Pages

Tuesday, January 25, 2011

தொடரும் மீனவர்கள் படுகொலை - தொலையட்டும் இந்தக் குடும்பம்..!

24-01-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மக்களின் நலனில் அக்கறை கொண்ட ஆட்சி இது என்று வாய் கூசாமல் புளுகிக் கொண்டிருக்கும் தி.மு.க. ஆட்சியின் மக்கள் நலச் சேவைகள் இதோ இன்றைக்கும் தொடர்ந்திருக்கிறது.

இதுவரையிலும் 500-க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிலையிலும் இந்தியா இன்றைக்கும் அமைதிப் புறாவாக "ஏன் ராசா என் மக்களை கொல்றீங்க?" என்று புலம்பலை மட்டும் செய்து கொண்டிருக்கிறது..!


இந்தியா முழுமைக்குமே இப்படியா? என்று கேட்காதீர்கள். இது தமிழர்களுக்கு மட்டும்தான்.. ஒரு பஞ்சாபியனுக்கோ, வங்காளனுக்கோ, மராத்தியருக்கோ இந்தக் கதி நடந்திருந்தால் இந்தியாவே கொந்தளித்தது போன்ற காட்சிகள் அரங்கேறியிருக்கும். கேவலம் ஒரு தமிழன்தானே.. தமிழ்நாடுதானே என்ற அவல நிலை இன்றைக்கு நம்மைப் பார்த்து கை கொட்டிச் சிரிக்கிறது..!

இதற்குக் காரணம் 'கொடுக்க' வேண்டியதைக் கொடுத்தால் தமிழக ஆட்சியாளர்கள் அமைதியாக இருப்பார்கள். அவர்களுடைய மக்களை அவர்களே சமாளித்துக் கொள்வார்கள். நாம் கஷ்டப்படத் தேவையில்லை என்பதை மத்திய ஆளும் கட்சியினரும் கண்டறிந்து வைத்துள்ளனர்.

எச்சில் இலைக்காக நாக்கைத் தொங்கப் போட்டுக் காத்திருக்கும் நாய்களைப் போல மாநில அரசின் ஆளுநர்கள், தங்களது குடும்பச் சுகத்திற்காக மத்தியில் ஆளுகின்ற அரசுகளிடம் தமிழ்நாட்டை அடகு வைத்து வெகுநாட்களாகிவிட்டது..

இப்போதும் அடுத்து ஆட்சிக்கு வருவதுதான் தனது குடும்பத்திற்கும், தனக்கும் பாதுகாப்பு என்பதை உணர்ந்து மத்திய அரசு என்ன சொல்கிறதோ.. எப்படி நடக்கச் சொல்கிறதோ அப்படியே நடந்து கொண்டு பதவியைப் பிடித்துக் கொள்ள நாடகமாடி வருகிறார் தமிழக முதல்வர்..!

மாதத்திற்கு இரண்டு தமிழ் மீனவர்களாவது சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். ஒவ்வொரு முறையும் இலங்கை அரசுக்கு கடிதம் எழுதுவோம்.. எழுதிவிட்டோம். பிரதமரும் பதில் கடிதம் போட்டுவிட்டார்.. இனி அதுபோல் நடக்காது என்று பழைய கீறல் விழுந்த ரிக்கார்டையே திருப்பித் திருப்பிச் சொல்லி வருகிறார் முதல்வர்.

மத்தியில் இருக்கின்ற ஆட்சியிலும் ஒரு தமிழர்தான் பிரதான மந்திரியாக இருந்து வருகிறார். 'சின்னப் பயல் சிதம்பரம்' என்ற இந்த மாடி வீட்டு மேதாவியின் கைக்கங்கரியத்தால் இவருடைய உற்றமும், சுற்றும் மட்டும் மீண்டும் மெகா கோடீஸ்வரர்களான நிலையில் உள்துறையை செப்பனிட்டு பாதுகாக்க சவுத் பிளாக்கிற்கு அனுப்பப்பட்டார்.

இவரது ஆட்சிக் காலத்தில் நாடு இன்னும் பல அல்லல்களுக்குள் ஆட்பட்டுக் கொண்டிருக்கிறது. இருபது மைல் தொலைவில் தமிழர்கள் கொத்துக் கொத்தாகச் செத்துக் கொண்டிருந்தபோது இந்தத் தமிழர்தான் இந்தியாவுக்கே உள்துறை அமைச்சர் என்பது தமிழர்கள் வரலாற்றில் மறக்க முடியாத, அதே சமயம் கசப்பான உண்மை.

இவர் தமிழரே இல்லை என்பது மட்டுமல்ல... மனிதரே இல்லை என்று சொல்லக் கூடிய அளவுக்கு சிங்கள அரசுக்கு வக்காலத்து வாங்கி, தமிழ் ஈழத்து மக்களைக் கொலை செய்ய ஆயுதங்களையும் கொடுத்து உதவியிருக்கிறார்.. இந்த மனிதரிடம் போய் நடவடிக்கை எடு என்றால் எப்படி எடுப்பார்...?

இன்னும் பத்து, நூறு மீனவர்கள் செத்தால்கூட இந்த மாடி வீட்டு மேதைகள் படியிறங்கி வர மாட்டார்கள். பேசாமல் இன்றைக்கு அவரது வீட்டுக்கு புடவை, ஜாக்கெட், வளையல் சகிதமாக வந்திருந்த சீர்வரிசையை பிறந்த வீட்டுச் சீதனமாகப் பெற்றுக் கொண்டாவது தனது பெருமையை இவர் பறை சாற்றிக் கொள்ளலாம்.

பாண்டியன், ஜெயக்குமார் என்ற இரண்டு மீனவர்களும் அடுத்தடுத்த 10 நாட்கள் இடைவெளிக்குள் கொல்லப்பட்டிருப்பது மிகவும் துயரமான சம்பவங்கள். கடல் எல்லையைத் தாண்டாதீர்கள் என்று அரசு சொல்லுமேயானால், கடல் எல்லையாத் தாண்டாமல் செல்ல அந்த எல்லையில் இவர்கள் நின்றிருக்க வேண்டுமே..? அல்லது அதுதான் எல்லை என்று சொல்லும் அளவுக்கு இவர்கள் என்ன பாதுகாப்பு வசதிகளை அங்கே செய்து வைத்திருக்கிறார்கள்.


மிதக்கும் மிதவைகளைப் போட்டு வைத்திருக்கிறோம் என்கிறார்கள். ஆனால் மிக வசதியாக அன்றாடம் கடலோரக் காவல்படை சென்று வரும் மிகக் குறுகிய இடங்களில் மட்டுமே அடையாளத்திற்காக வைத்துள்ளது கடற்படை.

மீனவர்கள் மீன்கள் எங்கு இருக்குமோ அங்குதான் மீன் பிடிக்கப் போவார்களே ஒழிய.. மிதவைகள் எங்கே இருக்கின்றன என்று தேடிப் பார்த்து அவற்றின் அருகே வந்து மீன்களைப் பிடிக்க முயல்வதி்ல்லை. இந்த ஒரு சிறிய அறிவார்ந்த பிரச்சினையைக்கூட அணுகத் தெரியாத அளவுக்கு கடற்படையும், தமிழக அரசும், மத்திய அரசும் இருக்கிறது என்றால் இவர்களெல்லாம் எதற்காக இங்கே இருக்கிறார்கள் என்றுதான் கேள்வி கேட்க வேண்டும்..!

அப்படியே எல்லை தாண்டிப் போனாலும்கூட நமது நாட்டு தொழில் நுட்பத்தையும், பண உதவியையும், விலை மதிக்க முடியாத ஆயுத உதவியையும் பெற்று வைத்திருக்கும் அந்த நாடு நமது நாட்டு மீனவர்களுக்கு உரிய மரியாதையை தந்திருக்க வேண்டுமே..?

துப்பாக்கிச் சூடும், நிர்வாணமாக்கி சித்ரவதை செய்வதும், கழுத்தில் கயிற்றைக் கட்டி கொலை செய்வதும்தான் அந்த நாடு செய்யும் நன்றிக் கடனா..? இப்படியொரு நாட்டிற்கு மத்திய அரசு ஏன் மீண்டும், மீண்டும் நிதியுதவி செய்கிறது..?

நன்றி கெட்ட நாட்டை சொற்களால் திருத்த வழியில்லையெனில், பலத்தைக் காட்டலாமே..? பலத்தைக் காட்டத் துப்பில்லையெனில் எதற்காக இவர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள்..? இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது..?

ஒரு மரணம் நமது வீட்டில் நிகழ்ந்திருக்கிறது என்றால், அதனை முறைப்படி தெரிவித்து ஆகக்கூடிய நிவாரணப் பணிகளையும் தெரிவிப்பதுதான் ஜனநாயக அரசின் கடமை. இப்போது இப்படியா நடக்கிறது..?

கொலையா..? மீனவர்களா..? போராட்டமா..? சேலை வழங்குகிறார்களா..? எங்க..? என்று ஆளும் கட்சிக்குச் சொந்தமான டிவியில் வலைவீசி தேடும் அளவுக்கு செய்திகளைச் சுருக்குகிறார்கள்.

எந்தவிதத்திலும் கொலைச் சம்பவம் மக்கள் மத்தியில் கட்சிக்கும், ஆட்சிக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்துவிடக் கூடாது என்பதற்காகவே அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பதைத்தான் திருப்பித் திருப்பிச் சொல்லி வருகிறார்கள்.


எழவெடுத்த தற்போதைய முதல்வர், சுடுகாட்டில் பொணத்துக்குக் கொள்ளி வைக்கக் கற்பூரத்தைக்கூட நான்தான் வாங்கிக் கொடுத்தேன் என்று சொல்வார் போலிருக்கிறது.. கொல்லப்பட்ட மீனவரின் குடும்பத்திற்குக் கொடுத்த நிதியுதவி செய்தி பேப்பரில் கூட வெட்கமில்லாமல் பல்லைக் காட்டிக் கொண்டிருக்கிறார். என்ன எழவுடா இது? இவர்களுக்கு மானம், ரோஷமெல்லாம் கிடையவே கிடையாதா..?

செய்வதையெல்லாம் செய்துவிட்டு இப்படி செத்த வீட்டிலும் விளம்பரம் தேடிக் கொள்ள இவர்களுக்கு எப்படித்தான் மனம் வருகிறது..!

இந்த லட்சணத்தில் மக்கள் மனதை திசை திருப்ப வேண்டி இந்திய நாட்டுச் செய்திகளையே பிரதானமாகச் சொல்லிவிட்டு கடைசியில் போனால் போகிறதென்று தமிழகத்துச் செய்தியில் மீனவர் கொல்லப்பட்டது பற்றிச் சொல்லி முடிக்கிறார்கள் தொலைக்காட்சி உறவினர்கள்..! அவரவர்க்கு அவரவர் சம்பாத்தியம் முக்கியமாக இருக்கிறது.. ஆனால் இவர்களையெல்லாம் ஆட்சிக்குத் தேர்வு செய்த நாம்தான் இதற்காக வெட்கப்பட வேண்டும்..!

மக்கள் மத்தியில் கசப்புணர்வு என்றவுடன் தாத்தா உடனடியாக ஓய்வு என்னும் ஆயுதத்தைக் கையில் எடுத்துவிட்டார். இதைச் சொன்னவுடன் தமிழர்கள் அனைவரும் பொங்கி வந்து கண்ணீர் விட்டுக் கதறியழுது இவரைத் திரும்ப அழைப்பார்கள் என்று நம்புகிறார்.. அப்படியே இந்தத் துரோகி, ஒரேயடியாகப் போனால்கூட இங்கே எவருக்கும் கவலையில்லை என்பதை இந்த நேரத்தில் வருத்தத்துடன் சொல்லத்தான் வேண்டியிருக்கிறது..!

ஒரு குடும்பத்தைக் காப்பாற்ற ஒரு ஆளை பலி கொடுக்கலாம்.. ஒரு ஊரைக் காப்பாற்ற ஒரு குடும்பத்தையே பலி கொடுக்கலாம் என்பதை காந்தியாரே ஒப்புக் கொண்டிருக்கிறார்..!

இன்றைய நிலையில் உலகம் தழுவிய தமிழர்கள் மனதில் பலி கொடுக்க வேண்டிய தனி நபர் பட்டியலில் கருணாநிதியும், குடும்பப் பட்டியலில் அவருடைய குடும்பத்தினரும்தான் இருக்கிறார்கள்..!

இவர்கள் தொலைந்தால்தான் உண்மையாகவே தமிழர்களுக்கு விடிவுகாலம்..!

105 comments:

  1. வடை-இட்லி-தோசை-பொங்கல்-சட்னி-சாம்பார் அத்தனையும் எனக்கு தானா?

    ReplyDelete
  2. இந்த வைத்தெரிச்சலை நானும் பதிவா போட்டு அழுதொலைச்சாச்சு. விழ வேண்டிய எழவு விழுந்தாத்தான் பிரச்சனை தீரும்.

    ReplyDelete
  3. //இந்த லட்சணத்தில் மக்கள் மனதை திசை திருப்ப வேண்டி இந்திய நாட்டுச் செய்திகளையே பிரதானமாகச் சொல்லிவிட்டு கடைசியில் போனால் போகிறதென்று தமிழகத்துச் செய்தியில் மீனவர் கொல்லப்பட்டது பற்றிச் சொல்லி முடிக்கிறார்கள் தொலைக்காட்சி உறவினர்கள்..!//

    இவ்வேளையில் எதிர்கட்சியினரின் தொல்லைக்காட்சிகள் என்ன செய்கின்றார்கள் என்றும் கூறியிருக்கலாம்....

    ReplyDelete
  4. ஏன் இந்த கொலைவெறி ? கொன்றது சினப்படை. அதனால் அருணாச்சல் வழியாக சீனாவுக்கு தனி விசாவில் பிரணாப் சென்று பிரச்சனையை முடிப்பார். டோண்ட் ஒரி.

    ReplyDelete
  5. எத்தனை நாள் தான் அழுது கொண்டே இருப்பது...மரத்து விட்டது அண்ணா...

    ReplyDelete
  6. மந்திரி பதிவி வேணும்னா தமிழின தலைவர் டெல்லி போயிருப்பார்... மீனவர்களோட உயிர் தானே.. கடிதமே போதும்-னு இருக்கார்... இவர பாத்து எல்லாரும் கடிதம் எழுதியே காலத்த போக்கிட்டு இருக்காங்க.. கலிகாலம்டா சாமி..

    ReplyDelete
  7. சொந்தப் பிரச்சினையென்றால் டெல்லிக்கு ஓடுவதும், தமிழர்க்குப் பிரச்சினை என்றால் கடிதம் விடு தூது விடுவதும் இன்னும் எத்தனை நாளைக்கோ.......

    ----செங்கோவி
    அடுத்த சூப்பர் ஸ்டார் யார்?

    ReplyDelete
  8. //இந்தியா முழுமைக்குமே இப்படியா? என்று கேட்காதீர்கள். இது தமிழர்களுக்கு மட்டும்தான்.. ஒரு பஞ்சாபியனுக்கோ, வங்காளனுக்கோ, மராத்தியருக்கோ இந்தக் கதி நடந்திருந்தால் இந்தியாவே கொந்தளித்தது போன்ற காட்சிகள் அரங்கேறியிருக்கும். கேவலம் ஒரு தமிழன்தானே.. தமிழ்நாடுதானே என்ற அவல நிலை இன்றைக்கு நம்மைப் பார்த்து கை கொட்டிச் சிரிக்கிறது..!//

    Modi alleged that the Union government was showing a bias towards Gujarat fishermen when compared with the shouthern Indian states. "Whenever fishermen from southern states of India are taken into custody by the Sri Lankan security forces, the Union government becomes sensitive and make all efforts in getting them released by taking up the matter with their counterpart government in Sri Lanka. Why this does not happen in the case of Gujarati fishermen," Modi asked.
    நன்றி: DNAindia

    இப்படி ஒவ்வொரு ஸ்டேட்காரனும் புலம்ப சாக வேண்டியதுதான்! இந்தியாவில் எந்த மாநிலத்துக்காரன் என்பதுதல்ல, பணமிருக்குதா அல்லது அதிகாரமிருக்குதா என்பதுதான் முக்கியம்.

    போபாலில் யூனியன் கார்பைடால் செத்த ஏழை பற்றி யாருக்கு அக்கரை? மும்பாய் ரயில்நிலைத்தில் கசப் சுட்டுக்கொன்ன ஏழைக்களைப் பற்றி யாருக்கு கவலை? டாடாவின் ஹோட்டலில் செத்த பணக்காரன்தானே முக்கியம்! இதுபோலத்தான் எல்லமே இங்கு நடக்கும்!

    ReplyDelete
  9. //இன்றைய நிலையில் உலகம் தழுவிய தமிழர்கள் மனதில் பலி கொடுக்க வேண்டிய தனி நபர் பட்டியலில் கருணாநிதியும், குடும்பப் பட்டியலில் அவருடைய குடும்பத்தினரும்தான் இருக்கிறார்கள்..!//

    உண்மை உண்மை உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை

    ReplyDelete
  10. அண்ணே, இந்த குடும்பத்து ஆளுக தமிழ்நாட்டை இலங்கைக்கு எழுதி கொடுக்காமா இருந்தா சரி...

    ReplyDelete
  11. இப்படி ஒவ்வொரு ஸ்டேட்காரனும் புலம்ப சாக வேண்டியதுதான்! இந்தியாவில் எந்த மாநிலத்துக்காரன் என்பதுதல்ல, பணமிருக்குதா அல்லது அதிகாரமிருக்குதா என்பதுதான் முக்கியம்.

    சரவணன் கொலவெறி இல்லாமல் இதுக்கு கொஞ்சம் பதில் சொல்லுங்களேன்.

    ReplyDelete
  12. உண்மைத்தமிழன்,

    நீங்க கவனிக்கலையா வழக்கமா கண்டனம் தெரிவிக்கிறோம் என்பார்கள். இந்தமுறை "வன்மையா" என்கிற காட்டமான (?) வார்த்தையையும் சேர்த்திருக்கிறார்கள்.

    தமிழனா பிறந்ததுக்கு இப்பிடி புலம்பித்தான் தீரவேணும் போல.

    ReplyDelete
  13. >>> ஆஸ்திரேலியாவில் மேல்தட்டு மாணவர்கள் மீது ஒரு அடி பட்டாலோ அல்லது சீக்கியர் ஒருவர் வெளிநாட்டில் தாக்கப்பட்டாலோ பதறி துடிக்கிறது அரசு. ஆங்கில செய்தி தொலைக்காட்சிகள் அலறுகின்றன. நாம் அடிபட்டால் மட்டும் அனைவரும் மௌனம் சாதிக்கின்றனர். அய்யகோ என்று நாம் புலம்பிக்கொண்டே இருப்பதும், எழுதுவதுமாக இருந்தால் நம்மைப்போல் மடையர்கள் இருக்க முடியாது. கண்ணீர் வற்றிவிட்டது. செயலில் இறந்காதவரை இதற்கு முற்றுப்புள்ளி இல்லை. கடன் வாங்கிதான் அழ வேண்டும் இனி.

    ReplyDelete
  14. //இன்றைய நிலையில் உலகம் தழுவிய தமிழர்கள் மனதில் பலி கொடுக்க வேண்டிய தனி நபர் பட்டியலில் கருணாநிதியும், குடும்பப் பட்டியலில் அவருடைய குடும்பத்தினரும்தான் இருக்கிறார்கள்..!

    இவர்கள் தொலைந்தால்தான் உண்மையாகவே தமிழர்களுக்கு விடிவுகாலம்..!//

    >>> அடுத்து வருபவர் எப்படி என்று தெரியாமல் ‘விடிவு காலம்’ என்று சொல்ல வேண்டாம், தயவு செய்து!!

    ReplyDelete
  15. நாம் சாலையில் இறங்கி போராடதவரை இவர்களை ஒன்றும் செய்யமுடியாது.. அந்த துணிச்சல் மிக்க தலைமுறை 80 களோடு முடிந்துவிட்டதோ என்று எனக்கு தோன்றுகிறது.

    ReplyDelete
  16. Sometimes thinking, if I dont have a family, I would have kill, this bloddy karuna.. God, save my people..

    ReplyDelete
  17. ***இன்றைய நிலையில் உலகம் தழுவிய தமிழர்கள் மனதில் பலி கொடுக்க வேண்டிய தனி நபர் பட்டியலில் கருணாநிதியும், குடும்பப் பட்டியலில் அவருடைய குடும்பத்தினரும்தான் இருக்கிறார்கள்..!**

    கருணாநிதிதான் அவர்களை அங்கே மீன் இருக்கு எனக்குப் பிடிச்சுட்டு வானு அனுப்பினாரா?

    They cant just shoot an Indian unless he officially crossed the border, I strongly believe!

    உடனே என்னையும் தமிழின துரோகி ஆக்கிவிட வேணாம்! நன்றி!

    ReplyDelete
  18. ****இந்தியா முழுமைக்குமே இப்படியா? என்று கேட்காதீர்கள். இது தமிழர்களுக்கு மட்டும்தான்.. ஒரு பஞ்சாபியனுக்கோ, வங்காளனுக்கோ, மராத்தியருக்கோ இந்தக் கதி நடந்திருந்தால் இந்தியாவே கொந்தளித்தது போன்ற காட்சிகள் அரங்கேறியிருக்கும். கேவலம் ஒரு தமிழன்தானே.. தமிழ்நாடுதானே என்ற அவல நிலை இன்றைக்கு நம்மைப் பார்த்து கை கொட்டிச் சிரிக்கிறது..!**

    பொய் பொய்யா சொல்றாரு உண்மைத்தமிழன்!

    ReplyDelete
  19. ***ஒரு குடும்பத்தைக் காப்பாற்ற ஒரு ஆளை பலி கொடுக்கலாம்.. ஒரு ஊரைக் காப்பாற்ற ஒரு குடும்பத்தையே பலி கொடுக்கலாம் என்பதை காந்தியாரே ஒப்புக் கொண்டிருக்கிறார்..!***

    காந்தியை வேற வக்காலத்துக்கு கூப்பிடுறீங்க?

    கோட்சே என்ன சொன்னாராம்?

    ReplyDelete
  20. ***SINGAPORE:

    Singaporean to be hanged despite plea by sons group


    Singapore will hang an ethnic Tamil man on Friday for trafficking about 1 kg (2.2 lb) of cannabis despite a rare public plea by his teeange sons to stop the execution, a human rights group said.

    After 38-year-old Shanmugam Murugesu lost an appeal to escape the gallows in January, his 14-year-old twin children took to Singapores streets, handing out flyers last month urging public support to stop the execution, saying it would make them orphans.

    Think Centre, a Singapore human rights group, said Murugesus family had received notification on Monday he will be hanged on Friday, May 13.

    "We are calling everyone, wherever they are, to hold a silent vigil for Shanmugam," Think Centre president Sinapan Samydorai told Reuters on Tuesday.

    Murugesu, a Singapore citizen, was convicted of trafficking after his arrest at Singapore's border with Malaysia in August 2003. Singapore President S.R. Nathan said last month Murugesu would not receive clemency.

    Prison officials said they could not immediately comment.

    Singapore enforces some of the worlds toughest drug laws. Anyone aged 18 or over convicted of carrying more than 500 grammes (17.6 ounces) of cannabis faces execution by hanging.

    In a 2004 report, human rights group Amnesty International said about 400 people have been hanged in Singapore since 1991, mostly for drug trafficking, giving the wealthy city-state of 4.2 million people possibly the highest execution rate in the world relative to its population.

    Amnesty says only 6 people sentenced to death in Singapore have been spared execution since independence in 1965.

    Singapore staunchly defends its use of capital punishment. The government claims death penalty has broad public support and has deterred major drug syndicates from establishing themselves in Singapore.***

    இதுவும் கருணாநிதி குடும்பம் செஞ்ச சதிதான்னு சொல்லுங்க- அடுத்த பதிவில்- உண்மைத்தமிழரே!

    ReplyDelete
  21. //இன்றைய நிலையில் உலகம் தழுவிய தமிழர்கள் மனதில் பலி கொடுக்க வேண்டிய தனி நபர் பட்டியலில் கருணாநிதியும், குடும்பப் பட்டியலில் அவருடைய குடும்பத்தினரும்தான் இருக்கிறார்கள்..!

    இவர்கள் தொலைந்தால்தான் உண்மையாகவே தமிழர்களுக்கு விடிவுகாலம்..!//

    மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள், இந்த குடும்பம் மட்டும் அழிந்தால் தமிழகம் உருபட்டுவிடுமா, இது நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் சாக்கு!

    என்னுடைய கருத்து பற்றி விரிவாக அறிய இங்கே வரவும்.

    ReplyDelete
  22. இந்த முறை ,"எல்லா உதவிகள் செய்தும் இப்படி நடந்து கொள்கிறார்கள் " என்று பிரணாப் முகர்ஜி புலம்பியிருக்கிறாராம் .ரெண்டு நிமிட செய்திகள் ,நிவாரணம் என்று எல்லாமே இங்கே முடிந்து போகிறது

    ReplyDelete
  23. உண்மைத்தமிழன் அண்ணே இங்கே சிலவற்றை எழுதினால் படு மோசமாக இருக்கும், ஆனால் உண்மை சுடும், இப்போதும் கருணாநிதியால் பட்டியல் போட முடியும் ஜெயலலிதா ஆட்சி காலத்திலே இத்தனை மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்கள் எங்கள் ஆட்சியில் கொஞ்சம் குறைவு தான் என்று கூட அவர் பட்டியல் போடலாம்...அதற்க்கு பிரியாணி குஞ்சுகள் "அதே அதே" என்று தாளம் போடலாம்... ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தான் வலி தெரியும்... மீனவர்களிலும் அதிமுக காரர்களும் உண்டு திமுக காரர்களும் உண்டு...

    தமிழக மீனவர்கள் சுட்டுக்கொள்ளப்படுவதை கண்டுகொள்ளாமல் இருக்கும் இந்திய மீடியாவை பற்றியும் இந்திய அரசையும் விமர்சித்தும் டிவிட்டரிலும் பதிவுகளிலும் எழுதுகிறார்கள், இங்கே தமிழகத்திலே கூட எந்த ஒரு சிறு சொரனையும் இல்லாமல் மக்கள் இருக்கும்போது யாரை விமர்சித்து என்ன பலன்... இன்னும் கொஞ்சம் பார்த்தால் தமிழக மக்கள் கூட ஏன் எந்த அசைவையும் காட்டவில்லையென்றால் இங்கே தமிழன் என்று யாருமில்லை, இங்கே சாதிக்காரன்களும், கட்சிக்காரன்களும் இந்துக்களும் முஸ்லீம்களும் கிறித்துவர்களும் கோவைக்காரர்களும் மதுரைக்காரர்களும் தான் இருக்கிறார்களே தவிர தமிழன் என்று எவனுமில்லை...

    இதற்க்கு முந்தைய பிரச்சினைகளுக்கு எல்லாம் தமிழனாக ஒன்றிணைந்திருந்தால் மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படும் பிரச்சினைக்கும் தமிழனாக ஒன்றிணைந்திருப்பான், அப்போது எல்லாம் நாம் தமிழனாக இணையவில்லையே, நாம் தான் தமிழர்களாக இருந்ததேயில்லையே பிறகு இப்போ மட்டும் தமிழா ஒன்று சேர் என்றால் எப்படி சேருவான்... ஈழத்தமிழர் எதிர்ப்பு போராட்டத்தை கருணாநிதி அரசை கவிழ்க்கும் சதியாக பார்த்தான் திமுக காரன், பாலாறு பிரச்சினையை பாமக காரன் அடிவாங்கும் பிரச்சினையாக மட்டுமே பார்த்தான் திமுக அதிமுக காரன்கள், ஒக்கேனேக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை கைவிடுவதை கூட்டணி ராஜதந்திர முடிவாக பார்த்தான் திமுக காரன், ஈழப்பிரச்சினையை அன்புமணி மந்திரி என்றளவில் பார்த்தான் பாமக காரன், திருமா எம்பி என்ற அளவில் பார்த்தான் விடுதலை சிறுத்தைக்காரன், ஜெயலலிதாவை எதிர்ப்பதை தேவர் சாதி எதிர்ப்பாக பார்க்கிறான் தேவர்காரன்... இப்படியே லிஸ்ட் போட ஆரம்பித்தால் மாளாது... ஒன்றே ஒன்று மட்டும் தெரிகிறது... இங்கே தமிழன் என்று எவனுமேயில்லை...

    இதற்க்கு ஒரே வழிதான் முதலில் மீனவர்கள் அனைவரும் ஒன்றினைந்து தமிழகத்தை முடக்க வேண்டும், சென்னையிலிருந்து கன்னியாக்குமரி வரை உள்ள மீனவர்கள் ஈசிஆரை முடக்க வேண்டும் சென்னையை சுற்றி வளைக்க வேண்டும் இதை வன்முறை என்றெல்லாம் கூறும் ஜெண்டில்மேன் மயிராண்டிகளுக்கு அடுத்த நொடியே மயிர் உதிர்வதற்கான டிரீட்மெண்ட்டிற்க்கு போய்விடுவார்கள்... திமுக என்றல்ல எந்த அரசாக இருந்தாலும் இப்படி செய்தால் தான் இந்த பிரச்சினை இப்படியாகத்தான் தீர்க்கமுடியுமே தவிர வேறு வழியே இல்லை...

    ReplyDelete
  24. மீனவனை கொள்ளும் விருட்சமே போற்றி, கடிதம் வரையும் கர்ணனே போற்றி,
    ராசாத்தி அம்மாளின் மன்னவனே போற்றி,
    நமிதாவின் மன்மதனே போற்றி...
    ஆகாயச் சூரியனே போற்றி,
    உதய சூரியனே போற்றி,
    சும்மா வச்சுக்கோ இன்னும் ஒரு போற்றி..
    நீர் வாழ்க பல்லாண்டு......

    ReplyDelete
  25. [[[PARAYAN said...
    வடை-இட்லி-தோசை-பொங்கல்-சட்னி-சாம்பார் அத்தனையும் எனக்குதானா?]]]

    அங்க போட வேண்டியது இங்கயா..?

    ReplyDelete
  26. [[[திரவிய நடராஜன் said...
    இந்த வைத்தெரிச்சலை நானும் பதிவா போட்டு அழு தொலைச்சாச்சு. விழ வேண்டிய எழவு விழுந்தாத்தான் பிரச்சனை தீரும்.]]]

    தங்கள் மீது மக்களுக்கு இப்படி வெறுப்பு வருமளவுக்கு நடந்து கொண்டது தி.மு.க. மற்றும் கருணாநிதியின் தவறுதான்.. இதற்காக மக்களுக்கு எந்தக் குற்றவுணர்ச்சியும் இல்லை..!

    ReplyDelete
  27. [[[தமிழன்பன் said...

    //இந்த லட்சணத்தில் மக்கள் மனதை திசை திருப்ப வேண்டி இந்திய நாட்டுச் செய்திகளையே பிரதானமாகச் சொல்லிவிட்டு கடைசியில் போனால் போகிறதென்று தமிழகத்துச் செய்தியில் மீனவர் கொல்லப்பட்டது பற்றிச் சொல்லி முடிக்கிறார்கள் தொலைக்காட்சி உறவினர்கள்..!//

    இவ்வேளையில் எதிர்கட்சியினரின் தொல்லைக் காட்சிகள் என்ன செய்கின்றார்கள் என்றும் கூறியிருக்கலாம்....]]]

    இருப்பது ஒரேயொரு எதிரிக் கட்சியின் சேனல். அது ஒன்றுதான் இந்த ஒப்பாரியை முழுமையாக காட்டிக் கொண்டிருக்கிறது..!

    ReplyDelete
  28. [[[செந்தழல் ரவி said...
    ஏன் இந்த கொலைவெறி ? கொன்றது சினப்படை. அதனால் அருணாச்சல் வழியாக சீனாவுக்கு தனி விசாவில் பிரணாப் சென்று பிரச்சனையை முடிப்பார். டோண்ட் ஒரி.]]]

    அப்படியே... இந்தப் பெரிசையும் கைபர் கணவாய் வழியாகக் கடத்திட்டுப் போகச் சொல்லு.. புண்ணியமா இருக்கும்..!

    ReplyDelete
  29. [[[காலப் பறவை said...
    எத்தனை நாள்தான் அழுது கொண்டே இருப்பது. மரத்து விட்டது அண்ணா.]]]

    எனக்கும் திட்டித் திட்டி மரத்துவிட்டது..! இதுக்கு எப்போ விடிவு காலம்னு தெரியலையே..?

    ReplyDelete
  30. [[[kanagu said...
    மந்திரி பதிவி வேணும்னா தமிழின தலைவர் டெல்லி போயிருப்பார்... மீனவர்களோட உயிர்தானே.. கடிதமே போதும்-னு இருக்கார்... இவர பாத்து எல்லாரும் கடிதம் எழுதியே காலத்த போக்கிட்டு இருக்காங்க.. கலிகாலம்டா சாமி..]]]

    மக்கள் இந்த சுயநலவாதியை அடையாளம் கண்டு கொண்டாலே போதும்..! இது பற்றி உணர வேண்டும்.. இல்லையெனில் இவர்கள் வீட்டுச் சாவின்போதுதான் இதன் அர்த்தம் இவர்களுக்குப் புரியும்..!

    ReplyDelete
  31. [[[செங்கோவி said...
    சொந்தப் பிரச்சினையென்றால் டெல்லிக்கு ஓடுவதும், தமிழர்க்குப் பிரச்சினை என்றால் கடிதம் விடு தூது விடுவதும் இன்னும் எத்தனை நாளைக்கோ..
    ----செங்கோவி
    அடுத்த சூப்பர் ஸ்டார் யார்?]]]

    சாகுறவரைக்கும் இதைத்தான் செய்வாரு தாத்தா..!

    ReplyDelete
  32. [[[thenali said...

    //இந்தியா முழுமைக்குமே இப்படியா? என்று கேட்காதீர்கள். இது தமிழர்களுக்கு மட்டும்தான்.. ஒரு பஞ்சாபியனுக்கோ, வங்காளனுக்கோ, மராத்தியருக்கோ இந்தக் கதி நடந்திருந்தால் இந்தியாவே கொந்தளித்தது போன்ற காட்சிகள் அரங்கேறியிருக்கும். கேவலம் ஒரு தமிழன்தானே.. தமிழ்நாடுதானே என்ற அவல நிலை இன்றைக்கு நம்மைப் பார்த்து கை கொட்டிச் சிரிக்கிறது..!//

    Modi alleged that the Union government was showing a bias towards Gujarat fishermen when compared with the shouthern Indian states. "Whenever fishermen from southern states of India are taken into custody by the Sri Lankan security forces, the Union government becomes sensitive and make all efforts in getting them released by taking up the matter with their counterpart government in Sri Lanka. Why this does not happen in the case of Gujarati fishermen," Modi asked.
    நன்றி: DNAindia

    இப்படி ஒவ்வொரு ஸ்டேட்காரனும் புலம்ப சாக வேண்டியதுதான்! இந்தியாவில் எந்த மாநிலத்துக்காரன் என்பதுதல்ல, பணமிருக்குதா அல்லது அதிகாரமிருக்குதா என்பதுதான் முக்கியம்.

    போபாலில் யூனியன் கார்பைடால் செத்த ஏழை பற்றி யாருக்கு அக்கரை? மும்பாய் ரயில் நிலைத்தில் கசப் சுட்டுக் கொன்ன ஏழைக்களைப் பற்றி யாருக்கு கவலை? டாடாவின் ஹோட்டலில் செத்த பணக்காரன்தானே முக்கியம்! இதுபோலத்தான் எல்லமே இங்கு நடக்கும்!]]]

    நீங்கள் இன்னொரு கோணத்திலும் பார்க்கிறீர்கள் தெனாலி. இப்படியொரு பிரச்சினையும் இருக்கிறது என்பதை நான் மறுப்பதற்கில்லை..!

    ReplyDelete
  33. [[[kirukan said...

    //இன்றைய நிலையில் உலகம் தழுவிய தமிழர்கள் மனதில் பலி கொடுக்க வேண்டிய தனி நபர் பட்டியலில் கருணாநிதியும், குடும்பப் பட்டியலில் அவருடைய குடும்பத்தினரும்தான் இருக்கிறார்கள்..!//

    உண்மை உண்மை உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை.]]]

    ரொம்பக் கஷ்டமாத்தான் இருந்துச்சு இதை ஓப்பனா சொல்றதுக்கு.. ஆனாலும் வேறு வழியில்லை..!

    ReplyDelete
  34. [[[செம்மலர் செல்வன் said...
    அண்ணே, இந்த குடும்பத்து ஆளுக தமிழ்நாட்டை இலங்கைக்கு எழுதி கொடுக்காமா இருந்தா சரி...]]]

    இப்பவே அது மாதிரிதான இருக்கு...!

    ReplyDelete
  35. [[[ஜோதிஜி said...

    இப்படி ஒவ்வொரு ஸ்டேட்காரனும் புலம்ப சாக வேண்டியதுதான்! இந்தியாவில் எந்த மாநிலத்துக்காரன் என்பதுதல்ல, பணமிருக்குதா அல்லது அதிகாரமிருக்குதா என்பதுதான் முக்கியம்.

    சரவணன் கொல வெறி இல்லாமல் இதுக்கு கொஞ்சம் பதில் சொல்லுங்களேன்.]]]

    ஒரு பக்கம் இது மாதிரியான விவகாரங்களும் இதில் உள்ளடங்கியிருக்கின்றன என்பதும் உண்மைதான் ஜோதிஜி..!

    ஆனால் மும்பை படுகொலைகளின் தொடர்ச்சியாக ஒட்டு மொத்த மாநிலத்திற்கு கிடைக்கின்ற பாதுகாப்பு உணர்வையும் ஒப்பீட்டுப் பாருங்கள்..!

    மீடியாக்கள் அது பற்றி கண்டு கொள்ளாததைத்தான் தெனாலி குறிப்பிட்டிருக்கிறார்.. அரசுகள் அல்ல..!

    இந்தியா கேட் படுகொலை வழக்கிலும், ரயில்வே ஸ்டேஷன் தொடர் குண்டு வெடிப்பு வழக்குகளிலும் பயங்கரவாதம்தான் வெடிக்கிறது..! நடவடிக்கை எடுக்கப்பட்டுதானே வந்திருக்கிறது..!

    ReplyDelete
  36. [[[Rathi said...

    உண்மைத்தமிழன், நீங்க கவனிக்கலையா வழக்கமா கண்டனம் தெரிவிக்கிறோம் என்பார்கள். இந்த முறை "வன்மையா" என்கிற காட்டமான (?) வார்த்தையையும் சேர்த்திருக்கிறார்கள்.

    தமிழனா பிறந்ததுக்கு இப்பிடி புலம்பித்தான் தீரவேணும் போல.]]

    என் புலம்பலையும் சேர்த்துக்குங்க..!

    ReplyDelete
  37. [[[!சிவகுமார் ! said...

    >>>ஆஸ்திரேலியாவில் மேல்தட்டு மாணவர்கள் மீது ஒரு அடிபட்டாலோ அல்லது சீக்கியர் ஒருவர் வெளிநாட்டில் தாக்கப்பட்டாலோ பதறி துடிக்கிறது அரசு. ஆங்கில செய்தி தொலைக்காட்சிகள் அலறுகின்றன. நாம் அடிபட்டால் மட்டும் அனைவரும் மௌனம் சாதிக்கின்றனர். அய்யகோ என்று நாம் புலம்பிக் கொண்டே இருப்பதும், எழுதுவதுமாக இருந்தால் நம்மைப்போல் மடையர்கள் இருக்க முடியாது. கண்ணீர் வற்றிவிட்டது. செயலில் இறந்காதவரை இதற்கு முற்றுப்புள்ளி இல்லை. கடன் வாங்கிதான் அழ வேண்டும் இனி.]]]

    அதற்கு உரிமையுடய தமிழர்களே தூங்கிக் கொண்டிருக்கும்போது நாம் என்ன செய்ய முடியும்.. இதைத் தவிர..!

    ReplyDelete
  38. [[[! சிவகுமார் ! said...

    //இன்றைய நிலையில் உலகம் தழுவிய தமிழர்கள் மனதில் பலி கொடுக்க வேண்டிய தனி நபர் பட்டியலில் கருணாநிதியும், குடும்பப் பட்டியலில் அவருடைய குடும்பத்தினரும்தான் இருக்கிறார்கள்! இவர்கள் தொலைந்தால்தான் உண்மையாகவே தமிழர்களுக்கு விடிவுகாலம்..!//

    >>> அடுத்து வருபவர் எப்படி என்று தெரியாமல் ‘விடிவு காலம்’ என்று சொல்ல வேண்டாம், தயவு செய்து!!]]]

    இப்படி பயந்து, பயந்து இவர்களைத் தாங்கியதன் பலனைத்தான் இப்போது நாம் அனுபவிக்கிறோம்..!

    ReplyDelete
  39. [[[raja said...
    நாம் சாலையில் இறங்கி போராடத வரை இவர்களை ஒன்றும் செய்யமுடியாது. அந்த துணிச்சல் மிக்க தலைமுறை 80-களோடு முடிந்துவிட்டதோ என்று எனக்கு தோன்றுகிறது.]]]

    ஆமாம்.. இப்போது ரொம்பவே சுயநலவாதிகளாக மாறிவிட்டோம்..!

    ReplyDelete
  40. [[[ராமுடு said...
    Sometimes thinking, if I dont have a family, I would have kill, this bloddy karuna.. God, save my people..]]]

    ஓ மை காட்..

    ReplyDelete
  41. [[[வருண் said...

    ***இன்றைய நிலையில் உலகம் தழுவிய தமிழர்கள் மனதில் பலி கொடுக்க வேண்டிய தனி நபர் பட்டியலில் கருணாநிதியும், குடும்பப் பட்டியலில் அவருடைய குடும்பத்தினரும்தான் இருக்கிறார்கள்..!**

    கருணாநிதிதான் அவர்களை அங்கே மீன் இருக்கு எனக்குப் பிடிச்சுட்டு வானு அனுப்பினாரா?

    They cant just shoot an Indian unless he officially crossed the border, I strongly believe!

    உடனே என்னையும் தமிழின துரோகி ஆக்கிவிட வேணாம்! நன்றி!]]]

    மீனவர்களுக்கு மீன் பிடிப்பதுதான் தொழில். அது ஒன்றைத் தவிர வேறொன்றும் அவர்களுக்குத் தெரியாது. அவர்களது தொழிலுக்குத் தேவையானவற்றை செய்து தர வேண்டியது அரசுகளின் கடமை. கடமை தவறினால்..?

    ReplyDelete
  42. [[[வருண் said...

    ****இந்தியா முழுமைக்குமே இப்படியா? என்று கேட்காதீர்கள். இது தமிழர்களுக்கு மட்டும்தான்.. ஒரு பஞ்சாபியனுக்கோ, வங்காளனுக்கோ, மராத்தியருக்கோ இந்தக் கதி நடந்திருந்தால் இந்தியாவே கொந்தளித்தது போன்ற காட்சிகள் அரங்கேறியிருக்கும். கேவலம் ஒரு தமிழன்தானே.. தமிழ்நாடுதானே என்ற அவல நிலை இன்றைக்கு நம்மைப் பார்த்து கை கொட்டிச் சிரிக்கிறது..!**

    பொய் பொய்யா சொல்றாரு உண்மைத்தமிழன்!]]]

    உங்களது கருத்துக்கு மிக்க நன்றி வருண்..!

    ReplyDelete
  43. [[[வருண் said...

    ***ஒரு குடும்பத்தைக் காப்பாற்ற ஒரு ஆளை பலி கொடுக்கலாம்.. ஒரு ஊரைக் காப்பாற்ற ஒரு குடும்பத்தையே பலி கொடுக்கலாம் என்பதை காந்தியாரே ஒப்புக் கொண்டிருக்கிறார்..!***

    காந்தியை வேற வக்காலத்துக்கு கூப்பிடுறீங்க? கோட்சே என்ன சொன்னாராம்?]]]

    இதையேதான் மாத்திச் சொன்னாரு. அவரவர் பார்வை அவரவர்க்கு..!

    ReplyDelete
  44. வருண்..

    காமெடியா இருக்கு நீங்க சொல்றது..?

    தூக்குத் தண்டனைகளுக்கு நான் எதிரானவன். முன்பே பல பதிவுகளில் சொல்லியிருக்கிறேன். அது எந்த நாட்டில் நடந்தாலும் சரி..

    முருகேசு என்னும் தமிழர் போதை மருந்து கடத்தலின்போது பிடிபட்டு சிறையில் உள்ளார்.

    இந்த மீனவர்கள் என்ன தவறு செய்தார்கள்..? எல்லை, எல்லை என்கிறீர்கள்.. எல்லைக்குள்தான் இருக்கிறீர்கள் என்று சொல்லும் தொழில் நுட்ப வசதிகளைக்கூட இந்த அரசுகள் செய்து தரவில்லையெனில் அதற்கான பலனையும் அந்த அரசுகள்தான் ஏற்க வேண்டும்.. மக்கள் அல்ல..!

    முருகேசு விஷயத்தில் மட்டுமல்ல.. சிங்கப்பூர் தேசத்திலேயே தூக்குத் தண்டனை கூடாது என்று கேட்க விரும்புவன் நான்.. அரசுகள் நிச்சயம் கேட்காது. அப்படி கேட்டால் நீ மட்டும் யோக்கியமா என்று இந்திய அரசைத் திருப்பிக் கேட்பார்கள்..!

    இதனை நாம்தான் கேட்க வேண்டும்..!

    ReplyDelete
  45. [[[Shanthamoorthi said...

    //இன்றைய நிலையில் உலகம் தழுவிய தமிழர்கள் மனதில் பலி கொடுக்க வேண்டிய தனி நபர் பட்டியலில் கருணாநிதியும், குடும்பப் பட்டியலில் அவருடைய குடும்பத்தினரும்தான் இருக்கிறார்கள்..! இவர்கள் தொலைந்தால்தான் உண்மையாகவே தமிழர்களுக்கு விடிவுகாலம்..!//

    மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள், இந்த குடும்பம் மட்டும் அழிந்தால் தமிழகம் உருபட்டுவிடுமா, இது நமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் சாக்கு!
    என்னுடைய கருத்து பற்றி விரிவாக அறிய இங்கே வரவும்.]]]

    நிச்சயமாக.. அடுத்துப் புதிதாக வரக் கூடியவர்களுக்கும் கொஞ்சம் பயம் இருக்கும்..!

    ReplyDelete
  46. [[[பூங்குழலி said...
    இந்த முறை ,"எல்லா உதவிகள் செய்தும் இப்படி நடந்து கொள்கிறார்கள்" என்று பிரணாப் முகர்ஜி புலம்பியிருக்கிறாராம். ரெண்டு நிமிட செய்திகள், நிவாரணம் என்று எல்லாமே இங்கே முடிந்து போகிறது.]]]

    இவர்களால் புலம்புவதைத் தவிர வேறொண்ணும் செய்ய முடியாது என்பதுதான் நிதர்சனம்..!

    ReplyDelete
  47. [[[இங்கே சாதிக்காரன்களும், கட்சிக்காரன்களும் இந்துக்களும் முஸ்லீம்களும் கிறித்துவர்களும் கோவைக்காரர்களும் மதுரைக்காரர்களும்தான் இருக்கிறார்களே தவிர தமிழன் என்று எவனுமில்லை...]]]

    குழலியண்ணே.. யோசிச்சுப் பார்த்தா நீங்க சொல்றது ரொம்பச் சரிதான்.. மக்கள்தான் ரொம்ப சுயநலவாதிகளா மாறிட்டாங்க..!

    அட்லீஸ்ட் தேர்தலிலாவது பொதுவான பிரச்சினைகளை மையமா வைச்சு வாக்களித்துத் தொலையக் கூடாதா..?

    ReplyDelete
  48. [[[Indian Share Market said...

    மீனவனை கொள்ளும் விருட்சமே போற்றி, கடிதம் வரையும் கர்ணனே போற்றி,
    ராசாத்தி அம்மாளின் மன்னவனே போற்றி,
    நமிதாவின் மன்மதனே போற்றி...
    ஆகாயச் சூரியனே போற்றி,
    உதய சூரியனே போற்றி,
    சும்மா வச்சுக்கோ இன்னும் ஒரு போற்றி..
    நீர் வாழ்க பல்லாண்டு......]]]

    போற்றி.. போற்றி.. போற்றி..

    இந்தச் சோழப் பரம்பரையின் சுருட்டல்கள் இந்த தேர்தலோடு முடிவுக்கு வர போற்றி.. போற்றி..!

    ReplyDelete
  49. இஸ்ரேலில் இப்படி நடந்திருந்தால் அண்டை நாடுகள் அலறியிருக்கும். அரபு மண்டலமே அழுது புலம்பியிருக்கும். இஸ்ரேலிய மீனவர் மீதான முதல் தாக்குதலே முடிவுமானதாயிருக்கும். இஸ்ரேலியர்களின் துணிவு நாம் கற்க வேண்டிய பாடம்.

    ReplyDelete
  50. குழலியின் கருத்தை ஏற்கிறேன்.

    இன்றைக்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் தலைமைகளும் தமிழனின் உயிரை விற்று பொறுக்கித்திண்ணும் கூட்டங்களாகவே இருக்கிறது.

    மீனவர்களுக்கு என்று உருப்படியான அரசியல் தலைமை இல்லை என்றாலும் தற்போது இருக்கின்ற ஒருசில மீனவ அமைப்புகளும் வலுவான கட்டமைப்போடு இருக்கின்ற பஞ்சயாத்துக்களும் ஊரில் திருவிழாக்கள் நடத்துவதற்கும், ஏதாவது காரணத்தைக்கூறி ஆட்சியாளர்களிடமும், கம்பெனிகளிடமும் பொறுக்கித்திண்ணவும்தான் பயன்படுகிறது.

    இதுபோன்ற நிகழ்வு பிற மாநிலங்களில் நடந்திருந்தால், என்ன நடக்கும்? என்பது ஒருபுறம் இருக்கட்டும். இதே போன்று கடற்கரை அல்லாத தமிழகத்தின் பிற பகுதிகளில் நடந்திருந்தால் தமிழகமே நிச்சயம் முடங்கியிருக்கும்.

    அதுமட்டுமன்றி மீனவ கிராமங்களில் நிலவும் குழு பூசல் மீனவர்களை ஒன்றுசேரவிடாமல் தடுத்துகொண்டிருக்கிறது. மேலும் மீனவ கிராமங்களை ஒட்டி அடர்ந்து வாழும் பிற சமூதாய மக்களுடன் இவர்களுக்கு சுமூகமான உறவு இல்லை என்பதும் உண்மை.

    தமிழக மீனவர்கள் தங்களுடைய பலம் என்னவென்று அறியாமல், என்ன செய்ய வேண்டும என்று தெரியாமல், பிற சமூதாய மக்களும் தங்கள் உறவுகள்தான் என்றுகூட புரிந்துகொள்ளாமல் மக்கள் திரள் போராட்டத்தின் முதல் படியைக்கூட தமிழக மீனவர்கள் இன்னும் எடுத்துவைக்கவில்லை.

    ReplyDelete
  51. இருக்கற இன்னொரு நாட்டையும் பகையாவசுக்கனுமா இல்லை இப்படியே சக்காளத்தி மாறி சண்டை போட்டாலும் கூடவே இருக்கறமாரி வசுக்கலமனு இருதலை கொள்ளி வெளியுறவு கொள்கை தன் காரணம் . நேருல இருந்து ஆரம்பிக்கணும் அந்த பன்னாடை பண்ணினது இந்த புண்ணாக்கு மண்டையன்களுக்கு வசதியா இருக்கு யோசிக்கவேண்டிய தேவையே இல்லை அதன் . நாமலும் இப்படி பதிவு போட்டு அத படிச்சு அதுக்கு பின்னூட்டம் போட்டு இத்தோட மறந்து போய்டலாம்

    ReplyDelete
  52. செம சூடு சரவணன்.. படிக்கும் போதே பிரணாப் நெஞ்சில் ஏறி மிதிக்க வேண்டும் போல் தோன்றியது...இனி மீனவர்கள் கடலுக்கு செல்லும் போது கார்த்தி சிதம்பரம்,உதயநிதி ஸ்டாலின், தயாநிதி அழகிரி.. அருள்னிதி ஆகியோரை அழைத்து செல்ல வேண்டும்.. ஒரு குண்டு ஒரு குண்டி ..வெடிக்குமா...!?இவனுக பிள்ளைகள்தான் .. அவதாரங்கள் ஆச்சே!!!

    ReplyDelete
  53. manudhulirindhu eluthi irukireergal. varuthamaga irukiradhu.

    ennoda aasai tamilargal gujarathigalai pola oru sirandha vyabarigalaga vara vendum. adhu mattum thaan namaku mariyadhai thedi tharum.
    panamum saamarthiyamum irundhal mattum thaan namakum madhipum mariyadhaiyum kedaikum.

    ReplyDelete
  54. வெட்கம், வெட்கம் பிணம் தின்னும் கருணாநிதி

    ReplyDelete
  55. என்ன சொன்னாலும் இந்தவாட்டி ஒரு ஆயிரம் ரூபாய் சேர்த்துகொடுத்தா நம்ம மக்கள் ஓட்டை விற்கத்தான் போறாங்க.. தவறானவன் என்று தெரிந்தும் அவனை தேர்ந்தெடுக்கும் மக்களை என்ன சொல்வது?


    முத்தங்களுக்கு மட்டுமே அனுமதி

    ReplyDelete
  56. //http://kokkarakko2011.blogspot.com/2011/01/blog-post_24.html//
    இந்த இணைப்பையும் ஒரு தடவை பாருங்களேன்.........

    ReplyDelete
  57. ***இந்த மீனவர்கள் என்ன தவறு செய்தார்கள்..? எல்லை, எல்லை என்கிறீர்கள்.. எல்லைக்குள்தான் இருக்கிறீர்கள் என்று சொல்லும் தொழில் நுட்ப வசதிகளைக்கூட இந்த அரசுகள் செய்து தரவில்லையெனில் அதற்கான பலனையும் அந்த அரசுகள்தான் ஏற்க வேண்டும்.. மக்கள் அல்ல..!***

    ஜெயக்குமார் குடும்பத்தையும் உறவினரையும் பார்த்தால் என் கண்களில் கண்ணீர்தான் வருது ஆனால்..
    இலங்கை, இதை தாங்கள் செய்ததாக ஏற்றுக்கொள்ளவில்லை! இப்போ சரியான எவிடெண்ஸ் இல்லாமல் இந்தியன் கவண்மெண்ட் எதுவும் செய்ய இயலாது. கருணாநிதியும் எதுவும் செய்ய முடியாது. அதான் ப்பிரச்சினை.

    இலங்கையே செய்து இருக்கலாம்தான். ஆனால் எவிடெண்ஸ் இல்லாமல் எதுவும் செய்யமுடியாது.

    ReplyDelete
  58. நீங்கள் முதல்வராக இருந்திருந்தால் கூட கருணாநிதியை விட பெரிதாக ஒன்றும் செய்திருக்க முடியாது, அதுதான் நிதர்சனம்.

    ReplyDelete
  59. முழுக்க வழிமொழிகிறேன் அண்ணே..

    அந்த முருகன்தான் எதாவது வழி செய்யணும்.

    வருத்தத்துடன் நித்யன்

    ReplyDelete
  60. [[[Arun Ambie said...
    இஸ்ரேலில் இப்படி நடந்திருந்தால் அண்டை நாடுகள் அலறியிருக்கும். அரபு மண்டலமே அழுது புலம்பியிருக்கும். இஸ்ரேலிய மீனவர் மீதான முதல் தாக்குதலே முடிவுமானதாயிருக்கும். இஸ்ரேலியர்களின் துணிவு நாம் கற்க வேண்டிய பாடம்.]]]

    எல்லாவற்றுக்கும் ராணுவத் தாக்குதலே தீர்வு என்று நான் சொல்லவில்லை. அதன் முதல்படியான ராஜதந்திரமான செயல்களாலேயே இலங்கையை முடக்க முடியும். இதைச் செய்யத்தான் இங்கேயிருக்கும் ஆட்சியாளர்களுக்குத் துப்பில்லை என்பது எனது கருத்து..!

    ReplyDelete
  61. [[[seeprabagaran said...

    குழலியின் கருத்தை ஏற்கிறேன்.

    இன்றைக்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் தலைமைகளும் தமிழனின் உயிரை விற்று பொறுக்கித்திண்ணும் கூட்டங்களாகவே இருக்கிறது.

    மீனவர்களுக்கு என்று உருப்படியான அரசியல் தலைமை இல்லை என்றாலும் தற்போது இருக்கின்ற ஒருசில மீனவ அமைப்புகளும் வலுவான கட்டமைப்போடு இருக்கின்ற பஞ்சயாத்துக்களும் ஊரில் திருவிழாக்கள் நடத்துவதற்கும், ஏதாவது காரணத்தைக்கூறி ஆட்சியாளர்களிடமும், கம்பெனிகளிடமும் பொறுக்கித்திண்ணவும்தான் பயன்படுகிறது.

    இதுபோன்ற நிகழ்வு பிற மாநிலங்களில் நடந்திருந்தால், என்ன நடக்கும்? என்பது ஒருபுறம் இருக்கட்டும். இதே போன்று கடற்கரை அல்லாத தமிழகத்தின் பிற பகுதிகளில் நடந்திருந்தால் தமிழகமே நிச்சயம் முடங்கியிருக்கும்.

    அது மட்டுமன்றி மீனவ கிராமங்களில் நிலவும் குழு பூசல் மீனவர்களை ஒன்று சேரவிடாமல் தடுத்துகொண்டிருக்கிறது. மேலும் மீனவ கிராமங்களை ஒட்டி அடர்ந்து வாழும் பிற சமூதாய மக்களுடன் இவர்களுக்கு சுமூகமான உறவு இல்லை என்பதும் உண்மை.

    தமிழக மீனவர்கள் தங்களுடைய பலம் என்னவென்று அறியாமல், என்ன செய்ய வேண்டும என்று தெரியாமல், பிற சமூதாய மக்களும் தங்கள் உறவுகள்தான் என்றுகூட புரிந்துகொள்ளாமல் மக்கள் திரள் போராட்டத்தின் முதல் படியைக்கூட தமிழக மீனவர்கள் இன்னும் எடுத்துவைக்கவில்லை.]]]

    உங்களுடைய கருத்துடன் ஒத்துப் போகிறேன். சாதி உணர்வுள்ள மக்களுடன்கூட மீனவர்கள் இணைவதில்லை. இணைய விரும்பவில்லை. இது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. புரியவில்லை..!

    ReplyDelete
  62. [[[G.Ganapathi said...

    இருக்கற இன்னொரு நாட்டையும் பகையா வசுக்கனுமா இல்லை இப்படியே சக்காளத்தி மாறி சண்டை போட்டாலும் கூடவே இருக்கறமாரி வசுக்கலமனு இருதலை கொள்ளி வெளியுறவு கொள்கைதன் காரணம். நேருல இருந்து ஆரம்பிக்கணும் அந்த பன்னாடை பண்ணினது இந்த புண்ணாக்கு மண்டையன்களுக்கு வசதியா இருக்கு யோசிக்கவேண்டிய தேவையே இல்லை. அதன் நாமலும் இப்படி பதிவு போட்டு அத படிச்சு அதுக்கு பின்னூட்டம் போட்டு இத்தோட மறந்து போய்டலாம்.]]]

    எதுக்கு நேருவை இழுக்குறீங்க..? அது அந்தந்த சூழலைப் பொறுத்தது. அவர் அன்றைக்குச் செய்தது சரியானதுதான்..!

    காலத்திற்கேற்றாற் போல் கொள்கைகளை வகுக்கத் தெரியாதவர்கள் தற்போதைய ஆட்சியாளர்கள் என்பதுதான் உண்மை..!

    ReplyDelete
  63. [[[Rafeek said...
    செம சூடு சரவணன்.. படிக்கும்போதே பிரணாப் நெஞ்சில் ஏறி மிதிக்க வேண்டும் போல் தோன்றியது. இனி மீனவர்கள் கடலுக்கு செல்லும்போது கார்த்தி சிதம்பரம், உதயநிதி ஸ்டாலின், தயாநிதி அழகிரி. அருள்னிதி ஆகியோரை அழைத்து செல்ல வேண்டும். ஒரு குண்டு ஒரு குண்டி. வெடிக்குமா...!? இவனுக பிள்ளைகள்தான். அவதாரங்கள் ஆச்சே!!!]]]

    கரெக்ட்டுதான்.. தனது சுயநலத்தைப் பற்றி மட்டுமே கவலை கொண்டிருக்கும் ஒரு சில அரசியல்வியாதிகளின் கைகளில்தான் நமது நாடு சிக்கியுள்ளது..!

    ReplyDelete
  64. [[[வழக்கறிஞர் சுந்தரராஜன் said...

    :(]]]

    இவ்ளோதானா..?

    ReplyDelete
  65. [[[khaleel said...
    manudhulirindhu eluthi irukireergal. varuthamaga irukiradhu. ennoda aasai tamilargal gujarathigalai pola oru sirandha vyabarigalaga vara vendum. adhu mattum thaan namaku mariyadhai thedi tharum. panamum saamarthiyamum irundhal mattum thaan namakum madhipum mariyadhaiyum kedaikum.]]]

    நான் அப்படி நினைக்கவில்லை ரபீக்.. நமக்கு இப்போதைக்கு தேவை ஆந்திராவில் தெலுங்கானா கோரி கிளர்ச்சி செய்கிறார்கள். பாருங்கள்.. அவர்களைப் போன்ற புரட்சியாளர்கள்தான் தேவை..!

    ReplyDelete
  66. [[[khaleel said...
    ingu eppadi tamilil eluthuvathu?]]]

    தமிழ்மணம்.காம் சென்று பாருங்கள். அங்கே விளக்கமாகச் சொல்லப்பட்டிருக்கிறது..!

    NHM.in என்னும் தளத்தில் இருந்து NHM Writer என்னும் சாப்ட்வேரை இறக்குமதி செய்து தட்டச்சு செய்து பழகுங்கள். வழிமுறைகள் அதே தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

    ReplyDelete
  67. [[[Thas said...
    வெட்கம், வெட்கம் பிணம் தின்னும் கருணாநிதி.]]]

    -))))))))))))

    ReplyDelete
  68. [[[கவிதை காதலன் said...
    என்ன சொன்னாலும் இந்தவாட்டி ஒரு ஆயிரம் ரூபாய் சேர்த்துகொடுத்தா நம்ம மக்கள் ஓட்டை விற்கத்தான் போறாங்க. தவறானவன் என்று தெரிந்தும் அவனை தேர்ந்தெடுக்கும் மக்களை என்ன சொல்வது?]]]

    உண்மைதான். இந்த மக்கள் திருந்தினால் ஒழிய இந்த அரசியல்வியாதிகள் ஒழியப் போவதில்லை. அதற்காகத்தான் இந்தக் கத்துக் கத்துகிறோம்..!

    ReplyDelete
  69. [[[தமிழன்பன் said...

    //http://kokkarakko2011.blogspot.com/2011/01/blog-post_24.html//

    இந்த இணைப்பையும் ஒரு தடவை பாருங்களேன்.........]]]

    வாழ்க வளமுடன்..!

    ReplyDelete
  70. [[[வருண் said...

    ***இந்த மீனவர்கள் என்ன தவறு செய்தார்கள்..? எல்லை, எல்லை என்கிறீர்கள்.. எல்லைக்குள்தான் இருக்கிறீர்கள் என்று சொல்லும் தொழில் நுட்ப வசதிகளைக்கூட இந்த அரசுகள் செய்து தரவில்லையெனில் அதற்கான பலனையும் அந்த அரசுகள்தான் ஏற்க வேண்டும்.. மக்கள் அல்ல..!***

    ஜெயக்குமார் குடும்பத்தையும் உறவினரையும் பார்த்தால் என் கண்களில் கண்ணீர்தான் வருது ஆனால்.. இலங்கை, இதை தாங்கள் செய்ததாக ஏற்றுக் கொள்ளவில்லை! இப்போ சரியான எவிடெண்ஸ் இல்லாமல் இந்தியன் கவண்மெண்ட் எதுவும் செய்ய இயலாது. கருணாநிதியும் எதுவும் செய்ய முடியாது. அதான் ப்பிரச்சினை.
    இலங்கையே செய்து இருக்கலாம்தான். ஆனால் எவிடெண்ஸ் இல்லாமல் எதுவும் செய்யமுடியாது.]]]

    அவர்கள் எந்தக் கொலையைத்தான் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள் வருண்..!? அவர்கள் செய்யவில்லையெனில் வந்திருந்தது யாராம் சீன ராணுவத்தினரா..?

    ReplyDelete
  71. [[[மு.சரவணக்குமார் said...
    நீங்கள் முதல்வராக இருந்திருந்தால்கூட கருணாநிதியை விட பெரிதாக ஒன்றும் செய்திருக்க முடியாது, அதுதான் நிதர்சனம்.]]]

    ஏன் முடியாது.. மத்திய ஆட்சிக்குக் கொடுத்திருந்த ஆதரவை விலக்கிக் கொண்டு பயமுறுத்தியிருப்பேன். மீனவர்களுக்குப் பாதுகாப்புக்கு தமிழக போலீஸையே கடலுக்குள் அனுப்பியிருப்பேன்.

    எத்தகைய எதிர்ப்புகள் வந்தாலும் மக்கள் ஆதரவுடன் சமாளிப்பேன். உண்மைக்கு என்றைக்குமே மரியாதை உண்டு நண்பரே..!

    ReplyDelete
  72. [[[நித்யகுமாரன் said...

    முழுக்க வழி மொழிகிறேன் அண்ணே.. அந்த முருகன்தான் எதாவது வழி செய்யணும்.

    வருத்தத்துடன் நித்யன்]]]

    நன்றி நித்யா.. ஓட்டளிக்கும்போது இதனை மறந்துவிடாதீர்கள்..!

    ReplyDelete
  73. /**
    raja said...
    நாம் சாலையில் இறங்கி போராடதவரை இவர்களை ஒன்றும் செய்யமுடியாது.. அந்த துணிச்சல் மிக்க தலைமுறை 80 களோடு முடிந்துவிட்டதோ என்று எனக்கு தோன்றுகிறது
    *//
    மிக சரியாக சொன்னிர்கள் ராஜா/ராசா அவரகளே
    நாம் நிறையவே போராடலாம்,
    தமிழர்கள் இந்த 2011 குடியரசு தினத்தை புறக்கணிக்கலாம்,
    மேலும் வரபோகும் விடுதலை,குடியரசு தினத்தை புறக்கணிக்கலாம், விட்டில், சட்டை பையில் கருப்பு கொடி எற்றலாம்/ஒட்டலாம். தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்லும் இலங்கை அரசை கண்டுகொள்ளாமல் இருக்கும் இந்திய அரசுடன் தமிழர்கள் ஏன் உறவு வைத்திருக்க வேண்டும்.
    வன்முறை வேண்டாதவர்கள் படிக்க வேண்டாம்
    நடுவன அரசுக்கு சொந்தமான கட்டிங்களை அடித்து நொறுக்கலாம்.. etc
    மேலும் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும் இந்தியா என்கின்ற இந்திய அரசாங்கம் இந்திக்கும், இந்தி மக்களுக்கு மட்டுமே பாதுகாக்கும்(குறைந்த பட்சம் பாதுகாக்க முயற்சிக்கும்). எப்படா வாய்ப்பு கிடைக்கும் காங்கிரசை பற்றி குறை சொல்லாம்னு அலைகிற நடுவன பா.ஜா.கா கூட இதை சட்ட செய்வதில்லை இந்த தமிழர்களுக்கு எதிரான விசயத்தில் அவர்கள் மிக்க ஒற்றுமையாய் செயல்படுவார்கள், ஆக இந்திய அரசியல்படி அல்லது அந்த வடநாட்டு மக்களின் நினைப்புபடி தமிழர்கள் எல்லாம் இந்தியர்கள் மாதிரி இந்தியர்கள் கிடையாது, நாம் ஏதோ பிழப்புதேடி இங்கு வந்த மாதிரியும் இவனுங்க தமிழ்நாட்ட ஒதுக்கி நம்மள வாழ வழிசெய்த மாதிரி நெனனப்பு.
    நான் கலைஞரை மட்டும் குறைசொல்வதில் அர்த்தம் இல்லை
    இவர்தான் மடல் எழுதியிருக்கேன் என்கிறார் அல்லவா பின்பு இந்திய அரசாங்கம்தானே பொருப்பு தமிழக அரசாங்கிடம் கடற்படையில்லையே, தமிழக முதலமைச்சருக்கு இந்திய அரசாங்கத்துக்கு உட்பட்ட வரையரையில் இருந்துதான் செயல்பட முடியும், ஏன் ஒரு தமிழக முதலமைச்சர் பதவி விலகினால்தான் இந்திய அரசாங்கம் செவிசாய்கும் என்பது பச்ச மடத்தனம், வடநாட்டுகாரனுக்கு எதாவதுனா அது தேசிய பிரச்சனை எ-டு சில்பா சட்டி இங்கிலாந்து தொலைகாட்சி நிகழ்ச்சியில் அவமானபட்டால் அது தேசிய பிரச்சனை, வடநாட்டான் ஆஸ்திரேலியாவில் இன்னல்பட்டால் அது தேசிய பிரச்சனை,இந்தி நடிகனுக்கு அமெரிக்க பரிசோதனையில் பிரச்சனை என்றால் அது தேசிய பிரச்சனை,காசுமிர் தேசிய பிரச்சனை ஆனால் இலட்ச தீவு தமிழர்களின் பிரச்சனை, தமிழன் இலங்கையில் செத்துமடிந்தாலும், மலேசியாவில் செத்துமடிந்தாலும் அது தமிழர்களின் பிரச்சனையே அதில் இந்திய அரசாங்கம் தலையிடாது, இந்திய பாராளுமன்றத்தில் இந்தி,ஆங்கிலத்துக்கு மட்டுமே அனுமதி,இதுல அழகிரிக்கு தமிழ் தெரியவில்லைனு கிண்டல் வேற, அழகிரியின் நிர்வாக திறமையை குறை சொல்லலாம் ஆனால் ஏன் மொழியை வைத்து கேலி செய்கிறிர்கள் அழகிரி என்பவன் தமிழக மக்களின் பிரிதிநிதி அப்படியிருக்கையில் அவன் எதற்காக ஆங்கிலமும், இந்தியையும் படித்திருக்க வேண்டும்
    ஒன்னும் விளங்கல, மேலும் இந்திய அரசால் வெயிடபடும் அனைத்து திட்டங்களின் பெயர்கள் இந்தி/சமற்கிருதம் ஆகியவற்றிலேயே இருக்கிறது
    இதைபற்றி பேசவேண்டுமானால் தனிஇடுக்கையிட வேண்டும், எ-டு இஸ்ரோவில் சாட்டிலைட்டுக்கு இடும் பெயர்கள், இந்திய ஏவுகனையின் பெயர்கள் பிருத்வி etc, இந்திய விருது பெயர்கள், இந்திய கொடியின் சக்கரம், நாணயத்தின் அச்சு அகியவற்றிலும் அவர்களின் வரலாற்றையே பிரிதிபலிக்கும் நம் மன்னர்களான சோழனை பற்றியோ அல்லது நம் பண்டைய புலவர்களை பற்றியோ எதையும் இந்தியா எற்றுகொள்ளாது

    ReplyDelete
  74. யார் எவ்வளவு கத்தினாலும், கதறினாலும் என்ன சார்?, அவருக்கு படத்துக்கு கதை எழுதவும், பாராட்டு விழாவுல கலந்துக்கவும் தான் நேரம் சரியா இருக்கு....
    http://virtualworldofme.blogspot.com/2011/01/blog-post_25.html

    ReplyDelete
  75. இந்திய,தமிழ்நாட்டு வாக்காளர்களே,

    நாட்டில் டன் கணக்கில் குவிந்துவிட்ட குப்பையை எண்ணி கலங்க வேண்டாம் மனம் தளர வேண்டாம் .உங்களிடம் உள்ள ஒரே ஒரு தீக்குச்சியை மட்டும் விற்று விடாதீர்கள்.(குப்பையை கொட்டியவர்கள் எந்த விலை கொடுத்தாலும்).நிர்ணயிக்கப்பட்ட நாளன்று அந்த தீக்குச்சியை பற்றவைத்து எறியுங்கள் அந்த குப்பைமேட்டின் மேல்...
    நன்றி

    ReplyDelete
  76. புகல் தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை கொடுங்கள் நாம் தனியாக சந்திப்போம்.

    ReplyDelete
  77. புகல்..

    உங்களது புலம்பலுக்கு நன்றி..!

    சமயத்தில் உங்களை மாதிரி சிந்திப்பவர்களும் தாத்தாவின் அருகில் இருந்து தொலைக்கிறார்கள். அதுதான் பிரச்சினையே..?

    ReplyDelete
  78. [[[Pari T Moorthy said...
    யார் எவ்வளவு கத்தினாலும், கதறினாலும் என்ன சார்?, அவருக்கு படத்துக்கு கதை எழுதவும், பாராட்டு விழாவுல கலந்துக்கவும்தான் நேரம் சரியா இருக்கு....
    http://virtualworldofme.blogspot.com/2011/01/blog-post_25.html]]]

    இப்படியொரு முதல்வரைப் பெறுவதற்கு நாம் என்ன தவம் செய்திருக்க வேண்டும்..?

    ReplyDelete
  79. [[[Ganpat said...
    இந்திய, தமிழ்நாட்டு வாக்காளர்களே, நாட்டில் டன் கணக்கில் குவிந்துவிட்ட குப்பையை எண்ணி கலங்க வேண்டாம் மனம் தளர வேண்டாம். உங்களிடம் உள்ள ஒரே ஒரு தீக்குச்சியை மட்டும் விற்று விடாதீர்கள். (குப்பையை கொட்டியவர்கள் எந்த விலை கொடுத்தாலும்). நிர்ணயிக்கப்பட்ட நாளன்று அந்த தீக்குச்சியை பற்ற வைத்து எறியுங்கள் அந்த குப்பை மேட்டின் மேல்... நன்றி]]]

    நன்றி கண்பத்..

    இதையேதான் நானும் சொல்கிறேன்..!

    ReplyDelete
  80. [[[raja said...
    புகல் தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை கொடுங்கள் நாம் தனியாக சந்திப்போம்.]]]

    ஏன் உங்களுக்கு இந்த வேண்டாத வேலை.. தனியாகச் சந்தித்தால் மட்டும் அவர் தன்னுடைய கொள்கைகளை மாற்றிக் கொள்ளப் போகிறாரா என்ன..?

    விடுங்க ராஜா..!

    ReplyDelete
  81. Dear TT,
    I feel that we have lost our self respect once we sarted accepting money for vote and freebees like TV etc.The present day politicians are more bothered about their family and how to make money.Our people are bothered about when TASMAC will open in the morning?
    This will continue until there is a revoution in people mind.But i doubt!

    ReplyDelete
  82. சரியாக சொன்னீர் - உலகத்தில் உள்ள 10 கோடி தமிழர்களும் உண்மையான தமிழர்கள் நினைப்பதை சரியாக சொன்னீர் உண்மைதமிழா நடக்கும் நடத்துவோம் மாற்றி காட்டுவோம் - ஓன்று சொல்லட்டுமா, மீண்டும் ஆட்சிக்கு வரமாட்டோம் என்று தெரிந்து தான் நான் dmk தலைவராகவே இருக்க விரும்புகிறேன் என புலம்பல் - ஒப்பாரி

    ReplyDelete
  83. [[[சி.பி.செந்தில்குமார் said...

    kalakkal கலக்கல் அண்ணே]]]

    நம்முடைய எதிர்ப்பை காட்டித்தானே ஆக வேண்டும்..!

    இவர்களது வீட்டுச் சாவு என்றால் எப்படி ஒப்பாரி வைத்தார்கள்..? அப்படித்தானே அடுத்தவர்களுக்கும் இருக்கும்..! அதுவும் இது படுகொலை..!

    நினைக்கக்கூட மறுக்கிறார்களே..!

    ReplyDelete
  84. [[[San said...

    Dear TT,
    I feel that we have lost our self respect once we sarted accepting money for vote and freebees like TV etc. The present day politicians are more bothered about their family and how to make money. Our people are bothered about when TASMAC will open in the morning?
    This will continue until there is a revoution in people mind.But i doubt!]]]

    அதேதான்.. மக்களை போதையிலேயே வைத்திருந்து அவர்கள் அரசாள நினைக்கிறார்கள். இப்போது அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்..!

    ReplyDelete
  85. [[[மனசாட்சி said...
    சரியாக சொன்னீர் - உலகத்தில் உள்ள 10 கோடி தமிழர்களும் உண்மையான தமிழர்கள் நினைப்பதை சரியாக சொன்னீர் உண்மைத்தமிழா நடக்கும் நடத்துவோம். மாற்றி காட்டுவோம் - ஓன்று சொல்லட்டுமா, மீண்டும் ஆட்சிக்கு வர மாட்டோம் என்று தெரிந்துதான் நான் dmk தலைவராகவே இருக்க விரும்புகிறேன் என புலம்பல் - ஒப்பாரி]]]

    ஓ.. இப்படியும் ஒரு பாயிண்ட் இருக்கா..? நானே யோசிக்காமல் போய்விட்டனே.. நன்றி மனசாட்சி..!

    ReplyDelete
  86. சரவணன்

    இவ்வளவு தூரம் உணர்ச்சி வசப் படும் நீங்கள் மீண்டும் மீண்டும் அந்தக் குடும்பம் எடுக்கும் திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதி அவர்களை மேலும் மேலும் பணக்காரர்களாக்குவது ஏன்? குடும்பம் போக வேண்டும் என்றால் அவர்களது கொள்ளக் கூட்ட வியாபரங்களும் சேர்ந்து ஒழிய வேண்டும் அல்லவா? வர வர இது போன்ற வெற்று வேட்டுப் பதிவுகளைப் படிக்கும் பொழுது கடும் வெறுப்பாக உள்ளது. ஒரு பக்கம் அவர்கள் சினிமாக்களுக்கு இலவச விளம்பரம் தர வேண்டியது மறு புறம் குடும்பம் ஒழிய வேண்டும் என்று எழுத வேண்டியது. இப்படி எழுத உங்களுக்கே வெட்க்கமாகவும் அவமானமாகவும் கேவலமாகவும் இல்லையா? மனசாட்சியைக் கொஞ்சம் கேளுங்கள் சரவணன். சினிமா உங்களுக்கு நெருங்கியதாக இருக்கலாம் எது முக்கியம் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். சினிமா இருக்க வேண்டியதுதான் ஆனால் நீங்கள் இருக்கும் நாடு சுடுகாடாகி விட்டால் எந்த சினிமாவை நாளைக்கு நீங்கள் காணப் போகிறீர்கள்? தயவு செய்து உங்கள் நிலைப்பாட்டைத் தெளிவு படுத்திக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் மேடையில் வீர வசனம் பேசி கருணாநிதியைத் திட்டி விட்டு மறைமுகமாக தனித்து நின்று ஆதரவு தெரிவிக்கும் விஜயகாந்தை விடக் கேவலமானவராகி விடுவீர்கள். குடும்பம் எடுக்கும் சினிமாக்களுக்கு நீங்கள் விமர்சனம் எழுதி இலவச விளம்பரம் அளிக்காமல் போனால் சினிமா அழிந்து விடாது ஆனால் உங்கள் மரியாதை என்னைப் போன்றவர்களிடம் அழிந்து போய் விடும். நீ நினைப்பது பற்றி எனக்கு என்ன கவலை என்று நினைத்தால் நான் சொல்ல மேலே எதுவும் இல்லை.

    உங்களிடம் இன்னமும் நம்பிக்கை வைத்திருக்கும்
    ச.திருமலை

    ReplyDelete
  87. திருமலை அண்ணே..

    சவுக்கியம்தானா..? ரொம்ப நாளாச்சு நீங்க என் வலைப்பதிவுக்கு பின்னூட்டம் போட்டு..!

    நன்றி.. நன்றி..!

    முதலில் ஒரு சின்ன விஷயம்.. நான் சினிமா விமர்சனத்தை பாஸிட்டிவ்வாக எழுதுவதால் மட்டுமே அந்தப் படம் ஓடுவதில்லை. யாரோ 5 பேர் மட்டும் அந்தப் படத்தைப் பார்க்கப் போகிறார்கள். அவ்வளவுதான்..! இந்த 5 பேர் கொடுக்கும் காசினாலா அந்தக் குடும்பம் வாழப் போகிறது..?

    அத்தோடு தயாரிப்பாளரைவிடவும் அந்தச் சினிமாவின் பங்களிப்பில் இருக்கும் கலைஞர்களுக்கு அந்தப் பாராட்டு போய்ச் சேர வேண்டும். இது அவசியமானது என்று நான் நினைக்கிறேன்..!

    என்னைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்..!

    ReplyDelete
  88. /**புகல் தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை கொடுங்கள் நாம் தனியாக சந்திப்போம். **//
    எனது மின்னஞ்சல் pugal.na@gmail.com
    கண்டிப்பாக சந்திக்கலாம், நிறைய பேசலாம்

    ReplyDelete
  89. எனக்கு மற்றுமொரு சந்தேகம் உண்டு! உண்மையிலேயே ஈழத் தமிழர்களுக்காகவும், தமிழக மீனவர்களுக்காகவும் தமிழகத்தின் இதர பகுதிகளில் வசிக்கும் தமிழரிடையே அந்த இன, மொழியுணர்வு இருக்கிறதா? இன உணர்வாளர்களின் ஆர்ப்பாட்டங்கள் ஆங்காங்கே திடல்களிலும், இணைய வலைப்பூக்களிலும் மட்டுமே பிரம்மாண்டமாக கட்டமைக்கப்படுவதுபோல தெரிகிறதேயன்றி அது தமிழ்நாட்டின் ஆறுகோடி பேருக்கும் அந்த உணர்வு இருக்கிறதா?? என்பது மதிப்பு வாய்ந்த கேள்வியாக எனக்குப் படுகிறது! உங்களுக்கு??

    ReplyDelete
  90. உண்மை தமில் அண்ணே,

    குமாரி ஜெயலலிதா ஐயங்கார் கட்சி போர்வையை விலக்கி விட்டு தமிழ் மீனவ உறவுகளுக்கு குரல் கொடுத்தால் நன்றாக இருக்கும்...

    இதுவரை 538 மீனவர்கள் கொல்லப்பட்ட போது எம்ஜிஆர், பி.சி.அலெக்சாண்டர், கருணாநிதி, ஜெயலலிதா ஐயங்கார், ஓ.எசக்கி முத்து தேவர் என்கிற 0(சுன்யம்). பன்னீர் செல்வம் கூடவே இந்தியா எனும் பேய், ராஜிவ் எனும் ரத்த வெறியன், வி.பி.சிங், சந்திரசேகர், நரசிம்ம ராவ் எனும் திருடன், வாஜ்பாய் எனும் முகமுடி, தேவகவுடா, குஜ்ரால், மன்மோகன் எனும் எடுபிடி மடையன்... இவ்வளவு பேர் ஆட்சி அதிகாரத்தில் இருந்திருக்கினர்...

    ஆனால் உங்கள் பதிவில் கருணாநிதியும், ஸ்டாலினும், அழகிரியும், கனிமொழியும் கடலுக்கு சென்று கொலை செய்வது போல் எழுதி இருக்கிறீர்கள்... இதுவா உண்மை?

    நீங்கள் குமாரி ஜெயலலிதா ஐயங்காருக்கு சேவை செய்ய விரும்பினால் அவருக்கு பிடித்த பார்ப்பன பாசம், ஹிந்திய இறையாண்மை, ஹிந்து மத வெறியாட்டம் போன்ற பணிகளை செய்து... நீங்களும் தமிழ் நாடு ஆர்.எஸ்.எஸ். கிளை குமாரி ஜெயலலிதா ஐயங்காரின் கட்சி பணியாள் என நிரூபித்து கொள்ளலாம்...

    பாவம் உயிரை இழந்த தமிழ் மீனவர்கள்... அவர்களை விட்டு விடுங்கள்... அவர்களை சிங்கள படைகள் கொலை செய்யும் உரிமத்தை உங்களின் ஹிந்திய பாசிச அரசு வழங்கி பல பல ஆண்டுகள் ஆகி விட்டது...

    538 முறை தமிழக மீனவர்களை சிங்கள படை கொலை செய்த போது கருணாநிதி கடிதம் எழுதி கபட நாடகம் ஆடுகிறார் என நீங்கள் விரும்பும் குமாரி ஜெயலலிதா ஐயங்கார் சொல்கிறார்... அவர் என்ன செய்தார்? பேராசை பிடித்த தமிழ் மீனவர்கள் ஸ்ரீலங்கா கடலுக்கு செல்வதால் ஸ்ரீலங்கா அரசு நடவடிக்க எடுக்க வேண்டி இருக்கிறது என திருவாய் மலர்ந்ததை உங்கள் வசதிக்கு மறைத்து விடுகிறீர்கள்... போதும் உங்கள் நடுநிலை முக்காடு...

    நீங்கள் சொல்வது போல் கருணாநிதி குடும்பத்தை ஒழித்து குமாரி ஜெயலிதா ஐயங்கார் ஆட்சிக்கு வந்தால் சிங்கள படைகள் கொலை செய்யாது என சிங்கள அரசிடம் நீங்கள் உறுதி மொழி வாங்கி வந்துள்ளீர்களா?

    கருணாநிதி அதிகாரத்தில் இருப்பதால்தான் சிங்கள படைகள் தமிழ் மீனவர்களை கொலை செய்கிறதா?

    உங்களுக்கு தெரிந்த பெரிய திரை, சின்ன திரை பற்றி பதிவிட்டு கொள்ளுங்கள்...

    இப்படி தமிழர்களின் உயிர் பிரச்சனைகளில் வாந்தி எடுத்து வைத்து... கொல்லப்பட்ட தமிழ் சொந்தங்களின் உயிர்களை இழிவுபடுத்த வேண்டாமே?

    ReplyDelete
  91. ஐயா தமிழ்குரல் என்னும் பெயரில் வந்திருக்கும் முகமூடியே..!

    இந்த நேரத்தில் ஜெயலலிதா ஆட்சியில் இருந்திருந்தாலும் நான் நிச்சயம் இதேபோல் கேட்டிருப்பேன்.!

    முதல்வர் பதவியில் இருப்பவர் தனது பதவிக்குட்பட்டு செய்ய வேண்டியவைகளைச் செய்யவில்லை. ஏன் செய்யவில்லை? அவருடைய ஆட்சி நீடித்திருக்க வேண்டும் என்று விரும்புகிறார். ஏன் விரும்புகிறார்? அவருடைய குடும்பத்தினர் பல்வேறு ஊழல் முறைகேடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களைக் காப்பாற்ற வேண்டுமெனில் ஆட்சி, அதிகாரம் அவர்களது கையில் இருக்க வேண்டும். அதனால்தான்..!

    ஆட்சி நடத்தத் திராணி இல்லையேல் முதலில் வீட்டுக்குப் போகச் சொல்லுங்கள். பின்பு மற்றவைகளை பார்ப்போம்..!

    ReplyDelete
  92. [[[புகல் said...

    /**புகல் தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை கொடுங்கள் நாம் தனியாக சந்திப்போம். **//

    எனது மின்னஞ்சல் pugal.na@gmail.com
    கண்டிப்பாக சந்திக்கலாம், நிறைய பேசலாம்.]]]

    தாராளமாக மெயிலில் தொடர்பு கொண்டு பேசுங்கள். ஆனால் நேரில் வேண்டாம்..!

    ReplyDelete
  93. [[ரிஷி said...
    எனக்கு மற்றுமொரு சந்தேகம் உண்டு! உண்மையிலேயே ஈழத் தமிழர்களுக்காகவும், தமிழக மீனவர்களுக்காகவும் தமிழகத்தின் இதர பகுதிகளில் வசிக்கும் தமிழரிடையே அந்த இன, மொழியுணர்வு இருக்கிறதா? இன உணர்வாளர்களின் ஆர்ப்பாட்டங்கள் ஆங்காங்கே திடல்களிலும், இணைய வலைப்பூக்களிலும் மட்டுமே பிரம்மாண்டமாக கட்டமைக்கப்படுவதுபோல தெரிகிறதேயன்றி அது தமிழ்நாட்டின் ஆறு கோடி பேருக்கும் அந்த உணர்வு இருக்கிறதா?? என்பது மதிப்பு வாய்ந்த கேள்வியாக எனக்குப் படுகிறது! உங்களுக்கு??]]]

    எனக்கும்தான். நம்ம மக்கள் ரொம்பவே தன்னலம் கருதுபவர்களாவே இருக்கிறார்கள். இதற்குக் காரணம் அவர்களது வளர்ப்பு. தங்களது குடும்பத்தைத் தாங்களே தாங்க வேண்டிய பொறுப்பை அவர்கள் மீது இளம் வயதிலேயே சுமத்திவிடுவதால், அவர்கள் நாடு, இனம், மொழி, மக்கள் என்ற பொது வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.

    ReplyDelete
  94. /**
    நீங்கள் சொல்வது போல் கருணாநிதி குடும்பத்தை ஒழித்து குமாரி ஜெயலிதா ஐயங்கார் ஆட்சிக்கு வந்தால் சிங்கள படைகள் கொலை செய்யாது என சிங்கள அரசிடம் நீங்கள் உறுதி மொழி வாங்கி வந்துள்ளீர்களா?

    கருணாநிதி அதிகாரத்தில் இருப்பதால்தான் சிங்கள படைகள் தமிழ் மீனவர்களை கொலை செய்கிறதா?
    ***/
    தமிழ் குரல் மிக சரியாக சொன்னிர்கள்,
    தமிழ்நாட்டு ஏதோ தனிநாடு போல நம் தமிழ்நாட்டு முதல்அமைச்சர் கேட்டால்தான் இந்தியா என்கின்ற நாடு உதவும் மாதிரி இங்கு பலபேர் விமர்சித்துள்ளார்கள், இதுல சிலபேர் கலைஞர் இன்னும் நன்றாக எடுத்துரைத்திருக்க வேண்டும் என்றும், சிலபேர் கலைஞர் தான் வைத்திருக்கும் எம்.பிகளை வைத்து அழுத்தம் கொடுக்கவேண்டும், இன்னும் சிலபேர் கலைஞர் பதவி விலக வேண்டும் என்றும் எழுதிகொண்டிருக்கிறார்கள். பாராளுமன்றம் உறுப்பினர் எண்ணிக்கையை வைத்து தமிழ்நாட்டுக்கு சில இலாக்கை வாங்கலாம், வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றத்தில் பாதிக்கபட்ட மக்களுக்காக நடுவன அரசிடம் நிதி வாங்க etc இப்படி ஒரு முதல்அமைச்சருக்கு உட்பட்ட வரையரைக்குள மட்டுமே பயன்படுத்தலாம் அவ்வளவே, இல்ல தெரியாமாதான் கேட்கிறேன் கடலோர காவல் படை என்ன தமிழக முதலமைச்சருக்கு கீழா வருகிறது, அங்கு மக்கள் கொல்லபடுவது ஒரு நடுவன கடலோர காவல் படைக்கு தெரியாதா, கண்டிப்பாக தெரிந்திருக்கும் மேலும் ஒரு தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதியும் அதை சிறிதும் சட்டை செய்யாத நடுவன அரசுமீதுதான் எனக்கு கோபம் அதிகம், தம் நாட்டு மக்கள் ஒருவன் பக்கத்துநாட்டு மக்களால் கொல்லபட்டால் கொத்தித்து எழ வேண்டியது ஒரு நாட்டின் கடமை அதாவது நம் இந்தியா என்கின்ற நாடு கொதித்து எழுந்து இலங்கை அரசிடம் விளக்கம் கேட்டிருக்கவேண்டும், தமிழர்கள் செத்து மடிந்ததுதான் மீச்சம் ஒன்று இரண்டு அல்ல அரை ஆயிரத்துக்கும் மேல் செத்துவிட்டார்கள், கலைஞராவது நடுவன அரசுக்கு மடல் எழுதினார், அம்மாவாக இருந்தால் யாகம் செய்திருப்பார், தேர்தலில் வெற்றி பெற மக்களை நம்பாமல் யாகத்தை நம்பும் இவுங்க தைரியசாலி, ஆளுமைபடைத்தவர் நல்ல வேடிக்கை
    அம்மா சில குழந்தைக்கு இட்ட அனைத்து பெயரும் சமற்கிருதம் ஒரு குழந்தைக்கு பெயரிடம் போது அது தமிழ் மொழியின் தமிழ் இனத்தின் அடையாளமாய் இருக்க வேண்டும், தன் பெயரை அனேகமாக அனைவரும் நேசம் கொள்வார்கள் அப்படிபட்ட பெயரை சமற்கிருதத்தில் வைத்துகொண்டால் அதன் பின்விளைவுகள் மிக மோசமாக இருக்கும் அதுதான் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது, எ-டு தான் தொடங்கும் அனைத்து தொழிலும் அவன் பெரும்பாலும் அவன் பெயரிலேயேதான் தொடங்குவான் இதனால் பல வழிகளில் தமிழைதாண்டி சமற்கிருதமே இருக்கிறது இப்படி பல எடுத்துகாட்டு சொல்லலாம், இப்படி தமிழ்பற்றே இல்லாத அம்மா சொல்லுறாங்க தமிழின் வருடபிறப்பு சித்திரை ஒன்றாம், தை ஒன்று என்றால் எந்த சமற்கிருதவாதியால்தான் தாங்கமுடியும், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் இதை இம்மாவால் வழிமொழிய முடியுமா முடியாது, ஏன்னா மத்த சாதியினர் கடவுள் பக்கத்தில் இருந்தாலோ தப்பி தவறி தொட்டாலோ தீட்டு என்ன ஒரு கொடுமை, இதை ஒரு பத்திரிக்கையில் ஒரு ஈன நாய் சொல்லுது, பொது மக்கள் போடும் காசில் வாழ்ந்துகொண்டு இவ்வளவு பேச்சு
    i'm running out of time let me discuss the same other session

    ReplyDelete
  95. புகழ்

    உங்களுடைய அறியாமை கண்டு வருந்துகிறேன்..!

    அரசியலில் இன்னும் நீங்கள் படிக்க வேண்டியது, கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது..!

    இதையெல்லாம் செய்துவிட்டு பின்பு வாருங்கள். பேசுவோம்..!

    ReplyDelete
  96. உண்மைத்தமிழனின் நேர்மைத் திறத்துக்கும் நெஞ்சுரத்துக்கும் வணக்கங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  97. //**
    புகழ்

    உங்களுடைய அறியாமை கண்டு வருந்துகிறேன்..!

    அரசியலில் இன்னும் நீங்கள் படிக்க வேண்டியது, கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது..!

    இதையெல்லாம் செய்துவிட்டு பின்பு வாருங்கள். பேசுவோம்..!
    **//
    தங்களின் கருத்துக்கு நன்றி, நான் இங்கு அரசியல் செய்யவரவில்லை, மாறாக நடுவன அரசு தமிழ்/தமிழர்களை சொந்த நாட்டில் ஒரு இழிவான நிலையில் வைத்திருக்கிறார்கள் என்பதைதான் மேலே பதிவு செய்துள்ளேன், நம் கண்களுக்கு தெரிந்தே இந்தியா பல வஞ்சகங்களை செய்துள்ளது தெரியாமல் இன்னும் என்ன என்ன நடந்ததோ! (ஆம் எனக்கு அரசியல் தெரியாது), இதை எல்லாம் தெரிந்தும் இந்தியாவை நம்பிகொண்டிருக்கும் தமிழக மக்களை நினைத்தால் பரிதாபமாக உள்ளது
    நடுவன அரசின் நிலைபாடு;
    எத்தனை தமிழர்கள் செத்தாலும் நமக்கு கவலையில்லை, நமக்கு தேவை இலங்கை அரசுடனான உறவுதான், அங்கிருந்து ஒரு கூரல் ஐயா இது சம்பந்தமா தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளாரே தூக்கி குப்பையில போடுய்யா, ஐயா தமிழக மக்கள் கோவிக்க மாட்டார்களா, கண்டிப்பாக மாட்டார்கள் மாறாக அவர்களுக்குள்ளேயே விவாதம்,சண்டை போட்டுபோட்டுகொள்வார்கள், ஏதிர்கட்சிகள், ஊடகங்கள்,மக்கள் எல்லாம் ஆளும்கட்சியை குறைசொல்லி கொண்டிருக்கும், ஆளும்கட்சி நம்மிடம் கெஞ்சி கொண்டிருக்கும், நாம் கண்டுகொள்ளாமல் இருப்போம், அதன்பின்பு ஏதிர்கட்சிகள், ஊடகங்கள்,மக்கள் எல்லாம் ஆளும்கட்சி இன்னும் நன்றாக கெஞ்ச வேண்டும், நடுவன அரசின் காலை நக்க வேண்டும் அந்த மக்களின் மொழியில் சொல்ல வேண்டும் என்றால் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அடித்து கொண்டிருப்பார்கள், அப்பறம் ஒரு நல்ல நாளா பார்த்து சும்மா ஒரு கண்டனம் தெரிவிச்சா உடனே மக்கள் குளிந்துவிடுவார்கள், அதற்கும் ஆளும்கட்சியை குறை சொல்வார்கள் இப்படி முன்னேமே அழூத்தம் கொடுத்திருந்தால் என்றோ நடுவன அரசு நடவடிக்கை எடுத்திருக்கும் என்று மடத்தனமாக உணர்வார்கள், ஐயா ஒரு சந்தேகம் எதுவரை நாம் அவர்களை ஏமாற்றலாம், அவர்கள் தன்னை இந்தியா என்று முட்டால்தனமாக நம்பிகொண்டிருக்கும்வரை, அவர்கள் சிந்திக்க தொடங்கினால்?
    இந்திய இறையாண்மை, பிரிவினைவாதம் இப்படி எதாவது சொல்லி அவர்களுக்குள்ளேயே முட்டிகொள்வார்கள், அதுமட்டும் இல்லாமல் இந்தியர்களாகிய நம்மிடம் ஆயிரம் வேற்றுமைகள் இருக்கலாம்(எ-டு தமிழர்கள் இலங்கை படையினால் கொல்லபடலாம், கன்னடகாரன் தமிழனுக்கு தண்ணிர் தரமால் இருக்கலாம், தமிழ்காரனை பெங்களுரில் புரட்டி எடுக்கலாம், கேரளகாரன் தமிழ்நாட்டில் ஏகபோகமாக வாழலாம், ஆனால் முல்லை பெரியாரில் தமிழனை ஏமாற்றலாம், இப்படி அடிக்கிகொண்டே போகலாம்) ஆனால் இதை எல்லாம் மறந்து நான் இந்தியன் என்று பெருமை பொங்க பாடுவார்கள், ஐயா அவர்கள் விழித்துகொண்டால் இவர்களா? LOL :)

    ReplyDelete
  98. [[[செல்லையா முத்துசாமி said...
    உண்மைத்தமிழனின் நேர்மைத்திறனுக்கும் நெஞ்சுரத்துக்கும் வணக்கங்கள். வாழ்த்துக்கள்.]]]

    நன்றிகள் ஐயா..!

    ReplyDelete
  99. நன்றி புகல்..

    இந்த விஷயத்தில் மத்திய அரசை குற்றம் சுமத்த வேண்டிய அதே நேரத்தில், அதே அளவு வலுவான குற்றச்சாட்டை மாநில அரசின் மீதும் நாம் சுமத்த வேண்டும். ஏனெனில் இவர்களுடைய ஆதரவினால்தான் தற்போதைய மத்திய அரசே வாழ்கிறது. தி.மு.க. தனது ஆதரவை வாபஸ் பெற்றால் மத்தியில் காங்கிரஸ் அரசு ஏது..? அவர்களை மிரட்டி தமிழக மக்களுக்கு நல்லது செய்யும் அளவுக்கு மாநில ஆட்சியினர் நினைப்பதில்லை. ஆனால் தமது குடும்பத்தினருக்காக மட்டுமே மத்திய அரசை எதிர்த்து, மிரட்டி, காரியங்களைச் சாதித்துக் கொள்கிறார்கள்..!

    ReplyDelete