Pages

Sunday, April 10, 2011

பத்திரமே இல்லாத இடத்தில் சன் டிவி அலுவலகம்..!

10-04-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

'நக்கீரன் அன்பு' என்றால் தெரியாத பத்திரிகையாளர்களே இருக்க முடியாது. 'நக்கீரன்' பத்திரிகையில் மிக நீண்ட காலம் செய்தியாளராகப் பணியாற்றியவர். 2007-ம் ஆண்டு நக்கீரனில் இருந்து வெளியேறிவிட்டார். தற்போது 'நம் தினமதி' நாளிதழிலும். 'புதிய தமிழகம்' பத்திரிகையிலும்  எழுதி வருகிறார்.
 
அன்பு சமீபத்தில் 'மக்கள் ஏமாந்தார்களா? ஏமாற்றப்பட்டார்களா?' என்கிற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார். இதில் 2006 முதல் நடைபெற்று வரும் தி.மு.க. ஆட்சியின்  17 விதமான ஊழல்களை, முறைகேடுகளை ஆதாரப்பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளார்.

இதற்காக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி இந்த ஊழல்கள் மற்றும் முறைகேடுகளுக்கான ஆதாரங்களைத் தேடியெடுத்து அவற்றினை ஸ்கேன் செய்தும் வெளியிட்டிருக்கிறார். நிச்சயம் இது மிகப் பெரிய விஷயம்தான்.. இதற்காக சகோதரர் அன்புவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்..!!!

இந்தப் புத்தகத்தி்ன் விலை வெறும் 25 ரூபாய்தான்..! தமிழகத்து மக்கள் அனைவரும் அவசியம் இப்புத்தகத்தைப் படித்து தி.மு.க. ஊழல் ஆட்சியின் லட்சணத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இப்புத்தகம் கிடைக்குமிடம்

புதிய தமிழகம் வார இதழ்
½-ஏ, வி.கங்காதரன் தெரு
ஜோசியர் தெரு அருகில்
நுங்கம்பாக்கம்
சென்னை-600034.

தி.மு.க. ஆட்சிக்குக் கொடி பிடிக்கும் உடன்பிறப்புக்களும், ஆதரவாளர்களும் இப்புத்தகத்தை வாசித்து இதில் இருக்கும் ஊழல்களைப் படித்துத் தெளிந்து தங்களது கொள்கையை மறுபரிசீலனை செய்யட்டும். இப்போதும் அவர்கள் தி.மு.க.வினர் ஊழல்களே செய்ததில்லை. இவைகளெல்லாம் ஊழல்களே இல்லை.. என்று சொல்வார்களேயானால் இதில் இருக்கும் ஊழல்கள் அனைத்தும் புனைந்து எழுதப்பட்டவை என்பதை ஆதாரங்களோடு அவர்களும் சொல்லட்டும். தெரிந்து கொள்வோம்..!

இந்தப் புத்தகம் கொஞ்சம் முன்கூட்டியே கையில் கிடைத்திருந்தால் அனைத்தையும் சிரமம் பார்க்காமல் தட்டச்சு செய்து பதிவில் ஏற்றியிருப்பேன். நேற்றுதான் கைக்கு கிடைத்தது.. கால அவகாசமில்லை. நானும் 5 மாத காத்திருப்பிற்குப் பின் இப்போதுதான் ஒரு வேலையில் சேர்ந்துள்ளேன். தட்டச்சு செய்ய நேரம் அதிகமில்லை.. ஆகவே தேர்தல் அவசரத்திற்காக இதில் நாம் அதிகம் அறிந்திருக்காத சில ஊழல்களை மட்டும் உடனுக்குடன் வெளியிடலாம் என்று நினைத்துள்ளேன்.

சென்னையில் இருக்கும் பதிவர்கள் வாய்ப்பு கிடைத்தால் புதிய தமிழகம் வார இதழ் அலுவலகத்திற்கு நேரில் சென்று இப்புத்தகத்தை வாங்கிக் கொள்ளலாம்.

இந்த அரிய, ஆதாரமான புத்தகத்தை முதன்முதலாக என்னிடம் கொடுத்து படிக்கச் சொல்லி, இதனை வலையில் ஏற்ற ஆக்கமும், ஊக்கமும் வழங்கி உற்சாகப்படுத்திய அருமைத் தம்பி பாலபாரதிக்கு வலையுலகத்தின் சார்பாக கோடானு கோடி நன்றிகள்..!

இனி.. இந்தப் புத்தகத்தில் 13-வது முறைகேடாகப் பட்டியலிடப்பட்டிருக்கும் கட்டுரை இது :

பத்திரம் இல்லாத கட்டிடத்தில் சன் டிவி அலுவலகம்

சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் ராஜா அண்ணாமலைபுரத்தில் வாங்கிய 30 கிரவுண்ட் இடம் தொடர்பான பத்திரம், தனித் துணை ஆட்சியர்(ஸ்டாம்ப்ஸ்) அலுவலகத்திலேயே கடந்த 12 ஆண்டுகளாக கிடக்கிறது. ஆனால், இந்த இடத்தில்தான் சன் டிவிக்கென தனி அலுவலகம் 10 மாடிக் கட்டிடமாக உருவாகியுள்ளது.

அது எப்படி பத்திரமே இல்லாத இடத்தில், 10 மாடி கட்டிடம் கட்ட சென்னை பெரு நகர வளர்ச்சிக் குழுமம் அனுமதி கொடுத்தது..?

சென்னை, மைலாப்பூர் ராஜா அண்ணாமலைபுரத்தில் சென்னை ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் நிறுவனத்திற்குச் சொந்தமான 40 கிரவுண்ட் காலி மனை இருந்தது. இதை ஏலம்விட அந்த நிறுவனம் முடிவு செய்தது. அப்போது வர்த்தகத் துறை அமைச்சராக இருந்த முரசொலி மாறன் அந்த இடத்தை ஏலத்திற்கு விடாமல், அடிமாட்டு விலைக்கு சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்திற்கு வாங்கிக் கொடுத்தார்.



சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கலாநிதி மாறன், ஒரு கிரவுண்ட் விலை 39 இலட்சம் என்ற விலையில் 30 கிரவுண்டு காலி மனைக்கு 11 கோடியே 70 லட்சத்திற்கு கிரையம் செய்யப்பட்டு, அதற்கான பத்திரம் 1999-ம் ஆண்டு ஆகஸ்டு 23-ம் தேதி மயிலாப்பூர் பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்தார்.

பத்திரப் பதிவு செய்யப்படும்போது வழி காட்டி மதிப்பீட்டின்படிதான் பதிவு செய்யப்பட வேண்டும் என்பது அரசு ஆணை.

பத்திரப் பதிவு நடந்தபோது, மயிலாப்பூர் பத்திரப் பதிவு அதிகாரி, "ராஜா அண்ணாமலை நகரில் ஒரு சதுர அடி மனையின் விலை 2346 ஆக வழிகாட்டி மதிப்பீடு உள்ளது. அதன்படி 30 கிரவுண்ட் நிலத்தின் மதிப்பு 16 கோடியே 87 இலட்சத்து 71 ஆயிரத்து 240 ரூபாய். இதற்கு 13 சதவிகிதம் முத்திரைத் தாள் மற்றும் பதிவுக் கட்டணமாக 2 கோடியே 19 லட்சத்து 40 ஆயிரத்து 261 ரூபாயை செலுத்த வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

ஆனால் சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் நிர்வாகமோ, பத்திரப் பதிவுத் துறை அதிகாரி கூறிய வழிகாட்டி மதிப்பீட்டு விலைக்கு நிலத்தைப் பதிவு செய்ய முடியாது என்று கூறிவிட்டு, ரூபாய் 11.70 கோடிக்கு உரிய 13 சதவிகிதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணமாக ரூபாய் 1 கோடியே 71 லட்சத்து 13 ஆயிரத்து 772 மட்டுமே  செலுத்தியது. இதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூபாய் 48 லட்சத்து 26 ஆயிரத்து 489 ரூபாய்களாகும்.

ஜெயலலிதா டான்சி நிலத்தை வழிகாட்டு மதி்பபிட்டீற்கு குறைவாக பத்திரப் பதிவு மற்றும் முத்திரைக் கட்டணத்தில் மோசடி செய்ததாக அவர் மீது தி.மு.க. அரசு வழக்குப் பதிவு செய்தது. தனி கோர்ட் ஜெயலலிதாவுக்கு 3 ஆண்டு காலம் சிறைத் தண்டனை வழங்கியது.

இதைக் காரணம் காட்டி சட்டசபைத் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்த ஜெயலலிதாவின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. பிறகு உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி அந்த நிலம் அரசிடம் திருப்பிக் கொடுக்கப்பட்டது.

அப்படியென்றால் ஜெயலலிதாவுக்கு ஒரு நீதி.. தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பேரனுக்கு ஒரு நீதியா..?

மயிலாப்பூர் பத்திரப் பதிவு அதிகாரி, வழிகாட்டு மதிப்புப்படி முத்திரைத் தாள் மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்தாத காரணத்தினால் அரசுக்கு 48 லட்சத்து 26 ஆயிரத்து 489 இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறி சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் பத்திரத்தை இந்திய முத்திரைச் சட்டம் பிரிவு 47(அ)(1)-ன் கீழ் சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இருக்கும் தனித்துணை ஆட்சியருக்கு(ஸ்டாம்ப்ஸ்) அனுப்பி வைத்தார்.

பிறகு அந்த நிலத்திற்கு விலை மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டதா? அந்தப் பத்திரத்தை பதிவு அலுவலகத்தில் இருந்து உரியக் கட்டணத்தைச் செலுத்தி சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் நிறுவனம் திரும்பப் பெற்றதா என்று தெரியவில்லை.

ஆனால் இதே இடத்தில் வெற்றிகரமாக சன் டிவியின் 10 மாடிக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. சென்ற ஆண்டு புதிய தலைமைச் செயலகத் திறப்பு விழாவிற்கு வருகை தந்த சோனியாகாந்தி, சன் டிவி கட்டிடத்தைத் திறக்கப் போவதாக பரபரப்பாக பேச்சு நிலவியது. ஆனால் அந்தக் கட்டிடம் திறக்கப்படவில்லை.

ஆனால் சில மாதங்களுக்கு முன்பு சன் டிவியின் கட்டிடத்திற்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு சன் டிவியின் அலுவலகம் திறக்கப்பட்டுவிட்டது. இப்போது சன் டிவி அங்கிருந்துதான் செயல்பட்டு வருகிறது.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மயிலாப்பூர் பத்திரப் பதிவு அலுவலகத்தில் சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் வழிகாட்டி மதிப்பீட்டைவிட குறைவான மதிப்புக்கு பத்திரப்பதிவு செய்த ஆவணம் தொடர்பாக தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கேட்டோம்.

எமது தகவலுக்கு பதில் அளித்த மயிலாப்பூர் சார் பதிவாளர், 1999-ல் வழிகாட்டி மதிப்பீட்டைவிட குறைவான மதிப்பில் ஆவணம் பதிவு செய்யப்பட்டிருந்த காரணத்தினால் அந்த சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் பதிவு ஆவணத்தை தனித்துணை ஆட்சியருக்கு(ஸ்டாம்ப்ஸ்) அனுப்பி வைத்தோம். இதுவரை மதிப்பு நிர்ணயிக்கப்பட்ட ஆவணம் அங்கிருந்து மயிலாப்பூர் பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு வரவில்லை என்று கூறியுள்ளார்.

அப்படியென்றால் கடந்த 12 ஆண்டு காலமாக தனித்துறை ஆட்சியர் அலுவலகத்தில் சன் டிவி பத்திரப் பதிவு விவகாரம் முடங்கிக் கிடக்கிறது..

பதிவு ஆவணமே இல்லாத ஒரு இடத்தில் கட்டிடம் கட்ட சென்னை பெரு நகர வளர்ச்சிக் கழகத்தின அனுமதி எப்படி கிடைத்தது..?

அரசுக்கு ரூ.48.26 லட்சம் அளவுக்கு இழப்பினை ஏற்படுத்திய சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் நிர்வாக நியக்குநர் மீது ஏன் வழக்குத் தொடரவில்லை..?

நன்றி : திரு.அன்பு

இனி நாம் பேசுவோம்..!

இதில் எனக்குப் புரியாத ஒரு விஷயம், 12 ஆண்டுகளாக இது தனித்துறை ஆட்சியர் அலுவலகத்தில் தூங்கிக் கொண்டிருக்கிறது என்றால், 2001 முதல் ஆட்சி செய்த ஜெயலலிதாவின் ஆட்சியில் இது பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே ஏன்..? ஒருவேளை ஆத்தாகிட்ட யாரும் சொல்லலையா..? இல்லை மறைத்துவிட்டார்களா..? எதுவும் புரியவில்லை. காரணம் என்னவெனில், நானே இப்போதுதான், இந்தப் புத்தகத்தைப் படித்துதான் இந்த விஷயத்தையே தெரிந்து கொண்டேன்..! அவ்வளவு ரகசியமாக வைத்திருந்திருக்கிறார்களே பாவிகள்..!

பொதுவாக நாம் ஓரிடத்தை சொந்தப் பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கிய பின்பு நம் பெயருக்கு பத்திரத்தை எழுதி பதிவு செய்து கொடுப்பார்கள். இதன் பின்பு, இந்தப் பத்திரத்தை காண்பித்துதான் குறிப்பிட்ட அந்த இடத்தில் நாம் வீடு கட்டவோ, அல்லது பில்டிங் கட்டவோ விண்ணப்பிக்கவே முடியும்.

ஒருவேளை அந்த இடம் நமக்குச் சொந்தமானதாக இல்லை என்றால் உரிமையாளருக்கும், நமக்கும் இது தொடர்பாக இருக்கும் தனி ஒப்பந்தங்களைக் காட்டினால்தான் கட்டிடம் கட்டவே அனுமதி கிடைக்கும்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இடத்தில் வீடுகள் கட்டவோ, பில்டிங் கட்டவோ சென்னை பெருநகர வளர்ச்சி மன்றத்திற்கு விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். அங்கேயும் இந்தப் பத்திரம் இல்லாமல் எந்தக் கதையும் நடக்காது..!

ஆனாலும் உரிமையாளர் பத்திரமே இல்லாமல் சன் டிவி அந்த இடத்தில் 10 மாடி கட்டிடம் கட்டி முடித்திருக்கிறது எனில் இதில் எந்த முறைகேடும் இல்லை என்று யாராவது சொல்ல முடியுமா..?

சென்னை பெருநகர வளர்ச்சி மன்றத்தின் அனுமதியில்லாமலும் சன் டிவி இதனைக் கட்டி முடித்திருக்க முடியாது. ஆக.. சென்னை பெருநகர வளர்ச்சி மன்றம் எதை வாங்கிக் கொண்டு, என்ன சமரசம் செய்து இந்த முறைகேட்டுக்கு ஒத்துக் கொண்டது என்பதும் விசாரிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம்..!

சாதாரணமாக ஒரு வீடு கட்ட அனுமதி கேட்டு மாநகராட்சிக்குச் சென்றாலே எத்தனை எத்தனை பிரச்சினைகளை அவர்கள் சந்திக்க நேரிடுகிறது என்பதை வீடு கட்டிய சென்னைவாழ் தமிழர்களிடம் கேட்டுப் பாருங்கள்.. கண்ணீர் விடுவார்கள்.

நாம் சமர்ப்பிக்கும் அனைத்து ஆதாரங்களும் உண்மையானதாக இருந்தாலும், அது சரியில்லை.. இது சரியில்லை என்றெல்லாம் நொட்டை, நொள்ளை சொல்லிவிட்டு நாம் சில காந்தி தாத்தா உள்ள நோட்டுக்களை வீசியெறிந்தால் மட்டுமே நமக்கான அனுமதி கிடைக்கும். இதனை வாங்குவதற்குள் ஒவ்வொரு வீட்டுக்காரனும், பில்டர்ஸும் 10, 15 முறை இந்தியன் தாத்தாவாக ஆகிவிடலாமா என்றுகூட யோசிப்பார்கள். அந்த அளவுக்கு லஞ்ச லாவண்யம் இத்துறையில் விளையாடுகிறது..

தெருவில் தனது வீட்டு முன்பாக 500 செங்கற்களை குவித்துவைத்தால்கூட வட்ட கவுன்சிலரும், வட்டத்தின் ஆளும்கட்சி அடிப்பொடிகளும் ஓடோடி வருவார்கள். அவர்களுக்கு வெட்ட வேண்டியதை வெட்டினால்தான் அந்த செங்கற்கள் நாளை கட்டிடமாக உருவாகும். இல்லையெனில் இரவோடு இரவாக ஏதாவது ஒரு காரணம் சொல்லப்பட்டு அந்த உரிமையாளரின் அனுமதி ரத்து செய்யப்படும். அல்லது நிறுத்தி வைக்கப்படும். இது சென்னையில் அனைத்து தொகுதிகளிலும் நடக்கின்ற விஷயம்.

ஆனால் இங்கே ஒரு முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதையாக.. பத்திரமே இல்லாத இடத்தில் 10 மாடி கட்டி முடித்து குடியேறியிருக்கிறார்கள் என்றால் அவர்கள் எந்த அளவுக்கு இந்த விஷயத்தில் முறைகேட்டை செய்திருக்க வேண்டும் என்பதை யோசித்துப் பாருங்கள்..

இதில் சன் டிவி தனது அரசியல் செல்வாக்கினை பயன்படுத்தித்தான் இந்த முறைகேட்டை செய்திருக்கும் என்பதை தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் அதிகம் தெரியாத சிறுவர்கள்கூட சொல்லிவிடுவார்கள்..!

இப்படி சொத்து, சுகத்துக்காக ஆட்சி,  அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் இந்தக் கொள்ளைக்காரர்களை மனதில் வைத்து ஏப்ரல் 13 அன்று வாக்களியுங்கள்..!

45 comments:

  1. //நானும் 5 மாத காத்திருப்பிற்குப் பின் இப்போதுதான் ஒரு வேலையில் சேர்ந்துள்ளேன்.//

    வாழ்த்துக்கள் அண்ணே!

    ReplyDelete
  2. //நானும் 5 மாத காத்திருப்பிற்குப் பின் இப்போதுதான் ஒரு வேலையில் சேர்ந்துள்ளேன். தட்டச்சு செய்ய நேரம் அதிகமில்லை//
    புது வேலையிலும் சிறந்து பிரகாசிக்க வாழ்த்துக்கள்.
    கழகத்தினர் திருந்த மாட்டார்கள். ஊழல் இவர்களின் உயிர்மூச்சு.

    ReplyDelete
  3. சன் டிவி அவ்வளவு கேனத்தனமாக கொடிகளை கொட்டி 10 மாடி கட்டிடம் கட்டுபவர்கள் இல்லை. இது பொய்யான தகவலாக இருக்கலாம்.

    ReplyDelete
  4. /நானும் 5 மாத காத்திருப்பிற்குப் பின் இப்போதுதான் ஒரு வேலையில் சேர்ந்துள்ளேன்.//

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. தன் வாழ்நாளில் ஒருவன் மிகப்பெரிய பணக்காரன் ஆனான் என்றால் கண்ணுக்குத் தெரியாத கிரிமினல் இருக்கிறது - சுஜாதா..

    ReplyDelete
  7. நண்பர் சரவணன்,
    வேலையில் மேன்மேலும் உயர் வாழ்த்துக்கள்..

    நீங்கள் பார்த்திருப்பீர்களா என்று தெரியவில்லை...

    இது ஒரு ஆதர்ச குணம் என்பதற்கான சான்று.

    ReplyDelete
  8. உங்கள் கருத்துக்கே வருவோம் யாருக்கு வாக்களிக்க வேணும் சொல்லுங்க

    அதிமுக வந்தால் இதை விட பல கோடி கொள்ளை அடிக்கும் யாருக்கும் தராதே

    விஜயகாந்த் சினிமாவில் மட்டும் ஹீரோ அரசியலில் ஒரு காமெடியன்

    கம்யுனிஸ்ட் எங்களுக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை மக்கள் எப்படி போனாலும் பரவாயில்லை எதிரிக்கு இரண்டு கண்ணும் போக வேணும் என்று சொல்பவர்கள்

    இவர்க்கு ஒட்டு போடாதே அவருக்கு ஒட்டு போடாதே என்று சொல்லும் முன் நீங்கள் யாருக்கு ஒட்டு போடா சொல்கிரிர்கள் அவரை பற்றி சொல்லுங்கள்

    ReplyDelete
  9. [[[ராஜ நடராஜன் said...

    //நானும் 5 மாத காத்திருப்பிற்குப் பின் இப்போதுதான் ஒரு வேலையில் சேர்ந்துள்ளேன்.//

    வாழ்த்துக்கள் அண்ணே!]]]

    இந்த ஒரு வரிதான் உங்க கண்ணுல பட்டுச்சா..? எவ்ளோ பெரிய விஷயத்தைச் சொல்லியிருக்கேன்..?

    ReplyDelete
  10. [[[Arun Ambie said...

    கழகத்தினர் திருந்த மாட்டார்கள். ஊழல் இவர்களின் உயிர் மூச்சு.]]]

    இந்த மூச்சை இந்தத் தேர்தலுடன் நிறுத்திவிட வேண்டும்..!

    ReplyDelete
  11. [[[பெம்மு குட்டி said...

    Congrats for your new job.]]]

    நன்றி.. நன்றி.. நன்றி..!

    ReplyDelete
  12. [[[David said...

    சன் டிவி அவ்வளவு கேனத்தனமாக கொடிகளை கொட்டி 10 மாடி கட்டிடம் கட்டுபவர்கள் இல்லை. இது பொய்யான தகவலாக இருக்கலாம்.]]]

    தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்தான் இந்தத் தகவல்கள் பெறப்பட்டுள்ளன..! இதில் எப்படி தவறு இருக்க முடியும்..?

    ReplyDelete
  13. [[[தருமி said...

    /நானும் 5 மாத காத்திருப்பிற்குப் பின் இப்போதுதான் ஒரு வேலையில் சேர்ந்துள்ளேன்.//

    வாழ்த்துக்கள்.]]]

    ஐயா.. ஒண்ணும் சொல்ல முடியலை.. கருத்துச் சொல்றதுக்கு இந்தப் பதிவுல வேற ஒண்ணுமே இல்லீங்களாய்யா..?

    ReplyDelete
  14. [[[கே.ஆர்.பி.செந்தில் said...

    தன் வாழ்நாளில் ஒருவன் மிகப் பெரிய பணக்காரன் ஆனான் என்றால் கண்ணுக்குத் தெரியாத கிரிமினல் இருக்கிறது - சுஜாதா..]]]

    இருக்கலாம்.. இருக்கும்..!

    ReplyDelete
  15. [[[அகில் பூங்குன்றன் said...

    puthiya velaiyel uyira valathukkal.]]]

    நன்றி அகில்.. பதிவு பற்றி ஏதாவது சொல்லுங்களேன்..!

    ReplyDelete
  16. [[[அறிவன்#11802717200764379909 said...

    நண்பர் சரவணன், வேலையில் மேன்மேலும் உயர் வாழ்த்துக்கள்..]]]

    நன்றிங்கண்ணா..!

    ReplyDelete
  17. [[[ஹாய் அரும்பாவூர் said...

    உங்கள் கருத்துக்கே வருவோம் யாருக்கு வாக்களிக்க வேணும் சொல்லுங்க. அதிமுக வந்தால் இதைவிட பல கோடி கொள்ளை அடிக்கும் யாருக்கும் தராதே.
    விஜயகாந்த் சினிமாவில் மட்டும் ஹீரோ அரசியலில் ஒரு காமெடியன்.
    கம்யுனிஸ்ட் எங்களுக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை மக்கள் எப்படி போனாலும் பரவாயில்லை எதிரிக்கு இரண்டு கண்ணும் போக வேணும் என்று சொல்பவர்கள்.
    இவர்க்கு ஒட்டு போடாதே அவருக்கு ஒட்டு போடாதே என்று சொல்லும் முன் நீங்கள் யாருக்கு ஒட்டு போடா சொல்கிரிர்கள் அவரை பற்றி சொல்லுங்கள்.]]]

    தனிப் பதிவாகவே போடுகிறேன்..!

    ReplyDelete
  18. சரவணன்,
    புதிய வேலையில் சிறப்பாய் செயல்பட்டு உயர்வு பெற வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  19. புதிய வேலையில் நிலைத்து, சிறந்து, உயர்ந்திட வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. //இந்தப் புத்தகம் கொஞ்சம் முன்கூட்டியே கையில் கிடைத்திருந்தால் அனைத்தையும் சிரமம் பார்க்காமல் தட்டச்சு செய்து பதிவில் ஏற்றியிருப்பேன். //

    இது அநியாயமா இல்லை...அவரின் உழைப்புக்கான பலன் கிடைக்க வேண்டுமல்லவா!, காசு கொடுத்து வாங்கிப் படியுங்கள் எனச் சொல்லிருக்கலாம் நீங்கள்!!

    ReplyDelete
  21. இன்று தமிழகத்தில் பதியப் படும் நூற்றுக்கு நூறு பத்திரங்கள் இப்படித்தானே இருக்கிறது.இதில் சன் டிவிக்காரர்கள் மட்டும் எப்படி உத்தமோத்மர்களாய் இருப்பார்கள் என எதிர்பார்க்கிறீர்கள்.

    ReplyDelete
  22. ஒரு குற்றத்தைப் பற்றி அறியும் போது கோபம் வரும்..(உ-ம்)தன மனைவி அடுத்தவீட்டுகாரனுடன் தொடர்பு வைத்திருக்கிறாள் என அறியும் போது..தமிழகம் 1967-89

    பல குற்றங்கள் பற்றி அறியும் போது வெறி வரும்..(உ-ம்)தன மனைவி பல பேர்களுடன் தொடர்பு வைத்திருக்கிறாள் என அறியும் போது
    ..தமிழகம் 1989-2006
    குற்றங்கள் தவிர வேறு எதுவும் இல்லை என அறியும் போது விரக்தி வரும்..(உ-ம்)தன மனைவி இதையே தொழிலாகவும் செய்கிறாள் என அறியும்போது..தமிழகம் 2006-11

    இப்போ நமக்கு வந்துள்ளது விரக்தி

    ReplyDelete
  23. இந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ள விடயங்கள் குறித்து சில சட்ட விளக்கங்கள் எனது பதிவில் தனியே\

    http://marchoflaw.blogspot.com/2011/04/blog-post.html

    ReplyDelete
  24. புதிய வேளையில் மென்மேலும் சிகரங்களை தொட வாழ்த்துகிறேன்.எனக்கு உள்ள ஒரு ஆதங்கம் எல்லாம் நம்முடைய வரிப்பணத்தில் படித்து வெளியில் வந்து இந்திய அரசாங்கத்தை எப்படி வரி ஏய்ப்பு செய்யலாம் என்று ஐடியா கொடுக்கும் சி ஏ படித்த ஆடிட்டர்கள் மேல் தான் என் கோவம் வருகிறது. அவர்களால் தான் என் தேசம் நோயாளியாக அந்நிய நாடுகளின் முன் நிற்கிறது.நட்புடன்

    ReplyDelete
  25. //அரசுக்கு ரூ.48.26 லட்சம் அளவுக்கு இழப்பினை ஏற்படுத்திய சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் நிர்வாக நியக்குநர் மீது ஏன் வழக்குத் தொடரவில்லை..?//

    அரசுக்கு எதிரா அரசே மனு தாக்க முடியுமா...ஹெ ஹெ ஹெ.. மனித தாக்குதல்லதான் முடியும் ஹெ ஹெ

    ReplyDelete
  26. ஃபேஸ்புக்கில் இதைப் படித்தபோது, பொது வாழ்வு, நேர்மை, அரசியல் நாகரீகம் குறித்த சில முக்கிய விஷயங்களை இந்தக் கேள்விகள் எழுப்பியதாகப் பட்டது. அதனால் பகிர்ந்து கொள்கிறேன்.

    ‘நெஞ்சுக்கு நீதி’ எழுதிய கருணாநிதி இதற்கு பதில் சொல்லாமல், பகலவனுக்கு எதிரான பகையாளியின் சதி என்று எதாவது தத்து பித்தாக உளறிக் கொட்டுவார். அது நமக்குத் தேவையில்லை.

    நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பது முக்கியமானது.

    கேள்விகள்:

    1. உங்கள் குடும்ப உறுப்பினர்கள் தவிர மற்றவர்களுக்கும் சுயமரியாதை, வாழ்வுரிமை, தொழில் செய்யும் உரிமை, சொத்துரிமை எல்லாம் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா ?

    2. பணத்துக்காகத்தான் மது விற்பனையை அரசின் மூலம் செய்கிறீர்கள் என்றால், நாளைக்குப் பணம் வரும் என்பதற்காக விபசார விடுதிகளையும் உங்கள் அரசே நடத்துமா?

    3. உங்கள் மனைவி திருநள்ளாறு பரிகார பூஜைக்குச் செல்வதாகச் செய்தி வருகிறது. மனசாட்சிப்படி சொல்லுங்கள். நிஜமாகவே நீங்கள் நாத்திகர்தானா?

    4. முதல்வராகச் சிறப்பாக ஆட்சி புரிந்ததாக நம்பிக்கை இருந்தால், ஏன் உங்கள் கட்சியே தனித்து எல்லாத் தொகுதிகளிலும் போட்டி இட்டிருக்கக் கூடாது? அந்த நம்பிக்கை இல்லாதது ஏன் ?

    5. பட்டப்படிப்பு மட்டுமே படித்துவிட்டு, சுய சம்பாத்தியம் இல்லாமல், கோடிக்கணக்கில் செலவு செய்து படம் எடுக்க உங்கள் பேரன்களுக்கு எங்கிருந்து பணம் வந்தது?

    6. உங்கள் குடும்பப் பிரச்னையில் மூன்று பேரைத் தீயிட்டுக் கொளுத்தியதை நினைக்கும்போதும், உங்கள் இதயம் இனிக்கிறதா?

    7. தமிழக அரசுக்கு நீங்கள் ஏற்றி வைத்துள்ள பெரும் கடன் சுமையை எப்படித் திருப்பிச் செலுத்தப் போகிறீர்கள்? அதற்கு ஏதாவது குறிப்பான யோசனை உண்டா?

    8. இலவச ஆயுள் காப்பீட்டுத் திட்டத்துக்கு ஒதுக்கிய நிதியை, அதற்குப் பதில் ஏற்கெனவே இலவசமாக இருக்கும் அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்த செலவிடாதது ஏன்? தனியாருக்கு லாபம் சேர்த்துத் தரவா?

    9. ஒரு மனைவி உயிருடன் இருக்கும்போதே இன்னொரு துணைவியுடனும் பகிரங்கமாகக் குடும்பம் நடத்தும் உங்கள் வாழ்க்கை முறை தவறான முன்னுதாரணம் என்பதை உணர்ந்து எப்போதாவது வருத்தப்பட்டதுண்டா? இது விஷயத்தில் என்னைப் பின்பற்ற வேண்டாம் என்று இளைஞர்களிடம் வருத்தம் தெரிவிக்கும் நேர்மை உங்களுக்கு உண்டா?

    10. கூவத்தைத் தூய்மையாக்குவேன் என்று 25 வருடம் முன்பே திட்டம் போட்டீர்கள். அந்தப் பணம் என்னவாயிற்று? ஏன் இப்போது மறுபடியும் திட்டம் போடுகிறீர்கள்? இது கூவத்துக்காகவா? உங்கள் நலனுக்காகவா?

    11. 25 வருடம் முன்பே பிச்சைக்காரர்களை ஒழித்துவிட்டேன் என்று அறிவித்தீர்கள். இப்போது ஏன் எல்லா ஊர்களிலும் பிச்சைக்காரர்கள் திரிகிறார்கள்? ஏன் ஆயிரக்கணக்கானவர்கள் தெருக்களில் வசிக்கிறார்கள்? ஐந்து முறை நீங்கள் முதல்வராக இருந்து என்ன பயன்?

    12. ஐந்தாண்டுகளாக வெளிநாட்டில் வாழ்கிறேன். ஓர் அரசு ஊழியருக்கோ ஒரு காவல் அதிகாரிக்கோ ஒரு தம்படிக் காசுகூட லஞ்சமாகக் கொடுத்ததில்லை. அவர்கள் கேட்டதும் இல்லை. இங்கே வந்த சில தினங்களிலேயே ஒவ்வோர் இடத்திலும் என்னிடம் லஞ்சம் கேட்கிறார்களே, இதற்கு நீங்கள்தானே பொறுப்பு?

    13. மின் வெட்டைத் தடுக்க ஐந்து ஆண்டுகளில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன?

    14. தமிழினம் ஈழத்தில் படுகொலை செய்யப்பட்டபோது பதவிக்குச் சண்டையிட்ட உங்கள் கட்சியை நம்பி எப்படி வாக்களிப்பது? 2008ல் நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்து மத்திய அரசிலும் பங்கு பெற்றிருக்கவில்லை எனில் ஈழப்பிரச்னையை எப்படிக் கையாண்டிருப்பீர்கள்?

    15. உங்கள் ஊழல் பற்றிய சர்க்காரியா கமிஷன் அறிக்கையை நூலகங்களில் இருந்து நீக்கியது ஏன்?

    16. தொகுதிப் பங்கீடு மற்றும் அமைச்சர் பதவிகளை வாரிசுகளுக்கு வாங்குவதற்குத் தவிர நீங்கள் தில்லி சென்றது எத்தனை முறை? எதற்காக?

    17. பாராட்டு விழாக்கள் , சினிமா கலை நிகழ்ச்சிகள், நடிகையின் திருமணம் போன்றவற்றுக்கு ஓடோடிச் செல்லும் நீங்கள், எத்தனை முறை இறந்துபோன மீனவர் குடும்பங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் சொன்னீர்கள்?

    18. பல வருடங்களாகக் கட்சியிலிருந்து உழைத்த தி.மு.க. தொண்டர்களைவிட, தயாநிதி மாறனும் அழகிரியும், கனிமொழியும் மக்களவை உறுப்பினராகவும், மத்திய மந்திரியாகவும் ஆவதற்கு என்ன தகுதி?

    19. உங்கள் குடும்பத்தினருக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழல், மணல் கொள்ளை, திரைப்படத் துறை முழுமையான ஆக்கிரமிப்புக்கும் தொடர்புகளே இல்லை என்று உங்கள் மனசாட்சியால் மறுக்க முடியுமா?

    20. அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாகச் சொன்னீர்களே, ஏன் செய்யவில்லை?

    (இந்தக் கேள்விகள் கல்கியில் ஞானி அவர்கள் எழுப்பிய கேள்விகளாம். பதிவு வெளியிட்ட பிறகு பேஸ்புக்கில் நண்பர் சொன்னார்.)

    ReplyDelete
  27. //நானும் 5 மாத காத்திருப்பிற்குப் பின் இப்போதுதான் ஒரு வேலையில் சேர்ந்துள்ளேன்.//

    வாழ்த்துக்கள்.

    இந்த ஆட்சி ஒழிந்தா சன் அட்டகாசம் ஒழியும். ஆத்தாவுக்கு இப்ப தெரிஞ்சிடுச்சுல்ல. சின்னாத்தாவ கவனிச்சா நடவடிக்கை இருக்காது. யாராவது தைரியசாலிகள் பொது நல வழக்கு போட்டா தான் இதுக்கு விடிவு காலம்.

    ReplyDelete
  28. //இவர்க்கு ஒட்டு போடாதே அவருக்கு ஒட்டு போடாதே என்று சொல்லும் முன் நீங்கள் யாருக்கு ஒட்டு போடா சொல்கிரிர்கள் அவரை பற்றி சொல்லுங்கள்.]]]

    தனிப் பதிவாகவே போடுகிறேன்..!///

    பதிவை எதிர்பார்க்கிறேன். விவாதம் பண்ணுவதற்கு அது நன்றாக இருக்குமென நினைக்கிறேன்.

    ReplyDelete
  29. [[[ரிஷி said...

    சரவணன், புதிய வேலையில் சிறப்பாய் செயல்பட்டு உயர்வு பெற வாழ்த்துக்கள்..]]

    மிக்க நன்றி ரிஷி..!

    ReplyDelete
  30. [[[மு.சரவணக்குமார் said...

    புதிய வேலையில் நிலைத்து, சிறந்து, உயர்ந்திட வாழ்த்துக்கள்.]]]

    நன்றி சரவணக்குமார்..!

    ReplyDelete
  31. [[[மு.சரவணக்குமார் said...

    //இந்தப் புத்தகம் கொஞ்சம் முன்கூட்டியே கையில் கிடைத்திருந்தால் அனைத்தையும் சிரமம் பார்க்காமல் தட்டச்சு செய்து பதிவில் ஏற்றியிருப்பேன். //

    இது அநியாயமா இல்லை. அவரின் உழைப்புக்கான பலன் கிடைக்க வேண்டுமல்லவா!, காசு கொடுத்து வாங்கிப் படியுங்கள் எனச் சொல்லிருக்கலாம் நீங்கள்!!]]]

    அவரை இதைச் செய்யுங்கள் என்கிறார்..! எத்தனை பேர் வாங்குவார்கள்..? அதிலும் வெளியூர்களில் இருப்பவர்கள், வெளிநாடுகளில் இருப்பவர்கள் பாவமில்லையா..? அவர்களுக்காகவாவது தட்டச்சு செய்து ஏற்றிவிட முயல்கிறேன்..!

    ReplyDelete
  32. [[[மு.சரவணக்குமார் said...

    இன்று தமிழகத்தில் பதியப்படும் நூற்றுக்கு நூறு பத்திரங்கள் இப்படித்தானே இருக்கிறது. இதில் சன் டிவிக்காரர்கள் மட்டும் எப்படி உத்தமோத்மர்களாய் இருப்பார்கள் என எதிர்பார்க்கிறீர்கள்.]]]

    எனக்குப் பத்திரம் வாங்கி வைத்துக் கொள்ளுமளவுக்கு எந்தச் சொத்துக்களும் இல்லை என்பதால் அது பற்றி எனக்குத் தெரியவில்லை..!

    ReplyDelete
  33. [[[Prabhu Rajadurai said...

    இந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ள விடயங்கள் குறித்து சில சட்ட விளக்கங்கள் எனது பதிவில் தனியே\

    http://marchoflaw.blogspot.com/2011/04/blog-post.html]]]

    நன்றி.. உங்களது பதிவின் சாரம்சத்தை அன்பு அவர்களிடம் தெரிவித்துள்ளேன்.. பதில் வந்ததும் சொல்கிறேன் நண்பரே..!

    ReplyDelete
  34. [[[Ganpat said...

    ஒரு குற்றத்தைப் பற்றி அறியும் போது கோபம் வரும்..(உ-ம்)தன மனைவி அடுத்த வீட்டுகாரனுடன் தொடர்பு வைத்திருக்கிறாள் என அறியும் போது. தமிழகம் 1967-89

    பல குற்றங்கள் பற்றி அறியும்போது வெறி வரும்..(உ-ம்)தன மனைவி பல பேர்களுடன் தொடர்பு வைத்திருக்கிறாள் என அறியும்போது
    தமிழகம் 1989-2006 குற்றங்கள் தவிர வேறு எதுவும் இல்லை என அறியும் போது விரக்தி வரும்.(உ-ம்)தன மனைவி இதையே தொழிலாகவும் செய்கிறாள் என அறியும்போது தமிழகம் 2006-11 இப்போ நமக்கு வந்துள்ளது விரக்தி.]]]

    அந்த விரக்தியால் நமக்குள் ஏற்பட்டிருக்கும் கோபத்தை வாக்குப் பதிவன்று நாம் காட்டியாக வேண்டும் கன்பத்..!

    ReplyDelete
  35. [[[Feroz said...

    புதிய வேளையில் மென்மேலும் சிகரங்களை தொட வாழ்த்துகிறேன். எனக்கு உள்ள ஒரு ஆதங்கம் எல்லாம் நம்முடைய வரிப் பணத்தில் படித்து வெளியில் வந்து இந்திய அரசாங்கத்தை எப்படி வரி ஏய்ப்பு செய்யலாம் என்று ஐடியா கொடுக்கும் சி.ஏ. படித்த ஆடிட்டர்கள் மேல்தான் என் கோவம் வருகிறது. அவர்களால்தான் என் தேசம் நோயாளியாக அந்நிய நாடுகளின் முன் நிற்கிறது.]]]

    படித்தவர்களே நம்மை ஏமாற்றும்போது நான் என்ன செய்வது..? அவன் பாழாய்ப் போவான் என்று சாபமிடுவதைத் தவிர வேறென்ன செய்வது..?

    ReplyDelete
  36. [[[அன்னு said...

    //அரசுக்கு ரூ.48.26 லட்சம் அளவுக்கு இழப்பினை ஏற்படுத்திய சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் நிர்வாக நியக்குநர் மீது ஏன் வழக்குத் தொடரவில்லை..?//

    அரசுக்கு எதிரா அரசே மனு தாக்க முடியுமா. ஹெ ஹெ ஹெ.. மனித தாக்குதல்லதான் முடியும் ஹெ ஹெ..]]]

    ஹி.. ஹி.. ஹி.. ஒரு நப்பாசைதான்..!

    ReplyDelete
  37. [[[ANGOOR said...

    ஃபேஸ்புக்கில் இதைப் படித்தபோது, பொது வாழ்வு, நேர்மை, அரசியல் நாகரீகம் குறித்த சில முக்கிய விஷயங்களை இந்தக் கேள்விகள் எழுப்பியதாகப்பட்டது. அதனால் பகிர்ந்து கொள்கிறேன்.]]]

    மிக்க நன்றி நண்பரே..!

    ReplyDelete
  38. [[[குறும்பன் said...

    //நானும் 5 மாத காத்திருப்பிற்குப் பின் இப்போதுதான் ஒரு வேலையில் சேர்ந்துள்ளேன்.//

    வாழ்த்துக்கள். இந்த ஆட்சி ஒழிந்தா சன் அட்டகாசம் ஒழியும். ஆத்தாவுக்கு இப்ப தெரிஞ்சிடுச்சுல்ல. சின்னாத்தாவ கவனிச்சா நடவடிக்கை இருக்காது. யாராவது தைரியசாலிகள் பொது நல வழக்கு போட்டாதான் இதுக்கு விடிவு காலம்.]]]

    ஆட்சி மாறினால் ஏதாவது நடக்கும் என்று நினைக்கிறேன்..!

    ReplyDelete
  39. [[[ரிஷி said...

    //இவர்க்கு ஒட்டு போடாதே அவருக்கு ஒட்டு போடாதே என்று சொல்லும் முன் நீங்கள் யாருக்கு ஒட்டு போடா சொல்கிரிர்கள் அவரை பற்றி சொல்லுங்கள்.]]]

    தனிப் பதிவாகவே போடுகிறேன்..!///

    பதிவை எதிர்பார்க்கிறேன். விவாதம் பண்ணுவதற்கு அது நன்றாக இருக்குமென நினைக்கிறேன்.]]]

    செய்யலாம்..!

    ReplyDelete
  40. எல்லா பார்பணர்களுக்கும் மாறன் பிரதர்ஸ்ன் திறமையான் போட்டியை சமாளிக்க முடியவில்லை என்பதினாலேயே இந்தக் கொலை வெறி, அதற்கு வழக்கம் போல் பலியாகும் நம்ப மக்கா.

    ஒன்று மட்டும் நினைவில் வையுங்கள், யார் எதிர்த்தாலும் மாறன் பிரதர்ஸ் உலக பணக்காரர்கள் வரிசையில் இடம் பெறுவதை தடுக்க முடியாது.

    அம்பானி குசராத்தில் வளர்ந்தால் குசராத்திகள் பெருமை கொள்வார்கள் ஆனால் தமிழனோ?

    தினமலரோ, தினமனியோ வளரவேண்டும் என்பதற்காக தினகரனை தடுக்க முடியாது.

    பார்பணர்களின் பிடியிலிருந்து முதலில் ஊடகங்களை மீட்க வேண்டும் எப்பதே என் போன்றவர்களின் ஆவல். அதை மீட்பது ஒரு தமிழ் குடும்பத்தை சேர்ந்தவன் எனும்போது மிகப்பெருமை.

    ReplyDelete
  41. [[[Prakash said...

    எல்லா பார்பணர்களுக்கும் மாறன் பிரதர்ஸ்ன் திறமையான் போட்டியை சமாளிக்க முடியவில்லை என்பதினாலேயே இந்தக் கொலை வெறி, அதற்கு வழக்கம் போல் பலியாகும் நம்ப மக்கா.

    ஒன்று மட்டும் நினைவில் வையுங்கள், யார் எதிர்த்தாலும் மாறன் பிரதர்ஸ் உலக பணக்காரர்கள் வரிசையில் இடம் பெறுவதை தடுக்க முடியாது.

    அம்பானி குசராத்தில் வளர்ந்தால் குசராத்திகள் பெருமை கொள்வார்கள் ஆனால் தமிழனோ? தினமலரோ, தினமனியோ வளரவேண்டும் என்பதற்காக தினகரனை தடுக்க முடியாது.

    பார்பணர்களின் பிடியிலிருந்து முதலில் ஊடகங்களை மீட்க வேண்டும் எப்பதே என் போன்றவர்களின் ஆவல். அதை மீட்பது ஒரு தமிழ் குடும்பத்தை சேர்ந்தவன் எனும்போது மிகப் பெருமை.]]]

    ம்.. கொள்ளையடிப்பதிலும், கொலை செய்வதிலும் ஜாதி பார்த்து விட்டுவிடுவோம் என்றால் நான என்ன சொல்வது..?

    உங்களது இஷ்டம்..!

    ReplyDelete
  42. //[Prakash said..
    எல்லா பார்பணர்களுக்கும் மாறன் பிரதர்ஸ்ன் திறமையான் போட்டியை சமாளிக்க முடியவில்லை என்பதினாலேயே இந்தக் கொலை வெறி, அதற்கு வழக்கம் போல் பலியாகும் நம்ப மக்கா.

    ஒன்று மட்டும் நினைவில் வையுங்கள், யார் எதிர்த்தாலும் மாறன் பிரதர்ஸ் உலக பணக்காரர்கள் வரிசையில் இடம் பெறுவதை தடுக்க முடியாது.

    அம்பானி குசராத்தில் வளர்ந்தால் குசராத்திகள் பெருமை கொள்வார்கள் ஆனால் தமிழனோ? தினமலரோ, தினமனியோ வளரவேண்டும் என்பதற்காக தினகரனை தடுக்க முடியாது.

    பார்பணர்களின் பிடியிலிருந்து முதலில் ஊடகங்களை மீட்க வேண்டும் எப்பதே என் போன்றவர்களின் ஆவல். அதை மீட்பது ஒரு தமிழ் குடும்பத்தை சேர்ந்தவன் எனும்போது மிகப் பெருமை.]]]
    ம்.. கொள்ளையடிப்பதிலும், கொலை செய்வதிலும் ஜாதி பார்த்து விட்டுவிடுவோம் என்றால் நான என்ன சொல்வது..?

    உங்களது இஷ்டம்..!//

    - இப்படிச் சொல்லித் சொல்லித் தான் தி.மு.க என்ற ஒரு ஜாதியை உருவாக்கி வைத்துள்ளார்கள் !

    ReplyDelete
  43. ஆகாய மனிதன் ஸார்..!

    பார்ப்பணர்களை எதிர்ப்பதற்காகவே கொள்ளையடிக்கிறோம் என்று சப்பைக் கட்டுக் கட்டுவதைத்தான் இவர்கள் திராவிட வெற்றி என்கிறார்கள்..

    ReplyDelete