Pages

Sunday, September 09, 2012

கள்ளப்பருந்து - சினிமா விமர்சனம்

08-09-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தப் படத்துக்கெல்லாம் விமர்சனம் எழுதணுமான்னு மொதல்ல யோசிச்சேன்.. அப்பால நாம எழுதாமவிட்டா தமிழ்ச் சினிமாவின் இன்னொரு பக்கம் நிறைய பேருக்குத் தெரியாமலேயே போயிருமே என்பதால எழுதுறேன்..!


மேஜர் சுந்தர்ராஜன் ஸ்டைல்ல ஒரு பணக்கார டாக்டர் அப்பன்.. அவனுக்கு ஒரு பொண்டாட்டி.. கணவன் சொல்லைத் தட்டாத மாதரசி.. இவுங்களுக்கு 2 பொண்ணுக.. மூத்தப் பொண்ணு கண்ணாலம் கட்டி அமெரிக்காவுக்கு போயாச்சு.. 2-வது பொண்ணு காலேஜ்ல படிச்சுக்கிட்டிருக்கு.. அப்பன்காரன் தமிழ்க் கலாச்சாரப்படி வாழணும்னு நினைச்சு மகள்களையும் அப்படியே வளர்க்கச் சொல்றான்..! 

ஆனா 2-வது பொண்ணு அப்பன் தலை தெரியாத நேரத்துல, தொடை தெரியற மாதிரியும் அரை குறை டிரெஸ்ஸை போட்டுக்கிட்டும் வீட்லயே நடமாடுது.. பெத்த அம்மாவை பேர் சொல்லிக் கூப்பிட்டு “அவளே”, “இவளே”ன்னு பேசுறா... அப்பனை பார்த்தவுடனே மட்டும் சமர்த்துப் பிள்ளையா டிரெஸ்ஸை மாத்திட்டு அடங்கிருது..!

இந்த நேரத்துலதான் வீட்டுக்கு கார் டிரைவரா நம்ம ஹீரோவை கூட்டிட்டு வர்றாரு அப்பனோட பிரெண்டு..! வர்றவன் ஏற்கெனவே கல்யாண மன்னன்னு பேர் எடுத்து, ஊருக்கு ஒரு கல்யாணம் செஞ்சு.. குஜாலா இருந்திட்டு குட்டு வெளியானவுடனேயே நல்ல பிள்ளையா சரண்டராகி ஜெயிலுக்கெல்லாம் போயிட்டு.. பணத்தைக் கொடுத்து கேஸை குளோஸ் பண்ணிட்டு வந்தவன்.. 

கூட்டிட்டு வந்தவன்.. ஹீரோவுக்கே அட்வைஸ் பண்றான்..! “மாப்ளை.. அந்த வீட்ல ஒரு பொண்ணு இருக்கு.. மொதல்ல அதை கரெக்ட் பண்ணப் பாரு.. அப்புறமா  அவ ஆத்தாவையும் கரெக்ட் செஞ்சிரு.. மொத்த சொத்தும் ஒனக்குத்தான்.. விஷயம் சக்ஸஸா முடிஞ்சா, சொத்துல பாதி எனக்கு..” - விலை மதிக்க முடியாத இந்த டீலிங்கிற்கு ஒத்துக்கிட்டுத்தான் ஹீரோ அந்த வீட்டுக்குள்ள வர்றாரு..!

முகத்தை பார்த்தாலே நாலு சுவத்துல போய் நம்ம மூஞ்சியைத் தேக்கணும்ன்ற ரேஞ்ச்சுல இருக்கும் 2-வது பொண்ணு.. அதைவிட கர்மமான மூஞ்சியோட இருக்கிறவன்கூட தேரோட்டிக்கிட்டிருக்கா..!  இதை அப்பனிடம் சொல்லாம இருந்தா கூடுதலா 10 ஆயிரம் மாசாமாசம் தர்றேன்னு ஹீரோகிட்ட சொல்றா 2-வது பொண்ணு..!

ஹீரோ கணக்குப் போடுறான்.. பணத்துக்காக ஒத்துக்குற மாதிரி நடிச்சு அந்தப் பொண்ணும், அந்தக் கர்மமும் தனியா ஒதுங்குறதை செல்போன்ல படம் புடிச்சு வைச்சுக்குறான்.. இந்த தேரோட்டம் வீட்லேயே தொடர.. அங்கேயும் செல்போன் டேப்பிங் நடக்குது..!

ஒரு சுபயோக.. சுபதினத்தில் கர்மம் புடிச்ச லவ்வரை துரத்திட்டு இப்போ நம்ம ஹீரோவே ஆண்ட்டி வில்லனாகிறான்.. செல்போன் மேட்டரை சொல்லி 2-வது பொண்ணை “அபேஸ்” செஞ்சர்றான்.. ஏற்கெனவே தேரோட்டத்துல கரை கண்ட சொக்கத் தங்கமா இருக்கும் அந்தப் பொண்ணு.. ஹீரோவை தீவிரமா லவ் பண்ண ஆரம்பிக்குது..!

இந்த நேரத்துலதான் முதல் பொண்ணும் அமெரிக்கால இருந்து திரும்பி வருது.. இது தங்கச்சிக்கும் மேல.. புருஷன்காரன் அமெரிக்கால இருந்தாலும் அப்பப்போ பொறந்த வீட்டுக்கு வரும்போதெல்லாம் தன் லவ்வரை தேடி போய் “குஷால்” ஆகிட்டிருக்கா.. இந்த விஷயமும் ஹீரோவுக்கு தெரிய.. பயபுள்ளை அக்காவையும் “கரெக்ட்டு” செஞ்சர்றான். கூடவே, அக்கா-தங்கச்சிக்குள்ள கலகத்தை உண்டு பண்ணி.. இந்தப் பக்கமும், அந்தப் பக்கமுமா மாறி மாறி தேரோட்டுறான்..!

அக்கா-தங்கச்சி சண்டை சென்னை தளபதி-மதுரை தளபதி சண்டையைவிட உக்கிரமாக நடக்க.. அக்காக்காரி ஹீரோவை அமெரிக்காவுக்கு கூட்டிட்டுப் போக முடிவு செஞ்சு அப்பன்கிட்ட சொல்றா.. அப்போ நடக்குற வாய்ச் சண்டைல அப்பன்காரனுக்கு இதுல ஏதோ ஒண்ணு இருக்குன்னு புரியுது.. இதைக் கண்டுபிடிக்கணும்னு நினைச்சு கை, கால் இழுத்து போலியோ அட்டாக் வந்த மாதிரி நடிச்சு வீட்ல படுக்குறான்..!

இதுதான் சமயம்ன்னு ஹீரோ, ஆத்தாவுக்கே லுக்கு விடுறான்.. ஏற்கெனவே தாவணி போட்டுவிட்டா அக்கா, தங்கச்சிக்கு மூத்த அக்காவா ஷோ காட்டுற மாதிரியிருக்குற அம்மாக்காரியை மகள்களோட சேட்டையைச் சொல்லி மடக்கிர்றான் ஹீரோ.. இதையும் கேட்டும், பார்த்தும் தொலைஞ்சிர்றாரு அப்பன்..!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அடிப்படைக் கொள்கைகளை, அஸ்திவாரத்தோட தோண்டியெடுத்து பார்த்தா மாதிரி அப்பனின் மனசு உடைஞ்சு போவுது.. குடும்பத்தோட பரமபதம் அடைய நினைச்சவன்.. கூடவே ஹீரோவையும், ஹீரோவை கூட்டிட்டு வந்த பிரெண்டையும் சேர்த்துத் துணைக்கு அழைச்சிக்கிட்டு சொர்க்க லோகம் போய்ச் சேர்றாரு.. அம்புட்டுத்தான் கதை..!

படத்தோட டைரக்டரு பெரிய அப்பாடக்கரா இருப்பாரு போலிருக்கு..! ச்சும்மா டயலாக்குலேயே ரேப் பண்ணிட்டாரு.. சீன்லாம் இருக்க வேண்டிய இடத்துல அதுவெல்லாம் இல்லாம, அதுக்கு லீடிங்கா டயலாக்கை வைச்சு நாமளே கற்பனை செஞ்சுக்க வேண்டியதான்ற மாதிரி பயங்கரவாதம் பண்ணியிருக்காரு.. 

அக்கா, தங்கச்சிக தொடையழகி ரம்பாவுக்கு தோஸ்த்தா வர்ற மாதிரி ஒரு சில காட்சிகள்தான் இருக்கே தவிர.. மற்றபடி பிட்டுக்கு வாய்ப்பே இல்லாத மாதிரிதான் எடுத்திருக்காங்க.. ஆனா சிச்சுவேஷனும், திரைக்கதையும், டயலாக்கும் ரொம்ப ஆபாசமா, எதிர்க்கலாச்சாரமா இருக்கு..!

இந்த மாதிரி மொக்கை படத்தோட டைரக்டரெல்லாம் படத்தோட வெற்றி, தோல்வியை பத்தியெல்லாம் எதிர்பார்க்க மாட்டாங்க. அவங்களுக்கு தேவை ஒரு தியேட்டரிலாவது படத்தை ஓட்டிட்டு, நானும் டைரக்டராயிட்டேன்னு எழுதி வைச்சுக்கணும்ன்றதுதான்.. அது நிச்சயமா நடந்திருச்சு..! 

பல வசனங்கள்.. சில காட்சிகளை கட் செய்தால் "ஏ" சர்டிபிகேட்டாவது கிடைக்கும் என்ற நிலையில் சர்டிபிகேட்டே கிடைக்கவில்லை என்று விளம்பரம் செய்து.. ரீவைஸிங் கமிட்டிக்குச் சென்று சர்டிபிகேட் வாங்கி வந்திருக்கிறார்கள். இதையும் விளம்பரம் செய்து கூட்டத்தைக் கூட்ட பார்த்திருக்கிறார்கள்..! என்ன செய்வது..? இவர்களுக்குத் தெரிந்தது இவ்வளவுதான்..!!!

இந்தக் கொடுமைதான் தாங்கலையேன்னு பார்த்தா.. படத்தோட காமெடி டிராக்குன்னு சொல்லி விநியோகஸ்தர் சங்கத்தின் செயலாளர் கலைப்புலி சேகரனை காமெடியனாக்கி நம்மையும் காமெடியாக்கிட்டாங்க.. இந்தத் தொல்லைக்கு ஹீரோவோட நடிப்புத் தொல்லையே பரவாயில்லையேன்னு பல இடத்துல நினைக்க வைச்சுட்டாங்க..! 

பிட்டு படங்களுக்கே உரித்தான இடங்கள் பல இருந்தும், நேர்மையாக பிட்டுகள் எடுக்கப்படாமலேயே விட்டுவிட்டதாக இதன் இயக்குநர் சொல்கிறார்.. தமிழகத்தின் பி அண்ட் சி தியேட்டர்களில் பிட்டுகள் சேர்த்து ஓட்டினாலும் இதனைப் பார்ப்பது கொடுமையாகத்தான் இருக்கும்..!

புதிய இயக்குநர்கள் தேவைதான்.. புதுமுகங்களும் தேவைதான்.. புதிய கதைகளும் தேவைதான்.. ஆனால் அதற்காக இப்படியா..? இது போன்ற கதைகளை பேப்பரில், பத்திரிகைகளில் படித்துவிட்டு தூர எறிந்துவிட்டுப் போய்விடலாம்.. ஆனால் இதை தியேட்டரில் குடும்பத்தோடு பார்க்க நேர்ந்தால் அந்தக் குடும்பத்தின் நிலை என்னவாகும்..? எதைப் பற்றியும் கவலைப்படாமல், “நாங்களென்ன.. ஒண்ணும் தெரியாததை.. யாரும் சொல்லாத்தை சொல்லிடலையே..? குமுதம் உட்பட பல பத்திரிகைகளில் வந்த கதையைத்தான எடுத்திருக்கோம்.. இதுல என்ன பெரிய விஷயம் இருக்கு..?” என்கிறார்கள் படத்தில் சம்பந்தப்பட்டவர்கள்..!

கதைக் கருவே.. முறைகேடான உறவைத் தூண்டிவிட்டு பணம் சம்பாதிக்க நினைக்கும் ஒரு இளைஞனின் கதையாக இருப்பதால், இந்த மாதிரி கர்மத்தை தியேட்டருக்கு வந்து பார்க்கிறவன்.. அடுத்து 6 மாசத்துக்கு தியேட்டர் பக்கமே வர மாட்டானே என்ற அடிப்படையை  இவர்களிடத்தில் யார் போய்ச் சொல்வது..? இப்படியே நல்ல படத்துக்கு வரக்கூடிய கூட்டத்தைக்கூட, இவங்க இப்படி கெடுத்துக்கிட்டிருந்தா தமிழ்ச் சினிமாவின் நிலைமை என்னவாகும்..?

சின்ன பட்ஜெட் படங்களின் எதிரிகள் கண்டிப்பாக பெரிய பட்ஜெட் படங்கள் அல்ல.. இது மாதிரியான குப்பையான சின்ன பட்ஜெட் படங்கள்தான்..! ஏற்கெனவே டிக்கெட் கட்டணக் கொள்ளை.. பார்க்கிங் கொள்ளை.. கேண்டீன் கொள்ளை என்று முத்தரப்பு கொள்ளையால் பாதிக்கப்பட்டிருக்கும், தியேட்டருக்கு வராமல் இருக்கும் ரசிகர் கூட்டத்தை மேலும் தடுக்கும் இந்த மாதிரியான படங்களை எடுப்பவர்கள்தான் தமிழ்ச் சினிமாவிற்கு மிக முக்கியமான எதிரிகள்..!

“இதே மாதிரிதான் எல்லா சின்ன பட்ஜெட் படமும்  மொக்கையாத்தான் இருக்கும்.. விடு.. வீட்லேயே பார்த்துக்கலாம்..” என்று சொல்லிச் சொல்லியே பல மதியக் காட்சி ரசிகைகளை இழந்தது  தமிழ்ச் சினிமாவுலகம்.. இப்போது இன்னும் கொஞ்சம் கூட்டத்தை இழந்து, சின்ன பட்ஜெட் படங்கள் தங்களுக்குத் தாங்களே கழுத்தில் கயிற்றை மாட்டிக் கொள்வதற்கு இந்த ஒரு படத்தையே உதாரணமாகச் சொல்லலாம்..!

கள்ளப்பருந்து -  பார்க்காமலேயே தொலைந்து போகட்டும்.. தேடாதீர்கள்.. தொலைந்து போவீர்கள்..!

23 comments:

  1. உம்முடைய மேதாவித்தனத்தை எல்லாம் வாரம் நாலு மொக்கைப்படங்களோட நிறுத்திக்கொண்டால் போதுமே....அரசியலிலும் நான் பெரிய ஆணி புடுங்கி என்று காட்ட வேண்டுமா....?...தேசிய ஜனநாயக்கூட்டணியின் கொள்கைகளை விமரிசிக்கிற வேகத்தைப் பார்த்தால் ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பார்த்து " போடா நரை தலையா " என்று சொல்ற மாதிரி இருக்கு. தேசிய ஜனநாயகக்கூட்டணியின் கொள்கைகளை ஒரு தரங்கெட்ட படத்தின் விமரிசனத்தின் இடையே சொருகி அடிப்பது உமது தரத்தையே காட்டுகிறது. அந்தந்த விஷயங்களை அந்ததந்த தொடர்புகளுடன் விமரிசித்தால் தான் சொல்ல வந்த கருத்து எடுபடும். இல்லாவிட்டால் நமது தரம்தான் சந்தி சிரிக்கும். இந்தக்கமெண்டு டெலீட் செய்யப்படும் என்று தெரியும். ஆனால் எனது கருத்து இதுதான்.

    ReplyDelete
  2. படம் எனக்குப் பிடிக்கும் போல தோன்றுகிறது.

    விரைவில் பார்க்க முயற்சி செய்கிறேன்

    ReplyDelete
  3. அண்ணாச்சி,

    நீங்க எதிர்ப்பார்த்தது படத்தில் இல்லைனதும் இப்படியா தீட்டுவிங்க :-))

    கலைப்படைப்பா வந்திருக்க வேண்டிய படம், "கலைச்சேவையை" சரியாக காட்சிப்படுத்த தவறிட்டாங்க போல:-))

    அந்த காலத்திய திருட்டுப்புருஷன் கதைய இன்னும் படமா எடுக்கிறவங்கள என்ன செய்ய? ஏன்பா கில்மாவா படம் எடுக்கிறதுன்னு முடிவு செய்தால் அதையாவது ஒழுங்க செய்ய வேண்டாம்?

    ReplyDelete
  4. உங்க கடைசி பேரா ஆதங்கம் உண்மையானது தான்....இந்த மாதரி மொக்கை படங்கள் வரதுனாலே சின்ன பட்ஜெட் படங்கள் நல்லா இருந்தாலும் யாரும் போக மாட்டாங்க..
    அப்புறம் நீங்க உண்மையிலே தியாகி தான்னே...... :):):)
    "என் தமிழ் சினிமா - ஒரு ரசிகனாக எனது ஆசைகள்..." என்கிற பேருல நண்பன் ஒருத்தர் பதிவு எழுதி உள்ளார்..நேரம் கிடைச்சா படிங்க அண்ணே..
    http://babyanandan.blogspot.in/2012/09/blog-post_6.html

    ReplyDelete
  5. ஒரு நாட்டு ராசா பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செஞ்சிருந்தானாம். கூட்டம் நடந்துக்கிட்டு இருக்கப்ப ஒரு ஆண்டி காத்தைப் பிரிச்சு விட்டுட்டானாம். பொதுமக்கள் எல்லாருமா சேந்து "அட்ரா அவன, வெட்றா அவன"ன்னு அடிச்சு வெரட்டி விட்டாங்களாம். கொஞ்ச நேரத்துக்குப் பொறவு ராசா சத்தமா தன்னோட காத்தைப் பிரிச்சு விட்டாராம். அப்போ பொதுமக்கள் எல்லோருமா சேந்து "அரோகரா, அரோகரா"ன்னு கூவுனாங்களாம்.
    ஏன்யா, ஒரு புது டைரடக்கரு தன்னோட தெறமைய வித்தியாசமா காட்டினா அவனை போட்டு வறுத்தெடுக்க வேண்டியது. அதே கதைய இயக்குனர் சிகரம் (ப்ரர்ர்ர்ர்...!!) எடுத்தா விழா எடுத்து அவார்டு கொடுக்க வேண்டியது... நல்ல இருக்குயா உங்க நியாயம்...

    ReplyDelete
  6. [[[சூனிய விகடன் said...

    உம்முடைய மேதாவித்தனத்தை எல்லாம் வாரம் நாலு மொக்கைப் படங்களோட நிறுத்திக்கொண்டால் போதுமே. அரசியலிலும் நான் பெரிய ஆணி புடுங்கி என்று காட்ட வேண்டுமா?

    தேசிய ஜனநாயக் கூட்டணியின் கொள்கைகளை விமரிசிக்கிற வேகத்தைப் பார்த்தால் ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பார்த்து "போடா நரை தலையா" என்று சொல்ற மாதிரி இருக்கு. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கொள்கைகளை ஒரு தரங்கெட்ட படத்தின் விமரிசனத்தின் இடையே சொருகி அடிப்பது உமது தரத்தையே காட்டுகிறது. அந்தந்த விஷயங்களை அந்ததந்த தொடர்புகளுடன் விமரிசித்தால்தான் சொல்ல வந்த கருத்து எடுபடும். இல்லாவிட்டால் நமது தரம்தான் சந்தி சிரிக்கும். இந்தக் கமெண்டு டெலீட் செய்யப்படும் என்று தெரியும். ஆனால் எனது கருத்து இதுதான்.]]]

    எனது தளத்தில் எப்போதும் கருத்து சுதந்திரத்திற்கு இடம் உண்டு நண்பரே..! நிச்சயம் டெலீட்டாகுது..!

    எத்தனை இடங்களில்தான் ஒப்பீட்டிற்கு சினிமாக்காரர்களையே இழுப்பது. அதுதான் கொஞ்சம் அரசியலை இழுத்துவிட்டேன்.. அரசியல்காரங்க சினிமாவை இழுத்துவிடும்போது நான் இதைச் செய்வதிலும் ஒன்றும் தப்பில்லைதான்..

    ReplyDelete
  7. [[[Mattai Oorukai said...

    http://mattaioorukai.blogspot.com/2012/09/blog-post.html]]]

    அண்ணே.. இதெல்லாம் ரொம்பத் தப்பு.. முகமூடி எதுக்கு.. இது கட்டற்ற சுதந்திரம் கொண்ட இணையம்.. தாராளமா உங்க முகத்தைக் காட்டிக்கிட்டே கண்டிக்கலாம். ஆனால் இந்த அளவுக்கு இல்லை.. இது பேட் ஸ்மெல்..!

    ReplyDelete
  8. [[[ராம்ஜி_யாஹூ said...

    படம் எனக்குப் பிடிக்கும் போல தோன்றுகிறது. விரைவில் பார்க்க முயற்சி செய்கிறேன்.]]]

    அண்ணே.. ஏண்ணே.. இப்படி..? இதெல்லாம் பார்க்குற நேரத்துக்கு ராஜபாட்டையை இன்னொரு வாட்டி பார்த்திரலாம்..! விடுண்ணே..!

    ReplyDelete
  9. [[[வவ்வால் said...

    அண்ணாச்சி, நீங்க எதிர்பார்த்தது படத்தில் இல்லைனதும் இப்படியா தீட்டுவிங்க :-))]]]

    எதிர்பார்த்து படங்களுக்கு போனதெல்லாம் அந்தக் காலம்.. அதெல்லாம் வேற லைப்..

    [[[கலை படைப்பா வந்திருக்க வேண்டிய படம், "கலைச்சேவையை" சரியாக காட்சிப்படுத்த தவறிட்டாங்க போல:-))]]]

    ஆமாமாம்.. இப்படியே இன்னும் 2 படம் எடுத்தா போதும்.. தியேட்டருக்கு ஒழுங்கா வர்றவனும் வர மாட்டான்..!

    [[[அந்த காலத்திய திருட்டுப் புருஷன் கதைய இன்னும் படமா எடுக்கிறவங்கள என்ன செய்ய? ஏன்பா கில்மாவா படம் எடுக்கிறதுன்னு முடிவு செய்தால் அதையாவது ஒழுங்க செய்ய வேண்டாம்?]]]

    கரீக்ட்டு.. உங்களை மாதிரி நல்ல அட்வைஸர் அவங்ககிட்ட இல்ல போலண்ணே..!

    ReplyDelete
  10. [[[ராஜ் said...

    உங்க கடைசி பேரா ஆதங்கம் உண்மையானதுதான். இந்த மாதரி மொக்கை படங்கள் வரதுனாலே சின்ன பட்ஜெட் படங்கள் நல்லா இருந்தாலும் யாரும் போக மாட்டாங்க.]]]

    புரிதலுக்கு நன்றிகள் ராஜ்..!

    [[[அப்புறம் நீங்க உண்மையிலே தியாகிதான்னே.)]]]

    நோ.. ஆபீஸ் வேலைல இதுவும் ஒண்ணு..!

    [[["என் தமிழ் சினிமா - ஒரு ரசிகனாக எனது ஆசைகள்..." என்கிற பேருல நண்பன் ஒருத்தர் பதிவு எழுதி உள்ளார். நேரம் கிடைச்சா படிங்க அண்ணே..
    http://babyanandan.blogspot.in/2012/09/blog-post_6.html]]]

    கண்டிப்பா படிக்கிறேன்..!

    ReplyDelete
  11. [[[மலரின் நினைவுகள் said...

    ஒரு நாட்டு ராசா பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செஞ்சிருந்தானாம். கூட்டம் நடந்துக்கிட்டு இருக்கப்ப ஒரு ஆண்டி காத்தைப் பிரிச்சு விட்டுட்டானாம். பொதுமக்கள் எல்லாருமா சேந்து "அட்ரா அவன, வெட்றா அவன"ன்னு அடிச்சு வெரட்டி விட்டாங்களாம். கொஞ்ச நேரத்துக்குப் பொறவு ராசா சத்தமா தன்னோட காத்தைப் பிரிச்சு விட்டாராம். அப்போ பொதுமக்கள் எல்லோருமா சேந்து "அரோகரா, அரோகரா"ன்னு கூவுனாங்களாம்.
    ஏன்யா, ஒரு புது டைரடக்கரு தன்னோட தெறமைய வித்தியாசமா காட்டினா அவனை போட்டு வறுத்தெடுக்க வேண்டியது. அதே கதைய இயக்குனர் சிகரம் (ப்ரர்ர்ர்ர்...!!) எடுத்தா விழா எடுத்து அவார்டு கொடுக்க வேண்டியது... நல்ல இருக்குயா உங்க நியாயம்.]]]

    அவரோட இயக்கத்துல எனக்குப் பிடிக்காத படங்கள்ல அதுவும் ஒன்று..!

    ReplyDelete
  12. இங்கு பின்னூட்டங்களை விட காழ்புணர்ச்சியைதான் அதிகம் பார்கிறேன்... :)

    தவிர, ஒரு இயக்குனரின் பொறுப்பை பற்றி நீங்கள் பேசியிருக்கும் ஒரு பத்தியின் உண்மையை இரசித்தேன்... நன்றி...

    ReplyDelete
  13. [[[மயிலன் said...

    இங்கு பின்னூட்டங்களை விட காழ்புணர்ச்சியைதான் அதிகம் பார்க்கிறேன்... :)]]]

    சூனியவிகடனாரின் பின்னூட்டம் எனக்கே அதிர்ச்சியைத்தான் தருகிறது.. எப்போதும் இப்படி பேசியதில்லை.. இன்றைக்கு மட்டும் ஏனோ..?

    [[[தவிர, ஒரு இயக்குனரின் பொறுப்பை பற்றி நீங்கள் பேசியிருக்கும் ஒரு பத்தியின் உண்மையை இரசித்தேன். நன்றி.]]]

    நன்றி நண்பரே.. உள்ளதைத்தான் சொல்லியிருக்கிறேன்.. இந்த மொக்கை படத்தை பார்ப்பவர்கள் அடுத்து அதே தியேட்டரில் நல்ல படம் போட்டால்கூட வர மாட்டார்கள்..! இதனால் யாருக்கு பாதிப்பு..?

    ReplyDelete
  14. ஒரு தரமில்லா படத்தையும் தரமாக விமரிசித்து டைரக்டரின் பொறுப்புணர்ச்சி குறித்து விளக்கியது அருமை! நன்றி!

    இன்று என் தளத்தில்
    ஏன் என்ற கேள்வியும்! அதிசயத் தகவல்களும்
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_9.html
    நூறாவது பாலோவரும்! கொன்றைவானத் தம்பிரானும்!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_6325.html


    ReplyDelete
  15. உங்க விமர்சனத்திலேயே சூப்பர் அங்கங்கே அரச்சீயல் பஞ்ச் வச்சிங்க பாருங்க அது தான்

    ReplyDelete
  16. [[[s suresh said...

    ஒரு தரமில்லா படத்தையும் தரமாக விமரிசித்து டைரக்டரின் பொறுப்புணர்ச்சி குறித்து விளக்கியது அருமை! நன்றி!]]]

    விமர்சனத்திற்கு நன்றிகள் சுரேஷ்..!

    ReplyDelete
  17. [[[purushothaman.p said...

    உங்க விமர்சனத்திலேயே சூப்பர் அங்கங்கே அரசீயல் பஞ்ச் வச்சிங்க பாருங்க அதுதான்.]]]

    இதை ரசிக்கவும் ஆள் இருக்காங்களா..? நல்லது.. இனிமேலும் இதையே தொடர்கிறேன்..!

    ReplyDelete
  18. [[[நம்பள்கி said...

    த.ம. 14]]]

    ந.மீ.வ. த.ம.28

    ReplyDelete
  19. Ungalin pada vimarsanam matrum ungalin ezhuthu thiramai nandraaga ullathu. Yaaro ethayo solgiraargal endure ungalin eluthu thirmayai kuraikka vendaam. Naan yaarukkum pinnoottam ettathillai. Ungalai thavira. Nandri.

    ReplyDelete
  20. [[[Babu said...

    Ungalin pada vimarsanam matrum ungalin ezhuthu thiramai nandraaga ullathu. Yaaro ethayo solgiraargal endure ungalin eluthu thirmayai kuraikka vendaam. Naan yaarukkum pinnoottam ettathillai. Ungalai thavira. Nandri.]]]

    மிக்க நன்றி நண்பரே.. உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களின் எழுத்துக்கள்தான் என்னை மென்மேலும் எழுதத் தூண்டுகிறது..! தொடர்ந்து ஆதரவு அளியுங்கள்..!

    ReplyDelete
  21. அண்ணே, நான் சொன்ன மனிதர் கூட நான் எழுதியதை விட மோசமாக தானே எழுதுகிறார்.
    அவருக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா அண்ணா..?

    ReplyDelete
  22. அண்ணே, நானும் எல்லா வலைபூக்களையும் கடந்த ஐந்து வருடங்களாக படித்து வருகிறேன்...
    நீங்க, நம்ம கேபிள் அண்ணா, தவிர யாரும் நடுநிலையா எதையும் விமர்சித்தது கிடையாது...
    நீங்க சொன்னது போல...இனி இது போல எழுதமாட்டேன்.. அந்த புத்தகத்தை வாசித்தவுடன்...வெறுப்படைந்துவிட்டேன்,
    சாரி அண்ணா

    ReplyDelete
  23. சாரு சொல்லவில்லை என்றாலும் புயலில் ஒரு தோணி
    இது நல்ல நாவல் தான்.
    மிகச்சிறந்த நாவல்களில் ஒன்று..
    தடை செய்யப்படவேண்டிய நாவல்களை எழுதியவர் ஆனந்தவல்லி புருஷன்..
    சீஈஈ ஆயய்ய்ய்யி.....
    பள்ளிகொண்டபுரம், தலைமுறைகள்,த்வனி,கழுகு,குறத்தி முடுக்கு இதெல்லாம் படிங்க..
    சும்மா உங்க ஆளுக்கு தட்டு தட்டாதிங்க...

    ReplyDelete