Pages

Sunday, December 25, 2011

படித்து, செத்து மடியுங்கள் - கவிதைகள்

25-12-2011



என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


ஏனோ தெரியவில்லை.. இன்று காலையில் இருந்து கவிதை ஊற்றாக வெடித்துக் கிளம்பிக் கொண்டிருக்கிறது. ஒரு அளவோடு இருக்க வேண்டும் என்று எண்ணி கீபோர்டில் இருந்து விலகிச் சென்ற பின்புதான் மனம் கொஞ்சம் ஆறுதல்பட்டு கவிதைகளை தேடுவதை உள்ளுக்குள் நிறுத்திக் கொண்டது. எழுதியதை பிளஸ்ஸிலும், பேஸ்புக்கிலும் பகிர்ந்தது போதாது என்று வலைப்பூவிலும் என் நிம்மதிக்காக பகிர்கிறேன்..!

இந்தக் கவிஞர்கள்தான் எழுதினார்களா என்றெல்லாம் பூதக்கண்ணாடி போட்டு தேட வேண்டாம். இப்போதைய பேஷன், எதையாவது எழுதி, கீழே தனக்குப் பிடித்தமான கவிஞர்களின் பெயரை போட்டு பிரபலப்பட்டுக் கொள்வதுதானாம்..! அதான் நானும் களத்தில் குதித்துவிட்டேன்..!


படித்து, செத்து மடியுங்கள்..!


படிக்க மட்டுமே நாம்..!





எதை எதையோ
எவன் எவனோ
எதில் எதிலோ 
எழுதி வைத்திருக்க..
படிக்க மட்டுமே 
நாம்...!


- பெருங்கவிஞர் நீட்சே




உ ஒன்றுதான்..!





உலர்ந்த சிறகு
உடைந்த மனம்
உலராத காதல்
உவப்பாத உணவு
உயராத வாழ்க்கை
உள்ளுக்குள் எல்லாமே
ஒன்றுதான்..!


- கவிக்கோ பைரன்






துள்ளும்வரையிலும் துள்ளு..!






துள்ளி எழுந்ததாம் 
காதல்..!
துள்ளிச் சென்றதாம்
காலம்..!
துள்ளச் சொன்னதாம்
மனம்..!
துள்ளாமல் துள்ளியதாம்
இளமை..!
தள்ளாமை வரும்வரையில்
துள்ளு..!


- பெருங்கவிக்கோ ஷெல்லி






அமைதி காற்றே அமைதி..!







எங்கும் நிசப்தம்
எதிலும் நிசப்தம்
அமைதி காற்றே
அமைதி..!
சில நிமிடங்கள்
அமைதி காற்றே..!

கொஞ்சம் பனி
வீசட்டும்
சிறிது ஒளி
கிடைக்கட்டும்..
அமைதி காற்றே
அமைதி..!

சவக்குழி எனக்காக
காத்திருக்கிறது..
நான் மட்டுமே..
எனக்கு மட்டுமே..
சருகுகளுக்கு அங்கே
இடமில்லை.
தனியனாகவே செல்ல 
விரும்புகிறேன்..
அமைதி காற்றே
அமைதி..!

இலை, சருகுகளை
என்னுடன் தள்ளாதே..
அவைகளாவது 
சூரியனை பார்த்தே
உருவம் இழக்கட்டும்..!


- கவிச்சக்கரவர்த்தி கீட்ஸ்

16 comments:

  1. எதுவும் உங்க மேட்டர் இல்லையா...

    ReplyDelete
  2. இதெல்லாம் படிக்காமகூட நெறயபேரு செத்து மடியுறாங்கண்ணே :))

    ReplyDelete
  3. இந்தப் பதிவின் தலைப்புக்கும், ஈரோடுசங்கமத்தில் கொஞ்சம் காலம் தாழ்த்தியாவது அங்கீகரிக்கப் பட்டதுக்கும், நேற்று டிஸ்கவர் புக் பேலஸ் பதிவர் சந்திப்புக்கும் சம்பந்தமே இல்லை--இல்லை--இல்லை! அப்படித்தானே உத!

    ReplyDelete
  4. நான் கூட திடீரென்று இந்த மாதிரி ஆகிவிடுவேன். உடனே ஒரு நல்ல துப்பறியும் நாவல் ஒன்றை தமிழிலோ அல்லது english லோ படித்ததும் நார்மலாகி விடுவேன். முயற்சி பண்ணி பார்க்கலாம்.
    இன்று என் வலையில்;

    மாயன் : அகமும் புறமும்: திருச்சி துவாரகையில் இருந்து ரொம்ப தூரமோ?




    மாயன் : அகமும் புறமும்: ஒஸ்தி

    ReplyDelete
  5. sir
    neenga ezhuthiyahta ellam

    cdlt

    ranjani

    ReplyDelete
  6. [[[க ரா said...

    எதுவும் உங்க மேட்டர் இல்லையா...?]]]

    எல்லாம் என் மேட்டர்தான் க.ரா.

    ReplyDelete
  7. [[[RAVI said...

    இதெல்லாம் படிக்காமகூட நெறய பேரு செத்து மடியுறாங்கண்ணே :))]]]

    அவங்கள்லாம் பாவம்.. அல்பாயுசுகாரங்க..!

    ReplyDelete
  8. [[[எஸ். கிருஷ்ணமூர்த்தி said...

    இந்தப் பதிவின் தலைப்புக்கும், ஈரோடு சங்கமத்தில் கொஞ்சம் காலம் தாழ்த்தியாவது அங்கீகரிக்கப்பட்டதுக்கும், நேற்று டிஸ்கவர் புக் பேலஸ் பதிவர் சந்திப்புக்கும் சம்பந்தமே இல்லை--இல்லை--இல்லை! அப்படித்தானே உத!]]]

    ஆமாம்.. எதுவும் தொடர்பில்லை..!

    ReplyDelete
  9. [[[மாயன் : அகமும் புறமும் said...

    நான்கூட திடீரென்று இந்த மாதிரி ஆகிவிடுவேன். உடனே ஒரு நல்ல துப்பறியும் நாவல் ஒன்றை தமிழிலோ அல்லது english லோ படித்ததும் நார்மலாகி விடுவேன். முயற்சி பண்ணி பார்க்கலாம்.]]]

    செஞ்சு பாருங்க.. நமக்குத்தான்யா போட்டிக்கு ஆள் உடனுக்குடன் தயாராகி வர்றாங்க..!

    ReplyDelete
  10. [[[rse said...

    sir
    neenga ezhuthiyahta ellam

    cdlt

    ranjani]]]

    ஆமாம்.. நானே எழுதியதுதான்..!

    ReplyDelete
  11. சரவனான்னே நல்லாத்தான இருந்த. ஏன்னே இப்டி?

    ReplyDelete
  12. [[[அக்கப்போரு said...

    சரவனான்னே நல்லாத்தான இருந்த. ஏன்னே இப்டி?]]]

    இன்னும் நல்லாகணும்னு நினைச்சுத்தான்..!

    ReplyDelete
  13. புரிஞ்சு போச்சு...இதுக்கு முன் பதிவைப் பார்த்தேன்...அதானே காரணம்...

    என்னோட வலையில்;
    மலையாளிகளின் airlines
    திருவள்ளுவரின் Tweets

    ReplyDelete
  14. why this கொலவெறி? கொலவெறி பாஸ்?

    ReplyDelete
  15. [[[Chilled beers said...

    புரிஞ்சு போச்சு... இதுக்கு முன் பதிவைப் பார்த்தேன்... அதானே காரணம்...]]]

    ஹி.. ஹி.. ராஜாபாட்டையைவிட மொக்கைகளை எல்லாம் தாங்கியாச்சு.. இதெல்லாம் ச்சும்மா தல..!

    ReplyDelete
  16. இணையத்தில் சம்பாதிக்கலாம் ஸார்..!

    முயற்சி செய்றேன்.. தகவலுக்கு மிக்க நன்றிகள்..!

    ReplyDelete