22-09-2010
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
தலைப்பைப் பார்த்தும், படத்தில் அர்ஜூன் இருக்கிறார் என்பதைப் பார்த்தும் கதை என்ன என்பது இந்நேரம் உங்களுக்கே தெரிந்திருக்கும்.
தமிழ்ச் சினிமாவில் இந்திய ஏகாதிபத்தியத்தின் ஒரே அடையாளமாகத் திகழும் அண்ணன் அர்ஜூனுக்கேற்ற கதைதான். ஆனால் விதைத்தது நான்காண்டுகளுக்கு முன்பாக. 'அறுவடை' என்ற பெயரில்தான் இந்தப் படத்தைத் துவக்கினார்கள்.
தயாரிப்பாளர் பங்கஜ் ஹென்றியும் இந்திய தேசத்தின் மீது அசாத்திய பற்றும், நேசமும் கொண்டவர். அவரேதான் இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியிருக்கிறார். இயக்கியிருப்பவர் அரவிந்த் என்னும் புதுமுகம்.(என்று நினைக்கிறேன்)
தேசிய நதிநீர்த் திட்டத்தைத் துவக்கி வைக்க கன்னியாகுமரிக்கு வரும் இந்தியப் பிரதமரை கொலை செய்ய பாகிஸ்தானில் இருந்து மாலிக் என்னும் தீவிரவாதி இந்தியாவுக்குள் புகுந்திருப்பதாகவும், அவனைக் கண்டுபிடிக்க மம்முட்டி தலைமையில் ஒரு டீமை அமைத்து, அவர்கள் போராடி, அடித்துப் பிடித்துச் சண்டையிட்டு அந்த ஒரேயொரு தீவிரவாதியை அடியோடு ஒழித்துக் கட்டி தாய்த்திரு நாட்டின் ஒளிவிளக்கான நமது பிரதமரை எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதுதான் கதை..

முதல் பாதி ஜெட் வேகத்தில் பறந்தது.. இரண்டாம் பாதி ஜெட் வேகத்தில் தூங்கியது.
முதல் ரீலில் தலையைக் காட்டிவிட்டு நான்கு நிமிட பாடலுக்கு ஆடிய புன்னகை இளவரசி சினேகா, அதன் பிறகு இடைவேளைக்குப் பிறகு எட்டாவது ரீலில்தான் தலையைக் காட்டுகிறார். அந்தப் பாடல் காட்சியிலும் சினேகாவை மிகப் பெரிய குண்டாசட்டிக்குள் குளிக்க வைத்து அதையும் எடுக்கத் தெரியாமல் எடுத்து, கவர்ச்சியைக் கூட காட்ட முடியாமல் வைத்திருப்பது இயக்குநர் மேல் கோபத்தை வரவழைக்கிறது. கொடுத்த காசுக்கு இதுகூட இல்லைன்னா எப்படிங்க..?

ஆனாலும் ஜில்பான்ஸ் ரசிகர்களுக்காக இரண்டு குத்துப் பாட்டுக்களை வைத்து ஒப்பேற்றியிருக்கிறார்கள்.
மம்முட்டி இது போன்ற வேடங்களில் பல முறை மலையாளத்திலேயே திறமை காட்டிவிட்டதால் இதில் ஏதோ இன்வால்வ் ஆகாமலேயே நடித்திருப்பதுபோல் தோன்றுகிறது. ஒரு சிங்கிள் ஷாட்டில்கூட மம்முக்காவின் ஆக்ஷனையே காணோம்.. ஒருவேளை இயக்குநரின் திறமை இவ்வளவுதானோ.. என்னவோ..?
அர்ஜூனுக்கு ஜோடி இல்லாததால் அவரால் டூயட் பாட முடியாத கோபத்தில் படம் முழுக்க கடுகடுப்பாகவே இருக்கிறார். மம்முட்டி உதவியாளர் என்பதாலும் தனித்தக் காட்சிகளில் தவிர மற்றவைகளில் ஒப்புக்குச் சப்பாணிதான். சண்டைக் காட்சிகளில் மனிதர் இன்னமும் இளைஞராகத்தான் இருக்கிறார். இது ஒன்றுக்காகவே அவரை பாராட்டலாம்.

ஈ.சி.ஆர். ரோட்டில் இருக்கும் சவுக்குத் தோப்பில் நடக்கும் சண்டைக் காட்சியில் அர்ஜூன் அண்ணன் மரத்திலேயே தாவி, தாவி சண்டையிடும் காட்சியைப் பார்த்து வாய்விட்டு அழுக வேண்டும்போல் இருந்தது. இயக்குநருக்கு ஏன் இந்த கற்பனை வறட்சி..? நிலம் முழுவதும் கன்னிவெடிகளை புதைத்து வைத்திருக்கிறானாம் மாலிக். அவன் ஒருத்தனே அந்த ஏக்கர் முழுவதும் புதைக்க முடியுமா என்று சின்ன லாஜிக்கைக் கூடவா துணை இயக்குநர்கள் யோசிக்கவில்லை.. மேலும், இதே போன்ற சண்டைக் காட்சியை வரவிருக்கும் இரண்டு திரைப்படங்களில் காணத் தவறாதீர்கள்.
முற்பாதியில் அடிக்கடி வரும் ட்விஸ்ட்டுகளால் மட்டுமே படம் வேகமாக பெடலெடுத்தது.. ராஜ்கபூரை ஏமாற்றி உண்மையை வரவழைப்பதற்காக செய்யும் ஒரு டிவிஸ்ட்டும், இடைவேளைக்குப் பின்பு சினேகாவை வைத்து செய்யும் டிவிஸ்ட்டும் ரசனைக்குரியவைதான். ஆனால் இது இரண்டில் ஒன்றை மாவீரனிலும், மற்றொன்றை வேறு ஏதோவொரு ஆங்கில சினிமாவிலும் பார்த்த ஞாபகம் வேறு வந்து தொலைக்கிறது.
கொச்சியில் நடைபெறும் கொலை சம்பவத்தில் இருந்து சூடு பிடிக்கும் அந்தத் திரைக்கதையை இடைவேளைக்கப்புறம் எப்படி நகர்த்துவது என்பது தெரியாமல் விட்டுவிட்டதாக நினைக்கிறேன். செல்போனில் டிரேஸ் செய்வது ஒரு புறம் இருக்க.. மாலிக் சென்னைக்குள் கால் வைக்க குண்டுவெடிப்பை நடுரோட்டில் ஏற்படுத்தி தப்பிக்கின்ற காட்சியை கொஞ்சம் பாராட்டலாம். கஷ்டப்பட்டுத்தான் எடுத்திருக்கிறார்கள்.

தீவிரவாதம் என்றவுடனேயே எடுத்த எடுப்பிலேயே முஸ்லீம்கள்தான் என்று கருதுவதில் இந்தக் கதாசிரியரும் தப்பவில்லை. அப்படியொரு முஸ்லீம் தீவிரவாதியை வேட்டையாடும் கதைதான் இது என்று அவர் சொல்லித் தப்பித்துக் கொள்ளலாம். ஏன் இந்தப் பயங்கரவாதம் என்கிற விஷயத்திற்குள் அவர் போகவே இல்லை.. நான்கு மெஷின் கன்கள் பாதுகாப்போடு ஏதோ ஒரு கால்வாய்க்குள் முழு நீள சொக்காய் போட்ட பட்டாணியர்களுடன் பேச வைத்து பாகிஸ்தான் லின்க்கை காட்டி முடித்திருக்கிறார்கள்.
முஸ்லீம்-இந்து பிரச்சினையும் வந்துவிடக் கூடாது என்பதால் மிகவும் பிரயத்தனப்பட்டிருக்கிறார்கள். படத்தில் மம்முட்டியின் பெயர் கோபிகிருஷ்ணன், அர்ஜூனின் பெயர் அன்வர்.. பிரதமராக நாசர் என்ற பிம்பம்.. இவற்றோடு மாலிக்கை மோத வைத்து.. அவர்களுக்கு முஸ்லீம் என்பது பிரச்சினையில்லை.. இந்தியாதான் பிரச்சினை என்பதைப் போல் சொல்லியிருக்கிறார் கிறிஸ்துவரான கதாசிரியர் ஹென்றி. கூட்டிக் கழிச்சுப் பாருங்க.. எல்லாம் சரியா வரும்.. இந்தக் கூத்தை விசாரிக்கணும்னா இன்னொரு சினிமாதான் எடுக்கணும்.

ராஜ்கபூர் முஸ்லீம். இவர்தான் ஆயுத வியாபாரி. மாலிக்கிற்கு ஆயுதங்களை சப்ளை செய்தவர். இவரைப் பிடித்துக் கொடுக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டரான ராஜன் பி.தேவ் ஒரு முஸ்லீம். “உன்னை மாதிரி ஆளுகதாண்டா.. நம்ம நாட்டுக்கே முதல் எதிரி” என்று ராஜன் பி.தேவ் சொல்வதைப் போல் வசனத்தை வைத்து பேலன்ஸ் செய்ய பார்த்திருக்கிறார். முடியலை..
இது போன்ற படங்களில் நடிப்பையெல்லாம் நீங்கள் பெரிதாக பார்க்கக் கூடாது.. ஐயோ.. அம்மா.. காட்சியெல்லாம் அதிகமாக இல்லை என்பதால் நடிப்பவர்களை ரொம்பவும் கஷ்டப்படுத்தாமல், அவர்களும் அலட்டிக் கொள்ளாமல் வந்தவரைக்கும் நடித்துக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்கள். சினேகா மரிக்கும் காட்சியில்கூட கண் கலங்காமல் இருந்ததைக் கண்டு எனக்கே வருத்தமாகிவிட்டது. என்ன இயக்கம் இது? இதனால்தான் படம் வெளியாக இத்தனை நாட்களானதோ..?
கேரளாவிலும் படம் போணியாக வேண்டும் என்பதற்காக மலையாள குணச்சித்திர நடிகர் ஜெகதீஷை மம்முட்டிக் துணையாக போட்டிருக்கிறார்கள்.
கடைசியில் பட்ஜெட்டுக்கேற்றாற்போல் விற்பனை செய்ய முடியாமல் தயாரிப்பாளர் கஷ்டப்பட்டிருக்கிறார். பாவம்.. அவர் என்ன செய்வார்..? ஆரம்பித்த ஜோரிலேயே முடித்து ரிலீஸ் செய்திருந்தாலாவது வட்டிக் காசாவது திரும்பக் கிடைக்கும்.
இப்போதும் போட்டிக்கு பெரிய படங்கள் எதுவும் இல்லாத சூழலாக பார்த்து திட்டம் போட்டுத்தான் படத்தை ரிலீஸ் செய்திருக்கிறார். என்றாலும், கூட்டம் குறைவு என்பதுதான் ரிசல்ட்.

படத்தின் ஒளிப்பதிவைத் தனியாகக் குறிப்பிட்டுச் சொல்லலாம். நன்றாகவே எடுத்திருக்கிறார். அதிலும் கொச்சி கொலைக்களன்களை அருமையாக படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். படம் முழுக்க கேமிரா வானத்திலேயே பறந்திருப்பதைப் போல் தெரிகிறது. சவுக்குத் தோப்புக் காட்சிகளும், தாம்பரம் குண்டுவெடிப்பு காட்சிகளும் படமாக்கிய விதம் ஒளிப்பதிவாளரைத் தனித்து பாராட்ட வைக்கிறது..
படத்திலேயே பாராட்டக் கூடிய ஒரு விஷயம்.. படத்தின் இடையில் வரும் ஒரு டாக்குமெண்ட்ரி படம். விவசாயிகள் பிரச்சினை பற்றியும், இந்திய நதிகள் அனைத்தையும் இணைப்பது பற்றியும் எடுத்திருப்பது நிச்சயம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.
பொதுவாக இது போன்ற தேச நலனை முன்னிட்டு எடுக்கும் படங்களில் ஏன் இந்தப் பிரச்சினை தோன்றியது என்பதை மட்டும் வசதியாக அத்தனை பேரும் மறந்துவிட்டு, இப்போதைய தீர்வுக்குக் காரணத்தை மட்டும் சொல்வார்கள். அதுவும் எந்தச் சமயத்திலும் இந்திய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போய்விடவும் கூடாது என்கிற ரீதியிலேயேதான் இருக்கும். இங்கேயும் அதேதான். இதுவே கொஞ்சம் கசப்பாக இருக்கிறது. சரி.. ஒரு சம்பவத்தை மட்டுமே வைத்து படம் எடுத்திருக்கிறார் என்று திருப்திபட்டுக் கொள்ல வேண்டியதுதான்..
நீங்கள் இந்திய தேசியத்தின் ஆதரவாளரா..? 'தாயின் மணிக்கொடி பாரீர்' பாடலின் தீவிர ரசிகரா நீங்கள்..? 'வந்தே மாதரம்' என்பது உங்களது தாரக மந்திரமா..? 'ஆம்' எனில் அவசியம் சென்று பாருங்கள்..!

ஜெய்ஹிந்த்..!
புகைப்படங்கள் உதவிக்கு நன்றி : www.indiaglitz.com
|
|
Tweet |