Pages

Tuesday, October 22, 2013

சினிமா வரிவிலக்கு திட்ட முறைகேடு - உதயநிதி ஸ்டாலினின் அறிக்கை..!

22-10-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தமிழக அரசு சினிமாத் துறையினருக்கு வழங்கி வரும் வரிச் சலுகை தி்ட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதில் நானும் உறுதியுடன்தான் இருக்கிறேன். ஆனால் அத்திட்டம் அமலில் இருக்கின்றவரையில் அது நேர்மையாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் சொல்கிறேன்..! ஒன்று நேர்மையாக வழங்க வேண்டும்.. அல்லது அறவே நீக்க வேண்டும்.. இவை இரண்டையும் செய்யாமல் தனக்குப் பிடித்தவர்களுக்கெனில் உடனடியாகவும், பிடிக்காதவர்களெனில் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி மறுப்பதும் நேர்மையான அரசுக்கு அழகல்ல..!

உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயன்ட் மூவிஸ் தயாரித்த 'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'நீர்ப்பறவை', 'வணக்கம் சென்னை' ஆகிய மூன்று படங்களுக்கும் இந்த வரிச்சலுகை முறைகேடாக மறுக்கப்பட்டிருக்கிறது. தமிழக அரசு இதற்காக வகுத்திருக்கும் அனைத்துவித விதிமுறைகளையும் இந்தப் படங்கள் மீறாமல் இருந்தும், தயாரிப்பாளர் மு.க.ஸ்டாலினின் மகன் என்ற ஒரே காரணத்துக்காகவே இந்த வரிச்சலுகை அவருக்கு வழங்கப்படாதது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது..!

வழக்கம்போல சினிமா துறையினர் கையது வாயது பொத்தி மெளனம் காத்து வருகின்றனர்.. இதுவரையிலும் தயாரிப்பாளர் சங்கத்தில் ஒற்றுமை இல்லை. அதனால் கேட்க முடியவி்ல்லை என்று 'கதை' விட்டவர்கள்.. இப்போது என்ன சொல்வார்கள்.. என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை..!

உதயநிதி ஸ்டாலின் தான் ஒரு பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர் என்ற ரீதியில் இந்த வரிச்சலுகை திட்டத்தினால் தான் எப்படி பாதிக்கப்பட்டேன் என்பதையும், பல விதிமுறைகள் எப்படி அரசினாலேயே மீறப்பட்டு இருக்கின்றன என்பதையும் ஒரு மனுவாக எழுதி தயாரிப்பாளர் சங்கத்தில் சமர்ப்பித்திருக்கிறார்..! 

இதை வைத்து அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை..! பொறுத்திருந்து பார்ப்போம்..!

கீழே உதயநிதி ஸ்டாலின் புகாராக கொடுத்த மனு, போட்டோ காப்பியாக உள்ளது.. இதனை டவுன்லோடு செய்தோ அல்லது விரித்தோ படித்துக் கொள்ளவும்..

நன்றி..!











20 comments:

  1. நடிகைங்க படம்ன்னா விரிச்சு போட்டுருப்பீங்க. இதை கொஞ்சம் எக்ஸ்ட்ரா லார்ஜ் பட்டனை தட்டி போட்டு இருக்கலாமே?

    ReplyDelete
  2. MK was not Manu needi chozan. He did for his family. This Tax excemption to be abolished for all producers
    If they are able to do movie without tax excemption let them do it otherwise let them do some other things instead of begging Govt whether it is MK or Jaya

    ReplyDelete
  3. முதல்வன் சினிமா பட்டபாடு மறந்துவிட்டதா
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    ReplyDelete
  4. முற்பகலில் செய்தவைகள், பிற்பகலில் விளைந்து அறுவடையாகிக் கொண்டிருக்கிறது.

    கடிதத்தை தாத்தா எழுதிக் கொடுத்திருப்பாரோ!, புள்ளி விவரத்தோட போட்டுத் தாக்கியிருப்பது அவர் சாயல்ல இருக்கு.

    ReplyDelete
  5. கருத்துக்கள் (Comments) கூறுபவர்கள் எல்லாம் ஜெயா அம்மாவின் ஜால்ராக்கள் போல் தான் தெரிகிறது. ஜெயா அம்மா செய்யும் கூத்தை தான் தலைவா திரைப்படம் மூலம் தெள்ள தெளிவாகிவிட்டது. விஜய்க்கு இப்படி என்றால் உதயநிதி மாத்திரம் எம்மாத்திரம். தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் என்ன செய்ய போகிறது? ஜெயா அம்மாவுக்கு அதுவும் ஜால்ரா போடப் போகிறது.

    ReplyDelete
  6. MK and JJ both have spoiled TN administration and governance.

    There are no rules and regulations in any of the TN govt department. Can we expect it in commercial tax dept alone?

    ReplyDelete
  7. உதயநிதி அப்பனும் ஆத்தாளும் வியர்வை சிந்தி சேர்த்த காசு மாதிரி இப்புடி ஃபீல் ஆவுறீங்கோ? எல்லா சனங்க கிட்ட அடிச்ச காசுதானே? ஊரு இரண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்பாங்க, இங்கு இரண்டு கூத்தாடியும் அடிச்சிகிட்டதால மக்கள் கிட்ட அடிச்ச காசு வரியா கொஞ்சம் திரும்பி வருது... விடுங்க சார்!

    ReplyDelete
  8. வாசகர்கள் எந்த பக்கம் வேண்டுமென்றாலும் எடுக்கலாம்; அது அவர்கள் உரிமை. ஆணால், நான் இங்கு வலையுலகில் பார்ப்பதை மட்டும் எழுதுகிறேன்.

    JJ அரசு தவறு செய்யும்போது எல்லாம், MK- வை கட்டாயம் இழுப்பார்கள். அனால், MK தவறு செய்யும் பொது, JJ வை விட்டு விடுவார்கள்.

    அப்படி இந்தாலும், உதயநிதிக்கு செய்தது ஏட்டிக்கு போட்டி என்றாலும், விஜய் என்ன தவறு செய்தார்?

    விஜயைப பற்றி பேசும்போதும், கூத்தாடி. வாயை மூடிக்கொண்டு இருக்கட்டும் என்று சொல்கிறார்களே தவிற யாரும் JJ அரசை கண்டிப்பதில்லை?

    இந்த பாரபட்சத்தை இங்கு முக்கால்வாசி பதிவர்கள் செய்கிறார்கள். இங்கு பின்னூட்டம் இடுபவர்கள் கட்சி சார்ந்து இருப்பவர்கள் போல. இங்கு நமக்கு வேலையில்லை!

    ReplyDelete
  9. அண்ணாச்சி,


    முதலில் ஒரு படத்துக்கு அரசு வரிச்சலுகை கொடுத்தா அதுக்கு ஏற்ப கட்டணம் குறைக்கப்பட வேண்டும்,அப்படி செய்யுறாங்களா? ஏன் செய்யலை? அதுக்கு பொங்க வைக்காம ,என்னமோ தயாரிப்பாளருக்கு நட்டம் ஆகிடுச்சுனு சொல்லிக்கிட்டு அலையிரிங்களே?

    திரைப்பட வரிச்சலுகை என இருந்தால் அதன் பலன் படம் பார்க்கிறவங்களுக்கு தான் சாமி,அது கூட தெரியாமல் என்னமோ பொங்கிட்டு அவ்வ்!

    உண்மையான திரைப்பட வரிச்சலுகையின் படி குறைக்கப்பட்ட கட்டணத்தில் நான் பாரதி படம் பார்த்திருக்கிறேன்,அதே போல வரிச்சலுகை பெற்ற மற்றப்படங்களை குறைக்கப்பட்ட கட்டணத்தில் ஏன் காட்டவில்லைனு ஒரு பொது நலவழக்கு யாராச்சும் போடுங்கப்பா!


    # திமுக காலத்தில மட்டும் ஒழுங்கா வரிச்சலுகைய கொடுத்தாங்களாமா?

    நாமநாயணன் சொன்னாத்தான் கிடைக்கும், அதுவும் இல்லாம கலிஞர் டீவிக்கு விக்கனும்னு பல கண்டிஷன் போடுவாங்க, அப்படி ஒத்துக்காத படத்துக்கு அலைய வச்சு ,படம் தியேட்டரில் ஓடி முடிச்ச பொறவு தான் வரிச்சலுகை ஆணையே கொடுப்பாங்க, இதனால் தயாரிப்பாளருக்கு கடைசியில் பணம் கிடைக்குதே எனலாம், ஆனால் ஆரம்பத்திலேயே கிடைச்சா தான் பலன் என உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை,

    இப்போ இம்புட்டு பொங்குங்க, ஒச்சாயினி ஒரு லோ பட்ஜெட் படம் ,அதுக்கு கூட தாத்தா காலத்தில வரிச்சலுகை கொடுக்க மாட்டோம்னு அழிச்சாட்டியம் செய்தாங்க ,அந்த தயாரிப்பாளர் உண்ணாவிரத போராட்டம்லாம் அறிவிச்சு போராடினார்.

    அப்போலாம் இந்த அறச்சீற்றம் காட்டவேயில்லையே என்னா மேட்டர்?

    மஞ்சத்துண்டு கும்பலுக்கு எதுக்கு வரிச்சலுகை, அவங்க நினைச்சா இந்தியாவுக்கே பட்ஜெட் போடலாம் அவ்வ்!

    இதே மேட்டரை நான் நியாயமா ரொம்ப நாள் முன்னாடியே ஓகே.ஓகேவுக்கே எழுதி இருக்கேன் படிச்சு பாரும்,

    ஒச்சாயி சாபம் சும்மா விடாது!!!

    http://vovalpaarvai.blogspot.in/2012/04/blog-post_24.html

    ReplyDelete
  10. [[[ஜோதிஜி திருப்பூர் said...

    நடிகைங்க படம்ன்னா விரிச்சு போட்டுருப்பீங்க. இதை கொஞ்சம் எக்ஸ்ட்ரா லார்ஜ் பட்டனை தட்டி போட்டு இருக்கலாமே?]]]

    ஸாரிண்ணே.. இப்போ பண்ணிட்டேன். பாருங்க..!

    ReplyDelete
  11. [[[ravikumar said...

    MK was not Manu needi chozan. He did for his family. This Tax excemption to be abolished for all producers
    If they are able to do movie without tax excemption let them do it otherwise let them do some other things instead of begging Govt whether it is MK or Jaya.]]]

    அதனால்தான் இத்திட்டத்தையே கைவிட வேண்டும் என்கிறேன்..!

    ReplyDelete
  12. [[[devadass snr said...

    முதல்வன் சினிமா பட்டபாடு மறந்துவிட்டதா

    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்.]]]

    மறக்க முடியாதுதான்..! அப்போது உதயநிதி ஸ்டாலின் கல்லூரி மாணவர்.. நாட்டு நடப்பெல்லாம் தெரியாது..!

    ReplyDelete
  13. [[[மு.சரவணக்குமார் said...

    முற்பகலில் செய்தவைகள், பிற்பகலில் விளைந்து அறுவடையாகிக் கொண்டிருக்கிறது.

    கடிதத்தை தாத்தா எழுதிக் கொடுத்திருப்பாரோ!, புள்ளி விவரத்தோட போட்டுத் தாக்கியிருப்பது அவர் சாயல்ல இருக்கு.]]]

    இருக்கும்.. இருக்கும்..!

    ReplyDelete
  14. [[[Ramarao said...

    கருத்துக்கள்(Comments) கூறுபவர்கள் எல்லாம் ஜெயா அம்மாவின் ஜால்ராக்கள் போல்தான் தெரிகிறது. ஜெயா அம்மா செய்யும் கூத்தைதான் தலைவா திரைப்படம் மூலம் தெள்ள தெளிவாகிவிட்டது. விஜய்க்கு இப்படி என்றால் உதயநிதி மாத்திரம் எம்மாத்திரம். தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் என்ன செய்ய போகிறது? ஜெயா அம்மாவுக்கு அதுவும் ஜால்ரா போடப் போகிறது.]]]

    இதைத்தான் செய்யப் போகிறது..! அவர்களால் மனசுக்குள் மட்டுமே எதிர்க்க முடியும்..! தைரியமெல்லாம் வீட்டுக்குள் மட்டும்தான்..! ஆத்தாவின் முன்னால் இவர்களது பாச்சா பலிக்காது..!

    ReplyDelete
  15. [[[AAR said...

    MK and JJ both have spoiled TN administration and governance.

    There are no rules and regulations in any of the TN govt department. Can we expect it in commercial tax dept alone?]]]

    தமிழ்நாட்டின் தலைவிதி.. இவர்கள் இரண்டு பேருக்கும் நடுவில் நாம் நாட்டியமாடுகிறோம்..!

    ReplyDelete
  16. [[[நந்தவனத்தான் said...

    உதயநிதி அப்பனும் ஆத்தாளும் வியர்வை சிந்தி சேர்த்த காசு மாதிரி இப்புடி ஃபீல் ஆவுறீங்கோ? எல்லா சனங்ககிட்ட அடிச்ச காசுதானே? ஊரு இரண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்பாங்க, இங்கு இரண்டு கூத்தாடியும் அடிச்சிகிட்டதால மக்கள்கிட்ட அடிச்ச காசு வரியா கொஞ்சம் திரும்பி வருது... விடுங்க சார்!]]]

    இந்த விஷயத்துல அப்படியிருக்க முடியாது ஸார்..! கொள்ளையடிச்ச காசு ஒரு பக்கம்.. அதை அனுமதிக்கும் மானங்கெட்ட அரசியலமைப்புச் சட்டம்.. கண்டு கொள்ளாத மக்கள்..! இதெல்லாம் இருக்கும்போது உதயநிதி போன்றவர்களெல்லாம் ஒளிரத்தான் செய்வார்கள்..! அது வேறு விஷயம்.. இந்தத் திட்டம் வேறு விஷயம்..!

    ReplyDelete
  17. [[[நம்பள்கி said...

    வாசகர்கள் எந்த பக்கம் வேண்டுமென்றாலும் எடுக்கலாம்; அது அவர்கள் உரிமை. ஆணால், நான் இங்கு வலையுலகில் பார்ப்பதை மட்டும் எழுதுகிறேன்.

    JJ அரசு தவறு செய்யும்போது எல்லாம், MK- வை கட்டாயம் இழுப்பார்கள். அனால், MK தவறு செய்யும்பொது, JJவை விட்டு விடுவார்கள். அப்படி இந்தாலும், உதயநிதிக்கு செய்தது ஏட்டிக்கு போட்டி என்றாலும், விஜய் என்ன தவறு செய்தார்? விஜயைப பற்றி பேசும்போதும், கூத்தாடி. வாயை மூடிக் கொண்டு இருக்கட்டும் என்று சொல்கிறார்களே தவிற யாரும் JJ அரசை கண்டிப்பதில்லை?

    இந்த பாரபட்சத்தை இங்கு முக்கால்வாசி பதிவர்கள் செய்கிறார்கள். இங்கு பின்னூட்டம் இடுபவர்கள் கட்சி சார்ந்து இருப்பவர்கள் போல. இங்கு நமக்கு வேலையில்லை!]]]

    நம்பள்கி.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். அதுதான் இங்கே பிரதிபலிக்கிறது..!

    ReplyDelete
  18. [[[வவ்வால் said...

    அண்ணாச்சி, முதலில் ஒரு படத்துக்கு அரசு வரிச்சலுகை கொடுத்தா அதுக்கு ஏற்ப கட்டணம் குறைக்கப்பட வேண்டும், அப்படி செய்யுறாங்களா? ஏன் செய்யலை? அதுக்கு பொங்க வைக்காம, என்னமோ தயாரிப்பாளருக்கு நட்டம் ஆகிடுச்சுனு சொல்லிக்கிட்டு அலையிரிங்களே?
    திரைப்பட வரிச்சலுகை என இருந்தால் அதன் பலன் படம் பார்க்கிறவங்களுக்குதான் சாமி,அது கூட தெரியாமல் என்னமோ பொங்கிட்டு அவ்வ்! உண்மையான திரைப்பட வரிச்சலுகையின்படி குறைக்கப்பட்ட கட்டணத்தில் நான் பாரதி படம் பார்த்திருக்கிறேன்,அதே போல வரிச்சலுகை பெற்ற மற்றப் படங்களை குறைக்கப்பட்ட கட்டணத்தில் ஏன் காட்டவில்லைனு ஒரு பொது நலவழக்கு யாராச்சும் போடுங்கப்பா!]]]

    போடலாம்.. பாரதி முழு வரிவிலக்கு அளிக்கப்பட்ட படம்.. அதனால்தான் கட்டணத்தைக் குறைத்தார்கள். இப்போதும் குறைக்கலாம்.. குறைக்கத்தான் வேண்டும்.. ஆனால் யார் கேட்பது..? யார் சொல்வது..?

    ReplyDelete
  19. [[[திமுக காலத்தில மட்டும் ஒழுங்கா வரிச்சலுகைய கொடுத்தாங்களாமா?

    நாமநாயணன் சொன்னாத்தான் கிடைக்கும், அதுவும் இல்லாம கலிஞர் டீவிக்கு விக்கனும்னு பல கண்டிஷன் போடுவாங்க, அப்படி ஒத்துக்காத படத்துக்கு அலைய வச்சு, படம் தியேட்டரில் ஓடி முடிச்ச பொறவுதான் வரிச்சலுகை ஆணையே கொடுப்பாங்க, இதனால் தயாரிப்பாளருக்கு கடைசியில் பணம் கிடைக்குதே எனலாம், ஆனால் ஆரம்பத்திலேயே கிடைச்சாதான் பலன் என உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை.]]]

    எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தானே பிரதர்..!

    [[[இப்போ இம்புட்டு பொங்குங்க, ஒச்சாயினி ஒரு லோ பட்ஜெட் படம், அதுக்குகூட தாத்தா காலத்தில வரிச்சலுகை கொடுக்க மாட்டோம்னு அழிச்சாட்டியம் செய்தாங்க ,அந்த தயாரிப்பாளர் உண்ணாவிரத போராட்டம்லாம் அறிவிச்சு போராடினார். அப்போலாம் இந்த அறச்சீற்றம் காட்டவேயில்லையே என்னா மேட்டர்?]]]

    எழுதினதா ஞாபகம்..! இருங்க தேடிப் பார்த்துச் சொல்றேன்..!

    ReplyDelete
  20. [[[இதே மேட்டரை நான் நியாயமா ரொம்ப நாள் முன்னாடியே ஓகே.ஓகேவுக்கே எழுதி இருக்கேன் படிச்சு பாரும்,

    ஒச்சாயி சாபம் சும்மா விடாது!!!

    http://vovalpaarvai.blogspot.in/2012/04/blog-post_24.html]]]

    மிக்க நன்றிகள் பிரதர்..!

    ReplyDelete