Pages

Friday, December 17, 2010

மன்மோகன்சிங் மானமுள்ள மனிதரா..?

17-12-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சி.பி.ஐ.யை தட்டிக் கொடுத்து வேலை வாங்க வேண்டிய பொறுப்பை சுப்ரீம் கோர்ட் தன் கையில் எடுத்துக் கொண்டுள்ளது..!

நீதியை பரிபாலனம் செய்ய வேண்டிய நிலையில் இருக்கும் உச்சநீதிமன்றம், இப்போது நீதி நிர்வாகத்தையே மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளது நமது நாட்டைப் பிடித்த சோகம்தான்..!


"2-ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி தொடர்பாக, சி.பி.ஐ.யும் அமலாக்கத் துறையும் விசாரணை மேற்கொள்ள வேண்டும். எந்த உயர் பதவியில் இருக்கும் தனி நபர் மற்றும் ஏஜென்சிகளின் நிர்பந்தங்களுக்கும் கட்டுப்படாமல், விசாரணை நடத்தப்பட வேண்டும்.

கடந்த 2001 முதல் 2008-ம் ஆண்டுவரை நடந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும். அதாவது, தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சிக் காலத்தில் பின்பற்றப்பட்ட தொலைத் தொடர்பு கொள்கை பற்றி விசாரிக்க வேண்டும்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு எந்த அளவுக்கு இழப்பு ஏற்பட்டது  என்பதற்கு, விசாரணையின்போது அதிக முக்கியத்துவம் தர வேண்டும்.

இந்த விசாரணையின் நிலை அறிக்கையை, சி.பி.ஐ.,யும், அமலாக்கத் துறையும், 2011, பிப்ரவரி 10-ம் தேதி, சீலிட்ட கவரில் வைத்து சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும்.

ஸ்பெக்ட்ரம் மோசடி வழக்கின் விசாரணையை சுப்ரீம் கோர்ட் கண்காணிக்க மத்திய அரசு சம்மதம் தெரிவித்து விட்டதால், இந்த மோசடி பற்றி விசாரிக்க சிறப்புக் குழு எதையும் அமைக்க வேண்டிய தேவையில்லை.

ஏனெனில், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறையினர் விரிவான விசாரணை மேற்கொள்வர் என, சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியமும், சி.பி.ஐ., சார்பில் ஆஜரான சீனியர் வக்கீல் வேணுகோபாலும் உறுதி அளித்துள்ளதால், சிறப்புக் குழுவுக்கு அவசியம் இல்லை. 

தகுதியில்லாத நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக ஆடிட்டர் ஜெனரல் அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதில், உண்மையிருப்பதாக தெரிகிறது' எனவும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

2-ஜி ஏலத்தில் பங்கேற்ற நிறுவனங்களுக்கு பொதுத்துறை வங்கிகள் அளித்த கடன் குறித்த விவரங்கள் விரிவாக விசாரிக்கப்பட வேண்டும். இந்த ஊழலில் வங்கிகளுக்குப் பங்கு உள்ளதா என்பதும் விசாரிக்கப்பட வேண்டும்.

- உரிம ஒப்பந்தத்தில், எந்தெந்த தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள் கையெழுத்திட்டுள்ளனர் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.

- உரிமம் பெற தகுதியற்ற நிறுவனங்கள் மீது டிராய் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை கண்டறிய வேண்டும்.

- 2 ஜி உரிமம் வழங்கியதில் பெருமளவில் முறைகேடுகள் நடந்துள்ளது என்று மனுதாரரான மூ்த்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் கூறியுள்ள குற்றச்சாட்டுக்களில் இந்த பெஞ்ச் திருப்தி அடைகிறது. குற்றம் நடந்ததற்கான பூர்வாங்கம் இருப்பதாகவும் உணர்கிறது.

- 2-ஜி ஏலம் தொடர்பான வழக்கு விசாரணையில் சிபிஐ பின் வாங்கியது, பதுங்கியது, தாமதம் செய்தது என்ற பூஷனின் குற்றச்சாட்டையும் இந்த கோர்ட் ஏற்கிறது.

- இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரணைக்கு விட வேண்டும் என்று கோரி மனுதாரர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்காமல் டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்தது, தவறாகும் என்று இந்த கோர்ட் கருதுகிறது.

- தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையரின் அறிக்கை மற்றும் பல்வேறு ஆவணங்களின் அடிப்படையில் இந்த ஏலம் முற்றிலும முறைகேடாக நடந்திருப்பதையும் இந்த கோர்ட் உறுதிப்படுத்துகிறது.

- சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நடத்தவுள்ள விசாரணையின்போது இந்த 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு நடைமுறையால் நாட்டுக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டது என்பதையும் தெளிவாக கண்டுபிடிக்க வேண்டும்.

- நீரா ராடியா பேசிய பேச்சுக்கள் அடங்கிய தொலைபேசி உரையாடல் பதிவுகள் அனைத்தையும் வருமான வரித்துறை உடனடியாக சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்.

இப்படி அடுக்கடுக்கான உத்தரவுகளை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

இதில் இருந்து தெரிவது என்னவென்றால் ஒரு வழக்கு விசாரணையை எந்தத் திசையில் நகர்த்துவது, நடத்துவது என்றுகூட செய்யத் தெரியாமல் தேங்கி நிற்கும் அரசுதான் இன்றைக்கு நம்மை ஆண்டு வருகிறது என்பதுதான்..!

உச்சநீதிமன்றத்தின் விளாசலைப் பொறுக்க மாட்டாமல்தான் லண்டனில் பதுங்கியிருந்த நீரா ராடியாவை அவசரமாக வரவழைத்து நேரில் விசாரித்தார்கள்.

நாடு முழுவதும் அதிரடி ரெய்டு நடத்தினார்கள். ராசா மற்றும் அவரது கொள்ளைக் கூட்டத்தினரை மிரட்டுவதாக நமக்கு பாவ்லா காட்டி சோதனை நடத்தினார்கள். இப்படி முதல்வர் வீட்டு ஆடிட்டர்வரையில் தங்களது கைவரிசையைக் காட்டி ஷோ காட்டியிருக்கிறது சி.பி.ஐ.

ஆனால் என்ன எடுத்தார்கள்..? எதைக் கண்டுபிடித்தார்கள் என்பதை அவர்கள் இனி சொன்னாலும் ஒன்றுதான்.. சொல்லாமல் விட்டாலும் ஒன்றுதான்..!

இத்தனை பெரிய நீதித்துறை கட்டமைப்பையே ஏமாற்றத் துணிந்த கொள்ளைக் கூட்டம், இவ்வளவு காலமா ஆதாரங்களை  விட்டு வைத்திருக்கப் போகிறார்கள்..?


சரி.. சுப்ரீம் கோர்ட்டின் நேரடி டைரக்ஷனில் சிபிஐ இயங்கக் கூடிய நிலைமைக்குப் போய்விட்டதே என்று நமது பிரதமர் என்று சொல்லப்படும் மன்னமோகனசிங் கொஞ்சமாவது கவலைப்படுவார் என்று நினைத்தீர்களா..? நிச்சயமாக இருக்காது..

மானம், அவமானம் பற்றியெல்லாம் இனிமேலும் அவர் யோசித்துக் கொண்டிருந்தால் பிரதமர் பதவியில் அவர் நீடித்திருக்க முடியாது..  அதிகாரத்தைப் பிடுங்கி வைத்துக் கொண்டு, நீ எதற்கும் லாயக்கில்லை. வீட்ல சும்மா இரு என்று நீதிமன்றமே சொல்கின்றவரையில்தான் இவரது வேலை பார்க்கும் லட்சணம் இருக்கிறது. கூட்டிக் கழித்துப் பார்த்தால் இவருக்கு நரசிம்மராவே பரவாயி்ல்லை போலிருக்கிறது..!


இவ்வளவுக்குப் பிறகும் இவர் பிரதமர் பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பது அரசியல்வியாதிகளுக்கு உரித்தான குணம்தான்..! இப்போதெல்லாம் கோர்ட், கேஸ், புகார்கள் இவையெல்லாம் தினம்தினம் அரசியல்வியாதிகள் சந்திக்கின்ற விஷயங்களாகப் போய்விட்டதால் இதெல்லாம் இவர்களுக்கு மரத்துப் போயிருக்கும்..

இவர்தான் இப்படியென்றால் நமது கல்லுளிமங்கன், தமிழினத் தலைவன், ஊழல் தாத்தா கலைஞர் கருணாநிதி மன்னமோகனசிங்கையும் மிஞ்சிவிட்டார்.

போயஸ் ஆத்தா விடும் அறிக்கைக்கு உடனுக்குடன் பதில் அளித்து நோஸ் கட் அளிக்கும் பணியைச் செவ்வனே செய்து வரும் இவரும், இவரது குடும்ப உறுப்பினர்களும் நீரா ராடியா டேப்புகள் பற்றி மட்டும் இன்றுவரையிலும் வாய் திறக்காதது ஏன்..?

ஜெயலலிதாவின் ஒவ்வொரு அறிக்கையையும் கண் கொத்திப் பாம்பாக பார்த்து வந்து முதல் நாள் அறிக்கையின் முதல் பத்தி, இரண்டாவது நாள் அறிக்கையின் இரண்டாம் பத்தியாக வந்திருக்கிறதே என்று கேட்கின்ற அளவுக்கு புத்திக் கூர்மையுள்ள இந்த மனிதர் தனது மகளும், மனைவியும் ஒரு அரசியல் புரோக்கருடன் தனது கட்சியை விலை பேசும் உண்மை வெளிவந்து இத்தனை நாட்களாகியும் கள்ள மெளனம் சாதித்து வருகிறாரே இது ஏனாம்..?

நேற்றைய ரெய்டுகளுக்குப் பிறகு இவரது துணைவியார் வாய் திறந்து ஒரு அறிக்கை விட்டிருக்கிறார். வோல்டாஸ் நிறுவனம் மற்றும் டாடா நிறுவனத்திற்குமான பிரச்சினையில் தனக்குச் சம்பந்தமில்லையென்று சொல்லியிருக்கிறார்.

வோல்டாஸ் நிறுவனம் அமைந்திருக்கும் கோடிக்கணக்கான மதிப்புள்ள நிலத்தின் பவர் ஆஃப் அட்டர்னி தன்னுடைய ராயல் பர்னிச்சர் கடையில் பர்னிச்சர்களைத் துடைக்கும் வேலை செய்து கொண்டிருந்த சரவணன் என்பவருக்குக் கிடைத்தது. அவருக்குத்தான் இதில் தொடர்பு என்று கூறியிருக்கிறார்.

இப்படி கடையில் தூசி தட்டியவருக்கு இத்தனை கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை விற்கும் அதிகாரத்தைக் கொடுப்பதற்கு டாடா நிறுவனத்தினர் என்ன முட்டாள்களா என்று நாம் திருப்பிக் கேட்கக் கூடாது.. ஏனெனில் இப்படி அறிக்கைவிட்டவர் தமிழினத்தின் தலைவரான கலைஞர் கருணாநிதியின் துணைவியார் ராசாத்தியம்மாள். அவர் ஒன்று சொன்னால் ஒன்பது சொன்னதற்குச் சமம். கையது வாயது பொத்தி அமைதியாக இருங்கள் என்கிறார்கள்.

இவருடைய திருமகள் கனிமொழியும் நேற்றுதான் வாய் திறந்திருக்கிறார். இதுநாள்வரையிலும் தனது குடும்ப பிரச்சினைகளெல்லாம் வீதிதோறும், ஊர்தோறும், சேனல்கள்தோறும், பத்திரிகைகள்தோறும் நாறிய பின்பும் கண்டுகொள்ளாமல் பணம், அதிகாரம் இரண்டை மட்டுமே லட்சியமாகக் கொண்டு சிரிப்போடு வலம் வரும் இந்த அம்மணி தனக்கும், இதற்கும் யாதொரு சம்பந்தமுமில்லை என்று அறிக்கை விட்டிருக்கிறார்.

ஆனால் நீரா ராடியாவுடனான பேச்சுக்கள் பற்றி கலைஞர், அவருடைய துணைவியார், மகள், மகன்களான மத்திய அமைச்சர்கள், டேப் பேச்சில் படிபட்ட அமைச்சர்கள், அடிப்பொடிகளான உடன்பிறப்புக்கள் என்று அனைவரும் பதில் சொல்லாமல் இருப்பதில் இருந்தே அவைகள் அனைத்தும் உண்மை என்பது தெளிவாகிறது..!

நேற்று அமைச்சர் பூங்கோதையிடம் இது பற்றி பத்திரிகையாளர்கள் கேட்டதற்கும் அவர் பதில் சொல்லாமல் சென்றிருக்கிறார்.

நித்தியானந்தா ஜெயில் செல்லில் படுத்திருந்த விஷயத்தையே நான்கு தலைப்புகளில் வெளியிட்டு பிரத்யேகச் செய்தி என்று கொண்டாடிய நக்கீரன் தனது இணை ஆசிரியர் வீட்டில் நடந்த ரெய்டையும், அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற கதையையும் சுத்தமாக மறைத்துவிட்டது. ஒரு சிறிய செய்திகூட அது பற்றி வெளியிடவில்லை.

இப்படியொரு இந்தியாவின் தலைசிறந்த பத்திரிகையாளராக நக்கீரன் கோபால் இத்தனையாண்டு காலத்திற்குப் பிறகு உருவெடுத்திருப்பதற்கு அவருக்கு நமது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்வோம்..!

ஆக மொத்தம், பொதுச் சொத்தைத் திருடிய கூட்டம் இன்றைக்கு தேள் கொட்டிய திருடனைப் போல் திருதிருவென முழிக்கிறது.

இந்தக் கள்ள நாடகத்தில் இந்தியாவிலேயே மிகச் சிறந்த நடிகர்கள் இவர்கள்தான் என்பதால் இந்த நடிப்பு இவர்களுக்குக் கை வந்த கலை. திரை விழுகும்வரையில் நடிப்பைக் கொட்டிவிட்டுத்தான் போவார்கள்..!

அடுத்த முறை இவர்களை நாடக மேடையில் ஏற விடாமல் தடுக்கும் பணியை மட்டும் நாம் செய்தால், அது நமக்கும் நல்லது.. நமது வாரிசுகளுக்கும் நல்லது..!

62 comments:

  1. ஆனால் கிராமத்தில் இருக்கும் மக்களுக்கு இதை பற்றிய விழிப்புணர்வு இருப்பதாக தெரியவைல்லை. அப்படி எடுத்துச் சொன்னாலும் அதை கேக்கும் நிலையில் அவர்கள் இல்லை என்பதே வருத்தம் அளிக்கும் விஷயம்.

    சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கும் வேலை தான் தற்பொழுது இந்தியா அரசியலில் நடந்தேறிக் கொண்டு இருக்கிறது.

    தொலைக்காட்சிப் பெட்டியையும் இலவச பட்டா நிலத்தையும் மக்கள் வாங்கிக்கொண்டு இதை எல்லாம் கண்டுகொள்வதில்லை. வருத்தம்

    ReplyDelete
  2. காலையே சூடான காலையாகி விட்டது...

    ReplyDelete
  3. மன்மோகன் சிங்கை பிரதமராக அறிவித்த பொழுது உண்மையிலயே அகம் மகிழ்ந்தேன் ,காரணம் மெத்த படித்தவர்,காசுக்கு ஆசை படாதவர் -இவரது காலத்தில் இந்திய அசுர வேகத்தில் முன்னேறும் என்று நம்பிய பல கோடி முட்டாள்களில் நானும் ஒருவன் .
    மன்மோகன் அவர்களை பார்க்கும் பொழுது -கௌண்டமணி நாட்டாமை படத்தில் நடித்த அந்த நகைச்சுவை காட்சி தான் நினைவுக்கு வருகிறது "இங்க இவளவு பெரிய பிரட்ச்ச்சனா நடத்துட்டு இருக்கு, யார்ர அது சம்பந்தமே இல்லாமா மிச்சர் திங்குறது ," என்று ஒரு டம்மி அப்பாவை பார்த்து கேட்பார் நாமும் அப்படி தான் கேட்க்க வேண்டும்

    ReplyDelete
  4. Manmohan Singh may not have made money thru this incident. But he is certainly at fault for hiding these looters for these many months.

    whether at Central level or at State level - the alternative does not appear to be very promising. But still at this point in time, we have to change these forces every 5 years. As a voter, we do not have any other option.

    Meanwhile, I urge you to stay safe. All of us know these dogs including MMS are looters....

    Thanks

    Venkat

    ReplyDelete
  5. தமிழன் ,
    ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் ,தன்னை பற்றிய ஆவணங்களும் ,தம்முடைய சொத்துக்கள் பற்றிய ஆவணங்களும் ஒருவனால் அவ்ளோவு சீக்கிரம் அழித்து விடமுடியாது ....,அதை அழித்தால் வேறொரு ரூபத்தில் இன்னொரு ஆவணம் தாயரிக்க வேண்டி இருக்கும் ..,மேலும் சிபிஐ போன்ற புலனாய்வு முகவாண்மைகள் சந்தேகத்தின் பெயரில் கேள்விகளை கேட்க மாட்டார்கள் ..,விசாரணையை துவங்கு போது குற்றம் சாட்டப்பட்டவர்களை சொல்லும் முதல் பதிலை தொடர்ந்தே மட்டற்ற கேள்விகள் அமையும் ..,அதில் கிட்ட தட்ட 75 விழுக்காடு உண்மை உள்ளங்கை நெல்லிகனியாய் தெரிந்து விடும் ..,மேலும் வாய் மொழி விசாரணை முடிந்து ஒரு காகிதத்தில் குற்றத்தின் அளவு கோளை கொண்டு கேள்விகள் தயாரிக்கபட்டு அதற்க்கு விடை எழுத சொல்வார்கள் ..,அதில் மீதி 20 விழுக்காடு மாட்டி கொள்வார்கள்..,ஏனென்றால் முதல் கேள்வி ஒரு விதத்தில் அமையும் ,அதே போன்று இன்னொரு கேள்வி வேறொரு ரூபத்தில் வேறெங்கோ கேட்க படும் ,முதல் கேள்வியில் பொய்யாக பதில் எழுதி இருந்தால் அதே மூலத்தை உடைய வேறொரு கேள்வியில் உண்மையை எழுதி இருப்பார் குற்றம் சாட்டப்பட்டவர் . இது ஒரு சைக்கலாஜி .நிச்சயம் மாட்டி கொள்வார்கள் .மொத்தம் 95 விழுக்காடு ஓரிருநாளில் தெரிந்து விடும் அதிக பட்சமாக .மீதி உள்ள 5 விழுக்காடு தான் அரசியல் பலம் ...,அந்த சொற்ப பலத்தை வைத்து கொண்டு தான் நேர்மையான அதிகாரிகளை மிரட்டுவார்கள் .

    ReplyDelete
  6. Very nice Post ... PLS DO THIS RIGHT THING ALWAYS ... ! :)

    ReplyDelete
  7. Hope you are seeing ONLY 24X7 English Channels & Jaya TV. Pls read Daily Thandhi also, As per 16th Dec Edition,
    1. Nakeeran Gopal Denaied any association of Kamaraj Wife with Nira Radia's Firm.
    2. No Raid conducted in Nandanam Auditor House.
    3. Rajathi Ammal says they’ll take legal action if any false infos are given. What’s wrong in that ?
    4. Listen to Jagath Gaser’s yesterday’s press interview, if you have doubt you himself can go and check the records.
    Pls give True Information, don't just vomit whatever biased news given by North Indian Eng Channels and So Called Brahmin Chauvinists.

    ReplyDelete
  8. சரவணனுக்கு பவர் ஆப் அட்ட்ர்னி கொடுத்தது டாடா நிறுவனம் அல்ல.நிலத்தின் சொந்தகாரார்களான 18 பேர்.

    டாடா நிறுவனம் அந்த இடத்தை லிஸுக்குதான் எடுத்திருந்தனர்.அதுவும் 2005-ல் முடிந்தவிட்டது.

    உணர்ச்சி வசப்பட்டு தவறான தகவல் கொடுக்காதிங்க

    ReplyDelete
  9. Some sort of poetic justice in all this. Forget about nithyananda, but the girls involved need not have suffered such humiliation ,so it is not a wonder that now nakkiran is suffering.Their tears will have some effect somewhere and somehow?

    ReplyDelete
  10. இப்போது தமிழ் நாட்டில் இருக்கும் வெற்றிடத்தை நிரப்பவே காங்கிரஸ் இதெல்லாம் செய்கிறது என்று நினைக்கிறேன். பார்த்துக்கொண்டே இருங்கள். ப சிதம்பரம் தமிழக முதல்வராக போட்டியிடப்போகிறார். கருணாநிதியின் வாரிசுகளில் தமிழறிந்தவர் என்ற முறையிலும் பேச்சாளர் என்ற முறையிலும் அவர் வாரிசான கனிமொழியை குறி வைத்து அடித்திருக்கிறார்கள். ஆப்பசைத்த குரங்காய் கருணாநிதி நன்கு மாட்டியுள்ளார். அவருக்கு பிறகு வரப்போகும் வெற்றிடத்தை நோக்கியே காங்கிரஸின் இந்த பயணம். தி மு க விற்கு பெரிய அளவு பாதிப்பு ஏற்படுத்தாமல் காங்கிரஸ் விடாது.

    கனிமொழியின் நிலையும் அவர் அம்மாவின் நிலையும் தெளிவாக தெரிகிறது. தி மு க வில் யாரும் அவர்களுக்கு பரிந்து பேசக்கூட தயாரில்லை. கட்சி சார்பில் கிட்ட தட்ட கட்டம் கட்டிவிட்டார்கள் என்று தோன்றுகிறது

    ReplyDelete
  11. குடும்ப டாக் :
    ஏம்மா இன்னுமா உலகம் நாமளும், அப்பாவும் சொல்றத நம்பிட்டு இருக்கு - அடி போடி இவளே அடுத்த தேர்தல்ல பாரு plasma டிவி கொடுக்குறோம் அப்படின்னு சொன்ன உடனே இந்த பயபுள்ளைங்க எப்படி ஓட்டு குத்துவானுங்க பாரு .... எவ்வளவோ பாத்துட்டோம் இத பாக்க மாட்டமா.................

    ReplyDelete
  12. மனமோகன சிங்கம், எதிர்கட்சிகள் , நாடளுமன்றத்தை தொடர்ந்து புறக்கணிப்பதை குறித்து "பொறுப்புணர்ச்சி" வேண்டும் என அறிவுருத்தியுள்ளார்! ஆனால் அதே" பொறுப்புணர்ச்சி"யுடன், பிரதமர் இருந்திருந்தால், இந்த ஊழலே நடந்திருக்காதே!

    இந்த ஊழலை பொருத்தவரை ராசாவை விட, உழல் நடப்பதை தடுக்க முடிந்தும் தடுக்காமல் வேடிக்கை பார்த்த பிரதமரே, முதல் குற்றவாளி!

    ReplyDelete
  13. See CNN-IBN fake Twitter ID issue

    http://dalalmedia.posterous.com/36632972

    ReplyDelete
  14. சுளீர் வரிகள்... அரசியல் சாக்கடையில் மானம் மண்ணோடு மண்ணாகி ரொம்ப நாளாகிவிட்டது..

    ReplyDelete
  15. //"இங்க இவளவு பெரிய பிரட்ச்ச்சனா நடத்துட்டு இருக்கு, யார்ர அது சம்பந்தமே இல்லாமா மிச்சர் திங்குறது ," என்று ஒரு டம்மி அப்பாவை பார்த்து கேட்பார் நாமும் அப்படி தான் கேட்க்க வேண்டும்//

    ReplyDelete
  16. //நீதியை பரிபாலனம் செய்ய வேண்டிய நிலையில் இருக்கும் உச்சநீதிமன்றம், இப்போது நீதி நிர்வாகத்தையே மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளது நமது நாட்டைப் பிடித்த சோகம்தான்..!// உண்மையிலேயே ரொம்ப வருத்தப்பட வேண்டிய விசயம் தான்..

    ---செங்கோவி
    ஈசன் - விமர்சனம்

    ReplyDelete
  17. காங்கிரஸ் கட்சி அல் கொய்தா தீவிரவாதத்தை விட பயங்கரமானது...

    ReplyDelete
  18. இது பற்றி நான் ஏற்கனவே க்ருத்தைப் பதிவு செய்துவிட்டேன், என் ஆங்கில வலைப்பூவில்.

    http://arunambie.blogspot.com/2010/05/honesty-really-saves-faces.html

    ReplyDelete
  19. கண்ணதாசன் பாடல்வரிகள் இன்று
    கருணாநிதிமுன் மனசாட்சியாய்
    இருந்து பாடம் புகட்டுகிறது.

    ReplyDelete
  20. [[[Dinesh said...

    ஆனால் கிராமத்தில் இருக்கும் மக்களுக்கு இதை பற்றிய விழிப்புணர்வு இருப்பதாக தெரியவில்லை. அப்படி எடுத்துச் சொன்னாலும் அதை கேட்கும் நிலையில் அவர்கள் இல்லை என்பதே வருத்தம் அளிக்கும் விஷயம்.

    சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கும் வேலைதான் தற்பொழுது இந்தியா அரசியலில் நடந்தேறிக் கொண்டு இருக்கிறது.

    தொலைக்காட்சிப் பெட்டியையும் இலவச பட்டா நிலத்தையும் மக்கள் வாங்கிக் கொண்டு இதை எல்லாம் கண்டு கொள்வதில்லை.]]]

    மக்கள் சுயநலம் படைத்தவர்களாக மாறிவிட்டார்கள் தினேஷ். உண்மையான காரணம் அதுதான்..!

    ReplyDelete
  21. [[[middleclassmadhavi said...
    காலையே சூடான காலையாகி விட்டது...]]]

    என்ன செய்வது..? காலை தினசரிகளைப் படித்தால் மனம் கொதிக்கத்தானே செய்கிறது..!

    ReplyDelete
  22. [[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    present sir.]]]

    ஆஜர் ஓகே.. கருத்து எங்கே..?

    ReplyDelete
  23. [[[SENTHIL said...

    thanks anna.]]]

    எதுக்கு செந்திலண்ணா..?

    ReplyDelete
  24. [[[dr suneel krishnan said...

    மன்மோகன்சிங்கை பிரதமராக அறிவித்த பொழுது உண்மையிலயே அகம் மகிழ்ந்தேன், காரணம் மெத்த படித்தவர், காசுக்கு ஆசைபடாதவர் - இவரது காலத்தில் இந்திய அசுர வேகத்தில் முன்னேறும் என்று நம்பிய பல கோடி முட்டாள்களில் நானும் ஒருவன். மன்மோகன் அவர்களை பார்க்கும் பொழுது -கௌண்டமணி நாட்டாமை படத்தில்நடித்த அந்த நகைச்சுவை காட்சி தான் நினைவுக்கு வருகிறது "இங்க இவளவு பெரிய பிரட்ச்ச்சனா நடத்துட்டு இருக்கு, யார்ர அது சம்பந்தமே இல்லாமா மிச்சர் திங்குறது.." என்று ஒரு டம்மி அப்பாவை பார்த்து கேட்பார் நாமும் அப்படிதான் கேட்க வேண்டும்.]]]

    இவங்களை ஒழிச்சுக் கட்டினாத்தான் நாடு உருப்படும்..! யார் ஒழிக்கிறது..?

    ReplyDelete
  25. [[[Venkat said...
    Manmohan Singh may not have made money thru this incident. But he is certainly at fault for hiding these looters for these many months. whether at Central level or at State level - the alternative does not appear to be very promising. But still at this point in time, we have to change these forces every 5 years. As a voter, we do not have any other option. Meanwhile, I urge you to stay safe. All of us know these dogs including MMS are looters....

    Thanks

    Venkat]]]

    அக்கறைக்கும், விசாரிப்புக்கும் நன்றி வெங்கட்..!

    உண்மையில் ஊழல் செய்தவர்களைவிட அதனைக் கண்டு கொள்ளாமல் இருப்பவர்களே தேசத் துரோகிகள்.. அதில் முதல் நபராக இருப்பவர் நம்ம மன்னமோகனசிங்குதான்..!

    ReplyDelete
  26. [[[தில்லு முல்லு said...

    தமிழன், ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். தன்னை பற்றிய ஆவணங்களும், தம்முடைய சொத்துக்கள் பற்றிய ஆவணங்களும் ஒருவனால் அவ்ளோவு சீக்கிரம் அழித்து விடமுடியாது. அதை அழித்தால் வேறொரு ரூபத்தில் இன்னொரு ஆவணம் தாயரிக்க வேண்டி இருக்கும். மேலும் சிபிஐ போன்ற புலனாய்வு முகவாண்மைகள் சந்தேகத்தின் பெயரில் கேள்விகளை கேட்க மாட்டார்கள். விசாரணையை துவங்கு போது குற்றம் சாட்டப்பட்டவர்களை சொல்லும் முதல் பதிலை தொடர்ந்தே மட்டற்ற கேள்விகள் அமையும். அதில் கிட்டதட்ட 75 விழுக்காடு உண்மை உள்ளங்கை நெல்லிகனியாய் தெரிந்து விடும். மேலும் வாய் மொழி விசாரணை முடிந்து ஒரு காகிதத்தில் குற்றத்தின் அளவு கோளை கொண்டு கேள்விகள் தயாரிக்கபட்டு அதற்க்கு விடை எழுத சொல்வார்கள். அதில் மீதி 20 விழுக்காடு மாட்டி கொள்வார்கள். ஏனென்றால் முதல் கேள்வி ஒரு விதத்தில் அமையும், அதே போன்று இன்னொரு கேள்வி வேறொரு ரூபத்தில் வேறெங்கோ கேட்கபடும், முதல் கேள்வியில் பொய்யாக பதில் எழுதி இருந்தால் அதே மூலத்தை உடைய வேறொரு கேள்வியில் உண்மையை எழுதி இருப்பார் குற்றம் சாட்டப்பட்டவர். இது ஒரு சைக்கலாஜி. நிச்சயம் மாட்டி கொள்வார்கள். மொத்தம் 95 விழுக்காடு ஓரிருநாளில் தெரிந்து விடும் அதிகபட்சமாக. மீதி உள்ள 5 விழுக்காடுதான் அரசியல் பலம். அந்த சொற்ப பலத்தை வைத்து கொண்டுதான் நேர்மையான அதிகாரிகளை மிரட்டுவார்கள்.]]]

    எல்லாம் இருந்தும் என்னங்க புண்ணியம்..? கேஸை ஓரமா வையின்னு சொல்லிட்டா வைச்சுட்டுப் போறாங்க..! அவ்ளோதான..?

    ReplyDelete
  27. [[[மணிப்பக்கம் said...
    Very nice Post ... PLS DO THIS RIGHT THING ALWAYS ... ! :)]]]

    நன்றி மணிப்பக்கம் ஸார்..!

    ReplyDelete
  28. [[[Prakash said...

    Hope you are seeing ONLY 24X7 English Channels & Jaya TV. Pls read Daily Thandhi also, As per 16th Dec Edition.]]]

    ஆமாம்.. எப்படி கண்டு பிடிச்சீங்க பிரகாஷ்..?

    [[[1. Nakeeran Gopal Denaied any association of Kamaraj Wife with Nira Radia's Firm.]]]

    ஆமாம்.. அவங்க மறுக்கத்தான் செய்வாங்க. அதுதானே அவங்க பழக்கம்..?

    [[[2. No Raid conducted in Nandanam Auditor House.]]]

    இது எனக்கே புதிய செய்தி..!

    [[[3. Rajathi Ammal says they’ll take legal action if any false infos are given. What’s wrong in that ?]]]

    டேப்புல இருந்தது அவங்க குரலே இல்லைன்னும் சொல்லலியே அவங்க..? அதே மாதிரிதான் இதுவும்..!

    [[[4. Listen to Jagath Gaser’s yesterday’s press interview, if you have doubt you himself can go and check the records.]]]

    திருடுனவன் என்னிக்காச்சும் ஒத்துக்குவானா..?

    [[[Pls give True Information, don't just vomit whatever biased news given by North Indian Eng Channels and So Called Brahmin Chauvinists.]]]

    உங்களுடைய ஆலோசனைக்கு மிக்க நன்றி..

    ReplyDelete
  29. [[[அரவிந்தன் said...

    சரவணனுக்கு பவர் ஆப் அட்ட்ர்னி கொடுத்தது டாடா நிறுவனம் அல்ல. நிலத்தின் சொந்தகாரார்களான 18 பேர்.

    டாடா நிறுவனம் அந்த இடத்தை லிஸுக்குதான் எடுத்திருந்தனர். அதுவும் 2005-ல் முடிந்தவிட்டது. உணர்ச்சிவசப்பட்டு தவறான தகவல் கொடுக்காதிங்க.]]]

    இப்படியொரு மேட்டரும் இதுல இருக்கா..? அப்புறம் ஏன் டாடா இப்போதும் இதுல லைனுக்கு வர்றாங்க.. கனிமொழியும், ராஜாத்தியும் ஏன் டாடாவை இழுக்கணும்..?

    அந்த 18 பேர் பத்திச் சொல்லியிருக்கலாமே..?

    ReplyDelete
  30. [[[thiru said...
    Some sort of poetic justice in all this. Forget about nithyananda, but the girls involved need not have suffered such humiliation, so it is not a wonder that now nakkiran is suffering. Their tears will have some effect somewhere and somehow?]]]

    நக்கீரன் தனது நம்பகத்தன்மையை இழந்து ரொம்ப நாளாகிவிட்டது..!

    ReplyDelete
  31. [[[bandhu said...

    இப்போது தமிழ்நாட்டில் இருக்கும் வெற்றிடத்தை நிரப்பவே காங்கிரஸ் இதெல்லாம் செய்கிறது என்று நினைக்கிறேன். பார்த்துக் கொண்டே இருங்கள். ப சிதம்பரம் தமிழக முதல்வராக போட்டியிடப் போகிறார். கருணாநிதியின் வாரிசுகளில் தமிழறிந்தவர் என்ற முறையிலும் பேச்சாளர் என்ற முறையிலும் அவர் வாரிசான கனிமொழியை குறி வைத்து அடித்திருக்கிறார்கள். ஆப்பசைத்த குரங்காய் கருணாநிதி நன்கு மாட்டியுள்ளார். அவருக்கு பிறகு வரப் போகும் வெற்றிடத்தை நோக்கியே காங்கிரஸின் இந்த பயணம். திமுகவிற்கு பெரிய அளவு பாதிப்பு ஏற்படுத்தாமல் காங்கிரஸ் விடாது. கனிமொழியின் நிலையும் அவர் அம்மாவின் நிலையும் தெளிவாக தெரிகிறது. தி மு க வில் யாரும் அவர்களுக்கு பரிந்து பேசக்கூட தயாரில்லை. கட்சி சார்பில் கிட்டதட்ட கட்டம் கட்டிவிட்டார்கள் என்று தோன்றுகிறது.]]]

    அனைவரும் கருணாநிதியின் முடிவுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது..!

    ReplyDelete
  32. [[[விக்கி உலகம் said...
    குடும்ப டாக் : ஏம்மா இன்னுமா உலகம் நாமளும், அப்பாவும் சொல்றத நம்பிட்டு இருக்கு - அடி போடி இவளே அடுத்த தேர்தல்ல பாரு plasma டிவி கொடுக்குறோம் அப்படின்னு சொன்ன உடனே இந்த பயபுள்ளைங்க எப்படி ஓட்டு குத்துவானுங்க பாரு. எவ்வளவோ பாத்துட்டோம் இத பாக்க மாட்டமா.]]]

    ஹா.. ஹா.. பேசினாலும் பேசுவாங்க..!

    ReplyDelete
  33. [[[ரம்மி said...

    மனமோகன சிங்கம், எதிர்கட்சிகள், நாடளுமன்றத்தை தொடர்ந்து புறக்கணிப்பதை குறித்து "பொறுப்புணர்ச்சி" வேண்டும் என அறிவுருத்தியுள்ளார்! ஆனால் அதே" பொறுப்புணர்ச்சி"யுடன், பிரதமர் இருந்திருந்தால், இந்த ஊழலே நடந்திருக்காதே!

    இந்த ஊழலை பொருத்தவரை ராசாவைவிட, உழல் நடப்பதை தடுக்க முடிந்தும் தடுக்காமல் வேடிக்கை பார்த்த பிரதமரே, முதல் குற்றவாளி!]]]

    சரியாகச் சொன்னீர்கள் ரம்மி.. நீங்கள் சொல்வதை நானும் வழிமொழிகிறேன்..!

    ReplyDelete
  34. [[[Sudhar said...

    See CNN-IBN fake Twitter ID issue

    http://dalalmedia.posterous.com/36632972]]]

    எல்லாத்துக்கும் போலியா..?

    ReplyDelete
  35. [[பாரத்... பாரதி... said...
    சுளீர் வரிகள்... அரசியல் சாக்கடையில் மானம் மண்ணோடு மண்ணாகி ரொம்ப நாளாகிவிட்டது.]]]

    ஆளுபவர்களைவிட நாமதான மானம், ரோஷத்தைப் பத்தி அதிகம் பேசுறோம்..?

    ReplyDelete
  36. [[[பாரத்... பாரதி... said...

    //"இங்க இவளவு பெரிய பிரட்ச்ச்சனா நடத்துட்டு இருக்கு, யார்ர அது சம்பந்தமே இல்லாமா மிச்சர் திங்குறது ," என்று ஒரு டம்மி அப்பாவை பார்த்து கேட்பார் நாமும் அப்படி தான் கேட்க்க வேண்டும்//]]]

    இவரும் சரியாத்தான சொல்லியிருக்காரு..!

    ReplyDelete
  37. [[[செங்கோவி said...

    //நீதியை பரிபாலனம் செய்ய வேண்டிய நிலையில் இருக்கும் உச்சநீதிமன்றம், இப்போது நீதி நிர்வாகத்தையே மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளது நமது நாட்டைப் பிடித்த சோகம்தான்..!//

    உண்மையிலேயே ரொம்ப வருத்தப்பட வேண்டிய விசயம்தான்..

    ---செங்கோவி
    ஈசன் - விமர்சனம்]]]

    மிக்க நன்றி செங்கோவி ஸார்..!

    ReplyDelete
  38. [[[Indian Share Market said...
    காங்கிரஸ் கட்சி அல் கொய்தா தீவிரவாதத்தைவிட பயங்கரமானது...]]]

    ஒத்துக்குறேன். ஒத்துக்கலாம்..!

    ReplyDelete
  39. [[[Arun Ambie said...

    இது பற்றி நான் ஏற்கனவே க்ருத்தைப் பதிவு செய்துவிட்டேன், என் ஆங்கில வலைப்பூவில்.

    http://arunambie.blogspot.com/2010/05/honesty-really-saves-faces.html]]]

    தகவலுக்கு மிக்க நன்றி அருண்..!

    ReplyDelete
  40. [[[arunmullai said...

    கண்ணதாசன் பாடல் வரிகள் இன்று
    கருணாநிதிமுன் மனசாட்சியாய்
    இருந்து பாடம் புகட்டுகிறது.]]]

    சட்டி சுட்டதடா.. கை விட்டதடா..!

    ReplyDelete
  41. நம்ம சிங்கு என்ன மிக்செர் மட்டுந்தான் சாப்டுவரஎ

    ReplyDelete
  42. உங்களின் அறச்சீற்றம் நியாயமானதே...வசை பாடல்களிலும் எனக்கு வருத்தமில்லை. இத்தனை நேர்மையானவராக இருக்கிறீர்கள் என்பதில் மகிழ்ச்சியே....

    வெறுமனே யூகங்களின் அடிப்படையிலான விவரங்களை வைத்துக் கொண்டு அரசியல் கட்டுரைகள் எழுதுவது த்ற்கொலை முயற்சிகளுக்கு சமம். சவுக்கில் எழுதுகிறார்கள் என்றால் ஆதாரங்களை அவர்கள் பதிவில் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

    ஒருவேளை ராசாத்தி அம்மாள் நாளைக்கு உங்கள் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தால் அந்த ஆள் ராயல் பர்னிச்சரில் தூசி தட்டி கொண்டிருந்ததை உங்களால் நிரூபிக்க முடியுமா..அரசியல் வாதிகளைப் பற்றி எதுவும் எழுதலாம்...ஆனால் தனி நபர்களை குறித்து எழுதும் போது கூடுதல் கவனம் தேவை.

    ReplyDelete
  43. //பிறந்து, வளர்ந்ததில் சொல்லிக் கொள்ளும்படியான சாதனைகள் எதுவும் இதுவரை இல்லை; உயிருடன் இருப்பதைத் தவிர.. //

    உலகின் மிகச்சிற்ந்த பொருளாதார வல்லுனர் என கருதப் படுகிற ஒரு மனிதனை காறித் துப்புகிற நேர்மையும்,விமர்சித்து அறிவுரை சொல்லும் தகுதி கொண்டவராக கருதிடும் தன்னம்பிக்கையே ஒரு மிகப் பெரிய சாதனைதான். எனவே உங்களின் இந்த கேப்ஷனை உடனடியாக மாற்றி விடுங்கள்....

    (இதில் எந்த உள்குத்தும் இல்லை)

    ReplyDelete
  44. [[[nag said...
    நம்ம சிங்கு என்ன மிக்செர் மட்டுந்தான் சாப்டுவரஎ]]]

    இருக்கலாம்..!

    ReplyDelete
  45. [[[டுபாக்கூர் பதிவர் said...

    உங்களின் அறச்சீற்றம் நியாயமானதே. வசை பாடல்களிலும் எனக்கு வருத்தமில்லை. இத்தனை நேர்மையானவராக இருக்கிறீர்கள் என்பதில் மகிழ்ச்சியே.]]]

    பொது வாழ்க்கையில் உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் பொதுவான விஷயங்களில் செய்கிற சில செயல்களால் நாடும், மக்களும் பாதிக்கப்படுதைத்தான் நான் அதிகம் குற்றம்சாட்டுகிறேன். தனி மனித தவறுகளை அல்ல. இதனால் அவர் மட்டும்தானே பாதிக்கப்படுவார். தனி மனிதத் தவறுகள் செய்யாத ஒரு மனிதரை உலகில் காண்பதே முடியாது..! நான் அதனுடன் இதனை ஒப்பிட முடியாது..!

    [[[வெறுமனே யூகங்களின் அடிப்படையிலான விவரங்களை வைத்துக் கொண்டு அரசியல் கட்டுரைகள் எழுதுவது த்ற்கொலை முயற்சிகளுக்கு சமம். சவுக்கில் எழுதுகிறார்கள் என்றால் ஆதாரங்களை அவர்கள் பதிவில் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள். ஒருவேளை ராசாத்தி அம்மாள் நாளைக்கு உங்கள் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தால் அந்த ஆள் ராயல் பர்னிச்சரில் தூசி தட்டி கொண்டிருந்ததை உங்களால் நிரூபிக்க முடியுமா. அரசியல் வாதிகளைப் பற்றி எதுவும் எழுதலாம். ஆனால் தனி நபர்களை குறித்து எழுதும்போது கூடுதல் கவனம் தேவை.]]]

    முதலில் வழக்குத் தொடரட்டும். பின்பு பார்க்கலாம்..!

    ReplyDelete
  46. [[[டுபாக்கூர் பதிவர் said...

    //பிறந்து, வளர்ந்ததில் சொல்லிக் கொள்ளும்படியான சாதனைகள் எதுவும் இதுவரை இல்லை; உயிருடன் இருப்பதைத் தவிர.. //

    உலகின் மிகச்சிற்ந்த பொருளாதார வல்லுனர் என கருதப் படுகிற ஒரு மனிதனை காறித் துப்புகிற நேர்மையும், விமர்சித்து அறிவுரை சொல்லும் தகுதி கொண்டவராக கருதிடும் தன்னம்பிக்கையே ஒரு மிகப் பெரிய சாதனைதான். எனவே உங்களின் இந்த கேப்ஷனை உடனடியாக மாற்றி விடுங்கள்.
    (இதில் எந்த உள்குத்தும் இல்லை)]]]

    ஹா.. ஹா.. பார்க்கலாம்..! ஆனால் இப்போதைக்கு முடியாது..!

    ReplyDelete
  47. //Prakash said...

    Hope you are seeing ONLY 24X7 English Channels & Jaya TV. Pls read Daily Thandhi also, As per 16th Dec Edition,
    1. Nakeeran Gopal Denaied any association of Kamaraj Wife with Nira Radia's Firm.
    2. No Raid conducted in Nandanam Auditor House.
    3. Rajathi Ammal says they’ll take legal action if any false infos are given. What’s wrong in that ?
    4. Listen to Jagath Gaser’s yesterday’s press interview, if you have doubt you himself can go and check the records.
    Pls give True Information, don't just vomit whatever biased news given by North Indian Eng Channels and So Called Brahmin Chauvinists.//

    ஆமாம் பிரகாஷ்.இங்கு நடக்கும் அத்தனை ஊழல்களுக்கும் மூல காரணம் நீங்கள் குறிப்பிட்டு உள்ளவர்கள்தான்!இந்த நாட்டை விட்டு அவர்களை,மற்றும் எல்லா பிராமணர்களையும்(கூடவே உண்மைத்தமிழன்,காவிரிமைந்தன் போன்றோரையும்) வெளியேற்றினால் தான்
    சோனியா,
    மு.க ,
    ராசா போன்ற நேர்மையாளர்கள் ஏழை எளிய மக்களுக்கு எந்த எதிர்ப்பும் இன்றி தொண்டு செய்ய முடியும்!
    இறைவனைப் பிரார்த்திப்போம்!

    ReplyDelete
  48. //காங்கிரஸ் கட்சி அல் கொய்தா தீவிரவாதத்தை விட பயங்கரமானது...//

    உங்களுக்கு அடுத்த பதிவுக்கான விஷயம் கிடைச்சாச்சு போல...

    காங்கிரஸ் அல் கொய்தா team... ok.அப்படினா
    எதிர் கட்சிகள்?

    ReplyDelete
  49. சரவணன் சார்!

    மு.க.நேற்று பதில் அளித்துள்ளார்.
    துக்ளக்கில் சோ கொடுத்திருக்கும் அனைத்து விவரங்களும் பொய்யாம்!
    இது திராவிட இயக்கத்தை அழிக்க செய்யப்பட்டிருக்கும் சதியாம் .முழு விவரங்களை சோ பிரசுரித்தால் தி.மு.க சட்டப்படி இந்த குற்றச்சாட்டை எதிர்கொள்ள தயாராம்!
    இது இன்றைய ஹிந்து வில் வந்துள்ளது!

    ReplyDelete
  50. //அடுத்த முறை இவர்களை நாடக மேடையில் ஏற விடாமல் தடுக்கும் பணியை மட்டும் நாம் செய்தால், அது நமக்கும் நல்லது.. நமது வாரிசுகளுக்கும் நல்லது..!//

    இலவச கோவணத்துக்கு ஓட்டுப்போடும் (அ)சிங்கங்கள் இருக்கும் வரை இந்த கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம்தான்! :(

    ReplyDelete
  51. Ganpat said...

    ஆமாம் பிரகாஷ். இங்கு நடக்கும் அத்தனை ஊழல்களுக்கும் மூல காரணம் நீங்கள் குறிப்பிட்டு உள்ளவர்கள்தான்! இந்த நாட்டைவிட்டு அவர்களை, மற்றும் எல்லா பிராமணர்களையும் (கூடவே உண்மைத்தமிழன், காவிரிமைந்தன் போன்றோரையும்) வெளியேற்றினால்தான் சோனியா,
    மு.க., ராசா போன்ற நேர்மையாளர்கள் ஏழை எளிய மக்களுக்கு எந்த எதிர்ப்பும் இன்றி தொண்டு செய்ய முடியும்!
    இறைவனைப் பிரார்த்திப்போம்!]]]

    என்னையும் வெளியேத்தணுமா..? கூடவே கருணாநிதியையும் வெளியேத்துனீங்கன்னா சந்தோஷமா இருக்கும்..!

    ReplyDelete
  52. [[[பாரத்... பாரதி... said...

    //காங்கிரஸ் கட்சி அல் கொய்தா தீவிரவாதத்தை விட பயங்கரமானது...//

    உங்களுக்கு அடுத்த பதிவுக்கான விஷயம் கிடைச்சாச்சு போல...
    காங்கிரஸ் அல் கொய்தா team... ok. அப்படினா எதிர் கட்சிகள்?]]]

    இஸ்லாமிய விரோதிக் கொள்கையுடையவர்கள்..!

    ReplyDelete
  53. [[[Ganpat said...
    சரவணன் சார்!
    மு.க.நேற்று பதில் அளித்துள்ளார். துக்ளக்கில் சோ கொடுத்திருக்கும் அனைத்து விவரங்களும் பொய்யாம்!
    இது திராவிட இயக்கத்தை அழிக்க செய்யப்பட்டிருக்கும் சதியாம். முழு விவரங்களை சோ பிரசுரித்தால் தி.மு.க சட்டப்படி இந்த குற்றச்சாட்டை எதிர்கொள்ள தயாராம்!
    இது இன்றைய ஹிந்துவில் வந்துள்ளது!]]]

    திருடர்களிடம் நாம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்..?

    ReplyDelete
  54. [[[Ram said...

    //அடுத்த முறை இவர்களை நாடக மேடையில் ஏற விடாமல் தடுக்கும் பணியை மட்டும் நாம் செய்தால், அது நமக்கும் நல்லது.. நமது வாரிசுகளுக்கும் நல்லது..!//

    இலவச கோவணத்துக்கு ஓட்டுப் போடும் (அ)சிங்கங்கள் இருக்கும்வரை இந்த கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம்தான்!:(]]]

    அதுதான் எனக்கும் பயமா இருக்கு.. மக்கள் முழிச்சுக்கணுமே..?

    ReplyDelete
  55. //மானம், அவமானம் பற்றியெல்லாம் இனிமேலும் அவர் யோசித்துக் கொண்டிருந்தால் பிரதமர் பதவியில் அவர் நீடித்திருக்க முடியாது.. அதிகாரத்தைப் பிடுங்கி வைத்துக் கொண்டு, நீ எதற்கும் லாயக்கில்லை. வீட்ல சும்மா இரு என்று நீதிமன்றமே சொல்கின்றவரையில்தான் இவரது வேலை பார்க்கும் லட்சணம் இருக்கிறது. கூட்டிக் கழித்துப் பார்த்தால் இவருக்கு நரசிம்மராவே பரவாயி்ல்லை போலிருக்கிறது..!//

    அண்ணே,

    எனக்குத் தெரிஞ்சு, நரசிம்மராவ் நல்லவரா தெரியுது.

    வெறும் “மண்ணை” போயி ... அவருக்கு ஒப்பிடறீங்களே!

    ReplyDelete
  56. //இப்படியொரு இந்தியாவின் தலைசிறந்த பத்திரிகையாளராக நக்கீரன் கோபால் இத்தனையாண்டு காலத்திற்குப் பிறகு உருவெடுத்திருப்பதற்கு அவருக்கு நமது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்வோம்..!//

    என் வாழ்த்தையும் சொல்லிருங்கண்ணே. ங்கொய்யால.. அவனுக்கெல்லாம் மீசை வேற ...!

    ReplyDelete
  57. [[[தேவன் மாயம் said...
    உண்மை! கிரேட்!]]]

    நீங்களும் ஒரு கண்டன அறிக்கை விடுங்க தேவன்மாயன்..! இன்னும் 400 பேர்கிட்ட இது போய்ச் சேரணும்..!

    ReplyDelete
  58. [[[சத்ரியன் said...

    //மானம், அவமானம் பற்றியெல்லாம் இனிமேலும் அவர் யோசித்துக் கொண்டிருந்தால் பிரதமர் பதவியில் அவர் நீடித்திருக்க முடியாது.. அதிகாரத்தைப் பிடுங்கி வைத்துக் கொண்டு, நீ எதற்கும் லாயக்கில்லை. வீட்ல சும்மா இரு என்று நீதிமன்றமே சொல்கின்றவரையில்தான் இவரது வேலை பார்க்கும் லட்சணம் இருக்கிறது. கூட்டிக் கழித்துப் பார்த்தால் இவருக்கு நரசிம்மராவே பரவாயி்ல்லை போலிருக்கிறது..!//

    அண்ணே, எனக்குத் தெரிஞ்சு, நரசிம்மராவ் நல்லவரா தெரியுது.
    வெறும் “மண்ணை” போயி ... அவருக்கு ஒப்பிடறீங்களே!]]]

    அப்படீன்றீங்க..?

    ReplyDelete
  59. [[[சத்ரியன் said...

    //இப்படியொரு இந்தியாவின் தலைசிறந்த பத்திரிகையாளராக நக்கீரன் கோபால் இத்தனையாண்டு காலத்திற்குப் பிறகு உருவெடுத்திருப்பதற்கு அவருக்கு நமது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்வோம்..!//

    என் வாழ்த்தையும் சொல்லிருங்கண்ணே. ங்கொய்யால.. அவருக்கெல்லாம் மீசை வேற!]]]

    -)))))))))))))

    ReplyDelete