Pages

Wednesday, January 04, 2012

நீங்கதான் நியாயம் சொல்லணும்..!

04-01-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இன்று மாலை டிஸ்கவரி புக் பேலஸில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவிற்கு நானும் சென்றிருந்தேன். அங்கே வருகை தந்திருந்த தலைவர்கள் கேபிளாரும், ஜாக்கியாரும் ஒருவரையொருவர் கட்டியணைத்து 'ஷோ' காட்டினார்கள். என்னிடம் தாங்கள் ஒற்றுமையாக இருப்பதாக நடித்தும் காட்டினார்கள். கூடவே "எங்களை எதிர்த்தா எழுதற?" என்று எனது சட்டையைப் பிடித்து, இழுத்து அடிக்கவும் பாய்ந்தார்கள்.












கருத்தை, கருத்தால் எதிர் கொள்ள வேண்டும் என்ற சாக்ரடீஸின் தத்துவம் கூடவா, நீட்சேயின் இந்த வாரிசுகளுக்குத் தெரியாது..? 

நீங்கதான் நியாயத்தைச் சொல்லணும்..! இல்லாட்டி அவங்களுக்குப் புரிய வைக்கணும்..!



அன்புடன்


உண்மைத்தமிழன்

32 comments:

  1. இன்று முதல் வலையுலகத்தை விட்டு வெளியேறுகிறேன்- எங்கள் உண்மைத்தமிழன் அண்ணையின் பதிவையே ஆட்டைய போட்டு ஒருவன் ஒரு பதிவு போட்டு துணிச்சலோடு வெளியேறி இருக்கிறான் என்றால் எங்களை போன்ற அப்பாவிகளை ”குனிய வைத்து” குதிரை தாண்டிவிடுவான் என்கிற பயம் வந்துவிட்டது !

    ( அண்ணையின் பெயரால் பதிவிட்டிருக்கும் கயவாளியே ! மேற்படியார் 50000 சொற்களுக்கு குறையாமல் நன்றி கூட சொல்லமாட்டார் என்கிற அடிப்படைகூட தெரியாமல் பதிவிட்டிருப்பது இது உன் முதல் குற்றம் என தெரிகிறது, பிழைத்து போ !!! )

    ReplyDelete
  2. மூணு பேரும் சினிமா பிடிக்கும்குறீங்க. சின்ன போட்டோவில் ஒழுங்கா நடிக்க தெரியலையே !! சண்டைன்னு சொல்லிட்டு இப்படி யாராவது சிரிப்பாங்களா? :))

    ReplyDelete
  3. அண்ணன் உனா தானாவின் வலைப்பூ ஹேக் செய்யப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.

    இப்படிக்கு
    உனா தானா குரூபீஸ்
    சர்வதேச கிளை

    ReplyDelete
  4. அமெரிக்க அரசாங்கத்திடம் பணம் வாங்கிக்கொண்டு உடன்பிறவா சகோதரர்களான கேபிளையும் ஜாக்கியையும் பிரிக்க நினைக்கும் உனாதானா ஒழிக...

    ReplyDelete
  5. நீங்கதான் நியாயத்தைச் சொல்லணும்..! /

    ஒரு பதிவர் சந்திப்பை கூட்டுங்கண்ணே...
    அங்க வெச்சு நியாயம் கேப்போம்...

    இல்லை.. முடிஞ்சு 1 வாரம் கழிச்சுகூட கேப்போம்..

    காசா .. பணமா?..
    :-)

    ReplyDelete
  6. [[[தமிழ் அமுதன் said...

    இவ்ளோ சின்ன பதிவா.?]]

    இதைவிடவும் சின்னப் பதிவை யாராவது போட முடியுமா என்ன..?

    ReplyDelete
  7. [[[வரவனையான் said...

    இன்று முதல் வலையுலகத்தை விட்டு வெளியேறுகிறேன்- எங்கள் உண்மைத்தமிழன் அண்ணையின் பதிவையே ஆட்டைய போட்டு ஒருவன் ஒரு பதிவு போட்டு துணிச்சலோடு வெளியேறி இருக்கிறான் என்றால் எங்களை போன்ற அப்பாவிகளை ”குனிய வைத்து” குதிரை தாண்டிவிடுவான் என்கிற பயம் வந்துவிட்டது !

    (அண்ணையின் பெயரால் பதிவிட்டிருக்கும் கயவாளியே ! மேற்படியார் 50000 சொற்களுக்கு குறையாமல் நன்றி கூட சொல்லமாட்டார் என்கிற அடிப்படைகூட தெரியாமல் பதிவிட்டிருப்பது இது உன் முதல் குற்றம் என தெரிகிறது, பிழைத்து போ !!! )]]]

    ஆஹா.. எத்தனை வருஷமாச்சு.. மப்பு மாப்ளையின் பின்னூட்டத்தை என் பதிவில் பார்த்து..! மாப்ளே தேங்க்ஸு.. எப்படியோ உன்னை எழுத வைச்சிட்டேன் பார்த்தியா..!?

    ReplyDelete
  8. [[[மோகன் குமார் said...

    மூணு பேரும் சினிமா பிடிக்கும்குறீங்க. சின்ன போட்டோவில் ஒழுங்கா நடிக்க தெரியலையே !! சண்டைன்னு சொல்லிட்டு இப்படி யாராவது சிரிப்பாங்களா? :))]]]

    நாங்க ரொம்ப டீசண்டாக்கும்..!

    ReplyDelete
  9. [[[பன்னிக்குட்டி ராம்சாமி said...

    அண்ணன் உனா தானாவின் வலைப்பூ ஹேக் செய்யப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.

    இப்படிக்கு
    உனா தானா குரூபீஸ்
    சர்வதேச கிளை]]]

    அடப்பாவிகளா..! நிசமாவே ஹேக் செஞ்சா கூட இது ஒண்ணைத்தான் செய்வீங்களா..? தீக்குளிப்பெல்லாம் கிடையாதா..?

    ReplyDelete
  10. [[[Philosophy Prabhakaran said...

    அமெரிக்க அரசாங்கத்திடம் பணம் வாங்கிக் கொண்டு உடன்பிறவா சகோதரர்களான கேபிளையும் ஜாக்கியையும் பிரிக்க நினைக்கும் உனாதானா ஒழிக...]]]

    அமெரிக்க அரசிடம் இல்லை பிரபா.. மணிஜியிடம் கட்டிங் வாங்கிக் கொண்டுன்னு போட்டாத்தான் பொருத்தமா இருக்கும்..!

    ReplyDelete
  11. அஹமது இர்ஷாத்...

    கணபதி..

    தங்களது வருகைக்கு மிக்க நன்றி..!

    ReplyDelete
  12. [[[பட்டாபட்டி.... said...

    நீங்கதான் நியாயத்தைச் சொல்லணும்!/

    ஒரு பதிவர் சந்திப்பை கூட்டுங்கண்ணே.
    அங்க வெச்சு நியாயம் கேப்போம்...
    இல்லை.. முடிஞ்சு 1 வாரம் கழிச்சுக் கூட கேப்போம். காசா .. பணமா?..
    :-)]]]

    கேட்டிருவோம். அடுத்தப் பதிவர் சந்திப்புக்கு அவசியம் வாங்க..!

    ReplyDelete
  13. ஹ்ம் வீட்ல ஒருமணி நேரம் என்னய தொந்தரவு செய்யாத நம்ம உத பதிவு படிக்கோணும்னு சொல்லிட்டு வந்து பாத்தா இப்டி ஏமாந்துட்டேனே.
    அட்லீஸ்ட் அடிதடியை வீடியோல போட்ருக்கலாம்ல :))

    ReplyDelete
  14. அண்ணே என்னன்னே பதிவ காணோம் வெறும் போட்டோக்கள் மட்டும் இருக்கு...எங்க விட்டுட்டீங்க பதிவ...!

    ReplyDelete
  15. //அடப்பாவிகளா..! நிசமாவே ஹேக் செஞ்சா கூட இது ஒண்ணைத்தான் செய்வீங்களா..? தீக்குளிப்பெல்லாம் கிடையாதா.//


    அண்ணே ம்ம் சொல்லுங்க விக்கிய குளிக்க வச்சுடுவோம்..... தக்காளி குளிச்சு ரொம்ப நாள் ஆச்சாம்....

    ReplyDelete
  16. அண்ணன் ஊன்னா தான்னாவின் முகரையை பெயர்க்காமல் விட்ட கேபிள் சங்கருக்கும், ஜாக்கி சேகருக்கும் வன்மையான கண்டனங்கள்!

    ReplyDelete
  17. அன்பின் ட்ரூ டமிலன்,

    'உ'ங்கள் 'உ'ள்ளக்குமுறலை 'உ'ருகிப்படித்தோம். 'உ'லகம் பல உன்னத 'உ'ண்மைகளை 'உ'ள்வாங்கி உலவுகிறது. 'உ'ங்கள் மூலம் உணர்வை 'உ'சுப்ப வைக்கும் 'உ'ண்மையை 'உ'ச்சியில் இருக்கும் போட்டோக்களில் கண்டோம்.

    'உ'றுதியாக ஒரு 'உ'ருப்படியான முடிவை 'உ'டனே 'உ'ணர்த்த 'உ'டன்பட்டுவிட்டோம். இன்று மாலை ஜாக்கி, கேபிள் க்ரூப்பில் இருந்து விலகி 'உ'ங்கள் க்ரூப்பில் இணைய முடிவு செய்தே விட்டோம். இனி பொறுப்பதில்லை. 'உ'ருமட்டும் 'உ'றுமி. 'உ'திரட்டும் 'உ'ள்ள 'உ'தறல்கள்!!

    இவண்,

    உ. முருகன்
    ஏ,ஆர்.பி.செந்தில்
    சிவகுமார்
    குமரன்
    கந்தன்
    தண்டபாணி
    வேலன்
    பழனி
    ஆறுமுகம்
    'யங் சூப்பர்' முருகன்

    உண்மைத்தமிழன் க்ரூப்,
    க்ரேட்டர் சென்னை.

    ReplyDelete
  18. இது உண்மைத்தமிழனின் வலைப்பக்கம் தானே...

    1 நிமிடத்தில் படித்து விட்டேன் இப்பதிவை அதனாலல் எனக்கு டவுட்டு

    ReplyDelete
  19. //எப்படியோ உன்னை எழுத வைச்சிட்டேன் பார்த்தியா..!?//

    வரவனையானை உள்ளே இழுத்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  20. [[[RAVI said...

    ஹ்ம் வீட்ல ஒருமணி நேரம் என்னய தொந்தரவு செய்யாத நம்ம உத பதிவு படிக்கோணும்னு சொல்லிட்டு வந்து பாத்தா இப்டி ஏமாந்துட்டேனே.
    அட்லீஸ்ட் அடிதடியை வீடியோல போட்ருக்கலாம்ல :))]]]

    ரெண்டு பேர் ரத்தத்தை பார்க்காம தூங்க மாட்டீங்க போலிருக்கே..?

    ReplyDelete
  21. [[[விக்கியுலகம் said...

    அண்ணே என்னன்னே பதிவ காணோம் வெறும் போட்டோக்கள் மட்டும் இருக்கு... எங்க விட்டுட்டீங்க பதிவ...!]]]

    புகைப்படங்களே நூறு கதைகளைச் சொல்லுமே.. புரியவில்லையா விக்கி..?

    ReplyDelete
  22. [[[சசிகுமார் said...

    //அடப்பாவிகளா..! நிசமாவே ஹேக் செஞ்சா கூட இது ஒண்ணைத்தான் செய்வீங்களா..? தீக்குளிப்பெல்லாம் கிடையாதா.//


    அண்ணே ம்ம் சொல்லுங்க விக்கிய குளிக்க வச்சுடுவோம்..... தக்காளி குளிச்சு ரொம்ப நாள் ஆச்சாம்.]]]

    அதுக்கும் வேற ஆள்தானா..? நீங்க குதிக்க மாட்டீங்களா..?

    ReplyDelete
  23. [[[கே.ஆர்.பி.செந்தில் said...

    One more take please >>>>]]]

    அத அங்கயே சொல்லியிருந்தா இன்னும் நல்லதா எடுத்திருக்கலாம்ல..!

    ReplyDelete
  24. [[[யுவகிருஷ்ணா said...

    அண்ணன் ஊன்னா தான்னாவின் முகரையை பெயர்க்காமல் விட்ட கேபிள் சங்கருக்கும், ஜாக்கி சேகருக்கும் வன்மையான கண்டனங்கள்!]]]

    ரொம்ப நாள் கடுப்பு..!

    ReplyDelete
  25. [[[மாயன்:அகமும் புறமும் said...

    பதிவு சரியாக load ஆகலை என்றே முதலில் நினைத்தேன்!!!]]]

    போட்டோவைத்தான் சரியா புடிக்காம வுட்டுப்புட்டாய்ங்க பயபுள்ளைக..

    ReplyDelete
  26. [[[! சிவகுமார் ! said...
    அன்பின் ட்ரூ டமிலன்,

    'உ'ங்கள் 'உ'ள்ளக்குமுறலை 'உ'ருகிப்படித்தோம். 'உ'லகம் பல உன்னத 'உ'ண்மைகளை 'உ'ள்வாங்கி உலவுகிறது. 'உ'ங்கள் மூலம் உணர்வை 'உ'சுப்ப வைக்கும் 'உ'ண்மையை 'உ'ச்சியில் இருக்கும் போட்டோக்களில் கண்டோம்.

    'உ'றுதியாக ஒரு 'உ'ருப்படியான முடிவை 'உ'டனே 'உ'ணர்த்த 'உ'டன்பட்டுவிட்டோம். இன்று மாலை ஜாக்கி, கேபிள் க்ரூப்பில் இருந்து விலகி 'உ'ங்கள் க்ரூப்பில் இணைய முடிவு செய்தே விட்டோம். இனி பொறுப்பதில்லை. 'உ'ருமட்டும் 'உ'றுமி. 'உ'திரட்டும் 'உ'ள்ள 'உ'தறல்கள்!!

    இவண்,

    உ. முருகன்
    ஏ,ஆர்.பி.செந்தில்
    சிவகுமார்
    குமரன்
    கந்தன்
    தண்டபாணி
    வேலன்
    பழனி
    ஆறுமுகம்
    'யங் சூப்பர்' முருகன்

    உண்மைத்தமிழன் க்ரூப்,
    க்ரேட்டர் சென்னை.]]]

    ஆஹா.. அற்புதமான பின்னூட்டம்.. கந்தவேலர்களே உங்களது பாசம் கண்டு மெய்சிலிர்த்துப் போனோம். நேரில் சந்திக்க நேர்ந்தால் பஞ்சாமிர்தம் சாப்பிடுவோம்.. வாழ்க.. வளர்க..!

    ReplyDelete
  27. [[[சங்கவி said...

    இது உண்மைத்தமிழனின் வலைப் பக்கம்தானே... 1 நிமிடத்தில் படித்து விட்டேன் இப்பதிவை. அதனாலல் எனக்கு டவுட்டு.]]]

    ஹி.. ஹி.. சங்கவியை அடுத்தப் பதிவில் ஏமாற்ற மாட்டேன்..!

    ReplyDelete
  28. [[[தருமி said...

    //எப்படியோ உன்னை எழுத வைச்சிட்டேன் பார்த்தியா..!?//

    வரவனையானை உள்ளே இழுத்தமைக்கு நன்றி.]]]

    நன்றிகள் ஐயா.. பாருங்க. நல்லா எழுதறவங்கள்லாம் ச்சும்மா ட்விட்டர்ல போய் மொக்கைய போட்டுக்கிட்டிருக்காங்க..!

    ReplyDelete