Pages

Saturday, February 26, 2011

தி.மு.கழகம் குடும்பச் சொத்தா..?

26-02-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

'இந்திரா காந்தியின் வாரிசு அரசியலுக்கு வரலாம்... என் மகன் அரசியலுக்கு வரக் கூடாதா? என்.டி.ஆர் பேரன் நடிக்கலாம், என் பேரன் நடிக்கக் கூடாதா?' - தங்களது குடும்பத்தைப்  பற்றி யாராவது விமர்சனம் செய்தால், இப்படிப் பேசி வாரிசு அரசியலுக்கு வக்காலத்து வாங்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம், ''உங்களுக்கு அடுத்து ஸ்டாலின்தான் கட்சித் தலைவரா?'' என்று கேட்டால், ''திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றும் சங்கர மடம் அல்ல...'' என்று சொல்வார். அதாவது, கேள்வி கேட்கும் சூழ்நிலையைப் பொறுத்தே அவரது பதில்கள் அமையும்!

 'கட்சித் தலைவருக்குக் கொஞ்சமும் நாங்கள் சளைத்தவர்கள் இல்லை’ என தி.மு.க-வின் அமைச்சர்களும் வரிந்து கட்டிக் கொண்டு வாரிசு அரசியலை வளர்க்கிறார்கள். காலம் காலமாகக் கட்சிக்காக உழைத்தவர்கள் எல்லாம் அடிமட்டத்திலேயே கிடக்க... வாரிசு என்ற ஒரே அஸ்திரத்தை வைத்துக்கொண்டு, கட்சியில் பதவிக்கு வந்து 'சரசர’வென உச்சத்தைத் தொட்டுவிடப் பலரும் துடிக்கிறார்கள். கழகக் குடும்பங்களின் கதை இதோ...!

மருமகன் மட்டும் போதாது!


சுகாதாரத் துறை அமைச்சரும், கடலூர் மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தொடக்க காலத்தில் இருந்து தன் அக்காள் மகன் செந்தில்​குமாரைத் தன் அரசியல் வாரிசாக அடையாளம் காட்டினார். 'மருமகன் மட்டும் போதாது’ என நினைத்த பன்னீர்செல்வம், தற்போது தனது 21 வயது மகனான கதிரவனை அரசியல் களத்தில் இறக்கிவிட்டு புதிய வாரிசாக வளர்த்து வருகிறார். 'கட்சி போஸ்டர்கள், பேனர்களில் கதிரவனின் படம் மெகா சைஸில் இடம் பெற வேண்டும்’ என்பது எம்.ஆர்.கே-வின் தற்போதைய வாய்மொழி உத்தரவு.  'நாளைய கடலூர் மாவட்டமே’, '2016-ல் தமிழக விடிவெள்ளியே...’ என்றெல்லாம் கதிரவனை வாழ்த்தும் பேனர்கள், கடலூர் மாவட்டம் முழுக்க பளபளக்கிறது!

சிகாமணி அண்டு கோ!


தமிழக உயர் கல்வித் துறை அமைச்சரான பொன்​முடியின் மகன் கவுதம் சிகாமணி தளபதி நற்பணி மன்றத்தின் தலைவர். அப்பா நடத்தும் சூர்யா பொறி​யியல் கல்லூரியின் தாளாளரும் இவரே. கட்சி விழாக்கள், அரசு விழாக்களில் தனது ஆதரவாளர்களுடன் ஆஜராகி​விடுவார் கவுதம். 'தளபதியின் தளபதியே’, 'உயர் கல்வியின் வாரிசே...’ என்றெல்லாம் இவரது ஆதரவாளர்கள் முழங்குவார்கள். இப்போதெல்லாம் விழுப்புரம் மாவட்ட தி.மு.க-வினர் அடிக்கும் போஸ்டர்களிலும், பேனர்களிலும் பொன்முடி, பொன்முடியின் மனைவி, கவுதம் சிகாமணி, அவர் மனைவி, குழந்தைகள், பொன்முடியின் தம்பிகளான அந்த சிகாமணி, இந்த சிகாமணி என்ற 'சிகாமணி வகையறா’க்களின் படங்கள் கட்டாயம் இடம் பெறுகின்றன. பொன்முடி, வரும் தேர்தலில் விழுப்புரம் தொகுதியை மகனுக்கு விட்டுக் கொடுத்து,  தொகுதியையே மாற்றிக் கொள்ளக்கூடும் என்ற பேச்சும் எழுந்திருக்கிறது!

'கம்பன் எங்கே போனான்?'


விழுப்புரத்தைத் தாண்டி கொஞ்ச தூரம் நடந்து திருவண்ணாமலைக்கு வந்தால்... அமைச்சர் தண்டராம்பட்டு எ.வ.வேலு அமைத்த கல்வி வளாகங்களைக் கவனித்து வருகிறார் அவரது மகன் கம்பன். அதை மட்டும் பார்த்தால் போதுமா? தனக்குப் பின்னால் மாவட்டக் கழகம் இவரது கைக்குத்தான் போக வேண்டும் என்று வேலுவும் விரும்புகிறாராம். கட்சிக்காரர்கள் தன்னைப் பார்க்க வரும்போதெல்லாம், 'கம்பன் எங்க போயிட்டான். அவனை வரச் சொல்லுங்க...’ என கூப்பிட்டு பக்கத்தில் வைத்துக்கொள்வாராம் வேலு. கம்பன் பொறியியல் கல்லூரி, ஜீவா வேலு கலைக் கல்லூரியின் இயக்குநரான கம்பன், இப்போதெல்லாம் கட்சியின் முக்கிய நிகழ்ச்சிகளிலும் பங்கெடுக்கிறார். விளையாட்டுப் போட்டிகள், மரக்கன்று நடுதல் என்று கட்சியில் வேரூன்றி வருகிறார்!

கில்லாடி தம்பி!


அமைச்சர் துரைமுருகனின் அரசியல் வாரிசாக அவரது தம்பி துரைசிங்காரம் வளர்ந்துகொண்டு இருக்கிறார். மாவட்டம் முழுவதும் தொண்டர்களால் நன்கு அறியப்பட்ட சிங்காரம், மேல்மட்ட அரசியல் செய்வது, தன் அண்ணன் கலந்துகொள்ள முடியாத தொகுதி நிகழ்ச்சிகளில் தலைகாட்டுவது போன்றவற்றைச் செய்கிறார்.  அதே சமயம், துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தும் தற்போது அரசியலை ஏக்கமாகப் பார்த்து வருகிறார். 'தம்பியா... மகனா?’ என்ற சிக்கல் துரைமுருகனுக்கு வரலாம்!

துணைவியின் மகன்!


அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் முதல் மனைவி​யின் மகன் ராஜாவுடன், வீரபாண்டி ஆறுமுகத்தின் துணைவி லீலாவின் மகன் பிரபுவும் அரசியலில் தற்போது வளர்ந்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் சேலத்தில், முதல்வர் தலைமையில் கோலாகலமாக பிரபுவுக்குத் திருமணம் நடந்தது. வீரபாண்டி ஆறுமுகம் பிறந்த நாளில்... அநாதை இல்லத்துக்கு சாப்பாடு, ஏழைகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப் போவதாக போஸ்டர் அடித்து பிரகடனப்படுத்திக்​கொண்டது பிரபு தரப்பு. பிரபு தோற்றத்தில் வீரபாண்டியாரின் சாயலில் இருப்பதால், 'சின்ன வீரபாண்டியாரே!’ என்றுதான் கட்சி வட்டாரம்  அழைக்கிறது. இப்போது கட்சியின் போஸ்டர்​களிலும் பிரபுவின் படம் இடம் பிடிக்க ஆரம்பித்துவிட்டது!

மகனா... மருமகனா?


பைந்தமிழ் பாரி - அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியின் மகன். கோவை மாநகராட்சியின் தெற்கு மண்டலத் தலைவர். இவரையே தனது அரசியல் வாரிசாகக் கொண்டுவர தொடக்கத்தில் திட்டமிட்டார் பொங்கலூரார். ஆனால், பரபர அரசியலில் சின்னச் சின்னச் சர்ச்சைகளில் பாரி சிக்கிக்கொண்டார். இதைத் தொடர்ந்து தன் மருமகன் டாக்டர் கோகுலைக் கொண்டு வந்திருக்கிறார் அமைச்சர். கோகுல் துணை முதல்வருக்கும் மிக நெருக்கமானவர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதிக்கு அவரை வேட்பாளராக அறிவிக்கும் முடிவுக்கு வந்துவிட்டது கட்சித் தலைமை. ஆனால், பொங்கலூராரின் குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பத்தால், வேட்பாளர் மாற்றப்பட்டார் என்று தகவல். இந்த முறை, 'ஸீட்டை மகனுக்காகக் கேட்பதா... அல்லது மருமகனுக்காகக் கேட்பதா?’ என்ற புரியாத குழப்பத்தில் இருக்கிறாராம் பொங்கலூரார்!

ஆணையிட்டால் அலறும்!


கே.என்.நேருவுக்கு நிகரான மரியாதை அவரது சகோதரரான கே.என்.ராமஜெயத்துக்கு திருச்சி மாவட்டக் கட்சிக்காரர்களால் வழங்கப்படுகிறது. ஏராளமான நிலபுலன்கள், ஆசியாவின் நவீன அரிசி ஆலைகள், பொறியியல் கல்லூரி நிர்வாகம், ஜனனி குரூப் எனப் பல தொழில்கள் இருப்பதாலும், அண்ணன் நேருவுக்கு சகலமுமாக இருப்பதாலும், இவரிடம் மரியாதை அளிப்பவர்களைவிட... பயத்தில் பம்மிக் கிடப்பவர்கள் அதிகம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட முயற்சித்தார் ராமஜெயம். ஆனால், அதை நெப்போலியன் தட்டிப் பறித்தார் (அவரும் இவர்கள் குடும்பத்துக்காரர்தானே!). இப்போது தொகுதியை எதிர்பார்த்து காத்திருக்கிறார்  ராமஜெயம்!

கலக்கும் கருணைராஜா!


திருச்சி தி.மு.க-வில் நேருவுக்கு சீனியர் வனத் துறை அமைச்சர் செல்வராஜ். இடையில், ம.தி.மு.க-வுக்குப் போய்விட்டு வந்ததால், திருச்சி மாவட்டத்தில் அவருக்கு கொஞ்சம் இறங்கு முகமாகிவிட்டது. ஆனால், அமைச்சராகி மீண்டும் தன் பவரைத் தக்க​வைத்து வருகிறார். இவரது மகன் கருணைராஜா திருச்சி புறநகரில் கலக்குகிறார். கான்ட்ராக்ட் பணிகளை எடுத்துச் செய்து வந்தாலும், சாதி அடையாளத்தை முன்னிலைப்படுத்தி முத்தரையர் சங்க நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். செல்வராஜின் ஆதரவாளர்கள் போஸ்டர்கள் அடித்தால், கட்டாயம் கருணைராஜாவின் படத்தையும் போட்டு, இனி அண்ணனின் அரசியல் வாரிசு இவர்தான் என்று சொல்லி புளகாங்கிதம் அடைகிறார்கள்!

'உனக்கு இன்னும் வயசு இருக்கு!'


அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆரின் தம்பி, கே.கே.எஸ்.எஸ்.வி.டி. சுப்பாராஜ் விருதுநகர் மாவட்டத்துக்கு அறிவிக்கப்படாத அமைச்சர்! இந்த முறை தனக்கு ஸீட் வாங்கிக் கொடுக்க வேண்டும் என அண்ணனிடம் கறாராகவே சொல்லி இருக்கிறாராம் சுப்பாராஜ். தம்பி ஒரு பக்கம் எம்.எல்.ஏ. கனவில் மிதக்க... அமைச்சரின் மகன் ரமேஷுக்கும் அதே ஆசை. 'உனக்கு இன்னும் வயசு இருக்குடா தம்பி. சித்தப்பாவும் ஸீட் கேட்குறாரு. அதனால், நீ கொஞ்சம் பொறுமையா இரு...’ என மகனை அடக்கிக்கொண்டு இருக்கிறாராம் கே.கே.எஸ்.எஸ்.ஆர்! ரமேஷ் என்ன நினைக்கிறார் என்பது தேர்தலில் தெரியும்!

விடாப்பிடி அப்பா!


அமைச்சர் சுப.தங்கவேலனின் மகன் சுப.த.சம்பத், ஸ்டாலினின் தீவிர ஆதரவாளர். தந்தைக்குத் தொகுதி தரப்படும்போது, தனியாகத் தனக்கும் கேட்கும் வழக்​கம் இதுவரைக்கும் சம்பத்துக்கு இல்லை. இம்முறை தனக்கு அந்த வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்​பதில் உறுதியாக இருக்கிறார். 'எனக்கு ஸீட் கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. என் மகனுக்கு ஸீட் கொடுத்தே ஆக வேண்டும்’ என்பதில் தங்கவேலன் விடாப்பிடியாக இருக்கிறாராம். தங்கவேலனுக்கு வயதாகிவிட்டதால் இந்தத் தேர்தலில் அவர் மகனை களத்தில் இறக்கிவிட்டு அரசியலில் அமைதியாகிவிடுவார் என்றே எதிர்​பார்க்கப்படுகிறது!

ஐ.பி.எஸ்-க்கு மரியாதை!


திண்டுக்கல் ஐ.பெரியசாமியின் வாரிசு ஐ.பி.செந்தில்குமார். கட்சி வட்டாரத்​திலோ, 'ஐ.பி.எஸ்.’ என்று சொன்னால் போதும்! கடந்த ஐந்து வருடங்களில் ஐ.பி.எஸ்-ஸின் வளர்ச்சி அசுர வேகமானது. திண்டுக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரை ஐ.பி.எஸ். தலை​யீடு இல்​லாத அரசுத் துறைகளே இல்லை. கட்சிக்​காரர்​களும் சரி... அதிகாரிகளும் சரி... அமைச்​சருக்கு என்ன மரியாதை கொடுக்கிறார்​களோ, அதைவிட ஒரு மடங்கு மரியாதை ஐ.பி.எஸ்-க்கு அதிக​மாகவே கொடுக்கிறார்கள். இரண்டு பேருமே இப்போது தொகுதியை எதிர்பார்க்கிறார்கள்!

'எனக்கு பிறகு இவன்தான்!'


கோ.சி.மணிக்கு வயதாகிவிட்டது. அடிக்கடி உடல் நலக்குறைவும் ஏற்படுகிறது. அதனால், தன் மகன் இளங்கோவனைக் கட்சி​யில் முன்னிறுத்திக் கொண்டிருக்கிறார். தான் போகும் இடமெல்லாம் இளங்கோவனையும் அழைத்துக்​கொண்டு போய், 'எனக்குப் பிறகு எல்லாமே இவன்தான்... நீங்கதான் இவனைப் பொறுப்பா பார்த்துக்கணும்...’ என்று அறிமுகப்​படுத்துகிறாராம்.  'இனிமே எனக்கு ஸீட் வேண்டாம் தலைவரே... எம் பையனுக்கு ஸீட் கொடுத்துடுங்க!’ என்று கருணாநிதியிடம் இவர் சொல்லிவிட்டாராம்!

பேராசிரியரும்..!


நிதி அமைச்சர் க.அன்பழகனின் பேரன் வெற்றியழகன், இம்முறை தேர்தலில் நிற்பதற்கான ஏற்பாடு​களில் இருக்கிறார். கடந்த எம்.பி. தேர்தலிலேயே தனக்கான கோட்​டாவாக வெற்றியழகனுக்கு வாய்ப்பை எதிர்பார்த்தார் அன்பழகன். இந்த முறையும் கேட்பார். பச்சையப்பன் கல்வி அறக்கட்டளைத் தேர்தலில் கடும் போட்டிக்கு நடுவே வென்ற வெற்றியழகன், கிரானைட் தொழிலில் இருக்கிறார். அன்பழகன் நிற்கவில்லை என்றால் வெற்றியழகன் நிச்சயம் நிற்பார்!

சமீபத்தில் திருவண்ணாமலையில் முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டி இல்லத் திருமணத்தை நடத்திவைத்த கருணாநிதி, ''அமைச்சராக இருந்த பிச்சாண்டி, அதன் பிறகு அந்தப் பதவியை மற்றவர்களுக்கு விட்டுக்​கொடுத்துவிட்டார். மற்றவர்களுக்கு வழி விடுகின்ற இந்தப் பெருந்தன்மை எல்லோர்க்கும் வந்து விடுவதில்லை!'' என்று பேசியிருக்கிறார்!

யாருக்கு யார் விட்டுக்​ கொடுக்கிறார்கள் என்ற வீட்டு விவகாரத்தைவிட, மக்கள் யாருக்கு ஓட்டு போடுவார்கள் என்ற நாட்டு விவகாரம்தான் கழக வாரிசுகளின் தகுதிக்கு மார்க் போட வேண்டும்!

ஒன்று மட்டும் நிச்சயம்... 'கட்சி என்ன குடும்பச் சொத்தா?' என்று இனிமேல் தி.மு.க-வில் யாரும் உரக்கப் பேச முடி​யாது!

நன்றி : ஜூனியர்விகடன் - 02-03-2011

40 comments:

  1. நாளைய அஞ்சாநெஞ்சனே, நாளைய மாவட்டமே, நாளைய வல்லரசே, நாளைய... நாளைய..நாளைய... (ஸாரி.. என் வாய் கோணிக்கிச்சி!!)

    ReplyDelete
  2. தமிழ்நாட்டுல இவ்வளவு பொறுப்பான, பாசமான தந்தைமார்/தாத்தாமார் இருக்கறத நினைச்சு சந்தோசப் படுங்கண்ணே.

    ReplyDelete
  3. நானும் கவனிச்சுகிட்டு வரேன்,

    இந்த ஜூ.வி இரண்டாவது வாராம இந்த
    வாங்கு வாங்குது..

    என்னமோ நடக்குது..

    ReplyDelete
  4. [[[ரிஷி said...
    நாளைய அஞ்சாநெஞ்சனே, நாளைய மாவட்டமே, நாளைய வல்லரசே, நாளைய... நாளைய..நாளைய... (ஸாரி.. என் வாய் கோணிக்கிச்சி!!)]]]

    மறுபடியும் இதையே திருப்பிச் சொல்லுங்க.. சரியாயிரும்..!

    ReplyDelete
  5. [[[செங்கோவி said...
    தமிழ்நாட்டுல இவ்வளவு பொறுப்பான, பாசமான தந்தைமார்/தாத்தாமார் இருக்கறத நினைச்சு சந்தோசப்படுங்கண்ணே.]]]

    ஆஹா.. இப்படித்தான்யா நம்மாளுக தான் தலைல தானே மண்ணையள்ளிப் போட்டுக்குறாங்க..!

    ReplyDelete
  6. [[[காவேரிகணேஷ் said...
    நானும் கவனிச்சுகிட்டு வரேன், இந்த ஜூ.வி இரண்டாவது வாராம இந்த வாங்கு வாங்குது. என்னமோ நடக்குது..]]]

    சரி.. இவுங்களாவது எழுதறாங்களேன்னு சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான்..!

    ReplyDelete
  7. தமிழ்நாட்டில் கழகத்தை எதிர்த்து ஒரு குரலா ? சத்திய சோதனை...!!!

    ReplyDelete
  8. நமது வாரிசு அரசியல்வாதிகளும் நாளைய ஊழல்வாதிகளுமான இளந்தலைமுறைகள் இன்னும் உக்கிரமாக நம் தமிழ் மக்களை கொள்ளையடித்து சுரண்டி பெருவாழ்வு வாழ வாழ்த்தும்... அடுத்தவேளை உணவுக்கு அல்லாடும் ஏழைப்பங்காளானின் தமிழ் உறவு -இளிச்சவாய் தமிழன்-

    ReplyDelete
  9. எந்தவொரு தந்தையும், தாத்தையனும், தமது மக்கள் ( அதாவது பிள்ளைகள் ) நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பது என்பது உண்மைதான். அவர்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக உழைப்பதும், பணம் சேர்ப்பதும் உண்மைதான்... ஆனால் ஊரை அடித்து உலையில் போடும் கதையாக .. பொதுச்சேவை என்ற அரசியலில் அவரவர் வியாபார நலன் கருதி தான் பிள்ளை பெண்டுகளொடு களம் இறங்குகின்றனர். அரசியலில் வெற்றி பெறும் நபர் தம்து சொந்தப் பணத்திலேயே தொகுதி நலப்பணிகளை செய்யவேண்டும் ( வேறு பணம் கொடுக்கப்பட மாட்டாது ) என புது சட்டம் வந்தால் யாரும் அரசியல் நிறகாமல் துண்டக் காணோம் துணியக் காணோம் என்று ஓடிடுவாங்க................... ஆக கொள்ளை லாபம் எடுக்க அரசியல் நல்லதொரு தொழில், அதில் முதலீடுப் போட்டு கடுமையாக உழைத்தால் ( ஊழல் ) நிறைய லாபம் சம்பாதிக்கலாம்..... அவ்வளவே !!!

    ReplyDelete
  10. [[[Dinesh said...

    தமிழ்நாட்டில் கழகத்தை எதிர்த்து ஒரு குரலா? சத்திய சோதனை!]]]

    யாருக்கு.. தமிழர்களுக்குத்தானே..!?

    ReplyDelete
  11. [[[raja said...

    நமது வாரிசு அரசியல்வாதிகளும் நாளைய ஊழல்வாதிகளுமான இளந்தலைமுறைகள் இன்னும் உக்கிரமாக நம் தமிழ் மக்களை கொள்ளையடித்து சுரண்டி பெருவாழ்வு வாழ வாழ்த்தும். அடுத்த வேளை உணவுக்கு அல்லாடும் ஏழைப் பங்காளானின் தமிழ் உறவு -இளிச்சவாய் தமிழன்-]]]

    புரிஞ்சுக்கிட்டா சரி..! இந்தத் தேர்தலில் வாரிசுகளையும் ஓரம்கட்ட வேண்டியது நமது கடமை..!

    ReplyDelete
  12. [[[இக்பால் செல்வன் said...

    எந்தவொரு தந்தையும், தாத்தையனும், தமது மக்கள் (அதாவது பிள்ளைகள்) நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பது என்பது உண்மைதான். அவர்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக உழைப்பதும், பணம் சேர்ப்பதும் உண்மைதான். ஆனால் ஊரை அடித்து உலையில் போடும் கதையாக பொதுச்சேவை என்ற அரசியலில் அவரவர் வியாபார நலன் கருதி தான் பிள்ளை பெண்டுகளொடு களம் இறங்குகின்றனர். அரசியலில் வெற்றி பெறும் நபர் தம்து சொந்தப் பணத்திலேயே தொகுதி நலப் பணிகளை செய்ய வேண்டும் (வேறு பணம் கொடுக்கப்பட மாட்டாது) என புது சட்டம் வந்தால் யாரும் அரசியல் நிறகாமல் துண்டக் காணோம் துணியக் காணோம் என்று ஓடிடுவாங்க. ஆக கொள்ளை லாபம் எடுக்க அரசியல் நல்லதொரு தொழில், அதில் முதலீடுப் போட்டு கடுமையாக உழைத்தால் (ஊழல்) நிறைய லாபம் சம்பாதிக்கலாம். அவ்வளவே!]]]

    ஆஹா.. மிக எளிமையாக அரசியல்வியாதிகளின் சுருட்டல் சூத்திரத்தைச் சொல்லியிருக்கிறீர்கள்.. நன்றிகள் ஸார்..!

    ReplyDelete
  13. அண்ணாச்சி, அம்மா பிரசாரத்தை தொடங்கறதுக்கு முன்னாடியே நீங்க ஆரம்பிச்சிட்டீங்க போல இருக்கே? ஆனா ஒரு விஷயம் மட்டும் 2 வார ஜூவி கட்டுரைகளிலும் உறுத்துது.
    கல்வி தந்தைகள் கட்டுரையில வசதியா தம்பிதுரைய மறந்தாச்சு. இந்த வாரிசு விஷயத்துல மன்னார்குடி குரூப்பயும் மறந்தாச்சு. இந்த 2 கட்டுரைகளில் சொல்லப்பட்ட கோல் மால் எல்லாமே திமுக ல மட்டும் இல்ல, அதிமுக லயும் இருந்துட்டு தான் இருக்கு.
    "கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி வரைக்கும் நாம மட்டும் தான் கள்ள ஒட்டு போட்டுகிட்டு இருந்தோம். அதனால நம்ம வேட்பாளர்கள் எல்லாம் பெறுவாரியான ஒட்டு வித்தியாசத்துல ஜெயிச்சுட்டு இருந்தாங்க. ஆன இப்போ நம்மகிட்ட் இருந்து பிரிஞ்சு போனவங்கதான எதிர் கட்சியா இருக்காங்க. கள்ள ஓட்டு பின்றாங்களே" - அமைதிப்படை படத்துல வரும் இந்த வசனம் தான் நியாபகம் வருது.

    ReplyDelete
  14. உண்மைத் தமிழன், தி.மு.க தலைவர்களையும், வாரிசுகளையும் நினைத்தால் மிகவும் பயமாக இருக்கிறது, இன்னும் 2 முறை இவர்கள் ஆட்சிக்கு வந்தால் மேப்பில் தமிழ்நாடு என்ற மாநிலம் பெயருக்குத் தான் இருக்கும், எல்லா தொழில் துறைகளிலும் இவர்கள் கொடிதான் பறக்கும். இவர்களுடன் ஒப்பிட்டால் யார் ஆட்சிக்கு வந்தாலும் நன்றுதான்.

    ReplyDelete
  15. குடும்பமே கழகம், கழகமே குடும்பம் என்று புரிந்து நடந்து வரும் மாண்புமிகு உடன்பிறப்புகளின் செயலைப்பார்த்து மக்கள் கலக்கம் அடைந்து கலகம் செய்தால் தான் இதற்கு விடிவுகாலம் உண்டு.

    ReplyDelete
  16. இவர்கள் வர போகிறவர்கள் வந்தவர்கள் இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள்...

    ReplyDelete
  17. திருக்குவளை முத்துவேலர் கருணாநிதி என்பதன் சுருக்கமே தி.மு.க. தி.மு.க குடும்பம் என்பதற்கு இது தவிர வேறு விளக்கங்கள் தேவையில்லை. ஆகவே இந்தப் பாரம்பரியத்தைக் காப்பாற்ற வேண்டும் என்கிற லட்சிய வெறி இருப்போர் மட்டுமே கழகக் கண்மணிகள். இது புரியாமல் புலம்புவது தங்கள் அறியாமையையே காட்டுகிறது.

    ReplyDelete
  18. [[[SM said...

    அண்ணாச்சி, அம்மா பிரசாரத்தை தொடங்கறதுக்கு முன்னாடியே நீங்க ஆரம்பிச்சிட்டீங்க போல இருக்கே? ஆனா ஒரு விஷயம் மட்டும் 2 வார ஜூவி கட்டுரைகளிலும் உறுத்துது.
    கல்வி தந்தைகள் கட்டுரையில வசதியா தம்பிதுரைய மறந்தாச்சு. இந்த வாரிசு விஷயத்துல மன்னார்குடி குரூப்பயும் மறந்தாச்சு. இந்த 2 கட்டுரைகளில் சொல்லப்பட்ட கோல்மால் எல்லாமே திமுக-ல மட்டும் இல்ல, அதிமுக-லயும் இருந்துட்டுதான் இருக்கு.]]]

    உண்மைதான்.. தினகரனுக்கும், பாஸ்கரனுக்கும், டாக்டர் மகாதேவனுக்கும் அதிமுகவுக்கும் என்ன சம்பந்தம்..? ஆத்தாவின் கடைக்கண் பார்வை இருப்பதாலேயே இவர்கள் முன்னுக்கு வந்தார்கள் என்பதும் உண்மை..!

    [[["கொஞ்ச வருசத்துக்கு முன்னாடிவரைக்கும் நாம மட்டும்தான் கள்ள ஒட்டு போட்டுகிட்டு இருந்தோம். அதனால நம்ம வேட்பாளர்கள் எல்லாம் பெறுவாரியான ஒட்டு வித்தியாசத்துல ஜெயிச்சுட்டு இருந்தாங்க. ஆன இப்போ நம்மகிட்ட் இருந்து பிரிஞ்சு போனவங்கதான எதிர்க்கட்சியா இருக்காங்க. கள்ள ஓட்டு பின்றாங்களே" - அமைதிப்படை படத்துல வரும் இந்த வசனம்தான் நியாபகம் வருது.]]]

    ஹா.. ஹா.. ஹா.. எல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணாத்தான் இருக்காங்க இந்த விஷயத்துல மட்டும்..!

    ReplyDelete
  19. [[[கோநா said...

    உண்மைத் தமிழன், தி.மு.க தலைவர்களையும், வாரிசுகளையும் நினைத்தால் மிகவும் பயமாக இருக்கிறது, இன்னும் 2 முறை இவர்கள் ஆட்சிக்கு வந்தால் மேப்பில் தமிழ்நாடு என்ற மாநிலம் பெயருக்குத்தான் இருக்கும், எல்லா தொழில் துறைகளிலும் இவர்கள் கொடிதான் பறக்கும். இவர்களுடன் ஒப்பிட்டால் யார் ஆட்சிக்கு வந்தாலும் நன்றுதான்.]]]

    அதாவது இவர்களைவிட கொஞ்சமாகக் கொள்ளையடிப்பவர்கள்..! இந்த வரிசையில்தான் நாம் சிந்திக்கவே முடியும்.. இதுதான் நமது இன்றைய தமிழகத்தின் யதார்த்த அரசியல் நிலைமை..!

    ReplyDelete
  20. [[[சௌந்தர் said...
    இவர்கள் வர போகிறவர்கள்.. வந்தவர்கள் இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள்...]]]

    வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனும், தங்கம் தென்னரசுவின் மகனும் ஏற்கெனவே லைம்லைட்டுக்கு வந்தாச்சு..

    ReplyDelete
  21. [[[Arun Ambie said...
    திருக்குவளை முத்துவேலர் கருணாநிதி என்பதன் சுருக்கமே தி.மு.க. தி.மு.க குடும்பம் என்பதற்கு இது தவிர வேறு விளக்கங்கள் தேவையில்லை. ஆகவே இந்தப் பாரம்பரியத்தைக் காப்பாற்ற வேண்டும் என்கிற லட்சிய வெறி இருப்போர் மட்டுமே கழகக் கண்மணிகள். இது புரியாமல் புலம்புவது தங்கள் அறியாமையையே காட்டுகிறது.]]]

    சரி.. சரி.. ஒத்துக்குறேன்..!

    ReplyDelete
  22. [[[குறும்பன் said...
    குடும்பமே கழகம், கழகமே குடும்பம் என்று புரிந்து நடந்து வரும் மாண்புமிகு உடன்பிறப்புகளின் செயலைப் பார்த்து மக்கள் கலக்கம் அடைந்து கலகம் செய்தால்தான் இதற்கு விடிவு காலம் உண்டு.]]]

    இதற்குத்தான் எந்த முகமது உயிரைவிட்டு உணர்ச்சியை எழுப்ப வேண்டும் என்று தெரியவில்லை..!

    ReplyDelete
  23. அண்ணே! செம அலசல்..

    வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்
    கேள்விகள் கேட்கப் போவது நீங்கள் தான். சீனா பதிலளிக்க காத்திருக்கிறார். மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட LINK- ஐ பார்க்கவும்.

    ReplyDelete
  24. இந்த செய்திகளை எல்லாம் தினமும் படித்து விட்டு, தேர்தல் நேரத்தில் “தல” கொள்ளை அடித்து வைத்துள்ள பணத்திலிருந்து வாக்கரிசி காசை வாங்கி கொண்டு, மீண்டும் அதே கொள்ளைக்கூட்டத்திற்கே வாக்களித்து விட்டு, விரக்தியில் வாங்கிய காசுக்கு அப்படியே “டாஸ்மாக்” போய் சரக்கு அடித்து விட்டு குப்புற படுத்து குறட்டை விடலாம்...

    வேற என்ன செய்ய முடியும்?

    ReplyDelete
  25. இந்த செய்திகளை எல்லாம் தினமும் படித்து விட்டு, தேர்தல் நேரத்தில் “தல” கொள்ளை அடித்து வைத்துள்ள பணத்திலிருந்து வாக்கரிசி காசை வாங்கி கொண்டு, மீண்டும் அதே கொள்ளைக்கூட்டத்திற்கே வாக்களித்து விட்டு, விரக்தியில் வாங்கிய காசுக்கு அப்படியே “டாஸ்மாக்” போய் சரக்கு அடித்து விட்டு குப்புற படுத்து குறட்டை விடலாம்...

    வேற என்ன செய்ய முடியும்?

    Repeattu

    ReplyDelete
  26. பேரரசரும் சிற்றரசர்களும்..... பாண்டிய மன்னர், சோழ மன்னர்கள்லாம் இருக்காங்க, சேரமன்னர்தான் யாருன்னு இன்னும் புரியல.... !

    என்னே எழுச்சி, மாநாடு (மயிலாடு) கண்டு தமிழ் வளர்த்த தமிழா...

    வாழ்க நின் கொற்றம் வளர்க நின் புகழ்....!

    ReplyDelete
  27. [[[தமிழ்வாசி - Prakash said...
    அண்ணே! செம அலசல்.
    வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்
    கேள்விகள் கேட்கப் போவது நீங்கள்தான். சீனா பதிலளிக்க காத்திருக்கிறார். மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட LINK- ஐ பார்க்கவும்.]]]

    பார்த்தேன். நன்றிகள்..!

    ReplyDelete
  28. [[[R.Gopi said...
    இந்த செய்திகளை எல்லாம் தினமும் படித்துவிட்டு, தேர்தல் நேரத்தில் “தல” கொள்ளை அடித்து வைத்துள்ள பணத்திலிருந்து வாக்கரிசி காசை வாங்கி கொண்டு, மீண்டும் அதே கொள்ளைக் கூட்டத்திற்கே வாக்களித்து விட்டு, விரக்தியில் வாங்கிய காசுக்கு அப்படியே “டாஸ்மாக்” போய் சரக்கு அடித்து விட்டு குப்புற படுத்து குறட்டை விடலாம். வேற என்ன செய்ய முடியும்?]]]

    இந்தத் தடவையும் அதையே செஞ்சீங்கன்னா உங்க பிள்ளைகளுக்குன்னு இங்க எதுவுமே இருக்காது.. ஜாக்கிரதை.. சொல்லிப்புட்டேன்..!

    ReplyDelete
  29. [[[raja said...

    இந்த செய்திகளை எல்லாம் தினமும் படித்து விட்டு, தேர்தல் நேரத்தில் “தல” கொள்ளை அடித்து வைத்துள்ள பணத்திலிருந்து வாக்கரிசி காசை வாங்கி கொண்டு, மீண்டும் அதே கொள்ளைக்கூட்டத்திற்கே வாக்களித்து விட்டு, விரக்தியில் வாங்கிய காசுக்கு அப்படியே “டாஸ்மாக்” போய் சரக்கு அடித்து விட்டு குப்புற படுத்து குறட்டை விடலாம்...

    வேற என்ன செய்ய முடியும்?

    Repeattu]]]

    இந்த முறை மாற்றியே தீர வேண்டும்..!

    ReplyDelete
  30. [[[பன்னிக்குட்டி ராம்சாமி said...
    பேரரசரும் சிற்றரசர்களும்..... பாண்டிய மன்னர், சோழ மன்னர்கள்லாம் இருக்காங்க, சேர மன்னர்தான் யாருன்னு இன்னும் புரியல.... ! என்னே எழுச்சி, மாநாடு (மயிலாடு) கண்டு தமிழ் வளர்த்த தமிழா.]]

    அதான் வீரபாண்டி ஆறுமுகம் இருக்காரே.. போதாதா..?

    ReplyDelete
  31. \\''அமைச்சராக இருந்த பிச்சாண்டி, அதன் பிறகு அந்தப் பதவியை மற்றவர்களுக்கு விட்டுக்​கொடுத்துவிட்டார். மற்றவர்களுக்கு வழி விடுகின்ற இந்தப் பெருந்தன்மை எல்லோர்க்கும் வந்து விடுவதில்லை!''\\ ஐயா, முதலில் உங்களுக்கு அது என் வரமாட்டேங்குது? இப்படியே பேசிப் பேசி எத்தனை நாட்களுக்குத்தான் எங்களை கூமுட்டைகலாகவே வைத்திருப்பீர்கள்?

    ReplyDelete
  32. விவசாயி மகன் விவசாயியாகத்தான் இருக்க வேண்டும். டாக்டர் பையன் டாக்டரா இருக்கக் கூடாதா?... நிறைய கேட்டிருக்கிறேன். அரசியல்வாதிகளும் அவர்கள் குடும்பத் தொழிலில் இருந்துவிட்டு போகட்டுமே. இவர்களைப் பிடிக்காவிட்டால் இந்த மக்கள் ஏன் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்க வேண்டும். காமராஜரை சொந்தத் தொகுதியிலேயே தோற்கடித்து விட்டோம். இவர்களென்ன சுண்டைக்காய்.

    ReplyDelete
  33. [[[Jayadev Das said...

    \\''அமைச்சராக இருந்த பிச்சாண்டி, அதன் பிறகு அந்தப் பதவியை மற்றவர்களுக்கு விட்டுக்​கொடுத்துவிட்டார். மற்றவர்களுக்கு வழி விடுகின்ற இந்தப் பெருந்தன்மை எல்லோர்க்கும் வந்து விடுவதில்லை!''\\

    ஐயா, முதலில் உங்களுக்கு அது என் வரமாட்டேங்குது? இப்படியே பேசிப் பேசி எத்தனை நாட்களுக்குத்தான் எங்களை கூமுட்டைகலாகவே வைத்திருப்பீர்கள்?]]]

    ஹா.. ஹா.. ஹா.. பதவியில்லாமல் ஐயா ஒரு நாள்கூட இருக்க முடியாதே..! அட்வைஸெல்லாம் மற்றவர்களுக்குத்தான். தனக்கல்ல..!

    ReplyDelete
  34. [[[ந.ர.செ. ராஜ்குமார் said...

    விவசாயி மகன் விவசாயியாகத்தான் இருக்க வேண்டும். டாக்டர் பையன் டாக்டரா இருக்கக் கூடாதா? நிறைய கேட்டிருக்கிறேன். அரசியல்வாதிகளும் அவர்கள் குடும்பத் தொழிலில் இருந்துவிட்டு போகட்டுமே. இவர்களைப் பிடிக்காவிட்டால் இந்த மக்கள் ஏன் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்க வேண்டும். காமராஜரை சொந்தத் தொகுதியிலேயே தோற்கடித்து விட்டோம். இவர்களென்ன சுண்டைக்காய்.]]]

    மக்களிடையே விழிப்புணர்ச்சி இல்லை என்பதுதான் உண்மை..! காசுக்கு தங்களது ஓட்டை விற்கவும் துணிந்துவி்ட்ட மக்களை வைத்துக் கொண்டு என்ன செய்ய..?

    ReplyDelete
  35. Unmai Anna, Ungalluka 'Selective Amnesia' irrukuda.

    Have you not seen the below news and What's your view & feedback on this.

    http://lakaram.blogspot.com/2011/02/blog-post_830.html

    http://www.luckylookonline.com/2011/02/blog-post_25.html

    ReplyDelete
  36. [[[Prakash said...

    Unmai Anna, Ungalluka 'Selective Amnesia' irrukuda. Have you not seen the below news and What's your view & feedback on this.

    http://lakaram.blogspot.com/2011/02/blog-post_830.html

    http://www.luckylookonline.com/2011/02/blog-post_25.html]]]

    கொடுக்காமல் இருந்தால்தான் ஆச்சரியம். வர்த்தக எல்லைகளை விஸ்தரிக்க வேண்டி டிவிக்காரர்கள் செய்து வரும் கொஞ்சூண்டு முகஸ்துதிதான் இந்த விருது..!

    ReplyDelete
  37. [[[பாலச்சந்திரன் said...
    natta vittae ivanugala virattanum.]]]

    அதுக்கு ஒரே வழி.. தேர்தல் தினத்தன்று எதிர் வாக்குகளை அளிப்பதுதான்..!

    ReplyDelete