Pages

Saturday, November 20, 2010

நகரம் மறுபக்கம் - சினிமா விமர்சனம்

20-11-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

'தலைநகரம்' என்ற வெற்றிப் படத்திற்குப் பின்பு இப்போதுதான் மீண்டும் ஒரு குறிப்பிட்டுச் சொல்லும்படியான, உருப்படியான படத்தினைத் தந்திருக்கிறார் சுந்தர் சி.

இடையில் அவர் நடித்த படங்களில் எந்த விஷயத்திலும் தலையிடாமல் இயக்குநரின் சொல்படி நடிக்க மட்டுமே செய்து கல்லாவை மட்டும் நிரப்பிக் கொண்டு சென்றுவிட்டார்.

ஆனால் இந்தப் படம் திருமதி குஷ்புவின் தயாரிப்பில், தானே இயக்கம் செய்யும் படம் என்பதால் கதை, திரைக்கதை, இயக்கத்தில் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார் என்பது நன்கு தெரிகிறது.

சின்னச் சின்னத் திருட்டுக்களை செய்து வந்த லோக்கல் ரவுடியான சுந்தர், போதைப் பொருள் விற்பனை செய்து வந்த தாதாவுக்காக ஒரு கொலைப் பழியை தான் ஏற்றுக் கொண்டு 5 ஆண்டு சிறைத்தண்டனை பெற்று அப்போதுதான் விடுதலையாகி வெளியில் வருகிறார்.

சிறை மீண்ட சிற்பியை அந்தப் பகுதி இன்ஸ்பெக்டரான உயிர் நண்பன் வரவேற்று சுந்தருக்கு வேறு ஒரு கவுரமான வேலை வாங்கித் தருவதாகக் கூறி மீண்டும் கடத்தல் தொழிலிலேயே ஈடுபடுத்திவிடுகிறார்.


இடையில் தான் சந்திக்கும் பெண்ணை தமிழ்ச் சினிமாவின் இலக்கணப்படி காதலிக்கத் துவங்குகிறார் சுந்தர். அந்தப் பெண் சினிமாவில் நடனமாடும் பெண். அந்தப் பெண்ணின் அம்மா ஒரு கோடீஸ்வரனுக்கு வைப்பாட்டியாக இருந்து வருகிறார். அந்த அம்மாவுக்கு இதயத்தில் ஓட்டை. அதற்கு ஆபரேஷன் செய்ய பணம் வேண்டும். அம்மா தன்னைக் கீப்பாக வைத்திருப்பவனிடம் பணம் கேட்க மறுத்து, நோயினால் அடிக்கடி மயக்கம் போட்டு விழுந்து கொண்டிருக்கிறாள்.

இன்ஸ்பெக்டர் ஹோட்டல் ஒன்றில் பெண்ணுடன் ரூம் போட்டு குஜாலாக இருக்கப் போன இடத்தில் தேடி வந்த வம்பினால் வெட்டு, குத்தாகிறது. அதுவரையில் பிரச்சினையில் சிக்க மாட்டேன் என்று காதலிக்கு வாக்குக் கொடுத்த சுந்தரால் அதை மீற வேண்டிய கட்டாயம்.

இந்த அக்கப்போரில் ஒரு டாடா சுமோவை எடுத்துக் கொண்டு சுந்தரும், இன்ஸ்பெக்டரும் தப்பிக்கும்போது ஏரியா கமாண்டரான பாயின் கோடி ரூபாய் மதிப்புள்ள போதை மருந்து இன்ஸ்பெக்டரிம் சிக்குகிறது. இதை துப்பறிந்த பாய் இன்ஸ்பெக்டரையும், சுந்தரையும் தேடுகிறார்.

அதற்குள்ளாக காதலியின் அம்மாவுக்கு சீரியஸாக கதாநாயகி தனது வளர்ப்புத் தந்தையிடம் பணம் கேட்கிறாள். அந்தக் கட்டைல போறவன் என்ன சொல்றான்னா, "நான் உனக்கு தந்தையும் இல்லை. காட்பாதருமில்லை. என்னிக்குமே மாமாதான். என்னைக் கல்யாணம் செஞ்சுக்க.. உன் அம்மா ஆபரேஷனுக்கு பணம் தருகிறேன்.." என்கிறான்.

ஏற்கெனவே சுந்தருடன் கோபத்தில் இருந்த நாயகி இதற்கு ஒத்துக் கொள்ளும்போது, வடிவேலு துணையுடன் இதனை டைவர்ட் செய்து ஆபரேஷனை மட்டும் செய்ய வைத்து விடுகிறார் சுந்தர்.

சுந்தரும், நாயகியும் அவசரம், அவசரமாக கல்யாணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்யும்போது, கல்யாணத்தன்று இன்ஸ்பெக்டர் சுந்தரிடம் "பாண்டிச்சேரிக்கு போய் பாயை பார்க்க வேண்டும். உடனே வா.." என்றழைக்கிறான். காதலியோ "நான் முக்கியமா? அவன் முக்கியமா?" என்கிறாள். சுந்தர் "தனக்கு நண்பன்தான் முக்கியம்.." என்று சொல்லிவிட்டு பாண்டிக்குச் செல்கிறார்.

அங்கே சுந்தரே எதிர்பார்க்காத தருணத்தில் பாயை போட்டுத் தள்ளுகிறார் இன்ஸ்பெக்டர். இதனால் நிச்சயம் வில்லங்கம் வரும் என்று நினைத்து சுந்தர், காக்கி நண்பனிடமிருந்து விலகியோட முயல்கிறார். விதி மறுக்கிறது. இன்ஸ்பெக்டரை காரோடு லாரியில் ஏற்றிக் கொள்ளப் பார்க்கிறார்கள். தப்பித்து மருத்துவனையில் ஒளிந்து கொள்கிறான் இன்ஸ்பெக்டர். தேடி வந்து தீர்த்துக் கட்டுகிறான் பாயின் மகன்.

அடுத்தது சுந்தர்தான் என்ற ஒற்றைக் குறிக்கோளோடு எதிரிகள் முன்னேற.. நாயகியோடு ஐதராபாத்தில் போய் செட்டிலாக நினைத்து சுந்தர் தப்பிக்க நினைக்க.. நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதுதான் கடைசியில் நடக்கிறது..


ஆடும்வரை ஆட்டம். ஆட்டம் முடிந்த பின் ஓட்டம்.. துப்பாக்கியெடுத்தவன் துப்பாக்கியால்தான்.. நீ ஆடுறவரைக்கும் ஆடு ராசா.. நல்லா ஆட விடுவான் ஆண்டவன்.. ஆனா நீ ஆடுனது போதும். இனிமேல் நிம்மதியா இருக்கலாம்னு நினைக்கும்போதுதான் ஆண்டவன் அவனோட ஆட்டத்தைத் துவக்குவான்.. அதுவரைக்கும் நீ ஆடினதுக்குப் பலனை அப்பத்தான் உனக்குக் கொடுப்பான் ஆண்டவன்.. இதைத்தான் 101-வது முறையாக இந்தப் படத்திலும் சொல்லியிருக்கிறார்கள். அம்புட்டுத்தான்..

இடையில் சுந்தருடன் மனஸ்தாபப்பட்டு பிரிந்து சென்ற வடிவேலுவின் வீட்டிற்கே நேரில் சென்று சமாதானம் செய்த குஷ்புவின் சாமர்த்தியத்தை கண்டிப்பாக பாராட்டித்தான் ஆக வேண்டும். படத்தில் தலைநகரம் மாதிரியே அதகளம் செய்திருக்கிறார் 'ஸ்டைல் பாண்டி'யாக வரும் வடிவேலு.


இனி நகைச்சுவைக் காட்சிகளில் இந்தப் படத்தின் நகைச்சுவைக் காட்சிகளும் நிச்சயம் இடம் பெறும். மனிதர் படத்திற்கு படம் மெருகேற்றிக் கொண்டே செல்கிறார்.. நூறாவது கொள்ளையடிக்கச் செல்லுமிடத்தில் வடிவேலுக்கு கிடைக்கும் மரியாதை.. வயிற்று வலியே வந்துவிட்டது.. இது மாதிரியான ஐடியாவெல்லாம் எங்கேயிருந்துதான் கிடைக்கிறதோ தெரியவில்லை. தமிழ்ச் சினிமாவில் கதைகளுக்குத்தான் பஞ்சமே தவிர.. நகைச்சுவைக் காட்சிகளுக்கு மட்டும் பஞ்சமேயில்லை.


அனுயா வீட்டில் நாயை வைத்துக் கொண்டு மனிதர் படுகின்ற பாடு ஏக கலகலகப்பு. ஆனாலும் எனக்கு ஒரு டவுட்டு. இந்த ஜீவகாருண்ய சங்கமும், விலங்குகள் வாரியமும் சினிமாவில் நாய்களைப் பயன்படுத்த ஆயிரத்தெட்டு நிபந்தனைகளைப் போடுகிறார்களே.. இந்தப் படத்தில் எப்படி கை வைக்காமல் விட்டார்கள் என்று தெரியவில்லை. நாய் குவார்ட்டர் சாப்பிடுதுங்கோ. அதனாலதான் கேக்குறேன்.

சுந்தர் சி. எப்போதும் போலத்தான்.. ஒன்றும் மாற்றமில்லை. சொல்வதற்கும் ஒன்றுமில்லை.. நடிப்பே வேணாம்.. பேசினாலே போதும்.. ரெண்டு சொட்டு கண்ணீர் விட்டால் போதும் என்று நினைத்துவிட்டார். ஜனங்களும் நம்பிட்டாங்கள்லே.. போதாதா..?


கதாநாயகி அனுயா.. இந்தக் குழந்தை ஏன் அதிகமான படங்களை ஒப்புக் கொள்ள மறுக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அம்சமாகத்தான் இருக்கிறது. நல்ல முகபாவனை.. அசத்தல் நடிப்பு.. இயக்குநர்கள் விரும்புவதையெல்லாம் திரையில் செய்ய தயங்குவதே இல்லையாம். பின்பு ஏன் அதிக படங்கள் கிடைக்கவில்லை என்று விசாரித்தால்.. “குழந்தையே மாட்டேங்குது ஸார்..” என்று புலம்புகிறார்கள். “யார் போய் கதை சொன்னாலும் எனக்குப் பிடிக்கலை.. பிடிக்கலைன்னு தள்ளி விட்ருது ஸார்” என்று புலம்புகிறார்கள் பி.ஆர்.ஓ.க்கள்..

இவர்கள் ஏன் புலம்புறாங்கன்னு கேக்குறீங்களா..? குழந்தை எங்கயாவது புக் ஆனாத்தான இவங்களுக்கு கமிஷன் கிடைக்கும்..? கடைசியா இந்தக் குழந்தையைப் பார்த்தது மதுரை சம்பவம் படத்தில். போலீஸ் இன்ஸ்பெக்டர். அதில் ஹீரோவுக்கு காதல் வரும்படியான ஒரு காட்சியில் போலீஸ் டிரெஸ்ஸில் நடந்து செல்வதைப் பார்த்தால்... ம்.. சொக்கித்தான் போனேன்..


இங்கேயும் அதேதான்.. பாடல் காட்சிகளில் இளமையும், துள்ளலுமாக காட்டியும், ஆடியும் அசத்தியிருக்கிறார்.. குழந்தையிடம் ஏதோ இருக்கு.. வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கிட்டா அதுக்கே நல்லது.. நம்ம சொல்ல வேண்டியதைச் சொல்லிருவோம்.. அப்புறம் அவுக இஷ்டம்..

ரொம்ப நாள் கழித்து நடன இயக்குநர் புலியூர் சரோஜாவின் கணவர் ஜி.சீனிவாசன் இதில் வில்லன் பாயாக நடித்திருக்கிறார். இனியும் அவர் தொடர்ந்து நடிக்கலாம்.. தனது ஒரே மகன் விபத்தில் இறந்த பின்பு  படவுலகத்துக்கு அவரும், அவரது மனைவியும் குட்பை சொன்னது மிகப் பெரும் சோகம்.. திரும்பி வந்ததே நல்ல விஷயம்தான்..

போலி நண்பனாக போஸ் வெங்கட் நன்கு நடித்திருக்கிறார். வில்லன் வேடத்திற்குப் பொருத்தமானவர். இதில் கொஞ்சம் ஸ்டைலிஸ்ஸாக வில்லனா, நண்பனா என்று தெரியாத அளவுக்கு இருக்கிறது நடிப்பு.. இதையே தொடரலாம்.. இதனால்தான் டிவி சீரியல்கள் வேண்டாம் என்று முற்றாக மறுத்து சினிமாவிலேயே நடிப்பைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். பாராட்டுக்கள்.


இரண்டே இரண்டு காட்சிகளில் தலையைக் காட்டுகிறார்கள் நளினியும், கெளதமும்.. வடிவேலுவை பெண் என்று நினைத்து பார்த்த உடனேயே "தாலியைக் கட்டுறா.." என்று சொல்லி "இப்பவே போய் வேலையை முடி" என்று தாயே 'முதல் பகலு'க்கு அனுப்புகின்ற காட்சி ரொம்பவே ஓவர்.. இந்தக் காட்சியை யாராவது புதுமுக இயக்குநர், நளினியிடம் சொல்லியிருந்தால் நடந்திருப்பதே வேறு.. ஆனாலும் வயிற்றைப் பதம் பதம் பார்த்தது இந்தக் காட்சி என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்.

உண்மையாகவே திரைக்கதை பரபரவென இருக்கிறது. செம ஸ்பீடு.. இறுதிக் காட்சியில் என்ன நடக்கும் என்கிற பரபரப்பை சுந்தரின் ஆக்ஷனில் இல்லாமலேயே காட்டியிருக்கிறார். அதிலும் அந்த ரயில்வே ஸ்டேஷன் ஷூட்டிங் காட்சிகள் கவரும்விதமாக எடுத்திருக்கிறார்.

திரைக்கதையில் பல ட்விஸ்ட்டுகளை போகிறபோக்கில் போட்டுக் கொண்டே போக சுவாரஸ்யம் கூடிக் கொண்டே போனது.. ஹோட்டலில் நடக்கும் கொலை.. இன்ஸ்பெக்டருடன் சுந்தர் தப்பிப்பது. கொலை செய்தவர்கள் யார் என தெரிந்து அதிர்ச்சியாவது.. சுந்தர் பற்றிய இன்ஸ்பெக்டரின் எண்ணத்தை செல்போன் மூலம் அறிவது.. என்று பல இடங்களில் திடுக், திடுக் திருப்பங்களிலேயே கதையை நகர்த்தியிருக்கிறார். நல்ல விஷயம்.. இனி அடுத்து வரும் படங்களிலும் இதேபோல் கதையிலும், திரைக்கதையிலும் அதீத கவனம் செலுத்தினால் சுந்தர் சி. பிழைக்கலாம்.


வடிவேலுவின் காமெடியில் சிற்சில இடங்களில் லாஜிக் மீறலுடன் முட்டாள்தனமாக இருந்தாலும், நகைச்சுவையாக பார்த்துவிட்டுப் போக வேண்டியதுதான். ஆனாலும் இதில் வழக்கம்போல மாமிகளை கிண்டல் செய்யும் போக்கு தொடர்ந்துள்ளது.

"ஏற்கெனவே 2 பேரை வைச்சிருக்கேன்.." என்று ஒரு மாமி பேசும் இரட்டை அர்த்தப் பேச்சை வடிவேலு மேலும் இழுத்துப் பேசுவது எரிச்சலாக உள்ளது. சினிமாக்காரர்கள் மாமிகளை கிண்டல் செய்வதை என்றைக்குத்தான்  நிறுத்துவார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை இப்போது உத்தமபுத்திரன் படத்திற்கு கொங்கு முன்னேற்றச் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்ததைப் போல இவர்களும் பொங்கியெழுந்தால்தான் அடங்குவார்கள் போலிருக்கிறது.

ஏன் இதே இடத்தில் “தேவரம்மா 2 பேரை வைச்சிருக்கீங்களா..? ஆச்சி 2 பேரையா வைச்சிருக்க..? கவுண்டரம்மா 2 பேரை எப்படிம்மா சமாளிக்கிற..? நாயக்கரம்மா 2 பேர் போதுமா..? முதலியாரம்மா 2 பேரா..? தாங்குவீங்களா..?” என்று வசனங்களை வைக்கட்டுமே.. வைப்பாங்களா..? தைரியம் இருக்கா..? மாட்டார்கள்.. ஏனெனில் மாமிகள்தான், “போடா ஜோட்டான்களா..!!!” என்று சொல்லிவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் போகிறார்கள். அல்லது கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள். இதனால்தான் என்று நினைக்கிறேன்.

அடுத்தது வழக்கம்போல ஹெராயின், போதை மருந்து கடத்தல் என்றவுடன் தாதாவை முஸ்லீமாக காட்டுவது. இதிலும் தொடர்கிறது. அதிலும் ஐந்து வேளையும் நமாஸ் செய்யும் பக்திப் பழமான முஸ்லீம்கள்தான் கொலைக்கும், கள்ளக்கடத்தலுக்கும் அஞ்சுவதில்லை என்று மீண்டும் மீண்டும் சினிமாக்காரர்கள்தான் திணித்துக் கொண்டே செல்கிறார்கள். இதுவும் எங்கே போய் முடியப் போகுதோ தெரியலை..

இதுக்கு மேல நாம எதுவும் சொல்லவும் கூடாது. சொல்லவும் முடியாது. “சுந்தர்.சி பகுத்தறிவுக் கொள்கையைத் தனது திரைப்படங்கள் மூலமாக பரப்பிக் கொண்டிருக்கிறார்..” என்ற அரியக் கண்டுபிடிப்பை அவரது தலைவர் கலைஞரே சொன்ன பின்பு நாம் என்ன செய்ய முடியும்..?

படத்தில் பாடல்கள் சொல்லிக் கொள்ளும்படி இருப்பது மகா ஆச்சரியம். “என் பெயர் கிருஷ்ணவேணி” என்ற குத்துப் பாடலிலேயே இசையமைப்பாளர் தமன் எழுந்து உட்கார வைத்துவிட்டார். புடிச்சா புளியமரம், குத்துது குடையுது பாடல்கள் எடுக்கப்பட்ட விதம் என்னைப் போன்ற இளசுகள் ரசிக்கக் கூடியதாக இருந்தது. இசையமைப்பாளர் தமனுக்கும், அனைத்துப் பாடல்களையும் எழுதியிருக்கும் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கும் பாராட்டுக்கள்.

ரொம்ப ஜாலியாத்தான் இருக்கு.. ஹேப்பியா பொழுதைப் போக்கணும்னு நினைக்கிறவங்க தாராளமாகப் போகலாம்..

புகைப்படங்கள் உதவிக்கு நன்றி : www.indiaglitz.com

45 comments:

  1. தூக்கம் வர மாட்டேங்கிது எப்படியும் அண்ணாச்சி நம்ம தூங்க வெச்சிருவாருன்னு நினச்சி படிச்சேன்.. ஆனா நீங்க என்னோட நம்பிக்கைய குழி தோண்டி புதச்சிட்டிங்க.. நீங்க நல்லவரா, கெட்டவரா ?

    ReplyDelete
  2. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    me the first
    ---
    இருந்துட்டு போ .. இப்ப அதுக்கென்ன :)

    ReplyDelete
  3. //
    குத்துது குடையுது பாடல்கள் எடுக்கப்பட்ட விதம் என்னைப் போன்ற இளசுகள் ரசிக்கக் கூடியதாக இருந்தது. //

    வடிவேலு காமெடியை விட பெரிய காமெடி. ஹாஹா

    ReplyDelete
  4. //இராமசாமி கண்ணண் said...

    ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    me the first
    ---
    இருந்துட்டு போ .. இப்ப அதுக்கென்ன :)//

    உனக்கு வேலையே இல்லையா? போ போ போய் உன் பிளக்குல தூசி தட்டு. ரொம்ப நாள் ஆச்சு...

    ReplyDelete
  5. //இராமசாமி கண்ணண் said...

    ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    me the first
    ---
    இருந்துட்டு போ .. இப்ப அதுக்கென்ன :)//

    உனக்கு வேலையே இல்லையா? போ போ போய் உன் பிளக்குல தூசி தட்டு. ரொம்ப நாள் ஆச்சு...

    ---
    நீ எப்பல வந்தே என்னோட பிளாக்குக்கு ... இந்த மாசத்துக்கு ஒரு பதிவு போட்டாச்சு .. வந்து பாரு :)

    ReplyDelete
  6. //இராமசாமி கண்ணண் said...

    //இராமசாமி கண்ணண் said...

    ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    me the first
    ---
    இருந்துட்டு போ .. இப்ப அதுக்கென்ன :)//

    உனக்கு வேலையே இல்லையா? போ போ போய் உன் பிளக்குல தூசி தட்டு. ரொம்ப நாள் ஆச்சு...

    ---
    நீ எப்பல வந்தே என்னோட பிளாக்குக்கு ... இந்த மாசத்துக்கு ஒரு பதிவு போட்டாச்சு .. வந்து பாரு :)//

    eppo. dash boardla kaattave illiye...

    ReplyDelete
  7. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    //
    குத்துது குடையுது பாடல்கள் எடுக்கப்பட்ட விதம் என்னைப் போன்ற இளசுகள் ரசிக்கக் கூடியதாக இருந்தது. //

    வடிவேலு காமெடியை விட பெரிய காமெடி. ஹாஹா


    ---
    என்னலே நக்கலா.. பிச்சு புடுவேன் பிச்சு.. எங்க அண்ணாச்சி என்னிக்கும் மார்கண்டேயன் தெரிஞ்சிக்கோ :)

    ReplyDelete
  8. [[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    me the first]]]

    குட் பாய்.. ஸ்வீட் பாய்..! வெல்கம்..!

    ReplyDelete
  9. [[[இராமசாமி கண்ணண் said...
    தூக்கம் வர மாட்டேங்கிது எப்படியும் அண்ணாச்சி நம்ம தூங்க வெச்சிருவாருன்னு நினச்சி படிச்சேன்.. ஆனா நீங்க என்னோட நம்பிக்கைய குழி தோண்டி புதச்சிட்டிங்க.. நீங்க நல்லவரா, கெட்டவரா?]]]

    ரொம்பக் கெட்டவன்..!

    ReplyDelete
  10. [[[இராமசாமி கண்ணண் said...

    ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    me the first
    ---
    இருந்துட்டு போ .. இப்ப அதுக்கென்ன :)]]]

    இதுக்கெதுக்கு கோபம்.. தம்பியை வாழ்த்துறதை விட்டுப்போட்டு..?

    ReplyDelete
  11. [[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    //குத்துது குடையுது பாடல்கள் எடுக்கப்பட்ட விதம் என்னைப் போன்ற இளசுகள் ரசிக்கக் கூடியதாக இருந்தது.//

    வடிவேலு காமெடியை விட பெரிய காமெடி. ஹாஹா]]]

    ஏன் என்னைப் பார்த்தா இளசு மாதிரி தெரியலியா ராசா..?

    ReplyDelete
  12. [[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    //இராமசாமி கண்ணண் said...

    ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    me the first
    ---
    இருந்துட்டு போ .. இப்ப அதுக்கென்ன :)//

    உனக்கு வேலையே இல்லையா? போ போ போய் உன் பிளக்குல தூசி தட்டு. ரொம்ப நாள் ஆச்சு...]]]

    என்னாத்துக்கு இப்போ கோபம்..? இதுக்கெல்லாம் சின்னப் புள்ள மாதிரி சண்டை போட்டுக்குறது..?

    ReplyDelete
  13. /அதிலும் ஐந்து வேளையும் நமாஸ் செய்யும் பக்திப் பழமான முஸ்லீம்கள்தான் கொலைக்கும், கள்ளக்கடத்தலுக்கும் அஞ்சுவதில்லை/

    இத பத்தி குஷ்புவே கவலைப்படவில்லை; நீங்க ஏன் கவலைப்படறீங்க? விஜயகாந்த் கட்சில விசிறிக்கிட்டிருக்கீங்களா? ;-)

    ReplyDelete
  14. [[[இராமசாமி கண்ணண் said...
    நீ எப்பல வந்தே என்னோட பிளாக்குக்கு... இந்த மாசத்துக்கு ஒரு பதிவு போட்டாச்சு .. வந்து பாரு :)]]]

    போட்டாச்சா.. இப்போ நானும் வரேன்..!

    ReplyDelete
  15. [[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    eppo. dash boardla kaattave illiye...]]]

    உன்னோட ரீடர்லதான் ஏதோ பிராப்ளம்.. வைரஸ் அட்டாக்குன்னு நினைக்கிறேன். செக் பண்ணு தம்பி..!

    ReplyDelete
  16. விமர்சனம் அருமை அண்ணாச்சி.

    ReplyDelete
  17. [[[நிலாரசிகன் said...
    விமர்சனம் அருமை அண்ணாச்சி.]]]

    இதென்ன கெட்டப் பழக்கம். இன்னும் தூங்கப் போகலியா..?

    ReplyDelete
  18. இப்பதான் படத்த பாத்துட்டு வரேன். இல்லைனா நீங்க சொல்றது உண்மைனே நம்பி இருப்பேன். :(

    ReplyDelete
  19. [[[லதாமகன் said...
    இப்பதான் படத்த பாத்துட்டு வரேன். இல்லைனா நீங்க சொல்றது உண்மைனே நம்பி இருப்பேன். :(]]]

    ஏன் உங்களுக்குப் படம் பிடிக்கவில்லையா? நல்லாத்தானே இருக்கு..!?

    ReplyDelete
  20. eppadi ungalukku mattum sundar.c padamaa kidaikkuthu?

    vaadaa paathuttum intha film ku pona ungala paaraattanum..

    ReplyDelete
  21. இதுதான் பாஸ் உங்க‌கிட்ட‌ கெட்ட‌ ப‌ழ‌க்க‌ம் மொத்த‌ க‌தையையும் சொல்லிடுறீங்க‌! :)
    ந‌ல்ல‌ விம‌ர்ச‌ன‌ம் பாஸ்... ஃபுல்லா ப‌டிச்சேன்.. ந‌ன்றி

    ReplyDelete
  22. அண்ணே : குழந்தைக்கு உங்க இன்ப்லுயன்ச பயன்படுத்தி படத்துல புடிச்சி போடவேண்டியதுதானே??

    ReplyDelete
  23. சி டி வந்திச்சாம்.. இன்னைக்கே பாத்திர வேண்டியது தான்..

    ReplyDelete
  24. //சினிமாக்காரர்கள் மாமிகளை கிண்டல் செய்வதை என்றைக்குத்தான் நிறுத்துவார்கள் என்று தெரியவில்லை.//

    மாமி்ய சொன்னா உங்களுக்கு ஏன் கோவம் வருது??????????????


    ஜாலியான பதில் தேவை நோ டென்சன்

    ReplyDelete
  25. [[[அலைகள் பாலா said...

    eppadi ungalukku mattum sundar.c padamaa kidaikkuthu?

    vaadaa paathuttum intha film ku pona ungala paaraattanum..]]]

    எல்லா படமும் ஒரே மாதிரியாவா இருக்கும். இந்தப் படத்துக்கு தைரியமா போங்க.. பார்க்கலாம்..!

    ReplyDelete
  26. [[[-/பெயரிலி. said...
    /அதிலும் ஐந்து வேளையும் நமாஸ் செய்யும் பக்திப் பழமான முஸ்லீம்கள்தான் கொலைக்கும், கள்ளக்கடத்தலுக்கும் அஞ்சுவதில்லை/

    இத பத்தி குஷ்புவே கவலைப்படவில்லை; நீங்க ஏன் கவலைப்படறீங்க? விஜயகாந்த் கட்சில விசிறிக்கிட்டிருக்கீங்களா? ;-)]]]

    ஓ.. பெயரிலி அண்ணை.. இப்படியொரு பாயிண்ட் இருக்கிறதை நான் மறந்துட்டனே..

    எடுத்துக் கொடுத்ததுக்கு நன்றிண்ணே..!

    ReplyDelete
  27. [[[பிரபு . எம் said...
    இதுதான் பாஸ் உங்க‌கிட்ட‌ கெட்ட‌ ப‌ழ‌க்க‌ம் மொத்த‌ க‌தையையும் சொல்லிடுறீங்க‌!:)]]]

    இல்லையே.. கிளைமாக்ஸை சொல்லலியே..?

    [[[ந‌ல்ல‌ விம‌ர்ச‌ன‌ம் பாஸ்... ஃபுல்லா ப‌டிச்சேன்.. ந‌ன்றி]]]

    இதெல்லாம் லொள்ளுல்ல..!!! கெட்டப் பழக்கம்ன்னு சொல்லிப்புட்டு நல்ல விமர்சனம் பாஸ்ன்னு வேற சொல்றீங்க..?

    ReplyDelete
  28. [[[வழிப்போக்கன் - யோகேஷ் said...
    அண்ணே : குழந்தைக்கு உங்க இன்ப்லுயன்ச பயன்படுத்தி படத்துல புடிச்சி போட வேண்டியதுதானே??]]]

    குழந்தை சிக்க மாட்டேங்குது யோகேஷ்..!

    ReplyDelete
  29. [[[வெறும்பய said...
    சி டி வந்திச்சாம்.. இன்னைக்கே பாத்திர வேண்டியதுதான்..]]]

    பாருங்க.. எப்படியோ பார்த்தால் சரிதான்..!

    ReplyDelete
  30. [[[அத்திரி said...

    //சினிமாக்காரர்கள் மாமிகளை கிண்டல் செய்வதை என்றைக்குத்தான் நிறுத்துவார்கள் என்று தெரியவில்லை.//

    மாமி்ய சொன்னா உங்களுக்கு ஏன் கோவம் வருது??????????????

    ஜாலியான பதில் தேவை நோ டென்சன்]]]

    எல்லாம் ஒரு பொதுநலன்தான் தம்பி..! நாட்டுக்காக எத்தனையோ கேள்விகளைக் கேக்குறேன். இதைக் கேக்கப்படாதா..?

    ReplyDelete
  31. ஆனா இந்த படம் தலைநகரம் அளவுக்கு ஓடாதுன்னு நினைக்கிறேன்!

    ReplyDelete
  32. அந்தக் கொழந்தயோட வெலாசம்... வெலாசம் கெடைக்குமாண்ணே?

    ReplyDelete
  33. ///இவர்கள் ஏன் புலம்புறாங்கன்னு கேக்குறீங்களா..? குழந்தை எங்கயாவது புக் ஆனாத்தான இவங்களுக்கு கமிஷன் கிடைக்கும்..? ////

    என்னண்ணே ரூட்டு வேற மாதிரி போகுது?

    ReplyDelete
  34. ////அதில் ஹீரோவுக்கு காதல் வரும்படியான ஒரு காட்சியில் போலீஸ் டிரெஸ்ஸில் நடந்து செல்வதைப் பார்த்தால்... ம்.. சொக்கித்தான் போனேன்..///

    அந்த ஸ்டில்லும் சேத்துப் போட்டிருக்கலாம் (எளசுன்னு ப்ரூவ் பண்ண மாததிரியும் இருக்கும், எங்கள மாதிரி நெஜ எளசுங்களுக்கு ஹெல்ப் பண்ண மாதிரியும் இருக்கும்!)

    ReplyDelete
  35. ரொம்ப நாள் கழிச்சு ஒரு பாசிடிவ் பதிவு,..

    ReplyDelete
  36. [[[எஸ்.கே said...
    ஆனா இந்த படம் தலைநகரம் அளவுக்கு ஓடாதுன்னு நினைக்கிறேன்!]]]

    நானும்தான் ஸார்.. அப்போதைய நிலைமை வேறு. இப்போது நிலைமை வேறு..!

    பொதுவாகவே மாதாமாதம் திரையரங்களுக்கு வரும் ரசிகர்களின் கூட்டம் குறைந்து கொண்டே போகிறது.

    உத்தமபுத்திரனுக்கும் இதே நிலைமைதான்..!

    ReplyDelete
  37. [[[பன்னிக்குட்டி ராம்சாமி said...
    என்னது படம் நல்லாருக்கா?]]]

    ம்.. நெசமாத்தான்..!

    ReplyDelete
  38. [[[பன்னிக்குட்டி ராம்சாமி said...
    அந்தக் கொழந்தயோட வெலாசம்... வெலாசம் கெடைக்குமாண்ணே?]]]

    கேட்டுச் சொல்றேன்..!

    ReplyDelete
  39. [[[பன்னிக்குட்டி ராம்சாமி said...

    ///இவர்கள் ஏன் புலம்புறாங்கன்னு கேக்குறீங்களா..? குழந்தை எங்கயாவது புக் ஆனாத்தான இவங்களுக்கு கமிஷன் கிடைக்கும்..? ////

    என்னண்ணே ரூட்டு வேற மாதிரி போகுது?]]]

    படத்துல புக் பண்ணிக் கொடுத்தா மேனேஜர்களுக்கு கமிஷன் உண்டு..!

    ReplyDelete
  40. [[[பன்னிக்குட்டி ராம்சாமி said...

    ////அதில் ஹீரோவுக்கு காதல் வரும்படியான ஒரு காட்சியில் போலீஸ் டிரெஸ்ஸில் நடந்து செல்வதைப் பார்த்தால்... ம்.. சொக்கித்தான் போனேன்..///

    அந்த ஸ்டில்லும் சேத்துப் போட்டிருக்கலாம் (எளசுன்னு ப்ரூவ் பண்ண மாதிரியும் இருக்கும், எங்கள மாதிரி நெஜ எளசுங்களுக்கு ஹெல்ப் பண்ண மாதிரியும் இருக்கும்!)]]]

    கிடைக்கலை. கிடைத்தால் போடுகிறேன். அப்போ நாங்கள்லாம் என்ன டூப் இளசா..?

    ReplyDelete
  41. கனவுல வந்து தொல்லைப் பண்ணுது இந்த அனுயா ஏதாவது மருந்து இருக்கா...... ரெண்டு முழு நீல படத்தப் போட்டு சொட்ட ஏத்தி விடுறீங்க.....

    ReplyDelete
  42. [[[பித்தன் said...
    கனவுல வந்து தொல்லைப் பண்ணுது இந்த அனுயா ஏதாவது மருந்து இருக்கா...... ரெண்டு முழு நீல படத்தப் போட்டு சொட்ட ஏத்தி விடுறீங்க.....]]]

    இந்தப் படத்தைப் போய் பாருப்பா.. கனவு முடிஞ்சிரும்..!

    ReplyDelete
  43. [[[பார்வையாளன் said...
    ரொம்ப நாள் கழிச்சு ஒரு பாசிடிவ் பதிவு,..]]]

    உண்மையில் ரொம்ப நாள் கழிச்சு நல்லதொரு சுந்தர் படம்..!

    ReplyDelete