Pages

Monday, January 31, 2011

கலைஞரின் அடுத்த அஸ்திரம் கலைமாமணி விருதுகள்..!

31-01-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

எப்பாடுபட்டாவது ஆட்சியைப் பிடித்தாக வேண்டும் என்கிற வெறியில் இருக்கும் தமிழ்த் தாத்தா, எப்போதும்போல் தமிழர்களை ஆட்டிப் படைக்கும் சினிமா என்னும் மாய வலையினால் உருவாகியிருக்கும் பிரபலத்தனத்தை தனது கட்சிக்கான பிரச்சார யுக்தியாக மாற்றும்விதமாக முதலில் இரண்டாண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகளை அவசரம், அவசரமாக வெளியிட்டார்.

இப்போது இன்னும் ஒரு படி மேலே போய் 2008, 2009, 2010 ஆகிய மூன்றாண்டுகளுக்கும் சேர்த்து மொத்தமாக கலைமாமணியை அள்ளி வழங்கி தனது கொடை வள்ளல்தனத்தை மக்களிடையே கொண்டு வந்திருக்கிறார். முதலில் பட்டியலைப் படியுங்கள்.

 
2008 ஆம் ஆண்டுக்கான விருதுகள் :

1. சசிரேகா பாலசுப்ரமணியன் - நாட்டியம்   

2. காயத்ரி சங்கரன்- கர்நாடக இசை   

3. வே. நாராயணப் பெருமாள் - கர்நாடக இசை   

4. எம்.வி. சண்முகம் - இசைக் கலைஞர்   

5. இளசை சுந்தரம் - இயற்றமிழ் கலைஞர்   

6. பி. லெட்சுமி நரசிம்மன் - தவில் கலைஞர்   

7. காளிதாஸ், திருமாந்திரை - நாதஸ்வரக் கலைஞர்   

8. பிரேமா ஜெகதீசன் - நாட்டியம்   

9. ரோபோ சங்கர் - சின்னத்திரை கலைஞர்   

10. நாமக்கல் வேணுகோபால் - கிளாரிநெட்   

11. திருக்குவளை சகோதரிகள் சுந்தரி, சாவித்ரி - நாதஸ்வரக் 
      கலைஞர்கள்   

12. கவிக்கொண்டல் செங்குட்டுவன் - இயற்றமிழ் கலைஞர்   

13. ச. சுஜாதா க/பெயர் பீர் முகமது - நாட்டியம்   

14. ராணி மைந்தன் - இயற்றமிழ் கலைஞர்   

15. ஜி.கே. இராமஜெயம் - ஓவியக் கலைஞர்   

16. கவிஞர் பட்டுக்கோட்டை சுப்பிரமணியன் - இயற்றமிழ் கலைஞர்   

17. தஞ்சை சுபாஷினி மற்றும்  ரமா - பரதநாட்டியக் கலைஞர்கள்   

18. சி.வி. ரமேஸ்வர சர்மா - சமையல் கலைஞர்   

19. திருமுருகன் - சின்னத்திரை இயக்குநர்   

20. பரத்வாஜ் - இசையமைப்பாளர்   

21. ராஜீவ் மேனன் - ஒளிப்பதிவாளர்   

22. சிற்பி குட்டப்பன் நாயர் - சிற்பக் கலைஞர்   

23. தோஹா பேங்க் சீதாராமன் - பண்பாட்டுக் கலை பரப்புனர்   

24. என். எத்திராசன் - கலைப் பரப்புனர்   

25. கருணாஸ் - நகைச்சுவை நடிகர்

2009 ஆம் ஆண்டுக்கான விருதுகள் :

1. காயத்ரி கிரீஷ் - கர்நாடக இசை   

2. சேக்கிழார் - சின்னத்திரை வசனகர்த்தா   

3. சாக்ஷி சிவா - சின்னத்திரை நடிகர்   

4. மாளவிகா - சின்னத்திரை நடிகை   

5. பூவிலங்கு - மோகன் சின்னத்திரை நடிகர்   

6. எஸ். முத்துராமலிங்கம் - கூத்துக் கலைஞர்   

7. பி. முருகேஸ்வரி - கரகாட்டக் கலைஞர்

8. ரேவதி சங்கரன் - சின்னத்திரை நடிகை   

9. தஞ்சை சின்னப்பொன்னு குமார் - கிராமியப் பாடகர்   

10. எல். ஜான்பாவா - சிலம்பாட்டக் கலைஞர்   

11. ரேவதி - வில்லுப்பாட்டுக் கலைஞர்   

12. கே. கருப்பண்ணன் - ஒயிலாட்டக் கலைஞர்   

13. கே.ஏ. பாண்டியன் - நையாண்டி மேளக் கலைஞர்   

14. எம். திருச்செல்வம் - நையாண்டி மேளக் கலைஞர்   

15. சிவகங்கை வி. நாகு - நையாண்டி மேளக் கலைஞர்   

16. டி. சேகர் - கிராமியக் கருவி இசைக் கலைஞர்   

17. மு. இளங்கோவன் - கிராமியக் கலை பயிற்றுனர்   

18. சா. கந்தசாமி - இயற்றமிழ்   

19. ராஜேஷ் குமார் - இயற்றமிழ்   

20. நாஞ்சில் நாடன் - இயற்றமிழ்   

21 ரோகிணி - குணச் சித்திர நடிகை   

22 சரண்யா - குணச் சித்திர நடிகை   

23 சின்னி ஜெயந்த் - நகைச்சுவை நடிகர்

2010 ஆம் ஆண்டுக்கான விருதுகள் :

1. பொன். செல்வகணபதி - இயற்றமிழ்   

2. பேராசிரியர் தே. ஞானசேகரன் - இயற்றமிழ்   

3. டாக்டர் சு. நரேந்திரன் - இயற்றமிழ்   

4. டாக்டர் தமிழண்ணல் -  இயற்றமிழ்   

5. திண்டுக்கல் ஐ. லியோனி - இலக்கியச் சொற்பொழிவாளர்   

6. சொ. சத்தியசீலன் - சமயச் சொற்பொழிவாளர்   

7. தேச. மங்கையர்க்கரசி - சமயச் சொற்பொழிவாளர்   

8. டி.வி. கோபாலகிருஷ்ணன் - இசை ஆசிரியர்   

9. கே. என். சசிகிரண் - குரலிசைக் கலைஞர்   

10. குடந்தை ஜெ. தேவிபிரசாத் - வயலின் கலைஞர்   

11. ஐ. சிவக்குமார் - மிருதங்க ஆசிரியர்   

12. என்.எஸ். ராஜம் - மிருதங்க கலைஞர்   

13. ஸ்ரீனிவாசன் - வீணை கலைஞர்   

14. ராஜேஷ்  வைத்யா - வீணைக் கலைஞர்   

15. திருவாரூர் எஸ். சாமிநாதன் - புல்லாங்குழல் 

16. கே.வி. இராமானுஜம் - புல்லாங்குழல்   

17. டாக்டர் தி. சுரேஷ் சிவன் - தேவார இசைக் கலைஞர்   

18. கல்யாணி மேனன் - மெல்லிசைப் பாடகி   

19. திருக்கடையூர் முரளிதரன் - நாதஸ்வரக் கலைஞர்   

20. ரெட்டியூர் செல்வம் - தவில் கலைஞர்   

21. ஏ.ஹேம்நாத் - பரத நாட்டியம்   

22. பிரசன்னா ராமசாமி - நாடகக் கலைஞர்   

23. எப். சூசை மாணிக்கம் - நாடக நடிகர்   

24. ஆர்யா - திரைப்பட நடிகர்   

25. அனுஷ்கா - திரைப்பட நடிகை   

26. தமன்னா - திரைப்பட நடிகை

இந்த விருதுகள் வழங்கும் விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வரும் பிப்ரவரி மாதம் 13-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலையில் நடைபெறுமாம்.  மேலும் அன்றைக்கே ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள 2007 மற்றும் 2008-ம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகளும் - பாரதி விருது, எம்.எஸ். சுப்புலட்சுமி விருது, பாலசரஸ்வதி விருது ஆகியவைகளும் சேர்த்து வழங்கப்படுமாம்.

இப்போது எந்த முறையில் கலைமாமணி விருதைப் பெறுவதற்கான நபர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்றே தெரியவில்லை. தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம்தான் விருதுக்குரியவர்களைத் தேர்ந்தெடுத்து செய்தித் துறைக்கு அனுப்பி வைக்கிறது. அங்கிருந்து முதல்வருக்கு அது பாஸ் செய்யப்படுகிறது என்கிறார்கள்.

ஆனால் நடிக்க வந்து சில ஆண்டுகளே ஆகியிருக்கும் நிலையில் தமன்னாவுக்கும், அனுஷ்காவுக்கும் கொடுத்திருப்பது கோடம்பாக்கத்தில் வழக்கமான தி.மு.க.வின் காமெடியாகவே பேசப்படுகிறது.

ஒரு காலத்தில் கலைமாமணி விருது பெற சில விதிமுறைகள் இருந்தன என்கிறார் கோடம்பாக்கத்தின் அதிசய மனிதரான பிலிம் நியூஸ் ஆனந்தன்.. அதிகமான படங்களில் நடித்திருக்க வேண்டும். ஏதேனும் ஒரு முறையாவது தமிழக அரசின் சிறந்த நடிகை அல்லது நடிகருக்கான விருதைப் பெற்றிருக்க வேண்டும். அல்லது சிறந்த படமாகத் தேர்வு செய்யப்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்க வேண்டும் என்றெல்லாம் விதிமுறைகள் இருந்தனவாம். இப்போது இதுவெல்லாம் கட்சிகளின் தேர்தல் அறிக்கையைப் போல காணாமலேயே போய்விட்டன.


இப்போது யார், யாருக்கு விருதுகளை வழங்கினால், அவர்கள் அங்கே வருகை தருவதால், நம்முடைய சொந்த டிவிக்கு விளம்பர வருவாய் கூடுதலாகக் கிடைக்கும் என்றுதான் யோசிக்கிறார்கள். இந்தச் சிந்தனையை முதலில் ஆரம்பித்து வைத்தது தி.மு.க. பின்பு இந்த வழிமுறையையே தொடர்ந்திருக்கிறது அ.தி.மு.க. இப்போது மீண்டும் தி.மு.க. இப்போதும் அதையே யோசித்து செயல்படுத்தியிருக்கிறார்கள் என்பதுதான் தற்போதைய கோடம்பாக்கத்து டாக்..!


என்னவோ செஞ்சுட்டுப் போய்த் தொலைங்க..! சினிமா துறையில் யாருக்கு கலைமாமணி கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் நான் கவலைப்படப் போவதில்லை. அதனைப் பற்றி அக்கறையும் படப் போவதில்லை. ஏன் என்பதை தயவு செய்து இந்தப் பதிவிற்குச் சென்று படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்..!

மற்றபடி இந்த முறை நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, கவிக்கொண்டல் செங்குட்டுவன், இளசை எஸ்.சுந்தரம், ராணிமைந்தன், ராஜேஷ்குமார், சொ.சத்தியசீலன், தமிழண்ணல், லியோனி போன்றோரும் இருப்பது பெருமைக்குரியதுதான்..!

நாஞ்சில் நாடனுக்கும், சா.கந்தசாமிக்கும் இப்போதுதானா என்று நினைத்துப் பார்க்காமல் இப்போதாவது கொடுத்தார்களே என்று நினைத்துத் திருப்திப்பட்டுக் கொள்ளலாம்..!

ஏனெனில் ஆள்பவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. ஆண்டவர்கள். அவர்களாகப் பார்த்து எப்போது, எதைக் கொடுத்தாலும் சமர்த்தாக வாங்கிக் கொண்டு திரும்பிப் பார்க்காமல் போவதுதான் நம்மை மாதிரி அடிமைகளுக்கு நல்லது..! வேறு வழியில்லை.

அடுத்த பிறவியிலாவது உண்மையான ஜனநாயகமுள்ள நாட்டில் பிறந்து தொலைப்போம்..!

நன்றி..!

தொடர்புடைய முந்தைய பதிவு இது :

யாருக்குய்யா வேணும்...!? போங்கய்யா நீங்களும் உங்க 'கலைமாமணி'யும்!!

36 comments:

  1. நாஞ்சில் நாடனையும், சா.கந்தசாமியையும் அனுஷ்கா-தமன்னாவோடு ஒரே மேடையில்....

    நினைத்து பார்க்கவே கொடூரமாக இருக்கிறது ...

    ReplyDelete
  2. நாத்திகர்கள்தான் கடவுளைப் பற்றி அதிகம் படிப்பவர்களாகவும், கடவுளைப் பற்றி அதிகம் பேசுபவர்களாகவும் இருப்பார்கள்.அநேகமாய் தங்கள் வாழ் நாளை தாங்கள் அறியாமலே இறைத் தொண்டில் அர்பணித்திருப்பார்கள்.

    அது மாதிரி நீங்கள் பேச்சும், மூச்சும் கலைஞரும் அவர் குடும்பமுமாகவே இருக்கிறீர்கள்.

    நான் சொல்வது உண்மைதானே! :)

    இந்த மனிதரைத் தாண்டியும் உலகமிருக்கிறது.தாண்டி வாருங்கள்!

    ReplyDelete
  3. அண்ணே, உங்களைப் பேட்டி கண்டதைப் பத்தி சொல்லவே இல்ல?!

    ReplyDelete
  4. நாஞ்சில் நாடனுக்கும், சா.கந்தசாமிக்கும் விருதுகள் . அனுஷ்கா , தமன்னா போன்ற நேற்று வந்த சினிமாகாரிகளுக்கும் கலை மாமணி. இத்தனை நாள் இவர்கள் கண் என்ன அவிந்தா போயிருந்தது மகாபாவிகள்.
    ஏன் இந்த அல்ப புத்தி சாகும் வயதிலும்.

    ReplyDelete
  5. விருதுகளுக்கு இக்காலத்தில் மதிப்பில்லை அண்ணா :(

    ReplyDelete
  6. அப்படியே 2011, 2012...2020க்கும் கொடுத்துட வேண்டியதுதானே..

    ReplyDelete
  7. இந்த விருது வழங்கும் விழா சன் டிவில ரெண்டு நாள் ப்ரோகிராமா போட்டு சம்பாதிப்பாங்க நாமளும் வாய திறந்து கிட்டு பார்ப்போம் என்னக்கி திருந்த போறோமோ

    ReplyDelete
  8. 23 சின்னி ஜெயந்த் - நகைச்சுவை நடிகர்//

    அண்ணே சின்னி ஜெயந்த் இன்னும் படம் நடிக்கிறாரா என்ன?

    ReplyDelete
  9. எருதுக்கு நோவு; காக்கைக்குக் கொண்டாட்டம் என்பதுபோல, மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் இன்னும் விருது,விழா என்று அலைகிற இந்தக் கிழத்தை என்னவென்று சொல்ல?

    ReplyDelete
  10. மாநில திரைப்பட விருதுகள் இருப்பதால், சினிமா கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் அளிப்பது தேவையற்றது. இந்த விருதுகள், சினிமா தவிர்த்த பிற கலைஞர்களை அவமானப்படுத்துவதுபோல் உள்ளது.

    ReplyDelete
  11. அண்ணே,இவிங்க எல்லாரையும் விட அதிகமா (தமில்ப்பற்று) காட்டிய ஷகிலாவிற்கு ஏன் விருது இல்லை?

    ReplyDelete
  12. [[[காலப் பறவை said...
    நாஞ்சில் நாடனையும், சா.கந்தசாமியையும் அனுஷ்கா-தமன்னாவோடு ஒரே மேடையில்,
    நினைத்து பார்க்கவே கொடூரமாக இருக்கிறது.]]]

    மேடையில் ஏற்ற மாட்டார்கள். எனவே பயப்பட வேண்டாம்..!

    ReplyDelete
  13. [[[மு.சரவணக்குமார் said...

    நாத்திகர்கள்தான் கடவுளைப் பற்றி அதிகம் படிப்பவர்களாகவும், கடவுளைப் பற்றி அதிகம் பேசுபவர்களாகவும் இருப்பார்கள்.அநேகமாய் தங்கள் வாழ் நாளை தாங்கள் அறியாமலே இறைத் தொண்டில் அர்பணித்திருப்பார்கள்.

    அது மாதிரி நீங்கள் பேச்சும், மூச்சும் கலைஞரும் அவர் குடும்பமுமாகவே இருக்கிறீர்கள். நான் சொல்வது உண்மைதானே!:) இந்த மனிதரைத் தாண்டியும் உலகமிருக்கிறது.தாண்டி வாருங்கள்!]]]

    நண்பரே.. அரசியலைப் பற்றி எழுதும்போது இவரைப் பற்றி எழுதாமல் இருக்கவே முடியாதே..! இவரைப் பற்றி எழுதக் கூடாதெனில் நான் அரசியலைப் பற்றிச் சொல்லவே முடியாது..! இதுக்கெல்லாம் பாவம், புண்ணியம் பார்க்கவே கூடாது..!

    ReplyDelete
  14. [[[பழமைபேசி said...
    அண்ணே, உங்களைப் பேட்டி கண்டதைப் பத்தி சொல்லவே இல்ல?!]]]

    ஆஹா.. மறந்து போச்சு தம்பி.. அடுத்து இட்லிவடைல சொல்லிடறேன்..!

    ReplyDelete
  15. [[[கக்கு - மாணிக்கம் said...

    நாஞ்சில் நாடனுக்கும், சா.கந்தசாமிக்கும் விருதுகள். அனுஷ்கா, தமன்னா போன்ற நேற்று வந்த சினிமாக்காரிகளுக்கும் கலைமாமணி. இத்தனை நாள் இவர்கள் கண் என்ன அவிந்தா போயிருந்தது மகாபாவிகள்.
    ஏன் இந்த அல்ப புத்தி சாகும் வயதிலும்.]]]

    அல்ப புத்தி எந்த வயதிலும் இருக்கும்..! தாத்தாவுக்கு அது அமோகம்..!

    கலைமாமணி விருதுகளில் இப்போதுதான் இலக்கியத்தைச் சேர்த்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அதுதான் இவ்வளவு தாமதம்..!

    ReplyDelete
  16. [[[kanagu said...
    விருதுகளுக்கு இக்காலத்தில் மதிப்பில்லை அண்ணா :(]]]

    ஒரு திருத்தம். அரசு விருதுகளுக்கு மட்டும்..!

    ReplyDelete
  17. [[[செங்கோவி said...
    அப்படியே 2011, 2012... 2020க்கும் கொடுத்துட வேண்டியதுதானே..]]]

    2016 தேர்தல் சமயத்தில் அனைத்திற்கும் சேர்த்து வைத்து கொடுப்பார்கள்..!

    ReplyDelete
  18. [[[Unmaivirumpi said...
    இந்த விருது வழங்கும் விழா சன் டிவில ரெண்டு நாள் ப்ரோகிராமா போட்டு சம்பாதிப்பாங்க நாமளும் வாய திறந்துகிட்டு பார்ப்போம் என்னக்கி திருந்த போறோமோ.]]]

    சன் அல்ல. கலைஞர் டிவி..!

    ReplyDelete
  19. [[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    23 சின்னி ஜெயந்த் - நகைச்சுவை நடிகர்//

    அண்ணே சின்னி ஜெயந்த் இன்னும் படம் நடிக்கிறாரா என்ன?]]]

    நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்..!

    ReplyDelete
  20. [[[சேட்டைக்காரன் said...
    எருதுக்கு நோவு; காக்கைக்குக் கொண்டாட்டம் என்பதுபோல, மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் இன்னும் விருது,விழா என்று அலைகிற இந்தக் கிழத்தை என்னவென்று சொல்ல?]]]

    இதுதான் அவரது குணம்.. இந்த விருதுகளை அந்தந்த ஆண்டுகளிலேயே கொடுத்திருக்கலாமே..?

    ReplyDelete
  21. [[[Bhupesh Balan said...

    மாநில திரைப்பட விருதுகள் இருப்பதால், சினிமா கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் அளிப்பது தேவையற்றது. இந்த விருதுகள், சினிமா தவிர்த்த பிற கலைஞர்களை அவமானப்படுத்துவதுபோல் உள்ளது.]]]

    இல்லை. இதுவும் தேவைதான் நண்பரே.. சாதனை படைத்தவர்களுக்குக் கொடுக்க வேண்டிய விருதினை, தங்களுக்குப் பிடித்தவர்களுக்கும், குடும்பத்திற்குப் பணம் சம்பாதித்துக் கொடுப்பவர்களுக்குமாக பிரித்துக் கொடுக்கிறார்கள்..

    ReplyDelete
  22. [[[Indian Share Market said...
    அண்ணே, இவிங்க எல்லாரையும் விட அதிகமா (தமில்ப்பற்று) காட்டிய ஷகிலாவிற்கு ஏன் விருது இல்லை?]]]

    தர மாட்டாங்க. இவங்க ரொம்ப யோக்கியமானவங்களாம்.. அதுனால "அது" மாதிரி படத்துல நடிச்ச "அந்த மாதிரி" நடிகைகளுக்குக் கிடையாதாம்..!

    ReplyDelete
  23. These politicians make politics in everything they touch... Now this is being linked to their family businesses (TV).

    All our FATE!!! :-(

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  24. ஏன் " மச்சான்" நடிகைக்கு கொடுக்கவில்லை?

    ReplyDelete
  25. மாளவிகா,அனுஷ்கா,தமன்னா ???????????????????? என்ன அண்ணே இதெல்லாம்??? நெசமாவா சொல்றீங்க. போங்கண்ணே, எனக்கு வெக்க வெக்கமா வருது.

    ReplyDelete
  26. [[[சங்கர் குருசாமி said...
    These politicians make politics in everything they touch. Now this is being linked to their family businesses (TV).

    All our FATE!!! :-(

    http://anubhudhi.blogspot.com/]]]

    புரிந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள் சங்கர்..!

    ReplyDelete
  27. [[[J.P Josephine Baba said...
    ஏன் "மச்சான்" நடிகைக்கு கொடுக்கவில்லை?]]]

    அதான் எனக்கும் தெரியலை.. இத்தனைக்கும் அனுஷ்காவுக்கும், தமன்னாவுக்கும் சீனியர் இவுங்க..! இதோட தாத்தாவோட லேட்டஸ்ட் படத்துல வில்லி வேடம் வேற.. எப்படி வுட்டாங்க..?

    ReplyDelete
  28. [[[! சிவகுமார் ! said...
    மாளவிகா,அனுஷ்கா,தமன்னா ???????????????????? என்ன அண்ணே இதெல்லாம்??? நெசமாவா சொல்றீங்க. போங்கண்ணே, எனக்கு வெக்க வெக்கமா வருது.]]]

    நீ எதுக்கு ராசா வெக்கப்படுற..? மாளவிகான்னு சொன்ன உடனே நீ அந்த மாளவிகான்னு நினைச்சியா? இது செல்லமே சீரியல்ல நடிக்கிற மாளவிகா..!

    ReplyDelete
  29. ///மு.சரவணக்குமார் said...
    நாத்திகர்கள்தான் கடவுளைப் பற்றி அதிகம் படிப்பவர்களாகவும், கடவுளைப் பற்றி அதிகம் பேசுபவர்களாகவும் இருப்பார்கள்.அநேகமாய் தங்கள் வாழ் நாளை தாங்கள் அறியாமலே இறைத் தொண்டில் அர்பணித்திருப்பார்கள்.

    அது மாதிரி நீங்கள் பேச்சும், மூச்சும் கலைஞரும் அவர் குடும்பமுமாகவே இருக்கிறீர்கள்.

    நான் சொல்வது உண்மைதானே! :)

    இந்த மனிதரைத் தாண்டியும் உலகமிருக்கிறது.தாண்டி வாருங்கள்!///

    சரவணக்குமார்!
    நீங்கள் சொல்வது நியாயம்தான்! அதைத்தாண்டி இருக்கும் ரசிக்கப்படக்கூடிய உலகம் இருப்பதுவும் உண்மைதான்!

    ஆனால் இது நம் வாழ்வாதாரப் பிரச்சினை சம்பந்தப்பட்டது! கருணாநிதி செய்யும் ஒவ்வொரு செயலும் நடுத்தர வர்க்க மக்களை நேரடியாக பாதிப்பதாகவே அமைகிறது. அதனால்தான் அவரை தூக்கியெறிய விரும்புகிறோம்!

    இந்த செய்தியைப் பாருங்கள்!
    http://www.dinamalar.com/News_Detail.asp?Id=178672

    தானமும் தர்மமும் வருமானத்தின் அளவுக்குட்பட்டே இருக்க வேண்டும்!!! யார் வீட்டு அப்பன் சொத்தை கருணாநிதி தூக்கிக் கொடுக்கிறார்???

    ReplyDelete
  30. [[[ரிஷி said...
    //மு.சரவணக்குமார் said...
    நாத்திகர்கள்தான் கடவுளைப் பற்றி அதிகம் படிப்பவர்களாகவும், கடவுளைப் பற்றி அதிகம் பேசுபவர்களாகவும் இருப்பார்கள். அநேகமாய் தங்கள் வாழ் நாளை தாங்கள் அறியாமலே இறைத் தொண்டில் அர்பணித்திருப்பார்கள்.
    அது மாதிரி நீங்கள் பேச்சும், மூச்சும் கலைஞரும் அவர் குடும்பமுமாகவே இருக்கிறீர்கள். நான் சொல்வது உண்மைதானே!:) இந்த மனிதரைத் தாண்டியும் உலகமிருக்கிறது.தாண்டி வாருங்கள்!///

    சரவணக்குமார்! நீங்கள் சொல்வது நியாயம்தான்! அதைத் தாண்டி இருக்கும் ரசிக்கப்படக் கூடிய உலகம் இருப்பதுவும் உண்மைதான்! ஆனால் இது நம் வாழ்வாதாரப் பிரச்சினை சம்பந்தப்பட்டது! கருணாநிதி செய்யும் ஒவ்வொரு செயலும் நடுத்தர வர்க்க மக்களை நேரடியாக பாதிப்பதாகவே அமைகிறது. அதனால்தான் அவரை தூக்கியெறிய விரும்புகிறோம்! இந்த செய்தியைப் பாருங்கள்!
    http://www.dinamalar.com/News_Detail.asp?Id=178672
    தானமும் தர்மமும் வருமானத்தின் அளவுக்குட்பட்டே இருக்க வேண்டும்!!! யார் வீட்டு அப்பன் சொத்தை கருணாநிதி தூக்கிக் கொடுக்கிறார்???]]]

    ரிஷியின் பதிலையே சரவணக்குமாருக்கு மீண்டும் பதிலாக்குகிறேன்..!

    ReplyDelete
  31. மனசு விட்டு உங்களின் ஆதங்கத்தை பதிவு செய்தமைக்கு நன்றி ,
    சொல்ல முடியாத துக்கம் என்னுடையதை நீங்கள் சொன்னது சந்தோசம்

    ReplyDelete
  32. [[[krishnamoorthy said...
    மனசு விட்டு உங்களின் ஆதங்கத்தை பதிவு செய்தமைக்கு நன்றி. சொல்ல முடியாத துக்கம் என்னுடையதை நீங்கள் சொன்னது சந்தோசம்.]]]

    ஆஹா.. என்னை மாதிரியே நீங்களுமா..? நன்றிங்கோ..!

    ReplyDelete
  33. //அடுத்த பிறவியிலாவது உண்மையான ஜனநாயகமுள்ள நாட்டில் பிறந்து தொலைப்போம்..!//
    அப்படியெல்லாம் நம்பிக்கை இழக்காதீர்கள். நான் ஆட்சிக்கு வந்தால் நீங்கள் தான் தகவல் ஒலிபரப்பு மந்திரி!!!

    ReplyDelete
  34. [[[Arun Ambie said...

    //அடுத்த பிறவியிலாவது உண்மையான ஜனநாயகமுள்ள நாட்டில் பிறந்து தொலைப்போம்..!//

    அப்படியெல்லாம் நம்பிக்கை இழக்காதீர்கள். நான் ஆட்சிக்கு வந்தால் நீங்கள்தான் தகவல் ஒலிபரப்பு மந்திரி!!!]]]

    ஆஹா.. இந்த டீலிங் நல்லாயிருக்கே.. ஐ லைக் இட் அருண்..!

    ReplyDelete