Pages

Thursday, April 07, 2011

இந்த வேட்பாளர் நிச்சயம் ஜெயிக்க வேண்டும்..!

07-04-2011
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
 
''நம்ம முத்துக்குமரனுக்கு ஸீட் கிடைச்சிருக்​காம்ல!'' - இந்திய  கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியானபோது, நெடுவாசல் கிராமத்துக்கே ஆச்சர்யம்! முத்துக்குமரனுக்கும்தான்!

'ஸீட் கிடைக்கிற அளவுக்கு நான் கட்சியில பெரிசா சாதிக்கலையே... யாருக்குப் பிரச்னைன்னாலும், ஓடிப் போய் நிற்பேன். அதுக்கா இந்தப் பரிசு?’ என தன்னைத்தானே கிள்ளிக் கொள்கிறார் முத்துக்​குமரன்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர். ஏழ்மை மாறாத வீடு... சைக்கிள்கூட இல்லாத வறுமை நிலை... நல்லது, கெட்டது எதுவானாலும், துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு பஸ் ஏறுகிற மனிதர். அவரை எதிர்த்துப் போட்டியிடுபவர் தி.மு.க-வின் மாவட்டச் செயலாளர் பெரியண்ண அரசு. 'பசை’க்குப் பஞ்சம் இல்லாத பார்ட்டி. அதனால், 'வெல்லப் போவது பணமா... குணமா?’ எனப் பட்டிமன்றம் நடத்தாத குறையாக பரபரத்துக் கிடக்கிறது  புதுக்கோட்டை.

தங்கள் ஊர்க்காரர் வேட்பாளரான ஆச்சரியத்தில் நெடுவாசல் கிராமத்தினர் 50, 100 எனப் பணம் போட்டு அவருக்காகக் களத்தில் குதித்து இருக்கிறார்கள்.

முத்துக்குமரன் புதுக்கோட்டை மன்னர் கல்லூரிக்கு நன்கு பரிச்சயமானவர் என்பதால், கட்சிச் சார்புகளை எல்லாம் மறந்துவிட்டு அனைத்துத் தரப்பு மாணவர்களும் அவருக்காக பிரசாரத்தில் குதித்து இருக்கிறார்கள்.
 

முத்துக்குமர​னுக்கு ஸீட் கிடைத்த பின்னணி குறித்து விசாரித்தோம். ''அ.தி.மு.க. கூட்டணிக் குழப்பத்தால் ஏற்பட்ட ஒரே  நன்மை முத்துக்​குமரன் வேட்பாளர் ஆனதுதான். அ.தி.மு.க. கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சியின் சிட்டிங் தொகுதியான ஆலங்குடியைத்தான் கேட்டார்கள். ஆனால், ஆலங்குடியை முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணனுக்காக வற்புறுத்தி வாங்கிய ஜெயலலிதா, புதுக்கோட்டையை கம்யூனிஸ்ட்டுக்குக் கொடுத்தார். அப்போது தி.மு.க-வின் புதுக்கோட்டை தொகுதி வேட்பாளராக பெரியண்ண அரசு அறிவிக்கப்பட்டு இருந்தார். பணத்துக்கு குறைவில்லாத அரசுவை வீழ்த்த சரியான ஆயுதமாக எளிமையின் அடையாளமாக இருந்த முத்துக்குமரனின் பெயர் டிக் ஆனது!'' என்கிறார்கள் சிவப்புத் துண்டுக்காரர்கள்.

நெடுவாசல் கிராமத்துக்குப் போ​னோம்... ''கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தென்காசி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராகப் பெட்டிக் கடை வெச்சிருந்த லிங்கம் என்பவரை நிறுத்தி ஆச்சரியப்படுத்தினாங்க. அதே மாதிரி இப்போ, எங்க ஊர் முத்துக்குமரனை நிறுத்தி இருக்காங்க. கல்லூரிக் காலத்தில் இருந்தே கம்யூனிஸ்ட் கட்சியில் அங்கம் வகிக்கும் முத்துக்குமரனை, ஒரு அரசியல்வாதியா யாருமே பார்க்க மாட்டாங்க. காலையில் பஸ்ல ஏறி உட்காருபவர், நைட்தான் வீட்டுக்கு வருவார். 'கட்சியில மாவட்டச் செயலாளரா இருக்கீங்க... ஒரு மோட்டார் பைக்காவது வாங்குங்களே’ன்னு சொன்னால், 'பஸ்ல போனா அஞ்சு ரூபா... பைக்ல போனா அம்பது ரூபா’னு சொல்வார். இப்போகூட வாடகை வண்டியிலதான் பிரசாரத்துக்குப் போறார். 

யாருக்குப் பிரச்னைன்​னாலும் முதல் ஆளா ஓடிப் போய் நிற்பார். கான்ட்ராக்ட், கமிஷன்னு ஒரு ரூபாகூட கை நீட்டி அவர் வாங்கியது இல்லை. சாதாரண ஒன்றியச் செயலாளரா இருக்கிறவங்களே ஏக்கர் கணக்கில் இடம் வாங்கிப் போடுறாங்க. ஆனால், இன்னிக்குவரைக்கும் முத்துக்​குமரனுக்​குன்னு ஒரு சென்ட் இடம்கூட இல்லை. இந்த அளவுக்கு எளிமையா வாழ்றவருக்கு ஸீட் கொடுத்து எங்க ஊரையே கம்யூனிஸ்ட் கட்சி பெருமைப்படுத்திடுச்சு. முத்துக்குமரனுக்காக எங்க ஊர் மட்டும் இல்லாமல், அக்கம் பக்க ஊர்களில் இருக்கிறவங்க எல்லாரும் ஓட்டு கேட்குறாங்க. நிச்சயமா அவரை சட்டமன்றத்துக்கு அனுப்பி​வைப்போம்!'' என்கிறார்கள் நெடுவாசல் கிராமத்​தினர்.

பிரசாரத்தில் இருந்த முத்துக்குமரனிடம், ''பணத்துக்கும் பதவிக்கும் குறைவில்​லாத பெரியண்ணஅரசுவை எப்படி வீழ்த்தப்போகிறீர்கள்?'' எனக் கேட்டோம். ''வசதி வாய்ப்புக்கு குறைவு இருந்தாலும், மாவட்டம் முழுக்க நல்ல பேரை வாங்கி இருக்கேன். முடிஞ்ச மட்டும் என்னாலான உதவிகளைப் பலருக்கும் பண்ணி இருக்கேன். கல்வி உதவின்னு யார் வந்தாலும் தலையை அடமானம் வெச்சாவது உதவிடுவேன். பணம் காசை இறைச்சாத்தான் சட்டமன்றத்துக்குப் போக முடியும்னா, அது ஜனநாயகத்தை விலை பேசி வாங்குற மாதிரி ஆகிடும். என்னோட கட்சி என்னை அப்படி வளர்க்கலை. புதுக்கோட்டையை செழிப்பான மண்ணாகவும், முழுமையா கல்வி அறிவு பெற்ற தொகுதியாகவும் மாத்தறதுதான் என்னோட ஆசை. சுய விருப்பத்தின் பேரில் மக்கள் ஓட்டு போட்டுத் தேர்ந்தெடுத்தால், நிச்சயம் சட்டமன்றத்தில் போராடுவேன்!'' என்கிறார் நம்பிக்கையோடு!

அரசியல் சாக்கடையில் சில தும்பைப் பூக்களும் துளிர்க்கும் என்பதற்கு முத்துக்குமரனே ஆறுதலான முன்னுதாரணம்!

நன்றி : ஜூனியர்விகடன்

தோழர் முத்துக்குமார் மாதிரியான மக்களுக்காக உழைக்கும் தொண்டர்கள் நிச்சயமாக வெற்றி பெற்றாக வேண்டும். புதுக்கோட்டைவாழ் மக்கள் யோசிக்கட்டும்..!  தோழர் முத்துக்குமார் வெற்றி பெற எனது வாழ்த்துகள்..!

22 comments:

  1. Real communist... He is very active , every farmer grievance meeting in Pudukkottai collecter office... Best of luck .

    ReplyDelete
  2. நிச்சயம் வெற்றி பெறுவார்.

    ReplyDelete
  3. வெற்றி அடைவார்

    ReplyDelete
  4. எங்கள் தொகுதி வேட்பாளரான இவரும் ஜெயிக்கவேண்டும் என விரும்புகிறேன்.

    http://www.kpandiarajan.com/politics.html

    எந்த சூழ்நிலையிலும் எந்த இடத்திலும் லஞ்சம் வாங்காத எம்.எல்.ஏ.வாக இருப்பேன். விருதுநகரில் 24 மணி நேரமும் 2 பேருடன் இயங்கக் கூடிய அலுவலகம் இருக்கும். நான் தொழில் முறை அரசியல்வாதி இல்லை. விருதுநகரில் தான் குடியிருப்பேன். ஜெயித்தாலும் தோற்றாலும் இதே வீட்டில் தான் இருப்பேன் 50 வயதிற்கு மேல் பொது வாழ்கை என்பது நான் ஏற்கனவே எடுத்த முடிவு. மற்றவர்களை திட்டுவது எங்கள் பிரச்சாரமாக இருக்காது. 10 அம்ச திட்டத்தை முன்வைத்து வெற்றியை நோக்கி விருதுநகர் என்பது தான் இந்த தேர்தலில் எங்கள் நோக்கமாக இருக்கும்.

    ReplyDelete
  5. இப்படியும் ஒரு மனிதரானு ஆச்சர்யமா இருக்கு .......வெற்றிபெற வேண்டுகிறேன் ..

    ReplyDelete
  6. ஆஹா சாக்கடையிலும் சந்தனங்கள். வெற்றி பெற வாழ்த்த மட்டும் அல்ல பிரார்த்திக்கிறேன். அன்புடன்

    ReplyDelete
  7. Not only him there are so many communist are very good.

    I can surely say that 'Communist is a very less corrupted party '.

    Even i dont agree all the protest by communist but they are better than others.

    ReplyDelete
  8. [[[தமிழ்வாசி - Prakash said...

    வெற்றி பெற வாழ்த்துக்கள்.]]]

    நன்றிகள் நண்பரே..! இவரைப் போன்றவர்களை ஜெயிக்க வைக்க வேண்டியது நமது கடமையும்கூட..!

    ReplyDelete
  9. [[[Namy said...

    Real communist... He is very active, every farmer grievance meeting in Pudukkottai collecter office. Best of luck.]]]

    அதனால்தான் சீட்டு கொடுத்திருக்கிறார்கள். இப்படி மக்களுக்காக உழைக்கின்ற ஒருவரைத் தேர்ந்தெடுத்தால் அத்தொகுதி மக்களுக்கு நல்லது..!

    ReplyDelete
  10. [[[சேலம் தேவா said...

    நிச்சயம் வெற்றி பெறுவார்.]]]

    நானும் இதைத்தான் வேண்டுகிறேன் நண்பரே..!

    ReplyDelete
  11. [[[Speed Master said...

    வெற்றி அடைவார்.]]]

    நம்பிக்கைக்கு மிக்க நன்றி நண்பரே..

    ReplyDelete
  12. [[[ரிஷி said...

    எங்கள் தொகுதி வேட்பாளரான இவரும் ஜெயிக்க வேண்டும் என விரும்புகிறேன்.

    http://www.kpandiarajan.com/politics.html

    எந்த சூழ்நிலையிலும் எந்த இடத்திலும் லஞ்சம் வாங்காத எம்.எல்.ஏ.வாக இருப்பேன். விருதுநகரில் 24 மணி நேரமும் 2 பேருடன் இயங்கக் கூடிய அலுவலகம் இருக்கும். நான் தொழில் முறை அரசியல்வாதி இல்லை. விருதுநகரில் தான் குடியிருப்பேன். ஜெயித்தாலும் தோற்றாலும் இதே வீட்டில்தான் இருப்பேன் 50 வயதிற்கு மேல் பொதுவாழ்கை என்பது நான் ஏற்கனவே எடுத்த முடிவு. மற்றவர்களை திட்டுவது எங்கள் பிரச்சாரமாக இருக்காது. 10 அம்ச திட்டத்தை முன்வைத்து வெற்றியை நோக்கி விருதுநகர் என்பது தான் இந்த தேர்தலில் எங்கள் நோக்கமாக இருக்கும்.]]]

    இவரைப் பற்றியும் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். படித்திருக்கிறேன் ரிஷி..

    இவரும் ஜெயிக்க வைக்க வேண்டுமாய் வேண்டிக் கொள்கிறேன்..!

    ReplyDelete
  13. [[[tamil said...
    இப்படியும் ஒரு மனிதரான்னு ஆச்சர்யமா இருக்கு. வெற்றி பெற வேண்டுகிறேன்.]]]

    நன்றி தமிழ்..!

    ReplyDelete
  14. [[[Feroz said...
    ஆஹா சாக்கடையிலும் சந்தனங்கள். வெற்றி பெற வாழ்த்த மட்டும் அல்ல பிரார்த்திக்கிறேன். அன்புடன்]]]

    ஏதோ இவர்கள் இருப்பதால்தான் அரசியல் மீது கொஞ்சமாவது பிடிப்பு இருக்கிறது பெரோஸ்..!

    ReplyDelete
  15. [[[muthukumar said...

    Not only him there are so many communist are very good.

    I can surely say that 'Communist is a very less corrupted party '.

    Even i dont agree all the protest by communist but they are better than others.]]]

    உண்மைதான். நிச்சயம் கழகங்களைவிட, ஜாதிக் கட்சிகளைவிடவும் இவர்கள் நம்பிக்கைக்குரியவர்கள் என்பதில் எனக்கும் சந்தேகமில்லை..!

    ReplyDelete
  16. என்னாது சாக்கடையில் தும்பை பு துளிர்க்குமா? கரடி விடுறமாதிரியில தெரியுது்

    ReplyDelete
  17. patikkumpothu manasukku aruthala irrukku

    ReplyDelete
  18. [[[வலிபோக்கன் said...
    என்னாது சாக்கடையில் தும்பை பு துளிர்க்குமா? கரடி விடுற மாதிரியில தெரியுது்]]]

    இப்படியொரு தொண்டனை மக்கள் ஜெயிக்க வைத்தால் அவர்களுக்கு நல்லது. இல்லையெனில்.. அவர்கள் தலைவிதி..!

    ReplyDelete
  19. [[[palani said...

    patikkumpothu manasukku aruthala irrukku]]]

    ஜெயிச்சுட்டாருன்னு நியூஸ் வந்தால் இன்னும் நன்றாக இருக்கும்..!

    ReplyDelete
  20. TT,
    The ground report says he is going to win.Had been to pudukottai on official work and surprised to hear that there is a silent wave for this man.Heard from people that his opponent arasu is a stalin supporter and this guy has amassed wealth in the last five years and ragupathi is against this guy winning.Not sure how far this is true.

    ReplyDelete
  21. [[[Sanjeevi said...

    TT, The ground report says he is going to win. Had been to pudukottai on official work and surprised to hear that there is a silent wave for this man. Heard from people that his opponent arasu is a stalin supporter and this guy has amassed wealth in the last five years and ragupathi is against this guy winning. Not sure how far this is true.]]]

    நிச்சயமாக இந்த மக்கள் தொண்டர் ஜெயித்தால் பெரிதும் மகிழ்வேன்.. இவர் மட்டுமல்ல கம்யூனிஸ இயக்கத் தோழர்கள் அனைவருமே ஜெயித்தாக வேண்டும். இது தற்போது தமிழ்நாட்டுக்கே நல்லது..!

    ReplyDelete