Pages

Monday, April 18, 2011

1987, டிசம்பர் 24-ல் என்ன நடந்தது..?

17-04-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

1987, டிசம்பர் 24-ம் நாள்.. தமிழர்களின் வரலாற்றில் மறக்க முடியாத நாள். அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். அமரரான நாள். அ.தி.மு.கழகத்தின் ரத்தத்தின் ரத்தங்கள் என்றில்லாமல் அவருடைய ரசிகர் கண்மணிகளும், பொதுவான தமிழகத்து மக்களும் எம்.ஜி.ஆர். என்ற எளிய மனிதருக்காக கண்ணீர்விட்டு அழுத காட்சி தமிழகத்தை உலுக்கியது..!


அன்றைக்கு என்ன நடந்தது என்று இப்போதும் அறிந்து கொள்ளத் துடிக்கும் இன்றைய வாசகர்களுக்காக ஜூனியர்விகடன் இதழ் எம்.ஜி.ஆர். அமரரான நாள் முதல் இன்றுவரையில் நடந்த சில முக்கிய அரசியல் நிகழ்வுகளை தொடர் கட்டுரையாக எழுதத் துவங்கியிருக்கிறது.

இதில் முதல் பாகம் இது : படித்துப் பாருங்கள்..! தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்களையும் நான் இங்கே வெளியிடுகிறேன்..!

கடந்த வியாழக்கிழமை அதிகாலை சுமார் 5 மணி இருக்கும்... சென்னை நேரு ஸ்டேடியத்தில் முதல்வரும் ஜனாதிபதியும் கலந்து கொள்ளும் 'எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் திறப்பு விழா’வுக்குச் சவுக்கு மரக்கட்டைகளால் தடுப்புகள் அமைத்துக் கொண்டு இருந்தனர் ஊழியர்கள். அவர்களை நோக்கி விரைந்து வந்தது ஒரு போலீஸ் வேன்...

''வேலைகளை அப்படியே நிறுத்திட்டு எல்லோ​ரும் ராஜாஜி மண்டபத்துக்குக் கிளம்புங்க...'' என்று அதிகாரிகள் உத்தரவிட,  'சரி, விழா நடக்கும் இடத்தை மாற்றிவிட்டார்களாக்கும்...’ என்று ஒரு லாரியில் ஏறி அவர்கள் ராஜாஜி மண்டபம் வந்து சேருவதற்கும், அந்த சோகச் செய்தியைக் கேள்விப்பட்டு  நாமும் அங்கு போய் நிற்பதற்கும் சரியாய் இருந்தது!

போலீஸ் உதவி கமிஷனர்கள் சிலர், ராஜாஜி மண்டபப் படிக்கட்டுகளுக்கு எதிரே ஆணி அடித்து, கயிறுகளைக் கட்டி, தடுப்புகள் அமைக்க 'மார்க்’ செய்துகொண்டு இருந்தனர். வந்த ஊழியர்கள் விஷயத்தைக் கேள்விப்பட்டுத் திகைத்து நின்றனர். சற்று நேரத்தில் ஊர் விழித்துக்கொண்டது.

'முதல்வரின் உடல், ராஜாஜி மண்டபத்துக்குக் கொண்டு வரப்பட இருக்கிறது’ என்று கேள்விப்​பட்ட சிலர், அவசர அவசரமாக ஓடி வர, ராஜாஜி மண்டபத்தைச் சுற்றிலும் போலீஸ் நிறுத்தப்​பட்டது. எம்.எல்.ஏ. ஹாஸ்டல் பக்கம் இருந்து சத்தமான குரலெடுத்து, ''யப்பா...  யப்பா..!'' என்று கதறிக்கொண்டு முதலில் ஓடி வந்தார்  அருப்புக்கோட்டை எம்.எல்.ஏ. பஞ்சவர்ணம். மக்கள் கடலின் முதல் அலைகூட வந்து சேராத நேரம். கொஞ்ச நேரம்தான்!

ஒரு கட்டடம் சரிவதுபோல் 'டமார்’ என்ற சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து பயங்கர அலறல்... இரைச்சல்... தூரத்தில் ஒரு நுழைவாயிலின் இரும்புக் கதவை உடைத்துக்கொண்டு, ஆயிரக்கணக்கில் ஆண்களும் பெண்களும் அலறியடித்துக் கொண்டு  ஓடி வந்தனர்.

சில போலீஸ் அதிகாரிகள், ''இன்னும் இங்கு முதலமைச்சரைக் கொண்டு வரவில்லை, கொண்டு​ வரவில்லை...'' என்று கத்தினார்கள். எதையும் காதில் வாங்காமல் விரைந்து வந்த கூட்டம், மார்பிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு மண்டபத்தை நோக்கிப் பாய்ந்து வந்தது.

மிகக் குறைந்த எண்ணிக்​கையில் நின்ற போலீஸார், கண நேரத்தில் ஓரமாய் விலகிக் கொண்டனர். படிக்​கட்டின் மேலே இருந்து பார்க்கும்போது, மனிதத் தலைகளால் ஒரு புயல் கிளம்பி வருவதுபோல் இருந்தது. வந்தவர்கள், ராஜாஜி மண்டபத்தின் முன் வாசல் வழியாக மேலே ஏறிக் கதவுகளை முட்டி மோதித் திறந்தனர்.

உள்ளே முதல்வரின் உடல் இன்னும் வைக்கப்படவில்லை என்பதை நேரில் பார்த்து உறுதிப்படுத்திக்கொண்ட பின்னும், ஒவ்வொரு திசைக்கும் அழுதபடி, ''எங்கே... எங்கே எங்க தெய்வம்?'' என்று ஓடித் தேடினர். ராஜாஜி மண்டபத்தை ஒரு சுற்றுச் சுற்றிய பின்னர், ''ஐயோ, காணோமே... காணோமே...'' என்று அரற்றியபடி அவ்வளவு பேரும் அவர்களாகவே கீழே இறங்கிவிட்டனர்.

ராஜாஜி மண்டபத்தின் படிக்கட்டிலும், சுற்று வழியிலும் ரத்தச் சுவடுகளாகக் காலடித் தடங்கள் ஆங்காங்கே இருந்தன. தடுப்புகள் அமைக்க இடம் குறிப்பதற்காகத் தரையில் அடித்துவைக்கப்பட்டு இருந்த ஆணிகளின் மேல் மிதித்து, பலருடைய பாதங்கள் கிழிந்து, கொட்டிய ரத்தம் திட்டுத்திட்டாய்க் கிடந்தது.

ராஜாஜி மண்டபத்தின் எதிரே இருந்த பரந்த மைதானத்தில் நின்றவர்களை போலீஸார் நயந்து ஓரம் கட்டிய பின், சவுக்குக் கட்டைகளால் தடுப்புகள் அமைக்கும் வேலை தொடர்ந்தது. அப்போதுதான் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், சௌந்தரராஜன், டி.ராமசாமி ஆகிய மூவரும் ஏற்பாடுகளைக் கவனிக்க வந்து சேர்ந்தனர்.

முதல்வர் உடல் வீட்டில் இருந்து கொண்டு வரப்பட்டது. பிரதமர் வரும் வரை ராஜாஜி மண்டபத்தின் உள்ளே மேடை மீது வைக்க முதலில் முடிவானது. உடலை வைக்கும் இடம் பற்றி அமைச்சர்களிடம் ஓர் அதிகாரி விளக்கினார். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், ''மேடையில் வேண்டாம்... ஹாலிலேயே இருக்கட்டும்!'' என்றார். பெரிய மேஜை ஒன்று இழுத்து வரப்பட்டு மண்டபத்தின் நடுவில் போடப்பட்டது.


கறுப்பு கலர் உடையில், முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் முன்னால் வந்தார் ஜெயலலிதா. கண்கள் மட்டும் ரத்தச் சிவப்பில் இருந்தன. அவரை அடுத்து ஓர் அடி தூர இடைவெளியில் இணையாக ஆர்.எம்.வீரப்பன், பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் பல அமைச்சர்கள் வந்தனர்.

பூட்டியிருந்த ராஜாஜி மண்டபத்தின் பக்கவாட்டுக் கதவுகள் வழியாக அவர்களுடன் சேர்ந்து நுழைந்தபோது, உள்ளே... சில விநாடிகளுக்கு முன் பின் வாசல் வழியாகக் கொண்டுவந்து கிடத்தப்பட்ட முதல்வரின் உடலை, மண்டபத்தின் நடுவில் இருந்த மேஜை மீது ஒரு ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து இருந்தனர். வழக்கமான அவர் உடை... தூங்கிக்கொண்டு இருப்பதுபோல் காணப்பட்டார் முதல்வர். வயிற்றுப் பகுதிக்கு மேல் ஒரு பட்டுத் துணியால் கட்டப்பட்டு இருந்தது. முகத்தில் அதே பொலிவு... நாசித் துவாரங்களில் கொஞ்சம் பஞ்சு வைக்கப்பட்டு இருந்தது. அது தவிர, எந்த மாற்றமும் தெரியவில்லை.  வலது கையில் கட்டப்பட்டு இருந்த பெரிய கறுப்பு டயல் கைக்கடிகாரம் மட்டும் காலை 8.45 - ஐத் தாண்டி இயங்கிக்கொண்டு இருந்தது!

சில நிமிடங்கள்வரை மண்டபத்துக்குள் மலர் மாலைகூட வந்து சேரவில்லை. மிகுந்த நிசப்தம் நிலவியது. முதல்வரை அந்தக் கோலத்தில் பார்க்க சகிக்க முடியாமல் அமைச்சர்களும் அவருக்கு நெருக்கமானவர்களும் வாய்விட்டு அழுதனர். முதல்வரின் அருகே இடது பக்கமாக, அவரது வளர்ப்பு மகன் அப்பு. அவரையடுத்து சத்யா ஸ்டூடியோ பத்மநாபன்.  கே.ஏ.கே. நெருங்கி வந்து, பத்மநாபனின் தோள்களை இறுகப் பிடித்ததும், வாய்விட்டுக் கதறினார்கள் பத்மநாபனும் அப்புவும்.

ஜெயலலிதா வந்ததும்... சற்று நேரம் அப்படியே முதல்வரை உற்றுப் பார்த்துக்கொண்டு இருந்தார். கண்களில் நீர் தளும்பி நின்றது. வாய்விட்டு அழாமல் இறுக்கமாக அவர் தலைமாட்டுக்குச் சென்று நின்று​ கொண்டு, யாருடைய முகத்தையும் பாராமல், எதிரே உயரத்தில் எதையோ வெறித்துப் பார்த்தபடி நின்றார் ஜெயலலிதா. அவரது கைகள், முதல்வரை வைத்திருந்த ஸ்ட்ரெச்சரின் இரும்புக் குழாய்களை இறுகப் பற்றி இருந்தன. ஜெயலலிதாவுக்கு எதிராய் முதல்வரின் கால்மாட்டில் ஆர்.எம்.வீரப்பன் நின்றார்.

முதல்வரின் உடல் ராஜாஜி மண்டபத்துக்கு வந்து சேர்ந்த பின்னும், பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்​படும் சரிவான மேடை, தயாரித்து முடியவில்லை. அப்​போதும் மாலை, பூக்கள் மண்டபத்துக்குள் வந்து சேரவில்லை.

தலைமாட்டில் நின்ற ஜெயலலிதா, முதல்வர் முகத்தையே உற்றுப் பார்ப்பதும், பின்னர் எங்கோ தூரத்தில் வெறித்துப் பார்ப்பதுமாய் இருந்தார். தன் கர்ச்சீப்பால் முதல்வரின் முகத்தை அடிக்கடி சரி செய்து​கொண்டு இருந்தார்.

ராமாவரம் தோட்டத்தில் இருந்து வந்திருந்த முதல​மைச்சரின் உறவினர்கள், மண்டபத்தின் ஓர் ஓரத்தில் அமர்ந்து அழுதுகொண்டு இருந்தனர். சற்று நேரத்துக்குள் ஒவ்வொருவராக முண்டியடித்துக்கொண்டு ராஜாஜி மண்டபத்துக்குள் நுழையவும், நெரிசல் அதிகமானது. ஓர் அதிகாரி ஓடி வந்து அமைச்சர்களிடம், ''கூட்டம் கூடுகிறது, இந்த ஹால் தாங்காது...'' என்று முறையிட்டார்.

அதற்குள் பொதுமக்கள் பார்வைக்கான மேடை தயாராகிவிட்ட தகவல் கிடைத்தது. முதல்வர் படுத்திருந்த ஸ்ட்ரெச்சரைச் சுற்றி அமைச்சர்கள் சூழ்ந்து மெள்ளத் தூக்கினர். ஜெயலலிதாவும் நின்ற இடத்திலிருந்தே ஸ்ட்ரெச்சரின் தலைப் பகுதியை ஏந்திப் பிடிக்க, பொதுமக்கள் பார்வையிட சரிவான மேடையில் கிடத்தினார்கள். ஜெயலலிதா அங்கும் முதல்வரின் தலைமாட்டிலேயே நின்றார்.


முதல்வரின் உடலைப் பார்த்ததும், வெளியே காத்திருந்த கூட்டம் கொந்தளித்தது. ஆண்களும் பெண்களும் வாயில் அடித்துக்கொண்டு அலறினர். இரண்டு பெண்கள் அந்த இடத்திலேயே மயங்கிச் சரிய, காவலர்கள் அவர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கி அப்புறப்படுத்தினர். அழுகையும் கூக்குரலும் ஒரே இரைச்சலாய் இருந்தது.

வெள்ளை நிற பேன்ட் சட்டையில் இருந்த ஓர் இளைஞர், போலீஸ் தடுப்பை மீறி உள்ளே வர முயற்சித்தார். அது முடியாமல் போகவே, கிடத்தப்பட்டு இருந்த முதல்வரின் உடலைக் கீழே நின்றபடி சில நொடிகள் அண்ணாந்து பார்த்துவிட்டு, தடுப்புக் கட்டைகளின்மேல் தன் நெற்றியால் மாறி மாறி முட்டிக் கொண்டார். நெற்றி பிளந்து அவருடைய மார்புப் பகுதி வரை ரத்தம் பீறிட்டது. அதையும் பொருட்படுத்தாமல், கைகளை நீட்டி, ''தலைவா,! போயிட்டியா... நீ போயிட்டியா...'' என்று கதறியபடி மீண்டும் முன்னேற முயன்றார். அவரைத் தடுத்த காவலர்களின் காக்கி யூனிஃபார்மிலும் ரத்தக் கறை படிந்தது.

- தொடரும்!

நன்றி : ஜூனியர்விகடன்-20-04-2011

72 comments:

  1. அண்ணே பேசாம ஜீனியர் விகடனுக்கு login id, password கொடுத்தா புண்ணியமாப் போகும்

    ReplyDelete
  2. கானா பிரபா

    கலவரத்துலயும் ஒரு கிளுகிளுப்புய்யா ஒனக்கு.... (சொம்மா டமாஸ்....)

    ReplyDelete
  3. இது உனக்கே கொஞ்சம் ஓவரா இல்ல...எம்.ஜி.ஆர்தான் இருந்ததிலேயே மகாகேவலமான அரசியல்வாதி. பல கேவலமான விஷயங்கள் சினிமாவிலும், அரசியலிலும் அரங்கேறியது எம்.ஜி.ஆர் என்னும் ஒரு முட்டாள் செய்த வினையால், அவரால் இன்னும் அந்த பாதிப்பு அகலவில்லை.

    பின் குறிப்பு. நான் தி.மு.க-காரன் அல்ல.

    ReplyDelete
  4. யோவ் சாரு புழிஞ்சதா!
    எம்.ஜி.ஆர் இறந்து எத்தனை வருடங்களானாலும் இன்னும் அவர் புகழ் மறையவில்லை இனி மறையப்போவதுமில்லை. அப்படிப்படிட்ட மனிதரைப் போய் கேவலமான அரசியல்வாதின்னு சொல்ற நீ நிச்சயம் நல்ல பிறப்பா இருக்கமாட்ட அரசியல்ல யாருதான் தப்பு செய்யல உங்க தலைவன் செய்யாத தப்பு தண்டவாளங்களா. நீயெல்லாம் கருத்துச்சொல்றன்னு இங்க வந்து வாங்கிகட்டிக்காதே போய்யா! கோவத்துல இன்னும் என்னென்னவோ எழுதவருது. சாக்கடையில் கல்லைவிட வேண்டாம்னு யோசிக்கிறேன்.

    பின்குறிப்பு நான் அ.தி.மு.க-காரன் இல்ல.

    ReplyDelete
  5. last two months your article are very Hot and more informative.

    Now it is seems become Too much.

    Election Over ..

    Provide some lighter article like Movie review , Book Review etc.

    ReplyDelete
  6. இன்றைய செய்தி : இந்திய மீனவர் சாவுக்காக தங்கபாலு இலங்கை தூதரகம் முன்பு போராட்டம் நடத்தினர் என்று கூறி கைது செய்திருக்கிறது போலீஸ்!

    தங்கபாலு : "ஹேய்..நானும் ரவுடிதான்! ஜெயிலுக்குப்போறேன்.. ஜெயிலுக்குப்போறேன்..!!!"

    கருணாநிதி (மனதிற்குள்) : அடேங்கப்பா...! இராஜதந்திரத்தைக் கரைத்துக் குடித்திருக்கிறானே இவன். நம்மையே மிஞ்சிருவான் போலருக்கே!

    ReplyDelete
  7. மணி அண்ணே .......சரியாய் சொன்னீங்க, பின்குறிப்பு நானும் அ.தி.மு.க-காரன் இல்ல.

    ReplyDelete
  8. //Provide some lighter article like Movie review , Book Review etc.//

    மே 13ம் தேதி வரைக்கும் அண்ணன் விரதம்:)நீங்க அப்புறமா வாங்க!

    ReplyDelete
  9. உண்மை நண்பா. எம்ஜியார் நூற்று ஐம்பது வருடங்கள் உயிரோடு இருந்து இருந்தாலும் அவர் தான் நிரந்தர முதல்வர். இதில் எவருக்கும் மாற்று கருத்து இருக்காது என்று நினைக்கிறேன். கருணாநிதி குடும்பம் இந்நேரம் பழ வியாபாரம் அல்லது பூ வியாபாரம் செய்து கொண்டு இருந்து இருக்கும். சாறு புளிச்சதா சொன்னது போல் சீக்கிரம் இறந்து போய் கண்ட கருமாந்திரம் எல்லாம் நம்ம சங்க அறுக்க வந்து இருக்காது.

    ReplyDelete
  10. இருபது வருடங்களுக்கு முன் நடந்ததை எழுதி இருந்தாலும் அதை இப்பொழுது படிக்கும் போது கண்களில் நீர் தளும்புகிறது சார்.

    ReplyDelete
  11. தங்கபாலு : "ஹேய்..நானும் ரவுடிதான்! ஜெயிலுக்குப்போறேன்.. ஜெயிலுக்குப்போறேன்..!!!"

    கருணாநிதி (மனதிற்குள்) : அடேங்கப்பா...! இராஜதந்திரத்தைக் கரைத்துக் குடித்திருக்கிறானே இவன். நம்மையே மிஞ்சிருவான் போலருக்கே


    ரிஷி சப்தம் போட்டு சிரித்து விட்டேன்.

    ReplyDelete
  12. எம்.ஜி.ஆர் ஒரு நல்ல முதல்வராகவே இருந்திருக்கட்டுமே, ஒரு முதல்வராக கடமையை சரியாக செய்த நல்ல மனிதர் என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல். அவரின் இறந்த தின நிகழ்வுகளை விவரிக்கின்றேன் என்று அவருக்காக ஒருவர் தலையை உடைத்துக் கொண்டார் ஜெயலலிதா எங்கோ வெறித்துப் பார்தபடி நின்றார், மக்கள் மார்பிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுதார்கள் என்று எம்.ஜி.ஆரை எதோ ஒரு அவதார புருசராக சித்தரிக்கும் ஒரு கட்டுரையை இங்கு வெட்டி ஒட்டி உள்ளீர்களே உங்களுக்கும்!

    மக்கள் வரி பணத்திலும் மாநில அடிப்படை வளர்ச்சி பணிகளுக்காக வாங்கப்படும் கடனிலும் இலவச தொலைகாட்சி ஒரு ரூபாய் அரிசி வழங்கும் கருணாநியை வள்ளளே தள்ளளே என்று புகழ்பாடும் அப்பாவி தொண்டனுக்கும் எதாவது வித்தியாசம் உள்ளதா?

    ReplyDelete
  13. [[[கானா பிரபா said...

    அண்ணே பேசாம ஜீனியர் விகடனுக்கு login id, password கொடுத்தா புண்ணியமாப் போகும்.]]]

    ஆசை, தோசை, அப்பளம், வடை..! நானென்ன அவ்ளோ இளிச்சவாய தமிழனா..? முடியாது தம்பி..!

    ReplyDelete
  14. [[[R.Gopi said...

    கானா பிரபா

    கலவரத்துலயும் ஒரு கிளுகிளுப்புய்யா ஒனக்கு.(சொம்மா டமாஸ்....)]]]

    பயபுள்ளை.. என்னாம்மா கலாய்க்குது பாருங்க..!

    ReplyDelete
  15. [[[சாரு புழிஞ்சதா said...

    இது உனக்கே கொஞ்சம் ஓவரா இல்ல. எம்.ஜி.ஆர்.தான் இருந்ததிலேயே மகா கேவலமான அரசியல்வாதி. பல கேவலமான விஷயங்கள் சினிமாவிலும், அரசியலிலும் அரங்கேறியது எம்.ஜி.ஆர் என்னும் ஒரு முட்டாள் செய்த வினையால்... அவரால் இன்னும் அந்த பாதிப்பு அகலவில்லை.

    பின் குறிப்பு. நான் தி.மு.க-காரன் அல்ல.]]]

    உமது கருத்துக்கு ரொம்ப சந்தோஷம்..! உங்களை மாதிரியும் நினைத்துக் கொள்ளும் சிலரும் இந்தச் சமுதாயத்தில் இருப்பதைப் பார்த்தால் நமக்கு விமோசனமில்லை என்றே தோன்றுகிறது..!

    ReplyDelete
  16. [[[MANI said...

    யோவ் சாரு புழிஞ்சதா!
    எம்.ஜி.ஆர் இறந்து எத்தனை வருடங்களானாலும் இன்னும் அவர் புகழ் மறையவில்லை இனி மறையப் போவதுமில்லை. அப்படிப்படிட்ட மனிதரைப் போய் கேவலமான அரசியல்வாதின்னு சொல்ற நீ நிச்சயம் நல்ல பிறப்பா இருக்க மாட்ட.. அரசியல்ல யாருதான் தப்பு செய்யல உங்க தலைவன் செய்யாத தப்பு தண்டவாளங்களா. நீயெல்லாம் கருத்துச் சொல்றன்னு இங்க வந்து வாங்கி கட்டிக்காதே போய்யா! கோவத்துல இன்னும் என்னென்னவோ எழுத வருது. சாக்கடையில் கல்லைவிட வேண்டாம்னு யோசிக்கிறேன்.

    பின் குறிப்பு : நான் அ.தி.மு.க-காரன் இல்ல.]]]

    விடுங்க மணி.. அவருக்குத் தெரிஞ்சது அவ்ளோதான்..!

    ReplyDelete
  17. [[[muthukumar said...

    last two months your article are very Hot and more informative. Now it is seems become Too much. Election Over.. Provide some lighter article like Movie review , Book Review etc.]]]

    கொஞ்சம், கொஞ்சமா வரும் முத்துக்குமார்..! வெயிட் பண்ணுங்க..!

    ReplyDelete
  18. [[[ரிஷி said...

    இன்றைய செய்தி : இந்திய மீனவர் சாவுக்காக தங்கபாலு இலங்கை தூதரகம் முன்பு போராட்டம் நடத்தினர் என்று கூறி கைது செய்திருக்கிறது போலீஸ்!

    தங்கபாலு : "ஹேய்..நானும் ரவுடிதான்! ஜெயிலுக்குப் போறேன்.. ஜெயிலுக்குப் போறேன்..!!!"

    கருணாநிதி (மனதிற்குள்) : அடேங்கப்பா.! இராஜதந்திரத்தைக் கரைத்துக் குடித்திருக்கிறானே இவன். நம்மையே மிஞ்சிருவான் போலருக்கே!]]]

    ஹா.. ஹா.. செம ஹாட்டான, டைமிங்கான காமெடி இது..! உண்மையில் யார் எழுதியது என்று தெரியவில்லை..! அவருக்கு எனது வாழ்த்துகள்..!

    ReplyDelete
  19. [[[பாலா said...

    மணி அண்ணே சரியாய் சொன்னீங்க, பின்குறிப்பு நானும் அ.தி.மு.க-காரன் இல்ல.]]]

    ஓகே பாலா.. நானும் அ.தி.மு.க.காரன் இல்லை..!

    ReplyDelete
  20. [[[ராஜ நடராஜன் said...

    //Provide some lighter article like Movie review , Book Review etc.//

    மே 13-ம் தேதிவரைக்கும் அண்ணன் விரதம்:) நீங்க அப்புறமா வாங்க!]]]

    அதுக்குள்ளயே ஏதாவது எழுதிர்றேன் ஸார்..!

    ReplyDelete
  21. [[[anban said...

    உண்மை நண்பா. எம்ஜியார் நூற்று ஐம்பது வருடங்கள் உயிரோடு இருந்து இருந்தாலும் அவர்தான் நிரந்தர முதல்வர். இதில் எவருக்கும் மாற்று கருத்து இருக்காது என்று நினைக்கிறேன்.

    கருணாநிதி குடும்பம் இந்நேரம் பழ வியாபாரம் அல்லது பூ வியாபாரம் செய்து கொண்டு இருந்து இருக்கும்.

    சாறு புளிச்சதா சொன்னது போல் சீக்கிரம் இறந்து போய் கண்ட கருமாந்திரம் எல்லாம் நம்ம சங்க அறுக்க வந்து இருக்காது.]]]

    ம்.. சரியாச் சொன்னீங்க பாஸ்..! நன்றி..!

    ReplyDelete
  22. [[[சசிகுமார் said...

    இருபது வருடங்களுக்கு முன் நடந்ததை எழுதி இருந்தாலும் அதை இப்பொழுது படிக்கும்போது கண்களில் நீர் தளும்புகிறது சார்.]]]

    இதுதான் உள்ளுணர்வு..! இனம் புரியாத பாசம், எம்.ஜி.ஆர். மீது அனைவருக்குமே உண்டு..!

    ReplyDelete
  23. [[[ஜோதிஜி said...

    தங்கபாலு : "ஹேய்..நானும் ரவுடிதான்! ஜெயிலுக்குப்போறேன்.. ஜெயிலுக்குப்போறேன்..!!!"

    கருணாநிதி (மனதிற்குள்) : அடேங்கப்பா...! இராஜதந்திரத்தைக் கரைத்துக் குடித்திருக்கிறானே இவன். நம்மையே மிஞ்சிருவான் போலருக்கே

    ரிஷி சப்தம் போட்டு சிரித்து விட்டேன்.]]]

    நானும்தான் ஜோதிஜியாரே..!

    ReplyDelete
  24. [[[uaetamilan said...

    எம்.ஜி.ஆர் ஒரு நல்ல முதல்வராகவே இருந்திருக்கட்டுமே, ஒரு முதல்வராக கடமையை சரியாக செய்த நல்ல மனிதர் என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல். அவரின் இறந்த தின நிகழ்வுகளை விவரிக்கின்றேன் என்று அவருக்காக ஒருவர் தலையை உடைத்துக் கொண்டார் ஜெயலலிதா எங்கோ வெறித்துப் பார்தபடி நின்றார், மக்கள் மார்பிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுதார்கள் என்று எம்.ஜி.ஆரை எதோ ஒரு அவதார புருசராக சித்தரிக்கும் ஒரு கட்டுரையை இங்கு வெட்டி ஒட்டி உள்ளீர்களே உங்களுக்கும்!
    மக்கள் வரி பணத்திலும் மாநில அடிப்படை வளர்ச்சி பணிகளுக்காக வாங்கப்படும் கடனிலும் இலவச தொலைக்காட்சி ஒரு ரூபாய் அரிசி வழங்கும் கருணாநிதியை வள்ளளே தள்ளளே என்று புகழ் பாடும் அப்பாவி தொண்டனுக்கும் எதாவது வித்தியாசம் உள்ளதா?]]]

    இதிலென்ன தவறு இருக்கிறது..? எனது அபிமானத்துக்குரிய ஒருவர் இறந்து போயிருக்கிறார். அவர் இறந்தது பற்றி நான் நினைத்துப் பார்க்கிறேன். அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..! எனக்கும், அவருக்குமான பாசத்திற்கு எல்லைக்கோட்டை எப்படி நீங்கள் தீர்மானிக்க முடியும்..?

    ReplyDelete
  25. //ஹா.. ஹா.. செம ஹாட்டான, டைமிங்கான காமெடி இது..! உண்மையில் யார் எழுதியது என்று தெரியவில்லை..! அவருக்கு எனது வாழ்த்துகள்..!//

    அண்ணே! நானேதான் எழுதினது. அந்த செய்தியைப் படிச்சதும் வடிவேலு போலீஸ் வண்டில ஏறினதுதான் ஞாபகம் வந்துச்சு. பட்டுனு எழுதிட்டேன். தங்கபாலு எடத்துல வடிவேலுவ ஃபிட் பண்ணி பாருங்க.. தலைநகரத்து காமெடி வசனங்கள் இம்மி பிசகாம தங்கபாலுவுக்கு பொருந்தும்.

    ReplyDelete
  26. ///ஜோதிஜி said...

    தங்கபாலு : "ஹேய்..நானும் ரவுடிதான்! ஜெயிலுக்குப்போறேன்.. ஜெயிலுக்குப்போறேன்..!!!"

    கருணாநிதி (மனதிற்குள்) : அடேங்கப்பா...! இராஜதந்திரத்தைக் கரைத்துக் குடித்திருக்கிறானே இவன். நம்மையே மிஞ்சிருவான் போலருக்கே


    ரிஷி சப்தம் போட்டு சிரித்து விட்டேன்.///

    நன்றி ஜோதிஜி.

    ReplyDelete
  27. //கானா பிரபா said...

    அண்ணே பேசாம ஜீனியர் விகடனுக்கு login id, password கொடுத்தா புண்ணியமாப் போகும்.. //

    அதுவே என் கோரிக்கையும் !

    ReplyDelete
  28. ஒரு மாமனிதரை கேவலமாக விமர்ச்சிக்கும் பின்னுட்டத்தை தயவு செய்து தூக்கி விடுங்கள் உ.த அண்ணே..

    ReplyDelete
  29. This comment has been removed by the author.

    ReplyDelete
  30. உ.த. தம்பி,

    இது என்ன விளையாட்டுன்னு புரியலை. விகடன் குழுமத்தினரின் அச்சு ஊடகங்களிலிருந்து எடுத்து உங்கள் பதிவுகளில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

    1. அதற்கான உரிய அனுமதியைப் பெற்றீர்களா? அல்லது அந்த பத்திரிகைகளில் எழுதுவது நீங்கள் தானா?

    2. தமிழறிவும் கற்பனையும் இல்லாதவர் இல்லை நீங்கள். இந்த எழுத்துகள் உங்களுக்குச் சொந்தமில்லாத பட்சத்தில், இப்படி காப்பி செய்து வெளியிடுவதற்குக் காரணம், உங்கள் பதிவுகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கை மெயின்டெயின் செய்யவா?

    வருத்தத்துடன்,
    கெபி.

    ReplyDelete
  31. சாரு புழிஞ்சதா said...
    இது உனக்கே கொஞ்சம் ஓவரா இல்ல...எம்.ஜி.ஆர்தான் இருந்ததிலேயே மகாகேவலமான அரசியல்வாதி. பல கேவலமான விஷயங்கள் சினிமாவிலும், அரசியலிலும் அரங்கேறியது எம்.ஜி.ஆர் என்னும் ஒரு முட்டாள் செய்த வினையால், அவரால் இன்னும் அந்த பாதிப்பு அகலவில்லை.

    பின் குறிப்பு. நான் தி.மு.க-காரன் அல்ல.////////



    இந்த டோன் ல பேரு வச்சவேன்னெல்லாம் _________________________ fill up the blanks

    ReplyDelete
  32. [[[ரிஷி said...

    //ஹா.. ஹா.. செம ஹாட்டான, டைமிங்கான காமெடி இது..! உண்மையில் யார் எழுதியது என்று தெரியவில்லை..! அவருக்கு எனது வாழ்த்துகள்..!//

    அண்ணே! நானேதான் எழுதினது. அந்த செய்தியைப் படிச்சதும் வடிவேலு போலீஸ் வண்டில ஏறினதுதான் ஞாபகம் வந்துச்சு. பட்டுனு எழுதிட்டேன். தங்கபாலு எடத்துல வடிவேலுவ ஃபிட் பண்ணி பாருங்க. தலைநகரத்து காமெடி வசனங்கள் இம்மி பிசகாம தங்கபாலுவுக்கு பொருந்தும்.]]]

    ரிஷி.. சூப்பர்ப்..! பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  33. [[[கிருஷ்குமார் said...

    //கானா பிரபா said...

    அண்ணே பேசாம ஜீனியர் விகடனுக்கு login id, password கொடுத்தா புண்ணியமாப் போகும்.. //

    அதுவே என் கோரிக்கையும்!]]]

    ம்.. இப்படி எத்தனை பேர் கிளம்பியிருக்கீங்க..?

    ReplyDelete
  34. [[[மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

    ஒரு மாமனிதரை கேவலமாக விமர்சிக்கும் பின்னுட்டத்தை தயவு செய்து தூக்கி விடுங்கள் உ.த அண்ணே..]]]

    இருந்துட்டுப் போகுது விடுங்க. அப்பத்தான அவங்களை பத்தியும் நாலு பேர் தெரிஞ்சுக்குவாங்க..!

    ReplyDelete
  35. [[[கெக்கே பிக்குணி said...

    உ.த. தம்பி, இது என்ன விளையாட்டுன்னு புரியலை. விகடன் குழுமத்தினரின் அச்சு ஊடகங்களிலிருந்து எடுத்து உங்கள் பதிவுகளில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

    1. அதற்கான உரிய அனுமதியைப் பெற்றீர்களா? அல்லது அந்த பத்திரிகைகளில் எழுதுவது நீங்கள்தானா?]]]

    எக்கோவ்.. நோ பிராப்ளம்.. நான் எந்த முன் அனுமதியையும் வாங்கவில்லை..! இதனை வேறொரு பத்திரிகையில் பயன்படுத்தினால்தான் குற்றமாகச் சொல்வார்கள். நம்முடைய வலைத்தளங்களை இன்னமும் அவர்கள் வர்த்தக சந்தையாக நினைக்கவில்லை. ஆகவேதான் நான் பயன்படுத்தி வருகிறேன்..! ஆனாலும் கீழே நன்றி அவர்களுக்குத்தானே கொடுக்கிறேன். அவர்கள் புரிந்து கொள்வார்கள்..!

    [[[2. தமிழறிவும் கற்பனையும் இல்லாதவர் இல்லை நீங்கள். இந்த எழுத்துகள் உங்களுக்குச் சொந்தமில்லாத பட்சத்தில், இப்படி காப்பி செய்து வெளியிடுவதற்குக் காரணம், உங்கள் பதிவுகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கை மெயின்டெயின் செய்யவா?
    வருத்தத்துடன்,
    கெபி.]]]

    எக்கோவ்.. எம்புட்டுத்தான் தமிழ் அறிவு இருந்தாலும் இந்த பத்திரிகை அறிவுன்னு ஒண்ணு இருக்கே.. அது நமக்கு இருக்கணுமே.

    நாட்டுக்குத் தேவையான செய்திகளை நான் படித்ததோடு இல்லாமல் படிக்க இயலாதவர்களும் படிக்கின்றவகையில்தான் இதனை எடுத்துப் போடுகிறேன். இதில் ஒன்றும் தப்பில்லை. ஸ்பெக்ட்ரம் விவகாரமெல்லாம் நான் தனியே செய்வதற்கு சான்ஸே இல்லை. இது போன்ற பத்திரிகைகளில் படித்தால்தான் உண்டு. அதனால்தான் எடுத்தாள்கிறேன்.. நோ பிராப்ளம்.. இடையிடையே எனது சொந்த சரக்கையும் இனிமேல் எழுதுகிறேன். கோபிக்க வேண்டாம்..!

    ReplyDelete
  36. [[[பனங்காட்டு நரி said...

    சாரு புழிஞ்சதா said...
    இது உனக்கே கொஞ்சம் ஓவரா இல்ல. எம்.ஜி.ஆர்தான் இருந்ததிலேயே மகாகேவலமான அரசியல்வாதி. பல கேவலமான விஷயங்கள் சினிமாவிலும், அரசியலிலும் அரங்கேறியது எம்.ஜி.ஆர் என்னும் ஒரு முட்டாள் செய்த வினையால், அவரால் இன்னும் அந்த பாதிப்பு அகலவில்லை.

    பின் குறிப்பு. நான் தி.மு.க-காரன் அல்ல.////////

    இந்த டோன்-ல பேரு வச்சவேன்னெல்லாம் _________________________ fill up the blanks]]]

    கோபம் வேண்டாம் நரி ஸார்..! ஆதரவாளர்கள் இருக்கின்றபோது எதிர்ப்பாளரும் இருக்கத்தான் செய்வார்கள். இதுதான் உலகம். வேறு வழியில்லை..! எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்..!

    ReplyDelete
  37. சாரு புழிஞ்சுதா சொன்னது நூத்துல ஒரு வார்த்தை. அது புரியலையா உ.த.

    ReplyDelete
  38. //இதிலென்ன தவறு இருக்கிறது..? எனது அபிமானத்துக்குரிய ஒருவர் இறந்து போயிருக்கிறார். அவர் இறந்தது பற்றி நான் நினைத்துப் பார்க்கிறேன். அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..! எனக்கும், அவருக்குமான பாசத்திற்கு எல்லைக்கோட்டை எப்படி நீங்கள் தீர்மானிக்க முடியும்..?//

    உண்மைத்தமிழன் அண்ணே> எம்.ஜி.ஆர் மீது தாரளமாக பாசம்வையுங்கள் ஆனால் அதை புகழ்ச்சியாக வெளிபடுத்துவதில் ஒரு எல்லை வையுங்கள் அப்படி இல்லையென்றால் பொதுவாழ்வில் ஈடுபடும் ஒருவரை வழிதவற செய்ததற்கு நீங்களும் ஒரு காரணம் ஆகிவிடுவீர்கள். எம்.ஜி.ஆர் இங்கு மரணித்துவிட்டாலும் உயிரோடு இருக்கும் பலருக்கு இது பொருந்தும் உதாரணத்திற்க்கு காவல் நிலையம் சென்று புகார் செய்யும் ஒருவரின் புகாரை விசரித்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது அங்கு வேலை செய்யும் காவலர்களின் கடமை ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது நீங்கள் காந்தியே ஆனாலும் காவல் நிலையம் சென்றால் கைகளை கட்டிக்கொண்டும் பம்மிக் கொண்டும் அந்த பன்னாடைகளை ஐயா என்றும் கூப்பிட வேண்டும் இல்லையேன்றால் தேவையில்லாத அலைச்சலுக்கு உள்ளாக்கப்படுவீர்கள் காரணம் என்றோ ஒரு உ.தா அவர்களுக்கு இந்தப் புகழ்ச்சிகளை பழக்கப்படுத்தி விட்டது தான். காவல் நிலையம் மட்டுமல்ல பல அரசு அலுவகங்களிலும் இதுதான் நிலைமை> லஞ்சம் கொடுப்பது என்றாலும் பம்மிக்கொண்டுதான் கொடுக்கவேண்டும். எல்லையற்ற இந்த புகழ்ச்சிதான் தமிழ்நாட்டில் இன்ற பல கதாநாயகர்களை நாளைய முதல்வர் கனவில் மிதக்க வைத்துள்ளது இதையேல்லாம் விடுங்கண்ணே இன்றைக்கு அரசியல்வாதிகள் இந்த ஆட்டம் போடுவதற்க்கு பணம் மட்டும்தான் காரணம் என்று நினைக்கின்றீர்களா எல்லையற்ற இந்த புகழ்ச்சிதாருகிற பேதை அப்படி ஒரு போதையை நீங்களே கொடுக்க கூடாதுண்ணே. கடைசியாக நீங்கள் ஒரு பதிவிற்க்கு எழுதி பிண்ணுட்டத்தை வெட்டி ஒட்டியுள்ளேன்

    //இங்கே வலையுலகத்தில் கருத்துப் பரிமாற்றம் செய்து ஒருவரின் அடிப்படை குணங்களைத் திருத்திவிடுவது என்பது இயலாத காரியம்..//

    ReplyDelete
  39. uaetamilan.

    romba correct.

    U have pointed at the basic tragedy of all Tamilians. Slavish minds.

    Thank you

    ReplyDelete
  40. எம்.ஜியார் நல்ல நிர்வாகியோ இல்லையோ அது விவாதத்துக்குரியது.

    ஆனா, நல்ல மனுஷன். ஊரை அடிச்சி உலையில போட்டான், மிரட்டி தன் புள்ளைங்க படத்துல நடிக்க வச்சான், ஊருக்கு முன்னாடி நாடகம் ஆடி தன் குடும்பதை மேல தூக்கி விட்டான்ன்னு எந்த புகாரும் இல்லை. முடிஞ்ச அளவு மக்களுக்கு ஹெல்ப் பண்ணனும்னு தான் பார்த்தாரு.

    கட்டுமானம் செய்யலை, எதிர்கால திட்டமிடல் செய்யலைன்னு சொல்றவங்க, 1980ல அரசியல், இந்திய பொருளாதாரம் எப்படி இருந்ததுன்னு யோசிச்சி பார்க்கணும். இந்திரா காந்தி செண்ட்ரல்ல முழு மெஜாரிட்டியோட ஆட்சி செஞ்ச டைம். காங்கிரஸுக்கு மாற்றுன்னு எதுவும் இல்லை.

    யாரு சேறு அள்ளி போட்டாலும், சாகற வரை சிங்கமா இருந்துட்டு, சிங்கமாவே செத்தான் அந்த மனுஷன். இன்னைக்கும் அவன் பேரை சொல்லித் தான் ஓட்டு வாங்கறாங்க. இது ஒன்னு போறும். அவன் பேரை சொல்ல!

    ReplyDelete
  41. [[[jaisankar jaganathan said...

    சாரு புழிஞ்சுதா சொன்னது நூத்துல ஒரு வார்த்தை. அது புரியலையா உ.த.]]]

    இல்லை. இது அவருடைய கருத்து.. என்ன காரணம்.. என்ன ஆதாரம் என்றெல்லாம் சொல்லாமல் அவருக்குப் பிடிக்கவில்லை என்கிற காரணத்துக்காக எம்.ஜி.ஆர். மீது பழி போடுகிறார்..!

    ReplyDelete
  42. uaetamilan ஸார்..

    எம்.ஜி.ஆருக்கு ஜூ.வி. செய்திருப்பது எல்லையற்ற புகழ்ச்சியல்ல. அவர் இறந்த அன்று என்ன நடந்தது என்பதைத்தான் பதிவு செய்திருக்கிறது.. இதையும் செய்யக் கூடாது என்றால் எப்படி..?

    எனக்கு எம்.ஜி.ஆரை பிடிக்குமென்றால் அதற்குக் காரணம், அவருடைய ஈகை தன்மை. கொடைத்தனம்..! மன்னிக்கும் இயல்பு.. இதுதான் எனக்கு அவரிடத்தில் நிரம்பப் பிடித்தது..! இது ஒன்றுக்காகவே அவரை நான் புகழ்கிறேன்..!

    ReplyDelete
  43. [[[simmakkal said...

    uaetamilan. romba correct. U have pointed at the basic tragedy of all Tamilians. Slavish minds. Thank you]]]

    ஹா.. ஹா.. ஹா.. நாங்கள் அடிமைகள் மனோநிலையில் இல்லை நண்பரே..! உதவி செய்தவரை நினைத்துப் பார்க்கும் சாதாரண பாமர புத்தியில்தான் பேசுகிறோம்..!

    ReplyDelete
  44. [[[அது சரி(18185106603874041862) said...

    யாரு சேறு அள்ளி போட்டாலும், சாகறவரை சிங்கமா இருந்துட்டு, சிங்கமாவே செத்தான் அந்த மனுஷன். இன்னைக்கும் அவன் பேரை சொல்லித்தான் ஓட்டு வாங்கறாங்க. இது ஒன்னு போறும். அவன் பேரை சொல்ல!]]]

    மிக்க நன்றிகள் ஸார்..!

    ReplyDelete
  45. Charu Puzhinchatha sonathula enna thaappu ? Innum 100 yrs kalichu Kalingar a kadavul aakiduvaanga..TamilNadu oda dark age MGR period thaan ...

    ReplyDelete
  46. இப்பவாவது முழித்துகொள். நீ நிச்சயமா நல்ல குடும்பத்தில், அறிவுதளத்தில் யோசிக்கும் குடும்பத்தில் போறதிருக்க மாட்டே. உன்னை போல அடிமைகளை திருத்தவே முடியாது. உனக்கு சொல்லி புரியவைக்கவும் முடியாது. எம்.ஜி.ஆர் புகழ் வெறும் சினிமா புகழ். போய் தியோட்டர் பாஸ்கரன் எழுதிய ' எம் தமிழர் செய்த படம்' வாங்கி படி, பிறகு
    The Image Trap: M G Ramachandran in Film and Politics தேடி கண்டுபிடுச்சி படி. நீ நிச்சயமா செய்யமாட்டே...எவனாவது 'நான் ஏன் பிறந்தேன்' என்று எம். ஜி.ஆர் பெயரில் ஆவி எழுத்தாளராக எழுதுவானுங்க, அத வாங்கி படிச்சு முட்டாளாவே வாழ்ந்து தொலை.

    ReplyDelete
  47. எம்.ஜி.ஆர் என்றுமே ஒரு நல்ல மனிதனாக வாழ்த்து கிடையாது. அது சினிமா மற்றும் அரசியலில் இருக்கும் எல்லாருக்கும் தெரியும், முக்கியமாக ரஜினிக்கு தெரியும். அந்த அளவுக்கு ஒரு முதலாளி, வெறும் முதலாளி அல்ல ரவுடி முதலாளி. எம்.ஜி.ஆரை எதிர்த்த ஒரே ஆண்மகன் எம்.ஆர். ராதா. இது சரித்தரம். எம்.ஜி.ஆரின் வாழ்கை ஒரு இருண்ட உலகம். கொலை, கொள்ளை மற்றும் பல வேசிதனங்கள் உடைய வாழ்க்கை. வெறுமன அவர் படத்தை பார்த்து 'எம்.ஜி.ஆர்' பெரிய இவுரு, தெரியுமா, உனக்கு' என்பது போல பேசுபவர்களை பார்த்தால், இந்த தமிழ் மாநிலம் இன்னும் சினிமாவின் சூப்பர் மேன் ஒளி வட்டத்தில் இருந்து இன்னும் வெளியே வரவே இல்லை என்று அப்பட்டமாக தெரிகிறது. எம்.ஜி.ஆர் என்றுமே ஒரு நல்ல அரசியல்வாதியாக நடந்து கொண்டதில்லை. அவரிடம் இருந்த ஒரு ஆயுதம் 'அண்ணா வழி வந்த ஒரு பாமரர்' மற்றும் தன்னை ஒரு பாச தலைவனாக ஒரு இமேஜ் உருவாகியது. எத்தனை பேர் கடுமையாக உழைத்திருக்கிறார்கள் தெரியுமா வெறும் அவருடைய இமேஜ் manipulation செய்வதருக்கு, அவர்களுக்கு லட்சகணக்கான பணத்தை அள்ளி இறைத்திருக்கிறார். அதனோடு ஒப்பிட்டால், நீங்கள் சொல்லும் அந்த 'ஏழை கொடையாளி' பணமெல்லாம் ஜுஜுபி.

    ReplyDelete
  48. "நாராயணன் கிருஷ்ணன்" பற்றி யாராவது கேள்விப்பட்டதுண்டா? எம்.ஜி.ஆர் போன்ற வகையாறாக்கள் எல்லாம் அவர் கால்தூசிக்கு சமம்.

    ReplyDelete
  49. [[[Ramesh said...

    Charu Puzhinchatha sonathula enna thaappu? Innum 100 yrs kalichu Kalingar a kadavul aakiduvaanga. TamilNadu oda dark age MGR periodthaan.]]]

    நீங்கள் புரிந்து கொண்டது அவ்வளவுதான்..!

    ReplyDelete
  50. [[[சாரு புழிஞ்சதா said...

    இப்பவாவது முழித்து கொள். நீ நிச்சயமா நல்ல குடும்பத்தில், அறிவுதளத்தில் யோசிக்கும் குடும்பத்தில் போறதிருக்க மாட்டே. உன்னை போல அடிமைகளை திருத்தவே முடியாது. உனக்கு சொல்லி புரிய வைக்கவும் முடியாது. எம்.ஜி.ஆர் புகழ் வெறும் சினிமா புகழ். போய் தியோட்டர் பாஸ்கரன் எழுதிய ' எம் தமிழர் செய்த படம்' வாங்கி படி, பிறகு The Image Trap: M G Ramachandran in Film and Politics தேடி கண்டுபிடுச்சி படி. நீ நிச்சயமா செய்யமாட்டே. எவனாவது 'நான் ஏன் பிறந்தேன்' என்று எம். ஜி.ஆர் பெயரில் ஆவி எழுத்தாளராக எழுதுவானுங்க, அத வாங்கி படிச்சு முட்டாளாவே வாழ்ந்து தொலை.]]]

    சரி.. உங்க ஆசீர்வாதம்.. நான் முட்டாளாகவே இருந்து தொலைகிறேன். நீங்கள் மிகச் சிறந்த அறிவாளியாகவே இருந்துவிடுங்கள்..!

    ReplyDelete
  51. [[[சாரு புழிஞ்சதா said...

    எம்.ஜி.ஆர் என்றுமே ஒரு நல்ல மனிதனாக வாழ்த்து கிடையாது. அது சினிமா மற்றும் அரசியலில் இருக்கும் எல்லாருக்கும் தெரியும், முக்கியமாக ரஜினிக்கு தெரியும். அந்த அளவுக்கு ஒரு முதலாளி, வெறும் முதலாளி அல்ல ரவுடி முதலாளி. எம்.ஜி.ஆரை எதிர்த்த ஒரே ஆண்மகன் எம்.ஆர். ராதா. இது சரித்தரம். எம்.ஜி.ஆரின் வாழ்கை ஒரு இருண்ட உலகம். கொலை, கொள்ளை மற்றும் பல வேசிதனங்கள் உடைய வாழ்க்கை. வெறுமன அவர் படத்தை பார்த்து 'எம்.ஜி.ஆர்' பெரிய இவுரு, தெரியுமா, உனக்கு' என்பது போல பேசுபவர்களை பார்த்தால், இந்த தமிழ் மாநிலம் இன்னும் சினிமாவின் சூப்பர் மேன் ஒளி வட்டத்தில் இருந்து இன்னும் வெளியே வரவே இல்லை என்று அப்பட்டமாக தெரிகிறது. எம்.ஜி.ஆர் என்றுமே ஒரு நல்ல அரசியல்வாதியாக நடந்து கொண்டதில்லை. அவரிடம் இருந்த ஒரு ஆயுதம் 'அண்ணா வழி வந்த ஒரு பாமரர்' மற்றும் தன்னை ஒரு பாச தலைவனாக ஒரு இமேஜ் உருவாகியது. எத்தனை பேர் கடுமையாக உழைத்திருக்கிறார்கள் தெரியுமா வெறும் அவருடைய இமேஜ் manipulation செய்வதருக்கு, அவர்களுக்கு லட்சகணக்கான பணத்தை அள்ளி இறைத்திருக்கிறார். அதனோடு ஒப்பிட்டால், நீங்கள் சொல்லும் அந்த 'ஏழை கொடையாளி' பணமெல்லாம் ஜுஜுபி.]]]

    அப்பப்பா.. எவ்ளோ பெரிய அறிவாளி நீங்க..? இத்தனை நாளா எனக்குத் தெரியாம போச்சு பாருங்க..!

    ReplyDelete
  52. [[[சாரு புழிஞ்சதா said...

    "நாராயணன் கிருஷ்ணன்" பற்றி யாராவது கேள்விப்பட்டதுண்டா? எம்.ஜி.ஆர் போன்ற வகையாறாக்கள் எல்லாம் அவர் கால்தூசிக்கு சமம்.]]]

    ச்சே.. எம்மாம் பெரிய கண்டுபிடிப்பு.. நீங்க பெரிய வரலாற்று ஆய்வாளரா பேரெடுக்கலாம்..! இது மாதிரியே இன்னும் நிறைய முயற்சி பண்ணுங்க.. பொழைச்சுக்கலாம்..!

    ReplyDelete
  53. நானும் ஜு.வில படிச்சேன்...

    ReplyDelete
  54. அண்ணே அந்த சாரு புளிச்சதா! வாய் புளிச்சதான்னு!! தெரியாம எழுதிகிட்டு போறார் விடுங்க!

    அவருக்கு நான் சொல்வதெல்லாம் எம்.ஜி.ஆர். பற்றி இங்கு மற்றவர்கள் எழுதியது அவருக்கு புரியாமல் இல்லை புரிந்தும் ஏதோ அறிவுப்பூர்வமா எழுதறதா நினைச்சு ஒரு மாபெரும் தலைவரை இழிவாக எழுதினார். அவரது மனோபாவம் அப்படிப்பட்டது.

    எம்.ஜி.ஆர் பத்தி அவரு எழுதினதெல்லாம் நம் மக்கள் கேள்விப்படாத விஷயங்கள் இல்லை ஆனால் அத்தனை விமர்சனங்களையும் மீறி தலைவர் இன்றும் கோடானு கோடிமக்களால் தெய்வமாக மதிக்கப்படுகிறார் என்றால் அது நீங்க சொன்ன காரணம் தான்

    ///எனக்கு எம்.ஜி.ஆரை பிடிக்குமென்றால் அதற்குக் காரணம், அவருடைய ஈகை தன்மை. கொடைத்தனம்..! மன்னிக்கும் இயல்பு.. இதுதான் எனக்கு அவரிடத்தில் நிரம்பப் பிடித்தது..! இது ஒன்றுக்காகவே அவரை நான் புகழ்கிறேன்..!///

    அவர் சாதாரண ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து தமது கடின உழைப்பால் முயற்சியால் இந்த நாடு போற்றும் தலைவனாக அவர் உருவெடுத்தார் என்றால் அது ஆயிரத்தில் ஒருவனால், ஏன் கோடிகளில் ஒருவனால் மட்டுமே முடியும்.

    ”வாழ்ந்தவர்கோடி மறைந்தவர்கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்?”

    ”மாபெரும் சபையினில் நீ நடந்தால் - உனக்கு
    மாலைகள் விழவேண்டும் - ஒரு
    மாசு குறையாத மன்னவன் இவனென்று
    போற்றிப் புகழ வேண்டும்”.

    போன்ற வரிகளுக்கு இலக்கணமாக திகழ்ந்தவர் நம் புரட்சித்தலைவர் அவரை ஒரு நடிகராகவோ, சாதாரண பதவி வெறிபிடித்த அரசியல்வாதியாகவோ ஒரு குறுகிய எல்லைக்குள் வரையறுத்துவிட நினைப்பவர்கள் தோற்றுப்போவார்கள். தன்னால் முடியும் என்று நிரூபிப்பதற்காகத்தான் அவர் அரசியலில் இறங்கினாரே தவிர மற்றவர்களைப்போல் சாதாரண பதவி வெறிப்பிடித்தவரல்ல.

    நடிகர், அரசியல்வாதி இதையும் மீறிய ஒரு பந்தம், பாசம் நம் மக்களுக்கு அவர்மீது இருந்தது. அவரை எப்போதும் சிம்மாசனத்தில் அமரவைத்ததன் மூலம் வந்தாரை வாழவைக்கும் நன்றியுள்ள தமிழ்சமுதாயம் பெருமையடைந்தது. அவரை இழிவுபடுத்தியவர்கள் இழிந்துபோனார்கள்.

    தலைவரின் புகழை விரும்பாதவர்கள் எத்தனையோ பேர் அவரைப்பற்றி அவதூறாக எழுதியிருப்பார்கள் அவரது எதிரிகள் எழுதாததா!, பேசாத வார்த்தைகளா!!,

    "நாராயணன் கிருஷ்ணன்" பெரிய மனிதராக இருக்கலாம் ஆனால் தமிழ்நாட்டில் அவரை எத்தனை பேருக்கு தெரியும்.

    உயந்த மனிதர்கள் தாம் எப்போதும் உயர்ந்த மனிதர்களையே விரும்புவார்கள். தாழ்ந்த நிலையில் உள்ள ஜென்மங்களுக்கு அவர்களது அருமை என்றென்றும் தெரியப்போவதில்லை.

    எனது ஆசையெல்லாம் தொடர்ந்து நீங்கள் தலைவரது தொடரை எழுதிவரவேண்டும் என்பதுதான் செய்வீர்களா அண்ணே!. நன்றி.

    ReplyDelete
  55. appadi ennanga senchutaar ..solunga purinchukiroom...Muttai pootaru, kilavingala kati pudichaaru..image a build up panaaru nalla..avar ipo irunthu irunthu media la expose agi irupaar like any other arisiyal vyaadhi..illatha palam perumai peesi peesiyee namba alinchu pooitoom...

    ReplyDelete
  56. எம்ஜிஆரே ஒரு முட்டாப்பய. அதுல மக்கள் மனசுல நிக்குறாராம். யார் சேர் போட்டு வச்சாங்கன்னு தெரியலை

    ReplyDelete
  57. [[[வழிப்போக்கன் - யோகேஷ் said...

    நானும் ஜு.வி.ல படிச்சேன்...]]]

    சந்தோஷம் யோகேஷ்..!

    ReplyDelete
  58. மணியண்ணே..!

    அவரை சக மனிதராகவாவது நினைத்துப் பாருங்கள். அவரது செயல்கள் நிச்சயம் நமக்குத் தனித்துத் தெரியும் என்கிறேன் நான்.

    இதனைக்கூட புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்..!

    ReplyDelete
  59. [[[Ramesh said...

    appadi ennanga senchutaar. solunga purinchukiroom. Muttai pootaru, kilavingala kati pudichaaru. image a build up panaaru nalla. avar ipo irunthu irunthu media la expose agi irupaar like any other arisiyal vyaadhi. illatha palam perumai peesi peesiyee namba alinchu pooitoom.]]]

    எதுவுமே செய்யாமலா அவர் இறந்து இத்தனை ஆண்டுகள் ஆன பின்பும் ரிக்ஷா ஓட்டுபவரும், சுமை தூக்குபவரும் அவரது மரணத்திற்கு நினைவஞ்சலி செலுத்துகிறார்கள். யோசியுங்கள் நண்பரே..!

    ReplyDelete
  60. [[[jaisankar jaganathan said...

    எம்ஜிஆரே ஒரு முட்டாப் பய. அதுல மக்கள் மனசுல நிக்குறாராம். யார் சேர் போட்டு வச்சாங்கன்னு தெரியலை..]]]

    ஐயோ பாவம்.. பெரும் அறிவாளியான நீர் எந்த சேரில் உட்கார்ந்திருக்கீராம்..?

    ReplyDelete
  61. //அப்பப்பா.. எவ்ளோ பெரிய அறிவாளி நீங்க..? இத்தனை நாளா எனக்குத் தெரியாம போச்சு பாருங்க..!//


    சமாளிக்கராராமா! பாவம்! நீர் எம்.ஜி.ஆரை பாற்றி எழுதினால் உனக்கு சிங்கி அடிக்க ஆட்கள் வருவாங்கன்னு நினைச்சியா? ஹா ஹா ஹா

    ReplyDelete
  62. ஹா.. ஹா.. ஹா.. நாங்கள் அடிமைகள் மனோநிலையில் இல்லை நண்பரே..! உதவி செய்தவரை நினைத்துப் பார்க்கும் சாதாரண பாமர புத்தியில்தான் பேசுகிறோம்..!

    U tha

    க‌ருனானிதியை நினைத்துப்பார்த்து ஒரு பாம‌ர‌ன் காவ‌டி தூக்குவான். ஒருவ‌ன‌ல்ல‌ ப‌ல‌ர். அவ‌ர் போன‌ பின்.

    ஜெய‌ல‌லிதாவை நினைத்துப்பார்த்து ஒரு பாம‌ர‌ன் காவ‌டி தூக்குவான். ஒருவ‌ன‌ல்ல‌. ஒரு பெரிய‌ கூட்ட‌ம். அவ‌ர் போன‌ பின்.

    விஜ‌ய்காந்தை நினைத்த்ப்பார்த்து ஒரு பாம‌ர‌ன் காவ‌டி தூக்குவான். ஒருவ‌ன‌ல்ல‌. ப‌ல‌ர். அவ‌ர் போன‌ பின்.

    இப்ப‌டி ம‌த்தவ‌னுக்குக் காவடி தூக்கி தூக்கியே த‌ன்னை இழ‌ந்த‌வ‌ன் இந்த‌த்த‌மிழ‌ன்.

    ReplyDelete
  63. //ஐயோ பாவம்.. பெரும் அறிவாளியான நீர் எந்த சேரில் உட்கார்ந்திருக்கீராம்..?//

    பிளாஸ்டிக் சேர்ல தான்

    ReplyDelete
  64. ஆதரவாளர்கள் இருக்கின்றபோது எதிர்ப்பாளரும் இருக்கத்தான் செய்வார்கள். இதுதான் உலகம். வேறு வழியில்லை..! எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்..!
    //////////

    அண்ணே இது கலைஞருக்கும் பொருந்துமா?

    ReplyDelete
  65. [[[சாரு புழிஞ்சதா said...

    //அப்பப்பா.. எவ்ளோ பெரிய அறிவாளி நீங்க..? இத்தனை நாளா எனக்குத் தெரியாம போச்சு பாருங்க..!//

    சமாளிக்கராராமா! பாவம்! நீர் எம்.ஜி.ஆரை பாற்றி எழுதினால் உனக்கு சிங்கி அடிக்க ஆட்கள் வருவாங்கன்னு நினைச்சியா? ஹா ஹா ஹா]]]

    யார் வந்தாலும், வராவிட்டாலும் இது போன்ற தகவல்கள் இங்கே பதியப்படும் மிஸ்டர் சாரு..!

    ReplyDelete
  66. [[[jo.amalan said...

    ஹா.. ஹா.. ஹா.. நாங்கள் அடிமைகள் மனோநிலையில் இல்லை நண்பரே..! உதவி செய்தவரை நினைத்துப் பார்க்கும் சாதாரண பாமர புத்தியில்தான் பேசுகிறோம்..!

    U tha

    க‌ருனானிதியை நினைத்துப் பார்த்து ஒரு பாம‌ர‌ன் காவ‌டி தூக்குவான். ஒருவ‌ன‌ல்ல‌ ப‌ல‌ர். அவ‌ர் போன‌ பின்.
    ஜெய‌ல‌லிதாவை நினைத்துப் பார்த்து ஒரு பாம‌ர‌ன் காவ‌டி தூக்குவான். ஒருவ‌ன‌ல்ல‌. ஒரு பெரிய‌ கூட்ட‌ம். அவ‌ர் போன‌ பின். விஜ‌ய்காந்தை நினைத்த்ப் பார்த்து ஒரு பாம‌ர‌ன் காவ‌டி தூக்குவான். ஒருவ‌ன‌ல்ல‌. ப‌ல‌ர். அவ‌ர் போன‌ பின். இப்ப‌டி ம‌த்தவ‌னுக்குக் காவடி தூக்கி தூக்கியே த‌ன்னை இழ‌ந்த‌வ‌ன் இந்த‌த் த‌மிழ‌ன்.]]]

    காவடி தூக்குவது மனத்திலும், பிறருக்கு அவரைப் பற்றிச் சொல்வதிலும்தான் அமலன்..!
    இது ஆளுக்கு ஆள் வேறுபடலாம். அவ்வளவுதான்.. ஆனால் சொல்லப்பட்டால் அடுத்தவர்களுக்கும் இப்படியொரு வாழ்க்கையையும் வாழ்ந்திருக்கிறார்கள் என்றாவது தெரிந்து கொள்வார்களே..!

    சரித்திரத்தை நமது வாரிசுகளுக்கு விட்டுச் செல்வோம்..!

    ReplyDelete
  67. [[[jaisankar jaganathan said...

    //ஐயோ பாவம்.. பெரும் அறிவாளியான நீர் எந்த சேரில் உட்கார்ந்திருக்கீராம்..?//

    பிளாஸ்டிக் சேர்லதான்]]]

    சந்தோஷம்..!

    ReplyDelete
  68. [[[அன்பு said...

    ஆதரவாளர்கள் இருக்கின்றபோது எதிர்ப்பாளரும் இருக்கத்தான் செய்வார்கள். இதுதான் உலகம். வேறு வழியில்லை..! எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்..!
    //////////

    அண்ணே இது கலைஞருக்கும் பொருந்துமா?]]]

    நிச்சயமாக.. 200 சதவிகிதம் பொருந்தும் அன்பு..!

    ReplyDelete
  69. சம்பவம் நடந்த சமயம் நான் நாட்டில் இல்லை. நடந்த மற்ற விவரங்களை இப்போதுதான் தெரிந்து கொண்டேன்.

    பகிர்வுக்கு நன்றி.


    என்னுடைய கவலை எல்லாம் சரித்திரப்புகழ் வாய்ந்த அந்த ராஜாஜி மண்டபத்தை இடிச்சுட்டாங்களே என்றதுதான்:(

    அந்த இடத்தில் கண்ணில்பட்டதும் eye sore வர்ற மாதிரி தமிழ்நாட்டுக் கட்டிடக்கலை அழகு கொஞ்சம்கூட இல்லாதஒரு கட்டிடம்:(

    ReplyDelete