Pages

Friday, December 24, 2010

மன்மதன் அம்பு - திரைப்பட விமர்சனம்

24-12-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கலையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினியைவிடவும் சீனியரான கமல்ஹாசனின் புகழுக்கு இப்போது என்ன நேர்ந்தது என்று தெரியவில்லை.. முறையாக கமல்ஹாசனுக்குப் பின்புதான் ரஜினியின் பெயர் வர வேண்டும். ஆனால் தமிழகத்து ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவால் ரஜினியின் பெயர் முதலில் வந்து, கமலின் பெயர் பின்னால் போனது அவருக்கு மிகப் பெரும் சோகம்தான்.

எந்திரன் படம் ரிலீஸ் சமயத்தில் “எதுவாக இருந்தாலும் எந்திரன் ரிலீஸுக்கு பின்பு பார்த்துக்கலாம்” என்பதுதான் திரையுலகப் பேச்சாக இருந்தது. அந்தப் படமும் வெளிவந்து வரலாறு காணாத வெற்றியைப் பெற்று ஓய்ந்திருக்கும் இந்த நேரத்தில் வெளிவந்திருக்கும் கலைஞானியின் இத்திரைப்படம் ஒரு சிறிய சலசலப்பைக்கூட எழுப்பாமல் இருப்பது ஆச்சரியத்தைத் தருகிறது.

படம் பற்றிய விளம்பரங்கள் தொல்லைக்காட்சிகளில் திரும்பத் திரும்ப வந்தாலும் அது எந்திரனின் விற்பனை வணிகத் தந்திரத்துக்கு ஒப்பாக இல்லை என்பது நேற்று இத்திரைப்படம் வெளியானபோது தெரிந்துவிட்டது.

எப்போதும் புதிய திரைப்படங்கள் வெள்ளிக்கிழமையன்றுதான் வெளியாகும். ஆனால் இத்திரைப்படம் நேற்று வியாழன்றே வெளியாகியுள்ளது. ஆனால் பத்திரிகைகளில் வெள்ளியன்றுதான் வெளியாகவிருப்பதாக விளம்பரங்களும், ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களும் தெரிவித்தன.

நேற்று மாலை அண்ணன் பட்டர்பிளை சூர்யா சொல்லித்தான் இந்த விஷயமே எனக்குத் தெரியும். “ஜாக்கிசேகரும், பிரபாகரும் ஜோதி தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்..” என்ற அவர் சொன்ன செய்தியே என்னை ஆச்சரியப்பட வைத்தது. எப்படி இப்படியொரு தடாலடி முடிவெடுத்து நிறைவேற்றினார்கள் என்று யோசித்தபோது பிடிபடவில்லை. ஆனால் படம் பார்த்தபோது தெரிந்துவிட்டது.

ஏற்கெனவே படத்தின் ரிலீஸ் தேதி அறிவித்த பின்பு முன் பதிவுகள் களைகட்டும் என்று நினைத்திருந்த தியேட்டர்காரர்கள் எண்ணத்தில் மண் விழுந்திருக்கிறது. இத்திரைப்படத்தின் மீது அவ்வளவாக மக்கள் ஆர்வம் காட்டாமல் இருந்தது ஏன் என்று தெரியவில்லை..

எந்திரனுக்கு முன் பதிவு அறிவிக்கப்பட்ட அன்றைக்கு முற்றிலுமாக செயலிழந்துபோகும் அளவுக்கு இணையத்தளங்கள் முற்றுகையிடப்பட்டன. முதல் நாளில் ஒரு மணி நேரத்திலேயே ஒரு வாரத்துக்கான முன் பதிவுகள் முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு, முன் பதிவிலேயே நான்கரை கோடி ரூபாய் வசூலானதாகத் தெரிவிக்கப்பட்டது.

இப்படியொரு எதிர்பார்ப்பை இதற்கு முன் கமலின் தசாவதாரம் பெற்றிருந்தாலும், அடுத்தப் படமான இந்த மன்மதன்அம்புவும் பெறும் என்று நினைத்திருந்தேன். பொய்த்துப் போய்விட்டது.

கமலுக்கு மட்டுமல்ல கமல்ஹாசனின் ரசிகர்களுக்கும் வயதாகிவிட்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. உதயம் தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த பேனர்களின் எண்ணிக்கைக்கூட மிகக் குறைவுதான். சசிகுமாரின் 'ஈசன்' படத்திற்கு இதைவிடவும் அதிகமான எண்ணிக்கையில் பேனர்கள் இருக்கின்றன. போஸ்டர்களும் தென்படுகின்றன.

நான் பார்த்த காசி திரையரங்கில் இணையத்தள முன் பதிவுகளைத் தவிர மீதி டிக்கெட்டுகளை மொத்தமாக பிளாக்கில் விற்பனை செய்து கொண்டிருந்தார்கள். மப்டி போலீஸ்காரர் ஒருவர் மிகப் பொறுப்பாக, ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பொறுமையுடன் காத்திருந்து தனக்குரிய கல்லாப் பணத்தைப் பெற்றுக் கொண்டு போனார்.

வெளியில் ஹவுஸ்புல் போர்டு தொங்கினாலும் தியேட்டரின் உள்ளே கடைசிவரையிலும் 20 சீட்டுக்கள் கீழ்த்தளத்தில் காலியாகத்தான் இருந்தன. 

ஓகே.. இனி படத்துக்கு வருவோம். சந்தேகமே இல்லாமல் இது கமலுக்கு இன்னுமொரு 'மும்பை எக்ஸ்பிரஸ்'தான்.

கேப்டன் ராஜமன்னாரில் இருந்து ஒரு “மன்”, மதன்மோகனில் இருந்து ஒரு “மதன்”, அம்புஜத்திடம் இருந்து ஒரு “அம்பு” - இப்படி மூன்றையும் தேர்ந்தெடுத்து 'மன்மதன் அம்பு'வாக்கி நமக்கு அர்ப்பணித்திருக்கிறார் கமல். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் அனைத்துமே கமல் அண்ணன்தான்..

திரிஷா ஒரு திரைப்பட நடிகை. பெற்றோரின் எதிர்ப்பையும் திரிஷாவைக் காதலித்து கைப்பிடிக்கக் காத்திருக்கும் மாதவனுக்கு திரிஷாவின் நடவடிக்கைகள் மீது சந்தேகம் வருகிறது. பல பேருடன் பழகுபவளோ, படுப்பவளோ என்கிற ரீதியில் மாதவனின் அம்மா மேற்கு வங்கத்து 'ஸ்வீட் ஹார்ட் மாமியாரான' உஷா உதூப் தூபம் போட்டுவிட.. சந்தேகப் பேயிடம் சிக்கிக் கொள்கிறார் மாதவன். இதனைல் கோபம் கொண்ட திரிஷா மனச்சாந்திக்காக பாரீஸ் வருகிறார்.

அங்கு அவளுடைய நண்பியான டைவர்ஸி சங்கீதா மற்றும் அவளது சுட்டியான இரண்டு குழந்தைகளுடன் சொகுசு கப்பலில் சுற்றுப்பயணத்தைத் துவக்குகிறார் திரிஷா. இந்த நேரத்தில் மாதவன் அவரது அலுவலகத்தில் பணியாற்றும் கமல்ஹாசனை திரிஷாவை பின் தொடர்ந்து சென்று துப்பறிந்து அங்கு நடப்பதை உடனுக்குடன் தனக்குத் தகவல் தெரிவிக்கும்படி சொல்லியனுப்புகிறார்.

திரிஷாவை வேவு பார்க்க வந்த கமல்ஹாசன் ஒரு கட்டத்தில் மாதவன் மீது கோபப்பட்டு இல்லாத விஷயத்தை இருப்பதுபோல் காட்டி சீன் போடுகிறார். எதிர்பாராதவிதமாக திடீர் கோபத்தில் மாதவனும் கிளம்பி ஏதென்ஸுக்கு வந்துவிட.. இறுதியில் காதலர்கள் இணைகிறார்களா அல்லது பிரிகிறார்களா என்பதுதான் கதை..

படத்தில் ஒரேயொரு குறிப்பிடத்தக்க விஷயம் திரிஷா-மாதவன் காரில் செல்லும்போது ஏற்படும் ஒரு விபத்தை கமல்ஹாசனை வைத்து சம்பந்தப்படுத்தியிருப்பது.. இது ஒன்றுதான் 'அடடே' போட வைக்கிறது.

மற்றபடி 'பஞ்சதந்திரம்' படம்போல் வெற்று வசனங்களாலேயே சிரிக்க வைத்துவிடலாம் என்று நினைத்து கொஞ்சம் முயற்சி செய்து நிறைய ஏமாந்து போயிருக்கிறார்கள்.

கமலுக்கு எதற்கு இன்னொரு கொலீக்..? முதல் பாட்டு சீனில் நிஜ நடிகராக சூர்யாவும் ஆட்டத்தில் கலந்து கொண்டு ஆடுவது புதுமைதான். சூர்யாவின் ரசிகர்களின் ஆதரவும் தனக்கு வேண்டும் என்று நினைக்குமளவுக்கு கமலுக்கு தமிழ்நாட்டில் என்ன நடந்தது என்று தெரியவில்லை..


படம் துவங்கி 23 நிமிடங்கள் கழித்தே அண்ணன் அமர்க்களமாக என்ட்ரி கொடுக்கிறார். அதுவும் ஒரு சண்டைக் காட்சியில்.. காலைக் காட்டியவுடனேயே அவர்தான் என்பதை உணர்ந்து கை தட்ட ஆரம்பித்த குஞ்சுகள் சண்டைக் காட்சி முழுவதுமே விசிலையும், கை தட்டலையும் பரப்பி காதைக் கிழித்துவிட்டார்கள்.

நடிப்புக்கு ரொம்ப மெனக்கெட வேண்டாம் என்று நினைத்து 'கலைஞன்' படத்தில் கமலின் முதல் மனைவி கதையை பாடலிலேயே சொல்வதைப் போல் கலங்கிப் போன கண்களுடன் இந்தப் படத்திலும் அதே கதையைச் சொல்லி முடிக்கிறார். இந்தப் பாடல் காட்சி முழுவதுமே ரிவர்ஸ் விங்காக வருவது கவனத்தை ஈர்க்கிறது.


காதலில் சேட்டைக்கார கமல்ஹாசனை பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது.. வயதுக்கேற்றாற்போல் நடிக்க வேண்டும் என்று அவராகவே முடிவெடுத்துவிட்டார் போலும்.. இதில் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த முத்தக் காட்சி இல்லாததால் லட்சணக்கணக்கான கமல் ரசிகர்கள் ஏமாந்து போயிருப்பார்கள். தப்பித்தது திரிஷாவின் உதடு..


படத்தில் வெள்ளைக்கார மனைவி இருப்பதைப் பார்த்தவுடன் ஒருவேளை உதட்டுக் கடி சீன் இந்த அம்மணியோடு இருக்குமோ என்று நினைத்திருந்தேன். அந்த ஆத்திக காமப் பாடலும் அதையொற்றித்தானே இருந்தது.. ஒருவேளை அந்தப் பாடல் காட்சியில் இதுவும் இருந்திருக்குமோ..? என்னவோ போங்க..? அண்ணன் கமலுக்கு ஒரு கிஸ் சீன் போச்சு..!

இப்படியொரு பிரம்மாண்டமான கப்பலை உள்கட்டமைப்பு பிரமிக்க வைக்கிறது.. ஒரு காட்சியில் ஹெலிகாப்டரில் இருந்து எடுக்கப்பட்ட காட்சியாக கப்பலை முழுமையாகச் சுற்றி வந்து காட்டுவது கொள்ளை அழகு. இதில் சுற்றுவதற்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேண்டும்..

எல்லா காட்சிகளிலும் ஒரே மாதிரியான முக பாவனைகள்.. பாதி சொல்லியும், மீதியை சொல்ல முடியாமலும் தவிக்கும் கமலின் அந்த நடிப்பு பல காலமாக நாம் பார்த்து வருவதுதான்.. இதில் ஒன்றும் புதுமையில்லை. கொஞ்ச நேரத்திலேயே அது போரடிக்க வைத்துவிடுகிறது.

கமல் மாதவனுக்கு எதிராகத் திரும்ப காரணமாக இருக்கும் ரமேஷ்அரவிந்த்-ஊர்வசி கிளைக்கதை சற்று உருக்கமானதுதான்.. ஆனால் அந்த கேரக்டரின் மேல் பரிதாபம் வரக் கூடிய நிலையில் திரிஷாவை பார்த்தவுடன் ஊர்வசி ஆர்வத்துடன், “நானும் என் வீட்டுக்காரரும் உங்களோட பேன்..” என்று சொல்லி சப்பையாக்கிவிட்டார்.


உருப்படியாக நடித்திருப்பவர்கள் மாதவனும், சங்கீதாவும்தான்.. தண்ணியைப் போட்டுவிட்டு அலப்பறை செய்யும் அக்மார்க் ஹைடெக் அம்பியான மாதவனின் புலம்பல்களின்போதுதான் தியேட்டர் களை கட்டுகிறது.


கடைசி இருபது நிமிடங்களில் ஆள் மாறாட்டக் காட்சிகளில் மட்டுமே காட்சியமைப்புகளின் மூலமே நகைச்சுவையைக் கொண்டு வந்திருக்கிறார். அந்த மலையாள தயாரிப்பாளராக நடித்திருக்கும் நடிகர், நிஜமாகவே மலையாளத்தில் நகைச்சுவை நடிகர்தான். உடன் அவரது மனைவியாக வரும் மஞ்சுவும் மலையாளத்தில் பெரிய நடிகைதான்.


வசனங்களை கமல் அண்ணனே எழுதியிருக்கிறார். “நடிகைகள்லாம் உள்ளூர்ல இது மாதிரி சேட்டையெல்லாம் செய்ய மாட்டாங்க. வெளிநாட்லதான் செய்வாங்க” என்பதெல்லாம் கமல் கேள்விப்பட்ட நியூஸ்களா அல்லது சொந்தச் சரக்குகளா என்றெல்லாம் விசாரிக்க வேண்டியிருக்கிறது.

நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் என்று தன்னுடைய சக தொழிலாளர்களையே எந்த அளவுக்கு தாக்க வேண்டுமோ அந்த அளவுக்குத் தாக்கியிருக்கிறார் அண்ணன்.

“உலகத்தையே உன் காலடில போடுறேன்” என்கிறார் காதலர் மாதவன். “உலகத்தை யாரும் யார் காலடிலேயும் போட வேண்டாம். அது அங்கயேதான் இருக்கும். பிச்சைக்காரன் காலடில கூடத்தான் உலகம் இருக்கு..” என்ற திரிஷாவின் பதில் நச் வகை.

“சிட்டில சைட் அடிப்போம். வில்லேஜ்ல பெண் எடுப்போம்” என்ற மிகப் பெரிய தத்துவத்தை பொறித்திருக்கிறார் அண்ணன். இதன் மூலம் சிட்டி  பெண்கள் பற்றிய கமலின் பார்வை என்ன என்பது விவாதத்திற்குரியது..


“வீரத்தின் அடுத்தக் கட்டம்தான் மன்னிப்பு.. வீரத்தின் உச்சக்கட்டம் என்ன தெரியுமா? அது அஹிம்சை” என்கிறார் கமல். இப்படி சிற்சில வசனங்கள் சுவையாக இருந்தாலும் படத்தோடு ஒன்றிப் போகாமல் தனித் தீவு மாதிரி இருப்பதுதான் பெரும் குறை..

அதிலும் முக்கால்வாசி வசனங்கள் ஆங்கிலத்தில் இருப்பதும் மிகப் பெரிய மைனஸ்.. இத்திரைப்படம் பி அண்ட் சி தியேட்டர்களில் 3 வாரங்களுக்கு ஓடுவது என்பதே மிகப் பெரிய விஷயம்தான்.. எல்லாம் தெரிந்த கமலே இப்படிச் செய்தால் எப்படி..?

அத்தோடு கூடவே இன்னொரு விஷயம்.. படத்தின் ஒலிப்பதிவு ஸ்பாட் ரெக்கார்டிங் என்கிறார்கள். கடித்துத் துப்புவது போன்ற வசன உச்சரிப்புகளால் பல வசனங்கள் புரியாமலேயே போகின்றன. திரிஷாவுக்கு  சொந்தக் குரலாமே.. லட்சுமிக்கு தங்கச்சி வாய்ஸ் மாதிரியிருக்கிறது.

படத்தின் பாடல்களும் பெரும் குறைதான். நீலவானம் பாடலுக்கு ஏன் அப்படியொரு இழுப்பூபூபூபூபூபூபூபூபூபூபூபூபூபூபூபூபூபூபூபூபூ..? பாடல் காட்சியில் அந்த “நீ”-க்கு கமல் அண்ணன் தனது வாயை இழுத்து வைத்துப் பாடுவதைப் பார்த்தால் “ஏன் இவ்ளோ கஷ்டப்படணும்..? எளிதாகப் புரிவதுபோல் வேறு யாரிடமாவது கொடுத்து எழுத வைத்திருக்கலாமே..?” என்றுதான் சொல்லத் தோன்றுகிறது..


நல்லவேளை.. அந்த நாத்திக பக்தி பாடலை நீக்கிவிட்டார்களாம்.. அந்தக் கண்றாவி போய்த் தொலையட்டும்.. ஆனாலும் காவிக்காரர்களைத் தாக்குவதுபோல் இரண்டு இடங்களில் வசனங்களை வைத்திருக்கிறார் கமல். காவியுடன் இவருக்கென்ன மல்லுக்கட்டு..?

மாதவனுடன் பேசிக் கொண்டே செல்கையில் கோவில் மணி ஒலிக்கிறது. அதனை ஒரு உத்வேக எடுத்துக்காட்டாக மாதவனுக்குச் சொல்கிறார் கமல். நாத்திகத்தை பரப்புவதுபோல் ஒரு பாடலை எடுத்து வைத்துக் கொண்டு, ஆத்திகத்தின் துணையோடு கதையை நகர்த்த முயல்வது முரண்பாடாகத் தெரிகிறதே. கமலுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை..?


பாரீஸில் கார் ஓட்டும் ஈழத் தமிழரை இந்த அளவுக்கு கேவலப்படுத்தியிருக்க வேண்டாம். “செருப்பாக இருக்கவும் தயார்..” என்று அந்த ஈழத் தமிழர் தனது அபிமான நடிகையான திரிஷாவிடம் சொல்வது போன்ற அந்தக் காட்சி நிச்சயம் ஈழத் தமிழர்களைப் புண்படுத்தும் என்றே நினைக்கிறேன். அதற்கு ஈழத் தமிழர் அல்லாத தமிழ்நாட்டுத் தமிழர்களையே காட்டித் தொலைத்திருக்கலாம். அவர்களே வெந்து, நொந்து போயிருக்கும் நிலையில் அவர்களை இப்படியெல்லாமா கேவலப்படுத்துவது..?

கடைசி இருபது நிமிடங்களில்தான் கொஞ்சூண்டு சிரிக்க வைத்திருக்கிறார்கள். அதிலும் படத்தின் ஹைலைட்டான அந்த கிளைமாக்ஸ் வசனத்தை திரிஷா மிக இயல்பாக சொல்வது சினிமாத்தனம் இல்லாமல் இருப்பதால் மனதில் ஒட்டவில்லை.

திரிஷாவிடம் ஒன்று மிஸ்ஸிங். அது அழகு.. என்னாச்சு குயினுக்கு என்று தெரியவில்லை. ஒளிப்பதிவில் குறையில்லை.. ஆனால் இவரும், சங்கீதாவும் மேக்கப்பே போடாமல்தான் இருக்கிறார்கள். விண்ணைத் தாண்டி வருவாயாவில் இருந்த திரிஷா இதில் இல்லையே..?

ஒளிப்பதிவு மனுஷ்நந்தன். நான் சில ஆண்டுகளுக்கு முன்பாக ஞாநியின் பெசண்ட் நகர் வீட்டில் நந்தனை சந்தித்தபோது மிக போல்டான பையனாக இருந்தார். என்ன செய்ய வேண்டும் என்பது அப்போதே அவருக்கு நன்கு தெரிந்திருந்தது. இதற்காக பெற்றோர்களின் உற்சாகமும், தூண்டுதலும் அவருக்குக் கிடைத்திருந்தது. “எனக்கு உங்களை மாதிரி ஒரு அண்ணன் கிடைச்சிருந்தா நான் நிச்சயமாக வாழ்க்கையில் உருப்பட்டிருப்பேன்..” என்று அண்ணன் ஞாநியிடம் அப்போதே சொன்னேன்.

மனுஷ்நந்தன் படிக்கின்ற வயசிலேயே கேமிராவைக் கையில் தூக்கியவர். அவர் எடுத்திருந்த பல புகைப்படங்கள் அப்போதே பல பரிசுகளைப் பெற்றிருக்கின்றன. சென்னை திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவு பிரிவில் யாருடைய சிபாரிசும் இல்லாமல் தனது திறமையாலேயே சேர்ந்தவர். அங்கு பணியாற்றிய நிலையிலேயே விகடனில் தொடர்ந்து மனுஷ்நந்தனின் புகைப்படங்கள் வெளிவந்து கொண்டிருந்தன. திறமையான புகைப்படக் கலைஞருக்கான பாராட்டுக்களையும் அப்போது அவர் பெற்றிருந்தார்.

தனது திரையுலக வாழ்க்கையின் துவக்கத்திலேயே ரவி கே.சந்திரனிடம் உதவியாளராக பல இந்திப் படங்களில் பணியாற்றியிருக்கிறார்.. இது அவருக்கு ஒளிப்பதிவாளராக முதல் திரைப்படம்.

யாருக்கும் அவ்வளவு சீக்கிரம் கிடைக்காத ஒரு வாய்ப்பு மனுஷுக்கு கிடைத்திருப்பது தெய்வச் செயல்தான். வெளிநாட்டு லொகேஷன், பெரிய நடிகர், பெரிய பேனர், ஒளிப்பதிவுக்கு ஏற்ற கதை.. வேறென்ன வேண்டும்..?

கப்பல் சம்பந்தப்பட்ட அத்தனை காட்சிகளிலும் ஒரு ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறது மனுஷின் கேமிரா.. முதல் பாடல் காட்சியிலும் சூர்யா, திரிஷாவின் ஆட்டத்தை முறையாகப் பதிவு செய்திருக்கிறார். ஆட்டம் ஜோர்.. வாழ்த்துக்கள் மனுஷ்.. இன்னும் பல உயர்வுகள் பெற வாழ்த்துகிறேன்.

எப்போதும் அடுத்தவர்களின் படத்தை மொத்தமாக விலை கொடுத்து வாங்கி மிகக் குறுகிய காலத்தில் பெருத்த லாபம் பார்க்கும் உதயநிதி ஸ்டாலின், இந்தப் படத்தை மட்டும் ஏன் ஜெமினி பிலிம் சர்க்யூட்டுக்கு மொத்தமாக விற்றார் என்பதை படத்தின் ரிசல்ட் நிச்சயம் சொல்லத்தான் போகிறது..

மைனா படத்தில் 13 கோடி லாபம் பார்த்திருக்கும் உதயநிதி ஸ்டாலின், இந்தப் படத்தைச் சொந்தமாக ரிலீஸ் செய்திருந்தால் இதே அளவுக்கு நிச்சயம் நஷ்டத்தைத்தான் சந்தித்திருப்பார் என்று ஊகிக்க முடிகிறது..

அதிகப்படியான வெளிநாட்டு ஷூட்டிங் செலவுகளால் படத்தின் பட்ஜெட் எகிறியிருந்தும், வசூலை குறி வைத்து படம் எடுக்கப்படாததால் உதயநிதியின் கை மாற்றல் டிரிக் நிச்சயம் புத்திசாலித்தனமானது. ஆனால் இப்படி ஒருவர் தப்பித்து இன்னொருவர் நஷ்டமடைவது வியாபரத் தந்திரம். இதில் பாவம், பாவமில்லை என்றெல்லாம் பார்க்கக் கூடாது.. இது ரொம்பப் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய இடத்து விவகாரம். நாம் விட்டுவிடுவோம்..

மன்மதன் அம்பு - நிச்சயமாக ஒரு முறை பார்க்கலாம்.

74 comments:

  1. //மன்மதன் அம்பு - நிச்சயமாக ஒரு முறை பார்க்கலாம்.//

    விம‌ர்ச‌ன‌ம் ந‌ன்று அண்ணாச்சி.

    ReplyDelete
  2. சூப்பர்ணே . உங்களை போன் செஞ்சு பாராட்டணும்

    ReplyDelete
  3. எப்படி இவ்வளவு நீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீளமா எழுதறீங்க?

    ReplyDelete
  4. உண்மை தமிழன் அண்ணன் அவர்களே..
    விமர்சனம் அருமை (எப்போவும் போல..)
    உங்களின் ப்ளாக் படிக்கும் பொது நிறைய தகவல்கள் கிடைக்குது அதுக்கு நன்றி..
    சொல்லபோன நீங்கள் ஒரு விக்கிபீடியா மாதிரி ஒரு தகவல் களஞ்சியம்..
    உங்கள் முயற்சி மென்மேலும் தொடர வாழ்த்துகிறேன்..
    நன்றி வணக்கம்.

    ReplyDelete
  5. உண்மையை உடைச்சுச் சொன்ன அண்ணனுக்கு நன்றி..ஆமா, ராகுலைப் பார்த்து ஏதோ கேட்கப் போறீங்கன்னு ஜாக்கி சொன்னாரே..என்னாச்சுன்னா?

    ----செங்கோவி
    மன்மதன் அம்பு-விமர்சனம்

    ReplyDelete
  6. நல்ல படம்தான்..ஆனா நல்லா இல்லை.

    ReplyDelete
  7. //“எனக்கு உங்களை மாதிரி ஒரு அண்ணன் கிடைச்சிருந்தா நான் நிச்சயமாக வாழ்க்கையில் உருப்பட்டிருப்பேன்..” என்று அண்ணன் ஞாநியிடம் அப்போதே சொன்னேன்.//

    அப்ப நீங்க ஒரு உருப்படாதவர்னு சொல்லுங்க. உங்க விமர்சனத நம்பினா உருப்டாப்ல தான்!

    ReplyDelete
  8. //“சிட்டில சைட் அடிப்போம். வில்லேஜ்ல பெண் எடுப்போம்” என்ற மிகப் பெரிய தத்துவத்தை பொறித்திருக்கிறார் அண்ணன். இதன் மூலம் சிட்டி பெண்கள் பற்றிய கமலின் பார்வை என்ன என்பது விவாதத்திற்குரியது..//

    ஒரு படத்தில் எல்லா கதாபாத்திரம் பேசும் வசனமும் வசனகர்த்தாவின் கருத்து என்பது போன்ற ஒரு மொக்கை புரிதலை வைத்துக்கொண்டு நீங்களும் சினிமாவில் இருப்பதாக வேறு சொல்லிக்கொள்ளுகிறீர்கள் ..கொடுமை :(

    ReplyDelete
  9. [[[Mohan said...

    //மன்மதன் அம்பு - நிச்சயமாக ஒரு முறை பார்க்கலாம்.//

    விம‌ர்ச‌ன‌ம் ந‌ன்று அண்ணாச்சி.]]]

    முதல் வாழ்த்துக்கு மிக்க நன்றி மோகன் ஸார்..!

    ReplyDelete
  10. [[[பார்வையாளன் said...
    சூப்பர்ணே. உங்களை போன் செஞ்சு பாராட்டணும்]]]

    போன் செய்து பாராட்டியமைக்கு மிக்க நன்றிகள் பார்வையாளன்..!

    ReplyDelete
  11. [[[DrPKandaswamyPhD said...
    எப்படி இவ்வளவு நீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீளமா எழுதறீங்க?]]]

    புகைப்படங்களும் இடையிடையே போட்டிருப்பதால்தான் பதிவு நீளமாகத் தெரிகிறது..!

    ReplyDelete
  12. [[[cute photos said...
    உண்மை தமிழன் அண்ணன் அவர்களே.. விமர்சனம் அருமை (எப்போவும் போல..) உங்களின் ப்ளாக் படிக்கும்பொது நிறைய தகவல்கள் கிடைக்குது. அதுக்கு நன்றி. சொல்ல போன நீங்கள் ஒரு விக்கிபீடியா மாதிரி ஒரு தகவல் களஞ்சியம். உங்கள் முயற்சி மென்மேலும் தொடர வாழ்த்துகிறேன்..
    நன்றி வணக்கம்.]]]

    நன்றிகள் ஸார்..! உங்களுடைய பாராட்டுதல்கள் என்னை மேலும், மேலும் எழுதத் தூண்டுகிறது..!

    ReplyDelete
  13. [[[செங்கோவி said...
    உண்மையை உடைச்சுச் சொன்ன அண்ணனுக்கு நன்றி. ஆமா, ராகுலைப் பார்த்து ஏதோ கேட்கப் போறீங்கன்னு ஜாக்கி சொன்னாரே. என்னாச்சுன்னா?

    ----செங்கோவி
    மன்மதன் அம்பு-விமர்சனம்]]]

    வருகைக்கு நன்றி செங்கோவி..! ஜாக்கிதான் பத்த வைச்சானா..?

    ReplyDelete
  14. [[[Indian Share Market said...
    நல்ல படம்தான். ஆனா நல்லா இல்லை.]]]

    நல்ல விமர்சனம்தான். ஆனால் நன்றாக இல்லை..!

    ReplyDelete
  15. [[[Silicon Sillu said...

    //“எனக்கு உங்களை மாதிரி ஒரு அண்ணன் கிடைச்சிருந்தா நான் நிச்சயமாக வாழ்க்கையில் உருப்பட்டிருப்பேன்..” என்று அண்ணன் ஞாநியிடம் அப்போதே சொன்னேன்.//

    அப்ப நீங்க ஒரு உருப்படாதவர்னு சொல்லுங்க. உங்க விமர்சனத நம்பினா உருப்டாப்லதான்!]]]

    நல்லது.. நீங்க உருப்பட்டாப்புலதான்..!

    ReplyDelete
  16. [[[ஜோ/Joe said...

    //“சிட்டில சைட் அடிப்போம். வில்லேஜ்ல பெண் எடுப்போம்” என்ற மிகப் பெரிய தத்துவத்தை பொறித்திருக்கிறார் அண்ணன். இதன் மூலம் சிட்டி பெண்கள் பற்றிய கமலின் பார்வை என்ன என்பது விவாதத்திற்குரியது..//

    ஒரு படத்தில் எல்லா கதாபாத்திரம் பேசும் வசனமும் வசனகர்த்தாவின் கருத்து என்பது போன்ற ஒரு மொக்கை புரிதலை வைத்துக்கொண்டு நீங்களும் சினிமாவில் இருப்பதாக வேறு சொல்லிக் கொள்ளுகிறீர்கள். கொடுமை :(]]]

    ஆஹா ஜோ.. நல்ல புரிதல்..!

    இப்படியே போனால் ஒரு திரைப்படத்தைக்கூட விமர்சனம் செய்ய முடியாது..!

    உள் அரசியலை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சொல்கின்ற திரைப்படங்கள்தான் தமிழ்ச் சினிமாவில் அதிகம்.. நாம்தான் அதனைக் கண்டு கொள்ள வேண்டும்.

    உன்னைப் போல் ஒருவனில் எத்தனை வசனங்கள்..? எத்தனை காட்சிகள்.. அத்தனையும் அந்த கேரக்டர்கள் மட்டுமே பேசுகின்றன என்றால் கமலுக்கு அங்கே என்ன வேலை..?

    ReplyDelete
  17. உண்மைத்தமிழன்,
    நாளைக்கு நீங்க ஒரு படத்துக்கு வசனம் எழுதினால் , ஹீரோ வில்லன் இருவருக்கும் நீங்கள் எழுதும் வசனங்கள் உங்கள் சொந்த கருத்து என எடுத்துக்கொள்ளணுமா ?

    இது தான் உங்க விமர்சனத்தின் இலக்கணமா? ஐயகோ!

    ReplyDelete
  18. நீங்கள் உண்மையாகவே "உண்மை தமிழன்தான்", நம் பழக்கமே இன்னொரு தமிழனை இழித்து பேசுவதுதானே ..
    உங்களக்கு படத்தை பார்த்து சிரிப்பு வரவில்லை என்றால் உங்களுக்கு தான் எதோ கோளாறு உள்ளது.. நானும் காசி இல் தான் படம் பார்த்தேன், அங்கே மக்கள் சிரித்தார்கள் . யாருக்கும் எரிச்சல் வந்ததாக தெரியவில்லை. உங்கள் தனி மனித வெறுப்பை காட்டிய ஒரு பதிவை பாராட்ட ஒரு கூட்டம் வேறு ?? கொடுமை சார் இது...

    ReplyDelete
  19. //அந்த நாத்திக பக்தி பாடலை நீக்கிவிட்டார்களாம்.. அந்தக் கண்றாவி போய்த் தொலையட்டும்..
    //
    இங்கே சிங்கப்பூரில் நீக்கப்படவில்லை ..காட்சியோடு மிகச்சரியாக பொருந்தி வந்த கவிதை அது .கவிதை முடிந்தவுடன் அரங்கமே கைதட்டியது .படத்தில் அதிகபட்ச கைதட்டல் இதற்குத் தான் .

    உண்மைத்தமிழன் , நீரெல்லாம் சினிமா எடுத்தால் எப்படி இருக்கும் என நினைத்துப்பார்த்தாலே நடுக்கமாக இருக்கிறது

    ReplyDelete
  20. //நல்லவேளை.. அந்த நாத்திக பக்தி பாடலை நீக்கிவிட்டார்களாம்.. அந்தக் கண்றாவி போய்த் தொலையட்டும்.. ஆனாலும் காவிக்காரர்களைத் தாக்குவதுபோல் இரண்டு இடங்களில் வசனங்களை வைத்திருக்கிறார் கமல். காவியுடன் இவருக்கென்ன மல்லுக்கட்டு..?//

    >>> நான் கமல் ரசிகனாக இருப்பினும் அவரிடம் பிடிக்காத விசயங்களில் இதுவும் ஒன்று. மதம் சார்ந்த பிரச்சனைகளை அணுகுவது என்றால் ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட மதத்தை தொடர்ந்து புண்படுத்தி சாதிக்கப்போவது ஒன்றுமில்லை.


    // மாதவனுடன் பேசிக் கொண்டே செல்கையில் கோவில் மணி ஒலிக்கிறது. அதனை ஒரு உத்வேக எடுத்துக்காட்டாக மாதவனுக்குச் சொல்கிறார் கமல். நாத்திகத்தை பரப்புவதுபோல் ஒரு பாடலை எடுத்து வைத்துக் கொண்டு, ஆத்திகத்தின் துணையோடு கதையை நகர்த்த முயல்வது முரண்பாடாகத் தெரிகிறதே. கமலுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை..?///

    >>> நாத்திகம் பேசும் கமல் போன்றவர்கள் ஆத்திக சாயல் இல்லாத படங்களில் நடிக்கும் துணிச்சல் இல்லாதவர்கள் என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகின்றனர்.

    //மன்மதன் அம்பு - நிச்சயமாக ஒரு முறை பார்க்கலாம்//

    >>> நிஜமாகத்தான் சொல்கிறீர்களா???????????????????? டிக்கட் எடுத்துவிட்டேன். மண்டை காய்கிறது.

    ReplyDelete
  21. //“சிட்டில சைட் அடிப்போம். வில்லேஜ்ல பெண் எடுப்போம்” என்ற மிகப் பெரிய தத்துவத்தை பொறித்திருக்கிறார் அண்ணன். இதன் மூலம் சிட்டி பெண்கள் பற்றிய கமலின் பார்வை என்ன என்பது விவாதத்திற்குரியது..//

    ஒரு படத்தில் எல்லா கதாபாத்திரம் பேசும் வசனமும் வசனகர்த்தாவின் கருத்து என்பது போன்ற ஒரு மொக்கை புரிதலை வைத்துக்கொண்டு நீங்களும் சினிமாவில் இருப்பதாக வேறு சொல்லிக்கொள்ளுகிறீர்கள் ..கொடுமை :(

    ReplyDelete
  22. ரசனையே இல்லாம படம் பாக்கப்போனதே தப்பு..... இதுல விமரிசனம் வேற......

    கிஸ் இல்லேனு வருத்தமாம்.. பாட்டு இழுக்குதாம்... சூர்யாவை கூப்பிட்டு ஓப்பன் பண்ண சொன்னாராம்... படத்துல நடிச்சதே மாதவனும், சங்கீதாவுந்தானாம்....

    விளக்கவுரையெல்லாம் வெளக்குமாறா இருக்கு.

    ReplyDelete
  23. Hi Unmai Tamilan,

    I was also dissapointed with the film.I expected it to be a full length comedy- which it wasn't. Even that was ok but he has tried to introduce comedy in the last half an hour in an otherwise serious film.comedy which doesn't evoke laughs.If he had found some other way to take the last 45 minutes the film would have atleast survived decently.The accident linking the two stories was an interesting thought in an otherwise dull movie.Why isnt anyone accepting the fact that the film is a flop.

    ReplyDelete
  24. அண்ணே படம் கை மாத்தி விடப் படலை.. தாத்தாவின் பிரஷர் காரணமாய் இவர்கள் குடும்ப படங்கள் எல்லாமே கொஞ்சம் அமுக்கி வாசிக்கப்படுகிற்து. ஜெமினி என்பது ஒன்று சன் குரூப் தனி.. இவர்கள் தனி என்பது அல்ல.. வெறும் பெயர் மாற்றம் தான் மற்றபடி மைனஸ்.. பப்ளிசிட்டி..

    ReplyDelete
  25. படம் நல்லா இல்லேன்னு சொல்லல.. ஆனா, நல்லா இருந்திருந்தா நல்லா இருக்கும்னு சொல்ல வந்தேன்...

    ReplyDelete
  26. ஆஹா...

    உண்மை தமிழன் அண்ணே... படம் மொக்கைனு சொல்லி, கமலோட நடிப்பு ஸோ ஸோன்னு சொல்லி, சூர்யாவால தான் ஓப்பனிங்னு சொல்லி...

    இப்படி சொல்லி சொல்லி...

    ஆண்டவர் க்ரூப்ஸின் வயித்தெரிச்சலை கொட்டிக்கொள்கிறீர்களே அய்யா??!!

    இவ்ளோ விலாவாரியா விமர்சனம் எழுதிட்டு கடைசில இப்படி எழுதி இருக்கீங்க

    //மன்மதன் அம்பு - நிச்சயமாக ஒரு முறை பார்க்கலாம். //

    அப்படியே எதுக்காக ஒரு முறை பார்க்கணும்னும் சொல்லி இருந்திருக்கலாம்...

    ReplyDelete
  27. முதல் பாதியில் லைவ் ரெகார்டிங் என்பதாலோ என்னவோ கொஞ்சம் வசனங்கள் தெளிவு இல்லாமல் இருந்தது .இரண்டாம் பாதி நகைச்சுவை காட்சிகள் பரவா இல்லை .கிரேசி மோகன் இல்லாத குறை தெரிந்தது .நீல வானம் பாடல் பிடித்தது .ஒரு முறை பார்க்கலாம் .சங்கீதாவின் மகனாக நடித்த அந்த குட்டி பைய்யன் பாத்திரம் எனக்கு மிகவும் பிடித்தது ,கலக்கி இருந்தான் :)

    ReplyDelete
  28. கமலுக்கு வயதாகி விட்டது. அது மட்டுமல்லாமல் கமல் படங்கள் என்றாலே ஒரு பெரிய எதிர்பார்ப்பு வந்து ஒட்டிக் கொள்வதும் வழக்கமாகி விட்டது. அதுவே ஏமாற்றத்துக்கு காரணமாகக் கூட இருக்கலாம்.

    ReplyDelete
  29. யோவ் வரிக்கு வரி அர்த்தம் பார்த்தா எந்த படத்துக்கு எவனாலையும் டயலாக் எழுத முடியாது....

    ReplyDelete
  30. http://jeeno.blogspot.com/2010/12/times-now.html

    ReplyDelete
  31. “வீரத்தின் அடுத்தக் கட்டம்தான் மன்னிப்பு.. வீரத்தின் உச்சக்கட்டம் என்ன தெரியுமா? அது அஹிம்சை”

    அதாவது அந்த 'மேட்டர்' பாடலை எதிர்த்துப் போராடிய இந்து அமைப்பினர் மன்னித்து விட்டிருக்க வேண்டும், அப்படியே வேண்டுமானால் ஒரு உண்ணாவிரதம் இருந்திருக்கலாம் என்கிறாரோ?

    ReplyDelete
  32. விமர்சனம் அருமை. ஒப்பனிங் சரியில்லை என்று கூறியிருக்கிறீர்கள், சரி.
    ஆனால் அதற்காக பேனர்கள் குறைவு, கட்-அவுட்க்கு பாலாபிஷேகம் பண்ணவில்லை என்பதெல்லாம் உங்களுடைய ரொம்ப அதிகமான எதிர்பார்ப்பு என்றே தோன்றுகிறது.

    லகுடபாண்டி

    lagudapaandi.blogspot.com

    ReplyDelete
  33. [[[ஜோ/Joe said...
    உண்மைத்தமிழன், நாளைக்கு நீங்க ஒரு படத்துக்கு வசனம் எழுதினால், ஹீரோ வில்லன் இருவருக்கும் நீங்கள் எழுதும் வசனங்கள் உங்கள் சொந்த கருத்து என எடுத்துக் கொள்ளணுமா?
    இதுதான் உங்க விமர்சனத்தின் இலக்கணமா? ஐயகோ!]]]

    ஊருக்கு உபதேசம் செஞ்சா என்னோட கருத்துன்னு நினைச்சுக்குங்க..!

    அப்படித்தானே இத்தனை வருஷமும் நினைச்சு எழுதிக்கிட்டிருக்கோம். பேசிக்கிட்டிருக்கோம்..?

    ReplyDelete
  34. [[[முத்தன் said...

    நீங்கள் உண்மையாகவே "உண்மைதமிழன்தான்", நம் பழக்கமே இன்னொரு தமிழனை இழித்து பேசுவதுதானே..

    உங்களக்கு படத்தை பார்த்து சிரிப்பு வரவில்லை என்றால் உங்களுக்குதான் எதோ கோளாறு உள்ளது. நானும் காசில்தான் படம் பார்த்தேன், அங்கே மக்கள் சிரித்தார்கள். யாருக்கும் எரிச்சல் வந்ததாக தெரியவில்லை. உங்கள் தனி மனித வெறுப்பை காட்டிய ஒரு பதிவை பாராட்ட ஒரு கூட்டம் வேறு?? கொடுமை சார் இது...]]]

    தம்பி முத்தன்..

    நான் என்னுடைய கருத்தைத்தான் சொல்லியிருக்கிறேன்..! முதல் பாதியில் நகைச்சுவை அவ்வளவாக இல்லை. பிற்பாதியில் அதுவும் கடைசி 20 நிமிடங்களில் மட்டுமே இருந்தது என்பது எனது கருத்து. அவ்வளவுதான்..!

    ReplyDelete
  35. [[[ஜோ/Joe said...

    //அந்த நாத்திக பக்தி பாடலை நீக்கிவிட்டார்களாம்.. அந்தக் கண்றாவி போய்த் தொலையட்டும்.//

    இங்கே சிங்கப்பூரில் நீக்கப்படவில்லை. காட்சியோடு மிகச் சரியாக பொருந்தி வந்த கவிதை அது. கவிதை முடிந்தவுடன் அரங்கமே கைதட்டியது. படத்தில் அதிகபட்ச கைதட்டல் இதற்குத்தான்.]]]

    சந்தோஷம்.. ரசிப்பவர்களும் இருக்கத்தானே செய்வார்கள்..!

    [[[உண்மைத்தமிழன், நீரெல்லாம் சினிமா எடுத்தால் எப்படி இருக்கும் என நினைத்துப் பார்த்தாலே நடுக்கமாக இருக்கிறது.]]]

    என்னுடைய படமாகத்தான் இருக்கும் ஜோ..!

    ReplyDelete
  36. [[[சிவகுமார் said...
    நான் கமல் ரசிகனாக இருப்பினும் அவரிடம் பிடிக்காத விசயங்களில் இதுவும் ஒன்று. மதம் சார்ந்த பிரச்சனைகளை அணுகுவது என்றால் ஒட்டு மொத்தமாக களத்தில் இறங்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட மதத்தை தொடர்ந்து புண்படுத்தி சாதிக்கப் போவது ஒன்றுமில்லை.]]

    குட் பாயிண்ட் சிவகுமார்..!

    [[[நாத்திகம் பேசும் கமல் போன்றவர்கள் ஆத்திக சாயல் இல்லாத படங்களில் நடிக்கும் துணிச்சல் இல்லாதவர்கள் என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகின்றனர்.]]]

    அதற்கு இதுவும் ஒரு உதாரணம்..!

    //மன்மதன் அம்பு - நிச்சயமாக ஒரு முறை பார்க்கலாம்//

    >>> நிஜமாகத்தான் சொல்கிறீர்களா???????????????????? டிக்கட் எடுத்துவிட்டேன். மண்டை காய்கிறது.]]]

    அவசியம் பார்க்கலாம்.!

    ReplyDelete
  37. [[[பிரியமுடன் பிரபு said...

    //“சிட்டில சைட் அடிப்போம். வில்லேஜ்ல பெண் எடுப்போம்” என்ற மிகப் பெரிய தத்துவத்தை பொறித்திருக்கிறார் அண்ணன். இதன் மூலம் சிட்டி பெண்கள் பற்றிய கமலின் பார்வை என்ன என்பது விவாதத்திற்குரியது..//

    ஒரு படத்தில் எல்லா கதாபாத்திரம் பேசும் வசனமும் வசனகர்த்தாவின் கருத்து என்பது போன்ற ஒரு மொக்கை புரிதலை வைத்துக்கொண்டு நீங்களும் சினிமாவில் இருப்பதாக வேறு சொல்லிக்கொள்ளுகிறீர்கள். கொடுமை :(]]]

    நல்லது.. இன்னும் எத்தனை பேர் கும்மப் போறீங்களோ.. தெரியலையே..?

    ReplyDelete
  38. [[[Dhana said...

    ரசனையே இல்லாம படம் பாக்கப் போனதே தப்பு. இதுல விமரிசனம் வேற. கிஸ் இல்லேனு வருத்தமாம். பாட்டு இழுக்குதாம். சூர்யாவை கூப்பிட்டு ஓப்பன் பண்ண சொன்னாராம். படத்துல நடிச்சதே மாதவனும், சங்கீதாவுந்தானாம்.
    விளக்கவுரையெல்லாம் வெளக்குமாறா இருக்கு.]]]

    நன்றி தனா..

    ReplyDelete
  39. [[[subramanian said...

    Hi Unmai Tamilan,

    I was also dissapointed with the film. I expected it to be a full length comedy-which it wasn't. Even that was ok but he has tried to introduce comedy in the last half an hour in an otherwise serious film. comedy which doesn't evoke laughs. If he had found some other way to take the last 45 minutes the film would have atleast survived decently. The accident linking the two stories was an interesting thought in an otherwise dull movie. Why isnt anyone accepting the fact that the film is a flop.]]]

    தீவிரமான கமல் ரசிகர்களாக இருப்பதால்தான்..!

    உங்களுடைய வெளிப்படையான விமர்சனத்திற்கு நன்றிகள் ஸார்..!

    ReplyDelete
  40. [[[Cable Sankar said...
    அண்ணே படம் கை மாத்தி விடப்படலை.. தாத்தாவின் பிரஷர் காரணமாய் இவர்கள் குடும்ப படங்கள் எல்லாமே கொஞ்சம் அமுக்கி வாசிக்கப்படுகிற்து.]]]

    படத்தின் மொத்த விநியோக உரிமையும் ஜெமினிக்கு விற்கப்பட்டிருக்கிறது என்று அறிந்தேன்..!

    [[[ஜெமினி என்பது ஒன்று சன் குரூப் தனி.. இவர்கள் தனி என்பது அல்ல.. வெறும் பெயர் மாற்றம்தான்]]

    எனக்கும் தெரியும்..! பொதுமக்களுக்கு இது தெரியாதே..! யாரோ ஒருவரிடம் கொடுத்துவிட்டார்கள் என்று அவர்கள் நினைத்துக் கொள்ளப் போகிறார்கள்..

    [[[மற்றபடி மைனஸ்.. பப்ளிசிட்டி]]]

    ஏன் என்றுதான் தெரியவில்லை..! இதற்கு அரசியல்தான் காரணமென்றால் கமலுக்கு இது பெரும் இழப்புதானே..?

    ReplyDelete
  41. [[[R.Gopi said...
    படம் நல்லா இல்லேன்னு சொல்லல. ஆனா, நல்லா இருந்திருந்தா நல்லா இருக்கும்னு சொல்ல வந்தேன்.]]]

    ஹா.. ஹா.. ஹா... கமலுக்கே ஆப்பா..?

    ReplyDelete
  42. [[[R.Gopi said...

    ஆஹா... உண்மை தமிழன் அண்ணே. படம் மொக்கைனு சொல்லி, கமலோட நடிப்பு ஸோ ஸோன்னு சொல்லி, சூர்யாவாலதான் ஓப்பனிங்னு சொல்லி. இப்படி சொல்லி சொல்லி...

    ஆண்டவர் க்ரூப்ஸின் வயித்தெரிச்சலை கொட்டிக் கொள்கிறீர்களே அய்யா??!!

    இவ்ளோ விலாவாரியா விமர்சனம் எழுதிட்டு கடைசில இப்படி எழுதி இருக்கீங்க.

    //மன்மதன் அம்பு - நிச்சயமாக ஒரு முறை பார்க்கலாம். //

    அப்படியே எதுக்காக ஒரு முறை பார்க்கணும்னும் சொல்லி இருந்திருக்கலாம்...]]]

    டீஸண்ட்டான படமாக உள்ளது. அதனால்தான்..! குடும்பத்துடன் பார்க்கலாமே..?

    ReplyDelete
  43. [[[dr suneel krishnan said...

    முதல் பாதியில் லைவ் ரெகார்டிங் என்பதாலோ என்னவோ கொஞ்சம் வசனங்கள் தெளிவு இல்லாமல் இருந்தது. இரண்டாம் பாதி நகைச்சுவை காட்சிகள் பரவா இல்லை. கிரேசி மோகன் இல்லாத குறை தெரிந்தது. நீல வானம் பாடல் பிடித்தது. ஒரு முறை பார்க்கலாம். சங்கீதாவின் மகனாக நடித்த அந்த குட்டி பைய்யன் பாத்திரம் எனக்கு மிகவும் பிடித்தது, கலக்கி இருந்தான்:)

    நன்றி சுனில் ஸார்..!

    ReplyDelete
  44. [[[ஸ்ரீராம். said...
    கமலுக்கு வயதாகி விட்டது. அது மட்டுமல்லாமல் கமல் படங்கள் என்றாலே ஒரு பெரிய எதிர்பார்ப்பு வந்து ஒட்டிக் கொள்வதும் வழக்கமாகி விட்டது. அதுவே ஏமாற்றத்துக்கு காரணமாகக்கூட இருக்கலாம்.]]]

    ம்.. லாம்.. கலாம்.. க்கலாம்.. ருக்கலாம்.. இருக்கலாம்..!

    ReplyDelete
  45. [[[ஜாக்கி சேகர் said...
    யோவ் வரிக்கு வரி அர்த்தம் பார்த்தா எந்த படத்துக்கும் எவனாலையும் டயலாக் எழுத முடியாது.]]]

    சரி..!

    ReplyDelete
  46. [[[ConverZ stupidity said...

    http://jeeno.blogspot.com/2010/12/times-now.html]]]

    தகவலுக்கு நன்றிங்கோ ஸார்..!

    ReplyDelete
  47. [[[Arun Ambie said...

    “வீரத்தின் அடுத்தக் கட்டம்தான் மன்னிப்பு. வீரத்தின் உச்சக்கட்டம் என்ன தெரியுமா? அது அஹிம்சை”

    அதாவது அந்த 'மேட்டர்' பாடலை எதிர்த்துப் போராடிய இந்து அமைப்பினர் மன்னித்து விட்டிருக்க வேண்டும், அப்படியே வேண்டுமானால் ஒரு உண்ணாவிரதம் இருந்திருக்கலாம் என்கிறாரோ?]]]

    ஹி.. ஹி.. எப்படி வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் ஊகித்துக் கொள்ளலாம்..!

    ReplyDelete
  48. [[[லகுட பாண்டி said...
    விமர்சனம் அருமை. ஒப்பனிங் சரியில்லை என்று கூறியிருக்கிறீர்கள். சரி.
    ஆனால் அதற்காக பேனர்கள் குறைவு, கட்-அவுட்க்கு பாலாபிஷேகம் பண்ணவில்லை என்பதெல்லாம் உங்களுடைய ரொம்ப அதிகமான எதிர்பார்ப்பு என்றே தோன்றுகிறது.

    லகுடபாண்டி

    lagudapaandi.blogspot.com]]]

    பாலாபிஷேகம் பற்றிக் குறிப்பிட்டவில்லை. அது எனக்குப் பிடிக்காது.. தற்போதைக்கு ஒரு தமிழ்ச் சினிமாவுக்கு விளம்பரம்தான் முதுகெலும்பு. அது இல்லையேல் எவ்வளவுதான் நல்ல படமாக எடுத்திருந்தாலும் மக்கள் முன் போய்ச் சேராது..

    அந்த ஆதங்கத்தில் சொன்னதுதான் இது..!

    ReplyDelete
  49. ஏம்ப்பா கண்ணுகளா..?

    இதுக்கெதுக்குப்பா மைனஸ் ஓட்டுக் குத்துனீங்க..?

    நான் என்ன பார்க்கவே கூடாத படம்னா சொல்லியிருக்கேன்..!

    எனக்கும் கமல் பிடிச்சவர்தான் சாமிகளா..!

    ReplyDelete
  50. என்னங்கப்பா இது..? எல்லா படத்தையும் என்னோட பார்வைலதான் எழுதுறேன். அப்பல்லாம் யாருக்கும் இவ்ளோ கோபம் வரலை.. இப்போ இந்தப் படத்துக்கு அல்லாரும் இப்படி பொங்கி எழுறீங்களே..?

    ReplyDelete
  51. //மாதவனுடன் பேசிக் கொண்டே செல்கையில் கோவில் மணி ஒலிக்கிறது. அதனை ஒரு உத்வேக எடுத்துக்காட்டாக மாதவனுக்குச் சொல்கிறார் கமல்//

    என்னப்பூ, இவர் இப்பதான் இதை முதல்முறயா செய்ற மாதிரி சொல்றீங்க. வசூல்ராஜா படத்தில் அந்த paralyse patientடிடம் சூரியனை பார்த்து ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றீ அப்டீனு சொல்லியிருப்பார். அவரின் வேலயே ரஜினி அரசியல் entry பாவ்லா கட்டுவது போல் இவர் நாத்திக பாவ்லா. ஆனால் இவர் பெற்ற பெண் நெற்றியில் குங்குமம் வைத்தால் அதை அழிக்கமாட்டாராம் ஏன்னா அது பாசமாம். ஊர்ல இருக்கிறவன் கும்பிடறது பாவமாம்.

    ReplyDelete
  52. நேர்மையான விமர்சனம்

    கமல் எப்போதோ ஜெய்கணேஷ், டெல்லிகணேஷ் குரூப்போடு சீரியலுக்கு வந்திருக்க வேண்டியவர்... அல்லது காணாமல் போயிருப்பார்...

    ஆனால் ரஜினி என்கிற பெயர் முதல் இடத்தில் இருந்து கொண்டிருப்பதால்தான் இரண்டாவது இடத்தை மக்கள் இவருக்கு அளித்திருக்கிறார்கள்....

    எம்.ஜி.யார் திரையுலைகை விட்டு வெளியேறிய பின்னர் சிவாஜியால் பெரிய அளவில் தாக்கு பிடிக்க முடியவில்லை.... அதே க‌தைதான் க‌ம‌லுக்கும் ஆகியிருக்கும்... ர‌ஜினி ஃபீல்டில் இருக்கும் வ‌ரைதான் க‌ம‌லுக்கு ம‌திப்பு.....ரஜினிக்கு மாஸ் கமலால் இல்லை... ஏனெனில் அவர் முதலிடத்தில் இருப்பதால்... ஆனால் கமல் என்கிற பெயர் தாக்கு பிடிப்பது ரஜினி என்கிற பெயரால்....

    விஜ‌ய், அஜித்....
    சிம்பு, த‌னுஷ்.... என்று ம‌க்க‌ள் ம‌ன‌தில் இருக்கும் வ‌ரை ஒருவ‌ரால்தான் ம‌ற்றொருவ‌ர்....

    ஏன்னா எந்த‌ விளையாட்டுமே மினிம‌ம் ரெண்டு பேராவ‌து ஆட‌னும்.... ஒருவ‌ர் ம‌ட்டும் ஆட‌ முடியாது.....

    ReplyDelete
  53. நேர்மையான விமர்சனம்

    கமல் எப்போதோ ஜெய்கணேஷ், டெல்லிகணேஷ் குரூப்போடு சீரியலுக்கு வந்திருக்க வேண்டியவர்... அல்லது காணாமல் போயிருப்பார்...

    ஆனால் ரஜினி என்கிற பெயர் முதல் இடத்தில் இருந்து கொண்டிருப்பதால்தான் இரண்டாவது இடத்தை மக்கள் இவருக்கு அளித்திருக்கிறார்கள்....

    எம்.ஜி.யார் திரையுலைகை விட்டு வெளியேறிய பின்னர் சிவாஜியால் பெரிய அளவில் தாக்கு பிடிக்க முடியவில்லை.... அதே க‌தைதான் க‌ம‌லுக்கும் ஆகியிருக்கும்... ர‌ஜினி ஃபீல்டில் இருக்கும் வ‌ரைதான் க‌ம‌லுக்கு ம‌திப்பு.....ரஜினிக்கு மாஸ் கமலால் இல்லை... ஏனெனில் அவர் முதலிடத்தில் இருப்பதால்... ஆனால் கமல் என்கிற பெயர் தாக்கு பிடிப்பது ரஜினி என்கிற பெயரால்....

    விஜ‌ய், அஜித்....
    சிம்பு, த‌னுஷ்.... என்று ம‌க்க‌ள் ம‌ன‌தில் இருக்கும் வ‌ரை ஒருவ‌ரால்தான் ம‌ற்றொருவ‌ர்....

    ஏன்னா எந்த‌ விளையாட்டுமே மினிம‌ம் ரெண்டு பேராவ‌து ஆட‌னும்.... ஒருவ‌ர் ம‌ட்டும் ஆட‌ முடியாது.....

    ReplyDelete
  54. ஜோ,
    இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் பாடல்கள் - கமலஹாசன்.

    உத: இதை எப்படி மிஸ் செய்தீர்கள்?

    ReplyDelete
  55. [[[ராஜரத்தினம் said...

    //மாதவனுடன் பேசிக் கொண்டே செல்கையில் கோவில் மணி ஒலிக்கிறது. அதனை ஒரு உத்வேக எடுத்துக்காட்டாக மாதவனுக்குச் சொல்கிறார் கமல்//

    என்னப்பூ, இவர் இப்பதான் இதை முதல்முறயா செய்ற மாதிரி சொல்றீங்க. வசூல்ராஜா படத்தில் அந்த paralyse patientடிடம் சூரியனை பார்த்து ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றீ அப்டீனு சொல்லியிருப்பார். அவரின் வேலயே ரஜினி அரசியல் entry பாவ்லா கட்டுவது போல் இவர் நாத்திக பாவ்லா. ஆனால் இவர் பெற்ற பெண் நெற்றியில் குங்குமம் வைத்தால் அதை அழிக்க மாட்டாராம் ஏன்னா அது பாசமாம். ஊர்ல இருக்கிறவன் கும்பிடறது பாவமாம்.]]]

    என்னத்தச் சொல்றது..?

    ReplyDelete
  56. [[[sivakasi maappillai said...

    நேர்மையான விமர்சனம்

    கமல் எப்போதோ ஜெய்கணேஷ், டெல்லிகணேஷ் குரூப்போடு சீரியலுக்கு வந்திருக்க வேண்டியவர்... அல்லது காணாமல் போயிருப்பார்...]]]

    இக்கூற்றை வன்மையாக எதிர்க்கிறேன். அவரது நடிப்பார்வம் அளவு கடந்தது. அதனை அவர் தற்காலிகமாக முறையாகப் பயன்படுத்தாமல் இருக்கிறார் என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு..!

    [[[ஆனால் ரஜினி என்கிற பெயர் முதல் இடத்தில் இருந்து கொண்டிருப்பதால்தான் இரண்டாவது இடத்தை மக்கள் இவருக்கு அளித்திருக்கிறார்கள்.]]]

    இல்லை.. ரஜினிக்கு பிறகு கமல்தான்.. கமலுக்குப் பின்புதான் மற்றவர்கள்..!

    [[[எம்.ஜி.யார் திரையுலைகை விட்டு வெளியேறிய பின்னர் சிவாஜியால் பெரிய அளவில் தாக்கு பிடிக்க முடியவில்லை.]]]

    அப்போது தலைமுறைகள் மாறத் தொடங்கிய காலம். அதனால்தான் அந்த மாற்றம் நிகழ்ந்தது. இது நடக்க வேண்டியதுதானே..?

    [[[அதே க‌தைதான் க‌ம‌லுக்கும் ஆகியிருக்கும். ர‌ஜினி ஃபீல்டில் இருக்கும்வ‌ரைதான் க‌ம‌லுக்கு ம‌திப்பு. ரஜினிக்கு மாஸ் கமலால் இல்லை. ஏனெனில் அவர் முதலிடத்தில் இருப்பதால். ஆனால் கமல் என்கிற பெயர் தாக்கு பிடிப்பது ரஜினி என்கிற பெயரால்.]]]

    இல்லை.. ரஜினியின் மாஸ் செல்வாக்கோடு கமலஹாசன் ஈடு கட்டுவது தனது நடிப்பை வைத்துத்தான்..!

    [[[விஜ‌ய், அஜித், சிம்பு, த‌னுஷ். என்று ம‌க்க‌ள் ம‌ன‌தில் இருக்கும் வ‌ரை ஒருவ‌ரால்தான் ம‌ற்றொருவ‌ர்.
    ஏன்னா எந்த‌ விளையாட்டுமே மினிம‌ம் ரெண்டு பேராவ‌து ஆட‌னும். ஒருவ‌ர் ம‌ட்டும் ஆட‌ முடியாது.]]]

    போட்டிகள் தேவைதான்.. இருந்தாலும் போட்டியே இல்லாவிட்டாலும் தமிழ்நாட்டில் சினிமாக்கள் ஓடும்..!

    ReplyDelete
  57. [[[Sivakumar said...

    ஜோ, இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் பாடல்கள் - கமலஹாசன்.

    உத: இதை எப்படி மிஸ் செய்தீர்கள்?]]]

    இல்லையே.. பதிவிலேயே சொல்லியிருக்கேனே..?

    ReplyDelete
  58. :)

    innum paakala.. ungaloda enthiran pathina review padichen...sema kaachu kaachirundheenga...he he..naan thalaivar fan...so comment pannala...

    manmadhan ambu indha week paathutu varen...super review...( indha review mattum illa...1year aa padichutu irukken)

    1st naan padicha ungaloda padhivu..

    "Rajiniyai avamana paduthiyadhu avaradhu rasigargala?? cable sankara??attakasam :)

    ReplyDelete
  59. உண்மைத்தமிழன் அண்ணாச்சி!

    * மொதல்ல எந்திரன் 150 கோடிப்படம். மன்மதன் அம்புவை அதோட நீங்க எப்படி ஒப்பிடலாம்?

    * படத்தை மட்டும் விமர்சிக்காமல் ஏன் தயாநிதி தயாரிப்பு, அதை ஜெமினிக்கு வித்தது அது இதுனு இறங்குறீங்க?

    * கமல் நாத்திகரென்பதால் அவர் மேல் உள்ள வெருப்பு உங்க விமர்சனத்தின் "நேர்மையை" பாதிக்குது. அப்படி பாதிப்பது சரியா?

    ReplyDelete
  60. ***Blogger ஜோ/Joe said...

    உண்மைத்தமிழன்,
    நாளைக்கு நீங்க ஒரு படத்துக்கு வசனம் எழுதினால் , ஹீரோ வில்லன் இருவருக்கும் நீங்கள் எழுதும் வசனங்கள் உங்கள் சொந்த கருத்து என எடுத்துக்கொள்ளணுமா ?***

    நாத்திகம், கமல் சொந்தக்கருத்துனு அவரே சொல்றாரு!

    ***இது தான் உங்க விமர்சனத்தின் இலக்கணமா? ஐயகோ!**

    அவருக்கு தெரிஞ்சதை அவர் தலத்தில் எழுதுறாரு. நம்ம ஒரு ஜால்ரா விமர்சனம் நம்ம தளத்தில் எழுதினால் யாரு கேக்கப்போறா? :)))

    எல்லாருமே கமலுக்கு சொம்படிக்கனுமா என்ன?

    ReplyDelete
  61. [[[Srinivas said...

    :) innum paakala.. ungaloda enthiran pathina review padichen. sema kaachu kaachirundheenga. he he. naan thalaivar fan. so comment pannala.

    manmadhan ambu indha week paathutu varen. super review...(indha review mattum illa. 1 year aa padichutu irukken)

    1st naan padicha ungaloda padhivu..
    "Rajiniyai avamana paduthiyadhu avaradhu rasigargala?? cable sankara??attakasam :)]]]

    மிக்க நன்றிகள் நண்பரே.. உங்களை மாதிரியான அன்பர்களின் உற்சாகத்தினால்தான் இந்த வலையுலகில் இன்னமும் நாங்கள் இயங்கி வருகிறோம்..!

    ReplyDelete
  62. [[[வருண் said...

    உண்மைத்தமிழன் அண்ணாச்சி!

    * மொதல்ல எந்திரன் 150 கோடி படம். மன்மதன் அம்புவை அதோட நீங்க எப்படி ஒப்பிடலாம்?]]]

    தங்களுடைய முதல் வருகைக்கு எனது நன்றிகள் வருண்..

    ரசிகர் மன்றங்கள் போதுமான அளவு விளம்பரங்கள் செய்யவில்லையே என்று..! இதனை ஒப்பிட்டுத்தானே ஆக வேண்டும்..!

    [[[* படத்தை மட்டும் விமர்சிக்காமல் ஏன் தயாநிதி தயாரிப்பு, அதை ஜெமினிக்கு வித்தது அது இதுனு இறங்குறீங்க?]]]

    படம் பற்றிய விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதில் என்ன தவறு..? எனது நிறைய விமர்சனங்களில் இதைச் செய்திருக்கேனே..?

    [[[* கமல் நாத்திகரென்பதால் அவர் மேல் உள்ள வெருப்பு உங்க விமர்சனத்தின் "நேர்மையை" பாதிக்குது. அப்படி பாதிப்பது சரியா?]]]

    அப்படியல்ல. அவருடைய ரசிகர்களாக பக்திமான்களும் இருக்கிறார்கள் நான் உட்பட..! அவர் அதனைப் புரிந்து கொள்ளவில்லையே என்பதால்தான் அதனைக் குறிப்பிட்டேன்..!

    ReplyDelete
  63. [[[வருண் said...

    அவருக்கு தெரிஞ்சதை அவர் தலத்தில் எழுதுறாரு. நம்ம ஒரு ஜால்ரா விமர்சனம் நம்ம தளத்தில் எழுதினால் யாரு கேக்கப் போறா?:)))
    எல்லாருமே கமலுக்கு சொம்படிக்கனுமா என்ன?]]]

    நியாயமான கேள்வி.. நன்றி வருண்..!

    ReplyDelete
  64. தலைவா....

    இவ்ளோ எழுதின நீங்க நம்ம கமல்தாசன் பாடிய (!!??) “நீ........ள ஓலம்” பாட்டு பத்தி எதுவுமே சொல்லலியே!!?

    ReplyDelete
  65. //அத்தோடு கூடவே இன்னொரு விஷயம்.. படத்தின் ஒலிப்பதிவு ஸ்பாட் ரெக்கார்டிங் என்கிறார்கள். கடித்துத் துப்புவது போன்ற வசன உச்சரிப்புகளால் பல வசனங்கள் புரியாமலேயே போகின்றன.//

    இதை பத்தி ஏன் யாருமே அலட்டிக்கலைனு தெரியல. படத்துல இது ஒரு பெரிய குறை. நிறைய வசனம் காதுல விழவேயில்லை.

    ReplyDelete
  66. [[[R.Gopi said...
    தலைவா.... இவ்ளோ எழுதின நீங்க நம்ம கமல்தாசன் பாடிய(!!??) “நீ........ள ஓலம்” பாட்டு பத்தி எதுவுமே சொல்லலியே!!?]]]

    சொல்லியிருக்கேனே.. நல்லாப் பாருங்க கோபி..!

    ReplyDelete
  67. [[[சீனு said...

    //அத்தோடு கூடவே இன்னொரு விஷயம். படத்தின் ஒலிப்பதிவு ஸ்பாட் ரெக்கார்டிங் என்கிறார்கள். கடித்துத் துப்புவது போன்ற வசன உச்சரிப்புகளால் பல வசனங்கள் புரியாமலேயே போகின்றன.//

    இதை பத்தி ஏன் யாருமே அலட்டிக்கலைனு தெரியல. படத்துல இது ஒரு பெரிய குறை. நிறைய வசனம் காதுல விழவேயில்லை.]]]

    அதே.. அதேதான் குறை.. கமல் ரசிகர்கள் இதனை அண்ணனின் காதில் ஓதிவிடும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்..!

    ReplyDelete
  68. //படத்தின் பாடல்களும் பெரும் குறைதான். நீலவானம் பாடலுக்கு ஏன் அப்படியொரு இழுப்பூபூபூபூபூபூபூபூபூபூபூபூபூபூபூபூபூபூபூபூபூ..? பாடல் காட்சியில் அந்த “நீ”-க்கு கமல் அண்ணன் தனது வாயை இழுத்து வைத்துப் பாடுவதைப் பார்த்தால் “ஏன் இவ்ளோ கஷ்டப்படணும்..? எளிதாகப் புரிவதுபோல் வேறு யாரிடமாவது கொடுத்து எழுத வைத்திருக்கலாமே..?” என்றுதான் சொல்லத் தோன்றுகிறது..//
    அண்ணாச்சி - இந்தப் பாடலின் சிறப்பு தெரிந்துதான் சொன்னீர்களா? கமெண்ட்டைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லையே. மொத்தப் பாடலும் (கமல் உள்பட) reverse-ல் எடுத்திருக்கும்போது கமலின் lip movement பாடல் வரிகளுக்கு மிகப் பொருந்திப் போயிருப்பதைக் கவனித்தீர்களா? அந்தப் பாடலை reverse-ல் பாடவிட்டு வரும் வரிகளுக்கு வாயசைத்திருப்பார் - மிக நன்றாக வந்திருக்கிறது. ஆனால் நீங்கள் புரிந்துகொள்ளாமல் திட்டியிருப்பது போலத் தெரிகிறது. புரிந்தேதான் சொல்லியிருக்கிறேன் என்று சொன்னால் ஒன்றும் சொல்வதற்கில்லை - மன்னிக்கவும்.

    ReplyDelete
  69. VIMARSANAM PADATHAI PATRI ALLA ......... KAMALAI PATRI THAN IRUKIRATHU..

    ReplyDelete
  70. VIMARSANATHAI PARTHAL THANGALUKU KAMALAI PIDIKATHO........... ORUVARAI PIDIKAVILLAI ENDRAL AVAR PADATHAI
    EPPADI VENDUMANALUM VIMARSANAM SEYYALAMA???????????????????

    ReplyDelete
  71. //“செருப்பாக இருக்கவும் தயார்..” என்று அந்த ஈழத் தமிழர் தனது அபிமான நடிகையான திரிஷாவிடம் சொல்வது போன்ற அந்தக் காட்சி நிச்சயம் ஈழத் தமிழர்களைப் புண்படுத்தும் என்றே நினைக்கிறேன். //

    நீங்கள் சரியான ஒரு அப்பாவி தான்.

    ReplyDelete
  72. Sariyana mokkai padam thanney... !
    athum climax...sssh aabbba!

    ReplyDelete