Pages

Wednesday, November 24, 2010

மந்திரப்புன்னகை - சினிமா விமர்சனம்

24-11-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இத்திரைப்படத்தை சென்ற வெள்ளியன்று மாலையே பார்த்திருந்தாலும் உடனுக்குடன் விமர்சனத்தை வெளியிட என் மனம் ஒப்பவில்லை. காரணம், நான் எதிர்பார்த்துப் போன கரு.பழனியப்பன் அதில் இல்லாத அதிர்ச்சிதான்..!

நான் இப்படி எதிர்பார்ப்பதே தவறு என்பதை உணர்ந்து சகஜ நிலைக்கு வருவதற்கே இரண்டு நாட்களாகிவிட்டது. ஒருவரின் பிம்பம்.. இவர் இப்படித்தான் என்பது மாதிரியான அடிப்படை உணர்வு நம் மனதில் புகுந்துவிட்டால் அதனை வெளியில் தூக்கியெறிவது மிகவும் கடினமாக இருக்கும். அது போலத்தான் பழனியப்பன் பற்றிய எனது பார்வையும்.

இவரது படத்தினை குடும்பத்துடன் பார்க்கலாமே என்ற நினைப்போடு போயிருந்த எனக்கு, அதில் இருந்த கலாச்சாரப் புரட்சியும், எக்குத்தப்பான வசனங்களும் காய்ச்சலுக்குள்ளாக்கிவிட்டது.

ஆனால் பின்பு யோசித்துப் பார்த்ததில் தவறு என் பக்கம்தான் இருக்கிறது என்பது புரிந்தது. நான் யோசித்தது கரு.பழனியப்பனை. ஆனால் திரையில் நான் சந்தித்தது கதிர் என்னும் ஒரு கேரக்டரை.

அந்தக் கேரக்டர் அப்படித்தான். அவனது குணாதிசயங்கள்தான் அது.. அவனது கதை அதுதான். அவனது வாழ்க்கைச் சம்பவம்தான் கதை என்கிற ரீதியில் யோசித்துப் பார்த்து வெறும் இயக்குநராக எழுத்து, இயக்கம் செய்த கரு.பழனியப்பனை மட்டுமே நினைவில் கொண்ட பின்புதான் மனம் சகஜ நிலைமைக்குத் திரும்பியது.


தமிழுக்கு இது போன்ற கதைகள் புதிது என்றே நினைக்கிறேன். இதனுடைய திரைமொழியாக்கமும் புதிதுதான்..! கரு.பழனியப்பனின் இதற்கு முந்தைய படமான பிரிவோம் சந்திப்போம் படத்திலேயே இது போன்ற ஒரு அடித்தளத்தை அவர் வைத்திருந்தார்.

அந்தக் குறிப்பிட்டக் காட்சி அந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் அந்தக் காட்சியை மட்டும் தமிழக அரசு வழங்கிய சினிமா விருதுகள் பற்றிய இட்லி-வடை கட்டுரையில் இரண்டு பாராவில் குறிப்பிட்டிருக்கிறேன்.

“இதில் எனக்கு சந்தோஷத்தைக் கொடுத்திருப்பது இரண்டு விஷயங்கள். ஒன்று, சினேகாவுக்குக் கிடைத்த சிறந்த நடிகைக்கான விருது. நல்ல திரைப்படம்தான். நல்ல கதைதான். ஆனால் அழுத்தமான திரைக்கதையும், சொல்ல வந்ததை தெளிவாகச் சொல்லக்கூடிய விதமாகவும் இல்லாமல் போனதால் 'பிரிவோம் சந்திப்போம்' திரைப்படம் மக்கள் மனதில் இடம் பெறாமல் போய்விட்டது. ஆனால் அதில் சிநேகாவின் நடிப்பு என்னை அப்போதே மிகவும் கவர்ந்திருந்தது.

சந்தேகம் இருப்பவர்கள் அதன் டிவிடியை வாங்கி பாருங்கள்.. எதிரில் சோபாவில் யாரோ அமர்ந்திருக்கிறார்கள் என்று நினைத்து அவர்களை இமேஜின் செய்து அவர்களுக்கு காபி கொடுப்பதற்காக டிரேயை நீட்டியபடியே காபி எடுத்துக்குங்க என்று எப்போதும் போல மிக, மிக இயல்பாக சொல்லும் சிநேகாவை அப்படியே அள்ளி முத்தமிடலாம்.”

இப்படித்தான் அதில் எழுதியிருக்கிறேன். எதிரில் ஒருவர் இருப்பதைப் போல் கற்பனை செய்து கொண்டு உரையாடும் ஒரு மனப்பிறழ்வு நோய் நாயகிக்கு ஏற்பட்டிருப்பதை அதில் காட்டியிருப்பார் இயக்குநர் கரு.பழனியப்பன்.  ஆனால் இந்தக் காட்சியைத்தான் கொஞ்சம் அழுத்தமாகக் கொடுக்கவில்லை என்று குறைபட்டிருந்தேன்.

அந்தக் குறையை நீக்க வேண்டி அதற்கான பின்புலமாக ஒரு கதையைத் தேர்வு செய்து இப்போது முழு நீளப் படமாகவே மந்திரப்புன்னகையில் கொடுத்திருக்கிறார்.

தன் மேல் அன்பையும், பாசத்தையும் பொழிந்த தாய் திடீரென்று தன்னை விட்டுப் போனதையடுத்து மனச்சிக்கலுக்குள்ளான கதிர், அதேபோல் தான் விரும்பும் பெண்ணும் போய்விடுவாளோ என்று நினைத்து தனக்குள் இருக்கும் மிருகத்தை உசுப்பிவிட்டு அதனால் படும்பாட்டைத்தான் இந்த 2 மணி நேர சினிமாவுக்குள் சொல்லியிருக்கிறார்.

இந்த முறை மட்டுமே.. இந்தச் சினிமாவிற்கு மட்டுமே... கதைச் சுருக்கத்தை சொல்வதற்குக்கூட சற்றுச் சங்கடப்பட வேண்டியிருக்கிறது. இப்போது பெரும்பாலான பதிவர்கள் நான் நினைத்ததுபோலவே கதிரின் கேரக்டர் பற்றிச் சொல்லிவிட்டதால் இடைவேளையின்போது வரும் அந்த ட்விஸ்ட்டை விமர்சனத்தை படித்துவிட்டு படம் பார்க்கும் ரசிகர்களால் முழுமையாக ரசிக்க முடியாது என்றே நினைக்கிறேன்.


முதல் பாராட்டு வேறொரு நடிகரை வைத்து இயக்காமல், தானே நடித்தற்காக இயக்குநருக்குக் கொடுக்க வேண்டும். வேறொரு முன்னணி நடிகர் நடித்திருந்தால் திரையில் அவரைப் பற்றிய வெளிப்புற பிம்பமே நம் மனதை ஆழ்த்தி, மனநோய் பீடித்த கதாநாயகன் தோன்றியிருக்க மாட்டான். தனது முதல் படத்திலேயே இப்படியொரு கேரக்டர் என்பதால்தான் இங்கே கதை பிரதானமாகி பின்புதான் பழனியப்பன் என்னும் நடிகர் தென்படுகிறார்.

படத்தின் பிரதான அம்சமே வாழ்க்கையின் சகலத்தையும் கொத்து புரோட்டோ போட்டிருக்கும் வசனங்கள்தான். பொதுவாகவே பழனியப்பனின் திரைப்படங்களில் வசனங்கள் மிகுதியாக இருக்கும். அதிலும் பொது அறிவுக் களஞ்சியமாக வசனங்கள் கொட்டியிருக்கும். இதிலும் அப்படியே.. ஆனால் கொஞ்சம் அவற்றைக் குறைத்துவிட்டு கேரக்டருக்கு ஏற்றாற்போல் வசனங்களைப் பிரித்து மேய்ந்திருப்பதால் முதல் பகுதியில் ஏக கலகலப்பு..! "படிப்பு வரலேன்னா என்ன... சினிமால ஹீரோவாக்கிட்டு போறேன்.." என்ற டயலாக்கை தைரியமாக வைத்திருப்பதற்கு ஒரு ஸ்பெஷல் ஷொட்டு..! அதேபோல் எனக்கு "அது பிடிக்கும், இது பிடிக்கும்" என்று சொல்லும் மீனாட்சியிடம் "மொத்தத்துல ஆம்பளைங்க வாசம்னா பிடிக்கும்னு சொல்லு" என்று பழனியப்பன் சொல்லும் வசனமும் பல ஆயிரம் கதையைச் சொல்கிறது..

சந்தானம் பேசும் இரட்டை அர்த்த வசனங்கள் சில இடங்களில் முகத்தைச் சுழிக்க வைத்தன என்பதையும் சொல்லத்தான் வேண்டும்.. வசனங்களின் முக்கியத்துவம் தேவை என்றாலும், எட்டாவது ரீல் வரையிலும் கேரக்டர் ஸ்கெட்ச்சை வசனத்தின் மூலம் சொல்லிக் கொண்டே போக வேண்டுமா என்கிற அங்கலாய்ப்பும் எழுகிறது.


அந்த அப்பா கேரக்டரின் உண்மைதன்மையை முன்பே வெளிப்படுத்துவதுபோல் வசனங்களை அமைத்திருப்பதும் பாராட்டுக்குரியது. “எப்போ நான் வந்தாலும் என்னை அனுப்புறதுலேயே குறியா இரு..!!!” என்ற வசனத்தை இரண்டாவது முறையாகக் கேட்டபோதுதான் மனதில் குறியீடாக நின்றது..

கதிரின் ஒழுக்கம்கெட்டத் தன்மையை காட்டுவதாகக் கூறி காட்சிக்குக் காட்சி மது பாட்டில்களைக் காட்டியது ஓவர்தானோ என்றும் தோன்றுகிறது. தனது தாய் மீதான நெருக்கத்தைக் காட்டும் “வெளில போறதுக்கு முன்னாடி கண்ணாடில நம்மளை நாமளே பார்த்துக்கணும்” என்ற வசனம் மீனாட்சியையும் பிடிக்க வைப்பது டச்சிங் சீன். மீனாட்சியை பாலோ செய்து ஹோட்டலுக்கு வரும் காட்சியில் கேமிரா காட்டியிருக்கும் விசுவரூபத்திற்கு ஒரு பாராட்டு..!

கதிர் நார்மலானவன் அல்ல என்பதற்காக இயக்குநர் வைத்திருக்கும் பல காட்சிகளால் அவன் மீது வெறுப்பு ஏற்பட வைக்க இயக்குநர் மிகவும் முயன்றிருக்கிறார். அலுவலக மீட்டிங்கில் ஆபாச வார்த்தைகளை அள்ளி வீசுவது. முடியாது என்று முகத்திலடித்தாற்போல் சொல்வது.. கைம்பிள்ளைக்கு பால் கொடுத்துக் கொண்டிருக்கும் பெண்ணிடம் போய் வேலையைப் பார்க்கச் சொல்வது.. இறக்கும் தருவாயில் இருக்கும் பாட்டியை சாகச் சொல்வது.. கார்த்திகை தீபத்தின் அருகில் நின்று சிகரெட்டை பற்ற வைப்பது.. பெற்ற அப்பனிடம் பணத்தை நீட்டி நடையைக் கட்டச் சொல்வது.. மீனாட்சியைப் புறக்கணிக்க வேண்டி அவளை அவமானப்படுத்துவது.. தனக்குச் சுகம் தரும் வந்தனாவைத் திட்டியனுப்புவது.. என்று படம் முழுவதும் அவனுடைய டேலண்ட் மொத்தத்தையும் நாக்கில் விஷம் போல் சேர்த்து வைத்துக் கொட்டும் அனுபவம் அனைத்துமே கேரக்டருக்கு வலு சேர்க்கத்தான் செய்திருந்தன.

கதிராக நடித்திருக்கும் பழனியப்பனுக்கு இது தோதான கதை. நடித்துவிட்டார். ஆனால் அடுத்தும் என்றால் எனக்கு பகீரென்கிறது. இயக்குநர் பழனியப்பனே இனி தொடர வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். இது போன்ற எதிர்பார்ப்பு இல்லாத கேரக்டரில் நடித்த பின்பு, மீண்டும் ஒரு ஸ்கிரீன் லைட்டை  பூசிக் கொள்வது முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. வேறு வடிவத்தில், வேறு இயக்குநரின் கைகளில் தன்னை ஒப்படைத்து வேண்டுமானால் அண்ணன் முயற்சி செய்யலாம்..!

பாரில் பீர் பாட்டில் மூடியை வாயால் கடித்தே திறக்கும் பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக மீனாட்சி. இவர் இப்போதுதான் முதல்முறையாக நடித்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.  இதற்கு முன் நடித்த எந்தப் படத்திலும் இத்தனை குளோஸ்அப் காட்சிகளை மீனாட்சியின் முகத்துக்கு மட்டும் வைத்திருக்க மாட்டார்கள் என்பது உறுதி..! சில குளோஸ்அப்புகளில் லிப்ஸ் மூவ்மெண்ட்ஸ் தவறுவது தெளிவாகத் தெரிகிறது.. இந்தப் பெண்ணுக்கும் நடிக்க வரும் என்பதைத் தெரிவித்தமைக்காக பழனியப்பனுக்கு இன்னுமொரு நன்றி..! ஆனாலும் பாடல் காட்சிகளில் சேலையிலேயே கவர்ச்சியை அள்ளிக் கொட்டியிருக்கிறார் மீனாட்சி. மற்ற இயக்குநர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்..!


படத்தின் முற்பாதியை பாதியளவுக்குத் தனது தோளில் சுமந்திருக்கிறார் சந்தானம். காண்டம் வாங்கப் போன இடத்தில் அவர் அல்லல்படுவதும், மனைவியிக்கு சேலை வாங்கிக் கொடுத்துவிட்டு அங்கே கிடைக்கும் ட்விஸ்ட்டான திட்டில் ஆடிப் போகும் சராசரி சந்தானங்கள் தமிழ்நாட்டில் மிக அதிகம்தான்..!

அதற்காக அவர் பேசிய இரட்டை அர்த்த வசனங்களை மன்னிக்க முடியாது.. செத்த கிளியை இரண்டு முறை பேசுவதெல்லாம் தேவைதானா..? குறைந்த முதலீட்டில் நிறைந்த லாபம் என்கிற கணக்கில் இப்போது சந்தானத்தின் காட்டில்தான் மழை. மனிதரும் வஞ்சகமில்லாமல் காட்சிகளை நகர்த்த பெரிதும் உதவியிருக்கிறார்.

கல்யாணமே செய்யாமல் பெயரில் மட்டும் மன்மத நாயுடுவாக தம்பி இராமையா. நீண்ட அனுபவசாலி நடிகரைப் போல டைமிங்காக பேசுவதில் அசத்துகிறார். முற்பாதியில் கலகலப்பைக் கூட்டுபவராகவும், பிற்பாதியில் குணச்சித்திரத்துக்கும் மாறிவிடவும் மிக எளிதானவராக இருக்கிறார். இனிமேல் இவர் காட்டில் மழைதான் என்று நினைக்கிறேன்.

அடுத்துக் குறிப்பிட வேண்டியது வந்தனாவும், ரிஷியும். மூன்று ஐந்து காட்சிகளே வந்தாலும் வந்தனாவுக்கு ஒரு ஷொட்டு. கதிர் கூப்பிட்டால் இனிமேல் என்னை அனுப்பாதே என்று கேட்டுக் கொள்வதில் இருக்கும் ஆதங்கம் அளவிட முடியாதது.. எல்லாருக்கும் மனமென்ற ஒன்று இருக்குமே..?

பத்தாண்டுகளுக்கு முன்பாக மின்பிம்பங்கள் தயாரிப்பில் விஜய் டிவியில் மீண்டும் ஒரு காதல் கதை என்ற சீரியலில் நடித்த ரிஷியின் முதல் துவக்கமே பாராட்டுக்குரியதாகத்தான் இருந்தது. அப்போதே மாடுலேஷனில் பிச்சு வாங்கினார். டிவியில் வித்தியாசமாக இருக்கிறதே என்று சொல்லித்தான் அந்தக் கேரக்டரை எக்ஸ்டன்ஷன் செய்து கொண்டே போனார்கள். அசத்தினார் மனிதர். இப்போதும் அசத்தியிருக்கிறார்..
  

பழனியப்பன் படம் என்றாலே பாடல்களும், பாடல் காட்சிகளும் ஸ்பெஷலாக இருக்கும். இதில் வித்யாசாகரின் இசையில் தியேட்டரில் மட்டும் கேட்கக் கூடிய அளவுக்கு தண்ணி போட வாப்பா என்ற முதல் பாடலும், சட்ட சட சட என்ற பாடலும், அன்பில்லாமல் என்ற பாடலும் பாடல் காட்சிகளும் பிடித்திருந்தன.. முதல் நடிப்பு என்பதால் நடனமாடி நம்மை சோதிக்கக் கூடாது என்கிற நல்லெண்ணத்தில் அண்ணன் அதை தவிர்த்துவிட்டு காட்சிகளை அழகுபடுத்தியிருப்பதற்கு நன்றி..!


முதல் பாதியில் ஜாலியும், எதிர்பார்ப்புமாகச் சென்ற கதை பிற்பாதியில் நீளமான சம்பவங்களின் கோர்வையினால் கொஞ்சம் ஏமாற்றத்தைத் தந்துவிட்டது. அந்தக் கொலை சம்பவமும், அதைத் தொடர்ந்த காட்சிகளும் பரபர..! அவரது சிறு வயதுக் கதையை கவிதையைப் போல் எடுத்திருக்கிறார்..! அந்தக் காட்சிகள்தான் படத்தின் உயிர்நாடி என்பதால் அது எடுக்கப்பட்டவிதம் நன்று..!

இப்போதைய கட்டுப்பாடுகள் மீறிய காதல் எதனால் ஏற்படுகிறது என்பதை இங்கேயும் வசனத்தாலேயே குறிப்பிட்டிருக்கிறார். ஒரு பாராட்டு.. ஒரு மகிழ்ச்சி.. மனைவியின் திறமையை அங்கீகரித்தல்.. இப்படி ஏதோ ஒன்றை ஒவ்வொரு மனைவியும் எதிர்பார்க்கிறாள் என்பதை மறைமுகமாகச் சொல்கிறார் இயக்குநர்.

பெரும்பாலான இந்த எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் இதுதான் அடிப்படை காரணங்களாக இருக்கின்றன. ஆனால் இவைகள் கணவர்களுக்குத்தான் புரிவதில்லை. வெறும் வேலைகளைப் பகிர்ந்து கொள்வதில் மட்டுமே சுகமில்லை.. அதையும் தாண்டி மனைவியின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதிலும் காதல் வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.. இது மட்டும் எல்லாருக்கும் புரிஞ்சு போச்சுன்னா நாட்டுல கள்ளக்காதலே இருக்காது.. நல்லக் காதல் மட்டுமேதான் இருக்கும்..!

இடையில் சில காட்சிகளை நறுக்கித் தள்ளியிருப்பது தெளிவாகத் தெரிகிறது. துவைத்த துணிகளை காயப் போட்டுக் கொண்டே கல்யாணத்தைப் பற்றி மீனாட்சியிடம் பேசும் பெண்மணியின் காட்சியும் இதில் ஒன்று..!


கதிரின் மனப்பிறழ்வு நோய் சரியாகிவிட்டதா இல்லையா என்பதை மருத்துவரும் குழப்பமாகவே சொல்லிவிட்டது படத்தையும் கொஞ்சம் குழப்பிவி்ட்டது என்றே நினைக்கிறேன். நந்தினியை புறக்கணிக்கவே நான் இப்படி நடிக்கிறேன் என்று கதிர் சொன்னாலும், டாக்டரோ மருந்து, மாத்திரை சாப்பிட்டால் குணமாயிருவார் என்று சொல்லி மேலும் பீதியைக் கொடுக்கிறார். இறுதிக் காட்சியிலும் அப்பா தென்பட்டவர் அமைதியாக, பேசாமல் திரும்பிப் போவதில் அவர் இனிமேல் திரும்பி வர மாட்டார் என்பதை சிம்பாலிக்காக காட்டினாலும் நினைத்துப் பார்ப்பது கதிர்தானே..?

ஊரில் இருக்கும் பாட்டி பற்றிய காட்சிகள் நிஜமா அல்லது அதுவம் கற்பனையா..? அந்தப் பாட்டிதான் மருத்துவமனைக்கு வந்த பாட்டியா..? என்பதும் என் மரமண்டைக்கு சரிவர புரியவில்லை..! இதில் எது, எது உண்மைக் காட்சிகள்.. எது எது கற்பனைக் காட்சிகள் என்பதையே தனியாக லிஸ்ட் போட்டுத்தான் எழுத வேண்டும் போல் உள்ளது..!

கிளைமாக்ஸ் காட்சியை இன்னமும் கொஞ்சம் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம்..! பத்து வரி சென்டிமெண்ட்டுகளில் கதிர் உருகிவிடுவதாகச் சொல்லியிருப்பது அந்தக் காட்சிக்கு ஏற்புடையதாக இல்லை. படம் பார்த்த அத்தனை பேரின் அங்கலாய்ப்பும் இதுதான்..! அந்தக் காட்சியைக் கொஞ்சம் வேறு மாதிரி சிந்தித்திருக்கலாம்..!

கரு.பழனியப்பனின் திரைப்படங்களிலேயே அதிக அளவுக்கு சென்சாரால் வசனங்கள் கட் செய்யப்பட்டிருப்பதும் இதில்தான்  என்று நினைக்கிறேன். யூ-ஏ சர்டிபிகேட்கூட பழனியப்பனுக்கு இதுதான் முதல் முறை என்றும் நினைக்கிறேன்.

பழனியப்பனின் படங்களில் இந்த இரண்டுக்குமே இந்தப் படமே கடைசியாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்..!

மந்திரப்புன்னகை நிச்சயம் தமிழ்ச் சினிமாவில் பேசக் கூடிய வித்தியாசமான படமாக வருங்காலங்களில் இருக்கும்..!

53 comments:

  1. நேர்மையான விமர்சனம் அண்ணே!... இன்னும் மனசுல உயர்ந்துட்டீங்க!...

    பிரபாகர்...

    ReplyDelete
  2. தலைவா விமர்சனம் நச் !

    ReplyDelete
  3. விமர்சனம் அருமை சார்,

    கலக்கீட்டீங்க...

    தொடரட்டும் பணி

    ReplyDelete
  4. தலைவரே,

    படம் எனக்கு ரொம்பவே பிடித்தது.

    கிளைமாக்ஸ் மட்டும் கொஞ்சம் அழுத்தமாக கொடுத்திருக்கலாம்.

    மற்றப்படி இயல்பா இருந்தது, கரு வின் நடிப்பு.

    ReplyDelete
  5. இனிமேல் திரும்பி வர மாட்டார் என்பதை சிம்பாலிக்காக காட்டினாலும் நினைத்துப் பார்ப்பது கதிர்தானே..?"

    அன்பு செலுத்த ஆள் இல்லாமல் தான் அப்பாவை வரவழைத்தார்.,,, இனி அவர் தேவையில்லை என அருமையாக காட்டி இருந்தார்கள்..
    இதை புரிந்து கொள்ளாதது வருந்த தக்கது..

    மற்றபடி விமர்சனம் சூப்பர்...

    ReplyDelete
  6. விமர்சனம் நச்.ஆனா கடைசி லைன்ஸ் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை.இந்தப்படம் சுமார்தான்.நீங்கள் பிரம்மிக்கும் அளவு படத்தில் ஏதும் இல்லை என நினைக்கிறேன்

    ReplyDelete
  7. நடு நிலைமையாக இருக்கிறேன் என காட்டிக்கொள்வதற்காக, உங்கள்நண்பரின் படத்தை அளவுக்கு அதிகமாக திட்டி இருக்கிறீர்கள்....

    ” திரைப்படங்களிலேயே அதிக அளவுக்கு சென்சாரால் வசனங்கள் கட் செய்யப்பட்டிருப்பதும் இதில்தான் என்று நினைக்கிறேன்”

    இதை படிப்பவர்கள், வசனம் எல்லாம் ஆபாசக்களஞ்சியம் என நினைப்பார்கள்..

    கட் செய்ததில் பொதுவான , சமூக கருத்துக்களும் , மாற்று பார்வைகளும் உண்டு .. அன் சென்சார்ட் வெர்ஷன் பார்க்க முடிந்தால் மகிழ்வேன் ....

    ”இனிமேல் திரும்பி வர மாட்டார் என்பதை சிம்பாலிக்காக காட்டினாலும்”

    திரும்பி வர மாட்டார் என இயக்குனர் சொல்லவில்லை... கதிருக்கு அன்பு செலுத்த ஆள் கிடைத்து விட்டதால், தன் தந்தையை அவரே அனுப்பி விட்டார் எனவும் எடுத்து கொள்ள முடியும்...


    சமீபத்தில் வந்த படங்களில் நல்ல ப்டம் இது..

    எது எப்படி இருந்தாலும், நடு நிலையாக இருக்க வேண்டும் என்ற உங்கள் எண்ணம் பாராட்டுக்கு உரியது,,,
    இன்னொருவர் படம் என்றால் இன்னும் அதிகமாக பாராட்டி இருப்பீர்கள்

    ReplyDelete
  8. பிரிவோம் சிந்திப்போம் படத்தில் இரண்டு இடங்களில் ஜி. நாகராஜன், தஞ்சை பிரகாஷ் படைப்புகள் பற்றி வருமே. அது உங்களுக்கு ஞாபகம் இருக்காதே? அது சரி, இட்லி வடை என்று பதிவின் தலைப்பு. ஸ்நேகா காபி கொடுப்பதுதானே நினைவு இருக்கும். அப்படியே அள்ளிமுத்தமிடலாம் என்று சொல்வதெல்லாம், அண்ணே, கொஞ்சம் ஓவர்.

    அப்புறம் நீங்கள் சிலாகிப்பது போலப் படத்தில் அப்படி ஒன்றும் இல்லை என்று சொல்கிறார்களே (நான் இன்னும் படம் பார்க்கவில்லை).

    இன்னொரு சந்தேகம். சாதரணமாக அட்டுப் படங்களையெல்லாம் வெளியாகும் அன்றே பார்க்கும் நீங்கள், இதை ஏன் இவ்வளவு நாள் பார்க்காமல் விட்டு வைத்திருந்தீர்கள்?

    ReplyDelete
  9. சிநேகாவை அப்படியே அள்ளி முத்தமிடலாம்.//
    ஜொள்ளுத்தமிழன் வாழ்க

    ReplyDelete
  10. உண்மைத்தமிழன் மீண்டும் நேர்மையானவர் என்பதை நிரூபித்திருக்கிறீர்கள். ஆங்காங்கே கரு. வை காயப்படுத்தவேண்டாம் என்று நீங்கள் நினைத்திருக்கிறீர்கள், மனதில் பட்டதை சொல்லியதற்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  11. [[[பிரபாகர் said...
    நேர்மையான விமர்சனம் அண்ணே!... இன்னும் மனசுல உயர்ந்துட்டீங்க!...
    பிரபாகர்...]]]

    நன்றி பிரபாகர்..!

    ReplyDelete
  12. [[[Indian Share Market said...
    தலைவா விமர்சனம் நச்!]]]

    நன்றி தலைவா..? தொடர்ந்து வர்றீங்க.. ஆனால் முகத்தைக் காட்ட மாட்டேன்றீங்க..!

    ReplyDelete
  13. [[[மாணவன் said...

    விமர்சனம் அருமை சார்,

    கலக்கீட்டீங்க...

    தொடரட்டும் பணி]]]

    நன்றி மாணவன்..!

    ReplyDelete
  14. [[[காவேரி கணேஷ் said...
    தலைவரே, படம் எனக்கு ரொம்பவே பிடித்தது. கிளைமாக்ஸ் மட்டும் கொஞ்சம் அழுத்தமாக கொடுத்திருக்கலாம். மற்றப்படி இயல்பா இருந்தது, கருவின் நடிப்பு.]]]

    கிளைமாக்ஸ்தான் அத்தனை பேருக்கும் வருத்தத்தைத் தந்துள்ளது..!

    ReplyDelete
  15. [[[பார்வையாளன் said...
    இனிமேல் திரும்பி வர மாட்டார் என்பதை சிம்பாலிக்காக காட்டினாலும் நினைத்துப் பார்ப்பது கதிர்தானே..?"

    அன்பு செலுத்த ஆள் இல்லாமல்தான் அப்பாவை வரவழைத்தார். இனி அவர் தேவையில்லை என அருமையாக காட்டி இருந்தார்கள்.
    இதை புரிந்து கொள்ளாதது வருந்தத்தக்கது.. மற்றபடி விமர்சனம் சூப்பர்...]]]

    அந்த எண்ணத்திற்கு பெயர் என்ன..?

    அதிலும் அந்தக் காட்சியில் கதிர் அப்பாவைப் போகச் சொல்லவில்லை. அவர்தான் தானாகவே செல்கிறார்..!

    ReplyDelete
  16. [[[சி.பி.செந்தில்குமார் said...
    விமர்சனம் நச். ஆனா கடைசி லைன்ஸ் ஏற்றுக் கொள்ளும்படி இல்லை. இந்தப் படம் சுமார்தான். நீங்கள் பிரம்மிக்கும் அளவு படத்தில் ஏதும் இல்லை என நினைக்கிறேன்]]]

    சுமார் என்பது எதனால் சி.பி.சி.? சினிமா வரலாற்றில் சுமாரான படம் என்றெல்லாம் படங்கள் குறிப்பிடப்படுவதில்லை.. கதையம்சம்தான் முக்கியம். தோல்வியடைந்தாலும் சொல்லப்படும்..!

    ReplyDelete
  17. [[[பார்வையாளன் said...

    நடுநிலைமையாக இருக்கிறேன் என காட்டிக் கொள்வதற்காக, உங்கள் நண்பரின் படத்தை அளவுக்கு அதிகமாக திட்டி இருக்கிறீர்கள்.]]]

    இதுவே தவறான, அவதூறான, தேவையில்லாத கணிப்பு..! நான் சனிக்கிழமையன்று போனிலேயே இவை அனைத்தையும் கரு ஸாரிடம் சொல்லிவிட்டேன்..!

    ReplyDelete
  18. [[[Gopi Ramamoorthy said...

    பிரிவோம் சிந்திப்போம் படத்தில் இரண்டு இடங்களில் ஜி. நாகராஜன், தஞ்சை பிரகாஷ் படைப்புகள் பற்றி வருமே. அது உங்களுக்கு ஞாபகம் இருக்காதே? அது சரி, இட்லி வடை என்று பதிவின் தலைப்பு. ஸ்நேகா காபி கொடுப்பதுதானே நினைவு இருக்கும். அப்படியே அள்ளி முத்தமிடலாம் என்று சொல்வதெல்லாம், அண்ணே, கொஞ்சம் ஓவர்.]]]

    நோ.. நோ.. தேட் இஸ் மை பீலிங்..!

    [[[அப்புறம் நீங்கள் சிலாகிப்பது போல படத்தில் அப்படி ஒன்றும் இல்லை என்று சொல்கிறார்களே (நான் இன்னும் படம் பார்க்கவில்லை).]]]

    பார்த்திட்டு வந்து சொல்லுங்க..

    [[[இன்னொரு சந்தேகம். சாதரணமாக அட்டுப் படங்களையெல்லாம் வெளியாகும் அன்றே பார்க்கும் நீங்கள், இதை ஏன் இவ்வளவு நாள் பார்க்காமல் விட்டு வைத்திருந்தீர்கள்?]]]

    ஏன் என்னைப் பத்தி இப்படி தப்புத் தப்பாவே தெரிஞ்சு வைச்சிருக்கீங்க.. என் தளத்துல சினிமா விமர்சனம் போட்டுத் தேடிப் படிச்சுப் பாருங்க.. தெரியும்..!

    ReplyDelete
  19. [[[குடுகுடுப்பை said...

    சிநேகாவை அப்படியே அள்ளி முத்தமிடலாம்.//

    ஜொள்ளுத் தமிழன் வாழ்க]]]

    ம்.. தேங்க்ஸ்.. நல்ல பேரு.. நன்றி..!

    ReplyDelete
  20. [[[குடுகுடுப்பை said...
    உண்மைத்தமிழன் மீண்டும் நேர்மையானவர் என்பதை நிரூபித்திருக்கிறீர்கள். ஆங்காங்கே கரு. வை காயப்படுத்த வேண்டாம் என்று நீங்கள் நினைத்திருக்கிறீர்கள், மனதில் பட்டதை சொல்லியதற்கு பாராட்டுக்கள்.]]]

    நல்லதொரு கலைஞனை காயப்படுத்தக் கூடாது..! நமது விமர்சனங்கள் ரசனையின் அடிப்படையில்தான் அமைய வேண்டும். தனிப்பட்டத் தாக்குதலாக இருக்கவும் கூடாது. இது எனது கருத்து..!

    ReplyDelete
  21. படம் பார்த்துவிட்டு இன்னுமொரு முறை உங்கள் விமர்சனத்தை படிக்கிறேன்.அப்பத்தான் என்னோட நடுநிலையை நிரூபிக்க முடியும்:)

    ReplyDelete
  22. அடபோங்கப்பா... படிச்சி முடிச்சி சரி அந்த பின்னுட்டத்தை போடலாம்னு வந்தா... எல்லாத்தையும் ஏற்கனவே... அதான் நேர்மை இத்யாதி இத்யாதி ன்னு போட்டுடாங்க்யா... போட்டுடாங்க்யா. மொத்தமா ஒரு ரிபிடூ உ உ உ...

    ReplyDelete
  23. காட்சி அமைப்பின் படி எதிரே ஆட்கள் இருந்தாலும், அந்த காட்சியை படமாக்கும் போது எதிரில் யாரும் இல்லாமல் தான் படம் பிடிப்பார்கள். இதிலே தனியாக நடிப்பதற்கு என்ன இருக்கு? பாராட்ட வேண்டும் என்றால் வேறு ஒரு நல்ல காட்சியை சொல்லவேண்டியதுதானே?

    ReplyDelete
  24. [[[ராஜ நடராஜன் said...
    படம் பார்த்துவிட்டு இன்னுமொரு முறை உங்கள் விமர்சனத்தை படிக்கிறேன்.அப்பத்தான் என்னோட நடுநிலையை நிரூபிக்க முடியும்:)]]]

    ரொம்ப சந்தோஷம் ஸார்..!

    ReplyDelete
  25. [[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    nach review. Ill see this week..]]]

    ஓகே ராசா..!

    ReplyDelete
  26. [[[Yuva said...
    அடபோங்கப்பா... படிச்சி முடிச்சி சரி அந்த பின்னுட்டத்தை போடலாம்னு வந்தா... எல்லாத்தையும் ஏற்கனவே... அதான் நேர்மை இத்யாதி இத்யாதின்னு போட்டுடாங்க்யா... போட்டுடாங்க்யா. மொத்தமா ஒரு ரிபிடூ உ உ உ...]]]

    நன்றி யுவா..!

    ReplyDelete
  27. [[[Sundar said...
    காட்சி அமைப்பின்படி எதிரே ஆட்கள் இருந்தாலும், அந்த காட்சியை படமாக்கும்போது எதிரில் யாரும் இல்லாமல்தான் படம் பிடிப்பார்கள். இதிலே தனியாக நடிப்பதற்கு என்ன இருக்கு? பாராட்ட வேண்டும் என்றால் வேறு ஒரு நல்ல காட்சியை சொல்ல வேண்டியதுதானே?]]]

    மனதில் எது நிற்கிறதோ அதைத்தானே சொல்ல முடியும் சுந்தர்..?

    ReplyDelete
  28. பகிர்வுக்கு நன்றி

    படம் இன்னும் பார்க்கவில்லை

    ReplyDelete
  29. நண்பரின் படத்துக்கு(ம்) வழக்கம் போல் உங்கள் பாணி விமர்சனம்....

    ReplyDelete
  30. நல்ல விமர்சனம்..

    ReplyDelete
  31. [[[KANA VARO said...
    பகிர்வுக்கு நன்றி. படம் இன்னும் பார்க்கவில்லை.]]]

    சீக்கிரம் பாருங்க.. மிஸ் பண்ணிராதீங்க..!

    ReplyDelete
  32. [[[வழிப்போக்கன் - யோகேஷ் said...
    நண்பரின் படத்துக்கு(ம்) வழக்கம் போல் உங்கள் பாணி விமர்சனம்.]]]

    படம் பார்க்குறது நான்தானே..!

    ReplyDelete
  33. அண்ணே, அருமையான விமர்சனம்...உங்க நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு

    அன்புடன்
    செங்கோவி

    ReplyDelete
  34. மிக நல்ல விமர்சனம்!

    ReplyDelete
  35. அண்ணே...

    உங்க டைப்பிலே டீடெய்லான விமர்சனம். சிலாகித்த விஷயங்களை பட்டியலிட்ட நேரத்திலும் நெருடல்களை சுட்டிக்காட்டியிருப்பதும் சிறப்பு.

    அன்பு நித்யன்.

    ReplyDelete
  36. [[[செங்கோவி said...
    அண்ணே, அருமையான விமர்சனம். உங்க நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு
    அன்புடன்
    செங்கோவி]]]

    இதுல என்னங்க நேர்மை இருக்கு..? எழுதணும்னு தோணறதை அப்படியே எழுதுறோம். அவ்ளோதான்..!

    திரையிடலுக்கு வந்தமைக்கு மிக்க நன்றிகள்..!

    ReplyDelete
  37. [[[எஸ்.கே said...
    மிக நல்ல விமர்சனம்!]]]

    நன்றிகள் ஸார்..!

    ReplyDelete
  38. [[[அலைகள் பாலா said...
    super.]]]

    வருகைக்கு நன்றி பாலா..!

    ReplyDelete
  39. [[[நித்யகுமாரன் said...
    அண்ணே. உங்க டைப்பிலே டீடெய்லான விமர்சனம். சிலாகித்த விஷயங்களை பட்டியலிட்ட நேரத்திலும் நெருடல்களை சுட்டிக் காட்டியிருப்பதும் சிறப்பு.
    அன்பு நித்யன்.]]]

    இதுதான் நியாயமானது நித்யா..!

    ReplyDelete
  40. அண்ணே, திரையிடலுக்கு நான் வரவில்லை...

    -செங்கோவி

    ReplyDelete
  41. வணக்கம் நண்பரே.!!!
    உங்கள் விமர்சனம் பிறகு யாரும் படத்தை பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது என நினைக்கிறேன்.. கதை கருவை மட்டுமின்றி அதை மொத்தமாக விவரித்துவிட்டீர்.. இது சரியா.??? இன்னும் உங்களை போல நான்கு பதிவரின் விமர்சனம் படித்தால் கதையே முன்னால் தோன்றிடுமே.!!!
    குறிப்பு:தவறாக ஏதேனும் பேசியிருந்தால் மன்னிக்கவும்..

    ReplyDelete
  42. என் பக்கமும் வாருங்கள் நண்பா..
    ram-all.blogspot.com

    ReplyDelete
  43. உங்கள் மேல் எந்த கோபமும் இல்லை. சினிமா தொழில்நுட்பம் தெரிந்த உங்களைபோன்றவர்களே (கவனிக்க, நீங்கள் இல்லை, உங்களைப்போன்றவர்கள்!), இப்படி எழுதும் போது கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. அடிக்கடி பார்த்து கோபப்படும் வாசகங்கள் சில:

    "ஒரே ஷாட்ல முடிச்சிட்டார்" - படம் பார்க்கும் போது தெரியும் அது நிறைய காட்சிகளின் தொகுப்பு என்று.

    "தத்ரூபமா இருக்கணும்னு நிஜ அருவா வீசினோம்" - நடக்கும் வாய்ப்பே இல்லை.

    உங்களைபோன்ற, சினிமா உலகில் பழகும் அன்பர்கள், இந்த மாதிரி தொழில் நுட்ப ஜாலங்களை மக்களுக்கு எடுத்து சொல்லவேண்டும். ஒரு சாதாரண மனிதனின் பார்வையில் விமர்சனம் செய்ய நிறைய ஜனரஞ்சக பத்திரிக்கைகள் உள்ளன... நீங்கள் வித்தியாசமாய் இருங்கள்...

    நிச்சயமாக உங்கள் மேல் எந்த கோபமும் இல்லை..

    ReplyDelete
  44. [[[செங்கோவி said...
    அண்ணே, திரையிடலுக்கு நான் வரவில்லை.
    - செங்கோவி]]

    வந்தது போலவே தோன்றியது உங்களது பின்னூட்டம்..!

    ReplyDelete
  45. [[[தம்பி கூர்மதியன் said...
    வணக்கம் நண்பரே.!!! உங்கள் விமர்சனம் பிறகு யாரும் படத்தை பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது என நினைக்கிறேன்.. கதை கருவை மட்டுமின்றி அதை மொத்தமாக விவரித்துவிட்டீர்.. இது சரியா.??? இன்னும் உங்களை போல நான்கு பதிவரின் விமர்சனம் படித்தால் கதையே முன்னால் தோன்றிடுமே.!!!
    குறிப்பு : தவறாக ஏதேனும் பேசியிருந்தால் மன்னிக்கவும்.]]]

    காட்சிகளைச் சொல்லியிருப்பதால் சுவாரஸ்யம் குன்றிவிடாது..! முன்பின்னாகத்தான் இதில் சொல்லியிருக்கிறேன். இதற்கு மேலாக இந்தப் படத்தை விமர்சனம் செய்ய முடியாத சூழல் இருப்பது எதனால் என்பதை நீங்கள் படத்தைப் பார்த்தீர்களேயானால் உங்களுக்கே புரியும்..!

    ReplyDelete
  46. [[[தம்பி கூர்மதியன் said...
    என் பக்கமும் வாருங்கள் நண்பா..
    ram-all.blogspot.com]]]

    அழைப்புக்கு மிக்க நன்றி.. வருகிறேன்..!

    ReplyDelete
  47. [[[Sundar said...
    உங்கள் மேல் எந்த கோபமும் இல்லை. சினிமா தொழில் நுட்பம் தெரிந்த உங்களை போன்றவர்களே (கவனிக்க, நீங்கள் இல்லை, உங்களைப்போன்றவர்கள்!), இப்படி எழுதும் போது கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. அடிக்கடி பார்த்து கோபப்படும் வாசகங்கள் சில:

    "ஒரே ஷாட்ல முடிச்சிட்டார்" - படம் பார்க்கும் போது தெரியும் அது நிறைய காட்சிகளின் தொகுப்பு என்று.

    "தத்ரூபமா இருக்கணும்னு நிஜ அருவா வீசினோம்" - நடக்கும் வாய்ப்பே இல்லை.

    உங்களை போன்ற, சினிமா உலகில் பழகும் அன்பர்கள், இந்த மாதிரி தொழில் நுட்ப ஜாலங்களை மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும். ஒரு சாதாரண மனிதனின் பார்வையில் விமர்சனம் செய்ய நிறைய ஜனரஞ்சக பத்திரிக்கைகள் உள்ளன. நீங்கள் வித்தியாசமாய் இருங்கள்.

    நிச்சயமாக உங்கள் மேல் எந்த கோபமும் இல்லை.]]]

    எனக்கும் நிச்சயமாக உங்கள் மேல் எந்தக் கோபமும் இல்லை..

    இனி வரும் விமர்சனங்களில் நீங்கள் குறிப்பிட்டிருப்பதைப் போல எழுத முயற்சி செய்கிறேன்..

    நன்றி..!

    ReplyDelete
  48. உங்களின் எல்லாவிதமான பதிவுகளையும் படித்து உள்ளேன் .எதற்கும் பின்னூட்டம் போட்டது கிடையாது .ஆனால் உங்களின் மந்திரப்புன்னகை படத்தின் விமர்சனம் படித்து படத்தை பார்த்தேன் [இணையம் வழியாகத்தான் என்ன பண்ணுவது சவுதி அரேபியாவில் உள்ளேன் ].படம் சூப்பர் . கரு.பழனியப்பன் சார் உடைய வசனங்கள் அவருடைய குரல்[ சொந்த வாய்ஸ் ?] ரொம்ப அருமையாக உள்ளது ..

    ReplyDelete
  49. [[[ABDUL said...

    உங்களின் எல்லாவிதமான பதிவுகளையும் படித்து உள்ளேன். எதற்கும் பின்னூட்டம் போட்டது கிடையாது.]]]

    ஏன் ஸார்..? போடலாமே..? பின்னூட்டங்கள் இட்டால்தானே எங்களுக்கு சந்தோஷமாகவும், உற்சாகமாகவும் இருக்கும்..!

    [[[ஆனால் உங்களின் மந்திரப்புன்னகை படத்தின் விமர்சனம் படித்து படத்தை பார்த்தேன்.

    [இணையம் வழியாகத்தான் என்ன பண்ணுவது சவுதி அரேபியாவில் உள்ளேன்]

    படம் சூப்பர். கரு.பழனியப்பன் சார் உடைய வசனங்கள் அவருடைய குரல்[ சொந்த வாய்ஸ் ?] ரொம்ப அருமையாக உள்ளது.]]]

    கருத்துக்கு மிக்க நன்றி அப்துல் ஸார்..!

    ReplyDelete