Pages

Thursday, June 02, 2011

சீமானை வீழ்த்த நடக்கும் சதி..!

02-06-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

உண்மையாகவே பெரிதும் வருத்தப்படுகிறேன்..!

நிச்சயமாக இந்தச் செய்தி தவறானது என்பதில் நான் நூறு சதவிகிதம் நம்புகிறேன்..!

எனக்கு சீமானுடன் நேரடி பழக்கமில்லை. கை குலுக்கியிருப்பதோடு சரி..! இருந்தாலும் நான் இப்போதும் உறுதியுடன் சொல்கிறேன்.. விஜயலட்சுமி என்னும் இந்த நடிகை சொல்லியிருப்பது அபாண்டமானது..!

ஒரு பெண்ணி்ன் நடத்தையை வைத்து அவரை எடை போட முடியுமா..? அல்லது ஒரு சம்பவத்தினாலேயே அவரை பலி கடாவாக்க முடியுமா..?

முன்பு அப்படியிருந்திருக்கலாம். ஆனால் இப்போது திருந்தியிருக்கலாமே..?

ஏன் சீமானே மாறியிருக்கலாமே.. ஒரு நிமிடத்தில் அப்படி நடந்திருக்கலாமே..?

இப்படியெல்லாம் பகுத்தறிவோடு சிந்திக்காமல் இந்தச் செய்தியைப் படித்த காலை பொழுதிலேயே நான் உணர்ந்துவிட்டேன் இது நிச்சயம் பொய்யான புகாராகத்தான் இருக்கும் என்று..!

முதல் காரணம் செல்வி.விஜயலட்சுமியின் குணநலன்கள் அவர் சின்னத்திரைக்குள் கால் வைத்த தினத்தில் இருந்து என் காதுகளுக்கு எட்டியபடியே இருந்ததினால்தான்..! அவரைப் பற்றிய பல திடுக்கிடும் செய்திகள் பலவிதமான நண்பர்களிடமிருந்து ஒரே மாதிரியாக வந்து சேர்ந்து கொண்டேயிருந்தன.

அது ஒன்றே ஒன்றுதான்.. அவர் தகுதிக்குரியவர் என்று யாரை நினைக்கிறாரோ அவரிடமெல்லாம், “ஐ லவ் யூ..” சொல்வார்..! சிலரை இப்படியே கிறங்கடித்திருக்கிறார். பலர் அது உண்மையோ என்று நம்பி விஜயலட்சுமியுடன் சின்சியராகப் பழகத் துவங்க, சில நாட்களிலேயே வேறொருவருக்கு “ஐ லவ் யூ..” சொல்லிவிட்டு தாவி விடுவார் என்றார்கள்..!

சின்னத்திரை உலகம் மிகவும் சிறியது.. முதல் நாள் ஓரிடத்தில் கேமிரா உதவியாளராகவும், செட் உதவியாளராகவும், தயாரிப்பு உதவியாளராகவும் பணியாற்றுபவர் மறுநாள் வேறொரு படப்பிடிப்பில் கலந்து கொள்ள நேரிடும். மறுநாள் மீண்டும் முதல் நாள் சீரியலுக்கே திரும்பி வர வேண்டியிருக்கும்.. இப்படி இவர்கள் குண்டுச் சட்டிக்குள் ஓடுவதைப் போலவே ஓடிக் கொண்டிருப்பதால் ஒரு ஷூட்டிங்கில் நடப்பது, அடுத்த நாள் வேறொரு ஷூட்டிங்கில் லைவ் ரிலேவாக ஓடிக் கொண்டிருக்கும்.

அவைகளனைத்தையும் மீண்டும் இங்கே சொல்லி அவரைக் கேவலப்படுத்துவது எனது நோக்கமல்ல..! ஆனால் உண்மையே அவருடைய நடத்தையைப் பொறுத்துதான் இருக்கிறது என்பதால் கொஞ்சம் சொல்ல வேண்டியிருக்கிறது..!

சீரியல்களில் நடிக்கும்போது, “நான் உங்களைக் காதலிக்கிறேன்..” என்று சில புரொடெக்ஷன் மேனேஜர்கள், கேமிராமேன்கள், இயக்குநர்களிடத்தில் விஜயலட்சுமி கூறியிருக்கிறார். இரண்டாவது யூனிட் இயக்குநரைக்கூட அவர் விட்டுவைத்ததில்லை.

“ஏன் லேட்டா வர்றீங்க..?” என்று கேட்டால்கூட 'கையைப் பிடித்து இழுத்தார்' என்ற ரேஞ்ச்சுக்கு ராடன் ஆபீஸுக்கு புகாரை அனுப்பி வைப்பார் விஜயலட்சுமி. இந்தத் தொல்லை தாங்காமலேயே அவரிடம் நேராகப் பேசாமல் இடைத்தரகராக இணை இயக்குநர் ஒருவரை வைத்துக் கொண்டுதான் அவரைச் சமாளித்தார்கள் இயக்குநர்கள்..!

அவரைத் தவிர்த்துவிட்டு சீரியலை தொடர முடியாத சூழல் வந்தபோதுதான், வேறு வழியில்லாமல் அனைத்து விவகாரங்களும் ராடன் டிவி நிர்வாகத்தின் முன் வைக்கப்பட்டு பஞ்சாயத்தாக்கப்பட்டது. அப்போதுதான் விஜயலட்சுமி சொன்ன “ஐ லவ் யூ” கதைகள் அனைத்தும் அம்பலமாகின..!

'தங்கவேட்டை' நிகழ்ச்சியின் இயக்குநர் ரமேஷ் மீது தன்னை காதலித்து ஏமாற்றியதாக விஜயலட்சுமி பொய்யாக, போலீஸில் புகார் கொடுக்கும் அளவுக்கு போன பின்புதான் அவரை அந்த இரண்டு தொடர்களிலிருந்தும் தூக்கினார்கள். பாவம் அந்த இயக்குநர் ரமேஷ்.. சில நாட்களாக தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். பெரும்பாடுபட்டு அந்த வழக்கை வாபஸ் பெற வைத்தார்கள்..!

2008-ம் ஆண்டு கன்னட நடிகர் லோகேஷின் மகன் ஸ்ரூஜன் லோகேஷுடன் விஜயலட்சுமி காதல் கொண்டு நிச்சயத்தார்த்தமும் நடந்தது. பின்பு இந்தக் காதலும் 6 மாதத்தில் முறிந்து போய்விட்டது. ஸ்ரூஜன் வேறொரு சின்னத்திரை நடிகையை திருமணம் செய்து கொண்டு போய்விட்டார். விஜயலட்சுமி மீண்டும் இப்போதுதான் 'பாஸ் என்ற பாஸ்கரன்' படத்தில் தமிழில் ரீ எண்ட்ரீயாகியிருந்தார்..!

இவருடைய இந்த நிலைமையோடு, சீமானின் நிலைமையையும்  கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்..!

வீடு முழுவதும் உதவி இயக்குநர்கள்.. தற்போதைய நிலையில் 10 இளைஞர்கள், அவருடைய வீட்டில் அவருடனேயே தங்கியிருக்கிறார்கள். ஒரு முறை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். மீண்டும் ஒரு முறை கைது செய்யப்பட்டு சாதா சிறைவாசம் அனுபவித்தார். அப்போதெல்லாம் இந்த விஜயலட்சுமி எங்கேயும் தென்பட்டதில்லை. 2 ஆண்டுகளாக காதலித்தோம் என்று கதை விடுவதற்கும் ஒரு அளவில்லையா..?

சீமானின் வீடு 24 மணி நேரமும் ஜாபர்சேட்டின் கண் பார்வையில்தான் இருந்தது. அவருடைய உதவி இயக்குநர்கள் அனைவருமே சீமானைப் போன்று தமிழ்த் தேசியம், ஈழம், பிரபாகரன் என்ற எண்ணத்திலேயே இருப்பவர்கள். இது போன்ற சின்னப்புள்ளத்தனத்திலெல்லாம் ஈடுபட சீமானுக்கெங்கே நேரமிருக்கப் போகிறது..?

அத்தோடு கட்சி வேறு ஆரம்பித்த கையோடு எப்பவும் நிருபர்களின் கண் பார்வையிலேயே இருந்தவர் இந்த விவகாரம் உண்மையாக இருந்திருந்தால் இந்நேரம் மாட்டியிருப்பார். சீமானை நன்கு அறிந்தவர்கள் இதனை எடுத்த எடுப்பிலேயே நிராகரிப்பார்கள்..! அவருக்கு காதல், கல்யாணம் இதிலெல்லாம் அக்கறையில்லை என்பது திரையுலகத்தினருக்கே தெரிந்த விஷயம்தான்.

இப்போதுதான் அவருடைய குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் கட்சியினரின் வற்புறுத்தலினால் இலங்கை போரில் பாதிக்கப்பட்ட தமிழ் பெண்ணை மணக்கலாம் என்ற அளவுக்கு இறங்கி வந்திருக்கிறார் என்று சிலிர்க்கிறார்கள் அவரது உதவி இயக்குநர்கள்..!

விஜயலட்சுமியுடனான அவரது தொடர்பு ஒன்றே ஒன்றுதான். அது விஜயலட்சுமியின் அக்கா உஷாவின் வரதட்சணை புகார் பற்றியது. விஜயலட்சுமியின் அக்கா கணவர் என்னைப் போன்ற சற்று யூத்தான தமிழ் இளைஞர்களுக்கு நன்று அறிமுகமானவர். 'திருட்டு புருஷன்' என்று ஆண்டு முழுவதும் காலை காட்சியாக ஓடி சாதனை படைத்த திரைப்படத்தின் கதாநாயகன் ராஜ்பாபு. இவர் நடிகை ஜெயப்ரதாவின் சொந்தத் தம்பி.

இவருடனான குடும்ப உறவு முறிந்த நிலையில், தனது அக்காவின் மகனை மீட்டுக் கொடுக்கும்படி 2008-ம் ஆண்டு விஜயலட்சுமி போலீஸில் புகார் கொடுத்திருந்தார். அந்தச் சமயத்தில்தான் சீமானை விஜயலட்சுமி சந்தித்ததாக சீமானின் வழக்கறிஞர் சொல்கிறார். சீமானை விஜயலட்சுமி தெரிந்து வைத்திருந்ததற்கு காரணம் சீமான் இயக்கிய 'வாழ்த்துகள்' திரைப்படத்தில் அவரும் நடித்திருந்ததுதான். இந்தச் சின்னத் தொடர்பை வைத்து 3 ஆண்டுகள் கழித்து சூப்பரான திரைக்கதை அமைத்து கதை கட்டிவிட்டிருக்கிறார்கள் சிலர்..!

நேற்று இந்தத் தகவல் நிருபர்களுக்கு எப்படி சென்றது என்பதும் ஒரு சுவாரசியம்..! காங்கிரஸ் கட்சியில் இருக்கும் ஒரு முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர்தான் சினிமா பத்திரிகையாளர்களைத் தொடர்பு கொண்டு இந்த விஷயத்தைச் சொல்லியிருக்கிறார் என்று சினிமா வட்டாரத்தில் சொல்கிறார்கள். பத்திரிகையாளர்கள் கமிஷனர் அலுவலகத்துக்குப் போகும் முன்பேயே, விஜயலட்சுமி புகார் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்..!

ஆக முன்பே நன்கு திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நாடகமாகவே இதனை நான் கருதுகிறேன்..! இதற்கு விஜயலட்சுமி என்ற பெண்ணும் உடந்தை என்பதுதான் வேதனை..!

ஒருவரின் கொள்கைகளை, கருத்துக்களை நேருக்கு நேராகச் சந்திக்கத் தைரியமில்லாத கோழைகள், அவரை எப்பாடுபட்டாவது வீழ்த்திவிட வேண்டும் என்று நினைத்து கேரக்டர் அஸாஸினேஷன் செய்ய முயற்சிப்பது கேவலமானது..!

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் சீமானின் புயல்வேகப் பிரச்சாரத்தில் காங்கிரஸின் டவுசர் கிழிந்தது, அக்கட்சியினருக்கு பெரும் கோபத்தைக் கிளறியிருக்கலாம் என்று நினைக்கிறேன்..!

தி.மு.க. நின்ற இடங்களிலெல்லாம் தோல்வி என்றால் அது ஆட்சியாளர்கள் மீது மக்களுக்கு இருந்த கடுப்பு என்றே எடுத்துக் கொள்ளலாம். ஆனால் காங்கிரஸ் மீது..? அவர்கள் ஆளும் கட்சியினரின் தோழமைக் கட்சி என்ற ஒரு விஷயம் மட்டும்தான். ஆனால் இந்த ஒன்றுக்காகவேதான் காங்கிரஸுக்கு இவ்வளவு பெரிய தோல்வியா என்றால் இதை நான் நம்பவில்லை..!

ஊழலில் கூட்டணி அமைத்தது.. உயர்ந்து கொண்டேயிருந்த விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த திராணியற்ற நிலையில் ஆட்சி நடத்தியது.. கூடவே எண்ணற்ற தமிழ் இளைஞர்களை கொந்தளிக்க வைத்திருந்த முள்ளிவாய்க்கால் படுகொலையில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி செய்த துரோகமும், அந்தத் துரோகத்தை சீமான் தோலுரித்துக் காட்டியதாலும்தான் தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கு இந்த அளவுக்கான படுதோல்வி கிடைத்தது என்று நான் உறுதியாக நம்புகிறேன்..!

இல்லையெனில் தி.மு.க. கூட்டணி தோற்றிருந்தாலும், காங்கிரஸுக்கு சுமாராக 15 தொகுதிகளாவது கிடைத்திருக்கும்.. அதிலும் மாதத்தில் 20 நாட்கள் தொகுதியிலேயே இருந்து வீடு, வீடாக சென்று தனது பெயரை நிலை நாட்டி, கோடியை செலவிட்டிருந்த ஹெச்.வசந்தகுமாரும், வேலூரில் சிறந்த எம்.எல்.ஏ. என்று 4 முறையும் பெயரெடுத்திருந்த சி.ஞானசேகரனும், ராமநாதபுரத்தில் மதப் பெரியவர்களின் முழு ஆசியைப் பெற்றிருந்த ஹசன் அலியும் தோற்றிருக்கவே மாட்டார்கள்..!

பாரதீய ஜனதா என்ற கட்சி இடையில் புகுந்து ஓட்டுக்களைக் களவாடிய காரணத்தினால்தான் தற்போதைய 5 சீட்டுக்களே காங்கிரஸுக்கு கிடைத்திருக்கிறது என்பதுதான் உண்மை. பா.ஜ.க.வும் வராமல் இருந்திருந்தால் முட்டைதான் கிடைத்திருக்கும்..! 

ஆக.. காங்கிரஸின் இந்தத் தோல்வியில் சீமானுக்கு பெரும் பங்கு உண்டு என்பது அக்கட்சியினருக்கு கோபத்தைக் கிளப்பி, இப்படியொரு பொய்யான புகார் கொடுக்க பின்புலமாக இருந்திருக்கிறார்கள் என்று சந்தேகிக்க வேண்டியிருக்கிறது..!

இன்று காலையில் இருந்தே சினிமா துறையினர் பலரும் நிச்சயம் இது கட்டுக் கதை என்றே சொல்கின்றனர். இந்த அளவுக்கு சீமானின் நிஜ சுயரூபம் சினிமாவுலகில் தெரிந்திருக்கிறது..! இது ஒன்று போதும் அவருக்கு..!

எனக்கு சாபமிட மனசு வரவில்லை. ஆனாலும் மனம் பொறுக்காமல் சொல்கிறேன்.. விஜயலட்சுமியும், இந்தப் பழிக்குப் பின்னால் இருப்பவர்களும் வருங்காலத்தில் நிச்சயம் வெம்புவார்கள்..!

75 comments:

  1. எனக்கும் நீங்க சொல்லுறது தான் சரிண்ணு படுது அண்ணே!

    ReplyDelete
  2. சீமானை இதுபோன்ற சில்லுகளால் வீழ்த்திவிட முடியாது என்பதை அல்லக்கை காங்கிரஸ்காரர்கள் புரிந்துகொள்ளட்டும்.

    ReplyDelete
  3. நீங்க சொல்றதுதான் உண்மை அண்ணே...

    காங்கிரஸ்காரனுங்க போல வடிகட்டுன அயோக்கியனுங்க சீமானுக்கு எதிராக செய்யும் சதியாகத்தான் இது இருக்கும்...

    ReplyDelete
  4. விஜயலட்சுமி இவ்வாறு பரபரப்புப் புகார் கூறுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நடிகை ராதிகா தயாரித்த ஒரு கேம் ஷோவில் தொகுப்பாளராக விஜயலட்சுமி பணியாற்றி வந்தார். அப்போது அந்த நிகழ்ச்சியின் இயக்குநர் மீதும் இதுபோல புகார் கூறினார் என்பது நினைவிருக்கலாம்.

    ReplyDelete
  5. ///சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் சீமானின் புயல்வேகப் பிரச்சாரத்தில் காங்கிரஸின் டவுசர் கிழிந்தது அக்கட்சியினருக்கு பெரும் கோபத்தைக் கிளறியிருக்கலாம் என்று நினைக்கிறேன்..!//// தெளிவாக தெரிகிறது இது தான் காரணம் என்று...

    இன்று இந்த செய்தியை கேட்டதும் சிரிப்பு தான் வந்தது.. கேக்கிறவன் கேனயனாக இருந்தால் எருமைமாடும் ஏரோப்பிளேன் ஓட்டுமாம் என்பது போல இருக்கு.. ...தேர்திலில் அடி வாங்கியதில் சித்தம் கலங்கி விட்டது போல அது தான் சின்ன புள்ள தனமாவே ஜோசிக்கிரார்கள்...

    ReplyDelete
  6. என்னவோ, எல்லாம் தெரிஞ்ச நீங்க சொல்றதால நம்ப வேண்டியிருக்கு...

    ஆனா பாருங்க!! இவர் படத்துல ஹீரோயினா சிங்கள பொண்னுதான் நடிக்குது...,

    லவ் பண்ணாருன்னு ஒரு தெலுங்கு/கன்னட பொண்ணு சொல்லுது..

    தமிழ் புள்ளைங்களுக்கும் இவருக்கும் ராசி இல்லையோ என்னவோ!!

    ReplyDelete
  7. நல்ல வேளை!!, உங்க கருத்துப்படி தோத்துப் போன காங்கிரஸ்காரன் எவனும் போய் அவர் என்னோட ஓரினச் சேர்க்கை வச்சிருந்தாருன்னு புகார் கொடுக்கலை!!

    அந்த அளவுள சந்தோஷப் பட்டுக்க வேண்டியதுதான்.

    ReplyDelete
  8. மிக தேவையான பதிவு,
    ஊடகங்கள் நினைத்தான் ஒருவரை எப்படி வேண்டுமானாலும் சித்தரிக்க முயலும் என்பதற்கான எடுத்துக் காட்டுதான் இது.உண்மையை உரைக்க வேண்டிய ஊடகங்களின் வேலையை சில பதிவுகளே செய்கின்றன.அதில் உங்கள் பங்கும் மகத்தானது நண்பரே.இதில் காவல்துறையும்,நீதிமன்றமும் என்ன ச்ய்கின்றது என்பதை பார்ப்போம்.
    நன்றி.

    ReplyDelete
  9. // தி.மு.க. நின்ற இடங்களிலெல்லாம் தோல்வி என்றால் அது ஆட்சியாளர்கள் மீது மக்களுக்கு இருந்த கடுப்பு என்றே எடுத்துக் கொள்ளலாம். ஆனால் காங்கிரஸ் மீது..? அவர்கள் ஆளும் கட்சியினரின் தோழமைக் கட்சி என்ற ஒரு விஷயம் மட்டும்தான். ஆனால் இந்த ஒன்றுக்காகவேதான் காங்கிரஸுக்கு இவ்வளவு பெரிய தோல்வியா என்றால் இதை நான் நம்பவில்லை..!

    ஊழலில் கூட்டணி அமைத்தது.. உயர்ந்து கொண்டேயிருந்த விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த திராணியற்ற நிலையில் ஆட்சி நடத்தியது.. கூடவே எண்ணற்ற தமிழ் இளைஞர்களை கொந்தளிக்க வைத்திருந்த முள்ளிவாய்க்கால் படுகொலையில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி செய்த துரோகமும், அந்தத் துரோகத்தை சீமான் தோலுரித்துக் காட்டியதாலும்தான் தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கு இந்த அளவுக்கான படுதோல்வி கிடைத்தது //

    ஆக.. காங்கிரஸின் இந்தத் தோல்வியில் சீமானுக்கு பெரும் பங்கு உண்டு என்பது அக்கட்சியினருக்கு கோபத்தைக் கிளப்பியுள்ளது// மிகச்சரி அண்ணே...

    Read more: http://truetamilans.blogspot.com/2011/06/blog-post_617.html#ixzz1O8UiYh6R

    ReplyDelete
  10. நல்ல வேளை,நாட்டுல இருக்க எல்லா காங்கிரஸ் காரர்களின் மனைவியர்களோடும் தொடர்பு ,கள்ளக்காதல் என்ற புகார் வரவில்லை.அதனால் தான் சீமான் "உள்ளடி" வேலை செய்து,தேர்தலில் தோற்கடித்து விட்டார் என்று சொல்லாத வகையில் இன்னும் கொஞ்சம் எச்சியை மிச்சம் வைக்கலாம்.

    ReplyDelete
  11. சீமான் புகழ் விஷலட்சுமி விரும்பினால்,அவரை இரண்டாவது திருமணம் செய்து,தியாகியாகி,தொண்டு செய்ய தயாராக உள்ளேன்.

    ReplyDelete
  12. [[[ஜோ/Joe said...

    எனக்கும் நீங்க சொல்லுறதுதான் சரிண்ணு படுது அண்ணே!]]]

    புரிதலுக்கு மிக்க நன்றி ஜோ..!

    ReplyDelete
  13. [[[காலப் பறவை said...

    சீமானை இது போன்ற சில்லுகளால் வீழ்த்திவிட முடியாது என்பதை அல்லக்கை காங்கிரஸ்காரர்கள் புரிந்து கொள்ளட்டும்.]]]

    அல்லக்கைகள் எப்பவும் அல்லக்கைகளாகத்தான் இருக்கும் ஸார்..! தலைவர்கள்தான் புரிந்து கொள்ள வேண்டும்..! இது தலைவர்களின் சதி வேலைதான்..!

    ReplyDelete
  14. [[[கே.ஆர்.பி.செந்தில் said...

    நீங்க சொல்றதுதான் உண்மை அண்ணே.
    காங்கிரஸ்காரனுங்க போல வடிகட்டுன அயோக்கியனுங்க சீமானுக்கு எதிராக செய்யும் சதியாகத்தான் இது இருக்கும்.]]]

    ம்.. நன்றி செந்தில்..! இந்த அளவுக்குத் தைரியமா இறங்குறானுங்கன்னா ஆட்சி கைல இருக்குற தைரியம்தான..? அடுத்த தேர்தல்ல அவனுகளையும் காலி செய்யணும்..!

    ReplyDelete
  15. [[[NELLAI NANBAN said...

    விஜயலட்சுமி இவ்வாறு பரபரப்புப் புகார் கூறுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நடிகை ராதிகா தயாரித்த ஒரு கேம் ஷோவில் தொகுப்பாளராக விஜயலட்சுமி பணியாற்றி வந்தார். அப்போது அந்த நிகழ்ச்சியின் இயக்குநர் மீதும் இதுபோல புகார் கூறினார் என்பது நினைவிருக்கலாம்.]]]

    அதுதான் இதிலேயே சொல்லியிருக்கேனே நெல்லை ஸார்..!

    தங்கவேட்டை நிகழ்ச்சியின் இயக்குநர் ரமேஷ் என்று..!

    ReplyDelete
  16. [[[கந்தசாமி. said...

    ///சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் சீமானின் புயல்வேகப் பிரச்சாரத்தில் காங்கிரஸின் டவுசர் கிழிந்தது அக்கட்சியினருக்கு பெரும் கோபத்தைக் கிளறியிருக்கலாம் என்று நினைக்கிறேன்..!////

    தெளிவாக தெரிகிறது இதுதான் காரணம் என்று. இன்று இந்த செய்தியை கேட்டதும் சிரிப்புதான் வந்தது. கேக்கிறவன் கேனயனாக இருந்தால் எருமை மாடும் ஏரோப்பிளேன் ஓட்டுமாம் என்பது போல இருக்கு. தேர்திலில் அடி வாங்கியதில் சித்தம் கலங்கி விட்டது போல அதுதான் சின்னபுள்ளதனமாவே ஜோசிக்கிரார்கள்.]]]

    இதற்கான தண்டனையை வரும் தேர்தலில் நிச்சயம் அறுவடை செய்வார்கள்..!

    ReplyDelete
  17. [[[மு.சரவணக்குமார் said...

    என்னவோ, எல்லாம் தெரிஞ்ச நீங்க சொல்றதால நம்ப வேண்டியிருக்கு.]]]

    நம்பவே வேண்டாம் சரவணன்.. கொஞ்ச நாள் பொறுங்கள். உண்மை தானாக வெளியில் வரும்..!

    ReplyDelete
  18. [[[மு.சரவணக்குமார் said...

    நல்ல வேளை!!, உங்க கருத்துப்படி தோத்துப் போன காங்கிரஸ்காரன் எவனும் போய் அவர் என்னோட ஓரினச் சேர்க்கை வச்சிருந்தாருன்னு புகார் கொடுக்கலை!! அந்த அளவுள சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான்.]]]

    இது ரொம்ப டூ மச்சான நினைப்பு..!

    ReplyDelete
  19. [[[சார்வாகன் said...

    மிக தேவையான பதிவு,
    ஊடகங்கள் நினைத்தான் ஒருவரை எப்படி வேண்டுமானாலும் சித்தரிக்க முயலும் என்பதற்கான எடுத்துக் காட்டுதான் இது. உண்மையை உரைக்க வேண்டிய ஊடகங்களின் வேலையை சில பதிவுகளே செய்கின்றன. அதில் உங்கள் பங்கும் மகத்தானது நண்பரே. இதில் காவல்துறையும், நீதிமன்றமும் என்ன ச்ய்கின்றது என்பதை பார்ப்போம். நன்றி.]]]

    எதுவும் செய்ய மாட்டார்கள். கொஞ்ச நாள் கழித்து விஜயலட்சுமியே வழக்கை வாபஸ் வாங்கிக் கொண்டு போகப் போகிறார். அதுதான் நடக்கப் போகிறது..!

    ReplyDelete
  20. [[[Yes We (எஸ் வி) said...

    ஆக.. காங்கிரஸின் இந்தத் தோல்வியில் சீமானுக்கு பெரும் பங்கு உண்டு என்பது அக்கட்சியினருக்கு கோபத்தைக் கிளப்பியுள்ளது//

    மிகச் சரி அண்ணே...]]]

    வேறென்ன காரணமாக இருக்க முடியும் ஸார்..?

    ReplyDelete
  21. [[[ஜெரி ஈசானந்தன். said...
    நல்ல வேளை, நாட்டுல இருக்க எல்லா காங்கிரஸ்காரர்களின் மனைவியர்களோடும் தொடர்பு, கள்ளக் காதல் என்ற புகார் வரவில்லை. அதனால்தான் சீமான் "உள்ளடி" வேலை செய்து, தேர்தலில் தோற்கடித்துவிட்டார் என்று சொல்லாத வகையில் இன்னும் கொஞ்சம் எச்சியை மிச்சம் வைக்கலாம்.]]]

    வேண்டாம் ஜெரி.. நாமும் இவர்களைப் போலவே பேச வேண்டுமா என்ன..? உண்மை ஒரு நாள் நிச்சயம் வெளியில் வரும்..!

    ReplyDelete
  22. [[[ஜெரி ஈசானந்தன். said...
    சீமான் புகழ் விஷலட்சுமி விரும்பினால், அவரை இரண்டாவது திருமணம் செய்து, தியாகியாகி, தொண்டு செய்ய தயாராக உள்ளேன்.]]]

    -))))))))))))

    ReplyDelete
  23. //நிச்சயமாக இந்தச் செய்தி தவறானது என்பதில் நான் நூறு சதவிகிதம் நம்புகிறேன்..!
    //
    ஏன் நித்யா மாதிரி நாம் ஆம்பிளையே இல்லைன்னு சொல்ல போறாரா?? இது தான் உங்க கிட்ட இருக்கிற பிரச்சணை. உங்களுக்கு பிடிச்சவர் மேல ஒரு குற்றச்சாட்டு எழுந்தால் எடுத்த எடுப்பிலே அதை மறுக்கிறது. விசாரணை நடக்கட்டும், உண்மை வெளிவரட்டு அதுக்குள்ள நீங்களாவே எதுக்கு தீர்ப்பு எழுதுறீங்க

    அவரு இலங்கை தமிழர்களுக்காக போராடறாரு என்பதற்க்காக அவரை ஒரு மகாத்மா ரேஞ்சுக்கு பில்டப் கொடுக்குறாதை நிறுத்துங்க. அவரும் ஆசா பாசம் இருக்கிற சாதாரண மனிதர் தான். சினிமாவுல, "ஏன் சேலை கசங்கிடிம் யோகம் இன்னைக்குன்னு" தொப்புள் தெரிய படம் எடுத்தவர் தான் மறந்திடாதீங்க.சின்னத்திரை நடிகைளின் ஒழுக்கத்தை விமர்சணம் செய்யும் உங்களுக்கு பெரிய திரை இயக்குனர்கள் நடிகையை எப்படி அணுகுவார்கள்ன்னு தெரியாதா?? சும்மா சப்பை கட்டு கட்டாதீங்க.

    ராஜீவ் காந்தியை வாய் கிழிய பேசிய இவர் மட்டும் யோக்கியாமா, தமிழ் நாட்டில் இவர் திருமணம் செய்ய தகுதியான பெண்ணே இல்லையா? இல்லை தமிழ் நாட்டில் பாதிக்க பட்ட, ஆதரவற்ற பெண்களே இல்லையா, எல்லா பெண்களும் அம்மா ஆட்சிக்கு வந்தவுடன் முன்னேற்றம் அடைந்து விட்டார்களா, இவர் இலங்கை பெண்ணை திருமணம் செய்ய.

    வெறும் அரசியல் ஆதாயங்களூக்கா இலங்கை பெண்ணை திருமணம் செய்யும் இவர் இனி எந்த முகத்தை வைத்து சோனியாவை விமர்சணம் செய்வார்.

    ReplyDelete
  24. Paw your fingers for typed this super article. super guru

    ReplyDelete
  25. சூர்யா விஜய் நடித்த பிரண்ட்ஸ் படத்தில் நடித்தவர் விஜயலட்சுமியா இவர்?

    ReplyDelete
  26. I find it rather ridiculous. Even if Seeman was in love with her and then changed his mind and decided not to marry her,what can the police do?
    Afterall she loved so many people ,nearly married someone and then changed her mind,in that case they can all go to police and make a complaint against her.
    Surely loving someone and not marrying the same person is not a punishable offence in Tamil Nadu?If that is the case then Tamil Nadu prisons will be overpopulated.

    I also don't believe this story,not that I am saying Seeman can't fall in love with a girl.if he does there is nothing with it,he is also a human being with emotion like everyone else,but I think this story is fishy .

    @Saravankumar
    I think this Vijayalaxmi is in fact a Tamil girl,not a Telugu-Kannada girl.She is from a Tamil family in Bangaluru

    -Vanathy

    ReplyDelete
  27. சீமான் எங்கள் அண்ணனின் தம்பி கண்டிப்பாக தவறு செய்து இருக்கா மாட்டார். மானம் கெட்டவர்களின் மதி கெட்ட செயல் இது.

    ReplyDelete
  28. எந்த நாட்டில் பிறந்தாலும் தமிழன் தமிழந்தான், இத்தாலியன் ஆக முடியாது இந்த அடிப்படை தெரியாது டமில் டுமில் எப்படி கருத்து சொல்கிறார் என்று புரியவில்லை.

    ReplyDelete
  29. அண்ணே!உணர்வு என்பதற்கும் உணர்ச்சி என்பதற்கும் வித்தியாசங்கள் இருக்குது.சீமான் ஒன்றும் முற்றும் துறந்த முனிவர் அல்ல.திரைப்படத்துறையில் ஆண்,பெண் நெருக்கம் தவிர்க்க முடியாதது என்பது உங்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை.இது பற்றி சீமானே அறிக்கை வெளியிடும் போது மட்டுமே உண்மைகள் வெளிப்படும்.

    ஆமா!இந்தப் பெண் யார்?இது வரைக்கும் இவர் பெயர் கூட கேள்விப்பட்டதில்லையே!

    இந்த விவகாரம் தேர்தலுக்கு முன்பு வெளியாகியிருந்தால் சிலருக்கு அல்வா சாப்பிட்ட மாதிரியான செய்தியாக இருந்திருக்கும்.இப்போதைய கால கட்டத்தில் இந்தப் பிரச்சினை உருவாகுவதின் பின்ணணியில் அரசியல் சூழ்ச்சிகள் இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

    சீமான் ஈழப்போரில் துயரம் அனுபவித்த பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்ள நினைத்த செய்திகள் (தமிழ்ச்செல்வன் உறவினர் என்கிற மாதிரி செய்திகள் வெளி வருகிறது) கசிந்து திசை திருப்பும் வேலையாகவும் கூட இருக்கலாம்.

    ReplyDelete
  30. This comment has been removed by the author.

    ReplyDelete
  31. ஆமாம் இவ்வளவு நாள் சீமான் போராட்டம்,சிறை சென்ற போது கூட இந்த விஜயலட்சுமி எதிலுமே தென்பட்டதாக தெரியவில்லை.
    சீமான் இயக்கிய வாழ்க்கை திரைப்படம் 2008ல் வெளியானது.அதில் இப்பெண் சிறு வேடத்தில் நடித்து உள்ளார்.சீமான் மீது 4 பக்க புகார் கொடுத்ததாக செய்திகள் கூறுவது உண்மையா?அத்னை ஊடகங்களில் வெளியிடுவாரா?

    குமாரி விஜயலட்சுமியின் வாழ்க்கை குறிப்பு விக்கி பீடியாவில் இருந்து
    http://en.wikipedia.org/wiki/Vijayalakshmi_(Kannada_actress)

    ReplyDelete
  32. [[[damildumil said...

    //நிச்சயமாக இந்தச் செய்தி தவறானது என்பதில் நான் நூறு சதவிகிதம் நம்புகிறேன்..!//

    ஏன் நித்யா மாதிரி நாம் ஆம்பிளையே இல்லைன்னு சொல்ல போறாரா?? இதுதான் உங்க கிட்ட இருக்கிற பிரச்சணை. உங்களுக்கு பிடிச்சவர் மேல ஒரு குற்றச்சாட்டு எழுந்தால் எடுத்த எடுப்பிலே அதை மறுக்கிறது. விசாரணை நடக்கட்டும், உண்மை வெளிவரட்டு அதுக்குள்ள நீங்களாவே எதுக்கு தீர்ப்பு எழுதுறீங்க?]]]

    நான் அவரை நம்புகிறேன்.. அதனால் எழுதுகிறேன். உங்களுக்கு நம்பிக்கையில்லையெனில் காத்திருங்கள். பார்ப்போம்..!

    ReplyDelete
  33. [[[கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் ) said...

    Paw your fingers for typed this super article. super guru.]]]

    அவரவர்க்கு மனசாட்சி இருக்கிறது நண்பரே..! பத்திரிகா தர்மம் என்றாலும் இதன்படியும் ஒரு முறை யோசித்து எழுதினால் இப்படித்தான் எழுத முடியும்..!

    ReplyDelete
  34. [[[ஒரு வாசகன் said...

    சூர்யா விஜய் நடித்த பிரண்ட்ஸ் படத்தில் நடித்தவர் விஜயலட்சுமியா இவர்?]]]

    அவரேதான் இவர்.. இவரேதான் அவர்..!

    ReplyDelete
  35. [[[vanathy said...

    I find it rather ridiculous. Even if Seeman was in love with her and then changed his mind and decided not to marry her, what can the police do?]]]

    அப்படியொரு வாய்ப்பே இல்லை..!

    [[[Afterall she loved so many people, nearly married someone and then changed her mind, in that case they can all go to police and make a complaint against her.
    Surely loving someone and not marrying the same person is not a punishable offence in Tamil Nadu? If that is the case then Tamil Nadu prisons will be over populated.]]]

    விஜயலட்சுமி அவரை சந்தித்ததே ஒரு முறைதான் என்பது உறுதி. இதில் எங்கே காதல் வந்திருக்கப் போகிறது..?

    [[[I also don't believe this story, not that I am saying Seeman can't fall in love with a girl. if he does there is nothing with it, he is also a human being with emotion like everyone else, but I think this story is fishy.]]

    புரிதலுக்கு மிக்க நன்றிம்மா..!

    ReplyDelete
  36. [[[தமிழன் said...

    சீமான் எங்கள் அண்ணனின் தம்பி கண்டிப்பாக தவறு செய்து இருக்கா மாட்டார். மானம் கெட்டவர்களின் மதி கெட்ட செயல் இது.]]]

    -)))))))))

    ReplyDelete
  37. [[[தமிழன் said...

    எந்த நாட்டில் பிறந்தாலும் தமிழன் தமிழந்தான், இத்தாலியன் ஆக முடியாது. இந்த அடிப்படை தெரியாது டமில் டுமில் எப்படி கருத்து சொல்கிறார் என்று புரியவில்லை.]]]

    அவர் கருத்து அவருக்கு..! நாம் சீமானை புரிந்து கொண்டுள்ளோம். மற்றவர்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்..!

    ReplyDelete
  38. //பாரதீய ஜனதா என்ற கட்சி இடையில் புகுந்து ஓட்டுக்களைக் களவாடிய காரணத்தினால்தான்

    இந்த வரிகளை நீங்கள் திரும்பவும் யோசிக்கலாம். இந்த மாதிரி ஏனோ தானோன்னு எழுதா உ.த.

    புடிக்களைன்க்ராதுக்காக நோக்காத்துக்கு எழுதகூடாது.

    ReplyDelete
  39. [[[ராஜ நடராஜன் said...

    அண்ணே! உணர்வு என்பதற்கும் உணர்ச்சி என்பதற்கும் வித்தியாசங்கள் இருக்குது. சீமான் ஒன்றும் முற்றும் துறந்த முனிவர் அல்ல. திரைப்படத் துறையில் ஆண், பெண் நெருக்கம் தவிர்க்க முடியாதது என்பது உங்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இது பற்றி சீமானே அறிக்கை வெளியிடும்போது மட்டுமே உண்மைகள் வெளிப்படும்.]]]

    அவரே இதைத்தான் சொல்கிறார்..! எனக்கும், அந்தப் பெண்ணுக்கும் யாதொரு தொடர்பும் இல்லையென்று..!

    [[[ஆமா! இந்தப் பெண் யார்? இதுவரைக்கும் இவர் பெயர் கூட கேள்விப்பட்டதில்லையே!]]]

    நானே பாதி கதை எழுதியிருக்கிறேன் அண்ணே..

    [[[இந்த விவகாரம் தேர்தலுக்கு முன்பு வெளியாகியிருந்தால் சிலருக்கு அல்வா சாப்பிட்ட மாதிரியான செய்தியாக இருந்திருக்கும். இப்போதைய கால கட்டத்தில் இந்தப் பிரச்சினை உருவாகுவதின் பின்ணணியில் அரசியல் சூழ்ச்சிகள் இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.]]]

    அரசியல் சூழ்ச்சியேதான்.. காங்கிரஸின் கைங்கர்யம் இருக்கிறது.

    [[[சீமான் ஈழப் போரில் துயரம் அனுபவித்த பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்ள நினைத்த செய்திகள் (தமிழ்ச்செல்வன் உறவினர் என்கிற மாதிரி செய்திகள் வெளி வருகிறது) கசிந்து திசை திருப்பும் வேலையாகவும் கூட இருக்கலாம்.]]]

    இதுதான் பலரது சந்தேகம்..!

    ReplyDelete
  40. [[[சார்வாகன் said...

    ஆமாம் இவ்வளவு நாள் சீமான் போராட்டம், சிறை சென்ற போதுகூட இந்த விஜயலட்சுமி எதிலுமே தென்பட்டதாக தெரியவில்லை.

    சீமான் இயக்கிய வாழ்க்கை திரைப்படம் 2008-ல் வெளியானது. அதில் இப்பெண் சிறு வேடத்தில் நடித்து உள்ளார். சீமான் மீது 4 பக்க புகார் கொடுத்ததாக செய்திகள் கூறுவது உண்மையா? அத்னை ஊடகங்களில் வெளியிடுவாரா?]]]

    உண்மையாக இருந்தால்தானே பேச முடியும்..?

    [[[குமாரி விஜயலட்சுமியின் வாழ்க்கை குறிப்பு விக்கி பீடியாவில் இருந்து

    http://en.wikipedia.org/wiki/Vijayalakshmi_(Kannada_actress)]]]

    தகவலுக்கு மிக்க நன்றி..!

    ReplyDelete
  41. [[[ConverZ stupidity said...

    //பாரதீய ஜனதா என்ற கட்சி இடையில் புகுந்து ஓட்டுக்களைக் களவாடிய காரணத்தினால்தான்

    இந்த வரிகளை நீங்கள் திரும்பவும் யோசிக்கலாம். இந்த மாதிரி ஏனோ தானோன்னு எழுதா உ.த. புடிக்களைன்க்ராதுக்காக நோக்காத்துக்கு எழுதகூடாது.]]]

    புடிக்கலைன்றதுக்காக எழுதலை. உண்மையும் இதுதானே..?

    ReplyDelete
  42. http://venuvanamsuka.blogspot.com/2008/11/blog-post_04.html

    நண்பர் சீமானின் வீடு ஒரு சேவற்கூடாரம். பத்திலிருந்து இருபது சேவல்கள் வரை உண்டு. ஒரு கம்யூன் வாழ்க்கை வாழ்ந்து வருகிற கூட்டம். உதவி இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள், சின்ன நடிகர்கள் . . இப்படி நிறைய நண்பர்கள் அங்கு ஒரு குடும்பமாக உள்ளனர். யார்யாருக்கு வேலை கிடைக்கிறதோ, அவர்கள் செலவைப் பார்த்துக் கொள்ள, மற்றவர்கள் சாமான்கள் வாங்க, ஒரு சிலர் சமைக்க, எல்லோரும் சாப்பிடுவார்கள். யாருக்கும், யாரோடும் வருத்தமோ, கோபமோ வருவது இல்லை. எங்கோ பிறந்து, எங்கெங்கோ வளர்ந்து அங்கு வாழும் சகோதரர்கள் ஒருவருக்கொருவரை முறை சொல்லி அழைத்துக் கொள்வதைப் பார்ப்பதே அழகு. மாமா, மருமகன், அத்தான், மைத்துனன், சித்தப்பா, மகன், அண்ணன், தம்பி இப்படி பல. எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும். சமையல் வேலைகள் சதா நடந்து கொண்டே இருக்கும். யாராவது ஒருவர் வெங்காயம் நறுக்கிக் கொண்டிருப்பதை நான் அங்கு போகும் போதெல்லாம் தவறாமல் பார்த்திருக்கிறேன். எப்படியும் ஒருவர் சவரம் செய்து கொண்டிருப்பார். ஒருவர் தூங்கிக் கொண்டிருப்பார். ஒருவர் ராஜ் டிஜிட்டல் பிளஸ்ஸில் பழைய பாடாவதிப் படமொன்றை உணர்ச்சி பொங்கப் பார்த்துக் கொண்டிருப்பார். மற்றொருவர் சத்தமாக தினத்தந்தி படித்துக் கொண்டிருப்பார். படிக்கும் ஒவ்வொரு செய்திக்கும் தனது கமெண்ட்டுடன். உ.தா. என்னைப் பார்த்து மற்ற கட்சிகள் பயப்படுகின்றன - விஜயகாந்த். பயப்படுவாஞ்ஞல்ல . . . முதுகில் குத்திய தேவகெளடா - எடியூரப்பா. குத்தத்தான் செய்வென் . . . இப்படி மதுரைத் தமிழில். வயதில் மூத்த ஒரு சிலர் அந்த வீட்டில் இருந்தாலும் குடும்பத் தலைவர் என்னவோ சீமான்தான்.

    ReplyDelete
  43. Anne Arumai...
    Neenga ezhuthanuthaleye enakku pudicha oru idugai ithu thaan

    ReplyDelete
  44. //உண்மைத்தமிழன் said...

    [[[ConverZ stupidity said...

    //பாரதீய ஜனதா என்ற கட்சி இடையில் புகுந்து ஓட்டுக்களைக் களவாடிய காரணத்தினால்தான்

    இந்த வரிகளை நீங்கள் திரும்பவும் யோசிக்கலாம். இந்த மாதிரி ஏனோ தானோன்னு எழுதா உ.த. புடிக்களைன்க்ராதுக்காக நோக்காத்துக்கு எழுதகூடாது.]]]

    புடிக்கலைன்றதுக்காக எழுதலை. உண்மையும் இதுதானே..? //

    களவாடுதல் என்பது தவறான வார்த்தைப் பிரயோகம். பிஜேபியை மதித்து வாக்கு செலுத்திய மக்களை இழிவுபடுத்துவதுபோல் இருக்கிறது. ஓட்டைப் பிரித்தனர் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.

    ReplyDelete
  45. //vanathy said...

    I find it rather ridiculous. Even if Seeman was in love with her and then changed his mind and decided not to marry her,what can the police do?
    Afterall she loved so many people ,nearly married someone and then changed her mind,in that case they can all go to police and make a complaint against her.
    Surely loving someone and not marrying the same person is not a punishable offence in Tamil Nadu?If that is the case then Tamil Nadu prisons will be overpopulated.

    I also don't believe this story,not that I am saying Seeman can't fall in love with a girl.if he does there is nothing with it,he is also a human being with emotion like everyone else,but I think this story is fishy .
    //

    நீங்கள் சொல்வது சரியே எனினும், "நம்பிவந்த பொண்ணை ஏமாற்றி கைவிட்டவர் எப்படி தமிழ் மக்களை காப்பாற்றுவார்?" என்பது போல சில புல்லுருவிகள் சீமானின் கேரக்டரை டேமேஜ் செய்ய எடுத்திருக்கும் முயற்சியாகத்தான் தெரிகிறது! புகார்தானே கொடுத்திருக்கிறார். வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வரும்முன்னரே, அது வாபஸ் வாங்கப்படும்! அதுவரை ஊடகங்களின் விற்பனைப்பசிக்கு இது ஒரு நல்ல தீனி!

    ReplyDelete
  46. //மு.சரவணக்குமார் said...

    நல்ல வேளை!!, உங்க கருத்துப்படி தோத்துப் போன காங்கிரஸ்காரன் எவனும் போய் அவர் என்னோட ஓரினச் சேர்க்கை வச்சிருந்தாருன்னு புகார் கொடுக்கலை!!

    அந்த அளவுள சந்தோஷப் பட்டுக்க வேண்டியதுதான்.//

    அப்படிப் பொய் சொல்றதுக்குக் கூட ஒரு தைரியம் வேணும். சீமானுடன் நேருக்கு நேர் நின்று கொள்கை ரீதியில் ஜெயிக்கமுடியாத கோழைகள் இப்படித்தான் அவதூறு பரப்புவர்!

    ReplyDelete
  47. //மு.சரவணக்குமார் said...

    என்னவோ, எல்லாம் தெரிஞ்ச நீங்க சொல்றதால நம்ப வேண்டியிருக்கு...

    ஆனா பாருங்க!! இவர் படத்துல ஹீரோயினா சிங்கள பொண்னுதான் நடிக்குது...,//

    சிங்களப்பெண்-கன்னட ஆணுக்குப் பிறந்தது பூஜாவின் தவறா? அவரை சிங்களத்தி என்று கூறுவதா அல்லது கன்னடத்தி என்று கூறுவதா? நடிப்புக்கலைக்கு மொழி அவசியமில்லை. தமிழ் வாசனையே அறிந்திராத எத்தனையோ நடிகைகள் கோலிவுட்டில் கோலோச்சிக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் நன்கு தமிழ் பேசத்தெரிந்த, நடிக்கத்தெரிந்த ஒரு நடிகையை சீமான் தன் படத்தில் உபயோகப்படுத்தியிருப்பது எவ்வாறு தவறாகும்?

    ReplyDelete
  48. //Gujaal said...

    http://venuvanamsuka.blogspot.com/2008/11/blog-post_04.html//

    படித்தபின் மனசுக்கு இதமாய் இருந்தது. போலி குடும்ப முறைகள் ஒழிந்து இது போன்ற கம்யூன் முறைமை செழித்து வளர்வதும் மனிதம் அடிப்படையில் நல்லதுதான்!

    ReplyDelete
  49. If Cong persons are behind this false allegation against Seeman, why ADMK Govt have registered Case against Seeman under 6 Sections. Why not the Police thoroughly investigate and say it's a false case. Instead ADMK Govt have booked Seeman under 6 sections and searching him to arrest.

    The dominate Caste force behind Jaya won’t change and they won’t tolerate and allow Seeman and Actor Vijay (Because of his sure name Joseph Vijay) to grow.

    ReplyDelete
  50. [[[Gujaal said...
    http://venuvanamsuka.blogspot.com/2008/11/blog-post_04.html
    நண்பர் சீமானின் வீடு ஒரு சேவற்கூடாரம். பத்திலிருந்து இருபது சேவல்கள் வரை உண்டு. ஒரு கம்யூன் வாழ்க்கை வாழ்ந்து வருகிற கூட்டம். உதவி இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள், சின்ன நடிகர்கள் . . இப்படி நிறைய நண்பர்கள் அங்கு ஒரு குடும்பமாக உள்ளனர். யார்யாருக்கு வேலை கிடைக்கிறதோ, அவர்கள் செலவைப் பார்த்துக் கொள்ள, மற்றவர்கள் சாமான்கள் வாங்க, ஒரு சிலர் சமைக்க, எல்லோரும் சாப்பிடுவார்கள். யாருக்கும், யாரோடும் வருத்தமோ, கோபமோ வருவது இல்லை. எங்கோ பிறந்து, எங்கெங்கோ வளர்ந்து அங்கு வாழும் சகோதரர்கள் ஒருவருக்கொருவரை முறை சொல்லி அழைத்துக் கொள்வதைப் பார்ப்பதே அழகு. மாமா, மருமகன், அத்தான், மைத்துனன், சித்தப்பா, மகன், அண்ணன், தம்பி இப்படி பல. எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும். சமையல் வேலைகள் சதா நடந்து கொண்டே இருக்கும். யாராவது ஒருவர் வெங்காயம் நறுக்கிக் கொண்டிருப்பதை நான் அங்கு போகும் போதெல்லாம் தவறாமல் பார்த்திருக்கிறேன். எப்படியும் ஒருவர் சவரம் செய்து கொண்டிருப்பார். ஒருவர் தூங்கிக் கொண்டிருப்பார். ஒருவர் ராஜ் டிஜிட்டல் பிளஸ்ஸில் பழைய பாடாவதிப் படமொன்றை உணர்ச்சி பொங்கப் பார்த்துக் கொண்டிருப்பார். மற்றொருவர் சத்தமாக தினத்தந்தி படித்துக் கொண்டிருப்பார். படிக்கும் ஒவ்வொரு செய்திக்கும் தனது கமெண்ட்டுடன். உ.தா. என்னைப் பார்த்து மற்ற கட்சிகள் பயப்படுகின்றன - விஜயகாந்த். பயப்படுவாஞ்ஞல்ல . . . முதுகில் குத்திய தேவகெளடா - எடியூரப்பா. குத்தத்தான் செய்வென் . . . இப்படி மதுரைத் தமிழில். வயதில் மூத்த ஒரு சிலர் அந்த வீட்டில் இருந்தாலும் குடும்பத் தலைவர் என்னவோ சீமான்தான்.]]]

    இவர்களை மீறி அவர் காதலித்திருக்க முடியுமா என்ன..? யோசியுங்கள்..!

    ReplyDelete
  51. [[[டக்கால்டி said...
    Anne Arumai...
    Neenga ezhuthanuthaleye enakku pudicha oru idugai ithu thaan.]]]

    நன்றி நண்பரே..!

    ReplyDelete
  52. [[[ரிஷி said...

    களவாடுதல் என்பது தவறான வார்த்தைப் பிரயோகம். பிஜேபியை மதித்து வாக்கு செலுத்திய மக்களை இழிவுபடுத்துவதுபோல் இருக்கிறது. ஓட்டைப் பிரித்தனர் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.]]]

    ஓ.. நீங்க அப்படிச் சொல்றீங்களா..? நான் அந்த இடத்துல சொல்றதுக்குப் பொருத்தமா இருக்குமேன்னு பயன்படுத்தினேன்..!

    ReplyDelete
  53. [[[ரிஷி said...

    நீங்கள் சொல்வது சரியே எனினும், "நம்பி வந்த பொண்ணை ஏமாற்றி கைவிட்டவர் எப்படி தமிழ் மக்களை காப்பாற்றுவார்?" என்பது போல சில புல்லுருவிகள் சீமானின் கேரக்டரை டேமேஜ் செய்ய எடுத்திருக்கும் முயற்சியாகத்தான் தெரிகிறது! புகார்தானே கொடுத்திருக்கிறார். வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வரும் முன்னரே, அது வாபஸ் வாங்கப்படும்! அதுவரை ஊடகங்களின் விற்பனைப் பசிக்கு இது ஒரு நல்ல தீனி!]]]

    ம்.. இன்னிக்கு பாருங்கள்.. சீமான் மீது வழக்கு பதிவு செய்துவிட்டார்கள். இது எங்க போய் முடியப் போகுதோ..?

    ReplyDelete
  54. [[[சரவணக்குமார் said...

    நல்ல வேளை!!, உங்க கருத்துப்படி தோத்துப் போன காங்கிரஸ்காரன் எவனும் போய் அவர் என்னோட ஓரினச் சேர்க்கை வச்சிருந்தாருன்னு புகார் கொடுக்கலை!! அந்த அளவுள சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான்.//

    அப்படிப் பொய் சொல்றதுக்குக் கூட ஒரு தைரியம் வேணும். சீமானுடன் நேருக்கு நேர் நின்று கொள்கை ரீதியில் ஜெயிக்க முடியாத கோழைகள் இப்படித்தான் அவதூறு பரப்புவர்!]]]

    சரியாச் சொன்னீங்க ரிஷி..!

    ReplyDelete
  55. [[[சரவணக்குமார் said...

    சிங்களப் பெண்-கன்னட ஆணுக்குப் பிறந்தது பூஜாவின் தவறா? அவரை சிங்களத்தி என்று கூறுவதா அல்லது கன்னடத்தி என்று கூறுவதா? நடிப்புக் கலைக்கு மொழி அவசியமில்லை. தமிழ் வாசனையே அறிந்திராத எத்தனையோ நடிகைகள் கோலிவுட்டில் கோலோச்சிக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் நன்கு தமிழ் பேசத் தெரிந்த, நடிக்கத் தெரிந்த ஒரு நடிகையை சீமான் தன் படத்தில் உபயோகப்படுத்தியிருப்பது எவ்வாறு தவறாகும்?]]]

    பூஜா பெங்களூரில் வசித்து வந்த நிலையில்தான் திரைப்படத்தில் அறிமுகமானார். நேராக கொழும்புவில் இருந்து இறக்குமதி செய்யப்படவில்லை..!

    ReplyDelete
  56. [[[ரிஷி said...

    படித்த பின் மனசுக்கு இதமாய் இருந்தது. போலி குடும்ப முறைகள் ஒழிந்து இது போன்ற கம்யூன் முறைமை செழித்து வளர்வதும் மனிதம் அடிப்படையில் நல்லதுதான்!]]]

    -))))))))

    ReplyDelete
  57. [[[Prakash said...

    If Cong persons are behind this false allegation against Seeman, why ADMK Govt have registered Case against Seeman under 6 Sections. Why not the Police thoroughly investigate and say it's a false case. Instead ADMK Govt have booked Seeman under 6 sections and searching him to arrest.

    The dominate Caste force behind Jaya won’t change and they won’t tolerate and allow Seeman and Actor Vijay (Because of his sure name Joseph Vijay) to grow.]]]

    எல்லாம் ஒருவித அரசியல்தான். ஜெயா யோக்கியம் என்று யார் சொன்னது. கொஞ்சம், கொஞ்சமாக தன்னை வெளிப்படுத்தி வருகிறார் ஆத்தா..

    ReplyDelete
  58. ஊடக சுதந்ததிரம் என்ற பெயரில் தன் தம்பி செய்த தவறை மறைக்க சீமான் அவர்களை இழிவுபடுத்த முயற்சிக்கிறது சன் "தொல்லை காட்சி".

    ReplyDelete
  59. விஜ்யலக்ஷிமியைப் பற்றி இவ்வளவு தெரிந்த நீ..உண்மை தமிழன் அல்ல அய்யா..உண்மை மாமா..
    தேச துரோகி சீமானுக்கு வக்காலத்து வாங்கும் மாமாவே..

    விடுதலைப்புலிகளின் கைக்கூலிகள் இந்தியாவுக்கே துரோகம் செய்யத்தயங்காத தேசத்துரோகிகளுக்கு பெண்களுக்கு துரோகம் செய்வது சாதரணமய்யா!!!

    ReplyDelete
  60. She is bitch and why don't she go and catch someone like this bloger guy writing comments under name of marmayogi son of bitch

    ReplyDelete
  61. [[[தமிழன் said...

    ஊடக சுதந்ததிரம் என்ற பெயரில் தன் தம்பி செய்த தவறை மறைக்க சீமான் அவர்களை இழிவுபடுத்த முயற்சிக்கிறது சன் "தொல்லை காட்சி".]]]

    ஆடட்டும்.. ஆடட்டும்.. இந்த ஆட்டமும் ஒரு நாள் முடியத்தான் போகுது..!

    ReplyDelete
  62. [[[மர்மயோகி said...

    விஜயலக்ஷிமியைப் பற்றி இவ்வளவு தெரிந்த நீ உண்மை தமிழன் அல்ல அய்யா உண்மை மாமா. தேச துரோகி சீமானுக்கு வக்காலத்து வாங்கும் மாமாவே.
    விடுதலைப்புலிகளின் கைக்கூலிகள் இந்தியாவுக்கே துரோகம் செய்யத் தயங்காத தேசத் துரோகிகளுக்கு பெண்களுக்கு துரோகம் செய்வது சாதரணமய்யா!!!]]]

    உங்களது வாழ்த்துக்கு மிக்க நன்றி..!

    ReplyDelete
  63. [[[armaiuran said...

    She is bitch and why don't she go and catch someone like this bloger guy writing comments under name of marmayogi son of bitch]]]

    போகுது விடுங்க.. ஆதரவு என்ற நிலை இருக்கும்போது எதிர்ப்பாளர்களும் இருக்கத்தானே செய்வார்கள். சொல்லிவிட்டுப் போகிறார்கள்..!

    ReplyDelete
  64. [[[மர்மயோகி said...

    விஜ்யலக்ஷிமியைப் பற்றி இவ்வளவு தெரிந்த நீ..உண்மை தமிழன் அல்ல அய்யா..உண்மை மாமா..
    தேச துரோகி சீமானுக்கு வக்காலத்து வாங்கும் மாமாவே..

    விடுதலைப்புலிகளின் கைக்கூலிகள் இந்தியாவுக்கே துரோகம் செய்யத்தயங்காத தேசத்துரோகிகளுக்கு பெண்களுக்கு துரோகம் செய்வது சாதரணமய்யா!!!]]]

    உண்மையை எழுதினால் மாமா பட்டம் கிடைக்கிறது. இந்த வழக்கின் பின்னால் காங்கிரஸின் "கை" உள்ளது தெளிவாகத் தெரிகிறது. சீமான் மீதான் இந்தக் குற்றச்சாட்டு பொய்யானது என்று திரைத்துறைக்கு மட்டுமல்ல; பொது மக்களுக்கே கூடத் தெரியும். அவர் மீது அபாண்டம் சுமத்த வேண்டிய அவசியம் காங்கிரஸ்காரர்களுக்கு மட்டுமே இருக்கிறது. தன் ஒரு தாலி அறுந்ததற்காக, லட்சக்கணக்கான ஈழப்பெண்களின் தாலிகளை அறுக்க சிங்கள இராணுவத்திற்கு பணமும், படையும், உளவுத்துறையின் உதவியும் மறைமுகமாகக் கொடுத்து விட்டு, அப்படி எதுவும் செய்யவே இல்லை என்று சாதித்தது யார்? ஆனால், "இத்தகைய உதவிகளைச் செய்த இந்தியாவிற்கு நன்றி" என்று பகிரங்கமாக இலங்கை அரசே ஒத்துக் கொண்ட பிறகு மூக்குடைபட்டது யார்?. இதை எல்லாம் அறிந்த மக்கள் தேர்தலில் காங்கிரஸுக்கு மரண அடி கொடுத்தார்கள். இந்தத் தோல்விக்கு சீமானின் தீவிரப் பிரச்சாரமும் ஒரு காரணம். சீமானை நேரடியாகத் தாக்க முடியாத கோழைகள், இப்படி முதுகில் தாக்குகிறார்கள். ராஜீவைப் படுகொலை செய்தார்கள் என்பது தானே காங்கிரஸ்காரர்கள் விடுதலைப்புலிகளின் மீது சுமத்தும் குற்றச்சாட்டு. ஆனால், "புலிகள் வெறும் அம்புகள் மட்டுமே. சூத்திரதாரிகள் சில (வட இந்திய) காங்கிரஸ் தலைகள் என்றும், இதற்கான சதி லண்டனில் தீட்டப்பட்டது என்றும், சீக்கிய தீவிரவாதிகள்,முன்னாள் பிரதமர் சந்திரசேகர், சரத்பவார், சந்திராசாமி மற்றும் பலரின் பெயர்களையும் ஜெயின் கமிஷன் முன்பாக ஒரு சாட்சி சொல்லி இருக்கிறார்" என்றும் செய்திகள் வருகின்றன. இப்போது விடுதலைப் புலிகளை கைக்கூலிகளாக்கியது யார் என்று தெரிகிறதா? "மர்மயோகி"க்கு இந்த விஷயங்கள் தெரியாதா? ஒருவேளை அவரும் காங்கிரஸ்காரரோ?

    ReplyDelete
  65. \\சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் சீமானின் புயல்வேகப் பிரச்சாரத்தில் காங்கிரஸின் டவுசர் கிழிந்தது, அக்கட்சியினருக்கு பெரும் கோபத்தைக் கிளறியிருக்கலாம் என்று நினைக்கிறேன்..!\\ இது விஜயலட்சுமி சொன்னதை விட அபாண்டமா இருக்கே!! அது சரி, வாம்மா கல்யாணம் பண்ணிக்கலாம் என்று சீமான் சொன்னால் விஜயலட்சுமி என்ன பண்ணுவாங்களாம்?

    ReplyDelete
  66. [[[Ash said...

    உண்மையை எழுதினால் மாமா பட்டம் கிடைக்கிறது. இந்த வழக்கின் பின்னால் காங்கிரஸின் "கை" உள்ளது தெளிவாகத் தெரிகிறது. சீமான் மீதான் இந்தக் குற்றச்சாட்டு பொய்யானது என்று திரைத்துறைக்கு மட்டுமல்ல; பொது மக்களுக்கே கூடத் தெரியும். அவர் மீது அபாண்டம் சுமத்த வேண்டிய அவசியம் காங்கிரஸ்காரர்களுக்கு மட்டுமே இருக்கிறது.]]]

    உண்மை.. தெளிவாகவே சொல்லிவிட்டீர்கள்.. நன்றி..

    நம்மை விமர்சிப்பவர்களைப் பற்றி கவலையில்லை.. எத்தனையோ விமர்சனங்களைத் தாங்கியாகிவிட்டது. அதில் இதுவும் ஒன்று என்று நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்..!

    ReplyDelete
  67. [[[Jayadev Das said...

    \\சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் சீமானின் புயல்வேகப் பிரச்சாரத்தில் காங்கிரஸின் டவுசர் கிழிந்தது, அக்கட்சியினருக்கு பெரும் கோபத்தைக் கிளறியிருக்கலாம் என்று நினைக்கிறேன்..!\\

    இது விஜயலட்சுமி சொன்னதை விட அபாண்டமா இருக்கே!! அது சரி, வாம்மா கல்யாணம் பண்ணிக்கலாம் என்று சீமான் சொன்னால் விஜயலட்சுமி என்ன பண்ணுவாங்களாம்?]]]

    ஜெயதேவ்.. காங்கிரஸின் படுதோல்விக்கு வேறு யார் காரணமாக இருக்கக் கூடும்..?

    விஜயலட்சுமி சந்தோஷமாக ஒத்துக் கொள்வார். தற்போது அவருக்குத் தேவை வசதியான கிளை.. அதைப் பற்றிக் கொள்ளச் சொன்னால் வேண்டாம் என்றா சொல்லப் போகிறார்..?

    ReplyDelete
  68. //ஜெயதேவ்.. காங்கிரஸின் படுதோல்விக்கு வேறு யார் காரணமாக இருக்கக் கூடும்..? //

    என் அம்மா ஒரு தீவிர திமுக அனுதாபி. கருணாநிதி என்ன செய்தாலும் சரி.. திமுகவுக்கோ அல்லது அதன் கூட்டணிக்கோ கண்ணை மூடிக்கொண்டு ஓட்டுப் போடுவார்கள். எதிராளிகளின் பேச்சை ஒருமுறை கூட சட்டை செய்ததே கிடையாது. ஆனால் பாருங்கள். விருதுநகரில் தேசபந்து மைதானத்தில் சீமான் பேசுகிறார். ஒவ்வொன்றையும் புட்டுப் புட்டு வைக்கிறார். லோக்கல் சேனலில் ஒளிபரப்புகிறார்கள். என் அம்மா அதைப் பார்த்துவிட்டு வியந்துபோனார்கள். "சீமான் இப்படிப் பேசுவாரா.. நல்லாப் பேசுறாரே.. அவர் சொல்வதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது" என்று.

    எங்கள் ஊரில் தேமுதிக Vs. காங்கிரஸ். காங்கிரஸ் தோத்துப் போச்சு. இப்போ சொல்லுங்க.. மாற்றம் நிகழ்ந்திருக்க வாய்ப்பு இருக்கிறதா.. இல்லையா?

    ReplyDelete
  69. http://thatstamil.oneindia.in/movies/news/2011/06/another-side-actress-vijayalakshmi-aid0091.html

    அண்ணே... நீங்க எழுதினதை அப்படியே உருவி எடுத்திருக்காய்ங்கண்ணே... :(

    ReplyDelete
  70. அண்ணே, சிங்கமுத்து கூடத்தான் அ.தி.மு.க.வுக்காக தேர்தல் பிரச்சாரம் பண்ணினார், அவரால் தான் இவர்கள் வெற்றி பெற்றார்கள் என்று சொல்லிவிட முடியுமா? மக்களுக்கு கருணாநிதியின் அராஜகத்தின் மீதான வெறுப்பு ஒரு பக்கம், விஜயகாந்துடன் கூட்டணி வைத்தது இன்னொரு பக்கம் இதுதான் இவர்களின் மகத்தான வெற்றிக்கான முக்கிய காரணங்கள். சீமான் போன்றவர்களின் பேச்சால் ஏதோ மாற்றம் இருக்கலாம், ஆனால் அது சொல்லிக் கொள்ளும் படியாக இருக்காது. இப்போதும் சொல்கிறேன், விஜயகாந்துடன் கூட்டணி வைக்காமல் இருந்திருந்தால், இந்த அளவுக்கு பெரும்பான்மை கிடைத்திருக்காது, ஒரு வேலை மஞ்சள் துண்டு கட்சியே கூட தட்டு தடுமாறி கூட்டணி போட்டு ஆட்சி அமைக்கும் அளவுக்கு சீட்டுகள் பெற்றிருக்கக் கூடும். சீமான் பேச்சால் காங்கிரஸ் தோற்றது என்பது காமடியாக இருக்கிறது, but சிரிக்கக் முடியவில்லை!

    ReplyDelete
  71. [[[ரிஷி said...

    //ஜெயதேவ்.. காங்கிரஸின் படுதோல்விக்கு வேறு யார் காரணமாக இருக்கக் கூடும்..? //

    என் அம்மா ஒரு தீவிர திமுக அனுதாபி. கருணாநிதி என்ன செய்தாலும் சரி.. திமுகவுக்கோ அல்லது அதன் கூட்டணிக்கோ கண்ணை மூடிக்கொண்டு ஓட்டுப் போடுவார்கள். எதிராளிகளின் பேச்சை ஒருமுறை கூட சட்டை செய்ததே கிடையாது. ஆனால் பாருங்கள். விருதுநகரில் தேசபந்து மைதானத்தில் சீமான் பேசுகிறார். ஒவ்வொன்றையும் புட்டுப் புட்டு வைக்கிறார். லோக்கல் சேனலில் ஒளிபரப்புகிறார்கள். என் அம்மா அதைப் பார்த்துவிட்டு வியந்துபோனார்கள். "சீமான் இப்படிப் பேசுவாரா.. நல்லாப் பேசுறாரே.. அவர் சொல்வதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது" என்று.

    எங்கள் ஊரில் தேமுதிக Vs. காங்கிரஸ். காங்கிரஸ் தோத்துப் போச்சு. இப்போ சொல்லுங்க.. மாற்றம் நிகழ்ந்திருக்க வாய்ப்பு இருக்கிறதா.. இல்லையா?]]]

    ரிஷி.. இப்படித்தான் நடுத்தர வர்க்கம் நினைத்திருக்கிறது..! அதனைத்தான் செயல்படுத்தியிருக்கிறார்கள்..! ஜெயதேவ் மட்டும்தான் இதனை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்..!

    ReplyDelete
  72. [[[அகமது சுபைர் said...

    http://thatstamil.oneindia.in/movies/news/2011/06/another-side-actress-vijayalakshmi-aid0091.html

    அண்ணே... நீங்க எழுதினதை அப்படியே உருவி எடுத்திருக்காய்ங்கண்ணே... :(]]]

    விடுங்க.. ஒண்ணும் தப்பில்லே.. நான் எத்தனையோ இது மாதிரி சுட்டு எழுதியிருக்கனே..?

    ReplyDelete
  73. [[[Jayadev Das said...

    அண்ணே, சிங்கமுத்து கூடத்தான் அ.தி.மு.க.வுக்காக தேர்தல் பிரச்சாரம் பண்ணினார், அவரால்தான் இவர்கள் வெற்றி பெற்றார்கள் என்று சொல்லிவிட முடியுமா? மக்களுக்கு கருணாநிதியின் அராஜகத்தின் மீதான வெறுப்பு ஒரு பக்கம், விஜயகாந்துடன் கூட்டணி வைத்தது இன்னொரு பக்கம் இதுதான் இவர்களின் மகத்தான வெற்றிக்கான முக்கிய காரணங்கள். சீமான் போன்றவர்களின் பேச்சால் ஏதோ மாற்றம் இருக்கலாம், ஆனால் அது சொல்லிக் கொள்ளும்படியாக இருக்காது. இப்போதும் சொல்கிறேன், விஜயகாந்துடன் கூட்டணி வைக்காமல் இருந்திருந்தால், இந்த அளவுக்கு பெரும்பான்மை கிடைத்திருக்காது, ஒரு வேலை மஞ்சள் துண்டு கட்சியே கூட தட்டு தடுமாறி கூட்டணி போட்டு ஆட்சி அமைக்கும் அளவுக்கு சீட்டுகள் பெற்றிருக்கக் கூடும். சீமான் பேச்சால் காங்கிரஸ் தோற்றது என்பது காமடியாக இருக்கிறது, but சிரிக்கக் முடியவில்லை!]]]

    சரி.. உங்கள் இஷ்டம். அண்ணன் சிரித்தால் இந்தத் தம்பிக்கு சந்தோஷம்தான்..!

    ReplyDelete
  74. இப்போதும் சொல்கிறேன், விஜயகாந்துடன் கூட்டணி வைக்காமல் இருந்திருந்தால், இந்த அளவுக்கு பெரும்பான்மை கிடைத்திருக்காது, ஒரு வேலை மஞ்சள் துண்டு கட்சியே கூட தட்டு தடுமாறி கூட்டணி போட்டு ஆட்சி அமைக்கும் அளவுக்கு சீட்டுகள் பெற்றிருக்கக் கூடும்.//

    வழிமொழிகிறேன். இம்முறையும் கூட தாத்தாவுக்கும், ஆத்தாவுக்கும் இடையே இருந்த ஓட்டு வித்தியாசம் 45 லட்சம்தான். விஜயகாந்த் தனித்து நின்று அவர் வாங்கும் 10% வாக்கு ஆகிய 40 லட்சம் வாக்குகளை வாங்கியிருந்தால் என்னவாகியிருக்கும்?

    ReplyDelete
  75. [[[Jagannath said...

    இப்போதும் சொல்கிறேன், விஜயகாந்துடன் கூட்டணி வைக்காமல் இருந்திருந்தால், இந்த அளவுக்கு பெரும்பான்மை கிடைத்திருக்காது, ஒரு வேலை மஞ்சள் துண்டு கட்சியே கூட தட்டு தடுமாறி கூட்டணி போட்டு ஆட்சி அமைக்கும் அளவுக்கு சீட்டுகள் பெற்றிருக்கக் கூடும்.//

    வழி மொழிகிறேன். இம்முறையும்கூட தாத்தாவுக்கும், ஆத்தாவுக்கும் இடையே இருந்த ஓட்டு வித்தியாசம் 45 லட்சம்தான். விஜயகாந்த் தனித்து நின்று அவர் வாங்கும் 10% வாக்கு ஆகிய 40 லட்சம் வாக்குகளை வாங்கியிருந்தால் என்னவாகியிருக்கும்?]]]

    அப்போதும் ஜெயலலிதான் வந்திருப்பார்.. விஜயகாந்துக்கு நீங்கள் எதிர்பார்த்ததுபோல 10 சதவிகித வாக்குகள் கிடைத்திருக்காது. மக்கள் ஜெயலலிதாவை ஆட்சி பீடத்தில் ஏற்ற வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டார்கள். விஜயகாந்த் கட்சியினர் மட்டுமே அவருக்கு வாக்களித்திருப்பார்கள்..! ஓட்டு சதவிகிதம் நிச்சயம் அவருக்குக் குறைந்திருக்கும்..!

    ReplyDelete