Pages

Friday, January 13, 2012

மனுஷ்யபுத்திரனிடம் கேட்டுச் சொல்லுங்கள்..!

13-01-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இதனை எப்படி ஆரம்பிப்பது? எப்படி நிறைவு செய்வது என்று தெரியாமலேயே இதனைத் துவக்குகிறேன்..!

அப்பொழுது நான் மின் பிம்பங்கள் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். தி.நகரில் திருமதி ஒய்.ஜி.பி.யின் வீட்டிற்கு அடுத்த கட்டிடத்தில் மின் பிம்பங்கள் ஸ்டூடியோ. அங்குதான் வேலை. நண்பரும், கவிஞருமான சங்கர ராமசுப்பிரமணியனும், பாலை படத்தின் இயக்குநர் செந்தமிழனும் அப்போது என்னுடன்தான் பணியாற்றி வந்தார்கள். தினம்தோறும் மாலையில் அப்போதும், இப்போதும் குமுதத்தில் பணியாற்றி வரும் தளவாய் சுந்தரம், தனது நண்பர் சங்கரை சந்திக்க அங்கே வருவார். அப்போதுதான் எனக்கும் அவர்கள் பழக்கம்.

எளக்கியம், எளக்கியகர்த்தாக்கள், பற்றிய முன்னுரைகூட தெரியாத ஒரு மனநிலை எனக்கு அப்போதிருந்தது. எனக்கு நன்கு தெரிந்த ஒரேயொரு எழுத்தாளர் எஸ்.ரா. மட்டுமே..! அதுவும் அவர் மின் பிம்பிங்கள் நிறுவனம் தயாரித்த சின்னத்திரை சீரியல்களில் கதை, திரைக்கதை, வசனம் எழுதிய காரணத்தினால்தான்..!

இந்த நேரத்தில்தான் சின்னத்திரை இயக்குநர் சி.ஜெரால்டு என்னை அழைத்து “ஒரு தட்டச்சு வேலை இருக்கு. நீதான் செஞ்சு தரணும்..” என்று சொல்லி அழைத்தார். அவர் சொன்ன முகவரி ராஜா அண்ணாமலைபுரத்தில் இருந்த உயிர்மையின் அலுவலகம். அங்கேதான் முதன் முதலாக மனுஷ்யபுத்திரனை சந்தித்தேன். 


அப்போதுதான் 'உயிர்மை' ஆரம்பித்த நேரம். 'உயிர்மை பதிப்பக'த்தின் சார்பாக ஜெரால்டு எழுதிய சினிமா பற்றிய புத்தகத்தை, தட்டச்சு செய்து கொடு்த்தேன். இதற்காக அடிக்கடி 'உயிர்மை' அலுவலகம் சென்று வந்து கொண்டிருந்தேன். ஆசிரியர் மனுஷ்யபுத்திரனிடமும், செல்வியிடமும் போனிலும் பேசிக் கொண்டிருந்தேன்.

அந்தப் புத்தகம் அச்சுக்குப் போகும் முன்பு செல்வி, என்னை ஒரு நாள் தொலைபேசியில் அழைத்து “தட்டச்சு செய்யப்பட்டது சரியாக வேர்டில் காணப்படவில்லை. பல எழுத்துக்கள் மிஸ்ஸிங். கொஞ்சம் வந்து சரி பாருங்கள்” என்றார்.. 5 நாட்கள் மாலை வேலைகளில் 'உயிர்மை' அலுவலகத்திற்கு தினம்தோறும் சென்று அதையும் சரி பார்த்து முடித்தேன். தொடர்ந்த நாட்களில் 'உயிர்மை'யின் இதழுக்காக சில கவிதைகளை தட்டச்சு செய்ய வேண்டியிருந்தது. இதையும் 'உயிர்மை' அலுவலகத்திற்கே சென்று தட்டச்சு செய்து கொடுத்தேன்.. அப்போது லீனா மணிமேகலையும், ஜெரால்டும் அங்கே வந்து மனுஷ்யபுத்திரனிடம் பேசுவார்கள். ஜெரால்டு, லீனா இருவரும் எனக்கு நெருங்கிய பழக்கம் என்றாலும், மனுஷ் அவ்வளவு பழக்கம் இல்லாததால் சாதாரணமாகவே இருந்த அவருடனான நட்பு, சரி பார்த்தல் பணிக்காக வந்தபோது கொஞ்சம் வேகப்பட்டது.

மின் பிம்பங்களின் வரலாறு, தற்போதைய சீரியல்களின் போக்கு, கே.பாலசந்தரின் சினிமாக்கள், சீரியல் தொழிலின் வரவு, செலவு, தொலைக்காட்சிகளின் எதிர்காலம் என்றெல்லாம் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டவரிடம் கவிதைகள் குறித்தும் நான் கேட்டறிந்தேன். ஏனெனில் எனக்கும் கவிதைக்குமான தொடர்பு, நமீதாவுக்கும் சேலைக்குமான நட்பு போன்றது..! "ராணி முத்துவில் வரும் கவிதையாக இருந்தாலும் சரி.. எந்தக் கவிதையையும் கொஞ்சம் நிதானமாக, பொறுமையாகப் படியுங்கள். எதனால் அது கவிதையாக்கப்பட்டுள்ளது என்று புரியும். அதன் எழுத்து வடிவம் உங்களுக்குப் புரிந்து போனால், நீங்களும் அதுபோல் எழுதிப் பழகலாம்..”  என்றார். சரி.. நம்மையும் இலக்கிய உலகத்திற்குள் இழுத்துச் செல்கிறாரே என்று மிகப் பெரிய மரியாதை அவர் மீது எனக்குள் ஏற்பட்டது.

மனுஷ்யபுத்திரனின் பேச்சும், சுபாவமும் அதீதமாக என்னைக் கவர்ந்திழுக்க.. ஒரு நாள் நான் அவரைப் பற்றி சங்கரிடம் சொல்லி, “அவரை உங்களுக்குத் தெரியுமா..?” என்றேன்.. உடன் இருந்த தளவாயும், செந்தமிழனும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். 'காலச்சுவடின்' இலக்கிய வரலாறும், 'சுந்தரராமசாமி' என்ற இலக்கிய குருசாமியைப் பற்றியும் அன்றைக்குக் கொஞ்சம் கூடுதல் தகவல்கள் எனக்குத் தெரிந்தன. மனுஷ்யபுத்திரனின் அப்போதுவரையிலான வாழ்க்கை வரலாற்றையும் அறிந்து கொள்ள முடிந்தது.

'காலச்சுவடு' இதழை தலையிலும், தோளிலும் சுமந்து கொண்டு நாகர்கோவில், கன்னியாகுமரியில் தெருத்தெருவாக அலைந்து விற்ற கதையை தளவாயும், சங்கரும் அன்றைக்கு என்னிடம் மிக உருக்கமாகச் சொன்னார்கள் . இப்போது இவர்கள் மீது எனக்கு அளவு கடந்த மரியாதையும் ஒரு பிம்பமும் பிறந்தது.. மனுஷ்யபுத்திரன் மீது அவருக்கே தெரியாமல் ஒரு ஒளிவட்டத்தை பொருத்தி என்னால் ரசிக்க முடிந்தது.. இலக்கியப் பத்திரிகையில் ஆசிரியராக இருந்தவர். நம் நண்பர்கள் சிலாகிக்கும் கவிஞர் என்றெல்லாம் மனுஷ்யபுத்திரன் மீது எனக்கு ஒரு கிறக்கம் வேறு உண்டாகியிருந்தது.

அடுத்து வந்த ஒரு நாளில் ஜெரால்டுவின் புத்தகம் தயாராகிவிட்டதா என போன் செய்து விசாரித்தேன். மனுஷ்தான் போனை எடுத்தார். “ஆபீஸ் வந்து வாங்கிக்குங்களேன் சரவணன்..” என்றார். உடனேயே அன்று மாலையே அங்கு ஓடினேன்.  சினிமா புத்தகத்தை வாங்கிக் கொண்டு அப்படியே பேசாமல் திரும்பிப் போயிருந்தால்கூட புண்ணியமாக இருந்திருக்கும். விதி வலியதாச்சே..!

தரையில் பாய் விரித்து சமர்த்தாக அமர்ந்திருந்த மனுஷ்யபுத்திரனின் முன்னால், ஜப்பானிய சுமோ வீரனை போல அடக்கத்துடன் அமர்ந்த நிலையில், “நேத்திக்கு சங்கர் உங்களைப் பத்தி நிறைய சொன்னார் ஸார்..” என்றேன். திருப்பிக் கேட்டார் மனுஷ்யபுத்திரன், "எந்த சங்கர்..?” என்று..! “சங்கர் ராமசுப்பிரமணியன் ஸார்.. கவிஞர்.. காலச்சுவடுல உங்களோட வேலை பார்த்தாராமே..?” என்றேன். “காலச்சுவடுல நான்  வேலை பார்த்தேன். எனக்கு சங்கர்ன்னு யாரையும் தெரியாதே..” என்றார். அதிர்ச்சியானது எனக்கு..! “இல்ல ஸார்.. அவரும் தளவாய் சுந்தரமும்தான் காலச்சுவடு விற்பனை வேலைல இருந்ததா சொன்னாங்களே..” என்றேன் குழப்பத்துடன். என் கண்களை நேருக்கு நேராய் கூர்மையாய் பார்த்தபடி “எனக்கு சங்கர் ராமசுப்பிரமணியன்னு யாரையுமே தெரியாது சரவணன்..” என்றார் சிரித்தபடியே..! மறுபடியும் பொசுக்கென்றானது எனக்கு.. “இல்லை ஸார்.. சங்கர் இப்போ என்கூடதான் வேலை பார்க்குறாரு. கவிதை புத்தகமெல்லாம் எழுதியிருக்காரு. அவர்தான் சொன்னாரு..” என்று சொல்லி முடிப்பதற்குள் இடைமறித்த மனுஷ், “சங்கர் ராமசுப்பிரமணியன் என்ற பெயரை என் வாழ்க்கைல இதுவரைக்கும் கேட்டதே இல்லை சரவணன்.. ஏன் நீங்க இப்படி குழப்பிக்குறீங்க..?” என்றார் சிரித்தபடியே. இப்போது எனக்குத்தான் குழப்பம் கூடிப் போனது..! இதற்கு பேச ஏதுமி்ல்லாததால் திருப்தியே இல்லாமல் எழுந்து வந்தேன்..!

மறுநாள் ஸ்டூடியோவில் இதனை சங்கரிடமும், செந்தமிழனிடமும் சொன்னபோது மீண்டும் விழுந்து, விழுந்து சிரித்தார்கள் இருவரும். “எனக்கும் அவனுக்கும் கொஞ்சம் பிரச்சினை சரவணன்.. அதுனால தெரியலைன்னு சொல்லியிருப்பான்..” என்றார் சங்கர். எனக்கு சப்பென்று போனது..

“ஏங்க.. அவரு ஏதோ பெரிய இலக்கிய பத்திரிகை ஆசிரியர்ங்குறீங்க.. நீங்களும் கவிஞரு.. அவரும் கவிஞரு.. ஏதோ சண்டைக்காக ஆளையே தெரியாதுன்னா சொல்வாங்க..? அதுலேயும் நானென்ன வம்பிழுத்து விடறதுக்காக போனேன்..?  இப்படியா முகத்துல அடிச்சாப்புல தெரியாதுன்னு சொல்வாங்க..?” என்றேன். “அதெல்லாம் அப்படித்தான் ..லூஸ்ல விடுங்க சரவணன்..” என்று அவர்கள்தான் என்னை அமைதிப்படுத்தினார்கள். எனக்குத்தான் அப்போதைக்கு கோபம் தீரவில்லை.

'எத்தனை நாள் அவங்க ஆபீஸ்லயே அவர் கூடவே உக்காந்து மேட்டர் டைப் செஞ்சு கொடுத்திருக்கேன். என் டைப்பிங் ஸ்பீடை பார்த்து என்னமா பேசியிருக்காரு..? ஊர் விஷயமெல்லாம் பேசியிருக்கோம்.. நம்மகிட்டயே போய் இப்படி மூணாம் மனுஷன்கிட்ட பேசுற மாதிரி பேசிட்டாரே..' என்ற கோபத்தில் இதன் பின் 'உயிர்மை' அலுவலகத்திற்கு போகக் கூடாது..” என்று அப்போதே முடிவெடுத்துவிட்டேன்..! ஆனால் 'உயிர்மை'யின் முதல் இதழில் இருந்து இப்போதுவரையிலும், அதனை வாசித்துதான் வருகின்றேன். அது வேறு விஷயம்.

இது மட்டுமா..? இன்னொரு சம்பவம்.. அப்போது 'குமுதம்' குழுமத்தில் இருந்து 'குமுதம் ஜங்ஷன்' என்னும் பத்திரிகையும் வந்து கொண்டிருந்தது. இலக்கிய சாயல் கொண்டது. அதில் கவிஞர் சல்மா ஒரு முறை தன்னுடைய பால்ய வயது புத்தக வாசிப்பு பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் தானும் மனுஷ்யபுத்திரனும் சிறு வயதிலேயே போட்டி, போட்டுக் கொண்டு புத்தகங்களை வாசித்ததாகச் சொல்லியிருந்தார்.

இதைப் படித்ததும் மனுஷ்யபுத்திரன் என்பது இவரைத்தானோ என்ற சந்தேகம் எனக்குள் இருந்தது. அந்தச் சமயத்தில் எழுத்தாளர் அண்ணன் எஸ்.ரா.வின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவேன். அப்படியொரு முறை சென்றபோது இந்தக் கட்டுரையைப் பற்றி அவரிடம் சொன்னேன். “ஆமா சரவணன்.. அவங்க ரெண்டு பேரும் அக்கா, தம்பிக..” என்றார். “ஓ.. அப்படியா..?” என்று கேட்டுக் கொண்டேன்..!

அதன் பின்பு காயிதேமில்லத் பெண்கள் கல்லூரியில் புத்தகக் கண்காட்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது உயிர்மை ஸ்டால் பக்கமாக வந்தபோது மனுஷ்யபுத்திரன் வாசலில் அமர்ந்திருந்தார். பார்த்தவுடன் “வணக்கம்..” வைத்தேன். அவரும் பதிலுக்கு கைகளைப் பற்றி “சரவணன்..” என்றார். அடடே.. ஆசிரியர் நம்மை இப்பவும் ஞாபகம் வைச்சிருக்காரே என்ற நினைப்புடன் பேசினேன். கூடவே இந்த சல்மா மேட்டரும் ஞாபகத்துக்கு வந்து தொலைய.. அதையும் சொல்லிவிட்டேன். “ஸார்.. 'குமுதம் ஜங்ஷன்' பத்திரிகைல சல்மா உங்களைப் பத்தி எழுதியிருக்காங்க..” என்றேன்.. “சல்மாவா? யார் அது..?” என்றார் மனுஷ். பேயறைந்தது போலானது எனக்கு..!

“உங்களுக்கு சிஸ்டராம்ல ஸார்.. எஸ்.ரா. சொன்னாரு..” என்று இழுத்தேன்..! அவரது அக்மார்க் இழுப்பு சிரிப்பை வலுக்கட்டாயமாகக் கொண்டு வந்து நிறுத்தி, “இல்லை சரவணன்.. சல்மான்னு எனக்கு யாரையுமே தெரியாது..” என்றார். என்ன பேசுவது என்றே தெரியாமல் அவரது கண்களைப் பார்த்தபடியே இருந்தேன். மீண்டும் சொன்னார் மனுஷ், “நிஜமா சரவணன்.. என் வாழ்க்கைல சல்மான்ற பேரு உள்ளவங்களை நான் சந்திச்சதே இல்லை..” என்றார் திடமாக..! இதற்கு மேலும் அவரிடம் பேச எதுவுமி்ல்லை என்று எழுந்து வந்தேன்.

வெளியில் புல்தரையோரம் ஒரு கேடு கெட்ட முட்டாள் தோற்றத்தில் நான் அமர்ந்திருந்தபோது கிழக்கு பதிப்பகத்தின் முன்னாள் ஆசிரியர் அண்ணன் ஏ.ஆர்.குமார் அங்கே வந்தார். “என்னடா தம்பி.. தனியா உக்காந்திருக்க..? என்ன விஷயம்..?” என்று கேட்டவரிடம் 'உயிர்மை' ஸ்டாலில் நடந்ததைச் சொன்னேன்.. தலையில் அடித்துக் கொண்டார் குமார். “உன்னை யாருடா போய் கேக்கச் சொன்னது..? அவங்க ரெண்டு பேருக்கும் சண்டைடா.. பேசிக்க மாட்டாங்கடா..” என்றார். “பேசிக்கலைன்னா என்ன பிரதர்..? இவரும் கவிஞர். அந்தம்மாவும் கவிஞர்தான்.. இதுல அக்கா, தம்பி வேற.. தெரியும்ன்னு சொல்லிட்டுப் போயிரலாம்ல. பெரிய பத்திரிகைக்கு ஆசிரியரால்ல இருக்காரு..” என்றேன். “எல்லாரும் ஒரே மாதிரியாவா இருப்பாங்க.. விடு.." என்றார் குமாரண்ணன்..

ஆனாலும் மனசு ஆறவில்லை..! சில நாட்கள் கழித்து எஸ்.ரா.வை அவரது வீட்டில் சந்தித்து இதைப் பற்றி சற்று கோபத்துடனேயே பேசினேன்.. “இவரெல்லாம் எப்படி ஸார் கவிஞரானார்..? எப்படி ஸார் பத்திரிகை ஆசிரியரா சொல்ல முடியும்..?” என்றேன்.. சிரித்தே மழுப்பிவிட்டார் எஸ்.ரா. “அது அப்படித்தான் சரவணன். ஒருத்தருக்கு ஒரு விஷயம் பிடிக்கும். இன்னொருத்தருக்கு இன்னொரு விஷயத்தைப் பத்திப் பேசினாலே பிடிக்காது. மைண்ட்ல வைச்சுக்கவே கூடாதுன்னு நினைப்பாங்க.. அதுனால சொல்லியிருப்பாரு. அதுலேயும் மனுஷுக்கு சின்ன வயசு.. இப்போ அப்படித்தான் இருப்பாரு. விடுங்க..” என்று சொல்லி முடித்துவிட்டார் பஞ்சாயத்தை..!

ஒரு பத்திரிகையின் ஆசிரியராக இருப்பவர், மற்றவர்களுக்கு முன் உதாரணமாக, ஏதாவது ஒரு விஷயத்தில், அந்தப் பத்திரிகையின் உள்ளடக்கத்திற்கு ஏற்றவாறு குருவாக, சொல்லிக் கொடுக்கும் ஆசிரியராக இருக்க வேண்டாமா என்ற என்னுடைய கோபம் இன்றுவரையிலும் அவர் மீது தீரவில்லை..! 

“சங்கரை எனக்குத் தெரியும் சரவணன். ஆனா இப்போ எங்களுக்கிடையே பேச்சுவார்த்தை இல்லை. கொஞ்சம் பிரச்சினை..” - இப்படி இரண்டு வரிகளில் சொல்லிவிட்டால் போகிறது. என்ன ஆகிவிடும்..?

“சல்மா என் அக்காதான். இப்போ வேற முகாம்ல இருக்காங்க.. அவ்ளோதான்..” என்று சொல்லியிருந்தால் மனுஷ் எதிலும் குறைந்து போயிருக்க மாட்டாரே..!

தலையங்கத்தில் இந்தியாவுக்கே அறிவுரை சொல்லும் அளவுக்கு வார்த்தைகளைக் கொட்டி வருபவருக்கு இந்த வார்த்தைகளா கிடைக்காது..? தனி மனித விருப்பு வெறுப்புகள் எதுவுமின்றி எவனும் இங்கே, எதற்கும் ஆசானாக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முடியாது என்பதை இந்தச் சம்பவங்களே எனக்கு இத்தனையாண்டுகள் கழித்து உணர்த்தியிருக்கின்றன..!

இலக்கியம், எளக்கியம் ஆனதற்கும் இது போன்ற பப்பரப்பா ஆசிரியர்களும் ஒருவகையிலும் காரணமாகியிருக்கிறார்கள் என்பதை அவர்களாவது புரிந்து கொள்ளட்டும்..!

இதனை இத்தனை நாட்களாக எழுத வேண்டாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் நேற்று இரவு மனுஷ்யபுத்திரன் தனது பேஸ்புக் முகப் பக்கத்தில் எழுதியிருந்த இந்தச் செய்தியைப் பார்த்தவுடன் எழுதியே தீர வேண்டும் என்று தோன்றிவிட்டது..!

“இன்று புத்தக கண்காட்சியில் உயிர் எழுத்து ஸ்டாலில் வைத்து கவிஞர் சங்கர் ராமசுப்ரமணியனுக்கும், வசுமித்திரா என்பவருக்கும் தேவதச்சன் கவிதைகளை முன் வைத்து பயங்கர அடிதடியாம். சங்கருக்கு ஃபோன் செய்து கேட்டேன். பரஸ்பரம் அடித்துக் கொண்டதில் கடைசியில் வசுமித்திரா தனது கட்டை விரலை கடித்து விட்டதாகவும் டாக்டர் வீட்டில் ரத்தம் வடியும் விரலுடன் உட்கார்திருப்பதாகவும் தெரிவித்தார்(ன்). நல்லவேளை ’விரலோடு’ போயிற்று. இல்லாவிட்டால் என்னாவது என்று ஆறுதல் கூறினேன். தமிழுக்காக ரத்தம் சிந்துவது என்றுதான் நிற்குமோ தெரியவில்லை…!”

உயிர்மையின் இத்தனையாண்டு கால வாசகனாக, பணம் கொடுத்து வாங்கிப் படித்த ஒரு ஏமாளியாகக் கேட்கிறேன்..! 

உயிர்மை என்னும் இலக்கிய பத்திரிகையின் மதிப்பிற்குரிய ஆசிரியப் பெருமகனார் திரு.மனுஷ்யபுத்திரன், போன் செய்து பேசிய அந்த கவிஞர் சங்கர் ராமசுப்பிரமணியனை மகாபுருஷர், ஆசிரியர் மனுஷ்யபுத்திரனுக்கு எப்படி... எத்தனையாண்டுகளாகத் தெரியுமாம்..?

யாராச்சும் கேட்டுச் சொல்றீங்களா..?

77 comments:

  1. எல்லா பிரபலமும் சூரியன் போல.. கிட்டே போனால் அதன் சூடு சுட்டெரிக்கும். கொஞ்சம் தூரத்திலேயே இருந்து வரும் வெளிச்சத்தையும் இளம் சூட்டையும் அனுபவிக்க வேண்டும்!

    ReplyDelete
  2. செருப்படி பதிவுணே....

    “ வசுமித்திரா என்பவருக்கும்” என அவரை தெரியாதது போல எழுதி இருக்கிறாரே... அதுவும் துரோகம்தான். அவரும் மனுஷுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார் என்பது வரலாறு

    ReplyDelete
  3. மனுஷும், சல்மா என்ற ரொக்கையா மாலிக்கும் ஒரே கூடாரத்தில் (கனிமொழி அக்கா வின் கூடாரம்) தானே இருந்தார்கள் (இருக்கிறார்கள்)

    எப்போது எதிர் கூடாரம் மாறினார்கள்

    ReplyDelete
  4. எப்போது எதிர் கூடாரம் மாறினார்கள்"

    ஆட்சி மாறியதும் கூடாரத்தை மாற்றிக்கொண்டார் மனுஷ்

    ReplyDelete
  5. எப்போது எதிர் கூடாரம் மாறினார்கள்"

    ஆட்சி மாறியதும் கூடாரத்தை மாற்றிக்கொண்டார் மனுஷ்

    ReplyDelete
  6. உண்மைத்தமிழனா? யாரு பாஸ் அவரு? அந்த மாதிரி ஒருத்தர எனக்கு தெரியவே தெரியாதே...

    ReplyDelete
  7. சில நேரங்களில்
    சில பெரிய மனிதர்கள்.
    தங்களுக்காக - அவர்களைத் தவிர - யாரை வேண்டுமானாலும் காவு கொடுப்பார்கள்.

    ReplyDelete
  8. மனுஷ பற்றிய மற்றொரு அவதூறு.. இலக்கியவாதியை இலக்கியத்தால் எதிர்கொள்வதே சரியாக இருக்கும். அவரது தனிப்பட்ட நட்பு பற்றி நமக்கு என்ன கவலை. இது எப்படி ஒரு பொது விவாதமாக முடியும்?

    தயவு செய்து அவர் எழுதிய ஏதாவது ஒரு விஷயம் பற்றி விமர்சனம் எழுதுங்கள். உங்களால் முடிந்தால்

    ReplyDelete
  9. அம்மா அப்பாவோட சண்டை போட்டுட்டு, அப்புறம் அம்மா அப்பாவே யார்னு கேட்டுட போறாரு..

    ReplyDelete
  10. இறுமாப்பும் கர்வமும் இலக்கியவாதிகளின் அடையாளம் என்று இந்த மனுஷ் நினைத்திருப்பார் உண்மைகள் தமிழா ...விடுங்க பாஸ் .....இலக்கியத்தில் இதெல்லாம் சகஜம்தானே

    ReplyDelete
  11. என் டைப்பிங் ஸ்பீடை பார்த்து என்னமா பேசியிருக்காரு..?

    உன் ஸ்பீடப் பத்தி பேசாட்டி தாண்ணே ஆச்சரியம்

    ReplyDelete
  12. “சங்கரை எனக்குத் தெரியும் சரவணன். ஆனா இப்போ எங்களுக்கிடையே பேச்சுவார்த்தை இல்லை. கொஞ்சம் பிரச்சினை..” - இப்படி இரண்டு வரிகளில் சொல்லிவிட்டால் போகிறது. என்ன ஆகிவிடும்..?

    “சல்மா என் அக்காதான். இப்போ வேற முகாம்ல இருக்காங்க.. அவ்ளோதான்..” என்று சொல்லியிருந்தால் மனுஷ் எதிலும் குறைந்து போயிருக்க மாட்டாரே..!
    //

    ஆச தோச... அப்புறம் மனுசனுக்கும் எயகியவாதிக்கும் வித்தியாசம் வேணாம்

    ReplyDelete
  13. //கவிஞர் சங்கர் ராமசுப்ரமணியனுக்கும், வசுமித்திரா என்பவருக்கும் தேவதச்சன் கவிதைகளை முன் வைத்து பயங்கர அடிதடியாம்.//

    சரவனான்னே நீ எதுக்கும் சூதானமா இருன்னே. காலம் கெட்டுக் கெடக்கு

    ReplyDelete
  14. // ...யாரையுமே தெரியாது சரவணன்..//

    யாரு தல சரவணன்?...அப்படி ஒருத்தர எனக்கு தெரியவே தெரியாதே...

    ReplyDelete
  15. அவரது தனிப்பட்ட நட்பு பற்றி நமக்கு என்ன கவலை. இது எப்படி ஒரு பொது விவாதமாக முடியும்?"

    அவர் யாருடன் பழகுகிறார் என்பது பொது விவாதாமாக முடியாது.. ஆனால் நன்கு தெரிந்த ஒருவரை, தெரியாதது போல பாசாங்கு செய்து விட்டு, நேர்மையப்பற்றி எழுவதால்தான் இது பொது பிரச்சினை ஆகிறது

    ReplyDelete
  16. ம்.... தேர இழுத்து தெருவுல விட்டாச்சா???? அப்படியே சாருவுக்கு ஃபார்வர்ட் பண்ணுனா உடனே அவரு பிளாக்ல லிங்க் குடுத்துடுவாரு.....

    ReplyDelete
  17. நகைச்சுவையான பதிவு. வாசிப்பு நெடுகிலும் சிரித்து மாளவில்லை. இப்போது 'காவல் கோட்டம்' சாகிதித்ய அகாடமி விருது பெற்றதைப் பொறுக்கமுடியாமலும் மனுஷ்யபுத்ரன் பொருமுகிறார் என்று கேள்விப் பட்டேன்.

    கவிஞர் என்றால் விடுதலை வந்து கூடியிருக்க வேண்டும். என்ன செய்ய, வணிகச் சந்தையில் சிக்கிக்கொண்டார், அளியர், புரிந்துகொள்ளுங்கள்!

    ReplyDelete
  18. ஒரு விதத்தில் அவரு பொய் சொல்லவில்லை. வெறுப்பின் உச்சத்தில் தாங்கமுடியமலோ அல்லது மேலும் அவர்களை வெறுக்க வேண்டாம் எனபதாலோ அவர்
    தன்னையே அவர்களை தெரியாது என நம்ப வைத்துகொள்ளுகிறார் என நினைக்கிறேன். அதாவது அவரு உம்மை மட்டும் ஏமாற்றவில்லை... தன்னைதானே ஏமாற்றிக் கொள்ளுகிறார். இதனையே Self-deception என மனவியலார் விளிக்கிறார்கள்.

    ReplyDelete
  19. இவர்கள் ஊருக்கு உபதேசம் செய்வோர்.
    இது நித்தி பிரமச்சரியம் பற்றிப் போதித்ததற்கு ஒப்பானது.
    தாங்களும் சாதாரணமானோர் என்கிறார்கள் இவர்கள்.
    நாம் ஒளிவட்டம் சூட்டுகிறோம்.

    ReplyDelete
  20. சில நேரங்களில்
    சில மனிதர்கள்!
    இப்படித்தான்! அவரும் அதில்
    ஒன்றானார்!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  21. ஒரு இலக்கியவாதியிடம் நட்பு கிடைத்தவுடன், அவரிடம் இலக்கியம் பற்றி பேசுவதை விட்டுவிட்டு அவரைத் தெரியுமா இவரைத் தெரியுமா எனக் கேட்ப்பது சிறுபிள்ளைத் தனமாகத் தெரியவில்லையா?

    ReplyDelete
  22. பறக்கும் குதிரை அவர்களே,
    இலக்கியவாதி என்பவர் இலக்கியவாதி மட்டுமே அல்ல. அவரது பல முகங்களில் அதுவும் ஒன்று. அதாவது, அவர் வணிகராகவும், நண்பராகவும், ஆசிரியராகவும், மகனாகவும், கவிஞராகவும் இன்னும் இன்னபிறவாகவும் இருக்கிறார். சரவணன், மனுஷ் மற்றும் கட்டுரையில் சொல்லப்பட்டோர் வணிக நோக்குடன் இணைந்திருக்கின்றனர்.. அதோடு நட்பையும் பரிமாறிக்கொண்டிருக்கின்றனர். எனவே, சரவணன் கேட்டதில் நியாயம் இருக்கிறது. அதற்கு எப்படிப்பட்ட பதில் அளிப்பது என்பது மனுஷ் அவர்களின் சுதந்திரம் சார்ந்தது என்றாலும், சரவணனுடனான நட்பினை மனதில் கொண்டு, "அவர்களுடன் கொஞ்சம் பிரச்சினை. விலகி இருக்கிறேன். அதைப் பற்றிப் பேச வேண்டாமே!" என்று கூறியிருக்கலாம். அவ்வளவுதான்! ஆக, எல்லா மனிதர்களும் பழகுதல் அடிப்படையில் கிட்டத்தட்ட ஒன்றுதான். எல்லாரும் சராசரி மனிதர்கள்தாம்!!

    ReplyDelete
  23. அண்ணே வடிவேலு பாணியில உங்களை நீங்களே கேட்டுக்குங்க....”உனக்கு இது தேவையான்னு”.......................................................................... இன்னும் பச்ச புள்ளயாவே இருக்கீங்க அண்ணே...................ஹிஹிஹிஹீஹிஹிஹீ........))))))))))))))))))))

    ReplyDelete
  24. I used to read ur blog. After reading your article i felt bad about Manush. My opinion the people who becomes popular especially in Cine field & Politics their behavior will be cutthroat.Heave sake do not carry good opinion about them

    ReplyDelete
  25. கேட்டுடேங்க......

    யார் யாருக்கோ வர்ற 'selective amnesia' எனக்கு மட்டும் வரதா? ங்கறார்.

    -------------------------
    தறுதலை
    (தெனாவெட்டுக் குறிப்புகள் - ஜன 2012)

    ReplyDelete
  26. bandhu said...
    எல்லா பிரபலமும் சூரியன் போல.. கிட்டே போனால் அதன் சூடு சுட்டெரிக்கும். கொஞ்சம் தூரத்திலேயே இருந்து வரும் வெளிச்சத்தையும் இளம் சூட்டையும் அனுபவிக்க வேண்டும்!


    //

    ரிப்பீட்டு.

    ReplyDelete
  27. [[[bandhu said...

    எல்லா பிரபலமும் சூரியன் போல.. கிட்டே போனால் அதன் சூடு சுட்டெரிக்கும். கொஞ்சம் தூரத்திலேயே இருந்து வரும் வெளிச்சத்தையும் இளம் சூட்டையும் அனுபவிக்க வேண்டும்!]]]

    இதற்குப் பின்பு இப்போதுவரையிலும் இப்படித்தான் இருக்கிறேன்..!

    ReplyDelete
  28. [[[பார்வையாளன் said...

    செருப்படி பதிவுணே....

    “வசுமித்திரா என்பவருக்கும்” என அவரை தெரியாதது போல எழுதி இருக்கிறாரே... அதுவும் துரோகம்தான். அவரும் மனுஷுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார் என்பது வரலாறு.]]]

    பார்வை.. உங்களது வசதிக்காக இந்தப் பதிவை கையாளாதீர்கள்..!

    வசுமித்ராவை அப்படிச் சுட்டிக் காட்டியதுகூட ஒருவகையில் அவரது வழக்கமான கோப மனப்பான்மையைக் காட்டுகிறது..!

    ReplyDelete
  29. [[[ராம்ஜி_யாஹூ said...

    மனுஷும், சல்மா என்ற ரொக்கையாமாலிக்கும் ஒரே கூடாரத்தில்(கனிமொழி அக்காவின் கூடாரம்)தானே இருந்தார்கள் (இருக்கிறார்கள்) எப்போது எதிர் கூடாரம் மாறினார்கள்..?]]]

    உயிர்மை ஆரம்பித்ததில் இருந்தே இப்படித்தானாம்..! கனிமொழிக்கான நட்பில் இருவரும் ஒரு காலத்தில் சம அளவில்தான் இருந்தார்கள். பிற்காலத்தில் சல்மா தி.மு.க.வில் உறுப்பினராக, மனுஷ் நடுநிலைமையாளராக உருமாறிவிட்டார்..!

    ReplyDelete
  30. [[[பார்வையாளன் said...

    எப்போது எதிர் கூடாரம் மாறினார்கள்"

    ஆட்சி மாறியதும் கூடாரத்தை மாற்றிக் கொண்டார் மனுஷ்.]]]

    அதற்கு முன்பேயே அப்படித்தான் பார்வை..!

    ReplyDelete
  31. [[[V.Radhakrishnan said...

    Educated people.]]]

    இல்லை. நம்மைப் போன்ற சாதா மக்கள்ஸ்தான்..!

    ReplyDelete
  32. [[[ammuthalib said...

    உண்மைத்தமிழனா? யாரு பாஸ் அவரு? அந்த மாதிரி ஒருத்தர எனக்கு தெரியவே தெரியாதே...]]]

    உண்மைத்தமிழனை மனுஷ்யபுத்திரனுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை..!

    ஆனால் சரவணனை நன்கு நியாபகம் இருக்கும்..!

    ReplyDelete
  33. [[[Rathnavel said...

    சில நேரங்களில்
    சில பெரிய மனிதர்கள்.
    தங்களுக்காக - அவர்களைத் தவிர - யாரை வேண்டுமானாலும் காவு கொடுப்பார்கள்.]]]

    இவர்கள் வணிகர்கள்தான் என்பதை நாம்தான் புரிந்து கொள்ள வேண்டும்..!

    ReplyDelete
  34. [[[பறக்கும் குதிரை said...

    மனுஷ பற்றிய மற்றொரு அவதூறு.. இலக்கியவாதியை இலக்கியத்தால் எதிர்கொள்வதே சரியாக இருக்கும். அவரது தனிப்பட்ட நட்பு பற்றி நமக்கு என்ன கவலை. இது எப்படி ஒரு பொது விவாதமாக முடியும்?]]]

    அவரை ஒரு பத்திரிகை ஆசிரியராகப் நான் பார்த்ததினால் வந்த வினை..!

    [[[தயவு செய்து அவர் எழுதிய ஏதாவது ஒரு விஷயம் பற்றி விமர்சனம் எழுதுங்கள். உங்களால் முடிந்தால்]]]

    எழுதிட்டாப் போச்சு..!

    ReplyDelete
  35. [[[ILA(@)இளா said...

    :))]]]

    ஆத்தாடி.. எம்புட்டு பெரிய பின்னூட்டம்..?

    ReplyDelete
  36. [[[Ibnu Shakir said...

    அம்மா அப்பாவோட சண்டை போட்டுட்டு, அப்புறம் அம்மா அப்பாவே யார்னு கேட்டுட போறாரு..]]]

    இந்த அளவுக்கு யோசிக்கணுமா ஸார்..? எனக்குத் தப்பாத் தோணுது..!

    ReplyDelete
  37. [[[ஸ்ரீகாந்த் said...

    இறுமாப்பும் கர்வமும் இலக்கியவாதிகளின் அடையாளம் என்று இந்த மனுஷ் நினைத்திருப்பார் உண்மைகள் தமிழா. விடுங்க பாஸ். இலக்கியத்தில் இதெல்லாம் சகஜம்தானே]]]

    இலக்கியத்தில் இல்லை.. எளக்கியவியாதிகளிடையே இது சகஜம்..!

    ReplyDelete
  38. [[[அக்கப்போரு said...

    என் டைப்பிங் ஸ்பீடை பார்த்து என்னமா பேசியிருக்காரு..?

    உன் ஸ்பீடப் பத்தி பேசாட்டிதாண்ணே ஆச்சரியம்..]]]

    ஹி.. ஹி.. அப்பவே அப்படித்தாண்ணே..!

    ReplyDelete
  39. [[[அக்கப்போரு said...

    “சங்கரை எனக்குத் தெரியும் சரவணன். ஆனா இப்போ எங்களுக்கிடையே பேச்சுவார்த்தை இல்லை. கொஞ்சம் பிரச்சினை..” - இப்படி இரண்டு வரிகளில் சொல்லிவிட்டால் போகிறது. என்ன ஆகிவிடும்..?

    “சல்மா என் அக்காதான். இப்போ வேற முகாம்ல இருக்காங்க.. அவ்ளோதான்..” என்று சொல்லியிருந்தால் மனுஷ் எதிலும் குறைந்து போயிருக்க மாட்டாரே!//

    ஆச தோச... அப்புறம் மனுசனுக்கும் எயகியவாதிக்கும் வித்தியாசம் வேணாம்.]]]

    ம்.. எனக்கும் தோணுச்சு..! நன்னி..!

    ReplyDelete
  40. [[[அக்கப்போரு said...

    //கவிஞர் சங்கர் ராமசுப்ரமணியனுக்கும், வசுமித்திரா என்பவருக்கும் தேவதச்சன் கவிதைகளை முன் வைத்து பயங்கர அடிதடியாம்.//

    சரவனான்னே நீ எதுக்கும் சூதானமா இருன்னே. காலம் கெட்டுக் கெடக்கு..]]]

    ஹா.. ஹா.. பார்த்துக்கிடலாம்..!

    ReplyDelete
  41. [[[எஸ்.ஏ.சரவணக்குமார் said...

    //யாரையுமே தெரியாது சரவணன்..//

    யாரு தல சரவணன்?... அப்படி ஒருத்தர எனக்கு தெரியவே தெரியாதே...?]]]

    நேத்து அப்படித்தான் கேட்டாராம்..! வளர்ந்துட்டாருல்ல.. அதான்..!

    ReplyDelete
  42. [[[பார்வையாளன் said...

    அவரது தனிப்பட்ட நட்பு பற்றி நமக்கு என்ன கவலை. இது எப்படி ஒரு பொது விவாதமாக முடியும்?"
    அவர் யாருடன் பழகுகிறார் என்பது பொது விவாதாமாக முடியாது.. ஆனால் நன்கு தெரிந்த ஒருவரை, தெரியாதது போல பாசாங்கு செய்து விட்டு, நேர்மையப் பற்றி எழுவதால்தான் இது பொது பிரச்சினை ஆகிறது.]]]

    ம்.. ம்.. ம்...!

    ReplyDelete
  43. [[[வழிப்போக்கன் - யோகேஷ் said...

    ம்.... தேர இழுத்து தெருவுல விட்டாச்சா???? அப்படியே சாருவுக்கு ஃபார்வர்ட் பண்ணுனா உடனே அவரு பிளாக்ல லிங்க் குடுத்துடுவாரு.]]]

    தேவையா எனக்கு..?

    ReplyDelete
  44. [[[rajasundararajan said...

    நகைச்சுவையான பதிவு. வாசிப்பு நெடுகிலும் சிரித்து மாளவில்லை. இப்போது 'காவல் கோட்டம்' சாகிதித்ய அகாடமி விருது பெற்றதைப் பொறுக்க முடியாமலும் மனுஷ்யபுத்ரன் பொருமுகிறார் என்று கேள்விப்பட்டேன்.]]]

    எழுத்தாளரின் சின்ன வயதில், ஒரேயொரு புத்தகம் எழுதியுள்ள நிலையில் கொடுத்துவிட்டார்களே என்பதைத்தான் ஆதங்கமாகக் கொட்டுகிறார்.. சிரிப்பாய்த்தான் இருக்கிறது..!

    [[[கவிஞர் என்றால் விடுதலை வந்து கூடியிருக்க வேண்டும். என்ன செய்ய, வணிகச் சந்தையில் சிக்கிக் கொண்டார், அளியர், புரிந்து கொள்ளுங்கள்!]]]

    புரிந்து கொண்டேன்.. இவர் ஒரு தலை சிறந்த வணிகர் என்று..!

    ReplyDelete
  45. [[[நந்தவனத்தான் said...

    ஒரு விதத்தில் அவரு பொய் சொல்லவில்லை. வெறுப்பின் உச்சத்தில் தாங்க முடியமலோ அல்லது மேலும் அவர்களை வெறுக்க வேண்டாம் எனபதாலோ அவர்
    தன்னையே அவர்களை தெரியாது என நம்ப வைத்து கொள்ளுகிறார் என நினைக்கிறேன். அதாவது அவரு உம்மை மட்டும் ஏமாற்றவில்லை. தன்னைதானே ஏமாற்றிக் கொள்ளுகிறார். இதனையே Self-deception என மனவியலார் விளிக்கிறார்கள்.]]]

    ஓ.. இப்படியும் சொல்லலாமோ..?

    ReplyDelete
  46. [[[யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

    இவர்கள் ஊருக்கு உபதேசம் செய்வோர்.
    இது நித்தி பிரமச்சரியம் பற்றிப் போதித்ததற்கு ஒப்பானது.
    தாங்களும் சாதாரணமானோர் என்கிறார்கள் இவர்கள்.
    நாம் ஒளிவட்டம் சூட்டுகிறோம்.]]]

    இது தவறுதானே..?

    ReplyDelete
  47. [[[புலவர் சா இராமாநுசம் said...

    சில நேரங்களில்
    சில மனிதர்கள்!
    இப்படித்தான்! அவரும் அதில்
    ஒன்றானார்!]]]

    எல்லாரும் இப்படித்தானோ..?

    ReplyDelete
  48. [[[பறக்கும் குதிரை said...

    ஒரு இலக்கியவாதியிடம் நட்பு கிடைத்தவுடன், அவரிடம் இலக்கியம் பற்றி பேசுவதை விட்டுவிட்டு அவரைத் தெரியுமா..? இவரைத் தெரியுமா எனக் கேட்ப்பது சிறுபிள்ளைத்தனமாகத் தெரியவில்லையா?]]]

    தெரியவில்லை. உயிர்மையின் தீவிரமான வாசகன் நான். உயிர்மை எனக்கு பல புதிய விஷயங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறது. நான் இல்லை என்று சொல்லவில்லை.. ஆனாலும் ஆசிரியர் என்கிற முறையில் நான் எதிர்பார்த்த ஆசிரியப் பணி மனுஷ்யபுத்திரனிடம் இல்லாமல் போனது என்பதுதான் எனது குறைபாடு.. அவ்வளவே..!

    ReplyDelete
  49. [[[ரிஷி said...

    பறக்கும் குதிரை அவர்களே,
    இலக்கியவாதி என்பவர் இலக்கியவாதி மட்டுமே அல்ல. அவரது பல முகங்களில் அதுவும் ஒன்று. அதாவது, அவர் வணிகராகவும், நண்பராகவும், ஆசிரியராகவும், மகனாகவும், கவிஞராகவும் இன்னும் இன்ன பிறவாகவும் இருக்கிறார். சரவணன், மனுஷ் மற்றும் கட்டுரையில் சொல்லப்பட்டோர் வணிக நோக்குடன் இணைந்திருக்கின்றனர்.. அதோடு நட்பையும் பரிமாறிக் கொண்டிருக்கின்றனர். எனவே, சரவணன் கேட்டதில் நியாயம் இருக்கிறது. அதற்கு எப்படிப்பட்ட பதில் அளிப்பது என்பது மனுஷ் அவர்களின் சுதந்திரம் சார்ந்தது என்றாலும், சரவணனுடனான நட்பினை மனதில் கொண்டு, "அவர்களுடன் கொஞ்சம் பிரச்சினை. விலகி இருக்கிறேன். அதைப் பற்றிப் பேச வேண்டாமே!" என்று கூறியிருக்கலாம். அவ்வளவுதான்! ஆக, எல்லா மனிதர்களும் பழகுதல் அடிப்படையில் கிட்டத்தட்ட ஒன்றுதான். எல்லாரும் சராசரி மனிதர்கள்தாம்!!]]]

    வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி ரிஷி..!

    ReplyDelete
  50. [[[அத்திரி said...

    அண்ணே வடிவேலு பாணியில உங்களை நீங்களே கேட்டுக்குங்க....”உனக்கு இது தேவையான்னு”.......................................................................... இன்னும் பச்ச புள்ளயாவே இருக்கீங்க அண்ணே...................ஹிஹிஹிஹீஹிஹிஹீ........))))))))))))))))))))]]]

    விதி.. வேறென்ன சொல்றது..?

    ReplyDelete
  51. [[[ravikumar said...

    I used to read ur blog. After reading your article i felt bad about Manush. My opinion the people who becomes popular especially in Cine field & Politics their behavior will be cut throat. Have sake do not carry good opinion about them.]]]

    எல்லோரும் அப்படியில்லை. ஆனால் இல்லாதவர்களைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது..! சொற்பம்..!

    ReplyDelete
  52. [[[தறுதலை said...

    கேட்டுடேங்க.

    யார் யாருக்கோ வர்ற 'selective amnesia' எனக்கு மட்டும் வரதாங்கறார்.

    -------------------------
    தறுதலை
    (தெனாவெட்டுக் குறிப்புகள் - ஜன 2012)]]]

    நன்றிகள் அண்ணே..! அத்வானியோடு போய்த் தொலையட்டும் என்று நினைத்தால் இந்த வியாதி இலக்கியவியாதிகளுக்கும் தொற்றிவிட்டதா..?

    ReplyDelete
  53. [[[எம்.எம்.அப்துல்லா said...

    bandhu said...

    எல்லா பிரபலமும் சூரியன் போல.. கிட்டே போனால் அதன் சூடு சுட்டெரிக்கும். கொஞ்சம் தூரத்திலேயே இருந்து வரும் வெளிச்சத்தையும் இளம் சூட்டையும் அனுபவிக்க வேண்டும்!//

    ரிப்பீட்டு.]]]

    அப்பாடா.. அப்துல் அண்ணன் பார்வையிலதான் நாம இருக்கோம். நெஞ்சுக்கு நிம்மதி..!

    ReplyDelete
  54. மனுசனே அப்பப்ப அப்புடி இப்புடின்னு தான் இருக்கான். இவரு மனுச புத்திரன் எப்புடியோ இருந்துட்டுப் போறாரு விடுங்க...

    நீங்களே காயின் போன்ல ஒத்த ரூபா போட்டு சரவணன்னு ஒருத்தர் ஒங்க ஆபீசுல டைப்பு கிய்ப்பு எல்லாம் அடிச்சு குடுத்து ஒதவி எல்லாம் செஞ்சாராமே.... அவரு ஒங்களப்பத்தி இப்புடி இப்புடி ஒரு பதிவு போட்ருக்காரேன்னு கேளுங்க... சரவணன்ங்கிற பேரை வாழ்க்கையில் மொத வாட்டி இப்பத்தான் கேள்விப்பட்றேன் அப்புடிம்பாரு...

    சொந்த அக்காவயே தெரியாதுன்னு சொல்லிட்டாராம்.... அவருகிட்ட போயி இதுக்கெல்லாம் பீலிங்கி பட்டீங்கன்னா அப்புறம் மனுச வாழ்க்கை என்னத்த.....

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  55. உ.த -- எனக்கு உங்க எழுத்தை தொடர்ந்து வாசிக்கும் பொழுது ஓர் ஆச்சர்யம் மட்டும் தொக்கி நிக்கிது. ஆமா, எப்படி நீங்க சென்னையில பொழைச்சிக் கெடக்கிறீங்க? :)) ...

    ReplyDelete
  56. அண்ணை ரொம்ப சூடா இருக்கீங்க போல. நான் சொல்ல வந்தது என்னவெனில் சொந்த அக்காளையே தெரியாது என்று ஒருவர் சொல்கிறார் என்றால் அவருக்கு ஏதாவது மனநிலை குறைபாடு அல்லது மனோவியாதி இருப்பதற்கே வாய்ப்பு அதிகம், . அவரு மனுசபுத்திரன்தானே... தெய்வகுமாரன் இல்லையே. அகிம்சையை போதித்த காந்தியே பொண்டாட்டியை அடித்தவர்தான். மார்டன் மனோவியலின் தந்தை என போற்றப்படும் ஃபிராய்டுக்கும் மனநலகுறைபாடுகள் உண்டு. மற்றபடி மனசபுத்திரனுக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அவரின் மீதான உமது கோபத்தை குறைக்கவே இதனை எழுதினேன் மற்றபடி நான் அவரின் மனோநிலை பற்றி பொதுவிடத்தில் எழுதுவது தவறுதான்.

    ReplyDelete
  57. கடந்த புத்தகக் கண்காட்சியின் இங்கே சவூதியிலிருந்து போன நண்பர் ஒருவர் ஸ்டால் வாசலில் மனுஷ் அமர்ந்திருக்கக் கண்டு முகமன் கூறி "சவூதிலேர்ந்து வாறேன், உங்க கவிதைகளை விரும்பிப் படிப்பேன்" என்று சொன்னதற்கு
    மனுஷ் "சவூதில கவிதைலாமா விரும்பிப் படிக்கிறீங்க?" என்று 'விரை'த்த கடா போல கேட்க, "போடாங்.." என்று நினைத்துக்கொண்டு நண்பர் திரும்பிவிட்டாராம்.

    யு ஹேவ் அ பாயிண்ட் மிஸ்டர் சரவணன்

    ReplyDelete
  58. ரோமியோ என்ற பிரபலப் பதிவரும் உங்களின் வெறித்தனமான ரசிகரைக்கூட நீங்கள்

    யார் நீங்கள் எனக்குத் தெரியாதே என்று கேட்கவில்லையா?

    :))

    ReplyDelete
  59. [[[Arun Ambie said...
    மனுசனே அப்பப்ப அப்புடி இப்புடின்னுதான் இருக்கான். இவரு மனுச புத்திரன் எப்புடியோ இருந்துட்டுப் போறாரு விடுங்க...]]]

    சரி. விட்டர்றேன்..! எல்லாரும் மனுஷங்கதான..

    ReplyDelete
  60. [[[Thekkikattan|தெகா said...
    உ.த -- எனக்கு உங்க எழுத்தை தொடர்ந்து வாசிக்கும் பொழுது ஓர் ஆச்சர்யம் மட்டும் தொக்கி நிக்கிது. ஆமா, எப்படி நீங்க சென்னையில பொழைச்சிக் கெடக்கிறீங்க? :))]]]

    இதோ இப்படித்தான்.. அடிக்கடி அனுபவங்கள் பல பெற்று, பின்பு திருந்தி வாழ்க்கை முழுவதும் பாடம் கற்றுக் கொண்டேயிருக்கிறேன் தெகா..!

    ReplyDelete
  61. [[[நந்தவனத்தான் said...
    அண்ணை ரொம்ப சூடா இருக்கீங்க போல. நான் சொல்ல வந்தது என்னவெனில் சொந்த அக்காளையே தெரியாது என்று ஒருவர் சொல்கிறார் என்றால் அவருக்கு ஏதாவது மனநிலை குறைபாடு அல்லது மனோவியாதி இருப்பதற்கே வாய்ப்பு அதிகம், அவரு மனுசபுத்திரன்தானே... தெய்வகுமாரன் இல்லையே. அகிம்சையை போதித்த காந்தியே பொண்டாட்டியை அடித்தவர்தான். மார்டன் மனோவியலின் தந்தை என போற்றப்படும் ஃபிராய்டுக்கும் மனநலகுறைபாடுகள் உண்டு. மற்றபடி மனசபுத்திரனுக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அவரின் மீதான உமது கோபத்தை குறைக்கவே இதனை எழுதினேன் மற்றபடி நான் அவரின் மனோநிலை பற்றி பொதுவிடத்தில் எழுதுவது தவறுதான்.]]]

    நோ சூடு நந்தவனம்.. மனுஷ் ஏதோ கோபத்துல சொல்லியிருக்காருன்னு இப்பவும் எனக்குத் தெரியுது..! அதையும்தான் சேர்த்துச் சொல்லியிருக்கனே..!

    ReplyDelete
  62. [[[பாபு said...
    கடந்த புத்தகக் கண்காட்சியின் இங்கே சவூதியிலிருந்து போன நண்பர் ஒருவர் ஸ்டால் வாசலில் மனுஷ் அமர்ந்திருக்கக் கண்டு முகமன் கூறி "சவூதிலேர்ந்து வாறேன், உங்க கவிதைகளை விரும்பிப் படிப்பேன்" என்று சொன்னதற்கு மனுஷ் "சவூதில கவிதைலாமா விரும்பிப் படிக்கிறீங்க?" என்று 'விரை'த்த கடா போல கேட்க, "போடாங்.." என்று நினைத்துக்கொண்டு நண்பர் திரும்பி விட்டாராம்.

    யு ஹேவ் அ பாயிண்ட் மிஸ்டர் சரவணன்.]]]

    ம்.. எல்லாம் ஆசிரியர் தோற்றம் செய்யும் வேலை..!

    ReplyDelete
  63. [[[【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
    ரோமியோ என்ற பிரபலப் பதிவரும் உங்களின் வெறித்தனமான ரசிகரைக்கூட நீங்கள் யார் நீங்கள் எனக்குத் தெரியாதே என்று கேட்கவில்லையா?:))]]]

    பபாஷா.. நீ நல்லவனா.. கெட்டவனா..

    ReplyDelete
  64. எனக்கும் இந்த மேட்டருக்கும் சம்மந்தம் இல்லைன்னாலும் FB வழியா இதைப் படிச்சிட்டதால, என் மனசுல தோன்றும் சம்பவத்தை இங்கே எழுதிடுறேன்.

    காலம்: 19th ஜனவரி 2012
    இடம் - உயிர்மை அலுவலகம்
    நபர்கள்: ம.பு வும் இன்னொருவரும்

    இன்னொருவர்: சார்.. வணக்கம்...
    ம.பு: அடடே... சொல்லுங்க .. உங்களை எனக்கு நல்லா தெரியுமே?
    இ: ஒரு சந்தேகம் சார்...
    ம.பு : எதானாலும் தயங்காம கேளுங்க...
    இ: சார்... சரவணன்னு ஒருத்தர் உங்களைப் பத்தி எழுதிருக்காரே? அதெல்லாம் உண்மையா சார்?
    ம.பு : (நெற்றியை சுருக்குகிறார்....தேய்த்துக்கொள்கிறார்...வானத்தைப் பார்க்கிறார்...) - சரவணன்? இது ஒரு ஸ்பானிஷ் பேராச்சே? நம்ம ஊர்ல இந்தப் பேரை யாருக்கும் வேக்கமாட்டாங்களே?
    இ: சார் .....!!!! (அதிர்ச்சியடைந்து மயங்கி விழுகிறார்)
    ம.பு: மே கோன் ஹூ ? மே ககா ஹூ?

    ReplyDelete
  65. [[[கருந்தேள் கண்ணாயிரம் said...

    எனக்கும் இந்த மேட்டருக்கும் சம்மந்தம் இல்லைன்னாலும் FB வழியா இதைப் படிச்சிட்டதால, என் மனசுல தோன்றும் சம்பவத்தை இங்கே எழுதிடுறேன்.

    காலம்: 19th ஜனவரி 2012
    இடம் - உயிர்மை அலுவலகம்
    நபர்கள்: ம.பு வும் இன்னொருவரும்

    இன்னொருவர்: சார்.. வணக்கம்...
    ம.பு: அடடே... சொல்லுங்க .. உங்களை எனக்கு நல்லா தெரியுமே?
    இ: ஒரு சந்தேகம் சார்...
    ம.பு : எதானாலும் தயங்காம கேளுங்க...
    இ: சார்... சரவணன்னு ஒருத்தர் உங்களைப் பத்தி எழுதிருக்காரே? அதெல்லாம் உண்மையா சார்?
    ம.பு : (நெற்றியை சுருக்குகிறார்....தேய்த்துக்கொள்கிறார்...வானத்தைப் பார்க்கிறார்...) - சரவணன்? இது ஒரு ஸ்பானிஷ் பேராச்சே? நம்ம ஊர்ல இந்தப் பேரை யாருக்கும் வேக்கமாட்டாங்களே?
    இ: சார் .....!!!! (அதிர்ச்சியடைந்து மயங்கி விழுகிறார்)
    ம.பு: மே கோன் ஹூ ? மே ககா ஹூ?]]]

    ஓஹோ.. இதை உறுதிப்படுத்த இன்னிக்கு என்னை உயிர்மை ஆபீஸுக்கு போகச் சொல்றீங்க.. அப்படித்தானே..? நோ சான்ஸ் ராஜேஷ்..! எங்கிட்டாச்சும் நேர்ல பார்த்து பேசிக்கிறேன்..!

    வம்புன்னா ஓடி வர்றீங்க..? உசிரை கொடுத்து ஏதாவது எழுதினா படிச்சேன்னு கூட சொல்ல மாட்டேன்றீங்க.. ஏங்கண்ணே இப்படி?

    ReplyDelete
  66. //வம்புன்னா ஓடி வர்றீங்க..? உசிரை கொடுத்து ஏதாவது எழுதினா படிச்சேன்னு கூட சொல்ல மாட்டேன்றீங்க.. ஏங்கண்ணே இப்படி?//

    தலீவா... நீங்க மலை... நான் மண்.. நீங்க காட்டாறு.. நான் மழையின் ஒரு துளி... நீங்க சிங்கம்... நான் அசிங்கம்... நீங்க காட்சில்லா.... நான் எறும்பு.... அதான் கமென்ட் போட தயங்கி தயங்கி ஒரு ஓரமா என் கருத்தை பதிவு செஞ்சேன்.... இனி சொல்லிட்டீங்கல்ல.... 'மீ த ஃபர்ஸ்ட்' , 'சுடுசோறு எனக்குத்தான்', 'ஓட்ட வட எனக்குத்தான்', 'உங்கள் பதிவு படம் பார்க்க தூண்டுகிறது' , நல்ல பதிவு.. நன்றி உண்மைத்தமிழன்', 'நச்', 'பின்னிட்டீங்க', 'உங்கள் பதிவை படித்து தான் நான் மனுசனா மாறினேன்' இந்த ரீதில கமெண்டு அம்புகளை அள்ளி தொடுக்கப்போறேன்.... ரெடியா இருந்துக்கங்க :-) . .. ...

    ReplyDelete
  67. [[[The S c o r p said...
    //வம்புன்னா ஓடி வர்றீங்க..? உசிரை கொடுத்து ஏதாவது எழுதினா படிச்சேன்னு கூட சொல்ல மாட்டேன்றீங்க.. ஏங்கண்ணே இப்படி?//

    தலீவா... நீங்க மலை... நான் மண்.. நீங்க காட்டாறு.. நான் மழையின் ஒரு துளி... நீங்க சிங்கம்... நான் அசிங்கம்... நீங்க காட்சில்லா.... நான் எறும்பு.... அதான் கமென்ட் போட தயங்கி தயங்கி ஒரு ஓரமா என் கருத்தை பதிவு செஞ்சேன்.... இனி சொல்லிட்டீங்கல்ல.... 'மீ த ஃபர்ஸ்ட்' , 'சுடுசோறு எனக்குத்தான்', 'ஓட்ட வட எனக்குத்தான்', 'உங்கள் பதிவு படம் பார்க்க தூண்டுகிறது' , நல்ல பதிவு.. நன்றி உண்மைத்தமிழன்', 'நச்', 'பின்னிட்டீங்க', 'உங்கள் பதிவை படித்து தான் நான் மனுசனா மாறினேன்' இந்த ரீதில கமெண்டு அம்புகளை அள்ளி தொடுக்கப்போறேன்.... ரெடியா இருந்துக்கங்க :-)]]]

    இதுக்கு நாலு கெட்ட வார்த்தையிலாவது திட்டித் தொலைஞ்சிருக்கலாம்..!

    ReplyDelete
  68. [[[The S c o r p said...

    மீ த லாஸ்ட்]]]

    பேட் பாய்..!

    ReplyDelete
  69. This comment has been removed by the author.

    ReplyDelete
  70. அடப்பாவிகளா...இது 2012 ல வந்த பதிவு போல... தேடிப்பிடித்து லிங்க் கொடுக்கிற அளவுக்கு இங்க சில பேர் தீயா வேலை செய்யுறாங்கப்பா ...

    ஒரு பேஸ்புக் ஸ்டேடஸ் உங்களை தூண்டிவிட்டுருக்கிறது.

    அது போகட்டும் ... அவர் இருவரையும் உங்களிடம் மறைத்தது உங்களுக்கு வேண்டுமானால் அதிர்ச்சியாக இருக்கலாம்.இங்கு மற்றவர்கள் ஏன் காலில் வெந்நீரைக் கொட்டியதுபோல் துடிக்கிறார்கள்.பத்திரிகை துறையில் இருப்பவர்கள் எதையாவது சொல்லபோய் பிறகு அது பெரும் சண்டையில் முடிந்துவிடக் கூடாது என்பதற்காக ஒரு வார்த்தையில் தெரியாது என சொல்லியிருக்கலாம்.அல்லது அதைப்பற்றி உங்களிடம் தெரிவிக்கும் அளவுக்கு விருப்பம் இல்லாதவராக இருந்திருக்கலாம்.இது ஒரு குற்றமா...இதுக்கு இவ்வளவு நீள புலம்பல் தேவையா...?

    ReplyDelete
  71. உ.த -- எனக்கு உங்க எழுத்தை தொடர்ந்து வாசிக்கும் பொழுது ஓர் ஆச்சர்யம் மட்டும் தொக்கி நிக்கிது. ஆமா, எப்படி நீங்க சென்னையில பொழைச்சிக் கெடக்கிறீங்க? :)) ...

    http://deviyar-illam.blogspot.in/2013/05/blog-post_20.html

    ReplyDelete