Pages

Wednesday, November 14, 2012

துப்பாக்கி - சினிமா விமர்சனம்

14-11-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்த ஆண்டின் இறுதியில் வந்திருக்கும் இன்னுமொரு வெற்றிப் படம். ஏழாம் அறிவில் விட்ட பெயரை இதில் மீண்டும் பெற்றிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். ஒரு மூட்டை லாஜிக் மீறல்கள் இருந்தாலும் அதனை யோசிக்க வைக்காமல் கொண்டு சென்ற திரைக்கதையினால் விஜய் ரசிகர்களின் கொண்டாட்டம் தியேட்டர்களில் உச்சத்திற்குச் சென்றுள்ளது..! வெல்டன் துப்பாக்கி டீம்..!

முதல் பாராட்டு விஜய்க்குத்தான்.. எத்தனையோ நல்ல கேரக்டர்களை தனது ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள் என்று சொல்லி நிராகரித்தவர். 'தூள்' படத்தில் இவரே நடித்திருக்கலாம். 'சித்திரம் பேசுதடி', 'அஞ்சாதே', 'முகமூடி'யிலும் நடித்திருக்கலாம்.. தனக்கான வேடமில்லை என்று தவிர்த்திருக்கிறார். ஆனால் நடித்திருந்தால் விஜய்யின் கேரியருக்கு மிக முக்கியமான படங்களாக இவைகள் இருந்திருக்கலாம். இந்தப் படத்திலும் நடிக்காமல் போயிருந்தால் விஜய்க்குத்தான் நஷ்டமாகியிருக்கும்.. நல்லவேளை.. ஒத்துக் கொண்டு நடித்தமைக்கு முதல் வாழ்த்துகள் அவருக்கே..!


 

ராணுவத்தில் இருந்து விடுமுறைக்காக மும்பை வரும் ஜெகதீஷ் என்னும் கேப்டனான விஜய், பேருந்தில் குண்டு வைத்த தீவிரவாதியை தப்ப விட்டு அவனது அப்போதைய திட்டத்தை மொத்தமாக அழிக்கிறார். இதனால் வெகுண்டெழும் ஒரிஜினல் சூத்ரதாரி மும்பைக்கே பறந்து வந்து விஜய்யை தீர்த்துக் கட்டப் பார்க்க.. சூப்பர் ஹீரோ விஜய் எப்படி அவரை முறியடித்தார் என்பதுதான் இந்த 2.55 நிமிட படத்தின் கதைச் சுருக்கம்..!

முதல் அரை மணி நேரம் காஜல் அகர்வாலே நம்மைக் கட்டிப் போடுகிறார். அடுத்து விஜய் துப்பாக்கியை கையில் தூக்கிய நொடியில் இருந்து இறுதிவரையிலும் நம்மை அசையாமல் பார்த்துக் கொண்டவர் திரைக்கதை ஆசிரியரான ஏ.ஆர்.முருகதாஸ்தான்..! பாராட்டுக்கள்..!

விஜய்யின் பெர்பார்மென்ஸ் பல இடங்களில் இயக்குநரால் பளீச்சென்று இருக்கிறது..! என்னதான் நடிப்பு இருந்தாலும் வெளிக் கொணருவது இயக்குநர்கள்தானே..!? காஜல் அகர்வாலுடனான காதல் காட்சிகளில் விஜய் பழைய கில்லி காலத்துக்கே போனதுபோல் தோன்றுகிறது..! போட்டு வாங்குவதுபோல் சிகரெட் பழக்கம், குடிப் பழக்கத்தை காஜலிடம் கேட்டு அவர் மூலமாகவே தெரிந்து கொள்வதும்.. காதலை சி்ன்னப்புள்ளத்தனமாக வெளிப்படுத்துவதும் பார்க்கவே க்யூட்டாக இருந்தது..!

கேப்டன் விஜய்யாகவும் பரபரப்பாக பம்பரம் ஆடியிருக்கிறார்.. தீவிரவாதி மருத்துவமனையில் இருந்து  தப்பித்து ஓடும்போது கூடவே இவரும் ஓடியபடியே போடும் சண்டைக் காட்சியில் விஜய்யின் ஸ்டைல் ரசிக்க வைக்கிறது..! தங்கைகளை கடத்தியிருக்கும் தளபதி வில்லனிடம் கையை கன்னத்தில் வைத்து சொடக்குப் போட்டுவிட்டு சண்டைக்கு வரும் காட்சியில் பிரிவியூ தியேட்டரே அதிர்ந்தது..! ஐ ஆம் வெயிட்டிங் என்ற காட்சியில் இத்தனை அழுத்தம்  இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.. இறுதியில் வில்லனிடம் தப்பித்து ஓடும் திட்டத்தோடு அவனை ஏத்திவிடும் விதமாக பேசும் பேச்சில் மாடுலேஷன் விஜய் ரசிகர்களுக்கு செமத்தியான தீனி..! அதுதான் நடக்கப் போகிறது என்று தெரிந்தாலும், அதையும் ரசிக்கும்படியாகவே கொடுத்திருக்கிறார் இயக்குநர்..!

காஜல் வரும் காட்சிகளிலெல்லாம் ஸ்கிரீனே அழகாய் இருக்கிறது.. அண்டார்டிகா, கூகிள் பாடல் காட்சிகளில் அவருடைய நடனம் இளசுகளை ஆட்டம் போடத்தான வைக்கிறது.. அம்மணியின் இந்த தாளம் தப்பாத ஸ்டெப்புகள் தமிழ்ச் சினிமாவி்ல இன்னும் கொஞ்சம் கூடினால் அனுஷ்காவையும் ஓரம்கட்டலாம்..! கோபத்தில் சிந்திச் சிதறும் அந்த திண்டுக்கல் மலைக்கோட்டை போன்ற மூக்கின் மீதான குளோஸப் காட்சிகளெல்லாம் காஜலின் ஸ்பெஷலாட்டி.. “அந்த மேட்டர் பொண்ணே உன்னை வேணாம்னு சொல்லிருச்சே..” என்று சொல்லிக் காட்டி சிரிக்கும்போது காஜலின் சிரிப்பே ஆயிரம் முத்துக்களை சிந்துகிறது..! இறுதியில் நிச்சயத்தார்த்தத்தை நிறுத்திக் கொள்ளும்படி விஜய் சொல்லும் காட்சியில் இந்த ஐஸ்கிரீம் பெண்ணை கண்ணீர் விட வைத்திருக்கும் ஏ.ஆர்.முருகதாஸுக்கு நமது வன்மையான கண்டனங்கள்..! காஜலைத் தவிர்த்து விஜய்யின் தங்கையாக வருபவரும், ஜெயராம் அழைத்து வரும் மேட்டர் பொண்ணுமே, கேமிராவுக்கு அழகாக இருக்கிறார்கள்..! 

ஜெயராம் சம்பந்தப்பட்ட காட்சியின் முடிவு இப்படித்தான் இருக்கும் என்று ஊகிக்க முடியாமல் கொண்டு போயிருப்பது குட்..! ஆனாலும் இவ்வளவு நீளம் தேவையில்லாதது.. இதனை சற்றுக் குறைத்திருக்கலாம்..! அல்லது முற்றிலுமாகவே நீக்கியிருக்கலாம்..! சத்யன் பரவாயில்லை.. “ஏண்டா உங்க வீட்ல கப்போர்ட்ல வேற எதையும் வைக்க மாட்டீங்களா..?” என்ற அவரது இடித்தலும் நன்று..! ஆனால் இவரது கேரக்டர் ஸ்கெட்ச்சில்தான் ஆயிரமாயிரம் லாஜிக் ஓட்டைகள்.. அதனாலென்ன பரவாயில்லை.. வடிவேலுவையோ, விவேக்கையோ வைத்திருந்தால் கூடுதலாக காட்சிகள் வைக்க வேண்டியிருந்திருக்கும். அவர்களுக்கும் போலீஸ் டிரெஸ் சூட்டாகியிருக்காது.. வேறு வழியில்லை..!

எழுதி இயக்கியிருக்கும் ஏ.ஆர்.முருகதாஸுக்கு பின்பு அடுத்து பாராட்டுக்குரியவர் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்தான்.. பின்னணி இசையில் விளையாடியிருக்கிறார்.. காஜலை பெண் பார்க்க வரும் காட்சியில் அவரது இசையே தனி கேரக்டராகவே இசைக்கிறது.. கேட்கவே ரம்மியமாக இருந்தது.. மருத்துவமனை சண்டை காட்சி.. நாயுடன் ஓடும்போது திடுக்கென்று காட்சி  மாற்றத்தில் வரும் இசை.. காஜலுடனான லவ் பிரேக்கிங் காட்சிகள்.. மெயின் வில்லனின் வீட்டில் டிவி பார்க்கும்போது வரும் பின்னணி... குண்டு வெடிப்பின் கோரங்களைக் காட்டும் இசை.. இது போன்ற படங்களில் பின்னணி இசையும் மிக முக்கியம் என்பதை உணர்ந்து செய்திருக்கிறார் இயக்குநர்.. காட்சிகளோடு ஒன்ற வைப்பதில் இந்த இசையும் பெரும் பங்களிப்பைச் செய்திருக்கிறது..! வாழ்த்துகள் ஹாரிஸ் ஸார்..!

ராணுவம், கேப்டன், ராணுவ நுண்ணறிவுப் பிரிவில் ஒரு ஆபீஸர் என்று விஜய்க்கு மகுடங்கள் சூட்டி களத்தில் இறக்கிவிட்டிருந்தாலும், இத்தனை கொலைகள் நடந்தும் மும்பை போலீஸ் அடக்கமாக இருந்திருக்கும் என்று சொல்லியிருப்பது மகா அபத்தம்..! அதிலும் சத்யன் தீவிரவாதிகளை பற்றி விஜய்யிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது பத்து முழம் பூவை காதில் சுற்றுவதற்குச் சமம்..! இப்படி ஒரு சப் இன்ஸ்பெக்டர் இருந்தால் பதவியிறக்கம்தான் கிடைக்குமே ஒழிய, பதவி உயர்வு கிடைக்காது..!

12 தீவிரவாதிகள் கொலை.. ஒரு கூடுதல் கண்காணிப்பாளர் கொலை.. அடுத்தடுத்து ராணுவ வீரர்கள் கொலை.. என்ன செய்யும் மும்பை..? போலீஸோடு இணைந்தே இதனைச் செய்வது போல காட்டியிருந்தாலும் கொஞ்சம் ஒத்துக் கொள்ளலாம்..! விஜய் ரசிகர்கள் தரும் காசு அளவுக்கு மும்பை போலீஸின் வருகை திரைக்கதையில் அழுத்தம் தராது என்று இயக்குநர் நினைத்திருக்கலாம்..! இது ச்சும்மா.. முழுக்க முழுக்க எண்ட்டர்டெயின்மெண்ட் என்று சொல்லியிருந்தால் இதையெல்லாம் கேட்காமலேயே இருந்திருக்கலாம்..!

படத்தின் முடிவில் “அனைத்து ராணுவத்தினருக்கும் இந்தப் படம் சமர்ப்பணம்” என்று டைட்டில் கார்டு போட்டு படத்தை ரொம்பவே சீரியஸாக்கிவிட்டார்கள்..! இதைப் பார்த்து யாராவது ஒரு முன்னாள் ராணுவத்தினர் கேஸ் போடாமல் இருந்தாலே பெரிய விஷயம். நேற்றைக்கு படத்தின் முதல் காட்சி முடிந்தவுடனேயே ஒரு இஸ்லாமிய அமைப்பு படத்தில் இஸ்லாமியர்களையே தீவிரவாதிகளாக உருவகம் செய்திருப்பதாகச் சொல்லி விஜய் வீட்டு முன் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துவிட்டது.. என்ன செய்வது..? 

இந்து தீவிரவாதிகளைவிடவும், இஸ்லாமிய தீவிரவாதிகளை பற்றி படமெடுப்பது இந்தியாவில் சுலபம் என்பது சினிமா இயக்குநர்களுக்கு நன்கு தெரியும். அதனால்தான் தைரியமாக எடுக்கிறார்கள்..! இதற்கு இயக்குநரின் பதில், “தொடர் குண்டு வெடிப்புகளில் இஸ்லாமிய தீவிரவாதம்தானே முன்னிலை வகிக்கிறது..” என்பதாகவே இருக்கும் என்பது உறுதி..!

ஆனால், இந்து தீவிரவாதம் பற்றி படமெடுத்து தான் கஷ்டப்பட விரும்பவில்லை என்பதை மறைமுகமாக இயக்குநர் இப்படி ஒத்துக் கொண்டு போவதை நாமும் கனத்த மனதோடு பார்த்துக் கொண்டிருப்போம்..! வேறு வழியில்லை..!
 

28 comments:

  1. நல்ல அழகான விமர்சனம்.

    ReplyDelete
  2. துப்பாக்கி பட சர்சை. முஸ்லிம் எதிர்ப்பு நியாயமா?

    http://rajamelaiyur.blogspot.in/2012/11/
    vijay-movie.html

    ReplyDelete
  3. விமர்சனம் ஓகே.

    ஏங்க, எல்லாரும் பின்னனி இசையை பத்தி வாரு வாருன்னு வாருராங்க. நீங்க சூப்பரா இருக்குன்னு சொல்றிங்க?

    வித்தியாசமா இருக்கே!

    ReplyDelete
  4. படித்து விட்டேன். எல்லா இடத்திலும் பாசிட்டிவ் ரிசல்ட் தான் சொல்லியிருக்கிறார்கள்!

    ReplyDelete
  5. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் விமர்சனம்! சூபபர்!

    ReplyDelete
  6. "அவனைப்போல் அசிங்கமாக இன்னொருவன்"..! தூ....ப்பாக்கி...!

    ReplyDelete
  7. [[["என் ராஜபாட்டை"- ராஜா said...

    நல்ல அழகான விமர்சனம்.]]]

    ஆஹா.. இன்னிக்கு முதல் போணியே வாழ்த்தா..? ம்.. நன்றி ராஜா ஸார்..!

    ReplyDelete
  8. [[["என் ராஜபாட்டை"- ராஜா said...

    துப்பாக்கி பட சர்சை. முஸ்லிம் எதிர்ப்பு நியாயமா?

    http://rajamelaiyur.blogspot.in/2012/11/vijay-movie.html]]]

    உங்களுடைய கருத்தில் சிறிய அளவில் எனக்கு வேறுபாடு உண்டு..!

    ReplyDelete
  9. [[[வரதராஜலு .பூ said...

    விமர்சனம் ஓகே. ஏங்க, எல்லாரும் பின்னனி இசையை பத்தி வாரு வாருன்னு வாருராங்க. நீங்க சூப்பரா இருக்குன்னு சொல்றிங்க? வித்தியாசமா இருக்கே!]]]

    எனக்குப் பிடிச்சிருக்கு ஸார்..! நீங்க வேண்ணா படம் பார்த்திட்டு முடிவு பண்ணிக்குங்க..!

    ReplyDelete
  10. [[[திண்டுக்கல் தனபாலன் said...

    செம ஹிட்...]]]

    திரையிட்ட அனைத்து இடங்களிலும்..!

    ReplyDelete
  11. [[[ஸ்ரீராம். said...

    படித்து விட்டேன். எல்லா இடத்திலும் பாசிட்டிவ் ரிசல்ட்தான் சொல்லியிருக்கிறார்கள்!]]]

    படம் அப்படித்தான் இருக்கு ஸார்..!

    ReplyDelete
  12. [[[s suresh said...

    லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் விமர்சனம்! சூபபர்!]]]

    நன்றி சுரேஷ்..!

    ReplyDelete
  13. [[[~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

    "அவனைப் போல் அசிங்கமாக இன்னொருவன்"..! தூ....ப்பாக்கி...!]]]

    இன்னும் ஒருவன் பின்னாடியே வருவான்..! காத்திருங்கள்.. உங்களுடைய எதிர்ப்பில் நியாயம் உண்டு..!

    ReplyDelete
  14. கதாநாயகி காஜல் அகர்வாலுக்கு
    ராகினிஸ்ரியின் பின்னணிக் குரல்
    எவ்வாறு இருந்தது

    ReplyDelete
  15. [[[ராம்ஜி_யாஹூ said...

    கதாநாயகி காஜல் அகர்வாலுக்கு
    ராகினிஸ்ரியின் பின்னணிக் குரல்
    எவ்வாறு இருந்தது.]]]

    மாற்றானைவிடவும் இதில் நன்றாகத்தான் இருந்தது ராம்ஜியண்ணே..!

    ReplyDelete
  16. நன்றி ! நான் விமர்சனம் மற்றும் படி ப்பவன் !

    ReplyDelete
  17. நன்றி ! நான் விமர்சனம் மற்றும் படி ப்பவன் !

    ReplyDelete
  18. நண்பனுக்கு அடுத்து துப்பாக்கி இன்னும் ஒரு flop படம் தான் விஜய்க்கு. மாயாஜால் திரையரங்கில் காட்சிகளை முதல் வாரத்திலேயே குறைத்துவிட்டார்கள். இந்திய முஸ்லிம்களை தேச துரோகிகளாய் சித்தரித்து கெட்ட பெயர் சம்பாதித்தது தான் மிச்சம்.

    படம் ஒரு மொக்கை. வில்லன் யார் என்று 20 நிமிடத்திலேயே சொல்லிவிட்டு, அடுத்த 2 மணி நேரத்துக்கு துரத்தும் படலம் தான் கதை. இதை விட பல மடங்கு சிறப்பாக வால்டர் வெற்றிவேல், புலன் விசாரணை, குருதிப்புனல் திரைக்கதை அமைந்திருக்கும். முருகதாசுக்கு சரக்கு தீர்ந்துவிட்டது.

    ReplyDelete
  19. தல,

    90 டிகிரி விமர்சனம் ங்குற பேருல மத பிரச்சைய தூண்டுற மாதிரி பதிவு எழுதும் பயலுவளுக்கு மத்தில நீங்க பரவாஇல்ல தல.

    படத்த படமா பாருங்கடான்னா ... சரி அத விடுங்க ...

    புத்தர ஒரு அவதாரமா ஆக்குன ஹிந்து மதம், நபிகள் நாயகம் (PBUH) அவர்களை பத்தாவது அவதாரமா ஆக்கும் நாள் வெகுதூரம் இல்லை. அதுவரை மத வெறியர்கள் எழுதும் பதிவுகளை கனத்த மனதோடு படித்து கொண்டு இருப்போம்.


    எம்மதமும் நம்மதம்.

    ReplyDelete
  20. இந்தியாவில் நடக்கும் ஊழல்களை பார்த்து நம்பிக்கை இழந்து வரும் நேரத்தில், இது போன்ற நாட்டுப் பற்றை உயிர்பிக்கும் படங்கள் பார்க்க நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  21. யார் தீவிரவாதி.............??? நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ்

    விவாதிக்க தயாரா?

    யார் தீவிரவாதி.............???

    பொதுமக்கள் முன்னிலையில், மீடியா முன்னிலையில் நேரடி விவாதத்திற்கு

    தயாரா..........???

    இயக்குனர் முருகதாஸ், நடிகர் விஜய் அவர்களே...

    இஸ்லாமியர் என்றால் தீவிரவாதியா ? நீங்கள் உண்மையான செய்தியை தான்

    சொன்னீர் என்றால் யார் தீவிரவாதிகள் என்று விவாதிக்க தயாரா ?

    உன்னையும் உன்னை போன்ற காவி பயங்கரவாதிகளின் முகத்திரையும் கிழித்தெறியப்படும்,

    ராணுவத்துறையில் எங்களுக்கு கிடைக்கவேண்டிய (இடஒதுகீட்டின் அடிப்படையில்

    கூட) வேலை கிடைக்காமல் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் எங்கள்

    சமுதாயத்தை இந்த அளவுக்கு புறம் தள்ள யாரிடம் பாடம் கற்றாய்?

    யார் தீவிரவாதி? பொதுமக்கள் மற்றும் மீடியா முன்னிலையில் விவாதிக்க தயாரா?

    1) தீவிரவாதத்தை இந்த நாட்டில் அரங்கேற்றுவது யார் ?

    2) சம்ஜயோதா எக்ஸ்ப்ரஸில் குண்டு வைத்தவன் யார் ?

    3) சபர்மதி எக்ஸ்ப்ரஸில் குண்டு வைத்தவன் யார் ?

    4) மக்கா மஸ்ஜிதில் குண்டு வைத்தவன் யார் ?

    5) அஜ்மீர் தர்காவில் குண்டு வைத்தவன் யார் ?

    6) கோவாவில் குண்டு வெடிப்பு நடத்தியவன் யார் ?

    7) மாலேகானில் குண்டு வைத்தவன் யார் ?

    8) நாடெங்கும் குண்டு வைத்து விட்டு அந்த பழியை முஸ்லிம்கள் மீது போடுபவன் யார் ?

    9) குஜராத்தில் 3000 முஸ்லிம்களை கொன்று குவித்தவன் யார் ?

    10) நாடு முழுவதும் கலவரத்தை நடத்துபவன் யார் ?

    11) நம் தேசத்தந்தை மகாத்மா அவர்களை கையில் இஸ்மாயில் என்று பச்சை

    குத்திக் கொண்டு காந்தியை கொன்றவன் யார் ?

    12) விநாயக சதுர்த்தி ஊர்வலத்தின் போது தலித்,மற்றும் முஸ்லிம் மக்கள்

    வாழும் பகுதியில் கலவரத்தை துண்டுபவன் யார் ?

    13) பெங்களூரில் பாகிஸ்த்தான் கொடியை ஏற்றி தேச துரோக செயலை செய்து

    விட்டு முஸ்லிம்கள் மீது பழியை போட்டு பிறகு மாட்டி கொண்டவன் யார் ?

    14) மாவீரன் கார்க்ரேவை கொன்றவன் யார் ?

    16) ஆந்திராவில் மாட்டு தலையை வெட்டி போட்டு கலவரத்தை தூண்டியவன் யார்?

    16) பாபர் மஸ்ஜித்தை இடித்து தரைமட்டமாக்கி உலக அரங்கில் இந்தியாவை தலை

    குனிய வைத்தவன் யார் ?

    17) இந்த நாட்டின் இறையாண்மையை இல்லாமல் ஆக்குபவன் யார் ?

    2003 மார்ச் 13:- மும்பை ரெயிலில் நடந்த குண்டு வெடிப்பில் 11 பேர் பலி.

    2003 ஆக 25:- மும்பையில் 2 கார் குண்டுகள் வெடித்து 60 பேர் பலி.

    2005 அக் 29:- டெல்லியில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 60 பேர் பலி.

    2006 மார்ச் 7:- காசியில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 15 பேர் பலி.

    2006 ஜூலை 11:- மும்பை ரெயில்களில் 7 குண்டுகள் வெடித்தன. 180 பேர் பலி.

    2006 செப் 8:- மலேகானில் நடந்த குண்டு வெடிப்பில் 35 பேர் பலி.

    2007 பிப் 19:- பாகிஸ்தானுக்கு சென்ற ரெயிலில் குண்டு வெடித்து 66 பயணிகள் பலி.

    2007 மே 18:- ஐதராபாத் மசூதியில் குண்டு வெடித்து 11 பேர் பலி.

    2007 ஆக 25:- ஐதராபாத்தில் நடந்த தொடர்குண்டு வெடிப்பில் 40 பேர் கொல்லப்பட்டனர்.

    2008 மே 13:- ஜெய்ப்பூரில் 7 இடங்களில் குண்டு வெடித்தது. 63 பேர் பலி.

    2008 ஜூலை 25:- பெங்களூரில் 8 இடங்களில் குண்டு வெடித்தது. 1 பெண் பலி.

    2008 ஜூலை 26:- ஆமதாபாத்தில் 16 இடங்களில் குண்டு வெடித்தது. 45 பேர் பலி.

    ReplyDelete
  22. 2008 செப் 13:- டெல்லியில் அடுத்தடுத்து 5 இடங்களில் குண்டு வெடித்தது.

    23 பேர் பலி.

    1983 பிப்ரவரி 18: அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியிலிருந்து சுமார் 40 கி.மீ.

    தூரத்திலுள்ள நெல்லி எனும் கிராமத்தில் 1983, பிப்ரவரி 18 அன்று

    ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் திட்டமிட்ட இனப்படுகொலை ஒன்று

    நடத்தப்பட்டது. இதில் 2,191 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். 370

    குழந்தைகள் அநாதையாக்கப்பட்டனர். 16 கிராமங்களிலிருந்த முஸ்லிம்களின்

    வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன.

    1989 பாகல்பூர் கலவரம்: பீகார் மாநிலம் பாகல்பூரில் சிறுபான்மை

    முஸ்லிம்களுக்கு எதிராக ஹிந்துத்துவ தீவிரவாதிகளால் 1989 ல் கலவரம்

    நடத்தப்பட்டது. இதில் முஸ்லிம்கள் 116 பேர் கொல்லப்பட்டனர்.

    இந்த கலவரத்தை ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கமும் அதன் துணை அமைப்புகளும்

    திட்டமிட்டு நடத்தின. ஜக்தீஷ்பூர் காவல்நிலையத்தின் ஆய்வாளர் ராமச்சந்திர

    சிங் மற்றும் கிராமத்தலைவர் தாக்குர் பாஸ்வான் ஆகியோர் இந்த படுகொலைக்கு

    உறுதுணையாக இருந்து செயல்பட்டனர்.

    இதன் மூலம் சொந்த நாட்டில் 30,000 பேரை அகதிகளாக்கி, 3000க்கும் மேற்பட்ட

    வீடுகளைச் சூறையாடி, ஒரு பெரும் இன அழிப்பை நடத்தினர் ஹிந்துத்துவா

    பயங்கரவாதிகள்.

    இந்து தீவிரவாதிகள் பட்சிலம் குழந்தைகளை வெட்டி கிழித்து இரு

    கூராக்கினார்கள். மேலும் நெருப்பு குண்டம் வளர்த்து அதில் பெண்களின்

    கைகளில் இருந்த குழந்தைகளை பறித்து போட்டனர். அந்த குழந்தைகள் தீயில்

    கருகி சாவதை பார்த்து ரசித்து பேரானந்தம் அடைந்தனர்.

    மறக்கப்பட்ட நெல்லி இனப்படுகொலை இந்தியாவில் ஹிந்துதுவாவினர் நடத்திய

    தொடர் இனப்படுகொலைகளின் ஒரு முன்னோட்ட மாகவே பார்க்கப்படுகிறது. இதனைத்

    தொடர்ந்தே டெல்லியில் 1984லும், பாகல்பூரில் 1989லும், மும்பையில்

    1993லும் நாடு தழுவிய இனப்படுகொலைகள் நடைபெற்றன.

    இதனுடைய உச்சகட்ட நிகழ்வுதான் குஜராத் இனப்படுகொலை (2002 பிப்ரவரி 28).

    அதன் தொடர்ச்சிதான் இப்போது இந்தியா முழுவதும் ஹிந்துத்துவா

    பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்புகள்.

    தீவிரவாதத்தை இந்த நாட்டில் அரங்கேற்றுவது யார் ? இதை பற்றியெல்லாம்

    படமெடுக்க கேடுகெட்ட கமல், விஜய்,அர்ஜுன், விஜயகாந்த், மணிரத்னம்,

    முருகதாஸ் போறவர்களுக்கு துணிவு இருக்கா ?

    பல பெண்களை கட்டிப்பிடித்து, தடவிக் கொடுத்து அதன் மூலமாக வாங்கிய

    பணத்தில் வயிற்றை நிறைக்கக் கூடிய மானங்கெட்டவர்களே?

    இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகவும், தேசப்பற்று இல்லாதவர்களாகவும்

    சித்தரிக்கப்பட்ட திரைப்படத்தில் நடித்து உள்ளாயே? இஸ்லாமியர்களை பற்றி

    பேசுவதற்காவது உனக்கு தகுதியுள்ளதா?

    மூளை மழுங்கியவர்களையும், ஒன்றும் அறியாத ஏழை ரசிகர்களின் தயவில் வாழக்

    கூடிய நீ இந்த நாட்டிற்காகவும் நாட்டு மக்களுக்காகவும் செய்தது என்ன?

    உனது திரைப்படத்தில் பெண்களை ஒரு போகப் பொருளாகவும், ஊருகாயாகவும்

    பயன்படுத்தி பெண்களை இழிவுபடுத்திக் கொண்டிருப்பதுதான் நீ நாட்டுக்கு

    செய்யும் தேசப்பற்றா?

    பல சமூகத்தவர்களும் ஒற்றுமையாக இருக்கக் கூடிய இடங்களில் இது போன்ற

    திரைப்படங்கள் மூலமாக மக்களின் மனதில் நஞ்சை விதைத்து உனது காவி

    சிந்தனையை காட்டுகின்றாயா?

    பல திரைப்படங்களில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்துவிட்டு, இதனை

    ஈடுகட்ட ஹீரோவின் நண்பனாக ஒரு குல்லாவும், தாடியும் வைத்து ஒருவனை நடிக்க

    வைப்பது. உங்களது நடுநிலை புல்லறிக்க வைக்கின்றது.

    நாய்ப் புகழ் நடிகரைப் போல ஒரு சமுதாயத்தை இழிவுபடுத்தும் இது போன்று

    திரைப்படங்களில் நடித்து அரசியலில் களம் இறங்க அடித்தளமிட்டால் இது உனது

    அறியாமையையும், அடி முட்டாள்தனத்தைத் தான் காட்டுகின்றது. என்பதில்

    சிறிதும் மாற்றுக்கருத்து இருக்காது.

    ReplyDelete
  23. [[[பகுத்தறியாதவன் said...

    நன்றி ! நான் விமர்சனம் மற்றும் படிப்பவன் !]]]

    ஏன்.. நீங்களும் எழுதலாமே..? முயற்சி செய்யுங்கள்..!



    ReplyDelete
  24. [[[Sadat said...

    நண்பனுக்கு அடுத்து துப்பாக்கி இன்னும் ஒரு flop படம் தான் விஜய்க்கு. மாயாஜால் திரையரங்கில் காட்சிகளை முதல் வாரத்திலேயே குறைத்துவிட்டார்கள்.]]]

    சென்ற மாதத்தில் இருந்து பொதுவான ரசிகர்களின் வருகையே குறைந்துவிட்டது. அதனால்தான்..!

    [[[இந்திய முஸ்லிம்களை தேச துரோகிகளாய் சித்தரித்து கெட்ட பெயர் சம்பாதித்ததுதான் மிச்சம்.]]]

    இதில் அனைவருக்குமே வருத்தம்தான்..!

    [[[படம் ஒரு மொக்கை. வில்லன் யார் என்று 20 நிமிடத்திலேயே சொல்லிவிட்டு, அடுத்த 2 மணி நேரத்துக்கு துரத்தும் படலம்தான் கதை. இதைவிட பல மடங்கு சிறப்பாக வால்டர் வெற்றிவேல், புலன் விசாரணை, குருதிப்புனல் திரைக்கதை அமைந்திருக்கும். முருகதாசுக்கு சரக்கு தீர்ந்துவிட்டது.]]]

    அப்படி நினைக்காதீர்கள்.. வேறு டைப் படங்களை இயக்கும்போது புத்துணர்ச்சியோடு வருவார் என்று நம்பலாம்..!

    ReplyDelete
  25. [[[அஹோரி said...

    தல,

    90 டிகிரி விமர்சனம்ங்குற பேருல மத பிரச்சைய தூண்டுற மாதிரி பதிவு எழுதும் பயலுவளுக்கு மத்தில நீங்க பரவாஇல்ல தல. படத்த படமா பாருங்கடான்னா... சரி அத விடுங்க.

    புத்தர ஒரு அவதாரமா ஆக்குன ஹிந்து மதம், நபிகள் நாயகம் (PBUH) அவர்களை பத்தாவது அவதாரமா ஆக்கும் நாள் வெகுதூரம் இல்லை. அதுவரை மத வெறியர்கள் எழுதும் பதிவுகளை கனத்த மனதோடு படித்து கொண்டு இருப்போம். எம்மதமும் நம் மதம்.]]]

    முஸ்லீம் தீவிரவாதிகளை பற்றியே படமெடுக்கிறார்களே.. ஒரு ஹிந்து தீவிரவாதத்தை பற்றி எடுக்க தைரியமில்லையே என்பதால்தான் எனது கண்டனத்தையும் தெரிவித்திருக்கிறேன்..!

    இரண்டையும் எடுக்கவே கூடாது என்று சொல்ல முடியாது..! மதம் ஒரு அபின் போன்றது என்பதை இரு தரப்பாருமே புரிந்து கொண்டால் சரி..!

    ReplyDelete
  26. அப்துல் ரகுமான்..

    உங்களுடைய கோபத்தில் உள்ள நியாயம் புரிகிறது..! முஸ்லீம்கள்தானே என்ற அலட்சியத்திற்கு தக்க பதிலடி இந்தப் படத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு கிடைத்திருக்கிறது.. ஒட்டு மொத்த சினிமாவுலகமும் இதனை உணர்ந்திருக்கும் என்றே நம்புகிறேன்..

    தவறுகள் இரு தரப்பு தீவிரவாதிகள் மீதுதானே தவிர.. மதங்களின் மீதோ, மக்களின் மீதோ அல்ல..! இதை கலைஞர்களும் புரிந்து கொள்ள வேண்டும்..!

    ReplyDelete