Pages

Thursday, January 30, 2014

2014 புத்தகக் கண்காட்சி புகைப்படங்கள்..!

30-01-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

2014 புத்தகக் கண்காட்சியின்போது நான் எடுத்த புகைப்படங்கள்.. ஏதோ கண்காட்சிக்கு நானும் போயிட்டு வந்ததற்கான ஆதாரம் வேணும்ல்ல.. அதுக்காகத்தான்..!



ஒரு காலத்தில் வலையுலகத்தைக் கலக்கிய ரவுடிகள் சுகுணா திவாகர் மற்றும் வரவனையானுடன்..!



எழுத்தாளர் கவுதமன் சித்தார்த்தனுடன்..! அன்றைக்கு காலையில்தான் அவர் எழுதி இயக்குநர் இமயம் பாரதிராஜா சிலாகித்து பேசிய ஒரு கட்டுரையைப் படித்தேன்.. இவருடைய சினிமாவுலகம் தொடர்பான பல கட்டுரைகளை வாசித்திருக்கிறேன். தொடர்ந்தும் வாசித்து வருகிறேன். ஆனால் இன்றைக்குத்தான் முதல் முறையாக சந்திக்கிறேன்.. பூப்போல பேசுகிறார்.. நம் கருத்துக்களையும் காது கொடுத்து கேட்கிறார்..! எது சினிமா என்பதில் எங்கள் இருவருக்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நான் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன்.. அவருடைய கருத்தை மென்மையாக என்னிடத்தில் பதிவு செய்கிறார்.. நல்லதொரு ஆசிரியராக இருக்கத் தகுதியுடையவர்..! உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அண்ணா..!


உமா சக்தியின் நூல் வெளியீட்டு விழாவில்..!










நெஞ்சுக்கினிய அண்ணன் பாரதி கிருஷ்ணகுமாருடன்..!



நளாயினியின் கவிதைப் புத்தக வெளியீடு..!


யாருமே இல்லாதபோது மயான அமைதி..!

12 comments:

  1. அண்ணாச்சி,


    நலமா?


    மீண்டும் உங்கள் "திருப்பணிகள்"ஆரம்பம் ஆகட்டும்!

    # புத்தக்காட்சியில வாட்ச்மேன் கழுத்தப்புடிச்சி தள்ளுற வறையில் இருந்திர்ப்பீங்க போல அவ்வ்!

    # ஒருப்படத்தின் கருத்தினை அதன் அடியில் இடவு.ம்.அதானே செய்தித்தாள் மரபு?

    ReplyDelete
  2. மீண்டு வந்தமைக்கு இனிய வாழ்த்து(க்)கள்.

    நல்லா இருங்க.

    நம்ம சிஜிதான் உங்களைப்பற்றி அதிகமாக் கவலைப்பட்டு என்னிடம் விசாரித்தார்.

    ReplyDelete
  3. சுகமா இருக்கீங்களா அண்ணே ? படங்கள் மனதுக்கு மகிழ்ச்சி...

    ReplyDelete
  4. //யாருமே இல்லாதபோது...//
    அப்போ அங்கே என்ன வேலை உங்களுக்கு?

    உடல் நலமில்லாமல் இருந்தது போல் எழுதியுள்ளார்களே... எப்படி இருக்கீங்க?

    ReplyDelete
  5. உங்களது வலைதளம் வாசிக்க முடியாமல், பல புதுப்படங்களைப் பற்றி நிறைய விசயங்கள் தெரிந்து கொள்ள முடியாமல் போய்விட்டது.. மீண்டும் வாசிக்க முடிவதில் மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. [[[வவ்வால் said...

    அண்ணாச்சி, நலமா?

    மீண்டும் உங்கள் "திருப்பணிகள்" ஆரம்பம் ஆகட்டும்!

    # புத்தக்காட்சியில வாட்ச்மேன் கழுத்தப் புடிச்சி தள்ளுற வறையில் இருந்திர்ப்பீங்க போல அவ்வ்!

    # ஒரு படத்தின் கருத்தினை அதன் அடியில் இடவும். அதானே செய்தித்தாள் மரபு?]]]

    வணக்கம் வவ்ஸ்.. கண்காட்சி முடிஞ்சு லைட்டை ஆஃப் செய்றவரைக்கும் இருந்துட்டுல்ல கிளம்பினோம்..

    ReplyDelete
  7. [[[துளசி கோபால் said...

    மீண்டு வந்தமைக்கு இனிய வாழ்த்து(க்)கள். நல்லா இருங்க. நம்ம சிஜிதான் உங்களைப் பற்றி அதிகமாக் கவலைப்பட்டு என்னிடம் விசாரித்தார்.]]]

    மிக்க நன்றி டீச்சர்.. சிவாஞானம்ஜி ஐயாவிடமும் பேசிவி்டடேன்.. என்ன இருந்தாலும் பழைய பதிவர்களிடமிருந்து வரும் விசாரிப்புகள் வாழ்க்கையை வாழ்வதற்கான ஒரு அர்த்தத்தையே கொடுக்கின்றன.. ரொம்ப உற்சாகப்படுத்தப்பட்டேன்.. மகிழ்ச்சியாக இருந்தது..!

    ReplyDelete
  8. [[[MANO நாஞ்சில் மனோ said...

    சுகமா இருக்கீங்களா அண்ணே ? படங்கள் மனதுக்கு மகிழ்ச்சி...]]]

    மனோ.. செளக்கியமா..? அப்பப்போ எங்களை மாதிரி ஆளுகளையெல்லாம் கொஞ்சம் கவனிச்சுக்குங்கப்பா..! நேரம் கிடைச்சா போன் பண்ணுப்பா..!

    ReplyDelete
  9. [[[தருமி said...

    //யாருமே இல்லாதபோது...//

    அப்போ அங்கே என்ன வேலை உங்களுக்கு?]]]

    அப்பளம் சாப்பிட்டு, காளான் ஜூஸ் குடிச்சிட்டு மெதுவா கிளம்பினோம் ஸார்..!

    [[[உடல் நலமில்லாமல் இருந்தது போல் எழுதியுள்ளார்களே... எப்படி இருக்கீங்க?]]]

    இப்போ நல்லாயிருக்கேன் ஸார்..!

    ReplyDelete
  10. [[[kanavuthirutan said...

    உங்களது வலைதளம் வாசிக்க முடியாமல், பல புது படங்களைப் பற்றி நிறைய விசயங்கள் தெரிந்து கொள்ள முடியாமல் போய்விட்டது.. மீண்டும் வாசிக்க முடிவதில் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்]]]

    வருகைக்கு மிக்க நன்றி கனவுத்திருடன் ஸார்..!

    ReplyDelete
  11. அண்ணே, தங்கள் புத்தக வெளியீடு எப்போது?
    நேரு விளையாட்டு அரங்கமா (அ) தீவு திடலா?
    உங்கள் வாசக வட்டத்தை நிருபிக்கும் நேரம் இது.

    ReplyDelete
  12. Anna,

    Everyday I use to hit your blog and did not able to see your blog for quiet sometime. OMG.. Finally, I am able to see your blog and with all movie reviews. Thanks for coming back strongly and do your great work as always...

    Regards
    Sankar, V

    ReplyDelete