Pages

Thursday, March 21, 2013

கருப்பம்பட்டி - சினிமா விமர்சனம்

21-03-2013


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தான் பிறந்து வளர்ந்த கருப்பம்பட்டி என்ற ஊரையும், தந்தையையும், உற்றார் உறவினரையும் உதாசீனப்படுத்திவிட்டு பாரீஸில் போய் செட்டிலாகுகிறார் அப்பா அஜ்மல். ஆனால் அங்கே அவரது வாழ்க்கை சின்னாப்பின்னமாகிவிட.. உறவுகள் எவ்வளவு முக்கியம் என்பதை தான் அனாதையாக சாகப் போகிறோம் என்று யோசித்த கணத்தில் அவருக்குத் தோன்ற.. தனது மகன் அஜ்மலை கருப்பம்பட்டிக்கு அனுப்பி தனது உறவினர்களுடன் சேர்த்து வைக்க முனைகிறார். இதனை மகன் அஜ்மல் செய்து முடித்தாரா இல்லையா என்பதுதான் கதை..!


கதை பாரீஸில் ஆரம்பித்து பாரீஸிலேயே முடிவடைகிறது.. இடையிடையே மகன் அஜ்மல் அப்பா அஜ்மலின் வாழ்க்கைக் கதையைக் கூற அது 1980-களின் வாழ்க்கையைக் காட்டுகிறது..! உறவினர்களே பிடிக்காத சூழலில் வாழும் அஜ்மல், கல்லூரிக்கு வந்தவுடன் எப்படி தன்னை மாற்றிக் கொள்கிறார் என்பதையும், தனது பெற்றோர்களையே வேலைக்காரர்கள் என்று சொல்லும் அளவுக்கு நாகரிகம் பார்க்கத் துவங்குகிறார் என்பதையும் அழுத்தமாகவே இயக்குநர் சொல்லியிருக்கிறார்..!

கல்லூரி கலாட்டாக்களில் கொஞ்சம் கொஞ்சம் சிரிப்பலை வருகிறது.. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஸ்டைலில் ஹாஸ்டல் வார்டனாக வரும் எம்.எஸ்.பாஸ்கரின் உடல் மொழியும், டயலாக் டெலிவரியும் எப்போதும் போலவே..! கல்லூரி ராகிங்குகளை இந்த அளவுக்கு காட்டியிருக்க வேண்டாம்.. அப்போதைய காலக்கட்டத்தில் இந்த அளவுக்கா இருந்தது என்பதையும் இயக்குநர் கொஞ்சம் யோசித்திருக்கலாம்..!

மகா கோபக்காரனான அஜ்மலின் கோப நடிப்புதான் ரொம்பவே ஓவர்.. கோபத்தைக் காட்ட முகத்தை இத்தனை அஷ்டகோணலாக்கித்தான் நடிப்பை கொட்ட வேண்டுமா..? அஞ்சாதேயில் இவர்தான் நடித்திருந்தாரா..? அப்பா அஜ்மலைவிடவும், மகன் அஜ்மல் பரவாயில்லை.. கொஞ்சம் நிதானமாகவே நடிப்பைக் கொட்டியிருக்கிறார்.. ஹீரோயின் என்ற பெண்ணிடம் காதல் கதைகளைச் சொல்லி அசடு வழிவதில் அவர் நன்றாகவே நடித்திருந்தாலும் நமக்குத்தான் மகா போரடிக்கிறது..!

என்னதான் சொந்தங்களை அழைக்க வேண்டும் என்று நினைத்தாலும், அதற்காக இப்படியா ஒரு பொய்யைச் சொல்வது..? இது அந்த பில்கேட்ஸுக்கே அடுக்காது.. இதையும் நம்பி அந்தக் கூட்டம் வருது பாருங்க.. அங்கதான் இயக்குநர் நிக்குறாரு.. தியேட்டர் ரசிகர்களும் இதை உட்கார்ந்து பார்க்கத்தான போறாங்க.. அதுனால இயக்குநர் தைரியமா லாஜிக் உதைக்குதேன்னெல்லாம் யோசிக்காம வைச்சிருக்காரு..!

இடைவேளைக்கு பின்பு ஜெகனும், Sreenath-ம் கொஞ்சம் கொஞ்சம் நெளிய வைக்காமல் படத்தை பார்க்க வைத்தார்கள்.. ஹீரோயின்தான் மகா சொதப்பல்.. எந்த ஆங்கிளில் பார்த்தாலும் ஹீரோயினுக்கான அறிகுறிகளே இல்லை.. எப்படிய்யா செலக்ட் பண்ணினாங்க..? அப்புறம் எங்க நடிப்பை பத்தி யோசிக்கிறது..? ஆனாலும் கல்லூரியில் சாந்தியாக வரும் ஹீரோயினின் ஒருதலைராகம் கெட்டப்பும், அந்த மருளும் கண்களும் ஏதோ பார்க்க வைக்குது..!

அப்பா அஜ்மல் போலவே அச்சு அசலாக இருப்பவரை தாத்தாவால் அடையாளம் காண முடியவில்லையாம்.. அதைவிடக் கொடுமை.. மிகச் சரியாக அவரிடமே போய் தான் இன்னார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு கட்டியணைத்துக் கொள்வதுதான்.. திரைக்கதைக்காக ரொம்ப மெனக்கெடல இயக்குநர்.. போதும் என்ற அளவுக்கு மட்டுமே யோசித்திருக்கிறார் போலும்..! ஷங்கரிடம் பயின்றவராம் இந்தப் படத்தின் இயக்குநர் பிரபுராஜசோழன்..!

அஜ்மல் யார் என்று தெரியாமலேயே பில்கேட்ஸ் பெயரைச் சொன்னவுடனேயே அத்தனை பேரும் ஓடோடி வந்து ஒட்டிக் கொள்வதாகச் சொல்லியிருப்பது கொஞ்சம் ஓவரான பூச்சுற்றல்..! கிளைமாக்ஸ் அதைவிட.. இதுவரையிலும் வந்த குடும்பக் கதைகளின் அதே டெம்ப்ளேட் பாணி..! இப்படித்தான் இருக்கும் என்று தெரிந்துபோனதால் இடைவேளைக்கு பின்பு கொட்டாவி, கொட்டாவியாக வந்ததுதான் மிச்சம்..!

இதிலும் ஒரு காமெடி.. அஜ்மலின் விசா காலம் முடிந்து போனதால் உடனேயே அவரை திரும்பவும் பாரீஸுக்கு போகும்படி இமிக்ரேஷன் டிபார்ட்மெண்ட் ஆபீஸர்  கருப்பம்பட்டிக்கே நேரில் வந்து சொல்வதுதான்.. ஒருவேளை இயக்குநர் இத்தனை நாட்கள் வெளிநாட்டில் இருந்திருப்பாரோ..?

அதிலும் கதையை முடித்து வைப்பதற்காக படாரென்று ஹீரோயினிடம் என் மருமவனை கட்டிக்கிறியா..? என் தம்பியை கட்டிக்கிறியா என்று ஹீரோயினை அத்தனை பேரும் மொய்த்து எடுப்பார்கள்.. பாருங்கள்.. சூப்பர்.. இதுக்கு மேல ஒரு நல்ல திடுக் திடுக் கிளைமாக்ஸை கண்டே பிடிக்க முடியாது..!

கண்ணனின் இசையில் பப்பிலஹரி பாடிய டிஸ்கோ பாடலும், அதனைப் படமாக்கியவிதமும் சூப்பர்..! மிகச் சிறப்பான நடனம். அதேபோல் கருப்பம்பட்டி பாடலையும் அதன் நேட்டிவிட்டி மாறாமல் சிறந்த நடனத்தோடு எடுத்திருக்கிறார்கள்..!  அந்த ஜல்லிக்கட்டு காட்சி, அது தொடர்பான சண்டைக் காட்சிகளெல்லாம் ரொம்பவே இழுவை..! கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம்..! 

பிரிந்த சொந்தங்கள் ஒன்று சேர வேண்டும். எங்கேயிருந்தாலும் உற்றார், உறவினர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்பதெல்லாம் சரிதான்.. ஆனால் அப்பா அஜ்மல் எதற்காக உறவினர்களை, ஊரை, பெற்றோரை அவமதிக்கிறார் என்பதற்கான சரியான காரணமில்லாமல், அவர் சிட்டி வாலிபனாக மட்டுமே வளர விரும்புகிறார் என்று சொல்லி முடித்திருக்கிறார்கள். அவருடைய திருமண வாழ்க்கை பாரீஸில் முடிந்து போனதை மட்டும் வைத்து திருந்துவதாகச் சொல்லியதும் கொஞ்சம் சறுக்கல்தான்..! 

கதைகளை நிறையே சலித்துச் சலித்து செலக்ட் செய்துதான் நடிக்கிறேன் என்கிறார் அஜ்மல்.. இந்தக் கதையும் அப்படித்தானோ..? பாவம் அஜ்மல்.. தமிழ்ச் சினிமாக்களை அதிகம் பார்த்ததில்லை போலும்.. ஓகே.. எடுத்தவரையிலும், நடித்தவரையிலும் ஒரு முறை பார்க்கலாம்தான்..! அப்படியொன்றும் மோசமில்லை..! 

10 comments:

  1. //ஓகே.. எடுத்தவரையிலும், நடித்தவரையிலும் ஒரு முறை பார்க்கலாம்தான்..! அப்படியொன்றும் மோசமில்லை..!//

    இதயம் இனித்தது. கண்கள் பணித்தது.

    ReplyDelete
  2. அய்யா நன்றி அய்யா...

    நடுவில் சில வரிகளில் நீங்கள் அப்பா அஜ்மலை சொல்லுகிறீர்களா அல்லது மகனை சொல்கிறீர்களா என்று குழப்பமாக இருக்கிறது...

    // அப்பா அஜ்மலைவிடவும், மகன் அஜ்மல் பரவாயில்லை.. கொஞ்சம் நிதானமாகவே நடிப்பைக் கொட்டியிருக்கிறார்.. //

    இருவரும் வெவ்வேறு நடிகர்களா...

    // அதற்காக இப்படியா ஒரு பொய்யைச் சொல்வது..? //

    அய்யா அந்த ஒலக மகா பொய் என்னன்னு பின்னூட்டத்துலயாவது சொன்னீங்கன்னா நாங்க போய் பொழப்ப பார்ப்போம்...

    அப்புறம் ஹீரோயின் அபர்ணா பாஜ்பாய் தானே... அவரைத் தவிர வேறு யாராவது இருக்கிறார்களா ?

    ReplyDelete
  3. உம்மை preview

    கூப்பிட்ட மனுஷங்களுக்கு

    வெள்ளி அன்றே ரொம்ப நல்ல "காரியம் "


    பண்ணியிருக்க அண்ணே

    ReplyDelete
  4. [[[இவன் சிவன் said...

    //ஓகே.. எடுத்தவரையிலும், நடித்தவரையிலும் ஒரு முறை பார்க்கலாம்தான்..! அப்படியொன்றும் மோசமில்லை..!//

    இதயம் இனித்தது. கண்கள் பணித்தது.]]]

    தவறு.

    "இதயம் இனித்தது. கண்கள் பனித்தன" என்றுதான் இருக்க வேண்டும்.!

    ReplyDelete
  5. [[[Philosophy Prabhakaran said...

    அய்யா நன்றி அய்யா...]]]

    டேய்.. இதென்ன புத்சா அய்யா மரியாதை.. பிய்ச்சிருவேன் பிய்ச்சு.. ஒழுங்கு மருவாதையா தம்பின்னு கூப்பிடு..!

    [[[நடுவில் சில வரிகளில் நீங்கள் அப்பா அஜ்மலை சொல்லுகிறீர்களா அல்லது மகனை சொல்கிறீர்களா என்று குழப்பமாக இருக்கிறது...]]]

    அப்படியா..? அதை எப்படி சரி செய்வது என்று யோசித்துவிட்டு மாற்றுகிறேன்..!

    [[[//அப்பா அஜ்மலைவிடவும், மகன் அஜ்மல் பரவாயில்லை.. கொஞ்சம் நிதானமாகவே நடிப்பைக் கொட்டியிருக்கிறார்.. //

    இருவரும் வெவ்வேறு நடிகர்களா...]]]

    இல்லை.. அஜ்மல் டபுள் ஆக்ட்..!

    [[[//அதற்காக இப்படியா ஒரு பொய்யைச் சொல்வது..? //

    அய்யா அந்த ஒலக மகா பொய் என்னன்னு பின்னூட்டத்துலயாவது சொன்னீங்கன்னா நாங்க போய் பொழப்ப பார்ப்போம்...]]]

    "பில்கேட்ஸ் கருப்பம்பட்டி கிராமத்தை தத்து எடுக்கப் போவதாக அறிவித்திருக்கிறார். நாங்கதான் பில்கேட்ஸின் ஏஜெண்ட்டுகள். நீங்க கருப்பம்பட்டிக்கு வந்து எல்லாரும் ஒண்ணா சேர்ந்து பொங்கல் கொண்டாடுனீங்கன்னா அதை வீடியோ படமா எடுத்து பில்கேட்ஸுக்கு அனுப்பி வைப்போம்.."

    இப்படி சொல்லித்தான் அனைத்து உறவினர்களையும் ஊருக்கு அழைக்கிறார் அஜ்மல்.

    [[[அப்புறம் ஹீரோயின் அபர்ணா பாஜ்பாய்தானே... அவரைத் தவிர வேறு யாராவது இருக்கிறார்களா?]]]

    அவரேதான்.. இவரும் டபுள் ஆக்ட்.. அப்பாவை லவ் பண்றதும் இவர்தான்.. கடைசீல மகனை கல்யாணம் பண்றதும் இவர்தான்..!

    ReplyDelete
  6. [[[குரங்குபெடல் said...

    உம்மை preview கூப்பிட்ட மனுஷங்களுக்கு வெள்ளி அன்றே ரொம்ப நல்ல "காரியம்" பண்ணியிருக்க அண்ணே...]]]

    ஏதோ நம்மளால முடிஞ்சது இவ்ளோதான் பிரதர்..!

    ReplyDelete
  7. விமர்சனத்துக்கு நன்றி

    அப்பாடா 100ரூபா மிச்சம்

    ReplyDelete
  8. அண்ணாச்சி,

    //ஓகே.. எடுத்தவரையிலும், நடித்தவரையிலும் ஒரு முறை பார்க்கலாம்தான்..! அப்படியொன்றும் மோசமில்லை..!
    //

    என்ன ஒரு கொடூர மனம்,இந்தப்படத்தை பார்த்தால் ஒன்னும் ஆகாதுனு சொல்லி பலரை காவு வாங்கப்பார்க்கிறீங்களே அவ்வ்.

    ஒரு படத்தில் எதவாது கொஞ்சமாச்சும் தேறும்,இந்தப்படத்தில் ஹீரோயின் கூட தேறலை. பேசாம டிஸ்கோ பாட்டுக்கு ஆடின பாப்பாவை "முழுசா" பயன்ப்படுத்தி இருக்கலாம் :-))

    ரொம்ப காலத்துக்கு முன்னரே எடுத்து பொட்டியில் தூங்கின படம்னு உண்மையை சொல்லாமல் ,புத்தம் புதிய படம் போல வெளியிட்டு இருக்காங்க,செத்துப்போன அலெக்ஸ் எல்லாம் சுடுகாட்டில் இருந்து எழுந்து வந்து நடிச்சிருக்கார் :-))

    இந்த படம் பார்க்க எனக்கு 20 ரூபா தான் செலவாச்சு,ஆனால் அதன் பின் தலைவலிக்காக 250 ரூவாக்கு சரக்கு வாங்க வேண்டியதா போச்சு அவ்வ்!

    ReplyDelete
  9. [[[Hemanth said...

    விமர்சனத்துக்கு நன்றி. அப்பாடா 100 ரூபா மிச்சம்.]]]

    வாழ்க வளமுடன்..!

    இது பாவமா? புண்ணியமா?ன்னு எனக்குத் தெரியலை..!

    ReplyDelete
  10. [[[வவ்வால் said...

    அண்ணாச்சி,

    //ஓகே.. எடுத்தவரையிலும், நடித்தவரையிலும் ஒரு முறை பார்க்கலாம்தான்..! அப்படியொன்றும் மோசமில்லை..!//

    என்ன ஒரு கொடூர மனம்,இந்தப் படத்தை பார்த்தால் ஒன்னும் ஆகாதுனு சொல்லி பலரை காவு வாங்கப் பார்க்கிறீங்களே அவ்வ்.]]]

    அந்த அளவுக்குக்கூட ஒர்த் இல்லையா..? ச்சே.. உமக்குப் பிடிக்கிற மாதிரி எவனால படமெடுக்க முடியும்ன்னு தெரியலையே..?

    [[[ஒரு படத்தில் எதவாது கொஞ்சமாச்சும் தேறும், இந்தப் படத்தில் ஹீரோயின்கூட தேறலை. பேசாம டிஸ்கோ பாட்டுக்கு ஆடின பாப்பாவை "முழுசா" பயன்ப்படுத்தி இருக்கலாம் :-))]]]

    ஹி.. ஹி.. இருக்கலாம்தான்..!

    [[[ரொம்ப காலத்துக்கு முன்னரே எடுத்து பொட்டியில் தூங்கின படம்னு உண்மையை சொல்லாமல் ,புத்தம் புதிய படம் போல வெளியிட்டு இருக்காங்க, செத்துப் போன அலெக்ஸ் எல்லாம் சுடுகாட்டில் இருந்து எழுந்து வந்து நடிச்சிருக்கார் :-))]]]

    2 வருஷத்துக்கு மு்ன்னாடி தயாரிச்சது.. பைனான்ஸ் இழுபறில சிக்கி தவிச்சு இப்பத்தான் வெளில வந்திருக்கு..!

    [[[இந்த படம் பார்க்க எனக்கு 20 ரூபாதான் செலவாச்சு,ஆனால் அதன் பின் தலைவலிக்காக 250 ரூவாக்கு சரக்கு வாங்க வேண்டியதா போச்சு அவ்வ்!]]]

    ஹா.. ஹா.. வாழ்க இயக்குநர்.. வளர்க இவரது தொண்டு..!

    ReplyDelete