Pages

Sunday, January 30, 2011

இவர்களுக்கெல்லாம் வாலண்டரி ரிட்டையர்ட்மெண்ட் இல்லையா..?


30-01-2001

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தோழர் சவுக்குவின் இணையத்தளத்தில் இந்தப் புகைப்படங்களைப் பார்த்தவுடன் எனக்குள் தோன்றியதுதான் இந்தப் பதிவின் தலைப்பு..! 


  
ஒரு மாநிலத்தை ஆளுகின்ற இரு பெரும் தலைகளுமே இப்படி இருந்தால் ஆட்சி நிர்வாகம் எப்படி இருக்கும்..?

அரசு ஊழியர்களுக்கே ஓய்வு நாள் இருக்கின்றபோது இவர்களுக்கும்  ஏன் ஓய்வு கொடுக்கக் கூடாது..? 

ராணுவப் பணியில் சிறிதளவு உடல் தளர்ச்சியடைந்தாலும் வேறு பணிகளுக்கு அனுப்பிவிடுவார்கள்.

மாற்றுத் திறனாளிகளுக்கு என்ன வகை அரசுப் பணியாக இருந்தாலும் அவர்களால் செய்ய முடியுமா என்று மருத்துவர்கள் சான்றழிக்காமல் சேர்க்க மாட்டார்கள்..!

வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகள் அரசு உதவித் தொகையைப் பெறலாம். ஆனால் அரசுப் பணியினைப் பெற முடியாது..!

அரசுப் பணிகளுக்காக, பொது நிர்வாகப் பணிகளுக்காக 24 மணி நேரமும் மக்களைச் சந்திக்க வேண்டி ஓட வேண்டியிருப்பதால் அரசுக்கு தலைமை தாங்குபவர்கள் திடமாக இருக்க வேண்டியது அவசியமே..!

இத்தனை வருடங்களாக அரசு சலுகைகளையும், மக்கள் பணத்தில் சொகுசான வாழ்க்கையையும் அனுபவித்தவி்டடார்களே.. போதாதா..?


அரசு ஊழியர்களைப் போலவே இவர்களுக்கும் கட்டாய ஓய்வு அளிக்கும்படியான சட்டத்தினைக் கொண்டு வரக் கூடாதா..?


இப்போது இப்படி முடியாத நிலையிலும் அரசு பதவிகளையும், அரசு சலுகைகளையும் அனுபவித்தே தீருவேன் என்பது என்ன நாகரிகம்..?

ஜோதிபாசுவையும், நம்பூதிரிபாட்டையும் நினைத்துப் பார்த்தாவது இவர்கள் குறைந்தபட்ச பொது நாகரிகத்தைக் கற்றுக் கொள்ளக் கூடாதா..?

61 comments:

  1. உடம்புக்கு எதும் முடியலையா அண்ணே!

    ReplyDelete
  2. பதிவு சுருக்கமா இருந்தாலும் நறுக்குன்னு இருப்பது உண்மை தான்!

    ReplyDelete
  3. VRS என்பது விருப்ப ஒய்வுதனே?, இவர்கள்தான் ஓய்வெடுக்க விரும்புவதில்லையே? என்நேரமும் (தம்)மக்களை பற்றியே சிந்தனை இருப்பதால்தானோ?

    ReplyDelete
  4. பேராசை!!! :)

    சரி சரவணன் பிறந்த நாள் கொண்டாட்டத்தை பற்றிய பதிவு ஏதும் காணோமே ;)

    ReplyDelete
  5. எல்லாத்துக்கும் காரணம் நம்ப அரசியல் சாசன சட்டம் தான்!அதன் பிரகாரம்,பைத்தியம்,பிணத்தை தவிர 35 வயது நிரம்பிய, மக்கள் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட, யார் வேண்டுமானாலும் ஆட்சி புரியலாம்!

    ReplyDelete
  6. ///,பைத்தியம்,பிணத்தை தவிர 35 வயது நிரம்பிய, மக்கள் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட, யார் வேண்டுமானாலும் ஆட்சி புரியலாம்!///

    சொல்லாடல் ரசிக்க வைக்கிறது கண்பத். :-)

    ReplyDelete
  7. ஒருத்தனுக்கு எழுந்து "நிற்கிறதுக்கேஏஏஏஎ......" முடியலியாம்!! அவனுக்கு ..... அது கேட்குதாம்! என்னத்தச் சொல்ல!!

    ReplyDelete
  8. கருணாநிதி அரசியல் சாணக்கியராக இருக்கலாம். பெரும் ராஜதந்திரியாக இருக்கலாம். மக்களுக்கு பற்பல சேவைகளும், மாபெரும் திட்டங்களும் கொண்டு வந்திருக்கலாம். தமிழகத்தின் தலையெழுத்தையே மாற்றியவராகக் கூட இருக்கலாம்! (உண்மைதானே!! :-)

    ஆனால்...

    ஏழு கோடி தமிழ் மக்களுக்கு எழுந்து நடமாடக் கூட வக்கில்லாத ஒருவன் இன்னும் தலைவனாக நீடிப்பது நாமெல்லாம் வருந்தவேண்டிய விஷயம்.

    புகையினால் ஏற்படும் போதை கூட இறங்கிவிடும்.
    மதுவினால் ஏற்படும் போதை கூட இறங்கிவிடும்.
    மாதுவினால் ஏற்படும் போதை கூட இறங்கிவிடும்.

    ஆனால் இறங்கவே இறங்காத போதை "அதிகார போதை"

    செத்துப் போய் சுடுகாட்டில் இந்த ஆளை சார்த்தி வைத்திருந்தால் கூட "உங்களுக்குப் பாராட்டு விழா நடத்துகிறார்கள்" என்றதும் பாடையை விட்டு அகன்று மாலையைக் கழட்டிப் போட்டு பல்லிளித்துக் கொண்டு வந்து மேடையில் வந்து அமர்ந்து கொள்ளும்!!

    ReplyDelete
  9. //செத்துப் போய் சுடுகாட்டில் இந்த ஆளை சார்த்தி வைத்திருந்தால் கூட "உங்களுக்குப் பாராட்டு விழா நடத்துகிறார்கள்" என்றதும் பாடையை விட்டு அகன்று மாலையைக் கழட்டிப் போட்டு பல்லிளித்துக் கொண்டு வந்து மேடையில் வந்து அமர்ந்து கொள்ளும்!// நெற்றியடி நண்பா. தோழமையுடன்

    ReplyDelete
  10. நண்பர் ரிஷி இறுதியில் சொல்லியுள்ளது முற்றிலும் உண்மை. தவிடு தின்னும் ராஜாவிற்கு முறம் பிடிப்பவனே மந்திரி.
    // நானே போகும் பொது நீயும் வண்டியில் வாயேன் இருவரும் சேர்ந்தே போகலாம் //
    என்று இருவருக்கும் ஒப்பந்தம் இருக்கும் போல!

    ReplyDelete
  11. நன்றி ரிஷி!

    இதோ புதிய விவிலியம் (தி.மு.க பதிப்பு)

    'தள்ளு'ங்கள்; கொடுக்கப்படும்!
    கேளுங்கள்; 'தட்ட'ப்படும்!

    ReplyDelete
  12. இவர் எங்க ஆட்சி செய்கிறார்...
    மக்கள் தான் இவருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்..

    ReplyDelete
  13. ஆச்சரியமாய் சிறு பதிவு.

    ReplyDelete
  14. அண்ணே கருணாநிதிக்கு டயப்பர் மாத்தவே ஆள் தேவைப்படுகிறதாம்...

    ReplyDelete
  15. எல்லாம் சரி தான் அண்ணே ..உங்க இதய தெய்வம் புரட்சித்தலைவர் பேசக்கூட முடியாத நிலைமையிலும் முதலமைச்சராக இருந்தாரே ..அப்போ நீங்க இதையே சொன்னீங்களா?

    ReplyDelete
  16. பொது நாகரிகம் அப்டிங்குற வார்த்தைக்கு அர்த்தம் தெரிஞ்சா தான் இவங்க எல்லாம் இப்படி பண்ண மாட்டாங்களே...

    ReplyDelete
  17. எனக்குத் தெரிந்த சொந்தக்கார தாத்தா ஒருத்தர் இருந்தாரு.. (இப்போ போய் சேந்துட்டாரு)... 84 வயசு... அவரை போய் பார்த்தப்போ அவருக்கு நம்மளை யாருன்னே தெரியலை.. யாருன்னு சொன்ன பிறகும்... திரும்பத்திரும்ப மூஞ்சியவே பாத்துகிட்டு இருந்தாரு... கால் மணிநேரம் கழிச்சு வாப்பா, நீ யாருன்னு ஜாடையா கேட்டாரு... மறுபடி கால் மணிநேரம் கழிச்சு வாப்பா, நீ யாருன்னு கேட்டாரு... மறுபடி கால் மணிநேரம் கழிச்சு வாப்பா, நீ யாருன்னு கேட்டாரு... மறுபடி கால் மணிநேரம் கழிச்சு வாப்பா, நீ யாருன்னு கேட்டாரு... மறுபடி கால் மணிநேரம் கழிச்சு வாப்பா, நீ யாருன்னு கேட்டாரு...

    ஐ திங்க்.... ஐ திங்க்.... ஐ திங்க்.... இவுங்களுக்கு அவரை விட வயசு அதிகம்ணு நினைக்கிறேன்...... என்னத்தைச்சொல்ல... புரிஞ்சுக்குங்க... அவ்ளோதான்...

    ReplyDelete
  18. நீங்க என்னத்த எழுதுங்க.. இவனுங்க அசரவே மாட்டானுங்க...அப்படி கொழுத்து திணவெடுத்து திரிய ஆசைப்படுற அதிகார போதை.. இங்கு மட்டுமல்ல இவர்கள் போலவே இந்திய - தமிழகத்தில் பல இடங்களில் இதைப்போன்ற ஆக்ரமிப்புகள் இருக்கிறது.. பழைய சென்னையில் கொள்ளை லாரி எனும் ஒரு சொல் உண்டு அந்த லாரி வந்து தான் இதுங்கள அள்ளிக்கிட்டு போகனும்.

    ReplyDelete
  19. வாஸ்தவம் தான் ... ஆனா
    கருணாநிதிக்கு பிறகு அந்த பதவிக்கு தகுதியான ஆளு கிடைக்கணும் இல்ல. மாடுமேய்க்க கூட தகுதி இல்லதவனஎல்லாம் நம்பி எப்படி முக்கியமான பதவிய கொடுக்கறது?

    ReplyDelete
  20. தலைப்பில் நீங்கள் உபயோகித்திருக்க வேண்டிய வார்த்தைகள் மண்டேடறி ரிடயர்மென்ட் (mandatory retirement = கட்டாய ஓய்வு) , வாலண்டரி ரிடயர்மென்ட் (voluntary retirement = விருப்ப ஓய்வு) அல்ல.
    மற்றபடி நீங்கள் எழுதியிருப்பதில் எனக்கு முழு சம்மதம்.

    ReplyDelete
  21. கலைஞரைப் போல் இன்று வரை இரவு பகல் பாராமல் உழைக்ககூடியவர்கள், மேசையில் தேங்காமல், தூங்காமல் கோப்புகளைப் பார்த்து ஆணைகளைப் பிறப்பிக்கும் ஆற்றலுடைய ஆட்சியாளரை, அதிகாரத்தில் உள்ளோரை அல்லது விரும்புவோரைக் காட்டிவிட்டு பிறகு பேசுங்கள் தோழர்களே!

    ரெஸ்ட் எடுத்து டயர்டாகி ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருக்கும் இன்றைய இளைஞர்களுக்கு(வயதில் மட்டும்) மத்தியில், 87 வயதிலும் இளைஞராகப் பணியாற்றும் தலைவர் கலைஞரைக் இந்த விசயத்தில் குறை சொல்ல இங்கு யாருக்கும் தகுதியில்லை. சமூகப் பணிக்கு என்றும் ஓய்வில்லை. சாகும் வரை களப் போராளாயாயிருந்த தந்தை பெரியாரின் மாணவர் கலைஞர். அவர் அரசியல் அதிகாரத்திலிருந்து விரும்பினால் ஓய்வு பெறலாம். சமூகப் பணியிலிருந்து ஓய்வு பெற மாட்டார். காலில் சக்கரம் கட்டினால் என்ன? சக்கர நாற்காலியில் சுற்றினால் என்ன? பணிகள் நடக்கின்றனவா என்பதே முக்கியம்.

    ஆளுநர், முதல்வர் குறித்த உங்களின் இந்த ஒப்பீடு மேலோட்டமாகச் சரி. ஆனால் பணியாற்றும் தளத்தில் கலைஞருக்கு யாரையும் ஒப்பிட முடியாது. கொடநாட்டு ராணி அவர்கள் கட்சி தலைமை அலுவலகத்துக்கு வருவதற்கே போஸ்டர் அடித்துக் கொண்டாடும் நிலையில் கலைஞரைப் பற்றி எழுத எப்படி மனம் வருகிறதோ தெரியவில்லை.

    ReplyDelete
  22. இடுகை நீளம் ரெம்ப குறைவா இருந்தாலும், நியாயமான கேள்வி தான்

    ReplyDelete
  23. ”தல” இந்த வயசுல இம்புட்டு அராஜகம் பண்ணி, பெரிய லெவல்ல பண சுருட்டு விளையாட்டெல்லாம் விளையாடறாரே, வி.ஆர்.எஸ். எல்லாம் கிடையாதான்னு அஞ்சா நெஞ்சன் அண்ணன் உண்மை தமிழன் கேட்டால், அன்று இதய தெய்வம் புரட்சி தலைவர இப்படி கேட்டீங்களான்னு “தல” ஸ்டைல்ல ஒரு கமெண்ட் வருது...

    வெளங்கிடும்...

    ReplyDelete
  24. பிரின்ஸ், மானமிகு மாதிரி இங்கே வந்து கலைஞருக்கு சொம்படிக்கவேண்டாம்...(இளைஞன் பட விமர்சனம் படிச்சீங்களா)

    ஆனால் உங்கள் கருத்தோடு உடன்படுகிறேன் பிரின்ஸ். தமிழக முதல்வருக்கு வயதாவதால் பணிகள் தேங்கியதாக சொல்லமுடியாது...!!!

    ReplyDelete
  25. பிரின்ஸ்!
    புலி வாலைப் பிடித்தவர்களால் கடைசி வரை அதை விட முடியாது. சுற்றிக் கொண்டே இருந்தாக வேண்டும்!! நாயகன் படத்தில் கமல் சொல்வாரே "விட முடியாதும்மா! விட்டா செத்துருவேன்மா"

    அது போன்ற நிலையில்தான் இன்று கருணாநிதி இருக்கிறார். சமீப காலமாய் அவரது செயல்பாடுகளைப் பார்க்கும்போது இது தெளிவாகத் தெரிகிறது. கலைஞர் சுறுசுறுப்பானவராக இருக்கலாம். ஆனால் ஏழு கோடி பேரிலிருந்து நம்மால் ஒருவனை மட்டும்தான் உருவாக்க முடிந்ததா??

    உண்மை என்னவென்றால் தலைவனாக வேறு எவனும் முன்னால் வந்துவிடக்கூடாது என்பதே கருணாநிதியின் நிலைப்பாடு..வெறி! அதிகார வெறி அவரை அப்படி ஆக்கி வைத்திருக்கிறது! அதிகார போதை அவரை சக்கர நாற்காலியில் சுழன்றாவது சுத்தி சுத்தி அடிக்க வைக்கிறது.

    ReplyDelete
  26. [[[வால்பையன் said...
    உடம்புக்கு எதும் முடியலையா அண்ணே!]]]

    உடம்பு நல்லாத்தான் தம்பி இருக்கு. மனசுதான் சரியில்லை..!

    ReplyDelete
  27. [[[வால்பையன் said...
    பதிவு சுருக்கமா இருந்தாலும் நறுக்குன்னு இருப்பது உண்மைதான்!]]]

    நன்றி தம்பி..!

    ReplyDelete
  28. [[[chennayil said...
    VRS என்பது விருப்ப ஒய்வுதனே?, இவர்கள்தான் ஓய்வெடுக்க விரும்புவதில்லையே? எந்நேரமும் (தம்)மக்களை பற்றியே சிந்தனை இருப்பதால்தானோ?]]]

    இவர்கள் தன் விருப்ப ஓய்வில் போகவில்லையெனில் கட்டாய ஓய்வில் நாம் அனுப்ப வேண்டும்..!

    ReplyDelete
  29. [[[Rafeek said...

    பேராசை!!! :)]]]

    அதனை பெருநஷ்டமாக்கிக் காட்ட வேண்டும் வருகின்ற தேர்தலில்..!

    [[[சரி சரவணன் பிறந்த நாள் கொண்டாட்டத்தை பற்றிய பதிவு ஏதும் காணோமே ;)]]]

    அது எதுக்கு..? அதான் முடிஞ்சு போச்சே..!

    ReplyDelete
  30. [[[Ganpat said...

    எல்லாத்துக்கும் காரணம் நம்ப அரசியல் சாசன சட்டம்தான்! அதன் பிரகாரம் பைத்தியம், பிணத்தை தவிர 35 வயது நிரம்பிய, மக்கள் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட, யார் வேண்டுமானாலும் ஆட்சி புரியலாம்!]]]

    மொதல்ல இந்த வயசான பார்ட்டிகளையெல்லாம் மூட்டை கட்டி வீட்டுக்கு அனுப்பணும்..!

    ReplyDelete
  31. [[[ரிஷி said...

    ///,பைத்தியம்,பிணத்தை தவிர 35 வயது நிரம்பிய, மக்கள் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட, யார் வேண்டுமானாலும் ஆட்சி புரியலாம்!///

    சொல்லாடல் ரசிக்க வைக்கிறது கண்பத். :-)]]]

    ரிஷி, இதில் ரொம்ப வல்லவர்..!

    ReplyDelete
  32. [[[ரிஷி said...
    ஒருத்தனுக்கு எழுந்து "நிற்கிறதுக்கேஏஏஏஎ......" முடியலியாம்!! அவனுக்கு ..... அது கேட்குதாம்! என்னத்தச் சொல்ல!!]]]

    ஹா.. ஹா.. ஹா..!

    ReplyDelete
  33. [[[ரிஷி said...
    ஏழு கோடி தமிழ் மக்களுக்கு எழுந்து நடமாடக்கூட வக்கில்லாத ஒருவன் இன்னும் தலைவனாக நீடிப்பது நாமெல்லாம் வருந்த வேண்டிய விஷயம்.]]]

    இந்த அளவுக்கு வெறுப்பு வேண்டாம் ரிஷி. அவர் தன்னுடைய உடல் நலத்தை முன்னிட்டு ஓய்வு எடுக்கலாம்.. அது அவருக்கும் நல்லது.. நமக்கும் நல்லது..!

    [[[புகையினால் ஏற்படும் போதைகூட இறங்கிவிடும். மதுவினால் ஏற்படும் போதை கூட இறங்கிவிடும்.
    மாதுவினால் ஏற்படும் போதைகூட இறங்கிவிடும். ஆனால் இறங்கவே இறங்காத போதை "அதிகார போதை"]]]

    நூற்றுக்கு நூறு சரியான வாதம்..!

    [[[செத்துப் போய் சுடுகாட்டில் இந்த ஆளை சார்த்தி வைத்திருந்தால்கூட "உங்களுக்குப் பாராட்டு விழா நடத்துகிறார்கள்" என்றதும் பாடையை விட்டு அகன்று மாலையைக் கழட்டிப் போட்டு பல்லிளித்துக் கொண்டு வந்து மேடையில் வந்து அமர்ந்து கொள்ளும்!!]]]

    ஹி.. ஹி.. அரசியல்வியாதிகளின் ஆவிகள் செய்தாலும் செய்யும்..!

    ReplyDelete
  34. [[[Feroz said...

    //செத்துப் போய் சுடுகாட்டில் இந்த ஆளை சார்த்தி வைத்திருந்தால் கூட "உங்களுக்குப் பாராட்டு விழா நடத்துகிறார்கள்" என்றதும் பாடையை விட்டு அகன்று மாலையைக் கழட்டிப் போட்டு பல்லிளித்துக் கொண்டு வந்து மேடையில் வந்து அமர்ந்து கொள்ளும்!//

    நெற்றியடி நண்பா. தோழமையுடன்]]]

    நன்றி நண்பரே..

    ReplyDelete
  35. [[[கக்கு - மாணிக்கம் said...

    நண்பர் ரிஷி இறுதியில் சொல்லியுள்ளது முற்றிலும் உண்மை. தவிடு தின்னும் ராஜாவிற்கு முறம் பிடிப்பவனே மந்திரி.

    // நானே போகும் பொது நீயும் வண்டியில் வாயேன் இருவரும் சேர்ந்தே போகலாம் //

    என்று இருவருக்கும் ஒப்பந்தம் இருக்கும் போல!]]]

    என்னாங்கப்பா இது..? என்னைவிட கோபமானவர்கள் நிறைய பேர் இருக்கீங்க போலிருக்கு..!

    ReplyDelete
  36. [[[Ganpat said...
    நன்றி ரிஷி! இதோ புதிய விவிலியம் (தி.மு.க பதிப்பு) 'தள்ளு'ங்கள்; கொடுக்கப்படும்! கேளுங்கள்; 'தட்ட'ப்படும்!]]]

    ஹா.. ஹா.. ஹா.. செம நக்கலு..! நன்றி கண்பத் ஸார்..!

    ReplyDelete
  37. [[# கவிதை வீதி # சௌந்தர் said...
    இவர் எங்க ஆட்சி செய்கிறார். மக்கள்தான் இவருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்..]]]

    வருகின்ற தேர்தலிலேயே அதனைச் செய்தார்களேயானால் புண்ணியமாக இருக்கும்..!

    ReplyDelete
  38. [[[மோகன் குமார் said...

    ஆச்சரியமாய் சிறு பதிவு.]]]

    கருவுக்கேற்றவாறு சிறியதாக உள்ளது.

    ReplyDelete
  39. [[[கே.ஆர்.பி.செந்தில் said...
    அண்ணே கருணாநிதிக்கு டயப்பர் மாத்தவே ஆள் தேவைப்படுகிறதாம்.]

    பாவம்.. வருத்தப்படுகிறேன். என்னுடைய வீட்டில் எனது தாத்தா இப்படியிருந்தால் நான் இப்படி இவரைக் கஷ்டப்படுத்தி, கட்டாயப்படுத்தி உழைக்க வைத்து சம்பாதிக்கமாட்டேன்..!

    ReplyDelete
  40. [[[ஜோ/Joe said...
    எல்லாம் சரிதான் அண்ணே. உங்க இதய தெய்வம் புரட்சித் தலைவர் பேசக்கூட முடியாத நிலைமையிலும் முதலமைச்சராக இருந்தாரே. அப்போ நீங்க இதையே சொன்னீங்களா?]]]

    இல்லையே.. நல்லா பேசினாரே..! ஒரு கை ஒத்துழைக்க மறுத்தாலும் ஆளுயுர மாலையை ஒத்தக் கையால தூக்கிக் காட்டின கதை தெரியுமா உங்களுக்கு..?

    ஓகே.. ஓகே.. டோண்ட் டென்ஷன் ஜோ.. அந்தக் காலத்திலும் இதே போல் நாங்களெல்லாம் கருத்துக் கூறும் அளவுக்கு வாய்ப்புகள் இருந்திருந்தால் நிச்சயம் இதைக் கூறியிருப்போம். "தலைவா.. போதும் ஓய்வெடு.. பின்னால் இருந்து கட்சியை நடத்து.." என்று கூக்குரல் இட்டிருப்போம்..!

    ReplyDelete
  41. [[[kanagu said...
    பொது நாகரிகம் அப்டிங்குற வார்த்தைக்கு அர்த்தம் தெரிஞ்சாதான் இவங்க எல்லாம் இப்படி பண்ண மாட்டாங்களே...]]]

    உண்மைதான். உலக அரசியலைப் பற்றிப் மணிக்கணக்குல பேசுறவங்களுக்கு இந்த வார்த்தைக்கான அர்த்தம் மட்டும் தெரிய மாட்டேங்குதே..!?

    ReplyDelete
  42. [[[yeskha said...
    எனக்குத் தெரிந்த சொந்தக்கார தாத்தா ஒருத்தர் இருந்தாரு.. (இப்போ போய் சேந்துட்டாரு)... 84 வயசு... அவரை போய் பார்த்தப்போ அவருக்கு நம்மளை யாருன்னே தெரியலை.. யாருன்னு சொன்ன பிறகும்... திரும்பத் திரும்ப மூஞ்சியவே பாத்துகிட்டு இருந்தாரு... கால் மணிநேரம் கழிச்சு வாப்பா, நீ யாருன்னு ஜாடையா கேட்டாரு... மறுபடி கால் மணிநேரம் கழிச்சு வாப்பா, நீ யாருன்னு கேட்டாரு... மறுபடி கால் மணிநேரம் கழிச்சு வாப்பா, நீ யாருன்னு கேட்டாரு... மறுபடி கால் மணிநேரம் கழிச்சு வாப்பா, நீ யாருன்னு கேட்டாரு... மறுபடி கால் மணிநேரம் கழிச்சு வாப்பா, நீ யாருன்னு கேட்டாரு...
    ஐ திங்க்.... ஐ திங்க்.... ஐ திங்க்.... இவுங்களுக்கு அவரை விட வயசு அதிகம்ணு நினைக்கிறேன்...... என்னத்தைச் சொல்ல... புரிஞ்சுக்குங்க... அவ்ளோதான்...]]]

    இவரு அப்படீல்லாம் இல்லை. நல்லாத் தெளிவாத்தான் இருக்காரு..!(கொள்ளையடிக்கணும்ல்ல) நடக்க முடியலை.. அவ்ளோதான் பிரச்சினை..! இதுனால எல்லாமே ஸ்லோ..!

    ReplyDelete
  43. [[[T.V.ராதாகிருஷ்ணன் said...

    :)))]]]

    நன்றிகள் ஐயா.. ஏதாவது தப்பா எழுதிட்டனா..?

    ReplyDelete
  44. [[[raja said...
    நீங்க என்னத்த எழுதுங்க. இவனுங்க அசரவே மாட்டானுங்க. அப்படி கொழுத்து திணவெடுத்து திரிய ஆசைப்படுற அதிகார போதை. இங்கு மட்டுமல்ல இவர்கள் போலவே இந்திய - தமிழகத்தில் பல இடங்களில் இதைப் போன்ற ஆக்ரமிப்புகள் இருக்கிறது. பழைய சென்னையில் கொள்ளை லாரி எனும் ஒரு சொல் உண்டு அந்த லாரி வந்துதான் இதுங்கள அள்ளிக்கிட்டு போகனும்.]]]

    ஆந்திர கவர்னரா இருந்த திவாரியையும் இப்படியே நினைச்சுப் பாருங்க.. லேசா தள்ளிவிட்டாலே கீழ விழுகுற நிலைல இருந்தவரை கொண்டாந்து கவர்னர் மாளிகைல உக்கார வைச்சாங்க.. என்ன வேலைய செஞ்சாரு பார்த்தீங்களா..?

    ReplyDelete
  45. [[[அஹோரி said...
    வாஸ்தவம்தான். ஆனா
    கருணாநிதிக்கு பிறகு அந்த பதவிக்கு தகுதியான ஆளு கிடைக்கணும் இல்ல. மாடு மேய்க்ககூட தகுதி இல்லதவன எல்லாம் நம்பி எப்படி முக்கியமான பதவிய கொடுக்கறது?]]]

    ஏன் இல்லை.. அதுதான் பட்டத்து இளவரசர் இருக்காரே.. அவருக்கு முடிசூட்டிவிட்டு ஓய்வெடுக்கலாமே..?

    ReplyDelete
  46. [[[Vijay said...
    தலைப்பில் நீங்கள் உபயோகித்திருக்க வேண்டிய வார்த்தைகள் மண்டேடறி ரிடயர்மென்ட்(mandatory retirement = கட்டாய ஓய்வு), வாலண்டரி ரிடயர்மென்ட் (voluntary retirement = விருப்ப ஓய்வு) அல்ல.
    மற்றபடி நீங்கள் எழுதியிருப்பதில் எனக்கு முழு சம்மதம்.]]]

    தவறைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றிகள் ஸார்..!

    ReplyDelete
  47. [[[PRINCENRSAMA said...

    கலைஞரைப் போல் இன்றுவரை இரவு பகல் பாராமல் உழைக்க கூடியவர்கள், மேசையில் தேங்காமல், தூங்காமல் கோப்புகளைப் பார்த்து ஆணைகளைப் பிறப்பிக்கும் ஆற்றலுடைய ஆட்சியாளரை, அதிகாரத்தில் உள்ளோரை அல்லது விரும்புவோரைக் காட்டிவிட்டு பிறகு பேசுங்கள் தோழர்களே!]]]

    நாங்கள் அவரை விரும்பவில்லையே பிரின்ஸு..! முதல் மேட்டர்லேயே அவர் அவுட்டாகுறாரு..! வேற ஆளு யாருன்றது தேர்தல்லதான் தெரிய வரும்..!

    [[[ரெஸ்ட் எடுத்து டயர்டாகி ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருக்கும் இன்றைய இளைஞர்களுக்கு(வயதில் மட்டும்) மத்தியில், 87 வயதிலும் இளைஞராகப் பணியாற்றும் தலைவர் கலைஞரைக் இந்த விசயத்தில் குறை சொல்ல இங்கு யாருக்கும் தகுதியில்லை. சமூகப் பணிக்கு என்றும் ஓய்வில்லை. சாகும்வரை களப் போராளாயாயிருந்த தந்தை பெரியாரின் மாணவர் கலைஞர். அவர் அரசியல் அதிகாரத்திலிருந்து விரும்பினால் ஓய்வு பெறலாம். சமூகப் பணியிலிருந்து ஓய்வு பெற மாட்டார். காலில் சக்கரம் கட்டினால் என்ன? சக்கர நாற்காலியில் சுற்றினால் என்ன? பணிகள் நடக்கின்றனவா என்பதே முக்கியம்.]]]

    நடத்துங்க.. உங்களுடைய சமூகப் பணின்னா என்ன காசு அள்ளுறதுதானே.. அள்ளிட்டுப் போகச் சொல்லுங்க அவரை..!

    [[[ஆளுநர், முதல்வர் குறித்த உங்களின் இந்த ஒப்பீடு மேலோட்டமாகச் சரி. ஆனால் பணியாற்றும் தளத்தில் கலைஞருக்கு யாரையும் ஒப்பிட முடியாது. கொடநாட்டு ராணி அவர்கள் கட்சி தலைமை அலுவலகத்துக்கு வருவதற்கே போஸ்டர் அடித்துக் கொண்டாடும் நிலையில் கலைஞரைப் பற்றி எழுத எப்படி மனம் வருகிறதோ தெரியவில்லை.]]]

    கொடநாட்டு ராணியும் தனது தள்ளாடும் வயதில் இதே லொள்ளை செஞ்சா கண்டிப்பா அவரையும் திட்டுவோம்.. அப்போவும் நீங்க வந்து எங்களைத் திட்டுவீங்கன்னு எனக்குத் தெரியும் தம்பி..!

    நூறு வயசு நல்லாயிருங்க..!

    ReplyDelete
  48. [[[நசரேயன் said...
    இடுகை நீளம் ரெம்ப குறைவா இருந்தாலும், நியாயமான கேள்விதான்]]]

    புரிந்து கொண்டமைக்கு நன்றி நசரேயன் ஸார்..!

    ReplyDelete
  49. [[[R.Gopi said...
    ”தல” இந்த வயசுல இம்புட்டு அராஜகம் பண்ணி, பெரிய லெவல்ல பண சுருட்டு விளையாட்டெல்லாம் விளையாடறாரே, வி.ஆர்.எஸ். எல்லாம் கிடையாதான்னு அஞ்சாநெஞ்சன் அண்ணன் உண்மைதமிழன் கேட்டால், அன்று இதய தெய்வம் புரட்சி தலைவர இப்படி கேட்டீங்களான்னு “தல” ஸ்டைல்ல ஒரு கமெண்ட் வருது...

    வெளங்கிடும்...]]]

    புரிய வைச்சுட்டேன் தம்பி..!

    ReplyDelete
  50. [[[செந்தழல் ரவி said...

    பிரின்ஸ், மானமிகு மாதிரி இங்கே வந்து கலைஞருக்கு சொம்படிக்க வேண்டாம். (இளைஞன் பட விமர்சனம் படிச்சீங்களா)
    ஆனால் உங்கள் கருத்தோடு உடன்படுகிறேன் பிரின்ஸ். தமிழக முதல்வருக்கு வயதாவதால் பணிகள் தேங்கியதாக சொல்லமுடியாது!!!]]]

    ஆமாம்.. இப்பக்கூட இந்தத் தள்ளாத வயதில்கூட தனது குடும்பத்தினரையும், கட்சியையும் காப்பாற்ற டெல்லிக்குக் காவடியெடுத்திருக்கிறார்..

    ReplyDelete
  51. [[[ரிஷி said...

    பிரின்ஸ்! புலி வாலைப் பிடித்தவர்களால் கடைசிவரை அதைவிட முடியாது. சுற்றிக் கொண்டே இருந்தாக வேண்டும்!! நாயகன் படத்தில் கமல் சொல்வாரே "விட முடியாதும்மா! விட்டா செத்துருவேன்மா" அது போன்ற நிலையில்தான் இன்று கருணாநிதி இருக்கிறார். சமீப காலமாய் அவரது செயல்பாடுகளைப் பார்க்கும்போது இது தெளிவாகத் தெரிகிறது. கலைஞர் சுறுசுறுப்பானவராக இருக்கலாம். ஆனால் ஏழு கோடி பேரிலிருந்து நம்மால் ஒருவனை மட்டும்தான் உருவாக்க முடிந்ததா??]]]

    முடியும்.. ஆனால் அவருக்கு மனசில்லையே.. தன்னைத் தவிர தி.மு.க.வில் இருப்பவர்களையும் சேர்த்தே அத்தனை பேரும் முட்டாள்கள்.. ஆட்சி நிர்வாகத்தைக் கையாளத் தெரியாதவர்கள் என்பது அவருடைய நினைப்பு..!

    [[[உண்மை என்னவென்றால் தலைவனாக வேறு எவனும் முன்னால் வந்துவிடக் கூடாது என்பதே கருணாநிதியின் நிலைப்பாடு. வெறி! அதிகார வெறி அவரை அப்படி ஆக்கி வைத்திருக்கிறது! அதிகார போதை அவரை சக்கர நாற்காலியில் சுழன்றாவது சுத்தி சுத்தி அடிக்க வைக்கிறது.]]]

    மீதியை நீங்களே சொல்லிட்டீங்க..! நன்றி ரிஷி..!

    ReplyDelete
  52. கருணாநிதிக்கு சொம்பு தூக்குவோர் இந்த செய்தியைப் பாருங்கள்!
    http://www.dinamalar.com/News_Detail.asp?Id=178672

    இந்த கட்டவேண்டிய இலட்சம் கோடியும் நம் தலையில்தான் ஏதோ ஒருவகையில் வந்து விழும்! இதுதான் சிறந்த நிர்வாகத்திற்கான இலட்சணமா??

    கருணாநிதிக்கு ஒரு வேண்டுகோள் :
    எனக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை...தயவு செய்து உபத்திரவம் செய்யாதீர்கள்!!!

    ReplyDelete
  53. [[[ரிஷி said...

    கருணாநிதிக்கு சொம்பு தூக்குவோர் இந்த செய்தியைப் பாருங்கள்!
    http://www.dinamalar.com/News_Detail.asp?Id=178672

    இந்தக் கட்டவேண்டிய இலட்சம் கோடியும் நம் தலையில்தான் ஏதோ ஒருவகையில் வந்து விழும்! இதுதான் சிறந்த நிர்வாகத்திற்கான இலட்சணமா??
    கருணாநிதிக்கு ஒரு வேண்டுகோள்:
    எனக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை. தயவு செய்து உபத்திரவம் செய்யாதீர்கள்!!!]]]

    ஹா.. ஹா.. ரிஷி அவ்ளோ சீக்கிரம் தாத்தா நம்மளை விட்டிருவாரா..?

    உன் பரம்பரை, என் பரம்பரைன்னு எல்லார் மேலேயும் கடனை ஏத்தி நம்மளை கடன்காரனா மாத்திட்டுத்தான் போவாரு..! அனுபவிக்க வேண்டியது நம்ம கடமை..!

    ReplyDelete
  54. சரவணன்,
    தமிழ்நாட்டுக் கடன் இவ்வளவு தூரம் போயிருக்குங்கறது எனக்கு இன்னிக்குத்தான் தெரியுது! பாருங்க... இந்த இரு திராவிடக் கட்சிகளோட ஆட்சி நிர்வாகம் எந்த அளவுக்கு மோசமா இருக்குன்னு!

    மேட்டுல இருக்கற மண்ணை வெட்டி பள்ளத்துல நிரப்பினா.. அது சரியானது! அத விட்டுட்டு வேறொரு பள்ளத்துல இருக்கற மண்ணை வெட்டி இந்தப் பள்ளத்துல போட்டா.. அந்த பள்ளத்தை நிரப்புறது யாரு??!

    கடன் வாங்காம வளர்ச்சிப் பணிகள் நடக்காதுன்னா... அந்த வளர்ச்சிப் பணிகள் மூலமா கடனை அடைக்க முடிஞ்சாத்தானே வாங்கணும்? அதை விட்டுட்டு இவய்ங்க இப்படி கடனை வாங்கிக் குவிப்பானுங்களாம்.... அதுல மக்கள் நலப்பணித் திட்டங்கள தீட்டுவாய்ங்களாம்.. அதுல கணிசமான தொகையை கமிஷன் அடிப்பாய்ங்களாம்... கடைசில ஓட்டுப் போட்ட மக்கள் வாயில மண்ணைக் கவ்விட்டுப் போகணுமாம்! என்ன எழவெடுத்த நிர்வாகம் இது!!!! இதுல சில பேர் வக்காலத்து வாங்கிக்கிட்டு வந்துடுறாங்க... வீல் சேர்ல உருண்டுக்கிட்டு வேலை பார்த்தா என்ன..! பணிகள் நடக்காமயா இருக்கு...கோப்பு தேங்கியாக் கிடக்குன்னு!!

    கருணாநிதிக்கு அறைகூவல் : சம்பாதிச்சு வீட்டை நிர்வாகம் பண்றேன்யா நானு...! உங்களால சம்பாதிச்சு நாட்டை நிர்வாகம் பண்ண முடிஞ்சாப் பாருங்க.. இல்லைனா முடியலன்னு சொல்லிட்டு நாற்காலிய விட்டு இறங்கிப் போங்க! ஃபெவிகால் போட்டு ஒட்டுன மாதிரி ஒட்டுக்கிட்டு பெருசுக்குப் பேச்சைப் பாரு..பேச்சை..!

    ReplyDelete
  55. I saw a statement here... "people who can't speak can only get monitory benefits". In that case can our president "Mrs.Patel" and our PM "Mr. Singh" will be the perfect eligible candidates for this scheme.

    ReplyDelete
  56. [[[ரிஷி said...

    சரவணன், தமிழ்நாட்டுக் கடன் இவ்வளவு தூரம் போயிருக்குங்கறது எனக்கு இன்னிக்குத்தான் தெரியுது! பாருங்க. இந்த இரு திராவிடக் கட்சிகளோட ஆட்சி நிர்வாகம் எந்த அளவுக்கு மோசமா இருக்குன்னு!
    மேட்டுல இருக்கற மண்ணை வெட்டி பள்ளத்துல நிரப்பினா.. அது சரியானது! அத விட்டுட்டு வேறொரு பள்ளத்துல இருக்கற மண்ணை வெட்டி இந்தப் பள்ளத்துல போட்டா.. அந்த பள்ளத்தை நிரப்புறது யாரு??!
    கடன் வாங்காம வளர்ச்சிப் பணிகள் நடக்காதுன்னா அந்த வளர்ச்சிப் பணிகள் மூலமா கடனை அடைக்க முடிஞ்சாத்தானே வாங்கணும்? அதை விட்டுட்டு இவய்ங்க இப்படி கடனை வாங்கிக் குவிப்பானுங்களாம்.... அதுல மக்கள் நலப்பணித் திட்டங்கள தீட்டுவாய்ங்களாம். அதுல கணிசமான தொகையை கமிஷன் அடிப்பாய்ங்களாம். கடைசில ஓட்டுப் போட்ட மக்கள் வாயில மண்ணைக் கவ்விட்டுப் போகணுமாம்! என்ன எழவெடுத்த நிர்வாகம் இது!!!! இதுல சில பேர் வக்காலத்து வாங்கிக்கிட்டு வந்துடுறாங்க... வீல் சேர்ல உருண்டுக்கிட்டு வேலை பார்த்தா என்ன! பணிகள் நடக்காமயா இருக்கு. கோப்பு தேங்கியாக் கிடக்குன்னு!! கருணாநிதிக்கு அறைகூவல் : சம்பாதிச்சு வீட்டை நிர்வாகம் பண்றேன்யா நானு...! உங்களால சம்பாதிச்சு நாட்டை நிர்வாகம் பண்ண முடிஞ்சாப் பாருங்க.. இல்லைனா முடியலன்னு சொல்லிட்டு நாற்காலிய விட்டு இறங்கிப் போங்க! ஃபெவிகால் போட்டு ஒட்டுன மாதிரி ஒட்டுக்கிட்டு பெருசுக்குப் பேச்சைப் பாரு. பேச்சை..!]]]

    ஓகே.. கூல். கூல்.. ஏய் யாரப்பா அங்கே.. அண்ணனுக்கு ஒரு சோடா உடைங்கப்பா..!

    ReplyDelete
  57. [[[GS said...
    I saw a statement here... "people who can't speak can only get monitory benefits". In that case can our president "Mrs.Patel" and our PM "Mr. Singh" will be the perfect eligible candidates for this scheme.]]]

    ஹா.. ஹா.. ஹா.. நல்ல காமெடி.. உண்மைதான்..!

    ReplyDelete
  58. ///ஓகே.. கூல். கூல்.. ஏய் யாரப்பா அங்கே.. அண்ணனுக்கு ஒரு சோடா உடைங்கப்பா..!///

    பரவால்லண்ணே! கூலாயிட்டேன்! எட்டு மணி நேரம் ஆச்சே! இன்னும் புதுப் பதிவைக் காணோமே?? :-)

    ReplyDelete