Pages

Thursday, July 18, 2013

ஒரேயொரு உருப்படியான வேலை..!

18-07-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ரொம்ப நாளாச்சு பதிவெழுதி..! அலுவலக நெருக்கடி.. வீட்டுப் பிரச்சினைகள் என்று வண்டி, வண்டியாக வேலை வந்து கொண்டேயிருக்க.. அப்புறம் எழுதலாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே போய் இது மாதிரி 17 நாள் இடைவெளியாகிவிட்டது..!

எதையாவது எழுதலாம் என்றால் என்ன எழுவது என்று ஒரே குழப்பம்..!

அரசியல் எழுதி போரடித்துவிட்டது..! பைசாவுக்கும் பிரயோசனமில்லாத நிலைமை.. நாம் சொல்வதைப் புரிந்து கொள்ளாத கூட்டத்தினரிடையே நாம் என்னதான், எவ்வளவுதான் கரடியாய் கத்துவது..? நிறுத்தினேன் அரசியலை.. ஆனால் அது என்னைத் துரத்துவதை நிறுத்தவில்லை. அவ்வப்போது சின்னச் சின்னதாக பத்திகளாக பிளஸ்ஸிலும், பேஸ்புக்கிலும் எழுதியதோடு சரி.. அவ்வளவுதான்..!

சினிமா விமர்சனம் என்றால் இப்போது அதுவும் போரடிக்கிறது..! பைசாவுக்கு பிரயோசனம்தான் என்றாலும் அடுத்தடுத்த வாழ்க்கை நகர்த்தல்களுக்கு சினிமாவின் தேவை அதிகம் என்பதால் சினிமாவை கைவிட மனசில்லை..!

இந்த வருடத்தில் எதையாவது உருப்படியாய் செய்வோம் என்றால் அதற்கும் வழியில்லாமல் இருக்கிறது.. நான்கடி எடுத்து வைத்தால் பதினாறு அடி பின்னோக்கி இழுக்கிறது..! ம்ஹூம்.. வாழ்க்கையில்தான் இப்படியென்றால் வலையுலகிலாவது எதையாவது செய்வோம் என்று ஒரு பதிப்பாளரைத் தேடிப் பார்த்தேன். நான் தேடும் அளவுக்கு பூதக் கண்ணாடி கிடைக்காததாலும், கிடைத்த பதிப்பாளர்களும் எனது பதிவுகளின் நீளத்தைக் கண்டு பயந்து போய் "ஐயா சாமி.. ஆளை விடுங்க.. வேண்ணா நீங்க காசு கொடுங்க. பிரிண்ட் மட்டும் போட்டுத் தர்றோம்.." என்று ஜகா வாங்குகிறார்கள்..! நல்லதுக்குக் காலமில்லை.. ஒரு எழுத்தாளனை இந்த அளவுக்கு வஞ்சிக்கும் இந்தத் தமிழ்ச் சமூகம் உருப்படுமா..? நிச்சயம் நாசமாத்தான் போகும்..!

இடையில் திடீரென்று ஞாபகம் வந்ததை போல கடலூர் காட்டான் புருஷோத்தமன் குழலி போன் செய்தார். 2 மாதங்களுக்கு முன்பு நான் செய்யச் சொன்ன எனது வலைத்தளத்தை டாட்.காம் முகவரிக்கு மாற்றல் சம்பந்தமாய் பேசினார். "இப்போ வேர்ட்பிரஸ், பிளாக்கர்ஸ் பிரச்சினை தீர்க்கப்பட்டுவிட்டது.. பாஸ்வேர்டு கொடுங்க.. 2 நிமிஷத்துல முடிச்சுத் தர்றேன்..." என்றார்..

முக்கால் கிணறு தாண்டியாகிவிட்டது.. இன்னும் குவார்ட்டர்தானே பாக்கியிருக்கு என்று நினைத்து பாஸ்வேர்டை அனுப்பி வைத்தேன். சொல்லி வைத்தாற்போல் 2 நிமிடங்களில் எனது தளம் டாட்.காமிற்கு மாறிவிட்டது.. http://truetamilans.blogspot.com இனிமேல் http://truetamilan.com என்றே அழைக்கப்படும். இந்த ஒரு வேலையையாவது உருப்படியாய் செய்து கொடுத்த,  அண்ணன் புருஷோத்தமன் குழலிக்கு எனது கோடானுகோடி ரசிகர்கள் மற்றும் வாசகர்கள் சார்பில் நன்றிகள்..!

தமிழ்மணத்தில் சேர்க்க பெரிய அக்கப்போர் நடந்து கொண்டிருக்கிறது.. மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கணுமாம்..! இன்னொரு பெரிய வேலை நடந்து கொண்டிருக்கிறது. அதுவும் இந்த மாதத்தில் முடிந்துவிடும் என்று நினைக்கிறேன். என்னுடைய சோம்பேறித்தனத்தால் பாதியில் நிற்கும் அந்தப் பணியையும் முடித்துவிட்டு மீண்டும் வருகிறேன்..! 

நன்றி..

வணக்கம்..!


12 comments:

  1. எம்புட்டு செலவாச்சு?

    ReplyDelete
  2. என்னடா.. ஆளே கானோமே..? போன் நம்பர் தொலாவலாம்ன்னு இருந்தேன்... நல்ல வேளை, பதிவு போட்டுட்டீங்க அண்ணாச்சி...

    இப்படி இடைவேளை விடாடிங்க.,.. கை கால் எல்லாம் நடுங்குதுல.. (கோட்டர் அடிக்காம இருக்கும் அடிக்ட் போல :) )

    ReplyDelete
  3. எலேய் நான் எங்கேயும் போகலை இங்கினதான் இருக்கேன்னு சொல்லாம சொல்றீங்களா அண்ணே ஹி ஹி...

    ReplyDelete
  4. [[[சீனு said...

    எம்புட்டு செலவாச்சு?]]]

    கடலூர் காட்டான் நம்மாளுதான்.. அதான் ப்ரீ சர்வீஸ்..!

    ReplyDelete
  5. [[[Nondavan said...

    என்னடா.. ஆளே கானோமே..? போன் நம்பர் தொலாவலாம்ன்னு இருந்தேன்... நல்ல வேளை, பதிவு போட்டுட்டீங்க அண்ணாச்சி... இப்படி இடைவேளை விடாடிங்க. கை கால் எல்லாம் நடுங்குதுல.(கோட்டர் அடிக்காம இருக்கும் அடிக்ட் போல:))]]]

    அப்படி மாட்டிக்கக் கூடாதேன்னுதான் கொஞ்சம் கேப் விட்டு பார்க்குறேன்..! பை தி பை.. உங்க புரொபைல் குழந்தை போட்டோ சூப்பர்..!

    ReplyDelete
  6. [[[MANO நாஞ்சில் மனோ said...

    எலேய் நான் எங்கேயும் போகலை இங்கினதான் இருக்கேன்னு சொல்லாம சொல்றீங்களா அண்ணே ஹி ஹி...]]]

    தம்பீ.. உன்னோட புது பதிவெல்லாம் மெயில் மூலமா வந்திருது.. படிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன். ஞாபகத்துல வைச்சிருக்கிறதுக்கு நன்னி..!

    அதெப்படிய்யா புது போஸ்ட்டை கண்டுபிடிச்சீங்க..? நான் தமிழ்மணத்துலேயும் சேர்க்கலை.. பேஸ்புக், பிளஸ்ஸுலேயும் போடலை..! அப்புறம் எப்படி உங்க கண்ணுக்கு வருது..?

    ReplyDelete
  7. anna,
    Not working in http protocol,,Have issue,.


    I tried this in Firefox,

    http://truetamilan.com.

    This domain has just been registered for one of our customers!
    Domain registration and webhosting at best prices.


    Tried www.truetamilan.com.

    working fine.

    Please check/.

    ReplyDelete
  8. ///அதெப்படிய்யா புது போஸ்ட்டை கண்டுபிடிச்சீங்க..? நான் தமிழ்மணத்துலேயும் சேர்க்கலை.. பேஸ்புக், பிளஸ்ஸுலேயும் போடலை..! அப்புறம் எப்படி உங்க கண்ணுக்கு வருது..?//

    we are all ur followers..... engayum escape aaga mudiyaathu

    ReplyDelete
  9. // பை தி பை.. உங்க புரொபைல் குழந்தை போட்டோ சூப்பர்..! // இவ்வளவு குர்ந்து பார்க்கிரீர்களா..!! வாவ்... அது என் மகன் யோகவ்’வின் புகைப்படம்... மிக்க நன்றி அண்ணே

    ReplyDelete
  10. நானும் அடிக்கடி உங்கள் தளத்தை வந்து பார்த்து போவேன். புதிய பதிவு இல்லாமல் ஏமாற்றத்துடன் திரும்புவேன். இன்று உங்கள் புதிய பதிவை பார்த்ததுமே ரொம்ப மகிழச்சி.

    நன்றி.

    ReplyDelete
  11. I am regular reader.(/vidamal thorathupavan.)

    I also wish to change one blogspot to .com site.

    Can you give me contact details of
    கடலூர் காட்டான் புருஷோத்தமன் குழலி.

    Even any other person you refer also ok for me...

    KUMAR genkpk@gmail.com

    ReplyDelete