Pages

Wednesday, August 17, 2011

மைசூர் மகாராஜா கொடுத்த நகைகள் - ஜெயலலிதாவின் வாக்குமூலம்..!

17-08-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பதிவு செய்யப்பட வேண்டிய பதிவுகளெல்லாம் நிறையவே கைவசம் இருப்பதாலும், அலுவலக வேலைகள் அதிகமானதாலும் முன்னர்போல் இனிமேல் சுயமான பதிவுகள் அதிகம் எழுத முடியாது என்றே நினைக்கிறேன். முடிந்தால் வாரத்திற்கு ஒன்றாவது இனிமேல் எழுதுகிறேன்.

ஜெயலலிதா கைது செய்யப்பட்டவுடன் லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறை போலீஸார் அவரை காவலில் எடுத்து வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் விசாரணை நடத்துவார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் இங்கேதான் அரசியல்வியாதிகளுக்கு ஒரு நீதி.. ஏழை, எளியவர்களுக்கு வேறொரு நீதியாச்சே..!

காவலில் எடுத்து விசாரிக்க வேண்டாம். சிறைக்கே நேரில் சென்று சிறை அதிகாரிகள் முன்பாக விசாரித்துக் கொள்ளுங்கள் என்று பட்டும், படாமலும் அப்போதைய ஆட்சி மேலிடம் சொன்னதன் விளைவாக சென்னை மத்திய சிறையில் இருந்த ஜெயலலிதாவை அப்போதைய லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறை போலீஸார் நேரில் சென்று விசாரித்தனர்.

அது தொடர்பாக அப்போது வெளி வந்த ஜூனியர்விகடன் கட்டுரை இது :

ஜெயலலிதா மீதான, வருமானத்​துக்கு மீறி சொத்துச் சேர்த்த வழக்கில், டி.வி.ஏ.சி-யினர் (லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறை) புலன்விசாரணையில் ஏராளமான தகவல்களைப் பெற்று இருந்தனர். இப்படிப் பெற்ற தகவல்கள் குறித்து ஜெயலலிதாவிடம் விளக்கம் கேட்க டி.வி.ஏ.சி-யினர் முடிவு எடுத்தனர்.

 இதற்காக கோர்ட் அனுமதியுடன், சிறையில் இருந்த ஜெயலலிதாவிடம் கடந்த வாரம் தொடர்ந்து விசாரணைகள் நடந்தன. இந்த வழக்கைப் புலனாய்வு செய்யும் நல்லம்ம நாயுடு தலைமையில், இன்ஸ்பெக்டர் சந்திரமனோகரன், பெண் இன்ஸ்​பெக்டர் வசந்தா, ஸ்டெனோ மீனாட்சி ஆகியோர் அடங்கிய டீம் விசாரணைக்குச் சென்றது.


டி.வி.ஏ.ஸி. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், 1,000 கேள்விகள் வரை கேட்டு இருப்பார்கள். ஜெயலலிதா, அத்​தனை கேள்விகளையும் சமாளித்ததே ஒரு சாதனைதான். ஐந்து நாட்கள் நடந்தவற்றில், ஒரு சில விவகாரங்களை மட்டும் முன்னோட்டமாகப் பார்ப்போம்.

முதலில் ஜெயலலிதாவின் இளமைப் பருவம்... பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் விவரம்... சினிமாவில் நடித்தது போன்ற விவரங்களைப்பற்றிக் கேள்விகள் கேட்கப்பட்டன. அடுத்து சசிகலா குடும்பத்தினர் பற்றிய விவரங்கள், ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது போயஸ் கார்டனுக்கு வந்து சென்றவர்கள் பற்றிய விசாரணைகள், அதைத் தொடர்ந்து ஆரம்பித்தது நேரடி விசாரணை!
 
''போயஸ் கார்டன் வீட்டைப் புதுப்பித்துக் கட்டியது எப்படி? ஹைதராபாத் தோட்டத்தில் புதிய பங்களா கட்டியது எப்படி?'' என்ற கேள்விகளுக்கு, ''அதெல்லாம் ஆர்க்கிடெக்ட்டிடம் கேட்டால்தான் தெரியும்!'' என்று பதில் வந்தது!

''சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் மகாப​லிபுரம் போகும் வழியில் புதிய புதிய பங்களாக்​களைக் கட்டினார்களே... அது எப்படி என்று தெரியுமா?''

''எனக்குத் தெரியாது... அதை சசிகலாவிடம் கேளுங்கள்.''

''எந்தெந்த கம்பெனிகள் நடத்தினீர்கள்? சசிகலா​வோடு எந்தெந்த கம்பெனிகளில் பார்ட்னர்?'' என்ற கேள்விகளுக்கும் வங்கிக் கணக்குகள்பற்றிக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும், ''பணம் வந்தது சசிகலாவுக்குத்தான் தெரியும். ஏன், எதற்கு என்று எல்லாம் ஞாபகம் இல்லை... செக்கில் கையெழுத்துக் கேட்டால்... போடுவேன்!'' என்றார்.

''இந்த வருமானம் எல்லாம் பிசினஸ் செய்து வந்ததா..?''

''ஆம்.''

''சசிகலா 24 மணி நேரமும் உங்களோடுதானே இருந்தார். அவர் எப்படி, என்ன பிசினஸ் செய்தார்?''

''எனக்குத் தெரியாது.''

''உங்கள் வீட்டில் இருந்த தங்க, வைர நகைகளும் வெள்ளிச் சாமான்களும் எப்படிக் கிடைத்தன?''




''கொஞ்ச நகைகள் மைசூர் மகாராஜா என் தாத்தாவுக்குக் கொடுத்தது. பிறகு, எம்.ஜி.ஆரும் எனக்குக் கொடுத்தார். இது தவிர, எனக்குப் பிறந்த நாள் அன்பளிப்பாகக் கட்சித் தொண்டர்களும் தந்தார்கள்.''

''மைசூர் மகாராஜா கொடுத்ததும், எம்.ஜி.ஆர். கொடுத்தது பற்றியும் முன்பு வருமான வரித் துறையினருக்குத் தகவல் கொடுத்தீர்களா?''

''இல்லை.''

''பரிசுப் பொருட்களாக வந்தால், முதல்வர் என்ற முறையில் அதை அரசாங்கத்திடம்தானே ஒப்படைக்க வேண்டும்?''

''எந்த பொலிட்டீஷியன் பரிசுப் பொருளை வாங்கவில்லை? எம்.ஜி.ஆர். வாங்கவில்லையா..? ஆற்காடு சாலை எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் பரிசுப் பொருட்களை வைத்திருக்கவில்லையா?'' என்று ஆவேசமாகத் திருப்பிக் கேட்டார் ஜெயலலிதா.

ஆனால், 1988-க்குப் பிறகு சட்டத் திருத்தம் செய்யப்பட்டு உள்ளதை லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறையினர் ஜெயலலிதாவுக்கு உணர்த்தினார்கள்.

கட்சிக்காரர்களின் பெயர்களில் சுமார் 86 டிமாண்ட் டிராஃப்ட்டுகள் இரண்டு கோடி ரூபாய்வரை கொடுத்ததாகக் கணக்குக் காண்பிக்கப்பட்டு இருந்ததாம். இதன்படி, ''சிவகங்கையைச் சேர்ந்த ஒரு பிரமுகர் 50 லட்சம் பரிசு தந்ததாகக் கணக்கு. இவர்களால் இப்படிப்பட்ட தொகைகளைக் கொடுக்க முடியுமா..?'' என்பது கேள்வி. ''அவர்கள் நன்கொடை வசூல் செய்து, எனக்குப் பரிசாகக் கொடுத்து இருக்கலாமே!'' என்று பதில் கூறியுள்ளார் ஜெயலலிதா.

(முன்னாள் அமைச்சர் ஜி.விஸ்வநாதன் போன்ற பிரமுகர்களும்கூட இப்படி டி.டி-யாகக் கொடுத்தவர்கள் லிஸ்ட்டில் அடக்கம். ஆனால், அவர் உட்படச் சிலர் தாங்கள் டி.டி. எதுவும் எடுத்துக் கொடுக்கவில்லை என்றும், தங்கள் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி மோசடி செய்யப்பட்டு உள்ளதாகப் புகார் கூறி இருக்கிறார்கள்!)

இந்த டி.டி-க்களைத் தவிர, பார்சலாகவும் அமெரிக்க டாலர்கள் பரிசு கிடைத்து, அதை வருமான வரித் துறையில் கணக்குக் காட்டியது​பற்றியும் கேள்வி கேட்க, ''பார்சல் வந்தது... அதன் உள்ளே வெள்ளி, தங்கம் இருந்தது எல்லாம், பிரித்த பிறகுதான் தெரியும். டாலர் அனுப்பியது யார் என்று தெரியவில்லை.'' என்று பதில் அளித்தார்!




இதே மாதிரி, ''10,000 புடவைகள் எதற்காக வாங்கினீர்கள்? 25,000 முதல் லட்சம் ரூபாய்வரை விலை மதிப்புள்ள புடவைகள் மட்டும் நூற்றுக்கணக்கில் உள்ளதே... இவற்றை எப்படி வாங்கினீர்கள்?'' என்று கேட்டபோது, ''எல்லாமே கிஃப்ட்தான்!'' என்றார்.

போயஸ் தோட்டத்தில் கிடைத்த வாட்ச்கள்  ​பற்றிக் கேட்டபோதும், அதே வழக்கமான பதில்... அதோடு, 'பறிமுதல் செய்த வாட்ச்களில் இரண்டு வேண்டும்’ என்று முதலில் கேட்ட ஜெயலலிதா, ''அந்த வாட்ச்சில் சுவிஸ் வங்கி அக்கௌன்ட் நம்பர் எல்லாம் இருக்குனு எழுதுறாங்க. அதனால், வாட்ச் எதுவும் வேண்டாம்!'' என்று மறுத்துவிட்டார். இப்போது அந்த வாட்ச்கள் எல்லாம் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டன.




ஜெயலலிதாவும் சசிகலாவும் உடல் முழுக்க நகைகளை அணிந்துகொண்டு இருக்கும் போட்டோவை எடுத்தது, மயிலாப்பூரில் உள்ள ஆஸ்தான போட்டோகிராபர் ஒருவர். அவர் எடுத்த புகைப்படங்கள்தான் போயஸ் கார்டனின் பல அறைகளை அலங்கரித்தன. (இது குறித்து ஜூ.வி-யில் முன்பே எழுதி இருந்தோம்). இந்த போட்டோவில் ஜெயலலிதா அணிந்து இருக்கும் நகைகள் சோதனையின்போது போயஸ் கார்டனில் கிடைத்தன. ஆனால், சசிகலா அணிந்திருந்த நகைகள் இதுவரை எங்கேயும் கிடைக்கவில்லை.

அந்த நகைகள் எங்கே என்றும் அதிகாரிகள் கேட்க, ''அந்தம்மாவிடமே போய்க் கேளுங்கள்...'' என்று கோபமாகப் பதில் சொன்னார் ஜெயலலிதா. கடைசி தினங்​களில் பொறுமை இழந்து, ''நீங்க எல்லாம் கருணாநிதி ஆளுங்க...'' என்று அதிகாரிகளை விமர்சனம் செய்ய ஆரம்பித்துவிட்டார்.

இதே மாதிரி, ''10 லட்ச ரூபாய் உங்க கணக்கில் வருகிறது என்றால், அது எங்கே இருந்து வந்தது என்பதுகூட உங்களுக்கு ஞாபகம் இருக்காதா...?’ என்பதுபோன்ற கேள்விகளுக்குக்கூட ''அப்போது நான் சி.எம்.! ஒரு பெரிய கட்சியின் பொதுச் செயலாளர். எனக்கு இருந்த வொர்க் பிரஷரில் எதுவுமே எனக்கு ஞாபகம் இல்லை!'' என்ற பதிலே வந்தது.

''அதெல்லாம் எம்.ஜி.ஆர். கொடுத்தது, சசிகலாவுக்குத்தான் விவரம் தெரியும். ஞாபகம் இல்லையே, தெரியாது!'' என்ற நான்கு பதில்கள்தான் மாறி மாறி வந்தன.

இத்தனைக்குப் பிறகும் அதிகாரிகள் வட்டாரத்​தின்படி, இந்த வழக்கில் ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டுகள் பலமாகவே உள்ளன. உதாரணமாக, வளர்ப்பு மகன் திருமணச் செலவுக்கு 1 கோடியே 30 லட்ச ரூபாய் ஆனதை ஒப்புக் கொண்ட ஜெயலலிதா, '30 லட்சம்தான் தன்னுடையது. மற்றவை பெண் வீட்டாரும் மற்றவர்களும் செய்தது...’ என்று பதில் சொல்லி உள்ளார். இதுவே போதுமானது. அதனால்தான், இப்படிப்பட்ட பதில்களை டி.வி.ஏ.ஸி. அதிகாரிகள் விசாரித்துவிட்டு வந்தவுடன், பத்திரிகைகளிலும் கொடுத்து ரெக்கார்டு செய்துவிட்டனர். இதே மாதிரி, தனக்குப் பரிசாக வந்தவை பற்றியும் ஜெயலலிதா குறிப்பிட்டுச் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளார்.

பரிசாகக் கிடைத்த சொத்துகளை அவ்வப்போது பத்திரிகைகளிலும் சொல்லவில்லை. வருமான வரித் துறைக்கும் உடனடியாகக் கணக்குக் கொடுக்கவில்லை. எனவே, கட்சிக்காரர்கள் கொடுத்ததாகச் சொல்கிற பரிசுகளை எல்லாம் லஞ்சமாகக் கொடுத்ததாகவே எடுத்துக்கொள்ள முடியும் என்றும் கூறப்படுகிறது.

ஜெயலலிதா சில வருடங்களுக்கு முன்பு தனது திராட்சைத் தோட்டத்தில் இருந்து வரு​டத்​துக்கு ஒன்பது லட்சம் வரை வருமானம் வருவதாகத் தெரிவித்தார். அது உண்மை என்று வைத்துக்கொண்டால்கூட, கடந்த ஐந்து வருடங்களில் 50 லட்சம் மட்டும்தான் ஜெயலலிதாவுக்கு வந்து இருக்கும்.

கடந்த ஐந்து வருடங்களில் அவர் செய்து வந்த பல ஆடம்பரச் செலவுகளையும், தற்போது அவர் பெயரில் உள்ள சொத்துகளையும் மதிப்பிட்டுப் பார்த்தால், அவை அவர் கொடுத்த கணக்கை ரொம்பவே தாண்டுகிறது. நீதிமன்றத்திலும் அதை அதிகாரிகள் நிரூபிப்பார்கள்!

- கண்பத்

படங்கள்: சு.குமரேசன்


நன்றி : ஜூனியர்விகடன்

29 comments:

  1. நைனா, அப்படி வேலை அதிகமா இருந்தா, ஸ்கேன் மட்டும் எனக்கு மெயில்ல அனுப்புங்க. நான் டைப்பி திருப்பி அனுப்புறேன். நீங்க காப்பி பேஸ்ட் பண்ணி போஸ்ட்ல போட்டுடுங்க. நான் ஏன் இவ்வளவு தைரியமா கமிட் பன்றேன் தெரியுமா, என் பொண்ட்டாட்டி ஊருக்குப் போயிடுச்சு! வர ரெண்டு மாசமாகும் :))

    ReplyDelete
  2. மிகச் சரியான நேரத்தில்... பழைய ஜூவி கட்டுரையை மறுபதிவு செய்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  3. ஞானி யார்? ஜெயமோகன் யார்?

    https://docs.google.com/document/d/1FS93Hq_KIdeqoKKDwqXfKrjqN9aLXKUSSAr9BTB5U38/edit?hl=en_US

    ReplyDelete
  4. //பதிவு செய்யப்பட வேண்டிய பதிவுகளெல்லாம் நிறையவே கைவசம் இருப்பதாலும்,//இட்லி மாவு நிறைய அரைச்சு வச்சுடுவீங்களாக்கும்:)

    ReplyDelete
  5. அண்ணே!கருணாநிதி இந்தப் பதிவைப் பார்த்தால் நாம் மறந்ததையெல்லாம் கழகத்தின் கண்மணி நினைவில் வைத்திருக்கிறாரே என்று ரொம்பவே சந்தோசப்படுவார்!பழைய பதிவுகளை அவர் கண்ணில் படாம வையுங்க::)

    ReplyDelete
  6. இன்னும் ரெண்டு மாசத்துக்கு உங்களுக்கு கவலையே இல்லை.அதான் விஜய்கோபால்சாமி இருக்காரே:)

    ReplyDelete
  7. இதில் ஜெ. சசிகலா படத்தை பார்த்து ஒரு குழந்தை கேட்டாள், "இந்த நகையெல்லாம் எங்கேயிருந்து வந்தது? " "மைசூர் மகாராஜா கொடுத்ததாக ஜெ. சொல்றான்கமா"- என்றாள் தாயார். அந்தக் குழந்தை சற்று யோசித்தது, அப்புறம் கேட்டது, "ஏம்மா, மைசூர் மகாராஜா எதைக் கொடுத்தாலும் ரெண்டு ரெண்டாத்தான் கொடுப்பாரா?".......

    அது சரி, எத்தனை ஆதாரம் இருந்து என்ன பிரயோஜனம், எந்தக் குற்றமும் நிரூபணம் ஆகவில்லையே.

    ReplyDelete
  8. [[[விஜய்கோபால்சாமி said...

    நைனா, அப்படி வேலை அதிகமா இருந்தா, ஸ்கேன் மட்டும் எனக்கு மெயில்ல அனுப்புங்க. நான் டைப்பி திருப்பி அனுப்புறேன். நீங்க காப்பி பேஸ்ட் பண்ணி போஸ்ட்ல போட்டுடுங்க. நான் ஏன் இவ்வளவு தைரியமா கமிட் பன்றேன் தெரியுமா, என் பொண்ட்டாட்டி ஊருக்குப் போயிடுச்சு! வர ரெண்டு மாசமாகும் ))]]]

    ஜாலியா வாழ்க்கையை என்ஜாய் பண்ணுங்க விஜய்.. இதுல எதுக்கு இந்த டைப்பிங் வேலையெல்லாம்..?

    ReplyDelete
  9. [[[குடிமகன் said...

    மிகச் சரியான நேரத்தில்... பழைய ஜூவி கட்டுரையை மறு பதிவு செய்தமைக்கு நன்றி!]]]

    நன்றி குடிமகனே..! பெரும் குடிமகனே நன்றியோ நன்றி..!

    ReplyDelete
  10. [[[Priya said...

    நல்ல பதிவு.
    Thanks,
    Priya
    http://www.ezdrivingtest.com]]]

    நன்றி ப்ரியா..!

    ReplyDelete
  11. [[[ராஜ நடராஜன் said...

    //பதிவு செய்யப்பட வேண்டிய பதிவுகளெல்லாம் நிறையவே கைவசம் இருப்பதாலும்,//

    இட்லி மாவு நிறைய அரைச்சு வச்சுடுவீங்களாக்கும்:)]]]

    ஆமாங்கண்ணா..!

    ReplyDelete
  12. [[[ராஜ நடராஜன் said...

    இன்னும் ரெண்டு மாசத்துக்கு உங்களுக்கு கவலையே இல்லை. அதான் விஜய்கோபால்சாமி இருக்காரே:)]]]

    நோ.. நோ.. என் வேலையை நான்தான் செய்யணும்.. செய்யறேன்..!

    ReplyDelete
  13. [[[ராஜ நடராஜன் said...

    அண்ணே! கருணாநிதி இந்தப் பதிவைப் பார்த்தால் நாம் மறந்ததையெல்லாம் கழகத்தின் கண்மணி நினைவில் வைத்திருக்கிறாரே என்று ரொம்பவே சந்தோசப்படுவார்! பழைய பதிவுகளை அவர் கண்ணில் படாம வையுங்க::)]]]

    படட்டுமே.. வயசான தாத்தா.. ஏதோ கொஞ்சூண்டு சந்தோஷத்தையாவது கொண்டாடட்டுமே..?

    ReplyDelete
  14. [[[Jayadev Das said...

    இதில் ஜெ. சசிகலா படத்தை பார்த்து ஒரு குழந்தை கேட்டாள், "இந்த நகையெல்லாம் எங்கேயிருந்து வந்தது? " "மைசூர் மகாராஜா கொடுத்ததாக ஜெ. சொல்றான்கமா"- என்றாள் தாயார். அந்தக் குழந்தை சற்று யோசித்தது, அப்புறம் கேட்டது, "ஏம்மா, மைசூர் மகாராஜா எதைக் கொடுத்தாலும் ரெண்டு ரெண்டாத்தான் கொடுப்பாரா?".......

    அது சரி, எத்தனை ஆதாரம் இருந்து என்ன பிரயோஜனம், எந்தக் குற்றமும் நிரூபணம் ஆகவில்லையே.]]]

    இதுதான் அரசியல் செல்வாக்கு.. அதிகாரச் செல்வாக்கு..! மக்கள் இன்னமும் மனம் மாறவில்லையே..? நாம் என்ன செய்வது..?

    ReplyDelete
  15. உண்மைத் தமிழன்,

    போன ஆட்சியில்தான் உங்களுக்கு அரசு வேலை கிடைக்கவில்லை....இப்பொழுதும் கிடைக்க விட மாட்டீர்கள் போல :-)

    ReplyDelete
  16. Nalla velai. Elaction time'la intha pathivellam podama vittingale...

    ReplyDelete
  17. ராபர்ட் வதிர - குறுகிய காலத்தில் கோடீஸ்வரன் ஆனதின் பின்னணி என்ன

    http://www.youtube.com/watch?v=JXvY_FcrYhQ

    ReplyDelete
  18. [[[Prabhu Rajadurai said...

    உண்மைத் தமிழன், போன ஆட்சியில்தான் உங்களுக்கு அரசு வேலை கிடைக்கவில்லை. இப்பொழுதும் கிடைக்கவிட மாட்டீர்கள் போல :-)]]]

    இனிமேல் என்னிக்குமே நமக்கு அரசு வேலை கிடைக்காது பிரபு. வயசு தாண்டியாச்சு..!

    ReplyDelete
  19. [[[Unknown said...

    Nalla velai. Elaction time'la intha pathivellam podama vittingale...]]]

    அது நான் செய்த தவறல்ல. விகடன் நிர்வாகத்தினரின் தவறு..!

    ReplyDelete
  20. [[[ConverZ stupidity said...

    ராபர்ட் வதிர - குறுகிய காலத்தில் கோடீஸ்வரன் ஆனதின் பின்னணி என்ன

    http://www.youtube.com/watch?v=JXvY_FcrYhQ]]]

    ரொம்ப லேட்டா சொல்றீங்க..!

    ReplyDelete
  21. //"ஏம்மா, மைசூர் மகாராஜா எதைக் கொடுத்தாலும் ரெண்டு ரெண்டாத்தான் கொடுப்பாரா?".......
    //
    இது என்ன சின்ன புள்ள தனமா... ஏன் ஜெயலலிதாவின் நகைகள் போல இன்னொன்று செய்ய முடியாதா?

    நான் சவால் விடுகிறேன். இப்ப உங்க வீட்ல நகைகளின் ரசிது எல்லாம் பத்திரமாக இருக்கிறதா?

    இதுவே அந்த திருடன் போட்ட வழக்கு என்கிறேன்.

    இதுக்குலாம் போய் emotion ஆகறீங்க. போய் தண்ணி குடிங்க பாஸ்.

    ஊர்ல திருடன் இன்னொருத்தனை திருடன் சொன்ன நம்ம மக்கள் கேக்கிற முதல் கேள்வி “ நீ யோக்கியமான்னுதான்”

    அதனாலதான் அந்த மக்கள் இன்னும் மாறாம இருக்க்காங்க.

    நல்லா சொல்றாரு டிடைய்லு.

    ReplyDelete
  22. //பதிவு செய்யப்பட வேண்டிய பதிவுகளெல்லாம் நிறையவே கைவசம் இருப்பதாலும்// ஆமாம் நிறையவே இருக்கு..... ரெளத்திரம் விமர்சனம் உட்பட

    ReplyDelete
  23. a small calulcation

    Jayalalutha as a Actress he paid next to the Hero in the movies. I think we received 1 lakh for an movie on that time. we can take it as 50,000. On that time 8 gram gold cast Rs. 400(Just Rs.50 per gram ( as per my mothers update).
    if she invested an movie amount in the gold it will come more than 1 kg gold. Sliver if you go to any Bramin home use can see sliver item in there day today life.

    Saree, Please go and see the Brow of our mother. she will atleast has 300 sarees. in that 10-15 as slik sarees.

    dont assume that i am follower of Jaya. In that time Jaya did the cprrption as child politics. In the resume of 2001-06 she learnt the things. so there is no corrption charges.

    there is no case of corrption against out EX CM Mr. DR. Kalaigar . Karunadhi. is that means he is earned money illegally.

    ReplyDelete
  24. [[[தமிழினி said...

    உங்கள் பதிவை மேலும் பிரபலப்படுத்த / அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 தளத்தில் இணையுங்கள். ஓட்டளிப்பில் புதிய மாற்றம் செய்யப்பட்டு இருப்பதால் இப்போது தரமான பதிவுகள் அனைத்தும் முன்பை விட விரைவிலேயே பிரபலமான பக்கங்களுக்கு வந்து விடும். தளத்தை இணைக்க இங்கே செல்லவும்

    www.tamil10.com

    நன்றி]]]

    வழிமுறைகள் ரொம்பவும் சுத்த விடுது. அதை மொதல்ல மாத்துங்கப்பா..! என் பாஸ்வேர்டுகூட மறந்து போச்சு..

    ReplyDelete
  25. [[[ராஜரத்தினம் said...

    //"ஏம்மா, மைசூர் மகாராஜா எதைக் கொடுத்தாலும் ரெண்டு ரெண்டாத்தான் கொடுப்பாரா?"//

    இது என்ன சின்ன புள்ளதனமா... ஏன் ஜெயலலிதாவின் நகைகள் போல இன்னொன்று செய்ய முடியாதா? நான் சவால் விடுகிறேன். இப்ப உங்க வீட்ல நகைகளின் ரசிது எல்லாம் பத்திரமாக இருக்கிறதா? இதுவே அந்த திருடன் போட்ட வழக்கு என்கிறேன். இதுக்குலாம் போய் emotion ஆகறீங்க. போய் தண்ணி குடிங்க பாஸ். ஊர்ல திருடன் இன்னொருத்தனை திருடன் சொன்ன நம்ம மக்கள் கேக்கிற முதல் கேள்வி “ நீ யோக்கியமான்னுதான்”
    அதனாலதான் அந்த மக்கள் இன்னும் மாறாம இருக்க்காங்க. நல்லா சொல்றாரு டிடைய்லு.]]]

    ம்.. ஆனாலும் இந்த புகைப்படம் காமெடியா இல்லை.. எவ்ளோ உசரத்துக்குப் போனாலும் பொம்பளைங்க பொம்பளைங்கதான்..!

    ReplyDelete
  26. [[[ஒரு வாசகன் said...

    //பதிவு செய்யப்பட வேண்டிய பதிவுகளெல்லாம் நிறையவே கைவசம் இருப்பதாலும்//

    ஆமாம் நிறையவே இருக்கு. ரெளத்திரம் விமர்சனம் உட்பட]]]

    ரெளத்திரம்.. அப்படீன்னு ஒரு சினிமா வந்திருக்கா..? எப்போ..?

    ReplyDelete
  27. [[[muthukumar said...

    a small calulcation

    Jayalalutha as a Actress he paid next to the Hero in the movies. I think we received 1 lakh for an movie on that time. we can take it as 50,000. On that time 8 gram gold cast Rs. 400(Just Rs.50 per gram ( as per my mothers update). if she invested an movie amount in the gold it will come more than 1 kg gold. Sliver if you go to any Bramin home use can see sliver item in there day today life. Saree, Please go and see the Brow of our mother. she will atleast has 300 sarees. in that 10-15 as slik sarees. dont assume that i am follower of Jaya. In that time Jaya did the cprrption as child politics. In the resume of 2001-06 she learnt the things. so there is no corrption charges. there is no case of corrption against out EX CM Mr. DR. Kalaigar . Karunadhi. is that means he is earned money illegally.]]]

    முத்துக்குமார் இவ்ளோ அப்பாவியா நீங்க..? மாசம் 1 ரூபா சம்பளம் வாங்கி 5 வருஷக் கடைசீல 66 கோடி வருமானம் கணக்குக் காட்டியிருக்கு அந்தம்மா.. இதுக்கு என்ன சொல்றீங்க..?

    ReplyDelete
  28. i am not saying she has nt done any corrpution. Problem for her that she dont know how to make it white.
    Unlike Mr. KK, she did all the activities as they are easily identifiable.
    She learnt that . that why MR. K govt not able to find any corrpution case against her in 2001-06 regime.

    whatever it showed in the calculation that she may gained from the movie salary(note may) and not shown in the income tax accounts.

    Showing the account in the election as madatory i think came after 1994(i hope). Hence she hasnt shown anything in the 1991 elections as it mandatory she has shown in 2006 election.

    its our fate we need to tolerate Ms.JJ or Mr.KK in State. or Mrs. Sonia or BJP leader( sorry i dont know whom to name in BJP) in the center.

    As Rajini said in the 1993 interview, none of the leader can change the country . we need a people revolution and reconstruct entrie system or the contry. But i dont think i wont happen in near future as we are mostly selffish. we can blame the politicians.

    ReplyDelete