Pages

Saturday, August 11, 2007

ஜெயா டிவியில் தமிழ் வலைப்பதிவர் பட்டறை ஒளிபரப்பு

11-08-2007
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கோலாகலமாக நடந்து முடிந்த ஆகஸ்ட்-5 தமிழ் வலைப்பதிவர் பட்டறையின் நிகழ்ச்சித் தொகுப்பு, ஜெயா டிவியில் வரும் திங்கள்கிழமை(13-08-2007) காலை 8.30 மணியிலிருந்து 9.00 மணிக்குள்ளாக 'விழாக்கோலம்' என்கிற செய்தியின் கீழ் ஒளிபரப்பாக உள்ளது. காணத் தவறாதீர்கள்.


பின்குறிப்பு : தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் ரிலே செய்யப்படும் நேரம் நாளுக்கு நாள் வித்தியாசப்படும் என்பதால் மிகச் சரியான நேரத்தைச் சொல்ல முடியாமைக்கு வருந்துவதாக நிகழ்ச்சி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
புகைப்படம் உதவி : திரு.அண்ணாகண்ணன்

8 comments:

  1. நானே பதிவு போடனும்னு நெனைச்சேன். நல்ல வேலை நீங்க போட்டுட்டீங்க!

    நன்றி!

    ReplyDelete
  2. அப்பாடி ஒருமாதிரியா பதிச்வெழுத திரும்பிட்டிங்களா ....நன்றி....

    ReplyDelete
  3. தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  4. உண்மைத் தமிழன்,

    பதிவர் பட்டறைக்கு ஊடக வெளிச்சம் போட உங்கள் பணி பெரிதும் உதவியாக இருக்கிறது. புதியவர்களுக்கும் புரியும் வண்ணம் தகவல் சுட்டிகளுடன் கவரேஜ் இருக்கும் என்று நம்புவோம்

    அன்புடன்,

    மா சிவகுமார்

    ReplyDelete
  5. நேர மாற்றம் ஏதுமிருந்தால் உடனே அறிவிச்சிடுங்க

    ReplyDelete
  6. நன்றி பாலா. உங்களுக்காகத்தான் காத்திருந்து மறந்துட்டீங்களோ என்று நினைத்து நான் பதிவிட்டேன்.

    மா.சி. ஸார்.. நிச்சயம் நேயர்களை கவர்ந்திழுத்து நம் பக்கம் கொண்டு வரும் அளவுக்குத்தான் நம்முடைய ஊடகப் பிரச்சாரம் அமைந்துள்ளது. கவலை வேண்டாம். உங்களுக்கு நிறைய நண்பர்கள் விரைவில் கிடைப்பார்கள்.

    மதுரையம்பதி ஸார்.. ஒரு வழியாவே எழுத ஆரம்பிச்சிருக்கேன். இது எத்தனை நாளைக்கோ..?

    சிவஞானம்ஜி ஸார்.. நேர மாறுதலுக்கு சான்ஸே இல்லை. அதே நேரம்தான்.. கவனமாக 8.30 மணியிலிருந்தே பார்க்கத் துவங்கிவிடுங்கள். ஜோதிடம் என்ற நிகழ்ச்சிக்கு அடுத்தது நமது நிகழ்ச்சிதான்.

    ReplyDelete
  7. நன்றி வாசுதேவன் தீபக்..

    முன்பே சொல்லியிருக்க வேண்டும். தவறிவிட்டேன். மன்னிக்கவும்.

    ReplyDelete