என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
இந்த வருடத்திய கடைசி இட்லி-வடை பதிவு இது.
ஆகவே கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டுமே என்று சில நிஜமான சண்டைக் காட்சிகள் இருக்கும் வீடியோக்களை உங்களுக்குப் பரிசாகத் தருகிறேன்.. காரணமெல்லாம் கேட்கக் கூடாது.. புரிஞ்சுக்கணும்..! அம்புட்டுத்தான்..!
இது தாதாகிரி என்கிற டிவி நிகழ்ச்சியின்போது நிகழ்ச்சியின் தொகுப்பாளருக்கும், அதில் கலந்து கொண்டவருக்கும் இடையில் நடந்த மோதல். முதலில் அடித்தது பெண்தான் என்றாலும், பொம்பளைப் புள்ளையை கை நீட்டியா அடிக்கிற ராஸ்கல் என்று சொல்லி நம்ம பயலைப் போட்டுப் புரட்டி எடுத்துட்டாய்ங்க.. பாருங்க..
சினிமாவில்தான் புருஷனை பொண்டாட்டி அடிப்பதைப் போல் காமெடிக்காக காட்டுவார்கள். நிஜமாக, சீரியஸாக காட்டித் தொலைக்க மாட்டார்கள். அதே போல் சீரியலிலும் நம்மாளு ஒருத்தனை அக்குவேறு, ஆளு வேறா பிரிச்சிருக்காங்க. கன்னட சீரியலாம்.. நல்ல வேளை. தமிழ் சீரியல்ல இந்த அளவுக்கெல்லாம் இல்லை. கொஞ்சமா வெளக்கமாத்தால அடிக்கிற மாதிரிதான் இருந்தது. பார்த்து சூதானமா இருந்துக்குங்க..
இந்தச் சமாச்சாரம் எப்போ நடந்ததுன்னு எனக்குத் தெரியாமப் போச்சே. இப்பத்தான் பார்த்தேன்..
டான்ஸ் புரோகிராமுக்கு நடுவரா வந்த சின்ன இடையழகி சிம்ரனிடம் எடுத்த எடுப்பிலேயே ஏதோ ஹைகோர்ட் ஜட்ஜ் மாதிரி “சந்திரமுகில ஏன் நீங்க நடிக்கலைன்னு..” கேட்டு டென்ஷனாக்கிட்டாரு விஜய் ஆதிராஜ். அதுல சிம்ரன் அக்கா ஸாரி ஆண்ட்டி கோபமாகி வெளிநடப்பு செஞ்சிருக்காங்க.
அப்புறம் எப்படியோ சமாதானம் செஞ்சு கூட்டிட்டு வந்த மாதிரி தெரியுது. அப்படியே கூடவே இதுவும் செட்டப்புதான்ற மாதிரியும் தெரியுது. நம்ம வூட்டு ஜனங்களுக்கு இதெப்படி தெரியப் போகுது..? பாருடி சண்டையன்னு மோட்டுவாய்ல கையை வைச்சுக்கிட்டுப் பார்த்து டிஆர்பியை ஏத்திவிட்டிருப்பாங்கன்னு நினைக்கிறேன்.
இது கேரளாவில் டைவர்ஸ் கோர்ட்டுக்கு வந்த இரண்டு குடும்பத்துப் பெண்கள் கோர்ட்டுக்கு வெளியே தங்களுடைய பிரச்சினைகளைப் பேசும்போது பேச்சுவாக்கில் கை கலப்பாகி, ஆளாளுக்கு முடியைப் பிடித்திழுத்து காரசாரமாக்கியிருக்கிறார்கள்..
இது பஞ்சாப்பில் ஒரு பெண்கள் கல்லூரியில் இரண்டு குரூப் மாணவிகள் விருதகிரி விஜயகாந்த் மாதிரி எத்தி, எத்தி விளையாடும் சூப்பர் பன்ச் சண்டை..
செக் குடியரசு நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் டேவிட் ராத்தை அந்நாட்டின் துணை பிரதமர் மிராஸ்லாவ் மெசெக் பல் டாக்டர்கள் மாநாட்டு மேடையிலேயே மண்டையில் ஒரு தட்டுத் தட்டியதுதான் இந்த வீடியோ.
தட்டியதைத் தட்டிக் கேட்டு அமைச்சரும் பின்பு துணை பிரதமரை ஒரு போடு போட.. இருவரும் உருண்டு புரண்டு மல்லுக் கட்டியுள்ளார்கள். சண்டைக்கான காரணத்தைக் கேட்டு செக் குடியரசு நாடே சிரிப்பாய் சிரித்திருக்கிறது.
துணை பிரதமர் மெசெக் தனது மனைவியை பணத்துக்காகத்தான் திருமணம் செய்திருக்கிறார் என்று டேவிட்ராத் கட்சிக்காரர்கள் பலரிடமும் கிசுகிசு பரப்பினாராம். அதுதான் பொது மேடையிலையே ஒரு போடு போட்டிருக்கிறார் மெசெக். இப்போது இவர்கள் இருவரையுமே அவரவர் பதவியிலிருந்து நீக்கியிருக்கிறார்கள்.
தனி நபர்கள்தான் சண்டை போடுவாங்களா..? நாங்க போட மாட்டோமாக்கும் என்று சவால்விட்டுச் செய்து காட்டுகிறார்கள் பொலிவியா நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள். என்ன ஆவேசம் பாருங்கள்..
குங்பூ, கராத்தேக்கு புகழ் பெற்ற தென்கொரிய பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் நடத்திய சண்டைக் காட்சிகள்தான் இது. இதில் பெண் எம்.பி.க்களுக்கும் கலந்து கொண்டு தங்களது வீரதீரத்தைக் காட்டியிருப்பது பாராட்டுக்குரியது..
இது உக்ரைன் பாராளுமன்றத்தில் நடந்த போர்.. கல் வீச்சு, அம்பு வீச்சு, தடி வீச்சு, முட்டை வீச்சு என்று அனைத்து அம்புகளும் ஏவப்பட்டு, கை கலப்பாகி, மூக்கு உடைந்து, ரத்தம் கொட்டிய நிலையிலும் சபாநாயகர் மிகக் கர்மச் சிரத்தையாக ஓட்டெடுப்பு நடத்தி ஒரு தீர்மானத்தை நடத்தி முடித்திருக்கிறார். என்னவொரு கடமையுணர்ச்சி..? கடைசியில் பாராளுமன்றத்திற்குள்ளேயே கண்ணீர் புகைக் குண்டுகளை வீசித்தான் எம்.பி.க்களை வெளியேற்றியிருக்கிறார்கள்..
இது இலங்கை பாராளுமன்றத்தில் 2007-ம் ஆண்டு அக்டோபர் 9-ம் தேதியன்று நடந்த சிறிய தள்ளுமுள்ளு சண்டை..
உலகிலேயே தற்போதைக்கு பாராளுமன்றச் சண்டைக்குப் புகழ் பெற்ற நாடான தைவானின் பாராளுமன்றத்தில் நடந்த பல, பல சண்டைக் காட்சிகளின் அரியத் தொகுப்பு
நம்ம மட்டும் சளைத்தவர்களா என்ன..? இது 2007-ம் ஆண்டு ஜூன் 29-ம் தேதியன்று உத்தரப்பிரதேச சட்டப் பேரவையில் நடந்த அதி பயங்கர சண்டைக் காட்சி இது.. காணத் தவறாதீர்கள்..
இவ்வளவு சோகத்தையும் தாங்கிக்கிட்ட உங்களின் புண்பட்ட மனதை கூல் செய்ய வேண்டி இந்தச் செய்தி..
'நோ ஒன் கில்டு ஜெஸிகா' அப்படீன்ற படத்துல வித்யாபாலனும், ராணி முகர்ஜியும் நடிச்சுக்கிட்டிருக்காங்க. ஒரு பெரிய ஸ்டார் இருந்தாலே ஏதாவது ஒரு கிசுகிசு எழுதுவாங்க. ரெண்டு பெரிய ஸ்டாரிணிகள் இருக்கும்போது எழுத மாட்டாங்களா..?
ராணி முகர்ஜிக்கும், வித்யா பாலனுக்கும் முட்டிக்கிச்சு. ரெண்டு பேருமே படத்தில நடிக்க ஆர்வமில்லாம இருக்காங்க.. யாராவது ஒருத்தர் பிய்ச்சுக்கப் போறாங்க.. படம் நிக்கப் போகுது அப்படி, இப்படின்னு பிட்டு நியூஸா போட்டுத் தாளிச்சாங்களாம் பத்திரிகைக்காரங்க.
படம் புட்டுக்குமோன்னு பயந்து போன தயாரிப்பாளர் பத்திரிகையாளர்களுடன் ஹீரோயின்களை நேர்ல சந்திக்க வைச்சு “நல்லா பார்த்துக்குங்க.. இவங்க ரெண்டு பேரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணாத்தான் இருக்காங்க. நோ சண்டை.. ஒரே பேமிலிதான்.. நல்ல பாசக்காரங்க.. படத்தை நல்லபடியா நடிச்சுக் கொடுப்பாங்க..” அப்படீன்னு சொல்றதுக்கு ஒரு பிரஸ் மீட் ஏற்பாடு பண்ணியிருக்காரு..
கூட்டத்துக்கு ஸ்டாரிணிகள் ராணி முகர்ஜியும், வித்யாபாலனும் வந்தாங்க. “இவங்ககிட்ட என்னத்த சொல்லி.. என்னத்த செஞ்சு நாம ரெண்டு பேரும் ப்ரெண்ட்ஸ்தான்.. நமக்குள்ள சண்டையெல்லாம் ஒண்ணுமில்லை சொல்லிப் புரிய வைக்கிறது?” அப்படீன்னு வித்யாபாலன், ராணிகிட்ட கேட்டிருக்காங்க.
அதுக்கு ராணி "சொல்ல வேணாம். செஞ்சு காட்டுவோம்.. வா"ன்னு சொல்லி வித்யாபாலனை இறுக்கியணைச்சு லிப் டூ லிப் உம்மா கொடுத்து அசத்தியிருக்காங்க.. முதல்ல தயங்குன வித்யாபாலனை அடுத்தடுத்து அதே மாதிரி கிஸ் பண்ணி கலக்கியிருக்காங்க ராணியம்மா.. இனிமே எவனாச்சும் சொல்லுவீங்க.. அக்காமார்கள் ரெண்டு பேரும் சண்டை போடுறாங்கன்னு..?
டிரவுசரை கழட்டறதுன்னா சத்தியமா அது இதுதானுங்கோ..
படித்ததில் பிடித்தது
"சுரேஷ், உங்களுக்கு விரைவில் பண வசதி விரைவில் ஏற்படும். நான் பல காலம் சோற்றுக்கே வழியில்லாமல் வெறும் அழுகல் தக்காளியை உண்டு உயிர் வாழ்ந்திருக்கிறேன். இன்னமும் இந்தியாவில் உழைப்புக்குப் பலன் உண்டு என்பதற்கு நான் ஒரு சாட்சி. ஆனால் உழைப்பே உயர்வு தரும் என்ற பொய் வாசங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஒரு ஆள் வாட்ச்மேனாக இருந்தால் வாழ்நாள் பூராவும் வாட்ச்மேனாகவே இருக்க வேண்டியதுதான். உழைப்போடு கொஞ்சம் புத்தியையும் கலக்க வேண்டும். அப்போது பணம் வரும். வந்த பிறகு, புத்தகம் வாங்க மறந்து விடாதீர்கள்."
- எழுத்தாளர் சாரு நிவேதிதா
பார்த்ததில் பிடித்தது
நன்றி..!
முதலில் இட்ட இதே இட்லி-வடை பதிவில் மாயவரத்தான் என்னும் பதிவர் தனது புத்திசாலித்தனமான கோமாளித்தனத்தால் மைனஸ் ஓட்டுக்களைப் போட்டுக் குத்திவிட்டார். இத்தனைக்கும் அவர் இந்தப் பதிவைப் படிக்கவே இல்லியாம்..
ReplyDeleteஇது போன்று எனக்கு நண்பர்கள் கிடைக்க நான் ரொம்பவே கொடுத்து வைத்திருக்க வேண்டும். வேறு வழியில்லாமல் அந்தப் பதிவை நீக்க வேண்டியதாயிற்று..
அப்பதிவிற்கு பின்னூட்டமும், ஓட்டளிப்பும் செய்த தோழர்களுக்கு எனது நன்றி..
சிரமத்திற்கு மிகவும் வருந்துகிறேன்..!
சிரிச்சிகிட்டு வாரேன்:)
ReplyDeleteஎங்கீங்க புடிக்கறீங்க இந்த மாதிரி விடியோக்களை? வருஷக்கடைசி பதிவுன்னாலும் நெ.1 சூபர் பதிவுங்க.
ReplyDeleteநடு ராத்திரில பதிவப் போட்டிருக்கீங்க. எப்ப தூங்குவீங்க?
ReplyDeleteWish you a happy new year uncle....
ReplyDeleteore adithadi pathiva irukke..... kadisi video super.
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சார்
ReplyDeleteசிம்ரன் சண்டை செம காமெடி.... செமையா ரசிச்சேன்...
ReplyDeleteஜீவாவோட இருக்குற பிகர் யாருங்க...
இது உங்கள் வழக்கமான சுவாரஸ்யமான பதிவு பாஸ்...இன்றும் குறைவு இல்லை. வித்யா ராணி சூப்பர்! புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDeleteசூடா இல்லையே... அண்ணே....
ReplyDeleteஅப்படியே இன்னும் ஒரு மூணு நாலு பிட் போட்டு இருக்கலாம்...!!
வித்தியாசமாக செய்வதாகச் சொல்லி ஒரே களேபரமாக ஆக்குறீங்க.
ReplyDeleteஅப்பன் முருகன் வாழ்த்தத்தும்.
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteஉங்க கடமை உணர்ச்சி புல்லரிக்க வைக்கின்றது... நன்றி
ReplyDeleteஅண்ணே
ReplyDeleteசாரு தான் எல்லாருக்கும் லிங்க் குடுப்பாரு ... நீங்க சூரியனுக்கே torch அடிச்சுடீங்க ..........எங்கயோ போய்டீங்க
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteNamma parliament fight ultimate.
ReplyDelete[[[ராஜ நடராஜன் said...
ReplyDeleteசிரிச்சிகிட்டு வாரேன்:)]]]
இவ்ளோ நேரமாவா..?
[[[DrPKandaswamyPhD said...
ReplyDeleteஎங்கீங்க புடிக்கறீங்க இந்த மாதிரி விடியோக்களை? வருஷக் கடைசி பதிவுன்னாலும் நெ.1 சூபர் பதிவுங்க.]]]
கூகிளாண்டவர் துணையிருக்கும்போது நமக்கென்ன ஸார் கவலை..?
வருகைக்கு நன்றி ஸார்..!
[[[DrPKandaswamyPhD said...
ReplyDeleteநடு ராத்திரில பதிவப் போட்டிருக்கீங்க. எப்ப தூங்குவீங்க?]]]
போட்டுட்டுத் தூங்கப் போயிட்டேன்..!
[[[அகில் பூங்குன்றன் said...
ReplyDeleteWish you a happy new year uncle....]]
எனது வாழ்த்துக்களும் உமக்கு..
ore adithadi pathiva irukke..... kadisi video super.]]]
என்ன இருந்தாலும் நம்மூர் ஸ்டைல் மாதிரி வருமா..?
[[[மாணவன் said...
ReplyDeleteஇனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சார்.]]]
நன்றி மாணவன்.. நானும் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்கிறேன்..!
[[[philosophy prabhakaran said...
ReplyDeleteசிம்ரன் சண்டை செம காமெடி.... செமையா ரசிச்சேன். ஜீவாவோட இருக்குற பிகர் யாருங்க...]]]
பிகரோட பேரு சந்தானம்..!
[[ஸ்ரீராம். said...
ReplyDeleteஇது உங்கள் வழக்கமான சுவாரஸ்யமான பதிவு பாஸ். இன்றும் குறைவு இல்லை. வித்யா ராணி சூப்பர்! புத்தாண்டு வாழ்த்துக்கள்.]]]
நன்றிகள் ஸார்..!
[[[ஜெட்லி... said...
ReplyDeleteசூடா இல்லையே... அண்ணே....
அப்படியே இன்னும் ஒரு மூணு நாலு பிட் போட்டு இருக்கலாம்...!!]]]
இன்னும் நாலா..? போஸ்ட் தாங்காதுப்பா கண்ணு.. போதும்.. அடுத்தப் போஸ்ட்ல பார்த்துக்கலாம்..
[[[நீச்சல்காரன் said...
ReplyDeleteவித்தியாசமாக செய்வதாகச் சொல்லி ஒரே களேபரமாக ஆக்குறீங்க. அப்பன் முருகன் வாழ்த்தத்தும்.]]]
பதிவுலகமே களேபரபமாத்தானே இருக்கு. அதுனாலதான்..!
[[[விக்கி உலகம் said...
ReplyDeleteஇனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.]]]
நல்வாழ்த்துக்கள் விக்கி உலகம்..!
[[[ஜாக்கி சேகர் said...
ReplyDeleteஉங்க கடமை உணர்ச்சி புல்லரிக்க வைக்கின்றது... நன்றி]]]
ஹி.. ஹி.. ஹி..!
[[[karthi said...
ReplyDeleteஅண்ணே சாருதான் எல்லாருக்கும் லிங்க் குடுப்பாரு. நீங்க சூரியனுக்கே torch அடிச்சுடீங்க. எங்கயோ போய்டீங்க]]]
ஐயையோ அந்த அளவுக்கெல்லாம் இல்லப்பா.. ஏதோ என்னால முடிஞ்சது இதுதான்..!
[[[sivakasi maappillai said...
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.]]]
நன்றி சிவகாசி மாப்பிள்ளை..! எனது வாழ்த்துக்களும் உமக்கு..!
[[[SurveySan said...
ReplyDeleteNamma parliament fight ultimate.]]]
அது நம்ம பாராளுமன்றம் இல்லை ஸார்.. உத்தரப்பிரதேச சட்டசபை..!
மாயவரத்தான் என்னும் பதிவர் தொடர்ந்து எனக்கு மைனஸ் ஓட்டுக்கள் கிடைக்கும் வகையில் ஒரு லின்க்கை தயார் செய்து, அது மைனஸ் ஓட்டுக்கான லின்க் என்பதைத் தெரிவிக்காமல்.. உண்மைத்தமிழனுக்கு ஓட்டளியுங்கள் என்று டிவிட்டரில் பிரச்சாரம் செய்திருக்கிறார்.
ReplyDeleteஉண்மை என்று நம்பி வந்த தோழர்கள் அதனை கிளிக் செய்ய.. அத்தனையும் மைனஸ் ஓட்டுக்களாக மாறிவிட்டன.
அந்த மனிதருக்கு நான் என்ன துரோகம் செய்தேன் என்று தெரியவில்லை. இப்படி இவர் என் தளத்தில் விளையாடுவது இரண்டாவது முறை..
அப்பன் முருகன் அவருக்கு நல்லப் புத்தியைக் கொடுக்கட்டும்..!
புதுவருடம் அதுவுமா இந்த மாதிரி வீடியோ போட்டு என்னை மாதிரி குழந்தைகளை பயமுறுத்திய அண்ணன் அவர்களை கடிக்கிறேன் சீ கண்டிக்கிறேன்
ReplyDeleteமிகவும் உழைத்திருக்கிறீர்கள் என்பது பதிவில் தெரிகிறது.
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள் உண்மைத் தமிழன்.
அண்ணே..
ReplyDeleteஅது வோட்டுக்கான லிங்காண்ணே. நான் பதிவுக்கான லிங்க்ன்னு தந்தேன் அண்ணே.
சரி.. ஆரம்பத்திலேர்ந்து வருவோம்.. திரும்பவும் புதுசா பதிவு போடுங்கண்ணே. ப்ளீஸ்.
மைனஸ் ஓட்டு விழுந்தாலும் அண்ணன் அண்ணன்தான்!
ReplyDeletesema comedy sir
ReplyDeleteஇனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சார்.
ReplyDeleteஅண்ணா பதிவுலகமே சேர்ந்து 119 (இதுவரை) மைனஸ் ஓட்டு குத்தி உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்லியிருக்கிறதே!
ReplyDeletehi unmaitamilan,
ReplyDeletewish u a very happy new year
regards,
Amarnath Santh
சரவணன் உங்க இந்த தலைப்பை பார்த்தவுடன் அவசரமாய் உள்ளே வந்தேன். ஏமாற்றவில்லை. மொத்தத்தில் ஆச்சரியமாயிருக்கு. வித்யாசமான பதிவு.
ReplyDeleteஆனால் கீழேயுள்ள 119 மைனஸ் ஓட்ட பார்த்தவுடன் எனக்கு ஒன்னுமே புரியல. உண்மையிலேயே குத்தியிருக்காங்களா? இல்ல என்னோட கண்ணுக்கு ஏதும் தப்பா தெரியுதா?
:-)
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
புத்தாண்டு வாழ்த்துகள்.
ReplyDelete>>> உண்மைத்தமிழன், தங்களுக்கு வளமான வருடமாக 2011 அமைய வாழ்த்துகள்!!
ReplyDelete[[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteபுதுவருடம் அதுவுமா இந்த மாதிரி வீடியோ போட்டு என்னை மாதிரி குழந்தைகளை பயமுறுத்திய அண்ணன் அவர்களை கடிக்கிறேன் சீ கண்டிக்கிறேன்.]]]
நீ குழந்தையா..? இந்த உலக மகா பொய்யைச் சொன்னதற்காக உன்னைக் கடிக்கிறேன் ஸாரி கண்டிக்கிறேன்..!
[[[vasan said...
ReplyDeleteமிகவும் உழைத்திருக்கிறீர்கள் என்பது பதிவில் தெரிகிறது. புத்தாண்டு வாழ்த்துக்கள் உண்மைத் தமிழன்.]]]
நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்..!
[[[மாயவரத்தான்.... said...
ReplyDeleteஅண்ணே.. அது வோட்டுக்கான லிங்காண்ணே. நான் பதிவுக்கான லிங்க்ன்னு தந்தேன் அண்ணே. சரி.. ஆரம்பத்திலேர்ந்து வருவோம்.. திரும்பவும் புதுசா பதிவு போடுங்கண்ணே. ப்ளீஸ்.]]]
எல்லாத்தையும் செஞ்சுட்டு எப்படீங்க இப்படியெல்லாம் உங்களால பேச முடியுது..?
[[[அருணையடி said...
ReplyDeleteமைனஸ் ஓட்டு விழுந்தாலும் அண்ணன் அண்ணன்தான்!]]]
எதுக்கு? எவ்ளோவ் அடிச்சாலும் தாங்குறானே ஒரு முட்டாள்ன்னு நினைச்சா..?
[[[Indian Share Market said...
ReplyDeleteஇனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சார்.]]]
உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் ஸார்..!
[[[இரவு வானம் said...
ReplyDeletesema comedy sir.]]]
என் வாழ்க்கையே காமெடியாத்தான் இருக்கு..!
[[[அதிஷா said...
ReplyDeleteஅண்ணா பதிவுலகமே சேர்ந்து 119 (இதுவரை) மைனஸ் ஓட்டு குத்தி உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்லியிருக்கிறதே!]]]
வஞ்சப் புகழ்ச்சியில் உங்களை மிஞ்ச முடியுமா தம்பி..?
[[[amarmuamar said...
ReplyDeletehi unmaitamilan, wish u a very happy new year
regards,
Amarnath Santh]]]
உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் ஸார்..!
[[[ஜோதிஜி said...
ReplyDeleteசரவணன் உங்க இந்த தலைப்பை பார்த்தவுடன் அவசரமாய் உள்ளே வந்தேன். ஏமாற்றவில்லை. மொத்தத்தில் ஆச்சரியமாயிருக்கு. வித்யாசமான பதிவு.]]]
நன்றிகள் ஸார்..!
[[[ஆனால் கீழேயுள்ள 119 மைனஸ் ஓட்ட பார்த்தவுடன் எனக்கு ஒன்னுமே புரியல. உண்மையிலேயே குத்தியிருக்காங்களா? இல்ல என்னோட கண்ணுக்கு ஏதும் தப்பா தெரியுதா?]]]
எது, எதில்தான் காமெடி செய்வது என்கிற அளவே இல்லாமல் செய்கிறார்கள். ஆனால் இவர்கள் மதிப்பிற்குரியவர்கள்.. நம்மால் ஒன்றும் செய்ய முடியாது..!
[[[ஜீ... said...
ReplyDelete:-) இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!]]]
உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்..!
[[[செங்கோவி said...
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துகள்.]]]
நன்றி செங்கோவி.. உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்..!
[[[சிவகுமார் said...
ReplyDelete>>> உண்மைத்தமிழன், தங்களுக்கு வளமான வருடமாக 2011 அமைய வாழ்த்துகள்!!]]]
நன்றி.. தங்களுடைய வாக்கு பலிக்கட்டும்..!
தங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் ஸார்..!
வாழ்த்துகள் அண்ணே.
ReplyDeleteஇவ்வளவு மைனஸ் ஓட்டு வாங்குனதுக்கு இல்ல. தமிழ்மணம் டிராபிக் ரேங்க்ல இரண்டாவது இடம் வந்ததுக்கு.
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!
ReplyDeleteஅண்ணே சவுக்கியமா இருக்கீங்களாண்ணே! என்னவோ போங்கண்ணே!
ReplyDeleteபின் குறிப்பு கரண்ட் ஸ்டேடஸ் 22/127! (அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)
//பின் குறிப்பு கரண்ட் ஸ்டேடஸ் 22/127! (அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)//
ReplyDeleteலேட்டஸ்ட் ரேன்க் 2/8613 (ஹையாயாயாயா!)
See who owns newportelfoundation.org or any other website:
ReplyDeletehttp://whois.domaintasks.com/newportelfoundation.org
See who owns nofeehost.com or any other website.
ReplyDelete