Pages

Friday, December 10, 2010

வலையுலகத் தோழர்களுக்கு நன்றி..!

10-12-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
 
 
2004-ம் வருடமே வலையுலகம் எனக்கு அறிமுகமானதாக இருந்தாலும் நானும் ஒரு வலைப்பதிவனாக என்னை இணைத்துக் கொண்டது மார்ச் 23, 2007-ல்தான்..!

அன்று துவங்கிய இந்த விளையாட்டு இதோ இன்று 600-வது பதிவினை இடுகின்றவரையில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது..!

இந்த மூன்றரை ஆண்டு காலத்தில் சில மாதங்கள் நான் எழுதாமல் இருந்த காரணத்தால் இந்த 600 பதிவுகள் என்பது குறைவானதாக எனக்கே தோன்றுகிறது..!

666 பாலோயர்ஸ் என்ற எண்ணிக்கையும் பல சமயங்களில் என்னை யோசிக்கத்தான் வைத்துள்ளது.. இத்தனை பேர் தொடர்ந்து படித்து வரும் அளவுக்கு அப்படியென்னதான் எழுதினேன் என்று திரும்பிப் பார்த்தால்  கும்மிகள், மொக்கைகள், சினிமா விமர்சனங்கள் என்பதையெல்லாம் ஒதுக்கிவிட்டால் சுமாராக 400 பதிவுகளாவது உருப்படியாக எழுதியிருக்கிறேன் என்று நினைக்கிறேன்..!

அதிலும் இப்படி பக்கம், பக்கமாக எழுதி வைத்தாலும் ஒருவரி விடாமல் படித்துவிட்டு எழுத்துப் பிழைகளைக்கூட சுட்டிக் காட்டுகின்ற அளவுக்கு வலையுலகத்தில் அன்புத் தோழர்கள் அதிகம் இருப்பதை நினைத்தால் கொஞ்சம் பெருமையாகத்தான் இருக்கிறது..!

பல சமயங்களில் ஏன் இதனைத் தொடர வேண்டும். நிறுத்திவிடலாம் என்று நினைக்கின்றபோதெல்லாம் புதிது, புதிதாக வந்த பதிவர்கள் பலரும் கொடுத்தும் உற்சாகக் குரலும், பாராட்டுதலும்தான் என்னை இன்னமும் இங்கேயே நீடிக்க வைத்துள்ளது..! அவர்களுக்கும் எனது நன்றிகள்..!

எண்ணிக்கை பெரிதல்ல.. என்ன எழுதியிருக்கிறோம் என்பதுதான் முக்கியம் என்றால்கூட, ஏதோ என்னளவில். எனக்குத் தெரிந்தவரையில், என்னால் முடிந்த அளவில், பலருக்கும் பயன்படக்கூடிய சில பதிவுகளை நான் எழுதியிருப்பதே எனக்குத் திருப்தியைத் தருகிறது. இதுவே போதும்..! இனியும் இப்படியே தொடர்வதாகத்தான் உத்தேசம்..!

தொடர்ந்து எனக்கு உற்சாகமூட்டி, வாய்ப்பளித்து, எழுத வைத்து, பின்னூட்டமிட்டு என் மனதுக்கு உரமூட்டும் அத்தனை வலையுலக முருகன்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..!
எனக்கு எல்லாமுமாக இருக்கும் என் அப்பன் முருகனை வேண்டி இந்தப் பாடல் :



83 comments:

  1. வாழ்த்துகள் அண்ணே :)

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் சகோதரா,

    பதிவுலகில், பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் படிப்பதற்கு நீங்கள் கொடுக்கும் விசயங்களுக்கான உழைப்பு மிகவும் பாராட்டதக்கது.

    ReplyDelete
  3. விரைவில் ஆயிரம் தொட வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. அண்ணே...வாழ்த்துகள்!..உங்க பதிவோட நீளத்தையும் கணக்கிலெடுத்தால் 600*5=3000 பதிவுகள்!
    தொடரட்டும் உங்கள் பணி..

    --செங்கோவி

    ReplyDelete
  5. என்னண்ணே இது? எப்படியும் அரைமணி நேரம் ஆவும் படிக்கறதுன்னு வந்தா இப்பிடி பொசுக்குன்னு முடிச்சி ஏமாத்திட்டீங்க!

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் தல.என்னை போன்ற புதியவர்களுக்கு வழிகாட்டியாக இருங்கள் தலைவரே.

    ReplyDelete
  7. தமிழ்மணத்தில் இணைந்த புதிதில் யாருமே இல்லாத கடையில் நான் டீயாற்றிக் கொண்டிருக்கும்போது என்னையும் ஒரு பதிவராக மதித்து ஃபாலோ செய்ய முன்வந்த பெரிய பதிவர் நீங்கள்!! (ஆனால் அதன்பிறகு ஒருமுறை கூட ஏரியா பக்கம் நீங்க வரவேயில்லை!!! ஹிஹி) உங்களின் பதிவுகள் நீளமாக இருந்தாலும் பெரும்பாலும் சுவாரஸ்யமாகவும், புதிய மறைக்கப்பட்ட தகவல்களுடன் வருவது தனிச்சிறப்பு... 600 பதிவுகள் என்றால் மலைப்பாகத்தான் இருக்கிறது...

    மனமார்ந்த வாழ்த்துக்கள்!! :‍)

    அன்புடன்,
    பிரபு எம்

    ReplyDelete
  8. சக பதிவர்களை, பின்னூட்டம் மட்டுமிடுபவர்களை, வலைத்தள நண்பர்களை, மாற்றுக் கருத்தாளர்களை, எள்ளி ஏளனம் செய்பவர்களை, கோபப்பட்டுத் திட்டித் தீர்ப்பவர்களை, அரைகுறை அறிவால் அலட்சியப்படுத்துபவர்களை, முன்தீர்மானித்துத் தாக்குபவர்களை... பொறுமையாகவும் பக்குவமாகவும் நேசத்தோடும் பொறுப்போடும் அணுகி வருகிறீர்கள். வாழ்த்துக்கள். குறுகிய வாழ்நாளில் திரும்பப் பெற முடியாத நேரத்தை-வாழ்வையும் போராட்டங்களையும் மிக முக்கியமானதாக மாற்றிக் கொண்டிருக்கும் நேரத்தை- குப்பைப் படங்களைப் பார்ப்பதிலும் அவற்றை எழுதுவதிலும் நீங்கள் கழிக்க வேண்டாம் என்பது என் கருத்து. இதே எளிமையுடன் பதிவுகளின் பொருள் ஆழத்தை ஆழமாக்குங்கள் விரிவாக்குங்கள். ஆழமாகக் கற்பது ஆழமாக கருத்துக்களைப் பதியவைக்கப் பயன்படும் என்று நம்புகிறேன். மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. 600 பதிவுகள், 666 பின்தொடருபவர்கள் என்பது பதிவுலகில் ஒரு சாதனை தான்.
    உங்கள் சாதனை தொடர எங்கள் வாழ்த்துக்கள்.

    எங்களுக்கும் தொடர்ந்து வழிகாட்ட வேண்டுகிறோம்.

    உங்கள் நேசத்திற்குரிய "பழனி பதிவாழ் பாலகுமாரன்" உங்களுக்கு துணை நிற்க்கட்டும்...

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் தாத்தா...

    ReplyDelete
  11. எங்களை பிரமிக்க வைக்க பதிவர் நீஙகள்.
    உங்களைப்பற்றிய கீழ்கண்ட உண்மை வரிகள், நாங்களும் வழி மொழிகிறோம்.

    //அரைகுறை அறிவால் அலட்சியப்படுத்துபவர்களை, முன்தீர்மானித்துத் தாக்குபவர்களை... பொறுமையாகவும் பக்குவமாகவும் நேசத்தோடும் பொறுப்போடும் அணுகி வருகிறீர்கள்.//
    //உங்க பதிவோட நீளத்தையும் கணக்கிலெடுத்தால் 600*5=3000 பதிவுகள்!//
    //ஆனால் அதன்பிறகு ஒருமுறை கூட ஏரியா பக்கம் நீங்க வரவேயில்லை!!!//
    //எப்படியும் அரைமணி நேரம் ஆவும் படிக்கறதுன்னு வந்தா இப்பிடி பொசுக்குன்னு முடிச்சி ஏமாத்திட்டீங்க!//

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் சரவணன் அண்ணா, உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன். பதிவுகள் நீளமாக
    இருந்தாலும் சுவராசியமாகதான் எழுதுகிறீர்கள். மீண்டும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் சரவணன்

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள் தலைவரே ...

    ReplyDelete
  15. "சில மாதங்கள் நான் எழுதாமல் இருந்த காரணத்தால்
    "

    தாத்தா,,, நீங்க இல்லாத ஒரு பதிவுலகை எதிர்பார்க்கமுடியவில்லை...

    ஏன் எழுதாம இருந்தீங்கனு சொன்னா, புதிய பேராண்டிகள் தெரிந்து கொள்வார்கள்

    ReplyDelete
  16. அண்ணா, அடிச்சி ஆடுங்க...

    ReplyDelete
  17. அய்யா,600 என்ற படத்தை சற்று சிறிதாக்க முடியுமா?

    ReplyDelete
  18. 600 இடுகை உங்களுக்கு சாதரணமே..

    சீக்கிரமே 6000 ஆக வாழ்த்துகிறேன்...

    ReplyDelete
  19. தொடரட்டும் உங்கள் சேவை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. வாழ்த்துகள்!! ஈழத்தில் நல்லூர் கந்தசுவாமி கோவில் திருவிழா எங்களுக்கு பெரிய முக்கியமான திருவிழா..அநேகமாக அந்த நேரம் பள்ளிவிடுமுறையாகவும் இருக்கும். எங்கள் அப்பா சிங்கள ஊரில் வேலை பார்த்துவந்ததால் சில சமயம் அங்கு விடுமுறையைக் கழிக்க போயிருந்தால் திருவிழாவை இழந்திருப்போம்..ஆனால் நல்லூர் தேர் திருவிழாவை மட்டும் மிஸ் பண்ண மனம் வருவதில்லை. அந்தக் குறையை இலங்கை வானொலி தீர்த்து வைக்கும்...தேர் திருவிழாவை நேர்முகவர்ணனை செய்வார்கள். அதைக் கேட்டுக் கொண்டிருந்தால் என்னவோ எங்கள் வீட்டுக் கூடத்திலேயே முருகன் தேரில் பவனி வருவது போல் இருக்கும். அப்படி ஒரு தெளிவான வர்ணனை தருவார்கள். எங்கள் அம்மம்மா தேரில் முருகன் ஏறும் காட்சியை வானொலியில் கேட்டுக் கொண்டிருக்கும் போதே தலையில் கை கூப்பி முருகா முருகா என்று செபம் சொல்லுவார். வானொலியின் காற்றலையில் அங்கு திரண்டிருக்கும் சனத்திரளின் பக்தி கோசமும், திருவிழா மேளம், சங்கு முழக்கமும் வர்ணனையூடாகவே ஒலிக்கும். முருகனின் பட்டாடையின் நிறத்தை மட்டுமல்ல சரிகை வேலைப்பாட்டைக் கூட சிலாகிப்பார் அந்த வர்ணனையாளர். அற்புதமாக இருக்கும். எங்கோ பல மைல்களுக்கப்பாலிருக்கும் கோவில் நிகழ்வை கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் வல்லமை வர்ணனையாளர்களுக்கு இருக்கும்....

    அதன் பின் ஜப்பார் ஐயாவின் கிரிக்கெட் வர்ணனையை சொல்லலாம்.. 2009ல் அமெரிக்கா வந்திருந்த போது ஐயா எங்கள் வீட்டில் தங்கியிருந்த சமயம்..தனது கம்பீரமான குரலில் தன் மனதில் நிற்கும் தனது கிரிக்கெட் நிகழ்வின் வர்ணனையை சொல்லிக் காண்பித்தார் ...அதே போல் அவருடைய அரசியல் பார்வை ஒன்றையும் நிகழ்த்தினார். அப்படியே 1948ம் ஆண்டிலிருந்து தற்போதைய இலங்கை அரசியல் பின்னணிகள் பற்றிய அந்த அலசல் ஒரு சரித்திர வர்ணனை என்று தான் சொல்ல வேண்டும்.....

    அதற்கடுத்ததாக பதிவுலகில் ஒரு வர்ணனையாளராக நான் சந்தித்தது நீங்கள் தான் சகோதரரே...உண்மையைச் சொல்ல வேண்டுமானால் நான் படித்த உங்கள் முதல் பதிவே “ஈழத்தமிழருக்காக தீக்குளித்து தன்னைத் தானே ஆகுதியாக்கிக் கொடுத்த வீரன் முத்துக்குமாரின் இறுதி யாத்திரையின் போதான நிகழ்வுகள்” பற்றிய பதிவு தான். எப்படி நிகழ்வை உடனடியாக அதுவும் இத்தனை வர்ணிப்புகளுடன், நிகழ்ச்சியின் சின்ன சின்ன விசயங்களைக் கூட விடாமல் கவனித்து எழுதினார் என்று அன்றைக்கு நான் பிரமித்தேன். அதன் பின் உங்கள் வலைப்பூவின் வாசகியானேன். தொடர்ந்து வாசிக்கிறேன் என்றெல்லாம் பொய் சொல்லமாட்டேன். ஆனால் இங்கு எந்த் புதிய படம் பார்ப்பதானாலும் முதலில் உண்மைத் தமிழன் என்ன சொல்லியிருக்கிறார் என்று படித்துவிட்டு யோசிக்கலாமென்று நினைக்குமளவுக்கு உங்கள் விமர்சனங்கள் அழகானவை; உண்மையானவை. நன்றி!!

    மனம் நிறைந்த வாழ்த்துகள் தம்பி!

    ReplyDelete
  21. வாழ்த்துகள் பெருசு:)))

    ReplyDelete
  22. குப்பைப் படங்களைப் பார்ப்பதிலும் அவற்றை எழுதுவதிலும் நீங்கள் கழிக்க வேண்டாம் என்பது என் கருத்து. """


    இதை ஏற்க வேண்டாம் என்பது எங்கள் கருத்து,,,

    இலக்கண பிழை, ரகசியம், கல்லூரி பெண்ணின் காம லீலைகள் போன்ற படங்கலுக்கு விமர்சனம் எழுத உங்களை விட்டால் யாரும் இல்லை

    ReplyDelete
  23. வாழ்த்துகள் அண்ணே...

    ReplyDelete
  24. என்னுடைய அன்பு வாழ்த்துகள்!!

    ReplyDelete
  25. வாழ்த்துக்கள் அண்ணா, உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன். பதிவுகள் நீளமாக
    இருந்தாலும் சுவராசியமாகதான் எழுதுகிறீர்கள்.

    ReplyDelete
  26. வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்..........வாழ்த்துக்கள்.

    பிரமிக்கவைக்கும் நீளமான, சுவாரஸ்யமான பதிவுகள் உங்கள் ஸ்பெஷல். தொடருங்கள்.

    ReplyDelete
  27. வாழ்த்துகள்ண்ணே..!!தொடர்ந்து எழுதுங்க..!!

    ReplyDelete
  28. வாழ்த்துகள். Keep going.

    ReplyDelete
  29. நாங்கள் எப்போதும் உங்களோடு இணைந்திருப்போம்...

    தொடர்ந்து செல்லுங்கள்........

    உங்கள் பொன்னான பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்களுடன்
    மாணவன்
    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  30. //எனக்கு எல்லாமுமாக இருக்கும் என் அப்பன் முருகனை வேண்டி இந்தப் பாடல் ://

    இந்த பாடலைத்தான் இசைமைப்பாளர் தீனா வல்லக்கோட்டை படத்தில் சுட்டுப் போட்டிருக்கிறாரா....

    சுட்டாலும் பாட்டு எஸ்பிபி-ஜானகி அம்மாளின் குரல்களில் நல்லாருக்கு

    செம்மொழியே செம்மொழியே என்று தொடங்கும் இந்த பாடலைக் கேட்க இங்கு செல்லுங்கள்: http://mp3.tamilwire.com/vallakottai-2010.html

    ReplyDelete
  31. அறுநூறுக்கு வாழ்த்துக்கள்! அதெல்லாம் சரி, உண்மைத் தமிழன் பக்கங்களுக்குப் படிக்க வந்தால் பதிவு ஒன்றுக்கு அரை மணி நேரமாவது ஆகும் என்று நம்பி வந்த ஒரு வாசகரை ஏமாற்றி விட்டீர்களே!

    ReplyDelete
  32. நண்பர் உண்மைத்தமிழன்,

    2011ல் உங்கள் பேனாவிற்கு நிறைய வேலை இருக்கும். எனவே 1000வது பதிவுடன் அடுத்த வருட இறுதியில் உங்களை சந்திக்கக்கூட நாங்கள் தயாராகத்தான் உள்ளோம். எழுதுவதை நிறுத்துவது என்ற பேச்சை மட்டும் எடுக்காதீர்கள்.

    வாழ்த்துக்களுடன்,

    gopi g

    ReplyDelete
  33. வாழ்த்துக்கள் நண்பரே....

    ReplyDelete
  34. வாழ்த்துவதில் பெருமகிழ்வுறுகின்றேன்

    ReplyDelete
  35. annachi,

    ungaloda 600 = 600,000 !

    valtha vayathilai vanangukiren :)

    ReplyDelete
  36. சரவணன்

    மிக்க மகிழ்ச்சி.

    உங்கள் பதிவின் நீளம் அதிகமாக இருக்கிறது என்று குறைபட்டுக் கொள்ள வேண்டாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாணி. இதில் எது சரி எது தவறு என்று யாரும் சொல்ல முடியாது.

    இதுவரை நான் படித்த உங்கள் பதிவுகளில் நான் ஆபாசமான ஒரு விஷயத்தைப் பார்த்தது கிடையாது. நல்ல பதிவருக்கு இது ஒரு அடையாளம்.

    ஆறு வருடங்களாக எழுதுவது ஒரு பெரிய சாதனை. எனக்கு ஆறு மாதத்திலேயே நாக்குத் தள்ளி விட்டது, இன்னும் எழுத எவ்வளவோ விஷயங்கள் மனதில் இருந்தும் கூட (படிக்கவும் ஆள் இல்லை என்பது வேறு விஷயம்).

    உங்கள் முகம் கூட நான் பார்ததில்லை. ஆனால் பதிவெழுத வந்த நாள் முதல் உங்களை நிறைய முறை பின்னூட்டங்களில் கலாய்த்திருக்கிறேன். நீங்கள் ஒருபோதும் அதைத் தவறாக எடுத்துக் கொள்வதில்லை.

    வீட்டில் உள்ளவர்களுக்கே போன் செய்ய இருமுறை யோசிப்பேன் வெளிநாடு பயணங்களின் போது. ஆனால் சுஜாதா பற்றி உங்கள் அஞ்சலிக் கட்டுரை படித்ததும் இடம், பொருள், ஏவல் எதுவும் பார்க்காமல் உடன் பாராட்ட வேண்டும் என்று தோன்றியதால் லண்டனில் இருந்தே போன் செய்தேன்.

    இன்னும் நிறைய எழுதுங்கள் சரவணன். படிக்க நாங்கள் தயார்.

    ReplyDelete
  37. யாருப்பா அது இந்தப் பதிவுக்கு மைனஸ் குத்துவது?

    ReplyDelete
  38. வாழ்த்துக்கள்ணே...

    ReplyDelete
  39. மூணே முக்கால் வருசத்துலே 600 பதிவுகள்! அதுவும் ஒவ்வொன்னும் மகாநீளம்.

    இதுவே ஒரு சாதனைதான்!

    இனிய வாழ்த்து(க்)கள்.

    விரைவில் ஆயிரமாகக்க்கடவது !!!

    ReplyDelete
  40. இதுக்கு யாருன்னே மைனஸ் ஓட்டு போட்டது? நல்லா இருப்பா மைனஸ் ஓட்டு போட்ட மகாராஜா.

    வாழ்த்துக்கள் அண்ணே

    ReplyDelete
  41. வாழ்த்துக்கள் அண்ணா..!!!

    ReplyDelete
  42. வாழ்த்துகள் அண்ணாச்சி

    ReplyDelete
  43. வாழ்த்துக்கள் பாஸ்.

    ReplyDelete
  44. வாழ்த்துகள் அண்ணே.

    ReplyDelete
  45. 600 க்கு வாழ்த்துகள் அண்ணே.
    www.kaumaram.com

    ReplyDelete
  46. ...>>>வாழ்த்துக்கள் அண்ணே

    ..>>
    எண்ணிக்கை பெரிதல்ல.. என்ன எழுதியிருக்கிறோம் என்பதுதான் முக்கியம் என்றால்கூட, ஏதோ என்னளவில். எனக்குத் தெரிந்தவரையில், என்னால் முடிந்த அளவில், பலருக்கும் பயன்படக்கூடிய சில பதிவுகளை நான் எழுதியிருப்பதே எனக்குத் திருப்தியைத் தருகிறது. இதுவே போதும்..! இனியும் இப்படியே தொடர்வதாகத்தான் உத்தேசம்..!

    சரிதான்


    இதுக்குக்கூட மைனஸ் ஓட்டா

    ReplyDelete
  47. தலைவரே...

    அடிச்சு விளையாடுங்க.

    Miles to go before you sleep.

    அன்பு நித்யன்.

    ReplyDelete
  48. 600 பதிவையும் வரிசையில் வைத்தால் காஷ்மீர்-கன்னியாகுமரி தங்க நாற்கரசாலை ஆகுமோ??

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  49. 600 க்கு வாழ்த்துகள் அண்ணே.....
    உங்களுடைய சேவை பதிவுலகத்துக்கு தேவை.

    ReplyDelete
  50. 600 நாட் அவுட்....

    தொடருட்டும் உங்கள் எழுத்துப்பணி...

    கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
    கந்தனே உன்னை மறவேன்...

    அற்புதமாகிய அருட்பெரும் சுடரே
    அருள் மழை தேடிடும் கருணையின் கடலே....

    ReplyDelete
  51. வாழ்த்துக்கள் உண்மைத்தமிழன்.
    தங்கள் மக்கள் பணி மேலும் தொடரட்டும்.

    ReplyDelete
  52. சார் வணக்கம் .......வாழ்த்துக்கள் ........ உங்களை மாதிரி கச்சிதமாக கருத்துக்களை சொல்ல எனக்கு குட்டிக்கரணம் போட்டாலும் வரமாட்டேங்குது , சீரியஸ்ஸா ஏதாவது எழுதி படிச்சுப்பார்த்தால் எனக்கே சிரிப்பு சிரிப்பா வருது அவ்வளவு மொக்கையா இருக்கு .

    எனக்கு தெரிஞ்சு இந்த பதிவுலகில் தலைக்கனம் சிறிதும் இல்லாத ஒரு அருமையான மனிதர் சார் நீங்கள் .....எங்களுக்கு வழிகாட்டிக்கிட்டே நீங்க இன்னும் அடிச்சு ஆடுங்க .....

    ReplyDelete
  53. 600க்கு வாழ்த்துக்கள்!
    பதிவுகளுக்கு நீங்கள் எடுக்கும் முயற்சியும் (சில சமயம் ரிஸ்க்கும்) பாராட்டத்தக்கது!

    ReplyDelete
  54. //பல சமயங்களில் ஏன் இதனைத் தொடர வேண்டும். நிறுத்திவிடலாம் என்று நினைக்கின்றபோதெல்லாம் புதிது, புதிதாக வந்த பதிவர்கள் பலரும் கொடுத்தும் உற்சாகக் குரலும், பாராட்டுதலும்தான் என்னை இன்னமும் இங்கேயே நீடிக்க வைத்துள்ளது..! அவர்களுக்கும் எனது நன்றிகள்..!//


    அண்ணே அவிங்க அட்ரசை மட்டும் கொடு... அந்த பாவிங்களை சும்மா விடக்கூடாது.

    ReplyDelete
  55. வாழ்த்துக்கள் அண்ணே..இன்னும் நிறைய எழுதுங்க...என்ன ?வருமானம் என்று ஒரு விஷயத்தை பார்க்காமல் சளைக்காமல் எழுதும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.. அப்பன் முருகன் உங்களுக்கு எல்லா செல்வத்தையும் வழங்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கின்றேன்...

    ReplyDelete
  56. அண்ணே இப்பதான் நான் என் பதிவை கவுன்ட் பண்ணினேன் 700 வந்து இருக்கே.. டொன்டடொயிங்.....

    ReplyDelete
  57. வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  58. வாழ்த்துக்கள்! தொடரட்டும் உங்கள் பணி!

    ReplyDelete
  59. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  60. வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள அத்தனை பேரையும் குறிப்பிட்டுத் தனித்தனியாக நன்றி சொல்ல முடியவில்லை. மன்னிக்கவும்..!

    புதிய புதிய நண்பர்களாக இப்போதுதான் முதல்முறையாக எனது தளத்திற்கு பின்னூட்டம் போட வந்திருப்பவர்களைப் போன்று பலரும் வந்து வாழ்த்தியிருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.. நெகிழ்ச்சியையும் தருகிறது..

    நண்பர்களே.. இத்தனை பேரின் நல்லாசியும் இருக்கின்றபோது இன்னும் நன்றாக எழுத வேண்டும்.. தொடர்ந்து எழுத வேண்டும். வலையுலகில் நீடித்திருக்க வேண்டும் என்ற ஆசை என் மனதில் மெருகேறிக் கொண்டே செல்கிறது..

    அனைவருக்கும் எனது வணக்கங்கள்.. வந்தனங்கள்..! நன்றிகள்..!

    ReplyDelete
  61. அண்ணே : வாழ்த்துகள்!!!!!!!!!

    ReplyDelete
  62. [[[வழிப்போக்கன் - யோகேஷ் said...
    அண்ணே : வாழ்த்துகள்!!!!!!!!!]]]

    நன்றி யோகேஷ்..!

    ReplyDelete
  63. வாழ்த்துகள்.

    அதென்ன இதிலும் ஒரு மைனஸ் ஓட்டு.

    ReplyDelete
  64. ஹல்லோ அண்ணா ,
    இப்படி இருக்கிறீங்க?
    .
    நான் முன்பு மாதிரி வலையத்தளங்கள் மும்முரமாக மேய்வதில்லை.நேரம் கிடைத்தால் எப்போதாவது தமிழ்மணம் பக்கம் வருவதுண்டு.அப்படி இன்று வரும்போது நீங்கள் அறுநூறு பதிவுகள் போட்டதை அறிந்துகொண்டேன்.
    மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா .
    அங்கெ பழைய பதிவில் போட்டால் கவனிக்க மாட்டீர்கள் என்பதால் இங்கு போடுகிறேன்.
    நீங்கள் எனது அபிமான பதிவர்களில் ஒருவர்.யார் என்ன கிண்டல் பண்ணினாலும் உங்கள்பாட்டுக்கு ஆர்வத்தோடு சளைக்காமல் சலிப்பு தட்டாமல் அடுத்தடுத்து நீங்கள் போடும் பதிவுகள் உங்கள் மேல் பலருக்கும் ஒரு வாஞ்சையை உண்டு பண்ணிவிட்டது தொடந்தும் பதிவுகளைப் போடுங்கள் நேரம் இருந்தால் நானும் படித்து மகிழ்கிறேன்.
    -வானதி

    sorry I have forgotten my pass word and couldn't vote for you.

    ReplyDelete
  65. [[[vanathy said...

    ஹல்லோ அண்ணா, இப்படி இருக்கிறீங்க? நான் முன்பு மாதிரி வலையத்தளங்கள் மும்முரமாக மேய்வதில்லை. நேரம் கிடைத்தால் எப்போதாவது தமிழ்மணம் பக்கம் வருவதுண்டு. அப்படி இன்று வரும்போது நீங்கள் அறுநூறு பதிவுகள் போட்டதை அறிந்து கொண்டேன். மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா.
    அங்கெ பழைய பதிவில் போட்டால் கவனிக்க மாட்டீர்கள் என்பதால் இங்கு போடுகிறேன். நீங்கள் எனது அபிமான பதிவர்களில் ஒருவர். யார் என்ன கிண்டல் பண்ணினாலும் உங்கள் பாட்டுக்கு ஆர்வத்தோடு சளைக்காமல் சலிப்பு தட்டாமல் அடுத்தடுத்து நீங்கள் போடும் பதிவுகள் உங்கள் மேல் பலருக்கும் ஒரு வாஞ்சையை உண்டு பண்ணிவிட்டது. தொடந்தும் பதிவுகளைப் போடுங்கள் நேரம் இருந்தால் நானும் படித்து மகிழ்கிறேன்.
    -வானதி]]]

    sorry I have forgotten my pass word and couldn't vote for you.]]]

    என் மேல் இவ்வளவு கரிசனத்தோடு எழுதும் இந்தத் தங்கையை நான் என்னவென்று சொல்வது..?

    இரு கரம் கூப்பி வணங்குகிறேன்.. உன்னைப் போன்றவர்களால்தான் நான் இன்றைக்கும் இந்த வலையுலகில் நீடித்து வருகிறேன்..!

    நன்றி தாயே..!

    ReplyDelete
  66. [[[ஜோதிஜி said...

    வாழ்த்துகள்.]]]

    நன்றிகள்ண்ணா..!

    [[[அதென்ன இதிலும் ஒரு மைனஸ் ஓட்டு.]]]

    கட்டற்ற சுதந்திரம் என்பது இதுதான்..!

    ReplyDelete
  67. [[[மதுரை பாண்டி said...

    thodarndhu eludhungal anna!!!]]]

    நன்றி தம்பி..!

    ReplyDelete
  68. [[[srividya said...

    congratulations.]]]

    நன்றி வித்யா..!

    ReplyDelete
  69. என் முதல் பின்னூட்டம். உங்களின் அரசியல் மற்றும் திரைப்பட பதிவுகள் நன்று. குறிப்பாக அரசியல் பதிவுகள். தொடருங்கள் உங்கள் பதிவுகளை,

    ReplyDelete