Pages

Monday, December 27, 2010

மறுபடியும் போலி பிரச்சினை.. தாங்கலடா முருகா..!!!

27-12-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஏன் கண்ணுகளா..? நான் உண்டு.. என் முருகன் உண்டு என்று நானே புலம்பிக் கொண்டிருக்கும் இந்த நேரத்துல இப்படியெல்லாம் சொல்லி வைச்சு அடிச்சா நல்லாவா இருக்கு..?

இன்று காலையில் பதிவர் எல்.கே. எனக்கு மெயில் ஒன்று அனுப்பியிருந்தார். அதில் இந்த லின்க் இருந்தது. “இது போலி புரொபைல் என்று தெரிகிறது. செக் செய்து பாருங்கள்..” என்று எழுதியிருந்தார்.

சென்று பார்த்தேன். அதன் புரொபைல் பெயர் 'உண்மை தமிழன்' என்று உள்ளது. 'உண்மை'க்கும் 'தமிழனு'க்கும் நடுவில் 'த்' இல்லை என்பதைக் கவனிக்கணும்.. ஏற்கெனவே மூணே முக்கால் வருஷமா இந்தப் பெயரை வைச்சு இங்க குப்பைக் கொட்டிக்கிட்டிருக்கேன்றது உங்களுக்கே தெரியும்..

இது கட்டற்ற சுதந்திரமாச்சே.. யார் வேண்ணாலும், யார் பேரை வேண்ணாலும் வைச்சுக்கலாமே என்றாலும் ஐ.டி. என்னும்போது தனியார் மெயில் நிறுவனங்கள் உட்பட ஒருவர்  பயன்படுத்தி வருவதை அடுத்தவருக்குத் தர மாட்டார்கள். இது உங்களுக்கே தெரியும்.. வலையுலகிலும் நாகரிகம் கருதியும், பெயர்க் குழப்பம் வராமல் இருக்கவும் இது போன்று யாரும் பயன்படுத்துவதில்லை.. இந்த ஐ.டி.யைப் பயன்படுத்தி பின்னூட்டமிட்டால் எத்தனை குழப்பங்கள் வரும் என்பது  உங்களுக்குத் தெரியாததல்ல.

ஏற்கெனவே மூணு வருஷத்துக்கு முன்னால வலையுலகத்துல இதுதான் ஹாட் டாபிக்.. இப்போது மம்மி ரிட்டர்ன்ஸ் மாதிரி இன்னொரு ரிட்டர்ன்ஸ்.. என்னுடைய பெயரில் இன்னொரு போலித் தளம் இந்த இடத்துல இருக்குன்றதை ஏற்கெனவே சொல்லியிருக்கேன். இதனை ஆரம்பிச்சது யாருன்னு இப்போவரைக்கும் எனக்குத் தெரியாது. அது அப்படியேதான் இருக்கு.

இப்போ யாரோ ஒரு புண்ணியவான் இந்த ஐ.டி.யையும் ஆரம்பிச்சு வைச்சிருக்காரு.. ஆரம்பிச்சதோட இல்லாம நேற்று ஜாக்கியோட இந்தப் பதிவுல ஒரு பின்னூட்டமும் போட்டு வில்லங்கத்தை ஆரம்பிச்சிருக்காரு.. இங்க போய்ப் பாருங்க..

இவர் உண்மையிலேயே 'உண்மை தமிழன்' என்ற பெயரில் நான் இருப்பது அறியாமல் ஆரம்பிச்சிருக்காரோன்னு நினைச்சு சந்தேகப்பட்டு அவருக்கு ஆதரவு கொடுத்திராதீங்க..

'பேவரிட் மூவிஸ் - கர்ணன்' - 'பேவரி மியூஸிக் - இளையராஜா' - 'பேவரிட் புக்ஸ் - அர்த்தமுள்ள இந்து மதம்' - இப்படி எனது புரொபைலில் உள்ள விஷயங்களையே எடுத்து இதில் போட்டிருக்கிறார். யாரோ நமக்கு நன்கு தெரிந்த ஒரு வலையுலக பிரஹஸ்பதிதான் இதைச் செய்திருக்கிறார் என்பதை இதில் இருந்தே நீங்கள் ஊகித்துக் கொள்ளலாம்..

அந்த 'உஜிலாதேவி' என்கிற தளத்தில் இருந்து எனக்கு தொடர்ந்து மெயில்கள் வந்தவண்ணம் இருந்தன. அதிகம் படிக்க முடியவில்லை. ஆகவே இரண்டு நாட்களுக்கு முன்புதான் அதனை ஸ்பேம் லிஸ்ட்டில் கொண்டு போய் தள்ளினேன். அந்தத் தளத்தை நான் விரும்பிப் படிக்கிறேன் என்று சொல்லியிருப்பது ஏன் என்றும் எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை எனக்கு உஜிலாதேவி தளத்தில் இருந்து மெயில் வருவது அவருக்குத் தெரியுமோ.. என்னவோ..?

என்ன எழவோ இருந்துவிட்டுப் போகட்டும்.. இப்போதுதான் கொஞ்சம் வலையுலகத்தில் பிரச்சினைகள் இல்லாமல் ஸ்மூத்தாக போகிறது என்று நினைத்தவேளையில் இப்படியொரு பஞ்சாயத்து.. நன்கு தெரிந்த அன்பரே இதனைச் செய்திருப்பதால் இனிமேற்கொண்டு அவரிடம் இது பற்றிப் பேசி புண்ணியமில்லை.

வலையுலகத் தோழர்களுக்கு இந்த நேரத்தில் இந்த விஷயத்தை அறிவுறுத்துகிறேன். அந்த புரொபைலில் இருந்து பின்னூட்டங்கள் வந்தால் நான் எழுதியதாக நினைத்துக் கொள்ள வேண்டாம்.  

எனது பெயருக்குப் பின்னால் போட்டுத் தொலைந்திருக்கும் பிளாக்கர் எண்களுடன் வந்தால் மட்டுமே ஒரிஜினல் 'உண்மைத்தமிழன்' என்று நினைத்துக் கொள்ளவும்.

உண்மையில் இந்தக் கருமாந்திரம் பிடித்த நம்பரை இந்த வருடக் கடைசியில் தூக்கிக் கடாசிவிடலாம் என்றுதான் நினைத்திருந்தேன். இந்தச் சூழலில் இப்படியொரு இக்கட்டு.. இன்னும் நான்கு நாட்கள் இருக்கின்றன. அது பற்றியும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். பார்க்கலாம்..

பதிவர்களே.. அந்த புரொபைலின் மூலம் வரும் பின்னூட்டங்களை அழிப்பதோ, அல்லது அப்படியே வைத்திருப்பதோ உங்களுடைய இஷ்டம்.. நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள்..!!!

நன்றி

75 comments:

  1. சோதனை மேல் சோதனை நண்பா உனக்கு!
    hehehe

    ReplyDelete
  2. அண்ணே! உஜிலா தேவின்னா யாருண்ணே! விலாசம் இருக்கா!

    ReplyDelete
  3. he he he!!!
    popular aana ipdidhaan :D:D:D

    ReplyDelete
  4. என்ன? வெள்ளைக்கொடிக்கு மறுபடியும் வேலையா?

    ReplyDelete
  5. //இப்போதுதான் கொஞ்சம் வலையுலகத்தில் பிரச்சினைகள் இல்லாமல் ஸ்மூத்தாக போகிறது என்று நினைத்தவேளையில் இப்படியொரு பஞ்சாயத்து.//

    இதென்ன புதுப்புரளியா இருக்கு? அப்போ எல்லாருமே திருந்திட்டோமா? அட கடவுளே! இதென்ன சோதனை????

    //நன்கு தெரிந்த அன்பரே இதனைச் செய்திருப்பதால் இனிமேற்கொண்டு அவரிடம் இது பற்றிப் பேசி புண்ணியமில்லை.//

    இப்படித்தான் சாமி, கூட இருந்தே குழி பறிக்கிறவர்களின் எண்ணிக்கை வலையுலகில் அதிகமாகி எங்களை மாதிரி ஜூனியர்களையும் வம்பில் மாட்டி விடுகிறது.

    அது போகட்டுமண்ணே, அந்த உண்மை(’த்’ இல்லாத) தமிழன் என் வலைப்பூவிலும் பின்னூட்டம் போட்டிருக்கிறாரு! ஆனால், நான் பார்த்தவுடனேயே அது நீங்கள் இல்லை என்று புரிந்து கொண்டேன். (நீங்களாவது என் வலைப்பூவுக்கு வந்து பின்னூட்டம் போடுறதாவது...ஆசைக்கு ஒரு அளவு வேண்டாம்...? ஹிஹி!)

    தகவலுக்கு நன்றிண்ணே! கவலையை விடுங்க; நாங்கெல்லாம் இருக்கோம்!

    ReplyDelete
  6. பிரபலங்கள் பெயரில் தான் எப்போதும் பிராபளம் பண்ணுவாங்க..................................

    ReplyDelete
  7. http://www.truetamilan.blogspot.com/

    அப்போ, மேலே உள்ள லின்க்கில் இருக்கும் பிளாக்யாருதுண்ணே....உங்களது இல்லையா....

    ReplyDelete
  8. அண்ணே என் பெயர்லயும் இதே போல பண்ணி இருக்காங்க... என்ன செய்ய?-?

    ReplyDelete
  9. இதுக்கெலாம் என்ன செய்றதுன்னே தெரியல ...

    ReplyDelete
  10. நானும் பார்த்தேன் எனக்கு என்னமோ உசிலதேவி மேல் தான் சந்தேகம்

    ReplyDelete
  11. அண்ணே இது காப்பி இல்ல.... இது இன்ஜீபிரேஷன்:))))

    ReplyDelete
  12. உஜிலாதேவி இப்படி பண்ண வேண்டிய அவசியம் இல்லை.பண்ணியது யார் என்று தெரியும் என்று சொல்லும் இவர்,அவர் பெயரை வெளிப்படையாக சொல்லவேண்டியதுதானே!

    ReplyDelete
  13. உஜிலாதேவி தளத்துக்கு லிங்க் கொடுத்துட்டு குஜிலா தேவியை ப்ரொஃபைல் படத்தில் போட்டிருக்காரே அந்த நல்லவர்!

    அதுசரி! உங்க வலைப்பதிவுக்கு வாஸ்து சரியில்லையோ?

    //பிறந்து, வளர்ந்ததில் சொல்லிக் கொள்ளும்படியான சாதனைகள் எதுவும் இதுவரை இல்லை;//
    வலது பக்கம் இருக்கும் இந்த வாசகங்களை மாத்திட்டு "பலருக்கு காப்பியடிக்கும் ஆசையைத் தூண்டும் மிகச் சிறந்த வலைப்பதிவன்" அப்படின்னு போடுங்க.

    அப்புறம் உங்க போட்டோ. வெள்ளைச் சட்டை போட்டிருக்க்கீங்க. Background கருப்பா இருக்கு. இத மாத்திட்டு நீலச் சட்டை போட்டுகிட்டு ஒரு போட்டோ எடுத்துப் போடுங்க. அப்படியே Backgroundல தேநீர் உடல் நலத்துக்கு நல்லதுங்கிற மாதிரி வாசகம் வைங்க. காப்பி அடிக்கிறது குறையும்.
    (இடுக்கண் வருங்கால் நகுக - ஐயன் திருவள்ளுவர்)

    ReplyDelete
  14. அண்ணே உங்களுக்கும் உஜிலா தேவிக்கும் இடையில ஏதாவது........................!!!!!!!!!!!!!

    ReplyDelete
  15. பாஸ் மன்னிச்சுருங்க உங்கள் பெயர் உண்மை தமிழன் என்று எனக்கு தெரியாது மன்னிச்சுருங்க எனக்கு இந்த பெயர் பிடிச்சிருந்து அதனால் வச்சேன் இப்போதான் ஜாக்கி அண்ணன் ப்ளாக் பார்த்தேன் அதுல உங்க கமெண்ட் இருந்து அதனால் உங்கள் ப்ளாக்பக்கம் வந்தேன் மீண்டும் மன்னிச்சுருங்க உங்களுக்கு பிடிக்க வில்லை என்றால் மாத்தி கொள்கிறேன் பதிலை எதிர் பார்த்திருக்கும் உங்கள் தமிழன்







    இதையும் படிச்சி பாருங்க

    ஈழத்தமிழர்களின் துயர் நீக்கும் தூயவர்

    ReplyDelete
  16. அதான நானும் பாத்தேன் என்னடா அண்ணன் நமிதாவ வச்சிருக்காரே(புரபைல் போட்டோ வா) அப்டின்னு...

    ReplyDelete
  17. "'பேவரிட் மூவிஸ் - கர்ணன்' - 'பேவரி மியூஸிக் - இளையராஜா' - 'பேவரிட் புக்ஸ் - அர்த்தமுள்ள இந்து மதம்' - இப்படி எனது புரொபைலில் உள்ள விஷயங்களையே எடுத்து இதில் போட்டிருக்கிறார். யாரோ நமக்கு நன்கு தெரிந்த ஒரு வலையுலக பிரஹஸ்பதிதான் இதைச் செய்திருக்கிறார் என்பதை இதில் இருந்தே நீங்கள் ஊகித்துக் கொள்ளலாம்.."



    எனக்கு கர்ணன் படம் மிகவும் பிடிக்கும் சிறுவயதில் பார்த்தது. இளையராஜாவை எனக்கு அதிகம் பிடிக்காவிட்டாலும் ஓர் அளவு பிடிக்கும் அர்த்தமுள்ள இந்து மதம்' இந்த புத்தகம் இதுவரை படித்தது கிடையாது நெட்டில் ஆடியோ கேட்டுள்ளேன் எப்படியாவது அந்த புத்தகம் வாங்க வேண்டும் என்று எனக்கு ரொம்பநாள் ஆசை இதுவரை நடந்தது கிடையாது அதனால் பேவரிட் புக்ஸ் லிஸ்டில் அதை வைத்தேன் இதிலும் தவறு இருந்ததால் மன்னிக்கவும் இதையும் மாற்றி கொள்கிறேன் பதிலை எதிர் பார்த்திருக்கும் உங்கள் தமிழன்





    இதையும் படிச்சி பாருங்க

    ஈழத்தமிழர்களின் துயர் நீக்கும் தூயவர்

    ReplyDelete
  18. தமிழன் என்று பெயரை மாற்றி வைத்துள்ளேன் அந்த லிங்க் கொடுத்துள்ளேன் பார்க்கவும் இந்த பெயரும் சரி இல்லை என்றால் பதில் எழுதவும் மாற்றி கொள்கிறேன்


    http://draft.blogger.com/profile/13419585766492234862




    இதையும் படிச்சி பாருங்க

    ஈழத்தமிழர்களின் துயர் நீக்கும் தூயவர்

    ReplyDelete
  19. இந்த உஜிலாதேவி வலைப்பதிவு ஒரு சாமியாரால் எழுதப் படுவதாக தெரிகிறது. இவர் தனியாளாக செய்கிறாரா அல்லது குழுவாக இயங்குகிறாரா தெரியவில்லை....ஆனால் தங்கள் வலைப்பக்கத்தை விளம்பரப் படுத்த நிறைய மெனக்கெடுகிறார்கள்.

    இதுவும் கூட ஒரு விளம்பர உத்தியாகவே தெரிகிறது.

    ReplyDelete
  20. anna, thangal padtivai miha sila naatkalaga follow seyyum naanae romba feel panrengna... Indha maadhiri kazhisadai bloggers-ta irundhu enga ellaarayum kaapaathu da muragaaaaaa...

    ReplyDelete
  21. [[[Ram said...
    சோதனை மேல் சோதனை நண்பா உனக்கு! hehehe]]]

    என்னத்த சொல்றது? செய்யறது..? சோதனை மேல் சோதனை போதுமடா சாமின்னு பாடிட்டிருக்கும்போது அடுத்த சோதனை வாசல்ல வந்து நிக்குது..!

    ReplyDelete
  22. [[[ராஜன் said...
    அண்ணே! உஜிலா தேவின்னா யாருண்ணே! விலாசம் இருக்கா!]]]

    இல்லையே..? அந்தத் தளத்துல வேண்ணா தேடிப் பாருங்க..!

    ReplyDelete
  23. [[[Srinivas said...
    he he he!!! popular aana ipdidhaan :D:D:D]]]

    போதுண்டா சாமி.. எனக்கு இந்த பாப்புலரே வேணாம்.. ஆளைவிட்டா போதும்..!

    ReplyDelete
  24. [[[ராம்ஜி_யாஹூ said...

    hope this will resolve soon.]]]

    உங்க வாக்கு பலித்துவிட்டது. இந்தப் பதிவிலேயே முடிஞ்சிருச்சு. பெயரை மாத்திட்டேன்னு சொல்றாரு..!

    ReplyDelete
  25. [[[சீனு said...
    என்ன? வெள்ளைக் கொடிக்கு மறுபடியும் வேலையா?]]]

    சிவப்புக் கொடியைவிட வெள்ளைக் கொடிக்கு எப்பவுமே மவுசு அதிகம்தான்..!

    ReplyDelete
  26. [[[சேட்டைக்காரன் said...

    //இப்போதுதான் கொஞ்சம் வலையுலகத்தில் பிரச்சினைகள் இல்லாமல் ஸ்மூத்தாக போகிறது என்று நினைத்தவேளையில் இப்படியொரு பஞ்சாயத்து.//

    இதென்ன புதுப் புரளியா இருக்கு? அப்போ எல்லாருமே திருந்திட்டோமா? அட கடவுளே! இதென்ன சோதனை????

    //நன்கு தெரிந்த அன்பரே இதனைச் செய்திருப்பதால் இனிமேற்கொண்டு அவரிடம் இது பற்றிப் பேசி புண்ணியமில்லை.//

    இப்படித்தான் சாமி, கூட இருந்தே குழி பறிக்கிறவர்களின் எண்ணிக்கை வலையுலகில் அதிகமாகி எங்களை மாதிரி ஜூனியர்களையும் வம்பில் மாட்டி விடுகிறது.

    அது போகட்டுமண்ணே, அந்த உண்மை(’த்’ இல்லாத) தமிழன் என் வலைப்பூவிலும் பின்னூட்டம் போட்டிருக்கிறாரு! ஆனால், நான் பார்த்தவுடனேயே அது நீங்கள் இல்லை என்று புரிந்து கொண்டேன். (நீங்களாவது என் வலைப்பூவுக்கு வந்து பின்னூட்டம் போடுறதாவது. ஆசைக்கு ஒரு அளவு வேண்டாம்...? ஹிஹி!)

    தகவலுக்கு நன்றிண்ணே! கவலையை விடுங்க; நாங்கெல்லாம் இருக்கோம்!]]]

    நன்றி சேட்டைக்காரன் அண்ணாச்சி..! உங்க தளத்தை இப்பத்தான் பார்த்தேன்.. அதில் எனது பெயரிலான பின்னூட்டத்தையும் பார்த்தேன்..

    நீங்கதான் டெய்லி 2 பதிவு போட்டு கலாய்க்குறீங்களே..? கலாய்த்தலில் எப்படி பங்கெடுப்பதுன்னு ஒரு சின்ன தயக்கம். அதனால்தான் படிப்பதோடு நின்று விடுகிறேன்..! கோச்சுக்காதீங்க..!

    ReplyDelete
  27. [[[Gopi Ramamoorthy said...

    :)
    :((
    :))))]]]

    இதென்ன? பின்னூட்டம் புது டிஸைனா இருக்கு..?

    ReplyDelete
  28. [[[Indian Share Market said...

    பிரபலங்கள் பெயரில்தான் எப்போதும் பிராபளம் பண்ணுவாங்க.]]]

    நீங்க சொன்னா சரிதாங்க..!

    ReplyDelete
  29. [[[kavi said...
    http://www.truetamilan.blogspot.com/

    அப்போ, மேலே உள்ள லின்க்கில் இருக்கும் பிளாக் யாருதுண்ணே. உங்களது இல்லையா.]]]

    அந்த ஆளைத்தான் இத்தனை நாளா நான் தேடிக்கிட்டிருக்கேன். கிடைச்சா சொல்றேன்..!

    ReplyDelete
  30. [[[ஜாக்கி சேகர் said...
    அண்ணே என் பெயர்லயும் இதே போல பண்ணி இருக்காங்க... என்ன செய்ய?-?]]]

    இதே மாதிரி ஒரு பதிவு போட்டு எல்லாரையும் உஷார்படுத்திரு..!

    ReplyDelete
  31. [[[கே.ஆர்.பி.செந்தில் said...
    இதுக்கெலாம் என்ன செய்றதுன்னே தெரியல.]]]

    கட்டற்ற சுதந்திரம் செந்தில்.. சந்தித்துத்தான் ஆக வேண்டும்..!

    ReplyDelete
  32. [[[THOPPITHOPPI said...
    நானும் பார்த்தேன் எனக்கு என்னமோ உசிலதேவி மேல்தான் சந்தேகம்.]]]

    அப்படிங்கிறீங்க..?

    ReplyDelete
  33. [[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    போட்டு தள்ளிடலாமா?]]]

    மொதல்ல ஆள், அட்ரஸ் தெரியணுமே..?

    ReplyDelete
  34. [[[நாஞ்சில் பிரதாப்™ said...
    அண்ணே இது காப்பி இல்ல.... இது இன்ஜீபிரேஷன்:))))]]]

    பின்னூட்டம் வாங்குற மக்கள் இப்படி நினைச்சா எனக்குக் கவலையில்லையே..?

    ReplyDelete
  35. [[[thamizhan said...
    உஜிலாதேவி இப்படி பண்ண வேண்டிய அவசியம் இல்லை. பண்ணியது யார் என்று தெரியும் என்று சொல்லும் இவர், அவர் பெயரை வெளிப்படையாக சொல்ல வேண்டியதுதானே!]]]

    யாரோ ஒரு வலையுலகப் பதிவர் என்றுதான் சொல்லியிருக்கிறேன்..! நன்கு கூர்ந்து கவனித்துப் படிக்கவும்..!

    ReplyDelete
  36. [[[Arun Ambie said...

    உஜிலாதேவி தளத்துக்கு லிங்க் கொடுத்துட்டு குஜிலா தேவியை ப்ரொஃபைல் படத்தில் போட்டிருக்காரே அந்த நல்லவர்!
    அதுசரி! உங்க வலைப்பதிவுக்கு வாஸ்து சரியில்லையோ?]]]

    எல்லாம் உங்களை மாதிரியானவங்க கண்ணு வைக்கிறதாலதான்..!

    //பிறந்து, வளர்ந்ததில் சொல்லிக் கொள்ளும்படியான சாதனைகள் எதுவும் இதுவரை இல்லை;//

    வலது பக்கம் இருக்கும் இந்த வாசகங்களை மாத்திட்டு "பலருக்கு காப்பியடிக்கும் ஆசையைத் தூண்டும் மிகச் சிறந்த வலைப் பதிவன்" அப்படின்னு போடுங்க.]]]

    உங்க ஆசீர்வாதம்..

    [[[அப்புறம் உங்க போட்டோ. வெள்ளைச் சட்டை போட்டிருக்க்கீங்க. Background கருப்பா இருக்கு. இத மாத்திட்டு நீலச் சட்டை போட்டுகிட்டு ஒரு போட்டோ எடுத்துப் போடுங்க. அப்படியே Backgroundல தேநீர் உடல் நலத்துக்கு நல்லதுங்கிற மாதிரி வாசகம் வைங்க. காப்பி அடிக்கிறது குறையும். (இடுக்கண் வருங்கால் நகுக - ஐயன் திருவள்ளுவர்)]]]

    உங்களது உள்குத்தை வெகுவாக ரசிக்கிறேன்.. நன்றி..!

    ReplyDelete
  37. [[[அத்திரி said...
    அண்ணே உங்களுக்கும் உஜிலா தேவிக்கும் இடையில ஏதாவது........................!!!!!!!!!!!!!]]]

    அடப்பாவி அத்திரி.. வினையே நீங்கதாண்டா.. எனக்கு வேற ஆளுகளே தேவையில்லை..!

    ReplyDelete
  38. [[[உண்மை தமிழன் said...
    பாஸ் மன்னிச்சுருங்க. உங்கள் பெயர் உண்மை தமிழன் என்று எனக்கு தெரியாது. மன்னிச்சுருங்க. எனக்கு இந்த பெயர் பிடிச்சிருந்து. அதனால் வச்சேன். இப்போதான் ஜாக்கி அண்ணன் ப்ளாக் பார்த்தேன். அதுல உங்க கமெண்ட் இருந்து. அதனால் உங்கள் ப்ளாக் பக்கம் வந்தேன். மீண்டும் மன்னிச்சுருங்க. உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் மாத்தி கொள்கிறேன். பதிலை எதிர்பார்த்திருக்கும் உங்கள் தமிழன்
    இதையும் படிச்சி பாருங்க
    ஈழத் தமிழர்களின் துயர் நீக்கும் தூயவர்]]]

    இப்படியெல்லாம் காமெடி செஞ்சா எப்படி..? ம்.. இதெல்லாம் நல்லாயில்லை.. சொல்லிட்டேன்..!

    உங்களுக்கும் உஜிலாதேவி தளத்துக்கும் என்ன சம்பந்தம்..? எதுக்காக அதைத் தூக்கிட்டு வந்து என்கிட்ட லின்க் கொடுக்குறீங்க..?

    உண்மைத்தமிழன் என்ற பெயர் தெரியாமல் இப்போதுதான் பார்த்தேன் என்று சொல்வது நூற்றுக்கு நூறு பொய் என்று எழுத்திலேயே தெரிகிறது..

    நல்லாயிருங்க.. முருகன் இருக்கான் பார்த்துக்குவான்..!

    ReplyDelete
  39. [[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    அதான நானும் பாத்தேன் என்னடா அண்ணன் நமிதாவ வச்சிருக்காரே (புரபைல் போட்டோ வா) அப்டின்னு.]]]

    ஹி.. ஹி.. ஹி.. நான் அவனில்லை..!

    ReplyDelete
  40. annachi ippa unmaya thukitainga anga :) verum "thamizhan" mattum than iruku :)

    ReplyDelete
  41. [[[உண்மை தமிழன் said...

    "'பேவரிட் மூவிஸ் - கர்ணன்' - 'பேவரி மியூஸிக் - இளையராஜா' - 'பேவரிட் புக்ஸ் - அர்த்தமுள்ள இந்து மதம்' - இப்படி எனது புரொபைலில் உள்ள விஷயங்களையே எடுத்து இதில் போட்டிருக்கிறார். யாரோ நமக்கு நன்கு தெரிந்த ஒரு வலையுலக பிரஹஸ்பதிதான் இதைச் செய்திருக்கிறார் என்பதை இதில் இருந்தே நீங்கள் ஊகித்துக் கொள்ளலாம்.."

    எனக்கு கர்ணன் படம் மிகவும் பிடிக்கும் சிறுவயதில் பார்த்தது. இளையராஜாவை எனக்கு அதிகம் பிடிக்காவிட்டாலும் ஓர் அளவு பிடிக்கும் அர்த்தமுள்ள இந்து மதம்' இந்த புத்தகம் இதுவரை படித்தது கிடையாது நெட்டில் ஆடியோ கேட்டுள்ளேன் எப்படியாவது அந்த புத்தகம் வாங்க வேண்டும் என்று எனக்கு ரொம்பநாள் ஆசை இதுவரை நடந்தது கிடையாது அதனால் பேவரிட் புக்ஸ் லிஸ்டில் அதை வைத்தேன் இதிலும் தவறு இருந்ததால் மன்னிக்கவும் இதையும் மாற்றி கொள்கிறேன் பதிலை எதிர் பார்த்திருக்கும் உங்கள் தமிழன்.]]]

    ஏங்க சும்மா ரீல் விடுறீங்க..? போய் முகத்தைத் துடைச்சுக்குங்க.. வழியுது..!

    ReplyDelete
  42. [[[தமிழன் said...

    தமிழன் என்று பெயரை மாற்றி வைத்துள்ளேன் அந்த லிங்க் கொடுத்துள்ளேன் பார்க்கவும் இந்த பெயரும் சரி இல்லை என்றால் பதில் எழுதவும் மாற்றி கொள்கிறேன்

    http://draft.blogger.com/profile/13419585766492234862]]]

    தமிழன் என்ற பெயரில் ஏற்கெனவே ஒருவர் தமிழ் வலையுலகில் இருக்கிறார். மறுபடியும் கிராஸ் செய்கிறீர்கள்.

    வேறு பெயரை யோசியுங்கள்..!

    ReplyDelete
  43. [[[டுபாக்கூர் பதிவர் said...
    இந்த உஜிலாதேவி வலைப்பதிவு ஒரு சாமியாரால் எழுதப்படுவதாக தெரிகிறது. இவர் தனியாளாக செய்கிறாரா அல்லது குழுவாக இயங்குகிறாரா தெரியவில்லை. ஆனால் தங்கள் வலைப்பக்கத்தை விளம்பரப்படுத்த நிறைய மெனக்கெடுகிறார்கள்.
    இதுவும்கூட ஒரு விளம்பர உத்தியாகவே தெரிகிறது.]]]

    பொறுக்க முடியாமல்தான் அதனை ஸ்பேமில் தள்ளிவிட்டேன்..!

    ReplyDelete
  44. [[[balaa said...
    anna, thangal padtivai miha sila naatkalaga follow seyyum naanae romba feel panrengna... Indha maadhiri kazhisadai bloggers-ta irundhu enga ellaarayum kaapaathu da muragaaaaaa...]]]

    அவர் தன்னுடைய பெயரை "தமிழன்" என்று மாற்றியிருக்கிறார். அதுவும் தவறுதான். ஏற்கெனவே அந்தப் பெயரில் வேறொருவர் இருக்கிறார்.. இதையும் அவரிடம் சொல்லிவிட்டேன். இனி என்ன செய்வாரோ..?

    ReplyDelete
  45. [[[இராமசாமி said...
    annachi ippa unmaya thukitainga anga :) verum "thamizhan" mattum than iruku :)]]]

    ஆனால் அந்தப் பெயரிலும் ஒரு பதிவர் இருக்கிறார் இராமசாமி. இதனையும் இவரிடம் தெரிவித்துவிட்டேன். என்னால் முடிந்தது இவ்வளவுதான்..! ஆனால் இவர் பிராடு என்பது மட்டும் உண்மை..!

    ReplyDelete
  46. பத்தவெச்சுட்டியே பரட்டை..!!!
    ஹி..ஹி

    விடுண்ணா....
    உங்களை எங்களைக்கு தெரியும்.. ரொம்ப பீல் பண்ணாம, அடுத்த பதிவ போடுங்க....

    ReplyDelete
  47. அடடா....

    பிரபலம்னாலே ப்ராப்ளம் தான்யா...

    சரி தல... இதையே நினைக்காம சூடா ஒரு சின்ன்ன்ன்ன்ன்ன்ன பதிவு போடுங்க

    ReplyDelete
  48. 1. நீங்கள் சற்றே ஓவராக ரியேக்ட் செய்கிறீர்கள்.

    2. இப்போது நீங்கள் சுட்டும் நபர் தனது டிஸ்ப்ளே பெயரை (யூசர் ஐடி அல்ல, அது வேறு) தமிழன் என மாற்றியுள்ளார்.

    3. அப்படியே உண்மை தமிழன் என இருந்திருந்தாலும் அவரது வலைப்பூவுக்கும் உங்களுடையதுக்கும் ஆறுக்கும் மேல் அதிக வித்தியாசங்கள் உண்டு.

    4. உண்மைத் தமிழன் என்னும் பெயருக்கு உங்களுக்கு காப்புரிமை ஏதும் இல்லை.

    5. போலி டோண்டு ரேஞ்சில் செய்திருந்தால் அது வேறு விஷயம். ஆனால் அப்படி ஏதும் இங்கில்லையே.

    6. ஆக, வெறுமனே குழப்பம் வருவதற்கு எதிராக லேசாக குரல் கொடுத்திருந்தாலே போதுமானது.

    6. மற்றப்படி உங்களது டிஸ்ப்ளே பெயரில் அடைப்புக் குறிகளுக்குள் உங்கள் ஐ.டி எண்ணை போடுவதை நிறுத்தாதீர்கள்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  49. அவர் தன்னுடைய பெயரை "தமிழன்" என்று மாற்றியிருக்கிறார். அதுவும் தவறுதான். ஏற்கெனவே அந்தப் பெயரில் வேறொருவர் இருக்கிறார்.. இதையும் அவரிடம் சொல்லிவிட்டேன். இனி என்ன செய்வாரோ..?

    //

    தமிழை கட் பண்ணிவிட்டு ன் என்று மாற்றிக்கொள்வார். அவர் அவ்வளவு நல்லவர்.

    ReplyDelete
  50. [[[பட்டாபட்டி.... said...
    பத்த வெச்சுட்டியே பரட்டை..!!!
    ஹி. ஹி விடுண்ணா. உங்களை எங்களைக்கு தெரியும்.. ரொம்ப பீல் பண்ணாம, அடுத்த பதிவ போடுங்க.]]]

    ஓகே.. தங்களது உத்தரவு..!

    ReplyDelete
  51. [[[R.Gopi said...
    அடடா.... பிரபலம்னாலே ப்ராப்ளம்தான்யா. சரி தல. இதையே நினைக்காம சூடா ஒரு சின்ன்ன்ன்ன்ன்ன்ன பதிவு போடுங்க.]]]

    சின்னது இல்லை.. பெரிசுதான் வரப் போவுது..!

    ReplyDelete
  52. [[[dondu(#11168674346665545885) said...

    1. நீங்கள் சற்றே ஓவராக ரியேக்ட் செய்கிறீர்கள்.

    2. இப்போது நீங்கள் சுட்டும் நபர் தனது டிஸ்ப்ளே பெயரை (யூசர் ஐடி அல்ல, அது வேறு) தமிழன் என மாற்றியுள்ளார்.

    3. அப்படியே உண்மை தமிழன் என இருந்திருந்தாலும் அவரது வலைப்பூவுக்கும் உங்களுடையதுக்கும் ஆறுக்கும் மேல் அதிக வித்தியாசங்கள் உண்டு.

    4. உண்மைத் தமிழன் என்னும் பெயருக்கு உங்களுக்கு காப்புரிமை ஏதும் இல்லை.

    5. போலி டோண்டு ரேஞ்சில் செய்திருந்தால் அது வேறு விஷயம். ஆனால் அப்படி ஏதும் இங்கில்லையே.

    6. ஆக, வெறுமனே குழப்பம் வருவதற்கு எதிராக லேசாக குரல் கொடுத்திருந்தாலே போதுமானது.

    6. மற்றப்படி உங்களது டிஸ்ப்ளே பெயரில் அடைப்புக் குறிகளுக்குள் உங்கள் ஐ.டி எண்ணை போடுவதை நிறுத்தாதீர்கள்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்]]]

    அறிவுரைக்கு மிக்க நன்றி..!

    ReplyDelete
  53. [[[செந்தழல் ரவி said...

    அவர் தன்னுடைய பெயரை "தமிழன்" என்று மாற்றியிருக்கிறார். அதுவும் தவறுதான். ஏற்கெனவே அந்தப் பெயரில் வேறொருவர் இருக்கிறார்.. இதையும் அவரிடம் சொல்லிவிட்டேன். இனி என்ன செய்வாரோ..?//

    தமிழை கட் பண்ணிவிட்டு ன் என்று மாற்றிக் கொள்வார். அவர் அவ்வளவு நல்லவர்.]]]

    அப்படியா..? உனக்குத் தெரிஞ்சவரா..? யாருன்னு எனக்கு மட்டும் சொல்லேன்.. தெரிஞ்சுக்குறேன்..!

    ReplyDelete
  54. //பாஸ் மன்னிச்சுருங்க உங்கள் பெயர் உண்மை தமிழன் என்று எனக்கு தெரியாது மன்னிச்சுருங்க எனக்கு இந்த பெயர் பிடிச்சிருந்து அதனால் வச்சேன் இப்போதான் ஜாக்கி அண்ணன் ப்ளாக் பார்த்தேன் அதுல உங்க கமெண்ட் இருந்து அதனால் உங்கள் ப்ளாக்பக்கம் வந்தேன் மீண்டும் மன்னிச்சுருங்க உங்களுக்கு பிடிக்க வில்லை என்றால் மாத்தி கொள்கிறேன் பதிலை எதிர் பார்த்திருக்கும் உங்கள் தமிழன் //
    இதுக்கு பெறகும் அந்த பிரச்சனய பேசுனா அதுக்கு என்ன அர்த்தம்? வெவரம் தெரிஞ்சவுங்க சொல்லுங்க.

    ReplyDelete
  55. தங்களின் பதிலுக்கு மிக்க நன்றி பாஸ்

    எனக்கு ஒரு சின்ன சந்தேகம் நீங்கள் மட்டும்தான் உண்மை தமிழனா...?
    உங்கள் தளத்தை தொடர்ந்து படித்து வருபவர்கள் ---- தமிழனா...?
    plz இந்த ---- நீங்களே நிரப்பிவிடுங்கள்

    நேற்று தங்களின் தளத்தை படிக்கும் போது சற்று வருத்தமாக தான் இருந்தது அதனால் பதில் எழுதினேன் தங்களின் பதில் வருவதற்க்காக காத்திருந்தேன் பதில் வருவதற்க்கு தாமதமானதால் தூங்க சென்று விட்டேன் இன்று தான் உங்கள் தளத்தில் எனக்கு தந்த பதிலை பார்க்க முடிந்தது நேற்று வரை தங்களின் எழுத்துமேல் கொண்ட அபார நம்பிக்கையில் பதில் எழுதினேன் ஒரு எழுத்தாளன் என்பவன் தவறு செய்தால் மன்னித்து நல்ல வழி காட்டுவதுதான் சரி என்ன பண்ணுவது நீங்கள் சிறந்த எழுத்தாளன் இல்லையோ என்னவோ எனக்கு தெரியாது...?

    http://ujiladevi.blogspot.com/feeds/posts/default

    உங்களுக்காக கஷ்டப்பட்டு rss feed தந்துள்ளேன் முடிந்தால் இந்த rss feed யை தங்களின் தளத்தில் resent post ஆகா இணையுங்கள் நீங்கள் விளம்பரத்தை விரும்பாதவர் என்று நான் ஒப்புக்கொள்கிறேன் சரி முடியாத விஷயத்தை பேச வேண்டாம் என்று நான் நினைக்கிறேன் உங்களின் எழுத்துமேல் நம்பிக்கை இருந்தால் மட்டும் இணையுங்கள்? சரி வேண்டாம் விட்டுவிடுங்கள் உங்கள் ட்ராபிக் குறைந்தது விட்டால் மனது கஷ்டபடும்

    எனது உண்மையான பெயரை வெளியிடுவதானால் நான் வறுத்த பட போவதில்லை எனது பெயர் சண்முககுமார் இப்போது நான் இலங்கையில் இருக்கிறேன் சொந்தவுறு திருப்பூர் பக்கத்தில் ஒரு கிராமம் எனது Profile மாற்றி விட்டேன் அதையும் பாருங்களேன் தயவு செய்து படத்தை மற்ற சொல்லாதிங்க plz

    http://www.blogger.com/profile/13419585766492234862

    இன்றுலிருந்து தங்களின் தளத்தில் கமெண்ட் moderesan வைப்பிங்கண்டு நினைக்கிறேன் எதனால் சொல்றேன் தெரியுமா எனது பெயரில் சிறுது பயம் இருக்கும் என்று நினைக்கிறேன் இன்றிலிருந்து தினம் தங்களின் தளத்தை படித்துவிட்டு கமெண்ட் போடுவேன் தப்பா எதுவும் எழுதமாட்டேன்

    எதாவது அதிகமாக எழுதியிருந்தால் மன்னிச்சுருங்க பாஸ் தங்களின் அடுத்த பதிவை எதிர் பார்க்கிறேன்



    இதையும் படிச்சி பாருங்க

    வீரபாண்டி ஆறுமுகம் தகுதி இல்லாதவர்

    ReplyDelete
  56. [[[சேக்காளி said...

    //பாஸ் மன்னிச்சுருங்க உங்கள் பெயர் உண்மை தமிழன் என்று எனக்கு தெரியாது மன்னிச்சுருங்க எனக்கு இந்த பெயர் பிடிச்சிருந்து அதனால் வச்சேன் இப்போதான் ஜாக்கி அண்ணன் ப்ளாக் பார்த்தேன் அதுல உங்க கமெண்ட் இருந்து அதனால் உங்கள் ப்ளாக்பக்கம் வந்தேன் மீண்டும் மன்னிச்சுருங்க உங்களுக்கு பிடிக்க வில்லை என்றால் மாத்தி கொள்கிறேன் பதிலை எதிர் பார்த்திருக்கும் உங்கள் தமிழன் //

    இதுக்கு பெறகும் அந்த பிரச்சனய பேசுனா அதுக்கு என்ன அர்த்தம்? வெவரம் தெரிஞ்சவுங்க சொல்லுங்க.]]]

    தமிழன் என்ற பெயரிலும் ஒருவர் இருக்கிறார் என்பதைக் குறிப்பிட்டிருக்கிறேன் நண்பரே..!

    ReplyDelete
  57. [[[சண்முககுமார் said...

    தங்களின் பதிலுக்கு மிக்க நன்றி பாஸ்
    எனக்கு ஒரு சின்ன சந்தேகம் நீங்கள் மட்டும்தான் உண்மைதமிழனா?
    உங்கள் தளத்தை தொடர்ந்து படித்து வருபவர்கள் ---- தமிழனா...?
    plz இந்த ---- நீங்களே நிரப்பி விடுங்கள்.]]]

    கோபப்படுவதில் அர்த்தமில்லை..! எனது பெயரிலேயே இருப்பதால் பின்னூட்டக் குழப்பம் வந்துவிடக் கூடாது என்பதற்காகவும், பதிவர்களை எச்சரிக்கை செய்யும் பொருட்டுத்தான் இதனை எழுதினேன்..!

    [[[நேற்று தங்களின் தளத்தை படிக்கும்போது சற்று வருத்தமாகத்தான் இருந்தது. அதனால் பதில் எழுதினேன். தங்களின் பதில் வருவதற்க்காக காத்திருந்தேன். பதில் வருவதற்க்கு தாமதமானதால் தூங்க சென்று விட்டேன். இன்றுதான் உங்கள் தளத்தில் எனக்கு தந்த பதிலை பார்க்க முடிந்தது. நேற்றுவரை தங்களின் எழுத்துமேல் கொண்ட அபார நம்பிக்கையில் பதில் எழுதினேன். ஒரு எழுத்தாளன் என்பவன் தவறு செய்தால் மன்னித்து நல்ல வழி காட்டுவதுதான் சரி. என்ன பண்ணுவது நீங்கள் சிறந்த எழுத்தாளன் இல்லையோ என்னவோ எனக்கு தெரியாது...?]]]

    நான் எழுத்தாளன் என்று யார் சொன்னது..? நீங்களே நினைத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பில்லை..!

    [[[http://ujiladevi.blogspot.com/feeds/posts/default

    உங்களுக்காக கஷ்டப்பட்டு rss feed தந்துள்ளேன் முடிந்தால் இந்த rss feed யை தங்களின் தளத்தில் resent post ஆகா இணையுங்கள் நீங்கள் விளம்பரத்தை விரும்பாதவர் என்று நான் ஒப்புக் கொள்கிறேன் சரி முடியாத விஷயத்தை பேச வேண்டாம் என்று நான் நினைக்கிறேன் உங்களின் எழுத்துமேல் நம்பிக்கை இருந்தால் மட்டும் இணையுங்கள்? சரி வேண்டாம் விட்டுவிடுங்கள் உங்கள் ட்ராபிக் குறைந்ததுவிட்டால் மனது கஷ்டபடும்]]]

    வேண்டவே வேண்டாம். இத்தளத்துடன் தொடர்பு வேண்டாம் என்று நினைத்ததால்தான் ஸ்பேமில் தூக்கிப் போட்டேன்..!

    [[[எனது உண்மையான பெயரை வெளியிடுவதானால் நான் வறுத்தபட போவதில்லை எனது பெயர் சண்முககுமார் இப்போது நான் இலங்கையில் இருக்கிறேன் சொந்தவுறு திருப்பூர் பக்கத்தில் ஒரு கிராமம் எனது Profile மாற்றி விட்டேன் அதையும் பாருங்களேன் தயவு செய்து படத்தை மற்ற சொல்லாதிங்க plz
    http://www.blogger.com/profile/13419585766492234862]]]

    மிக்க நன்றி..!

    இன்றுலிருந்து தங்களின் தளத்தில் கமெண்ட் moderesan வைப்பிங்கண்டு நினைக்கிறேன் எதனால் சொல்றேன் தெரியுமா எனது பெயரில் சிறுது பயம் இருக்கும் என்று நினைக்கிறேன் இன்றிலிருந்து தினம் தங்களின் தளத்தை படித்துவிட்டு கமெண்ட் போடுவேன் தப்பா எதுவும் எழுதமாட்டேன் எதாவது அதிகமாக எழுதியிருந்தால் மன்னிச்சுருங்க பாஸ் தங்களின் அடுத்த பதிவை எதிர் பார்க்கிறேன்.]]]

    நீங்க பி்ன்னூட்டமே போட வேணாம் பாஸ்.. ச்சும்மா வந்து படிச்சிட்டு போனாலே போதும்..!

    ReplyDelete
  58. //நீங்க பி்ன்னூட்டமே போட வேணாம் பாஸ்.. ச்சும்மா வந்து படிச்சிட்டு போனாலே போதும்..!//

    இது எப்பிடி தெரியுமா இருக்குது! படத்த மட்டும் பாருங்க ஒரு மயிராண்டியும் வீட்டுக் கல்யாணத்துக்கு வர வேண்டாம்ன்னு ரசினி சொன்னாமாதிரி!

    ReplyDelete
  59. //நான் எழுத்தாளன் என்று யார் சொன்னது..? நீங்களே நினைத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பில்லை..!//


    அண்ணனுக்கு தில்லுதுரை என்ற பட்டத்தை பெருமகிழ்ச்சியுடன் வழங்குகிறோம்!

    யாருக்கு வரும் இப்பிடி ஒரு பெருந்தன்மை!

    ReplyDelete
  60. தல....

    இதுக்கே இப்படினா

    இத பாத்து என்ன சொல்வீங்க.......


    http://parisalkaran.blogspot.com/

    லகுட பாண்டி

    lagudapaandi.blogspot.com

    ReplyDelete
  61. [[[ராஜன் said...

    //நீங்க பி்ன்னூட்டமே போட வேணாம் பாஸ்.. ச்சும்மா வந்து படிச்சிட்டு போனாலே போதும்..!//

    இது எப்பிடி தெரியுமா இருக்குது! படத்த மட்டும் பாருங்க ஒரு மயிராண்டியும் வீட்டுக் கல்யாணத்துக்கு வர வேண்டாம்ன்னு ரசினி சொன்னா மாதிரி!]]]

    ராஜன் ஏன் இப்படி..?

    அந்த விருப்பப் பட்டியல் மூன்றும் ஒன்றாக அமைந்ததில் அவர் மீது எனக்கு இன்னமும் சந்தேகம் உள்ளது..!

    விடுங்க.. அவர் வரக் கூட வேணாம்.. போதுமா..?

    ReplyDelete
  62. [[[ஐத்ருஸ் said...
    ;)) Cool down, cool down, cool down.]]]

    ஓகே.. கூலாகத்தான் இருக்கிறேன்..!

    ReplyDelete
  63. லகுட பாண்டி said...

    தல. இதுக்கே இப்படினா இத பாத்து என்ன சொல்வீங்க.

    http://parisalkaran.blogspot.com/

    லகுட பாண்டி

    lagudapaandi.blogspot.com]]]

    என்னத்த சொல்றது..? இதெல்லாம் வேணும்ன்னே செய்யறதுதான்..! கொழுப்பெடுத்தவங்க..!

    ReplyDelete
  64. நீங்கள் சொன்னால் பெயரை மாற்றிக்கொள்வதாக கமெண்ட் போட்டிருக்காரே? சொன்னீங்களா

    ReplyDelete
  65. இந்த வருடத்தின் நான்கு டெர்ரர் விஷயங்கள்.

    1) விருதகிரி படம் ரிலீஸ் ஆனது...

    2) மன்மதன் அம்பு ரிலீஸ் ஆகி 5வது நாளாக ஓடி(!!??)க்கொண்டிருப்பது...

    3) சாரு-மிஷ்கின் பல்லி முட்டாய் சண்டை...

    4) உண்மைத்தமிழன் பெயரில் போலி வலைப்பூ..

    முதல் மூன்று நாம் தாங்கினோமே, ஸோ, இந்த நான்காவது விஷயத்தையும் மெதுவாக தாங்கிக்கொண்டு வேறு வழி தேட வேண்டும்....

    ReplyDelete
  66. [[[வழிப்போக்கன் - யோகேஷ் said...
    நீங்கள் சொன்னால் பெயரை மாற்றிக் கொள்வதாக கமெண்ட் போட்டிருக்காரே? சொன்னீங்களா]]]

    "தமிழன்" என்று பெயரை மாற்றிக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்தப் பெயரிலும் வேறொரு பதிவர் இருக்கிறார் என்பதைச் சொல்லியிருக்கிறேன்..!

    ReplyDelete
  67. [[[R.Gopi said...

    இந்த வருடத்தின் நான்கு டெர்ரர் விஷயங்கள்.

    1) விருதகிரி படம் ரிலீஸ் ஆனது...

    2) மன்மதன் அம்பு ரிலீஸ் ஆகி 5-வது நாளாக ஓடி(!!??)க் கொண்டிருப்பது...

    3) சாரு-மிஷ்கின் பல்லி முட்டாய் சண்டை...

    4) உண்மைத்தமிழன் பெயரில் போலி வலைப்பூ..

    முதல் மூன்று நாம் தாங்கினோமே, ஸோ, இந்த நான்காவது விஷயத்தையும் மெதுவாக தாங்கிக் கொண்டு வேறு வழி தேட வேண்டும்.]]]

    புண்ணுக்கு மருத்துவம் பார்க்கும் உமக்கு எமது நன்றி..!

    ReplyDelete
  68. அப்ப நாங்கள்ளாம் உண்மையான தமிழனுங்க இல்லையா... நீங்க முதல்ல உண்மைத்தமிழன் அப்படின்னு காப்பிரைட் வாங்குங்க... அத விட்டுட்டு.... .

    ReplyDelete
  69. Latest Tamil Movies review,Tamil cinema latest News in Tamil
    www.cineikons.com

    ReplyDelete