Pages

Friday, September 30, 2011

முரண் - சினிமா விமர்சனம்

30-09-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வாழ்க்கையில் ஏதோ ஒரு நாள்.. ஏதோ ஒரு சம்பவம்.. யாரோ ஒருவரால் நமது நிம்மதி தொலைந்தது அல்லது வசந்தம் வந்தது என்று சொல்லக் கேட்டிருப்போம். அல்லது நமக்கே அது போன்ற அனுபவங்கள் கிடைத்திருக்கும். கிடைத்த அனுபவத்தினால் இனிமை கிடைத்திருக்குமானால் அதில் சுவாரஸ்யம் அதிகமிருக்காது. ஆனால் அதுவே துன்பமயமெனில்.. இதைதான் ஊரே மெல்லும்.. அப்படியொரு அனுபவச் சிக்கலுக்குள்ளாகும் நந்தா என்ற சேரனின் கதைதான் இந்த முரண்.


இந்தப் படம் தமிழுக்குப் புதியதுதான்.. இப்படியொரு கதையை படமாக்க துணிந்த சேரனை முதலில் வஞ்சகமில்லாமல் பாராட்டிவிடுவோம்..! அடுத்த பாராட்டு படத்தினை சேரனிடம் இருந்து வாங்கி வெளியிட்டிருக்கும் யு டிவி நிறுவனத்தினருக்கு..! 

சினிமாவில் இசையமைப்பாளராக வேண்டி தவம் கிடந்து வாய்ப்பு பெற்றிருக்கும் சேரன், பெங்களூரில் தயாரிப்பாளருடன் சந்திப்பு முடிந்து சென்னை திரும்புகிறார். வரும் வழியில் கார் சிக்கலுக்குள்ளாகி நின்றுவிட எதிர்ப்படும் காரில் லிப்ட் கேட்டு தனது பயணத்தைத் தொடர்கிறார். அதுதான் அவரது அடுத்தடுத்த வாழ்க்கையைத் தொலைத்துவிடுகிறது.

காரோட்டியான அர்ஜூன் என்னும் பிரசன்னாவால் மூளைச் சலவைக்குள்ளாக்கப்படுகிறார் சேரன். விளைவு.. தனக்கு பணம், அந்தஸ்து கொடுக்காமல் பிச்சைக்காரனாக நடத்தும் தன் அப்பாவை சேரன் கொல்ல வேண்டும் என்றும், சேரனுக்கு விவாகரத்து கொடுக்காமலும், அவருடன் சேர்ந்து வாழாமலும் டார்ச்சர் செய்யும் அவரது மனைவியை நான் கொல்வேன் என்று சேரனுடன் ஜென்டில்மேன் அக்ரிமெண்ட்ஷிப் போடுகிறார் பிரசன்னா.. பிரசன்னா சொன்னதைச் செய்தாரா என்பதுதான் கதை..!

இந்தப் படத்தில் பிரசன்னாதான் நடிக்க வேண்டும் என்று இதன் இயக்குநர் ராஜன் மாதவ் கடந்த 3 ஆண்டுகளாக ஒற்றைக் காலில் நின்றிருக்கிறார். தான் கதை சொன்ன அத்தனை தயாரிப்பாளர்களிடமும் பிரசன்னா நடிக்கவில்லையெனில் இந்தக் கதையை நான் இயக்க மாட்டேன் என்று  சண்டையே போட்டிருக்கிறார் இயக்குநர்.

சேரனிடமும் பிரசன்னா இருந்தால் மட்டுமேதான் இந்தக் கதையை படமாக்க முடியும் என்று உறுதியாக இருந்ததால், அந்த உறுதிக்காகவே சேரன் தனது சொந்த பேனரில் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். 75 சதவிகிதம் படம் முடிவடைந்த பின்பு, யு டிவியின் கைகளுக்கு இந்தப் படம் கை மாறிவிட்டது. யு டிவியின் தனஞ்செயன்கூட முன்பே கதை கேட்டபோது பிரசன்னா என்றவுடன் சற்று தயங்கியிருக்கிறார்.. இதனை படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவில் பிரசன்னாவே வெளிப்படையாகப் பேசிவிட மேடையே கலகலத்துப் போனது.

அந்தப் பிடிவாதத்திற்கு எனது பாராட்டுக்களும், வாழ்த்துகளும்.. பிரசன்னாவுக்கு ஏற்ற கேரக்டர்தான்.. பிரசன்னாவும் தனது 3 வருட கால காத்திருப்பிற்குப் பின்னர் சரியான திரைப்படத்தில் ஸ்கோர் செய்திருக்கிறார். சேரனைவிடவும் எனக்கு பல இடங்களில் பிடித்திருக்கிறார் பிரசன்னா.. என்ன ஒரேயொரு குறை, பிரசன்னாவுக்கு குடிகாரனை போல உளறத் தெரியவில்லை.. இது ஒன்றுதான் பிரச்சினை..

முதற்பாதியில் படத்தினை நகர்த்துவதே வசனங்கள்தான்.. சேரனின் ஈகோவை உசுப்பிவிட்டு வேடிக்கை பார்க்கும் பிரசன்னாவின் அந்த நக்கலையும், பிரசன்னாவை புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கும் அப்பாவியாக சேரனின் நடிப்பும் ஏ ஒன்..! அதிலும் மாங்கா பறிக்கும் காட்சிக்குப் பின்பு “நாயை உசுப்பிவிட்டது நீங்கதானே..” என்று சேரன் கேட்குமிடம் செம டச்சிங்..!

ஸ்டூடண்ட்ஸ் முன்னால் மனைவியிடம் அவமானப்படுவது.. "சம்பாதிக்க துப்பில்லாத புருஷன்கிட்ட மாட்டிக்கிட்டேன்" என்று பேச்சு வாங்கியும் அமைதியாக நிற்பது.. இன்னொருவன் தனது மனைவியுடன் உரசலுடன் இருப்பதை நேருக்கு நேர் பார்த்துவிட்டு பொருமுவது.. பிரசன்னாவின் டார்ச்சர் தாங்காமலும், ஹரிபிரியாவை பிரசன்னாவிடமிருந்து காப்பாற்ற வேண்டி அலைவதுமாக படம் முழுவதும் அவதிப்பட்டுக் கொண்டேயிருக்கிறார் சேரன். பொருத்தமான வேடம்.. பிரசன்னாவிடம் மனநோய் நிபுணரின் போன் நம்பரை கொடுத்துவிட்டுப் போகும் அந்தக் கோப சேரன்தான் நிஜமானவர் என்று நினைக்கிறேன்..! 

இருவருக்குப் பின்னாலும் இருக்கும் கதைகள் ரொம்ப சோதிக்காமல் பட் பட்டென்று நறுக்குத் தெரித்தாற்போல் வைத்திருந்ததினால் ரசிக்க முடிந்தது.. மிஷ்கினின் சீடராச்சே இயக்குநர்.. பல காட்சிகளில் அந்த டச் தெரிந்தது. ஸ்டூடியோவில் தனது காதலி இறந்து போவதை போல நினைத்துப் பார்த்து சேரன் துள்ளி எழ, அதே நேரம் எதிரில் ஸ்டூலில் அமர்ந்திருக்கும் வாட்ச்மேன் பொத்தென்று கீழே விழுவது.. எனக்கு அஞ்சாதே படத்தை நியாபகப்படுத்தியது.

போகப் போக தனது மனைவியின் டார்ச்சரைவிடவும், பிரசன்னாவின் டார்ச்சரே அதிகம் என்று சேரன் நினைக்குமளவுக்கு எதுவுமே தெரியாதது போல் செய்யும் பிரசன்னாவின் ஆக்ட்டிங்தான் சேரனையும் தாங்கிப் பிடித்திருக்கிறது..

சேரனின் மனைவியாக நிகிதா... காதலியாக ஹரிபிரியா.. இருவருக்கும் அதிகம் வேலையில்லை என்றாலும், ஹரிபிரியாவின் அந்த மார்க்கெட்டிங் காட்சி குபீரென்று சிரிப்பை வரவழைத்த்து. “நீங்க என்ன சோப்பு யூஸ் பண்றீங்க..?” என்று ஹரிபிரியா கேட்கும் கேள்வியில் சிரிக்காமல் எப்படி இருப்பது..? இதேபோல் “சொதப்பிட்டா..” என்று சேரன் கேட்கும்போதும், பிரசன்னா மேப் போட்டு விவரிக்கும்போதும், “கமிஷனரும் அங்கதான் வாக்கிங் வருவாரு..” என்று சொல்லும்போதும் அப்ளாஸ் போட்டுத்தான் தீர வேண்டியிருந்த்து..!

பிரசன்னா வேண்டுமென்றே வம்பு சண்டைக்குப் போக, சேரன் இடையில் புகுந்து தாக்குதல் தொடுக்க.. கடைசியில் அவர்களது காரை விபத்துக்குள்ளாக்கிவிட்டு கவலைப்படாமல் தப்பிக்கும் காட்சியிலேயே சேரன், பிரசன்னாவின் குறைந்தபட்ச எல்லைக் கோட்டுக்குள் வந்துவிட்டார் என்பதை உணர்த்திவிட்டார் இயக்குநர்.

ஜெயபிரகாஷை, சேரன் கொலை செய்திருந்தால்கூட சேரன் மீது எவருக்கும் குற்றவுணர்வு வந்திருக்காது என்று நினைக்கும் அளவுக்கு பிரசன்னாவின் டார்ச்சர் காட்சிகளை ஸ்டெப் பை ஸ்டெப்பாக வைத்து 'பெப்' ஏற்றியிருக்கிறார் இயக்குநர்.

பாடல் காட்சிகள் படத்தின் தொய்வுக்குக் காரணமாகிவிடும் என்பதை உணர்ந்து அரை பாடல், முக்கால் பாடல் என்று 2 பாடல்களைத் தாண்டி கிளைமாக்ஸில் வரும் குத்துப் பாடல் ஒரு புதிய வரவு. 

சேரன், பிரசன்னா, ஹரிபிரியா, ஜெயப்பிரகாஷ் நால்வரையே படத்தின் பின்பாதி முழுவதும் சுற்றிச் சுற்றி வந்தாலும், எப்படி இருவரும் கதையை முடிக்கப் போகிறார்கள் என்று திரில்லிங்கின் 'பெப்'பை ஏற்றிக் கொண்டேயிருக்கிறது திரைக்கதை. அந்த சப் இன்ஸ்பெக்டர் இறக்கும்போதுதான் பிரசன்னாவின் கேரக்டர் மீது கொஞ்சம் சந்தேகம் வந்தது. பிற்பாடு உறுதியானபோது திரைக்கதையின் இறுக்கம் புரிந்தது..

இவ்வளவு பெரிய கோடீஸ்வரரின் மகன் சொந்த அலுவலகத்தில் சாதாரண டைப்பிஸ்ட்டை போல அமர வைக்கப்பட்டிருப்பதும், அப்பாவால் வெறுத்து ஒதுக்கப்பட்டும் இத்தனை ஆடம்பரமாக வலம் வந்தும், கொலை செய்ய சேரனை ஏன் கேட்க வேண்டும் என்ற லாஜிக் கேள்வியெல்லாம் எழாமல் இல்லை. இருந்தாலும் அப்பாவியாய் தோற்றமளிக்கும் சேரன் போன்றவர்கள் கிடைத்தால், எந்த அயோக்கியனுக்கும் பயன்படுத்திக் கொள்ளத்தான் தோன்றும் என்பதையே நாம் லாஜிக்காக எடுத்துக் கொள்வோம்..!

ஆரண்ய காண்டத்திற்குப் பின்பு அதே பாணியில் வந்திருக்கும் இந்த முரண் திரைப்படமும் திரைக்கதை ஆக்கத்திலும், இயக்கத்திலும் பேசப்பட வேண்டிய திரைப்படம் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை..!

முரண் - நிச்சயமாகப் பார்க்கலாம்..!



36 comments:

  1. அண்ணா என்ன ஒரே பேப்பர்ல எழுதியது போல சிக்கனமா எழுதி இருக்கீங்க.. ரொம்ப நாளுக்கு அப்பறம் விமர்சனம் என்கிற பெயரில் ஒரு நல்ல விமர்சனம் எழுதி இருக்கீங்க

    ReplyDelete
  2. முழு கதையையும் சொல்லாமல் உங்ககிட்ட இருந்து ஒரு விமர்சனம்?
    ஆனா படம் நல்லா இருக்கும்னு நம்பவைக்கும் விமர்சனம்!!!

    ReplyDelete
  3. //ஆரண்ய காண்டத்திற்குப் பின்பு அதே பாணியில் வந்திருக்கும்////
    இதுதான் கொஞ்சம் இடிக்குது?
    அது மாதிரியே இதும ஊத்திக்குமோ?

    ReplyDelete
  4. அட இன்னா பாஸ் நீங்க?
    நம்ம சைட்டுக்கு வாங்க!
    கருத்து சொல்லுங்க!!
    நல்லா பழகுவோம்!!!

    ReplyDelete
  5. // தனக்கு பணம், அந்தஸ்து கொடுக்காமல் பிச்சைக்காரனாக நடத்தும் தன் அப்பாவை சேரன் கொல்ல வேண்டும் என்றும், சேரனுக்கு விவாகரத்து கொடுக்காமலும், அவருடன் சேர்ந்து வாழாமலும் டார்ச்சர் செய்யும் அவரது மனைவியை நான் கொல்வேன் என்று சேரனுடன் ஜென்டில்மேன் அக்ரிமெண்ட்ஷிப் போடுகிறார் பிரசன்னா.. //

    ஆக, Strangers on a train படத்தின் காப்பி என்பது உறுதியாகி விட்டது... மீதிக்கதையை நீங்கள் சொல்லவே தேவையில்லை... நாங்கள் ஒரிஜினல் படத்திலேயே பார்த்துவிட்டோம்...

    ReplyDelete
  6. அண்ணா...

    சேரன் படம்னு ரொம்ப பாராட்டி எழுதிட்டீங்க போல... ஒரு தபா பாக்கலாம். இது ஒரு முழுமையான திரில்லர் என்று நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். ஒரு வேளை எதிர்பார்க்காமல் போயிருக்க வேண்டுமோ..?

    அன்பு நித்யா.

    ReplyDelete
  7. உங்க விமர்சனம் மேகிங் ஸ்டைல் எனக்கு பிடிச்சுருக்கு

    ஆத்தாடி பாவாடை காத்தாட - பார்ட் 1

    வாகை சூட வராதே

    ReplyDelete
  8. நல்ல விமர்சனம்.உங்கள் பதிவிற்கு நன்றி......

    நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com

    ReplyDelete
  9. என்னங்க அநியாயமா இருக்கு. strangers on a train by Hitchcock அப்படியே இருக்கே. கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம இருக்காங்க.

    ReplyDelete
  10. இந்தப்படமும் காப்பியா... இருந்தாலும் படம் எப்பிடினு பாத்திடரேன்..

    ReplyDelete
  11. Cheran , prasanna mathiriyana thiramaiyanavarakaluku thodarndhu nalla vaypugal vara intha padathin vetri udhavatum. Thamiluku yerpa matrangal seydhu copy pannuvathil thavarillai. Athilum thannudaiya thani muthirayai pathikka therintha iyakunarkalaga irukka vendum.

    ReplyDelete
  12. ரொம்ப நாளைக்கு அப்புறம் விமர்சனம் எழுதியிருக்கிறீர்கள் . அருமைரொம்ப நாளைக்கு அப்புறம் விமர்சனம் எழுதியிருக்கிறீர்கள் . அருமை

    ReplyDelete
  13. [[[gulf-tamilan said...

    waiting for the torrent release :)))]]]

    பாருங்கண்ணே.. அவசியம் பாருங்க.!

    ReplyDelete
  14. [[[அருண்மொழித்தேவன் said...

    அண்ணா என்ன ஒரே பேப்பர்ல எழுதியது போல சிக்கனமா எழுதி இருக்கீங்க.. ரொம்ப நாளுக்கு அப்பறம் விமர்சனம் என்கிற பெயரில் ஒரு நல்ல விமர்சனம் எழுதி இருக்கீங்க.]]]

    4 பக்கம்ண்ணே.. இதுவே போதும்ண்ணே..

    ReplyDelete
  15. [[[மொக்கராசு மாமா said...

    முழு கதையையும் சொல்லாமல் உங்ககிட்ட இருந்து ஒரு விமர்சனம்?
    ஆனா படம் நல்லா இருக்கும்னு நம்ப வைக்கும் விமர்சனம்!!!]]]

    கதையைத்தான் நாலு வரில சொல்லிட்டனே மாமா..!

    ReplyDelete
  16. [[[மொக்கராசு மாமா said...

    //ஆரண்ய காண்டத்திற்குப் பின்பு அதே பாணியில் வந்திருக்கும்////

    இதுதான் கொஞ்சம் இடிக்குது? அது மாதிரியே இதும ஊத்திக்குமோ?]]]

    ஊத்திக்காது.. ஊத்தவும் கூடாது. நாம் ஆதரவு அளிப்போம்...!

    ReplyDelete
  17. [[[அகில் பூங்குன்றன் said...

    ரொம்ப சின்ன படமா அண்ணே..]]]

    இல்லை அகில். பெரிய படம்தான். 16 ரீல்கள்..!

    ReplyDelete
  18. [[[சீனுவாசன்.கு said...

    அட இன்னா பாஸ் நீங்க?
    நம்ம சைட்டுக்கு வாங்க!
    கருத்து சொல்லுங்க!!
    நல்லா பழகுவோம்!!!]]]

    மொதல்ல உங்க ஜாதகத்தை எடுத்து விடுங்க. அப்புறமா வர்றோம்..!

    ReplyDelete
  19. [[[Philosophy Prabhakaran said...

    //தனக்கு பணம், அந்தஸ்து கொடுக்காமல் பிச்சைக்காரனாக நடத்தும் தன் அப்பாவை சேரன் கொல்ல வேண்டும் என்றும், சேரனுக்கு விவாகரத்து கொடுக்காமலும், அவருடன் சேர்ந்து வாழாமலும் டார்ச்சர் செய்யும் அவரது மனைவியை நான் கொல்வேன் என்று சேரனுடன் ஜென்டில்மேன் அக்ரிமெண்ட்ஷிப் போடுகிறார் பிரசன்னா.. //

    ஆக, Strangers on a train படத்தின் காப்பி என்பது உறுதியாகி விட்டது... மீதிக் கதையை நீங்கள் சொல்லவே தேவையில்லை... நாங்கள் ஒரிஜினல் படத்திலேயே பார்த்துவிட்டோம்...]]]

    என்ன இருந்தாலும், சேரன், பிரசன்னா நடிப்பில் எப்படியிருக்கிறது என்பதைப் பார்ப்பதற்காகவாவது படத்தைப் பாருங்கள் தம்பி..!

    ReplyDelete
  20. [[[Rathnavel said...

    நல்ல விமர்சனம்.]]]

    நன்றிகள் ஸார்..!

    ReplyDelete
  21. [[[நித்யன் said...

    அண்ணா...

    சேரன் படம்னு ரொம்ப பாராட்டி எழுதிட்டீங்க போல... ஒரு தபா பாக்கலாம். இது ஒரு முழுமையான திரில்லர் என்று நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். ஒரு வேளை எதிர்பார்க்காமல் போயிருக்க வேண்டுமோ..?

    அன்பு நித்யா.]]]

    நித்யா.. நான் எதிர்பார்க்கவில்லை. எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது..!

    ReplyDelete
  22. [[[IlayaDhasan said...

    உங்க விமர்சனம் மேகிங் ஸ்டைல் எனக்கு பிடிச்சுருக்கு.]]]

    மிக்க நன்றிகள் இளையதாசன்..!

    ReplyDelete
  23. [[[Kannan said...

    நல்ல விமர்சனம். உங்கள் பதிவிற்கு நன்றி......]]]

    நன்றி கண்ணன்..!

    ReplyDelete
  24. [[[ramalingam said...

    என்னங்க அநியாயமா இருக்கு. strangers on a train by Hitchcock அப்படியே இருக்கே. கொஞ்சம்கூட மனசாட்சியே இல்லாம இருக்காங்க.]]]

    காப்பியாக இருந்தாலும் ரசிக்கும்படி எடுத்திருக்கிறார்களே..?

    ReplyDelete
  25. [[[குடிமகன் said...
    இந்தப் படமும் காப்பியா... இருந்தாலும் படம் எப்பிடினு பாத்திடரேன்..]]]

    அவசியம் பாருங்க குடிமகன்..!

    ReplyDelete
  26. [[[Saravanaa said...

    Cheran, prasanna mathiriyana thiramaiyanavarakaluku thodarndhu nalla vaypugal vara intha padathin vetri udhavatum. Thamiluku yerpa matrangal seydhu copy pannuvathil thavarillai. Athilum thannudaiya thani muthirayai pathikka therintha iyakunarkalaga irukka vendum.]]]

    நன்றி சரவணன்..

    ReplyDelete
  27. [[[பார்வையாளன் said...

    ரொம்ப நாளைக்கு அப்புறம் விமர்சனம் எழுதியிருக்கிறீர்கள் . அருமை ரொம்ப நாளைக்கு அப்புறம் விமர்சனம் எழுதியிருக்கிறீர்கள். அருமை]]]

    மிக்க நன்றி பார்வை..!

    ReplyDelete
  28. //மிஷ்கினின் சீடராச்சே இயக்குநர்.. பல காட்சிகளில் அந்த டச் தெரிந்தது.//

    அப்டியா? ஆனா முரண் கொரியப்படம் மாதிரி இல்லையே....

    ReplyDelete
  29. Kathai thiruttu... ellam thiruttu.... parattukal mattum eyyakunarku, nadigarukku, thayaripalargallukku.... thirudangalae athigam parkatha oru padathil irrundu thirudakoodatha... Alfred Hitchcock than kidaithara..... Etharkku oru vimarsanam paratti.... UTV ippo oru Disney Company..... Pona padam ' Deivathirumagal' oru suttapazham.... UTV'in tamil thiruttuthanam pramatham..... Thirudi edupatharkku thunivu etharku... DVD irrunda pothatha....

    ReplyDelete
  30. உங்கள் விமர்சனம் எப்போதும் வித்தியாசமாக இருக்கிறது. நன்றி. படம் பார்த்துவிட்டு வருகிறேன்.

    ReplyDelete
  31. [[[! சிவகுமார் ! said...

    //மிஷ்கினின் சீடராச்சே இயக்குநர்.. பல காட்சிகளில் அந்த டச் தெரிந்தது.//

    அப்டியா? ஆனா முரண் கொரியப் படம் மாதிரி இல்லையே....]]]

    சிவா.. எதுக்கு கொரியப் படம்.. தமிழ்ப் படமா தெரிஞ்சா போதாதா..?

    ReplyDelete
  32. [[[amaindakarai naughties said...

    Kathai thiruttu... ellam thiruttu.... parattukal mattum eyyakunarku, nadigarukku, thayaripalargallukku.... thirudangalae athigam parkatha oru padathil irrundu thirudakoodatha... Alfred Hitchcock than kidaithara..... Etharkku oru vimarsanam paratti.... UTV ippo oru Disney Company..... Pona padam' Deivathirumagal' oru suttapazham.... UTV'in tamil thiruttuthanam pramatham..... Thirudi edupatharkku thunivu etharku... DVD irrunda pothatha....]]]

    ம்.. ஹூம்.. ம்ஹூம்.. இது ஆவுற காரியமில்லை.. திருட்டு வேற.. இன்ஸ்பிரேஷன் வேறயாம் ஸார்..!

    ReplyDelete
  33. [[[வெண் புரவி said...

    உங்கள் விமர்சனம் எப்போதும் வித்தியாசமாக இருக்கிறது. நன்றி. படம் பார்த்துவிட்டு வருகிறேன்.]]]

    வாங்க வெண் புரவி.. அப்புறம் பேசுவோம்..!

    ReplyDelete