Pages

Sunday, November 21, 2010

சாமி கல்லா..? மனம் கல்லா..?

21-11-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!



பக்கெட் கவிதை
 

நான்கு ராஜகோபுரங்கள்..!
நுழைந்தவுடனேயே
அனுமாரின் சேவை..!
நடுநாயகமாக
விநாயகனின் எதிர்சேவை..!
சுவரைச் சுற்றிலும்
அவதார விநாயகர்கள்..!
பக்கத்தில்
வரதராஜப் பெருமாள்..!
இன்னும் அருகில்
காசி விஸ்வநாதர்..!
இவரையும் தாண்டினால்
காசி விசாலாட்சி..!
சற்றுத் தள்ளி தனி ஆலயத்தில்
மனைவி, துணைவியுடன் முருகன்..!
தொட்டுக் கொள்ள
படவுருவில் ஐயப்பன்..!
நாசகார நவக்கிரகங்கள்
ஆளுக்கொரு பக்கமாக
முகம் காட்டி நிற்கிறார்கள்..!
இத்தனை பேரும் இருந்தாலும்
சன்னதியில் கை கூப்பியவுடன்
வாசலில் கழட்டிப் போட்ட
செருப்பு இருக்குமா என்றே
யோசிக்கிறது மனம்..!
சாமி கல்லா..?
மனம் கல்லா..?

30 comments:

  1. எப்படியும் கோயில் உள்ளதானே நிக்கிறீங்க. பூ கட்டி போட்டு பார்க்க வேண்டியதுதான்:))

    ReplyDelete
  2. நல்ல கேள்வி.. முருகா பதில் சொல்லுப்பா இவருக்கு

    ReplyDelete
  3. LK said..
    //நல்ல கேள்வி.. முருகா பதில் சொல்லுப்பா இவருக்கு//

    இதுவும் முருகன் குடுத்த சோதனை அப்படின்னுதான் இவரு சொல்லுவாரு.

    ReplyDelete
  4. [[[வானம்பாடிகள் said...
    எப்படியும் கோயில் உள்ளதானே நிக்கிறீங்க. பூ கட்டி போட்டு பார்க்க வேண்டியதுதான்:))]]]

    அப்புறம் பூ விழுமா? விழாதான்னு ஒரு சந்தேகம் ஓடுமே.. அப்போ என்ன ஸார் செய்யறது..?

    ReplyDelete
  5. [[[LK said...
    நல்ல கேள்வி.. முருகா பதில் சொல்லுப்பா இவருக்கு..]]]

    அவன் எங்க சொல்லப் போறான்..?

    ReplyDelete
  6. [[[கும்மி said...

    LK said..
    //நல்ல கேள்வி.. முருகா பதில் சொல்லுப்பா இவருக்கு//

    இதுவும் முருகன் குடுத்த சோதனை அப்படின்னுதான் இவரு சொல்லுவாரு.]]]

    பரவாயில்லையே கும்மி.. என்னைப் பத்தி நல்லாவே தெரிஞ்சு வைச்சிருக்கீங்க.. நன்றி..!

    ReplyDelete
  7. அண்ணே உள்ளத்தில் மட்டும் கட-உள் இருந்தால் எதுவுமே கல் இல்லை அண்ணே... கவிஞரும் ஆயிட்டீங்க.. மகிழ்ச்சியாக இருக்கின்றது. அண்ணே ஒரு சிறுகதை ஒன்று எழுதுங்களேன்

    ReplyDelete
  8. ஸ்ஸ்ஸ்ஸப்பபபபபா.....

    ReplyDelete
  9. கடவுளே
    கண்ணைத்
    திற
    இந்தக்
    கவி
    தையைக்
    கா
    ப்
    பா
    ற்
    று

    ReplyDelete
  10. எப்படிண்ணே இதெல்லாம்?

    ReplyDelete
  11. சாமியே கல்... கல் எப்படி சாமியாக போனது என்பது முட்டாள்களின் மூளைக்கே விளங்கும்...

    ReplyDelete
  12. நாத்திக இதைவிட யாரும் நாசுக்காக சொல்ல முடியாது..

    அருமை

    ReplyDelete
  13. இத இத இததான் நான் எதிர்பார்கிறேன் .வாழ்த்துக்கள்
    நண்பரே ,இன்னும் சிரிப்பை நிறுத்த முடியல.....

    ReplyDelete
  14. என்னாச்சு அண்ணே!!! முருகர் அதிகமாக சோதனை தருகிறார...

    ReplyDelete
  15. [[[வினையூக்கி said...
    அண்ணே உள்ளத்தில் மட்டும் கட-உள் இருந்தால் எதுவுமே கல் இல்லை அண்ணே... கவிஞரும் ஆயிட்டீங்க.. மகிழ்ச்சியாக இருக்கின்றது. அண்ணே ஒரு சிறுகதை ஒன்று எழுதுங்களேன்.]]]

    அது ஒண்ணுதான் பாக்கி.. எழுதிருவோம்..

    ReplyDelete
  16. [[[இராமசாமி கண்ணண் said...
    ஸ்ஸ்ஸ்ஸப்பபபபபா.....]]]

    என்னாச்சு இராமசாமி..? படிச்சு முடியலையா..? படிக்கவே முடியலையா..?

    ReplyDelete
  17. [[[-/பெயரிலி. said...

    கடவுளே
    கண்ணைத்
    திற
    இந்தக்
    கவி
    தையைக்
    கா
    ப்
    பா
    ற்
    று]]]

    அண்ணை.. இது கவிதை.. அச்சச்சோ.. எதுல இருந்தெல்லாம் கவிதை உருவாகுது பாருங்க.. நீங்க கவிஞர்ண்ணே..!

    ReplyDelete
  18. [[[பழமைபேசி said...
    எப்படிண்ணே இதெல்லாம்?]]]

    என்ன செய்யறது.. பொங்கி வருது பழமை.. வரும்போதே சட்டில பிடிச்சு வைக்கணும்ல்ல.. அதுனாலதான்..!

    ReplyDelete
  19. [[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    nadathungka]]]

    ஓகே.. ஓகே.. ஓகே..!

    ReplyDelete
  20. [[[கே.ஆர்.பி.செந்தில் said...
    சாமியே கல்... கல் எப்படி சாமியாக போனது என்பது முட்டாள்களின் மூளைக்கே விளங்கும்.]]]

    முட்டாள்களுக்கு மட்டுமே சாமி கல்லாகவே இருப்பதாகத் தெரியும் செந்தில்..!

    ReplyDelete
  21. [[[ராயல் ராஜ்(பெயரில் மட்டும்) said...
    நாத்திக இதைவிட யாரும் நாசுக்காக சொல்ல முடியாது..
    அருமை]]]

    நாத்திகமா..? ஐயோ.. நானா..? கடவுளே.. முருகா.. உனக்கே இது அடுக்குமா..?

    ReplyDelete
  22. [[[subra said...
    இத இத இததான் நான் எதிர்பார்கிறேன். வாழ்த்துக்கள். நண்பரே, இன்னும் சிரிப்பை நிறுத்த முடியல.....]]]

    நன்றி..!

    ReplyDelete
  23. [[[Thomas Ruban said...
    என்னாச்சு அண்ணே!!! முருகர் அதிகமாக சோதனை தருகிறார...]]]

    ரொம்ப..!

    ReplyDelete
  24. உண்மைக்கவிஞன்...புது ப்ளாக் போடுங்கண்ணே.... கவிதை....அருமை....

    ReplyDelete
  25. //உண்மைக்கவிஞன்...புது ப்ளாக் போடுங்கண்ணே.... கவிதை....அருமை....//
    repeat :)

    ReplyDelete
  26. [[[எஸ்.கே said...
    அருமையான கவிதை!]]]

    நன்றி ஸார்..!

    ReplyDelete
  27. [[[நந்தா ஆண்டாள்மகன் said...
    உண்மைக்கவிஞன். புது ப்ளாக் போடுங்கண்ணே. கவிதை. அருமை....]]]

    நன்றி நந்தா..!

    ReplyDelete
  28. [[[மரா said...

    //உண்மைக்கவிஞன்...புது ப்ளாக் போடுங்கண்ணே.... கவிதை....அருமை....//

    repeat :)]]]

    இருக்கிற ஒரு பிளாக்கை பார்த்துக்கவே நேரமில்லை. இதுல இன்னொண்ணா.. வேண்டாம்ண்ணே.. இதுவே போதும்..!

    ReplyDelete