Pages

Thursday, January 20, 2011

காவலன் - அழகான காதல் கதை - சினிமா விமர்சனம்.!

20-01-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நான்கைந்து படங்கள் தோல்வியடைந்தால்தான் தாங்கள் செய்கின்ற தவறுகள் என்னென்ன என்பதை அந்தந்த ஹீரோக்கள் நினைத்துப் பார்ப்பார்கள் போலிருக்கிறது..

விஜய்யின் கேரியரில் தொடர்ச்சியான 5 படங்களின் தோல்விகளுக்குப் பிறகு வந்துள்ள ஒரு வெற்றிப் படம் இது. வசூலிலும், பெயரிலும் நிச்சயம் இது ஜெயமான படம்தான். இதில் சந்தேகமில்லை. விஜய்க்கு இன்னுமொரு காதலுக்கு மரியாதை..!


உண்மையாகவே ஒரு நிஜமான, அழகான காதல் கதை.. இந்தப் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டதற்கு விஜய்யை நிச்சயமாக பாராட்ட வேண்டும். விட்ட இடத்தை அதே பாணியில் மீண்டு வந்து கைப்பற்றியிருக்கிறார்.

இதன் ஒரிஜினலான பாடிகார்டு மலையாளப் படத்தில் திலீப், நயன்தாரா ஜோடி.. இதில் நயன்தாரா கல்லூரிக்குள் ஆடும் ஒரு நடனக் காட்சி மலையாள சேனல்களில் போன வருடம் முழுவதும் ஒளிபரப்பான பெருமை பெற்றது.. அசத்தல் மூவ்மெண்ட்ஸ் நயன்ஸ்.. முதல் முறையாக அந்தப் பாடல் காட்சியைப் பார்த்த பின்புதான் படத்தைப் பார்க்க வேண்டும் என்று ஆசை கொண்டு காத்திருந்து பார்த்து வைத்தேன்.

உணர்ச்சிகளின் குவியல்களை படத்தின் பிற்பாதியில் கொண்டிருந்த இப்படம் மலையாள மண்ணுக்கே உரித்தான வகையில் இருந்தது. தமிழ்ப்படுத்தும்போது செய்யும் சிற்சில நகாசு வேலைகளுடன் சொற்ப லாஜிக் மீறல்களுடன் வெளிவந்திருக்கிறது.

வெட்டியாக ஊரைச் சுற்றி அடிதடியில் இறங்கியிருக்கும் விஜய்யை  நல்வழிப்படுத்த தனது நண்பரான தேவகோட்டை மிராசுதார் ராஜ்கிரணிடம் அனுப்பி வைக்கிறார் விஜய்யின் தந்தை. ராஜ்கிரண் விஜய்யை முதலில் சேர்த்துக் கொள்ளவில்லை. ஒரு குண்டு வெடிப்பில் இருந்து தன்னைக் காப்பாற்றிய பின்புதான் விஜய் மீது பாசம் கொண்டு அவரை வீட்டுக்குள் விடுகிறார்.


ராஜ்கிரணின் மகளான அசின் சென்னையில் தங்கி கல்லூரியில் படிக்கப் போக.. மகளுக்குத் துணையாக விஜய்யையும், அவரது தொண்டர் வடிவேலுவையும் அனுப்பி வைக்கிறார். வந்த இடத்தில் விஜய்யின் பின் தொடர்தலும், அவரது அப்பாவித்தனமும் அசினுக்கு வெறுப்பேற்ற விஜய்யை அல்லல்பட வைக்க வேண்டி அசின் செய்யும் ஒரு சின்ன வேலை.. படிப்படியாக நிறுத்த முடியாத அளவுக்குத் தொடர்கதையாகிப் போய் அவர்களது வாழ்க்கையை எங்கயோ கொண்டு போய் முடிக்கிறது..

தொடர்ச்சியான பல்வேறு முடிச்சுகளுடன் கதையைப் பின்னியிருக்கிறார் இயக்குநர். படத்தின் முற்பாதியில் சிறிதளவு கலகலப்புடனும், எதிர்பார்ப்புடனும் சென்றாலும் பிற்பாதி முழுவதும் காதல் மயம்தான்.. ச்சும்மா கிடந்தவனை உசுப்பிவிட்டக் கதையாக அசின் செய்யும் காதல் கலாட்டா முதலில் காமெடியாக இருந்தாலும் போகப் போக சீரியஸாகிப் போய் நாமும் அதில் ஒன்றிவிட வேண்டியதாகிவிட்டது.

நான் ஏற்கெனவே மலையாளத்தை பார்த்துவிட்டதால் எதிர்பார்ப்பு இல்லை என்றாலும், விஜய்யின் கொஞ்சூண்டு நடிப்பு என்னை இருக்கையில் இருக்க வைத்திருந்தது. மனிதர் ஸ்கிரீனில் பார்ப்பதற்கே அழகாக இருக்கிறார். வெரி க்யூட்.. குளோஷப் ஷாட்டுகளை இவருக்காக நிறையவே வைக்கலாம்.. இப்போதெல்லாம் கொஞ்சம் பெரிதாகவே வாயைத் திறந்து வசனம் பேச ஆரம்பித்திருக்கிறார் என்று நினைக்கிறேன். இதில் வசனங்கள் பரவாயில்லை.. புரிந்தது.. ஆனால் அசினின் டப்பிங் வாய்ஸ் அநியாயத்திற்கு கிசுகிசு பாணியில் போய் உற்றுக் கேட்க வேண்டியதாக இருந்தது.

ஹீரோ என்பதால் அவருக்காக வைக்கப்பட்டிருக்கும் முதல் சண்டைக் காட்சியையும், சிற்சில ஹீரோயிஸ ஷாட்டுகளையும் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் படம் சித்திக்கின் படம் போலத்தான் இருக்கிறது.

லாஜிக் குறைகளில்லாமல் இல்லை. முதல் காட்சியில் பார்த்த அம்மா யுவஸ்ரீயும், மாமா டெல்லிகணேஷும், அப்பா நிழல்கள் ரவியையும் அந்த ஒரு காட்சிக்குப் பின்பு காணவே இல்லை.. பாடிகார்டு என்றாலும் அப்படியொருவனை வைக்கும் அளவுக்கு ராஜ்கிரண் தேவகோட்டை பகுதியில் என்னென்ன சாதனைகளைப் படைத்திருக்கிறார் என்பதைக் காட்டவில்லை. ஆனால் அவருக்கென்று இருக்கும் ஒரேயொரு வில்லனை மட்டுமே காட்டி அவரால் ராஜ்கிரணுக்கு இருக்கும் பகைமையை உதாரணமாக்கியிருக்கிறார்கள்.

மலையாளத்தில் இந்த வில்லத்தனத்திற்கு சிறிதளவாவது பில்டப் இருந்தது. தமிழில் அது இல்லாததால் இப்படியொரு கேள்வி எழ வேண்டியதாகிவிட்டது..

விஜய்யின் நடிப்பபை பிற்பாதியில்தான் வெகுவாக ரசிக்க முடிந்தது.. அமைதியான நடிப்பை வழங்கும் விஜய்யை எரிச்சலாக்கும் வகையில் தொலைபேசியில் தொல்லை கொடுக்கும் காட்சியும், கிளாஸ் கட் என்று எரிச்சலுடன் கத்தும் விஜய்யின் நடிப்பு அந்த இடத்தில் பிடித்தமானது. நல்ல கோபம்.. யூ டியூப்பில் இப்போது பேமஸாக இருக்கும் விஜய்யின் ஒரிஜினல் கோபக் காட்சியைவிட இது மிகவும் உக்கிரமானது.

அதேபோல் காதலிக்காக அசினிடம் அவர்களது புரோகிராமை கேட்டுவிட்டு தனது புரோகிராமை பிக்ஸ் செய்ய நினைக்கும் சாதா நடிப்பு.. கல்லூரி வகுப்பில் மதன்பாப்பிடம் கேள்விக்குப் பதில் சொல்லும் தெனாவெட்டு.. லேடீஸ் டாய்லெட் வாசலில் பிரின்ஸியிடம் மாட்டிக் கொண்டு தவிப்பது.. கிளைமாக்ஸில் அடிபட்ட நிலையிலும் ராஜ்கிரணிடம் காட்டும் பவ்யத்தை விஜய் இதுவரையில் எத்தனை படங்களில் காட்டியிருக்கிறார் என்று தேடித்தான் சொல்ல வேண்டும்..


இதேபோல் அசினுக்கும் குறிப்பிடத்தக்க தமிழ்ப் படம் இது.. இளமைத் துள்ளலுடன் தசாவாதாரத்தில் பொங்கித் தீர்த்தவருக்கு ஏன் இத்தனை பஞ்சம் என்று தெரியவில்லை..? பாடல் காட்சிகளில்கூட கொஞ்சம்தான் திறமையைக் காட்டியிருக்கிறார். அதே சமயம், இத்தனை கண்ணீர்த் துளிகளை இதுவரையில் வேறெந்த படத்திலும் அசின் சிந்தியிருக்க முடியாது.. விஜய்யை ஏமாற்றுகிறோம் என்று கிண்டலாக ஆரம்பித்து அது போகப் போக சீரியஸாகி தன்னை அறியாமலேயே அவரை நேசிக்கத் துவங்கும் காட்சி படு யதார்த்தம்.. அந்த ஒவ்வொரு காட்சியிலும் அழுகையுடன் அசினை பார்க்கும்போது அவரது ரசிகர்களுக்கும் அழுகை வரும். ஆனால் இதனை விஜய் எதிர்கொள்ளும்விதமே படத்தை ரசிக்க வைத்தது.

வடிவேலுவின் வெடி காமெடிகள் இந்தப் படத்தில் சற்று அடக்கி வாசித்து சிற்சில இடங்களில் புஸ்வாணமாகவாகவும் போய்விட்டது.. காமெடிக்கு இடமில்லாமல் அதையும் விஜய்யே செய்துவிட்டதால் வெடிவேலுவின் வெங்காய வெடிகூட வெடிக்காதது வருத்தமானதுதான். பேருந்து கலாட்டாவும், ஏர்போர்ட் கலாட்டாவும் மட்டும்தான் ரசிக்கும்படி இருந்தது.. வேறொன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் கதையை நகர்த்த வடிவேலுவின் காதலி கேரக்டர் பயன்படுத்தப்பட்டிருப்பதால் ஓகே..

அம்மா கேரக்டரில் ரோஜாவும், யுவஸ்ரீயும் அவதரித்துவிட்டார்கள். ஏற்கெனவே தெலுங்கு நாடோடியில் கலக்கல் அரசியல்வியாதியாக துள்ளிக் குதித்திருக்கும் ரோஜாவுக்கு இங்கே ஜஸ்ட் சில சீன்கள்தான்..  ரோஜாவின் பேவரைட் சிரிப்பை காணாததால் பலரையும்போல் எனக்கும் பெரும் ஏமாற்றம்தான். யுவஸ்ரீயை அம்மாவாக்கியதைப் போல் இனி வரும் காலங்களில் சங்கவி, யுவராணி, ரூபஸ்ரீ, கீர்த்தனாவையும் விஜய் படங்களில் அம்மாவாக்கிவிட்டால் ஜென்மசாங்கல்யம் அடைந்துவிடுவேன்..!

அசினின் தோழி கேரக்டரின் ஒவ்வொரு எதிர்ப்பும், ஆக்ஷனும் நம்மையும் சேர்த்து கேள்வி கேட்க வைத்திருக்கிறது. ஆனால் ஆள்தான் எனக்குப் பிடிக்கவில்லை. மலையாளத்திலும் இந்தப் பெண்தான் நடித்திருந்தார் என்று நினைக்கிறேன். தமிழுக்கு இன்னமும் கொஞ்சம் பிடிமானமான ஆளாக போட்டிருக்கலாம்.

கல்லூரியில் நடனக் காட்சி வந்தபோது பாட்டு வரப் போகுதுடோய் என்பதைவிட விஜய்யின் நடனம் காண ஆவல் மேலிட்டது உண்மைதான். அந்த நளினம் இன்னமும் விஜய்யிடம் இருக்கிறது.. யாரோ பாடலிலும் பட்டாம்பூச்சி பாடலிலும் விஜய்க்காகவே ஸ்பெஷல் ஸ்டெப்ஸ் வைத்திருக்கிறார்கள்.. ஆனால் எனக்கு முதல் பாடல்தான் பிடித்தது. வேகம்.. வேகம்.. வேகம்... ம்.. இத்தனையிருந்தும் எனக்கு கில்லி மட்டும் ஏன் பிடிக்காமல் போனது என்றுதான் தெரியவில்லை..

'காதலுக்கு மரியாதை'யில் கே.பி.சி.பி.லலிதா “கூட்டிட்டுப் போங்க..” என்று சொல்லும் ஒற்றை வார்த்தைக்குத் தியேட்டரே அதிர்ந்ததைப் போல இந்தப் படத்திலும் ராஜ்கிரண் அதையே கிளைமாக்ஸில் சொல்கிறார். ஒற்றுமையை நினைத்துப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். எல்லாம் நன்மைக்குத்தான்.

இறுதிக் காட்சியில் இருக்கும் சாந்தசொரூபி விஜய்யும், கண்டு பிடித்துவிட்டானா என்பதைக்கூட அறியாத அசினும், சேர்த்து வைத்துவிட்ட திருப்தியோடு சிறுவனுமாக புகைவண்டி நம்மைக் கடக்கையில் ஒரு பீல் குட் லவ் ஸ்டோரியை பார்த்த திருப்தி..

இதே படம் ஹிந்தியில் 'மை லவ் ஸ்டோரி' என்ற பெயரில் தயாராகிறதாம். சல்மான்கான் ஹீரோ. கரீனா கபூர் ஹீரோயினாம். இயக்கம் சித்திக்தானாம்.. அங்கேயும் ஜெயிக்க வாழ்த்துவோம்..!

நீண்ட வருடங்கள் கழித்து நல்ல படத்தைக் கொடுத்திருக்கிறார் விஜய்.. அவசியம் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய திரைப்படம்.. மிஸ் பண்ணிராதீங்க..

தயவு செய்து அவசியம் இதையும் படிச்சிருங்க : விஜய்யின் காவலனுக்கு நேர்ந்த கதி..!

காவலன் டிரெயிலர்



மலையாள பாடிகார்டில் நயன்ஸின் ஜில் ஜில் டான்ஸ்..


35 comments:

  1. உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா...இப்படி நடு ராத்திரி ஒரு மணிக்கெல்லாம் பதிவு போடறீங்க....

    எது எப்படியோ நல்ல ஓப்பனிங்க் இல்லாம போச்சே, ஓப்பனிங்க்ல கிடைக்கிற வசுல்தானே முக்கியம்.

    ReplyDelete
  2. Fully Positive review. Good one


    Ananth,
    Chicago

    ReplyDelete
  3. நீண்ட வருடங்கள் கழித்து நல்ல படத்தைக் கொடுத்திருக்கிறார் விஜய்.. அவசியம் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய திரைப்படம்.. மிஸ் பண்ணிராதீங்க.///////////

    கண்டிப்பாக மிஸ் பண்ண போறேன்.

    மெகா டிவில எப்போ போடுவாங்க..??

    ReplyDelete
  4. ennathu? vijay kittathula paarka azhagaa irukaaraa?

    nalla comedy piece. vijay cinemaku vandhadhoda ore nalla vishayam avara suthi internetla vara jokes thaan.

    ReplyDelete
  5. சீக்கிரம் டவுன்லோடு கிடைச்சுடும் போல! Technology has improved so much, yaar!

    ReplyDelete
  6. படம் நல்லா இருந்துதுண்ணா... ஆனா அவரது தோழி ஏன் விஜயை ஏத்துகிட்டார்-னு ஒழுங்காவே சொல்லல... காதல் காட்சிகள் தான் படத்தை தூக்கி நிறுத்துது..

    ஆரம்ப காட்சிகள் எல்லாம் கொஞ்சம் போர் தான்... :(

    ReplyDelete
  7. இங்க இன்னும் வரலையே... DVD la than

    ReplyDelete
  8. வலுக்கட்டாயமாக, யாரையாரயோ பழி வாங்க ரொம்ப "நம்பமுடியாத அளவுக்கு" பாஸிட்டிவ் ரிவியூ எழுதி இருக்கீங்க! எழுதியதாலே, உங்க விமர்சனம் உப்பு சப்பு இல்லாமல், கவர்ச்சியாகவோ நம்பத் தகுந்ததாகவோ இல்லை! :(

    Writing a +ve review like this wont help the film- if that is what you are trying to do!

    ReplyDelete
  9. [[[இராமசாமி said...

    ennamo solringa..]]]

    படம் நல்லாயிருக்குன்னுதான் சொல்றேன்..!

    ReplyDelete
  10. [[[மு.சரவணக்குமார் said...
    உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா. இப்படி நடு ராத்திரி ஒரு மணிக்கெல்லாம் பதிவு போடறீங்க....]]]

    இப்பத்தான் எனக்கு நேரம் கிடைச்சது..!

    [[[எது எப்படியோ நல்ல ஓப்பனிங் இல்லாம போச்சே, ஓப்பனிங்ல கிடைக்கிற வசுல்தானே முக்கியம்.]]]

    பாவம்தான்.. என்ன செய்யறது? விதி..!

    ReplyDelete
  11. [[[Anand said...

    Fully Positive review. Good one

    Ananth,
    Chicago]]]

    படம் நல்லாத்தான் இருக்கு ஆனந்த்.. பார்க்கலாம். பார்க்க வேண்டிய படமும்கூட..!

    ReplyDelete
  12. நேர்மையற்ற விமர்சனம் என சொல்ல மாட்டேன் . உணர்ச்சி வசப்பட்ட விமர்சனம்

    ReplyDelete
  13. [[[butterfly Surya said...

    நீண்ட வருடங்கள் கழித்து நல்ல படத்தைக் கொடுத்திருக்கிறார் விஜய்.. அவசியம் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய திரைப்படம்.. மிஸ் பண்ணிராதீங்க.///////////

    கண்டிப்பாக மிஸ் பண்ண போறேன்.
    மெகா டிவில எப்போ போடுவாங்க..??]]]

    மெகா டிவி இல்லீங்கண்ணா.. சன் டிவிதான்.. அவங்கதான் சுருட்டிருக்காங்கன்னு தெரியுது..!

    ReplyDelete
  14. [[[khaleel said...

    ennathu? vijay kittathula paarka azhagaa irukaaraa?

    nalla comedy piece. vijay cinemaku vandhadhoda ore nalla vishayam avara suthi internetla vara jokesthaan.]]]

    ம்ஹும்.. இப்ப இருக்குற சில நடிகர்களைவிட அவர் பெட்டர்தான்.. வேறென்ன சொல்றது..?

    ReplyDelete
  15. [[[Arun Ambie said...
    சீக்கிரம் டவுன்லோடு கிடைச்சுடும் போல! Technology has improved so much, yaar!]]]

    "போல" இல்லீங்கண்ணா.. கண்டிப்பாவே கிடைச்சிரும்.. டவுன்லோடிட்டு பாருங்க..!

    ReplyDelete
  16. [[[kanagu said...

    படம் நல்லா இருந்துதுண்ணா... ஆனா அவரது தோழி ஏன் விஜயை ஏத்துகிட்டார்-னு ஒழுங்காவே சொல்லல... காதல் காட்சிகள்தான் படத்தை தூக்கி நிறுத்துது. ஆரம்ப காட்சிகள் எல்லாம் கொஞ்சம் போர்தான்... :(]]]

    ம்.. எனக்கும் ஒரு சின்ன நெருடல்தான்..! கூடுதலா சில காட்சிகள் வைச்சிருந்தால்தான் அந்தக் கேரக்டர் பலமாயிருந்திருக்கும்.

    ReplyDelete
  17. [[[அகில் பூங்குன்றன் said...

    இங்க இன்னும் வரலையே... DVDlathan]]]

    சீக்கிரமே வரும் அகில்..! ஏற்கெனவே தமிழ்நாட்டுல வந்தாச்சு..!

    ReplyDelete
  18. [[[வருண் said...

    வலுக்கட்டாயமாக, யாரை யாரயோ பழி வாங்க ரொம்ப "நம்ப முடியாத அளவுக்கு" பாஸிட்டிவ் ரிவியூ எழுதி இருக்கீங்க! எழுதியதாலே, உங்க விமர்சனம் உப்பு சப்பு இல்லாமல், கவர்ச்சியாகவோ நம்பத் தகுந்ததாகவோ இல்லை! :(

    Writing a +ve review like this wont help the film- if that is what you are trying to do!]]]

    படத்தைப் பாருங்க வருண். அப்புறமா பேசுங்க..

    நான் பாஸிட்டிவ் விமர்சனம் எழுதிறதால படத்துக்கு என்ன ஆகப் போகுது..? எனக்கு படம் பிடிச்சிருக்கு. எழுதறேன். அவ்வளவுதான்..! கதைதான் இங்க முக்கியம்.. அதற்குப் பிறகுதான் விஜய்..!

    ReplyDelete
  19. [[[பார்வையாளன் said...
    நேர்மையற்ற விமர்சனம் என சொல்ல மாட்டேன். உணர்ச்சிவசப்பட்ட விமர்சனம்.]]]

    அடப் போங்கப்பா.. கதையே இல்லாத படத்தையெல்லாம் தூக்கி வைச்சு ஆடுறதுக்கு ஒரு நல்ல படம் வந்திருக்கு.. அதை நல்லவிதமா சொல்லாம.. ஆள் ஆளுக்கு திட்டுறீங்க..?

    ReplyDelete
  20. சாமிகளா..? இதுக்கெதுக்குப்பா மைனஸ் ஓட்டு..? விஜய் மீது இவ்ளோவ் பிரியமானவங்க இங்க இருக்காங்களா..? அதுக்காக எனக்கு மைனஸ் ஓட்டுக் குத்தலாமா..? நான் பாவமில்லையா..? இது தப்பில்லையா..?

    ReplyDelete
  21. தொடர்ந்து மைனஸ் ஓட்டு வாங்குவதால் அண்ணனுக்கு மைனஸ் மாணிக்கம் என்ற பட்டத்தை அளிக்கிறேன்

    ReplyDelete
  22. yeah, naan inga Chicago'la second day parthuten annae.


    Ananth,
    Chicago

    ReplyDelete
  23. அநேகமா இந்த லிங்க கார்க்கி யூஸ் பண்ணியிருக்கணும் இந்நேரம். படத்தை பார்க்கணும்.

    ReplyDelete
  24. +ve விமர்சனம் வந்தாலே ஏன் சிலர் -ve ஆக விமர்சிக்கிறார்கள். புரியலியே மக்கா....

    ReplyDelete
  25. [[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    தொடர்ந்து மைனஸ் ஓட்டு வாங்குவதால் அண்ணனுக்கு மைனஸ் மாணிக்கம் என்ற பட்டத்தை அளிக்கிறேன்]]]

    தம்பி.. ரொம்ப நல்லவனாக இருப்பதால் தம்பியளித்த மைனஸ் மாணிக்கம் பட்டத்தை வருத்தத்துடன் ஏற்றுக் கொள்கிறேன்..!

    ReplyDelete
  26. [[[Anand said...

    yeah, naan inga Chicago'la second day parthuten annae.

    Ananth,
    Chicago]]]

    பார்த்தாச்சா..? அப்போ சந்தோஷம்தான்..!

    ReplyDelete
  27. [[[Yuva said...
    அநேகமா இந்த லிங்க கார்க்கி யூஸ் பண்ணியிருக்கணும் இந்நேரம். படத்தை பார்க்கணும்.]]]

    அவர் வந்து படிக்கிற அளவுக்கெல்லாம் நான் பெரிய ஆள் இல்லீங்கண்ணா.. அதுனால வர மாட்டாரு.. விடுங்க.. இப்போ அவரா நமக்கு முக்கியம்..? நீங்க அவசியம் படத்தைப் பாருங்க..!

    ReplyDelete
  28. [[[பன்-பட்டர்-ஜாம் said...
    +ve விமர்சனம் வந்தாலே ஏன் சிலர் -ve ஆக விமர்சிக்கிறார்கள். புரியலியே மக்கா....]]]

    அதான் எனக்கும் புரியலை மக்கா..! விஜய் படம்ன்னா ஏன் எல்லாரும் இப்படி டெர்ரர் ஆகுறாங்கன்னு விசாரணைக் கமிஷன் வைச்சுத்தான் கண்டு பிடிக்கோணும்..!

    ReplyDelete
  29. அப்ப படம் பாக்கலாகுறீங்க...

    ReplyDelete
  30. [[[Lucky Limat லக்கி லிமட் said...

    அப்ப படம் பாக்கலாகுறீங்க...]]]

    அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம்தான்..!

    ReplyDelete
  31. இதுக்கு எதுக்குண்ணே 5 மைனஸ் ஓட்டு? இந்த அரசியல் எனக்குப் புரியலீங்க!

    ReplyDelete
  32. [[[பன்னிக்குட்டி ராம்சாமி said...
    இதுக்கு எதுக்குண்ணே 5 மைனஸ் ஓட்டு? இந்த அரசியல் எனக்குப் புரியலீங்க!]]]

    எல்லாம் தம்பி விஜய் மேல இருக்கும் பாசந்தான் காரணம்..! விடு.. போயிட்டு போறாங்க..

    ReplyDelete
  33. dis is kadhlaku mariyadai-2 vijay is fantastic

    ReplyDelete
  34. [[[muthu said...
    dis is kadhlaku mariyadai-2 vijay is fantastic]]]

    அப்படியும் சொல்லலாம்.. காதலை மையமாக வைத்துதானே இருக்கிறது..

    ReplyDelete