Pages

Tuesday, March 15, 2011

காங்கிரஸ் தொகுதிகள் பட்டியல்..! தோல்வியை உணர்ந்துவிட்ட தி.மு.க..!

15-03-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

காங்கிரஸ்காரர்கள் மட்டுமல்ல.. அ.தி.மு.க. கூட்டணிக் கட்சியினரும் ஆவலோடு எதிர்பார்த்தது காங்கிரஸ் போட்டியிடும் இடங்களின் பட்டியலைத்தான். இனி இதனை வைத்துத்தான் அ.தி.மு.க.வில் தொகுதிப் பங்கீட்டை முடிவு செய்வார்கள் என்று உறுதியாகச் சொல்லலாம்..!

ஆனால், இவர்களைவிடவும் ஈழத்துப் பிரச்சினையில் தமிழகத்து மக்களை கொத்துக் கொத்தாக சாகக் கொடுத்த கோபத்தில் காங்கிரஸை பழி தீர்க்கக் காத்திருக்கும் தமிழ் இன உணர்வாளர்கள்தான் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார்கள்.


இந்த லிஸ்ட்டை நேற்று நள்ளிரவிலேயே வரிசையாக மாவட்ட வாரியாக செல்போன் மெஸேஜில் வெளியிட்டு புண்ணியத்தைக் கட்டிக் கொண்டார்கள் தமிழக காங்கிரஸ் கட்சியினர். இன்று மாலை அனைத்து கூட்டணிக் கட்சிகளுக்குமாக சேர்த்து அறிவிக்கப்பட இருந்த காங்கிரஸ் பட்டியலை அவசரம் கருதியே காலையில் வெளியிட்டிருக்கிறார்கள்.

மாவட்டம் வாரியாக முழுப் பட்டியல் இதோ :

சென்னை மாவட்டம்

1. தி.நகர்
2. அண்ணா நகர்
3. ராயபுரம்
4. மைலாப்பூர்
5. திரு.வி.க.நகர் (தனி)

திருவள்ளூர் மாவட்டம்

6. ஆவடி

7. பூந்தமல்லி (தனி)
8. திருத்தணி

காஞ்சிபுரம் மாவட்டம்

9. மதுராந்தகம் (தனி)
10. ஆலந்தூர்
11. ஸ்ரீபெரும்புதூர் (தனி)

வேலூர் மாவட்டம்

12. வேலூர்
13. சோளிங்கர் 
14. ஆம்பூர்

திருவண்ணாமலை மாவட்டம்

15. செங்கம் (தனி)

16. செய்யார்
17. கலசப்பாக்கம்

கடலூர் மாவட்டம்

18. விருத்தாச்சலம்

விழுப்புரம் மாவட்டம்

19. ரிஷிவந்தியம்

கிருஷ்ணகிரி மாவட்டம்

20. கிருஷ்ணகிரி
21. ஓசூர்

சேலம் மாவட்டம்

22. சேலம் (வடக்கு)
23. ஆத்தூர் (தனி)

நாமக்கல் மாவட்டம்

24. திருச்செங்கோடு

கோவை மாவட்டம்

25. சிங்காநல்லூர்
26. வால்பாறை (தனி)
27. தொண்டாமுத்தூர்

திருப்பூர் மாவட்டம்

28. திருப்பூர் (தெற்கு)
29. அவினாசி (தனி)

30. காங்கேயம்

ஈரோடு மாவட்டம்

31. மொடக்குறிச்சி
32. ஈரோடு (மேற்கு)

நீலகிரி மாவட்டம்

33. ஊட்டி

திண்டுக்கல் மாவட்டம்

34. நிலக்கோட்டை (தனி)
35. வேடசந்தூர்

நாகப்பட்டினம் மாவட்டம்

36. மயிலாடுதுறை

தஞ்சாவூர் மாவட்டம்

37. பேராவூரணி
38. பட்டுக்கோட்டை
39. பாபநாசம்

திருவாரூர் மாவட்டம்

40. திருத்துறைப்பூண்டி (தனி)

புதுக்கோட்டை மாவட்டம்

41. அறந்தாங்கி

42. திருமயம்

பெரம்பலூர் மாவட்டம்

43. அரியலூர்

கரூர் மாவட்டம்

44. கரூர்

திருச்சி மாவட்டம்

45. முசிறி
46. மணப்பாறை

மதுரை மாவட்டம்

47. மதுரை (மேற்கு)
48. மதுரை (வடக்கு)
49. திருப்பரங்குன்றம்

ராமநாதபுரம் மாவட்டம்

50. ராமநாதபுரம்
51. பரமக்குடி (தனி)

சிவகங்கை மாவட்டம்

52. சிவகங்கை
53. காரைக்குடி

விருதுநகர் மாவட்டம்

54. விருதுநகர்

தூத்துக்குடி மாவட்டம்

55. விளாத்திகுளம்
56. ஸ்ரீவைகுண்டம்

நெல்லை மாவட்டம்

57. வாசுதேவநல்லூர் (தனி)
58. கடையநல்லூர்
59. நாங்குநேரி
60. ராதாபுரம்

கன்னியாகுமரி மாவட்டம்

61. குளச்சல்
62. விளவங்கோடு
63. கிள்ளியூர்

தர்மபுரி, தேனி ஆகிய மாவட்டங்களில் மட்டுமே காங்கிரஸுக்கு தொகுதிகள் கிடைக்கவில்லை. மற்றபடி பரவலாக பல மாவட்டங்களிலும் இடங்களைப் பெற்றிருக்கிறது..!

காங்கிரஸின் இந்த தொகுதி வேட்டையில் பழைய காங்கிரஸ் தொகுதிகளில் (மறுசீரமைப்பில் மிச்சம் மீதியிருக்கும் தொகுதிகளில்) அதே வேட்பாளர்கள் நின்று தொலைக்கலாம். ஆனால் விடியல் சேகருக்கும், வேலூர் ஞானசேகரனுக்கும் நிச்சயமாக பலத்த எதிர்ப்பு கிளம்பும். வேலூர் ஞானசேகரன் 20 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். அத்தோடு தீவிரமான கருணாநிதியின் அபிமானி என்பதால் இந்த முறை அவருக்கு சீட் கொடுக்கக் கூடாது என்று காங்கிரஸ் தொண்டர்கள் பலத்த எதிர்ப்புணர்வோடு இருக்கிறார்கள்..

சென்ற தேர்தலின்போதே இறுதிக் கட்டத்தில் வேலூரில் உண்ணாவிரதம், பந்தல் எரிப்பு, கட்சி அலுவலகம் தாக்கு என்று சகலத்தையும் செய்து கருணாநிதியின் கடைக்கண் பார்வையினால்தான் ஞானசேகரன் சீட்டை வாங்கினார். இம்முறை எப்படியோ..?

ஆற்காடு வீராசாமி இத்தேர்தலில் நிற்கப் போவதில்லை என்பதால் அண்ணா நகர் மிக எளிதாக ஒதுக்கப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன்..! ஆலந்தூர் தொகுதி அமைச்சர் தா.மோ.அன்பரசன் நின்று ஜெயித்த தொகுதி. இப்போது அமைச்சர் அன்பரசன் புதிதாக உருவாகியுள்ள பல்லாவரம் தொகுதிக்கு இடம் மாறப் போவதாகத் தகவல்.. மைலாப்பூர் எஸ்.வி.சேகருக்கே மீண்டும் கிடைக்கலாம்..!

சென்ற 2006 சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற தொட்டியம், சாத்தான்குளம், சேரன்மாதேவி ஆகிய தொகுதிகள் தற்போதைய தொகுதி மறுசீரமைப்பில் நீக்கப்பட்டுவிட்டதால் இத்தொகுதிகளில் நின்று ஜெயித்த ராஜசேகரன், ராணி வெங்கடேசன், வேல்துரை ஆகியோர் வேறு தொகுதிகள் தேட வேண்டியதுதான்..! இதேபோல் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் மங்களூரில் நின்று ஜெயித்து தற்போது காங்கிரஸில் அடைக்கலமாகியிருக்கும் செல்வமும் அத்தொகுதி நீக்கப்பட்டுவிட்டதால் வேறு தொகுதி தேடுகிறார்..!

இந்தப் பட்டியலில் அத்தனை அரசியல் பார்வையாளர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருப்பது சென்னையிலேயே 5 தொகுதிகளை காங்கிரஸ் பக்கம் தள்ளிவிட்டிருப்பதைத்தான்..!

எம்ஜிஆர் காலத்திலேயே சென்னை மாநகரம் தி.மு.க.வின் கோட்டையாகக் கருதப்பட்டது.. அப்பேர்ப்பட்ட தி.மு.க. இன்றைக்கு சென்னையை விட்டுக் கொடுத்து அண்டை, அசலூர்களுக்கு நகர வேண்டிய கட்டாயம் வந்தது அக்கட்சியின் துரதிருஷ்டம்தான்..!


படித்தவர்கள் அதிகம் உள்ளவர்கள் என்பதால்தான் சென்னையில் தி.மு.க.வுக்கு ஓட்டுக்கள் அதிகம் கிடைக்கிறது என்பது பரவலான பேச்சு. அப்படியிருக்க சென்னையை கூட்டணிக் கட்சியிடம் தள்ளிவிட வேண்டிய அவசியமென்ன என்பதை யோசித்துப் பார்த்தால் தி.மு.க.வினரின் பயம் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது..

தாத்தா திருவாரூர் ஓடுகிறார் என்கிறார்கள். இருப்பதிலேயே மிகக் குறைந்த பரப்பளவுடைய தொகுதியாக சென்னையில் அவருக்காக காத்திருக்கும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியைக் கைவிட்டுவிட்டு தனது இறுதிக் காலத்தில் சொந்த ஊர் தேடி ஓட வேண்டிய நிலைமையை நினைத்தால் பரிதாபமாகத்தான் உள்ளது..!

வருங்கால முதல்வர் தளபதி ஸ்டாலினே ஆயிரம் விளக்கை கை விட்டுவிட்டு பாளையங்கோட்டை பக்கம் ஓட முயல்வதாகத் தகவல்கள்..! இவர்களை இப்படியெல்லாம் ஓட, ஓட விரட்டும் எண்ணத்தை உருவாக்கியவிதத்திலேயே ஸ்பெக்ட்ரம் ஊழலை வெளிக்கொணர்ந்தவர்கள் பாராட்டுக்கு உரியவர்கள்..!

ஸ்பெக்ட்ரம் ஊழலால் நாறிப் போயிருக்கும் இந்த நேரத்தில் சென்னை போன்ற படித்தவர்கள் அதிகம் உள்ள நகரங்களில் நமக்கு நாஸ்திதான் என்பதை தி.மு.க. தலைமை இப்போதே உணர்ந்துவிட்டது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது..!

போதாக்குறைக்கு இலவசமாக டிவி கொடுத்து அதன் மூலமாக ஜெயா செய்திகள் மூலமாகவும், இதர தொலைக்காட்சி செய்திகளின் மூலமாக ஸ்பெக்ட்ரம் ஊழலை ஒவ்வொரு குடிசை வீட்டிலும் கொண்டு போய்ச் சேர்த்து தன் தலையில் தானே மண்ணையள்ளிப் போட்டிருக்கும் இந்தத் தருணத்தில் தி.மு.க.வின் இந்த முடிவு கொஞ்சம் புத்திசாலித்தனமானதுதான்.

தி.மு.க., காங்கிரஸைவிடவும் ஓட்டுப் போடக் காத்திருக்கும் மக்களாகிய நாம் இன்னமும் அதீத புத்திசாலித்தனத்துடன், தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு இத்தேர்தலில் பட்டை நாமம் போட வேண்டியது நமது கடமையாகும்..!

70 comments:

  1. மொட்டையோட வடை பாயசமும்:)

    ReplyDelete
  2. Unmmai Anna,

    Mostly Ungalukkuthan Mottai irrukkumunu ninaikerean.

    ReplyDelete
  3. கவலை வேண்டாம் சரவணா, அதிமுக’வையோ அந்த அம்மாவையோ நீங்க வேணா நம்பலாம், இல்ல தமிழை தாய்மொழியாய் இல்லாதவர்கள் நம்பலாம். ஆனால் உண்மையான தமிழர்கள் ( ஒங்கள சொல்லல பாஸ்) நம்பமாட்டார்கள்.

    ReplyDelete
  4. யாருக்கு ஓட்டளிப்பது?

    இலக்கு:தி.மு.க மற்றும் அ.தி மு க பிடியிலிருந்து நம் மாநிலத்தை விடுவிப்பது:

    வழிமுறை:

    உங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை பொறுத்து,உங்கள் முதல தேர்வு:விஜயகாந்த் கட்சி
    இரண்டாம் தேர்வு:CPI
    மூன்றாம் தேர்வு:CPI(M)
    நான்காம் தேர்வு:வை.கோ கட்சி
    ஐந்தாம் தேர்வு:ராமதாஸ் கட்சி
    ஆறாம் தேர்வு:காங்கிரஸ்
    ஒரு வேளை இரண்டு சனியங்களும் நேருக்கு நேர் போட்டி இட்டால் ,சின்ன சனியனுக்கு ஓட்டுப்போடுங்கள்

    ReplyDelete
  5. எல்லாத்தொகுதிகளிலும் சுயேட்சை வேட்பாளர்க்கு ஓட்டு போட்டு வெற்றி பெற செய்தால் என்ன?

    ReplyDelete
  6. காங்கிரஸ்ஸின் தோல்வியை உணர்ந்த டி.எம்.கே அண்ணாச்சி :)

    ReplyDelete
  7. ரொம்ப நன்றி அண்ணாத்த. மாவட்டம் வாரியா பிரிசி டைப் பண்ண வேண்டி இருந்துச்சி. இங்க சுட்டுக்கிறேன். :)

    ReplyDelete
  8. பட்டியல் வந்துடுச்சா? அப்ப யாரு வேட்பாளர்னு கோஷ்டி சண்டையை பாக்கலாம்.


    எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - 1. (150 வது பதிவாக)

    ReplyDelete
  9. காங்கயம் திருப்பூர் மாவட்டம்

    ReplyDelete
  10. // 52. திருமயம் //

    தகவல்பிழை. இது சிவகங்கை மாவட்டத்தில் இல்லை. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது.

    ReplyDelete
  11. // SanjaiGandhi™ said...
    ரொம்ப நன்றி அண்ணாத்த. மாவட்டம் வாரியா பிரிசி டைப் பண்ண வேண்டி இருந்துச்சி. இங்க சுட்டுக்கிறேன். :)


    //

    சில தொகுதிகள் மாவட்டம்மாறி இருக்கு. கவனமா சுட்டுக்க :))

    ReplyDelete
  12. ஆவடி திருவள்ளூர் மாவட்டத்தில் வரும்..

    ReplyDelete
  13. kangayam thokuthiyul vidiyal sekar mendum pottiyudikirar... Confirmed news... Anekamaga kangayathil admk sarpaka NSN nirkirar...

    ReplyDelete
  14. கண்டிப்பா பட்டை நாமம் போடுவோம் ....

    ReplyDelete
  15. கண்டிப்பா பட்டை நாமம் போடுவோம் ....

    ReplyDelete
  16. நண்பர்களே தோழிகளே.. எக்காரணம் கொண்டும் தயை கூர்ந்து காங்கிரஸ் எனும் தமிழர்களை கொன்ற கட்சிக்கு வாக்களிக்காதீர்கள். உங்கள் குடும்ப உறுப்பினராக ஒரு குழந்தையோ பெண்களையோ கொன்றால் நீங்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு வாக்களிப்பீர்களா என்று யோசித்துபாருங்கள். என் கருத்தில் உடன்பட்டோர் இதை நற்பிரச்சாரமாக கருதி பிறரிடம் கூறி காங்கிரஸூக்கு வாக்களிப்பதை இப்போதிருந்தே தடுத்து நிறுத்துங்கள்.(இப்படிக்கு எந்த கட்சியையும் சாராத வாக்காளன்)

    ReplyDelete
  17. அன்பின் உண்மைத்தமிழன் வணக்கம்.
    பல இடுகைகளில் உங்களின் நேர்மையான விமர்சனம் பிடிக்கும்.ஆனால் இந்த தேர்தலில் நீங்கள் ஜெயலலிதா ஜெயிக்கவேண்டுமென்று விரும்புகிறீர்கள். அப்படியே ஆகட்டும்.அதன்பின்னே ஈழ்த்தமிழர் பிரச்சினை முடிந்துவிட்டால் நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகமே பாராட்டும்.

    பொறுத்திருந்து பார்ப்போம்.

    எனக்கு நண்பர் கண்பத்தின் தெரிவு அருமையாகப்படுகிறது.

    ReplyDelete
  18. அண்ணே, உங்கள நம்பி சுட்டா அவ்ளோ தான். சந்தி சிரிக்க வச்சிடுவீங்க. :(

    மதுரவாயல் தப்பு. செங்கம் தனித் தொகுதி விட்டுட்டிங்க.

    ReplyDelete
  19. //உங்கள் முதல தேர்வு:விஜயகாந்த் கட்சி//
    முதலைய தேர்ந்தெடுத்து என்ன பண்ண போறோம் ?

    ReplyDelete
  20. இந்த அறுபத்திமூன்று நாயன்மார்களை தேர்ந்தெடுப்பதற்குள் என்னென்ன குத்து வெட்டுகள் நடக்கப் போகிறதோ...எதுக்கும் வாசன்,சிதம்பரம் மாதிரி ஆட்கள் தேர்தல் முடியறவரை பேண்ட் போடறது நல்லது. :)

    ReplyDelete
  21. ம தி மு கவை இவர்களும் டார்ச்சர் செய்கிறார்களே . நியாயமா ?

    ReplyDelete
  22. செயக்குமாரு தற்போதய நாமக்கல் தொகுதி உறுப்பினர். நாமக்கல் காங்கிரசுக்கு இல்லை. ஆத்தூர் (தனி) தொகுதியில் நிக்கறதுன்னு அவர் திட்டம் போட்டுட்டாறோ?

    ReplyDelete
  23. [[[ராஜ நடராஜன் said...

    மொட்டையோட வடை பாயசமும்:)]]]

    தாத்தாவுக்கு மொட்டை போடுற அன்னிக்கு வடையும், பாயாசமும் உங்களுக்கு உண்டு..!

    ReplyDelete
  24. [[[Prakash said...

    Unmmai Anna, Mostly Ungalukkuthan Mottai irrukkumunu ninaikerean.]]]

    போச்சுடா.. இன்னமும் அவுங்களை நம்புறீங்களா பிரகாஷ்.. முருகா..!

    ReplyDelete
  25. [[[VJR said...

    கவலை வேண்டாம் சரவணா, அதிமுக’வையோ அந்த அம்மாவையோ நீங்க வேணா நம்பலாம், இல்ல தமிழை தாய் மொழியாய் இல்லாதவர்கள் நம்பலாம். ஆனால் உண்மையான தமிழர்கள் (ஒங்கள சொல்லல பாஸ்) நம்ப மாட்டார்கள்.]]]

    அந்த அம்மாவை நம்புவதைவிட இப்போது இருக்கிற பேய்களை விரட்டுவதே மிக முக்கிய செயல்..!

    ReplyDelete
  26. [[[Ganpat said...

    யாருக்கு ஓட்டளிப்பது?

    இலக்கு : தி.மு.க மற்றும் அ.தி.மு.க பிடியிலிருந்து நம் மாநிலத்தை விடுவிப்பது:

    வழிமுறை:

    உங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை பொறுத்து, உங்கள் முதல தேர்வு : விஜயகாந்த் கட்சி
    இரண்டாம் தேர்வு:CPI
    மூன்றாம் தேர்வு:CPI(M)
    நான்காம் தேர்வு:வை.கோ கட்சி
    ஐந்தாம் தேர்வு:ராமதாஸ் கட்சி
    ஆறாம் தேர்வு:காங்கிரஸ்
    ஒரு வேளை இரண்டு சனியங்களும் நேருக்கு நேர் போட்டி இட்டால், சின்ன சனியனுக்கு ஓட்டுப் போடுங்கள்]]]

    நல்ல ஐடியா கண்பத் ஸார்..! சூப்பர்..!

    ReplyDelete
  27. [[[Vinoth said...

    எல்லாத் தொகுதிகளிலும் சுயேட்சை வேட்பாளர்க்கு ஓட்டு போட்டு வெற்றி பெற செய்தால் என்ன?]]]

    இந்த அளவுக்கு அவங்களுக்கு அறிவு இருந்தால் ஜெயலலிதாவும், கருணாநிதியும் இப்படி ஆடியிருக்கவே முடியாது..!

    ReplyDelete
  28. [[[இராமசாமி said...

    காங்கிரஸ்ஸின் தோல்வியை உணர்ந்த டி.எம்.கே அண்ணாச்சி :)]]]

    அதனாலதான் நல்ல தொகுதிகளா பார்த்து தள்ளிவிட்டிருக்காங்க..! பாவம் காங்கிரஸ்..!

    ReplyDelete
  29. [[[SanjaiGandhi™ said...

    ரொம்ப நன்றி அண்ணாத்த. மாவட்டம் வாரியா பிரிசி டைப் பண்ண வேண்டி இருந்துச்சி. இங்க சுட்டுக்கிறேன். :)]]]

    வருகைக்கு மிக்க நன்றி தம்பி..!

    ReplyDelete
  30. [[[தமிழ்வாசி - Prakash said...
    பட்டியல் வந்துடுச்சா? அப்ப யாரு வேட்பாளர்னு கோஷ்டி சண்டையை பாக்கலாம்.]]]

    ஆனால் அது இங்க நடக்காது.. டெல்லி ஜன்பத் ரோட்டுல நடக்கும்..!

    ReplyDelete
  31. [[[SanjaiGandhi™ said...

    காங்கயம் திருப்பூர் மாவட்டம்.]]]

    நன்றி.. திருத்திவிட்டேன் தம்பி..!

    ReplyDelete
  32. [[[புதுகை.அப்துல்லா said...

    // 52. திருமயம் //

    தகவல் பிழை. இது சிவகங்கை மாவட்டத்தில் இல்லை. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது.]]]

    நன்றி. திருத்திவிட்டேன் தம்பி..! நானும் தேர்தல் கமிஷன் பட்டியலை பார்த்துத் தேடித்தான் டைப்பிங் செஞ்சேன். அதுலயே தப்பா..? முருகா..?

    ReplyDelete
  33. [[[புதுகை.அப்துல்லா said...

    // SanjaiGandhi™ said...
    ரொம்ப நன்றி அண்ணாத்த. மாவட்டம் வாரியா பிரிசி டைப் பண்ண வேண்டி இருந்துச்சி. இங்க சுட்டுக்கிறேன். :)//

    சில தொகுதிகள் மாவட்டம் மாறி இருக்கு. கவனமா சுட்டுக்க :))]]]

    அடடா.. என்ன பாசம்.. என்ன பாசம்..? கட்சிக்காரங்கள்ல.. அதான் கூட்டணி வைச்சு பேசிக்குறாங்க.. நல்லாயிருங்கப்பூ..!

    ReplyDelete
  34. [[[மு.சரவணக்குமார் said...

    ஆவடி திருவள்ளூர் மாவட்டத்தில் வரும்.]]]

    அப்படியா..? செக் செய்துவிட்டு திருத்திவிடுகிறேன் நண்பரே..!

    ReplyDelete
  35. [[[sivaG said...
    kangayam thokuthiyul vidiyal sekar mendum pottiyudikirar. Confirmed news. Anekamaga kangayathil admk sarpaka NSN nirkirar.]]]

    நிச்சயமாக விடியல் சேகர் தோற்கிறார் என்பதையும் சொல்லவில்லையே..?

    ReplyDelete
  36. [[[கோவை நேரம் said...
    கண்டிப்பா பட்டை நாமம் போடுவோம்]]]

    நமக்கில்லை. காங்கிரஸ்காரர்களுக்கும், தி.மு.க.வுக்கும்..!

    ReplyDelete
  37. [[[raja said...

    நண்பர்களே தோழிகளே எக்காரணம் கொண்டும் தயை கூர்ந்து காங்கிரஸ் எனும் தமிழர்களை கொன்ற கட்சிக்கு வாக்களிக்காதீர்கள். உங்கள் குடும்ப உறுப்பினராக ஒரு குழந்தையோ பெண்களையோ கொன்றால் நீங்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு வாக்களிப்பீர்களா என்று யோசித்து பாருங்கள். என் கருத்தில் உடன்பட்டோர் இதை நற்பிரச்சாரமாக கருதி பிறரிடம் கூறி காங்கிரஸூக்கு வாக்களிப்பதை இப்போதிருந்தே தடுத்து நிறுத்துங்கள். (இப்படிக்கு எந்த கட்சியையும் சாராத வாக்காளன்)]]]

    வழி மொழிகிறேன்.. இதனை ஒரு தேர்தல் பிரச்சாரமாகவே முன் கொண்டு செல்ல வேண்டும்..!

    ReplyDelete
  38. [[[காமராஜ் said...

    அன்பின் உண்மைத்தமிழன் வணக்கம்.
    பல இடுகைகளில் உங்களின் நேர்மையான விமர்சனம் பிடிக்கும். ஆனால் இந்த தேர்தலில் நீங்கள் ஜெயலலிதா ஜெயிக்க வேண்டுமென்று விரும்புகிறீர்கள்.]]]

    இல்லை. அப்படி நான் நினைக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் ஜெயலலிதாவுக்கு முதல்வர் பதவியேற்கவே தகுதியில்லை. கருணாநிதியைப் போலவே என்பதுதான் எனது கருத்து..!

    [[[அப்படியே ஆகட்டும். அதன் பின்னே ஈழ்த் தமிழர் பிரச்சினை முடிந்துவிட்டால் நான் மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழகமே பாராட்டும்.]]]

    அது இனிமேல் மத்திய, மாநில அரசுகள் மற்றும் ஈழத்து மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மனம் வைத்தால்தான் முடியும்.. இல்லையெனில் முடியாது..! மாநில அரசு மட்டுமே நினைத்தாலும் முடியாது..!

    [[[பொறுத்திருந்து பார்ப்போம். எனக்கு நண்பர் கண்பத்தின் தெரிவு அருமையாகப்படுகிறது.]]]

    எனக்கும்தான் பிடிக்கிறது. ஆனால் இது எத்தனை பேருக்கு பிடிக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்.. கிராமப்புறங்களில் உதயசூரியன் இல்லாவிடில் ரெட்டை இலை. அவ்ளோதான் தெரியும் அவர்களுக்கு..!

    ReplyDelete
  39. [[[SanjaiGandhi™ said...

    அண்ணே, உங்கள நம்பி சுட்டா அவ்ளோதான். சந்தி சிரிக்க வச்சிடுவீங்க. :(

    மதுரவாயல் தப்பு. செங்கம் தனித் தொகுதி விட்டுட்டிங்க.]]]

    மதுரவாயல் எந்த மாவட்டம்..? செங்கம் குறிக்கலையா..? அப்புறம் எப்படி 63 வந்துச்சு..?

    ReplyDelete
  40. [[[ஜோ/Joe said...

    //உங்கள் முதல தேர்வு:விஜயகாந்த் கட்சி//

    முதலைய தேர்ந்தெடுத்து என்ன பண்ண போறோம் ?]]]

    திமிங்கிலங்களை தேர்ந்தெடுத்து என்ன செய்தோமே அதையே செய்ய வேண்டியதுதான்..!

    ReplyDelete
  41. [[[எல் கே said...

    ஒழிப்போம்.]]]

    கண்டிப்பாக..!

    ReplyDelete
  42. [[[மு.சரவணக்குமார் said...

    இந்த அறுபத்தி மூன்று நாயன்மார்களை தேர்ந்தெடுப்பதற்குள் என்னென்ன குத்து வெட்டுகள் நடக்கப் போகிறதோ. எதுக்கும் வாசன், சிதம்பரம் மாதிரி ஆட்கள் தேர்தல் முடியறவரை பேண்ட் போடறது நல்லது. :)]]]

    ஹா.. ஹா.. சத்தியமூர்த்தி பவனில் எதுவும் நடக்கும்..!

    ReplyDelete
  43. [[[பார்வையாளன் said...

    ம.தி.மு.க.வை இவர்களும் டார்ச்சர் செய்கிறார்களே. நியாயமா?]]]

    கண்டிப்பாக வேதனைக்குரிய விஷயம்..! இந்தம்மாவை புரிந்து கொள்ளவே முடியவில்லை..

    ReplyDelete
  44. [[[நிலவு said...

    புலிகளை ஆதரித்து பேசலாம் சரி - என்ன பேசுவது தமிழ் தேசியவாதிகளே!

    http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_15.html]]]

    அண்ணே.. நான் பாவமில்லையா..?

    ReplyDelete
  45. [[[குறும்பன் said...
    செயக்குமாரு தற்போதய நாமக்கல் தொகுதி உறுப்பினர். நாமக்கல் காங்கிரசுக்கு இல்லை. ஆத்தூர் (தனி) தொகுதியில் நிக்கறதுன்னு அவர் திட்டம் போட்டுட்டாறோ?]]]

    அப்படித்தான் இருக்கும். இல்லைன்னா அடிச்சுப் பிடிச்சு வாங்கியிருப்பாங்களா?

    ReplyDelete
  46. மதுரையின் இரண்டு தொகுதிகள் காங்கிரஸுக்கு கிடைத்ததின் மர்மம் என்ன?

    ReplyDelete
  47. //[[[Ganpat said...

    யாருக்கு ஓட்டளிப்பது?

    இலக்கு : தி.மு.க மற்றும் அ.தி.மு.க பிடியிலிருந்து நம் மாநிலத்தை விடுவிப்பது:

    வழிமுறை:

    உங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை பொறுத்து, உங்கள் முதல தேர்வு : விஜயகாந்த் கட்சி
    இரண்டாம் தேர்வு:CPI
    மூன்றாம் தேர்வு:CPI(M)
    நான்காம் தேர்வு:வை.கோ கட்சி
    ஐந்தாம் தேர்வு:ராமதாஸ் கட்சி
    ஆறாம் தேர்வு:காங்கிரஸ்
    ஒரு வேளை இரண்டு சனியங்களும் நேருக்கு நேர் போட்டி இட்டால், சின்ன சனியனுக்கு ஓட்டுப் போடுங்கள்]]]

    நல்ல ஐடியா கண்பத் ஸார்..! சூப்பர்..!//

    Boss, singam mathiri singila nikkara BJPya vittuteengle.. :)

    Ram

    ReplyDelete
  48. [[[அன்பு said...
    மதுரையின் இரண்டு தொகுதிகள் காங்கிரஸுக்கு கிடைத்ததின் மர்மம் என்ன?]]]

    மதுரை மேற்கில் பொன்.முத்துராமலிங்கம் செல்வாக்கானவர். திருப்பரங்குன்றத்தில் செ.ராமச்சந்திரன் பலம் வாய்ந்தவர். இவர்கள் இருவரையும் மீறி கட்சி தோற்றுவிடும் என்கிற பயம் தலைமைக்கு வந்துவிட்டது என்று நினைக்கிறேன். அதனால்தான் தள்ளிவிட்டார்கள்..!

    ReplyDelete
  49. [[[[Ram said...

    //[[[Ganpat said...

    யாருக்கு ஓட்டளிப்பது?

    இலக்கு : தி.மு.க மற்றும் அ.தி.மு.க பிடியிலிருந்து நம் மாநிலத்தை விடுவிப்பது:

    வழிமுறை:

    உங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை பொறுத்து, உங்கள் முதல தேர்வு : விஜயகாந்த் கட்சி
    இரண்டாம் தேர்வு:CPI
    மூன்றாம் தேர்வு:CPI(M)
    நான்காம் தேர்வு:வை.கோ கட்சி
    ஐந்தாம் தேர்வு:ராமதாஸ் கட்சி
    ஆறாம் தேர்வு:காங்கிரஸ்
    ஒரு வேளை இரண்டு சனியங்களும் நேருக்கு நேர் போட்டி இட்டால், சின்ன சனியனுக்கு ஓட்டுப் போடுங்கள்]]]

    நல்ல ஐடியா கண்பத் ஸார்..! சூப்பர்..!//

    Boss, singam mathiri singila nikkara BJPya vittuteengle.. :)

    Ram]]]

    பா.ஜ.க. மாதிரியான விஷ ஐந்துக்களை நாம் நடமாடவே விடக் கூடாது.. அவர்களை லிஸ்ட்டிலேயே சேர்க்கக் கூடாது பிரதர்..!

    ReplyDelete
  50. //
    பா.ஜ.க. மாதிரியான விஷ ஐந்துக்களை நாம் நடமாடவே விடக் கூடாது.. அவர்களை லிஸ்ட்டிலேயே

    சேர்க்கக் கூடாது பிரதர்..! //

    சரவணன்,
    எனக்கு இதில் மாற்றுக் கருத்து உண்டு. கட்சிக்கொள்கைகள், இலக்குகள் இதெல்லாம் எப்போதோ

    காற்றில் பறந்துவிட்டன. ஏறக்குறைய அனைத்துக் கட்சிகளுமே ஒரே மனநிலையில்தான்

    இருக்கின்றன. கட்சிகளின் பெயர்கள்தான் வேறுபடுகின்றனவே ஒழிய மற்றபடி எல்லாமே ஒன்றுதான்.

    நல்ல வேட்பாளர்கள் நிற்கிறபட்சத்தில் அவர் பிஜேபியாகவே இருந்தாலும் தேர்ந்தெடுக்கலாம். தவறில்லை. எந்தக் கட்சியாயினும் சரி.. நமது தொகுதிக்கு அவர் குறைந்தபட்ச நலன்களையாவது நிறைவேற்றித்தந்தால் சரிதான்.

    ReplyDelete
  51. //Ganpat said...

    யாருக்கு ஓட்டளிப்பது?

    இலக்கு : தி.மு.க மற்றும் அ.தி.மு.க பிடியிலிருந்து நம் மாநிலத்தை விடுவிப்பது:

    வழிமுறை:

    உங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை பொறுத்து, உங்கள் முதல தேர்வு : விஜயகாந்த் கட்சி
    இரண்டாம் தேர்வு:CPI
    மூன்றாம் தேர்வு:CPI(M)
    நான்காம் தேர்வு:வை.கோ கட்சி
    ஐந்தாம் தேர்வு:ராமதாஸ் கட்சி
    ஆறாம் தேர்வு:காங்கிரஸ்
    ஒரு வேளை இரண்டு சனியங்களும் நேருக்கு நேர் போட்டி இட்டால், சின்ன சனியனுக்கு ஓட்டுப் போடுங்கள்//


    விருதுநகரில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. அதை எதிர்த்து மதிமுக அல்லது தேமுதிக போட்டியிடலாம். எனது ஓட்டு தேமுதிகவுக்கே.


    பிற தொகுதிகளிலும் விஜயகாந்த் கையை வலுப்படுத்த வேண்டும். விஜயகாந்த் ரொம்ம்ம்ப...நல்லவர் என்பதற்காக அல்ல.. ஜெயலலிதா அறுதிப் பெரும்பான்மை பெற்று ஒரேயடியாக ஆடிவிடக்கூடாது என்பதற்காக! ஆட்சியில் ஜெயா இருந்தாலும் விஜயகாந்த் கையிலும் சாட்டை இருக்க வேண்டும்.

    ReplyDelete
  52. கார்த்திக் கட்சியையும், மதிமுகவையும் ஒதுக்கித் தள்ளுவது ஜெயாவிற்கு நல்லதல்ல. இம்முறை பெரும்பாலான தொகுதிகளில் இழுபறியாகத்தான் இருக்கும். கார்த்திக்கும், வைகோவும் தனித்து நின்று பல நூறுகளோ, சில ஆயிரங்களோ பிரித்தாலும் அதிமுக கனவை அது தகர்க்கும். அப்படி நடந்தால் ஜெயாவின் பிடிவாதத்திற்கு நல்ல பரிசாக அது இருக்கும்!

    ReplyDelete
  53. எங்கள் ஊரில் 2006ல் பாதாளச் சாக்கடைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 2008ல் முடிவதாக திட்டம் தயாரிக்கப்பட்டு 2011 ஆகியும் முடியாமல் ஊரே கந்தர்கோலமாகக் கிடக்கிறது. 26 கோடி மதிப்பீட்டிலான இத்திட்டத்தில் சில கோடிகளை சேர்மனும், கவுன்சிலர்களும், எம்.எல்.ஏவும், அதிகாரிகளும், மினிஸ்டரும் ஏப்பம் விட்டுவிட்டதாகத் தகவல்! அதனால்தான் திட்டமிட்டபடி பணிகளை முடிக்கமுடியவில்லை.

    சேர்மன் - கார்த்திகா (காங்கிரஸ்)
    கவுன்சிலர்கள் - அனைத்துக் கட்சியினரும்!!
    எம்.எல்.ஏ - வரதராஜன் (மதிமுக)
    மினிஸ்டர் - கே.கே.எஸ்.எஸ்.ஆர். (திமுக)

    ஆக மொத்தத்தில் எந்தக் கட்சிக்காரனும் உருப்படி கிடையாது. எவன் வந்தாலும் இப்படித்தான் ஊர் நாறிப்போய்க்கிடக்கும். தேவையில்லாமல் நாம்தான் இங்கே ஜல்லியடித்துக்கொண்டிருக்கிறோம். ஊரில் ஜல்லியடித்து ரோடு போட ஆள் இல்லை!! வெட்கம் வெட்கம்..!!

    ReplyDelete
  54. ha ha parpom parpom unga ammava ila enga thalaivaranu .. umaku irukudi sangu

    ReplyDelete
  55. அணு உலைகளை பாதுகாக்க மறுத்த ஜப்பான் முதலாளித்துவம் http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_3285.html

    ReplyDelete
  56. அண்ணே! உங்களுக்கு ஒரு மைனஸ் ஓட்டும் போட்டிருக்கேன். பார்த்து ஜாக்கிரதையா பேங்க்குல போட்டு வச்சுகுங்க அண்ணே. உங்களோட இந்த பதிவு நல்லா இல்லைண்ணே. அதை இங்க சொல்லியிருக்கேன். முடிஞ்சா பாருங்க. இனி உங்களுக்கு தெரிஞ்ச சினிமா பத்தி மாத்திரம் எழுதுங்க அண்ணே. எதுக்கு தேவையில்லாம அரசியல்ல மூக்கை நுழைச்சுகிட்டு. http://viruchigakanthdmk.blogspot.com/ அப்படியே தமிழ்மணம், இண்ட்லி எல்லாம் எப்படி சேர்ப்பதுன்னும் பின்னூட்டம் வழியா சொல்லுங்க அண்ணே. புண்ணியமா போவும்.

    ReplyDelete
  57. வை. கோபால்சாமிக்கு மிக அருமையான ஒரு வாய்ப்பை மீண்டும் சூழ்நிலைகள் வழங்கி உள்ளன. காங்கிரஸ் நிற்கும் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட வேண்டும். சீமான் போன்றவர்களின் பிரச்சாரமும், தி.மு.க. வின் காங்கிரஸ் எதிர்ப்பும் ஒரு திருப்பு முனையை எற்படுத்தும். செய்வாரா வை.கோ? அல்லது வழக்கம் போல மீண்டும் தவறான முடிவை எடுத்து முந்தானையில் ஒளிந்துகொள்வாரா?

    -------------------
    தறுதலை
    (தெனாவெட்டுக் குறிப்புகள் - மார்ச் '2011)

    ReplyDelete
  58. If MDMK just fights against congress, then congress will certainly win those constituencies, since he will be splitting the votes coming to ADMK camp. So, MDMK should not stand in those constituencies and ensure congress gets defeated in all the 63 seats.
    - Rajesh

    ReplyDelete
  59. ரிஷி said...

    //பா.ஜ.க. மாதிரியான விஷ ஐந்துக்களை நாம் நடமாடவே விடக் கூடாது.. அவர்களை லிஸ்ட்டிலேயே
    சேர்க்கக் கூடாது பிரதர்..! //

    சரவணன், எனக்கு இதில் மாற்றுக் கருத்து உண்டு. கட்சிக் கொள்கைகள், இலக்குகள் இதெல்லாம் எப்போதோ காற்றில் பறந்துவிட்டன. ஏறக்குறைய அனைத்துக் கட்சிகளுமே ஒரே மனநிலையில்தான் இருக்கின்றன. கட்சிகளின் பெயர்கள்தான் வேறுபடுகின்றனவே ஒழிய மற்றபடி எல்லாமே ஒன்றுதான். நல்ல வேட்பாளர்கள் நிற்கிறபட்சத்தில் அவர் பி.ஜே.பி.யாகவே இருந்தாலும் தேர்ந்தெடுக்கலாம். தவறில்லை. எந்தக் கட்சியாயினும் சரி. நமது தொகுதிக்கு அவர் குறைந்தபட்ச நலன்களையாவது நிறைவேற்றித் தந்தால் சரிதான்.]]]

    பாஜகவின் இந்து மத வெறியையும், சிறுபான்மையானருக்கு எதிரான போர்க்குணத்தையும் ஆதரிக்கும் ஒரு வேட்பாளர் என் தொகுதிக்கு எந்த நல்லதையும் செய்துத் தொலைக்க வேண்டாம் என்பதுதான் எனது கருத்து..!

    ReplyDelete
  60. ரிஷி said...

    விருதுநகரில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. அதை எதிர்த்து மதிமுக அல்லது தேமுதிக போட்டியிடலாம். எனது ஓட்டு தேமுதிகவுக்கே. பிற தொகுதிகளிலும் விஜயகாந்த் கையை வலுப்படுத்த வேண்டும். விஜயகாந்த் ரொம்ம்ம்ப நல்லவர் என்பதற்காக அல்ல. ஜெயலலிதா அறுதிப் பெரும்பான்மை பெற்று ஒரேயடியாக ஆடிவிடக்கூடாது என்பதற்காக! ஆட்சியில் ஜெயா இருந்தாலும் விஜயகாந்த் கையிலும் சாட்டை இருக்க வேண்டும்.]]]

    நல்லது.. இனிமேல் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது என்பது கண்கூடு..!

    ReplyDelete
  61. [[[ரிஷி said...

    கார்த்திக் கட்சியையும், மதிமுகவையும் ஒதுக்கித் தள்ளுவது ஜெயாவிற்கு நல்லதல்ல. இம்முறை பெரும்பாலான தொகுதிகளில் இழுபறியாகத்தான் இருக்கும். கார்த்திக்கும், வைகோவும் தனித்து நின்று பல நூறுகளோ, சில ஆயிரங்களோ பிரித்தாலும் அதிமுக கனவை அது தகர்க்கும். அப்படி நடந்தால் ஜெயாவின் பிடிவாதத்திற்கு நல்ல பரிசாக அது இருக்கும்!]]]

    என்ன செய்வது..? நமக்குத் தெரியுது. ஆத்தாவுக்குத் தெரியணுமே..?

    ReplyDelete
  62. [[[ரிஷி said...

    எங்கள் ஊரில் 2006ல் பாதாளச் சாக்கடைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 2008ல் முடிவதாக திட்டம் தயாரிக்கப்பட்டு 2011 ஆகியும் முடியாமல் ஊரே கந்தர்கோலமாகக் கிடக்கிறது. 26 கோடி மதிப்பீட்டிலான இத்திட்டத்தில் சில கோடிகளை சேர்மனும், கவுன்சிலர்களும், எம்.எல்.ஏவும், அதிகாரிகளும், மினிஸ்டரும் ஏப்பம் விட்டுவிட்டதாகத் தகவல்! அதனால்தான் திட்டமிட்டபடி பணிகளை முடிக்கமுடியவில்லை.
    சேர்மன் - கார்த்திகா (காங்கிரஸ்)
    கவுன்சிலர்கள் - அனைத்துக் கட்சியினரும்!!
    எம்.எல்.ஏ - வரதராஜன் (மதிமுக)
    மினிஸ்டர் - கே.கே.எஸ்.எஸ்.ஆர். (திமுக)
    ஆக மொத்தத்தில் எந்தக் கட்சிக்காரனும் உருப்படி கிடையாது. எவன் வந்தாலும் இப்படித்தான் ஊர் நாறிப் போய்க் கிடக்கும். தேவையில்லாமல் நாம்தான் இங்கே ஜல்லியடித்துக் கொண்டிருக்கிறோம். ஊரில் ஜல்லியடித்து ரோடு போட ஆள் இல்லை!! வெட்கம் வெட்கம்..!!]]]

    நமக்குத்தான் வெட்கமாக உள்ளது. ஆனால் அரசியல்வியாதிகளுக்கு அப்படி தோணலையே..? என்ன ஸார் செய்யறது..?

    ReplyDelete
  63. [[[immie said...
    ha ha parpom parpom unga ammava ila enga thalaivaranu. umaku irukudi sangu.]]]

    ஹா.. ஹா.. ஹா.. எனக்கு ஏற்கெனவே சங்கு ஊதியாச்சு மவனே..!

    ReplyDelete
  64. [[[நிலவு said...
    அணு உலைகளை பாதுகாக்க மறுத்த ஜப்பான் முதலாளித்துவம் http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_3285.html]]]

    அதுதான் இப்போ அனுபவிக்கிறாங்களே..? எல்லா ஊரிலும் அரசியல்வியாதிகள் ஒன்று போலத்தான் இருக்கிறார்கள்..!

    ReplyDelete
  65. [[[விருச்சிககாந்த் said...

    அண்ணே! உங்களுக்கு ஒரு மைனஸ் ஓட்டும் போட்டிருக்கேன். பார்த்து ஜாக்கிரதையா பேங்க்குல போட்டு வச்சுகுங்க அண்ணே. உங்களோட இந்த பதிவு நல்லா இல்லைண்ணே. அதை இங்க சொல்லியிருக்கேன். முடிஞ்சா பாருங்க. இனி உங்களுக்கு தெரிஞ்ச சினிமா பத்தி மாத்திரம் எழுதுங்க அண்ணே. எதுக்கு தேவையில்லாம அரசியல்ல மூக்கை நுழைச்சுகிட்டு. http://viruchigakanthdmk.blogspot.com/ அப்படியே தமிழ்மணம், இண்ட்லி எல்லாம் எப்படி சேர்ப்பதுன்னும் பின்னூட்டம் வழியா சொல்லுங்க அண்ணே. புண்ணியமா போவும்.]]]

    உங்க மைனஸ் ஓட்டுக்கு மிக்க நன்றி தம்பி.. அந்த புரொபைல் போட்டோவை கொஞ்சம் மாத்துறது.. கண்றாவியா இருக்கு..!

    ReplyDelete
  66. [[[tharuthalai said...

    வை. கோபால்சாமிக்கு மிக அருமையான ஒரு வாய்ப்பை மீண்டும் சூழ்நிலைகள் வழங்கி உள்ளன. காங்கிரஸ் நிற்கும் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட வேண்டும். சீமான் போன்றவர்களின் பிரச்சாரமும், தி.மு.க.வின் காங்கிரஸ் எதிர்ப்பும் ஒரு திருப்பு முனையை எற்படுத்தும். செய்வாரா வை.கோ? அல்லது வழக்கம் போல மீண்டும் தவறான முடிவை எடுத்து முந்தானையில் ஒளிந்துகொள்வாரா?

    -------------------
    தறுதலை
    (தெனாவெட்டுக் குறிப்புகள் - மார்ச் '2011)]]]

    தி.மு.க. எங்கே காங்கிரஸ் எதிர்ப்பை எடுத்திருக்கிறது நண்பரே..?

    ReplyDelete
  67. [[[raj said...

    If MDMK just fights against congress, then congress will certainly win those constituencies, since he will be splitting the votes coming to ADMK camp. So, MDMK should not stand in those constituencies and ensure congress gets defeated in all the 63 seats.
    - Rajesh]]]

    ஆமாம்.. மூன்றாவது அணி அமைந்தால் அது பிரிப்பது அதிமுகவின் ஓட்டுக்களைத்தான்..!

    ReplyDelete
  68. \\உண்ணாவிரதம், பந்தல் எரிப்பு// good orticle

    azifair-sirkali.blogspot.com

    ReplyDelete
  69. [[[AZIFAIR-SIRKALI said...

    \\உண்ணாவிரதம், பந்தல் எரிப்பு//

    good orticle

    azifair-sirkali.blogspot.com]]]

    -)))))))))))))

    ReplyDelete