Pages

Thursday, July 12, 2012

மாற்றான் - எதனுடைய காப்பி? - இயக்குநரின் சமாளிப்பு..!


12-07-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வது சினிமாக்காரர்களுக்கு புதிதல்ல. இன்று காலை 12 மணிக்கு தீர்மானித்து சாயந்தரம் 6 மணிக்கு பத்திரிகையாளர்களை அவசரம், அவசரமாக சந்தித்த மாற்றான் படத்தின் டீம் இதைத்தான் செய்தது..! இத்தனை அவசரமாக இவர்கள் பிரஸ்ஸை சந்திக்க வேண்டியதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை..! ஒருவேளை நமது அண்ணன் முத்துராமலிங்கம் எழுதிய இந்தப் பதிவுதானோ என்ற ஐயமும் பிரஸ் உலகத்திற்குள் எழுந்திருக்கிறது..!




கதாநாயகன் சூர்யாவுக்கு முன்பாகவே தயாரிப்பாளர்கள் கல்பாத்தி பிரதர்ஸ் சகிதம் பிரசாத் லேப்புக்கு வந்துவிட்ட இயக்குநர் கே.வி.ஆனந்திடம் அனைத்து டிவிக்காரர்களும் பைட் கேட்க, “நிகழ்ச்சியை முடிச்சிட்டு தர்றனே.. அத்தோட நீங்களும் டீஸரை பார்த்துட்டீங்கன்னா கேக்குறதுக்கு ஏதாவது தோணும்ல்ல..?” என்று நயமாகப் பேசி மறுத்தார்.

டிரெயிலர் ஒரு முறைக்கு, மூன்று முறை ஒளிபரப்பப்பட்டது. தெலுங்கில்  ப்ரியாமணி நடித்து வரும் சாருலதா போன்று இரட்டையர்களாக தோளோடு ஒட்டியவர்களாக சில இடங்களில் தெரிகிறார்கள். ஆனால் எப்படித்தான் சண்டைக் காட்சியில் நடிப்பதுபோல எடுத்தார்கள் என்று தெரியவில்லை..! இது ரொம்பவே ரிஸ்க்குதான்..! 

எப்படியும் இன்றைக்கு தன்னை பிறாண்டி எடுப்பார்கள் என்பதை உணர்ந்தே வந்திருந்த கே.வி.ஆனந்த்,. இந்தக் கதை பிறந்த கதையை வெகு சுவாரசியமாகச் சொன்னார். அதுவே மிகப் பெரிய கதையாக இருந்தது. சிவாஜி படத்தின் ஷூட்டிங் முடிந்து விமானத்தில் வந்து கொண்டிருந்தபோது அதில் பயணம் செய்த நர்ஸ் ஒருவரிடம் இருந்து நேஷனல் ஜியாகிரபிக் புத்தகத்தை வாங்கிப் படித்தாராம். அதில் தாய்லாந்து நாட்டில் ஒட்டிப் பிறந்து அமெரிக்கா சென்று சர்க்கஸில் வாழ்ந்து மறைந்த இரட்டையர்களைப் பற்றிய செய்தியைப் படித்தாராம். அதனை அப்போதே சூர்யாவிடம் சொல்லி பகிர்ந்து கொண்டாராம்.. “இதை பேஸ்ஸா வைச்சு ஒரு படம் செய்யணும்”னு சூர்யாவிடம் இவர் சொல்ல.. சூர்யா கேட்டுக் கொண்டதோடு சரி. அப்போதைக்கு மூச்சுவிடலையாம்.. 

இது மாதிரியான இரட்டை கேரக்டரில் நடிப்பது ரொம்பவே கஷ்டம். அதுனால நாமளா போய் கேக்க வேணாம். அவரா வந்தா எடுக்கலாம் என்ற நினைப்பில் ஓரமாய் இருந்த கே.வி.ஆனந்தை இழுத்துப் பிடித்து தெருவில் விட்டவர் சூர்யாதானாம்..! “சூர்யா மாட்டேன்னு சொல்லியிருந்தா, இந்த பிராஜெக்ட்டை தொட்டிருக்கவே மாட்டேன்..” என்றார் ஆனந்த். சூர்யா மிகவும் கஷ்டப்பட்டு நடிச்சிருக்காருன்னு சொல்லி “இரட்டை கதாபாத்திரங்கள்.. வேறு வேறு மேக்கப், டிரெஸ்ஸிங்ன்னு.. கஷ்டமான சிச்சுவேஷன்ஸ்.. இதுல ஸ்டண்ட் சீன்ஸ்லாம் இருந்துச்சு.. ஒருத்தர் ஆக்சன் செய்யும்போது இன்னொருத்தரோட ஆக்சனை ஞாபகம் வைச்சிருந்து திரும்பி அதையே செய்யணும்.. சூர்யா மாதிரி டெடிகேஷன் பெர்ஸனால மட்டும்தான் அது முடியும்..” என்று வழக்கம்போல புகழ்ந்து தள்ளினார் ஆனந்த்.

கேள்வி கேட்கும் படலம் துவங்கியவுடன் கே.வி.ஆனந்த் நினைத்த மாதிரியே முதல் கேள்வியே படத்தின் காப்பி பற்றித்தான் பறந்து வந்தது. உறுதியாக மறுத்தார் ஆனந்த். “சாருலதா மற்றும் அலோன் படங்களுக்கும் இதுக்கும் துளி கூட சம்பந்தமில்லை..” என்றார். பின்பு மற்றொரு கேள்விக்குப் பதிலளிக்கும்போது, “இது பற்றி இணையத்துல நியூஸ் வந்த பின்னாடி அந்தப் படத்தை(அலோன்)யும் நான் பார்த்தேன். அதுக்கும், இதுக்கும் ஒரு சீன்கூட ஒற்றுமையில்லை..” என்று மறுபடியும் ஆணித்தரமாக மறுத்தார். அப்படியும் விடாமல் பத்திரிகையாளர்கள் துளைத்தெடுக்க, “அந்தப் படத்தோட பேஸ்மெண்ட் மட்டும் ஒரு வேளை என் படத்துல ஒண்ணா இருக்கலாம்னு நினைக்கிறேன்..” என்று மூன்றாவது ஸ்டேட்மெண்ட்டையும் விட்டார். இதற்கடுத்தும் தொடர்ந்து கேள்விகள் அலோன், சாருலதா படங்களைப் பற்றியும் காப்பி பற்றியுமே வர, “விட்ரலாமே.. எதுக்கு திருப்பித் திருப்பி அதையே பேசணும்..?” என்று அலுத்துப் போய் சொன்னார்.

படத்தின் டிரெயிலரை பார்த்தால் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் செய்யும் அலம்பல்களும், சேட்டைகளுமாகத்தான் இருக்கிறது..! அலோன் படத்தின் பேஸ்மெண்ட்டுடன் தமிழ்ச் சினிமாவின் சூத்திரத்தின்படி, கே.வி.ஆனந்தின் இயக்கத்தில், சூர்யாவின் சிரிப்பு நடிப்பில், சுபா இரட்டையர்களின் தமிழுக்கேற்றபடியான சூப்பரான திரைக்கதையில் செப்டம்பரில் வெளிவர இருக்கிறது இப்படம்.

“கிளைமாக்ஸ் சீன்கூட இன்னும் எடுக்கலைங்க..” என்று சூர்யா சொல்ல, கே.வி.ஆனந்தோ “ஒரு பாட்டு சீன் மட்டும்தான் எடுக்கலை..” என்று திருப்பித் திருப்பிச் சொல்லி சமாளித்தது ஏன் என்றுதான் தெரியவில்லை..!



எப்படியோ இயக்குநர் ஆனந்தின் இந்த சமாளிப்பு பதில்களைத் தாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து இணையத்தின் முன் அமர்ந்தால் அலோன் மட்டுமில்லை. Stuck on you  என்ற ஹாலிவுட் படத்தின் போஸ்டர்கூட இந்தப் படத்திற்காகக் காப்பியடிக்கப்பட்டிருக்கிறது என்கிற புதுச் செய்தியும் வர.. அடப் போங்கப்பா… இவங்களுக்கு அரசியல்வியாதிகளே பரவாயில்லைன்னு சொல்லணும் போலத் தோணுது..! 

28 comments:

  1. படம் பார்கிறதுக்கு முன்னாடியே காப்பின்னு சொல்ற ஆளுங்க நம்ம தமிழங்க தான்யா... தமிழன் ரொம்ப சீக்கிர‌ம் முன்னேறிடுவான்...!

    ReplyDelete
  2. அருமையான பகிர்வு அண்ணா..
    சமயம் கிடைத்தால் நம்ம ப்ளாக் பக்கம் வந்துட்டுபோங்க..
    http://dohatalkies.blogspot.com/2012/07/hachi-dogs-tale.html

    ReplyDelete
  3. கேவி ஆனந்த் படங்களின் ஸ்க்ரீன் ப்ளே மற்றும் ப்ரெசன்ஸ் நல்லா இருந்தாலும், ஒவ்வொரு படமும் ஒவ்வொன்றிலிருந்து காப்பி அடிக்கப்பட்டதே. அயன் - Maria full of Grace, கோ - State of Play. பிரச்சினை இந்த இன்ஸ்பிரேஷன் இல்லை. திறமைகவே திரைக்கதை அமைக்கிறார். ஆனால், ஏதோ இவர் தான் ஆபத்பாந்தவனாக தமிழ் திரையுலகை காப்பாற்றுவது போல ஸீன்கள் வைப்பது தான் இடிக்குது, அயனில் தமிழ் ஹீரோவை கலாய்ப்பது என்று...

    இதையேத்தான் ராஜிவ் மேனன் செய்தார், 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' என்னும் மொக்கை படம் மூலம்...

    ReplyDelete
  4. நேத்து டீசரப் பார்த்துட்டு கூகிள்ல கொஞ்சம் தேடிப்பார்த்தேன்.ஏனோ தெரியல, தமிழ் சினிமால புதுமுயற்சின்னு சொன்னாலே கை உடனடியா கூகிள், ஃபேஸ்புக் பக்கம் திரும்புது.

    ReplyDelete
  5. படம் நல்லா இருந்தா ஓட போகுது....
    எங்கிருந்து வேணா எடுக்கட்டும், நல்ல படமா இருந்தா மக்கள் பார்ப்பாங்க...மொக்கையா இருந்தா சீண்ட கூட மாட்டாங்க....
    இவங்க சீன் போடுறதை பத்தி நம்ம கண்டுக்கவே கூடாது....கலைஞர் மாதிரி.

    ReplyDelete
  6. சரி, இவனுங்க சொந்தமா கதை பண்ணி படம் எடுத்தா எவன் பாக்குறான்?

    காப்பியோ, டீயோ சன் டி.வீ யும், ஜெயா டீ.வீ யும் போட்டிபோட்டுட்டு வாங்க தயாரா இருக்காங்க.

    இளையராஜா காப்பி அடிச்சே இசை ஞானி ஆனார்.
    ஏ.ஆர் ரஹ்மான் காப்பி அடிச்சே ஆஸ்கார் வரைக்கும் போனார்,

    இவிய்ங்க காப்பி அடிச்சே நாலு காசு பாக்குறாங்க.

    இது தப்பே இல்லிங்க. காப்பி அடிக்கத் தெரியாமல் இருந்தால் தான் தப்பு.

    ReplyDelete
  7. [[[ILA(@)இளா said...

    Superb!]]]

    நன்றி இளா..!

    ReplyDelete
  8. [[[Karthik Karthi said...

    படம் பார்கிறதுக்கு முன்னாடியே காப்பின்னு சொல்ற ஆளுங்க நம்ம தமிழங்கதான்யா... தமிழன் ரொம்ப சீக்கிர‌ம் முன்னேறிடுவான்...!]]]

    தமிழனை பத்தி இன்னொரு தமிழனுக்குத்தானே தெரியும். அதுனாலதான் கரீக்ட்டா சொல்றாங்க..!

    ReplyDelete
  9. [[[Doha Talkies said...

    அருமையான பகிர்வு அண்ணா.
    சமயம் கிடைத்தால் நம்ம ப்ளாக் பக்கம் வந்துட்டுபோங்க..]]]

    அவசியம் வர்றேன் அண்ணா..!

    ReplyDelete
  10. [[[சீனு said...

    கே.வி.ஆனந்த் படங்களின் ஸ்க்ரீன்
    ப்ளே மற்றும் ப்ரெசன்ஸ் நல்லா இருந்தாலும், ஒவ்வொரு படமும் ஒவ்வொன்றிலிருந்து காப்பி அடிக்கப்பட்டதே. அயன் - Maria full of Grace, கோ - State of Play. பிரச்சினை இந்த இன்ஸ்பிரேஷன் இல்லை. திறமைகவே திரைக்கதை அமைக்கிறார். ஆனால், ஏதோ இவர்தான் ஆபத்பாந்தவனாக தமிழ் திரையுலகை காப்பாற்றுவது போல ஸீன்கள் வைப்பதுதான் இடிக்குது, அயனில் தமிழ் ஹீரோவை கலாய்ப்பது என்று...]]]

    அதனால்தான் அவரை கடித்துக் குதறினார்கள் அப்போது.. அந்தக் கோபம்தான் இப்போதும்..! நான் காப்பிதான் அடிக்கிறேன். இன்ஸ்பிரேஷன் இதிலும் உண்டு என்று சொல்லி விட்டுப் போவதால் அவருடைய படங்களை யாரும் புறக்கணிக்கப் போவதில்லை. மேக்கிங் நன்றாக இருந்தால் பார்க்கத்தான் செய்வார்கள்.. இதில் எதற்கு இவர்களுக்கு வீணான போலி கவுரவம்..?

    [[[இதையேத்தான் ராஜிவ் மேனன் செய்தார், 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' என்னும் மொக்கை படம் மூலம்...]]]

    இது மொக்கை படமா..? இப்பக்கூட இதனை ஆஹா ஓஹோ என்று சிலாகிக்கவும் செய்கிறார்களே..?

    ReplyDelete
  11. [[[ஹாலிவுட்ரசிகன் said...

    நேத்து டீசரப் பார்த்துட்டு கூகிள்ல கொஞ்சம் தேடிப் பார்த்தேன். ஏனோ தெரியல, தமிழ் சினிமால புது முயற்சின்னு சொன்னாலே கை உடனடியா கூகிள், ஃபேஸ்புக் பக்கம் திரும்புது.]]]

    ஒரு தமிழன் பற்றி இன்னொரு தமிழனுக்கு இருக்கும் நம்பிக்கைதான் இது..!

    ReplyDelete
  12. [[[ராஜ் said...

    படம் நல்லா இருந்தா ஓட போகுது....
    எங்கிருந்து வேணா எடுக்கட்டும், நல்ல படமா இருந்தா மக்கள் பார்ப்பாங்க...மொக்கையா இருந்தா சீண்ட கூட மாட்டாங்க....
    இவங்க சீன் போடுறதை பத்தி நம்ம கண்டுக்கவே கூடாது....கலைஞர் மாதிரி.]]]

    கரீக்ட்டு.. நல்ல காப்பியா இருந்தாலும் மக்கள் குடிச்சிட்டுத்தான் போவாய்ங்க.. அப்புறம் உண்மையை ஒத்துக்குறதுல ஏன் இந்தத் தயக்கம்?

    ReplyDelete
  13. [[[ரங்குடு said...

    சரி, இவனுங்க சொந்தமா கதை பண்ணி படம் எடுத்தா எவன் பாக்குறான்? காப்பியோ, டீயோ சன் டி.வீ யும், ஜெயா டீ.வீ யும் போட்டிபோட்டுட்டு வாங்க தயாரா இருக்காங்க.]]]

    எத்தனையோ பேர் சொந்தமா கிரியேட் செஞ்ச கதைலதான் எடுக்குறாங்க..! சில பேர் மட்டும்தான் இப்படி.. சரக்கில்லாதவங்க..!

    [[[இளையராஜா காப்பி அடிச்சே இசை ஞானி ஆனார். ஏ.ஆர் ரஹ்மான் காப்பி அடிச்சே ஆஸ்கார் வரைக்கும் போனார். இவிய்ங்க காப்பி அடிச்சே நாலு காசு பாக்குறாங்க. இது தப்பே இல்லிங்க. காப்பி அடிக்கத் தெரியாமல் இருந்தால்தான் தப்பு.]]]

    ஏன் இப்படி..? சந்தடிச்சாக்குல இந்த அளவுக்குவரைக்கும் வந்துட்டீங்க..?

    ReplyDelete
  14. உன்னைய என்னைய மாதிரி நல்ல காப்பி அடிக்காத இயக்குனர்களுக்கும், நடிகர்களுக்கும் நாட்ல மதிப்பே கிடையாதுண்ணே :((

    ReplyDelete
  15. என் தம்பியின் ப்ளாக் ப்ளீஸ் visit http://tamilyaz.blogspot.com/

    ReplyDelete
  16. மானங்கெட்ட ட்வின்ஸ்...சூர்யா –கே.வி.ஆனந்த்.

    ReplyDelete
  17. [[[【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

    உன்னைய என்னைய மாதிரி நல்ல காப்பி அடிக்காத இயக்குனர்களுக்கும், நடிகர்களுக்கும் நாட்ல மதிப்பே கிடையாதுண்ணே :((]]]

    அப்படியென்னத்த தம்பி நாம டைரக்டு செஞ்சு தொலைஞ்சிருக்கோம்..?

    ReplyDelete
  18. [[[பலே வெள்ளைய தேவா said...

    என் தம்பியின் ப்ளாக் ப்ளீஸ் visit http://tamilyaz.blogspot.com/]]]

    ஓகே.. நீங்களே இப்போதுதான் அறிமுகம். அதற்குள் உங்களது தம்பியா..?

    ReplyDelete
  19. [[[! சிவகுமார் ! said...

    மானங்கெட்ட ட்வின்ஸ்...சூர்யா –கே.வி.ஆனந்த்.]]]

    இப்படிப் பார்த்தா தமிழ்ச் சினிமால ஒருத்தர்கூட மானத்தோட வாழ முடியாது சிவா..!

    ReplyDelete
  20. அண்ணா. font பிரச்சனை. பிரச்னையை சரி செய்து புதிய பதிவு எழுதி உள்ளேன். அதை படியுங்கள் . தடங்கலுக்கு மன்னிக்கவும்.
    font பிரச்னை இல்லாத புதிய பதிவிற்கு இந்த லிங்க் -ல் உள்ள பதிவை படியுங்கள்.
    http://dohatalkies.blogspot.com/2012/07/12-angry-men.html
    அண்ணனின் அன்பான கருத்தை எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  21. M. Anto peter died. My deepest condolence.

    www.antopeter.blogspot.com

    ReplyDelete
  22. பெரும்பாலான படங்கள் காப்பி அடித்துதான் எடுக்கப்படுகிறது இப்போது!அதில் சிறப்பாக இருப்பதை ரசிக்கிறோம்!

    ReplyDelete
  23. [[[Doha Talkies said...

    அண்ணா. font பிரச்சனை. பிரச்னையை சரி செய்து புதிய பதிவு எழுதி உள்ளேன். அதை படியுங்கள் . தடங்கலுக்கு மன்னிக்கவும்.
    font பிரச்னை இல்லாத புதிய பதிவிற்கு இந்த லிங்க் -ல் உள்ள பதிவை படியுங்கள்.

    http://dohatalkies.blogspot.com/2012/07/12-angry-men.html
    அண்ணனின் அன்பான கருத்தை எதிர்பார்க்கிறேன்.]]]

    படித்துவிட்டேன். இந்தப் படம் பற்றி முன்பே ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன்.. மறுபடியும் ஞாபகமூட்டியமைக்கு நன்றிகள்..! இதன் பாதிப்பில் ஹிந்தி, மலையாளம் படங்கள் நிறையவே வந்துள்ளன..!

    ReplyDelete
  24. [[[உசிலை விஜ‌ய‌ன் said...

    M. Anto peter died. My deepest condolence.

    www.antopeter.blogspot.com]]]

    இன்று காலையில் கேள்விப்பட்டவுடன் அதிர்ச்சியோ அதிர்ச்சி.. 45 வயசெல்லாம் ஒரு வயசா..? அதுலேயும் இன்னமும் சாதிக்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்த மனிதராச்சே..? விதியை என்னவென்று சொல்வது..?

    ReplyDelete
  25. [[[s suresh said...

    பெரும்பாலான படங்கள் காப்பி அடித்துதான் எடுக்கப்படுகிறது இப்போது!அதில் சிறப்பாக இருப்பதை ரசிக்கிறோம்!]]]

    சினிமா ஆர்வலர்களும், விமர்சகர்களும் அதற்கான முறையான அனுமதியைப் பெற்று படமெடுக்கும்படி சொல்கிறார்கள்.

    ReplyDelete
  26. //அப்படியென்னத்த தம்பி நாம டைரக்டு செஞ்சு தொலைஞ்சிருக்கோம்// என்னண்ணே இப்படி சொல்லிட்டீங்க? உங்களோட புனிதப் போர் இன்னும் என்னோட கண்ணை விட்டு போகவே இல்லியேண்ணே.

    ReplyDelete
  27. [[[அமர பாரதி said...

    //அப்படியென்னத்த தம்பி நாம டைரக்டு செஞ்சு தொலைஞ்சிருக்கோம்//

    என்னண்ணே இப்படி சொல்லிட்டீங்க? உங்களோட புனிதப் போர் இன்னும் என்னோட கண்ணை விட்டு போகவே இல்லியேண்ணே.]]]

    விட மாட்டீங்களாய்யா..!

    ReplyDelete