Pages

Monday, August 27, 2012

வெற்றிகரமான வலைப்பதிவர் சந்திப்பு..!

28-08-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

அனைவரும் எதிர்பார்த்ததுபோல் இனிதே நடந்து முடிந்தது தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு..! 80 வயது முதிய பதிவர்-புலவர் இராமானுசம் அவர்களின் ஒரு சிறு முயற்சி, நேற்றைக்கு பெருவெள்ளமாக புண்ணியகோடி மண்டபத்தில் கடந்தோடியது எனலாம். அவருக்கு எனது முதல் நன்றிகள்..!



இப்படியொரு அறிவிப்பை கவிஞர் மதுமதி அவர்கள் தனது பதிவில் வெளியிடும்வரையிலும் அந்த அழைப்பிதழில் இருந்த பலரது தளங்களை நான் பார்த்ததே இல்லை.. இத்தனை பேர் எப்போது இருந்து எழுதுகிறார்கள் என்ற சந்தேகம்தான் எழுந்தது.. அவர்கள் ஒவ்வொருவரின் எழுத்தையும் தேடிப் பிடித்து படித்தபோது, அவர்களது எழுத்தில் பதிவுலக அரசியல் கொஞ்சமும் இல்லாமல், நட்புணர்வே மேலோங்கி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது..!

மிக அருமையான ஒரு குழுமம்..! ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொண்டு, இந்தக் குழு, அந்தக் குழுவென்றில்லாமல் அனைவருமே ஒரு குழு என்ற மன எண்ணத்தோடு செயல்பட்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துகள்..! இந்தக் குழுவினர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் ஒரு முறை மட்டுமே என்னால் பங்கேற்க முடிந்தது. அதுவும் கொஞ்சம் நேரம்தான் இருக்கவும் முடிந்தது. அலுவலகப் பணிகள் கடுமையாக இருப்பதினால் முழுமையாகச் செயல்பட முடியவில்லை என்று இராமானுசம் ஐயாவிடம் முன்பே சொல்லி மன்னிப்பு கேட்டுக் கொண்டேன்..! எந்தவொரு இடர்பாடும் இல்லாத வகையில், அனைவரையும் அனுசரித்துப் போய் ஒரு புதிய வழிகாட்டுதலைத் துவக்கி வைத்திருக்கிறார்கள்.. 

நேற்றைக்கு அலுவலகப் பணியொன்று காலையில் இருந்ததினால், மதியம்தான் என்னால் கூட்டத்திற்கு செல்ல முடிந்தது..! 150 பேர் வருவார்கள் என்று எதிர்பார்த்து அதற்கும் மேல் இருந்தது கூட்டம். பலருடைய முகத்தை நேருக்கு நேர் பார்த்துதுமே இவர் யாராக இருக்கக் கூடும் என்ற தேடுதல் வேண்டாமே என்றெண்ணி பேட்ஜையும் கொடுத்திருந்தார்கள்.. அதை வைத்துத்தான் அறிமுகப் படலம் எனக்குள் துவங்கியது.. இதுவரையில் நேரில் பார்த்திருக்காத பதிவர்களையெல்லாம் சந்திக்க முடிந்தது..!  

நான் உள்ளே நுழைந்தபோது மேடையில் மூத்தப் பதிவர்களை அறிமுகம் செய்து வைத்து அவர்களை கவுரவிக்கும் வைபவம் நடந்து கொண்டிருந்தது.. இனிய நண்பர் சுரேகாவும், கவிஞர் மதுமதியும் மிக அழகாக நிகழ்வினைத் தொகுத்து வழங்கினார்கள்..! வயதில் மூத்த பல பதிவர்களை இப்போதுதான் முதன் முறையாகப் பார்க்கிறேன்.. ஆனால் விழாவினை நடத்தியவர்களுக்கு அவர்கள் நன்கு அறிமுகமானவர்களாக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி.  நாம்தான் தனி தீவாக இருந்து கொண்டு நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதை எனக்கு உணர்த்துவதாக இருந்த்து இந்த பதிவர் சந்திப்பு..!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பதிவர்கள் கூட்டமாய் வந்திருந்தார்கள்..! திரட்டிகளில் அதிகம் மேய்ச்சல் காட்டாமல் பேஸ்புக், டிவிட்டர், கூகிள் பிளஸ் என்று அதிகம் எனது பார்வையை திருப்பிக் கொண்டதால் எண்ணற்ற பதிவுகளையும், பதிவர்களையும் இதுவரையில் காணாமல் இருந்தது கண்டு இப்போது நான் வருத்தப்படுகிறேன்..!

பலரும் ஏற்கெனவே தங்களுக்குள் பேசி வைத்திருந்து வந்ததை போல அவரவர்களை அடையாளம் கண்டு தனி குழுவாக பேசித் தீர்த்ததும் நடக்கத்தான் செய்த்து.. இதுதான் இந்தக் குழுமத்தின் முதல் படி.. சிறு குழு, பெருங் குழுவாகி இப்போது குழுமமாகவே இதன் மூலம் சங்கமித்திருக்கிறது..!

விழா நடத்துவதிலும் மிகத் துல்லியமாக இருந்து 99 சதவிகிதம்வரையிலும் திட்டமிட்டபடி நிகழ்வினை குறித்த நேரத்திற்குள் நடத்தி முடித்தார்கள். மாலை மயங்கிய நேரத்தில் விடுதிக்குச் சென்றுவிட்டு ரயில் நிலையத்திற்குச் செல்லும் கால அவகாசத்தை கொடுத்து பதிவர்களை பத்திரமாக அனுப்பி வைத்திருந்துவிட்டு பின்புதான் அருகில் வந்து கை கொடுத்தனர் விழா அமைப்பினர்.. இந்த பொறுப்பும், தன்மையும்தான் இந்த பதிவர் சந்திப்பின் வெற்றிக்கான காரணம்..!

தனிமரம் தோப்பாகாது என்பதையும், ஒரு கை ஓசை எப்போதும் பலமில்லாத்து என்பதையும் புலவர் இராமானுசம் ஐயா அவருடைய பேச்சில் குறிப்பிட்டார்..! அது போலவே இவர் சார்பு, அவர் சார்பு என்றில்லாமல் யார் வேண்டுமானாலும், எந்த வகையில் வேண்டுமானாலும் இதில் பங்கெடுத்துக் கொள்ளலாம் என்ற அறிவிப்புடன் துவங்கப்பட்டுள்ள இந்தக் குழுமம் தனது அடுத்த உயர்வாக முறையான குழுமமாகச் செயல்பட உத்தேசித்துள்ளதும் பாராட்டுக்குரியது..! 

இந்த விழாவினை திறம்பட நடத்தி முடிக்க உறுதுணையாக இருந்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும்.. குறிப்பாக புலவர் இராமானுசம் ஐயா அவர்களுக்கும், கவிஞர் மதுமதி அவர்களுக்கும், இருதய ஆபரேஷன் செய்த நிலையிலும் இதற்காக ராப்பகலாக உழைத்திருக்கும் அன்பர் பட்டிக்காட்டான் ஜெய் அவர்களுக்கும் இன்ன பிற பதிவுலக நண்பர்களுக்கும் எனது இதயங்கனிந்த நன்றி..!

ஒவ்வொரு கூட்டத்திற்கும் இடமளித்து கூடுதலாக நன்கொடையும் அளித்து முக்கிய முகவரியாக விளங்கிய டிஸ்கவரி புக் பேலஸின் உரிமையாளர் பதிவர் வேடியப்பனுக்கும் ஒரு சிறப்பு நன்றி..! இந்த நிகழ்ச்சிக்காக நன்கொடையளித்த அனைத்து பதிவர்களுக்கும் எனது நன்றிகள்..!

இதேவேளையில் வலையுலகில் பழமைக்கும், புதுமைக்கும் என்றும் இணைப்புப் பாலமாய் திகழ்ந்து கொண்டிருக்கும் அன்பர்கள் மோகன்குமார், மெட்ராஸ்பவன் சிவக்குமார், பிலாஸபி பிரபாகரன் ஆகியோருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்..!

நிகழ்ச்சிகள் முடிந்த பின்பு இருந்த பதிவர்களை வைத்துக் கொண்டு விழா அமைப்பாளர்கள் காட்டிய அக்கறையுடனான சந்திப்பில், பதிவர்கள் மிகவும் எதிர்பார்த்த விஷயங்கள் மிகச் சில எட்டிப் பிடிக்கப்பட்டுள்ளன.. விரைவில் அவைகளனைத்தும் நடந்தேறும் என்று நம்புகிறேன்..!

உயர்வான நோக்கம்.. எளிமையான அணுகுமுறை.. ஜனநாயகமான நடைமுறைகளுடன் தோற்றுவிக்கப்பட இருக்கும் இந்த வலைப்பதிவர் குழுமம், மற்ற இணையத்தள சமூகங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்றே நம்புகிறேன்..!


58 comments:

  1. தல....ரோம்ப சின்ன பதிவா போட்டுடீங்க...

    உங்க மொபைல்-ல் உள்ள படத்த காட்டலை பாத்தீங்களா.....

    ஏமாத்தீடீங்க....
    அதுக்காகவே இந்த சந்திப்புக்கு வந்தேன்...

    ReplyDelete
  2. அண்ணாச்சி,

    என்ன இது டிரைலர் மட்டும் தானே இது?

    2007 இல் அறிமுகம்+5 பதிவுன்னு பதிவர் பட்டறைக்கு போட்டிங்கன்னு பெருமையா(நெசமாத்தான்) நான் பதிவுப்போட்டு இருக்கேன், இப்படி சின்னதா போட்டால் உங்க பாரம்பரியம் என்னாகுறது?

    வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: Total recall:2007 ஆகஸ்ட்-5 தமிழ்ப்பதிவர் சந்திப்பு மற்றும் பட்டறை.

    ReplyDelete
  3. ட்ரையிலர் சரி, படம் எப்போ வரும்?

    ReplyDelete
  4. நான் ஏதோ "வெற்றிகரமான வலைபதிவு சந்திப்பு"னு ஒரு புது படத்துக்கு விமர்சனம் எழுதியிருக்காரு, உ த னு வந்தேன்.

    என்ன இப்படி கொஞ்சம்கூட பொறுப்பில்லாமல் சினிமாவை விட்டுப்புட்டு கண்டதையும் எழுதி வெட்டிவேலையெல்லாம் பாக்குறீக, உ த?

    You disappointed me! :(

    ReplyDelete
  5. நீங்கள் வந்திருந்தீங்களா?
    நீங்கள் வரவில்லை என்றுதான் நினைத்திருந்தேன்....
    சந்திக்க முடியாவிட்டாலும் தூரத்தில் இருந்தாவது பார்க்கணும்ன்னு விரும்பினேன்...

    ReplyDelete
  6. நான் பார்க்க விரும்பிய மனிதர் நீங்கள்..தங்களிடம் உரையாடியது மிக்க மகிழ்ச்சியை தருகிறது...உங்களின் எழுத்துக்கு அடிமை..இப்போ உங்களுக்கும்....செம ஐஸ் ...

    ReplyDelete
  7. ***இப்போ உங்களுக்கும்....செம ஐஸ் ...***

    கோ நே: அவரால தாங்க முடியாத அளவுக்கு ரொம்ப ஐஸ் வச்சதும், உங்களுக்கும் குளிர் ஜொரம் வந்துருச்சு போல!!! :)))

    ReplyDelete
  8. உபயோகமுள்ள அருமையான பதிவு. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. உபயோகமுள்ள அருமையான பதிவு. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. உபயோகமான நல்ல பதிவு. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. அண்ணே மிக மகிழ்ச்சி. விழாவுக்கு நீங்கள் தந்த ஆதரவை மறக்க முடியாது.

    விழா பற்றி சுருக்கமா அழகா சொல்லிருக்கீங்க. உங்களிடம் அடிக்கடி நான் சொல்வது தான். நீங்கள் கேட்பதில்லை இன்னொரு முறையும் சொல்றேன் இதே அளவு சைசில் பெரும்பாலும் பதிவு எழுதுங்கண்ணே ! நல்லாருக்கும். முக்கிய பிரச்சனைகளுக்கு மட்டும் விரிவா எழுதிக்கலாம் !

    ஒருமித்த கருத்து என்பது எந்த குழுவிலும் வராது. பெரும்பான்மை மக்களுக்கு ஒப்பும் கருத்துடன் நாம் முன்னே செல்லவேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு

    மீண்டும் நெஞ்சார்ந்த நன்றிகள் உங்களுக்கு !

    ReplyDelete
  12. உங்கள் பாணியில் விரிவாக எழுதுங்கண்ணே... பார்ட் 2 எதிர்பார்க்கிறேன்..

    ReplyDelete
  13. விழாவைபற்றிய ஒவ்வொருவரின் பார்வையும் வித்தியாசமாக இருக்கிறது உங்களின் பார்வையும் விளக்கமும் மிக நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. அற்புதம் அண்ணே!

    எளிமையா, உங்களுக்கு மனசில் பட்டதை பாராட்டியும், சந்தோஷித்தும் எழுதியிருக்கீங்க!

    நீ கூட இருக்குறவரை எந்த கவலையும் இல்லைண்ணே!

    ReplyDelete
  15. அண்ணே, உங்களை சந்திச்சது ரொம்ப சந்தோஷம்..... மறக்க முடியாத பதிவர் சந்திப்பு இது.. :):)

    ReplyDelete
  16. நாம்தான் தனி தீவாக இருந்து கொண்டு நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதை எனக்கு உணர்த்துவதாக இருந்த்து இந்த பதிவர் சந்திப்பு..!
    நீங்களெல்லாம் தாமதமாக வந்த்தாலோ என்னவோ பலரை சந்திக்க இயலாமற் போனது வருத்தம்.
    வில்லவன்கோதை



    ReplyDelete
  17. அருமைண்ணே. இன்னும் பல சிறப்பான விஷயங்கள் இவர்களால் முன்னெடுக்கப்படும் என்று நம்புவோம். ஆதரிப்போம்.

    ReplyDelete
  18. கோஷ்டி அரசியல் எதுவுமில்லாமல் ஒரு பதிவர் சந்திப்பா? நம்ப முடியவில்லை! இந்த ஆச்சரியத்திலேயே உத சுருக்கமாகப் பதிவு எழுதியது கூட முதலில் உறைக்கவில்லை :-)

    ReplyDelete
  19. Visit my blog and put your feedback

    http://rajaavinpaarvayil.blogspot.com/

    ReplyDelete
  20. மிக்க மகிழ்ச்சி.நன்றி அண்ணே..

    ReplyDelete
  21. நிகழ்ச்சிக்கு வரமுடியாத எங்களை போன்ற அயல்நாட்டில் பணிபுரிபவர்களை உங்கள் பதிவு மாநாடு நடந்த இடத்திற்கு கூட்டி சென்றதை போல் இருக்கிறது அண்ணா.
    மிக்க மகிழ்ச்சி.
    அடுத்த மாநாட்டில் உங்களை சந்திப்பதை மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
    http://dohatalkies.blogspot.com/2012/08/one-flew-over-cuckoos-nest.html

    ReplyDelete
  22. உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி சார்... நன்றி... (TM 6)

    ReplyDelete
  23. நான் மூத்த பதிவர் பாராட்டுக்குப் பின் சென்று விட்டதால் உங்களச் சந்திக்க இயலாமல் போனது,வருத்தமே.

    ReplyDelete
  24. உ.த அண்ணே!கூட்டத்தோடு கூட்டமா சந்திச்சதுக்கே மக்கள் இவ்வளவு சந்தோசம்படறாங்கன்னு வண்டி புடிச்சு வீடு தேடி வந்த நானெல்லாம் எவ்வளவு சந்தோசப்படனும்!

    அரசியல் பதிவுகளில் தாத்தாவை மொத்துன கெத்து இப்ப இல்லையே!சினிமா பதிவா போட்டுத் தள்ளுறீங்களே!அதுவும் மொக்கையான படத்துக்கெல்லாம் விமர்சனம் போட்டுத் தள்ளுறீங்களே!நல்லாவாயிருக்குது?

    ஒரு படம் புரமோசன் செய்றபோது இசையப்பாளர் இப்படி உழைச்சார்,நடிகை அப்படி கோஆப்ரேசன் காட்டினார் என ஏகப்பட்ட கதை சொல்றாங்க.ஆனால் கடைசியில் கதை எப்படின்னு படம் பார்த்தா பெரும்பாலோனரை சென்றடைவதில்லை.உங்க விமர்சனங்கள் கூட அந்த வகைதான்.

    ReplyDelete
  25. உங்களை ரவுண்டு கட்டிகிட்டு சொல்ல வந்ததை மறந்து விட்டேன்!

    //ஒவ்வொரு கூட்டத்திற்கும் இடமளித்து கூடுதலாக நன்கொடையும் அளித்து முக்கிய முகவரியாக விளங்கிய டிஸ்கவரி புக் பேலஸின் உரிமையாளர் பதிவர் வேடியப்பனுக்கும் ஒரு சிறப்பு நன்றி..!//

    இந்தக் குறிப்பை வேறு யாரும் வெளிப்படுத்தவில்லையென்பதால் உங்களுக்கு சிறப்பாக ஒரு வாழ்த்து.

    ReplyDelete
  26. [[[நாய் நக்ஸ் -இலையையும் தின்பவன் said.

    தல. ரோம்ப சின்ன பதிவா போட்டுடீங்க.
    உங்க மொபைல்-ல் உள்ள படத்த காட்டலை பாத்தீங்களா. ஏமாத்தீடீங்க. அதுக்காகவே இந்த சந்திப்புக்கு வந்தேன்.]]]

    ஊரே பார்த்துச்சு.. நீங்க பார்க்கலையா..? ச்சோ.. ச்சோ.. இப்போ டெலீட் பண்ணிட்டனே..? ஒண்ணும் செய்ய முடியாதுண்ணே..!

    ReplyDelete
  27. [[[வவ்வால் said...

    அண்ணாச்சி, என்ன இது டிரைலர் மட்டும்தானே இது? 2007-ல் அறிமுகம்+5 பதிவுன்னு பதிவர் பட்டறைக்கு போட்டிங்கன்னு பெருமையா (நெசமாத்தான்) நான் பதிவு போட்டு இருக்கேன், இப்படி சின்னதா போட்டால் உங்க பாரம்பரியம் என்னாகுறது?]]]

    காலம் மாறும்போது நாமளும் மாற வேண்டியதுதான்.. அத்தோட நேத்தைக்கு அது மாதிரி எதுவும் நடக்கலை..! முழுக்க முழுக்க மேடை ராஜாங்கம்தான்.. அதுனாலதான் எழுதலை..!

    ReplyDelete
  28. [[[ILA Murugu said...

    ட்ரையிலர் சரி, படம் எப்போ வரும்?]]]

    மிக விரைவில்.. நிச்சயமாக வரும் இளா..!

    ReplyDelete
  29. [[[Mfairozekhan said...

    ITS TRUE..]]]

    நன்றி நண்பரே..!

    ReplyDelete
  30. அண்ணே..அடுத்த சந்திப்பு எப்போ போடுவீங்கண்ணே...மிஸ் பண்ணிட்டேன்..

    ReplyDelete
  31. [[[வருண் said...

    நான் ஏதோ "வெற்றிகரமான வலைபதிவு சந்திப்பு"னு ஒரு புது படத்துக்கு விமர்சனம் எழுதியிருக்காரு, உ த னு வந்தேன். என்ன இப்படி கொஞ்சம்கூட பொறுப்பில்லாமல் சினிமாவை விட்டுப்புட்டு கண்டதையும் எழுதி வெட்டி வேலையெல்லாம் பாக்குறீக, உ த? You disappointed me! :(]]]

    இதுவும் சினிமா மாதிரிதான் இருந்துச்சு..! காமெடி, கலாட்டா, எமோஷன்ஸ் எல்லாம் கலந்த கலவைதான்..!

    ReplyDelete
  32. [[[மயிலன் said...

    நீங்கள் வந்திருந்தீங்களா? நீங்கள் வரவில்லை என்றுதான் நினைத்திருந்தேன். சந்திக்க முடியாவிட்டாலும் தூரத்தில் இருந்தாவது பார்க்கணும்ன்னு விரும்பினேன்.]]]

    அடுத்த முறை நேரிலேயே சந்திக்கலாம் மயிலன்..!

    ReplyDelete
  33. [[[nellai அண்ணாச்சி said...

    அருமை...]]]

    நன்றி அண்ணாச்சி..!

    ReplyDelete
  34. [[[கோவை நேரம் said...

    நான் பார்க்க விரும்பிய மனிதர் நீங்கள். தங்களிடம் உரையாடியது மிக்க மகிழ்ச்சியை தருகிறது. உங்களின் எழுத்துக்கு அடிமை. இப்போ உங்களுக்கும். செம ஐஸ்.]]]

    ஐயையோ ஐஸ் கரைஞ்சு உருகி ஆறா ஓடுதுண்ணே..! பார்த்துக்குங்க..! உங்களைச் சந்தித்ததில் எனக்கும் மகிழ்ச்சிதான்..!

    ReplyDelete
  35. [[[வருண் said...

    ***இப்போ உங்களுக்கும்....செம ஐஸ் ...***

    கோ நே: அவரால தாங்க முடியாத அளவுக்கு ரொம்ப ஐஸ் வச்சதும், உங்களுக்கும் குளிர் ஜொரம் வந்துருச்சு போல!!! :)))]]]

    இந்த ரெண்டு நாள்ல அது விட்டுப் போச்சு வருண்..!

    ReplyDelete
  36. [[[சூனிய விகடன் said...

    உபயோகமான நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.]]]

    நன்றி சூனியம்..!

    ReplyDelete
  37. [[[மோகன் குமார் said...

    அண்ணே மிக மகிழ்ச்சி. விழாவுக்கு நீங்கள் தந்த ஆதரவை மறக்க முடியாது. விழா பற்றி சுருக்கமா அழகா சொல்லிருக்கீங்க. உங்களிடம் அடிக்கடி நான் சொல்வதுதான். நீங்கள் கேட்பதில்லை. இன்னொரு முறையும் சொல்றேன்... இதே அளவு சைசில் பெரும்பாலும் பதிவு எழுதுங்கண்ணே ! நல்லாருக்கும். முக்கிய பிரச்சனைகளுக்கு மட்டும் விரிவா எழுதிக்கலாம்!]]]

    முயற்சி பண்றேண்ணே..!

    [[[ஒருமித்த கருத்து என்பது எந்த குழுவிலும் வராது. பெரும்பான்மை மக்களுக்கு ஒப்பும் கருத்துடன் நாம் முன்னே செல்லவேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு. மீண்டும் நெஞ்சார்ந்த நன்றிகள் உங்களுக்கு !]]]

    இதையே பாலோ செய்வோம்.. ஒன்றுபடுவோம்..!

    ReplyDelete
  38. [[[பார்வையாளன் said...

    உங்கள் பாணியில் விரிவாக எழுதுங்கண்ணே. பார்ட் 2 எதிர்பார்க்கிறேன்.]]]

    நோ பார்வை.. வேறு எதுவும் எழுதும் எண்ணமில்லை..!

    ReplyDelete
  39. [[[Avargal Unmaigal said...

    விழாவை பற்றிய ஒவ்வொருவரின் பார்வையும் வித்தியாசமாக இருக்கிறது உங்களின் பார்வையும் விளக்கமும் மிக நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.]]]

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றிகள் நண்பரே..!

    ReplyDelete
  40. [[[சுரேகா said...

    அற்புதம் அண்ணே! எளிமையா, உங்களுக்கு மனசில் பட்டதை பாராட்டியும், சந்தோஷித்தும் எழுதியிருக்கீங்க! நீ கூட இருக்குறவரை எந்த கவலையும் இல்லைண்ணே!]]]

    அடடே சுரேகா அண்ணே.. நன்றிகள் கோடி..! மதியத்திற்குப் பின்னான நிகழ்வில் தூக்கம் வராமல் பார்த்துக் கொண்டது உங்களின் தொகுப்புரைதான்.. நன்றியோ நன்றி..!

    ReplyDelete
  41. [[[ராஜ் said...

    அண்ணே, உங்களை சந்திச்சது ரொம்ப சந்தோஷம்..... மறக்க முடியாத பதிவர் சந்திப்பு இது.. :):)]]]

    எனக்கும்தான் ராஜ்.. அடிக்கடி போன் செய்யுங்க..!

    ReplyDelete
  42. [[[பாண்டியன்ஜி said...

    நீங்களெல்லாம் தாமதமாக வந்த்தாலோ என்னவோ பலரை சந்திக்க இயலாமற் போனது வருத்தம்.

    வில்லவன்கோதை]]]

    சரி.. பரவாயில்லை.. அடுத்த முறை நிச்சயம் சந்தித்து பேசுவோம்..!

    ReplyDelete
  43. [[[【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

    அருமைண்ணே. இன்னும் பல சிறப்பான விஷயங்கள் இவர்களால் முன்னெடுக்கப்படும் என்று நம்புவோம். ஆதரிப்போம்.]]]

    கை கொடுப்போம் ஷங்கரு..! குழுமம் தொடர்பான உன்னுடைய சொற்பொழிவு சொக்க வைத்தது.. ஐ லவ் யூ டார்லிங்..!

    ReplyDelete
  44. [[[அருள் said...

    பதிவர் சந்திப்பு முதல் நிகழ்வு போன்று இல்லை. சிறப்பான நிகழ்வை நடத்தியவர்களுக்கு நன்றி. நான் பங்கேற்ற முதல் பதிவர் நிகழ்வும் இதுதான்.]]]

    சந்தோஷம் அருள் ஸார்.. அடுத்தடுத்து நடத்த வேண்டும்.. ஆதரவளியுங்கள்..!

    ReplyDelete
  45. [[[Krishna Moorthy S said...

    கோஷ்டி அரசியல் எதுவுமில்லாமல் ஒரு பதிவர் சந்திப்பா? நம்ப முடியவில்லை! இந்த ஆச்சரியத்திலேயே உ.த. சுருக்கமாகப் பதிவு எழுதியது கூட முதலில் உறைக்கவில்லை :-)]]]

    கோஷ்டிகளுக்குள் சிக்காத ஒரு கோஷ்டியின் ஏற்பாடு இது.. அதனால்தான் இதன் வெற்றி சாத்தியமானது..!

    ReplyDelete
  46. [[[மதுரை வீரன் said...

    Visit my blog and put your feedback

    http://rajaavinpaarvayil.blogspot.com/]]]

    புதுசு, புதுசா வர்றீங்களேப்பா.. மதுரைவீரன் பெயரே கவர்கிறது.. வாழ்த்துகள் நண்பரே..!

    ReplyDelete
  47. [[[மதுமதி said...

    மிக்க மகிழ்ச்சி.நன்றி அண்ணே..]]]

    நன்றிகள் ஸார்..

    ReplyDelete
  48. [[[Doha Talkies said...

    நிகழ்ச்சிக்கு வர முடியாத எங்களை போன்ற அயல்நாட்டில் பணிபுரிபவர்களை உங்கள் பதிவு மாநாடு நடந்த இடத்திற்கு கூட்டி சென்றதை போல் இருக்கிறது அண்ணா. மிக்க மகிழ்ச்சி. அடுத்த மாநாட்டில் உங்களை சந்திப்பதை மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.]]]

    இன்னும் விரிவாக எழுதியிருக்கலாம் என்று இப்போதுதான் தோன்றுகிறது.. நன்றி டோஹா அவர்களே..!

    ReplyDelete
  49. [[[திண்டுக்கல் தனபாலன் said...

    உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி சார்... நன்றி...]]]

    எனக்கும்தான் ஸார்.. திண்டுக்கல் வரும்போது அவசியம் உங்களைச் சந்திக்கிறேன்..!

    ReplyDelete
  50. [[[சென்னை பித்தன் said...

    நான் மூத்த பதிவர் பாராட்டுக்குப் பின் சென்று விட்டதால் உங்களச் சந்திக்க இயலாமல் போனது,வருத்தமே.]]]

    பரவாயில்லை ஐயா.. மீண்டும் ஒரு நாள் அவசியம் சந்திப்போம்..!

    ReplyDelete
  51. [[[ராஜ நடராஜன் said...

    உ.த அண்ணே!கூட்டத்தோடு கூட்டமா சந்திச்சதுக்கே மக்கள் இவ்வளவு சந்தோசம்படறாங்கன்னு வண்டி புடிச்சு வீடு தேடி வந்த நானெல்லாம் எவ்வளவு சந்தோசப்படனும்!]]]

    நீங்க என் வீடு தேடி வந்ததில் எனக்கு்த்தான் பெரும் மகிழ்ச்சி ஸார்..! அந்த அளவுக்கா நான் பெரிய ஆள் என்று இப்போதும் நினைத்துக் கொள்கிறேன்..!

    [[[அரசியல் பதிவுகளில் தாத்தாவை மொத்துன கெத்து இப்ப இல்லையே!சினிமா பதிவா போட்டுத் தள்ளுறீங்களே! அதுவும் மொக்கையான படத்துக்கெல்லாம் விமர்சனம் போட்டுத் தள்ளுறீங்களே!நல்லாவாயிருக்குது?]]]

    எனக்கும் பிடிக்கலதான்.. ஆனா அரசியல் அதைவிட பிடிக்கலை..! ஆத்தா மென்மையா அரசியல் பண்ணுது.. ஏதாவது ஏடாகூடமா செஞ்சாத்தான நமக்கும் பொழுது போவும்.. போயஸ் தோட்டத்துக்கு ஒரு கடுதாசியை தட்டிவிடுங்க..!

    [[[ஒரு படம் புரமோசன் செய்றபோது இசையப்பாளர் இப்படி உழைச்சார், நடிகை அப்படி கோஆப்ரேசன் காட்டினார் என ஏகப்பட்ட கதை சொல்றாங்க.ஆனால் கடைசியில் கதை எப்படின்னு படம் பார்த்தா பெரும்பாலோனரை சென்றடைவதில்லை. உங்க விமர்சனங்கள் கூட அந்த வகைதான்.]]]

    ஒண்ணும் செய்ய முடியாது.. எங்களது எதிர்பார்ப்பு, நம்பிக்கை தோல்வியடைவதைத்தான் எங்களால் சொல்ல முடியும்..! வேறு என்ன செய்வது..? சொல்வது..?

    ReplyDelete
  52. [[[ராஜ நடராஜன் said...

    உங்களை ரவுண்டு கட்டிகிட்டு சொல்ல வந்ததை மறந்து விட்டேன்!

    //ஒவ்வொரு கூட்டத்திற்கும் இடமளித்து கூடுதலாக நன்கொடையும் அளித்து முக்கிய முகவரியாக விளங்கிய டிஸ்கவரி புக் பேலஸின் உரிமையாளர் பதிவர் வேடியப்பனுக்கும் ஒரு சிறப்பு நன்றி..!//

    இந்தக் குறிப்பை வேறு யாரும் வெளிப்படுத்தவில்லையென்பதால் உங்களுக்கு சிறப்பாக ஒரு வாழ்த்து.]]]

    இல்லையே.. முக்கிய நிர்வாகிகள் பலரும் வேடியப்பனுக்கு நன்றி சொல்லியிருக்கிறார்கள் ஸார்..!

    ReplyDelete
  53. [[[இவன் சிவன் said...

    அண்ணே. அடுத்த சந்திப்பு எப்போ போடுவீங்கண்ணே. மிஸ் பண்ணிட்டேன்..]]]

    அடுத்த சந்திப்பு நடக்கும்போது பதிவும் வரும்..!

    ReplyDelete
  54. உண்மை தமிழன்,
    நல்ல பதிவு. ஆனா கொஞ்சூண்டு போட்டு இருக்கீங்க. உங்களுக்கு நல்ல எழுதுற நடை இருக்கறதால இன்னும் நல்ல விவரமா, கார சாரமா எழுதி இருக்கலாம்.
    முன்னாடி கருணாநிதிய காச்சு எடுப்பீங்க. இப்ப எல்லாம் வாய திரகறதே இல்லை அரசியல பத்தி. ரெண்டு மூணு குழந்தைங்க ஸ்கூல் விபத்துல இரந்தத தான் கண்டுக்காம விட்டுடீங்க. இப்போ எலி கடிச்சே ஒரு குழந்தை இறந்து போச்சாமே? அதை பத்தியாவது ஒரு பதிவு போட கூடாதா? அதுக்கு ஜெயலலிதா என்ன பண்ணுவாங்கன்னு கேக்கரீங்களா? அவங்களே பாவம் வயசான காலத்துல ஊட்டில தோழியோட ஒய்வு எடுத்துட்டு இருக்காங்க. நீங்க 'சவுக்கு' எல்லாம் ஒரே மாதிரி தான்.
    பேசாம அதிமுக காரன்னு ஒத்துகொங்களேன்.

    ReplyDelete
  55. [[[k.rahman said...

    உண்மை தமிழன், நல்ல பதிவு. ஆனா கொஞ்சூண்டு போட்டு இருக்கீங்க. உங்களுக்கு நல்ல எழுதுற நடை இருக்கறதால இன்னும் நல்ல விவரமா, காரசாரமா எழுதி இருக்கலாம்.]]]

    காரசாரமா எழுதற அளவுக்கு அப்படியொண்ணும் அங்க நடக்கலை..
    இதுவே போதும்..!

    [[[முன்னாடி கருணாநிதிய காச்சு எடுப்பீங்க. இப்ப எல்லாம் வாய திரகறதே இல்லை அரசியல பத்தி. ரெண்டு மூணு குழந்தைங்க ஸ்கூல் விபத்துல இரந்தததான் கண்டுக்காம விட்டுடீங்க. இப்போ எலி கடிச்சே ஒரு குழந்தை இறந்து போச்சாமே? அதை பத்தியாவது ஒரு பதிவு போட கூடாதா? அதுக்கு ஜெயலலிதா என்ன பண்ணுவாங்கன்னு கேக்கரீங்களா? அவங்களே பாவம் வயசான காலத்துல ஊட்டில தோழியோட ஒய்வு எடுத்துட்டு இருக்காங்க. நீங்க 'சவுக்கு' எல்லாம் ஒரே மாதிரிதான். பேசாம அதிமுககாரன்னு ஒத்துகொங்களேன்.]]]

    கருணாநிதி காலத்துலேயும் இதே மாதிரி மரணங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருந்தன.. அதற்காகவெல்லாம் கருணாநிதியை நான் திட்டி பதிவெழுதவில்லை. எதற்காக எழுதினேன் என்பதை மீண்டும் ஒரு முறை எனது பதிவுகளை எடுத்துப் படித்துப் பாருங்கள். தெரியும்.. புரியும்..!

    ReplyDelete

  56. தமிலரின் தேசியக் கொடி
    (National Flag of Tamilar)
    http://gvetrichezhian.tumblr.com/

    தமிலு மொலியின் னோக்கம் (Purpose of the Tamilu Language)
    http://vetrichezhian9.wordpress.com/2013/04/29/3/

    எலுத்துச் சீர்மய் (Character Reform):
    http://blogs.rediff.com/ulikininpin14/2013/05/08/azaaaaaaasa-asaaaaaa-character-reform/

    ReplyDelete