Pages

Friday, February 25, 2011

அருமைத் தம்பிகள் சென்ஷி, குசும்பன் மட்டும் படிக்கவும்..!

25-02-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இது சென்ஷி மற்றும் குசும்பனுக்கு மட்டுமான பதிவு..! மற்றவர்கள் படிக்க வேண்டாம். படித்தாலும் பின்னூட்டம் போட வேண்டாம். பின்னூட்டம் போட்டாலும் திரும்பியும் வர வேண்டாம்..! மீறினால் எதற்கும் நான் பொறுப்பில்லை..!

அருமைத் தம்பிகளா.. கழகத்தின் கண்மணிகளா.. உங்களுடைய கோரிக்கையை ஏற்று உங்களுடைய அருமை அண்ணனான நான் உங்களுக்காக, உங்களுக்காகவே, உங்களுடைய சந்தோஷத்திற்காக, உங்களுடைய விருப்பத்திற்காகவே, உங்களுடைய திருப்திக்காகவே.. "தப்பு" என்ற அந்தத் தப்பான படத்தைப் பார்த்துத் தொலைத்துவிட்டேன்.

படம் நீங்க சொன்ன மாதிரியே ‘ஒரு மாதிரி’யான படம்தான். ஆனால் லோ பட்ஜெட் படம்.. முழுக்க, முழுக்க கொடைக்கானலிலேயே ஷூட் செய்திருக்கிறார்கள். பகிரங்கமாக போஸ்டரிலேயே “படம் என்ன மாதிரியானது” என்று காட்டப்பட்டுவிட்டதால் தியேட்டரில் தாய்க்குலங்கள் யாரும் இல்லை.

கதை வழக்கமான கள்ளக் காதல் கதைதான்..!

மனைவியிருந்தும் காதலி ஒருத்தியை துணைவியாக வைத்திருக்கும் கணவன், மனைவியைக் கொலை செய்யத் திட்டமிட்டு வாடகை கொலையாளி ஒருவனை தனது வீட்டுக்கே அழைத்து வருகிறான்.

இதையறிந்த மனைவி, அதே கொலையாளியிடம் தனது உடலை மூலதனமாகக் காட்டி தனது கணவனை கொலை செய்யத் தூண்டுகிறாள்..

கொலையாளிக்கோ ஒரு பக்கம் பணம்.. இன்னொரு பக்கம் இலவசமாகக் கிடைக்கும் பெண்ணின் உடல் என்ற ஆசை.  இது வெறியாக மாறிவிட துணிந்து கணவனை கொலை செய்கிறான். பரிகாரமாக உடலைக் கொடுக்கிறேன் என்று வாக்குறுதியளித்த மனைவியோ வெற்றிப் புன்னகையுடன் சுகம் நாடி, தேடி, ஓடி வரும் கொலையாளிக்கு விஷத்தைக் கொடுத்து கொன்றுவிடுகிறாள். சுபம்..!

இதுதான் இந்த மகா காவியத்தின் கதை..!

கிளைமாக்ஸில் 'மனோகரா' படம்போல் பத்து நிமிடத்திற்கு தொடர்ந்து வீர வசனங்களை அள்ளி வீசுகிறாள் மனைவி. பாவம்.. கேட்கத்தான் தியேட்டரில் ஒரு தாய்க்குலம் கூட இல்லை..!

“பொம்பளைங்களை பத்தி என்னங்கடா நினைச்சுக்கிட்டிருக்கீங்க..?” என்று ஆரம்பிக்கும் அந்த வீர வசனங்கள் மெரீனா கடற்கரையில் கண்ணகி சிலை அருகே பொன்னெழுத்தில் பொறித்து வைக்கப்பட வேண்டியவை.

“இதுபோல மனைவியையும் வைத்துக் கொண்டு துணைவியையும் நாடும் கணவன்களையும், துணைவிக்காக மனைவியைக் கொல்ல நினைக்கும் கயவர்களையும், மனைவிக்காக துணைவியைக் கொலை செய்யத் துடிக்கும் பாவம் கொடூரன்களையும் பெருமாள் கோவில் எண்ணெய்ச் சட்டியில் போட்டு வறுத்தெடுக்கலாம்” என்கிறாள் இந்த பெண் குலத்தின் பிரதிநிதி..!

போதுமா இந்த விமர்சனம்..!

தம்பிகளா.. உங்க ரெண்டு பேருக்காகத்தான் பார்த்தேன். நீங்க இவ்வளவு தூரம் திருப்பித் திருப்பி அழுது கொண்டே சொன்னதாலதான் போய் பார்த்தேன்.. இல்லாட்டி இந்தக் கர்மத்தை நான் போய் பார்ப்பனா..?

'நடுநசி நாய்களை'யே குப்பைன்னு சொன்னவன்.. இந்தக் கஸ்மாலத்தை என்னன்னு சொல்லுவேன்..? இதற்கு மேலும் தமிழில் வேறு வார்த்தைகள் எனக்குத் தெரியவில்லை என்பதால் நீங்களே ஏதாவது சொல்லிப் போட்டுக்குங்க..!

அப்புறம் இன்னொரு விஷயம்.. இந்தப் படத்துல கவர்ச்சிக்காகவே 'மலேசிய ஷகிலா' என்ற பட்டப் பெயருடன் ஒரு நடிகையை அறிமுகப்படுத்தியிருக்காங்க.. போட்டோவை பார்த்தாலே குசும்பனுக்கு ரொம்பப் புடிக்கும்னு நினைக்கிறேன்..! கூகிளாண்டவர்கிட்ட சொல்லித் தேடிப் பிடிச்சுப் பார்த்து புல்லரிச்சுக்க குசும்பா..!

கடைசியா ஒரு சின்ன ரிக்வெஸ்ட்.. இனிமேல் இது மாதிரி நீங்க பார்க்க முடியாத படத்தையெல்லாம் என்னண்டை சொல்லி "பாருங்கண்ணே.. பார்த்திட்டு வந்து கதையைச் சொல்லுங்கண்ணே"ன்னு இம்சை பண்ணாதீங்கப்பா..! அண்ணனுக்கு எம்புட்டு வேலை இருக்கு தெரியுமா..? இந்தக் கர்மத்துக்காக 2 மணி நேரம் என்னோட பொன்னான நேரம் போச்சு..!

படத்துக்கு போன செலவு காசை, அடுத்த தடவை உங்க ரெண்டு பேர்ல யார் மொதல்ல சென்னைல கால் வைக்குறீங்களோ, அவங்கதான் தரணும்..!

டிக்கெட் விலை 50 ரூபாய். டூவீலர் பார்க்கிங் கட்டணம் 10 ரூபாய்.. இடைவேளையில் குடித்த காபிக்கு 10 ரூபாய்.. பெட்ரோலுக்கு 50 ரூபாய் வெட்டியா 2 மணி நேரம் செலவழிச்சதுக்கு 2000 ரூபாய்.. ஆக மொத்தம் 2120 ரூபாய்..!

மவனுகளா.. தரலைன்னு வைச்சுக்குங்க.. அந்த மலேசிய ஷகிலாகிட்ட உங்க ரெண்டு பேரையும் புடிச்சுக் கொடுத்திருவேன்..!  ஜாக்கிரதை..! 

52 comments:

  1. http://powrnamy.blogspot.com/2011/02/blog-post_25.html

    கேபிள் அழைக்கிறார் - மீனவர் பிணங்களுக்கு மத்தியில் கூத்தடிக்க பதிவர் சந்திப்பு

    ReplyDelete
  2. //அந்த மலேசிய ஷகிலாகிட்ட உங்க ரெண்டு பேரையும் புடிச்சுக் கொடுத்திருவேன்..//
    அண்ணே, இந்தத் தொழில் எப்ப இருந்து. சொல்லவே இல்லே..

    ReplyDelete
  3. என்னை மாதிரி குழந்தை இந்த படத்தை பார்க்கலாமா?

    ReplyDelete
  4. அய்யய்யோ கமென்ட் போடக்கூடாதுன்னு சொன்னாரே. போட்டுடனே. அண்ணன் அடிப்பாரோ?

    ReplyDelete
  5. photo's illathathunala annan kusumpan intha pativa padika mattaram annachi :)

    ReplyDelete
  6. Unmai Anna, Pls see and give your review of "Ethu Kadal Uthirum Kaalam (or) narem". Pls help..

    ReplyDelete
  7. [[[காலப் பறவை said...

    :))]]]

    வந்ததுக்கு நன்றிங்கண்ணா..!

    ReplyDelete
  8. [[[நிலவு said...

    http://powrnamy.blogspot.com/2011/02/blog-post_25.html

    கேபிள் அழைக்கிறார் - மீனவர் பிணங்களுக்கு மத்தியில் கூத்தடிக்க பதிவர் சந்திப்பு.]]]

    உங்களுக்குப் பிடிச்சிருந்தா வாங்க. மீனவர் பிரச்சினையைப் பத்தியும் பேசலாம்..!

    ReplyDelete
  9. [[[ILA(@)இளா said...

    //அந்த மலேசிய ஷகிலாகிட்ட உங்க ரெண்டு பேரையும் புடிச்சுக் கொடுத்திருவேன்..//

    அண்ணே, இந்தத் தொழில் எப்ப இருந்து. சொல்லவே இல்லே..]]]

    ஐயையோ.. நானே வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கிறனே..?!

    ReplyDelete
  10. [[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    என்னை மாதிரி குழந்தை இந்த படத்தை பார்க்கலாமா?]]]

    நோ.. நோ.. நோ.. குழந்தை மட்டுமில்ல.. பெரியவங்ககூட பார்க்கக் கூடாது..! மனசு கெட்டுப் போயிரும்!

    ReplyDelete
  11. [[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    அய்யய்யோ கமென்ட் போடக் கூடாதுன்னு சொன்னாரே. போட்டுடனே. அண்ணன் அடிப்பாரோ?]]]

    ச்சே.. உன்னை அடிச்சு சொந்த செலவு சூனியம் வைச்சுக்க நானென்ன முட்டாளா..?

    ReplyDelete
  12. [[[இராமசாமி said...
    photo's illathathunala annan kusumpan intha pativa padika mattaram annachi :)]]]

    போட்டோ போட்டு அந்தச் சின்னப் புள்ளைகளை கெடு்ககக் கூடாதேன்னுதான் போட்டோ போடலைன்னு சொல்லுங்க..!

    ReplyDelete
  13. [[[Prakash said...

    Unmai Anna, Pls see and give your review of "Ethu Kadal Uthirum Kaalam (or) narem". Pls help..]]]

    படம் ரிலீஸ் ஆயிருச்சா..?

    ReplyDelete
  14. // இது சென்ஷி மற்றும் குசும்பனுக்கு மட்டுமான பதிவு..! மற்றவர்கள் படிக்க வேண்டாம் /

    ஏண்ணே இதுக்கு அவங்களுக்கு தனி மடல் அனுப்பி இருக்கலாமுல்ல...

    // உங்களுடைய விருப்பத்திற்காகவே, உங்களுடைய திருப்திக்காகவே.. "தப்பு" என்ற அந்தத் தப்பான படத்தைப் பார்த்துத் தொலைத்துவிட்டேன். //


    எனக்கென்னவோ நீங்களே தேடிப்பிடிச்சு இந்த படத்தை பார்த்துட்டு அப்பாவிங்க அவங்க மேல பழி போடுற மாதிரி இருக்கு...

    ReplyDelete
  15. நான் பதிவை படிக்கல்ல அண்ணே..

    ReplyDelete
  16. இணையத்துல இந்த மாதிரி படங்கள் கிடைக்குமா? அட திருட்டு விசிடி கூடவா கிடைக்காது?

    இப்படிக்கு
    நல்ல படங்கள் கிடைக்காமல் மண்டை காய்ந்திருப்போர் சங்கம்

    ReplyDelete
  17. :-))

    'மலேசிய ஷகிலா'

    சைடு போட்டோல, அந்த மஞ்ச சாரி எந்தூர்ண்ணே?

    -டவுட்டு டனபால்.

    ReplyDelete
  18. நாங்க கேட்டப்பல்லாம் ‘திருந்திட்டேன்’னு பீலா விட்டுட்டு, அவங்க சொன்னதும் பார்க்குறீங்களே இது நியாயமா...சரி அதை விடுங்க..இந்தப் ப்டத்துக்கு பதிவர் ஷோ உண்டா இல்லையா?

    ReplyDelete
  19. ரொம்ப நாள் கழிச்சு நல்லா எழுதி இருக்கீங்க..

    நன்றி

    ReplyDelete
  20. எப்படியோ உங்க ஆசை நிறைவேறிடுச்சு ...

    ReplyDelete
  21. அண்ணே....நீங்க ஆர்வக்கோளாறுலப்போய் படத்தை பார்த்துட்டு வந்துட்டு எங்கள்
    அமீரக சொக்கக்தங்கங்கள் குசும்பன், மற்றும் சென்ஷீயின் மீது பழியைப்போடுவதை வன்மையாக கண்டிக்கிறேன். ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா? இந்த அநியாயத்தை கேட்க நாதியே இல்லையா?

    ReplyDelete
  22. [[[Sukumar Swaminathan said...

    //இது சென்ஷி மற்றும் குசும்பனுக்கு மட்டுமான பதிவு..! மற்றவர்கள் படிக்க வேண்டாம் /

    ஏண்ணே இதுக்கு அவங்களுக்கு தனி மடல் அனுப்பி இருக்கலாமுல்ல.]]]

    அப்புறம், நான் அவங்களுக்காக ஒரு பதிவு போட்டது உங்களுக்கெப்படி தெரியும்..?

    [[[//உங்களுடைய விருப்பத்திற்காகவே, உங்களுடைய திருப்திக்காகவே.. "தப்பு" என்ற அந்தத் தப்பான படத்தைப் பார்த்துத் தொலைத்துவிட்டேன். //

    எனக்கென்னவோ நீங்களே தேடிப் பிடிச்சு இந்த படத்தை பார்த்துட்டு அப்பாவிங்க அவங்க மேல பழி போடுற மாதிரி இருக்கு.]]]

    ஹா.. ஹா.. சுகுமார் தம்பி.. இப்படியெல்லாம் வெளிப்படையா உண்மையை பேசப்படாது..! அண்ணனை காப்பாத்துங்கப்பா..

    ReplyDelete
  23. [[[Riyas said...

    நான் பதிவை படிக்கல்ல அண்ணே..]]]

    குட் பாய்..!

    ReplyDelete
  24. [[[ILA(@)இளா said...

    இணையத்துல இந்த மாதிரி படங்கள் கிடைக்குமா? அட திருட்டு விசிடி கூடவா கிடைக்காது?

    இப்படிக்கு

    நல்ல படங்கள் கிடைக்காமல் மண்டை காய்ந்திருப்போர் சங்கம்]]]

    திருட்டு விசிடியா வரணும்னா இந்தப் படம் வெளிநாட்டுல வெளியாகியிருக்கணும்.. இல்லைன்னா, இதன் தயாரிப்பாளரே சிடியை உருவாக்கி தரணும். அதுவரைக்கும் வெயிட் பண்ணுங்கண்ணே..!

    ReplyDelete
  25. [[[பா.ராஜாராம் said...

    :-))

    'மலேசிய ஷகிலா']]]

    கவிஞரே.. உமது ஆர்வத்தை மெச்சினோம்..! நன்றி..!

    [[[சைடு போட்டோல, அந்த மஞ்ச சாரி எந்தூர்ண்ணே?

    - டவுட்டு டனபால்.]]]

    கேரளா சேச்சிங்கண்ணா..!

    ReplyDelete
  26. [[[செங்கோவி said...
    நாங்க கேட்டப்பல்லாம் ‘திருந்திட்டேன்’னு பீலா விட்டுட்டு, அவங்க சொன்னதும் பார்க்குறீங்களே இது நியாயமா. சரி அதை விடுங்க. இந்தப் ப்டத்துக்கு பதிவர் ஷோ உண்டா இல்லையா?]]]

    இந்தப் படத்தோட பதிவர் ஷோவுக்கு பிரிவியூ தியேட்டரே பத்தாது.. தமிழகம் முழுக்க இருந்து பதிவர்கள் திருட்டு லாரில ஏறியாவது வந்து சேர்ந்திருவாங்க.. ஏதாவது சினிமா தியேட்டரைத்தான் எடுக்கணும். காசாகும். அதுனால ஷோ இல்லை..!

    ReplyDelete
  27. [[[பார்வையாளன் said...

    ரொம்ப நாள் கழிச்சு நல்லா எழுதி இருக்கீங்க..

    நன்றி]]]

    எது? இது.. இது நல்லாயிருக்கா..? பார்வை..! உன் கண்ணைக் குத்தணும்..!

    ReplyDelete
  28. [[[கோவை நேரம் said...
    எப்படியோ உங்க ஆசை நிறைவேறிடுச்சு.]]]

    நோ.. நோ.. தம்பிகள் சென்ஷி மற்றும் குசும்பனின் ஆசை நிறைவேறியிருச்சு..! அவ்ளோதான்..!

    ReplyDelete
  29. [[[நாஞ்சில் பிரதாப்™ said...
    அண்ணே நீங்க ஆர்வக் கோளாறுல படத்தை பார்த்துட்டு வந்துட்டு எங்கள்
    அமீரக சொக்கக் தங்கங்கள் குசும்பன், மற்றும் சென்ஷீயின் மீது பழியைப் போடுவதை வன்மையாக கண்டிக்கிறேன். ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா? இந்த அநியாயத்தை கேட்க நாதியே இல்லையா?]]]

    இதுக்காக ஒரு தனி பஸ்ஸே விட்டாங்கப்பா அவுங்க..! உண்டா, இல்லையான்னு அவங்களையே கேளுங்க..!

    ReplyDelete
  30. ரைட்...நம்பிட்டோம்...இப்படி சொல்லி சொல்லியே ஒரு அட்டு படத்தையும்
    விடாம பார்க்குறீங்க... பை தி வே ஏன் ஸ்டில் போடல?? வன்மையாக
    கண்டிக்கிறேன்..

    ReplyDelete
  31. [[[ஜெட்லி... said...
    ரைட். நம்பிட்டோம். இப்படி சொல்லி சொல்லியே ஒரு அட்டு படத்தையும் விடாம பார்க்குறீங்க. பை தி வே ஏன் ஸ்டில் போடல?? வன்மையாக
    கண்டிக்கிறேன்.]]]

    சின்னப் பசங்களாகிய நீங்களெல்லாம் கெட்டுப் போய் விடுவீர்கள் என்பதால்தான் புகைப்படங்களை நான் இங்கே இடவில்லை..!

    ReplyDelete
  32. //கிளைமாக்ஸில் 'மனோகரா' படம்போல் பத்து நிமிடத்திற்கு தொடர்ந்து வீர வசனங்களை அள்ளி வீசுகிறாள் மனைவி.//

    எப்படி அண்ணாத்தே கிளைமாக்ஸில் பேசமுடியும்?

    ReplyDelete
  33. //2 மணி நேரம் செலவழிச்சதுக்கு 2000 ரூபாய்.. ஆக மொத்தம் 2120 ரூபாய்..!//

    ரெண்டு மணி நேரத்துக்கு 2120 ரூபாயாஆஆஆஆஆ....அண்ணே ரேட் ரொம்ப அதிகமா இருக்கு அடுத்த முறை போகும் பொழுது ரேட் செக் செஞ்சிட்டு போங்க.

    ReplyDelete
  34. குசும்பா, உன் டவுட்டுக்கு உ.த. அண்ணாச்சி கட்டாயம் பதில் சொல்வார் :))

    ReplyDelete
  35. //இதையறிந்த மனைவி, அதே கொலையாளியிடம் தனது உடலை மூலதனமாகக் காட்டி தனது கணவனை கொலை செய்யத் தூண்டுகிறாள்.. //

    அட செம ட்விஸ்டா இருக்கே:))

    ReplyDelete
  36. //அண்ணனுக்கு எம்புட்டு வேலை இருக்கு தெரியுமா..?//

    அண்ணே டக்குன்னு ஒரு வேலை பேரை மட்டுமாவது சொல்லேன்...
    சும்மா சொல்லேன்..:))

    ReplyDelete
  37. //கள்ளக் காதல்// - உ.த. அண்ணாச்சி.. காதல்ல என்ன நல்ல காதல்? கள்ளக் காதல்??

    ReplyDelete
  38. //மலேசிய ஷகிலாகிட்ட உங்க ரெண்டு பேரையும் புடிச்சுக் கொடுத்திருவேன்// - குசும்பா, இந்த டீலிங் நல்லா இருக்குல்ல :)))

    ReplyDelete
  39. //எனக்கென்னவோ நீங்களே தேடிப்பிடிச்சு இந்த படத்தை பார்த்துட்டு அப்பாவிங்க அவங்க மேல பழி போடுற மாதிரி இருக்கு..//

    சுகுமார் & நாஞ்சில் பிராதப்பு...இருவரும் மிக்க நன்றி.

    அண்ணே பாருன்னே...நாங்க எவ்வளோ நல்லவங்கன்னு...ஏன் இப்படி அபாண்டமா பழிய எங்க மேல போடுற...

    ReplyDelete
  40. [[[குசும்பன் said...

    //கிளைமாக்ஸில் 'மனோகரா' படம்போல் பத்து நிமிடத்திற்கு தொடர்ந்து வீர வசனங்களை அள்ளி வீசுகிறாள் மனைவி.//

    எப்படி அண்ணாத்தே கிளைமாக்ஸில் பேச முடியும்?]]]

    பேசுறாளே.. புருஷன் செத்துக் கிடக்குறான். கொலையாளி நெஞ்சைப் பிடிச்சுக்கிட்டு துடிச்சுக்கிட்டிருக்கேன். கேமிரா மூணு பேரையும் கவர் பண்ணி நிக்குது.. ஹீரோயின் மடை திறந்த வெள்ளமா வசனத்தைக் கொட்டுறா தம்பி..!

    ஆமா நீ கேட்டது இந்தச் சினிமாவின் கிளைமாக்ஸ் காட்சியைப் பற்றித்தானே..!?

    ReplyDelete
  41. [[[குசும்பன் said...

    //2 மணி நேரம் செலவழிச்சதுக்கு 2000 ரூபாய்.. ஆக மொத்தம் 2120 ரூபாய்..!//

    ரெண்டு மணி நேரத்துக்கு 2120 ரூபாயாஆஆஆஆஆ....அண்ணே ரேட் ரொம்ப அதிகமா இருக்கு அடுத்த முறை போகும் பொழுது ரேட் செக் செஞ்சிட்டு போங்க.]]]

    ஒரு மணி நேரம் நான் எங்கயாச்சும் வேலைக்குப் போயிருந்தால் என் லெவலுக்கு ஆயிரம் ரூபாய் சம்பாதித்திருப்பேன் என்ற கணக்கில் சொன்னது இது..! நீ ஏன் தப்புத் தப்பாவே யோசிக்கிற தம்பி..?

    ReplyDelete
  42. [[[அகமது சுபைர் said...
    குசும்பா, உன் டவுட்டுக்கு உ.த. அண்ணாச்சி கட்டாயம் பதில் சொல்வார்:))]]]

    சுபைர்.. சொல்லியாச்சு..!

    ReplyDelete
  43. [[[குசும்பன் said...

    //இதையறிந்த மனைவி, அதே கொலையாளியிடம் தனது உடலை மூலதனமாகக் காட்டி தனது கணவனை கொலை செய்யத் தூண்டுகிறாள்.. //

    அட செம ட்விஸ்டா இருக்கே:))]]]

    படத்தோட டர்னிங் பாயிண்ட்டே இதுதான்..

    ReplyDelete
  44. [[[குசும்பன் said...

    //அண்ணனுக்கு எம்புட்டு வேலை இருக்கு தெரியுமா..?//

    அண்ணே டக்குன்னு ஒரு வேலை பேரை மட்டுமாவது சொல்லேன்...
    சும்மா சொல்லேன்..:))]]]

    பின்னூட்டங்களுக்குப் பதில் போடுற வேலைதான் ரொம்பப் பெரிய வேலைடா ராசா..!

    ReplyDelete
  45. [[[அகமது சுபைர் said...
    //கள்ளக் காதல்// - உ.த. அண்ணாச்சி.. காதல்ல என்ன நல்ல காதல்? கள்ளக் காதல்??]]]

    அங்கீகாரம் பெற்ற உறவுகள் இருக்கும்போதே வெளியில் வேறு உறவுகளை நாடினால் அதற்குப் பெயர் கள்ளக் காதல்தான்..!

    ReplyDelete
  46. [[[அகமது சுபைர் said...

    //மலேசிய ஷகிலாகிட்ட உங்க ரெண்டு பேரையும் புடிச்சுக் கொடுத்திருவேன்// -

    குசும்பா, இந்த டீலிங் நல்லா இருக்குல்ல :)))]]]

    அடப்பாவி.. அப்போ அந்தக் காசு எனக்குக் கிடைக்காதா..?

    ReplyDelete
  47. [[[குசும்பன் said...

    //எனக்கென்னவோ நீங்களே தேடிப் பிடிச்சு இந்த படத்தை பார்த்துட்டு அப்பாவிங்க அவங்க மேல பழி போடுற மாதிரி இருக்கு..//

    சுகுமார் & நாஞ்சில் பிராதப்பு. இருவரும் மிக்க நன்றி.
    அண்ணே பாருன்னே. நாங்க எவ்வளோ நல்லவங்கன்னு. ஏன் இப்படி அபாண்டமா பழிய எங்க மேல போடுற.]]

    இப்படியெல்லாம் தப்பிக்கலாம்னு பார்க்காத. நீங்க பஸ்ஸுல கோரிக்கை வைக்காதவரைக்கும் எனக்கு அந்தப் படத்துக்குப் போற ஆசையே இல்லை..! ஸோ.. நீதான் தண்டம் கட்டணும்..!

    ReplyDelete
  48. [[[நிலவு said...

    ப‌யணம் - பொது புத்தியிலுள்ள முசுலீம் மீதான வன்மம்

    http://powrnamy.blogspot.com/2011/02/blog-post_27.html]]]

    நன்றி படித்தேன் ஸார்..!

    ReplyDelete
  49. [[[YESRAMESH said...

    அண்ணே, மலேஸியா சகிலா விலாசம்.
    விலாசம். விலாசம்..]]]

    எதுக்கு ஸாரே..? மலேசியாவில் பிரம்படி கொடுப்பாங்க.. நியாபகம் இருக்குல்ல..?

    ReplyDelete