Pages

Friday, June 14, 2013

தீயா வேலை செய்யணும் குமாரு - சினிமா விமர்சனம்

14-06-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

'கலகலப்பை' முடித்துவிட்டு அதனை திரைக்குக் கொண்டு வந்த ஜோரோடு 'மதகஜராஜா'வையும் முடித்துவிட்டு அதன் பின்பு துவக்கிய 'தீயா வேலை செய்யணும் குமாரை' ரன் பாஸ்ட்டில் கொண்டு வந்து வெற்றிக் கொடி காட்டியிருக்கிறார் இயக்குநர் சுந்தர்.சி.

இப்போது இருக்கின்ற சினிமா டிரெண்ட்டுக்கு ஏற்றாற்போல் அடுத்து ஒரு படம் வந்து திசை திருப்புவதற்குள் கல்லாவைக் கட்டிவிடலாம் என்று பொழைக்கத் தெரிந்த அனைத்து இயக்குநர்களுமே நினைக்கிறார்கள்..! சுந்தர் சி மட்டும் விதிவிலக்கா என்ன..? அவருடைய அவ்னி கம்பெனியின் சார்பில் படத்தைத் தயாரித்ததும்போலாச்சு.. காசும் சம்பாதிச்சது போலாச்சு என்ற அவரது உழைப்பின் வேகம்தான் நம்மை கொஞ்சம் அசர வைக்கிறது..! 

மனிதர் தீயாய் உழைத்திருக்கிறார் படத்தின் திரைக்கதையில்..! கொஞ்சமும் அலுப்புத் தட்டாத வகையிலும், லாஜிக்கை பார்க்க வைக்காத வகையிலும் நகைச்சுவை படங்களுக்கு திரைக்கதை அமைப்பது ரொம்பவே கஷ்டம்.. இதில் பலரது உதவியுடன் திரைக்கதையை அமைத்து அவர்களுக்கு டைட்டில் பெயரும் கொடுத்தமைக்காக அவருக்கு எனது நன்றிகள்..! படத்தின் திரைக்கதையில் நமது வலையுலக நண்பர் ரமேஷ் வைத்யாவின் பங்களிப்பும் இருப்பதாக அறிகிறேன்.. அவருக்கும் எனது பாராட்டுக்கள்..!


கொள்ளு தாத்தா, தாத்தா, அப்பா என்று தலைமுறை, தலைமுறையாக காதலித்தே திருமணம் செய்து கொள்ளும் ஒரு குடும்பத்தில் பிறக்கும் ஹீரோ குமார், தனக்கென்ற ஒரு ஹீரோயின் கிடைக்காமல் இருக்கிறார்.. அவர் வேலை பார்க்கும் ஐடி நிறுவனத்திலேயே வேலைக்குச் சேரும் ஹீரோயினை பார்த்தவுடன் காதலிக்கத் துவங்குகிறார். அந்தக் காதலுக்கு நோக்கியா கம்பெனி ஓனர் சந்தானம் ஹெல்ப் செய்கிறார்.. இந்த உதவி இறுதிவரையில் தொடர்ந்து சென்று இவர்களது காதல் எப்படி ஜெயிக்கிறது என்பதுதான் மிச்ச மீதிக் கதை..! இதில் சந்தானம் தொடர்பான ஒரு சஸ்பென்ஸை உடைத்தால் படம் பார்க்க நினைப்பவர்களுக்கு சப்பென்றாகிவிடும் என்பதால் அதனை தவிர்த்துவிடுகிறேன்..! 

சித்தார்த் மென்மேலும் தேறி வருகிறார்.. சாக்லேட் பாயாகத் துவங்கி, கொஞ்சம் ஆக்சன் ஹீரோவாக ஆனவருக்கு இப்போது காமெடியும் நன்றாகவே வருகிறது..! முன்பு கார்த்திக் செய்த கேரக்டர்களை இப்போது சித்தார்த் செய்யலாம் என்று நினைக்கிறேன்.. சந்தானத்திடம் டிரெயினிங் எடுக்க அவர் படும் பாட்டையும், அதற்காக அப்பாவித்தனமாக அவர் சொல்லும் பதில்களும் நடிப்போடு சேர்ந்தே நம்மைக் கவர்கிறது.. வெல்டன் சித்தார்த்..! சிவப்பா இருக்கிறவங்களெல்லாம் பேச்சுலேயே வாய்ப்பு வாங்கிக்கிறாங்கன்னு சொல்றவங்க வாய்ல் நல்லாவே மண்ணையள்ளிப் போட்டிருக்காரு சித்தார்த்..! இது இப்படியே தொடர்ந்தால் சித்தார்த்துக்கு இங்கே ஒரு நிலையான மார்க்கெட் நிச்சயமாக கிடைக்கும்..!

என்னவொரு குழந்தைத்தனம்..? பப்ளிமாஸ் மாதிரி இருந்துக்கிட்டு ஹீரோயின் வேஷம் கட்டியிருக்கும் ஹன்ஸிகா பல்லு போன கிழடுகளையெல்லாம் கொஞ்சம் உசார் படுத்தியிருக்கிறார்..! படம் முழுவதும் இவரது இளமையை எப்படியாவது எந்தக் கோணத்திலாவது வெளிப்படுத்திவிட வேண்டும் என்று நினைத்து இயக்குநரும், காஸ்ட்யூம் டிஸைனரும் இயக்குநரின் மனைவியுமான திருமதி குஷ்பூவும், கேமிராமேனும் கூட்டணி சேர்ந்து படையல் செய்திருக்கிறார்கள்..!

ஆசிய கண்டமே போற்றிப் புகழ்ந்த அசோக் பில்லர் தொடையழகி ரம்பாவை பிரபலப்படுத்தியே அதே டெக்னிக்கில் இதிலும் ஹன்ஸிகாவை முன்னிலைப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்..! இவருக்கு என்ன பட்ட்ப் பெயர் வைக்கிறது என்றுதான் தெரியவில்லை..! அம்மணி பாடல் காட்சிகளில் நடந்து வந்தாலே டான்ஸ் மாதிரிதான் இருக்கும். இதில் ஒரு குத்துப் பாடலுக்கு டப்பாங்குத்து டான்ஸ் வேறு ஆடியிருக்கிறார்..! மெலடி பாடல்களில் சிக்கென்ற உடையில் வருவதைப் பார்த்து நமக்குத்தான் பக்கென்று இருக்கிறது..! தெலுங்கு மணவாடுகளுக்கு ஹன்ஸிகாவே ஏன் பிடிக்கிறது என்பதற்கு இந்தப் படமும் ஒரு சாட்சி.. நடிப்பு வருமா என்றவர்களுக்கு கணேஷ்வெங்கட்ராமனிடம் கிளப்பில் மென்மையான வாய்ஸில் பேசி காதலை கட் செய்யும் அந்தக் காட்சியை உதாரணத்துக்குச் சொல்லலாம்..! இன்னும் கொஞ்ச நாளைக்கு ஹன்ஸிகாவை ஒப்பேத்தலாம்..!  வாழ்க இயக்குநர்..!

சந்தானம் இதில் உண்மையாகவே நடித்திருக்கிறார். முதலில் சேர்த்து வைத்துவிட்டு பின்பு பிரிக்க வைக்கத் துவங்கும் காட்சியில் ஆரம்பிக்கிறது அண்ணனின் ஆட்டம்.. பெத்த அப்பனுடன் நடுரோட்டில் மல்லுக்கட்டும் காட்சியில் டயலாக் டெலிவரியிலும் கோபத்திலும், ஆத்திரத்திலும் அவர் பேசும் பேச்சுக்கள் நகைச்சுவையைக் காட்டிலும் ஒரு சுவாரஸ்யத்தைக் கொடுத்தது..!

சித்தார்த்தின் வீட்டில் தங்கிவிட்டு காலையில் அவர்கள் செய்யும் டிராமாவை பார்த்து நம்ப முடியாமல் “விக்ரமன் ஸார் படம் மாதிரியிருக்கு” என்று சொல்லும் சந்தானத்தை ரொம்பவே பிடிக்கிறது..! அண்ணனின் நோக்கியோ கம்பெனி மாதிரி ஊருக்கு நாலு பேர் இருக்கத்தான் செய்றானுக.. ஆனால் ஐடியா மட்டும் சினிமாவில் இருந்து சுட்டதாகத்தான் இருக்கும். இந்தப் படத்தின் திரைக்கதையும், வசனமும் பெரும்பாலான காதலர்களால் இனிமேல் சுடப்படலாம்..!

படத்தின் மிகப் பெரிய பலமே திரைக்கதைதான்.. கணேஷ்வெங்கட்ராமன்-ஹன்ஸிகாவை பிரிக்க வேண்டி சந்தானம் சொல்லும் ஐடியாவும்.. சித்தார்த்துக்கு அவர் கொடுக்கும் டிரெயினிங்கும் படு சுவாரஸ்யமானவை.. காட்சியே நகைச்சுவையாக இருக்கும்பட்சத்தில் வசனம்கூட இரண்டாம்பட்சம்தான்.. இதில் திரைக்கதைக்காகவே இரண்டாம் பாகத்தை மட்டும் இன்னொரு வாட்டி பார்க்கலாம் போல தோணுது..!

இது போன்ற நகைச்சுவை படங்களுக்கு பாடல்களையும் நகைச்சுவையாகவே போடலாம் என்று நினைத்தார்களோ.. சத்யாவின் இசை அப்படியொன்றும் கவரவில்லை..! ஆனால் சந்தானம்-ஹன்ஸிகா சம்பந்தப்பட்ட பிளாஷ்பேக் காட்சிகளில் ஓட்டியிருக்கும் பின்னணி இசை மட்டுமே கவர்கிறது..! நன்று..! திருட்டுப் பசங்க பாடல் மட்டும் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு உள்ளது.. மற்றதில் எவன் பாட்டைக் கேட்டான்..? ஹன்ஸிகா.. ஹன்ஸிகா.. ஹன்ஸிகா..!!!

கணேஷ் வெங்கட்ராம், திவ்யதர்ஷிணி, பாஸ்கி, பாலாஜி, சித்ரா லட்சுமணன், ஹன்ஸிகாவின் தோழி என்று பலரும் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு நடிப்பைக் கொட்டியிருக்கிறார்கள். அனைத்துமே நகைச்சுவை என்பதால் இது அவர்களது நடிப்பு கேரியரில் முக்கியமான படமாக இல்லாமல் போனதுதான் அவர்களுடைய துரதிருஷ்டம். இன்னொரு சந்தோஷம்.. வழக்கு எண் படத்தில் நடித்த ரித்திகா சீனிவாஸை கொஞ்சம் குளோஸப்பில் அடிக்கடி காட்டி ஸ்கிரீனை அழகு செய்திருக்கிறார்கள். அதற்கும் எனது நன்றிகள்..!

இன்னமும் எழுத நினைத்தாலும் சந்தானத்தின் சஸ்பென்ஸ் இடையில் சண்டைக்கு வருவதால் மேற்கொண்டு எதுவும் சொல்ல விரும்பவில்லை.. படத்தை அவசியம் பார்த்து சிரியுங்கள்..! டைம் பாஸான மாதிரியும் இருக்கும்.. கொஞ்சம் கவலையை மறந்த மாதிரியும் இருக்கும்..!

16 comments:

  1. people told that suspense in their post already saravanan sir...!!!

    ReplyDelete
  2. ஹன்சிகா ஹன்சிகா என்று ஜெபித்து விட்டு அவர் தனிப் படம் ஒன்றைக் கூட பதிவில் காணோமே...!

    ReplyDelete
  3. " பட்டத்து யானையையும் முடித்துவிட்டு "


    "நமது வலையுலக நண்பர் ரமேஷ் வைத்யாவின "



    அண்ணே . . .

    என்ன இதெல்லாம் . . .

    ReplyDelete
  4. பட்டத்து யானையையும் முடித்துவிட்டு//

    கிர்ர் அது மத கஜ ராஜா

    ReplyDelete
  5. அண்ணாச்சி, உங்க புதிய ஸ்டைல் பட்டய கிளப்புது...

    ReplyDelete
  6. [[[கோவம் நல்லது said...

    people told that suspense in their post already saravanan sir...!!!]]]

    அப்படியா..? பரவாயில்லை. ஆனாலும் நான் சொல்லாமல் விடுவதுதான் நல்லது..!

    ReplyDelete
  7. [[[ஸ்ரீராம். said...

    ஹன்சிகா ஹன்சிகா என்று ஜெபித்து விட்டு அவர் தனிப் படம் ஒன்றைக் கூட பதிவில் காணோமே...!]]]

    போதும்.. ஏற்கெனவே எனது சிஸ்டத்தில் நெட்டு படுத்துக்கிச்சு.. இப்போ ஹன்ஸிகாவையும் போஸ்ட்ல போட்டா.. அப்புறம் என்ன ஆகும்ன்னு எனக்கே தெரியலை..!

    ReplyDelete
  8. [[[குரங்குபெடல் said...

    "பட்டத்து யானையையும் முடித்துவிட்டு"]]]

    ஸாரி பிரதர்.. அது "மதகஜாராஜா.."

    "நமது வலையுலக நண்பர் ரமேஷ் வைத்யாவின "

    இந்த அண்ணனும் படத்தின் திரைக்கதை, வசனத்தில் உதவியிருப்பதாகச் சொல்கிறார்கள்..!

    ReplyDelete
  9. [[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    பட்டத்து யானையையும் முடித்துவிட்டு//

    கிர்ர் அது மத கஜ ராஜா..]]]

    ரொம்ப சந்தோஷம் தம்பீ.. திருத்திட்டேன்..!

    ReplyDelete
  10. [[[Nondavan said...

    அண்ணாச்சி, உங்க புதிய ஸ்டைல் பட்டய கிளப்புது...]]]

    மிக்க நன்றி தம்பீ..!

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. Hero face is too matured - not suitable for college boy role anymore.

    ReplyDelete
  13. I feel I hurt your feelings so badly. So, I removed that comment. You certainly deserve better. However I wanted you to maintain you "high quality" and that is why I said what I said.

    Take it easy, TT! :-)

    ReplyDelete
  14. [[[AAR said...

    Hero face is too matured - not suitable for college boy role anymore.]]]

    இனிமேல் அவரும் இது போன்ற வேடங்களை செய்ய மாட்டார் என்றே நானும் நம்புகிறேன்..!

    ReplyDelete
  15. [[[வருண் said...

    I feel I hurt your feelings so badly. So, I removed that comment. You certainly deserve better. However I wanted you to maintain you "high quality" and that is why I said what I said. Take it easy, TT! :-)]]]

    வருண்.. டோண்ட் பீலிங்.. அதை விட்டு வைச்சிருந்தாலும் எனக்கு ஒண்ணுமில்லை..! பெயரைக் காப்பாற்ற அப்படி எழுதவில்லை. இண்டஸ்ட்ரியின் இப்போதைய நிலைமையில் இது போன்ற படங்களைக்கூட குறை சொன்னால் பின்பு பொழுது போக்கு படத்திற்கான அளவுகோல் என்னதான் என்று எனக்குள்ளேயே கேள்வி வரும்..!? இது எனது ரசனை.. விட்ருங்க..!

    அதுக்காக வராம இருக்காதீங்க.. அடிக்கடி வாங்க..!

    ReplyDelete