந்தக் கொடுமையையும் நாங்க சகிச்சுக்கிட்டு(சகிப்புத்தன்மை) இருக்கோம் . சாதரண மனுசன் செய்தால் என்ன தவறு?

    சிவன் தலையில் வப்பாட்டி.

    இந்திரன் என்ற ஒரு டவுசர் அடுத்த வீட்டில் ஏமாற்றி நுழைந்து ஆயிரம் யோனிகள் சாபம் வாங்குவதே வாடிக்கை.

    அழகர் ஆத்துல இறங்கி மலைக்குப்போறவழியில ஒரு மாற்றுமதப் பெண்வீட்டிற்கு போவதாக கேள்விப்பட்டேன் உண்மையா?


    பொண்டாட்டியை சந்தேகப்பட்டு காட்டிற்கு அனுப்பிய முன்னோடி இராமர் ..

    ........

    ReplyDelete
  47. [[[குசும்பன் said...

    //அடுத்தப் பிறவில ஜூலு வம்சத்துலதான் பொறக்கணும் முருகா..! //

    அண்ணே இந்த பிறவியிலேயே அங்க பிறந்த மாதிரிதான் இருக்கோம்(நாம), வேண்டும் என்றால் ஒரு விசா எடுத்துக்கிட்டு அங்க போய் பார்க்கலாமா? :))))]]]

    நான் ரெடி.. பிளைட் டிக்கெட்டுக்கு காசு..?

    ReplyDelete
  48. [[[jaisankar jaganathan said...

    //இவ்வளவு 'வசதி'யும், 'வாய்ப்பு'ம் மிகுந்த அப்படியொரு இனத்தில் ஒரு 'சிங்கமாக' பிறக்க வைக்காமல், இப்படி 'டிவி சீரியல் பார்த்தே சீரழியற தமிழ்நாட்டுல' பொறக்க வைச்சுட்டானே பாவிப்பய முருகன்..//

    சும்மா டிவி பாத்திட்டிருந்தா எப்படி. போய் முயர்ச்சி பண்ணுங்க . முயர்சியுடையார் இகழ்ச்சியடையார்.]]]

    சரி.. உங்க மேல நம்பிக்கை வைச்சு முயற்சி பண்றேன்..!

    ReplyDelete
  49. [[[அத்திவெட்டி ஜோதிபாரதி said...

    குசும்பன் said...
    //அடுத்தப் பிறவில ஜூலு வம்சத்துலதான் பொறக்கணும் முருகா..! //

    அண்ணே இந்த பிறவியிலேயே அங்க பிறந்த மாதிரிதான் இருக்கோம்(நாம), வேண்டும் என்றால் ஒரு விசா எடுத்துக்கிட்டு அங்க போய் பார்க்கலாமா? :))))//

    நாம் தமிழர், கொஞ்சம் செந்நிறமாக இருப்பதால்(தெரிவதால்) 4 கிடைக்க வாய்ப்பு இல்லை. ஒருவேளை கொஞ்சம் குறைவாகக் கிடைக்கலாம்.(தருமி கேட்டது மாதிரி)
    விசா எடுத்து, டிக்கெட் எல்லாம் எடுத்து...!
    ஏன் இப்படி!?]]]

    அவனுக்கு ஒரு ஆசை.. அப்படியே அங்கேயே செட்டிலாகலாம்னு அவனுக்கு ஒரு ஆசை இருக்கோ? என்னவோ?

    ReplyDelete
  50. [[[சிங்கக்குட்டி said...

    //ஒரு பொண்ணு வந்தாலே வீடு லேசா ஆட்டம் காண்பிக்கும்னு நம்ம டிவி சீரியல் எல்லாத்துலேயும் சொல்லிக் கொடுத்திட்டிருக்காங்க//

    டிவி சீரியல் பார்டியா நீங்க, ஹலோ, "கல்யாணம் பண்ணி பார் பின் புரியும் அந்த சொர்கத்தின் அருமை" என்ற வார்த்தையை உங்களுக்கு இங்கு நியாபகபடுத்த விரும்புகிறேன்.

    நல்ல குஜாலான பதிவுக்கு, நன்றி :-)]]]

    சிங்கக்குட்டி.. கொடுத்து வைச்சவர் நீங்க.. மெய்யாலுமே..!

    ReplyDelete
  51. [[[வால்பையன் said...

    ரொம்ப பொறாமைப்படாதிங்க!

    புகைச்சல் வாடை இங்க அடிக்குது!]]]

    அட போப்பா வாலு.. ஆசைப்படாம எப்படி அடையறது..?

    ReplyDelete
  52. [[[ஜோசப் பால்ராஜ் said...

    பல்லு உள்ளவன் பட்டாணி சாப்புடுறான், நாமதான் பன்னக் கூட டீயில நனைச்சு சாப்புட வேண்டியிருக்கே, எதுக்கு வயித்தெரிச்சல்பட்டுக்கிட்டு?
    அப்பாலிக்கா அல்சரும் சேர்ந்து வந்துரப் போவுதுண்ணே. போங்க போயி தண்ணிய குடிங்க.
    என்னாது எந்த தண்ணியா, எதை வேணும்ணாலும் குடிங்கப்பூ.]]]

    ஓகே.. ஓகே.. அட்வைஸுக்கு தேங்க்ஸ்..

    ReplyDelete
  53. [[[கிருஷ்ணமூர்த்தி said...

    /அடுத்தப் பிறவில ஜூலு வம்சத்துலதான் பொறக்கணும் முருகா..!/

    இந்தப் பிறவியில் லோலோன்னு அலைஞ்சாலும் பரவாயில்லைன்னுட்டு ஒரு முடிவுக்கு வந்துட்டீங்களா?

    முருகா! முருகா! உ.த.வைக் காப்பாத்து!]]]

    ஆமா.. முருகனை ஒரு கை பார்க்குறதுன்னு முடிவு பண்ணி்ட்டேன்..!

    ReplyDelete
  54. [[[மின்னுது மின்னல் said...

    இப்பவே முருகன்(சனி பெயற்சி) எஸ்ஸாகிட்டு இருக்குற நேரம்

    நீங்க கேட்குறயெல்லாம் கொடுக்க ஆரம்பிச்சிட்டா முருகன் அம்போதான்

    பிளக்குல டிக்கெட் விக்கிறவனிலிருந்து மில்டன்வரைக்கும் சாபம் கொடுத்தா முருகன் எப்படி வருவாரு???]]]

    பின்ன.. என்ன சொன்னாத்தான்.. எப்படி திட்டினாத்தான் அவன் வருவானாம்..?

    ReplyDelete
  55. [[[மின்னுது மின்னல் said...
    முருகா.. என் அப்பனே.. சண்முகா.. வடிவேலா.. கார்த்திகேயா.. வேலவா.. கந்தா.. கடம்பா.. கதிர்வேலா.. அடுத்தப் பிறவிலயாச்சும் என்னை அந்த ஜூலு வம்சத்துல ஒரு நல்ல ஆணழகனா, கட்டழகனா பொறக்க வைச்சிரு..//

    இதையேதான் போன ஜென்மத்தில் விட்டுடு முருகா இந்த பெண்கள்கிட்ட இருந்து என்னை அடுத்த ஜென்மத்திலாவது காப்பாத்துனு சொல்லி புலம்பினனு நீ கேட்ட மாதிரியே செஞ்சேன் இப்ப திரும்பவுமா???

    முருகன்: சிவனே என்னையை இந்த உனாதானாகிட்ட இருந்து காப்பாத்து பிளிஸ்]]]

    அச்சச்சோ மின்னலு.. இப்படியொரு மேட்டர் இருக்கா? எனக்குத் தெரியாம போச்சே.. இருந்தாலும் இருக்கலாம்..!

    ReplyDelete
  56. [[[Ammu Madhu said...
    kodumada saami..]]]

    எது அவர் செஞ்சதா? நான் கேட்டதா..?

    ReplyDelete
  57. [[[pappu said...
    நமக்கு கொடுத்து வச்சது அம்புட்டுதாங்க! கேட்டா கண்ணகி, கேவலன்னு கொல்லுவாங்க!]]]

    ஆமாமாம்.. உண்மைதான் பாப்பூ..!

    ReplyDelete
  58. [[[கல்வெட்டு said...

    உண்மையிலேயே முருகனை நேசிப்பவர் என்றால் இரண்டு பொண்டாட்டி கட்டவும்.
    இங்கே கடவுளே கலக்கிக்கிட்டு இருக்கார். அதையும் நீரு என் கடவுள் என் கடவுள் என்று கொண்டாடுதீர். அந்தக் கொடுமையையும் நாங்க சகிச்சுக்கிட்டு(சகிப்புத்தன்மை) இருக்கோம். சாதரண மனுசன் செய்தால் என்ன தவறு?
    சிவன் தலையில் வப்பாட்டி.
    இந்திரன் என்ற ஒரு டவுசர் அடுத்த வீட்டில் ஏமாற்றி நுழைந்து ஆயிரம் யோனிகள் சாபம் வாங்குவதே வாடிக்கை. அழகர் ஆத்துல இறங்கி மலைக்குப் போற வழியில ஒரு மாற்றுமதப் பெண் வீட்டிற்கு போவதாக கேள்விப்பட்டேன் உண்மையா?
    பொண்டாட்டியை சந்தேகப்பட்டு காட்டிற்கு அனுப்பிய முன்னோடி இராமர் ..]]]

    ஐயா கல்வெட்டுஜி..

    நான் ஒரு சாதாரண மனுஷனாத்தான் அவன்கூட பேசுறேன்..

    நீங்க சொல்ற மாதிரி பார்த்தா நானும் அவனை மாதிரி ஒரு கடவுளாகணும்..

    முடியற காரியமா..? இருக்குற இருப்பே போதும்ஜி..

    ReplyDelete
  59. //அதாங்க கோபம்.. இதுனாலதான் ஆத்திரம்.. பி.பி.தாறுமாறா ஏறி நிக்குது.. இறங்க மாட்டேங்குது..//

    same blood

    ReplyDelete
  60. அண்ணே நீங்களும் யூத் யூத் அப்படின்னு மார்
    தட்டுறிங்க.....
    உங்களுக்கு ஒரே நாள்ல எட்டு கல்யாணம்
    பண்றோம்...
    எப்புடி????

    ReplyDelete
  61. ஆமா
    நமக்கு கிடைக்காதது அடுத்தவனுக்கு கெடச்சா ஏன் பி.பி ஏறாது?
    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  62. அண்ணே oralirukkuravan olakkaiyath thookkuraan, namekkethukku veen velai pesaama kavunthu padunga annaachchi.

    ReplyDelete
  63. சரியாக காதில் வாங்காமல் அடுத்த ஜென்மத்தில் ஜூலு இன பெண்ணாக படைத்து விட போகிறார்,ஜாக்கிரதை

    ReplyDelete
  64. நம்ப ஆளே - வள்ளி,தெய்வானை - ரெண்டு ரெடி பண்ணிட்டாரு... எல்லா எடத்திலேயும் வசதி இருக்கு.நம்மாள முடியுமா? அதான் கேள்வி.ஊட்டில புறந்தா எஸ்டேட் ஓனராக முடியுமா?....
    எங்க புறந்தாலும் நம்ம ராமர்தான் (வேற வழி!!!????)

    ReplyDelete
  65. அதுனாலதாங்க கேக்குறேன்.. முருகா.. என் அப்பனே.. சண்முகா.. வடிவேலா.. கார்த்திகேயா.. வேலவா.. கந்தா.. கடம்பா.. கதிர்வேலா.. அடுத்தப் பிறவிலயாச்சும் என்னை அந்த ஜூலு வம்சத்துல ஒரு நல்ல ஆணழகனா, கட்டழகனா பொறக்க வைச்சிரு..

    /////////////

    அந்த வம்சம் எதுக்கு??!??!
    முருகர் வம்சமே கெளுங்க , அங்கேயும் 2 3 ன்னு இருக்கும்

    ReplyDelete
  66. அண்ணே! உங்க ஆசை எனக்கு புரியுது, ஆனா ஒன்னை மறந்துறாதிங்க தென் அமெரிக்க நாடுகளில் இனச் சண்டைகள் அதிகம். நட்ட நடு சாலையில் ஆயுதங்களுடன் வெட்டிக்கொள்வதும் சகஜம். அம்மினிகளுக்கு ஆசைப்பட்டு, நடு சாலையில் ஏன் சாகனும். நம்ம ஊரு மட்டும் என்ன வாழுதுனு கேக்காதிங்க, இங்க ஒரு அறுபது சதவிகிதம் பாதுகாப்பு உணர்வுடன் வாழ்பது ரொம்ப நல்லது இல்லையா?. ஒரே ஒரு பெண்ணை மணந்து அவள் எப்படி இருந்தாலும் அவளை முழுமனதுடன் காதலித்து வாழ்ந்தால் அவள் திருப்பிச் செலுத்தும் அன்பிற்கும் இணைதலுக்கும் இணையாக உலகத்தில் ஈடு எதுவும் இல்லங்கனா? பரவாயில்லை நிறைய பின்னூட்டங்களைப் பார்த்தால் நம்ம பதிவர்களின் விருப்பம் என்னனு புரியுது.

    டிஸ்கி: எனக்கும் நீக்ரே பெண்னுக புடிக்கும்,ஆனா அதுக்கு என்ன பண்ணறது, நம்ம தங்கமணிதான் நமக்கு பெஸ்ட்.

    ReplyDelete
  67. முதல்ல எப்பப்பாரு கம்ப்யூட்டரை கட்டிட்டி அழுவறை நிறுத்திட்டு.. வீட்டை விட்டு வெளியே வாங்க.. சுத்தும் முத்தும் பாருங்க..உலகத்தோட கலங்க.. எப்பப்பாரு வீட்டோடு கிடந்தா.. ஏதோ கல்யாணம் ஆகி டைவர்ஸ் ஆகி நொந்து போய் வீட்டோரு இருக்கருன்னு நினைக்க போறாங்க..:)

    ReplyDelete
  68. [[[D.R.Ashok said...
    //அதாங்க கோபம்.. இதுனாலதான் ஆத்திரம்.. பி.பி.தாறுமாறா ஏறி நிக்குது.. இறங்க மாட்டேங்குது..//

    same blood]]]

    Thanks ashok..

    ReplyDelete
  69. [[[ஜெட்லி said...
    அண்ணே நீங்களும் யூத் யூத் அப்படின்னு மார் தட்டுறிங்க.....
    உங்களுக்கு ஒரே நாள்ல எட்டு கல்யாணம் பண்றோம்...
    எப்புடி????]]]

    சரிதான்.. புடிச்சு உள்ள போட்டிற மாட்டாங்களே..!

    ReplyDelete
  70. [[[sriram said...

    ஆமா
    நமக்கு கிடைக்காதது அடுத்தவனுக்கு கெடச்சா ஏன் பி.பி ஏறாது?
    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்]]]

    ஹி.. ஹி.. ஹி.. கொஞ்சூண்டு பொறாமைதான் ஸார்..!

    ReplyDelete
  71. [[[பித்தன் said...
    அண்ணே oralirukkuravan olakkaiyath thookkuraan, namekkethukku veen velai pesaama kavunthu padunga annaachchi.]]]

    இப்படிச் சொல்லியே கவுத்துறீங்களேப்பா..! நமக்குன்னு ஒரு வீரம் வேணாம்..?

    ReplyDelete
  72. [[[ஜாகிர் said...
    சரியாக காதில் வாங்காமல் அடுத்த ஜென்மத்தில் ஜூலு இன பெண்ணாக படைத்து விட போகிறார்,ஜாக்கிரதை]]]

    எனக்குத்தான் காது கேட்காது.. என் அப்பனுக்கு நன்றாகவே கேட்கும் ஜாகிர்..!

    ReplyDelete
  73. [[[அரங்கப்பெருமாள் said...
    நம்ப ஆளே - வள்ளி, தெய்வானை - ரெண்டு ரெடி பண்ணிட்டாரு... எல்லா எடத்திலேயும் வசதி இருக்கு. நம்மாள முடியுமா? அதான் கேள்வி. ஊட்டில புறந்தா எஸ்டேட் ஓனராக முடியுமா?.... எங்க புறந்தாலும் நம்ம ராமர்தான் (வேற வழி!!!????)]]]

    எத்தனை வருஷத்துக்கு ராமரையே கட்டி அழுவுறது..

    கொஞ்ச வருஷத்துக்கு கிருஷ்ணன் மாதிரியிருப்போமே..?

    ReplyDelete
  74. [[[பிரியமுடன் பிரபு said...
    அதுனாலதாங்க கேக்குறேன்.. முருகா.. என் அப்பனே.. சண்முகா.. வடிவேலா.. கார்த்திகேயா.. வேலவா.. கந்தா.. கடம்பா.. கதிர்வேலா.. அடுத்தப் பிறவிலயாச்சும் என்னை அந்த ஜூலு வம்சத்துல ஒரு நல்ல ஆணழகனா, கட்டழகனா பொறக்க வைச்சிரு..//

    அந்த வம்சம் எதுக்கு??!??!
    முருகர் வம்சமே கெளுங்க , அங்கேயும் 2 3 ன்னு இருக்கும்]]]

    முருகர் வம்சம் இப்ப ரொம்பத் திருந்திருச்சுங்க.. அங்கேயெல்லாம் முடியாதுங்க..

    முருகன் மட்டும்தான் வைச்சுக்குவானாம்..!

    ReplyDelete
  75. [[[பித்தனின் வாக்கு said...
    அண்ணே! உங்க ஆசை எனக்கு புரியுது, ஆனா ஒன்னை மறந்துறாதிங்க தென் அமெரிக்க நாடுகளில் இனச் சண்டைகள் அதிகம். நட்டநடு சாலையில் ஆயுதங்களுடன் வெட்டிக்கொள்வதும் சகஜம். அம்மினிகளுக்கு ஆசைப்பட்டு, நடு சாலையில் ஏன் சாகனும். நம்ம ஊரு மட்டும் என்ன வாழுதுனு கேக்காதிங்க, இங்க ஒரு அறுபது சதவிகிதம் பாதுகாப்பு உணர்வுடன் வாழ்பது ரொம்ப நல்லது இல்லையா?. ஒரே ஒரு பெண்ணை மணந்து அவள் எப்படி இருந்தாலும் அவளை முழு மனதுடன் காதலித்து வாழ்ந்தால் அவள் திருப்பிச் செலுத்தும் அன்பிற்கும் இணைதலுக்கும் இணையாக உலகத்தில் ஈடு எதுவும் இல்லங்கனா? பரவாயில்லை நிறைய பின்னூட்டங்களைப் பார்த்தால் நம்ம பதிவர்களின் விருப்பம் என்னனு புரியுது.
    டிஸ்கி: எனக்கும் நீக்ரே பெண்னுக புடிக்கும்,ஆனா அதுக்கு என்ன பண்ணறது, நம்ம தங்கமணிதான் நமக்கு பெஸ்ட்.]]]

    போச்சுடா.. பித்தா.. தங்கமணியின் பித்துப் பிடித்து அலைகிறாய் போலிருக்கிறது..

    உன் பித்தம் தெளிய என் அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன்..

    ReplyDelete
  76. [[[VIKNESHWARAN said...

    ஓ மை காட்...]]]

    வொய் விக்கி.. ஷாக்கா கீதா..?

    நீங்களும் துணைக்கு வர்றீங்களா?

    ReplyDelete
  77. [[[Cable Sankar said...
    முதல்ல எப்பப் பாரு கம்ப்யூட்டரை கட்டிட்டி அழுவறை நிறுத்திட்டு.. வீட்டை விட்டு வெளியே வாங்க.. சுத்தும் முத்தும் பாருங்க.. உலகத்தோட கலங்க.. எப்பப்பாரு வீட்டோடு கிடந்தா.. ஏதோ கல்யாணம் ஆகி டைவர்ஸ் ஆகி நொந்து போய் வீட்டோரு இருக்கருன்னு நினைக்க போறாங்க..:)]]]

    உன்னைவிடவா..? ஊருக்கு மட்டும்தான் உபதேசம் போலிருக்கு தம்பி..!

    ReplyDelete
  78. இதென்ன கூத்து !

    இதெல்லாம் எங்க போய் முடியப்போகுதோ ...

    ReplyDelete
  79. [[[Starjan ( ஸ்டார்ஜன் ) said...
    இதென்ன கூத்து! இதெல்லாம் எங்க போய் முடியப் போகுதோ.]]]

    தென்ஆப்ரிக்காலதான் போய் முடியணும்..!

    ReplyDelete
  80. /
    "இப்போதைக்கு நாங்க நாலு பேருமே தனித்தனியாத்தான் இருக்கப் போறோம்.. மில்டன் முறை வைச்சு எங்க நாலு பேர் வீட்டுக்கும் வந்து, வந்து போகட்டும்னு எங்களுக்குள்ள பேசி வைச்சிருக்கோம்னு" ஒரு மனைவி பேட்டி கொடுத்திருக்காங்க.. எவ்ளோ நல்ல மனசு பார்த்தீங்களா?

    /

    ROTFL
    :))))))))))))))

    பதிவு முழுக்க தமாஷ்தான் போங்க!

    ReplyDelete
  81. ஆசைப்படுங்கள், பேராசைப் படாதீர்கள்.
    ஒரு பெண்ணை மணக்க நினைத்தால் அது ஆசை ,நியாயம்தான் ,ஆனால் நான்கு பெண்களை மணக்க நினைக்கிறீர்களே ,இது பேராசை ,
    சில காலமாக அடிக்கடி டென்ஷன் ஆகிறீர்கள் உங்கள் உடல் நலத்துக்கு நல்லதல்ல.
    cool down and relax.

    --வானதி .

    ReplyDelete
  82. //ஆசைப்படுங்கள், பேராசைப் படாதீர்கள்.//

    அத்தனைக்கும் ஆசைப்படு என்று படித்துருக்கிறீர்களா இல்லையா

    ReplyDelete
  83. [[[மங்களூர் சிவா said...
    /"இப்போதைக்கு நாங்க நாலு பேருமே தனித்தனியாத்தான் இருக்கப் போறோம்.. மில்டன் முறை வைச்சு எங்க நாலு பேர் வீட்டுக்கும் வந்து, வந்து போகட்டும்னு எங்களுக்குள்ள பேசி வைச்சிருக்கோம்னு" ஒரு மனைவி பேட்டி கொடுத்திருக்காங்க.. எவ்ளோ நல்ல மனசு பார்த்தீங்களா?/

    ROTFL
    :))))))))))))))

    பதிவு முழுக்க தமாஷ்தான் போங்க!]]]

    அங்கே வாழ்க்கையே இவ்ளோ காமெடியா இருக்கு சிவா.. நாமதான் அது, இதுன்னு சொல்லி பொழைப்பை ஓட்டிருக்கோமோ..?

    ஒண்ணும் புரியலே..!

    ReplyDelete
  84. [[[vanathy said...

    ஆசைப்படுங்கள், பேராசைப்படாதீர்கள்.
    ஒரு பெண்ணை மணக்க நினைத்தால் அது ஆசை, நியாயம்தான், ஆனால் நான்கு பெண்களை மணக்க நினைக்கிறீர்களே, இது பேராசை,
    சில காலமாக அடிக்கடி டென்ஷன் ஆகிறீர்கள் உங்கள் உடல் நலத்துக்கு நல்லதல்ல. cool down and relax.
    --வானதி .]]]

    அம்மா.. சும்மா ஒரு ஜாலிக்குத்தாம்மா..!

    இருந்தாலும், அக்கறையான விசாரிப்புக்கு கண்ணுல தண்ணி வருது..!

    ReplyDelete
  85. [[[jaisankar jaganathan said...

    //ஆசைப்படுங்கள், பேராசைப் படாதீர்கள்.//

    அத்தனைக்கும் ஆசைப்படு என்று படித்துருக்கிறீர்களா இல்லையா.]]]

    ஆசைப்படு என்றுதானே சொல்லியிருக்கிறார்கள்.. பேராசைப்படு என்று சொல்லவில்லையே என்பதுதான் வானதியின் வாதம்..!

    ReplyDelete
  86. ஒரு செஞ்சுரி போடலாம்னு நினைச்சேன்.. முடியாது போலிருக்கே..! எண்ணூத்தி சொச்சப் பேர்தான படிச்சிருக்காங்க..! மிச்சப் பேரு..?

    ReplyDelete