Pages

Friday, April 29, 2011

ஒரு ஆங்கில வார்த்தையினால் திசை மாறிய எனது வாழ்க்கை..!

29-04-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தக் கூத்து நடந்து முடிந்து சில ஆண்டுகளாகிவிட்டது.. ஆனாலும் என் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட நிகழ்வு இது என்பதால் என் மனதில் இருந்து மட்டும் அகற்ற முடியவில்லை..!

'வருவாய் ஆய்வாளர்' என்னும் 'ரெவின்யூ இன்ஸ்பெக்டர்' பதவிக்கான தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சில ஆண்டுகளுக்கு முன்பாக நடத்தியது. அடியேன், அப்போது வெறும் ஊர் சுற்றியாக மதுரையில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தேன்..!

இந்த அறிவிப்பு வந்ததில் இருந்து எனது அக்காமார்களும், அண்ணனும் “இதுக்கு அப்ளிகேஷனை போட்டுட்டு ஒழுங்கு மருவாதையா படிச்சு பாஸ் பண்ணி, வேலைக்குப் போற வழியை பாரு..” என்று மிரட்டத் துவங்கினார்கள். அதெப்படி ஒரே நாளில் கொண்ட கொள்கையை மாற்றிக் கொள்ள முடியுமா..?

பின்பு என்னையே நம்பியிருக்கும் ‘தீபா’. ‘ரூபா’, ‘சிடி சினிமா’, ‘சக்தி’, ‘சிவம்’, ‘மது’, ‘மதி’ தியேட்டர்களின் கதி என்னாவது..? ரெகுலர் பாஸ் வாங்கி வைத்திருக்கும் என்னைப் போன்றவர்களால்தான் அவர்களின் பொழைப்பே ஓடிக் கொண்டிருந்தது.. அடுத்தவர் வயிற்றில் அடிக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

இன்னும் மசியாமல் இருக்கானே என்ற ஆதங்கத்தில் என்னோட ரெண்டாவது அக்காவான செல்வமணி என்னும் செல்வாக்கா, ஒரு ஸ்கட் ஏவுகணையை வீசுச்சு. “நான் பிளஸ் டூதான் படிச்சேன். அப்புறம் எக்ஸாம் எழுதி இந்த ஆபீஸ் வேலையை வாங்கலையா..? எனக்கு மட்டும்தான் அறிவிருக்கா..? நீயும்தான என் கூட பொறந்திருக்க..? என் அறிவுல பாதியாவது உனக்கு இருக்கும்ல.. படிச்சுத் தொலையேண்டா. ஏன் உன்னால முடியாதா..?” என்று என் தன்மானத்தை சீண்டிவிடுவதைப் போல தீக்குச்சியை உரசிப் போட்டுச்சு..!

கொஞ்சம் அசைந்து கொடுத்தேன்.. அப்ளிகேஷனை வாங்கி பில்லப் செய்து ஒரு நல்ல நாளில் போஸ்ட் செய்துவிட்டு அப்படியே புதுமண்டபம் போய் அண்ணன் கொடுத்த காசில் டி.என்.பி.எஸ்.சி. மாடல் கொஸ்டீன் பேப்பர் புஸ்தகத்தையும் வாங்கி வந்தாச்சு..!

இங்கே ஒரு சிக்கல்.. தேர்வில் இரண்டு பிரிவுகள் உண்டு. ஒன்று பொது அறிவுத் திறனை சோதிக்கும் முதல் கட்டத் தேர்வு. இதில் வெற்றி பெற்ற பின்பு, அடுத்தக் கட்டத் தேர்வு. அதுவொரு சோகத்தைத் தாங்கியது. வேப்பங்காயைவிட எனக்குக் கசக்கும் ஆங்கில அறிவை பரிசோதிக்கும் தேர்வு. முடியலை.. யோசித்துப் பார்த்தேன்..!

எப்படியும் முதல் தேர்வில் ஜெயித்தால்தானே அடுத்ததுக்குக் கூப்பிடுவாய்ங்க.. நமக்குத்தான் நம்பிக்கையில்லையே.. பிறகென்ன? என்ற நினைப்பில் ஏதோ ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே புத்தகத்தையும், தினசரி பேப்பர்களையும் மேய்ந்துவிட்டு, புல் கட்டு கட்ட நம்ம தியேட்டர்களுக்கு நேரில் சென்று ஆஜரையும் கொடுத்துவிட்டுத்தான் வந்து கொண்டிருந்தேன்.

முதல் கட்டத் தேர்வும் வந்தது.. “சுதந்திர இந்தியாவின் முதல் வைஸ்ராய் யார்..?  கல்லணையைக் கட்டியது யார்..? சூரியனைச் சுற்றி பூமி சுழல்கிறது - இது சரி.. அல்லது தவறு..” - இந்த மாதிரி கேணத்தனமான கேள்வியா கேட்டுத் தொலைச்சிருந்தாங்க..! ஏதோ எனக்குத் தெரிஞ்ச அளவுக்கு கிறுக்கி வைச்சிட்டு வந்தேன்..!

தேர்வில் பாஸ்..! நம்ப முடியலை.. குவார்ட்டர்ஸ்ல 'பி' பிளாக்ல ஒரே 'சரவணன்' நான்தான்றதால, நம்பித் தொலைய வேண்டியதா போச்சு. அடுத்த ரோதனை ஆரம்பிச்சுச்சு.. இரண்டாம் கட்டத் தேர்வுல தமிழோடு, கொஞ்சம் இங்கிலீபீஷுலேயும் எழுதணும்..

நானும் இங்கிலீஷும் எம்.ஜி.ஆர். நம்பியார் மாதிரி.. ஒண்ணாங்கிளாஸ்ல இருந்து பத்தாம் கிளாஸ்வரைக்கும் பரம எதிரி..! அதுலேயும் 9, 10-ம் வகுப்புகளில் பாலன் கே.நாயரை பார்த்து மலையாள ஹீரோயின்கள் பயப்படுவாங்களே.. அது மாதிரி எனக்கு அதைக் கண்டாலே அப்படியொரு டர்ரு..! இந்த லட்சணத்துல எப்படிங்கய்யா இந்தக் கண்டத்தை தாண்டுறதுன்னு ஒரே யோசனை..!

செல்வாக்கா தினம் ராத்திரி ஒரு மணி நேரம் எனக்கோசரம் உக்காந்து மண்டைல கொட்டி, கொட்டி "VERB"ன்னா என்ன? "NOUN"ன்னுன்னா என்ன..? "SENTENCE"ன்னா என்னன்னு விலாவாரியா எடுத்து எடுத்துச் சொல்லுச்சு.. அப்பவும் நம்ம மரமண்டைல ஏறலை..

சரி.. தெரியறவரைக்கும் ஒப்பேத்திருவோம்னுட்டு தைரியமா எக்ஸாமுக்கு போனேன்.. கோடிட்ட இடத்தை நிரப்புன்ற மாதிரி அஞ்சு மார்க் கொஸ்டீன்ஸ் இருந்துச்சு.. அப்புறம் எதிர்ச்சொல் சொல்லுன்ற மாதிரி 5 கொஸ்டீன்ஸ்.. இதையும் கொஞ்சம் யோசிச்சு தாண்டியாச்சு.. அப்புறம் ஒரே வாக்கியத்தில் வார்த்தைகளை மாத்திப் போட்டு வைச்சிருந்தாங்க. அதுக்கான சரியான வாக்கியத்தை செலக்ட் செய்யச் சொல்லியிருந்தாங்க. கைல எச்சிலை வைச்சு, எப்படியோ கண்டுபிடிச்சுப் போட்டுட்டேன்..

கடைசியா ஒரு மொய் வைச்சிருந்தானுங்கப்பா..! இது ஒண்ணுதான் என் வாழ்க்கைய இப்போவரைக்கும் இப்படி புரட்டிப் போட்டதுக்கு ஒரே காரணம்..!

பத்து வரில ஒரு கதையைக் கொடுத்துப்புட்டு, அந்தக் கதை தொடர்பா சில கேள்விகளைக் கேட்டு பதில் எழுதச் சொல்லியிருந்தாங்க. இதுக்கு 10 மார்க்கு..!

நானும் படிச்சேன்.. படிச்சேன்.. படிச்சேன்.. திருப்பித் திருப்பிப் படிச்சேன்.. CLOTHS, WASHING, RIVER, MAN எல்லாம் புரிஞ்சுச்சு.. ஒரேயொரு வார்த்தைக்கு மட்டும்தான் அர்த்தம் புரியலை..! இதையெல்லாம் கூட்டிக் கழிச்சு பார்த்து ஏதாவது தோணுதான்னுகூட யோசிச்சுப் பார்த்தேன்.. ம்ஹூம்.. ஒண்ணும் தோணலை..

சரி விடு கழுதை...! வராததுக்காக எதுக்கு கொஞ்சூண்டு இருக்குற நம்ம ஹைப்போதலாமஸை வேஸ்ட்டாக்கணும்னு சொல்லிட்டு அதுல கேட்டிருந்த எல்லா கேள்வியையும் விட்டுட்டேன்..! ஆனாலும் அந்த ஒரு வார்த்தைக்கு அர்த்தம் தெரியாம ரொம்பவே மனசு கஷ்டமா இருந்துச்சு..!

தேர்வு மதியானம் முடிஞ்சு, அப்படியே நேரா அடுத்த பஸ்ஸை புடிச்சு மது தியேட்டருக்குப் போய் மனசை சாந்தப்படுத்திட்டு திரும்பவும் வீட்டுக்குப் போன பின்னாடியும் அந்த ஒத்தை வார்த்தை திரும்பத் திரும்ப மனசுக்குள்ள வந்துகிட்டே இருந்துச்சு.. வீட்ல செல்வாக்கா கேட்டதுக்கு “எல்லாம் நல்லாத்தான் எழுதியிருக்கேன். என்னை செலக்ட் செய்யாம போயிருவானுகளா?”ன்னு ச்சும்மா ரூட் விட்டுட்டு எஸ்கேப்பானேன்..! வீட்ல அக்கா, அண்ணன் எல்லாரும் இந்த முடிவுக்காக ரொம்ப ஆர்வமா காத்திருக்க ஆரம்பிச்சாங்க. ஆனாலும் செல்வாக்கா ரொம்ப, ரொம்ப அப்பாவி.. அப்படியே என்னை நம்பிட்டுருந்துச்சு..!

ஒரு நல்ல நாள் அதுவுமா, ரிசல்ட் வீட்டுக்கு வந்துச்சு.. 4 மதிப்பெண்கள் குறைவாக எடுத்திருப்பதால் தேர்வில் தோல்வி என்று..! இரண்டு தேர்வுகளிலும் சேர்த்து ஆவரேஜா 60 சதவிகிதத்துக்கு மேல எடுத்திருந்தால் பாஸ். நான் எடுத்திருந்தது 56.

அண்ணனுக்கும், செல்வாக்காவுக்கும் தாங்க முடியாத வருத்தம், சனியனை இத்தோட ஒழிச்சுக் கட்டிரலாம்னு பார்த்தா மறுபடியும் டவுசரை கிழிச்சுட்டு நடுவீட்ல உக்காந்துட்டானேன்னு..! இருக்காதா பின்ன..? சம்பாதிச்சுக் கொட்டுறது அவங்க..! அந்தக் காசுல ஊரைச் சுத்துறது நானுல்ல..!

அக்காவோட வருத்தம் தாங்க முடியாம, அந்த கொஸ்டீன் பேப்பரை அப்பத்தான் தேடியெடுத்து “அந்த” வார்த்தையைக் காட்டி விஷயத்தைச் சொல்லி, “இதுக்கு என்னக்கா அர்ததம்”ண்ணே..!?

அப்படியே ஏற இறங்க பார்த்துட்டு அப்புறம் திட்டுச்சு பாருங்க.. ஒரு திட்டு.. அவுங்க வீட்டுக்காரரைகூட அதுக்கப்புறம் இப்படி திட்டலை செல்வாக்கா... அப்படியொரு வசவு.. "நீயெல்லாம் ஒரு புள்ளையாடா..? நீ எப்படிடா டென்த் படிச்சு முடிச்ச..? அப்புறம் ஐ.டி.ஐ. வேற.. அதுல அப்ரண்டீஸும் படிச்சு முடிச்சுக் கிழிச்சிட்ட..? கழுதை.. கழுதை.. இது என்னன்னுகூட தெரியாம இப்படி தடிமாடு மாதிரி வளர்ந்திருக்க.. சனியன். சனியன்....”னு வாய்க்கு வந்ததெல்லாம் திட்டி ஓய்ஞ்ச பின்னாடி, நானே ஒரு சொம்பு நிறைய தண்ணியை கொடுத்து அக்காவை ஆசுவாசப்படுத்திட்டு மறுபடியும், “அந்த வார்த்தைக்கு என்னக்கா அர்த்தம்...?”னு அப்பாவியா கேட்டேன்..

நான் கிண்டல் செய்யலை. நிசமாவே தெரியாமத்தான் கேக்குறேன்னு புரிஞ்சுக்கிட்ட செல்வாக்கா, கடைசீல ரொம்ப வருத்தமா சொல்லுச்சு “DONKEY-ன்னா 'கழுதை'டா..”ன்னு..!

அடங்கொக்காமக்கா.. கழுதையைத்தான் இப்படி DONKEY-ன்னு கூப்பிடுறானுவகளா..? 25 வயசுவரைக்கும் இந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியாம ஒரு பய வளர்ந்திருக்கேன்னா, என்னத்தடா சொல்லிக் கொடுத்தீங்கன்னு, என் ஸ்கூலை நான் திட்டாத திட்டுல்ல..!

அது மட்டும் “கழுதை”ன்னு தெரிஞ்சிருந்தா அதுல இருந்த 5 கேள்விக்கும் சரியா பதில் எழுதியிருப்பனே..? 10 மார்க் கிடைச்சு பாஸ் பண்ணியிருந்தா ஐயா இந்நேரம், ரெவின்யூ இன்ஸ்பெக்டரா ஜம்முன்னு கவர்ன்மெண்ட்டு வேலை பார்த்திட்டு நிம்மதியா சீட்டைத் தேய்ச்சிட்டிருந்திருப்பேன்.. முக்கியமா எங்கிட்டாவது, யாருக்காவது கழுத்தை நீட்டி.. புள்ளைய பெத்துட்டு நிம்மதியா குடும்பஸ்தனாகியிருப்பேன்..!

விட்டானா முருகன்..!? அயோக்கிய ராஸ்கல்..! தமிழ்.. தமிழ்ன்னு அவனை மட்டுமே படிக்க வைச்சு கடைசியா இப்போவரைக்கும் பிச்சையெடுக்க வைச்சிட்டானே என்ன..!?

சரி.. அவன் கெடக்கட்டும்.. வருஷக்கணக்கா என் வீட்ல என்னோட அப்பா, அம்மா, அக்காமார்கள், அண்ணன்னு அத்தனை பேரும் என்னை ரவுண்டு கட்டி, முறை வைச்சுத் திட்டியிருக்காங்க.. இதே மாதிரி “எருமை மாடு, கழுதை, சனியன், பீடை, எங்கயோ கழுதை மாதிரி ஊர் சுத்திட்டு வருது பாரு..” என்றெல்லாம் திட்டித் தீர்த்திருக்கிறார்கள்..!


அப்படித் திட்டும்போதாவது “தோ பாரு.. DONKEY மாதிரி சுத்திட்டு வந்திருக்கான்.. இங்க பாரு.. MONKEY மாதிரி அலைஞ்சிட்டு வந்திருக்கான்.. அங்க பாரு.. DOG மாதிரி ஓடிட்டு வந்திருக்கான்.. இங்க பாரு… PIG மாதிரி திரியறான்”னு கொஞ்சம் இங்கிலீஷு வார்த்தையையெல்லாம் போட்டுத் திட்டியிருந்தா, ஒருவேளை இதெல்லாம் எனக்குத் தெரிஞ்சு நான் பாஸ் பண்ணித் தொலைஞ்சிருப்பனே..?

இந்த பிளாக்கு, சினிமா, பிச்சையெடுக்க வைத்திருக்கும் சென்னைன்னு எதையும் தொடாம, எதையும் எதிர்பார்க்காத ஒரு சாதாரண மிடில் கிளாஸ் மனுஷனாவே இருந்து, ஏன் நிம்மதியா செத்து கூட போயிருக்கலாம்.. ம்.. என்னத்த சொல்றது..? எல்லாம் அந்த ஒத்த வார்த்தையால முடிஞ்சு போச்சு..!?

கண்ணுகளா.. இனிமேலாச்சும் நீங்க வீட்ல பிள்ளைகளை திட்டும்போது, கொஞ்சம் இங்கிலீஷ்லேயும் சேர்த்து வைச்சுத் திட்டுங்கப்பா.. அப்படியாச்சும் அவுங்க நாலு இங்கிலீஷை கத்துக்கிடட்டும்..!

93 comments:

  1. ஆஹா, அண்ணன் ஒரு வழியா ரிலாக்ஸ் ஆகிட்டாரு போலிருக்கே!

    ReplyDelete
  2. ஹா..ஹா..அப்புறம் DONKEY-ன்னா என்னன்னு நினைச்சீங்க? யாரோ டானோட கீ-ன்னா?

    ReplyDelete
  3. எங்களுக்கு ஒரு நல்ல பதிவரைக் கொடுத்த DONKEY இனம் பதினாறும் பெற்று பல்லாண்டு வாழ்க!

    ReplyDelete
  4. முருகன் பேருல எனக்கு இப்ப கோபம் வருது அண்ணாச்சி. அந்த 4 மார்க்க எடுக்க வெச்சிருந்தா நாங்களாது தப்பிச்ச்ருப்போம் ...

    ReplyDelete
  5. நான்கூட எப்புடி இந்த மனுசன் இப்படி பொறுமைசாலியா இருக்காருன்னு நினைச்சதுண்டு. இப்பல்ல புரியுது:))

    ReplyDelete
  6. பத்தாவது படித்தும் ஐடிஐ முடித்தும் அப்பரண்டீஸா வேலை பார்த்தும் அந்த வார்த்தை காதிலேயே விழலையா? நம்ப முடியவில்லை. இல்லை.... இல்லை....

    ReplyDelete
  7. பின்பு என்னையே நம்பியிருக்கும் ‘தீபா’. ‘ரூபா’, ‘சிடி சினிமா’, ‘சக்தி’, ‘சிவம்’, ‘மது’, ‘மதி’ தியேட்டர்களின் கதி என்னாவது..? ரெகுலர் பாஸ் வாங்கி வைத்திருக்கும் என்னைப் போன்றவர்களால்தான் அவர்களின் பொழைப்பே ஓடிக் கொண்டிருந்தது.. அடுத்தவர் வயிற்றில் அடிக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.//

    உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு சகோ.

    ReplyDelete
  8. அண்ணே, படித்தவுடன் மனதை ஏதோ அழுத்தியது..

    ReplyDelete
  9. குவார்ட்டர்ஸ்ல பி பிளாக்ல ஒரே சரவணன் நான்தான்றதால நம்பித் தொலைய வேண்டியதா போச்சு.//

    அவ்.......................

    ReplyDelete
  10. நிரூபன் said...
    ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் ஓர் அனுபவப் பாடம்...படிக்கும் போது மனசிற்கு கொஞ்சம் கஸ்டமாக இருந்திச்சு சகோ.

    ReplyDelete
  11. குறும்படமா எடுக்கலாம்

    ReplyDelete
  12. Cloths, washing, River, Man, Donkey . . . .. . இதவச்சு கதை எழுதனும்னா, மெக்சிகன் சலவைக்காரி ஜோக் எழுதலாம்

    ReplyDelete
  13. வருவாய் ஆய்வாளர் வேலைக்கு ஒழுங்காக அனுப்பியது போல் கிராம நிர்வாக அலுவலர் வேலைக்கும் விண்ணப்பத்தை ஒழுங்காக அனுப்பியிருக்கலாமே

    ReplyDelete
  14. ஒரு donkey யால உங்க வாழ்க்கைல இப்படி ஒரு tragedy யா? பாவம் தம்பி நீ...

    Ram

    ReplyDelete
  15. என்ன கொடும சரவணன் :-)

    ReplyDelete
  16. இதுக்கு தான் வீடுகளுக்கு முன்னாடி "என்னை பார் யோகம் வரும்" என்னு கழுத படத்தை ஒட்டி வை என்பார்களோ .))))

    ReplyDelete
  17. அங்கிளுக்குகாக‌ கவலைப்படறதா இல்ல இவ்வளவு அசட்டையாக இருந்ததுக்கு, அவர் மருமக்களை விட்டு அங்கிளை உதைக்க சொல்லவா (ஹி ஹி. டொங்கின்னு சொன்ன உடன் உதைக்க சொல்லுது பாருங்க)

    ReplyDelete
  18. ஆங்கிலத்தில் திட்டுவதா? ஹா ஹா. எனக்கொரு உண்மை தெரிஞ்சாக வேணும். ஒரு ரவுண்டு எங்க பக்கம் பார்த்த பின்னர் இதை எழுதினீங்களா? இல்ல பாக்காம எழுதினீங்களா. எல்லாமே கொயின்சிடன் போல நடக்குதுன்னு நம்ப ஆரம்பிச்சா, எனக்கு பைத்தியம் பிடிக்கும். ஹா ஹா. அப்படி நடந்தா, உ.த. அங்கிள் பக்கத்து ரூம் கொடுங்கன்னு சொல்லி வைச்சிருக்கேன். பொழுது போகனும்ல. உங்க பெரிய பெரிய பதிவைப் படிக்கவே எனக்கு நேரம் சரியாக இருக்கும்.

    ஆமா, நீங்க மெயில் எல்லாம் பாக்கமாட்டீங்களா?அப்புறம் எதுக்கு உங்களுக்கு மெயில்? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  19. //"குவார்ட்டர்ஸ்ல பி பிளாக்ல ஒரே சரவணன் நான்தான்றதால"//
    Dean's Compound / Race Course Colony / D R O Colony...or any other quarters?

    ReplyDelete
  20. //இராமசாமி said...
    முருகன் பேருல எனக்கு இப்ப கோபம் வருது அண்ணாச்சி. அந்த 4 மார்க்க எடுக்க வெச்சிருந்தா நாங்களாது தப்பிச்ச்ருப்போம் ...//

    ஐயா, சிரிச்சு மாளலீங்க‌. முருகன் நம்மள இப்படி சோதிச்சிட்டானே!

    ReplyDelete
  21. இதுக்கு கருணாநிதி தான் காரணம் சொல்லவே இல்லையே அண்ணே )

    ReplyDelete
  22. நல்ல பதிவு.
    படிக்கும் போது சினிமா தியேட்டர்களுக்கு செல்லும் போது இந்து மாதிரி பத்திரிக்கைகளையும் படித்திருக்க வேண்டும்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. Why not you tried with General knowledge and Tamil in TNPSC. In TNPSC 100 marks for GK And 100 marks for Tamil. .(total 200) if you get above 170 you will defenetly get job. Why you appear GS with English.?.

    ReplyDelete
  24. //வருவாய் ஆய்வாளர் வேலைக்கு ஒழுங்காக அனுப்பியது போல் கிராம நிர்வாக அலுவலர் வேலைக்கும் விண்ணப்பத்தை ஒழுங்காக அனுப்பியிருக்கலாமே//

    சார்! வேணாம்! அப்புறம் குறும்பன் வந்து அவர் ஒழுங்காத்தான் அனுப்பினாருன்னு சொல்ல, நீங்க அதுக்கு பதில் சொல்ல...இழுத்துக்கிட்டே போயி எங்களை தலைகிறுகிறுக்க வச்சிரும்! ;-))

    ReplyDelete
  25. சரவணன்!
    பதிவை படிக்கறத்துக்கு முன்னாடி பழக்கதோஷத்துல ஸ்க்ரோல்பாரை அழுத்திக்கிட்டே கீழே பார்த்தேன். நல்லவேளை! நன்றி : ஜூ.வின்னு போடலை. அதுக்கப்புறம்தான் பதிவையே படிச்சேன்! :-) இழையோடிய நகைச்சுவைய ரசிச்சேன்.

    ReplyDelete
  26. [[[செங்கோவி said...

    ஆஹா, அண்ணன் ஒரு வழியா ரிலாக்ஸ் ஆகிட்டாரு போலிருக்கே!]]]

    நோ ரிலாக்ஸ் செங்கோவி.. இன்னிக்கு ராத்திரி பாருங்க..! மறுபடியும் முருங்கை மரம்தான்..!

    ReplyDelete
  27. [[[செங்கோவி said...

    ஹா. ஹா.. அப்புறம் DONKEY-ன்னா என்னன்னு நினைச்சீங்க? யாரோ டானோட கீ-ன்னா?]]]

    ஏதோ ஒண்ணுன்னு நினைச்சுட்டேன்..!

    ReplyDelete
  28. [[[செங்கோவி said...

    எங்களுக்கு ஒரு நல்ல பதிவரைக் கொடுத்த DONKEY இனம் பதினாறும் பெற்று பல்லாண்டு வாழ்க!]]]

    அடப்பாவிகளா..? இந்த ரணகளத்துலேயும் உமக்கு கிளுகிளுப்பு கேக்குதா..?

    ReplyDelete
  29. [[[இராமசாமி said...

    முருகன் பேருல எனக்கு இப்ப கோபம் வருது அண்ணாச்சி. அந்த 4 மார்க்க எடுக்க வெச்சிருந்தா நாங்களாது தப்பிச்ச்ருப்போம்.]]]

    நிச்சயமா.. நானும் தப்பிச்சிருப்பேன்..!

    ReplyDelete
  30. [[[வானம்பாடிகள் said...

    நான்கூட எப்புடி இந்த மனுசன் இப்படி பொறுமைசாலியா இருக்காருன்னு நினைச்சதுண்டு. இப்பல்ல புரியுது:))]]]

    ஹி.. ஹி.. ஹி.. கழுதைக்கும், நமக்கும் ஏதோ பூர்வ ஜென்ம கனெக்ஷன் இருக்குன்னு நினைக்கிறேன் ஸார்.. அதான் இப்படி நம்ம வாழ்க்கையே கழுதை மாதிரி இழுத்துக்கிட்டே போவுது..!

    ReplyDelete
  31. [[[சுல்தான் said...

    பத்தாவது படித்தும் ஐடிஐ முடித்தும் அப்பரண்டீஸா வேலை பார்த்தும் அந்த வார்த்தை காதிலேயே விழலையா? நம்ப முடியவில்லை. இல்லை. இல்லை.]]]

    1 முதல் 5-ம் வகுப்பு வரையிலும் ஏதாவது ஒரு கிளாஸ்ல படிச்சிருக்கலாம். எனக்கு நினைவில்லை. ஆனால் 5 முதல் 10 வரையிலும் ஆங்கிலப் பாடத்திலேயே இந்த வார்த்தைகள் இல்லைன்னு நினைக்கிறேன். அதான் என் மரமண்டைல ஏறலை..

    அப்புறம் ஐ.டி.ஐ.ல டீசல் மெக்கானிக் படிச்சேன். அதுக்கும் கழுதைக்கும், ஸ்நானப் பிராப்தம்கூட இல்லையே சுல்தான் ஸார்..!

    ReplyDelete
  32. [[[நிரூபன் said...

    பின்பு என்னையே நம்பியிருக்கும் ‘தீபா’. ‘ரூபா’, ‘சிடி சினிமா’, ‘சக்தி’, ‘சிவம்’, ‘மது’, ‘மதி’ தியேட்டர்களின் கதி என்னாவது..? ரெகுலர் பாஸ் வாங்கி வைத்திருக்கும் என்னைப் போன்றவர்களால்தான் அவர்களின் பொழைப்பே ஓடிக் கொண்டிருந்தது.. அடுத்தவர் வயிற்றில் அடிக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.//

    உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு சகோ.]]]

    என்னை மாதிரி நாட்டுல எத்தனையோ பேர் இருக்காங்க நிரூபன்..!

    ReplyDelete
  33. [[[kuthu said...

    அண்ணே, படித்தவுடன் மனதை ஏதோ அழுத்தியது.]]]

    அப்போ நான் சரியாத்தான் எழுதியிருக்கேன்னு நினைக்கிறேன். மிக்க நன்றி நண்பரே..!

    ReplyDelete
  34. [[[நிரூபன் said...

    ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் ஓர் அனுபவப் பாடம். படிக்கும் போது மனசிற்கு கொஞ்சம் கஸ்டமாக இருந்திச்சு சகோ.]]]

    கண்டிப்பா இது எல்லாருக்குமே ஒரு அனுபவமா இருக்கும்..!

    ReplyDelete
  35. [[[நசரேயன் said...

    குறும்படமா எடுக்கலாம்.]]]

    எடுத்திருவோம்..!

    ReplyDelete
  36. [[[புருனோ Bruno said...

    Cloths, washing, River, Man, Donkey..... இத வச்சு கதை எழுதனும்னா, மெக்சிகன் சலவைக்காரி ஜோக் எழுதலாம்.]]]

    ம்.. பின்னாடி.. ரொம்ப நாள் கழிச்சு.. குமுதத்துல படிச்சேன்..!

    ReplyDelete
  37. [[[புருனோ Bruno said...

    வருவாய் ஆய்வாளர் வேலைக்கு ஒழுங்காக அனுப்பியது போல் கிராம நிர்வாக அலுவலர் வேலைக்கும் விண்ணப்பத்தை ஒழுங்காக அனுப்பியிருக்கலாமே..?]]]

    வருவாய் ஆய்வாளர் வேலைக்கு சொல்லியிருந்த விதிமுறைகளை போல், தெளிவாக கிராம நிர்வாக அலுவலருக்கும் சொல்லித் தொலைத்திருக்கலாம்..!

    ReplyDelete
  38. [[[Ram said...

    ஒரு donkey-யால உங்க வாழ்க்கைல இப்படி ஒரு tragedy-யா? பாவம் தம்பி நீ.

    Ram]]]

    மனுஷனுக்கு எது, எதாலோ பிரச்சினை வரும்.. எனக்கு கழுதைன்னால இப்படியொரு பிரச்சினை..?

    ReplyDelete
  39. [[[கந்தசாமி. said...

    என்ன கொடும சரவணன் :-)]]]

    எல்லாம் நம்மளை ஆட்டி வைக்கிற கொடுமைதான்..!

    ReplyDelete
  40. [[[கந்தசாமி. said...

    இதுக்குதான் வீடுகளுக்கு முன்னாடி "என்னை பார் யோகம் வரும்" என்னு கழுத படத்தை ஒட்டி வை என்பார்களோ .))))]]]

    அந்த போட்டோலகூட DONKEY-ன்னு எழுதாம விட்டுட்டாங்களே ஸார்..!

    ReplyDelete
  41. [[[அனாமிகா துவாரகன் said...

    அங்கிளுக்குகாக‌ கவலைப்படறதா இல்ல இவ்வளவு அசட்டையாக இருந்ததுக்கு, அவர் மருமக்களை விட்டு அங்கிளை உதைக்க சொல்லவா

    (ஹி ஹி. டொங்கின்னு சொன்ன உடன் உதைக்க சொல்லுது பாருங்க)]]]

    ம்.. எல்லாருக்கும் என்னைப் பார்த்தா இளப்பமாத்தான் இருக்கும்..!

    ReplyDelete
  42. [[[அனாமிகா துவாரகன் said...

    ஆங்கிலத்தில் திட்டுவதா? ஹா ஹா. எனக்கொரு உண்மை தெரிஞ்சாக வேணும்.

    ஒரு ரவுண்டு எங்க பக்கம் பார்த்த பின்னர் இதை எழுதினீங்களா? இல்ல பாக்காம எழுதினீங்களா. எல்லாமே கொயின்சிடன் போல நடக்குதுன்னு நம்ப ஆரம்பிச்சா, எனக்கு பைத்தியம் பிடிக்கும். ஹா ஹா. அப்படி நடந்தா, உ.த. அங்கிள் பக்கத்து ரூம் கொடுங்கன்னு சொல்லி வைச்சிருக்கேன். பொழுது போகனும்ல. உங்க பெரிய பெரிய பதிவைப் படிக்கவே எனக்கு நேரம் சரியாக இருக்கும்.

    ஆமா, நீங்க மெயில் எல்லாம் பாக்க மாட்டீங்களா? அப்புறம் எதுக்கு உங்களுக்கு மெயில்? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்]]]

    பார்த்தேன்ம்மா.. ஆனால் நிறைய புரியலை.. அதுனாலதான் அமைதியா இருக்கேன்..!

    ReplyDelete
  43. [[[ஸ்ரீராம். said...

    //"குவார்ட்டர்ஸ்ல பி பிளாக்ல ஒரே சரவணன் நான்தான்றதால"//

    Dean's Compound / Race Course Colony / D R O Colony...or any other quarters?]]]

    PF Office Quarters..!

    ReplyDelete
  44. [[[கெக்கே பிக்குணி said...

    //இராமசாமி said...
    முருகன் பேருல எனக்கு இப்ப கோபம் வருது அண்ணாச்சி. அந்த 4 மார்க்க எடுக்க வெச்சிருந்தா நாங்களாது தப்பிச்ச்ருப்போம் ...//

    ஐயா, சிரிச்சு மாளலீங்க‌. முருகன் நம்மள இப்படி சோதிச்சிட்டானே!]]]

    உங்களை மட்டுமில்ல.. என்னையும்தான்..! எனக்கு இப்போ இதெல்லாம் தேவையா..? நீங்களே சொல்லுங்க..!

    ReplyDelete
  45. [[[Muthu Thamizhini said...

    இதுக்கு கருணாநிதிதான் காரணம் சொல்லவே இல்லையே அண்ணே)]]]

    அப்போ அம்மாவோட முதல் ஆட்சி பீரியடுன்னு நினைக்கிறேன்..! சரியா ஞாபகமில்லை..!

    ReplyDelete
  46. [[[Rathnavel said...

    நல்ல பதிவு. படிக்கும் போது சினிமா தியேட்டர்களுக்கு செல்லும்போது இந்து மாதிரி பத்திரிக்கைகளையும் படித்திருக்க வேண்டும். வாழ்த்துக்கள்.]]]

    உண்மைதான். இந்த அறிவு அதுக்கப்புறம்தான் வந்துச்சு..!

    ReplyDelete
  47. [[[Namy said...

    Why not you tried with General knowledge and Tamil in TNPSC. In TNPSC 100 marks for GK And 100 marks for Tamil. (total 200) if you get above 170 you will defenetly get job. Why you appear GS with English.?.]]]

    இப்போ வயசு போயிருச்சு நமீ..!

    ReplyDelete
  48. [[[ரிஷி said...

    //வருவாய் ஆய்வாளர் வேலைக்கு ஒழுங்காக அனுப்பியது போல் கிராம நிர்வாக அலுவலர் வேலைக்கும் விண்ணப்பத்தை ஒழுங்காக அனுப்பியிருக்கலாமே//

    சார்! வேணாம்! அப்புறம் குறும்பன் வந்து அவர் ஒழுங்காத்தான் அனுப்பினாருன்னு சொல்ல, நீங்க அதுக்கு பதில் சொல்ல. இழுத்துக்கிட்டே போயி எங்களை தலை கிறுகிறுக்க வச்சிரும்! ;-))]]]

    ஏற்கெனவே சுத்தினது போதாதா ரிஷி..?

    ReplyDelete
  49. [[[ரிஷி said...
    சரவணன்! பதிவை படிக்கறத்துக்கு முன்னாடி பழக்க தோஷத்துல ஸ்க்ரோல்பாரை அழுத்திக்கிட்டே கீழே பார்த்தேன். நல்லவேளை! நன்றி : ஜூ.வின்னு போடலை. அதுக்கப்புறம்தான் பதிவையே படிச்சேன்! :-) இழையோடிய நகைச்சுவைய ரசிச்சேன்.]]]

    மிக்க நன்றி ரிஷி..!

    ReplyDelete
  50. அண்ணே இந்த பதிவுக்கு நான் என்ன பண்ணனும்?

    ReplyDelete
  51. நேர்மை உங்களின் எழுத்துக்கு எப்படி வாளின் கூர்மையைத் தருகிறதோ அதேபோல அங்கத்திலும் அசத்துகிறீர்கள். வலிந்து உருவாக்கப்படும் அங்கதச் சுவையாக அன்றி இயல்பானதாக இருக்கிறது. தொடருங்கள்.

    ReplyDelete
  52. நாங்க இப்ப அனுபவிக்கிற இம்புட்டுக் கொடுமைக்கும் கழுதைதான் காரணமா?

    ReplyDelete
  53. //////////விட்டானா முருகன்..!? அயோக்கிய ராஸ்கல்..! //


    ஹா ஹா ஹா ..,என்னக்கும் அப்படிதான் பண்றான் இந்த முருகன் ..,ஒரு நாள் இல்ல ஒரு நாள் நான் APPOINTMENT ORDER வாங்கிட்டு அவன் முன்னாடி போய் நிற்பேன் ..,அப்போ அவன நான் பார்க்கணும் ..,

    ReplyDelete
  54. So pathetic... :)

    உங்களை சொல்லல. எங்களை சொன்னேன். அந்த வார்த்தைக்கு மட்டும் உங்களுக்கு அருத்தம் தெரிஞ்சிருந்தா பதிவுலகம் தப்பியிருக்குமோ! :))

    ReplyDelete
  55. உண்மையிலேயே ரொம்ப வருத்தமாக இருக்கு. இப்பவாவது எதிர்வரும் சந்ததியினர் ஆங்கிலம் சரியாக கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒரு பதிவு போடுங்களேன். இணைய உலகில் படிப்பவர்கள் தங்கள் அருகாமையில் உள்ள குழந்தைகளுக்கு கொஞ்சம் கற்றுக் கொடுக்கலாமே! நன்றி!
    இணைய உலகில் உங்களை இடம் பிடிக்க வைத்ததற்கும் இது தானே காரணம், முருகனுக்கு நமஸ்காரங்கள்.
    நன்றி!

    ReplyDelete
  56. SSLC வரை படித்தவர்,தனக்கு donkey என்றால் பொருள் தெரியாது என சொல்லிக்கொள்ள...இல்லையில்லை,
    தம்பட்டம் அடிக்க,அசாத்திய துணிவு வேண்டும்.
    "படித்ததினால் அறிவு பெற்றோர்"என்ற "படிக்காத மேதை" படப்பாடலை அடிக்கடி கேட்டு மனதை தேற்றிக்கொள்ளவும்.
    உங்கள் பெயரை பரம்வீர் சக்ரா விருதிற்கு பரிந்துரைக்கிறேன்!

    ReplyDelete
  57. அட சரவணா!!!!!

    நாலு கழுதை வயசாகியும் டாங்க்கி தெரியலையா!!!!!!!!!!!!!

    நல்ல கூத்து:-)))))

    பத்தாவது படிக்க்கும் சமயம் ஹிந்திப் பரிட்சையில் ஒரு சொல்லுக்குப் பொருள் தெரியாம முழிக்க வேண்டியதாப் போச்சு.

    அப்பாவுக்குக் கடிதம் எழுதணுமாம். பத்து மார்க்.
    அதுவும் எதைப்பற்றி? அத்யந்த் கே பாரே மே!

    இந்த அத்யந்த் என்னன்னே தெரியலை:(

    அப்பாவின் விலாசம் எல்லாம் சரியா எழுதி

    அன்புள்ள அப்பா , நான் நலம். நீங்க நலமான்னு விசாரிப்பெல்லாம் முடிச்சு (எல்லாம் ஹிந்தியில்தான்) கடைசியில் அத்யந்த் பற்றி எனக்கு ஒன்னுமே தெரியாதுன்னு கடிதத்தை முடிச்சு என் பெயர் விலாசம் எல்லாம் ஒழுங்கா எழுதிட்டேன்.

    கடிதம் எழுதும் முறை சரியா இருக்குன்னு அதுக்கு 7 மார்க் கிடைச்சது.

    ஆமாம்.... அந்த அத்யந்த்க்கு பொருள் என்னவா இருக்கும்? மண்டையை உடைச்சு யோசிக்க முடியாமல் ஹிந்தி டீச்சரிடம் கேட்டால்............... ஐயோ என்னன்னு சொல்வேன்?

    படிப்பு என்று பொருளாம்!!!!

    ReplyDelete
  58. D - for DONKEY இதுக்குதான் L.K.G. ஒழுங்கா படிக்கனும்னு சொல்றது. அப்ப படிக்காம அரட்டையடித்ததால் வந்த வினை. பதிவு செம காமெடி உங்க ஸ்டைல்ல கலக்கிட்டீங்கண்ணே.

    ReplyDelete
  59. நல்லா எழுதி இருக்கீங்க..

    திட்டிக்கூட ஒழுங்கா வளர்க்கத்தெரியலயே பெரியவங்களுக்குன்னு நல்லாக்கேட்டிருக்கீங்க....:)))

    ReplyDelete
  60. ஆமா இல்லன்னா அப்படியே இந்த கழுத முதலமைச்சர் ஆயிருவாரு...போடா டேய். ஆபீசுக்கு தயிர்சாத டப்பாவோட போற நாயிங்க இந்த கருமத்த ரசிக்கும் மிடில் கிளாஸ் இங்கிலீஷ் தெரியாத கழுதைகள்...அட போங்கடா. போடா போயி நடுத்தெருவுல மூக்க நோண்டுறத விட்டுட்டு விட்டல போய் குளிங்க.

    ReplyDelete
  61. கழுதையால யோகம் வரும்னு சொல்வாங்களேண்ணே?

    ReplyDelete
  62. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    கழுதையால யோகம் வரும்னு சொல்வாங்களேண்ணே?//
    என்ன சரவணா.. யோகம் வொர்க் அவுட் ஆகிடுச்சா?

    ReplyDelete
  63. நேர்மை உங்களின் எழுத்துக்கு எப்படி வாளின் கூர்மையைத் தருகிறதோ அதேபோல அங்கதத்திலும் அசத்துகிறீர்கள். வலிந்து உருவாக்கப்படும் அங்கதச் சுவையாக அன்றி இயல்பானதாக இருக்கிறது. தொடருங்கள்.

    ReplyDelete
  64. //சரி விடு கழுதை...! வராததுக்காக எதுக்கு கொஞ்சூண்டு இருக்குற நம்ம ஹைப்போதலாமஸை வேஸ்ட்டாக்கணும்னு //

    இப்படி தெரிந்துகொண்டே தெரியவில்லை என்றெல்லாம் சொல்லக்கூடாது.
    :-)))

    ReplyDelete
  65. மிகவும் பயனுள்ள பதிவு! :))

    அப்படியே கல்வெட்டுல எழுதிவச்சிடிங்கன்னா, இனி வர்ற பயபுள்ளங்க இத படிச்சிட்டு பொழச்சி போவட்டும்..

    ReplyDelete
  66. இந்த பதிவை படிக்கு போது உடன் தங்கமணியும் இருந்தார்கள்.
    தங்கமணி: பாவம் அண்ணன் ஒரு கழுதையால அவருக்கு எவ்வளவு கஷ்டம்.
    நான்:அவருக்கு மட்டுமா என்னக்கும் தான்

    ReplyDelete
  67. அண்ணா இனிமேவாவது english கத்துக்குங்க. சீக்கிரம் நல்ல வேலை கிடைக்கும்

    ReplyDelete
  68. //இந்தக் கூத்து நடந்து முடிந்து சில ஆண்டுகளாகிவிட்டது.. //

    அண்ணே! வர வர தமிழும் மறந்து போகுதா? 20 வருஷத்துக்கு முன்னாடி நடந்தா அதெல்லாம் "சில" ல வராது. :) வேண்ணா முன்னொரு காலத்திலேன்னு போட்டுக்கலாம். :)

    ReplyDelete
  69. [[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    அண்ணே இந்த பதிவுக்கு நான் என்ன பண்ணனும்?]]]

    பிளஸ் ஓட்டு போட்டியா இல்லியா..? அதுவே போதும்..!

    ReplyDelete
  70. [[[செல்லையா முத்துசாமி said...

    நேர்மை உங்களின் எழுத்துக்கு எப்படி வாளின் கூர்மையைத் தருகிறதோ அதேபோல அங்கத்திலும் அசத்துகிறீர்கள். வலிந்து உருவாக்கப்படும் அங்கதச் சுவையாக அன்றி இயல்பானதாக இருக்கிறது. தொடருங்கள்.]]]

    மிக்க நன்றிகள் ஐயா..!

    ReplyDelete
  71. [[[வடகரை வேலன் said...

    நாங்க இப்ப அனுபவிக்கிற இம்புட்டுக் கொடுமைக்கும் கழுதைதான் காரணமா?]]]

    ஆமாண்ணே.. இத்தனை நாளா என் வீட்டுப் பக்கம் வராம இருந்த உங்களை வரவழைச்சதுகூட அந்தக் கழுதைதாண்ணே..!

    நன்றி கழுதையே..!

    ReplyDelete
  72. [[[பனங்காட்டு நரி said...

    //விட்டானா முருகன்!? அயோக்கிய ராஸ்கல்!//

    ஹா ஹா ஹா. என்னக்கும் அப்படிதான் பண்றான் இந்த முருகன். ஒரு நாள் இல்ல ஒரு நாள் நான் APPOINTMENT ORDER வாங்கிட்டு அவன் முன்னாடி போய் நிற்பேன். அப்போ அவன நான் பார்க்கணும்.]]]

    அப்பவும் இப்ப இருக்கிற மாதிரியே அப்படியே சிரிப்பான் பரதேசி..! வேறென்ன செய்யப் போறான்..?

    ReplyDelete
  73. [[[Rathi said...

    So pathetic... :)

    உங்களை சொல்லல. எங்களை சொன்னேன். அந்த வார்த்தைக்கு மட்டும் உங்களுக்கு அருத்தம் தெரிஞ்சிருந்தா பதிவுலகம் தப்பியிருக்குமோ! :))]]]

    ஆமாம்.. நிச்சயமா தப்பிச்சிருக்கும்..! மாட்டிக்கிட்டீங்க..!

    ReplyDelete
  74. [[[snkm said...

    உண்மையிலேயே ரொம்ப வருத்தமாக இருக்கு. இப்பவாவது எதிர்வரும் சந்ததியினர் ஆங்கிலம் சரியாக கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒரு பதிவு போடுங்களேன். இணைய உலகில் படிப்பவர்கள் தங்கள் அருகாமையில் உள்ள குழந்தைகளுக்கு கொஞ்சம் கற்றுக் கொடுக்கலாமே! நன்றி!
    இணைய உலகில் உங்களை இடம் பிடிக்க வைத்ததற்கும் இதுதானே காரணம், முருகனுக்கு நமஸ்காரங்கள்.
    நன்றி!]]]

    உங்களுக்கும் எனது நன்றிகள்..!

    ReplyDelete
  75. [[[Ganpat said...

    SSLC வரை படித்தவர், தனக்கு donkey என்றால் பொருள் தெரியாது என சொல்லிக் கொள்ள இல்லையில்லை,
    தம்பட்டம் அடிக்க,அசாத்திய துணிவு வேண்டும். "படித்ததினால் அறிவு பெற்றோர்" என்ற "படிக்காத மேதை" படப் பாடலை அடிக்கடி கேட்டு மனதை தேற்றிக் கொள்ளவும்.
    உங்கள் பெயரை பரம்வீர் சக்ரா விருதிற்கு பரிந்துரைக்கிறேன்!]]]

    உண்மையைச் சொல்றதுல என்ன தயக்கம் வேண்டிக் கிடக்கு..? இதைப் பார்த்து ஒரு நான்கைந்து பேராவது ஆங்கிலத்தில் ஆர்வமுடையவர்களாக மாறுவார்களே.. அது போதும்..!

    ReplyDelete
  76. [[[துளசி கோபால் said...

    அட சரவணா!!!!! நாலு கழுதை வயசாகியும் டாங்க்கி தெரியலையா!!
    நல்ல கூத்து:-)))))]]]

    தெரியலையே டீச்சர்.. உங்களை மாதிரி உருப்படியான டீச்சர் எனக்கு இல்லை. அதுதான் இவ்ளோ பிராப்ளமாயிருச்சு..!

    ReplyDelete
  77. [[[MANI said...

    D - for DONKEY இதுக்குதான் L.K.G. ஒழுங்கா படிக்கனும்னு சொல்றது. அப்ப படிக்காம அரட்டையடித்ததால் வந்த வினை. பதிவு செம காமெடி உங்க ஸ்டைல்ல கலக்கிட்டீங்கண்ணே.]]]

    நான் எல்.கே.ஜி.யெல்லாம் படிக்கலீங்கோ.. நேரா ஒண்ணாப்பூதான்..!

    ReplyDelete
  78. [[[முத்துலெட்சுமி/muthuletchumi said...

    நல்லா எழுதி இருக்கீங்க. திட்டிக்கூட ஒழுங்கா வளர்க்கத் தெரியலயே பெரியவங்களுக்குன்னு நல்லாக் கேட்டிருக்கீங்க....:)))]]]

    முத்தக்கா.. நான் கேட்டது சரிதானே..? திட்டறதுதான் திட்டுறீங்க.. எங்களுக்குப் பிரயோசனப்படுற மாதிரியும் திட்டிட்டுப் போங்களேன்..! என்ன நான் சொல்றது..?

    ReplyDelete
  79. [[[சாரு புழிஞ்சதா said...
    ஆமா இல்லன்னா அப்படியே இந்த கழுத முதலமைச்சர் ஆயிருவாரு. போடா டேய். ஆபீசுக்கு தயிர் சாத டப்பாவோட போற நாயிங்க.. இந்த கருமத்த ரசிக்கும் மிடில் கிளாஸ் இங்கிலீஷ் தெரியாத கழுதைகள். அட போங்கடா. போடா போயி நடுத்தெருவுல மூக்க நோண்டுறத விட்டுட்டு விட்டல போய் குளிங்க.]]]

    தங்களுடைய அன்புக்கும், தொடர்ந்த ஆதரவுக்கும் மிக்க நன்றி சாரு..!

    ReplyDelete
  80. [[[பன்னிக்குட்டி ராம்சாமி said...

    கழுதையால யோகம் வரும்னு சொல்வாங்களேண்ணே?]]]

    என்னத்த யோகம் வரும்..? பீடைதான் தொடர்ந்து வந்துக்கிட்டிருக்கு..!

    ReplyDelete
  81. [[[ஜி கௌதம் said...

    //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    கழுதையால யோகம் வரும்னு சொல்வாங்களேண்ணே?//

    என்ன சரவணா.. யோகம் வொர்க் அவுட் ஆகிடுச்சா?]]]

    அண்ணே.. உங்களுக்குத் தெரியாததா..? என்ன யோகம் அடிச்சிருக்குன்னு நீங்களே பாருங்க..!

    ReplyDelete
  82. [[[பாலராஜன்கீதா said...

    //சரி விடு கழுதை...! வராததுக்காக எதுக்கு கொஞ்சூண்டு இருக்குற நம்ம ஹைப்போதலாமஸை வேஸ்ட்டாக்கணும்னு //

    இப்படி தெரிந்து கொண்டே தெரியவில்லை என்றெல்லாம் சொல்லக் கூடாது.:-)))]]]

    அண்ணே.. ஹைப்போதலாமஸ் பத்தி நம்ம வாத்தியாரோட தலைமைச் செயலகம் புத்தகத்துல படிச்சது.. இப்போ எழுதறதுக்கு பொருத்தமா இருந்ததால பயன்படுத்துக்கிட்டேன்..!

    ReplyDelete
  83. [[[எஸ்.ஏ.சரவணக்குமார் said...

    மிகவும் பயனுள்ள பதிவு! :))
    அப்படியே கல்வெட்டுல எழுதி வச்சிடிங்கன்னா, இனி வர்ற பய புள்ளங்க இத படிச்சிட்டு பொழச்சி போவட்டும்..]]]

    அதுனாலதான இங்க பதிவு பண்றேன்..!

    ReplyDelete
  84. [[[மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

    இந்த பதிவை படிக்கும்போது உடன் தங்கமணியும் இருந்தார்கள்.

    தங்கமணி: பாவம் அண்ணன் ஒரு கழுதையால அவருக்கு எவ்வளவு கஷ்டம்.

    நான்:அவருக்கு மட்டுமா எனக்கும்தான்]]]

    இதுக்கப்புறம் என்ன நடந்துச்சு மணியண்ணே.. அதைச் சொல்லுங்க..!

    ReplyDelete
  85. [[[jaisankar jaganathan said...

    அண்ணா இனிமேவாவது english கத்துக்குங்க. சீக்கிரம் நல்ல வேலை கிடைக்கும்.]]]

    நன்றி தம்பி..!

    ReplyDelete
  86. [[[ssankaran said...

    //இந்தக் கூத்து நடந்து முடிந்து சில ஆண்டுகளாகிவிட்டது.. //

    அண்ணே! வர வர தமிழும் மறந்து போகுதா? 20 வருஷத்துக்கு முன்னாடி நடந்தா அதெல்லாம் "சில" ல வராது.:) வேண்ணா முன்னொரு காலத்திலேன்னு போட்டுக்கலாம். :)]]]

    அப்படியா..? முன்னொரு காலம்ன்னா நான் பொறக்கறதுக்கு முன்னாடி நினைச்சுக் போறாங்களேன்னுதான் கொஞ்சம் பக்கத்துல போட்டேன்..!

    ReplyDelete
  87. நாந்தான் கடைசிப் பந்திக்கு வந்திருக்கேன் போல இருக்குது.

    நீங்க சொன்னதைப் பார்த்து படத்துல இருக்குறவரும் சிரிக்கிறாரே:)

    எப்படியோ உங்களைக் காப்பி பேஸ்ட்டுன்னு கரிச்சுக் கொட்டிகிட்டிருந்தவங்களை படத்தைக் காட்டி சிரிக்க வச்சிட்டீங்க:)

    ReplyDelete
  88. [[[ராஜ நடராஜன் said...

    நாந்தான் கடைசிப் பந்திக்கு வந்திருக்கேன் போல இருக்குது.
    நீங்க சொன்னதைப் பார்த்து படத்துல இருக்குறவரும் சிரிக்கிறாரே:)
    எப்படியோ உங்களைக் காப்பி பேஸ்ட்டுன்னு கரிச்சுக் கொட்டிகிட்டிருந்தவங்களை படத்தைக் காட்டி சிரிக்க வச்சிட்டீங்க:)]]]

    இன்னிக்குத்தான் நீங்க ரொம்ப லேட்டு ஸார்..!

    காப்பி பேஸ்ட்டு ஸ்பெக்ட்ரம் விவகாரத்திலும், சில வில்லங்கமான விவகாரங்களிலும் நிச்சயமாகத் தொடரும்..!

    சிலர் சிரிப்பதைப் பற்றிக் கவலையில்லை. பலரும் அதனை படிக்கிறார்கள்..! அதுவே போதும்..!

    ReplyDelete
  89. ஒருமுறை, மொரீஷியஸிலிருந்து ஒரு puurvigam இந்திய மனிதர் வந்திருந்தார்.அவர் மதுரை போய்விட்டு என்னிடம் வந்து ரொம்ப சந்தோஷமாக சொன்னது....i saw something very important...

    நான்:what is it?


    நண்பர்:donkey!!!!

    ReplyDelete
  90. [[[thiru said...

    ஒரு முறை, மொரீஷியஸிலிருந்து ஒரு puurvigam இந்திய மனிதர் வந்திருந்தார். அவர் மதுரை போய்விட்டு என்னிடம் வந்து ரொம்ப சந்தோஷமாக சொன்னது, i saw something very important.

    நான்:what is it?

    நண்பர்:donkey!!!!]]]

    ஏன் மொரீஷியஸில் கழுதைகளே கிடையாதா..? அதனால் ஆச்சரியப்பட்டுவிட்டாரோ..?

    ReplyDelete