Pages

Wednesday, March 23, 2011

வெற்றிகரமான 5-ம் ஆண்டு துவக்க விழா..!

23-03-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

2007-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதியன்று அருமைத் தம்பி பாலபாரதியின் பொற்கரங்களால் துவக்கப்பட்ட இந்தத் தளம் இன்றைக்கு தனது 4 ஆண்டு கால ஓட்டத்தை நிறைவு செய்து வெற்றிகரமான 5-வது ஆண்டைத் துவக்குகிறது..!

எனது முதல் படைப்பைப் படித்துவிட்டு உடனடியாக எனக்காகத் தனிப் பதிவு போட்டு என்னை வலையுலகத்திற்கு அறிமுகப்படுத்திய தம்பி சென்ஷியை இந்த நாளில் மீண்டும் ஒரு முறை நன்றியோடு நினைவு கூர்கிறேன்.

அதேபோல் பெண் பதிவர்கள் பலருக்கும் அறிமுகப்படுத்தும்விதமாக முதல் நாளில் இருந்தே என்னை தொடர்ந்து ஊக்குவித்து வந்த முத்துலட்சுமியக்காவுக்கும் எனது நன்றிகள்..!

ஏதோ எனக்குள் தோன்றியதை எழுதுகிறேன் என்றாலும், அவ்வப்போது நான் செய்து வரும் காப்பி-பேஸ்ட் பதிவுகளைக் கூட எனக்காகப் பொறுத்துக் கொண்டு என்னைத் தொடர்ந்து வாசித்து வரும் எனது  பதிவுலக நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும் என் மேல் அக்கறை கொண்டு எழுத்தில் எனது வளர்ச்சியை மேம்படுத்த உதவிய எனது பதிவுலக மூத்தோர்களுக்கும் இந்த நேரத்தில் எனது நன்றியினைக் காணிக்கையாக்கிக் கொள்கிறேன்..!

பெரிய, பெரிய பதிவுகளாக எழுதியிருந்தாலும் பொறுமையுடன் படித்துவிட்டு இன்னமும் என்னை நட்புப் பட்டியலில் இணைத்திருக்கும் நண்பர்களுக்கும் எனது நன்றி..! இப்போது பதிவின் நீளத்தைக் கொஞ்சம் குறைத்திருக்கிறேன் என்பதை அவர்களுக்கு மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்..!

இந்த நான்காண்டு காலத்தில் இந்த வலையுலகத்தில் நான் கற்றுக் கொண்டது நிறையவே..! அதேபோல் பலனடைந்ததும் அதிகம்தான்.. ஒரு சில நேரங்களில் தளத்தை மூடிவிட்டுப் போய்விடலாம் என்கிற அயர்ச்சி ஏற்பட்டிருந்தாலும், அதனைப் போக்கும் அருமருந்தாக பதிவுலகின் மூலம் எனக்குக் கிடைத்த நண்பர்களின் தோழமை என்னை இங்கேயே இருக்க வைத்தது என்பதை கண்டிப்பாக சொல்ல வேண்டும்..!  தோள் கொடுத்த அந்தத் தோழர்களுக்கு எனது இதயங்கனிந்த நன்றி..!

அரசியல் கொள்கை ரீதியாக மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும் எனது அந்தத் தனிப்பட்ட உரிமையை மதித்து, இன்றுவரையிலும் என்னை நட்புக்காகப் பொறுத்துக் கொண்டிருக்கும் அரசியல் சார்பான நண்பர்களுக்கும் எனது நன்றி..!

ஒவ்வொரு புது வருடமும் இந்த வருடம் என்ன செய்யப் போகிறோம்..? என்ன சாதிக்கப் போகிறோம்? என்பதையெல்லாம் யோசிக்க வைக்கிறது.. இதுவரையில் இந்த வலையுலகில் நான் சாதித்தது என்ன என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை. அது பற்றிக் கவலையுமில்லை.. இந்த சிந்தனாவோட்டத்தை தடை செய்யும்விதமாகவே வலையுலகத் தோழர்களின் நட்பு எனக்குள் எந்நேரமும் ஓடிக் கொண்டிருக்கிறது..!
இங்கே எழுதுவதினால் உலகம் முழுவதிலும் இருந்தும் எனக்குக் கிடைத்த கிடைத்த நண்பர்களே பெரும் சாதனை என்கிறபோது வேறேதுவும் எனக்குப் பெரிதாகத் தோன்றவில்லை..! இதுவே போதும் என்றே நினைக்கிறேன்..!

என்னைப் பின் தொடரும் நண்பர்களுக்கும், பின் தொடராமலேயே தொடர்ந்து கொண்டிருக்கும் நண்பர்களுக்கும், தொடர்ச்சியாக பின்னூட்டமிட்டு என்னை உரமேற்றிக் கொண்டிருக்கும் பதிவர்களுக்கும், தோழர்களுக்கும், வாசகர்களுக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி கூறிக் கொள்கிறேன்..!

இதுவரையில் எந்த வலைப்பதிவரையும் நான் பொதுவில் கடும்சொல்லை வீசி காயப்படுத்தியதில்லை என்று நினைக்கிறேன்.  தனிப்பட்ட முறையில்கூட மிக நெருக்கமானவராக, எனக்கு உரிமையிருந்தால் மட்டுமே அப்படி பேசியிருப்பேன் என்று நினைக்கிறேன். அதையும் மீறி யாரையேனும் நான் தெரிந்தோ, தெரியாமலோ காயப்படுத்தியிருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.  மன்னித்துக் கொள்ளுங்கள். 

கடைசியாக, எவ்வளவு கஷ்டத்தை கொடுத்தாலும், தீர்வுக்கு ஒரு வழியையும் காட்டி, அதனை அடைய வேண்டிய வழியையும் சொல்லிக் கொடுத்து என்னை இன்னமும் உங்களிடையே இருக்க வைத்திருக்கும் எனது அப்பன் முருகப் பெருமானுக்கு எனது கோடானு கோடி நன்றி..!

வாழ்க வளமுடன்..!

வலையுலகம் நீடூழி சிறக்கட்டும்..!

55 comments:

  1. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் சரவணன் அண்ணே!

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் அண்ணே...

    ReplyDelete
  4. மனம் கனிந்த இனிய வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  5. பல்லாண்டுகள் உங்கள் வலையுலக சேவை தொடர வாழ்த்துக்கள்;எங்களை போன்ற புதிய பதிவர்கள் உங்களின் ஊக்கமும்,ஆக்கமும் என்றும் இருக்கட்டும்.

    ReplyDelete
  6. வாழ்த்துகள் உ த. இனிமேலாவது உண்மையான நடுநிலையோடு எழுதுறீங்களா பார்க்கலாம்

    ReplyDelete
  7. /இப்போது பதிவின் நீளத்தைக் கொஞ்சம் குறைத்திருக்கிறேன்/

    Mikka Nandri!

    good! Keep it up!

    ReplyDelete
  8. பயணம் தொடரவும் சிறக்கவும் வாழ்த்துகள்...

    தோழமையுடன்
    பைத்தியக்காரன்

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் நண்பரே!

    [im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcQdkmwhUw2VYRoiikJyHcUpBD01CxAj4DT5CW2QPOqrfs5ugKSgNg[/im]

    ReplyDelete
  10. பின்னூடத்தில் முருகனின் படத்தை சேர்த்தேன். ஆனால் அது வேலை செய்யவில்லை.

    முருகன் அருள் உங்களுக்கு எப்பவும் இருக்கும்.

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் அண்ணா!!

    ReplyDelete
  12. அஞ்சா நெஞ்சனை
    அருமை அண்ணனை

    வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்! :)))

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள்

    பதிவுகள், பஸ் மூலம் இந்த சமூகத்திற்கு நீங்கள் செய்து வரும் சேவை இன்னும் தொடர ஆசைப் படுகிறேன்

    ReplyDelete
  14. என்ன அண்ணே ஒரே பீலிங்க்ஸா இருக்கு... உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் இன்னும் ஆண்டுகள் பல காண வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள் அண்ணே

    ReplyDelete
  16. வாழ்த்துகள் அண்ணே...

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. வாழ்த்துக்கள் அண்ணா!!

    ReplyDelete
  19. வாழ்த்துக்கள் ! ! !உங்கள் வெற்றிகரமான பயணம் தொடரட்டும் ! !

    ReplyDelete
  20. ஆரம்பகாலத்துல இருந்து கொஞ்சம் பேர்தான் பதிவுலகுல பதிவு போடுறாங்க. வெகு சிலர் பின்னூட்டம் போடுறாங்க. அதுல நாம் இன்னும் இருக்கிறதே பெரிய விசயம்தான். தொடருவோம்... உங்களை வாழ்த்த வயசில்லை, வுழுந்து கும்பிட்டுக்கிறேன் சாமேய்ய்ய்ய்ய்

    ReplyDelete
  21. வாழ்த்துக்கள் நண்பரே!

    வாழிய நலமுடன்!

    ReplyDelete
  22. ஆசிர்வாதம் பண்ணுங்க அண்ணாச்சி :)

    ReplyDelete
  23. நேற்று ஒரு புதிய பதிவரை பார்த்து பேசினேன் . அவர் பார்க்க விரும்பும் பதிவர் நீங்கள்தான் என அறிந்து வியந்தேன் . அந்த அளவுக்கு அன்பை சம்பாதித்து வைத்து இருக்கிறீர்கள் . இன்னும் உங்கள் முழு திறனும் வெளியாகவில்லை . முழுதிறனும் வெளியாகி , பெரிய இடங்களை கண்டிப்பாக அடைவீர்கள் . அப்போதும் எங்களை மறந்துவிட மாட்டீகள் என நம்புகிறேன் . வாழ்த்த வயதில்லை . வணங்கி மகிழ்கிறேன்

    ReplyDelete
  24. வாழ்க!வளர்க!!வாழ்த்துக்கள்!!!.
    அன்புடன்
    அரவரசன்.

    ReplyDelete
  25. இவ்வுலகில் குறையில்லாத ஒன்று இல்லவே இல்லை... அதன் பொருட்டு நமது பொறுப்புகளை தட்டிகழித்துவிட்டு ஒடக்கூடாது. போராட்டமே வாழ்க்கை என்பது என் எண்ணம். நீங்கள் போராடுகிறீர்கள். அதன் பொருட்டு உயிர்ப்போடு எழுதுகிறீர்கள்... அது காபி அண்ட் பேஸ்ட் இருந்தாலும்..நீங்கள் என்ன போர்னோகிராபியா copy and past செய்தீர்கள்...? விமர்சனங்கள் எப்பொழுதும் இருக்கும் தொடர்ந்த உழைப்புக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  26. பதிவுலகில் மேலும் பல ஆண்டுகள் காண வாழ்த்துகள். 5வது ஆண்டு தொடங்கியதும் இடுகையை மிக சிறியதாக போட்டதை வன்மையாக கண்டிக்கிறேன். உத இடுகை மாதிரி இல்லாம என் மிகப்பெரிய இடுகை மாதிரி இருக்கு. வாழ்த்துனாலும் கண்டிக்க தவறமாட்டோம்.

    ReplyDelete
  27. நான் குண்டானா நல்லா இருககது. நீ இளைச்சு போனா நல்லா இருக்காதுன்னு சூப்பர் ஸ்டார் சந்திரமுகில சொல்லுவாரே அது போல உன் கிட்டே இருந்து சின்ன பதிவு வந்தா நல்லா இருக்காது சரவணா, உன் பாணியிலேயே எப்போதும் போல போடு. 5ம் ஆண்டுக்கு என் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  28. I repeat Ila's comment

    ஆரம்பகாலத்துல இருந்து கொஞ்சம் பேர்தான் பதிவுலகுல பதிவு போடுறாங்க. வெகு சிலர் பின்னூட்டம் போடுறாங்க. அதுல நாம் இன்னும் இருக்கிறதே பெரிய விசயம்தான். தொடருவோம்... உங்களை வாழ்த்த வயசில்லை, வுழுந்து கும்பிட்டுக்கிறேன் சாமேய்ய்ய்ய்ய்

    Annae naan Ungalaku senior :P , antha bayam irukattum epothum ...

    Annan Aavigalodu vanthu gummi adikkira pathivu onnu podunga

    ReplyDelete
  29. பெரிய, பெரிய பதிவுகளாக எழுதியிருந்தாலும் பொறுமையுடன் படித்துவிட்டு இன்னமும் என்னை நட்புப் பட்டியலில் இணைத்திருக்கும் நண்பர்களுக்கும் எனது நன்றி..! இப்போது பதிவின் நீளத்தைக் கொஞ்சம் குறைத்திருக்கிறேன் என்பதை அவர்களுக்கு மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்..!//

    நீளமான இடுகைகள் தானே உங்கள் தனிச் சிறப்பு. தொடர்ந்தும் நிறையப் பதிவுகளை எதிர்ப்பார்க்கிறோம்.

    வலைப் பதிவில் நான்கு ஆண்டுகளா? நம்பவே முடியவில்லை. அவ்வளவு ஆச்சரியமாக இருக்கிறது. இவ் வருட ஆரம்பத்தில் இருந்து தான் உங்கள் வலைப்பதிவைப் படிக்கத் தொடங்கினேன். நன்றாக எழுதுகிறீர்கள். தொடர்ந்தும் எம்மையெல்லாம் கவரும் வண்ணம் எழுத வாழ்த்துகிறேன் சகோதரம்!

    ReplyDelete
  30. வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் !!

    ReplyDelete
  31. Congratulations...Saravanan .. Keep it up boldly..! - Karate Venkatesan

    ReplyDelete
  32. அஞ்சா நெஞ்சனே வா...

    அருந்தொண்டாற்ற வா...

    தமிழே வா... தமிழா வா...

    தரணியை ஆள வா...

    தாமதிக்காமல் வா...

    வாழ்த்துக்கள் தலைவா...

    ReplyDelete
  33. வாழ்த்துகள் அண்ணே....

    ReplyDelete
  34. வாழ்த்துக்கள் மென் மேலும் வளர ....

    ReplyDelete
  35. பின்னூட்டங்களுக்கு பதில் சொல்லாமல் மௌனம் காப்பதன் மூலம் தான் பிரபல பதிவர் ஆகிவிட்டார் என்பதையும் சூசகமாகத் தெரியப்படுத்தும் அண்ணன் உண்மைத் தமிழன் வாழ்க!

    ReplyDelete
  36. First i greets you. ..! Nowadays your analysis on current issue is lower than older days. Please keep that tempo.

    ReplyDelete
  37. u r special sir,best of luck for ur grand successs

    ReplyDelete
  38. பின்னூட்டமிட்டு வாழ்த்தியிருக்கும் அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் எனது இதயங்கனிந்த நன்றிகள்..!

    ReplyDelete
  39. அன்பின் சரவணன்

    வெற்றிகரமாக ஐந்தாவது ஆண்டில் அடி எடுத்து வைத்ததற்கு பாராட்டுகளுடன் கூடிய நல்வாழ்த்துகள். நட்புடன் சீனா

    ReplyDelete
  40. வாழ்த்துக்கள் சரவணன்,
    நிறையவும் நிறைவாகவும் தொடருங்கள்...

    உங்களது வாழ்வும் எழுத்தும் மேம்பட தொழுதி வாழ்த்துகிறேன்..

    ReplyDelete
  41. வாழ்த்துக்கள் சரவணன் அண்ணே..

    ReplyDelete
  42. வாழ்த்துக்கள் அண்ணாச்சி கலக்குங்க, உங்கள் ஸ்டைலே நீளமான பதிவுகள் தானே அதைக் கைவிடாதீர்கள்.

    ReplyDelete
  43. வாழ்த்துக்கள் நண்பரே!!

    ReplyDelete