Pages

Friday, April 15, 2011

யார் வேண்ணாலும் வாங்க..! ஆனா கொஞ்சமா திருடுங்க..!

15-04-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஒரு வழியாகத் தேர்தல் திருவிழா முடிந்துவிட்டது. அடுத்து எந்தத் திருடன் வரப் போகிறான் என்பதற்காக நம்மை ஒரு மாதம் காலத்திற்கு ஏங்க வைத்துவிட்டது தேர்தல் கமிஷன்..!

இருக்கின்ற மெயின் திருடர்களில் இரண்டு பேரில் ஒருவர்தான் வரப் போவது உறுதியென்றாலும், அது யார் என்பதை அறிய ரொம்பத்தான் மனசு ஆவலாக இருக்கிறது..!

இப்போது இருக்கும் கொள்ளைக்காரர்களே மீண்டும் வந்தால் அசுர வேகத்தில் தங்கள் மீதிருக்கும் குற்றச்சாட்டுக்களை அழிக்கும் வேலையில்தான் ஈடுபடுவார்கள்..!

ஆட்சிக்கு வரத் துடித்துக் கொண்டிருக்கும் இன்னொரு கொள்ளைக்காரர்கள்.. தங்கள் மீது ஏற்கெனவே இருக்கின்ற வழக்குகளை சப்தமில்லாமல் எப்படி முடிப்பது என்று யோசித்து செயல்படுவார்கள்..!




ஆனாலும் இந்தத் தேர்தலின் மூலம் ஒன்று மட்டும் உறுதியாகிறது. நாம் எவ்வளவு கொள்ளையடித்தாலும் சரி.. அந்தக் கொள்ளைப் பணத்தில் கொஞ்சத்தை மக்களுக்கு அள்ளி வீசினால் போதும். அவர்கள் கண்டு கொள்ள மாட்டார்கள் என்பதை இரண்டு கொள்ளைக் கூட்டமும் புரிந்துதான் வைத்திருக்கிறது.!

இந்தத் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே ஆளும் கட்சித் தரப்பிலும், எதிர்க் கட்சித் தரப்பிலும் பணக்கட்டுக்கள் அள்ளி வீசப்பட்டுள்ளன. இப்படி பணத்தினால் வாங்கப்படுகின்ற ஓட்டுக்களை வைத்து ஆட்சி அமைக்கிறோமே என்கிற வெட்கமும், சூடும், சொரணையும் இல்லாமலேயே இதுவரையில் மைனாரிட்டி ஆட்சியை இழுத்துக் கொண்டு வந்துவிட்டார் தாத்தா..!

இனி அடுத்து ஜெயித்தாலும் இதே உணர்வோடு மீண்டும் முதல்வராகிவிடுவார். எதிர்த்தரப்பு ஆத்தாவும் மக்கள் மனநிறைவோடு தன்னைத் தேர்ந்தெடுத்ததாகக் கூசாமல் பொய் சொல்லி அரியணை ஏறப் போகிறார். இவர் வெற்றி பெற்றால் இவர் முதல்வர் பதவியேற்கவே கூடாது.. தார்மீக அரசியல் அறத்தின் அடிப்படையில் தன் மீதான அனைத்து வழக்குகளையும் நீதிமன்றத்தில் முறைப்படி சந்தித்து அதில் வெற்றி பெற்ற பின்பு இவர் ஆட்சிப் பொறுப்பேற்கலாம்..!

ஆனால் இந்தத் தார்மீக அரசியல் நெறி இரண்டு கழகங்களிடமும் இல்லை என்பதால் இது நமது அதீதமான ஆசையாக, கனவாகவே இருந்து தொலையும் என்று நினைக்கிறேன்..! இது இப்படியே இருநது தொலையட்டும்..!

தற்போது நடந்து முடிந்த தேர்தலின் வாக்குப் பதிவு பற்றிய புள்ளிவிவரங்களை எனது தளத்தில் பதிவு செய்து வைக்க விரும்புகிறேன். அதற்காக பல்வேறு பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளை இங்கே தொகுத்தளித்துள்ளேன்..!

இதுவரை நடந்து முடிந்த மக்களவை, சட்டப் பேரவைத் தேர்தல்களை ஒப்பிட்டுப்  பார்க்கையில் தற்போதைய தேர்தலின் வாக்குப் பதிவு 10 முதல் 15 சதவீதம்வரை உயர்ந்துள்ளது.  தேர்தல் ஆணையத்தின் விழிப்புணர்வு நடவடிக்கையும், அரசியல் கட்சிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும்தான் வாக்குப் பதிவு அதிகரிக்கக் காரணம் என்று கருதப்படுகிறது.




தமிழகம் முழுவதும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் விளம்பர சுவரொட்டிகளை ஒட்டி விளம்பரப்படுத்தியும், ரயில் நிலையம், பஸ் நிலையம் போன்ற முக்கிய இடங்களில் சி.சி.டி.வி. மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியதும், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் விடியோ வாகனம் மூலம் படக் காட்சிகளை நடத்தி விளம்பரப்படுத்தியதும் இன்னுமொரு முக்கிய காரணமாகும்.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 77.8 சதவீதம் ஓட்டுக்கள் இப்போது பதிவாகியுள்ளது. அதிக அளவாக கரூர் மாவட்டத்திலும், குறைந்தபட்சமாக  கன்னியாகுமரி மாவட்டத்திலும் பதிவாகியுள்ளன.

தொகுதிவாரியாகப் பார்த்தால் அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர்(தனி) தொகுதியில் - 91.89 சதவீதம் ஓட்டு பதிவாகியுள்ளது.

குறைந்த அளவாக, கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டசபை தொகுதியில் - 64.07 சதவீதம் ஓட்டுப் பதிவாகியிருந்தது.

ஓட்டு சதவீதம் முழு விபரம் :

திருவள்ளூர் மாவட்டம் - 75.79

1) கும்மிடிப்பூண்டி - 83.25
2) பொன்னேரி - 80.37
3) திருத்தணி - 80.36
4) திருவள்ளூர் - 81.85
5) பூந்தமல்லி - 79.13
6) ஆவடி - 71.84
7) மதுரவாயல் - 70.60
8) அம்பத்தூர் - 71.04
9) மாதவரம் - 70.10
10) திருவொற்றியூர் - 74.36

சென்னை மாவட்டம் - 68.02

11) ஆர்.கே.நகர் - 72.40
12) பெரம்பூர் - 69.71
13) கொளத்தூர் - 68.25
14) வில்லிவாக்கம் - 67.61
15) திருவிக நகர் - 68.31
16) எழும்பூர் (தனி) - 68.07
17) ராயபுரம் - 70.64
18) துறைமுகம் - 63.65
19) சேப்பாக்கம் - 69.29
20) ஆயிரம்விளக்கு - 66.83
21) அண்ணாநகர் - 66.74
22) விருகம்பாக்கம் - 67.82
23) சைதாப்பேட்டை - 70.33
24) தி.நகர் - 66.46
25) மயிலாப்பூர் - 65.16
26) வேளச்சேரி - 66.84

காஞ்சிபுரம் மாவட்டம் - 76.00

27) சோழிங்கநல்லூர் - 67.68
28) ஆலந்தூர் - 69.86
29) ஸ்ரீபெரும்புதூர் (தனி) - 81.82
30) பல்லாவரம் - 72.15
31) தாம்பரம் - 69.86
32) செங்கல்பட்டு - 73.91
33) திருப்போரூர் - 82.73
34) செய்யூர் (தனி) - 81.68
35) மதுராந்தகம் (தனி) - 81.68
36) உத்திரமேரூர் - 86.32
37) காஞ்சிபுரம் - 80.51

வேலூர் மாவட்டம் - 79.86

38) அரக்கோணம் (தனி) - 78.89
39) சோளிங்கர் - 84.92
40) காட்பாடி - 80.14
41) ராணிப்பேட்டை - 79.57
42) ஆற்காடு - 83.54
43) வேலூர் - 73.77
44) அணைக்கட்டு - 78.88
45) கே.வி.குப்பம் (தனி) - 80.16
46) குடியாத்தம் (தனி) - 76.96
47) வாணியம்பாடி - 78.89
48) ஆம்பூர் - 77.74
49) ஜோலார்பேட்டை - 81.82
50) திருப்பத்தூர் - 82.13

கிருஷ்ணகிரி மாவட்டம் - 81.09

51) ஊத்தங்கரை (தனி) - 81.87
52) பர்கூர் - 82.14
53) கிருஷ்ணகிரி - 79.80
54) வேப்பனஹள்ளி - 85.52
55) ஓசூர் - 74.77
56) தளி - 84.02

தர்மபுரி மாவட்டம் - 81.21

57) பாலக்கோடு - 86.65
58) பென்னாகரம் - 82.86
59) தர்மபுரி - 77.48
60) பாப்பிரெட்டிபட்டி - 80.52
61) அரூர் (தனி) - 79.33

திருவண்ணாமலை மாட்டம் - 83.80

62) செங்கம் (தனி) - 84.25
63) திருவண்ணாமலை - 80.71
64) கீழ்பென்னாத்தூர் - 84.40
65) கலசப்பாக்கம் - 86.54
66) போளூர் - 85.11
67) ஆரணி - 83.53
68) செய்யாறு - 84.78
69) வந்தவாசி (தனி) - 81.51

விழுப்புரம் மாவட்டம் - 81.80

70) செஞ்சி - 81.50
71) மயிலம் - 82.37
72) திண்டிவனம் (தனி) - 80.92
73) வானூர் (தனி) - 80.83
74) விழுப்புரம் - 82.04
75) விக்கிரவாண்டி - 81.37
76) திருக்கோவிலூர் - 80.79
77) உளுந்தூர்பேட்டை - 83.24
78) ரிஷிவந்தியம் - 82.75
79) சங்கராபுரம் - 81.69
80) கள்ளக்குறிச்சி - 82.00

விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 9,13,391 ஆண் வாக்காளர்களும், 9,14,944 பெண் வாக்காளர்களும், 8 இதர வாக்காளர்களும் மொத்தம் 18,28,346 பேர் வாக்களித்துள்ளனர். 101 இதர வாக்காளர்களில் 8 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.

உளுந்தூர்பேட்டை தொகுதியில் அதிகபட்சமாக 83.24 சதவீதமும், குறைந்தபட்சமாக வானூர் தொகுதியில் 80.83 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

ரிஷிவந்தியம் தொகுதியில் ஆண்களைவிட 12,475 பெண் வாக்காளர்களும், சங்கராபுரத்தில் 3,607 பெண் வாக்காளர்களும், கள்ளக்குறிச்சியில் 3,506 பெண் வாக்காளர்களும் கூடுதலாக வாக்குப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சேலம் மாவட்டம் - 82.05

81) கெங்கவல்லி (தனி) - 81.53
82) ஆத்தூர் (தனி) - 80.53
83) ஏற்காடு (தனி) - 85.25
84) ஓமலூர் - 83.03
85) மேட்டூர் - 79.46
86) எரப்பாடி - 85.36
87) சங்ககிரி - 86.00
88) சேலம் மேற்கு - 79.73
89) சேலம் வடக்கு - 74.23
90) சேலம் தெற்கு - 78.71
91) வீரபாண்டி - 89.07

நாமக்கல் மாவட்டம் - 82.52

92) ராசிபுரம் (‌தனி) - 82.97
93) சேந்தமங்கலம் - 81.35
94) நாமக்கல் - 81.67
95) பரமத்தி வேலூர் - 81.07
96) திருச்செங்கோடு - 81.82
97) குமாரபாளையம் - 86.36

ஈரோடு மாவட்டம் - 81.36

98) ஈரோடு கிழக்கு - 77.49
99) ஈரோடு மேற்கு - 78.98
100) மொடக்குறிச்சி - 81.34
103) பெருந்துறை - 83.81
104) பவானி - 81.64
105) அந்தியூர் - 82.21
106) கோபிசெட்டிப்பாளையம் - 83.29
107) பவானிசாகம் (தனி) - 81.82

திருப்பூர் மாவட்டம் - 78.01

101) தாராபுரம் ( தனி) - 78.86
102) காங்கேயம் - 81.53
112) அவிநாசி ( தனி) - 80.09
113) திருப்பூர் - 74.37
114) திருப்பரூர் ( தெற்கு ) - 72.83
115) பல்லடம் - 77.30
125) உடுமலைப்பேட்டை - 77.98
126) மடத்துக்குளம் - 81.22

நீலகிரி மாவட்டம் - 71.94

108) உதகமண்டலம் - 71.07
109) கூடலூர் ( தனி) - 71.51
110) குன்னூர் - 73.26

கோவை மாவட்டம் - 76.56

111) மேட்டுப்பாளையம் - 80.86
116 ) சூளூர் - 80.10
117) கவுண்டம்பாளையம் - 73.52
118) ‌கோவை வடக்கு - 69.79
119) தொண்டாமுத்தூர் - 75.09
120) ‌கோவை ( தெற்கு) - 71.45
121) சிங்காநல்லூர் - 68.90
122) கிணத்துக்கடவு - 77.98
123) பொள்ளாச்சி - 79.82
124) வால்பாறை (தனி) - 76.56

திண்டுக்கல் மாவட்டம் - 81.55

127) பழநி - 80.70
128) ஒட்டன்சத்திரம் - 85.91
129) ஆத்தூர் - 83.81
130) நிலக்கோட்டை ( தனி) - 78.94
131) நத்தம் - 84.89
132) திண்டுக்கல் - 76.61
133) வேடசந்தூர் - 79.37

கரூர் மாவட்டம் - 86.06

134) அரவக்குறிச்சி - 85.63
135) கரூர் - 83.59
136) கிருஷ்ணராயபுரம் - 86.56
137) குளித்தலை - 88.66

திருச்சி மாவட்டம் - 79.12

138) மனப்பாறை - 79.73
139) ஸ்ரீரங்கம் - 80.95
140) திருச்சி மேற்கு - 74.93
141) திருச்சி கிழக்கு - 75.24
142) திருவெரும்பூர் - 71.94
143) லால்குடி - 83.29
144) மனச்சநல்லூர் - 84.05
145) முசிறி - 81.72
146) துறையூர் ( தனி ) - 81.74

பெரம்பலூர் மாவட்டம் - 81.74
 
147) பெரம்லூர் ( தனி) - 82.37
148) குன்னம் - 81.74

அரியலூர் மாவட்டம் - 83.91
 
149)அரியலூர் - 84.73
150)ஜெயங்கொண்டம் - 83.09

கடலூர் மாவட்டம் - 80.75

151) திட்டக்குடி ( தனி) - 79.01
152) விருத்தாச்சலம் - 80.45
153) நெய்வேலி - 81.93
154) பன்ருட்டி - 83.02
155) கடலூர் - 77.77
156 ) குறிஞ்சிப்பாடி - 86.38
157) புவனகிரி - 81.62
158) சிதம்பரம் - 77.36
159) காட்டுமன்னார் கோயில் ( தனி) - 79.23

நாகப்பட்டினம் : 80.25

160 ) சீர்காழி (தனி) - 78.65
161) மயிலாடுதுறை - 76.39
162) பூம்புஹார் - 79.70
163) நாகப்பட்டினம் - 79.24
164) கீழ்வேளூர் (தனி) - 91.89
165 ) வேதாரண்யம் - 77.99

திருவாரூர் மாவட்டம் - 81.42

166) திருத்துறைப்பூண்டி (தனி) - 80.46
167)மன்னார்குடி - 80.62
168) திருவாரூர் - 82.13
169 ) நன்னிலம் - 82.33

தஞ்சாவூர் மாவட்டம் - 79.97

170) திருவிடைமருதூர் ( தனி)- 80.82
171) கும்பகோணம் - 80.26
172 ) பாபநாசம் - 80.71
173) திருவையாறு - 83.93
174) தஞ்சாவூர் - 73.32
175) ஒரத்தநாடு - 82.07
176) பட்டுக்கோட்டை - 77.67
177 ) பேராவூரணி - 80.97

புதுக்கோட்டை மாவட்டம் - 79.81

178) கந்தர்வகோட்டை - 79.99
179) விராலிமலை - 85.93
180) புதுக்கோட்டை - 78.38
181) திருமயம் - 78.57
182 ) ஆலங்குடி - 81.65
183) அறந்தாங்கி - 74.81

சிவகங்கை மாவட்டம் - 75.59

184) காரைக்குடி - 74.06
185) திருப்பத்தூர் - 79.08
186) சிவகங்கை - 73.45
187) மானாமதுரை - 76.61

மது‌ரை மாவட்டம் - 77.63

188)மேலூர் - 80.02
189) மதுரை கிழக்கு -76.99
190) சோழவந்தான் - 82.90
191 ) மதுரை வடக்கு -72.98
192) மதுரை தெற்கு -75.70
193) மதுரை மத்திய தொகுதி -74.78
194) மதுரை மேற்கு - 74.77
195) திருப்பரங்குன்றம் - 76.13
196) திருமங்கலம் -82.04
197) உசிலம்பட்டி - 80.03

தேனி மாவட்டம் - 79.56

198) ஆண்டிப்பட்டி - 81.92
199) பெரியகுளம் - 78.94
200) போடிநாயக்கனூர் - 81.07
201) கம்பம் - 76.43

விருதுநகர் : 81.45

202)ராஜபாளையம் - 80.09
203) ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) - 81.10
204 ) சாத்தூர் - 82.18
205) சிவகாசி -80.85
206 ) விருதுநகர் - 78.93
207) அருப்புக்கோட்டை - 83.06
208) திருச்சுழி - 83.91

ராமநாதபுரம் - 70.73

209) பரமக்குடி (தனி) -72.21
210) திருவாடனை - 71.47
211) ராமநாதபுரம் - 70.79
212) முதுகுளத்தூர் - 68.88

தூத்துக்குடி மாவட்டம் - 74.83

213)விளாத்திக்குளம் - 76.05
214) தூத்துக்குடி - 73.66
215) திருச்செந்‌தூர் - 76.52
216) ஹவைகுண்டம் - 75.07
217) ஒட்டப்பிடாரம் - 75.63
218) கோவில்பட்டி - 72.27

திருநெல்வேலி மாவட்டம் : 75.27

219) சங்கரன்கோவில் - 75.50
220) வாசுதேவநல்லூர் - 76.46
221) கடயநல்லூர் - 75.40
222) தென்காசி - 78.64
223) ஆலங்குளம் - 80.68
224) திருநெல்வேலி- 76.58
225) அம்பாசமுத்திரம் - 75.13
226) பாளையங்கோட்டை - 68.22
227) நாங்குனேரி - 74.57
228) ராதாபுரம் -71.00

கன்னியாகுமரி மாவட்டம் - 68.93

229) கன்னியாகுமரி - 75.57
230) நாகர்கோவில் - 69.84
231) கொளச்சல் - 64.13
232)பத்மநாபபுரமம்- 69.98
233) விளவன்கோடு - 69.56
234 ) கிள்ளியூர் - 64.07

தமிழகத்தில் இதுவரை நடந்த தேர்தல்களில் பதிவான வாக்கு சதவீதமும் வெற்றியும் :

 
1967 - 76.57% (திமுக வெற்றி)
 
1971 - 72.10% (திமுக வெற்றி)
 
1977 - 61.58% (அதிமுக வெற்றி)
 
1980 - 65.42% (அதிமுக வெற்றி)
 
1984 - 73.47% (அதிமுக வெற்றி)
 
1989 - 69.69% (திமுக வெற்றி)
 
1991 - 63.84% (அதிமுக வெற்றி)
 
1996 - 66.95% (திமுக வெற்றி)
 
2001 - 59.07% (அதிமுக வெற்றி)
 
2006 - 70.56% (திமுக வெற்றி)

இந்தக் கணக்குப்படி பார்த்தால் தி.மு.க.தான் வெற்றி பெறும் என்று அக்கட்சித் தொண்டர்களும், தலைவர்களும் நினைக்கிறார்கள். இன்னொருபுறம்.. அதெல்லாமில்லை.. மக்கள் அலை, அலையாக வந்தது இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பத்தான் என்கிறது எதிர்க்கட்சிக் கூட்டணியினர்...!

இந்த நேரத்தில் பாரதி என்னும் பஸ்ஸுலக பதிவர் வேறொரு முக்கியச் செய்தியொன்றை இன்று பதிவிட்டிருந்தார்.

இதுவரையில் தமிழகத்தில் நடந்த தேர்தல்களில் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெறும் கட்சியே ஆட்சி அமைத்து இருக்கிறது. அதே செண்டிமெண்ட் இந்த முறையும் தொடருமா என்று ஆதாரத்துடன் வினவியுள்ளார்..!

 
1971 (தி.மு.க. வெற்றி+ஆட்சி)
 
1977 (அ.தி.மு.க. வெற்றி+ஆட்சி)
 
1980 (அ.தி.மு.க. வெற்றி+ஆட்சி)
 
1984 (அ.தி.மு.க. வெற்றி+ஆட்சி)
 
1989 (தி.மு.க. வெற்றி+ஆட்சி)
 
1991 (அ.தி.மு.க. வெற்றி+ஆட்சி)
 
1996 (தி.மு.க. வெற்றி+ஆட்சி)
 
2001 (அ.தி.மு.க. வெற்றி+ஆட்சி)
 
2006 (தி.மு.க. வெற்றி+ஆட்சி)

இதன்படி பார்த்தால் கன்னியாகுமரி தொகுதியில் யார் வெற்றி பெறுவார்கள் என்கிற கணக்கைத் தோண்டிப் பார்த்து கொஞ்சம் லேசுபாசாக நாம் மூச்சுவிட்டுக் கொள்ளலாம்..!

தி.மு.க. தரப்பில் அமைச்சர் சுரேஷ்ராஜனும், அ.தி.மு.க. தரப்பில் கே.டி.பச்சைமாலும், பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் காந்தியும் போட்டியிடுகிறார்கள்.

ஆரம்பத்தில் சுரேஷ்ராஜனுக்கு ஆதரவு குறைவாக இருந்ததினால் சில நாட்கள் இரவு நேரத்தில் மின்சாரத்தை நிறுத்திவிட்டு அந்த நேரத்தில் பணக் கவர்கள் தொகுதியில் குறிப்பிட்ட பகுதிகளில் விநியோகிக்கப்பட்டுவிட்டதாக ஜூ.வி.யின் ஸ்கூப் நியூஸ் சொல்கிறது.

சுரேஷ்ராஜன் ம.தி.மு.க. நகரச் செயலாளரின் வீட்டிற்கே நேரில் சென்று ஆதரவு கேட்டு உறுதிமொழியையும் பெற்றுவிட்டதாக அதே ஜூ.வி. அடுத்த இதழில் சொல்கிறது..!

இவருடைய வெற்றியைத் தடுப்பது பாரதீய ஜனதாவுக்குக் கிடைக்கவிருக்கும் ஓட்டுக்கள்தான் என்று நக்கீரன் சொல்லியிருக்கிறது..!

எது எப்படியோ.. எந்தத் திருட்டுப் பயலுக வந்தாலும் நான் அவுககிட்ட ஒரே ஒரு கோரிக்கையைத்தான் வைக்கிறேன்..

இந்தத் தடவையாச்சும் கொஞ்சமா திருடங்கடா அயோக்கியப் பசங்களா..! உங்க குடும்பத்துக்கு கொஞ்சமாச்சும் புண்ணியத்தைச் சேர்த்து வையுங்கப்பா.. வருங்காலத்துல எங்க பேரப்புள்ளைக, உங்க பேரப் புள்ளைகளை பார்த்து "குடும்பமாடா?"ன்னு மூஞ்சில காறித் துப்புற மாதிரி செஞ்சுட்டுப் போயிராதீங்க..!

அவ்வளவுதான் சொல்லுவோம்..!

41 comments:

  1. அதுஎப்டி அண்ணே நீங்க சொலிட்டா நாங்க கேட்டுருவோமா ?

    //எங்க பேரப்புள்ளைக, உங்க பேரப் புள்ளைகளை பார்த்து "குடும்பமாடா?"ன்னு மூஞ்சில காறித் துப்புற மாதிரி செஞ்சுட்டுப் போயிராதீங்க..!//


    அத பார்க்க தான் நாங்க உயிரோட இருக்க மாட்டோமே, அப்புறம் எதுக்கு கவலை ?
    ஜிங் சாசா ஜிங் சாச்ச ஜிங் சாசாசா ...............

    ReplyDelete
  2. நல்லாச் சொன்னீங்கண்ணே!

    ReplyDelete
  3. பரவாயில்ல. இந்த முறை மக்கள் கொலவெறியோடு தான் எல்லா இடங்களிலும் போட்டுருப்பாக போலிருக்கு. எல்லாமே 70க்கு மேலே தூக்குது சரவணன்.

    ReplyDelete
  4. இரண்டில் ஒரு திருடனுக்கு தானே நாமும் காவடி எடுத்தோம்.
    எடுத்த காவடியை தோ்தல் முடிவு வரை கையிலேயே வைக்கவும். நடுவில் கீழே வைத்தால் பட்ட கஷ்டத்துக்கு பெயர் கிடைக்காது. அதிமுகதான் என்று நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல். (பெரிய இடத்து அரசு அலுவலர் ஒருவர்)

    ReplyDelete
  5. உ.த அண்ணே
    என்ன அண்ணே சுதி குறைஞ்சிடுச்சே

    ReplyDelete
  6. [[[உண்மை said...

    அது எப்டி அண்ணே நீங்க சொலிட்டா நாங்க கேட்டுருவோமா ?

    //எங்க பேரப்புள்ளைக, உங்க பேரப் புள்ளைகளை பார்த்து "குடும்பமாடா?"ன்னு மூஞ்சில காறித் துப்புற மாதிரி செஞ்சுட்டுப் போயிராதீங்க..!//

    அத பார்க்க தான் நாங்க உயிரோட இருக்க மாட்டோமே, அப்புறம் எதுக்கு கவலை? ஜிங் சாசா ஜிங் சாச்ச ஜிங் சாசாசா]]]

    அதனாலதான் சொல்றேன்.. காரணத்தையும், ஆறுதலையும் சொல்றதுக்கு தாத்தாமார்கள் இல்லாதபோது பேரப்புள்ளைகளுக்கு அந்த அவமானம் தேவைதானா..?

    ReplyDelete
  7. [[[செங்கோவி said...

    நல்லாச் சொன்னீங்கண்ணே!]]]

    என்னத்த சொல்லி என்ன புண்ணியம்..? மக்கள் திருந்துற மாதிரி தெரியலையே..?

    ReplyDelete
  8. [[[ஜோதிஜி said...

    பரவாயில்ல. இந்த முறை மக்கள் கொல வெறியோடுதான் எல்லா இடங்களிலும் போட்டுருப்பாக போலிருக்கு. எல்லாமே 70க்கு மேலே தூக்குது சரவணன்.]]]

    போட்டு என்னங்கண்ணே புண்ணியம்..? வாங்கின காசுக்கு வஞ்சகமில்லாம குத்தியிருக்காங்க.. அவ்ளோதான்..!

    ReplyDelete
  9. [[[Muthu Thamizhini said...

    இரண்டில் ஒரு திருடனுக்கு தானே நாமும் காவடி எடுத்தோம். எடுத்த காவடியை தோ்தல் முடிவுவரை கையிலேயே வைக்கவும். நடுவில் கீழே வைத்தால் பட்ட கஷ்டத்துக்கு பெயர் கிடைக்காது. அதிமுகதான் என்று நம்பத் தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல். (பெரிய இடத்து அரசு அலுவலர் ஒருவர்)]]]

    எனக்கு நம்பிக்கையில்லை. தி.மு.க. காசை அள்ளி வீசியிருக்கிறது..!

    ReplyDelete
  10. [[[ஜாகிர் said...

    உ.த அண்ணே... என்ன அண்ணே சுதி குறைஞ்சிடுச்சே]]]

    என்ன செய்யறது..? பணத்தின் மதிப்பு உயர்ந்துள்ளதே..!?

    ReplyDelete
  11. [[[நண்பன் said...

    PADIKKA ROMBA JALIYA IRUNTHATHU]]]

    இருக்கும்டி இருக்கும்..! என்னிக்காச்சும் ஆப்பு வாங்கும்போது தெரியும்.. இவனுகளை ஏன் செலக்ட் செஞ்சோம்ன்னு..?

    ReplyDelete
  12. TT
    Rs.200 per vote was given in madurai in my friend's locality and Rs.250 per vote in Pudukottai.In both the places my friends families took the money and voted against DMK.The logic is why to say no for illegal money earned by DMK.My gut feeling is that people have voted for change.

    ReplyDelete
  13. //
    யார் வேண்ணாலும் வாங்க..! ஆனா கொஞ்சமா திருடுங்க..!//

    எல்லாரும் தின்னது போக மிச்சம் இருக்கறதே கொஞ்சம்தான்...அதையும் திருடுங்கன்னு சொன்னா எப்படி சார்... தங்களை போன்ற விவரம் தெரிந்தவர்களே இப்படி சொல்வது இளைய தலைமுறையினருக்கு தவறான சிந்தனையை தூண்டும். நீங்கள் சொல்வது மிகவும் யதார்த்தமான விஷயம் என்று எனக்கு நன்றாகவே புரிகிறது. இருப்பினும் கொஞ்சமா திருடுங்க எனும் சொல்லை மாற்றி இருக்கலாம். எம்மைப்போன்ற இளைஞர்களின் மனதில் நம்பிக்கை விதையை மட்டும் தூவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    விருப்பம் இருந்தால்...படித்து பார்க்க...

    http://nanbendaa.blogspot.com/2011/04/blog-post_13.html

    ReplyDelete
  14. கடலூர் இல் அதிமுக ஓட்டுக்கு 100 ரூபா கொடுத்தாங்க பின்னாடியே திமுக 200 ரூபா கொடுத்தாங்க

    ReplyDelete
  15. அண்ணே போய் நம்ம பதிவை கொஞ்சம் பாருங்க...

    http://naiyaandinaina.blogspot.com

    ReplyDelete
  16. தேர்தல் அப்படின்னு ஆரம்பிச்ச நாளிலே இருந்து... ஆளும் கட்சி சட்டசபை உறுப்பினரை கொண்டது... எங்க நெல்லை மாவட்டம் மட்டுமே... சும்மா அவன் சொன்னான் இவன் சொன்னான் என்று போடாதீர்கள்

    http://naiyaandinaina.blogspot.com/2011/04/blog-post.html

    ReplyDelete
  17. இது after all ஒரு மாத கர்ப்பம்தானே!
    மே 13 தெரிந்துவிடப்போகிறது குழந்தை
    "ஆணா","பெண்ணா" என்று!!
    என்ன, விரும்பாத ஆண் குழந்தை என்றால் இனி கர்ப்பமே கிடையாது;விரும்பிய பெண் குழந்தை என்றால் ஐந்துவருடம் கழித்து மீண்டும் ஆண் குழந்தைக்குத்தவம் இருப்போம்.

    ReplyDelete
  18. அதாவது திமுக ஒருவேளை வென்றுவிட்டால் இப்பவே அதுக்கு ஏத்த மாதிரி பதில் சொல்ல தயார் பண்றீங்க..அப்படித்தானே..இதுக்கும் கருணாநிதி மக்களை சோற்றாலடித்த பிண்டங்கள் என்று சொல்வதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை..அதத்தான் தன் முதுகை முதல்ல பார்க்கணும்னு பெரியவங்க சொல்றாங்க..

    அப்புறம் நம்பிக்கை இழக்காதீங்க...வெயிட் பண்ணுங்க..இன்னும் அஞ்சு வருடம் நீங்க இந்த மாதிரி கொலைவெறி டெம்ப்ளேட் பதிவுபோடாம நாங்க தப்பிக்கறதுக்காவது அதிமுக வெல்லட்டும்....

    ReplyDelete
  19. கருர் தொகுதியில் ஒரு ஒட்டுக்கு 200 ரூபாய் இரண்டு கட்சியினறும் அனைத்து வாக்களர்களக்கும் கொடுத்து உள்ளனர்.

    ReplyDelete
  20. எனக்கென்னவோ இரண்டு பக்கமும் இழுபறியில் வந்து மீண்டும் திமுக ஆட்சிக்கு வருமென்றே தோன்றுகிறது.

    தேமுதிக பலமாக அடி வாங்கலாம். பாமக ஆச்சர்யங்களைத் தரலாம்.

    ReplyDelete
  21. தனித்து நின்றிருந்தால் ஜெயிக்க கூடியவரும் குட்டையில் கலந்தது தமிழ்நாட்டின் தலைஎழுத்தை மாற்ற இயலாது என்பதையே காட்டுகிறது... இனிமேல் யாரு சுபிட்ஷம் தருவாங்க தெரியலையே :(

    ReplyDelete
  22. [[[San said...

    TT

    Rs.200 per vote was given in madurai in my friend's locality and Rs.250 per vote in Pudukottai. In both the places my friends families took the money and voted against DMK. The logic is why to say no for illegal money earned by DMK. My gut feeling is that people have voted for change.]]]

    என்ன செய்ய..? மக்கள் திருந்தினால்தான் இந்த அரசியல்வியாதிகளும் திருந்துவார்கள்..!

    ReplyDelete
  23. [[[! சிவகுமார் ! said...

    //யார் வேண்ணாலும் வாங்க..! ஆனா கொஞ்சமா திருடுங்க..!//

    எல்லாரும் தின்னது போக மிச்சம் இருக்கறதே கொஞ்சம்தான். அதையும் திருடுங்கன்னு சொன்னா எப்படி சார். தங்களை போன்ற விவரம் தெரிந்தவர்களே இப்படி சொல்வது இளைய தலைமுறையினருக்கு தவறான சிந்தனையை தூண்டும். நீங்கள் சொல்வது மிகவும் யதார்த்தமான விஷயம் என்று எனக்கு நன்றாகவே புரிகிறது. இருப்பினும் கொஞ்சமா திருடுங்க எனும் சொல்லை மாற்றி இருக்கலாம். எம்மைப் போன்ற இளைஞர்களின் மனதில் நம்பிக்கை விதையை மட்டும் தூவுமாறு கேட்டுக் கொள்கிறேன். விருப்பம் இருந்தால். படித்து பார்க்க.
    http://nanbendaa.blogspot.com/2011/04/blog-post_13.html]]]

    இதுவும் கேக்குறதுக்கு நல்லாத்தான் இருக்கு.. ஆனால் முடியலை..!

    ReplyDelete
  24. [[[Ramji said...

    கடலூரில் அதிமுக ஓட்டுக்கு 100 ரூபா கொடுத்தாங்க. பின்னாடியே திமுக 200 ரூபா கொடுத்தாங்க.]]]

    இரண்டு கட்சிகளுக்குமே இது வாழ்வா? சாவா? போராட்டம். அதனால் கொடுக்கத்தான் செய்வார்கள். மக்கள் ஏன் வாங்குகிறார்கள்..? புறக்கணிக்கலாமே..?

    ReplyDelete
  25. [[[அருள் said...

    அவசரம்: ராஜபட்சேவை தண்டிக்க உதவுங்கள்

    http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_16.html]]]

    நேற்றே போட்டாகிவிட்டது. நன்றி அருள்..!

    ReplyDelete
  26. [[[நையாண்டி நைனா said...

    அண்ணே போய் நம்ம பதிவை கொஞ்சம் பாருங்க.
    http://naiyaandinaina.blogspot.com]]]

    வருகிறேன்.. வருகிறேன்.. வருகிறேன்..!

    ReplyDelete
  27. [[[நையாண்டி நைனா said...

    தேர்தல் அப்படின்னு ஆரம்பிச்ச நாளிலே இருந்து ஆளும் கட்சி சட்டசபை உறுப்பினரை கொண்டது. எங்க நெல்லை மாவட்டம் மட்டுமே. சும்மா அவன் சொன்னான் இவன் சொன்னான் என்று போடாதீர்கள்
    http://naiyaandinaina.blogspot.com/2011/04/blog-post.html]]]

    என்னப்பா இது? குழப்புறீங்க..? சரி.. சரி.. செக் பண்றேன்..!

    ReplyDelete
  28. [[[Ganpat said...

    இது after all ஒரு மாத கர்ப்பம்தானே! மே 13 தெரிந்துவிடப் போகிறது குழந்தை "ஆணா", "பெண்ணா" என்று!!

    என்ன, விரும்பாத ஆண் குழந்தை என்றால் இனி கர்ப்பமே கிடையாது; விரும்பிய பெண் குழந்தை என்றால் ஐந்து வருடம் கழித்து மீண்டும் ஆண் குழந்தைக்குத் தவம் இருப்போம்.]]]

    கண்பத்.. சூப்பர் கமெண்ட். மிகவும் ரசித்தேன்..!

    ReplyDelete
  29. [[[Muthu Thamizhini said...

    அதாவது திமுக ஒருவேளை வென்றுவிட்டால் இப்பவே அதுக்கு ஏத்த மாதிரி பதில் சொல்ல தயார் பண்றீங்க. அப்படித்தானே.]]]

    ஏன்.. அ.தி.மு.க. ஜெயித்துவிட்டால் நான் என்ன சொல்லுவேனாம்..?

    [[[இதுக்கும் கருணாநிதி மக்களை சோற்றாலடித்த பிண்டங்கள் என்று சொல்வதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அதத்தான் தன் முதுகை முதல்ல பார்க்கணும்னு பெரியவங்க சொல்றாங்க..]]]

    பார்த்ததுனாலதான் சொல்றேன்..!

    [[[அப்புறம் நம்பிக்கை இழக்காதீங்க. வெயிட் பண்ணுங்க. இன்னும் அஞ்சு வருடம் நீங்க இந்த மாதிரி கொலை வெறி டெம்ப்ளேட் பதிவு போடாம நாங்க தப்பிக்கறதுக்காவது அதிமுக வெல்லட்டும்.]]]

    தமிழ்நாட்டு மக்களுக்காக உங்க வாக்கு பலிக்கட்டும்..!

    ReplyDelete
  30. [[[boopathy perumal said...

    கருர் தொகுதியில் ஒரு ஒட்டுக்கு 200 ரூபாய் இரண்டு கட்சியினறும் அனைத்து வாக்களர்களக்கும் கொடுத்து உள்ளனர்.]]]

    ம்.. நல்லாயிருக்கட்டும்.. வாங்கினவங்களும்.. ஓட்டுப் போட்டவங்களும்..!

    ReplyDelete
  31. [[[மு.சரவணக்குமார் said...

    எனக்கென்னவோ இரண்டு பக்கமும் இழுபறியில் வந்து மீண்டும் திமுக ஆட்சிக்கு வருமென்றே தோன்றுகிறது.
    தேமுதிக பலமாக அடி வாங்கலாம். பாமக ஆச்சர்யங்களைத் தரலாம்.]]]

    வரட்டும் பார்க்கலாம்..!

    ReplyDelete
  32. [[[Ohedas said...

    தனித்து நின்றிருந்தால் ஜெயிக்க கூடியவரும் குட்டையில் கலந்தது தமிழ்நாட்டின் தலைஎழுத்தை மாற்ற இயலாது என்பதையே காட்டுகிறது... இனிமேல் யாரு சுபிட்ஷம் தருவாங்க தெரியலையே :(]]]

    இதுக்கு அவரைக் குத்தம் சொல்லிப் புண்ணியமில்லை. தமிழகத்து மக்கள்தான் குற்றவாளிகள்..! அவர் தனித்து நிற்கும்போதே ஆதரவளித்திருக்கலாமே..?

    ReplyDelete
  33. உங்களை போலதான் இந்த நாட்டில் எல்லாரும் இருக்குறார்கள் சார். கவலை வேண்டாம். நீங்கள் பணத்திற்கு வோட்டு போடமாட்டீர்கள். மற்றவர்கள் அப்படி போடுவார்கள் என்று மற்றவர்களை குறைத்து மதிப்பிட வேண்டாம். 1996ல் ஜெயலலிதாவை விடவா இப்பொழுது பணம் தருகிறார்கள் என்று நினைக்கிறீர்கள்? அப்புறம் இது மாதிரி ரொம்ப நல்லவன் அப்படினு எழுதினா இப்படிதான் முடியும். இப்ப கருணாநிதி போகனும் அதற்கு ஜெயலலிதாதான் வழி என்ற நிலைப்பாடு நீங்கள் எடுத்திருந்தால் உங்கள் அரசியல் பதிவுகள் அர்த்தம் பெற்றிருக்கும். ஜெயலலிதா ஊழல் செய்திருக்குறார் என்பதில் யாருக்க்கும் மாற்று கருத்து இல்லை என்பது போல அவர்தான் கருணாநிதிக்கு தீர்வு என்பதிலும் மற்று கருத்து இருக்க முடியாது. நான் கருணாநிதி தோற்பார் என்று சொல்ல மாட்டேன். தோற்றால் நல்லா இருக்கும் என்றுதான் சொல்கிறேன் ஜெயலலிதா ஜெயிப்பார் என்று சொல்ல மாட்டேன். ஜெயித்தால் நல்லா இருக்குமே என்றுதான் சொல்கிறேன்.

    ReplyDelete
  34. [[[ராஜரத்தினம் said...

    நான் கருணாநிதி தோற்பார் என்று சொல்ல மாட்டேன். தோற்றால் நல்லா இருக்கும் என்றுதான் சொல்கிறேன். ஜெயலலிதா ஜெயிப்பார் என்று சொல்ல மாட்டேன். ஜெயித்தால் நல்லா இருக்குமே என்றுதான் சொல்கிறேன்.]]]

    அப்பாடா..? எவ்ளோ பெரிய விஷயத்தை எவ்ளோ ஈஸியா இப்படி சொல்றீங்க ஸார்..?

    ReplyDelete
  35. //கருர் தொகுதியில் ஒரு ஒட்டுக்கு 200 ரூபாய் இரண்டு கட்சியினறும் அனைத்து வாக்களர்களக்கும் கொடுத்து உள்ளனர்.//

    அடடா.. ஏமாந்து விட்டீர் பெருமாளே.. எங்கள் கரூர் நண்பர் ஓட்டுக்கு 1000 வாங்கிவிட்டார்.

    ReplyDelete
  36. [[Sakthi Prakash N said...

    //கருர் தொகுதியில் ஒரு ஒட்டுக்கு 200 ரூபாய் இரண்டு கட்சியினறும் அனைத்து வாக்களர்களக்கும் கொடுத்து உள்ளனர்.//

    அடடா.. ஏமாந்து விட்டீர் பெருமாளே.. எங்கள் கரூர் நண்பர் ஓட்டுக்கு 1000 வாங்கிவிட்டார்.]]]

    உங்களது நண்பர் அ.தி.மு.க. விசிறியா..? எதிர்ப்பாளர்களுக்குத்தான் இந்த முறை அதிகத் தொகை கிடைத்துள்ளது..!

    ReplyDelete
  37. அருமை.

    15 % க்குமேல் திருடக்கூடாதுன்னு சட்டம் இயற்றலாம்.

    85% நாட்டுக்கு, மேம்பாட்டுக்கு பயனாகட்டும்

    ReplyDelete
  38. திராவிடநாடு திராவிடர்க்கே என
    முழங்கிய அண்ணாவிலிருந்து,
    இல்லை, திராவிடநாடு ஆரியர்க்கே
    என்ற மறைமுக எண்ணம் கொண்ட
    ஜெயலலிதா வரைக்கும் படிப்படியாக
    கிரிமினல்கள்தான் பெருகினரன்றி
    தியாகிகள் மதிக்கப்படவில்லை,

    ஒருகாலத்தில் அன்பழகனுக்கும்
    நெடுஞ்செழியனுக்கும் பந்தலமைத்து
    கூட்டம் சேர்த்தவர் கலைஞர்.
    அண்ணாவுக்குப்பிறகு மிகக்கேவலமான வழிமுறையைப்
    பின்பற்றி,முதலமைச்சராகி நெடுஞ்செழியனையும்அன்பழகனையும் தனக்குப்பந்தலமைக்கும் சூழலுக்குக்
    கீழ்த்தள்ளியதை யாரால் மறக்க
    முடியும். கடற்கரையில் துண்டை
    விரித்துப்படுத்தபடி சிங்கமே சீறி வா!
    சிறுத்தையே! வெளியில்வா!
    என்று எவன்கதைக்கோ,வசனமெழுதி
    தன்பெயரைப் போட்டுக்கொண்டு
    பள்ளிபிள்ளைகள் மனப்பாடம் செய்து
    பாடம் ஒப்பிப்பதுபோல் ஒப்பித்து
    முத்தமிழ் அறிஞரெனப் பட்டம்
    பெற்றால் உண்மையில் படித்த
    அந்த இரண்டு அறிஞர்களை என்ன
    சொல்வது?

    ReplyDelete
  39. [[[துளசி கோபால் said...

    அருமை.

    15 % க்கு மேல் திருடக் கூடாதுன்னு சட்டம் இயற்றலாம்.

    85% நாட்டுக்கு, மேம்பாட்டுக்கு பயனாகட்டும்.]]]

    டீச்சர்.. வேற வழியில்லை. இப்படியும் அவங்களோட நாம மறைமுகமான டீலிங் வைச்சுக்க வேண்டிய காலமும் வரும்..!

    ReplyDelete
  40. [[[ARUNMULLAI said...

    திராவிட நாடு திராவிடர்க்கே என
    முழங்கிய அண்ணாவிலிருந்து,
    இல்லை, திராவிட நாடு ஆரியர்க்கே
    என்ற மறைமுக எண்ணம் கொண்ட
    ஜெயலலிதாவரைக்கும் படிப்படியாக
    கிரிமினல்கள்தான் பெருகினரன்றி
    தியாகிகள் மதிக்கப்படவில்லை,
    ஒரு காலத்தில் அன்பழகனுக்கும்
    நெடுஞ்செழியனுக்கும் பந்தலமைத்து கூட்டம் சேர்த்தவர் கலைஞர். அண்ணாவுக்குப் பிறகு மிகக் கேவலமான வழிமுறையைப்
    பின்பற்றி, முதலமைச்சராகி நெடுஞ்செழியனையும் அன்பழகனையும் தனக்குப் பந்தலமைக்கும் சூழலுக்குக்
    கீழ்த் தள்ளியதை யாரால் மறக்க
    முடியும். கடற்கரையில் துண்டை
    விரித்துப் படுத்தபடி சிங்கமே சீறி வா! சிறுத்தையே! வெளியில் வா!
    என்று எவன் கதைக்கோ, வசனமெழுதி
    தன் பெயரைப் போட்டுக்கொண்டு
    பள்ளி பிள்ளைகள் மனப்பாடம் செய்து பாடம் ஒப்பிப்பதுபோல் ஒப்பித்து முத்தமிழ் அறிஞரெனப் பட்டம் பெற்றால் உண்மையில் படித்த
    அந்த இரண்டு அறிஞர்களை என்ன
    சொல்வது?]]]

    அருண்முல்லை ஸார்..!

    ஜெயலலிதா திராவிட நாடு ஆரியர்க்கே என்று சொல்லவில்லை. தனது குடும்பத்துக்கே என்று மறைமுகமாகச் சொல்லித்தான் செயல்பட்டிருக்கிறார்..!

    கலைஞரின் இந்த திருட்டுத்தனங்களுக்குத்தான் அவருடைய அல்லக்கைகள் ராஜதந்திரம் என்று பெயர் சூட்டி அழைக்கிறார்கள்..!

    ReplyDelete