Pages

Tuesday, April 05, 2011

வளர்த்த கடா வடிவேலு..! புண்ணாக்கு குஷ்பு..!

04-04-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

“என்னடா இது? பத்திரிகை செய்திகளையே போட்டுக்கிட்டிருக்க..?” என்று கோபப்படாதீர்கள் மக்களே..!

2011 சட்டமன்றத் தேர்தல் முடிகிறவரையில் இதை தொடர்ந்து செய்வதாகத்தான் உள்ளேன்.. தற்போதைய நிலையில் பத்திரிகைகளில் வரும் சில ஸ்கூப் நியூஸ்களை நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. கூடவே இணையத்தில் பதிவும் செய்து வைக்க வேண்டியுள்ளது.

உள்ளூரில் புத்தகங்கள் கிடைக்கப் பெற்றவர்கள் படிப்பார்கள். வெளி மாநிலங்களில் இருப்பவர்கள், வெளிநாடுகளில் இருப்பவர்களில் புத்தகத்தை இணையத்தின் மூலமாகப் படிக்காமல் இருப்பவர்களுக்காக இங்கே எனது தளத்தில் அவைகள் பதிவேற்றப்பட்டு வருகின்றன..!

கோபித்துக் கொள்ளாமல் ஓ.பி. அடிக்கிறேன் என்றெல்லாம் நினைக்காமல் எனது உடன் பிறந்த சகோதரனான எனது கைகளுக்காக என்னைத் திட்டாமல் ‘போய்த் தொலைடா’ என்று பெரிய மனதுடன் மன்னித்து விட்டுவிடுங்கள்..!

இது திரையுலக அரசியல்வியாதிகளின் முதல் மோதல் கட்டுரை..!

கடந்த சட்டமன்றத் தேர்தலில் கருணாநிதியை, 'ஒண்டிக்கு ஒண்டி  வர்றியா?’ என சவால்​விட்டவர், வாழைப்பழ காமெடி நடிகர் செந்தில். இந்தத் தேர்தலிலும், தமிழகம் முழுக்க, தி.மு.க. கூட்டணிக்கு எதிராகப் பிச்சு உதறு​கிறார்.

''மதுரையில் நாடகத்தில் நடிச்சுட்டு இருந்தான் வடிவேலு. ராஜ்கிரணின் 'என் ராசாவின் மனசிலே’ படத்தில் நடிக்கிறதுக்கு சான்ஸ் கேட்டு மெட்ராஸ் வந்தான். அவனைப் பார்த்ததுமே, 'இவன் ஆளே சரி இல்லையே... ஒரு தினுசா இருக்கானேன்’னு கவுண்டமணி அண்ணன் கரெக்ட்டா கண்டுபிடிச்சுத் திட்டினார். நான்தான் அவரை சமாதானம் செஞ்சு, ''அண்ணே ஏதோ நாடகத்துல நடிச்சுப் பொழைப்பை நடத்துறான். சினிமாவுல நடிச்சா இன்னும் கொஞ்சம் கூடுதலா நாலு காசு பார்ப்பான், பாவம்’னு வடிவேலுக்கு வக்காலத்து வாங்கினேன்.

சினிமாவில் அவனுக்கு வாழ்க்கை கொடுத்தவர் ராஜ்கிரண். அந்தப் பாவத்துக்காக அவர் பக்கத்துல இருந்தவங்களை எல்லாம் தன்கிட்டே இழுத்து வெச்சுக்கிட்டான். கஷ்டப்படுற ராஜ்கிரணுக்கு கார் வாங்கிக் கொடுத்தேன்னு தப்பா ஒரு சேதியைக் கிளப்பிவிட்டு, தன்னை ஒரு வள்ளலா காட்டிக்கிட்டான். விஷயத்தைக் கேள்விப்பட்டு ராஜ்கிரணே நொந்துபோய்ட்டார். இது மாதிரி அறிமுகம் செஞ்சவரையே அசிங்கம் செஞ்சவன்தான் வடிவேலு.

ஆர்.வி.உதயகுமாரோட 'சின்னக் கவுண்டர்’ படத்துல நானும், கவுண்டமணி அண்ணனும் நடிச்​சோம். எங்ககூட வடிவேலுவும் நடிச்சான். ஷூட்டிங்கில் விஜயகாந்த் எங்களைவிட வடிவேலுவைத்​தான் விழுந்து, விழுந்து கவனிப்பார். அவனை எப்பவும் தன் கூடவே வெச்சுக்குவார். அவர் சாப்பிடுற ஐயிட்டங்களையே அவனுக்கும் பரிமாறச் சொல்லுவார். அந்தப் படத்துல வடிவேலு நிறைய ஸீன்ல நடிக்கறதுக்கு டைரக்டர்கிட்டே சிபாரிசுகூட பண்ணினார் விஜயகாந்த். 'என்னண்ணே இப்படிச் செய்றீங்களே?’ன்னு நான் விஜயகாந்த்கிட்ட கேட்டேன். 'அண்ணே, நீங்க ராமநாதபுரத்து ஆளு. வடிவேலு என் ஊர்க்காரன். என்னோட ஆளு. நீங்க வேணா பாருங்க.. அவன் பெரிய்ய ஆளா வருவான்’னு விஜயகாந்த் என்கிட்ட சொன்னார். அப்படி அவர் வளர்த்த கடா வடிவேலு, இப்போ அவர் மார்பிலேயே பாயுது. அவன், அவரை அசிங்க அசிங்கமாத் திட்டுறான்.

தருமபுரியில் தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரிச்சுப் பேசியிருக்கார் விஜயகாந்த். அப்போ, வேனுக்குள்ளே மைக் விழுந்துடுச்சு. உதவியாளரிடம் குனிஞ்சு எடுக்கச் சொல்லி இருக்கார். அந்தச் சம்பவத்தை கேமரா ட்ரிக் மூலமா வேட்பாளரை அடிச்ச மாதிரி தப்பாப் பிரசாரம் பண்றாங்க. கருணாநிதியைக் கைது செஞ்சப்போ, பரிதாபமாக் கத்துற மாதிரி டப்பிங் வாய்ஸ் கொடுத்தவங்கதானே இந்த தி.மு.க-காரங்க.

இன்னோர் கூட்டத்தில் விஜயகாந்த் பேசும்போது,​ 'அ.தி.மு.க. கொடியைக் கீழே இறக்கச் சொல்லித் திட்டின மாதிரி’ கருணாநிதி டி.வி-யில் காட்டுறாங்க. அ.தி.மு.க., தே.மு.தி.க. கட்சியோடு கொடிகளுக்கு மத்தியில் திடீர்னு ஒருத்தன் தி.மு.க. கொடியைத் தூக்கிக் காட்டுனான். அதைப் பார்த்துக் கடுப்பான விஜயகாந்த், தி.மு.க. கொடியைக் கிழே இறக்கச் சொல்லித் திட்டினார். டப்புன்னு கேமராவை அ.தி.மு.க. பக்கம் மாத்திக் காட்டி கூட்டணிக்குள்ளே குழப்பத்தை ஏற்படுத்துறாங்க.

சென்னையில் அம்மா பேசுன கூட்டத்துல ஜனங்க நெரிசலில் மாட்டுனதா காட்டுறாங்க. மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறை, அந்தக் காட்சியைக் கை கட்டி வேடிக்கைதானே பார்த்தது? உண்மையிலே, தோல்வி பயத்தில், தி.மு.க-வோடு அந்தக் கட்சியின் சேனல்களும் திட்டம் போட்டு ஏற்பாடு செய்த தள்ளுமுள்ளு வேலைதான் அது...'' என்றவர் அடுத்து குஷ்பு விஷயத்துக்குத் தாவினார்.

''ஜெயா டி.வி-யின் ஜாக்பாட் நிகழ்ச்சி மூலமாத்தான் குஷ்பு தமிழைக் கத்துக்கிட்டாங்க. இப்போ, தி.மு.க-வை ஆரம்பிச்ச ஐம்பெரும் தலைவருங்க வாரிசு மாதிரி... தலை, கால் புரியாம ததிங்கிணத்தோம் ஆட்டம் போடுது.

கற்புக்கரசி கண்ணகி வாழ்ந்த தமிழ்நாட்டில், 'கற்புன்னு ஒண்ணு இல்லவே இல்லை’ன்னு கேவலமாப் பேசி, நம்ம தாய்மார்களை இழிவுபடுத்தின மோசமான பொம்பளைதான் குஷ்பு. அதை எதிர்த்து கோர்ட்டில் கேஸ் போட்ட கட்சிகள் பா.ம.க-வும், விடுதலைச் சிறுத்தைகளும்.

குஷ்பூ வெளியூர்ல கோர்ட்டுக்கு வந்தப்ப செருப்பு, விளக்குமாறைக் காட்டினது ராமதாஸ், திருமாவளவன் கட்சியோட மகளிர் அணிகள்தான். இப்போ, அவங்களே அந்தப் பொம்பளைக்கு ஆரத்தி எடுக்குறாங்க. எம்.எல்.ஏ. பதவிக்காக அந்த வட நாட்டுக்காரி காலில் போய் ராமதாஸும் திருமாவளவனும் விழுறீங்களே... உங்களுக்கு வெட்கமா இல்லையா..?

“ஆண்டிபட்டியில் போட்டியிடப் பயந்துக்கிட்டு அம்மா ஸ்ரீரங்கத்தில் நிற்கிறதா..” குஷ்பு பேசுது. தைரியசாலி கருணாநிதி எதுக்கு சென்னையை விட்டுட்டுப் பயந்துபோய் திருவாரூர்ல நிக்கிறார்? ஸ்டாலின் எதுக்கு ஆயிரம் விளக்கு தொகுதியை விட்டுட்டு ஊருக்கு ஒதுக்குப்புறமா இருக்குற கொளத்தூர்ல போட்டி போடுறார்? ஏற்கெனவே, போட்டியிட்ட ஆண்டிபட்டியை அம்மா அரசப்பட்டி ஆக்கிட்டாங்க. அதனால, இப்போ ஸ்ரீரங்கத்துல நிற்கிறாங்க. இந்த விவரம்கூட புரியாத புண்ணாக்குதான் குஷ்பு!'' கடகடக்கிறார் செந்தில்!

நன்றி : ஜூனியர் விகடன் - 04-04-2011

19 comments:

  1. கற்புக்கரசி Jaya vazhum தமிழ்நாட்டில்... kushboo karpai patri pesiyadhu thapu!

    ReplyDelete
  2. ஹ்ம்ம்ம்ம்.... தேர்தல சாக்கு வச்சி தூள் கிளப்புறீங்க... நடக்கட்டும், நடக்கட்டும்... யாருக்கு ஓட்டு போடுறதுன்னு உங்க முருகனை கேட்டுச்சொல்லுங்க அண்ணா :)

    ReplyDelete
  3. இவங்க அலும்பு தாங்கலியே!

    ReplyDelete
  4. //உள்ளூரில் புத்தகங்கள் கிடைக்கப் பெற்றவர்கள் படிப்பார்கள். வெளி மாநிலங்களில் இருப்பவர்கள், வெளிநாடுகளில் இருப்பவர்களில் புத்தகத்தை இணையத்தின் மூலமாகப் படிக்காமல் இருப்பவர்களுக்காக இங்கே எனது தளத்தில் அவைகள் பதிவேற்றப்பட்டு வருகின்றன..!//

    நானெல்லாம் பத்திரிகையே வாங்குறதில்ல அண்ணே!உங்க பதிவு படிச்சா பத்திரிகைச் செய்தி மட்டுமல்ல உண்மையான செய்தியும் வந்துடும்.தொடருங்கள்.

    என்றும் ஆதரவுடன்.....

    ReplyDelete
  5. //கோபித்துக் கொள்ளாமல் ஓ.பி. அடிக்கிறேன் என்றெல்லாம் நினைக்காமல் //

    இந்த ஓ.பி பேர் வந்ததுக்கு ஒரு கதை இருக்குது.தெரிஞ்சவங்க சொல்லுங்க பார்க்கலாம்:)

    ReplyDelete
  6. விகடனும்,செந்திலும் ஒரு கதை வசனம் எழுதுறாங்க....நக்கீரனும்,வடிவேலும் வேற ஒரு பிலிம் காட்டுறாஙக...

    எது உண்மை?சீக்கிரம் தேர்தல் முடிஞ்சு க்ளைமாக்ஸ காட்டுங்கப்பா!

    ReplyDelete
  7. செந்திலின் இந்த பேச்சை ஜெயா டிவியில் பார்த்தேன். மனுசன் தொடர்ச்சியா நாலு வார்த்தை பேசறதுக்குள்ள தடுமாறுறார். இவர் குஷ்புவொட தமிழை விமர்சனம் பண்றார்.தமாஷா இருக்கு!!

    ReplyDelete
  8. /*''மதுரையில் நாடகத்தில் நடிச்சுட்டு இருந்தான் வடிவேலு */
    சரி அது ஒன்னும் தப்பில்லையே
    /*ராஜ்கிரணின் 'என் ராசாவின் மனசிலே’ படத்தில் நடிக்கிறதுக்கு சான்ஸ் கேட்டு மெட்ராஸ் வந்தான்*/
    ராஜ்கிரணின் படத்தல நடிக்கதானே சான்ஸ் கேட்டு போனாப்பல ராஜ்கிரணின் பொண்ண கேட்டு போலையே?
    /*'இவன் ஆளே சரி இல்லையே... ஒரு தினுசா இருக்கானேன்’னு கவுண்டமணி அண்ணன் கரெக்ட்டா கண்டுபிடிச்சுத் திட்டினார் */
    கவுண்டமணி இதுபோல் வேடிக்கையா பேசுவது வழக்கம், மேலும் பார்த்த உடனேயே ஒருவனை கணிப்பது சரி அல்ல.
    /*சினிமாவில் அவனுக்கு வாழ்க்கை கொடுத்தவர் ராஜ்கிரண். அந்தப் பாவத்துக்காக அவர் பக்கத்துல இருந்தவங்களை எல்லாம் தன்கிட்டே இழுத்து வெச்சுக்கிட்டான்*/ ராஜ்கிரணனை விட்டுபோன அந்த
    நபர்கள்தான் நன்றி கெட்டவர்கள்
    ஒருவன் முன்னேறிவிட்டால் இதுபோல் செய்திகள் வருவது வழக்கமே இதில் ஆச்சிரியம் ஒன்றும் இல்லை, ராஜ்கிரண் வடிவேலுவை அறிமுகசெய்திருந்தால் அதற்க்காக ரசிக மக்ககளாகிய நாங்கள் நன்றியை தெரிவித்துகொள்கிறோம், அதைவிட்டு விட்டு அன்று வடிவேலு அப்படியிருந்தான் இன்று இப்படி இருக்கிறான் என்று சொல்வது மடத்தனம், ஒன்று மட்டும் உண்மை அவர் சிறப்பாக நடித்துதான் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.அதில் எந்த மாற்று கருத்தும் இருக்க முடியாது, ராஜ்கிரண் அல்லது மற்றவர்களால் வாய்ப்பு கொடுத்த பலபேர் காணாமல் போயிருக்கலாம் ஆனால் அவரை பற்றி யாரும் பேசுவதில்லை ஏன் இந்த முரண்பாடு
    /*ஷூட்டிங்கில் விஜயகாந்த் எங்களைவிட வடிவேலுவைத்​தான் விழுந்து, விழுந்து கவனிப்பார்*/ இதுவெல்லாம் ரொம்ப அதிகம் சிரிப்பு தான் வருது. /*அப்போ, வேனுக்குள்ளே மைக் விழுந்துடுச்சு. உதவியாளரிடம் குனிஞ்சு எடுக்கச் சொல்லி இருக்கார். அந்தச் சம்பவத்தை கேமரா ட்ரிக் மூலமா வேட்பாளரை அடிச்ச மாதிரி தப்பாப் பிரசாரம் பண்றாங்க */
    இது அத விட செம காமெடி, மைக்க இப்படிதான் வேகமா பிடுங்குவாரா, இல்ல அப்படியே வாங்கினாலும் எத்தனவாட்டி கீழ போட்டு போட்டு எடுப்பாரு, அப்பறம் குசுப்பு பத்தி பேச ஒன்னும் இல்ல /*''ஜெயா டி.வி-யின் ஜாக்பாட் நிகழ்ச்சி மூலமாத்தான் குஷ்பு தமிழைக் கத்துக்கிட்டாங்க */ இவளுக்கு மரியாதை கொடுப்பிங்க ஆனா வடிவேலுவை அவ இவனு பேசுவிங்க நல்லாயிருக்கு உங்க இங்கிதம், அப்பறம் உங்க கொல்டி விசயகாந்த் நான் பச்ச தமிழன்னு தமிழனு மார்தட்டிகிட்டா மட்டும் போதாது ஒழுங்கா தமிழ் பேசவும் தெரியனும் சும்மா வெளியில தமிழ் தமிழ்னு சொல்லிக்கிட்டு விட்டுகுள்ள தெலுங்கு பேசுற மொன்ன நாய்யு இப்படி மக்களுக்கு உண்மையில்லாதவன் இவன் எல்லாம் ஒரு தலைவன் இவரு கேபட்னு அலைவரிசை பெயர் வைக்கலாம், இவரு இவரு பொண்டாட்டி, மச்சின என குடும்பமா அரசியல் செய்யலாம், தமிழ் சரியா வாசிக்கூட தெரியாத இவரு கலைஞரின் தமிழை விமர்சிக்கிறார் எனக்கு அவரை அரசியலில் அதிகமாக பிடிக்காது என்றாலும் தமிழில் அவர் கையாளும் விதம் மிக நேர்த்தியாகும் மேலும் மொழி,இலக்கண அறிவு துளியும் இல்லாத இவன் கலைஞரை விமர்சிப்பது வேடிக்கையானது

    ReplyDelete
  9. [[[ELANGOVAN said...
    கற்புக்கரசி Jaya vazhum தமிழ்நாட்டில்... kushboo karpai patri pesiyadhu thapu!]]]

    ஐயா சாமி.. ஆளை விடுங்க.. அந்தப் பஞ்சாயத்துக்கு நான் தயாரா இல்லை..!

    ReplyDelete
  10. [[[ohedasindia said...

    ஹ்ம்ம்ம்ம்.... தேர்தல சாக்கு வச்சி தூள் கிளப்புறீங்க... நடக்கட்டும், நடக்கட்டும்... யாருக்கு ஓட்டு போடுறதுன்னு உங்க முருகனை கேட்டுச் சொல்லுங்க அண்ணா :)]]]

    அவன் என்னத்த சொல்லுவான்..?

    உங்க ஊருக்கு யார் நல்லது பண்ணுவான்னு நீங்க நினைக்கிறீங்களோ, அவர் சுயேச்சையாக இருந்தாலும் பரவாயில்லை. அவருக்கே ஓட்டுப் போடுங்க..!

    ReplyDelete
  11. [[[செங்கோவி said...

    இவங்க அலும்பு தாங்கலியே!]]]

    நோகாம நொங்கு திங்குறாங்க அவியங்க்.. நமக்குத்தான் இருக்க மாட்டேங்குது..!

    ReplyDelete
  12. [[[ராஜ நடராஜன் said...

    //உள்ளூரில் புத்தகங்கள் கிடைக்கப் பெற்றவர்கள் படிப்பார்கள். வெளி மாநிலங்களில் இருப்பவர்கள், வெளிநாடுகளில் இருப்பவர்களில் புத்தகத்தை இணையத்தின் மூலமாகப் படிக்காமல் இருப்பவர்களுக்காக இங்கே எனது தளத்தில் அவைகள் பதிவேற்றப்பட்டு வருகின்றன..!//

    நானெல்லாம் பத்திரிகையே வாங்குறதில்ல அண்ணே! உங்க பதிவு படிச்சா பத்திரிகைச் செய்தி மட்டுமல்ல உண்மையான செய்தியும் வந்துடும். தொடருங்கள்.

    என்றும் ஆதரவுடன்.....]]]

    உங்களுடைய ஆதரவு இருக்கும்போது எனக்கென்ன கவலை ராஜநடராஜன்.. உங்களுக்காகவே மீண்டும், மீண்டும் இது போன்ற செய்திகளைப் பதிவு செய்வேன்..

    ReplyDelete
  13. [[[ராஜ நடராஜன் said...

    //கோபித்துக் கொள்ளாமல் ஓ.பி. அடிக்கிறேன் என்றெல்லாம் நினைக்காமல் //

    இந்த ஓ.பி பேர் வந்ததுக்கு ஒரு கதை இருக்குது. தெரிஞ்சவங்க சொல்லுங்க பார்க்கலாம்:)]]]

    எனக்குத் தெரியலீங்கண்ணா.. நீங்க சொல்லுங்க.. தெரிஞ்சுக்குறேன்..!

    ReplyDelete
  14. [[[ராஜ நடராஜன் said...

    விகடனும், செந்திலும் ஒரு கதை வசனம் எழுதுறாங்க. நக்கீரனும், வடிவேலும் வேற ஒரு பிலிம் காட்டுறாஙக...

    எது உண்மை? சீக்கிரம் தேர்தல் முடிஞ்சு க்ளைமாக்ஸ காட்டுங்கப்பா!]]]

    எல்லாம் அரசியல்தாண்ணே.. ஆட்சி முடிஞ்சா எல்லாம் தானா மாறிரும்..!

    ReplyDelete
  15. [[[மு.சரவணக்குமார் said...

    செந்திலின் இந்த பேச்சை ஜெயா டிவியில் பார்த்தேன். மனுசன் தொடர்ச்சியா நாலு வார்த்தை பேசறதுக்குள்ள தடுமாறுறார். இவர் குஷ்புவொட தமிழை விமர்சனம் பண்றார். தமாஷா இருக்கு!!]]]

    இதில் நான் கருத்துச் சொல்வதற்கு ஏதுமில்லை சரவணக்குமார் ஸார்..!

    ReplyDelete
  16. புகல்..

    தமிழ் நன்றாகப் பேசுகிறார் என்பதற்காக கலைஞரின் கொள்ளையை கண்டு கொள்ளாமல்விட வேண்டும் என்கிறீர்களா..?

    ReplyDelete
  17. உள்ளூரில் புத்தகங்கள் கிடைக்கப் பெற்றவர்கள் படிப்பார்கள். வெளி மாநிலங்களில் இருப்பவர்கள், வெளிநாடுகளில் இருப்பவர்களில் புத்தகத்தை இணையத்தின் மூலமாகப் படிக்காமல் இருப்பவர்களுக்காக இங்கே எனது தளத்தில் அவைகள் பதிவேற்றப்பட்டு வருகின்றன..!//

    நானெல்லாம் பத்திரிகையே வாங்குறதில்ல அண்ணே!உங்க பதிவு படிச்சா பத்திரிகைச் செய்தி மட்டுமல்ல உண்மையான செய்தியும் வந்துடும்.தொடருங்கள்.

    Read more: http://truetamilans.blogspot.com/2011/04/blog-post_3647.html#ixzz1Ihp1edFy

    ReplyDelete
  18. //இந்த ஓ.பி பேர் வந்ததுக்கு ஒரு கதை இருக்குது. தெரிஞ்சவங்க சொல்லுங்க பார்க்கலாம்:)]]]

    எனக்குத் தெரியலீங்கண்ணா.. நீங்க சொல்லுங்க.. தெரிஞ்சுக்குறேன்..!//

    கல்லூரியில் என்.சி.சி Parade நடத்துவாங்க.பேரேடு முடிஞ்சதும் பூரி,தோசைன்னு ஏதாவது கிட்டும்.அட்டெண்டன்ஸ்க்கு வேண்டியாவது பேரேடு போயே ஆகணும்.ஆனால் ட்ரில்லுக்கு கலந்துக்கவும் கூடாது.என்ன செய்வது?இன்னிக்கு மண்டை வலி,கழுத்து வலின்னு ஏதாவது பொய் சொல்லிகிட்டு மத்தவன நொங்கு வாங்குறத பார்த்து சிரிச்சிகிட்டே வெளியே நிற்கும் Out of Parade தான் O.P.

    நான் விமானப்படை:)

    ReplyDelete
  19. aiyaa pukal makkal Tv repeat dom dom sound effect ellaam pammaathu . ithu kooda puriyaddi unkala kadavul thaan kaappaatha vernum muddaal thamilan.

    ReplyDelete