Pages

Saturday, October 20, 2012

பீட்சா - சினிமா விமர்சனம்


19-10-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


அட்டக்கத்தியைக் கொடுத்த தயாரிப்பாளர் சி.வி.குமாரின் அடுத்த அட்டகாசமான படைப்பு இது..! தமிழில் இது போன்று படம் பார்த்து ரொம்ப நாளாச்சு.. கடைசியாக இரண்டாண்டுகளுக்கு முன்பு உட்லண்ட்ஸில் உலகத் திரைப்பட விழாவில் ஒரு ஜப்பானிய திரைப்படம் பார்த்து அரண்டு போய் உட்கார்ந்திருந்தேன். அதற்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போதுதான்..!


படத்தின் கதை என்ன என்று பத்திரிகையாளர் சந்திப்பில் பல முறை கேட்டபோதும் “பீட்சா விக்குற கடைல வேலை பார்க்குற விஜய் சேதுபதியின் ஒரு நாள் வாழ்க்கை ஒரு விஷயத்தில் திருப்பிப் போடப்படுது. அது எதனால்ன்றதுதான் கதை.. தயவு செய்து இதுக்கு மேல கேக்காதீங்க.. ப்ளீஸ்..” என்று இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கெஞ்சி கேட்டுக் கொண்டார்.. வழக்கம்போல எல்லா இயக்குநர்களும் சொல்றதுதானே என்று அலட்சியமாக படம் பார்த்தவர்களெல்லாம், இடைவேளையிலேயே கார்த்திக்கை பார்த்து பவ்யமாக கும்பிடு போட்டார்கள்..!

என்னவொரு இயக்கம்..!? ஒரு நிமிடம்கூட கைக்கடிகாரத்தை பார்க்கவிடாமல், செல்போனை தொட விடாமல் அடுத்தது என்ன.. அடுத்தது என்ன என்று நம்மையும் ஸ்கிரீனுக்குள்ளேயே கொண்டு போய் உட்கார வைத்துவிட்டார்.. செம திரில்லிங்கான திரில்லர் மூவி. சத்தியமாக குழந்தைகளும், இளகிய மனம் கொண்டவர்களும் பார்க்க வேண்டாத படமும்கூட..! தாங்க முடியாது..!

நல்லவிதமாக விமர்சனம் எழுதுங்கள் என்பதைவிடவும், கதையை முழுதாகச் சொல்லிவிடாதீர்கள் என்று திரும்பத் திரும்ப இயக்குநர் கார்த்திக் கேட்டுக் கொண்டதாலும், இது போன்ற சிறந்த சினிமா படைப்புகள் மக்களிடம் போய்ச் சேர வேண்டியது அவசியம் என்பதாலும் பல்லைக் கடித்துக் கொண்டு கதையையும், திரைக்கதையையும் இங்கே முற்றிலுமாக தவிர்க்கிறேன்..!

இது போன்ற கதைகளுக்கெல்லாம் திரைக்கதைதான் முக்கியம்.. எந்த இடத்தில் சறுக்கினாலும் முழுப் படமும் சரிந்துவிடும் அபாயம் இருந்தாலும், இதில் எந்தத் தவறும் செய்யாமல் திரைக்கதையில் நம்மை வசீகரித்திருக்கிறார் இயக்குநர். இதற்கு உடந்தையானவர்கள் ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத்தும், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும்..!

படத்தின் துவக்கத்தில் முதல் 20 நிமிடங்களில் ஒரு அழகான காதல் கதை.. இன்றைய யதார்த்த வாழ்க்கையையொட்டி அற்புதமாக படமாக்கப்பட்டுள்ளது.. “நான் எதுலயாச்சும் கேர்லெஸ்ஸா இருந்ததை நீ பார்த்திருக்கியா..?” என்று விஜய் கேட்க, “நான் பிரெக்னெட்டா இருக்கேன்..” என்ற ரம்யா சொல்லும் பதிலும் எதிர்பாராதது.. ஆனால் கார்த்திக்கின் எழுத்து வன்மைக்கு இதுவொரு சான்று..! பல இடங்களிலும் இது போன்ற வசனங்கள் மின்னலாய்த் தெறித்திருக்கின்றன..!

படத்தின் முக்கிய இடமே அந்த பேய் வீடுதான்..! என்னமாய் ஜமாய்த்திருக்கிறார் விஜய் சேதுபதி.. ஒரு நிமிடம் பதட்டம்.. அடுத்த நிமிடம் சுதாரிப்பு.. மறுநிமிடம் பயம்.. அடுத்தது தேடல்.. என்று அந்த 50 நிமிட நேரம் நம்மையும் சீட்டு நுனிக்கு வரவழைத்து கதகளி ஆடியிருக்கிறார்..! உண்மையில் விஜய் சேதுபதியின் கேரியரில் இது ரொம்ப, ரொம்ப முக்கியமான படம்.. ஒன் மேன் ஷோவில் சேதுபதி நிச்சயமாக ஜெயித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்..!

அனுவாக வரும் ரம்யா நம்பீசனுக்கு நடிப்பில் முழு அளவுக்கான ஸ்கோப் இல்லையென்றாலும் தோன்றிய காட்சிகளில் ரம்யமாகவே நடித்திருக்கிறார்..! சைக்காலஜி படித்த பொண்ணாக விஜய்க்கு அட்வைஸ் செய்யும் காட்சிகளில் அலட்டல் இல்லாமல் நிறைவாகவே செய்திருக்கிறார்..! இனி திருமணமாகப் போகும் ஆண்களுக்கு ஆனி போன்ற மனைவி கிடைக்க வாழ்த்துகிறேன்.. காரணத்தை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..!

புதிய ஒளிப்பதிவாளர்கள் நிறைய கற்றுக் கொள்ளும்வகையில் இப்படத்தின் ஒளிப்பதிவில் வித்தை காட்டியிருக்கிறார் கோபி. ஒரு டார்ச் லைட்.. மெழுகுவர்த்தி வெளிச்சம்.. இதைவைத்து இப்படியொரு டென்ஷனை ஏற்றி.. நடிப்பை வாங்கியிருக்கிறார்கள் என்றால் இந்த யூனிட் மென்மேலும் பேசப்படக் கூடியவர்களாகவே இருப்பார்கள் என்று வாழ்த்துகிறேன்..! ஒரு வீட்டை இதை விடவும்  டெர்ரராக காட்ட முடியுமா...? அந்த மழையில் நனையும் டூயட் காட்சியில் விஜய், ரம்யாவைத் தவிர கேமிராவும் ஒரு ஆக்டராகவே நடித்திருக்கிறது என்றே சொல்லலாம்..!

இதேபோன்று இசையமைப்பாளரும்.. ஒவ்வொரு காட்சிக்கும் பொருத்தமான இசையை அள்ளிக் கொடுத்தும், தெளித்தும் மயிர் கூச்செறியும் ஆக்சனை படம் பார்ப்பவர்களிடத்தில் இருந்து வாங்கிக் கொடுத்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன்.  வீட்டு காலிங்பெல்லை அடித்ததில் துவங்கி, அந்த வீட்டில் இருந்து வெளியேறும்வரையிலும் அலறவும், அரற்றவும் வைத்திருக்கிறார்..  பின்னணி இசைக்காகவும் இந்தப் படம் நிச்சயம் பேசப்படும்..!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நிறைய படித்திருக்கிறார்.. சினிமாவில் அனைத்து டிபார்ட்மெண்ட்டுகளையும் நன்கு கற்று வைத்திருக்கிறார்.. அவரது குறும்படத்தில்கூட இதே போன்ற கதை வடிவம் ஒன்று இருந்தது.. படத்தின் இடைவேளையில் அந்தப் படத்தின் கதையும் நமது நினைவில் குறுக்கிட.. அதுவா.. இதுவா என்ற பல குழப்பத்தையும் எனக்குள் ஏற்படுத்தியது..! இப்படி டிவிஸ்ட்டுக்கு மேல் டிவிஸ்ட்டாக கொண்டு சென்று அவர் புதிரை விடுவித்த இடம் அழகு.. அதைவிட அழகு படத்தின் நிறைவுப் பகுதி.. இது போன்ற படங்களெல்லாம் இப்படித்தான் முடியும் என்பது தெரியும் என்றாலும், விஜய் சேதுபதியின் அற்புதமான நடிப்பில் இதுவும் புதுமையான சப்ஜெக்ட்டாகவே தெரிந்தது..! நன்றி கார்த்திக்..!

சினிமாவின் அனைத்துத் தொழில் நுட்பக் கலைஞர்களின் 100 சதவிகித முழுமையான அர்ப்பணிப்போடு உருவாகியிருக்கும் இப்படத்தின் தரம் திரையில் தெளிவாகத் தெரிகிறது.. இது போன்ற மாற்று சினிமாக்களையும் நாம் நிச்சயமாக ஆதரிக்க வேண்டும்..! திகிலும், திரில்லும் பிடிக்காதவர்களும், சினிமா என்னும் மொழிக்காக இப்படத்தை பார்த்து தெரிந்து கொள்வதில் எந்தத் தவறும் இல்லை..!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கு தமிழ்ச் சினிமாவில் ஒரு சிறந்த இடம் காத்திருக்கிறது என்றே உறுதியாக நம்புகிறேன்..! அவரது யூனிட்டார் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்..!

அவசியம் பார்க்க வேண்டிய படம் மக்களே..! தவற விடாதீர்கள்..!


24 comments:

  1. ரொம்ப நாளைக்கு அப்புறம்
    நல்லா இருக்கு இந்த சினிமா
    என்ற பதிவு

    ReplyDelete
  2. [[[ராம்ஜி_யாஹூ said...

    ரொம்ப நாளைக்கு அப்புறம் நல்லா இருக்கு இந்த சினிமா என்ற பதிவு.]]]

    அப்போ இத்தனை நாள் எழுதினதெல்லாம்..?

    கதையையும், திரைக்கதையையும் சொன்னா தப்பாயிருமேன்னு அடக்கமா விட்டா.. இதுவே எனக்கு டேமேஜாயிரும் போலிருக்கே..!

    ஏண்ணே இப்படி..?

    ReplyDelete
  3. இந்த ஞாயிற்றுக்கிழமை பார்த்துறலாம். நல்லா இருக்கும் போல இருக்கே! நல்லாவும் எழுதி இருக்கீங்க.

    ReplyDelete
  4. கடைசியாக இரண்டாண்டுகளுக்கு முன்பு உட்லண்ட்ஸில் உலகத் திரைப்பட விழாவில் ஒரு ஜப்பானிய திரைப்படம் பார்த்து அரண்டு போய் உட்கார்ந்திருந்தேன்........

    எனக்கு இது போன்ற படங்கள் பிடிக்கும் அந்த ஜப்பானிய படத்தின் பெயர் சொல்ல முடியுமா?

    ReplyDelete
  5. நானும் படம் பார்த்தேன் படம் அருமையாக உள்ளது

    ReplyDelete
  6. அருமையான விமர்சனம் அண்ணே... படம் பார்த்து எனக்கும் உங்களுக்கு ஏற்பட்ட உணர்வுதான் எனக்கும்!...

    ReplyDelete
  7. [[[rajasundararajan said...

    இந்த ஞாயிற்றுக்கிழமை பார்த்துறலாம். நல்லா இருக்கும் போல இருக்கே! நல்லாவும் எழுதி இருக்கீங்க]]]

    நன்றிண்ணே.. அவசியம் பாருங்கண்ணே.. பார்த்திட்டு எழுதுங்கண்ணே..!

    ReplyDelete
  8. [[[scenecreator said...

    கடைசியாக இரண்டாண்டுகளுக்கு முன்பு உட்லண்ட்ஸில் உலகத் திரைப்பட விழாவில் ஒரு ஜப்பானிய திரைப்படம் பார்த்து அரண்டு போய் உட்கார்ந்திருந்தேன். எனக்கு இது போன்ற படங்கள் பிடிக்கும் அந்த ஜப்பானிய படத்தின் பெயர் சொல்ல முடியுமா?]]]

    தேடிச் சொல்கிறேன் நண்பரே..! கப்போர்டுக்குள் ஒரு சிறுமி உக்கிரமான பார்வையோடு உட்கார்ந்திருப்பாள். டிரெயிலர் ஞாபகமிருக்கிறதா..?

    ReplyDelete
  9. [[[பால.சரவணன் said...

    நானும் படம் பார்த்தேன். படம் அருமையாக உள்ளது.]]]

    வருகைக்கு நன்றி சரவணன்..! இது போன்ற நல்ல படங்களுக்கு பரப்புரை செய்வதில் தவறில்லை..!

    ReplyDelete
  10. [[[பிரபாகர் said...

    அருமையான விமர்சனம் அண்ணே... படம் பார்த்து எனக்கும் உங்களுக்கு ஏற்பட்ட உணர்வுதான்.]]]

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி பிரபா..!

    ReplyDelete
  11. நல்ல படம் நிச்சயம் பார்க்கவென்டும்

    ReplyDelete
  12. [[[Hemanth said...

    நல்ல படம் நிச்சயம் பார்க்க வென்டும்.]]]

    அவசியம் பாருங்கள் நண்பரே..!

    ReplyDelete
  13. Aaranya Kaandam is 2011's best film - Pizza is 2012's best film.

    Both are debutants!!

    ReplyDelete
  14. Is it your account http://truetamilan.blogspot.in/

    ReplyDelete
  15. [[[HandsomeRockus said...

    Ramya's name is ANU not Annie!]]]

    ஓகே.. நன்றி.. திருத்திவிடுகிறேன்..!

    ReplyDelete
  16. [[[HandsomeRockus said...

    Aaranya Kaandam is 2011's best film - Pizza is 2012's best film.

    Both are debutants!!]]]

    அப்படியா..? ஆரண்யகாண்டத்தில் எனக்கு மாற்றுக் கருத்து உண்டு..!

    ReplyDelete
  17. [[[HandsomeRockus said...

    Is it your account http://truetamilan.blogspot.in/]]]

    அது நான் ஆரம்பிக்கலை.. என்னை கலாய்க்குறதுக்காக யாரோ ஒருத்தர் ஆரம்பித்தது..! இப்போதும் அப்படியே வைத்திருக்கிறார்கள்..!

    ReplyDelete
  18. வணக்கம், நான் புதுசு சார்,
    என் பெயர் அரவிந்ராஜ்.
    படம் சூப்பர் . இசையும் ஒளிப்பதிவும் பலம். க்ளைமாக்ஸ் மட்டும் இன்னும் கொஞ்சம் யோசித்திருக்கலாம்

    ReplyDelete
  19. [[[ARVIND RAJ said...

    வணக்கம், நான் புதுசு சார்,
    என் பெயர் அரவிந்ராஜ்.
    படம் சூப்பர். இசையும் ஒளிப்பதிவும் பலம். க்ளைமாக்ஸ் மட்டும் இன்னும் கொஞ்சம் யோசித்திருக்கலாம்.]]]

    வணக்கம் அரவிந்த்..! வலையுலகத்திற்குள் உங்களை அன்போடு வரவேற்கிறேன்..! நிறைய படியுங்கள்.. பின்பு மெதுவாக எழுதுங்கள்..!

    ReplyDelete
  20. [[[Anbazhagan Ramalingam said...

    superji. arumaiyana vimarsanam.]]]

    தங்களின் முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பரே..!

    ReplyDelete
  21. Nice movie.thought this may also be a schizophrenia movie but it was otherise. well made movie. I think the Japanese movie you are referring to is Ringu/Ring and there were two parts of it.there is a similar scene of a girl scribbling in it.

    ReplyDelete
  22. [[[Subramanian said...

    Nice movie. thought this may also be a schizophrenia movie but it was otherise. well made movie. I think the Japanese movie you are referring to is Ringu /Ring and there were two parts of it. there is a similar scene of a girl scribbling in it.]]]

    வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றிகள் ஸார்..! இயக்கம்தான் இந்தப் படத்தின் உயிர். அதைத்தான் மிக அழகாக குறைவில்லாமல் செய்திருக்கிறார். ஜப்பானிய படம் நீங்கள் சொல்வது அல்ல.. வேறொரு தலைப்பு..! நியாபகம் வரவில்லை..!

    ReplyDelete