Pages

Friday, June 10, 2011

தயாநிதி மாறனின் டக் அவுட்டு..!

10-06-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கடந்த 2-ம் தேதியன்று தினமணி பத்திரிகையில் வெளியாகியிருந்த தயாநிதி மாறனின் தனி டெலிபோன் எக்ஸ்சேஞ் குற்றச்சாட்டின் தொடர்ச்சியாக நேற்றும் எஸ்.குருமூர்த்தி தயாநிதி மாறனின் மொன்னையான பதிலுக்கு விளக்கமாகப் பதில் சொல்லியிருக்கிறார். அது இதுதான்..!

 
தினமணி - 09-06-2011

"என்னுடைய பெயரிலோ அல்லது 3/1 போட் கிளப் அவென்யூ வீட்டிலோ 24371500 என்ற எண்ணுள்ள பி.எஸ்.என்.எல். தொலைபேசி மட்டுமே உள்ளது. 323 இணைப்புகள் உள்ளன என்று "தினமணி' நாளிதழில் வந்த செய்தி தவறானது. உண்மையை ஏன் அவர்கள் பி.எஸ்.என்.எல். நிறுவனத்திடமிருந்து கேட்டு பெற்றிருக்கக் கூடாது?'' என்று ஜூன் மாதம் 2-ம் தேதி தயாநிதி மாறன் ஏதோ தான் தவறே செய்யாதது போலவும் தன் மீது வேண்டுமென்றே வீண் பழி சுமத்துவதாகவும் அறிக்கை வெளியிட்டார்.

 பி.எஸ்.என்.எல். இணைய தளத்திலேயே தயாநிதி மாறன் வீட்டில், 24371500 என்ற இணைப்பு தலைமைப் பொது மேலாளர் பெயரிலும், 24371515 என்ற இணைப்பு தயாநிதி மாறன் பெயரிலும் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.எஸ்.என்.எல்.லின் 2009-ம் ஆண்டு, ஜூன் 6-ம் தேதியிட்ட கடிதம், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் அளிக்கப்பட்ட 24371500 என்ற தொலைபேசி இணைப்புதான் தயாநிதி மாறன் வீட்டில் உள்ளது என்பது பொய் என்பதை சுட்டிக் காட்டுகிறது.

பி.எஸ்.என்.எல்.லிடமிருந்து பெறப்பட்ட மேலும் சில புதிய தகவல்களும் தயாநிதி மாறனுக்கு எதிராகவே அமைந்துள்ளன. அரசு கணக்கில், 323 இணைப்புகளுடன் ரகசிய தொலைபேசி இணைப்பகம் அவரது வீட்டில் இயங்கியதற்கான மறுக்க முடியாத பல புதிய ஆதாரங்கள் பி.எஸ்.என்.எல்.லிடமிருந்து கிடைத்துள்ளன.

தயாநிதி மாறன் கூறுவது அனைத்தும் பொய் என்பதை பி.எஸ்.என்.எல் சென்னை சர்க்கிளின் 21-6-2007 தேதியிட்ட அலுவலக கடிதம் உறுதிப்படுத்துகிறது.
 
2007-ம் ஆண்டு மே மாதம் 13-ம் தேதி தயாநிதி மாறன் மத்திய அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்தார். இரு வாரங்களுக்கு பிறகு, பி.எஸ்.என்.எல்.லுக்கு மாறன் கடிதம் ஒன்றை அனுப்புகிறார். அதில், அமைச்சர் என்ற முறையில் ஒதுக்கப்பட்ட 24371515 மற்றும் 24371616 இணைப்புகளை நாடாளுமன்ற உறுப்பினர் கோட்டாவிற்கு மாற்றும்படி கேட்டுக் கொண்டுள்ளார். இதுதான், பி.எஸ்.என்.எல். உண்மையை வெளிப்படுத்த உதவியது. 323 இணைப்புகள் உள்ளது என்பதுடன், ரகசிய இணைப்பகம் செயல்பட்டதையும் அது பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியது.

முதலாவதாக: 24371515, 24371616 ஆகிய எண்கள் குறித்த தகவல்கள், பொது குறை தீர்ப்புப் பிரிவு அல்லது கணினி பிரிவிடம் இல்லை. “இந்த எண்கள் குறித்த தகவல்களை மாம்பலம் இணைப்பகத்தில் கேட்டு தெரிந்து கொள்ளவும்” என பி.எஸ்.என்.எல். அளித்த முதல் கடிதம் தெரிவித்தது.

ஏன் இந்த இரண்டு இணைப்புகளும் மாம்பலம் இணைப்பகத்தில் ஒளித்து வைக்கப்பட்டிருந்தன என்கிற கேள்வி எழுகிறது. இதற்குப் பதில் கிடையாது. பொது குறை தீர்ப்புப் பிரிவு அல்லது கணினி பிரிவிடம் இந்த எண்கள் குறித்த தகவல்கள் இல்லை என்பதே மோசடி என்பதை உணர்த்துகிறது. இணைப்பக முறையில் இருந்து அவை மறைத்து வைக்கப்பட்டிருந்தன என்பது பொருளாகிறது. 2437 என்ற பொதுவான இணைப்பக கோடு கொண்ட அவைகள், ரகசிய இணைப்பகத்தில் இடம் பெற்றன.

 இதே போல, தொலைபேசி வாடிக்கையாளருக்கு ஏதாவது தகவல் தேவைப்பட்டால், அவர், "1191'' என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்வார். ஆனால், தயாநிதி மாறனின் இணைப்பகத்தில், 234711911க்கு வரும் அனைத்து அழைப்புகளும் 24311191 க்கு தானாகவே மாற்றப்பட்டு விடும். இது 2437 என்ற ரகசிய இணைப்பகம் செயல்படுவதை பாதுகாக்க செய்யப்பட்ட ஏற்பாடுதான்.

இரண்டாவதாக : பி.எஸ்.என்.எல்.லின் அந்தக் கடிதம், 300 இணைப்புகள் கொண்ட இணைப்பகம் உள்ளதை ஒத்துகொண்டு,மாறனின் பொய்யை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

24371515 மற்றும் 24371616 (அமைச்சர் என்ற முறையில் ஒதுக்கப்பட்ட அவற்றை நாடாளுமன்ற உறுப்பினர் கோட்டாவிற்கு மாற்றும்படி கேட்டுக் கொண்டவை) ஆகிய இரண்டும், 300 எக்ஸ்டென்ஷன்கள் உள்ள 24371500 என்ற முக்கிய எண்ணின் துணை எண்கள் ஆகும் என்பது தெரிய வருவதாக அக்கடிதம் கூறுகிறது. அந்த முக்கிய எண் 24371500 இணைப்பு, 3/1 போட் கிளப் சாலையில், தலைமைப் பொது மேலாளர் என்ற பெயரில் உள்ளதாகவும் அது மேலும் தெரிவிக்கிறது.

தயாநிதி மாறன், மத்திய அமைச்சரவையிலிருந்து விலகி 5 வாரங்களுக்கு மேல் இந்த மோசடி தொடர்ந்துள்ளது என்றும் அக்கடிதம் உணர்த்துகிறது. இக்கடிதம் நான்கு முக்கிய உண்மைகளை உறுதிப்படுத்துகிறது.

1. 24371500 என்ற எண்ணுக்குள் 300 இணைப்புகள் கொண்ட சட்ட விரோத இணைப்பகம் மறைக்கப்பட்டிருந்ததையும், அதில் 24371515, 24371616 எண்கள் சேர்ந்திருந்ததையும் அது உறுதிப்படுத்துகிறது.

2. அந்த மோசடி இணைப்பகம், தலைமைப் பொது மேலாளர் பெயரில் செயல்பட்டது. அது மாறனின் பெயரில் இல்லை.

3. அந்த மோசடி இணைப்பகம், 2007-ம் ஆண்டு ஜூன் மாதம் 21-ம் தேதிவரை செயல்பட்டுள்ளது.

4. இந்த இணைப்பகத்திற்கான செலவுகளை அரசே ஏற்றுள்ளது - அதாவது "டி.டி.ஐ.எஸ்.டி.(துறை) பிரிவில்'' என்ற கடிதத்தில் கூறப்பட்டுள்ள வார்த்தைகள் உண்மையை ஒப்புக் கொள்கின்றன.

ஆக மொத்தம், 323 இணைப்புகள் கொண்ட இணைப்பகம் திருட்டுத்தனமாக தயாநிதி மாறனின் வீட்டில் இருந்தன என்ற உண்மையை இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

அந்த இரு எண்களையும், கேட்டு கொண்டபடி, இலவச இணைப்புகளிலிருந்து, கட்டண முறையிலான நாடாளுமன்ற உறுப்பினர் ஒதுக்கீட்டுக்கு மாற்ற, "24371500'' என்ற முக்கிய எண் மறைக்கப்பட்டு, 24341515, 24371616 சாதாரண இணைப்புகளாக, எஸ்.டி.டி. வசதியுடன் நாடாளுமன்ற உறுப்பினர் ஒதுக்கீட்டில் அளிக்கப்படும் என்று அக்கடிதம் தெரிவிக்கிறது.

அப்படியெனில் ஏன் 24371500 ஐ மறைக்க வேண்டும்..? இது கூடவா தெரியவில்லை? 24371500 முதல் 24371799 வரை உள்ள 300 துணை இணைப்புகளைக் கொண்ட 24371500 முக்கிய எண் தெரியக்கூடாது என்பதற்காகத்தான்.

இரண்டாவதாக அக்கடிதம் மாறனின் வீட்டில் மேலும் 23 இணைப்புகள் இருந்ததை உறுதிப்படுத்துகிறது. மற்ற இணைப்புகள், தொழில்நுட்ப வார்த்தையில் கூறினால், "பிரா' இணைப்புகள் ஆகும். 7 "பிரா' இணைப்புகளும், போட் கிளப்பில், சென்னை டெலிபோன்ஸ் தலைமை பொது மேலாளர் பெயரில் 2 சாதாரண இணைப்புகளும் இருந்ததை அந்தக் கடிதம் கூறுகிறது''.

ஒவ்வொரு "பிரா' லைனும் ஒரே சமயத்தில், குரல், ஆவணங்கள், விடியோவை அனுப்பும் திறன் கொண்டவை. எனவே, 7 "பிரா' இணைப்புகள் என்பது, 21 இணைப்புகள் ஆகும். 21 இணைப்புகளுடன், 2 சாதாரண இணைப்புகள், 24371500 எண்ணில் உள்ள 300 இணைப்புகள் ஆக மொத்தம் 323 இணைப்புகள் (ஐஎஸ்டிஎன்) திருட்டுத்தனமாக மாறனின் வீட்டில் செயல்பட்டுள்ளன. இதைதான், சிபிஐ தனது அறிக்கையில் வெளிக்கொணர்ந்துள்ளது.

323 இணைப்புகள் கொண்ட இணைப்பகத்தையே தயாநிதி மாறன் மறைத்து விட்டார் என்பதை "தினமணி' நாளிதழ் அம்பலப்படுத்தியது. அவ்வளவே!

பி.எஸ்.என்.எல்.லின் கடிதத்தின் மூலம், தயாநிதி மாறன் தவறு செய்துள்ளார் என்பது சந்தேகத்துக்கு இடமின்றித் தெளிவாகி விட்டதே, இனிமேலாவது தயாநிதி மாறன், தனது குற்றத்தை ஒத்துக் கொண்டு தலைகுனிவை ஏற்றுக் கொள்வாரா? இல்லை, வலுக்கட்டாயமாகப் பதவி பறிக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அவமானங்களுக்குப்  பிறகுதான் ஏற்றுக் கொள்வாரா?

உப்புத் தின்றவன் தண்ணீர் குடித்துத்தான் தீர வேண்டும். அவரவர் பாவம் அவரவருக்குத்தான் என்றெல்லாம் தமிழில் பல பழமொழிகள் உண்டு. தயாநிதி மாறன் என்பதால் இவையெல்லாம் மாறிவிடுமா என்ன..?

நன்றி : எஸ்.குருமூர்த்தி, தினமணி

தான் இன்னமும் அமைச்சராக இருப்பதால் அந்தச் செல்வாக்கை வைத்து சென்னை பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் தகவல் சொல்லும் உரிமையில்லாத பெண் அதிகாரி ஒருவரை வைத்து பதில் சொல்லியிருக்கும் தயாநிதி மாறன், செய்திருக்கும் ஊழலை அப்படியே மூடி மறைக்கும்விதமாக 24371500 என்ற ஒரேயொரு நம்பர் மட்டும்தான் தயாநிதி மாறனின் வீட்டில் இருப்பதாக கப்ஸா விட்டிருந்தார்.

ஆனால் 24371515 என்ற நம்பரும் தயாநிதியின் அதே வீட்டு முகவரியையும், அவரையும்தான் அடையாளம் காட்டுகிறது. இதற்கு தயாநிதி எந்தப் பதிலையும் சொல்லவில்லை.

இந்த எண்ணுடன் 24371616 என்ற எண்ணுடனும்தான் 300 துணை இணைப்புகள் இணைக்கப்பட்டிருப்பதாக பி.என்.எஸ்.எல். அலுவலக கடிதம் தெரிவிப்பதாக குருமூர்த்தி சொல்லியிருக்கிறார்..!

இதற்கு இன்றுவரையிலும் தயாநிதியோ, சன் டிவியோ பதில் சொல்லவில்லை. ஆக மொத்தம் இது நிச்சயமாக நடந்திருக்கக் கூடிய உண்மை என்றே நாமும் நம்ப வேண்டியுள்ளது..!

தி.மு.க. ஆட்சியில் முறைகேடுகளே னடக்கவில்லை. நல்லாட்சிதான் நடத்தினார் கலைஞர். காலை 5 மணியில் இருந்து நள்ளிரவுவரையிலும் அவர் தமிழகத்திற்காகவே உழைத்தார் என்றால் கப்ஸா விடும் உடன்பிறப்புகள் இதையும் கொஞ்சம் கவனித்தில் வைத்துக் கொண்டால் நல்லது..!

இதுபோல் எத்தனை, எத்தனை கொள்ளைகளை கண்டு கொள்ளாமல், அல்லது தெரிந்து கொள்ளாமல், அல்லது தெரிய வாய்ப்பில்லாமல் இந்த மனிதர் தமிழகத்தை ஆண்டு வந்திருக்கிறார் என்பதே மிகப் பெரிய வெட்கக்கேடு..!

அந்த வகையில் கருணாநிதிக்கு தமிழகத்து மக்கள் கொடுத்திருப்பது ஓய்வு அல்ல.. தண்டனை என்பதாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இனியும் கழக உடன்பிறப்புகள் கலைஞரின் 20 மணி நேர கண் முழித்த உழைப்பு, நாட்டுக்காகத்தான் என்று உளறாமல் இருந்தால் உத்தமம்..!

26 comments:

  1. கருத்துக்களை எழுத விடாமல் இம்சை செய்து கொண்டிருந்த விளம்பரத்தை நீக்கியமைக்கு நன்றி.

    ReplyDelete
  2. இனியும் கழக உடன்பிறப்புகள் கலைஞரின் 20 மணி நேர கண் முழித்த உழைப்பு, நாட்டுக்காகத்தான் என்று உளறாமல் இருந்தால் உத்தமம்..!

    Unmai Varikal Anne..

    Madhan
    Eegarai.Net

    ReplyDelete
  3. இதையும் ஒத்துக்கொள்ளாமல் சப்பைக்கட்டு கட்டுவார்கள் அண்ணா!...

    பிரபாகர்...

    ReplyDelete
  4. //இனியும் கழக உடன்பிறப்புகள் கலைஞரின் 20 மணி நேர கண் முழித்த உழைப்பு, நாட்டுக்காகத்தான் என்று உளறாமல் இருந்தால் உத்தமம்..//

    அதெப்படி முடியும்?அடிமைப்பத்திரம் எழுதி அதை புத்தியின் ஜீன்களிலும் பதிவு செய்தாகி விட்டது.அவ்வளவு லேசா எங்களுக்கு போதை தெளிந்து விடுமா என்ன!

    ReplyDelete
  5. People send them back to Tiruvarur after stripping peoples looted money

    ReplyDelete
  6. நம்ம ஏன் கட்சி ஆரம்பிக்க கூடாது

    ReplyDelete
  7. தயாநிதி அடித்த கொள்ளையில் இவர்களுக்கு பங்கு வரவில்லை போலிருக்கிறது .அவரே பதில் சொல்வார் அவரே சமாளிப்பார் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் .

    ReplyDelete
  8. //இனியும் கழக உடன்பிறப்புகள் கலைஞரின் 20 மணி நேர கண் முழித்த உழைப்பு, நாட்டுக்காகத்தான் என்று உளறாமல் இருந்தால் உத்தமம்.//
    பைத்தியகாரன் உளரக்கூடாது என்றால் அது நடக்காத காரியம்.
    அரவரசன்

    ReplyDelete
  9. [[[JOTHIG ஜோதிஜி said...

    கருத்துக்களை எழுத விடாமல் இம்சை செய்து கொண்டிருந்த விளம்பரத்தை நீக்கியமைக்கு நன்றி.]]]

    அட போங்கப்பா.. யாரோ கூகிளுக்கு கம்ப்ளையிண்ட் பண்ணிட்டாங்கன்னு ஏஜெண்ட் சொன்னதால நீக்க வேண்டியதா போச்சு.. எனக்கு காசு போச்சுல்ல..!

    ReplyDelete
  10. [[[Mig33Indians said...

    இனியும் கழக உடன்பிறப்புகள் கலைஞரின் 20 மணி நேர கண் முழித்த உழைப்பு, நாட்டுக்காகத்தான் என்று உளறாமல் இருந்தால் உத்தமம்..!

    Unmai Varikal Anne..

    Madhan
    Eegarai.Net]]]

    உடன்பிறப்புகளின் கண்ணை மறைக்கும் பாசத்தை மீறி இந்த வரிகள் அவர்கள் உள்ளத்தைத் தொட்டாலே எனக்கு மகிழ்ச்சிதான்..!

    ReplyDelete
  11. [[[பிரபாகர் said...

    இதையும் ஒத்துக் கொள்ளாமல் சப்பைக் கட்டு கட்டுவார்கள் அண்ணா!...

    பிரபாகர்...]]]

    செய்யட்டுமே.. தோல்வி அவர்களுக்குத்தான்..!

    ReplyDelete
  12. [[[ராஜ நடராஜன் said...

    //இனியும் கழக உடன்பிறப்புகள் கலைஞரின் 20 மணி நேர கண் முழித்த உழைப்பு, நாட்டுக்காகத்தான் என்று உளறாமல் இருந்தால் உத்தமம்..//

    அதெப்படி முடியும்? அடிமைப் பத்திரம் எழுதி அதை புத்தியின் ஜீன்களிலும் பதிவு செய்தாகிவிட்டது.அவ்வளவு லேசா எங்களுக்கு போதை தெளிந்து விடுமா என்ன!]]]

    தெளியாவிட்டால் முருகன் என்றாவது ஒரு நாள் அவர்களுக்கு உணர்த்துவான்..!

    ReplyDelete
  13. [[[Lovechennai said...

    People send them back to Tiruvarur after stripping peoples looted money.]]]

    தமிழக அரசியல் வரலாற்றில் கரும் புள்ளி கருணாநிதிதான்..!

    ReplyDelete
  14. [[[muthukumar said...

    நம்ம ஏன் கட்சி ஆரம்பிக்க கூடாது?

    வாழ்கன்னு கோஷம் போடவாவது ஆளுக வேணாமா? நாம ரெண்டு பேர் மட்டும் இருந்து என்ன புண்ணியம்?

    ReplyDelete
  15. [[[பூங்குழலி said...

    தயாநிதி அடித்த கொள்ளையில் இவர்களுக்கு பங்கு வரவில்லை போலிருக்கிறது. அவரே பதில் சொல்வார் அவரே சமாளிப்பார் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.]]]

    வேற வழி. அதையும் தான்தான் செய்யச் சொன்னேன் என்று வெளிப்படையாகச் சொல்ல முடியுமா?

    ReplyDelete
  16. [[[கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் ) said...

    Neenga yen thaniya oru super website nadathakoodathu?]]]

    நடத்தலாம். முழு நேரத் தொழிலாக இருந்தால் மட்டுமே அதனைச் செய்ய முடியும்..! இப்போது சூழ்நிலை சரியில்லை..!

    ReplyDelete
  17. [[[NAGA INTHU said...

    //இனியும் கழக உடன்பிறப்புகள் கலைஞரின் 20 மணி நேர கண் முழித்த உழைப்பு, நாட்டுக்காகத்தான் என்று உளறாமல் இருந்தால் உத்தமம்.//

    பைத்தியகாரன் உளரக் கூடாது என்றால் அது நடக்காத காரியம்.

    அரவரசன்]]]

    -))))))))))

    ReplyDelete
  18. [[[Ashok Nallasivam said...

    Thirudarkal Munetra Kalagam.]]]

    திருடர்கள் முன்னேற்றக் கழகம் - இது நல்லாயிருக்கே..?

    ReplyDelete
  19. ////இனியும் கழக உடன்பிறப்புகள் கலைஞரின் 20 மணி நேர கண் முழித்த உழைப்பு, நாட்டுக்காகத்தான் என்று உளறாமல் இருந்தால் உத்தமம்..//
    ஹா ஹா இனியும் இல்ல என்டைக்கும் சொல்லுவாங்க. நன்றி சகோ பகிர்வுக்கு,
    நேரம் இருந்தா இங்கயும் வாங்க..
    சிறையிலிருந்து ராசா எழுதிய கடிதம்

    ReplyDelete
  20. [[[Ashwin-WIN said...

    //இனியும் கழக உடன்பிறப்புகள் கலைஞரின் 20 மணி நேர கண் முழித்த உழைப்பு, நாட்டுக்காகத்தான் என்று உளறாமல் இருந்தால் உத்தமம்..//

    ஹா ஹா இனியும் இல்ல என்டைக்கும் சொல்லுவாங்க. நன்றி சகோ பகிர்வுக்கு,

    நேரம் இருந்தா இங்கயும் வாங்க..
    சிறையிலிருந்து ராசா எழுதிய கடிதம்]]]

    வருகைக்கு நன்றி நண்பரே..!

    ReplyDelete
  21. கற்ற வித்தைகளையும் பதிவிகளையும் பயன்படுத்தி இப்படி மொன்னமாரித்தனம் பண்ணுறத்துக்கு..........

    ReplyDelete
  22. [[[சி.கருணாகரசு said...

    கற்ற வித்தைகளையும் பதிவிகளையும் பயன்படுத்தி இப்படி மொன்னமாரித்தனம் பண்ணுறத்துக்கு.]]]

    அதுதானே தெரியும் அவங்களுக்கு..? தெரிஞ்சதைத்தானே செய்ய முடியும்..!

    ReplyDelete
  23. வெக்கங்கெட்ட திருடனுங்க.

    வெறும் 60+ கோடி ரூபாய்களுக்காக மாறனை வெறும் (செயல்படாத) அமைச்சராக வைத்திருந்தவர்கள் தானே இவர்கள்.

    ReplyDelete
  24. [[[சீனு said...

    வெக்கங்கெட்ட திருடனுங்க. வெறும் 60+ கோடி ரூபாய்களுக்காக மாறனை வெறும்(செயல்படாத) அமைச்சராக வைத்திருந்தவர்கள்தானே இவர்கள்.]]]

    -)))))))))))

    ReplyDelete