Pages

Friday, August 10, 2012

பனித்துளி - சினிமா விமர்சனம்

10-08-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

முடிவே கட்டிவிட்டார்கள் போலிருக்கிறது..! பணம் இருந்தால் நாம நினைக்குறதையெல்லாம் படமாக்கி வெளியிட்டுவிடலாம். நம் படத்தை எதிர்பார்த்து சோறு, தண்ணியில்லாமல் பல பேர் தமிழ்நாட்டில் தவியாய் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பலருக்கும் நினைப்பு.. நட்டிகுமார், டாக்டர் ஜெய் என்ற இரட்டை இயக்குநர்கள் இப்படித்தான் யோசித்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். 

ஷார்ட் மெமரி லாஸ் அல்லது செலக்டிவ் அம்னீஷியா என்று இரு டைப்புகளில் சொல்லிக் கொள்ளலாம்.. அந்த நோய் வந்து தனது காதலியை மறந்தவன் திரும்பவும் எப்படி தனது காதலியை அடைகிறான் என்பதைத்தான் நமக்கே ஷார்ட் மெமரி லாஸ் ஏற்படும் அளவுக்கு மூளையை கிறங்கடித்து சொல்லி முடித்திருக்கிறார்கள்..


ஹீரோ கணேஷ் வெங்கட்ராமன், டாக்டருக்கு படிக்கும் கல்பனா பண்டிட்டை காதலிக்கிறார். கல்பனாவின் படிப்பு முடிவதற்குள்ளாகவே கணேஷுக்கு அமெரிக்காவில் வேலை கிடைக்க ஒரு வருஷம்தானே போயிட்டு வா.. அதுக்குள்ள நான் படிப்பை முடிச்சர்றேன் என்கிறாள் காதலி. காதலியின் தாதா அப்பாவோ தனது மகளை ஒரு வருடம் பார்க்காமல் இருக்க வேண்டும். அதன் பின்பும் இருவரும் காதலிப்பதாகச் சொன்னால் தான் திருமணம் செய்து வைப்பதாகச் சொல்கிறார். இதை நம்பி அமெரிக்கா செல்லும் ஹீரோவை அங்கேயே கொலை செய்யும் முயற்சி நடக்கிறது. இதில் சிக்கி தலையில் அடிபட்டு கடைசி 4 வருட நினைவுகளை இழக்கிறார் ஹீரோ.  ஹீரோயினையும் சேர்த்துதான்..! 

இதன் பின்பு தனது அலுவலக கொலீக்குடன் தொடர்பு ஏற்பட்டு அந்த நட்பு படுக்கைவரையிலும் பாய்ந்தோடி சென்று கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் மலையாள கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் படத்தில் வருவதைப் போல சான்பிரான்சிஸ்கோ காட்டுக்குள் ஒரு நாள் இவர்கள் தங்கியிருக்கும்போது அங்கேயிருந்த பழங்குடி மக்கள் கொடுத்த ஒரு பானத்தைக் குடித்துத் தொலைகிறார் ஹீரோ. உடனேயே பழைய கதையெல்லாம் ஞாபகத்துக்கு வந்து விடுகிறது.. ஆனாலும் ஒரு ஸ்டெடி மைண்டாய் இல்லை என்பதால் மீண்டும் ஹாஸ்பிட்டல், ட்ரீட்மெண்ட்.. 

இடையில் திடீரென்று தனது காதலியை அமெரிக்காவிலேயே மருத்துவராகப் பார்த்து விடுகிறார். அறுந்து போன காதல் நூலை காதலியிடம் நீட்டிக் கொண்டிருக்க. அவளோ அதைப் பற்றிக் கொள்ளாமல் இருக்கிறார். இப்போது ஹீரோ எப்படி அவளை கைப்பிடிக்கிறார் என்பதை தைரியம் இருந்தால் தியேட்டருக்கு போய் படத்தைப் பார்த்து தெரிஞ்சுக்குங்க..!

கலகலப்பு, மிரட்டல் போன்ற படங்களில் லாஜிக் பார்க்க தேவையே இல்லை.. அது நகைச்சுவை.. ச்சும்மா டைம்பாஸ் என்று சொல்லித்தான் அழைக்கிறார்கள். ஆனால் இதில் அப்படியில்லையே..? முதல் காட்சியில் இருந்து கிளைமாக்ஸ்வரையிலும் ஓட்டையான லாஜிக் திரைக்கதையை வைத்துக் கொண்டு முடிந்த அளவுக்கு எடுத்துத் தந்திருக்கிறார்கள் இயக்குநர்கள்..!

அமெரிக்காவில் இப்படி நட்ட நடு ரோட்டில் துப்பாக்கியுடன் எவனாவது ஓட முடியுமா..? ஓடியவன் அடுத்த நாள் வெளியில் இருக்க முடியுமா..? ம்ஹூம்.. சான்பிரான்சிஸ்கோவில் பழங்குடியினரின் கதை.. ஹீரோவை கொலை செய்ய நடக்கும் முயற்சிகள்.. மருத்துவர் அருணின் “தமிழா.. தமிழ் தெரியுமா..? தமிழ்ல பேசுறீங்க..” என்ற கேணத்தனமான கேள்வி..! ஹீரோ அமெரிக்கா வந்து 2 வருஷமாகியும் அவரோட வீட்டுக்காரங்க அவரைப் பத்தி கவலையே படலையா..? காதலியோட அப்பன் நம்ம ஊர்ல பட்டப் பகல்ல ஒருத்தனை பெட்ரோல் ஊத்திக் கொளுத்துறான்.. “அதை உன் பொண்ணுகிட்ட போட்டுக் கொடுத்திருவேன்.. நான் நடிக்கிறதை நீ கண்டுக்காத.. கல்யாணத்தை செஞ்சு வைன்னு..” கிளைமாக்ஸ்ல ஹீரோ உருகுறதுல சாமி சத்தியமா ஒரு பீலிங்ஸும் வரலை..! “எந்தக் காட்சி இப்போது நடப்பது.. எது முன்பு நடந்தது..?  எது ரீலு.. எது அந்து போன ரீலு..?” என்று மாற்றி, மாற்றிக் காட்டியதில் சினிமா பார்ப்பதையே தொழிலாக வைத்திருக்கும் என்னைப் போன்றவர்களுக்கே கொஞ்சம் கஷ்டமாகியிருக்க.. கொட்டாம்பட்டியில் இந்தப் படத்தைப் பார்க்கும் ரசிகன் என்ன ஆவானோ..? பாவம்.

கணேஷ் வெங்கட்ராமன் அர்னால்டு மாதிரி உடம்பை சிக்கென்று வைத்திருக்கிறார். அடிக்கடி சட்டையைக் கழட்டி தனது சிக்ஸ் பேக் உடம்பைக் காட்டி தனது ரசிகைகளை சந்தோஷப்படுத்தியிருக்கிறார். அவருக்கான காட்சிகளில் அழுத்தமோ, இம்ப்ரஸ்ஸிவ்வோ இல்லாததால் ஜஸ்ட் பாஸ் ஹீரோவாகி தப்பித்துச் செல்கிறார். 

2 ஹீரோயின்களில் கல்பனா பண்டிட்டின் பிலிமோகிராபி பல படங்களைக் காட்டுது.. அம்மணியும் நல்லாவே காட்டியிருக்கு. இன்னொரு புதுமுகம் ஷோபனா.. நேரில் பார்ப்பதைவிட ஸ்கிரீனில் அழகாகத் தெரிகிறார். ஆனாலும் பிரிண்ட்டின் நிறப்பிரிகையினால் அதுவும் தெளிவில்லாமல் இருக்கிறது..! காதல் காட்சிகளில் அழகாய் மிளிர்கிறார்.. பாடல் காட்சிகளில் ஜொலிக்கிறார்.. மற்றவைகளில் அதிகம் அவருக்கு வேலையில்லை என்பதால் கவனிப்பாரற்று கிடக்கிறது ஹீரோயின் போர்ஷன்..!

இதுவே இப்படியென்றால் இசை, பாடல்கள் பற்றியெல்லாம் நமக்கென்ன கவலை..? Agnel Roman & Faizan Hussain அப்படீன்னு ரெண்டு பேர் இசையமைப்பு செஞ்சிருக்காங்களாம்.. ஒளிப்பதிவை மட்டும் முடிந்த அளவுக்கு சிறப்பாக கொடுக்க வேண்டும் என்று  மெனக்கெட்டிருக்கிறார்கள் என்பது மட்டும் புரிகிறது..! அதற்கு மட்டும் எனது வாழ்த்துகள்..!

இந்த டிஜிட்டல் யுகம் வந்தாலும் வந்துச்சு.. ஆளாளுக்கு கேமிராவைத் தூக்கிட்டு நாங்களும் ரவுடிதான்னு கிளம்பிர்றாங்க.. அமெரிக்கா போயி இவ்வளவு நல்லா காசு செலவு பண்றவங்க கதை, திரைக்கதைக்கு கொஞ்சம் மெனக்கெட்டு மெரீனா பீச்லயாவது உக்காந்து பேசிட்டு கிளம்பினாத்தான் என்ன..? கணேஷ் வெங்கட்ராமனுக்கு இப்போ என்ன மார்க்கெட் இருக்கா..? அவரை ஹீரோவா போட்டா விநியோகஸ்தர்கள் வாங்குவாங்களா..? தியேட்டராவது வாடகைக்குக் கிடைக்குமா..? போஸ்டர் அடிக்கிற காசாவது திரும்ப வருமா..? இதையெல்லாம் யோசித்தார்களோ இல்லையோ.. படம் பார்க்குற நமக்கு பக், பக்குன்னு அடிச்சுக்குது.. தயாரிப்பாளர் பாவமாச்சேன்னு..! ஆனாலும் தயாரிப்பு பார்ட்டி பெரிய ஆளுகதான்.. இதுனால சேதாரத்தைப் பத்தி அவுங்க கவலைப்படப் போறதில்லை.. தமிழ், ஹிந்தில ஒரே நேரத்துல இதை எடுத்திருக்காங்கன்னா பார்த்துக்குங்களேன்..!

கணேஷின் நோய் தொடர்பான காட்சிக் குழப்பங்களை மட்டும் நேர்ப்படுத்தியிருந்தால், இடைவேளைக்கு முன்பிருந்தே படத்தை ரசித்திருக்க முடியும் என்று நினைக்கிறேன்.. இறுதிக் காட்சியில் இது அத்தனையும் டூப்பு என்று ஒரு வரி டயலாக்கில் சொல்லி கணேஷ் தப்பிக்கப் பார்ப்பதும், துப்பாக்கியோடு வந்த மாமனார் மனசிரங்கி மகளை தாரை வார்க்க சம்மதிப்பதும் அக்மார்க் பூவை காதில் சுற்றும் வேலை.. இதற்குள் மக்கள் போதுமடா சாமின்ற லெவலுக்கு போயிட்டாங்க..!  கணேஷுக்கு இப்போது உடனடி தேவை.. நல்லதொரு கதை.. நல்லதொரு இயக்குநர்..! 

ம்ஹூம்.. வேற ஒண்ணும் சொல்றதுக்கில்லை..!

16 comments:

  1. அட அதுக்குள்ள சுட சுடச் விமர்சனம்!சூப்பர்!
    இன்று என் தளத்தில் சிறுவாபுரி முருகா சிறப்பெல்லாம் தருவாய்!
    http://thalirssb.blogspot.in

    ReplyDelete
  2. இவ்ளோ மோசமான மொக்கை படத்துக்கும் விரிவான விமர்சனம்...நீங்க ரொம்ப நல்லவரு....

    ReplyDelete
  3. [[[s suresh said...

    அட அதுக்குள்ள சுட சுடச் விமர்சனம்!சூப்பர்!]]]

    எல்லாரும் செய்யறதுதானே..? ஆனா படம்தான் இப்படியிருக்கு..!

    ReplyDelete
  4. [[[கோவை நேரம் said...

    இவ்ளோ மோசமான மொக்கை படத்துக்கும் விரிவான விமர்சனம். நீங்க ரொம்ப நல்லவரு.]]]

    இது என் கடமைண்ணே..! கடமை..!

    ReplyDelete
  5. பாதி படித்தேன்... பார்க்க வேண்டாமென்று முடிவு செய்துவிட்டேன்...

    நாளைக்கு அதிசய உலகம் 3D பார்க்கப்போறேன்... இந்த வார காமெடிக்கு ஆச்சு...

    ReplyDelete
  6. பிறந்து, வளர்ந்ததில் சொல்லிக் கொள்ளும்படியான சாதனைகள் எதுவும் இதுவரை இல்லை; உயிருடன் இருப்பதைத் தவிர..

    இப்படி ரொம்ம்ம்மம்ப அடக்கத்தோட நீங்க சொல்லிகிட்டாலும், இந்தியாவிலயே ஏன் நம்ம ஒலகத்துலியே அதிக மொக்கப் படங்களைப் பாத்து........, அதோட விடாம கண்ணும் கருத்துமா. கண் எரிச்சலோட
    விமரிசனமும் உடனுக்குடன் அடித்து .....உங்க கடம உணர்ச்சி சாதனைய மிஞ்ச யாராலும் முடியாது.

    மொத்தத்தில் இந்தமாதிரி படங்கள் வந்து செய்த ஒரு சாதனை ....பரத், பிரசன்னா, சக்தி, சாந்தனு, ஸ்ரீகாந்த்......இவர்களையெல்லாம் காணாப்போக அடித்து விட்டதுதான்....அழுக்கு லுங்கிகிட்டையும் அஞ்சுநாள் தாடி கிட்டயும் நீங்களும் சிக்கிக்கிட்டு , நாங்களும் சிக்கிக்கிட்டு......( கணேஷ் வெங்கட்ராம் வேற மோல்டு... ஆனால் என் டார்லிங் திரிஷாவுடன் அபியும் நானும்ல சொதப்பியதிலிருந்தே இவர் என் லிஸ்டில் இல்லை.)

    ReplyDelete
  7. விமர்சனத்திற்கு நன்றி நண்பரே...

    ReplyDelete
  8. வணக்கம் ,
    உங்களை எம்மோடும் இணைத்துக்கொள்ளுங்கள்.
    நன்றி.
    www.thiraddu.com

    ReplyDelete
  9. Nandraaga erunthathu ungalin pads vimarsanam.Vaalthukkal p.

    ReplyDelete
  10. [[[Philosophy Prabhakaran said...

    பாதி படித்தேன். பார்க்க வேண்டாமென்று முடிவு செய்துவிட்டேன். நாளைக்கு அதிசய உலகம் 3D பார்க்கப்போறேன். இந்த வார காமெடிக்கு ஆச்சு.]]]

    ஓகே.. அது நிச்சயம் காமெடியாத்தான் இருக்கும்.. அவசியம் பாருங்க தம்பி..!

    ReplyDelete
  11. [[[சூனிய விகடன் said...

    பிறந்து, வளர்ந்ததில் சொல்லிக் கொள்ளும்படியான சாதனைகள் எதுவும் இதுவரை இல்லை; உயிருடன் இருப்பதைத் தவிர..

    இப்படி ரொம்ம்ம்மம்ப அடக்கத்தோட நீங்க சொல்லிகிட்டாலும், இந்தியாவிலயே ஏன் நம்ம ஒலகத்துலியே அதிக மொக்கப் படங்களைப் பாத்து, அதோட விடாம கண்ணும் கருத்துமா. கண் எரிச்சலோட விமரிசனமும் உடனுக்குடன் அடித்து உங்க கடம உணர்ச்சி சாதனைய மிஞ்ச யாராலும் முடியாது.]]]

    நன்னி.. நன்றி.. நன்றி..!

    [[[மொத்தத்தில் இந்த மாதிரி படங்கள் வந்து செய்த ஒரு சாதனை பரத், பிரசன்னா, சக்தி, சாந்தனு, ஸ்ரீகாந்த் இவர்களையெல்லாம் காணாப் போக அடித்து விட்டதுதான். அழுக்கு லுங்கிகிட்டையும் அஞ்சு நாள் தாடிகிட்டயும் நீங்களும் சிக்கிக்கிட்டு, நாங்களும் சிக்கிக்கிட்டு.]]]

    இப்போ இதுதான் டிரெண்ட்டு.. காலத்துக்கு காலம் சினிமால டிரெண்டு மாறிக்கிட்டேதான் இருக்கும்..!

    ReplyDelete
  12. [[[திண்டுக்கல் தனபாலன் said...

    விமர்சனத்திற்கு நன்றி நண்பரே...]]]

    வருகைக்கு நன்றி தனபால் ஸார்..!

    ReplyDelete
  13. [[[Jaffna Athikaa said...

    வணக்கம், உங்களை எம்மோடும் இணைத்துக் கொள்ளுங்கள்.
    நன்றி.
    www.thiraddu.com]]]

    அழைப்பிற்கு நன்றி.. இணைக்க முயல்கிறேன்..!

    ReplyDelete
  14. [[[Babu said...

    Nandraaga erunthathu ungalin pads vimarsanam. Vaalthukkal p.]]]

    நன்றி பாபு ஸார்.! அடிக்கடி வாங்க..!

    ReplyDelete
  15. MURUGAA.. ENGA EPADI manasukkul VANTHHAAI VIMARSANAM??? heroine kooda mattum photo eduthu pottenga???

    ReplyDelete
  16. [[[ஜெட்லி... said...

    MURUGAA.. ENGA EPADI manasukkul VANTHHAAI VIMARSANAM??? heroine kooda mattum photo eduthu pottenga???]]]

    நேரமில்லீங்கண்ணா.. இன்னிக்கு நைட்டுக்குள்ள போட்டுர்றேன்..!

    ReplyDelete