Pages

Tuesday, December 21, 2010

ஆ.ராசாவின் தலித் கேடயத்தால் ஏமாற்றப்பட்ட தலித் மக்கள்..!

21-12-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் வெடித்ததில் இருந்தே ராசாவைக் காப்பாற்றுவதற்காக கலைஞர் பயன்படுத்தும் வார்த்தை ராசா ஒரு தலித் என்பதால்தான் அவரைக் குறி வைத்து அனைவரும் தாக்குகிறார்கள் என்பதுதான்..!

கலைஞர் மட்டுமல்ல.. அவருடைய அடிப்பொடிகள்கூட இதே வார்த்தையைத்தான் பயன்படுத்தி வருகின்றன. ஊழல் செய்கின்ற அரசியல்வியாதிகள் யாரும் ஜாதியை வைத்து பணத்தைக் கொள்ளையடிப்பதில்லை. தங்களுக்கு இருக்கின்ற திறமையை வைத்துதான் செய்கின்றனர். இதற்கும் ஜாதிக்கும் யாதொரு தொடர்புமில்லை என்பது அவர்களுக்கே தெரியுமென்றாலும் கட்சிப் பாசம் அவர்களைக் கண்ணை மறைக்கிறது.

இவர்கள் தலித் தலித் தலித் என்று கூக்குரலிட்டு ராசாவைக் காப்பாற்ற முனைந்தாலும், இதே தலித் ராசா, தனது பெரம்பலூர் தொகுதியைச் சேர்ந்த தலித் விவசாய மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றி அவர்களிடமிருந்து நிலங்களை ஏமாற்றி பிடுங்கியிருக்கிறார் என்பது இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது..!


பெரம்பலூரில் அமையவுள்ள எம்.ஆர்.எப்., டயர் தொழிற்சாலைக்கு பொதுமக்களிடம் நிலம் ஆர்ஜிதம் செய்து வழங்கியதில்தான் அந்தப் பகுதி தலித் விவசாய மக்களை பெருமளவுக்கு ஏமாற்றியிருக்கிறார் தலித் அமைச்சரான ராசா.

60 தலித் விவசாய மக்களை உருட்டிப் புரட்டி அவர்களுடைய நிலங்கள் அனைத்தும் தலித் அமைச்சர் ராசாவின் குடும்ப நிறுவனமான கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்தால், குறைந்த விலைக்கு வாங்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்ட மேம்பாட்டுக்காகவே, தான் எம்.ஆர்.எப்., டயர் தொழிற்சாலையை பெரம்பலூர் தொகுதிக்குள் கொண்டு வந்ததாகப் பெருமையுடன் கூறிக் கொண்டார் தலித் அமைச்சரான ராசா. ஆனால் உண்மையில் தனது குடும்பத்தின் வளத்தைப் பெருக்கிக் கொள்ளவே திட்டமிட்டு இதனைச் செய்திருப்பதாக இப்போதுதான் தெரிய வந்துள்ளது.

இந்த எம்.ஆர்.எப். நிறுவனத்துக்காக நாரணமங்கலம் என்ற இடத்தில், அந்த கிராம மக்கள் 156 பேரிடம் 600 ஏக்கர் நிலம் "கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ்' என்ற நிறுவனத்தின் ஏஜன்டுகளான செந்தில் முருகன், செல்வராஜ் ஆகியோர் மூலம் 2007-08ம் ஆண்டுகளில் வாங்கப்பட்டது.

இந்த கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனம் என்பது ராசாவின் "நெருங்கிய' நண்பர்  சாதிக் என்பவரை எம்.டி.யாகவும், ராசாவின் அண்ணன் கலியபெருமாள், ராசாவின் அக்கா கமலா உள்ளிட்ட சிலரை இயக்குனர்களாக கொண்ட நிறுவனம்.

முதலில் தொழிற்சாலை அமைக்க நிலம் கொடுப்பதற்கு, நாரணமங்கலத்தை சேர்ந்த செந்தில்முருகன் என்பவர் மக்களை திரட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.  அவரை சாதிக் சரிக்கட்டிய பின்பு, பின்னர் செந்தில் முருகனே முன்னின்று நாரணமங்கலம் கிராம மக்களை பல்வேறு வகைகளில் மிரட்டியும், குறைந்த விலை கொடுத்தும் (ஏக்கருக்கு 65 ஆயிரம் முதல் 3.5 லட்ச ரூபாய்வரை) நிலத்தை வாங்கி கொடுத்துள்ளார்.

அப்போது நிலம் கொடுக்கும் குடும்பத்தில் ஒருவருக்கு எம்.ஆர்.எப்., நிறுவனத்தில் கண்டிப்பாக வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று மாவட்ட நிர்வாகத்தாலும், நிலம் வாங்கிய ஏஜெண்டுகளாலும் உறுதிமொழி கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு 60 பேரிடம் நிலம் வாங்கப்பட்டுள்ளது.

விவசாயத்தை பெரிதும் நம்பியிருந்த பலர் விவசாய நிலத்தை கொடுக்க மறுத்துள்ளனர். அவர்களை மாவட்ட நிர்வாகம், அரசு அதிகாரிகள், போலீஸ் என அரசு இயந்திரத்தை முழுமையாகவும், முறைகேடாக பயன்படுத்தியும், தொடர்ந்து மிரட்டல் விடுத்தும் செந்தில் முருகன், ஹபிபுல்லா, செல்வராஜ் ஆகியோர் வாங்கியுள்ளனர். வாங்கிய பின்பு குறிப்பிட்ட ஏக்கர் நிலங்களை கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்திற்கு கை மாற்றி கொடுத்துள்ளனர்.

இதற்காக இவர்கள் சாதிக்கிடம் ஏக்கருக்கு ஆறு லட்ச ரூபாய் வாங்கியுள்ளனர். சாதிக்கோ இவர்களிடம் வாங்கிய நிலத்தை எம்.ஆர்.எப்., நிறுவனத்திடம் ஒரு ஏக்கருக்கு 15 முதல் 18 லட்ச ரூபாய்வரை விற்பனை செய்துள்ளார். அதுவும் 435 ஏக்கர் நிலம் மட்டுமே அந்நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதியுள்ள 165 ஏக்கர் நிலம் இன்னமும் செந்தில் முருகன், செல்வராஜ் ஆகியோர் பெயர்களில்தான் உள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.

எம்.ஆர்.எப்., நிறுவனத்துக்காக நாரணமங்கலம் கிராம மக்களிடம் நிலம் வாங்கி கொடுத்தது மூலம் சாதாரண நிலையில் இருந்த செந்தில் முருகனும், செல்வராஜும் தற்போது கோடீஸ்வரர்களாக பெரம்பலூரில் வலம் வருகின்றனர்.

தங்களிடம் நிலம் வாங்கியவர்கள் திடீரென பணக்காரர்களாக வலம் வருவதை கண்ட நாரணமங்கலம் கிராம மக்கள், இது குறித்து விசாரித்தபோதுதான், “தங்களை மிரட்டி குறைந்த விலைக்கு வாங்கிய நிலத்தில் 435 ஏக்கரை எம்.ஆர்.எப்., நிறுவனத்துக்கு, ஐந்து முதல் 25 மடங்குவரை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது.

இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால், நிலம் கொடுத்தவர்களில் 60 பேர் விவசாயத்தை மட்டும் நம்பியிருந்த ஏழை தலித் மக்கள். அவர்களின் அறியாமையை பயன்படுத்தியும், அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் மூலம் மிரட்டியும், ஒரு ஏக்கர் நிலத்தை 65 ஆயிரம் முதல் 2.50 லட்ச ரூபாய் வரை குறைந்த விலைக்கு வாங்கியுள்ளனர். இதற்கு முன்னாள் அமைச்சர் ராஜாவின் அதிகாரம் முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

எம்.ஆர்.எப்., நிறுவனம், தங்களது நிலத்தை அதிக விலை கொடுத்து வாங்கியதை அறிந்த நாரணமங்கலம் கிராம மக்கள், தமிழக விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்கங்களின் உதவியோடு, மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இப்படி நிலம் வாங்கிய விஷயத்தில், "தலித்' அமைச்சரான ராசா, தான் சார்ந்த தலித் மக்களுக்கே துரோகம் இழைத்துள்ளார் என்று, அவரது தலித் சமுதாய மக்களே  குற்றம் சாட்டுகின்றனர்.

ரமேஷ் என்னும் தலித் விவசாயி கூறுகையில், “என்னிடமிருந்த 5.79 ஏக்கர் நிலத்தை 4.70 ஏக்கர் நிலம்தான் என்று மிரட்டி வாங்கி கொண்டனர். ஏக்கருக்கு 2.50 லட்ச ரூபாய் மட்டுமே கொடுத்தனர். ஆனால், அவர்கள் டயர் கம்பெனிக்கு, ஏக்கர் நிலத்தை 15 முதல் 18 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்து கொள்ளை லாபம் சம்பாதித்து விட்டனர். நிலத்தை விற்க முடியாது என்று நான் சொன்ன போது, வி.ஏ.ஓ., முதல் ஆர்.டி.ஓ.வரையிலான அதிகாரிகள் என்னை மிரட்டி வலுக்கட்டாயமாக நிலத்தை எழுதி வாங்கி கொண்டனர். ஆனால், சொன்னபடி டயர் கம்பெனியில் வேலையும் வாங்கி தரவில்லை.” என்கிறார்.

பாப்பா என்னும் தலித் பெண்மணி, “வேலை தருவோம்னு சொன்னாங்க. அதை நம்பி எங்களிடம் இருந்த 1.90 ஏக்கர் விவசாய நிலத்தை ஏக்கர் 75 ஆயிரம் ரூபாய்க்கு கொடுத்தோம். நிலத்தை வித்த பணமும் செலவாகி விட்டது; பிழைக்க வழியில்லை. எங்களுக்கு உரிய நியாயம் கிடைக்கணும்.” என்று இப்போது அழுகிறார்.

தலித் விவசாயியான தங்கராஜ், “ என்னிடம் இருந்த ஆறு ஏக்கர் நிலத்துக்கு ஏக்கருக்கு ஐந்து லட்ச ரூபாய்னு விலைபேசி, பத்திரத்தில் கையெழுத்து போட்டவுடன், ஏக்கருக்கு 2.50 லட்ச ரூபாய்தான் கொடுத்தாங்க. பணம் குறையுதேன்னு கேட்டதுக்கு செந்தில் முருகன் மிரட்டினார்.  தலித் என்பதால்தான் அவருக்கு அமைச்சர் பதவியே கிடைச்சது. அதை பயன்படுத்தி, எங்களை போன்ற தலித் மக்களை ஏமாற்றி நிலங்களை அபகரிக்க துணைபோனவரை என்ன சொல்றதுன்னே தெரியல. இருந்த நிலம் பறிபோனதால, கூலி வேலைக்கு போய் கஷ்டப்படுகிறேன்.” என்கிறார்.

பாப்பண்ணன் என்னும் தலித் விவசாயி, “முதல்ல அரசுதான் நிலத்தை வாங்கி கொடுப்பாங்கன்னு சொன்னாங்க. ஆனால், சாதிக் மூலமாக நிலத்தை வாங்கி கொடுக்க அரசு அதிகாரிகளும், அப்போதிருந்த கலெக்டரும் எப்படி அனுமதிச்சாங்கன்னு தெரியவில்லை. என்னிடமிருந்த 2.5 ஏக்கர் நிலத்துக்கு ஏக்கருக்கு 95 ஆயிரம் ரூபாய்தான் கொடுத்தாங்க. இப்பிரச்னையில் முதல்வர் கருணாநிதி தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும்.” என்கிறார்.

தலித் விவசாயியான செந்திலின் சோக அனுபவம் கொஞ்சம் வித்தியாசமானது :

“என்னிடம் 3.5 ஏக்கர் நிலம் இருந்தது. அதை நான் கொடுக்க விரும்பவில்லை. ஆத்திரமடைந்த செந்தில் முருகனும், செல்வராஜும் சேர்ந்து என் மேல் பி.சி.ஆர்., கேஸ் போட வைச்சு சிறையில போட்டுட்டாங்க. அதன்பின் என்னுடைய அம்மாவையும், சகோதரிகளையும் மிரட்டி என்னை பணிய வச்சாங்க. ஜாமீனில் 5.30 மணிக்கு சிறையில் இருந்து வெளியே வந்த என்னை, இரவு 9.30 மணிக்கு செட்டிக்குளம் பத்திரப் பதிவு அலுவலகம் அழைத்து சென்று, நிலத்தை எழுதி வாங்கிட்டாங்க.” என்கிறார்.

இப்படி எம்.ஆர்.எப்., நிறுவனத்துக்கு நிலம் கொடுக்க மறுத்தவர்களை மிரட்டி பணிய வைக்கும் இடமாக பாடாலுர் போலீஸ் ஸ்டேஷனும், ஆர்.டிஓ. அலுவலகமும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக 2007 முதல் 2008-ம் ஆண்டுவரை பணியில் இருந்த உயர் போலீஸ் அதிகாரிகளும், உயர் அரசு அதிகாரிகளும் கோடிக்கணக்கான மதிப்புள்ள நிலம், வீடு, பணம் அன்பளிப்பாக பெற்றுள்ளனர் என்று நாரணமங்கலம் பொதுமக்களும், விவசாய அமைப்புகளும் குற்றம் சாட்டியுள்ளன.

நாரணமங்கலத்தில் டயர் நிறுவனம் அமைய நிலம் கொடுத்தவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டி போராடி வரும் விவசாய அமைப்புகளுக்கு, ராசாவின் நண்பர் சாதிக் தரப்பிலிருந்து, "ராசா மீண்டும் அமைச்சராகி விடுவார். அப்புறம் நடக்குறதே வேற..' என்ற தொனியில் மிரட்டல்கள் வந்துள்ளன.

ராசா மீது "2-ஜி' ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் குற்றச்சாட்டப்பட்டபோது, தமிழக முதல்வர் கருணாநிதி, "ராசா ஒரு தலித் என்பதால் பழி சுமத்தப்படுகிறது' என, வேலூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசினார்.

ஆனால், நாரணமங்கலத்தில் தலித் மக்களிடம் இருந்த நிலங்களை குறைந்த விலைக்கு மிரட்டி வாங்க, தலித் கோட்டாவில் அமைச்சர் பதவி பெற்ற ராசாவின் அதிகாரம்தான், முழுமையாக, முறைகேடாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 

“பெரம்பலூருக்கு சிறப்புப் பொருளாதார மண்டலம் கொண்டு வந்தேன். அரசு கலைக் கல்லூரி கொண்டு வந்தேன். மருத்துவக் கல்லூரி கொண்டு வந்தேன். பாலிடெக்னிக் கொண்டு வந்தேன். எம்.ஆர்.எப். டயர் கம்பெனி கொண்டு வந்தேன்...” - இதெல்லாம் அமைச்சர் ராசா தான் தொகுதிக்குச் செய்ததாகச் சொன்னவைகள். ஆனால் சொல்லாத இன்னொரு விஷயமும் இருக்கு. அது சி.பி.ஐ.யை கொண்டு வந்தது என்று சொல்லி நக்கலாகச் சிரிக்கிறார்கள் பெரம்பலூர் மாவட்ட அதிமுகவினர்.

ராசாவின் அதிகாரத் திமிர், ஊழல்கள் பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயிகள் பிரிவின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் செல்லத்துரை சொன்னது அத்தனையும் அதிர்ச்சி ரகம்..

“மத்தியிலும், மாநிலத்திலும் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர் போட்ட ஆட்டம் சொல்லி மாளாது. அவர் தன்னுடைய தாய், தந்தை பெயரில் வைத்திருக்கும் அறக்கட்டளை பெயரில் முக்கிய சாலைகளின் அருகில் நிலங்களை வாங்குவார்.

அந்த நிலத்துக்குப் பக்கத்தில் உள்ள நிலங்களை எல்லாம் அவரது நண்பர் சாதிக் வளைப்பார். யாராவது நிலம் தர மாட்டேன் என்று சொன்னால் போலீஸ், ஆர்.டி.ஓ. என்று எல்லா துறையும் அவர்களை மிரட்டும். அவர்கள் சொன்ன ரேட்டுக்கு நிலத்தைக் கொடுத்தாக வேண்டும் என்று கட்டாயப்படுத்தி பிடுங்கிக் கொள்வார்கள்.

நிலம் வாங்கி முடிந்ததும் பெரம்பலூரில் அரசு கலைக் கல்லூரி வருகிறது. மருத்துவக் கல்லூரி வருகிறது என்று அறிவிப்பு வரும். அதிகாரிகள் இடம தேடுவார்கள். கிடைக்காது. உடன் ராசா தன்னுடைய தாய், தந்தை பெயரில் உள்ள அறக்கட்டளையில் இருந்து நிலத்தை தானமாக வழங்குவார்.

உடனேயே அரசு அந்த நிலத்தை எடுத்துக் கொள்ளும். இதனால் அரசுக்குக் கொடுத்த நிலங்களின் அருகிலேயே அவருடைய நண்பர் சாதிக் வாங்கி வைத்திருக்கும் நிலங்களின் மதிப்பும் ஏகத்துக்கு உயர்ந்துவிடும்.

பெரம்பலூர் - துறையூர் சாலையில் குரும்பலூர்ங்கிற இடத்துல 500, 600 ஏக்கர் இடத்தை வாங்கினாங்க. அப்ப விவசாயிகள்கிட்ட அரசாங்கம் கல்லூரி கட்டுறதுக்காக இந்த இடத்தை எடுத்துக்கும். அதுக்கு முன்னால நீங்க இந்த இடத்தை வித்தீங்கன்னா நல்ல விலைக்குக் கிடைக்கும். இல்லைன்னா கவர்ன்மெண்ட்டு ஐயாயிரமோ, பத்தாயிரமோ கொடுக்கும்னு சொல்லி மெரட்டுவாங்க..

இப்படியே வாங்கி முடிச்சதுக்கப்புறம் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி வரப் போகுதுன்னு ஒரு அறிவிப்பு வந்துச்சு.. அதுக்கு ஆண்டிமுத்து-சின்னப்பிள்ளை அறக்கட்டளை சார்பா இலவசமா 8.51 ஏக்கர் இடம் கொடுத்து போர்டும் வைச்சுட்டாங்க. அந்த இடத்தைச் சுத்தி ஏக்கர் வெறும் இருபத்தைந்தாயிரத்துக்கு வாங்கின இடம், இப்ப அஞ்சு லட்சத்துக்குப் போவுது.

அதே மாதிரி பெரம்பலூர்-செட்டிக்குளம் ரோட்டுல ராசாவின் சொந்த ஊரான வேலூருக்குப் பக்கத்துல அரசு பாலிடெக்னிக் கல்லூரி வந்துச்சு. அங்கேயும் இதே டெக்னிக்குதான். அதுக்கும் இடம் ஆண்டிமுத்து-சின்னப்பிள்ளை அறக்கட்டளையால் வழங்கப்பட்டதுதான்..” என்றார்.

இப்படி ரியல் எஸ்டேட் மூலமாக பெரும் பணம் சம்பாதித்துடன் தொகுதிக்கு தான் பெரும் சாதனையைச் செய்ததாக காட்டியிருக்கும் தலித் அமைச்சர் ராசா நிச்சயமாக ஒரு கில்லாடி தலித்துதான்..!

கொள்ளையடிப்பதில் தலித் என்ன? தலித் அல்லாதவர்கள் என்ன..? அத்தனை கொள்ளையர்களும் ஒன்றுதான் என்பதை இப்போதாவது அனைத்துத் தரப்பினரும் உணர வேண்டும்..!

கட்டுரைக்கு உதவியவை : பல்வேறு பத்திரிகைகள், இணையத்தளங்கள்

107 comments:

  1. ஊழலுக்குமா ரிஸர்வேஷன்.. முன்னுரிமை?

    ReplyDelete
  2. அடிப்படையில் நான் தூக்குதண்டனைக்க ு எதிரானவன்.. மேற்கண்ட விஷயங்கள் நிருபிக்கபட்டால ் இவர்களையெல்லாம் சாகும் வரை தூக்கில் போடவேண்டும். ஒரு மாத வீட்டு வாடகைக்குக்கும் ஒரு வேளை உணவுக்கும் அல்லாடும் என்னைபோன்ற லட்சக்கணக்கான உள்ளோர் நாட்டில் இப்படியான அநியாயங்கள் நடைபெறுவதை கண்டு அமைதியாக இருக்கும் அந்த கடவுளுக்கு கூட கண்ணில்லையோ என்று தோன்றுகிறது. பேய்கள் ஆட்சிகள் செய்தால் இப்படித்தான்.

    ReplyDelete
  3. உண்மைத்தமிழன்,

    அருமையாக சொல்லியிருக்கிரய்ங்க‌.
    எத்தனையோ சாதனை செய்த தலித் மக்கள் இருக்கிறார்கள்.
    அவர்கள் பெயரெல்லாம் நினைவுக்கு வராது.
    ஆனால் ஊழலில் இருந்து தப்பிக்க தலித் கேடயத்தை பயன்படுத்துவது துரதிஸ்டவசமானது.

    அப்புறம் இன்னொரு விசயம் பி.சி.ஆர் சட்டத்தை தலித் மக்கள் மீது பயன்படுத்தமுடியாது.
    ஆதிக்க சாதி திமிரை அடக்கவே பி.சி.ஆர்.சட்டம்.
    PCR - Protection of criminal rights and it is mainly for saving dalits from untouchability of upper cast animals.

    ReplyDelete
  4. மேற்கண்ட விஷயங்கள் நிருபிக்கபட்டால ் இவர்களையெல்லாம் சாகும் வரை தூக்கில் போடவேண்டும்//


    சர்வ நிச்சயமாக தூக்கில் போடத்தான் வேண்டும்......ஒத்துக்கொள்கிறேன் சார்.

    அடிமனசில ஒரு கேள்வி ஓடிகிட்டே இருக்கு.......இந்த ஸ்பெக்டரத்துல மீடியாக்களும் , பிரபல பதிவர்களும் பண்ற அநியாயத்தை தாங்க முடியாம இப்பக்கேட்கிறேன்..

    ஒருவேளை, ராசா குற்றமற்றவராக இருந்தால் அல்லது குற்றம் செய்யவில்லை என்று நிருபிக்க போதுமான ஆதாரங்களை அவர் கையில் வைத்திருந்தால், சிக்கிட்டாண்டா ஒருத்தன் என்ற ரேஞ்சில் சரமாரியாகக் குற்றம் சாட்டுபவர்களை என்ன செய்யலாம்....அதுக்கும் ஒரு முடிவு பண்ணிரலாமே????

    நான் ஆண்டிமுத்து ராசாவுக்கு அண்டர்வேர் துவைத்துப்போடுபவனில்லை,, ஒரு முன் அல்லது பின் குறிப்பாக இதை எடுத்துக்கொள்ளலாம்...!

    ReplyDelete
  5. மக்கள்கிட்டே..இருந்து 2.5 லட்சத்துக்கு வாங்கி 15 லட்சத்துக்கு விப்போம். அரசு கிட்ட இருந்து.. 1 இலட்சம் கோடி மதிப்புள்ளதை 10 ஆயிரத்திற்கு விப்போம்..!! அட..அடா... என்ன ஒரு தெளிவுடா.. மானங்கெட்ட..******. இந்தியன் ல்ல சொன்ன..பிணத்தின் வாயிலிருந்தும் காசை நோண்டி எடுக்கும் பிச்சைகாரர்கள் சாட்சாத் இவர்களே.

    ReplyDelete
  6. சிறந்த பதிவு.

    தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைப்பதாகவும், தங்களுக்குத் தாங்களே அந்தப் போராளி, இந்தப் போராளி என்று பட்டம் சூட்டிக்கொள்ளும் தலைவர்கள் எங்கே சென்றார்கள்?

    இதுபோன்ற மக்கள் விரோத, தலித் விரோத செயல்பாடுகளுக்கு எதிராக இவர்கள் உருப்படியாக என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை.

    எம்.ஆர்.எப். நிறுவனத்திற்கு நிலங்களை கைப்பற்றிய விவகாரத்தில் மக்களை ஒருங்கிணைத்து திட்டமிட்டு சட்டப்படியான நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்டவர்களோ அல்லது விலைபோகாத வேறு யாராவதோ ஈடுபட்டால் நிச்சயம் அவர்களுக்கு இழப்பீடும் குற்றவாளிகளுக்கு தண்டனையும் கிடைக்கும்.

    ReplyDelete
  7. //பெரம்பலூர் - துறையூர் சாலையில் குரும்பலூர்ங்கிற இடத்துல 500, 600 ஏக்கர் இடத்தை வாங்கினாங்க. அப்ப விவசாயிகள்கிட்ட அரசாங்கம் கல்லூரி கட்டுறதுக்காக இந்த இடத்தை எடுத்துக்கும். அதுக்கு முன்னால நீங்க இந்த இடத்தை வித்தீங்கன்னா நல்ல விலைக்குக் கிடைக்கும். இல்லைன்னா கவர்ன்மெண்ட்டு ஐயாயிரமோ, பத்தாயிரமோ கொடுக்கும்னு சொல்லி மெரட்டுவாங்க..

    இப்படியே வாங்கி முடிச்சதுக்கப்புறம் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி வரப் போகுதுன்னு ஒரு அறிவிப்பு வந்துச்சு.. அதுக்கு ஆண்டிமுத்து-சின்னப்பிள்ளை அறக்கட்டளை சார்பா இலவசமா 8.51 ஏக்கர் இடம் கொடுத்து போர்டும் வைச்சுட்டாங்க. அந்த இடத்தைச் சுத்தி ஏக்கர் வெறும் இருபத்தைந்தாயிரத்துக்கு வாங்கின இடம், இப்ப அஞ்சு லட்சத்துக்குப் போவுது.//
    இது தான் விஞ்ஞான பூர்வமான ஊழல்! எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!

    ReplyDelete
  8. படிக்க படிக்க டென்சன் ஆவுதுங்ணா..இவங்களை என்னதான் பண்றது?

    ----செங்கோவி
    ப்ளாக்கை பிரபலமாக்க 7 சூப்பர் டிப்ஸ்

    ReplyDelete
  9. திருடகனாய்ப்பார்த்து திருந்தணும்...

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    யாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.

    ReplyDelete
  10. Revenue Loss in 2G has come down from 100Rs to ONLY 17.5Rs (In %).

    First Let’s clear the much talked topic of 2G Spectrum Issue as currently this being hyped by certain section of medias and internet geeks as this will impact 2011 elections .
    1. This is NOT a Scam and it’s a Revenue Loss. This is because, licenses are not given in action and awarded as per already followed up policy from 1999.
    2. This Policy is NOT laid by Raja, it was done in 1999/2000 by then BJP Ministers, even Supreme Court has acknowledged this and asked CBI to look license allocation policy followed from 2001 and TATA also mentioned that most twisting of Telecom policies were happened during NDA Period.
    3. The amount mentioned as loss of 1.7 Lack Croes is just exaggerated and inflated one and NOT real value. Because, Action Cost of 3G is used to calculate 2G Value, like using the Price of Basmathi Rice to calculate value of Ordinary Rice. Even Arun Souri (BJP Telecom Min) has mentioned that 1.7 Lack Crores loss is hypothetical, and the loss might be around 30,000 cr (The Hindu dated 19.12.10) .
    4. That means the loss has came down to just 17.5% (30K Crores) from initial mentioned value of 1.7 Lac Crores. Even this 17.5% shall be proved as it’s done as per the earlier laid process..
    5. There might be some favor done for few companies and this is something very common nowadays. Even in Private/IT companies, while awarding tenders and Purchase Orders to Vendors, favor is shown for some vendors for some gain.
    6. Ongoing CBI/SC investigations might damage the image of DMK to little extend as the hype is shown by certain section of media – But the impact will be very limited as the reach of such Medias on the common Voters might be just 10%. After 2 or 3 months, the importance shall be diluted.
    7. Also, if really very large amount of Money Gain is involved, the Karunanithi & DMK Top leaders won’t keep & support Raja even after 2 rounds of CBI raids followed by CBI questioning him. Karunanidhi is not foolish to keep Raja if it’s going to have real impact in elections.
    8. Finally, is this 2G issue directly effects common voter – The answer is NO. If the Opposition parties highlight the 2G loss, then DMK might counter by saying, because of that only the Mobile Bill in India is the cheapest in the whole world. Even poor and villagers can use mobile phone because of this policy. Loss to the Govt is the Gain for the Common Man, if the licenses are sold at higher price, then that will be charge backed from the Mobile Users Only.

    ReplyDelete
  11. நண்பனே என்னால் தொடர்ந்து படிக்ககூட முடியவில்லை... இப்படியே நான் தொடர்ந்து படித்தால் நான் வன்முறையை வேறுவிதமாக எங்கேனும் வெளிப்படுத்தக்கூடச்செய்யாலாம். நமது மௌனமே பேடித்தனமானதுதான். இந்த விவசாயிகள் இல்லையென்றால் நம் வாழ்க்கையை யோசித்துப்பாருங்கள்...? (இங்கு பின்னூட்டாம் இடுபவர்கள் அனைவரும் ஏதேனும் ஒரு கருத்தை பதிவுக்காக இடவேண்டாம்.) நிலங்களை அபகரிக்க காரணமான அத்தனைபேரையும் நடுரோட்டில் கல்லால் அடித்து கொல்லவேண்டும். வேறு வழியே இல்லை. நிலைமை எல்லை மீறிப்போய்கொண்டிருக்கிறது.முதலில் இந்த ரெண்டு கட்சிகளையும் ஒழித்துக்கட்ட அரசியல் சார்பற்ற ஒரு இயக்கம் வேண்டும். குறைந்தபட்சம் வலைமனை அளவிலே அதை இயக்கலாம். அதன் வழியே குறுந்தகவல்கள், மின்னஞ்சல்கள், பரப்புரைகள் நிகழ்த்தி.. சம்பத்தபட்டவர்களுக்கு சவுக்கடி கொடுக்காலம். ஒரு பொது வலைத்தளத்தை ஏற்படுத்தி இம்மாதிரியான பிரச்சினைகளை பற்றி வெளியிட்டு உடனடியாக போராடலாம். சிந்தியுங்கள். மின்னஞ்சல் வழியாகவே பிரதமர், குடியரசுத்தலைவர்,அறம் கொண்ட பத்திரிகைகள் அனைவரையும் இணைக்கலாம்.

    ReplyDelete
  12. இவ்வளவு தெளிவாக அக்கு வேறு ஆணி வேறா நடந்த நிகழ்வுகளை அனைவருக்கும் புரியும்படியும் சொல்லிட்டீங்க....

    சூப்பர்....

    ReplyDelete
  13. திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது !!!

    ReplyDelete
  14. //Prakash said...

    Revenue Loss in 2G has come down from 100Rs to ONLY 17.5Rs (In %).
    //

    பிரகாஷ் அவர்கள் நடுவில் புகுந்து கிச்சுகிச்சு மூட்டி விளையாடுகிறாரே! அவரை ஓரமா உட்காரச் சொல்லுங்க..

    ReplyDelete
  15. இப்பதிவில் கூறியிருக்கும் அனைத்தும் உண்மையாகவே இருக்கலாம். ஆனால் இதை எதிர்த்து கோர்ட்டில் கேஸ் போட்டால் கேஸ் நிற்காது என்று நினைக்கிறேன். எல்லாவற்றிற்கும் போலியான ஆவணங்கள் தயாரித்து வைத்திருக்கக் கூடும். சில விஷயங்களில் கோட்டை விட்டிருந்தாலும் அவற்றை எதிர்கொள்ளக் கூடிய தைரியம் அவர்களுக்குண்டு. அதிகார துஷ்பிரயோகத்தை எப்படி நிரூபிப்பது!!!!

    ReplyDelete
  16. சிட்டிசன் படத்தில் சொல்வது போல, வாழ வழியில்லை எனக்கூறி அந்த 60 குடும்பத்தினரும் தத்தம் ரேஷன் கார்டுகளை ஜனாதிபதி அவர்களிடம் திருப்பியளித்தால் என்னவாகும்??

    மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொல்கிறேன். மக்கள் தங்கள் நலனுக்காக ஒவ்வொரு முறையும் தெருவில் இறங்கிப் போராடவோ, வழக்காடிக் கொண்டோ இருக்க முடியாது.

    அதிகார துஷ்பிரயோகங்களை உடனுக்குடன் ஆன் த ஸ்பாட் களையெடுக்க வேண்டும்.

    ReplyDelete
  17. Mr Prakash
    Just consider this
    Raja gave away pan india licences and spectrum at the rate of Rs. 1,658 Crore even as one of the companies (STel) had made an offer of Rs. 13,752 crores. And think what the rate would have been if an open auction was conducted.
    And the licenses sold to Swan, Unitech, Loop, Datacom and Allianz Infra are outright violations of DoT regulations and/or the Companies Act.
    I like your example of Basmati and ordinary rice, only in this case they have sold basmati rice at the rate of ration rice.
    Unitech bought the licenses for as little as 1,651 crores and sold 67 % shares to Telenor for 6,200 crores within a few months. So where is the benefit for the mobile user.

    ReplyDelete
  18. //ம.தி.சுதா said...

    திருடகனாய்ப்பார்த்து திருந்தணும்...

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா //

    அத்தனை பேருமே திருடனாக ஆகிவிட்டால்??!!

    நான் குறைந்தபட்ச நேர்மையுடன் 12000 மாத சம்பளத்தில் வேலை பார்த்து வருகிறேன். நான் என் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தால் மேலும் பத்திலிருந்து இருபதாயிரம் வரை கூடுதலாக சம்பாதிக்க முடியும்! ஆனால் நான் அதைச் செய்வதில்லை. பேசாமல் எல்லோருமே அப்படிப் பண்ண ஆரம்பித்து விட்டால், உலகமே எங்காவது போய் முட்டி மோதி நிற்குமல்லவா??!! ஆனா மனசு வரமாட்டேங்குதே!!! அந்த எண்ணத்தை தூக்கி குப்பையில் போடச் சொல்லுதே!!

    ReplyDelete
  19. ஊழலுக்கு துணை போனால், ஊழல் செழித்து வளராமல் செய்யும். யார் தான் தடுப்பது இதை?

    ReplyDelete
  20. வெகு சிறப்பான தொகுப்பு...

    அன்பு நித்யன்.

    ReplyDelete
  21. First thing India need to do, throw away this reservation. Reservation only by economic status.

    ReplyDelete
  22. [[[middleclassmadhavi said...
    ஊழலுக்குமா ரிஸர்வேஷன்.. முன்னுரிமை?]]]

    இப்ப நாடு ரொம்ப முன்னேறிருச்சுங்கண்ணா..!

    ReplyDelete
  23. [[[Indian Share Market said...
    அடிப்படையில் நான் தூக்குதண்டனைக்க ு எதிரானவன்.. மேற்கண்ட விஷயங்கள் நிருபிக்கபட்டால ் இவர்களையெல்லாம் சாகும்வரை தூக்கில் போடவேண்டும்.

    ஒரு மாத வீட்டு வாடகைக்குக்கும் ஒரு வேளை உணவுக்கும் அல்லாடும் என்னை போன்ற லட்சக்கணக்கான உள்ளோர் நாட்டில் இப்படியான அநியாயங்கள் நடைபெறுவதை கண்டு அமைதியாக இருக்கும் அந்த கடவுளுக்குகூட கண்ணில்லையோ என்று தோன்றுகிறது. பேய்கள் ஆட்சிகள் செய்தால் இப்படித்தான்.]]]

    உங்களை மாதிரியேதான் எனக்கும்..! நம்மால் இப்படி எழுதத்தான் முடிகிறது..!

    ReplyDelete
  24. [[[மறத்தமிழன் said...

    உண்மைத்தமிழன், அருமையாக சொல்லியிருக்கிரய்ங்க‌. எத்தனையோ சாதனை செய்த தலித் மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் பெயரெல்லாம் நினைவுக்கு வராது.
    ஆனால் ஊழலில் இருந்து தப்பிக்க தலித் கேடயத்தை பயன்படுத்துவது துரதிஸ்டவசமானது.]]]

    என்ன செய்தாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்தான் அரசியல்வியாதிகள்..!

    [[[அப்புறம் இன்னொரு விசயம் பி.சி.ஆர் சட்டத்தை தலித் மக்கள் மீது பயன்படுத்த முடியாது.
    ஆதிக்க சாதி திமிரை அடக்கவே பி.சி.ஆர்.சட்டம். PCR - Protection of criminal rights and it is mainly for saving dalits from untouchability of upper cast animals.]]]

    தகவலுக்கு மிக்க நன்றிகள் ஸார்..!

    ReplyDelete
  25. [[[மதிபாலா said...
    மேற்கண்ட விஷயங்கள் நிருபிக்கபட்டால் இவர்களையெல்லாம் சாகும்வரை தூக்கில் போட வேண்டும்//

    சர்வ நிச்சயமாக தூக்கில் போடத்தான் வேண்டும். ஒத்துக் கொள்கிறேன் சார்.
    அடிமனசில ஒரு கேள்வி ஓடிகிட்டே இருக்கு. இந்த ஸ்பெக்டரத்துல மீடியாக்களும், பிரபல பதிவர்களும் பண்ற அநியாயத்தை தாங்க முடியாம இப்ப கேட்கிறேன். ஒருவேளை, ராசா குற்றமற்றவராக இருந்தால் அல்லது குற்றம் செய்யவில்லை என்று நிருபிக்க போதுமான ஆதாரங்களை அவர் கையில் வைத்திருந்தால், சிக்கிட்டாண்டா ஒருத்தன் என்ற ரேஞ்சில் சரமாரியாகக் குற்றம் சாட்டுபவர்களை என்ன செய்யலாம். அதுக்கும் ஒரு முடிவு பண்ணிரலாமே????]]]

    குற்றவாளி என்று நிரூபிக்கப்படவில்லையென்றால் அதற்கு இந்த நீதித்துறையும், சட்டத்துறையும்தான் பொறுப்பேற்க வேண்டும்..!

    இல்லையெனில் நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு நீங்களாவது பதில் சொல்லுங்கள்..!

    ReplyDelete
  26. [[[Rafeek said...
    மக்கள்கிட்டே இருந்து 2.5 லட்சத்துக்கு வாங்கி 15 லட்சத்துக்கு விப்போம். அரசுகிட்ட இருந்து 1 இலட்சம் கோடி மதிப்புள்ளதை 10 ஆயிரத்திற்கு விப்போம்..!! அட.. அடா... என்ன ஒரு தெளிவுடா.. மானங்கெட்ட..******. இந்தியன் ல்ல சொன்ன பிணத்தின் வாயிலிருந்தும் காசை நோண்டி எடுக்கும் பிச்சைகாரர்கள் சாட்சாத் இவர்களே.]]]

    ம்.. உண்மைதான்.. பணம் என்றால் பிணமும் வாயைப் பொளக்குமே..?

    ReplyDelete
  27. [[[seeprabagaran said...

    சிறந்த பதிவு. தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைப்பதாகவும், தங்களுக்குத் தாங்களே அந்தப் போராளி, இந்தப் போராளி என்று பட்டம் சூட்டிக் கொள்ளும் தலைவர்கள் எங்கே சென்றார்கள்? இது போன்ற மக்கள் விரோத, தலித் விரோத செயல்பாடுகளுக்கு எதிராக இவர்கள் உருப்படியாக என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை.
    எம்.ஆர்.எப். நிறுவனத்திற்கு நிலங்களை கைப்பற்றிய விவகாரத்தில் மக்களை ஒருங்கிணைத்து திட்டமிட்டு சட்டப்படியான நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்டவர்களோ அல்லது விலை போகாத வேறு யாராவதோ ஈடுபட்டால் நிச்சயம் அவர்களுக்கு இழப்பீடும் குற்றவாளிகளுக்கு தண்டனையும் கிடைக்கும்.]]]

    உங்களுடைய கருத்து சிரிப்பைத் தருகிறது ஸார்..!

    இழப்பீடாவது? தண்டனையாவது..? யார், யாருக்குக் கொடுப்பாங்கன்னு நினைச்சீங்க..? சான்ஸே இல்லை..!

    ReplyDelete
  28. [[[bandhu said...

    //பெரம்பலூர் - துறையூர் சாலையில் குரும்பலூர்ங்கிற இடத்துல 500, 600 ஏக்கர் இடத்தை வாங்கினாங்க. அப்ப விவசாயிகள்கிட்ட அரசாங்கம் கல்லூரி கட்டுறதுக்காக இந்த இடத்தை எடுத்துக்கும். அதுக்கு முன்னால நீங்க இந்த இடத்தை வித்தீங்கன்னா நல்ல விலைக்குக் கிடைக்கும். இல்லைன்னா கவர்ன்மெண்ட்டு ஐயாயிரமோ, பத்தாயிரமோ கொடுக்கும்னு சொல்லி மெரட்டுவாங்க.. இப்படியே வாங்கி முடிச்சதுக்கப்புறம் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி வரப் போகுதுன்னு ஒரு அறிவிப்பு வந்துச்சு.. அதுக்கு ஆண்டிமுத்து-சின்னப்பிள்ளை அறக்கட்டளை சார்பா இலவசமா 8.51 ஏக்கர் இடம் கொடுத்து போர்டும் வைச்சுட்டாங்க. அந்த இடத்தைச் சுத்தி ஏக்கர் வெறும் இருபத்தைந்தாயிரத்துக்கு வாங்கின இடம், இப்ப அஞ்சு லட்சத்துக்குப் போவுது.//

    இதுதான் விஞ்ஞானபூர்வமான ஊழல்! எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!]]]

    இதைத்தான் பல்லாண்டுகளுக்கு முன்பாக சர்க்காரியா கமிஷனும் குறிப்பிட்டுச் சொல்லியிருந்தது..!

    வாழையடி வாழையாக தி.மு.க.வினர் செய்வது இதைத்தான்..!

    ReplyDelete
  29. [[[செங்கோவி said...

    படிக்க படிக்க டென்சன் ஆவுதுகங்ண்ணா. இவங்களை என்னதான் பண்றது?

    ---- செங்கோவி
    ப்ளாக்கை பிரபலமாக்க 7 சூப்பர் டிப்ஸ்]]]

    தேர்தல் தினத்தன்று நம் வேலையைக் காட்டினால்தான் இவர்களைத் துரத்த முடியும்..!

    ReplyDelete
  30. [[[ம.தி.சுதா said...

    திருடகனாய்ப் பார்த்து திருந்தணும்...

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    யாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.]]]

    அட்லீஸ்ட்.. ஒருத்தனையாவது உள்ள தூக்கி வைக்கணுமே சுதா..?!

    ReplyDelete
  31. பிரகாஷ்..!

    ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றிய அனைத்துக் கட்டுரைகளையும் படித்துவிட்டு வாருங்கள்.. விவாதிப்போம்.. அடிப்படையிலேயே தவறானதாக இருக்கிறது உங்களது வாதம்..!

    ReplyDelete
  32. [[[kama said...
    நண்பனே என்னால் தொடர்ந்து படிக்கக் கூட முடியவில்லை... இப்படியே நான் தொடர்ந்து படித்தால் நான் வன்முறையை வேறுவிதமாக எங்கேனும் வெளிப்படுத்தக்கூடச் செய்யாலாம். நமது மௌனமே பேடித்தனமானதுதான். இந்த விவசாயிகள் இல்லையென்றால் நம் வாழ்க்கையை யோசித்துப் பாருங்கள்...? நிலங்களை அபகரிக்க காரணமான அத்தனை பேரையும் நடுரோட்டில் கல்லால் அடித்து கொல்ல வேண்டும். வேறு வழியே இல்லை. நிலைமை எல்லை மீறிப் போய் கொண்டிருக்கிறது.]]]

    தேர்தல் முறையில் மட்டுமே இவர்களைத் திருத்த முடியும். கூடுதலாக மக்களைப் பற்றி 90 சதவிகிதமாவது கவலைப்படும் ஒருவன் ஆட்சிப் பொறுப்பேற்க வேண்டும். அதுவரையில் இப்படித்தான்..!

    ReplyDelete
  33. [[[மாணவன் said...
    இவ்வளவு தெளிவாக அக்கு வேறு ஆணி வேறாக நடந்த நிகழ்வுகளை அனைவருக்கும் புரியும்படியும் சொல்லிட்டீங்க. சூப்பர்.]]]

    புரிஞ்சுக்கிட்டதோட நிறுத்திக்காதீங்க.. நாலு பேர்கிட்ட இதைப் பேசுங்க.. பகிர்ந்துக்குங்க.. தேர்தலின்போது அவர்களது கோபத்தைக் காட்டச் சொல்லுங்கள்..!

    ReplyDelete
  34. [[[மதுரை பாண்டி said...
    திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது !!!]]]

    முற்றிலும் ஒழிக்க முடியாது. ஆனால் கடுமையான, நேர்மையான நீதி முறையினால் குறைக்கலாம்..!

    ReplyDelete
  35. [[[ரிஷி said...

    //Prakash said...
    Revenue Loss in 2G has come down from 100Rs to ONLY 17.5Rs (In %).//

    பிரகாஷ் அவர்கள் நடுவில் புகுந்து கிச்சுகிச்சு மூட்டி விளையாடுகிறாரே! அவரை ஓரமா உட்காரச் சொல்லுங்க.]]]

    நானே சொல்லிட்டேன்..!

    ReplyDelete
  36. [[[ரிஷி said...
    இப்பதிவில் கூறியிருக்கும் அனைத்தும் உண்மையாகவே இருக்கலாம். ஆனால் இதை எதிர்த்து கோர்ட்டில் கேஸ் போட்டால் கேஸ் நிற்காது என்று நினைக்கிறேன். எல்லாவற்றிற்கும் போலியான ஆவணங்கள் தயாரித்து வைத்திருக்கக் கூடும். சில விஷயங்களில் கோட்டை விட்டிருந்தாலும் அவற்றை எதிர்கொள்ளக் கூடிய தைரியம் அவர்களுக்குண்டு. அதிகார துஷ்பிரயோகத்தை எப்படி நிரூபிப்பது!!!!]]]

    அதுதான் நமக்கும் சிக்கல்..! ஆனால் ஆட்சிக்கு வர விடாமல் தடுக்கலாமே..?

    ReplyDelete
  37. மக்கள் விரோதிகள் (அரசியல்வாதிகள்) யாரும் சாதிகளாகப் பிளவுண்டு தங்களுக்குள்ளே வெட்டிக் கொண்டோ-மதவெறி தலைக்கேறித் தமக்குள்ளே உயிருடன் கொளுத்திக் கொண்டோ செத்து மடிவதில்லை. அல்லது சமூகத்தின் சொத்தை, மக்களின் வரிப் பணத்தைக் கூச்சமின்றி திருடிய எம்.எல்.ஏ வோ எம்.பி யோ போலீசு லாக்-அப் பில் ஜட்டியோடு உட்கார்ந்ததுமில்லை; தூக்கு மாட்டப்பட்டு போலீசால் தற்கொலை செய்யப்பட்டதுமில்லை. அட, தமிழகத்தின் தலைசிறந்த என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டுகளால் கூட போட்டுத் தள்ளப்பட்டதுமில்லை.எந்தவொரு தலித் எம்.எல்.ஏ வோ, எம்.பி யோ, ஐ.ஜி யோ, ஐ.ஏ.எஸ் ஸோ, ஐ.பி.எஸ் ஸோ உடன் பணியாற்றும் ஆதிக்க சாதி சகாக்களால் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்குகள் உண்டா? அல்லது கீழத் தஞ்சையில் தலித்துகளின் வாயில் மனித மலத்தைத் திணித்த ஆதிக்க சாதி வெறியர்கள் (திணித்தவர்களொன்றும் அம்பானியோ டாடாவோ இல்லை. உழைக்கும் வர்க்கத்தின் ஒரு பிரிவினர்தான்) மேற்சொன்ன பேர்வழிகளை செருப்பால் அடிக்க முடிந்ததுண்டா? மக்களை அடக்கி ஒடுக்கிச் சுரண்டுவதில் ஆளும் வர்க்கமும் அதிகார வர்க்கமும் சாதிகளாக பிரியவில்லை; மாறாக, சுரண்டலையும் அடக்குமுறைகளையும் எதிர்த்து முறியடிக்க வேண்டிய மக்கள்தாம் தமக்குள் சாதிகளாக-மதங்களாகப் பிரிந்துகிடக்கிறார்கள். அதனால்தான் நமது சேரிச் சகோதரன் தலித்தாகவே இருந்தாலும் ராசா போல 1.76 லட்சம் கோடி ஊழல் செய்ய முடிவதில்லை; தலித்தாகவே 'இருந்தாலும்' ராசா மலம் தின்ன வைக்கப் படுவதில்லை.

    ReplyDelete
  38. [[[ரிஷி said...

    சிட்டிசன் படத்தில் சொல்வது போல, வாழ வழியில்லை எனக்கூறி அந்த 60 குடும்பத்தினரும் தத்தம் ரேஷன் கார்டுகளை ஜனாதிபதி அவர்களிடம் திருப்பியளித்தால் என்னவாகும்??]]]

    ஒண்ணும் நடக்காது. சந்தோஷம்ன்னு வாங்கி வைச்சுக்குவாங்க..!

    [[[மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொல்கிறேன். மக்கள் தங்கள் நலனுக்காக ஒவ்வொரு முறையும் தெருவில் இறங்கிப் போராடவோ, வழக்காடிக் கொண்டோ இருக்க முடியாது. அதிகார துஷ்பிரயோகங்களை உடனுக்குடன் ஆன் த ஸ்பாட் களையெடுக்க வேண்டும்.]]]

    யாருக்கு அந்தத் தைரியமும், துணிச்சலும் இருக்கிறது.. எனக்கில்லை.. ஓட்டுப் பெட்டி ஒன்றுதான் ஒரே தீர்வு..!

    ReplyDelete
  39. [[[Arivazhagan said...

    Mr Prakash
    Just consider this
    Raja gave away pan india licences and spectrum at the rate of Rs. 1,658 Crore even as one of the companies (STel) had made an offer of Rs. 13,752 crores. And think what the rate would have been if an open auction was conducted.

    And the licenses sold to Swan, Unitech, Loop, Datacom and Allianz Infra are outright violations of DoT regulations and/or the Companies Act.

    I like your example of Basmati and ordinary rice, only in this case they have sold basmati rice at the rate of ration rice.

    Unitech bought the licenses for as little as 1,651 crores and sold 67 % shares to Telenor for 6,200 crores within a few months. So where is the benefit for the mobile user.]]]

    பிரகாஷ் ஏதோ மிதப்புல இருக்காரு போலிருக்கு..!

    ReplyDelete
  40. [[[ரிஷி said...

    //ம.தி.சுதா said...

    திருடகனாய்ப்பார்த்து திருந்தணும்...

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா //

    அத்தனை பேருமே திருடனாக ஆகி விட்டால்??!! நான் குறைந்தபட்ச நேர்மையுடன் 12000 மாத சம்பளத்தில் வேலை பார்த்து வருகிறேன். நான் என் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தால் மேலும் பத்திலிருந்து இருபதாயிரம் வரை கூடுதலாக சம்பாதிக்க முடியும்! ஆனால் நான் அதைச் செய்வதில்லை. பேசாமல் எல்லோருமே அப்படிப் பண்ண ஆரம்பித்து விட்டால், உலகமே எங்காவது போய் முட்டி மோதி நிற்குமல்லவா??!! ஆனா மனசு வர மாட்டேங்குதே!!! அந்த எண்ணத்தை தூக்கி குப்பையில் போடச் சொல்லுதே!!]]]

    போதுமென்ற மனமே நல்லது.. இப்படியே இருந்துவிடுங்கள் ரிஷி..!

    காலம் முழுக்க குற்றவுணர்வோடு வாழ்வது தினம்தினம் சாவதற்குச் சமமானது..!

    ReplyDelete
  41. [[[பாரத்... பாரதி... said...
    ஊழலுக்கு துணை போனால், ஊழல் செழித்து வளராமல் செய்யும். யார்தான் தடுப்பது இதை?]]]

    நாம்தான் தடுக்க வேண்டும். ஓட்டுப் பதிவன்று எதிர் ஓட்டுக்களைக் குவிக்க வேண்டும்..!

    ReplyDelete
  42. [[[? said...

    http://www.vinavu.com/2010/12/21/chennai-book-fair/

    கீழைக்காற்று: வினவு-புதிய கலாச்சாரம் நூல் வெளியீட்டு விழா!

    நூல் வெளியிடுவோர்:
    ஓவியர் மருது
    மருத்துவர் ருத்ரன்

    சிறப்புரை: “படித்து முடித்த பின்…”
    தோழர் மருதையன், பொதுச் செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு

    நாள்: 26.12.2010

    நேரம்: மாலை 5 மணி

    இடம்: செ.தெ. நாயகம் தியாகராய நகர் மேல்நிலைப்பள்ளி, வெங்கட் நாராயணா சாலை, தியாகராய நகர், சென்னை

    அனைவரும் வருக !]]]

    நல்லது.. விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகிறேன்..!

    ReplyDelete
  43. [[[நித்யகுமாரன் said...

    வெகு சிறப்பான தொகுப்பு...

    அன்பு நித்யன்.]]]

    நன்றி நித்யா..!

    ReplyDelete
  44. [[[பார்வையாளன் said...
    "உண்மையை" அமைதியாக்கிய அவாள், "வயரை" வருத்தப்பட வைத்த நடிகர்- பதிவுலக கிசுகிசு ]]]

    அபாண்டமான குற்றச்சாட்டு..! வருத்தப்பட வைக்கிறீர்கள் பார்வையாளன்..!

    ReplyDelete
  45. [[[Super Cook said...
    First thing India need to do, throw away this reservation. Reservation only by economic status.]]]

    நல்ல யோசனைதான். ஆனால் செயல்படுத்த கொஞ்சம் காலம் வேண்டும்..!

    ReplyDelete
  46. [[[ஏதிலி... said...
    மக்கள் விரோதிகள் (அரசியல்வாதிகள்) யாரும் சாதிகளாகப் பிளவுண்டு தங்களுக்குள்ளே வெட்டிக் கொண்டோ-மதவெறி தலைக்கேறித் தமக்குள்ளே உயிருடன் கொளுத்திக் கொண்டோ செத்து மடிவதில்லை. அல்லது சமூகத்தின் சொத்தை, மக்களின் வரிப் பணத்தைக் கூச்சமின்றி திருடிய எம்.எல்.ஏ வோ எம்.பி யோ போலீசு லாக்-அப்பில் ஜட்டியோடு உட்கார்ந்ததுமில்லை; தூக்கு மாட்டப்பட்டு போலீசால் தற்கொலை செய்யப்பட்டதுமில்லை. அட, தமிழகத்தின் தலைசிறந்த என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டுகளால்கூட போட்டுத் தள்ளப்பட்டதுமில்லை. எந்தவொரு தலித் எம்.எல்.ஏ வோ, எம்.பி யோ, ஐ.ஜி யோ, ஐ.ஏ.எஸ் ஸோ, ஐ.பி.எஸ் ஸோ உடன் பணியாற்றும் ஆதிக்க சாதி சகாக்களால் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்குகள் உண்டா? அல்லது கீழத் தஞ்சையில் தலித்துகளின் வாயில் மனித மலத்தைத் திணித்த ஆதிக்க சாதி வெறியர்கள் (திணித்தவர்களொன்றும் அம்பானியோ டாடாவோ இல்லை. உழைக்கும் வர்க்கத்தின் ஒரு பிரிவினர்தான்) மேற்சொன்ன பேர்வழிகளை செருப்பால் அடிக்க முடிந்ததுண்டா? மக்களை அடக்கி ஒடுக்கிச் சுரண்டுவதில் ஆளும் வர்க்கமும் அதிகார வர்க்கமும் சாதிகளாக பிரியவில்லை; மாறாக, சுரண்டலையும் அடக்குமுறைகளையும் எதிர்த்து முறியடிக்க வேண்டிய மக்கள்தாம் தமக்குள் சாதிகளாக-மதங்களாகப் பிரிந்து கிடக்கிறார்கள். அதனால்தான் நமது சேரிச் சகோதரன் தலித்தாகவே இருந்தாலும் ராசா போல 1.76 லட்சம் கோடி ஊழல் செய்ய முடிவதில்லை; தலித்தாகவே 'இருந்தாலும்' ராசா மலம் தின்ன வைக்கப்படுவதில்லை.]]]

    சரியான வாதம்தான் தோழர்..! முற்றிலும் ஏற்கிறேன்..!

    ReplyDelete
  47. as a citizen i will never ever vote for these pimps in future.
    And onething people tends to forget about these often.There is a also fault in people who is electing them.

    ReplyDelete
  48. குற்றவாளி என்று நிரூபிக்கப்படவில்லையென்றால் அதற்கு இந்த நீதித்துறையும், சட்டத்துறையும்தான் பொறுப்பேற்க வேண்டும்..!

    இல்லையெனில் நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு நீங்களாவது பதில் சொல்லுங்கள்..!//


    உங்க கேள்விக்கு நான் ஏன் பதில் சொல்லணும்கிறதை கொஞ்சம் தள்ளி வைப்போம்...!!

    ஒருவர் மேல் குற்றம் சாட்டப்படுகிறது......குற்றத்தை நிருபிக்கவேண்டியது புலனாய்வுப்பிரிவின் கடமை...ஒருவேளை நிருபிக்க இயலவில்லையென்றால் சட்டத்துறையும் , நீதித்துறையும் மட்டுமே பொறுப்பேற்க வேண்டும் என்று தப்பித்துக்கொள்வது ஊடகத்திற்கான தார்மீக நெறியாகாது..


    இன்று வானாளவக்கூவும் வட இந்திய மீடியாக்கள் ஒன்றும் பரிசுத்தர்கள் இல்லை என்பது நீரா ராடியா - பர்கா தத் உரையாடல்களிலேயே தெரிந்துவிட்டது....

    அருண்ஷோரி காலத்திலிருந்தே விசாரிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொன்னதிலிருந்து அதற்கு முன்னால் உள்ளவர்களொன்றும் புனிதர்களளல்லர் என்பதும் தெரியவருகிறது.....

    ஆக, கூட்டிக்கழித்துப் பார்த்தால் "ராசா'வை ஏதோ ஒரு சக்தி டார்கெட் செய்கிறது என்பது மட்டும் புரிகிறது...

    ReplyDelete
  49. நம் மக்களை இந்த திருட்டுப் பசங்க எங்கே கொண்டு போய் நிறுத்துவார்களோ தெரியவில்லை. கொள்ளை மேல கொல்லையடிக்கணும், அந்தப் பணமெல்லாம் சுவிஸ் வங்கியில் தனது பிள்ளை குட்டிகள் பெயரில் போட்டுக் கொள்ள வேண்டும். இது நடப்பது தெரியாமல் இருக்க வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒதுக்கப் படும் பணத்தை வைத்தே இலவசங்களை அள்ளி விட வேண்டும். முக்கியமாக வண்ணத் தொலைகாட்சி கொடுப்பது, தமிழன் வாயில் ஈ நுழைவது கூடத் தெரியாமல் அதை பார்த்துக் கொண்டிருப்பான், இவர்கள் கொள்ளையைத் தொடரலாம், தேர்தல் வந்தால் கொஞ்சம் கோழி பிரியாணியைப் போட்டால் போதும், மானங்கெட்ட தமிழன் திரும்பவும் இந்த திருடர்களுக்கே வோட்டு போட்டு விடுவான். செத்தும் கெடுத்தான் கனக்கப் பிள்ளை என்று ஊரில் ஒரு கதை உண்டு, அந்தக் கனக்கப் பிள்ளை இந்த மஞ்சள் துண்டு. ஆறு கோடித் தமிழனும் உண்ண உணவின்றி வயிற்றில் ஈரத்துணியை போட்டுக் கொண்டிருப்பான், பாடையில் போகும் போதும் இவர் பணத்தை திருடி வெளிநாட்டு வங்கிகளில் போட்டுக் கொண்டே போவார். இவங்க இன்னைக்கு இலவசம் கொடுக்கலாம், எதிர்காலம் என்னாவது? சட்டப் படி மூணு பெண்டாட்டிக்கு புருஷனாகவும், இத்தனை பிள்ளைகளுக்குத் தகப்பனாகவும், அவர்கள் ஊருபட்ட பேரப் பிள்ளைகளைப் பெற்றுத் தள்ளியும் இருக்கிறார்கள், ஆனால் புத்தி மட்டும் கொஞ்சம் கூட மேம்படவேயில்லையே? இளைஞர்களை குடிகாரர்களாக மாற்றித்தான், ஊர் குடியைக் கெடுத்துத்தான் தனது திருட்டுப் பணத்தை சேர்க்க வேண்டுமா? இந்த கீழ்த்தரமான மனிதனை வைரமுத்து, வாலி, அப்துல் ரஹ்மான் போன்ற அடிவருடிகள் பாடல் புனைந்து பாரட்டிகிட்டு இருக்கானுங்களே? அவனுங்கலாசும் கொஞ்சம் இடித்துரைத்து, ஐயா சமுதாயம் உருப்படுமபடி எதாச்சும் செய்து வையையா என்று சொல்ல மாட்டார்களா? உன் குடி செழிக்க ஊர்குடியைக் கெடுக்காதே என்று யாரும் இந்த மரமண்டை காதில் ஏற்ற மாட்டார்களா? நமக்கெல்லாம் விடிவேயில்லையா?

    ReplyDelete
  50. [[மதிபாலா said...

    குற்றவாளி என்று நிரூபிக்கப்படவில்லையென்றால் அதற்கு இந்த நீதித்துறையும், சட்டத்துறையும்தான் பொறுப்பேற்க வேண்டும்..!

    இல்லையெனில் நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு நீங்களாவது பதில் சொல்லுங்கள்..!//


    உங்க கேள்விக்கு நான் ஏன் பதில் சொல்லணும்கிறதை கொஞ்சம் தள்ளி வைப்போம்...!!

    ஒருவர் மேல் குற்றம் சாட்டப்படுகிறது......குற்றத்தை நிருபிக்கவேண்டியது புலனாய்வுப்பிரிவின் கடமை...ஒருவேளை நிருபிக்க இயலவில்லையென்றால் சட்டத்துறையும் , நீதித்துறையும் மட்டுமே பொறுப்பேற்க வேண்டும் என்று தப்பித்துக்கொள்வது ஊடகத்திற்கான தார்மீக நெறியாகாது..]]]


    ஊடகத்திற்கான தார்மீக நெறி என்ன என்பதைப் பற்றிய ஆய்வைக் கொஞ்சம் தள்ளி வைப்போம்...!

    தேர்தல் நடைமுறையை ஒரு உதாரணத்திற்கு எடுத்துக் கொள்கிறேன். இப்போதுள்ள நடைமுறை, நிற்கும் வேட்பாளர்கள் யாராவது ஒருவரைத் தேர்ந்தெடுங்கள் என்று சொல்கிறது. அப்படி யாரையும் தேர்ந்தெடுக்க விரும்பாவிடில், 49-O விதியின் படி, வாக்குச்சாவடி அலுவலரிடம் அதற்கான படிவத்தைப் பெற்று அதில் எழுதிக் கொடுக்க வேண்டும். இம்முறையில் என் கடமையைச் செய்தவனாகவும், அதே நேரம் என் வாக்கை வேறொருவர் பயன்படுத்தாதபடி என் உரிமையை நிலைநாட்டியவனாகவும் ஆவேன். ஆனால் நடப்பதென்ன? நான் போய் சாவடியில் வரிசையில் நின்று படிவத்தைக் கேட்டால் என்னைப் புழுவைப் பார்ப்பது போலப் பார்ப்பார்கள். "படிவம் என்றால் என்னவென்றே தெரியாதென்பார்கள்!" அல்லது "அது இல்லை..வரும்வரை அப்படிப் போய் ஓரமாய் உட்கார்" என்பார்கள். இது என் குற்றமா அல்லது சட்டத்தின் குற்றமா??

    ஊழல் செய்திருப்பது வெளிப்படையாய் தெரிந்த போதிலும், சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி அந்த ஊழல் நிரூபணம் ஆகாமல் தப்பித்தால் அதற்கு சட்டத்துறையும், நீதித்துறையும்தானே பொறுப்பாக முடியும்??


    [[[ இன்று வானாளவக்கூவும் வட இந்திய மீடியாக்கள் ஒன்றும் பரிசுத்தர்கள் இல்லை என்பது நீரா ராடியா - பர்கா தத் உரையாடல்களிலேயே தெரிந்துவிட்டது....

    அருண்ஷோரி காலத்திலிருந்தே விசாரிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொன்னதிலிருந்து அதற்கு முன்னால் உள்ளவர்களொன்றும் புனிதர்களளல்லர் என்பதும் தெரியவருகிறது..... ]]]

    எல்லோரும் புனிதர்கள் இல்லை என்பதற்காக எல்லோருக்கும் தண்டனை கொடுக்காமல் இருந்து விட முடியாது. யார் யாருக்கு எவ்வளவுக்கெவ்வளவு புனிதத்தன்மை குறைவோ அவ்வளவுக்கவ்வளவு தண்டனை நிச்சயம் கொடுக்கப்படவேண்டும்!!

    [[ ஆக, கூட்டிக்கழித்துப் பார்த்தால் "ராசா'வை ஏதோ ஒரு சக்தி டார்கெட் செய்கிறது என்பது மட்டும் புரிகிறது... ]]

    எங்கள் கல்லூரியில் நிகழும் மாணவ குற்றங்களுக்கான விசாரணை நிகழும்போது மிக எளிதாக அதை கையாளுவார்கள். அதாவது பத்துப் பேர் சேர்ந்து ஹாஸ்டலில் பொருட்களைத் திருடியிருந்தால்.. ஒருவன் சிக்கினாலே போதும். அவனைக் கிண்டி கிழங்கெடுத்த பின் "மற்றவர்களைக் காட்டிக் கொடுத்து நீ அப்ரூவராகிவிடு.. உனக்குத் தண்டனை கம்மி" என்போம். அதனால் ஒருவரை டார்கெட் செய்தாலே போதும். சீட்டுக் கட்டு போல அத்தனை நெட்வொர்க்கும் சரியும்.

    போதுமா விளக்கம்??

    ReplyDelete
  51. //கலைஞர்//

    கலைஞர்னா யார்? அவர் எந்த வாத்திய கலைஞர்? நாதஸ்வரமா? அப்பகூட அந்த வாத்திய கலைஞருக்கு பேர் எதாவது இருக்குமே? நீங்கள் யாரை இங்கு சொல்லவருகிறீர்கள்? ஏதாவது கி(ச்)சுகி(ச்)சுவா?

    ReplyDelete
  52. தேர்தல் நடைமுறையை ஒரு உதாரணத்திற்கு எடுத்துக் கொள்கிறேன். இப்போதுள்ள நடைமுறை, நிற்கும் வேட்பாளர்கள் யாராவது ஒருவரைத் தேர்ந்தெடுங்கள் என்று சொல்கிறது. அப்படி யாரையும் தேர்ந்தெடுக்க விரும்பாவிடில், 49-O விதியின் படி, வாக்குச்சாவடி அலுவலரிடம் அதற்கான படிவத்தைப் பெற்று அதில் எழுதிக் கொடுக்க வேண்டும். இம்முறையில் என் கடமையைச் செய்தவனாகவும், அதே நேரம் என் வாக்கை வேறொருவர் பயன்படுத்தாதபடி என் உரிமையை நிலைநாட்டியவனாகவும் ஆவேன். ஆனால் நடப்பதென்ன? நான் போய் சாவடியில் வரிசையில் நின்று படிவத்தைக் கேட்டால் என்னைப் புழுவைப் பார்ப்பது போலப் பார்ப்பார்கள். "படிவம் என்றால் என்னவென்றே தெரியாதென்பார்கள்!" அல்லது "அது இல்லை..வரும்வரை அப்படிப் போய் ஓரமாய் உட்கார்" என்பார்கள். இது என் குற்றமா அல்லது சட்டத்தின் குற்றமா?? //
    சரி, அதுக்கென்ன இப்போ திரு.ரிஷி…

    *********

    ஊழல் செய்திருப்பது வெளிப்படையாய் தெரிந்த போதிலும், சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி அந்த ஊழல் நிரூபணம் ஆகாமல் தப்பித்தால் அதற்கு சட்டத்துறையும், நீதித்துறையும்தானே பொறுப்பாக முடியும்?? //

    இங்கு “வெளிப்படையா தெரிந்த போதிலும் “ என்பதே பிரச்சினை….மீடியாக்கள் எப்போது நீதிபதியானார்கள்???? இவர்களே குற்றஞ்சாட்டினால் , புலனாய்வு , காவல்துறை நீதிமன்றம் எதற்கு?
    சரி , மீடியாக்கள் புண்ணியபுருஷர்கள் என்றால் என்.டி.டிவியின் பர்கா தத் புரோக்கர் வேலை செய்ததும் புண்ணிய காரியத்தில் சேர்த்தியோ??? இத்தனைக்கும் கபில்சிபிலை ஸ்பெக்டரம் விவகாரத்தில் தோண்டித்துருவியவர் அவர்….

    ******

    [[[ இன்று வானாளவக்கூவும் வட இந்திய மீடியாக்கள் ஒன்றும் பரிசுத்தர்கள் இல்லை என்பது நீரா ராடியா - பர்கா தத் உரையாடல்களிலேயே தெரிந்துவிட்டது....

    அருண்ஷோரி காலத்திலிருந்தே விசாரிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொன்னதிலிருந்து அதற்கு முன்னால் உள்ளவர்களொன்றும் புனிதர்களளல்லர் என்பதும் தெரியவருகிறது..... ]]]

    எல்லோரும் புனிதர்கள் இல்லை என்பதற்காக எல்லோருக்கும் தண்டனை கொடுக்காமல் இருந்து விட முடியாது. யார் யாருக்கு எவ்வளவுக்கெவ்வளவு புனிதத்தன்மை குறைவோ அவ்வளவுக்கவ்வளவு தண்டனை நிச்சயம் கொடுக்கப்படவேண்டும்!! //

    கண்டிப்பாக உங்களின் இந்த வாதத்தில் உடன்பாடுண்டு….அவர்களின் புனிதத்தன்மையைப் பற்றித்தானே உச்சநீதிமன்றம் ஆராயச்சொல்லி இருக்கிறது….ஆராய்ந்தால் அருண்ஷோரி, பிரமோத் மகாஜன் , தயாநிதிமாறன் என்ற வரிசையாக நிற்கும் புண்ணீயாத்மாக்களின் புனிதத்தன்மை தெரிந்துவிடப்போகிறது…..அதற்குக் கூட காத்திராமல் ஆண்டிமுத்து ராசாவை மட்டுமே அம்மணமாக்குவதாகச் சொன்னால் அநியாயமில்லையா?????

    *****

    [[ ஆக, கூட்டிக்கழித்துப் பார்த்தால் "ராசா'வை ஏதோ ஒரு சக்தி டார்கெட் செய்கிறது என்பது மட்டும் புரிகிறது... ]]


    எங்கள் கல்லூரியில் நிகழும் மாணவ குற்றங்களுக்கான விசாரணை நிகழும்போது மிக எளிதாக அதை கையாளுவார்கள். அதாவது பத்துப் பேர் சேர்ந்து ஹாஸ்டலில் பொருட்களைத் திருடியிருந்தால்.. ஒருவன் சிக்கினாலே போதும். அவனைக் கிண்டி கிழங்கெடுத்த பின் "மற்றவர்களைக் காட்டிக் கொடுத்து நீ அப்ரூவராகிவிடு.. உனக்குத் தண்டனை கம்மி" என்போம். அதனால் ஒருவரை டார்கெட் செய்தாலே போதும். சீட்டுக் கட்டு போல அத்தனை நெட்வொர்க்கும் சரியும்.

    போதுமா விளக்கம்??//

    கரெக்ட் , இப்பதான் நீங்க பாயிண்டுக்கு வந்திருக்கிறீங்க……….அந்த ஒருவராகத்தான் ராசா சிக்கியிருக்கிறார்……..பத்துப்பேர் சேர்ந்து செய்த குற்றத்திற்கு ஒருத்தனை மட்டுமே அடிக்கிறது எவ்வளவு தப்போ அதைத்தான் மீடியாக்களும் , பிரபல பதிவர்களும் செய்திருக்கிறார்கள்…செய்து கொண்டிருக்கிறார்கள்…இது எவ்வளவு அநியாயம்….???நேர்மையற்ற காரியத்தை செய்து கொண்டே மற்றவர்கள் நேர்மையாக வாழ வேண்டும் என்று போதனை கூறுவது “ஊருக்கு மட்டும்தான் உபதேசம்” என்பதைப் போல….

    ReplyDelete
  53. எல்லோருமே திருடர்கள் தான். அரசியலில் நேர்மை என்ற ஒன்றை கடுகளவில் கூட கானமுடியாததாகிவிட்டது. ஊழல் செய்தவர்கள் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்றால் நூற்றுக்கு 99 பேர் இப்போதுள்ள அரசியல்வாதிகளை அப்புறப்படுத்தவேண்டும்.

    ஜெயலலிதாவும் ஊழலை எதிர்க்க கருணாநிதிக்கு வாக்களித்தோம். மறுபடியும் கருணாநிதியின் ஊழலை எதிர்க்க ஜெயலலிதாவுக்கு வாக்களிக்க வேண்டுமா?

    காங்கிரசாவது ஊழல் செய்தவர்களை பதவி விலக சொன்னது. பிஜேபி எடியுரப்ப்பாவின் மிரட்டலுக்கு பணிந்து அவரை பதவியை தொடர சொல்கிறதே.

    யாருக்கும் யாரும் சளைத்தவர்களில்லை. பல்லிருப்பவன் பணியாரம் சாப்புடுகிறான்.

    ReplyDelete
  54. நம் விரல் கொண்டே நம் கண்ணை குத்துவது என்பது இதுதான்!!!

    அரசியல்வியாதிகள் பயப்படும் ஒரே ஆயுதம் ஓட்டு மட்டுமே,அதை சரியாக, நேர்மையாக பயன்படுத்த வேண்டும்.(கட்சிகள் பார்க்காமல், உங்கள் தொகுதியில் போட்டியிடும் நேர்மையாளருக்கு வாக்களியுங்கள். என்று உங்கள் ஒவ்வொரு பதிவிலும் வலியுறுத்துங்கள் அண்ணே.)

    பகிர்வுக்கு நன்றி அண்ணே........

    ReplyDelete
  55. [[[Anandkrish said...
    as a citizen i will never ever vote for these pimps in future. And one thing people tends to forget about these often. There is a also fault in people who is electing them.]]]

    இதைத்தான் வலியுறுத்தி வருகிறோம். ஓட்டளிக்கும் நாளன்று இதனை மறக்க வேண்டாமென்று..!

    ReplyDelete
  56. [[[மதிபாலா said...

    உங்க கேள்விக்கு நான் ஏன் பதில் சொல்லணும்கிறதை கொஞ்சம் தள்ளி வைப்போம்...!! ஒருவர் மேல் குற்றம் சாட்டப்படுகிறது. குற்றத்தை நிருபிக்க வேண்டியது புலனாய்வுப் பிரிவின் கடமை. ஒருவேளை நிருபிக்க இயலவில்லையென்றால் சட்டத் துறையும், நீதித் துறையும் மட்டுமே பொறுப்பேற்க வேண்டும் என்று தப்பித்துக் கொள்வது ஊடகத்திற்கான தார்மீக நெறியாகாது.
    இன்று வானாளவக் கூவும் வட இந்திய மீடியாக்கள் ஒன்றும் பரிசுத்தர்கள் இல்லை என்பது நீரா ராடியா - பர்கா தத் உரையாடல்களிலேயே தெரிந்துவிட்டது.
    அருண்ஷோரி காலத்திலிருந்தே விசாரிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொன்னதிலிருந்து அதற்கு முன்னால் உள்ளவர்களொன்றும் புனிதர்களளல்லர் என்பதும் தெரியவருகிறது. ஆக, கூட்டிக் கழித்துப் பார்த்தால் "ராசா'வை ஏதோ ஒரு சக்தி டார்கெட் செய்கிறது என்பது மட்டும் புரிகிறது...]]]

    ராசா செய்திருப்பது சட்டப்படி தவறு என்று உச்சநீதிமன்றம் நினைத்திருப்பதால்தான் இப்போது தானே விசாரணையைக் கையில் எடுத்திருக்கிறது என்று நினைக்கிறேன்..!

    ஸோ.. இனிமேல் சுப்ரீம் கோர்ட்டுதான் பதில் சொல்ல வேண்டும்..!

    ராசாவை பின்னால் இருந்து இயக்குவது இதனால் பலனடைந்தவர்கள்தான் என்பது நமக்கு நன்றாகத் தெரியுமே..?

    ReplyDelete
  57. [[[உன் குடி செழிக்க ஊர்குடியைக் கெடுக்காதே என்று யாரும் இந்த மரமண்டை காதில் ஏற்ற மாட்டார்களா? நமக்கெல்லாம் விடிவேயில்லையா?]]]

    ஜெயதேவ் தாஸ்.. சூப்பர் கொஸ்டீன்.. ஆனால் இந்த மரமண்டைகளிடம் என்னத்தைச் சொல்லிப் புரிய வைக்கிறது..?

    ReplyDelete
  58. [[[எல்லோரும் புனிதர்கள் இல்லை என்பதற்காக எல்லோருக்கும் தண்டனை கொடுக்காமல் இருந்துவிட முடியாது. யார் யாருக்கு எவ்வளவுக்கெவ்வளவு புனிதத் தன்மை குறைவோ அவ்வளவுக்கவ்வளவு தண்டனை நிச்சயம் கொடுக்கப்படவேண்டும்!!]]]

    இதைத்தான் நானும் விரும்புகிறேன்..! தற்போதைக்கு இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் மனம் வைத்தால் மட்டுமே இது முடியும்..!

    [[[எங்கள் கல்லூரியில் நிகழும் மாணவ குற்றங்களுக்கான விசாரணை நிகழும்போது மிக எளிதாக அதை கையாளுவார்கள். அதாவது பத்துப் பேர் சேர்ந்து ஹாஸ்டலில் பொருட்களைத் திருடியிருந்தால்.. ஒருவன் சிக்கினாலே போதும். அவனைக் கிண்டி கிழங்கெடுத்த பின் "மற்றவர்களைக் காட்டிக் கொடுத்து நீ அப்ரூவராகிவிடு.. உனக்குத் தண்டனை கம்மி" என்போம். அதனால் ஒருவரை டார்கெட் செய்தாலே போதும். சீட்டுக் கட்டு போல அத்தனை நெட்வொர்க்கும் சரியும்.]]]

    ராசாவை வைத்து ராணியையும், ராஜகுருவையும், பேரரசரையும் பிடித்துவிடலாம்..! விசாரணை உண்மையாக நடைபெற்றால்..!

    ReplyDelete
  59. [[[ராஜரத்தினம் said...

    //கலைஞர்//

    கலைஞர்னா யார்? அவர் எந்த வாத்திய கலைஞர்? நாதஸ்வரமா? அப்பகூட அந்த வாத்திய கலைஞருக்கு பேர் எதாவது இருக்குமே? நீங்கள் யாரை இங்கு சொல்ல வருகிறீர்கள்? ஏதாவது கி(ச்)சுகி(ச்)சுவா?]]]

    கலைஞர்ன்னா யாருன்னு கேட்ட முதல் தமிழன் நீங்கதான் ராஜரத்தினம்..!

    ReplyDelete
  60. மதிபாலா said...
    தேர்தல் நடைமுறையை ஒரு உதாரணத்திற்கு எடுத்துக் கொள்கிறேன். இப்போதுள்ள நடைமுறை, நிற்கும் வேட்பாளர்கள் யாராவது ஒருவரைத் தேர்ந்தெடுங்கள் என்று சொல்கிறது. அப்படி யாரையும் தேர்ந்தெடுக்க விரும்பாவிடில், 49-O விதியின்படி, வாக்குச்சாவடி அலுவலரிடம் அதற்கான படிவத்தைப் பெற்று அதில் எழுதிக் கொடுக்க வேண்டும். இம்முறையில் என் கடமையைச் செய்தவனாகவும், அதே நேரம் என் வாக்கை வேறொருவர் பயன்படுத்தாதபடி என் உரிமையை நிலைநாட்டியவனாகவும் ஆவேன். ஆனால் நடப்பதென்ன? நான் போய் சாவடியில் வரிசையில் நின்று படிவத்தைக் கேட்டால் என்னைப் புழுவைப் பார்ப்பது போலப் பார்ப்பார்கள். "படிவம் என்றால் என்னவென்றே தெரியாதென்பார்கள்!" அல்லது "அது இல்லை. வரும்வரை அப்படிப் போய் ஓரமாய் உட்கார்" என்பார்கள். இது என் குற்றமா அல்லது சட்டத்தின் குற்றமா??]]]

    இப்போது தயாராக கையில் வைத்திருக்கிறார்கள் மதி.. நிச்சயம் பயன்படுத்தலாம்..! ஆனால் அதற்கு முன்பாக இந்தத் தற்போதைய கயவர்களை விரட்டியடிக்க வேண்டுமெனில் தயவு செய்து திமுக நிற்கின்ற இடங்களிலெல்லாம் எதிர் ஓட்டுக்கள் விழுக வேண்டுமே..?

    ReplyDelete
  61. இங்கு “வெளிப்படையா தெரிந்த போதிலும் “ என்பதே பிரச்சினை… மீடியாக்கள் எப்போது நீதிபதியானார்கள்???? இவர்களே குற்றஞ்சாட்டினால், புலனாய்வு, காவல்துறை நீதிமன்றம் எதற்கு?
    சரி, மீடியாக்கள் புண்ணிய புருஷர்கள் என்றால் என்.டி.டிவியின் பர்கா தத் புரோக்கர் வேலை செய்ததும் புண்ணிய காரியத்தில் சேர்த்தியோ??? இத்தனைக்கும் கபில்சிபிலை ஸ்பெக்டரம் விவகாரத்தில் தோண்டித் துருவியவர் அவர்….]]]

    மதிபாலா..

    பத்திரிகைகள் எப்படி ராசாவை இந்த விஷயத்தில் குற்றவாளியாகச் சொல்கின்றன என்பதை மறுபடியும் முழுவதையும் படித்துப் பார்த்துவிட்டு பின்பு பேசவும்.

    ReplyDelete
  62. [[[கண்டிப்பாக உங்களின் இந்த வாதத்தில் உடன்பாடுண்டு… அவர்களின் புனிதத் தன்மையைப் பற்றித்தானே உச்சநீதிமன்றம் ஆராயச் சொல்லி இருக்கிறது… ஆராய்ந்தால் அருண்ஷோரி, பிரமோத் மகாஜன் , தயாநிதி மாறன் என்ற வரிசையாக நிற்கும் புண்ணீயாத்மாக்களின் புனிதத் தன்மை தெரிந்துவிடப் போகிறது. அதற்குக் கூட காத்திராமல் ஆண்டிமுத்து ராசாவை மட்டுமே அம்மணமாக்குவதாகச் சொன்னால் அநியாயமில்லையா?????]]]

    ஏங்க மதி.. இதென்ன வாதம்..?

    ஒருத்தன் திருடி மாட்டியிருக்கான்னா.. அவனுக்கு முன்னாடி திருடுனவங்களை மொதல்ல பிடிச்சிட்டு வந்துட்டு அப்புறமா இவனைப் பிடிங்கன்னு சொல்ற மாதிரியிருக்கு..!

    ReplyDelete
  63. [[[இல்யாஸ்.மு said...

    எல்லோருமே திருடர்கள்தான். அரசியலில் நேர்மை என்ற ஒன்றை கடுகளவில்கூட கானமுடியாததாகிவிட்டது. ஊழல் செய்தவர்கள் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்றால் நூற்றுக்கு 99 பேர் இப்போதுள்ள அரசியல்வாதிகளை அப்புறப்படுத்தவேண்டும்.
    ஜெயலலிதாவும் ஊழலை எதிர்க்க கருணாநிதிக்கு வாக்களித்தோம். மறுபடியும் கருணாநிதியின் ஊழலை எதிர்க்க ஜெயலலிதாவுக்கு வாக்களிக்க வேண்டுமா? காங்கிரசாவது ஊழல் செய்தவர்களை பதவி விலக சொன்னது. பிஜேபி எடியுரப்ப்பாவின் மிரட்டலுக்கு பணிந்து அவரை பதவியை தொடர சொல்கிறதே.
    யாருக்கும் யாரும் சளைத்தவர்களில்லை. பல்லிருப்பவன் பணியாரம் சாப்புடுகிறான்.]]]

    நாம் என்னதான் செய்வது இலியாஸ்..!?

    ReplyDelete
  64. [[[Thomas Ruban said...

    நம் விரல் கொண்டே நம் கண்ணை குத்துவது என்பது இதுதான்!!!
    அரசியல்வியாதிகள் பயப்படும் ஒரே ஆயுதம் ஓட்டு மட்டுமே,அதை சரியாக, நேர்மையாக பயன்படுத்த வேண்டும்.(கட்சிகள் பார்க்காமல், உங்கள் தொகுதியில் போட்டியிடும் நேர்மையாளருக்கு வாக்களியுங்கள். என்று உங்கள் ஒவ்வொரு பதிவிலும் வலியுறுத்துங்கள் அண்ணே.) பகிர்வுக்கு நன்றி அண்ணே.]]]

    கண்டிப்பாகச் செய்வோம்.. செய்ய வேண்டும்..!

    ReplyDelete
  65. உண்மைத் தமிழன் ஐயா, தங்களோட தன்னம்பிக்கை என்னை வியக்க வைக்கிறது. ஆனாலும் நம்ம நாட்ட காப்பாத்த முடியும்கிற நம்பிக்கை எனக்கு சுத்தமா இல்லை. மத்தியிலும் மாநிலத்திலும் நம்மை ஆள்பவர்கள் எல்லோரும் பணத்துக்காக நாட்டை காட்டிக் கொடுக்கும் கயவர்கள். அந்நிய வங்கிகளில் ஆளும் கட்சி, எதிகட்சி என இரண்டு திருடர்கலுமே பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். ஒரு திருடனை இன்னொரு திருடன் காட்டிக் கொடுப்பதில்லை. [இருவரும் சேர்ந்து தாய் நாட்டை சொந்த லாபங்களுக்காக காட்டிக் கொடுப்பார்கள், அது வேறு விஷயம்]. இப்போது இந்த ராசா விஷயத்திலும் பொறுத்திருந்து பாருங்கள், சி.பி.ஐ விசாரணை லொட்டு லொசுக்கு எல்லாம் கடைசியாக புஸ் வானமாகத்தான் போகப் போகிறது, அரசுக்கு ஏற்ப்பட்ட வருமான இழப்பு 1.76 லட்சம் கோடி ரூபாய்கள் போனது போனதுதான். மீட்கவா முடியும்? இந்தியப் பணம் 80 லட்சம் கோடி ரூபாய்கள் சுவிஸ் வங்கியில் மட்டும்? எங்கிருந்து நம் நாடு வல்லரசாகும்? நினைக்க நினைக்க கண்ணைக் கட்டுகிறது. தலை சுற்றுகிறது.

    ReplyDelete
  66. ”ஓ போடு” என்று ஒரு இயக்கம் தொடங்கப்பட்டது. இன்னும் இருக்கும் என்று நினைக்கிறேன். வாக்குசாவடியில் “49O” பதிவு செய்யும் வாய்ப்பு, எளிமையானதாக ஆக்கவேண்டும் என்று வலியுருத்த, மக்களிடம் இதனை பற்றிய விளிப்புணர்வு ஏற்படுத்த தொடங்கிய இயக்கம்.

    அந்த இயக்கம் இப்போழுது இல்லை என்றாலும், உங்களை போன்றவர்கள் மீண்டும் தொடங்கலாம்.

    தேர்தலின் மிக நெருக்கத்தில் இதைப்பற்றி பேசுவதை விட, இப்பொழுது முதலே இதை ஆரம்பிக்கவேண்டும். மிண்ணனு ஒட்டுப்பதிவில், 49O சேர்ப்பது கொஞ்சம் சுலபமான செயல்தான்.

    உங்கள் சக பதிவர்கள், வாசகர்கள், நண்பர்கள், அவர்களின் சக பதிவர்கள், அவர்களின் வாசகர்கள், அவர்களின் நண்பர்கள் என்று, மீண்டும் இந்த போரட்டத்தை ஆரம்பிக்கலாம்.

    கொஞ்சம் வசதி உள்ள, நேர்மையான தலைவர்கள் உங்களுக்கு பழக்கம் இருந்தால், அவர்கள் மூலமாக நீதிமன்றத்தை நாடலாம். தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்கலாம்.

    வலைப்பதிவுகள், மின்னஞ்சல்கள், பின்னூட்டங்கள் மூலம், இந்த போரட்டத்தை முடிந்த அள்வுக்கு வலுவாக்கலாம்.

    வெறுமனே “குறைத்துக்கொண்டிருந்தால்” இந்த திருடர்கள் கவலைப்பட மாட்டார்கள். வலுவாக கடிக்கமுடியாவிட்டாலும், லேசாகவாது கடித்துவைக்கவேண்டும். அல்லது, கடிக்க வருவது போலாவது சீற்றம் காண்பிக்கவேண்டும்.

    முன் சொன்னதுபோல், நான் ஒரு சிறிய, சீற்றம் இல்லாத பொமரனியன். உங்களுக்கு சீற்றம் அதிகமாக இருக்கிறது. கடிக்கத்தொடங்குங்கள். எங்களால் கடிக்கமுடியாவிட்டாலும், உங்கள் பின்னல் இருந்து, கடிப்பது போல் படம் காட்டுகிறோம். அல்லது, குறைந்தபட்சம், குறைக்கிறோம்.

    தொடங்குங்கள் நண்பரே!!!

    சுந்தர்

    ReplyDelete
  67. Madhibala, you’ve correctly said. This is just an attempt of witch hunting of Raja and thereby Tarnishing image of DMK. As North India Medias and few political parties are biased against South Indian Parties, DMK in particular as they are part of Central Govt since 1996 (Some gap in between).

    These North India Medias did the same sort of witch hunting against Anbumani Ramadas when he attempted to bring reservation in Health Ministry and changed the head of AIMSS when he not allowed implementing reservation in higher studies.

    Dear Unmaithamizhan Sir,
    Kindly publish same sort of investigation report with help of Google and other sources on Siruthavoor Dalit’s Land grabbing issue and pseudo owners of Siruthavoor and Koda Nadu Estate of some 100+ acears.

    ReplyDelete
  68. [[[Jayadev Das said...
    உண்மைத் தமிழன் ஐயா, தங்களோட தன்னம்பிக்கை என்னை வியக்க வைக்கிறது. ஆனாலும் நம்ம நாட்ட காப்பாத்த முடியும்கிற நம்பிக்கை எனக்கு சுத்தமா இல்லை. மத்தியிலும் மாநிலத்திலும் நம்மை ஆள்பவர்கள் எல்லோரும் பணத்துக்காக நாட்டை காட்டிக் கொடுக்கும் கயவர்கள். அந்நிய வங்கிகளில் ஆளும் கட்சி, எதிகட்சி என இரண்டு திருடர்கலுமே பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். ஒரு திருடனை இன்னொரு திருடன் காட்டிக் கொடுப்பதில்லை. [இருவரும் சேர்ந்து தாய் நாட்டை சொந்த லாபங்களுக்காக காட்டிக் கொடுப்பார்கள், அது வேறு விஷயம்]. இப்போது இந்த ராசா விஷயத்திலும் பொறுத்திருந்து பாருங்கள், சி.பி.ஐ விசாரணை லொட்டு லொசுக்கு எல்லாம் கடைசியாக புஸ் வானமாகத்தான் போகப் போகிறது, அரசுக்கு ஏற்ப்பட்ட வருமான இழப்பு 1.76 லட்சம் கோடி ரூபாய்கள் போனது போனதுதான். மீட்கவா முடியும்? இந்தியப் பணம் 80 லட்சம் கோடி ரூபாய்கள் சுவிஸ் வங்கியில் மட்டும்? எங்கிருந்து நம் நாடு வல்லரசாகும்? நினைக்க நினைக்க கண்ணைக் கட்டுகிறது. தலை சுற்றுகிறது.]]]

    நம்பிக்கை வைத்துதானே தீர வேண்டும்..! 45 ஆண்டு கால கம்யூனிஸ கொடுமைகள் ஒரு நாளில் ஐரோப்பிய நாடுகளில் அழிக்கப்படவில்லையா..? அது போல ஏதோவொன்று நடக்கும் என்று நம்பிக்கையுடன் காத்திருப்போம்..!

    ReplyDelete
  69. [[[Sundar said...

    ”ஓ போடு” என்று ஒரு இயக்கம் தொடங்கப்பட்டது. இன்னும் இருக்கும் என்று நினைக்கிறேன். வாக்கு சாவடியில் “49O” பதிவு செய்யும் வாய்ப்பு, எளிமையானதாக ஆக்கவேண்டும் என்று வலியுருத்த, மக்களிடம் இதனை பற்றிய விளிப்புணர்வு ஏற்படுத்த தொடங்கிய இயக்கம். அந்த இயக்கம் இப்போழுது இல்லை என்றாலும், உங்களை போன்றவர்கள் மீண்டும் தொடங்கலாம். தேர்தலின் மிக நெருக்கத்தில் இதைப் பற்றி பேசுவதைவிட, இப்பொழுது முதலே இதை ஆரம்பிக்க வேண்டும். மிண்ணனு ஒட்டுப் பதிவில், 49O சேர்ப்பது கொஞ்சம் சுலபமான செயல்தான். உங்கள் சக பதிவர்கள், வாசகர்கள், நண்பர்கள், அவர்களின் சக பதிவர்கள், அவர்களின் வாசகர்கள், அவர்களின் நண்பர்கள் என்று, மீண்டும் இந்த போரட்டத்தை ஆரம்பிக்கலாம். கொஞ்சம் வசதி உள்ள, நேர்மையான தலைவர்கள் உங்களுக்கு பழக்கம் இருந்தால், அவர்கள் மூலமாக நீதிமன்றத்தை நாடலாம். தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்கலாம். வலைப்பதிவுகள், மின்னஞ்சல்கள், பின்னூட்டங்கள் மூலம், இந்த போரட்டத்தை முடிந்த அள்வுக்கு வலுவாக்கலாம். வெறுமனே “குறைத்துக் கொண்டிருந்தால்” இந்த திருடர்கள் கவலைப்பட மாட்டார்கள். வலுவாக கடிக்க முடியாவிட்டாலும், லேசாகவாது கடித்து வைக்க வேண்டும். அல்லது, கடிக்க வருவது போலாவது சீற்றம் காண்பிக்க வேண்டும். முன் சொன்னதுபோல், நான் ஒரு சிறிய, சீற்றம் இல்லாத பொமரனியன். உங்களுக்கு சீற்றம் அதிகமாக இருக்கிறது. கடிக்கத் தொடங்குங்கள். எங்களால் கடிக்க முடியாவிட்டாலும், உங்கள் பின்னல் இருந்து, கடிப்பது போல் படம் காட்டுகிறோம். அல்லது, குறைந்தபட்சம், குறைக்கிறோம்.
    தொடங்குங்கள் நண்பரே!!!
    சுந்தர்]]]

    சுந்தர்..

    இந்த நேரத்தில் ஒன்றை நீங்கள் நினைத்துப் பார்க்க் வேண்டும்..! 49-ஓ ஓட்டுப் போடுவதால் பெரிய மாற்றங்கள் எதுவும் சென்ற தேர்தலில் ஏற்படவில்லை.

    அதற்குப் பதிலாக தற்போதைய ஆளும் தி.மு.க. வேட்பாளர்கள் எங்கு நின்றாலும் அவர்களை எதிர்த்து வாக்களிக்க முடிவு செய்வோம். இது ஒன்றுதான் இப்போதைக்கு இவர்களிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற ஒரே வழி..!

    ReplyDelete
  70. [[[Prakash said...
    Madhibala, you’ve correctly said. This is just an attempt of witch hunting of Raja and thereby Tarnishing image of DMK. As North India Medias and few political parties are biased against South Indian Parties, DMK in particular as they are part of Central Govt since 1996 (Some gap in between)
    These North India Medias did the same sort of witch hunting against Anbumani Ramadas when he attempted to bring reservation in Health Ministry and changed the head of AIMSS when he not allowed implementing reservation in higher studies.

    Dear Unmaithamizhan Sir,
    Kindly publish same sort of investigation report with help of Google and other sources on Siruthavoor Dalit’s Land grabbing issue and pseudo owners of Siruthavoor and Koda Nadu Estate of some 100+ acears.]]]

    சிறுதாவூர் நில விவகாரம் நான் ஏற்கெனவே எழுதியதுதான்..! அதைவிட பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயை சுருட்டியிருக்கும் ராசாவுடன் ஜெயலலிதாவை ஒப்பிடாதீர்கள்..

    ஊழல் செய்வதில் ஜெயலலிதா தி.மு.க.வின் முன்பு ஒரு சாதாரண கொசு..!

    ReplyDelete
  71. மதிபாலா..

    பத்திரிகைகள் எப்படி ராசாவை இந்த விஷயத்தில் குற்றவாளியாகச் சொல்கின்றன என்பதை மறுபடியும் முழுவதையும் படித்துப் பார்த்துவிட்டு பின்பு பேசவும்./

    டித்தேன்...படித்துக்கொண்டும் இருக்கிறேன்...
    அத்தனையும் பயாஸ்டு ஒப்பினியன்ஸ் அல்லது மேம்போக்கான குற்றச்சாட்டுக்கள்....இவ்வாறு குற்றஞ்சாட்டுவதற்கான அடிப்படை ஆதாரம் மட்டுமே ஒருவரை குற்றவாளி என்று முத்திரை குத்த போதுமானதல்ல......துரதிஷ்டவசமாக இங்கு இதுதான் நடக்கிறது...!!!
    பத்திரிக்கைகள் சொல்வதெல்லாம் உண்மை என்று நீங்கள் சொல்லப்போனால், இதற்கு என்ன பதில் சொல்லுகிறீர்கள் திரு.உண்மைத் தமிழன்...

    http://jeeno.blogspot.com/2010/12/times-now.html


    உங்கள் அரசியல் நிலைப்பாட்டிற்கு ஏற்ப குற்றச்சாட்டுக்கள் வந்தால் உடனே அதை தலையில் தூக்கி வைத்து ஆடுவது தவறான முன்னுதாரணம்...!

    ReplyDelete
  72. ஏங்க மதி.. இதென்ன வாதம்..?

    ஒருத்தன் திருடி மாட்டியிருக்கான்னா.. அவனுக்கு முன்னாடி திருடுனவங்களை மொதல்ல பிடிச்சிட்டு வந்துட்டு அப்புறமா இவனைப் பிடிங்கன்னு சொல்ற மாதிரியிருக்கு..!///


    திரும்பத் திரும்ப நீங்க அதே பாயிண்டுக்குதான் வர்றீங்க பாஸ்...ராசா குற்றவாளின்னு நீங்க முடிவு பண்ணீட்டிங்கன்னு வையுங்க...அதுக்கான ஆதாரத்தை சந்து , இண்டு இடுக்கு இவற்றின் மூலம் தேடத்தான் செய்வீங்க..அதைத்தான் மீடியாக்கள் செய்கின்றன.....

    இங்கே அதுதான் நடந்துகொண்டிருக்கிறது..!!!

    ReplyDelete
  73. Madhibala, you’ve correctly said. This is just an attempt of witch hunting of Raja and thereby Tarnishing image of DMK. As North India Medias and few political parties are biased against South Indian Parties, DMK in particular as they are part of Central Govt since 1996 (Some gap in between).

    ///
    நீங்கள் சொல்வதில் சிறு மாற்றம்......வட இந்திய மீடியாக்கள் இதைக் கண்டு கொளவ்தற்கு முன்னரே ஸ்பெக்ட்ரம் ஸ்பெக்ட்ரம் என்று குதித்தது நம்ம ஊர் சன் டி.வி....அப்ப்போது குடும்பத்திற்குள் குழப்பம் இருந்தது...இப்போது ராசி ஆகி விட்டார்கள்...இன்று அவர்கள் விட்டுவிட்டார்கள்.....வட இந்திய மீடியாக்கள் பிடித்துக்கொண்டன. ...

    ஆக தன் வினை தன்னைச் சுடும்...திமுக வைத்த வினை திமுகவையே சுடுகிறது...அதற்காக "தலித்" என்ற பெயரில் விளையாடுகிறது...இன்று வட இந்திய மீடியாக்கள் போடும் ஆட்டமெல்லாம் ஸ்பெக்டரத்தில் புறக்கணிக்கப்பட்ட சில நிறுவனங்களின் சார்பாகத்தான் என்பது என் கணிப்பு..இப்போது உண்மைத்தமிழன் அவர்கள் குதிக்கிறார் என்றால் அவரது திமுக எதிர்ப்புதான் அடிப்படைக் காரணம்... ஆக , எவருக்குமே சமுக நலன் கிடையாது....அவரவர் தத்தமது வட்டத்திற்குள் நின்று "ராசா"வை கட்டம் கட்டுகிறார்கள்.......

    நிலைமை கைமீறிப்போனால் , கருணாநிதியே "ராசா"வைக் கைகழுவி விட்டுவிடுவார்...இதுதான் நடக்கப்போகிறது....!!

    ReplyDelete
  74. ஸ்பெக்டரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நேரடியாகப் பலன் பெற்றவை சில நிறுவனங்கள்....இவை பாஜக ஆட்சிக்காலத்திலிருந்தே இச்சலுகையை அனுபவித்து வருகின்றன.........அதில் கடைசியாக வந்து மாட்டியவர் ராசா..........இச்சலுகையினை பெருமுதலாளிகளுக்கு சமவீதமாக இந்தியாவை ஆளும் கட்சிகள் பங்கிட்டுக் கொண்டே வந்திருக்கின்றன...இன்று பிரச்சினை பெரிதானதும் , காங்கிரஸ் கட்சி "ராசா"வை மட்டுமே சிக்க வைத்துவிட்டு எஸ்கேப் ஆகப் பார்க்கிறது..........இல்லாவிட்டால் , டாடா போன்றவர்களின் பங்களிப்பு இதில் என்ன இருக்கிறது.....நீரா ராடியா மூலம் டாடாவும் , கனிமொழியும் "ராசா"வை அமைச்சர் ஆக்க முயன்ற ஒரு காரணமே "ராசா" மட்டுமே ஊழல் செய்திருக்கிறார் என்று நிருபிக்கப்போதுமானதா என்றுபார்க்க வேண்டும்...!

    ஆனால் , யாரும் அதைச் சொல்லமாட்டார்கள்....ஏன் நீரா ராடியா "ராசா"வை மீண்டும் தொலைத்தொடர்பு மந்திரியாக்க முயற்சித்தார்...???அதுவும் ஸ்பெக்டரம் ஒதுக்கீடு முடிந்த பிறகு வந்த அடுத்த ஆட்சியில்???

    இந்த ஸ்பெக்டரம் ஒதுக்கீட்டில் நடந்த குற்றம் குறைகளை மூடி மறைக்கவா? ஆமெனில் இன்றுவரை அதற்கான ஆதாரங்களை "ராசா" 2009 மே மாதம் முதல் அழிக்க முயற்சித்தாரா ????

    அவர் வீட்டில் அந்த ஆவணம் கைப்பற்றப்பட்டது. இந்த ஆவணம் கைப்பற்றப்பட்டது என்று வரும் அதே மீடியாச் செய்திகளின் மூலம் அவர் அவ்வாறு செய்ய முயற்சிக்கவில்லை என்று தான் நினைக்கத் தோன்றுகிறது...

    ஆக , எல்லா முதலாளிகளும் , கார்ப்பரேட் அரசியல்வாதிகளும் சேர்ந்து விளையாடி அதில் ராசாவை மட்டுமே சிக்கவைத்து விட்டு எஸ்கேப் ஆகிவிட்டார்களா என்பதே இங்கு ஆராயப்பட வேண்டியது...எய்தவர் யாரோ........அவர் எங்கிருக்கிறாரோ......யாருக்கும் தெரியாது...அம்பை எடுத்து வந்து ஆராய்ச்சி செய்தால் மிஞ்சப் போவது ஒன்றுமில்லை, மாறாக செலவு இந்திய மக்களின் வரிப்பணத்தில் இன்னும் சில கோடிகள்தான்....

    அரசியல்வாதிகள் அவர்களுக்கான அனுகூலத்திற்காக தனி மனிதர்களை அவதூறாக விமர்சிப்பதுண்டு........ஆனால் , படித்த வர்க்கம் கூட இந்த அடிப்படை உண்மையைப் புரிந்துகொள்ளாமல் , "ஆண்டிமுத்து" ராசாவை அம்மணப்படுத்தத் துடிப்பதுதான் வரலாற்றுச் சோகம்..."ராசா" விற்கு நேர்ந்த பரிதாபம்!

    ReplyDelete
  75. 49ஓ என்று நான் சொல்வது, தனி படிவத்தில் பதிவு செய்யும் தற்போதைய முறையை அல்ல. வாக்கு சீட்டிலேயே, அல்லது வாக்கு இயந்திரத்திலேயெ, 49ஓ மற்றும் ஒரு வாக்காளர் போல் இருக்கவேண்டும். எளிமையாக இருக்கவேண்டும்.

    நீங்கள் சொல்லும் முறையில், வேறு ஒரு கட்சியை சேர்ந்த இன்னொரு வியாதி தான் ஜெயிக்கும். அல்லது, ஒரு நல்ல சுயேட்ச்சை வேட்பாளரை ஆதரிக்கலாம் என்றால், ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று நல்ல வேட்பாளரை தேர்ந்தெடுத்து அவருக்கு ஆதரவு தெரிவிக்கவேண்டும். இதை ஒரு இயக்கமாக நிச்சயம் செய்யமுடியாது.

    49ஓ எளிமைப்படுத்துவதுதான் ஒரு சிறந்த துவக்கமாக இருக்கும். ஒரு வோட்டு வித்தியாசத்தில் வென்றாலும் அது வெற்றிதான். 49ஓ இல்லாத பட்சத்தில், வெறுப்பு ஓட்டுக்கள் மற்ற சுயேட்சை வேட்பாளர்களிடையே பிரிந்துவிடும். இது பிரபல அரசியல் கட்சியின் வேட்பாளருக்கு சாதகமாகவேதான் இருக்கும். திமுக, அதிமுக அல்லது இவர்களின் கூட்டணி வேட்பாளர் மட்டுமே ஜெயிக்கமுடியும்.

    சுந்தர்

    ReplyDelete
  76. Scotland Yards policukku apparam namma Tamil Nadu police daan worldlaiye bestunnu soldrangaley?? adhu Unmaiyaa?? (Neenga kooda oru article la India's Scotland yard-Tamil nadu policenu solli irukkengaley!!)

    ReplyDelete
  77. [[[Blogger மதிபாலா said...

    Madhibala, you’ve correctly said. This is just an attempt of witch hunting of Raja and thereby Tarnishing image of DMK. As North India Medias and few political parties are biased against South Indian Parties, DMK in particular as they are part of Central Govt since 1996 (Some gap in between).

    ///
    நீங்கள் சொல்வதில் சிறு மாற்றம்......வட இந்திய மீடியாக்கள் இதைக் கண்டு கொளவ்தற்கு முன்னரே ஸ்பெக்ட்ரம் ஸ்பெக்ட்ரம் என்று குதித்தது நம்ம ஊர் சன் டி.வி....அப்ப்போது குடும்பத்திற்குள் குழப்பம் இருந்தது...இப்போது ராசி ஆகி விட்டார்கள்...இன்று அவர்கள் விட்டுவிட்டார்கள்.....வட இந்திய மீடியாக்கள் பிடித்துக்கொண்டன. ...

    ஆக தன் வினை தன்னைச் சுடும்...திமுக வைத்த வினை திமுகவையே சுடுகிறது...அதற்காக "தலித்" என்ற பெயரில் விளையாடுகிறது...இன்று வட இந்திய மீடியாக்கள் போடும் ஆட்டமெல்லாம் ஸ்பெக்டரத்தில் புறக்கணிக்கப்பட்ட சில நிறுவனங்களின் சார்பாகத்தான் என்பது என் கணிப்பு..இப்போது உண்மைத்தமிழன் அவர்கள் குதிக்கிறார் என்றால் அவரது திமுக எதிர்ப்புதான் அடிப்படைக் காரணம்... ஆக , எவருக்குமே சமுக நலன் கிடையாது....அவரவர் தத்தமது வட்டத்திற்குள் நின்று "ராசா"வை கட்டம் கட்டுகிறார்கள்.......

    நிலைமை கைமீறிப்போனால் , கருணாநிதியே "ராசா"வைக் கைகழுவி விட்டுவிடுவார்...இதுதான் நடக்கப்போகிறது....!!]]]

    எவருக்குமே சமூக நலன் கிடையாது என்பது உண்மைதான்! ஒவ்வொருவருமே மக்களுக்கு என்ன நல்லது செய்யப்போகிறோம்? போடுகிற திட்டங்கள் முழுமையாய் மக்களைச் சென்றடைவதற்கு என்ன வழி? தொழில்நுட்பம் அபாரமாய் வளர்ந்திருக்கும் இக்காலகட்டத்தில் புதுமையான வழிகளில் நாட்டை முன்னேற்றிச் செல்வது எப்படி? யாரும் ஊழல் செய்திராதபடி சட்டத்திருத்தங்கள் செய்வதெப்படி? சிறப்பான நிர்வாக மேம்பாடுகளை அமல்படுத்துவதெப்படி? என்பதைப் பற்றியெல்லாம் மேடைகளில் விளக்கி மக்களிடன் வாக்கு சேகரிக்க மாட்டார்கள்.

    ஜெயலலிதா கருணாநிதி செய்த வீட்டு வசதி வாரிய ஊழல்களைப் பட்டியலிடுவார். கருணாநிதி ஜெயலலிதாவின் வீட்டு வசதி வாரிய ஊழல்களைப் பட்டியலிடுவார்.

    அவன் கெட்டவனாயிருப்பதால் எனக்குப் போடு என்று அவளும், அவள் கெட்டவளாயிருப்பதால் எனக்குப் போடு என்று அவனும் மார்தட்டும் கூத்துக்கள்தான் இங்கே அரங்கேறுகின்றன. ராசா போனால் இங்கே இன்னொரு கூசா வராமல் போகமாட்டான்.

    என்னைப் பொருத்தவரை அவன் ராசாவா இல்லை கூசாவா என்பது விஷயமல்ல. எப்படி வீட்டுவசதி வாரிய அதிகார துஷ்பிரயோகத்தை நாம் வெளிச்சம் போட்டு காட்டியவுடன் கருணாநிதி ஜெயலலிதாவின் வீட்டுவசதி வாரிய ஊழல்களை வாந்தி எடுத்தாரோ, அது போல நாம புடிக்கற புடியில் எல்லா நாதாரிகளும் தாமாகவே உண்மைகளை வாந்தியெடுப்பர்.

    அதற்கு ராசாவும், திமுகவும், காங்கிரஸும் பலிகடா என்றால் அப்படிக் கூட இருந்துவிட்டுப் போகட்டுமே!

    ReplyDelete
  78. [[[Sundar said...

    49ஓ என்று நான் சொல்வது, தனி படிவத்தில் பதிவு செய்யும் தற்போதைய முறையை அல்ல. வாக்கு சீட்டிலேயே, அல்லது வாக்கு இயந்திரத்திலேயெ, 49ஓ மற்றும் ஒரு வாக்காளர் போல் இருக்கவேண்டும். எளிமையாக இருக்கவேண்டும்.

    நீங்கள் சொல்லும் முறையில், வேறு ஒரு கட்சியை சேர்ந்த இன்னொரு வியாதி தான் ஜெயிக்கும். அல்லது, ஒரு நல்ல சுயேட்ச்சை வேட்பாளரை ஆதரிக்கலாம் என்றால், ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று நல்ல வேட்பாளரை தேர்ந்தெடுத்து அவருக்கு ஆதரவு தெரிவிக்கவேண்டும். இதை ஒரு இயக்கமாக நிச்சயம் செய்யமுடியாது.

    49ஓ எளிமைப்படுத்துவதுதான் ஒரு சிறந்த துவக்கமாக இருக்கும். ஒரு வோட்டு வித்தியாசத்தில் வென்றாலும் அது வெற்றிதான். 49ஓ இல்லாத பட்சத்தில், வெறுப்பு ஓட்டுக்கள் மற்ற சுயேட்சை வேட்பாளர்களிடையே பிரிந்துவிடும். இது பிரபல அரசியல் கட்சியின் வேட்பாளருக்கு சாதகமாகவேதான் இருக்கும். திமுக, அதிமுக அல்லது இவர்களின் கூட்டணி வேட்பாளர் மட்டுமே ஜெயிக்கமுடியும்.

    சுந்தர்]]]

    நானும் இதையேதான் வழிமொழிகிறேன் சுந்தர். ஓட்டிச்சீட்டிலோ அல்லது மின்னணுப் பெட்டியிலேயோ அதற்கான ஆப்ஷன் கொடுக்கப்படவேண்டும். இம்முறையில் நாம் யாருக்குப் போடுகிறோம் என்ற ரகசியம் காக்கப்படும். சராசரியாக நாற்பது சதவீதம் பேர் தான் வாக்குப் பதிவு செய்கின்றனர் என்றால் மீதமுள்ள அனைவரில் பெரும்பாலானோர் சாவடிக்கு வந்தால் 49ஓ தான் தேர்ந்தெடுப்பர். அதனால் நாம் வெற்றி பெரும் பட்சத்தில் அதே வேட்பாளர்கள் மறுபடியும் தேர்தலில் நிற்க முடியாது. புதியவர்கள் நிற்பார்கள். அவர்களில் நல்லவர் ஒருவரை நாம் தேர்ந்தெடுக்கலாம். இம்முறையில் ஜனநாயகம் கேலிக்கூத்தாகும் என்று சிலர் சொல்லக்கூடும்!!! அவர்களுக்கு நான் சொல்லக் கூடிய பதில், "வெண்ணெய்களா... இப்போ மட்டும் என்ன வாழுதாக்கும்..!!!

    ReplyDelete
  79. சரவணன் அண்ணன் சொல்வதில் இந்த 49ஓ கருத்தில் மட்டும்தான் நான் வேறுபடுகிறேன். வேட்பாளர் பிடிக்கவில்லை என்ற ஆப்ஷன் மின்னணுப் பெட்டியிலேயே கொடுக்க வேண்டும். அதற்கான சட்டத் திருத்தம் வேண்டும். அதனால் தான் சொல்கிறேன்.. நாம் தவறானவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு சட்டமும் ஒரு காரணம் என்று!! சட்டமும் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும்!! ஆனால் அந்த சட்டத்தை நிறைவேற்ற வேண்டியது இந்த அரசியல்வியாதி நொன்னைகள்தானே?? நிறைவேற்றுவார்களா?

    ReplyDelete
  80. [[[ "வெண்ணெய்களா... இப்போ மட்டும் என்ன வாழுதாக்கும்..!!!]]]

    ரொம்ப சரி ரிஷி.

    அன்பு உண்மைத்தமிழரே, 49ஓ பற்றி ஒரு நாள் எழுதுங்களேன்.

    சுந்தர்.

    ReplyDelete
  81. //கலைஞர்ன்னா யாருன்னு கேட்ட முதல் தமிழன் நீங்கதான் ராஜரத்தினம்..!//

    கலைஞர்னா யாருன்னு தெரியாதவன் தமிழனாகவே இருக்கமுடியாதுனு சொல்ற அல்லகைகள் உலவும் இந்த பதிவுலகில் என்னை தமிழன் என்று ஏற்றுக்கொண்டதற்கு நன்றி.ஆனால் என் கேள்விக்கென்ன பதில்? ஏன்னா? இங்க கலைகளில் திறமை உள்ள எல்லாரும் கலைஞர்தான். ஏன் ஜெயலலிதாவும் கலைஞர்தான். எம்.ஜி.ஆரும் கலைஞர்தான். இப்படி நிறைய கலைஞர்கள் இருக்கும்போது நீங்கள் சொல்லும் கலைஞர் யார்? கருணாநிதியையா? அப்ப கலைஞர் கருணாநிதின்னுதானே எழுதியிருக்கவேண்டும். பொருட்குற்றம் ஆகாது (உண்மை)தமிழனே?

    ReplyDelete
  82. 176000 கோடி ரூபாயை தமிழகத்தின் மொத்த வாக்காளர்களுக்கும் சமபங்காகப் பிரித்தால் தலைக்குச் சற்றொப்ப 40000 ரூபாய் வருமாம். எப்பதுக்கலும் போக எஞ்சியதில் 20000 ரூபாய் ஓட்டுக்கு விலை கொடுக்கலாமாம். இது SMS மூலம் வந்த புள்ளி(ராசா) விவரம்.

    ஆனால், இந்தச் செலவுக்குக் கள்ள ஓட்டு லாபகரமானது என்று போய்விடுவார்கள் அமுக்கிய முற்போக்குக் கூட்டணியினர்.

    ReplyDelete
  83. [[[மதிபாலா said...

    படித்தேன். படித்துக்கொண்டும் இருக்கிறேன். அத்தனையும் பயாஸ்டு ஒப்பினியன்ஸ் அல்லது மேம்போக்கான குற்றச்சாட்டுக்கள். இவ்வாறு குற்றஞ்சாட்டுவதற்கான அடிப்படை ஆதாரம் மட்டுமே ஒருவரை குற்றவாளி என்று முத்திரை குத்த போதுமானதல்ல. துரதிஷ்டவசமாக இங்கு இதுதான் நடக்கிறது!!! பத்திரிக்கைகள் சொல்வதெல்லாம் உண்மை என்று நீங்கள் சொல்லப் போனால், இதற்கு என்ன பதில் சொல்லுகிறீர்கள் திரு.உண்மைத் தமிழன்...]]]

    நன்றி மதிபாலா.. அப்படியானால் உங்களைத் திருப்திப்படுத்தும் அளவுக்கான ஆதாரங்களைச் சேகரித்து நாங்கள் தரும்வரையில் சற்று அமைதியுடன் காத்திருங்கள்..!

    ReplyDelete
  84. [[[மதிபாலா said...

    ஏங்க மதி.. இதென்ன வாதம்..?
    ஒருத்தன் திருடி மாட்டியிருக்கான்னா. அவனுக்கு முன்னாடி திருடுனவங்களை மொதல்ல பிடிச்சிட்டு வந்துட்டு அப்புறமா இவனைப் பிடிங்கன்னு சொல்ற மாதிரியிருக்கு..!///

    திரும்பத் திரும்ப நீங்க அதே பாயிண்டுக்குதான் வர்றீங்க பாஸ். ராசா குற்றவாளின்னு நீங்க முடிவு பண்ணீட்டிங்கன்னு வையுங்க. அதுக்கான ஆதாரத்தை சந்து, இண்டு இடுக்கு இவற்றின் மூலம் தேடத்தான் செய்வீங்க. அதைத்தான் மீடியாக்கள் செய்கின்றன. இங்கே அதுதான் நடந்து கொண்டிருக்கிறது..!!!]]]

    காமெடி செய்றீங்க மதிபாலா..! ஞாநி தன்னோட தளத்துல இதைப் பத்தி ஒரு மேட்டர் எழுதியிருக்காரு. தயவு செய்து அதைப் படிச்சிட்டாவது வாங்க..!

    ReplyDelete
  85. [[[மதிபாலா said...
    வட இந்திய மீடியாக்கள் இதைக் கண்டு கொளவ்தற்கு முன்னரே ஸ்பெக்ட்ரம் ஸ்பெக்ட்ரம் என்று குதித்தது நம்ம ஊர் சன் டி.வி. அப்ப்போது குடும்பத்திற்குள் குழப்பம் இருந்தது. இப்போது ராசி ஆகி விட்டார்கள். இன்று அவர்கள் விட்டுவிட்டார்கள். வட இந்திய மீடியாக்கள் பிடித்துக் கொண்டன.
    ஆக தன் வினை தன்னைச் சுடும். திமுக வைத்த வினை திமுகவையே சுடுகிறது. அதற்காக "தலித்" என்ற பெயரில் விளையாடுகிறது. இன்று வட இந்திய மீடியாக்கள் போடும் ஆட்டமெல்லாம் ஸ்பெக்டரத்தில் புறக்கணிக்கப்பட்ட சில நிறுவனங்களின் சார்பாகத்தான் என்பது என் கணிப்பு. இப்போது உண்மைத்தமிழன் அவர்கள் குதிக்கிறார் என்றால் அவரது திமுக எதிர்ப்புதான் அடிப்படைக் காரணம். ஆக, எவருக்குமே சமுக நலன் கிடையாது. அவரவர் தத்தமது வட்டத்திற்குள் நின்று "ராசா"வை கட்டம் கட்டுகிறார்கள். நிலைமை கை மீறிப் போனால், கருணாநிதியே "ராசா"வைக் கை கழுவி விட்டு விடுவார். இதுதான் நடக்கப் போகிறது.!!]]]

    நீங்கள் எந்த வட்டத்துக்குள் நிற்கிறீர்கள் ஸார்..?

    ReplyDelete
  86. மதிபாலா said...

    ஸ்பெக்டரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நேரடியாகப் பலன் பெற்றவை சில நிறுவனங்கள். இவை பாஜக ஆட்சிக் காலத்திலிருந்தே இச்சலுகையை அனுபவித்து வருகின்றன. அதில் கடைசியாக வந்து மாட்டியவர் ராசா. இச்சலுகையினை பெரு முதலாளிகளுக்கு சமவீதமாக இந்தியாவை ஆளும் கட்சிகள் பங்கிட்டுக் கொண்டே வந்திருக்கின்றன. இன்று பிரச்சினை பெரிதானதும், காங்கிரஸ் கட்சி "ராசா"வை மட்டுமே சிக்க வைத்துவிட்டு எஸ்கேப் ஆகப் பார்க்கிறது. இல்லாவிட்டால், டாடா போன்றவர்களின் பங்களிப்பு இதில் என்ன இருக்கிறது. நீரா ராடியா மூலம் டாடாவும், கனிமொழியும் "ராசா"வை அமைச்சர் ஆக்க முயன்ற ஒரு காரணமே "ராசா" மட்டுமே ஊழல் செய்திருக்கிறார் என்று நிருபிக்கப் போதுமானதா என்று பார்க்க வேண்டும்...!]]]

    சுப்ரீம் கோர்ட் விசாரணை மட்டுமல்ல.. இத்தனை ஆண்டு காலமாக தமிழக அரசியலைக் கூர்ந்து கவனித்து வரும் பொதுமக்களுக்கே நன்கு தெரியும் இது எதற்கான கூட்டணி என்று..?

    [[[ஆனால், யாரும் அதைச் சொல்லமாட்டார்கள். ஏன் நீரா ராடியா "ராசா"வை மீண்டும் தொலைத்தொடர்பு மந்திரியாக்க முயற்சித்தார்...??? அதுவும் ஸ்பெக்டரம் ஒதுக்கீடு முடிந்த பிறகு வந்த அடுத்த ஆட்சியில்???]]]

    அப்போ அவருடைய ஆட்சியில் கையெழுத்திட்ட பேப்பர்களெல்லாம் போலியா? பிராடா..?

    [[[இந்த ஸ்பெக்டரம் ஒதுக்கீட்டில் நடந்த குற்றம் குறைகளை மூடி மறைக்கவா? ஆமெனில் இன்றுவரை அதற்கான ஆதாரங்களை "ராசா" 2009 மே மாதம் முதல் அழிக்க முயற்சித்தாரா????]]]

    எப்படி முயற்சிப்பார்..? அனுப்பிய கடிதங்களை திரும்பப் பெற முடியுமா..? உங்க காமெடிக்கு அளவே இல்லையா மதி..?

    [[[அவர் வீட்டில் அந்த ஆவணம் கைப்பற்றப்பட்டது. இந்த ஆவணம் கைப்பற்றப்பட்டது என்று வரும் அதே மீடியாச் செய்திகளின் மூலம் அவர் அவ்வாறு செய்ய முயற்சிக்கவில்லை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.]]]

    நீங்க இப்படியே நினைத்துக் கொள்ளுங்கள். நோ பிராப்ளம்..!

    ReplyDelete
  87. [[[Sundar said...

    49-ஓ என்று நான் சொல்வது, தனி படிவத்தில் பதிவு செய்யும் தற்போதைய முறையை அல்ல. வாக்கு சீட்டிலேயே, அல்லது வாக்கு இயந்திரத்திலேயெ, 49-ஓ மற்றும் ஒரு வாக்காளர் போல் இருக்க வேண்டும். எளிமையாக இருக்க வேண்டும்.

    நீங்கள் சொல்லும் முறையில், வேறு ஒரு கட்சியை சேர்ந்த இன்னொரு வியாதிதான் ஜெயிக்கும். அல்லது, ஒரு நல்ல சுயேட்ச்சை வேட்பாளரை ஆதரிக்கலாம் என்றால், ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று நல்ல வேட்பாளரை தேர்ந்தெடுத்து அவருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். இதை ஒரு இயக்கமாக நிச்சயம் செய்ய முடியாது.
    49-ஓ எளிமைப்படுத்துவதுதான் ஒரு சிறந்த துவக்கமாக இருக்கும். ஒரு வோட்டு வித்தியாசத்தில் வென்றாலும் அது வெற்றிதான். 49-ஓ இல்லாத பட்சத்தில், வெறுப்பு ஓட்டுக்கள் மற்ற சுயேட்சை வேட்பாளர்களிடையே பிரிந்துவிடும். இது பிரபல அரசியல் கட்சியின் வேட்பாளருக்கு சாதகமாகவேதான் இருக்கும். திமுக, அதிமுக அல்லது இவர்களின் கூட்டணி வேட்பாளர் மட்டுமே ஜெயிக்க முடியும்.
    சுந்தர்]]]

    இல்லை சுந்தர்.. முற்றிலுமாக இதனை மறுக்கிறேன்.

    தமிழகத்தின் இன்றைய அரசியல் சூழலில் 49-ஓ தற்போதைக்கு வேண்டாம். தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்புவது என்ற ஒற்றை அஜெண்டாவை வைத்து மட்டுமே நாம் பேச வேண்டும்..!

    ReplyDelete
  88. [[[Sai said...
    Scotland Yards policukku apparam namma Tamil Nadu policedaan worldlaiye bestunnu soldrangaley?? adhu Unmaiyaa??

    (Neenga kooda oru article la India's Scotland yard-Tamil nadu policenu solli irukkengaley!!)]]]

    ஆமாமாம்.. உண்மைதான்.. வீரப்பன் விவகாரத்திலேயே இந்த உண்மை வெளிப்பட்டுவிட்டது..!

    ReplyDelete
  89. [[[ரிஷி said...

    எவருக்குமே சமூக நலன் கிடையாது என்பது உண்மைதான்! ஒவ்வொருவருமே மக்களுக்கு என்ன நல்லது செய்யப் போகிறோம்? போடுகிற திட்டங்கள் முழுமையாய் மக்களைச் சென்றடைவதற்கு என்ன வழி? தொழில் நுட்பம் அபாரமாய் வளர்ந்திருக்கும் இக்காலகட்டத்தில் புதுமையான வழிகளில் நாட்டை முன்னேற்றிச் செல்வது எப்படி? யாரும் ஊழல் செய்திராதபடி சட்டத் திருத்தங்கள் செய்வதெப்படி? சிறப்பான நிர்வாக மேம்பாடுகளை அமல்படுத்துவதெப்படி? என்பதைப் பற்றியெல்லாம் மேடைகளில் விளக்கி மக்களிடன் வாக்கு சேகரிக்க மாட்டார்கள்.

    ஜெயலலிதா கருணாநிதி செய்த வீட்டு வசதி வாரிய ஊழல்களைப் பட்டியலிடுவார். கருணாநிதி ஜெயலலிதாவின் வீட்டு வசதி வாரிய ஊழல்களைப் பட்டியலிடுவார்.

    அவன் கெட்டவனாயிருப்பதால் எனக்குப் போடு என்று அவளும், அவள் கெட்டவளாயிருப்பதால் எனக்குப் போடு என்று அவனும் மார்தட்டும் கூத்துக்கள்தான் இங்கே அரங்கேறுகின்றன. ராசா போனால் இங்கே இன்னொரு கூசா வராமல் போகமாட்டான்.

    என்னைப் பொருத்தவரை அவன் ராசாவா இல்லை கூசாவா என்பது விஷயமல்ல. எப்படி வீட்டு வசதி வாரிய அதிகார துஷ்பிரயோகத்தை நாம் வெளிச்சம் போட்டு காட்டியவுடன் கருணாநிதி ஜெயலலிதாவின் வீட்டு வசதி வாரிய ஊழல்களை வாந்தி எடுத்தாரோ, அது போல நாம புடிக்கற புடியில் எல்லா நாதாரிகளும் தாமாகவே உண்மைகளை வாந்தியெடுப்பர்.

    அதற்கு ராசாவும், திமுகவும், காங்கிரஸும் பலிகடா என்றால் அப்படிக்கூட இருந்துவிட்டுப் போகட்டுமே!]]]

    நன்றி..!

    ReplyDelete
  90. [[[ரிஷி said...

    நானும் இதையேதான் வழிமொழிகிறேன் சுந்தர். ஓட்டிச் சீட்டிலோ அல்லது மின்னணுப் பெட்டியிலேயோ அதற்கான ஆப்ஷன் கொடுக்கப்படவேண்டும். இம்முறையில் நாம் யாருக்குப் போடுகிறோம் என்ற ரகசியம் காக்கப்படும். சராசரியாக நாற்பது சதவீதம் பேர்தான் வாக்குப் பதிவு செய்கின்றனர் என்றால் மீதமுள்ள அனைவரில் பெரும்பாலானோர் சாவடிக்கு வந்தால் 49-ஓதான் தேர்ந்தெடுப்பர். அதனால் நாம் வெற்றி பெரும் பட்சத்தில் அதே வேட்பாளர்கள் மறுபடியும் தேர்தலில் நிற்க முடியாது. புதியவர்கள் நிற்பார்கள். அவர்களில் நல்லவர் ஒருவரை நாம் தேர்ந்தெடுக்கலாம். இம்முறையில் ஜனநாயகம் கேலிக்கூத்தாகும் என்று சிலர் சொல்லக்கூடும்!!! அவர்களுக்கு நான் சொல்லக் கூடிய பதில், "வெண்ணெய்களா... இப்போ மட்டும் என்ன வாழுதாக்கும்..!!!]]]

    ஓகே.. ஓகே.. ரிஷி என்ன இப்படி.. வர வர எனக்குப் போட்டியாகவே எழுதுகிறீர்கள்.. எச்சரிக்கிறேன்..!

    ReplyDelete
  91. [[[ரிஷி said...
    சரவணன் அண்ணன் சொல்வதில் இந்த 49-ஓ கருத்தில் மட்டும்தான் நான் வேறுபடுகிறேன். வேட்பாளர் பிடிக்கவில்லை என்ற ஆப்ஷன் மின்னணுப் பெட்டியிலேயே கொடுக்க வேண்டும். அதற்கான சட்டத் திருத்தம் வேண்டும். அதனால்தான் சொல்கிறேன். நாம் தவறானவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு சட்டமும் ஒரு காரணம் என்று!! சட்டமும் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும்!! ஆனால் அந்த சட்டத்தை நிறைவேற்ற வேண்டியது இந்த அரசியல்வியாதி நொன்னைகள்தானே?? நிறைவேற்றுவார்களா?]]]

    கண்டிப்பாக நிறைவேற்ற மாட்டார்கள்..!

    ஒரு தொகுதியில் 49-ஓ-வை பயன்படுத்தும் அளவுக்கு யோசிக்கக் கூடியவர்கள் ஆயிரக்கணக்கில் இருந்தால் அப்போது 49-ஓ பற்றி யோசிக்கலாம்.. இப்போது வேண்டாமே ரிஷி..!

    ReplyDelete
  92. [[[Sundar said...

    [[[ "வெண்ணெய்களா... இப்போ மட்டும் என்ன வாழுதாக்கும்..!!!]]]

    ரொம்ப சரி ரிஷி. அன்பு உண்மைத்தமிழரே, 49ஓ பற்றி ஒரு நாள் எழுதுங்களேன்.

    சுந்தர்.]]]

    எழுதிருவோம் சுந்தர்..!

    ReplyDelete
  93. [[[ராஜரத்தினம் said...

    //கலைஞர்ன்னா யாருன்னு கேட்ட முதல் தமிழன் நீங்கதான் ராஜரத்தினம்..!//

    கலைஞர்னா யாருன்னு தெரியாதவன் தமிழனாகவே இருக்க முடியாதுனு சொல்ற அல்லகைகள் உலவும் இந்த பதிவுலகில் என்னை தமிழன் என்று ஏற்றுக் கொண்டதற்கு நன்றி.ஆனால் என் கேள்விக்கென்ன பதில்?

    ஏன்னா? இங்க கலைகளில் திறமை உள்ள எல்லாரும் கலைஞர்தான். ஏன் ஜெயலலிதாவும் கலைஞர்தான். எம்.ஜி.ஆரும் கலைஞர்தான். இப்படி நிறைய கலைஞர்கள் இருக்கும்போது நீங்கள் சொல்லும் கலைஞர் யார்? கருணாநிதியையா? அப்ப கலைஞர் கருணாநிதின்னுதானே எழுதியிருக்கவேண்டும். பொருட்குற்றம் ஆகாது (உண்மை)தமிழனே?]]]

    ஓ.. நீங்க அப்படி வர்றீங்களா..? சரண்டராயிடறேன்..!

    இவர் சாதாரணக் கலைஞர் இல்லை.. கலைஞர்களுக்கெல்லாம் கலைஞர்..!

    ReplyDelete
  94. [[[Arun Ambie said...

    176000 கோடி ரூபாயை தமிழகத்தின் மொத்த வாக்காளர்களுக்கும் சம பங்காகப் பிரித்தால் தலைக்குச் சற்றொப்ப 40000 ரூபாய் வருமாம். எப்பதுக்கலும் போக எஞ்சியதில் 20000 ரூபாய் ஓட்டுக்கு விலை கொடுக்கலாமாம். இது SMS மூலம் வந்த புள்ளி(ராசா) விவரம்.

    ஆனால், இந்தச் செலவுக்குக் கள்ள ஓட்டு லாபகரமானது என்று போய்விடுவார்கள் அமுக்கிய முற்போக்குக் கூட்டணியினர்.]]]

    ஹி.. ஹி.. வர்ற தேர்தல்ல அதைத்தான் செய்யப் போறாங்க..!

    ReplyDelete
  95. [[[உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

    [[[ரிஷி said...

    நானும் இதையேதான் வழிமொழிகிறேன் சுந்தர். ஓட்டிச் சீட்டிலோ அல்லது மின்னணுப் பெட்டியிலேயோ அதற்கான ஆப்ஷன் கொடுக்கப்படவேண்டும். இம்முறையில் நாம் யாருக்குப் போடுகிறோம் என்ற ரகசியம் காக்கப்படும். சராசரியாக நாற்பது சதவீதம் பேர்தான் வாக்குப் பதிவு செய்கின்றனர் என்றால் மீதமுள்ள அனைவரில் பெரும்பாலானோர் சாவடிக்கு வந்தால் 49-ஓதான் தேர்ந்தெடுப்பர். அதனால் நாம் வெற்றி பெரும் பட்சத்தில் அதே வேட்பாளர்கள் மறுபடியும் தேர்தலில் நிற்க முடியாது. புதியவர்கள் நிற்பார்கள். அவர்களில் நல்லவர் ஒருவரை நாம் தேர்ந்தெடுக்கலாம். இம்முறையில் ஜனநாயகம் கேலிக்கூத்தாகும் என்று சிலர் சொல்லக்கூடும்!!! அவர்களுக்கு நான் சொல்லக் கூடிய பதில், "வெண்ணெய்களா... இப்போ மட்டும் என்ன வாழுதாக்கும்..!!!]]]

    ஓகே.. ஓகே.. ரிஷி என்ன இப்படி.. வர வர எனக்குப் போட்டியாகவே எழுதுகிறீர்கள்.. எச்சரிக்கிறேன்..! ]]]

    :-))))

    ReplyDelete
  96. [[[உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

    [[[ரிஷி said...
    சரவணன் அண்ணன் சொல்வதில் இந்த 49-ஓ கருத்தில் மட்டும்தான் நான் வேறுபடுகிறேன். வேட்பாளர் பிடிக்கவில்லை என்ற ஆப்ஷன் மின்னணுப் பெட்டியிலேயே கொடுக்க வேண்டும். அதற்கான சட்டத் திருத்தம் வேண்டும். அதனால்தான் சொல்கிறேன். நாம் தவறானவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு சட்டமும் ஒரு காரணம் என்று!! சட்டமும் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும்!! ஆனால் அந்த சட்டத்தை நிறைவேற்ற வேண்டியது இந்த அரசியல்வியாதி நொன்னைகள்தானே?? நிறைவேற்றுவார்களா?]]]

    கண்டிப்பாக நிறைவேற்ற மாட்டார்கள்..!

    ஒரு தொகுதியில் 49-ஓ-வை பயன்படுத்தும் அளவுக்கு யோசிக்கக் கூடியவர்கள் ஆயிரக்கணக்கில் இருந்தால் அப்போது 49-ஓ பற்றி யோசிக்கலாம்.. இப்போது வேண்டாமே ரிஷி..! ]]]

    ஹும்ம்.. இருக்கலாம். எதுவானாலும் முதலில் திமுகவுக்கு சங்கு ஊதிட்டு அப்புறம் என்ன வேணாலும் செய்வோம்ங்கிறீங்க. பார்ப்போம்!!

    ஆனாலும் அந்த ஆயிரக்கணக்கானவர்கள் உருவாக வேண்டும்! அதுதான் என் விருப்பம்!

    உங்களை மாதிரி நானும் ராக்கோழி ஆயிட்டேன் பாருங்க..!!

    ReplyDelete
  97. //இவர் சாதாரணக் கலைஞர் இல்லை.. கலைஞர்களுக்கெல்லாம் கலைஞர்//

    நான் ஏன் கலைஞர் அப்படி சொல்லகூடாதுன்றனா கருணாநிதியை கலைஞர்னு சொல்றவங்கலாம், அவருடைய (தற்காலிக, மற்றும் அவரின் ஆதாயங்களுக்கான) அல்லக்கைகள்தான். வேறு யாரும் கலைஞர்னு சொல்வது கிடையாது. சொல்லமாட்டார்கள். அதற்கு அவர்களின் தன்மானம் இடம் கொடுக்காது என்பது என் உறுதியான கருத்து.

    ReplyDelete
  98. தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக எழுதுகிறீர்கள் நீங்கள் உண்மைத் தமிழன் நீங்கள்? உங்கள் 2 விமர்சனம் படித்தேன் 1 இது 2மன்மதன் அம்பு நீங்கள் உண்மைத் தமிழன் இல்லை..நீ ஒரு தற்காலிக தமிழன?நீ ஒரு பார்..............நீங்கள் ஒரு ஜனநாயகம் கேலிக்கூத்து]]]உங்கள் பதிவுகள் சமூக நலன் கிடையாது|||||||||||||இது பார்...........நலன்''' இப்போது வேண்டாமே ரிஷி..!சங்கு ஊதிட உங்கள் முடியாது.உங்கள் மீடியாச் செய்திகளின் ஜனநாயகம் கேலிக்கூத்து நிச்சயமாக பார்க்கலாம்.வாய் மூடு.!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  99. நன்றி மதிபாலா.. அப்படியானால் உங்களைத் திருப்திப்படுத்தும் அளவுக்கான ஆதாரங்களைச் சேகரித்து நாங்கள் தரும்வரையில் சற்று அமைதியுடன் காத்திருங்கள்..//

    ஆதாரம் இல்லாமல் அரசியல் காரணங்களுக்காய்த்தான் இக்குற்றச்சாட்டுக்கள் பரப்பப்படுகின்றன , இனிமேல் தான் ஆதாரம் தேடப்போகிறீர்கள் என்றும் வேறு சொல்கிறீர்கள்....பொறுமையாக ஆதாரம் கிட்டும் வரை அவதூறை அள்ளித் தெளிக்காமல் நீங்கள் கூட பொறுமையாக இருந்திருக்கலாமே?
    *****


    காமெடி செய்றீங்க மதிபாலா..! ஞாநி தன்னோட தளத்துல இதைப் பத்தி ஒரு மேட்டர் எழுதியிருக்காரு. தயவு செய்து அதைப் படிச்சிட்டாவது வாங்க..! //


    யாரு , கருணாநிதி கக்கூஸ் போகும்போது எட்டிப்பாத்து எழுதினாரே அந்த ஞானியா?

    *****
    நீங்கள் எந்த வட்டத்துக்குள் நிற்கிறீர்கள் ஸார்..? ///

    ஒருகாலத்தில் திமுக ஆதரவு வட்டத்தில் நின்றதுண்டு...இப்போது அதற்கு எதிர்ப்பான வட்டத்தில் நின்றாலும் , இக்குறிப்பிட்ட விடயத்தில் "ராசா" அநியாயமாக பழிவாங்கப்படுகிறார் என்றே நினைக்கிறேன்....அதற்கான தரவுகளையே மேற்கோளிடுகிறேன்.....விசாரிக்கும் முன்னரே ஒருவனை குற்றவாளி என்று கட்டம் கட்டுவது பாரிய உரிமை மீறல் என்கிறேன்.......

    ******
    சுப்ரீம் கோர்ட் விசாரணை மட்டுமல்ல.. இத்தனை ஆண்டு காலமாக தமிழக அரசியலைக் கூர்ந்து கவனித்து வரும் பொதுமக்களுக்கே நன்கு தெரியும் இது எதற்கான கூட்டணி என்று..?
    //


    அப்படியா...சரி எனக்குத் தெரியலை , உங்க வாயால தான் சொல்லுங்களேன் பாஸு..!

    *****


    அப்போ அவருடைய ஆட்சியில் கையெழுத்திட்ட பேப்பர்களெல்லாம் போலியா? பிராடா..? ////


    அதையேதான் நானும் கேட்கிறேன்....அவர் தரப்பு நியாயத்தை வைக்க ஏன் வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்று...

    *****


    எப்படி முயற்சிப்பார்..? அனுப்பிய கடிதங்களை திரும்பப் பெற முடியுமா..? உங்க காமெடிக்கு அளவே இல்லையா மதி..? ///

    ஸ்பெக்டரம் ஊழலை ஒத்துக்கொண்டு அவர் கடிதம் எழுதினாரா? சொல்லவே இல்லை?

    ****


    நீங்க இப்படியே நினைத்துக் கொள்ளுங்கள். நோ பிராப்ளம்..! //

    நன்றி.....நீங்களும் எப்படி நினைக்கிறீர்களோ அப்படியே நினைத்துக்கொள்வதில் எமக்கொன்றும் பிரச்சினையில்லை...அதை பொதுவில் வைக்கும் போது தான் விமர்சனங்கள் எழுகின்றன... ராசா குற்றவாளியா , நிரபராதியா என்பதை விட அவர் தரப்பு வாதங்களைக் கூட மீடியாக்களும் , எதிர்க்கட்சிகளுக்கும் கணக்கில் எடுக்காத போதே பிரச்சினை வருகிறது.....வரும்...!!!!

    ReplyDelete
  100. [[[ரிஷி said...

    ஓகே.. ஓகே.. ரிஷி என்ன இப்படி.. வர வர எனக்குப் போட்டியாகவே எழுதுகிறீர்கள்.. எச்சரிக்கிறேன்..! ]]]

    :-))))]]]

    பின்ன.. இந்த இடத்தைத் தக்க வைச்சுக்க நான் எத்தனை கஷ்டப்படுறேன்னு எனக்குத்தானே தெரியும்..?

    ReplyDelete
  101. [[[ரிஷி said...

    ஒரு தொகுதியில் 49-ஓ-வை பயன்படுத்தும் அளவுக்கு யோசிக்கக் கூடியவர்கள் ஆயிரக்கணக்கில் இருந்தால் அப்போது 49-ஓ பற்றி யோசிக்கலாம்.. இப்போது வேண்டாமே ரிஷி..!

    ஹும்ம்.. இருக்கலாம். எதுவானாலும் முதலில் திமுகவுக்கு சங்கு ஊதிட்டு அப்புறம் என்ன வேணாலும் செய்வோம்ங்கிறீங்க. பார்ப்போம்!!

    ஆனாலும் அந்த ஆயிரக்கணக்கானவர்கள் உருவாக வேண்டும்! அதுதான் என் விருப்பம்!
    உங்களை மாதிரி நானும் ராக்கோழி ஆயிட்டேன் பாருங்க..!!]]]

    சந்தோஷம்.. இந்த ஆயிரத்தில் ஒரு பத்து பேரையாவது நாம் ஒருவரே உருவாக்கினால் நன்றாக இருக்கும்..!

    ReplyDelete
  102. [[[ராஜரத்தினம் said...

    //இவர் சாதாரணக் கலைஞர் இல்லை.. கலைஞர்களுக்கெல்லாம் கலைஞர்//

    நான் ஏன் கலைஞர் அப்படி சொல்லக் கூடாதுன்றனா கருணாநிதியை கலைஞர்னு சொல்றவங்கலாம், அவருடைய (தற்காலிக, மற்றும் அவரின் ஆதாயங்களுக்கான) அல்லக்கைகள்தான். வேறு யாரும் கலைஞர்னு சொல்வது கிடையாது. சொல்ல மாட்டார்கள். அதற்கு அவர்களின் தன்மானம் இடம் கொடுக்காது என்பது என் உறுதியான கருத்து.]]]

    ஹா.. ஹா.. ஹா.. நான் கலைஞர் என்று சொன்னதுதான் அந்த அர்த்தத்தில்தான்..!

    ReplyDelete
  103. [[[sad said...

    தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக எழுதுகிறீர்கள் நீங்கள் உண்மைத் தமிழன் நீங்கள்? உங்கள் 2 விமர்சனம் படித்தேன் 1 இது மன்மதன் அம்பு நீங்கள் உண்மைத் தமிழன் இல்லை..நீ ஒரு தற்காலிக தமிழன? நீ ஒரு பார். நீங்கள் ஒரு ஜனநாயகம் கேலிக்கூத்து]]]

    உங்கள் பதிவுகள் சமூக நலன் கிடையாது|||||||||||||இது பார்...........நலன்''' இப்போது வேண்டாமே ரிஷி..!சங்கு ஊதிட உங்கள் முடியாது.உங்கள் மீடியாச் செய்திகளின் ஜனநாயகம் கேலிக்கூத்து நிச்சயமாக பார்க்கலாம். வாய் மூடு.!!!!!!!!!!!!!!!]]]

    சுத்தமா புரியலை.. இப்படியொரு பின்னூட்டத்தை இப்போதுதான் முதல் முறையாக பார்க்கிறேன்..!

    ReplyDelete
  104. [[[மதிபாலா said...

    ஆதாரம் இல்லாமல் அரசியல் காரணங்களுக்காய்த்தான் இக்குற்றச்சாட்டுக்கள் பரப்பப்படுகின்றன. இனிமேல்தான் ஆதாரம் தேடப் போகிறீர்கள் என்றும் வேறு சொல்கிறீர்கள். பொறுமையாக ஆதாரம் கிட்டும்வரை அவதூறை அள்ளித் தெளிக்காமல் நீங்கள்கூட பொறுமையாக இருந்திருக்கலாமே?]]]

    இதனை நீங்கள் சுப்ரீம் கோர்ட்டில் போய்ச் சொல்லுங்கள். அவர்கள்தான் முதற்கட்ட ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. விசாரணையைத் துவக்குங்கள் என்று சிபிஐக்கு உத்தரவிட்டவர்கள்..!

    [[[யாரு , கருணாநிதி கக்கூஸ் போகும்போது எட்டி ப்பாத்து எழுதினாரே அந்த ஞானியா?]]]

    அந்த வார்த்தையை கருணாநிதிதான் தனது பேச்சில் குறிப்பிட்டார். அதைத்தான் ஞாநியும் எடுத்துக் காட்டியிருக்கிறார்..

    [[[ஒரு காலத்தில் திமுக ஆதரவு வட்டத்தில் நின்றதுண்டு...இப்போது அதற்கு எதிர்ப்பான வட்டத்தில் நின்றாலும், இக்குறிப்பிட்ட விடயத்தில் "ராசா" அநியாயமாக பழி வாங்கப்படுகிறார் என்றே நினைக்கிறேன். அதற்கான தரவுகளையே மேற்கோளிடுகிறேன். விசாரிக்கும் முன்னரே ஒருவனை குற்றவாளி என்று கட்டம் கட்டுவது பாரிய உரிமை மீறல் என்கிறேன்.]]]

    சந்தோஷம்.. உங்களைத் திருப்திப்படுத்துவது என்பது என்னால் முடியாது. இத்தோடு விட்டு விடுங்கள்..!

    ReplyDelete