Pages

Saturday, February 05, 2011

கவிஞர் மனுஷ்யபுத்திரனைத் தண்டிக்க ஒரு வாய்ப்பு..! முன் வாருங்கள் வலைப்பதிவர்களே..!


05-02-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


சுஜாதா அறக்கட்டளை - உயிர்மை

இணைந்து வழங்கும்

சுஜாதா விருதுகள் 2011

தமிழின் நவீனத்துவத்திற்குப் பெரும் பங்காற்றிய அமரர் சுஜாதாவின் நினைவாக அவரது பிறந்த தினமான மே 3-ம் தேதி இலக்கியம் மற்றும் இணையம் சார்ந்து 6 விருதுகள் வழங்கப்படுகின்றன.

ஒவ்வொரு விருதும் 10 ஆயிரம் ரூபாய் பரிசும் பாராட்டுப் பத்திரமும் கொண்டது.

பரிசுக்குரிய தேர்வுகள் போக ஒவ்வொரு பிரிவிலும் 5 விண்ணப்பங்கள் பாராட்டிற்குரியதாக தேர்ந்தெடுக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

1. சுஜாதா சிறுகதை விருது: சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கு

2. சுஜாதா நாவல் விருது: சிறந்த நாவலுக்கு

3. சுஜாதா கவிதை விருது: சிறந்த கவிதைத் தொகுப்பிற்கு

4. சுஜாதா உரைநடை விருது: சிறந்த கட்டுரைத் தொகுப்பிற்கு

5. சுஜாதா இணைய விருது: சிறந்த வலைப்பதிவு (blog) அல்லது இணைய இதழுக்கு (website)

6. சுஜாதா சிற்றிதழ் விருது: சிறந்த சிறுபத்திரிகைக்கு


விதிமுறைகள் :

1. முதல் நான்கு பிரிவுகளில் 2009 டிசம்பர் முதல் 2010 டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் வெளிவந்த நூல்களில் 3 பிரதிகள் அனுப்பப்படவேண்டும். எழுத்தாளரோ, பதிப்பாளரோ அல்லது வாசகர்களோகூட நூல்களை அனுப்பலாம். எழுத்தாளரைப் பற்றிய தகவல்கள் மற்றும் முகவரி தனித்தாளில் எழுதி நூல்களுடன் அனுப்பவும். நூல்களில் எதுவும் குறிக்கப்படவேண்டியதில்லை.

2. 5-வது பிரிவில் தமிழின் சிறந்த வலைப்பதிவு அல்லது இணையத்தளத்திற்கு வழங்கப்படும். அந்த இணையத்தளத்தை அல்லது வலைப்பதிவை நடத்துபவர்கள் தம்மையும் தமது இணைய பக்கங்களையும் பற்றிய சிறு குறிப்புடன் அதில் வெளிவந்த முக்கியமான ஆக்கங்களின் பத்து சுட்டி(link)களையும் அனுப்ப வேண்டும். அனுப்ப வேண்டிய முகவரி: sujathaawards@gmail.com

3. 6-வது பிரிவில் தமிழில் 2010-ம் ஆண்டு வெளிவந்த சிற்றிதழ்களிலிருந்து பிரதிகள் அனுப்பப்படவேண்டும். அந்த ஆண்டில் குறைந்தபட்சம் மூன்று இதழ்களாவது வெளியிடப்பட்டிருக்க வேண்டும். அந்த ஆண்டில் வெளிவந்த ஒவ்வொரு இதழிலிருந்தும் 3 பிரதிகள் வீதம் அனுப்ப வேண்டும்.

4. விருதுக்குரிய தேர்வுகள் தமிழின் முன்னணி எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களால் மேற்கொள்ளப்படும்.

5. தேர்வுக்கான விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசித் தேதி: மார்ச் 20, 2011.

6. விருதுகள் மே. 3, 2011-ம் தேதி சுஜாதாவின் பிறந்த தினத்தில் வழங்கப்படும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :

சுஜாதா விருதுகள், உயிர்மை,
11/29 சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை-600018,
மின்னஞ்சல் sujathaawards@gmail.com  தொலைபேசி: 91-44-24993448.

சென்ற ஆண்டு இந்தப் போட்டிக்கான விளம்பரம் வெளியிடப்பட்டபோது மனுஷ்யபுத்திரன் மீதிருந்த கோபத்தில் அனுப்பாமல் விட்டுவிட்டேன்.

ஆனால் இப்போது அந்தக் கோபம் இன்னும் அதிகமாகிவிட்டதால், இந்த ஆண்டுக்கான சிறந்த வலைப்பதிவருக்கான போட்டியில் கலந்து கொள்ள உத்தேசித்துள்ளேன்.

சென்ற ஆண்டு நமது சக வலைப்பதிவர் லேகா அவர்கள் சிறந்த வலைப்பதிவருக்கான சுஜாதா விருதைப் பெற்றார். அவருடைய வலைப்பதிவு முகவரி இது : http://yalisai.blogspot.com.

பணம் நமக்கு முக்கியமில்லை. ஆனால் விருது மிக, மிக முக்கியம். அதுவும், 'எனது வாத்தியார்' மன்னிக்கவும்.. 'நமது வாத்தியார்' சுஜாதாவின் பெயரில் அமைந்திருக்கும் இந்த விருதினைப் பெறுவதற்கு நிச்சயம் நாம் பெருமைப்பட வேண்டும்.

ஸோ.. இந்த ஆண்டு நான் களத்தில் குதிக்கத் தயாராகிவிட்டேன். என்னுடன் இந்த விருதுக்குப் போட்டியிட விரும்பும் அகில உலக வலைப்பதிவர்கள் அனைவரும் உடனடியாகக் களத்தில் குதிக்கும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

வலையுலகச் செய்திகளின்படி தற்போதைக்கு ஆக்டிவ்வாக 2000 பதிவர்கள் ஒரு நாள்விட்டு ஒரு நாளாவது பதிவுகளை இட்டு வருகிறார்கள். அவர்கள் அனைவரும் இந்த உயிர்மையின் சுஜாதா விருதுக்கு தங்களது பெயரைத் தட்டிவிட்டு போர்க்களத்தில் குதிக்க வேண்டும்.

ஒருவர் 10 லின்க்குகளை தரலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஒரு லின்க் சுமாராக 10 பக்கங்கள் என்றால்கூட ஒரு பதிவருக்கு 100 பக்கங்கள். 1000 பேர் போட்டியிட்டாலும் அது ஒரு லட்சம் பக்கங்களைத் தாண்டிவிடும்.

தமிழின் முன்னணி எழுத்தாளர்களும், பத்திரிகையாளர்களும்தான் சிறந்த பதிவரைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்களாம். இவர்கள் எத்தனை பேராக இருந்தாலும் சரி.. ஒரு லட்சம் பக்கங்களையும் படித்து முடிக்கிறார்களோ இல்லையோ.. இத்தனையையும் படிக்க வைத்துவிட்டாரே என்று மனுஷ்யபுத்திரன் மீது மான நஷ்ட வழக்கு போட வைக்க வேண்டும்.

இப்படி நாம் ஒன்று திரண்டு போட்டியிட்டு உயிர்மையின் உயிரை எடுக்க வேண்டிய கட்டாயம், தற்போது நமக்கு வந்துள்ளது என்பதை சக பதிவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

எனது பதிவுகளில் ஒரு லின்க்கிற்கு குறைந்தபட்சம் 30 பக்கங்கள் என்று வைத்துக் கொண்டால்கூட என்னுடைய வலைப்பதிவு செய்திகளே 300 பக்கங்களைத் தாண்டிவிடும். ஸோ.. பிரதான உயிரெடுப்பானாக நானே இருந்து தொலைகிறேன். நீங்களும் கொஞ்சம் முன் வந்து கை கொடுங்கள் தோழர்களே..!

உயிர்மையின் உயிரை எடுக்கவும், மனுஷ்யபுத்திரனை போட்டுத் தாக்கவும் ஏன் இவ்வளவு வெறி என்கிறீர்களா..? மிகவும் அவசரமான அவசியம் ஒன்று இருக்கிறது...

'தேகம்' என்ற நாவலைப் பதிப்பித்து வெளியிட்ட குற்றத்திற்காக உயிர்மைப் பதிப்பகத்தின் உரி்மையாளரும், கவிஞருமான மனுஷ்யபுத்திரனைத் தண்டிக்க, இதைவிடவும் ஒரு சிறந்த வழி நமக்கு வேறெதுவும் கிடைக்காது. ஆகவே தோழர்களே.. இந்தப் பொன்னான வாய்ப்பை தயவு செய்து நழுவவிட்டு விடாதீர்கள்..!

ம்.. உடனே.. இன்றைக்கே மடல் அனுப்பத் துவங்குங்கள்..!

அனைவரும் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்..!

கவிஞர் மனுஷ்யபுத்திரன் மன்னிப்பாராக..!

75 comments:

  1. இன்னிக்கு வடை எனக்கு!!

    ReplyDelete
  2. ஆங்காங்கே இழையோடும் நகைச்சுவையை வெகுவாய் ரசித்தேன் சரவணன்!

    சிறந்த பதிவராய் தேர்ந்தெடுக்கப்பட மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    மனுஷ்யபுத்ரன் கண்களில் இந்தப் பதிவு விழுமா?

    ReplyDelete
  3. தொபுக்..

    என்ன சத்தமா? குதிச்சாச்சு !

    ReplyDelete
  4. தேகம் படித்தீர்களா என்ன புரிந்துகொண்டீர்கள் என ஒரு பதிவு எழுதவும் ..,

    மற்றபடி ஒன்றும் சொல்வதற்கில்லை

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் அண்ணாச்சி

    ReplyDelete
  6. இந்த முறை சிறந்த பதிவர் விருதை தேர்ந்து எடுக்கும் நடுவர் சாருநிவேதிதா வா அல்லது விமலாதித்த மாமல்லனா

    ReplyDelete
  7. //5. சுஜாதா இணைய விருது: சிறந்த வலைப்பதிவு (blog) அல்லது இணைய இதழுக்கு (website) //

    Blog என்றால் வலைப்பூ என்றுதானே சொல்லவேண்டும்? வலைப்பதிவு என்றால் குறிப்பிட்ட ஒரு பதிவைத்தானே குறிக்கும்?

    அப்புறம், இணைய இதழுக்கும், இணையதளத்திற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா? இவர்கள் எதனடிப்படையில் இந்த விருதுகளை வழங்கப் போகிறார்கள் எனத் தெரியவில்லை.

    ReplyDelete
  8. முயற்சி வெற்றி பெற வாழ்த்துகின்றேன்.

    ReplyDelete
  9. இடுகையை படித்து பார்த்து விமர்சனம் செய்வது ஆரோக்கியமான பாணி, அதை விடுத்து எனக்கு வடை எனக்கு 2வது வடை எனக்கு ரசம் எனக்கு குழம்பு என்பது பார்க்க பிச்சைகாரதனமா இருக்கு..

    ReplyDelete
  10. பிச்சைகாரதனமா இருக்கு..

    thank u for compliments
    -pichaikaaran.blogspot.com

    ReplyDelete
  11. எழுத்தாளனுக்கு எழுத எவ்வளவு உரிமை இருக்கிறதோ , பதிப்பாளருக்கும் அதை வெளியிட உரிமை இருக்கின்றது. நல்லது,கெட்டதை விமர்சிக்க நிராகரிக்க பாராட்ட மட்டுமே நமக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் தண்டிக்க அல்ல.

    நல்ல இயக்குனர்களின் திரைப்படங்கள் மோசமாக இருக்கும்போது சம்பந்தப்பட்டவர்களை தண்டிப்பீர்களா? அவர்களின் அடுத்த படங்களை காணாமல் இருப்பீர்களா?

    யாருக்கும் வக்காலத்து இல்லை. சும்மா கேக்கணும்னு தோணுச்சு. கேட்டுட்டேன். தப்பா எடுத்துக்காதீங்க.

    ReplyDelete
  12. அந்த பணம் கலைஞரை கள்ள கபடமற்றவர் என்று மாரடித்த ஸ்பெக்ட்ரம் பணம் அது உங்களுக்கு தேவையா?

    ReplyDelete
  13. [[[ரிஷி said...

    இன்னிக்கு வடை எனக்கு!!]]]

    ஏன் இப்படி வடைக்கு அலைகிறீர்கள்..?

    ReplyDelete
  14. [[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    2nd vadai. hehe]]]

    ம்ஹும்.. நீ திருந்த மாட்ட..! திருந்தவே மாட்ட..!

    ReplyDelete
  15. [[[ரிஷி said...

    ஆங்காங்கே இழையோடும் நகைச்சுவையை வெகுவாய் ரசித்தேன் சரவணன்!

    சிறந்த பதிவராய் தேர்ந்தெடுக்கப்பட மனமார்ந்த வாழ்த்துக்கள்!]]]

    நன்றி ரிஷி..!

    [[[மனுஷ்யபுத்ரன் கண்களில் இந்தப் பதிவு விழுமா?]]]

    படாமல் இருக்குமா..?

    ReplyDelete
  16. [[[மோகன் குமார் said...

    தொபுக்..

    என்ன சத்தமா? குதிச்சாச்சு !]]]

    குட் மோகன்குமார்..! வெல்கம் டூ போட்டி..!

    ReplyDelete
  17. [[கென்., said...
    தேகம் படித்தீர்களா என்ன புரிந்து கொண்டீர்கள் என ஒரு பதிவு எழுதவும்
    மற்றபடி ஒன்றும் சொல்வதற்கில்லை]]]

    படித்தேன். படித்து முடித்துவிட்டேன். ஏதாவது புரிந்தால்தானே எழுதுவதற்கு..?

    ReplyDelete
  18. [[[வந்தியத்தேவன் said...

    வாழ்த்துக்கள் அண்ணாச்சி.]]]

    அடடா.. இப்ப வாங்கிட்ட மாதிரியே பீல் பண்றேண்ணே..! நன்றிங்கண்ணா..!

    ReplyDelete
  19. [[[ராம்ஜி_யாஹூ said...
    இந்த முறை சிறந்த பதிவர் விருதை தேர்ந்து எடுக்கும் நடுவர் சாருநிவேதிதாவா அல்லது விமலாதித்த மாமல்லனா?]]]

    இருவரில் ஒருவராக இருக்கலாம். அல்லது இருவருமாகவே இருக்கலாம்..!

    ReplyDelete
  20. [[[ரிஷி said...
    //5. சுஜாதா இணைய விருது: சிறந்த வலைப்பதிவு (blog) அல்லது இணைய இதழுக்கு (website) //

    Blog என்றால் வலைப்பூ என்றுதானே சொல்ல வேண்டும்? வலைப்பதிவு என்றால் குறிப்பிட்ட ஒரு பதிவைத்தானே குறிக்கும்?]]]

    ஆமாம்.. மன்னிக்கவும். நான்தான் தவறாக எழுதிவிட்டேன்..!

    [[[அப்புறம், இணைய இதழுக்கும், இணையதளத்திற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா? இவர்கள் எதனடிப்படையில் இந்த விருதுகளை வழங்கப் போகிறார்கள் எனத் தெரியவில்லை.]]]

    மனுஷ்யபுத்திரனைத்தான் கேட்க வேண்டும்..!

    ReplyDelete
  21. [[[துளசி கோபால் said...
    முயற்சி வெற்றி பெற வாழ்த்துகின்றேன்.]]]

    நன்றி டீச்சர்.. நன்றி மனுஷ்யபுத்திரன்..!

    ReplyDelete
  22. [[[Vinoth said...
    இடுகையை படித்து பார்த்து விமர்சனம் செய்வது ஆரோக்கியமான பாணி, அதை விடுத்து எனக்கு வடை எனக்கு 2-வது வடை எனக்கு ரசம் எனக்கு குழம்பு என்பது பார்க்க பிச்சைகாரதனமா இருக்கு..]]]

    அது ச்சும்மா ஒரு ஜாலிக்குச் செய்றாங்கப்பூ.. லூஸ்ல விடுங்க..

    ReplyDelete
  23. [[[பார்வையாளன் said...

    பிச்சைகாரதனமா இருக்கு..

    thank u for compliments
    - pichaikaaran.blogspot.com]]]

    மிக்க நன்றி பார்வையாளன் ஸார்.. பிச்சை வாங்கிய பின்பு தாங்களும் எங்களுக்கு பிச்சை போடலாம்..!

    ReplyDelete
  24. [[[பார்வையாளன் said...
    யுத்தம் செய் - ப்ளூ பிலிமா , கிரேட் பில்மா ?]]]

    அதுவொரு கிரேட் பிலிம்..!

    ReplyDelete
  25. [[[செம்மலர் செல்வன் said...

    எழுத்தாளனுக்கு எழுத எவ்வளவு உரிமை இருக்கிறதோ, பதிப்பாளருக்கும் அதை வெளியிட உரிமை இருக்கின்றது. நல்லது, கெட்டதை விமர்சிக்க நிராகரிக்க பாராட்ட மட்டுமே நமக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் தண்டிக்க அல்ல.
    நல்ல இயக்குனர்களின் திரைப்படங்கள் மோசமாக இருக்கும்போது சம்பந்தப்பட்டவர்களை தண்டிப்பீர்களா? அவர்களின் அடுத்த படங்களை காணாமல் இருப்பீர்களா?
    யாருக்கும் வக்காலத்து இல்லை. சும்மா கேக்கணும்னு தோணுச்சு. கேட்டுட்டேன். தப்பா எடுத்துக்காதீங்க.]]]

    ஓகே.. உங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே..!

    ReplyDelete
  26. [[[ராஜரத்தினம் said...

    அந்த பணம் கலைஞரை கள்ள கபடமற்றவர் என்று மாரடித்த ஸ்பெக்ட்ரம் பணம் அது உங்களுக்கு தேவையா?]]]

    தேவையி்லலைதான்.. ஆனால் ஸ்பெக்ட்ரமில் கொள்ளையடித்த பணம் மனுஷ்யபுத்திரனிடம் எப்படி வந்து சேர்ந்தது..? புரியவில்லையே..!

    ReplyDelete
  27. //ஸ்பெக்ட்ரமில் கொள்ளையடித்த பணம் மனுஷ்யபுத்திரனிடம் எப்படி வந்து சேர்ந்தது..? புரியவில்லையே..!//

    புரியவில்லையா? இல்லை புரிஞ்சிக்க விரும்மலையா? கருணாநிதியை கள்ளம் கபடமற்றவர்னு ஒருத்தர் சொல்லனும்னா அவர் எவ்ளோ கள்ளம் உள்ளவராக இருக்கவேண்டும். அவர் ஆதாயம் இல்லாமல் அப்படி சொல்லமுடியுமா? அவர் மட்டுமில்லை பத்ரியின் பணமும் இதில்தான் வரும்.

    ReplyDelete
  28. வணக்கங்களும், வாழ்த்துக்களும்..

    ReplyDelete
  29. பகிர்விற்கு நன்றி உண்மைத் தமிழன்

    ReplyDelete
  30. >>> வெற்றி பெறப்போகும் நண்பர்/சகோதரிக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்! நீங்க ஜெயிச்சா பைவ் ஸ்டார் ஓட்டல்ல எங்களுக்கு ட்ரீட்டு..!!

    ReplyDelete
  31. தேகம் படிக்கலை. அது அவ்வளவு கீழ்தரமான போர்ன் நாவல் என்றால், சட்டப்படி அனுகமுடியாதா? தமிழ் இலக்கிய சங்கம் அது இதுனு எதுவும் இல்லையா?

    ReplyDelete
  32. //ஸோ.. இந்த ஆண்டு நான் களத்தில் குதிக்கத் தயாராகிவிட்டேன்.//

    நான் அந்தாண்ட அக்கடான்னு உட்கார்ந்து கைதட்டி விசில் அடிக்கிறேன்.

    ReplyDelete
  33. [[[ராஜரத்தினம் said...

    //ஸ்பெக்ட்ரமில் கொள்ளையடித்த பணம் மனுஷ்யபுத்திரனிடம் எப்படி வந்து சேர்ந்தது..? புரியவில்லையே..!//

    புரியவில்லையா? இல்லை புரிஞ்சிக்க விரும்மலையா? கருணாநிதியை கள்ளம் கபடமற்றவர்னு ஒருத்தர் சொல்லனும்னா அவர் எவ்ளோ கள்ளம் உள்ளவராக இருக்க வேண்டும். அவர் ஆதாயம் இல்லாமல் அப்படி சொல்ல முடியுமா? அவர் மட்டுமில்லை பத்ரியின் பணமும் இதில்தான் வரும்.]]]

    மனுஷ்யபுத்திரனின் மீதான விமர்சனம் அவரது படைப்புகள் மற்றும் பதிப்பகம் மீதானவையாக மட்டுமே இருப்பதுதான் நியாயமானது. ஆனால் இந்த அளவுக்கு கனிமொழியை விழாவுக்கு அழைத்தார் என்ற ஒரே காரணத்திற்காக இவரும் கூட்டணி என்று சொல்வது ஏற்றுக் கொள்ள முடியாத வாதம்.. இதுவே பத்ரிக்கும் பொருந்தும்..!

    ReplyDelete
  34. [[[பாரத்... பாரதி... said...

    வணக்கங்களும், வாழ்த்துக்களும்.]]]

    நன்றி நண்பரே..!

    ReplyDelete
  35. [[[Gopi Ramamoorthy said...

    பகிர்விற்கு நன்றி உண்மைத்தமிழன்.]]]

    வாங்க கோபி. நீங்களும் கலந்துக்குங்க..!

    ReplyDelete
  36. [[[shanmugavel said...

    வாழ்த்துக்கள்.]]]

    வாழ்த்தெல்லாம் கெடக்கட்டும். மெயில் அனுப்பிட்டீங்களா இல்லையா..?

    ReplyDelete
  37. [[! சிவகுமார் ! said...
    >>> வெற்றி பெறப் போகும் நண்பர்/சகோதரிக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்! நீங்க ஜெயிச்சா பைவ் ஸ்டார் ஓட்டல்ல எங்களுக்கு ட்ரீட்டு..!!]]]

    கண்டிப்பா தரேன்..!

    ReplyDelete
  38. [[[வருண் said...
    தேகம் படிக்கலை. அது அவ்வளவு கீழ்த்தரமான போர்ன் நாவல் என்றால், சட்டப்படி அணுக முடியாதா? தமிழ் இலக்கிய சங்கம் அது இதுனு எதுவும் இல்லையா?]]]

    ஹா.. ஹா.. வருண் நல்லா காமெடி பண்றீங்க..? இதுவே இப்படீன்னா ஜீரோ டிகிரியை என்னன்னு சொல்வீங்க..? இதெல்லாம் பி்ன்னவீனத்துவம்..! கேட்கவே கூடாது..!

    ReplyDelete
  39. [[[ராஜ நடராஜன் said...

    //ஸோ.. இந்த ஆண்டு நான் களத்தில் குதிக்கத் தயாராகிவிட்டேன்.//

    நான் அந்தாண்ட அக்கடான்னு உட்கார்ந்து கை தட்டி விசில் அடிக்கிறேன்.]]]

    அதெல்லாம் முடியாது. நீங்களும் கலந்துக்கணும்..! அப்பத்தான் பைட் நல்லாயிருக்கும்..!

    ReplyDelete
  40. 'நமது வாத்தியார்' சுஜாதாவின் பெயரில் அமைந்திருக்கும் இந்த விருதினைப்பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  41. //இடுகையை படித்து பார்த்து விமர்சனம் செய்வது ஆரோக்கியமான பாணி, அதை விடுத்து எனக்கு வடை எனக்கு 2வது வடை எனக்கு ரசம் எனக்கு குழம்பு என்பது பார்க்க பிச்சைகாரதனமா இருக்கு..//

    இது பரவாயில்லை. எனக்குத்தான் சுடு சோறு என்று ஒரு பின்னூட்டம் இருக்கும். அதைப் பார்த்தாலே கடும் எரிச்சல் வரும். அடுத்த கமென்ட்டை மட்டுமல்ல, பதிவைப் பார்க்கவே எரிச்சலாக இருக்கும். நீங்களாவது சொன்னீர்களே.

    //ஒரு லின்க் சுமாராக 10 பக்கங்கள் என்றால்கூட ஒரு பதிவருக்கு 100 பக்கங்கள்// எல்லா லிங்குகளும் உண்மைத்தமிழன் லிங்க்குகளா என்ன? ;-)

    ReplyDelete
  42. எங்க சார்பா விருதைத் தட்டிக்கிட்டு வாங்கண்ணே..நீங்க மட்டும் 1 சுட்டி அனுப்புனா போதும்னு சொல்லலையா?

    ReplyDelete
  43. //ஆனால் இந்த அளவுக்கு கனிமொழியை விழாவுக்கு அழைத்தார் என்ற ஒரே காரணத்திற்காக இவரும் கூட்டணி என்று சொல்வது ஏற்றுக் கொள்ள முடியாத வாதம்.. இதுவே பத்ரிக்கும் பொருந்தும்..!//

    ஒன்னுமே புரியல பாஸ். அப்ப கசாப் ஓட்டல் நடத்தினா நீங்க அவரின் தொழிலின் சுவையை மட்டுமே விமர்சிப்பீர்களா? இவர்கள் இருவருமே ஒரு ஊழலை தெரிந்தே தங்கள் ஆதாயத்திற்காக ஆதரிப்பவர்கள். இப்படி பட்டவர்களை முழுவதுமாக நிராகரிப்பதுதான் உங்களின் மற்ற பதிவுகளை நியாயபடுத்தும். இல்லைனா நீங்களும் அவர்களில் ஒருவராக மாறிவிட வாய்ப்புண்டு.

    ReplyDelete
  44. [[[புலிக்குட்டி said...
    'நமது வாத்தியார்' சுஜாதாவின் பெயரில் அமைந்திருக்கும் இந்த விருதினைப் பெற வாழ்த்துக்கள்.]]]

    உங்க ஆசீர்வாதத்துல விருது கிடைத்தால் சந்தோஷம்தான்..!

    ReplyDelete
  45. [[[அருள் சேனாபதி said...

    வாழ்த்துக்கள் வெற்றி பெற!!!]]]

    ஐயையோ.. எல்லாரும் வாங்கப்பான்னு சொன்னா.. என்னையவே கொண்டு போய் தள்ளுறீங்க..?

    ReplyDelete
  46. [[[அமர பாரதி said...

    //இடுகையை படித்து பார்த்து விமர்சனம் செய்வது ஆரோக்கியமான பாணி, அதை விடுத்து எனக்கு வடை எனக்கு 2வது வடை எனக்கு ரசம் எனக்கு குழம்பு என்பது பார்க்க பிச்சைகாரதனமா இருக்கு..//

    இது பரவாயில்லை. எனக்குத்தான் சுடு சோறு என்று ஒரு பின்னூட்டம் இருக்கும். அதைப் பார்த்தாலே கடும் எரிச்சல் வரும். அடுத்த கமென்ட்டை மட்டுமல்ல, பதிவைப் பார்க்கவே எரிச்சலாக இருக்கும். நீங்களாவது சொன்னீர்களே.]]]

    எனக்கும் எரிச்சல்தான் வருகிறது. ஆனால் பி்ன்னூட்டம் போடுபவர்கள் நெருங்கியவர்களாகவும் இருப்பதால் வன்மையாகக் கண்டிக்க முடியவில்லை..!

    [[[//ஒரு லின்க் சுமாராக 10 பக்கங்கள் என்றால்கூட ஒரு பதிவருக்கு 100 பக்கங்கள்// எல்லா லிங்குகளும் உண்மைத்தமிழன் லிங்க்குகளா என்ன? ;-)]]]

    ஏன்.. என்னைத் தவிர வேறு யாரும் பெரிசு, பெரிசா எழுதலையா என்ன..? நிறைய பேர் எழுதியிருக்காங்க ஸார்..!

    ReplyDelete
  47. [[[செங்கோவி said...
    எங்க சார்பா விருதைத் தட்டிக்கிட்டு வாங்கண்ணே. நீங்க மட்டும் 1 சுட்டி அனுப்புனா போதும்னு சொல்லலையா?]]]

    இல்லையே.. எனக்கும் பத்து சுட்டிகள்தானாம்..!

    ReplyDelete
  48. [[[ராஜரத்தினம் said...

    //ஆனால் இந்த அளவுக்கு கனிமொழியை விழாவுக்கு அழைத்தார் என்ற ஒரே காரணத்திற்காக இவரும் கூட்டணி என்று சொல்வது ஏற்றுக் கொள்ள முடியாத வாதம்.. இதுவே பத்ரிக்கும் பொருந்தும்..!//

    ஒன்னுமே புரியல பாஸ். அப்ப கசாப் ஓட்டல் நடத்தினா நீங்க அவரின் தொழிலின் சுவையை மட்டுமே விமர்சிப்பீர்களா? இவர்கள் இருவருமே ஒரு ஊழலை தெரிந்தே தங்கள் ஆதாயத்திற்காக ஆதரிப்பவர்கள். இப்படிபட்டவர்களை முழுவதுமாக நிராகரிப்பதுதான் உங்களின் மற்ற பதிவுகளை நியாயபடுத்தும். இல்லைனா நீங்களும் அவர்களில் ஒருவராக மாறிவிட வாய்ப்புண்டு.]]]

    பத்ரி ஸ்பெக்ட்ரம் விற்பனையில் நடந்திருக்கும் நடைமுறை முறைகேடுகளை ஆதரிக்கவில்லை..! நன்றாகப் படித்துப் பாருங்கள். நாம் சொல்கின்ற அளவுக்கான தொகையையும், அதனை நாம் ஊழல் என்று கருதக் கூடாது என்றும்தான் வேறொரு கோணத்தில் பார்க்கிறார்.

    மனுஷ்யபுத்திரனும் ஸ்பெக்ட்ரம் ஊழலை ஆதரிக்கவில்லை. நீங்கள் எதனை வைத்து இவர்கள் ஆதரிக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள்..?

    ReplyDelete
  49. ///Vinoth said...

    இடுகையை படித்து பார்த்து விமர்சனம் செய்வது ஆரோக்கியமான பாணி, அதை விடுத்து எனக்கு வடை எனக்கு 2வது வடை எனக்கு ரசம் எனக்கு குழம்பு என்பது பார்க்க பிச்சைகாரதனமா இருக்கு..///

    அடடா! நான் போட்ட பின்னூட்டம் பிரளயத்தையே ஏற்படுத்துதே! மக்களே! வலையுலக வரலாற்றிலேயே இன்றுதான் நான் முதன்முறையாக மீ த பர்ஸ்ட் போட்டிருக்கிறேன். நான் பதிவர் அல்ல. நான்கு வருடங்களாக வலையுலகை மேய்ந்து வரும் ஒரு வாசகன். வெறெந்த வலைப்பூவிலும் நான் பின்னூட்டம் இடுவதில்லை. எனக்கும் இது போன்ற வகையில் பின்னூட்டம் போட்டு பதிவின் சீரியஸ்னெஸ்ஸைக் குலைக்கும் உத்தி பிடித்தமானது அல்லதான்! இருந்தாலும் அதில் ஒரு சந்தோஷம் இருக்கிறதோ என ஒரு குறுகுறுப்பு நீண்ட நாட்களாக இருந்து வந்தது. அந்த ஆர்வக் கோளாறில் இரண்டு நாட்களுக்கு முன் மூன்றாவதாக வடை சாப்பிட்டதாக போட்டேன். நேற்று அண்ணன் பதிவு போட்டு அரைமணி நேரத்தில் அதைப் பார்த்து விட்டதாலும் யாரும் பின்னூட்டமையாலும் ஒரு உற்சாகத்தில் வடை சாப்பிட்டுவிட்டேன்!!! மன்னிக்க! இது ஒரு அல்ப சந்தோஷம்தான். இனி இது தொடராது என உறுதியளிக்கிறேன். எனது பின்னூட்டங்கள் எப்போதும் பதிவு வெளியிடும் கருத்தை அலசுவதாகவும், கேள்விகளைக் கேட்பதுவாகமே இருக்கும். நன்றி!

    ReplyDelete
  50. ///அமர பாரதி said...

    //இடுகையை படித்து பார்த்து விமர்சனம் செய்வது ஆரோக்கியமான பாணி, அதை விடுத்து எனக்கு வடை எனக்கு 2வது வடை எனக்கு ரசம் எனக்கு குழம்பு என்பது பார்க்க பிச்சைகாரதனமா இருக்கு..//

    இது பரவாயில்லை. எனக்குத்தான் சுடு சோறு என்று ஒரு பின்னூட்டம் இருக்கும். அதைப் பார்த்தாலே கடும் எரிச்சல் வரும். அடுத்த கமென்ட்டை மட்டுமல்ல, பதிவைப் பார்க்கவே எரிச்சலாக இருக்கும். நீங்களாவது சொன்னீர்களே.///

    அது மதி.சுதா. இந்தப் பின்னூட்டம் பார்த்து அவர் நொந்திருப்பார் என நினைக்கிறேன். இனிமேல் செய்யமாட்டார் மன்னித்து விட்டுவிடுங்கள் :-)

    ReplyDelete
  51. ///உண்மைத்தமிழன் said...

    [[[ரிஷி said...
    //5. சுஜாதா இணைய விருது: சிறந்த வலைப்பதிவு (blog) அல்லது இணைய இதழுக்கு (website) //

    Blog என்றால் வலைப்பூ என்றுதானே சொல்ல வேண்டும்? வலைப்பதிவு என்றால் குறிப்பிட்ட ஒரு பதிவைத்தானே குறிக்கும்?]]]

    ஆமாம்.. மன்னிக்கவும். நான்தான் தவறாக எழுதிவிட்டேன்..!///

    இல்லை. உயிர்மை தளத்தில் இருந்து எடுத்துப் போட்டிருக்கிறீர்கள்.அங்கேயே அப்படித்தான் இருக்கிறது!

    ReplyDelete
  52. /// [[[அப்புறம், இணைய இதழுக்கும், இணையதளத்திற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா? இவர்கள் எதனடிப்படையில் இந்த விருதுகளை வழங்கப் போகிறார்கள் எனத் தெரியவில்லை.]]]

    மனுஷ்யபுத்திரனைத்தான் கேட்க வேண்டும்..!///

    ஓகேண்ணா.. நான் விருதுகளை விரும்பாததற்குக் காரணமே இதுதான்! அவர்கள் அறிவிப்பிலேயே தெளிவில்லை! எதனடிப்படையில் தேர்ந்தெடுப்பார்கள் என்ற கைடுலைனாவது கொடுக்கப்படவேண்டுமே!!

    ReplyDelete
  53. //அதெல்லாம் முடியாது. நீங்களும் கலந்துக்கணும்..! அப்பத்தான் பைட் நல்லாயிருக்கும்..!//

    எது?வேடிக்கை பார்க்கிற வடிவேல உசுப்பி விட்டு ரிங்ல போட்டிக்கு அனுப்பற மாதிரி இருக்குது:)

    அடிவாங்குறவனுக்குத்தானே பரிசு?

    ReplyDelete
  54. உள்ளேன் ஐயா! (போட்டிக்கு பதிவுகளை அனுப்பும் அவசரம்!!!)

    ReplyDelete
  55. [[[ரிஷி said...
    அடடா! நான் போட்ட பின்னூட்டம் பிரளயத்தையே ஏற்படுத்துதே! மக்களே! வலையுலக வரலாற்றிலேயே இன்றுதான் நான் முதன்முறையாக மீ த பர்ஸ்ட் போட்டிருக்கிறேன். நான் பதிவர் அல்ல. நான்கு வருடங்களாக வலையுலகை மேய்ந்து வரும் ஒரு வாசகன். வெறெந்த வலைப்பூவிலும் நான் பின்னூட்டம் இடுவதில்லை. எனக்கும் இது போன்ற வகையில் பின்னூட்டம் போட்டு பதிவின் சீரியஸ்னெஸ்ஸைக் குலைக்கும் உத்தி பிடித்தமானது அல்லதான்! இருந்தாலும் அதில் ஒரு சந்தோஷம் இருக்கிறதோ என ஒரு குறுகுறுப்பு நீண்ட நாட்களாக இருந்து வந்தது. அந்த ஆர்வக் கோளாறில் இரண்டு நாட்களுக்கு முன் மூன்றாவதாக வடை சாப்பிட்டதாக போட்டேன். நேற்று அண்ணன் பதிவு போட்டு அரைமணி நேரத்தில் அதைப் பார்த்து விட்டதாலும் யாரும் பின்னூட்டமையாலும் ஒரு உற்சாகத்தில் வடை சாப்பிட்டுவிட்டேன்!!! மன்னிக்க! இது ஒரு அல்ப சந்தோஷம்தான். இனி இது தொடராது என உறுதியளிக்கிறேன். எனது பின்னூட்டங்கள் எப்போதும் பதிவு வெளியிடும் கருத்தை அலசுவதாகவும், கேள்விகளைக் கேட்பதுவாகமே இருக்கும். நன்றி!]]]

    ரிஷி விடுங்க.. அவங்களுக்கு உங்களைப் பத்தி தெரியாது.. இப்ப நீங்க சொன்னதே போதும். சில சமயம் அனைவருமே இது மாதிரி வேலைகளை செஞ்சிருக்கோம் நான் உட்பட.. கும்மி பதிவுகள்ல..

    ReplyDelete
  56. [[[ரிஷி said...
    அது மதி.சுதா. இந்தப் பின்னூட்டம் பார்த்து அவர் நொந்திருப்பார் என நினைக்கிறேன். இனிமேல் செய்ய மாட்டார். மன்னித்து விட்டுவிடுங்கள்:-)]]]

    -)))))))))))

    ReplyDelete
  57. [[[ரிஷி said...

    ///உண்மைத்தமிழன் said...
    [[ரிஷி said...
    //5. சுஜாதா இணைய விருது: சிறந்த வலைப்பதிவு (blog) அல்லது இணைய இதழுக்கு (website) //

    Blog என்றால் வலைப்பூ என்றுதானே சொல்ல வேண்டும்? வலைப்பதிவு என்றால் குறிப்பிட்ட ஒரு பதிவைத்தானே குறிக்கும்?]]]

    ஆமாம்.. மன்னிக்கவும். நான்தான் தவறாக எழுதிவிட்டேன்..!///

    இல்லை. உயிர்மை தளத்தில் இருந்து எடுத்துப் போட்டிருக்கிறீர்கள். அங்கேயே அப்படித்தான் இருக்கிறது!]]]

    ஓ.. நன்றி.. இனி அவர்களும் திருத்திக் கொள்வார்கள்..!

    ReplyDelete
  58. [[[ரிஷி said...
    [[அப்புறம், இணைய இதழுக்கும், இணையதளத்திற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா? இவர்கள் எதனடிப்படையில் இந்த விருதுகளை வழங்கப் போகிறார்கள் எனத் தெரியவில்லை.]]]
    மனுஷ்யபுத்திரனைத்தான் கேட்க வேண்டும்..!///

    ஓகேண்ணா.. நான் விருதுகளை விரும்பாததற்குக் காரணமே இதுதான்! அவர்கள் அறிவிப்பிலேயே தெளிவில்லை! எதனடிப்படையில் தேர்ந்தெடுப்பார்கள் என்ற கைடுலைனாவது கொடுக்கப்பட வேண்டுமே!!]]]

    அதான் சொல்லியிருக்காங்களே.. பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும் இணைந்து தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் என்று..!

    ReplyDelete
  59. [[[ராஜ நடராஜன் said...

    //அதெல்லாம் முடியாது. நீங்களும் கலந்துக்கணும்..! அப்பத்தான் பைட் நல்லாயிருக்கும்..!//

    எது? வேடிக்கை பார்க்கிற வடிவேல உசுப்பிவிட்டு ரிங்ல போட்டிக்கு அனுப்பற மாதிரி இருக்குது:) அடி வாங்குறவனுக்குத்தானே பரிசு?]]]

    அட சும்மா வாங்கண்ணே.. துணைக்கு ஒரு ஆள் வேண்டாமா..?

    ReplyDelete
  60. [[[Arun Ambie said...
    உள்ளேன் ஐயா! (போட்டிக்கு பதிவுகளை அனுப்பும் அவசரம்!!!)]]]

    ஆஹா.. சூப்பர்.. சூப்பர்.. சூப்பர்.. ஒரு ஆடு சிக்கிருச்சுய்யா..!

    ReplyDelete
  61. ரிஷி,

    "மீ த பர்ஸ்ட்" பின்னூட்டம் ராப் எனும் பெண்ணால் ஆரம்பித்து வைக்கப்பது. அது முதலில் செய்ததால் ரசிப்புக்கு உரியதாகவும் இருந்தது. அதில் உண்மையும் எக்ஸைட்மென்ட்டும் இருந்தது. அதை தழுவி வரும் வடை சுடு சோறு போன்றவை எரிச்சலையே தருகின்றன.

    உங்கள் பின்னூட்டம் இதை வெளிப்படுத்த ஒரு சந்தர்ப்பமாக போய்விட்டது, அவ்வளவே. மற்றபடி நானும் 6 வருடங்களாக வாசகன் மட்டுமே.

    உண்மைத்தமிழரே,

    //சில சமயம் அனைவருமே இது மாதிரி வேலைகளை செஞ்சிருக்கோம் நான் உட்பட// கும்மி பதிவுகளில் இடத்துக்கு தகுந்தவாறு செய்வது தவறில்லையே. எல்லா பதிவுகளிலும் போய் முதல் வடை, இரண்டாம் வடி, சுடு சோறு என்று போடுவதையே வினோத்தும் நானும் சுட்டிக் காட்டினோம்.

    //அவங்களுக்கு உங்களைப் பத்தி தெரியாது// எனக்கு அவரை தெரிந்தால் என்ன தெரியாவிட்டால் என்ன. பல நாட்களாக இதைப் பற்றி பின்னூட்ட நினைத்திருந்த போது அவர் இட்ட பின்னூட்டம் ஒரு காரணியாக அமைந்து விட்டது. இது ரிஷி ஒருவருக்கான பதில் அல்ல.

    ReplyDelete
  62. //அதான் சொல்லியிருக்காங்களே.. பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும் இணைந்து தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் என்று..!//

    அது சரிதான் சரவணன்! எதற்கு கேட்டேன் என்றால் நாம் நடத்தி வரும் மின்னிதழ் சார்பாக போட்டிக்கு அனுப்பி வைக்கலாம் என்று நினைத்தோம். அதன்பின் எதற்கு வெட்டிவேலை என்று விட்டுவிட்டோம். உதாரணமாக, பத்து கட்டுரை லிங்குகளைக் கேட்டிருக்கிறார்கள். அதனால் இணையதளத்தையோ அல்லது மின்னிதழையோ அந்த கட்டுரைகளின் தரத்தைக் கொண்டு அளவிடுவார்களா.. அதில் வேறென்ன அளவுகோல் உள்ளது..? இதழின் வடிவமைப்பு, வாசகர் கருத்துக்களுக்கு மதிப்பு, கட்டுரையாளர்களுக்கு தரும் பதில்கள் போன்றவற்றையும் அளவுகோல்களாக எடுப்பார்களா என சந்தேகமிருக்கிறது. இதையெல்லாம் அந்த முன்னணி பத்திரிகையாளர்களும் எழுத்தாளர்களும் கருத்தில் கொள்வார்களா எனத் தெரியவில்லை. அதான் கேட்டேன். ஸாரி..மனுஷ்யபுத்திரனைக் கேட்க வேண்டிய கேள்விகள்தான்!!

    ReplyDelete
  63. மதிப்பிற்குறிய மனுஷ்ய புத்திரனை ஏன் திட்டிக்கொண்டிருக்கிறீர்கள் என்று புரியவில்லை.
    அவரைத் திட்டுவது மனிதத்தையே திட்டுவது என்பது பெரும்பான்மையானவர்களின் கருத்து.
    அவர் உங்களுக்கு வர வேண்டிய ஏதேனையும் அபகரித்து விட்டாரா?
    ஏன் இத்தனை வன்மம்?

    ReplyDelete
  64. [[[அமர பாரதி said...

    ரிஷி, "மீ த பர்ஸ்ட்" பின்னூட்டம் ராப் எனும் பெண்ணால் ஆரம்பித்து வைக்கப்பது. அது முதலில் செய்ததால் ரசிப்புக்கு உரியதாகவும் இருந்தது. அதில் உண்மையும் எக்ஸைட்மென்ட்டும் இருந்தது. அதை தழுவி வரும் வடை சுடு சோறு போன்றவை எரிச்சலையே தருகின்றன. உங்கள் பின்னூட்டம் இதை வெளிப்படுத்த ஒரு சந்தர்ப்பமாக போய்விட்டது, அவ்வளவே. மற்றபடி நானும் 6 வருடங்களாக வாசகன் மட்டுமே.]]]

    நன்றி அமரபாரதி ஸார்..! ரிஷியும் இதனை நிச்சயமாகப் புரிந்து கொள்வார் என்றே நினைக்கிறேன்..!

    ReplyDelete
  65. [[[உண்மைத்தமிழரே,

    //சில சமயம் அனைவருமே இது மாதிரி வேலைகளை செஞ்சிருக்கோம் நான் உட்பட//

    கும்மி பதிவுகளில் இடத்துக்கு தகுந்தவாறு செய்வது தவறில்லையே. எல்லா பதிவுகளிலும் போய் முதல் வடை, இரண்டாம் வடி, சுடு சோறு என்று போடுவதையே வினோத்தும் நானும் சுட்டிக் காட்டினோம்.

    //அவங்களுக்கு உங்களைப் பத்தி தெரியாது//

    எனக்கு அவரை தெரிந்தால் என்ன தெரியாவிட்டால் என்ன. பல நாட்களாக இதைப் பற்றி பின்னூட்ட நினைத்திருந்த போது அவர் இட்ட பின்னூட்டம் ஒரு காரணியாக அமைந்து விட்டது. இது ரிஷி ஒருவருக்கான பதில் அல்ல.]]]

    நன்றி அமரபாரதி ஸார்..! சிற்சில இடங்களில் இதுவே கொண்டாட்டமாகி இருப்பதால் இடம், பொருள் பார்க்காமல் எல்லா இடங்களிலும் இப்படியே இருக்கிறார்கள். இவர்களை மிரட்டினாலோ, விரட்டினாலோ மறுபடியும் பின்னூட்டம் போட வர மாட்டார்களே என்பதால் பலரும் எதுவும் சொல்வதில்லை. இதுதான் காரணம்..!

    நீங்கள் வெளிப்படையாகச் சொல்லிவிட்டீர்கள். நான் உங்களால் இப்போதுதான் இதனை வெளியில் சொல்கிறேன்.. நன்றி..!

    ReplyDelete
  66. [[[ரிஷி said...

    //அதான் சொல்லியிருக்காங்களே.. பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும் இணைந்து தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் என்று..!//

    அது சரிதான் சரவணன்! எதற்கு கேட்டேன் என்றால் நாம் நடத்தி வரும் மின்னிதழ் சார்பாக போட்டிக்கு அனுப்பி வைக்கலாம் என்று நினைத்தோம். அதன்பின் எதற்கு வெட்டிவேலை என்று விட்டுவிட்டோம். உதாரணமாக, பத்து கட்டுரை லிங்குகளைக் கேட்டிருக்கிறார்கள். அதனால் இணையதளத்தையோ அல்லது மின்னிதழையோ அந்த கட்டுரைகளின் தரத்தைக் கொண்டு அளவிடுவார்களா.. அதில் வேறென்ன அளவுகோல் உள்ளது..? இதழின் வடிவமைப்பு, வாசகர் கருத்துக்களுக்கு மதிப்பு, கட்டுரையாளர்களுக்கு தரும் பதில்கள் போன்றவற்றையும் அளவுகோல்களாக எடுப்பார்களா என சந்தேகமிருக்கிறது. இதையெல்லாம் அந்த முன்னணி பத்திரிகையாளர்களும் எழுத்தாளர்களும் கருத்தில் கொள்வார்களா எனத் தெரியவில்லை. அதான் கேட்டேன். ஸாரி. மனுஷ்யபுத்திரனைக் கேட்க வேண்டிய கேள்விகள்தான்!!]]]

    எனக்கும் அதுதான் டவுட்டாக இருக்கிறது..! எப்படியிருப்பினும் அவர்களது அளவுகோல் என்ன என்பது வெளிப்படையாகத் தெரியாததால் நாம் மேற்கொண்டு எதுவும் சொல்ல முடியாதுதான். மனுஷ்யபுத்திரனாக சொல்வாரா என்று பார்ப்போம்..!

    ReplyDelete
  67. [[[நண்பர்கள் உலகம் said...
    மதிப்பிற்குறிய மனுஷ்யபுத்திரனை ஏன் திட்டிக்கொண்டிருக்கிறீர்கள் என்று புரியவில்லை. அவரைத் திட்டுவது மனிதத்தையே திட்டுவது என்பது பெரும்பான்மையானவர்களின் கருத்து.
    அவர் உங்களுக்கு வர வேண்டிய ஏதேனையும் அபகரித்து விட்டாரா?
    ஏன் இத்தனை வன்மம்?]]]

    ஹா.. ஹா.. நல்லா காமெடி பண்றீங்க ஸார்..?

    நான் எங்க மனுஷை திட்டிருக்கேன்? மனுஷ் = மனிதம் என்கிறீர்கள்.. ம். அவருக்கு எனது பாராட்டுக்கள்.. அப்போ நாங்கள்லாம் யாராம்..? மிருகங்களா..?

    ReplyDelete
  68. என்னவோ நோபல் பரிசு கெடச்சே ரேஞ்சிக்கு பில்ட்அப் கொடுக்கற...மனுஷ்யபுத்திரன் பத்தி பேசுறதுக்கு உனக்கு என்ன தகுதி இருக்கு, கண்ட குப்பை படத்துக்கு விமர்சனம் என்ற பேருல என்ன எழவோ எழுதி தமிழ்மணத்துல அந்த எடத்துக்கு வந்துட்டேன் இந்த எடத்துக்கு வந்துட்டேன் அப்படி இப்படின்னு சீன் காட்ற. தமிழ்மணமே ஒரு குப்பை, இந்த லட்சணத்துல பதிவர் உலகம் மயிறு உலகமுட்டு. நீ எந்த போட்டியில கலந்துகிட்டா என்ன கலந்துகாட்டி எங்களுக்கு என்ன....பெரிய மயிறு மாதிரி "நானும் இந்த தடவை கலந்துகலாமுன்னு இருக்கேன்". கருமம்.

    ReplyDelete
  69. [[[சாரு புழிஞ்சதா said...
    என்னவோ நோபல் பரிசு கெடச்சே ரேஞ்சிக்கு பில்ட்அப் கொடுக்கற. மனுஷ்யபுத்திரன் பத்தி பேசுறதுக்கு உனக்கு என்ன தகுதி இருக்கு, கண்ட குப்பை படத்துக்கு விமர்சனம் என்ற பேருல என்ன எழவோ எழுதி தமிழ்மணத்துல அந்த எடத்துக்கு வந்துட்டேன் இந்த எடத்துக்கு வந்துட்டேன் அப்படி இப்படின்னு சீன் காட்ற. தமிழ்மணமே ஒரு குப்பை, இந்த லட்சணத்துல பதிவர் உலகம் மயிறு உலகமுட்டு. நீ எந்த போட்டியில கலந்துகிட்டா என்ன கலந்துகாட்டி எங்களுக்கு என்ன. பெரிய மயிறு மாதிரி "நானும் இந்த தடவை கலந்துகலாமுன்னு இருக்கேன்". கருமம்.]]]

    புழிஞ்சு எடுத்திருக்கும் புழிஞ்சுதாவுக்கு நன்றி..!

    சாருவுக்குத்தான் எப்படியெல்லாம் ஆள் கிடைக்குறாங்க..?

    ReplyDelete